தமிழ் (Tamil): Open Bible Stories Translation Notes

Updated ? hours ago # views See on DCS Draft Material

01-01

ஆதியில்

அதாவது எல்லாவற்றின்ஆரம்பத்திற்க்கு முண், தேவனைத் தவிர வேறு எதுவும் இல்லாதிருந்தது.

உண்டாக்கப்பட்டது

ஒன்றும் இல்லாததிலிருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.

பிரபஞ்சம்

தேவன் பூமியிலும் வானத்திலும் படைத்த அனைத்ததிலும், காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை உள்ளடக்கியது.

பூமி

பூமி என்பது மனிதர்கள் வாழும் இந்த முழு உலகத்தையும் குறிக்கும்.

இருள்

தேவன் வெளிச்சத்தை உண்டாக்காததினால், வெளிச்சம் இல்லாமல் முழுவதும் இருளாய் இருந்தது.

வெறுமை

பூமதண்ணீரினால் மூடப்பட்ட வெற்று நிலத்தை தவிர தேவன் எதையும் உண்டாக்கவில்லை.

எதுவும் உருவாக்கப்படவில்லை

வேறுபட்ட அம்சங்கள் எதுவும இல்லாமல் இருந்தது- வெறும் தண்ணீரால் மூடப்பட்ட்டிருந்தது

தேவ ஆவியானவர்

தேவ ஆவியானவர் என்று அழைக்கப்படும் பரிசுத்த ஆவியானவர் ஆதி முதலே தாம் செய்யும்படி நினைத்திருந்த காரியங்களைச் செய்யும்படி பூமியின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பரிசுத்த ஆவி]]

01-02

தேவன் சொன்னார்

  • தேவன் எளிய ஒரு கட்டளையினால்வெளிச்சத்தை உண்டாக்கினார்.

அப்படியே ஆகட்டும்

இந்த வார்த்தையை தேவன் கட்டளையிட்டபடியினால் உடனே நடந்தது. இதை நடைமுறையில் மொழிபெயர்த்தால் உறுதியாக என்று சொல்லலாம், ஏனெனில் கண்டிப்பாக நடக்கும் என்பது தான் அதின் அர்த்தம். உதாரணமாக, வெளிச்சம் உண்டாகட்டும் என்று தேவன் சொன்னார் என்றும் மொழிபெயர்க்கலாம்.

வெளிச்சம்

தேவன் உண்டாக்கின வெளிச்சம் என்பது விசேஷமான ஒரு வெளிச்சமாகும், சூரியனை தேவன் இன்னும் உண்டாக்கவில்லை.

நல்லது

இந்த சொற்றொடர் பெரும்பாலும் படைப்புக் கதையில் தொடர்கிறது அதாவது தேவனுடைய திட்டத்தின்படி அவர் செய்து முடிக்கும் காரியங்கள் அவருக்கு சந்தோஷமாக இருப்பதை இந்த வார்த்தைக் காட்டுகிறது.

உருவாக்குதல்

இப்போது இருக்கும் எல்லாவற்றையும் தேவன் ஆறு நாட்களில் உருவாக்கினார் என்பதை இந்த வார்த்தை உணர்த்துகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நல்லது]]

01-03

இரண்டாவது நாள்

தேவன் உருவாக்கியதில் எல்லாம் ஒழுங்கும், கிரமமும், மேலும் எல்லாம் வரிசையாகவும் இருந்தது. அவர் உருவாக்கியதெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையதாகவும் முந்தைய நாளில் தாம் செய்தவற்றிற்கு தொடர்புடையதாகும்.

தேவன் பேசினார்

தேவன் ஒரே வார்த்தையினால் வானத்தை உண்டாக்கினார்.

உண்டாக்கியது

ஒன்றுமிலாய்மயில் இருந்து தேவன் வானத்தை உண்டாக்கினார்.

வானம்

இந்த வார்த்தை பூமிக்கு மேல் இருக்கும் நாம் சுவாசிக்கும் காற்று, வானங்கள், விண்வெளி என எல்லாவற்றும் குறிக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict /வேதாகமம்/kt/தேவன்]]

01-04

மூன்றாம்நாள்

தேவன் உருவாக்கிய நாட்களின் வரிசையில் இருந்த நாளில் தான் பூமியை வாழ்வதற்கு தகுதிப்படுத்தினார்.

