தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS

Romans

Romans 1

Romans 1:1-3

பவுல்

"பவுலிடமிருந்து." இந்த நிருபத்தின் ஆசிரியரை அறிமுகப்படுத்துவதில் உங்கள் மொழியில் குறிப்பிட்ட வழிமுறை இருக்கலாம்.இதை"பவுலாகிய நானே, இந்த நிருபத்தை எழுதினேன்"என்றும் மொழிபெயர்க்கலாம்.இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது என்றும் சொல்லலாம்.

அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டவனும்,தேவனுடைய சுவிசேஷத்திற்காக வேறு பிரிக்கபட்டவன்

என்பதை புதிய வாக்கியத்தில் செய்வினையில் மொழிபெயர்க்கலாம்:தேவன் என்னை அப்போஸ்தலனாக இருக்கும்படியும் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாகவும் என்னைத் தெரிந்துகொண்டார்".
# அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு பரிசுத்த வேதவாக்கியங்களின் மூலம் வாக்குத்தத்தம் முன்பே பண்ணியிருந்தார்.

அவருடைய ராஜ்யம் நிறுவப்படும் என்று தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருந்தார்.இந்த வாக்குத்தத்தங்களை வேதவாக்கியங்களாக எழுதும்படி தீர்க்கதரிசிகளிடம் சொல்லியிருந்தார்.

அவருடைய குமாரனைப் பற்றி

இது "தேவ சுவிஷேசத்தை"குறிக்கிறது.அந்த நற்செய்தியானது தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பினார் என்பதே.

மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர்

இங்கு "மாம்சம்" என்ற வார்த்தை சரீரத்தைக் குறிக்கிறது. "சரீர சுபாவத்தின்படி தாவீதுவின் சந்ததிக்கு இவர் யார் " அல்லது "தாவீதின் குடும்பத்தில் யார் பிறந்தது" என்று மொழிபெயர்த்திருக்கலாம்.

Romans 1:4-6

அவர் அறிவிக்கப்பட்டுவிட்டார்

" அவர் " என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. இந்தச் சொற்றொடரை மீண்டும் செய்வினைச் சொல்லில் கூறலாம்:

பரிசுத்தத்தின் ஆவி

பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

மரித்தோரிலிருந்து உயிரோடு எழுதல்

" அவர் இறந்த பின்பு அவருக்குள் மீண்டும் உயிரைக் கொண்டுவருதல்."

நாங்கள் கிருபையையும் அப்போஸ்தலத்துவத்தையும் பெற்றுக்கொண்டோம்

"தேவன் கிருபையாக எனக்கு இவ்வரத்தை தந்துள்ளார்.அவர் என்னை அப்போஸ்தலராக நியமித்துள்ளார். "மாற்று மொழிபெயர்ப்பு: " தேவன் கிருபையாக எனக்கு அப்போஸ்தலராகும் வரத்தை அருளியுள்ளார்." இங்கே "நாங்கள் " என்ற வார்த்தை பவுலையும், இயேசுவை பின்பற்றின 12 அப்போஸ்தலர்களையும் குறிக்கிறது ஆனால் இதில் ரோமாபுரியில் உள்ள சபையின் விசுவாசிகள் சேர்க்கப்படவில்லை.

சகல தேசத்தினரும் விசுவாசத்திற்கு கீழ்ப்படிவதற்காக,அவருடைய நாமத்தின்நிமித்தம்

பவுல் "நாமம்" என்ற வார்த்தையை இயேசுவைக் குறிக்க பயன்படுத்தினான். மாற்று மொழிபெயர்ப்பு: சகல தேசத்தினரும் அவருக்குள் இருக்கும் விசுவாசத்தின் பொருட்டு கீழ்ப்படியப் போதிக்கவேண்டும்.

Romans 1:7

ரோமாபுரியில் உள்ள அனைவருக்கும்,தேவனுக்கு பிரியமானவனும்,பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்டவர்களும்

இதை புதிய வாக்கியத்தில் செய்வினைச் சொல்லுடன் சேர்த்தும் மொழிப்பெயர்க்கலாம்: " நான் இக்கடிதத்தை ரோமாபுரியில் உள்ள அனைவருக்கும்,தேவனுக்கு பிரியமானவர்களுக்கும்,அவருடைய ஜனங்களாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கும் எழுதுகிறேன்."

உங்களுக்கு கிருபையும் சமாதானமும்

"உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்று புதிய வாக்கியத்திலும் மொழிபெயர்க்கலாம்."

Romans 1:8-10

உலகம் முழுவதும்

அவர்களுக்குத் தெரிந்திருந்த உலகத்தை மிகைப்படுத்தி காட்டுகிறது, இவ்வமைப்பில் ரோமப்பேரரசை இது குறிக்கிறது.

தேவனுக்காக என் சாட்சி

பவுல் அவர்களுக்குக்காக ஊக்கமாய் ஜெபித்துக்கொண்டு இருப்பதை வலியுறுத்திகிறார்.அவன் ஜெபித்துக்கொண்டிருப்பதை தேவன் பார்த்துக் கொண்டிருந்தார். "க்காக" என்ற இணைப்பு வார்த்தையை பெரும்பாலும் மொழிபெயர்ப்பதில்லை .# நான் உன்னைப்பற்றிச் சொன்னேன்

"நான் உன்னைப்பற்றி தேவனிடம் பேசினேன்"

என்னுடைய இடைவிடாத ஜெபங்களில் வேண்டிக்கொள்வது ....நான் ஒருவேளை ஜெயம் பெற்றுவிடுவேன்....உங்களிடம் வருகின்றபொழுது

"நான் ஜெபிக்கிறபொழுதெல்லாம்,நான் தேவனிடம் கேட்பது....உங்களை சந்திக்க வரும்போது....நான் சந்திக்க வரும்போது வெற்றி பெறுவேன்"

எப்படியாகிலும்

"தேவன் அனுமதிக்கும் எல்லாவழிகளிலும்"

கடைசியாக

"முடிவாக" அல்லது "இறுதியாக"அல்லது "முடிவில்"

தேவனுடைய சித்தத்தின்படி

"ஏனெனில் தேவன் இதின்மேல் வாஞ்சையாய் இருக்கிறார்"

Romans 1:11-12

நான் உங்களைப் பார்க்க வாஞ்சையாக இருக்கிறேன்

"நான் உங்களைப் பார்க்கவேண்டும்"

இவ்வமைப்பில் வரும் "க்காக"என்ற இணைப்பு வார்த்தையை "ஏனெனில்"என்று மொழிபெயர்க்கவேண்டும்.

உங்களில் சில ஆவிக்குரிய வரங்கள் நிறுவப்பட

மாற்று மொழிபெயர்ப்பு: "பரிசுத்த ஆவியின் சில வரங்கள் உங்களுக்கு உதவிசெய்து உங்களைப் பலப்படுத்தும்."

அது என்னவெனில், உங்களுக்குள் பரஸ்பரமாக உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும்,மற்றவர்களிடம் உள்ள விசுவாசத்தின் மூலம்,உங்களுடைய மற்றும் என்னுடைய.

"நான் நினைப்பது என்னவெனில் இயேசுவின்மேல் உள்ள விசுவாசத்தின் அனுபவத்தை ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் பகிர்ந்து நம்மை உற்சாகப்படுத்தவேண்டும்."

Romans 1:13-15

நீங்கள் அறியாமல் இருக்க நான் விரும்பவில்லை

பவுல் முக்கியபடுத்தி கூறியது இந்த தகவல் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதே. மாற்று மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு பின்வரும் காரியங்களைத் தெரியவேண்டுமென விரும்பிகிறேன்."

இதுவரையில் தடையாக இருந்தது என்பது_"என்னை எதோ எப்பொழுதும் தடுத்துக்கொண்டு இருக்கிறது"

சில கனிகளை வைத்துக்கொள்

"கனி" என்பது பவுல் சுவிசேஷத்தை விசுவாசிக்கும்படி வழிநடத்திய ரோமாபுரியில் உள்ள மக்களை சுட்டிக்காட்டுகின்றது.

மற்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் இருந்ததுபோல்

"மற்ற யூதரல்லாத மக்களைச் சேர்ந்த தேசத்தினர் வந்து சுவிசேஷத்தை விசுவாசித்தது போல்."

நான் இருவருக்கும் கடனாளியாயிருக்கிறேன்

"நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவேண்டும்"

Romans 1:16-17

நான் வெட்கப்படமாட்டேன்

ரோமாபுரியில் ஏன் சுவிசேஷம் பிரசங்கம் செய்யவேண்டும் என விளக்கினார்.

நான் சுவிசேஷத்தை குறித்து வெட்கப்படமாட்டேன்

மாற்று மொழிபெயர்ப்பு: "அநேக மக்கள் என்னை புறந்தள்ளினாலும் சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்வதில் நம்பிக்கை உண்டு."

அதற்காகவே

பவுல் சுவிசேஷத்தை பிரசங்கம் செய்வதில் உள்ள நம்பிக்கையை விளக்கிச் சொல்கிறார்.

விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்புக்குரிய தேவ வல்லமை

"சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை தேவன் வல்லமையாய் இரட்சிக்கிறார்."

முதலில் யூதருக்கும் பின்பு கிரேக்கருக்கும்

"யூத மக்களுக்கு"அல்லது "கிரேக்க மக்களுக்கு."

முதலில்

கிரேக்கர்களுக்கு முன்பே யூதர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கபட்டது,ஆகவே முதன்மையான அர்த்தம் இங்கே இப்படி இருக்கலாம் 1) முதலில் காலவரிசை, ஆனால்இப்படியும் இருக்கலாம் 2) "மிகவும் முக்கியமானது."

தேவனுடைய நீதி விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது

"ஜனங்கள் நீதிமான்களாவது ஆரம்பமுதல் இறுதிவரை விசுவாசத்தினாலேயே என்பதை தேவன் வெளிப்படுத்தினார்"

மாற்று மொழிபெயர்ப்பு: விசுவாசம் உள்ளவர்களுக்கு தேவன் அவருடைய நீதியை வெளிப்படுத்தினார் , மற்றும் அதின் முடிவாக அவர்களுக்கு அதிக விசுவாசம் இருக்கிறது " அல்லது "ஏனென்றால் , தேவன் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய நீதியை வெளிப்படுத்துகிறார் , அதின் முடிவாக ஜனங்களுக்கு அதிக விசுவாசம் இருக்கிறது".

விசுவாசத்தினால் நீதிமான் வாழ்வான்

“தேவன் அவரில் நம்பிக்கை வைத்திருக்கிற ஜனங்களை அவரிடத்தில் சரியானவர்கள் என்று கருதுகிறார் , அவர்கள் நித்தியநித்தியமாக வாழ்வார்கள்".

Romans 1:18-19

கோபத்திற்குக்காக

ஏன் சுவிசேஷத்தை மக்கள் கேட்கவேண்டுமென பவுல் விளக்குகிறார்.

தேவனுடைய கோபம் வெளிப்பட்டது

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்தினார்."

எதிராக

"நோக்கி"

மக்களின் சகல தேவஅவபக்திக்கும் அநீதிக்கும்

மாற்று மொழிபெயர்ப்பு: "மக்கள் செய்யும் எல்லாவித தேவஅவபக்திக்கும் அநீதிக்கும்."

சத்தியத்தை பற்றிக்கொள்

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனைக் குறித்த உண்மையான தகவலை மறைத்துவிட்டனர்."

தேவனைப் குறித்து அறிந்தவைகள் அவர்களுக்கு காணக்கூடியதாக இருந்தது

மாற்று மொழிபெயர்ப்பு:" தேவனை குறித்து அவர்களுக்கு தெரியும் காரணம் அவர்களால் பார்க்கமுடிந்தது."

தேவனுக்காக

ஏன் இந்த ஜனங்கள் தேவனைக் குறித்தக் காரியங்களை அறிந்திருக்கிறார்கள் என்று பவுல் காட்டுகிறார் .

தேவன் அவர்களைத் தெளிவுபடுத்தினார்

மாற்று மொழிபெயர்ப்பு: “தேவன் அதை அவர்களுக்குக் காண்பித்தார் "

Romans 1:20-21

அதற்காக

மனித இனத்திற்கு தேவன் தம்மை எப்படி வெளிப்படுத்தினார் என்று பவுல் விளக்குகிறார்.

அவனால் பார்க்கமுடியாத பொருட்கள் எல்லாம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது

"பார்க்க முடியாத பொருட்கள்" கண்களால் பார்க்கமுடியாததை குறிக்கிறது.அவைகள் "தெளிவாக தெரியும்"காரணம் தங்களுடைய கண்களால் பார்க்கமுடியாவிட்டாலும் அங்குள்ளவைகளை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.

உலகம்

இது வானங்களையும் பூமியையும்,அவைகளில் உள்ள சகலத்தையும் குறிக்கிறது.

தெய்வீக சுபாவம்

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனின் சகல பண்புகளும் குணாதிசியங்களும்" அல்லது " அவருடைய தேவத்துவத்தை குறிக்கும் தேவனுடைய செயல்கள்"

சிருஷ்டிக்கப்பட்டவைகளால் புரிந்துகொள்ளப்பட்டது

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் படைத்த பொருட்களைப் பார்த்து மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்."

அவர்கள் யாருக்கும் சாக்குப்போக்கு ஏதுமில்லை

மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் முடியாது என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

அவர்கள்

1:18 ன் "மனுக்குலம்”

அவர்களுடைய சிந்தைகளில் அறிவீனர்களானார்கள்

“அறிவீனமான காரியங்களைச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்”

அவர்களுடைய உணர்வற்ற இருதயம் இருளடைந்தது

புரிந்துகொள்ளும் திறன் குன்றினவர்கள் என்பதை அர்த்தப்படுத்தும்படியாக இருதயம் இருளடைகிறது என்ற காரியத்தை இது பயன்படுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: “அவர்களுடைய இருதயம் இனி எப்போதும் புரிந்துகொள்ளமுடியாது”

Romans 1:22-23

அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு,முட்டாள்களாகிவிட்டனர்

"தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் முட்டாள்களாக மாறிவிட்டனர்"

அவர்களையே...அவர்கள்

"மனிதஇனம்"1:18

அழிவில்லாத தேவனுடைய மகிமையை மாற்றிக்கொண்டனர்

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் மகிமையானவர் அவருக்கு மரணம் ஒருபோதும் இல்லை என்ற சத்தியத்தை வியாபாரப்ப்படுத்திவிட்டனர்." அல்லது "தேவன் மகிமையானவர் அவருக்கு மரணம் ஒருபோதும் இல்லை என்று விசுவாசிப்பதை நிறுத்திவிட்டனர்"

ரூபங்களுக்கு ஒப்பாக சாயலாக

மாற்று மொழிபெயர்ப்பு: "ஒரே மாதிரியான ரூபத்தைப் போல் தெரிந்த விக்கிரங்களை ஆராதிக்கத் தெரிந்துகொண்டனர்"

அழிவுள்ள மனிதன்

"சில மனித இனங்கள் இறந்துவிடும்"

Romans 1:24-25

ஆகையால்

"இந்தக் காரணத்திற்காக"

தேவன் அவர்களை ஒப்புக்கொடுத்தார்

"தேவன் அவர்களை மனம்போன போக்கில் செயல்பட அனுமதித்தார்"(see also “God allowed,”1:28).

அவர்களை...அவர்களுடைய...அவர்களையே...அவைகள்

"மனிதஇனம்" 1:18

அசுத்தத்திற்காக அவர்களுடைய இருதய இச்சைகளை

"அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒழுக்கமற்ற அசுத்தமான காரியங்கள்"

அவர்களுடைய சரீரங்கள் அவர்களுக்குள்ளாக கனவீனப்படுத்தப்படும்

படியாக

அவர்கள் பாலிய ஒழுக்கமற்ற மற்றும் இழிவான செய்கைகளைச் செய்தார்கள்.

அதற்கு பதிலாக

சாதகமான அர்த்தங்கள் 1) "அதற்கு பதிலாக" அல்லது "மாற்றாக" அல்லது 2) "அதனுடன்"

Romans 1:26-27

இந்த

"விக்கிரக ஆராதனையும் பாலுணர்வு பாவமும்"

தேவன் அவர்களை ஒப்புக்கொடுத்தார்

"தேவன் அவர்களை மனம்போன போக்கில் செல்ல அனுமதித்தார்"

அவமதிப்பான காமஇச்சை

"வெட்ககேடான பாலுணர்வு இச்சைகள்"

அவர்களுடைய பெண்களுக்காக

"ஏனென்றால் அவர்களுடைய பெண்கள்"

அவர்களுடைய பெண்கள்

1:18 ன் "மனுக்குலத்தின்” பெண்கள்.

அவர்களுடைய பெண்களுக்கு

"மனிதஇனப்" பெண்கள் 1:18

சுபாவ அனுபவதிற்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்

"தேவன் திட்டமிடாத உடலுறவு சம்பந்தப்பட்ட காரியங்களை அனுசரிக்க ஆரம்பித்துவிட்டனர்"

அவர்களுடைய இச்சைகளிளால் வெந்து போனார்கள்

" மூர்க்கத்தனமாக பாலுணர்வு இச்சைகளை அனுபவித்தார்கள்"

தகுதியற்ற

"அவமானம்" அல்லது "மரியாதை இல்லாதது" அல்லது "பாவமான"

சுபாவத்திற்கு விரோதமான அவர்களுடைய பாலுணர்வு இச்சைக்காக தண்டனையைப் பெற்றுக்கொள்கிறார்கள்

புதிய வாக்கியத்தில் தொடங்கலாம்: "தேவனிடமிருந்து தகுதியான தண்டனையைப் பெற்றுக்கொண்டார்கள்.

தகுதியற்ற

"அவமானம்" அல்லது "மரியாதை இல்லாதது" அல்லது "பாவமான"

Romans 1:28

தேவனை நன்கு அறியும் அறிவை அவர்கள் அங்கீகரிக்கவில்லை

" தேவனை அறிவது தேவையானது என அவர்கள் நினைக்கவில்லை"

அவர்கள்...அவர்களுடைய...அவைகளை

"மனிதஇனம்" 1:18

அவர் கேடான சிந்தையை அவர்களுக்கு கொடுத்தார்

"அவர்களுடைய சிந்தையை பாவகரமான செயல்கள் ஆட்கொள்ள தேவன் அனுமதித்துவிட்டார்"

பொருத்தமற்ற

"அவமானம்" அல்லது "மரியாதை இல்லாதது" அல்லது "பாவமான"

Romans 1:29-31

அவர்கள் நிறையப்பட்டு இருந்தார்கள்

"அதற்கான தீவிர வாஞ்சை அவர்களுக்கு இருந்தது" அல்லது "அதற்கான செயல்களில் ஈடுபட தீவிர வாஞ்சையாய் இருந்தார்கள்"

அவர்கள்

"மனித இனம்" 1:18

Romans 1:32

தேவனுக்கு இன்றியமையாதது என்னவென்று அறிந்துகொண்டார்கள்

அவருடைய நீதியின் பாதையில் வாழவேண்டுமென்று தேவன் விரும்பிகிறதை அவர்கள் அறிந்து இருந்தனர்.

அவ்வித காரியங்களை அனுசரித்தார்கள்

"அக்கிரமச் செயல்களைச் செய் "

மரணத்திற்கு பாத்திரர்

"அவர்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள் "

ஆனால் அதை மட்டும் செய்யவில்லை

புதிய வாக்கியத்தில் தொடங்கலாம்: எனினும் அவர்கள் இந்த காரியங்கள் மட்டும் செய்யவில்லை"

Romans 2

Romans 2:1-2

பவுல் தனது தர்க்கத்தை கற்பனையான யூதனிடம் ஆரம்பிக்கிறார்.

ஆதலால் நீ குற்றமற்றவனாக இருக்கிறாய்

"ஆதலால்" என்ற வார்த்தை நிருபத்தில் உள்ள புதிய பகுதியைக் காட்டுகிறது.1:1

32ல் சொல்லியுள்ளதை அவர்களைகோள்காட்டி முடிவு அறிக்கையை தருகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: " தேவன் தொடர்ந்து பாவம் செய்கிறவர்களை தண்டிக்கிறார், உறுதியாக உங்களுடைய பாவங்களை மன்னிக்கமாட்டார்."

நீயே

இங்கு "நீ" என்ற வார்த்தை ஒருமையில் உள்ளது.பவுல் உண்மையான மனிதனிடம் பேசவில்லை.யூத நபர் அவருடன் தர்க்கம்பண்ணுவதுபோல் நடிக்கிறார். யூதர் அல்லது புறஜாதியினர் யாரானாலும் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் தேவன் அவர்களைத் தண்டிப்பார் என பவுல் தன்னுடைய பேச்சை கேட்போருக்கு போதிப்பதற்காக செய்தார்.

நீ, யாரை குற்றவாளியாக தீர்க்கிறாயோ

இங்கு "நீ" என்கிற வார்த்தை தங்களை தேவனாக பாவித்து மற்றவர்களை குற்றப்படுத்தும் நபர்களை திட்டவும்,பரியாசம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது.இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்:" நீ சாதாரண மனிதன்,இருப்பினும் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறாய்,மற்றும் அவர்கள் தேவனுடைய தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று சொல்வார்கள்"

நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்:"உன்னை நீயே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்,ஏனெனில் நீயும் அதே அக்கிரமச் செய்கைகளைச் செய்கிறாய்."

ஆனால் எங்களுக்கு தெரியும்

இது கிறிஸ்துவ விசுவாசிகளையும் யூதர்களில் கிறிஸ்துவர்களாக இல்லாதவர்களையும் குறிக்கும்.

தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் விழும்பொழுது சத்தியத்தின்படி உள்ளது

"தேவன் அந்த மக்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நியாயத்தீர்ப்பு செய்வார்."

அந்த காரியங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள்

"அந்த மக்கள்அக்கிரமச் செயல்களைச் செய்கிறவர்கள்."

Romans 2:3-4

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை உரைநடைக் கேள்விகளுடன், யூத நபருடன் தொடருகிறார்.

ஆனால்

"அப்படியே "

இதைக் கருத்தில்கொள்

"நான் உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் என்று நினைக்கவும் "

நபர்

மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தை. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் யாரானாலும் "

நீ குற்றமாகத் தீர்க்கிறவைகளை நீயே செய்கிறபடியால்

" தேவனுடைய தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று யாரை சொல்கிறோமோ அவர்களே அந்த அக்கிரமக் கிரியைகளை செய்கிறார்கள்"

தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு நீ தப்பித்துகொள்வாயா?

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய நீயாயத்தீர்ப்பிலிருந்து உன்னால் தப்பிக்கமுடியாது!"

அல்லது ஐஸ்வர்யத்தின் நன்மையில் சற்று குறைவு என நினைக்கிறாயா, அவருடைய தாமதமான தண்டனையும்,அவருடைய பொறுமையும்

மாற்று மொழிபெயர்ப்பு: " நீ செய்வது ஒரு பொருட்டல்ல அந்த தேவன் நல்லவர் .மற்றும் அவர் தம்முடைய மக்களைத் தண்டிப்பதற்கு முன்பு நீடிய பொறுமையாக உள்ளார்."

ஐஸ்வர்யத்தில் உள்ள கொஞ்சமானதை நினை ...பொறுமை

" ஐஸ்வரியத்தை கவனியுங்கள்....பொறுமை முக்கியமற்றது" அல்லது "கருது....நல்லதல்ல"

அவருடைய நற்கிரியைகளை அறியாமால் இருப்பது உன்னை மனந்திரும்புதலுக்கு கொண்டுச் செல்லும்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: " அவர் நல்லவர் என்று தேவன் காண்பிக்கிறதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் அதினால் நீங்கள் மனந்திரும்பலாம்."

Romans 2:5-7

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூத நபருடன் தொடருகிறார்.

ஆனால் உன் மனகடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி _ மனந்திருந்தவும் மறுக்கும் நபர்களையும் மனக்கடினத்தின் நிமித்தம் தேவனுக்கு கீழ்படியாதவர்களை பவுல் கற்களுக்கு ஒப்பிடுகிறார். இருதயம் பூரண மனிதனை குறிக்கிறது.மாற்று மொழிபெயர்ப்பு: "ஆகையால் நீங்கள் கவனிக்கவும் மனந்திருந்தவும் மறுத்துவிட்டீர்கள்"

உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாய்

"குவித்துக்கொள்கிறாய்" என்ற சொற்றொடர் வழக்கமாக ஒரு நபர் தன் பொக்கிஷங்களை ஒன்றாக சேர்த்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதை குறிக்கிறது.பொக்கிஷத்திற்கு பதிலாக மனிதன் தேவனின் தண்டனையைச் சேர்க்கிறான்.எவ்வளவு காலம் மனந்திரும்பாமல் இருக்கிறார்களோ,அதிக தண்டனை கிடைக்கும். மாற்று மொழிபெயர்ப்பு: உங்கள் தண்டனையை நீங்கள் மோசமாக்கி விட்டீர்கள்."

கோபாக்கினையின் நாளிலே,தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் நாளிலே

இவைகள் அதே நாளில் .மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் தம்முடைய கோபத்தை அனைவருக்கும் காண்பிக்கும் வேளையிலே , அவர் அந்த மக்களை நேர்மையாய் நியாயம் தீர்ப்பார் "

திருப்பிக் கொடு

"விஷேசித்த வெகுமதியை அல்லது தண்டனையைக் கொடு"

அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்

" ஒவ்வொருவரும் செய்து காட்டியுள்ளபடி "

எப்பொழுதும் நற்கிரியைகளைச் செய்து,துதியையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு

நித்திய ஜீவன் "எப்பொழுதும் நற்கிரியைகளைச் செய்து, துதியையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் "

தேடின

இதனுடைய அர்த்தம் என்னவெனில் கிரியைகளின்படி தேவன் நியாயப்தீர்ப்பின் நாளிலே அனுகூலமானத் தீர்ப்பை எடுக்க ஏதுவாகும்

துதி கனம் அழியாமை

தேவனை துதிக்கவும் கனப்படுத்தவும் விரும்புகிறார்கள்.எப்பொழுதும் சாகாமாலிருக்க விரும்புகிறார்கள்.

அழியாமை

இது மாம்சமானவனவைகளையும், ஒழுக்கமற்றவைகளையும்,சீர்கேடுகளையும் குறிக்கிறது.

Romans 2:8-9

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூத நண்பருடன் தொடருகிறார்.

சுயமாக தேடுதல்

"சுயநலம் " அல்லது "அவர்களை மட்டும் சந்தோஷப்படுத்தக்கூடியவை சம்மந்தமாக "

கோபக்கினையும் உக்கிரகோபாக்கினையும் வரும்

இரண்டு வெவ்வேறு வழிகளில் ஒரே பொருளுடைய தேவனின் கோபத்தைக் குறித்து வற்புறுத்திச் சொல்லப்பட்டுள்ளது.மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் தம்முடைய பயங்கரமான கோபத்தைக் காண்பிப்பார்."

உபத்திரவமும் வியாகுலமும்

தேவனுடைய கோபம் எவ்வளவு கொடுரமானது என்பதை ஒரே பொருளுடைய இரண்டு வெவ்வேறு வழிகளில் வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "மிகவும் கொடூரமான தண்டனை வரும்."

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும்

இங்கே, பவுல் "ஆத்மா " என்ற வார்த்தையை பூரணமனுஷரைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "ஒவ்வொரு மனுஷர் மேலும். "

தீமையைக் கடைப்பிடித்தார்கள்

"தொடர்ந்து தீயச்செயல்களையே செய்தார்கள்."

முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும்

புதிய வாக்கியத்தில் மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் முதலில் யூதர்களையும்,பின்பு யூதரல்லாத மக்களையும் நியாயம் தீர்ப்பார். "

முதலில்

நற்செய்தியானது கிரேக்கர்களுக்கு முன்பே யூதர்களுக்கு பிரசங்கம் பண்ணப்பட்டது, ஆதலால் இங்கு முதன்மையான அர்த்தம் இப்படி இருக்கலாம் 1) முதலில் காலத்தின் அடிப்படையில், இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் 2) " மிகவும் வலியுறுத்தி " அல்லது " மிகவும் முக்கியமாக"

Romans 2:10-12

பவுல் தன்னுடைய கற்பனைத் தர்க்கத்தை யூத நபருடன் தொடர்கிறார்.

ஆதலால் துதியும்,கனமும்,சமாதானமும் உண்டாகும்

" ஆதலால் தேவன் துதியையும், கனத்தையும், சமாதானத்தையும் தருகிறார் "

நன்மையை கடைபிடிக்கிறார்

"நன்மையே தொடர்ந்து செய்துகொண்டு இருப்பது "

யூதருக்கு முதலிலும், மற்றும் கிரேக்கர்களுக்கும்

இதை புதிய வாக்கியத்திலும் கூறலாம்: "தேவன் முதலில் யூத மக்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் பலனளிப்பார்."

முதலில்

2:9 தில் மொழிபெயர்த்தபடியே மொழிபெயர்க்கவும்.

தேவனிடத்தில் பட்சபாதமில்லை

"தேவன் ஒரு கூட்டத்தினருக்கு மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் தயவு காட்டமாட்டார்."மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் அனைவரையும் சமமாக நடத்துகிறார்."

எத்தனைப்பேர் பாவம் செய்தார்களோ

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "பாவம் செய்தவர்கள் "

நியாயப்பிரமாணம் இல்லாமலும் அழிவார்கள் நியாயப்பிரமாணமில்லாமலே

பவுல் திரும்பச் சொல்கிறார் "நியாயப்பிரமாணம் இல்லாமல் "மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர்கள் அறியாததொரு பொருட்டல்ல என வலியுறுத்துகிறார்.அவர்கள் பாவம் செய்தால்,தேவன் அவர்களை நியாயந்தீர்ப்பார். மாற்று மொழிபெயர்ப்பு: "மோசேயின் நியாயப்பிரமாணத்தை அறியாததினால் ஆவிக்குள்ளாக உறுதியாக இறந்துவிடுவார்கள்"

எவர்கள் பாவம்செய்கிறார்களோ

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: " பாவம் செய்தவர்கள் "

நியாயப்பிரமாணத்திற்காக நியாயப்பிரமாணத்தினாலே நியாயம் தீர்க்கப்படுவார்கள்

"மோசேயின் நியாயப்பிரமாணத்தை அறிந்துகொள்ளுங்கள்,தேவன் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நியாயம் தீர்ப்பார்."

Romans 2:13-14

பவுல் தன்னுடைய கற்பனை தர்க்கத்தை யூத நபருடன் தொடருகிறார்.

க்காக

"ஆதலால் "உங்களுடைய மொழிநடை பவுலின் முக்கிய தர்க்கங்கள் உள்ள 14 மற்றும் 15 வசனங்களை வியாக்கியானம் செய்து வாசிப்போருக்கு அதிக தகவல்களைத் தருகிறது,இங்கேஇவைகளில் 2:14

15 ஏதாகிலும் ஒன்றை 2:13 க்கு முன்போ அல்லது 2:16.க்கு பின்போ பயன்படுத்தவும்.

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் அல்ல

"மோசேயின் நியாயப் பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் மட்டுமல்ல"

தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக உள்ளவர்கள்

" தேவனைப் பிரியப்படுத்த கூடியவைகள் "

ஆதலால் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்கள்

"மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் "

யார் நியாயந்தீர்க்கப்படுவது

இது செய்வினையோடு மொழிபெயர்க்கப்படலாம் : “தேவன் ஏற்றுக்கொள்வார்.”

அவைகள் அவர்களுக்கே நியாயப்பிரமாணம்

“அவர்களுக்குள்ளே ஏற்கனவே தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கொண்டுள்ளனர்”

Romans 2:15-16

பவுல் தன்னுடைய கற்பனை தர்க்கத்தை யூத நபருடன் தொடருகிறார்.

இதினால் அவர்கள் காண்பித்தார்கள்

"அவர்களுக்கு காண்பித்தபடி சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி கீழ்படிக்கிறவர்கள் "

நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற கிரியைகள் இருதயங்களில் எழுதப்பட்டு இருக்கிறது

மாற்று மொழிபெயர்ப்புகள்: " அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படி செய்யவேண்டியதை தேவன் அவர்களுடைய இருதயங்களில் எழுதிவைத்துவிட்டார்." அல்லது "நியாயப்பிரமாணம் கட்டளையிட்டவைகளை செய்யவேண்டுமென அவர்களுக்கு நன்றாகத் தெரியும்."