தேவன் பேசினார்

ஒரே ஒரு வார்த்தையினால் தேவன் வெட்டாந்தரையை உண்டாக்கினார்.

பூமி

புழுதி மற்றும் மணல் உள்ள பகுதியினாலான குறிப்பிடும்படியான வெட்டாந்தரையைக் குறிக்கும் வார்த்தை தான் இது.

உருவாக்கப்பட்டது

ஒன்றுமிலாய்மயில் இருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/நல்லது]]

01-05

தேவன் சொன்னார்

தேவன் ஒரே ஒரு வார்த்தையினால் எல்லாவகையான தாவரங்களையும் உண்டாக்கினார்

பூமி முளைப்பிக்கக்கடவது

தேவன் இந்த கட்டளையை பிறப்பித்தபடியால் அது உடனே அப்படியே ஆயிற்று

அனைத்து வகையான

பல்வேறு வகையான அல்லது இனமான செடிகள் மற்றும் மரங்கள்

உருவாக்கப்பட்டது

ஒன்றுமிலாய்மயில் இருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.

நன்றாக இருந்தது

இந்த சொற்றொடர் பெரும்பாலும் படைப்புக் கதையில் தொடர்கிறது அதாவது தேவனுடைய திட்டத்தின்படி அவர் செய்து முடிக்கும் காரியங்கள் அவருக்கு சந்தோஷமாக இருப்பதை இந்த வார்த்தைக் காட்டுகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/நல்லது]]

01-06

நான்காம் நாள்

நாட்களின் வரிசையில் தேவன் உருவாக்கியது.

தேவன் பேசினார்

வார்த்தையை கட்டளையிட்டு தேவன் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் உருவாக்கினார்.

வெளிச்சம்

வெளிச்சம் பகரும் கருவிகள் இப்போது பூமிக்கு வெளிச்சம் தருகின்றது.

இரவு, பகல், காலங்கள் மற்றும் வருடங்கள்

சிறு காரியங்களிலிருந்து பெரிய காரியங்கள் வரைக்கும் காலநேரத்தையும் அறியும்படிக்கு தேவன் வெவ்வேறு வெளிச்சத்தை உண்டாக்கி, அது உலகத்தில் முடிவு வரைக்கும் திரும்பத்திரும்ப செயல்படும்படி செய்தார்.

உருவாக்கப்பட்டது

ஒன்றுமிலாய்மயில் இருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/நல்லது]]

01-07

ஐந்தாம் நாள்

முன்பு நாலு நாட்களில் தாம் செய்து வந்த உருவாக்குதலின் தொடர்ச்சியாக தேவன் இதையும் செய்தார்.

தேவன் பேசினார்

ஒரு வார்த்தையை கட்டளையிட்டு தேவன் பறவைகளையும் நீரில் வாழும் ஜந்துக்களையும் உருவாக்கினார்.

நீந்தக்கூடிய அனைத்தும்

தேவன் மீன்களை மட்டுமல்லாமல், தாம் உருவாக்கும்படி தீர்மானித்த எல்லாவகையான நீரில் வாழும் ஜந்துக்களையும் தேவன் உண்டாக்கினார். தேவன் ஒவொன்றையும் உருவாக்கத் தேர்ந்தெடுத்தார் எனவே அவைகள் இருக்கின்றன

எல்லா பறவைகளும்

தேவன் ஒரு விதமான பறவையை மட்டுமின்றி பல்வேறு வகை ஆச்சரியமான வடிவத்திலும், நிறத்திலும், மற்றும் உருவத்திலும் உருவாக்கினார்.

அது நன்றாக இருந்தது

ஒவ்வொரு காரியங்களும் தேவனுடைய அறிவின் திட்டத்தின்படியும், அவருடைய சித்தத்தின்படியும் நடக்கிறது என்பதைக் காட்டும்படிக்கு. இந்த வார்த்தை தேவனின் உருவாக்குதலில் தொடர்ந்து வருகிறது

அவைகளை ஆசீர்வதித்தார்

தேவன் அவருடைய திட்டத்தின்படி பேசி, உலகத்தில் அவைகள் எல்லாம் நன்றாக இருக்கவும், வைத்த இடத்தில் செயல்படவும் செய்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/நல்லது]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/ஆசீர்வாதம்]]

01-08

ஆறாம் நாள்

உருவாக்கிய நாட்களின் செயல்கள் தொடரும் விதமாக அதின் தொடர்ச்சி.