நியாயப்பிரமாணத்திற்கு தேவைப்படுகிறது

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "நியாயப்பிரமாணத்திற்கு தேவைப்படுவது "அல்லது "நியாயப்பிரமாணத்தின் மூலம் தேவன் கேட்பது."

அவர்களுடன் சாட்சியாக இருப்பது, அவர்களுடைய சிந்தைகள் குற்றப்படுத்தவுமில்லை அல்லது அவர்களைக் காத்துக்கொள்ளவுமில்லை

"கீழ்படியவில்லை என்றால் அவர்களுக்கு சொல்லுங்கள் அல்லது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படியவேண்டும்.

தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நாளிலே

2:13 ன் படி பவுல் நிறைவு செய்கிறார். இதை புதிய மொழிபெயர்க்கலாம்: "தேவன் நியாயந்தீர்க்கும்போது இவைகள் சம்பவிக்கும்."

Romans 2:17-20

பவுல் தன்னுடைய கற்பனை தர்க்கத்தை யூத நபருடன் தொடருகிறார்

உன்னை நீயே யூதனென்று அழைத்துக்கொண்டால்

இது நிருபத்தில் புதியப் பகுதியை ஆரம்பிக்கிறது. இங்கு "ஆனால் " என்ற வார்த்தை பவுலின் சந்தேகத்தையோ அல்லது அவரின் நிச்சயமில்லாத தன்மையையோ குறிக்கவில்லை.இந்தக் கூற்றுகள் யாவும் உண்மையென வலியுறுத்துகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு: " யூத மக்களில் ஒருவராக உங்களை நீங்கள் எண்ணவேண்டும் "

நியாயப்பிரமாணத்தின்மேல், தேவனுக்குள் பெருமையாக மகிழ்ந்திருங்கள்

" நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்மேல் நம்பிக்கைவைத்தீர்கள்.மற்றும் தேவனின் நிமித்தம் அதிக சந்தோஷப்பட்டீர்கள்." # அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளுங்கள்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "உங்களுக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று தெரியும்"

நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய்

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாணம் போதிக்கிறதைப் புரிந்துகொள்ளுங்கள்."

சத்தியத்தின் மேல்...நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால்

உங்களது மொழிநடையில் 2:19

20 யை குறிக்க வழியிருந்தால் பவுலின் முக்கிய தர்க்கமான 21 ஐ வியாக்கியானம் செய்திருப்பார்.இங்கே பயன்படுத்தவும் 2:19

20 யை 2:17. க்கு முன்பு வைத்து பார்க்கவும்.

உங்களுக்கு நம்பிக்கையிருந்தால்

" உங்களுக்கு நிச்சயமாக "

நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும்,அந்தகாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்

அடிப்டையில் ஒரே பொருளை இவ்விரண்டு சொற்றொடர்களும் அர்த்தம் கொள்கிறது.பார்வையில்லாதவர்களுக்கு உதவிட நியாயப்பிரமாணத்தை போதிக்கும் யூத மனிதரை ஒப்பிடுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: " உனக்கு நீயே குருடருக்கு வழிகாட்டியாய் இருக்கிறாய்,அந்தகாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிச்சத்தை தருகிறார்.

முட்டாள்களைச் சீர்படுத்துபவர்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: " தவறு செய்கிறவர்களை சீர்படுத்து."

குழந்தைகளுக்கு உபாத்தியானாகவும்

நியாயப்பிரமாணத்தை குறித்து எதுவும் அறியாதவர்களை இங்கு பவுல் குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: " நீ நியாயப்பிரமாணத்தை அறியாதவர்களுக்கு போதிக்கிறாய்."

நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டின சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே

"ஆகையால் நியாயப்பிரமாணத்தில் உள்ள சத்தியத்தை நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள்."

Romans 2:21-22

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை, உரைநடைக் கேள்விகளால் தர்க்கம்செய்யும் யூத நண்பருடன் தர்க்கத்துடன் தொடருகிறார்.

ஆகையால் நீ மற்றவர்களுக்கு போதிக்கும்போது, உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா?

பவுல் தன்னுடைய பேச்சைக் கவனிப்போரை திட்டுவதற்கு கேள்விகளைப் பயன்படுத்தினார், இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "ஆதலால் மற்றவர்களுக்கு போதிக்கும்போது உனக்கு நீயே போதனை செய்யாதே !"

திருடக்கூடாது என்று பிரசங்கம் செய்கிற நீ திருடலாமா?

பவுல் இக்கேள்வியை தன் பேச்சைக் கேட்போரைத் திட்டுவதற்காக பயன்படுத்துகிறார்.இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "திருடக்கூடாது என்று சொல்லுகிற நீயே திருடுகிறாய்!"

விபசாரம் செய்யக்கூடாது என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா?

பவுல் தன் பேச்சைக் கேட்போருடன் தர்க்கம் பண்ணுவதற்கு இக்கேள்வியை பயன்படுத்துகிறார்.இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "விபசாரம் செய்யக்கூடாது என்று சொல்லுகிற நீயே விபசாரம் செய்யலாமா!"

விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?

பவுல் தன் பேச்சைக் கேட்போரைத் திட்டுவதற்கு பயன்படுத்தினார். இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: " விக்கிரங்களை வெறுக்கிற நீங்களே, கோவில்களைக் கொள்ளையிடலாமா!"

கோவில்களைக் கொள்ளையிடுதல்

சாதகமான அர்த்தங்களாவன 1) "பிற சமயக் கோவில்களில் கொள்ளையடித்து,அதை விற்று இலாபம் ஈட்டுதல்." அல்லது 2) " தேவனுக்குரிய பணம் முழுவதையும் எருசலேம் ஆலயத்திற்கு அனுப்பாதே." அல்லது 3) "உள்ளூர் கடவுள்களைக் கேலி செய் "

Romans 2:23-24

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை ,உரைநடைக் கேள்விகளுடன் யூத நண்பருடன் தொடருகிறார்.

நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து,தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

தன் பேச்சை கேட்போருடன் திட்ட பவுல் இக்கேள்விகளைப் பயன்படுத்தினார்."அக்கிரமக்காரர்களான நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாரட்டுகிறீர்கள், அதேவேளையில் நீங்கள் கீழ்படியாமல் தேவனுக்கு அவமானத்தைப் பெற்றுத் தருகிறீர்கள்."

தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாக தூஷிக்கப்படுகிறதே

"நாமம்" என்ற வார்த்தை தேவனின் பரிபூரணத்தைக் குறிக்கிறது,வெறுமனே பெயரைக் குறிக்கவில்லை.இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்: "யூதரல்லாத மக்களின் மனதில் நீங்கள் செய்யும் அக்கிரமக் கிரியைகள் தேவனுக்கு அவமானத்தை பெற்றுத் தரும்.

Romans 2:25-27

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை உரைநடைக் கேள்விகளுடன், யூத நபருடன் தொடருகிறார்.

உனக்கு உண்மையில் விருத்தசேதனத்தினால் நன்மை உண்டாகும்

" ஆகையால் இவைகளில் விருத்தசேதனம்பண்ணும்படிக்கு நான் சொல்கிறது உனக்கு நன்மையைத் தரும்"

நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனாய் இருந்தால்

" நீ நியாயப்பிரமாணத்திலுள்ள கட்டளைகளுக்கு கீழ்படியாவிட்டால் "

உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகிவிடும்

நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படியாத யூதனை சரீரத்தின்படி விருத்தசேதனம் பண்ணின மனிதருடன் ஒப்பிடப்படுகிறது ஆதலால் மீண்டும் பழைய நடவடிக்கைக்கு செல்கிறது: யூதனாகயிருக்கலாம் ஆனால் தோற்றத்தில் யூதரல்லாத மக்களைப்போல் இருக்கிறான். மாற்று மொழிபெயர்ப்பு:"இது உனக்கு விருத்தசேதனம்பண்ணவில்லை என்பதுபோல் உள்ளது."

விருத்தசேதனமில்லாதவன்

"விருத்தசேதனம்பண்ணப்படாத நபர்"

நியாயப்பிரமாணத்திற்கு தேவையானதைக் கடைப்பிடித்தல்

"நியாயப்பிரமாணத்தில் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல்"

விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவன்...உன்னை குற்றப்படுத்தமாட்டானா

விருத்தசேதனம் மட்டும் ஒருவனை தேவனுக்கு முன்பாக நீதிமானாக்காது என்பதை பவுல் கேள்வி கேட்பதின் மூலம் வலியுறுத்தி கூறுகிறார். இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: தேவன் அவனை விருத்தசேதனம் உள்ளவனாகவே நினைக்கிறார். சுபாவத்தின்படி விருத்தசேதனம் பண்ணப்படாதவன்.... உன்னைக் குற்றப்படுத்துவான்.

எழுதப்பட்ட வேத எழுத்துகளும் விருத்தசேதனமும் நியாயப்பிரமாணத்தை மீறினால்

"எழுதப்பட்ட வேத எழுத்துகளையுடையவர்களும் விருத்தசேதனமுள்ளவர்களும் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை."

Romans 2:28-29

வெளிப்பார்வைக்கு

இது மக்கள் பார்க்கக்கூடிய யூதச்சடங்குகள்.

வெளிப்புறமான

விருத்தசேதனம் பண்ணப்பட்டதற்கு மனிதனின் பிறப்புறுப்பில் உள்ள சரீர ஆதாரம்.

உள்ளத்திலே யூதனானவனும்,இருதயத்தில் விருத்தசேதனம்பண்ணினவனும்

இந்த ஒரே சொல் வெவ்வேறு அர்த்தங்களைத் தரும் "அவன் உள்ளத்தில் யூதனாய் இருக்கிறான்." "இருதயத்தில் பண்ணப்பட்டுள்ள விருத்தசேதனம்" பற்றி உருவகம் மூலம் விளக்குகிறார்.

உள்ளத்திலே

தேவனால் மாற்றப்பட்ட மனிதனின் மதிப்பையும் நோக்கத்தையும் குறிக்கிறது.

ஆவியில்

இது ஒருவேளை ஆன்மாவைச் சார்ந்ததைக் குறிக்கலாம்,மனிதனின் ஆவிக்குரிய பகுதி,வெளிப்புறமான நியாயப்பிரமாண "நிருபத்திலிருந்து" வேறுபடுகிறது.எப்படியாகிலும்,பரிசுத்த ஆவியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நிருபத்தில் அல்ல

" நிருபம் " என்பது எழுதப்பட்ட மொழியின் சிறிய பகுதியாகும்.இங்கு அது எழுதப்பட்ட வேத வசனங்களைக் குறிக்கிறது.மாற்று மொழிபெயர்ப்பு: "பரிசுத்த ஆவியின் கிரியைகள் மூலம்,வேத வசனங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததினால் அல்ல."

Romans 3

Romans 3:1-2

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூதருடன் தொடர்ந்து,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அப்படியானால் யூதருக்கு என்ன அனுகூலம் இருக்கிறது?விருத்தசேதனத்தினால் உண்டாகும் பலன் என்ன?

மாற்று மொழிபெயர்ப்பு: "ஆகவே ,தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தாலும்,தேவனின் உடன்படிக்கையால் யூத மக்களுக்கு பலனேதுமில்லை!"

இது மேன்மையானது

" அங்கே அதிக அனுகூலமுள்ளது "

முதலில்

மாற்று மொழிபெயர்ப்புகள்: "முதலில் காலத்தின் அடிப்படையில்" அல்லது "அதிக நிச்சயமாக " அல்லது "மிக முக்கியமான".

Romans 3:3-4

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூதருடன் தொடர்ந்து,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

சில யூதர்கள் என்னத்திற்காக விசுவாசமில்லாமல் இருந்தார்கள்? தேவன்மேல் விசுவாசமுள்ளவர்களை அவர்களுடைய அவிசுவாசம் தகுதியிழக்க செய்யுமோ?

பவுல் இந்த உரைநடைக் கேள்விகளை மக்களை சிந்திக்கவைக்க பயன்படுத்துகிறார்.சில யூதர்கள் தேவனிடத்தில் விசுவாசமில்லாமல் இருந்தார்கள்,ஆகவே தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றமாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர்.

இல்லை என்பதால்

"அது முடியாது!" அல்லது "நிச்சயமற்றது!" இது சம்பவிக்குமென்ற கருத்துக்களை உறுதியாக மறுக்கமுடியாது. ஒத்த கருத்துக்களை உங்களது மொழியில் இங்கே பயன்படுத்தவும்.

அதற்கு பதிலாக

" நாம் அதற்கு பதிலாக என்று சொல்லவேண்டும்"

எழுதப்பட்டுள்ளபடி

" நான் சொல்கிறதை யூதருடைய வேத வசனங்களும் ஒத்துக் கொள்கிறது.

Romans 3:5-6

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூதருடன் தொடர்ந்து,அவருடையக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்?

பவுல் இந்த வார்த்தைகளை தான் கற்பனையாகப் பேசிக்கொண்டிருக்கும் யூதரின் இருதயத்தில் வைக்கிறார். மாற்று மொழிபெயர்ப்பு: " ஏனெனில் நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினது, என்னிடம் கேள்வியுள்ளது:"

தேவன் அநீதியுள்ளவரல்ல,கோபாக்கினையைச் செலுத்துகிறவரா ?

இதை மாற்று மொழிபெயர்ப்பில் பயன்படுத்தினால்,அதற்கு பதில் இல்லை என்பது வாசிப்போருக்கு தெரியுமென்பதை உறுதிப்படுத்திக்கொள்: " தேவன் கோபாக்கினையை மக்கள்மேல் செலுத்துகிறாரா,அநீதியுள்ளவரா?"

நான் மனித பகுத்தறிவின்படி பேசுகிறேன்

"இதை அநீதியுள்ள நபர் சொல்லியிருக்கலாம் என சொல்லுகிறேன்."

தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி ?

கிறிஸ்துவ சுவிஷேசத்திற்கு விரோதமாக செய்யும் தர்க்கங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது என்று காண்பிக்க பவுல் உரைநடைக் கேள்விகளைப் பயன்படுத்தினார்,இதுவரையில் அனைத்து யூதர்களும் தேவனால் முடியுமென்றும்,மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் விசுவாசித்தார்கள்." தேவன் உலகத்தை மெய்யாகவே நியாயந்தீர்ப்பார் என்று அனைவருக்கும் தெரியும்"

Romans 3:7-8

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூதருடன் தொடர்ந்து,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் ,இனி நான் பாவியென்று தீர்க்கபடுவானேன்?

இங்கு பவுல் கிறிஸ்துவ சுவிஷேசத்தைத் தொடர்ந்து புறந்தள்ளுகிறவர்களைக் குறித்து கற்பனை செய்கிறார்; நீயாயத்தீர்ப்பின் நாளிலே அவனை தேவன் பாவியென்று அறிவிக்கக்கூடாது என பகைவர்கள் தர்க்கிறார்கள்,எடுத்துக்காட்டு, அவர் பொய் சொல்கிறார்.

ஏன் சொல்லக்கூடாது....?

இங்கே பவுல் தனக்குள்ளே கேள்வி கேட்கிறார்,அவருடைய கற்பனையான பகைவரைப் பற்றிய தர்க்கம் எவ்வளவு முட்டாள்தனமானது என காண்பிக்கிறார். மாற்றுமொழிபெயர்ப்பு: "நன்மையான காரியங்கள் வரும்படி தீமையான காரியங்களைச் செய்யலாமென்று நான் சொல்லலாமா "

நாங்கள் தவறான தகவலைச் சொல்லி

மாற்று மொழிபெயர்ப்பு:" நாங்கள் இதைத்தான் மற்றவர்களுக்கு சொல்கிறோம் என்று சில பொய்யர்கள் சொல்கிறார்கள்."

அவர்கள் மேலுள்ள நியாயத்தீர்ப்பு நீதியானது

பவுலின் பகைவர்களை தேவன் ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பது சரியாக இருக்கும்,பவுல் போதித்துக்கொண்டு இருப்பதைப் பொய் என்று சொல்கிறார்கள்.

Romans 3:9-10

பவுல் தன்னுடைய கற்பனையான தர்க்கத்தை யூதருடன் தொடர்ந்து,அவருடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

அப்படியென்றால் ? நமக்குநாமே சாக்குப்போக்கு சொல்கிறோமா?

சாதகமான அர்த்தங்களாவன : 1) "கிறிஸ்தவர்களாகிய நாம் செய்கின்ற அக்கிரமக் காரியங்களை மறைக்க முயலுவதில்லை!" அல்லது 2) " யூதர்களாகிய நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தப்பித்துக்கொள்வோம் என கற்பனை செய்யவேண்டாம்,ஏனென்றால் நாம் யூதர்கள்!" # அறவே இல்லை

இந்த வார்த்தைகள் சாதாரமானது "இல்லை" என்பதைவிட வலிமையானது,ஆனால் "நிச்சயமாக இல்லை" என்பதைவிட வலிமையானது அல்ல.

Romans 3:11-12

யாருக்கும் புரியவில்லை

" உண்மையில் தேவ சத்தியம் யாருக்கும் புரியவில்லை "

தேவனை யாரும் தேடவில்லை

"தேவனுடன் உண்மையான உறவு வைத்துக் கொள்ள யாரும் உண்மையாக முயலவில்லை"

வேறு திசை நோக்கி திரும்பு

" அவர்களின் விருப்பத்திற்காக தேவனையும் அவருடைய நீதியையும் புறந்தள்ளினார்கள்."

பயனற்றுப் போனது

"அவர்களை பொருத்தமட்டில் தேவ சித்தம் மதிப்பில்லாமல் போனது."

Romans 3:13-14

அவர்களுக்கு...அவர்களுக்கு

"யூதர்கள் கிரேக்கர்கள் 3:9

அவர்களுடைய தொண்டை திறக்கப்பட்ட பிரேதகுழி

மக்கள் சொல்லும் யாவற்றிலும் அநீதியும் அருவருப்பும் உள்ளதைச் சொல்ல பவுல் உருவக அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்.

அவர்களுடைய நாவுகள் வஞ்சித்தது

" மக்கள் பொய் பேசுகிறார்கள்"

அவர்களுடைய வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது

"மக்கள் அதிக தீங்கானதை சொல்கிறார்கள்,அதினால் மற்ற மக்களை காயப்படுத்துகிறார்கள்'"

Romans 3:15-18

அவர்களுக்கு...அவர்களுக்கு ....அவர்கள்....அவர்களுக்கு

"யூதர்கள் கிரேக்கர்கள் 3:9

அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது

" அவர்கள் மக்களைக் காயப்படுத்தி கொல்ல அவசரப்படுகிறார்கள் "

நாசமும் நிர்பந்தமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது

"அனைவரும் அவ்வித வழிகளில் வாழ்ந்து அவர்கள் திட்டமிட்டே மற்றவர்களை அழித்து துன்பத்தை தருகிறார்கள் "

சமாதானத்தின் வழியில்

"வழி"என்றால்" சாலை" அல்லது "பாதை" மாற்று மொழிபெயர்ப்பு : "மற்றவர்களுடன் சமாதானமாக வாழ்வதெப்படி"

அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை

"தேவனுக்குரிய கனத்தை அவருக்கு கொடுக்க மறுக்கின்றனர்.

Romans 3:19-20

நியாயப்பிரமாணம் சொல்கிறதெல்லாம்,அது பேசுகிறது

"நியாயப்பிரமாணம் சொல்கிறதையெல்லாம் மக்கள் அதற்காக செய்யவேண்டும்" அல்லது "மோசே எழுதின அனைத்து கட்டளைகளும் நியாயப்பிரமாணத்திற்காக"

நாவுகள் யாவும் அடைக்கப்படும்படி

"அவர்களை தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களால் ஒன்றும் செய்யமுடியாது "மாற்று மொழிபெயர்ப்புக்கு செய்வினையை பயன்படுத்துதல்:"அவர்கள் பாவத்தை அறியாதவர்கள் என்று மக்கள் சொல்கிறதை தேவன் இவ்வழிகளில் விளக்குகிறார்."

க்காக

இதை இப்படியும் 1)" ஆகையால் " 2)" இந்த காரணத்தால் "3) "அதற்குப் பதிலாக"

பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிறது

"" தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அறியும்போது,அவன் நீதிமானல்ல என்பதை உணருகிறேன்,அதற்கு மாறாக தான் தேவனுக்கு முன்பாக பாவியென்று உணருகிறான்.

Romans 3:21-22

ஆனால்

பவுல் தன்னுடைய அறிமுகத்தை முடித்துகொண்டு இப்பொழுது அவருடைய முக்கிய கருத்தை கூற ஆரம்பிக்கிறார்.

இப்பொழுது

"இப்பொழுது" என்ற வார்த்தை இயேசு பூமிக்கு வந்த காலத்தைக் குறிக்கிறது.

நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படியாமல் நீதிமானக்கப்படுவதற்கான வழியை தேவன் காண்பித்துள்ளார்."

நியாயப்பிரமாணமில்லாமல்

இது "நீதிமானாக்கப்படுவதைக்" குறிக்கிறது, "காண்பித்துள்ளார்" என்பதற்காக அல்ல."

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது

"நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்"என்ற வார்த்தைகள் மோசேயும் தீர்க்கதரிகளும் எழுதின வேதவசனங்களின் பகுதியைக் குறிக்கிறது மற்றும் யூதருடைய வேத வசனங்களுக்காக நிற்கிறது,இங்கு வழக்காடு மன்றத்தில் மக்கள் சாட்சிசொல்வதை விளக்குகிறது.செய்வினைச் சொல்லில் மாற்று மொழிபெயர்ப்பு செய்யலாம்: "மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியதை உறுதி செய்கிறது."

இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் பலிக்கும் தேவ நீதி

இதைப் புதிய வாக்கியத்திலும் மொழிபெயர்க்கலாம்: "நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது தேவன் தருகின்ற நீதியை பரிந்துரைக்கிறேன்."

வித்தியாசமில்லை

"தேவன் யூதர்களை பார்ப்பதுபோன்றே யூதரல்லாத மக்களையும் பார்க்கிறார்."

Romans 3:23-24

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்

இதை செய்வினைச் சொற்களில் மொழிபெயர்க்கலாம்: "தேவன் அவருடைய கிருபையால் நியாயந்தீர்ப்பார் ஏனெனில் அவர்களை கிறிஸ்து இயேசு மீட்டுள்ளார்"

Romans 3:25-26

கடந்து போகிறது

இதை 1)அலட்சியம் அல்லது 2) மன்னித்தல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,தாம் நீதியுள்ளவரும் ,இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குக்கிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்

"இக்காலத்திலே தமது நீதியை விளங்கப்பண்ணும்படி ; "இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாய் இருக்கிறவர்களுக்கும் நீதிமான்களுக்கும் தாம் நீதியுள்ளவர் என்பதை காண்பிக்கும்படிச் செய்கிறார்"

Romans 3:27-28

தாம் வலியுறுத்தும் கருத்துக்கள் யாவும் உண்மையெனக் கூறி உரைநடைக் கேள்விகளுக்கு பவுல் பதில் அளிக்கிறார்.

எந்த நிலையில்?

"எந்த காரணத்திற்காக?" அல்லது "மேன்மைபாராட்டல் நீக்கப்பட்டது ஏன் ? அல்லது " நாம் மேன்மைபாராட்டக்கூடாது ஏன்?

கிரியைப்பிரமாணத்தினாலேயா?

"நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்ததினால் மேன்மைபாராட்டல் நீக்கப்பட்டதா?

விசுவாசப்பிரமாணத்திலே

"ஏனெனில் நாம் இயேசுவை விசுவாசிக்கிறோம்"

ஒன்றும் இல்லாதது

"நீங்கலாக"

Romans 3:29-30

தாம் வலியுறுத்தி சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையெனக் கூறி பவுல் உரைநடைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

அல்லது தேவன் யூதருக்குமாத்திரமா தேவன் ?

"நியாயப்பிரமாணத்திற்கு மாத்திரம் கீழ்ப்படிகிறவர்களை தேவன் நியாயந்தீர்ப்பாரானால்,யூதருக்கு மாத்திரம் தேவனாய் இருக்கமாட்டாரா?

Romans 3:31

தாம் வலியுறுத்தி சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையெனக் கூறி பவுல் உரைநடைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

விசுவாசத்தினால் நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமோ?

மாற்று மொழிபெயர்ப்பு:நமக்கு விசுவாசம் இருப்பதால் நியாயப்பிரமாணத்தை அறியாமல் இருக்கலாமா?"

எப்பொழுதும் அப்படியிருக்காது

அது உண்மையில்லைதான்! அல்லது நிச்சயமாக இல்லை! இந்த உணர்ச்சி வெளிப்பாட்டு விளக்கம் பின்வரும் உரைநடைக் கேள்விக்கு பலமான சாதகமான எதிர்மறை பதிலை தருகிறது.உங்களுடைய சொந்தமொழியிலும் இவ்வுணர்ச்சி வெளிப்பாட்டை எதிர்பார்க்கலாம் அதை இங்கே பயன்படுத்தலாம்.

நாம் நியாயப்பிரமாணத்தைக் கைகொள்கிறோம்

மாற்று மொழிபெயர்ப்பு: "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிறோம்"

நாங்கள்

இந்த பிரதிப்பெயர் பவுலையும்,மற்ற விசுவாசிகளையும்,வாசிப்போரையும் குறிக்கிறது.

Romans 4

Romans 4:1-3

தாம் வலியுறுத்தி சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையெனக்கூறி பவுல் உரைநடைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

அப்படியானால்,நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?

"மாம்சத்தின்படி முற்பிதாவாகிய ஆபிரகாம் கண்டடைந்தது."வாசிப்போரின் கவனத்தைக் கவர்ந்து, புதியக் காரியங்களை பேசுவதற்காக பவுல் இக்கேள்விகளைப் பயன்படுத்தினார்.

வேத வாக்கியங்கள் என்ன சொல்லுகிறது

"நாம் வேத வாக்கியங்களைப் படிப்பதற்காக"

அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது

" தேவன் ஆபிரகாமை நீதியுள்ள நபராக எண்ணினார்"

Romans 4:4-5

கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்று எண்ணப்படாமல் கடனென்று எண்ணப்படும்

வேலை செய்தவன் கூலியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையை விவரிக்கிறது.அந்த நபர் கூலியை இலவச ஈவாகவோ" கிருபையாகவோ" எண்ணவில்லை

அவனுக்கு கிரியை செய்கிறவர்கள்...அவருக்கு கிரியைகள் செய்யாதவர்கள்

"கிரியைகள் செய்கிறவர்கள்...கிரியைகள் செய்யாதவர்கள்"

மதிப்பு கைம்மாறு செய்

வேலை செய்து சம்பாதித்த "சம்பளம்' அல்லது "ஊதியம்"

கடன்பட்டவர்

"பணி வழங்குபவர் அவருக்கு கொடுப்பவர்"

நியாயந்தீர்க்கப்படுபவர்

"தேவனில்,நீயாயந்தீர்க்கப்படுதல்"

அவருடைய விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது

"அவனுடைய விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது" அல்லது "அவனுடைய விசுவாசத்தினால் அவனை நீதியுள்ளவராக தேவன் எண்ணுகிறார்"

Romans 4:6-8

நீதிமான் கிரியையில்லாமல் தேவனாலே நீதிமான் என்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு தாவிதும் சொல்லியிருகிறார்

மாற்று மொழிபெயர்ப்பு: "இதைப்போலவே கிரியையில்லாமல் தேவனாலே நீதிமானாக்கப்பட்டவனை தேவன் ஆசீர்வதிப்பதைக் குறித்து தாவீது எழுதியுள்ளார்."

எவனுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ...எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ...எவருடைய பாவத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ

மாற்று மொழிபெயர்ப்பு: "எவர்களுடைய அக்கிரமங்களை கர்த்தர் மன்னித்தாரோ ....எவர்களுடைய பாவங்களை மூடினாரோ...எவர்களுடைய பாவங்களை எண்ணவில்லையோ"இதே கருத்துக்கள் மூன்று விதங்களில் சொல்லப்பட்டுள்ளன,இருமுறை மூன்று முறையாக விளக்கப்பட்டிருக்கும்.

Romans 4:9-10

இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, அல்லது விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ?

மாற்று மொழிபெயர்ப்பு:"விருத்தசேதனமுள்ளவர்களைமாத்திரம் தேவன் ஆசிர்வதிப்பாரா? ,அல்லது விருத்தசேதனம் உள்ளவர்களை ஆசீர்வதிப்பாரா?"

நாங்கள் சொல்கிறோம்

யூத, யூதரல்லாத மக்களைச் சேர்ந்த விசுவாசிகள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்.

விசுவாசம் ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை நீதியாக எண்ணினார்"

Romans 4:11-12

விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான்

"அவனை நீதிமானாய் எண்ணப்பட்டதற்கு வெளியரங்கமான அடையாளம் ஏனென்றால் விருத்தசேதனம் பண்ணுவதற்கு முன்பே அவன் தேவனை விசுவாசித்தான்"

விருத்தசேதனமில்லாதவர்களாய் இருந்தாலும்

மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்களுக்கு விருத்தசேதனமில்லை என்றாலும்"

அவர்களுக்கு நீதி எண்ணப்படும்பொருட்டு

மாற்று மொழிபெயர்ப்பு: "ஆதலால் தேவன் அவைகளை நீதியாக எண்ணுவார்"

Romans 4:13-15

தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் வாக்குத்தத்தத்தை அருளியுள்ளார்,அவர்கள் உலகத்தின் வம்சங்களாக இருப்பார்கள்

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "ஆபிரகாமும் அவருடைய சந்ததியினரும் உலகத்தைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்"

விசுவாசத்தினால் வரும் நீதியினால் வரும் வார்த்தைகள் "தேவன் வாக்குத்தத்தத்தைத் தந்துவிட்டார்"இந்தச் சொற்றொடரில் சில விடுபட்டுள்ளன ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள்.மாற்று மொழிபெயர்ப்பு: ஆதலால் தேவன் விசுவாசத்தின் மூலம் வாக்குத்தத்தத்தைத் தந்து அதை நீதியாக எண்ணினார்."

நியாயப்பிரமாணத்தை சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால்

மாற்று மொழிபெயர்ப்பு: "நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறதினால் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்"

விசுவாசம் வீணாய்போகும் ,வாக்குத்தத்தமும் அவமாகிவிடும்

"விசுவாசத்திற்கு மதிப்பில்லை வாக்குத்தத்தத்திற்கு அர்த்தமேதுமில்லை."

நியாயப்பிரமாணமில்லாவிட்டால் அங்கு கீழ்ப்படிதலும் இருக்காது

"நியாயப்பிரமாணம் இல்லையென்றால் அங்கு கீழ்ப்படிவதற்கு எதுவுமில்லை."இதை ஆக்கபூர்வமான அறிக்கையாக மொழிபெயர்க்கலாம்:"ஆதலால் நியாயப்பிரமாணம் இருக்கிற இடத்தில் மக்கள் அதற்குக் கீழ்ப்படியமாட்டார்கள்."

Romans 4:16-17

இந்தக் காரணத்திற்காக விசுவாசத்தினால்,இதினால் இது கிருபையின்படி நடந்திருக்கலாம்

" நாங்கள் தேவனை நம்பும்போது வாக்குத்தத்தை பெறுவதற்கான காரணம் இங்குள்ளது:ஆதலால் இது இலவசமாகப் பெற்ற ஈவு"

எல்லா சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படி அப்படி வருகிறது

"அதினால் ஆபிரகாமின் சந்ததியினர் அனைவரும் நிச்சயமாக வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வார்கள்"

நியாயப்பிரமாணத்தை அறிந்தவர்கள்

" இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை பின்பற்றின யூத மக்களைக் குறிக்கிறது".