தேவன் சொன்னார்

விலங்குகள் உருவாக்கப்பட்ட வழிமுறையும் தேவனுடைய வார்த்தையே

அனைத்து வகையான

இது ஒரு பெரிய வகையைக் குறிக்கிறது ஆனால் ஒழுங்கையும் குறிக்கிறது.

நில விலங்குகள்

நிலத்தில் வாழும் எல்லாவகையான விலங்குகளும், பறவைகளுக்கும், நீரில் வாழும் விலங்குகளுக்கும் வித்யாசமானது.

வீட்டு விலங்குகள்

மனிதர்களோடு சாந்தமாக வாழும், அல்லது இருக்ககூடிய விலங்குகள் வீட்டு விலங்குகள் எனப்படும்.

நிலத்தில் ஊரும் ஜீவன்கள்

இவைகள் புழுக்கள் மற்றும் பூச்சிகள்.

காடு

இவ்வகையான விலங்குகள் மனிதர்களோடு சேர்ந்து வாழாதவைகள், மனிதர்களை பயப்படுபவை அல்லது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.

அது நல்லது

இந்த வார்த்தை தேவனின் உருவாக்குதலில் தொடர்ந்து வருகிறது ஏனென்றால் ஒவ்வொரு காரியங்களும் தேவனுடைய அறிவின் திட்டத்தின்படியும், அவருடைய சித்தத்தின்படியும் நடக்கிறது என்பதைக் காட்டும்படிக்கு.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/நல்லது]]

01-09

நாம்

இது தேவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட வழியில் மனிதனை உருவாக்க இட்ட திட்டமாகும் . இதை “நாம் உண்டாக்குவோம்” என்று மொழிபெயர்க்கலாம்.

நாம்...சேர்ந்து...நாம்

தேவன் ஒருவர் என்று வேதம் சொல்லுகிறது, ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவன் என்ற வார்த்தை பன்மையில் குறிப்பிடப்படுகிறது. தேவன் அவரோடு பேசும்போது பன்மையில் கூறுகிறார். சிலர் இதை அவருடைய மகத்துவத்தைக் காண்பிப்பதாக புரிந்துகொள்கிறார்கள், வேறு சிலர் இதை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்கிற இவர்கள் தேவனாயிருப்பதினால் வேறு வகையில் புரிந்துகொள்கிறார்கள்.

நம்முடைய சாயலில்

சாயல் என்பது மாம்சமான ஒருவனின் உருவத்தைக்தையோ அல்லது ஒரு காரியத்தையோ குறிக்கிறது. தேவன் மனிதனை தம்முடைய சாயலையோ அல்லது அவருடைய சில குணாதிசயங்களையோ வெளிப்படுத்தும்படிக்கு இவ்வாறு உருவாக்கினார்.

நம்மை போன்று

மனிதர்கள் தேவனுடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் எல்லாவற்றையும் அல்ல. மனிதர்கள் தேவனைப் போன்றவர்கள் என்ற வார்த்தையில் மொழிபெயர்க்கலாம், ஆனால் அவருக்கு நிகராக அல்ல அல்லது தேவன் இருப்பது போல அல்ல.

அதிகாரம்

தேவன் மனிதர்களுக்கு எல்லாவறையும் ஆளும் அதிகாரத்தையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும் கட்டுப்படுத்தும் உரிமையையும் கொடுத்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]

01-10

கொஞ்சம் மண்ணை எடுத்து

தேவன் மனிதனை புழுதியிலிருந்து, அல்லது தரையிலிருந்த மண்ணினால் உண்டாக்கினார்.

அதை உருவாக்கி

தேவன் மனிதனை விசேஷமாக உருவாக்கியதை இந்த வார்த்தை உணர்த்துகிறது, அதாவது ஒருவன் தன்னுடைய கையினால் ஒரு பொருளை செய்வதுபோல. அதை உறுதிபடுத்தும் விதமாக உருவாக்கு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கிய மற்ற எல்லாவற்றையும்விட இது முற்றிலும் வித்யாசமானது.

ஒரு மனிதன்

இந்த சமயத்தில் ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்டான்; பின்பு பெண் வேறு விதமாக உருவாக்கப்பட்டாள்

ஜீவ சுவாசத்தை ஊதுதல்

இந்த வாக்கியம் தேவனுடைய சொந்தமான, தனிப்பட்ட முறையில் தம்முடைய சுவாசத்தை ஆதாமின் சரீரத்திற்குள் அனுப்பி, இதை பார்க்கும்போது ஒரு மனிதன் எப்படி காற்றில் சுவாசிக்கிறான் என்பதை உணர முடிகிறது.