ஆபிரகாமின் விசுவாசத்தில் இருந்தவர்கள்

ஆபிரகாமைபோல் விசுவாசத்தில் உள்ளவர்களை அவனுடைய விருத்தசேதனத்திற்கு முன்புள்ளதைக் குறிக்கிறது. மொழிபெயர்ப்புக் குறிப்புகள்

நாமனைவருக்கும் தகப்பன்

இங்கு "நாம்" என்ற வார்த்தை பவுலையும் சேர்த்து யூதர்கள் மற்றும் யூதரல்லாத விசுவாசிகளையும் குறிக்கிறது,ஆபிரகாம் சரீரத்தின்படி யூதமக்களுக்கு முற்பிதாவாக உள்ளார்,ஆதலால் அதேவேளையில் விசுவாசத்தில் உள்ள அனைவருக்கும் ஆவிக்குரிய தகப்பனாக இருக்கிறார்.

எழுதியிருக்கிறபடி

எழுதப்பட்டுள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக: "வேதத்தில் எழுதியுள்ளபடி."

நான் உன்னை ஏற்படுத்தினேன்

"உன்னை" என்ற வார்த்தை ஒருமையில் உள்ளது மேலும் ஆபிரகாமைக் குறிக்கிறது.

ஆபிரகாம் தாம் நம்பினவருடைய சமூகத்தில் இருக்கிறார்,தேவன்.மரித்தோரையும் உயிர்ப்பிக்கிறவர்

"ஆபிரகாம் தாம் விசுவாசித்த தேவனுடைய சமூகத்தில் இருந்து,மரித்தவர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கிறவர்" என்றும் மொழிபெயர்கலாம்.

Romans 4:18-19

எல்லா வெளிப்படையான சூழ்நிலைகளிலும்

"வெளிப்படையான சூழ்நிலைகளின்"முழு அர்த்தத்தில் ஒளிவுமறைவு ஏதுமில்லை:அவருக்கு சந்ததியினர் உண்டாக்குவதில் சாத்தியமற்றதாய் இருந்தாலும்."

அநேக தேசத்திற்குத் தகப்பனாவதற்காக

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "மேலும் ஆபிரகாமின் விசுவாசம் அவரை அநேக தேசத்திற்கு தகப்பனாவதற்கு ஏதுவாயிருந்தது."

சொல்லப்பட்டவைகளின்படியே

"தேவன் ஆபிரகாமுக்கு சொல்லியபடியே "

"...அவர்கள் உம்முடைய சந்ததியினர்கள்."

தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தங்கள் எல்லாம் வெளிபடுத்தப்பட்டன: "நீ நினைத்துப் பார்த்ததைவிட அதிக சந்ததியினர் உனக்கு இருப்பார்கள்."

விசுவாசத்தினாலே பலவீனமாயிருக்கவில்லை

மாற்று மொழிபெயர்ப்பு: "இன்னும் விசுவாசத்தில் உறுதியாய் நிற்பதினால்"

ஆபிரகாம் அவனுடைய சொந்த சரீரம் இறந்துவிட்டதாக எண்ணினார்

அவன் ஏறக்குறைய நூறு வயது உள்ளவனாக இருந்தான்

மேலும் சாராளின் கர்ப்பம் இறந்துபோயிருந்தது

இங்கு ஆபிரகாமின் முதிர்வயதையும் மேலும் சாராளால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இயலாமல் இருப்பதையும் இறந்துவிட்டதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என்பதை வலியுறுத்துகிறது.மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபிரகாமுக்கு முதிர்வயதானதினால் அவனுடைய மனைவி சாராளுக்கு குழந்தைகள் பிறக்காது என்று எண்ணினான்."

Romans 4:20-22

அவிசுவாசமாய் சந்தேகப்படமால்

"சந்தேகப்படவில்லை"

அவனுடைய விசுவாசத்தில் வல்லவனானான்

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "ஆதலால் அவனுடைய விசுவாசத்தில் அவன் வல்லவனானான்"

தேவனை மகிமைபடுத்தி

"மேலும் தேவனுக்கு மகிமையைச் செலுத்தினான்"

அவனுக்கு முழுமையான நம்பிக்கை ஊட்டப்பட்டது

"ஆபிரகாம் முழுநிச்சயமாக இருந்தான் "

அவனால் நிறைவேற்ற முடிந்தது

" தேவனால் செய்யமுடியும் "

அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது

இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்: "தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை நீதியாக எண்ணினார் " அல்லது "தேவன் ஆபிரகாமின் நீதியை நினைத்தருளினார் ஏனென்றால் ஆபிரகாம் அவரை விசுவாசித்தான்."

Romans 4:23-25

இப்பொழுது

இந்த வார்த்தை இங்கு நிருபத்தின் புதிய பகுதியை அடையாளம் காட்டப் பயன்படுத்தப்பட்டது.பவுல் ஆபிரகாமைப் பற்றி பேசுவதைவிட்டு,கிறிஸ்துவின் விசுவாசிகளைப் பற்றி பேசுகிறார்.

அவருடைய நன்மைக்காக மட்டும்

"ஆபிரகாமுக்காக மட்டும் "

அவனுக்காக அது எண்ணப்பட்டது.

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "அதை தேவன் நீதியாக எண்ணினார்" அல்லது "தேவன் அவனை நீதிமானாக எண்ணினார் "

நமக்காகவும்

" நமக்காக " என்ற வார்த்தை இங்கு பவுலையும் அவனோடிருந்த கிறிஸ்தவ விசுவாசிகளையும் குறிக்கிறது.

ஆதலால் நாமனைவருக்காகவும்,எவனுக்கு எண்ணப்பட்டதோ, நாங்கள் யாரை விசுவாசிக்கிறோமா

இதை புதிய வாக்கியத்தில் செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: " இது நம்முடைய நன்மைக்காகவும்,நாம் அவரை விசுவாசித்ததினால் நம்மை தேவன் நீதியாக எண்ணினார்."

அவரை உயிரோடு எழுப்பினவர்

"உயிரோடு எழுப்பின, தேவன் "

இயேசு , நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டார்

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம் : "இயேசுவை, தேவன் அவரைக் கொலை செய்தவர்களிடம் ஒப்புக்கொடுத்தார்."

நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பட்டும் இருக்கிறார்

இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்: "மேலும் யாருக்கு தேவன் ஜீவனைக் கொடுத்தாரோ ஆதலால் தேவனுடன் ஒப்பரவுவாகி விடுவோம்."

Romans 5

Romans 5:1-2

இப்பொழுதுவரையில்

"காரணத்திற்காக"

நாங்கள்...நம்முடைய

எல்லா நிகழ்வுகளிலும் வரும் "நாங்கள்" " நம்முடைய" என்னும் பதங்கள் அனைத்து விசுவாசிகளையும் சேர்த்துதான் குறிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் மூலம்

" நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் "

அவர்மூலமாய் நாம் இக்கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைக்கொண்டிருந்து

பவுல் விசுவாசிகள் கிருபையை பெற்றுக்கொள்வதை,ஒரு நபர் ராஜாவின் முன்பு நிற்பதற்கு ஒப்பிடுகிறார். # " ஏனெனில் இயேசுவில் விசுவாசித்து, தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு தேவன் நமக்கு கிருபையை அருளியுள்ளார்."

தேவ மகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்

"நம்பிக்கையினால் நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறோம் ஏனெனில் தேவனுடைய மகிமையை அனுபவித்து இருக்கிறோம்"

Romans 5:3-5

இதுமட்டுமல்ல

"இந்த" என்ற வார்த்தை 5:1

  1. விவரித்துள்ள கருத்துக்களைக் குறிக்கிறது.

நாம்...நம்முடைய....நமக்கு

எல்லா நிகழ்வுகளில் வரும் "நாம்" "நம்முடைய" நமக்கு" என்ற பதங்கள் அனைத்து விசுவாசிகளையும் ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது.

அங்கீகாரம்

"அங்கீகாரம்" என்ற வார்த்தை தேவன் சொல்வதெல்லாம் நல்லதென்பதைக் குறிக்கிறது.

நிச்சயமான

மாற்று மொழிபெயர்ப்பு: "நம்பிக்கை"

Romans 5:6-7

நாம்

இங்கு"நாம்" என்ற வார்த்தை அனைத்து விசுவாசிகளையும் ஒருங்கிணைப்பதைக் குறிக்கிறது.

Romans 5:8-9

நிருபிக்கிறது

மாற்று மொழிபெயர்ப்புகள்: "உதாரணம் காட்டி விளக்குகிறது" அல்லது "காட்டுகிறது"

நமக்கு...நாம்

எல்லா நிகழ்வுகளில் வரும் "நமக்கு" "நாம்" என்ற பதங்கள் அனைத்து விசுவாசிகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்பதைக் குறிக்கிறது.

இப்படி நாம், இப்பொழுது அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க

மாற்று மொழிபெயர்ப்பு: "எவ்வளவு அதிகம் அவர் நமக்கு செய்திருக்கிறார் அதினால் நாம் அவருடைய இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்"

Romans 5:10-11

நமக்கு...நாம்

எல்லா நிகழ்வுகளிலும் வரும் "நாம்" என்ற பதம் அனைத்து விசுவாசிகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்பதை குறிக்கிறது.

அவருடைய குமாரன்... அவருடைய ஜீவன்

"தேவனுடைய குமாரன்...தேவனுடைய குமாரனின் ஜீவன் "

ஒப்புரவாக்கப்பட்ட பின்பு

" இப்பொழுது மீண்டும் அவருடைய நண்பர்களாகிவிட்டோம்" மாற்று மொழிபெயர்ப்பு: "இப்பொழுது தேவன் நம்மை அவருடைய நண்பர்களாக எண்ணுகிறார்.

Romans 5:12-13

ஆகையால்

பின்வரும் வார்த்தைகள் பவுலின் முந்தைய தர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு விசுவாசிகள் யாவரும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரே மனுஷனால் பாவமும்...பாவத்தினால் மரணமும் உண்டாகியுள்ளது

ஆதாம் என்ற "ஒரு மனிதனுடைய " மீறுதலினால் "பாவம் " என்ற ஆபத்து இவ்வுலகத்தில் பிரவேசித்தது.இந்த "பாவமானது" "மரணம்" என்னும் மற்றொரு ஆபத்தை உட்பிரவேசிக்கச் செய்தது.

Romans 5:14-15

அப்படியிருந்தும்

"இன்னும்" அல்லது ஆதாமின் காலம்முதல் மோசேயின் காலம்வரையில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் எதுவுமில்லை, ஆனால் "

மரணமானது ஆதாம் முதல் மோசேவரைக்கும் ஆட்கொண்டது

பவுல் ராஜாவின் மரணத்திற்கு ஒப்பிடுகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு: " ஆதாம்காலம் முதல் மோசேயின் காலம்வரையில் மக்கள் அவர்களுடைய பாவத்தின்நிமித்தம் இறந்துகொண்டேயிருக்கிறார்கள்."

ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும்

"மக்கள் செய்கிற பாவங்கள் ஆதாமிலிருந்து வேறுபட்டிருந்தாலும் தொடர்ந்து மரணம் அவர்களை தொடர்கிறது."

வரப்போகிறவருக்கு அடையாளமாக இருப்பது யார்

அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு அடையாளமாக, கிறிஸ்துவின் மாதிரியாய் இருக்கிறார், அவருடையவைகள் அவனோடு பொதுவாக ஒத்து உள்ளது.

அல்லாமலும் ... அநேகரை மரணம் ஆண்டுகொண்டிருக்க... தேவனின் கிருபையின் பரிபூரணத்தையும் ஈவையும்...பெருக்கிக்கொள்வது

" அநேகர் இறந்துவிட்டார்கள் " ஆனாலும் அதைவிட " தேவனுடைய கிருபையையும் ஈவையும் " பெருக்கிகொள்வது மிகவும் முக்கியம்.

கிருபை பெருகின இடத்தில் ...ஈவும்...பெருகியது

"கிருபையும் ...மேலும் ஈவும்" மீறுதலைவிட பெரியதும் பலமுள்ளதாகும்.

Romans 5:16-17

மேலும் ஒருவன் பாவஞ்செய்யாததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல

" ஈவானது ஆதாமின் பாவத்தினால் வந்த பலன் போன்றதல்ல"

ஒருவனுக்காக

"ஆகையால் ஒருவனுக்காக "

ஆகையால் ஒரே மீறுதலினாலே, எல்லா மனுஷருக்கு ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது, "மற்றொரு பக்கம்," "ஒரே பக்கம்"என்ற சொற்றொடர்கள் இரண்டு வெவ்வேறு வழிகளில் நினைக்க வைக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: ஒரு மனிதனின் மீறுதலினால் ஆக்கினைத்தீர்ப்பு வந்தது, ஆனால்"

அநேக மீறுதலுகளுக்கு பின்பு

" அநேகருடைய பாவங்களுக்குப் பின்பு"

ஒரே மீறுதலினால்

ஆதாமின் மீறுதல்

மரணம் ஆட்கொண்டது

"ஒவ்வொருவரும் இறந்துபோனார்கள்"

ஒருவரின் வாழ்வு

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

Romans 5:18-19

ஒரு மீறுதலின் மூலமாக

ஆதாம் செய்த ஒரே பாவத்தின் மூலம். மாற்று மொழிபெயர்ப்பு: "ஆதாமின் பாவத்தினால்."

ஒரு செயல்

இயேசு கிறிஸ்துவின் தியாகம்

ஒரே மனிதனின் கீழ்படியாமை

ஆதாமின் கீழ்படியாமை

ஒருவரின் கீழ்ப்படிதலினால்

இயேசுவின் கீழ்ப்படிதல்

Romans 5:20-21

நியாயப்பிரமாணமும் வந்தது

" நியாயப்பிரமாணத்திலுள்ள இரகசியம்"

மீறுதல் பெருகும்

"மக்கள் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்"இந்த இரண்டின் அர்த்தங்கள் இது தான்.

பெருகியது

" அதிகமானது "

பாவம் மரணத்தை ஆட்கொண்டதுபோல

" பாவத்தின் பலன் மரணத்தை தந்ததுபோல்"

கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது

" நம்முடைய இயேசு கிறிஸ்துவின் நீதியின் மூலம் கிருபையானது மக்களுக்கு நித்தியவாழ்வை தருகிறது"

நம்முடைய கர்த்தர்

பவுல் அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களையும் சகல விசுவாசிகளையும் சேர்க்கிறார்.

Romans 6

Romans 6:1-3

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?

5:20

  1. பவுல் தாம் எழுதியுள்ள கிருபையைபற்றி யாராவது கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்த்து கொண்டிருந்தார் .இவ்வறிக்கையை மாற்றி அமைப்பது நல்லது.

நாம்... நமக்கு

"நாம்" மற்றும் "நமக்கு" என்ற பிரதிப்பெயர்கள் பவுலையும்,அவருடைய வாசகர்களையும்,மற்றும் மற்ற விசுவாசிகளையும் குறிக்கிறது.

பெருகியது

இதை "மிகுதியான வளர்ச்சி " என்று மொழிபெயர்க்கலாம்.

Romans 6:4-5

அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்

இது தண்ணீரினால் விசுவாசிகள் பெற்ற ஞானஸ்நானத்தை கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட இயேசுவுடன் ஒப்பிடப்படுகிறது. கிறிஸ்துவின் விசுவாசி மரணத்தினால் வரும் பலன்களைப் பகிர்ந்துகொண்டு,விசுவாசிகளின்மேல் பாவத்திற்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை வலியுறுத்துகிறது.

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து இறந்தோரிலிருந்து எழுப்பப்பட்டது போல,நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு

இது விசுவாசி ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வருகிறதை இயேசுவின் உயிர் திரும்ப சரீரத்திற்கு வருவதுடன் ஒப்பிடப்படுகிறது.விசுவாசியின் புதிய ஆவிக்குரிய வாழ்வு அந்த நபரை தேவனுக்குக் கீழ்படியச் செய்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு, செய்வினைச் சொல்லுடன்: " மரணத்திற்கு பின்பு பிதாவானவர் இயேசுவுக்கு ஜீவனைத் திரும்பக் கொடுத்ததுபோல், நமக்கு புதிய ஆவிக்குரிய வாழ்வும் தேவனுக்கு கீழ்ப்படிதலும் இருக்கும்."

ஆதலால் அவரது மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டவர்களானால்...அவருடைய உயிர்தெழுதலிலும் இணைக்கப்பட்டிருப்போம்

"அவருடைய மரணத்தில் சேர்ந்திருக்கிறோம்...மரணத்திற்கு பின்பு அவருடைய ஜீவனிலும் சேர்ந்திருக்கிறோம்" அல்லது "அவருடனே இறந்திருக்கிறோம்...அவருடனே ஜீவனுடன் திரும்பி வருவது"

Romans 6:6-7

பழைய மனிதன் அவருடனே சிலுவையில் அறையப்பட்டது

இங்கு பவுல் பழைய மனிதன் என்பவன் அவருடன் சிலுவையில் அறையப்பட்டவன் இங்கு பவுல் ஒருவன் விசுவாசியாவதற்கு முன்பு இயேசுவை விசுவாசித்ததையும் மேலும் வேறு மனிதனாக மாறியபின்பு அந்த நபர் இயேசுவின்மேல் வைத்த விசுவாசத்தையும் குறிக்கிறது. "பழைய மனிதன்"இயேசுவை விசுவாசிப்பதற்கு முன்பே உள்ள நபரைக் குறிக்கிறது.ஆவிக்குரிய நிலையில் இறந்திருக்கிறான் மேலும் பா வம் அவனை ஆட்கொள்கிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கும்பொழுது நம்முடைய பாவமனிதன் சிலுவையில் இயேசுவோடு இறந்துவிடுகிறான் என பவுல் விவரிக்கிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நம்முடைய பாவமனிதன் சிலுவையில் இயேசுவுடன் இருக்கிறான்."

பழைய மனிதன்

"முந்தைய மனிதன் "வாழ்ந்து முடிந்த மனிதர் ,தற்போது உயிரோடு இல்லை

பாவசரீரம்

பாவம் நிறைந்த நபர்

அழிக்கப்படவேண்டும்

"இறக்கவேண்டும்

இனி நாம் பாவத்துக்கு அடிமையாக இல்லாதபடிக்கு

பவுல் மனிதனின் மேலுள்ள பாவ அதிகாரத்தை முதலாளி தன்னுடைய அடிமையைக் கட்டுபடுத்தும் அதிகாரத்துடன் ஒப்பிடுகிறார்: பரிசுத்த ஆவியை இல்லாத மனிதன் எப்பொழுதும் பாவமானதை தெரிந்துகொள்வான் . அவனால் சுதந்தரமாக தேவனைப் பிரியப்படுத்தும் செயல்களைச் செய்ய இயலாது.மாற்று மொழிபெயர்ப்புகள்: "நாம் பாவத்திற்கு ஒருபோதும் அடிமையாக இருக்ககூடாது" அல்லது "நாம் ஒருபோதும் பாவமானதைத் தெரிந்துகொள்ளக்கூடாது."

பாவத்திற்கு இறந்தவன் நீதிமானாக அறிவிக்கபட்டான்

செய்வினைச் சொல்லில், மாற்று மொழிபெயர்ப்பு: "பாவத்தின் அதிகாரத்தினால் இறந்த எவரையும் தேவன் நீதிமானாக அறிவித்துவிடுவார்."

Romans 6:8-9

நாம் கிறிஸ்துவுடனே இறந்திருக்கிறோம்

சரீரப்பிரகாமாக கிறிஸ்து இறந்திருந்தாலும், இங்கு "இறந்துவிட்டது" என்பது பாவத்தின் வல்லமையினால் ஆவிக்குரியரீதியில் விசுவாசிகள் இறப்பதைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் கிறிஸ்துவுடனே ஆவியின் பிரகாரம் இறந்திருக்கிறோம்"

நாம் கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கிறார்

இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்: "கிறிஸ்து இறந்தபிறகு தேவன் அவருக்கு மீண்டும் ஜீவனைத் தந்தார் "

மரணம் இனி ஆண்டுகொள்வதில்லை

இங்கு "மரணம்"ராஜாவாக சித்தரிக்கப்படுகிறது அல்லது மக்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்தும் ஆட்சியாளர். "அவர் மீண்டும் இறக்கமாட்டார் " என்றும் மொழிபெயர்க்கலாம்.

Romans 6:10-11

அவர் பாவத்திற்கென்று மரணமடைந்தார் எல்லாவற்றுக்குமாக ஒரேமுறை இறந்தார்

"ஒரே முறை" என்ற சொற்றொடரின் அர்த்தம் ஒரு காரியத்தை முழுமையாக நிறைவுபெறச் செய்தல்"இதன் முழு அர்த்தத்தை வெளிப்படையாக்கலாம் : "அவர் இறந்தபொழுதே பாவத்தின் அதிகாரத்தை அவர் முழுமையாக உடைத்துவிட்டார்"

அப்படியே நீங்களும்: எண்ணிக்கொள்ளுங்கள்

"அதே வழியில்,எண்ணிக்கொள்ளுங்கள்" அல்லது "இந்த காரணத்திற்காக எண்ணிக்கொள்ளுங்கள் "

உங்களையே எண்ணிக்கொள்ளுங்கள்

"உங்களை நினைத்துக்கொள்வதுபோல்" அல்லது "உங்களையே பார்த்துக்கொள்ளுங்கள்"

பாவத்திற்கு இறந்து

இங்கு "பாவம்"என்பது நம்மில் வாழும் அதிகாரத்தையும்,நாம் பாவம் செய்ய தூண்டுவதையும் குறிக்கிறது."பாவத்தின் அதிகாரத்தினால் மரணம்" என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.

ஒருபுறம் பாவத்திற்காக இறந்தும்,ஆனால் மற்றொருபுறம் தேவனுக்காக பிழைத்தும்

" ஒருபுறம்" மேலும் " மற்றொருபுறம்" என்ற சொற்றொடர்கள் சிலவற்றை இருவழிகளில் சிந்திப்பதை அறிமுகப்படுத்துகிறது. மாற்றுமொழிபெயர்ப்பு: "பாவத்திற்கு இறந்தவர்களாயும்,தேவனுக்கென்று பிழைத்தும் இருக்கிறோம்."

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருப்பது

மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசு கிறிஸ்து தரும் வல்லமையினால் தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வது"

Romans 6:12-14

பாவம் ஆட்கொள்ளக்கூடாது ...பாவம் ஆட்கொள்ள இடம்கொடுக்காதே

"பாவம்"என்பது ஒரு மனிதனை ராஜாவாகவும் எஜமானாகவும் சித்தரிக்கிறது.

சாவுக்கேதுவான சரீரம்

இந்த சொற்றொடர் மரணத்திற்கு ஏதுவான, மனிதனின் சரீர உறுப்புகளைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள்"

நீங்கள் சரீர இச்சைகளின்படி கீழ்படிவதற்காக

எஜமான், "பாவமானது" "எஜமானின் கட்டளைக்கு பாவி கீழ்ப்படிந்து தீயச்செயல்களைச் செய்யும்படி பாவம் விரும்புகிறது.

நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாக பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல்

பாவி "சரீர உறுப்புகளை" தன்னுடைய எஜமானுக்கு அல்லது ராஜாவுக்கு படைக்கும் கற்பனை படமாகும். மாற்று மொழிபெயர்ப்பு: "உன்னை பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காதே அதினால் தீமையானதை நீங்கள் செய்ய மாட்டீர்கள்."

உங்களை இறந்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து

"ஆகையால் தேவனுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்,ஏனென்றால் அவர் உங்களுக்கு ஆவிக்குரிய புது வாழ்வை அருளியுள்ளார்"

உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்

தேவனை பிரியப்படுத்துவதற்காக அவர் உங்களைப் பயன்படுத்துவாராக

பாவம் உங்களை ஆட்கொள்ள இடங்கொடுக்காதீர்கள்

"நீங்கள் செய்யும் செயல்களில் பாவ சிந்தைகள் மேற்கொள்ளாமல் இருக்கட்டும்" அல்லது "நீங்கள் செய்யவிரும்பும் பாவமான செயல்கள் உங்களுக்குள் நடக்க இடந்தரவேண்டாம்"

நீங்கள் நீயாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்கவில்லை

இதின் முழு அர்த்தத்தையும் வெளிபடுத்தலாம்: "மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஒருபோதும் கீழ்ப்பட்டவர்கள் அல்ல,பாவம் செய்கிற அதிகாரத்தை நிறுத்த அதிகாரம் தரப்படவில்லை."

கிருபைக்குக் கீழ்ப்பட்டு இருக்கிறீர்கள்

இதின் முழு அர்த்தம் வெளிபடுத்தப்படவில்லை: "நீங்கள் தேவனுடைய கிருபைக்கு கீழ்ப்பட்டவர்கள்,பாவம் செய்வதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம்."

Romans 6:15-16

தேவனுக்கு கீழ்படிவதற்கும் கீழ்படியாமல் இருப்பதற்கும் அடிமைத்தனத்தை பவுல் ஆகு பெயராகப் பயன்படுத்துகிறார். # இதினால் என்ன? நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிராமல் ,கிருபைக்கு கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா? ஒருபோதும் செய்யக்கூடாது.

கிருபைக்கு கீழ்ப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பது பாவத்திற்கான காரணமில்லை என்பதை பவுல் கேள்வியின் மூலம் வலியுறுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு:எப்படியானாலும், நாம் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறோம்.அதினால் நமக்கு பாவம் செய்ய அனுமதி தரப்படவில்லையே.

எப்பொழுதும் கூடாதே

"நமக்கு அது எப்பொழுதும் நடக்கக்கூடாது!" அல்லது "அதை செய்யாமலிருக்க தேவன் எனக்கு உதவி செய்வார்! " இவைகள் நடக்ககூடாதென்பதற்கான திடமான வாஞ்சையை இவ்விளக்கம் காண்பிக்கிறது.உங்களது சொந்த மொழியிலும் இவ்விதமான விளக்கம் இருக்கலாம்,அதை இங்கு பயன்படுத்திக் கொள்ளவும். இதை 3:31 இல் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

எதற்கு கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புகொடுக்கீறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

தேவனுடைய கிருபையே பாவம் செய்வதற்கு காராணமாக உள்ளதென சொல்பவர்களை தர்க்கம் செய்கிறவர்களுக்கு இக்கேள்விகளைக் பயன்படுத்துகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு: " உங்களுக்கு யார் எஜமான் என்று தேர்ந்து எடுக்கிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருப்பீர்கள் என்று நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்"

மரணத்துக்கேதுவான பாவமானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும்

இங்கு "பாவமும்" "கீழ்ப்படிதலும்" எஜமானுக்கு அடிமையானவன் வேலை செய்வதை விவரிக்கிறது.இதை புதிய வாக்கியத்திலும் மொழிபெயர்க்கலாம்: ஆவிக்குரிய மரணத்தை தரும்,பாவத்திற்கு இனி நீ அடிமையில்லை, அல்லது நீங்கள் கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக உள்ளீர்கள்,அது உங்களை நீதிமானாக அறிவிக்கிறது."

Romans 6:17-18

தேவனுக்கு கீழ்ப்படிவதற்கும் கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் அடிமைத்தனத்தை ஆகுப்பெயராக பவுல் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

தேவனுக்கு ஸ்தோத்திரம்!

"ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்!

முன்னே பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள்

இங்கு "பாவமானது" எஜமானுக்கு அடிமைகளும் வேலை செய்வார்களெனச் சித்தரிக்கிறது.அதோடு, "பாவமானது" நம்மில் வாழும் அதிகாரமானது பாவமானதை செய்ய தெரிந்துகொள்வதை குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் பாவத்தின் வல்லமைக்கு அடிமைகளாக இருக்கிறீர்கள்."

ஆனாலும் நீங்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிந்தீர்கள்

இங்கு "மனப்பூர்வமாக" என்ற வார்த்தை சில காரியங்களை உண்மையாக அல்லது நேர்மையாக செய்யும் செயல்களைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் உண்மையாகவே கீழ்படிந்தீர்கள்"

உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு

இங்கு "சட்டம்" என்பது வழிமுறை அல்லது நீதிக்கேதுவான வாழ்க்கைக்கு வழி காண்பிப்பதைக் குறிக்கிறது.கிறிஸ்துவ தலைவர்கள் போதித்த உபதேசத்தினால் விசுவாசிகள் முந்தைய வாழ்கைமுறையை மாற்றி புதிய வாழ்க்கைமுறைக்கு ஒப்பாக்கினர். செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு கிறிஸ்துவ தலைவர்கள் அருளிய போதனைகள்."

நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டீர்கள்

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "பாவத்தின் அதிகாரத்திலிருந்து கிறிஸ்து விடுதலை செய்துவிட்டார்."

நீதிக்கு அடிமைகளானீர்கள்

"இப்பொழுது நீங்கள் நீதியானதை செய்வதற்கு அடிமைகளாக உள்ளீர்கள்"

Romans 6:19-21

தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் அடிமைத்தனத்தை ஆகுப்பெயராக பவுல் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

நான் மனிதர் பேசுகிறபிரகாரமாய் பேசுகிறேன்

பவுல் "பாவம்" மற்றும் "கீழ்ப்படிதலை" " அடிமைத்தனமாக" சித்தரிக்கிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நான் பாவத்தையும் கீழ்ப்படிதலையும் சித்தரிப்பதற்காக அடிமைத்தனத்தை பற்றி பேசுகிறேன்."

உங்கள் மாம்ச பலவீனத்தின் நிமித்தம்

பவுல் அடிக்கடி "மாம்சம்" என்ற வார்த்தையை "ஆவிக்கு" எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "ஆதலால் நீங்கள் ஆவிக்குரிய காரியங்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை."

உங்கள் சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்துக்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்

இங்கு "சரீர உறுப்புகள்" முழுமனிதனைக் குறிக்கிறது.மாற்று மொழிபெயர்ப்பு:"தேவனை பிரியப்படுத்தாத அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது."

பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்

"தேவனுக்கு முன்பாக நீதியாய் உள்ளதற்கு உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்,அதினால் அவர் உங்களை வேறுபிரித்துப் அவருக்கு ஊழியம் செய்யும் அதிகாரத்தைக் கொடுப்பார்."

இப்பொழுது உங்களுக்கு வெட்கமாக தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது?

பாவத்தினால் நல்ல பலனில்லையென்பதை பவுல் கேள்வியினால் வலியுறுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நீ அந்த காரியங்களை செய்ததினால் ஒன்றையும் சம்பாதித்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்பொழுது அது உனக்கு அவமானத்தை தந்தது."

Romans 6:22-23

இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு,தேவனுக்கு அடிமைகளானதினால்

செய்வினைச் சொற்களுடன் முழுவாக்கியத்தையும் மாற்று மொழிபெயர்ப்பு செய்யலாம்: " ஆதலால் கிறிஸ்து உங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கி அவர் உங்களை தேவனிடம் சேர்க்கிறார்."

விளைவோ நித்திய ஜீவன்

"இவை அனைத்திலிலும் உங்களுக்கு உண்டாகும் பலன் என்னவென்றால் நீங்கள் தேவனோடு நித்தியமாய் வாழ்வீர்கள்"

பாவத்தின் சம்பளம் மரணம்

"சம்பளம்" என்ற வார்த்தை வேலை செய்தவர்களுக்கு கொடுக்கும் கூலியைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு:"பாவத்திற்கு வேலை செய்தால் ,ஆவிக்குரிய மரணத்தை கூலியாய் பெறுவாய்" அல்லது "நீ தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தால்,தேவன் ஆவிக்குரிய மரணத்தினால் உன்னை தண்டிப்பார்."

தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்

" நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களுக்கு தேவன் இலவசமாக நித்தியஜீவனைத் தருகிறார்."

Romans 7

Romans 7:1

ஒரு மனிதன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது

இதற்கான எடுத்துகாட்டை பவுல் 7:2

3 லிருந்து தருகிறார்.

Romans 7:2-3

பவுல் 7:1 இல் குறிப்பிட்ட கோட்பாட்டிற்கு உதாரணத்தைத் தருகிறார்.

அவள் விபச்சாரி என்றழைக்கப்படுவாள்

யாரை அழைகிறார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை,முடிந்தவரையில் பொதுவாகவே இருங்கள்: மாற்று மொழிபெயர்ப்புகள்:"மக்கள் அவளை விபச்சாரி என்பார்கள்" அல்லது "தேவன் அவளை விபச்சாரியாக எண்ணுவார்."