உயிர்

இந்த சம்பவத்தில், தேவன் ஆவிக்குரிய மற்றும் சரீர சுவாசத்தை மனிதனுக்குள் ஊதினார்.

ஆதாம்

ஆதாமின் பெயர் மனிதன் என்பதற்கான பழைய ஏற்பாட்டு வார்த்தை போன்றது மேலும் அவன் உருவான தூசி என்ற வார்த்தையையும் குறிக்கும்

தோட்டம்

இந்த இடத்தில் உணவுக்காக, அல்லது அழகு தரும்படிக்கு மரங்கள் செடிகள் நடப்பட்டிருந்த இடம்.

கவனித்துக்கொள்ள

அந்த தோட்டத்தை பராமரிக்கவும், களைகளை பிடுங்கவும், தண்ணீர் விடவும், பயிரிடவும், நடவும், இன்னும் பல.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/kt/வாழ்க்கை]]
  • [[rc://*/tw/dict/வேதாகமம்/மற்ற/ஆதாம்]]

01-11

நடுவில்

அந்த நடுப்பகுதி தான் அந்த இரண்டு மரங்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

தோட்டம்

இந்த இடத்தில் உணவுக்காக, அல்லது அழகு தரும்படிக்கு மரங்கள் செடிகள் நடப்பட்டிருந்த இடம்.

ஜீவ விருட்ச மரம்

இந்த மரத்தின் கனியை சாப்பிடும் எவனும் மரிப்பதில்லை.

நன்மை தீமை அறியத்தக்க மரம்

இந்த மரத்தின் கனி ஒரு மனிதனை நன்மை தீமை என்பதை அறியும்படிச் செய்யும்.

அறிவு

சொந்த அனுபவத்தில் அறிதல் அல்லது புரிந்துகொள்வது.

நன்மை தீமை

தீமை என்பது நன்மைக்கு எதிரானது. நன்மை என்பது தேவனுக்கு பிரியமானது, தீமை என்பது தேவனுக்கு பிரியமில்லாதது.

மரணம்

இந்த நிகழ்வில் , ஆவியிலும், சரீரத்திலும் மரிப்பது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/உயிர்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நன்மை]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தீமை]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் / மற்ற /ஆதாம்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் / மற்ற /மரிப்பது]]

01-12

நன்மை அல்ல

இது தான் உண்டாக்கியதில் முதன்முறையாக நன்மை அல்லாதது. அப்படியென்றால் "இன்னும் நல்லதல்ல" , ஏனெனில் மனிதர்களை உண்டாக்கி முடித்ததும் தேவனின் வேலை முடியவில்லை.

தனிமை

வேறெந்த மனிதனோடும் தொடர்பில்லாதவனாய் ஆதாம் ஒருவன் மட்டுமே இருந்தான், குழந்தைப் பெற்று, பலுகிப்பெருகவும் முடியாமல் இருந்தான்.

ஆதாமுக்கு உதவியாய்

தேவன் ஆதாமுக்கு கொடுத்த வேலைகளைச் செய்யும்படி ஆதாமுடன் சேர்ந்து இருக்க மனித இனம் யாரும் அவனோடு இல்லை. எந்த மிருகமும் அதைச் செய்யுமுடியாது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நன்மை]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் / மற்ற /ஆதாம்]]

01-13

அயர்ந்த தூக்கம்

இது சாதாரணமாக தூங்குவதைவிட மேலானது.

ஆதாமின் விலா எலும்பின் ஒன்றை எடுத்து உருவாக்குவது,

இந்த வார்த்தை தேவனுடைய தனிப்பட்ட படைப்பில் ஆதாமின் விலாவை எடுத்து அதில் பெண் என்ற உருவம் அமைப்பது.

ஒரு பெண்

இப்போது நாம் பார்க்கிற பெண்களில் முதல் உருவமே அவள் தான்.

அவளை அவனிடம் கொண்டு வந்தார்

தேவன் தனிப்பட்ட முறையில் அவர்களை அறிமுகப்படுத்தினார். அந்த் பெண்ணை ஆதாமுக்கு கொடுத்தார், விசேஷமான பரிசு கொடுப்பதுபோல.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் / மற்ற /ஆதாம்]]

01-14

கடைசியில்

ஆதாமின் ஆச்சரியத்தை பார்க்கும்போது, அவன் பெண் போன்ற ஒன்றிற்காக காத்திருந்தது புரிகிறது.