Romans 7:4-5

ஆகையால்

இது 7:1 உள்ள தொடர்பை திரும்பி பார்க்கிறது."ஏனெனில் நியாயப்பிரமாணம் இவ்விதமாக கிரியை நடப்பிக்கிறது."

நாம் தேவனுக்காக கனிகளைக் கொடுக்கவேண்டும்

"நாம் தேவனை பிரியப்படுத்தும் செயல்களைச் செய்கிறவர்களாக இருக்கவேண்டும்."

Romans 7:6

நாங்கள்

இந்தப் பிரதிபெயர் பவுலையும் விசுவாசிகளையும் குறிக்கிறது.

நிருபம்

மோசேயின் நியாயப்பிரமாணம்

Romans 7:7-8

ஆகையால் என்ன சொல்லுவோம்?

பவுல் புதிய தலைப்பை அறிமுகப்படுத்துகிறார்.

எப்பொழுதும் இருக்கக்கூடாது

" அது உண்மையில்லை தான்!" பின்வரும் உரைநடைக் கேள்விக்கு சாத்தியமற்ற எதிர்மறைபதிலை தருகிறது.உங்களது மொழியிலும் இவ்வித உணர்ச்சி விவரித்தல் இருந்தால் இங்கு பயன்படுத்தவும். 9:14.லில் இதை எப்படி மொழிபெயர்த்துள்ளீர்கள் என்று பார்க்கவும்.

நான் பாவம் இன்னதென்று அறியவில்லை... ...பாவமானது,காலத்தை பயன்படுத்திக்கொள்வது... எல்லா பாவஇச்சைகளைப்பற்றி

பவுல் பாவத்தை அதை செயல்படுத்துபவர்களுடன் ஒப்பிடுகிறார்.

பாவமானது, கட்டளைகளினாலே காலத்தைப் பெற்று,சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது

தேவனுடைய நியாயப்பிரமாணம் நாம் சிலவற்றை செய்யக்கூடாது என்று சொல்லும்போது, செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதினால் நாம் இன்னும் அதிகமாக செய்வதைச் செய்யச்சொல்கிறது. "நான் தவறான காரியங்கள் மேல் வாஞ்சை இல்லாமலிருக்க கட்டளைகளை பாவம் நினைவுபடுத்தியது, மேலும் அந்த தவறான காரியங்கள்மேல் முன்பே அதிக வாஞ்சையுடன் இருந்தேன்" அல்லது "ஏனெனில் நான் செய்ய இருந்தேன்,கட்டளைகளைக் கேள்விப்பட்டவுடன் தவறான காரியங்களில் ஈடுபடும் வாஞ்சையை விட்டுவிட்டேன், நான் வாஞ்சையாய் இருந்த...."

பாவம்

"என்னுடைய பாவத்தின் மேலுள்ள வாஞ்சை "

சரீர இச்சை

இந்த வார்த்தை தவறான பாலுணர்வு வாஞ்சைகளையும் மற்ற மக்களுக்கு சொந்தமான வாஞ்சைகளையும் சேர்ந்தே இருக்கிறது.

நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும்

"நியாயப்பிரமாணம் இல்லாமலிருந்தால் ,நியாயப்பிரமாணத்தை மீறுவதும் இருந்திருக்காது,அதினால் அங்கு பாவமிருந்திருக்காது"

Romans 7:9-10

பாவம் உயிர்கொண்டது

இதை இவ்விதத்தில் அர்த்தம் கொள்ளலாம் 1) "நான் பாவம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் அல்லது 2) "நான் பாவம் செய்ய அதிக வாஞ்சையாயிருக்கிறேன்."

ஜீவனுக்கேதுவான கட்டளையே எனக்கு மரணத்திற்கு ஏதுவாயிருக்கக் கண்டேன்

பவுல் உண்மையிலே இறக்கவில்லை. மாற்று மொழிபெயர்ப்பு: " நான் உயிர் வாழ்வதற்காக தேவன் எனக்கு கட்டளையைத் தந்தார்,அதற்கு பதிலாக அது என்னைக் கொன்றது."

Romans 7:11-12

பாவமானது கட்டளையினாலே காலத்தைப் பெற்று ,என்னை வஞ்சித்தது,அதினாலே என்னைக் கொன்றது.

பாவம்

"எனது வாஞ்சை பாவமானது"

கட்டளையின் மூலம் காலத்தை பெற்றுக்கொள்வது

7:8.ல் எப்படி இதை மொழிபெயர்ப்பு செய்து உள்ளீர்கள் என்று பார்க்கவும்.

அது என்னைக் கொன்றது

"அது தேவனிடமிருந்து என்னை வேறுபிரித்தது."

ஆதலால்

நியாயப்பிரமாணமானது பாவத்தை வஞ்சிக்கிறவர் என்றும் கொலைசெய்கிறவர் என்பதை அங்கீகரிக்க அனுமதி அளிக்கிறது.

Romans 7:13-14

அடுத்து

பவுல் புதிய தலைப்பை அறிமுகப்படுத்துகிறார்.

நல்லதென்ன

தேவனுடைய நியாயப்பிரமாணம்

எனக்கு மரணமானது

"நான் இறப்பதற்கு காரணமானது"

எப்பொழுதும்இருக்ககூடாது

"அது உண்மையில்லைதான்.பின்வரும் உரைநடைக் கேள்விகளுக்கு சாத்தியமற்ற எதிர்மறைப் பதிலை தருகிறது.உங்களது மொழியில் ஒத்த விவரித்தல் இருக்கலாம் .அதை இங்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

பாவம்...எனக்குள் மரணத்தைக் கொண்டுவந்தது

பவுல், பாவத்தை செயல்படுகிற ஒரு நபரைப்போலப் பார்க்கிறார்.

பாவம்...எனக்கு மரணத்தை கொண்டுவந்தது

"தேவனிடமிருந்து வேறுபிரித்துவிட்டது."

கட்டளையின் மூலம்

"ஏனென்றால் நான் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை"

Romans 7:15-16

எப்படியெனில் நான் செய்கிறது,எனக்கே உண்மையில் புரியவில்லை

"நான் செய்யும் சில காரியங்களை,நான் எதற்காக செய்கிறேன் என்பது எனக்கே தெரியாது."

அதற்காக

" நான் என்ன செய்கிறேன்,நான் எதற்காக செய்கிறேன் என்கிற காரணம் எனக்கு புரியவில்லை"

நான் வெறுக்கிறதையே, நான் செய்கிறேன்

மாற்று மொழிபெயர்ப்பு: "எனக்கு தெரிந்த காரியங்களும் நான் செய்கின்ற காரியங்களும் நன்மையானவைகளுக்கல்ல,"

ஆனால்

"எப்படியானாலும்"

நியாயாப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்கிறேன்."

Romans 7:17-18

என்னில் வாழ்கின்ற பாவமே

பவுல் பாவத்தை உயிருள்ள பொருளாகவும் அதின் மேலுள்ள அதிகார செல்வாக்கையும் விளக்குகிறார்.

என் மாம்சம்

"என்னுடைய மனித சுபாவம்"

Romans 7:19-21

நல்லது

"நல்ல கிரியைகள்" அல்லது "நல்ல செயல்கள்"

தீமை

"தீமையான கிரியைகள்" அல்லது "தீமையான செயல்கள்"

Romans 7:22-23

உள்ளான மனிதன்

சரீரம் இறந்தபின்பு மீதமுள்ள நபரின் உடற்பகுதி

என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் சரீர உறுப்புகளில் இருக்கக் காண்கிறேன்,என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது

"எனது பழைய சுபாவம் சொல்லுகிறதை மட்டும்தான் என்னால் செய்யமுடியும்,எனக்கு ஆவி காண்பிக்கிற புதிய வழியில் வாழமுடியாது."

என் சரீர உறுப்புகளில் இருக்கும் வேறொரு பிரமாணம்

பழைய சுபாவம், மக்கள் பிறந்தவுடன் அவர்களுக்கு உள்ள பாதை

அந்த புதிய பிரமாணம்

புதிய ஆவிக்குரிய வாழும் சுபாவம்

அது என் சரீர உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணம்

"என் பாவம்நிறைந்த சுபாவம், என்னுடன் நிறைந்த பாவ சுபாவம்.

Romans 7:24-25

நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

"யாராவது என்னை ,என்னுடைய சரீர இச்சைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையாக்க விரும்புகிறேன்" ஆச்சரிய குறியீடு மற்றும் கேள்வி இரண்டும் காண்பிக்கும்விதமானது மிகவும் உணர்ச்சி பூர்வமானது,இங்கு இதை பயன்படுத்தவும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்

7:24லில் உள்ள கேள்விக்கான பதில்.

ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும்,மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்திற்கும் ஊழியம் செய்கிறேன்

மாற்று மொழிபெயர்ப்பு:" என்னுடைய மனது தேவனை பிரியப்படுத்த விரும்புகிறது,ஆனால் என்னுடைய மாம்சமோ பாவத்திற்கு கீழ்படியவிரும்புகிறது," தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கோ, பாவப்பிரமாணத்திற்கோ எப்படி ஊழியம் செய்கிறார்கள் என்பதை இங்கு ஒப்பிட்டு காண்பிப்பதற்காக மனது மற்றும் மாம்சம் பயன்படுத்தப்பட்டன.

Romans 8

Romans 8:1-2

ஆனபடியால்

"இந்த காரணத்திற்காக" அல்லது "ஆதலால் உங்களிடம் நான் இப்பொழுது சொன்னது உண்மைதான்."

பிரமாணம்...பிரமாணம்

"பிரமாணம்" என்ற வார்த்தை இங்கு சுபாவத்தின்படி நடப்பிக்கின்ற கிரியைகளை குறிக்கிறது.மக்களுக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விதிமுறைகளால் பயனேதுமில்லை.

Romans 8:3-5

மாம்சத்தினாலே பலவீனமாய் இருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு

இங்கு பாவத்தின் அதிகாரத்தை நீக்கும் மனிதராக நியாயப்பிரமாணம் சித்தரிக்கப்படுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு : நியாயப்பிரமாணத்தால் பாவத்தின் வல்லமையை தடுக்கமுடியாது.ஆனால் நம்மில் இருக்கும் பாவத்தின் வல்லமை பலமானது.நாம் பாவம் செய்கிறதை தேவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை,

மாம்சத்தின் மூலம்

"எனவே மக்களின் பாவசுபாவம்"

பாவ சரீரத்தைப்போன்று

மாற்று மொழிபெயர்ப்பு: புதியவாக்கியத்தில் ஆரம்பிக்கிறது."அவர் மற்ற பாவ மனிதர்களைப் போன்றே இருந்தார்.

பாவத்திற்கு பலியாக

"அதினால் நம்முடைய பாவங்களுக்காக தியாகமாக இறப்பார்."

மாம்சத்திலே அவர் பாவத்தை ஆக்கினைகுள்ளாக தீர்த்தார்.

மாற்று மொழிபெயர்ப்பு: "அவருடைய குமாரரின் மூலம் பாவத்தின் அதிகாரத்தை உடைத்துப்போட்டார்."

நியாயப்பிரமாணத்தின் தேவைகள் நம்மில் நிறைவேற்றப்பட்டது

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு:"நியாயப்பிரமாணத்திற்கு தேவையானதை நாம் நிறைவேற்றவேண்டும்.

நாம் மாம்சத்தின்படி நடக்காமல்

"நம்முடைய பாவ இச்சைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள்"

ஆவியின்படி

"பரிசுத்த ஆவிக்கு கீழ்ப்படிபவர்கள்"

Romans 8:6-8

மாம்சசிந்தை...ஆவியின் சிந்தை

"பாவ மனிதர்கள் சிந்திக்கிற பிரகாரம்...பரிசுத்தாவியானவர் நினைக்கிறபடி மக்கள் கேட்க நினைக்கும்விதம்"

Romans 8:9-10

மாம்சத்தில் ஆனால் ஆவியின்படி

இந்த சொற்றொடர்கள் எப்படி 8:5.ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பார்க்கவும்.

ஆவி ... தேவனுடைய ஆவி...கிறிஸ்துவின் ஆவி

இவைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

அது உண்மையாயிருந்தால்

அவர்களில் சிலருக்கு தேவனுடைய ஆவி இருக்கிறதை பவுல் சந்தேகப்படுகிறார் என்ற அர்த்தத்தில் இந்த சொற்றொடரில்லை.அவர்கள் அனைவருக்கும் தேவனுடைய ஆவியுள்ளதென்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டுமென பவுல் விரும்புகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "அப்பொழுதிலிருந்து" அல்லது "ஏனெனில்."

கிறிஸ்து உங்களிலிருந்தால்

மனிதனில் வாழும் கிறிஸ்து எப்படி வெளிப்படுத்துவார்: "பரிசுத்த ஆவியின் மூலமாய் கிறிஸ்து உங்களில் வாசமாயிருந்தால்"

ஒருபுறம் சரீரம் பாவத்துக்குட்பட்டு மரணமடைந்துவிட்டது, மறுபுறம்

"ஒருபுறம்" மேலும் "மற்றொருபுறம்" என்ற சொற்றொடர்கள் சிலகாரியங்களை இரண்டு வெவ்வேறுகோணங்களில் நினைப்பதை அறிமுகப்படுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "பாவத்தினால் சரீரம் இறந்துவிட்டது,ஆனால்,"

பாவத்தினால் சரீரம் இறந்துவிட்டது

சாதகமான அர்த்தங்கள் 1)மனிதன் பாவத்தின் வல்லமையினால் ஆவிக்குரிய மரணமடைகிறான் அல்லது 2)மனிதன் மரணமடைந்ததிற்கு பின்பு தேவன் அவனுக்கு ஜீவனைத் திரும்பக் கொடுக்கிறார் ஏனென்றால் தேவன் நீதியுள்ளவர் மேலும் விசுவாசிகளுக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்.

நீதியின் மரியாதையின் நிமித்தம் ஆவியானது வாழ்கிறது

சாத்தியமான அர்த்தங்கள் 1) ஆவிக்குரியவைகளில் உயிரோடிக்கிற மனிதன் தேவன் அவனுக்கு

Romans 8:11

ஆவி ...உங்களில் வாசமாயிருந்தால்

பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய வாசகர்களுடன் வாசமாயிருக்கிறார் என நினைக்கிறார்.மாற்று மொழிபெயர்ப்பு:"ஆவி இருக்கும்வரையிலும்...உங்களில் வாசம் செய்கிறார்."

அவரில் உயிரோடு எழுப்பின

"அந்த தேவன்,உயிரோடு எழுப்பினவர்"

சாவுக்கேதுவான சரீரங்கள்

"மாம்ச சரீரம்" அல்லது இறந்துபோகும் சரீரம்"

Romans 8:12-13

அப்படியென்றால்

"ஆகையால் நான் உன்னிடம் இப்போது சொன்னது உண்மைதான்"

சகோதர்களே

"உடன் விசுவாசிகள்"

நாம் கடனாளிகள்

பவுல் கீழ்படிதலை கடனைத் திருப்பி தருவதுடன் ஒப்பிடுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் கீழ்ப்படியவேண்டும்"

மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்திற்குக் கடனாளியல்ல

"அதற்காக நாம் பாவ இச்சைகளுக்கு கீழ்ப்படியவேண்டியதில்லை"

நீ மாம்சத்தின்படி பிழைத்தால்

"எனவே நீங்கள் உங்களுடைய பாவ இச்சைகளை மட்டும் பிரியப்படுத்த பிழைக்கிறீர்கள்"

மரணத்தருவாயில் உள்ளீர்கள்

"நீங்கள் நிச்சயமாக தேவனிடமிருந்து வேறுபிரிக்கப்படுவீர்கள்"

ஆனால், ஆவியினாலே உங்களுடைய சரீரத்தின் செயல்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தால்

மாற்று மொழிபெயர்ப்பு

புதிய வாக்கியமாக: “ஆனால், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நீங்கள் உங்களுடைய பாவ ஆசைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினால்”

Romans 8:14-15

தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டவர்கள்

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்பட்ட அனைத்து மக்கள்."