என்னைப் போன்று

என்னதான் சில முக்கியமான வித்தியாசங்கள் அவர்களில் இருந்தாலும், அந்த பெண் ஆதாமைப் போன்றவள்.

பெண்

இந்த வார்த்தை ஆண் என்ற வார்த்தையின் பெண்மை பதமாகும்.

ஆணுக்காக உண்டாக்கப்பட்டது

பெண் என்றவள் ஆதாமின் சரீரத்திலிருந்து நேரடியாக உண்டாக்கப்பட்டவள்.

ஒரு மனிதன் வெளியேறுகிறான்

இது இப்போது நடக்கும் காரியத்தைக் குறிக்கிறது, ஆதாமுக்கு அப்பா, அம்மா இல்லை, ஆனால் இப்போது எல்லா ஆண்களும் செய்கிறது போல எதிர்காலத்திற்காக குறிப்பிட்டுள்ளது.

ஒன்றாயிற்று

கணவன்-மனைவி ஒற்றுமையின் நெருக்கமான பிணைப்பையும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்வார்கள் அது,எல்லா உறவிலும் மேலானது.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /other/ஆதாம்]]

01-15

தேவன் செய்தது

தேவன் ஆண் பெண் இருவரையும் தனிப்பட்ட முறையில் உண்டாக்கினார்.

அவருடைய சாயலில்

ஒரு உருவம் என்பது வேறொருவரைக் குறிக்கும் அல்லது எதையாவது. தேவன் மனிதர்களை அவருடைய சாயலிலும், சில குணாதிசயங்களிலும் உண்டாக்கினார், ஆனால் அவருக்கு இணையாக அல்ல.

மிகவும் நல்லது

முந்தைய நாட்களில் சொன்ன நல்லது என்ற வார்த்தை அதிக ஆர்வத்தைக் காட்டுகிறது. மிகவும் நல்லது என்ற வார்த்தை ஆண் பெண் என்ற இருவர் மட்டுமல்லாமல் அவர் படைத்த எல்லாவற்றையும் தேவன் செய்ய நினைத்ததை அப்படியே செய்ததைக் காட்டுகிறது.

படைப்பு

ஆறு நாளில் இப்போது இருக்கிற எல்லாவற்றையும் படைத்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வதாம்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/நல்லது]]

01-16

ஏழாம் நாள்

சிருஷ்ட்டிப்பின் ஆறு நாட்கள் முடிந்த மறுநாள்.

அவருடைய வேலையை முடித்தார்

குறிப்பாக, தேவன் படைப்பின் வேலைகளை முடித்துவிட்டு, அவர் இன்னும் மற்ற வேலைகளைச் செய்கிறார். .

தேவன் ஓய்ந்திருந்தார்

தேவன் ஓய்ந்திருந்தார் என்ற வார்த்தை அவர் வேலையை முடித்ததைக் குறிக்கிறது, ஏனெனில் படைப்பு முடிக்கப்பட்டது, தேவன் சோர்வாக இருக்கிறதையோ அல்லது இப்னு ஒன்றும் செய்ய முடுயத்தையோ குறிப்பிடவில்லை.

ஏழாம் நாளை ஆசீர்வதித்தார்

தேவன் அந்த ஏழாம் நாளை விஷேசமாக்கினார், அதை மட்டுமில்லாமல் வரும் ஒவ்வொரு ஏழாம் நாளையும் தான்.

பரிசுத்தமாக்கினார்

அதை, தேவன் வேறுபடுத்தி, அந்த ஏழாம் நாளை விஷேசமாக்கினார், அதாவது வாரத்தின் மற்ற ஆறு நாளை போல அல்லாமல், வேறுவிதமாக்கினார்.

உலகம்

இது தேவன் பூமியிலும் வானத்திலும் உண்டாக்கின, நாம் பார்க்கிற அல்லது பார்க்க முடியாத எல்லாவற்றையும் குறிக்கிறது.

வேதத்தில் இருந்து கதை

இந்த வாக்கியங்களெல்லாம் மற்ற வேதாகம மொழிபெயர்ப்பிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வாதம்]]
  • [[rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பரிசுத்தம்]]