திரும்பவும் பயப்படுகிறதற்கு அடிமைத்தனத்தின் ஆவியை நீங்கள் பெறவில்லை

"தேவன் உங்களுக்கு திரும்பவும் பாவத்தின் வல்லமைக்கு அடிமையாகும் ஆவியையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு பயப்படுதலையும் தரவில்லை"

கூப்பிடுகிறதினாலே

"கூக்குரலிட காரணமானது"

அப்பா, பிதா

"அப்பா" என்பது அரமைக் மொழியில் "தகப்பன்" என்று அழைக்கப்படும்.

Romans 8:16-17

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே

இந்த சொற்றொடர்களில் வினைச்சொல் வராவிட்டாலும் அவைகள் புரிந்துகொள்ளப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் தேவனுடைய புத்திரர்களானால்,நாம் அவருடைய சுதந்தரருமே."

ஒருபுறம் தேவனுடைய சுதந்தரமும், மறுபுறம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமே

"ஒருபுறம்" மற்றும் "மறுபுறம்" என்ற சொற்றொடர்கள் இரண்டு வெவ்வேறு விதங்களில் நினைத்துக்கொண்டிருப்பதை அறிமுகப்படுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய சுதந்தரரும்,கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே."

அவருடன் நாமும் மகிமையடையும்படி

இதை செய்வினைச் சொல்லில் மொழிப்பெயர்க்கலாம்: "அவருடன் சேர்த்து தேவன் நம்மை மகிமைப்படுத்துவார்."

Romans 8:18-19

அதற்காக

"நான் எண்ணுகிறேன்" என்பதை வலியுறுத்துகிறது. "ஆதலால்" என்பது இதின் அர்த்தம்

நான் அதை எண்ணுகிறேன்...ஒப்பிடத் தகுதியானவைகள் அல்ல

" ஒப்பிடத் தகுதியானவையென்று ...நான் அதை நினைத்து பார்க்கவில்லை."

வெளிப்படுத்தப்படும்

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் வெளிப்படுத்துவார்" அல்லது "தேவன் தெரியப்படுத்துவார்."

வெளிப்படுவதற்கு சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது

தேவன் சிருஷ்டித்த அனைத்தும் மனிதனாக சித்தரிக்கப்பட்டு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு

"தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வெளிப்படும் காலம்."

Romans 8:20-22

சிருஷ்டிப்பு பயனில்லாததாகிகிவிட்டது

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் சிருஷ்டித்தவைகள் தாம் சிருஷ்டித்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அவருடைய சொந்த விருப்பத்தின்படி அல்ல,அவருக்கு கீழ்ப்பட்டுள்ளது

இங்கு "சிருஷ்டிப்பானது" ஆவலோடு உள்ள மனிதனாக சித்தரிக்கப்படுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "ஏனென்றால் சிருஷ்டிக்கபட்டவைகளுக்கு தேவை என்பதினால் அல்ல ஆனால் தேவனுக்கு தேவைப்படுகிறது."

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்படுவதற்கு

செய்வினைச் சொல்லுடன் புதிய வாக்கியத்தில் மாற்று மொழிபெயர்ப்பு: முழுமையாக சிருஷ்டிக்கப்படும்வரையில் தேவன் அவர்களை இரட்சிப்பார்." மொழிபெயர்ப்பு குறிப்புகள்

அடிமைத்தனத்திலிருந்து அழிவிற்குரிய

பவுல் சிருஷ்டிப்பில் உள்ள அனைத்தையும் "அடிமைத்தனத்திற்கும்" அழிவிற்கும்" ஒப்பிடுகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு :"அழுகியதிலிருந்து மரணம்வரை."

விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய

"அவர் அவர்களை விடுதலையாக்கி அவருடைய பிள்ளைகளுக்கு கனத்தை தருகிறார்."

நமக்கு தெரிந்திருக்கிறபடி சகல சிருஷ்டிப்பும் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு பிரசவவேதனைப்படுகிறது

சிருஷ்டிப்பானது குழந்தைபெற பிரசவவேதனைப்படுகிற பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது. "நாம் தெரிந்திருக்கிறபடி தேவன் படைத்த அனைத்தும் விடுதலையாக்கப்பட்டு பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் தவிப்பை போன்றது."

Romans 8:23-25

ஆவியின் முதற்பலன்களைப் பெற்றிருக்கும் நாம்

விசுவாசிகள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்கிறதை பருவகாலத்தில் விளையும் முதற்கனிகள் மற்றும் காய்கறிகளுடன் பவுல் ஒப்பிடுகிறார்.தேவன் விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியை மட்டும் துவக்கத்தில் தருவார்.

நம்முடைய சரீரமீட்பராகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்கு காத்திருந்து

தேவன் நம்மை மீட்பார் என்பதிலிருந்து வெளிப்படுத்தபட்டுள்ளது: "தேவனுடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினர்களாவதற்கு நாம் காத்திருக்கிறோம் மேலும் அவர் நம்முடைய சரீரத்தை அழிவிலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்கிறார்."

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்

இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "தேவன் எங்களை இரட்சித்துவிட்டார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது."

காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல,ஒருவன் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?

"நம்பிக்கை" என்பதை அவருடைய பிரசங்கத்தை கேட்போர் புரிந்துகொள்வதற்கு கேள்வியைப் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோமென்றால் நமக்கு தேவையானதை நாம் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.அவனுக்கு தேவையானது ஏற்கனவே கிடைத்துவிட்டபோது யாரும் நம்பிக்கையோடுக் காத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்."

Romans 8:26-27

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு

" பெருமூச்சை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது."

Romans 8:28-30

அழைக்கப்பட்டவர்கள்

செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனால் தெரிந்துகொள்ளப்படுகிறவர்கள்."

அவர் எவர்களை முன்னறிந்தாரோ

"அவர்களை சிருஷ்டிப்பதற்கு முன்பே அவர் அவர்களை அறிந்திருந்தார்"

அவரும் முன்குறித்திருந்தார்

"அவர்களுடைய இலக்கை அவர் ஏற்படுத்தியிருந்தார்" அல்லது "அவர் முன்பே திட்டமிட்டுவிட்டார்"

தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு

இதை செயவினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "அவர்களை தம்முடைய குமாரரின் சாயலின் ஒப்பாக மாற்றலாம்."

முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு

"அதினால் அவருடைய குமாரன் முதற்பேறானார்."

அநேக சகோதரருக்குள்ளே

இதின் முழு அர்த்தத்தை வெளிக்கொண்டுவரலாம்: "தேவனுடைய குடும்பத்தை சேர்ந்த அநேக சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்."

எவர்களை முன்குறித்தாரோ

"அவர்களுக்காக தேவன் முன்பே திட்டங்களை ஏற்ப்படுத்தினார்"

இதினால் அவரும் மகிமைப்படுவார்

"மகிமைப்படுவார்" என்ற வார்த்தை நிச்சயமாக நடக்கும் என்று இறந்த காலத்தில் வலியுறுத்தப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "இதினால் அவரும் மகிமைப்படுவார்."

Romans 8:31-32

இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்?

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

பவுல் முன்பு சொன்ன முக்கிய கருத்தை வலியுறுத்த கேள்விகளை பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: " இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டியவைகள் இவைகள்தான்: நமக்கு கர்த்தர் உதவி செய்வதால், நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது."

ஆனால் அவரை ஒப்புக்கொடுத்தவர்

"அவனுடைய சத்துருக்களுக்கு அவனை ஒப்புக்கொடுத்தார்."

அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

இதை வலியுறுத்த பவுல் கேள்வியைப் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "அவர் நிச்சயமாக நமக்கு அனைத்து பொருட்களையும் இலவசமாக தருவார்."

Romans 8:33-34

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றம் சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

பவுல் வலியுறுத்துவதற்காக கேள்வியை பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுக்கு முன்பாக யாராலும் நம்மை குற்றம்சாட்டமுடியாது ஏனென்றால் அவரோடு நல்லுறவை வைக்கச் செய்கிறவர் அவரே."

தண்டனைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? கிறிஸ்து இயேசுவா....நமக்காக வேண்டுதல் செய்கிறவர் அவரே?

பவுல் இதை வலியுறுத்த கேள்வியை பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "யாராலும் நம்மை தண்டனைக்குள்ளாக்க முடியாது ஏனெனில் அதை செய்கிறவர் இயேசு கிறிஸ்து....நமக்காக மன்றாடுகிறவரும் அவரே."

மிக முக்கியமாக இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியவர்

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "தேவன் இறந்தோலிருந்து உயிரோடு எழுப்பியுள்ளார் இதைவிட முக்கியமானதென்ன" அல்லது "உயிரை திரும்ப பெற்றுக் கொண்டது அதிக முக்கியமல்லாவா."

Romans 8:35-36

உபத்திரமோ,வியாகுலமோ,துன்பமோ,பசியோ,நிர்வாணமோ,நாசமோசமோ,பட்டயமோ?

மாற்று மொழிபெயர்ப்பு: யாராவது தொல்லை கொடுத்தாலோ,துன்புறுத்தினாலோ,நம்முடைய உடைகளை எடுத்துக்கொண்டாலோ, உணவு கொடுக்காமல் நம்மை கொன்றாலும் அது சாத்தியமில்லை.

உபத்திரமோ,வியாகுலமோ

இவ்விரு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை தருகிறது.

உங்களின் நன்மைக்காக

இங்கு "நீங்கள்" என்ற வார்த்தை ஒருமையிலிருந்து தேவனைக் குறிக்கிறது.மாற்று மொழிபெயர்ப்பு : "உங்களுக்காக"

உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்

இங்கு "நாங்கள்" என்பது வேதவசனத்தின் பகுதியை எழுதினவரையும்,தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தவர்களையும் சேர்ந்து குறிக்கிறது."எந்நேரமும்" என்ற சொற்றொடர் அவர்கள் எவ்வித ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை மிகைப்படுத்தி வலியுறுத்துகிறது . பவுல் வேத வசனத்தின்பகுதியை காண்பித்து,தேவனுக்கு சொந்தமானவர்கள் இவ்வித நெருக்கடியான நேரங்களை எதிர்பார்க்கவேண்டுமென்று கூறுகிறார்.இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "நம்முடைய எதிராளிகள் நம்மை கொலைசெய்வதற்காக தொடர்ந்து தேடுகிறார்கள்."

அடிக்கப்படும் ஆடுகளைபோல எண்ணப்படுகிறோம்

தேவனுக்கு உண்மையாக இருப்பவர்களை கொலை செய்கிறவர்களை கால்நடைகளுடன் ஒப்பிடப்படுகிறது. செய்வினைச் சொல்லுடன் மாற்று மொழிபெயர்ப்பு: " அவர்கள் ஆடுகளை கொல்லுகிறதுபோல கொல்லுகிறார்கள்,அவர்களுக்கு நம்முடைய உயிர் மதிப்பற்றதாக உள்ளது ."

Romans 8:37-39

நாம் முற்றிலும் ஜெயங்கொள்கிறவர்களாக இருக்கிறோம்

"நமக்கு முழுமையான வெற்றி"

நம்மில் அன்பு செலுத்துகிறவர்கள் மூலமாக

இயேசு கிறிஸ்து காட்டின அன்பில் ஒளிவுமறைவேதுமில்லை: "ஆதலால் இயேசுவினால்,எவ்வளவாய் அன்புகூர்ந்து அவர் நமக்காக இறப்பதற்கு விருப்பமாக உள்ளார்."

நான் உணர்த்தப்பட்டேன்

"நான் திருப்தியடைந்தேன்" அல்லது "எனக்கு நம்பிக்கையிருக்கிறது"

அரசாங்கம்

சாதகமான அர்த்தங்களாவான 1) பேய்கள் அல்லது 2) மனித அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்.

அதிகாரங்களினால்

சாதகமான அர்த்தங்களாவன 1)அதிகாரத்தில் இருக்கும் ஆவிக்குரிய இனம் ,அல்லது 2) அதிகாரத்தில் இருக்கும் மனித இனம்.

Romans 9

Romans 9:1-2

பரிசுத்த ஆவிக்குள் என் மனசாட்சியும் எனக்கு சாட்சியிடுகிறது,

இந்த சொற்றொடரை தனி வாக்கியமாக அமைக்கலாம்: "பரிசுத்த ஆவியானவர் என் மனசாட்சியை ஆளுகை செய்கிறார்,நான் சொல்கிறதை உறுதிப்படுத்துகிறார்."

எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது

இதை தனி வாக்கியமாக்கலாம். "நான் சொல்லுகிறேன் அதிக துக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன்." பவுல் யாருக்காக வேதனைப்படுகிறார் என்பதை சொல்லவேண்டும்.

Romans 9:3-5

மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரர்களுக்கு பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டு சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே,

மாற்று மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவைவிட்டு நிரந்தரமாக என்னை பிரித்தாலும்,அது என்னுடைய சக இஸ்ரவேலருக்கு உதவியாயிருந்தால்,என் சொந்த மக்களுக்கு, கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்க நான் தனிப்பட்ட முறையில் தேவன் என்னை சபிக்க விருப்பமாய் இருக்கிறேன்."

அவர்கள் இஸ்ரவேலரே

"அவர்கள், என்னைப்போன்று, இஸ்ரவேலர்கள்.தேவன் அவர்களை யாக்கோபின் சந்ததியினராகத் தெரிந்துகொண்டார்."

பிதாக்கள் அவர்களுடையவர்களே,மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே

"மாம்சத்தின்படி கிறிஸ்து அவர்களுடைய முற்பிதாக்களின் சந்ததியில் பிறந்துள்ளார்."

கிறிஸ்து ,எல்லாவற்றிற்கும் மேலானவர்,தேவன் நித்தியமாய் ஆசிர்வதித்தார்.

இதை தனிப்பட்ட வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலானவர் தேவன் அவரை நித்தியமாய் ஆசீர்வதிப்பார்."

Romans 9:6-7

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் வீணாய் போகவில்லை.

" தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களைக் கடைபிடிக்க தவறியதில்லை."

இஸ்ரவேல் தேசத்தில் வசிக்கின்ற அனைவரும் உண்மையிலே இஸ்ரவேலர்கள் அல்ல.

மாம்சத்தின்படியுள்ள இஸ்ரவேலின் சந்ததியினருக்கு(அல்லது யாக்கோபின்) தேவன் வாக்குத்தத்தத்தை உண்டாக்காமல் ,அவருடைய ஆவிக்குரிய சந்ததியினருக்கு,அதாவது இயேசுவின்மேல் விசுவாசமுள்ளவர்களுக்காக உண்டாக்கப்பட்டது.

ஆபிரகாமின் சந்ததியினரானாலும் எல்லோரும் உண்மையில் அவருடைய பிள்ளைகள் அல்லவே.

" ஆதலால் ஆபிரகாமின் பிள்ளைகள் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் அல்ல "

Romans 9:8-9

மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள்

இது மாம்சத்தின்படி ஆபிரகாமின் சந்ததியினரைக் குறிக்கிறது.

தேவனுடைய பிள்ளைகள்

இது இயேசுவின்மேல் நம்பிக்கைவைத்துள்ள ஆவிக்குரிய சந்ததியினரை குறிக்கிறது.

வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்

இது வாக்குத்தத்தை சுதந்தரிக்கும் மக்களை குறிக்கிறது.

சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள்

"நான் சாராளுக்கு மகனைக் கொடுப்பேன்"

Romans 9:10-13

நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு...இப்பொழுது

9:12 க்கு பின்பு 9:11நீங்கள் போடவேண்டியதாயிருக்கும்: " நம்முடைய பிதா ஈசாக்கு,மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான், இன்னும் பிள்ளை பிறக்கவில்லை...அவருக்காக இப்பொழுது கூப்பிடுகிறவர்."

நம்முடைய பிதா

ஈசாக்கு பவுலுக்கும், ரோமாபுரியில் உள்ள யூத விசுவாசிகளுக்கும் முற்பிதாவாக இருந்தார்.

கர்ப்பவதியானாள்

"கர்ப்பம் தரித்தாள்"

பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலிருக்கையில்

"குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு நன்மையான தீமையான எதையும் செய்யவில்லை"

தேவனின் தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் நிலைநிற்கும்படி

"ஆதலால் அவருடைய தீர்மானத்தின்படி காரியங்கள் நடப்பதை தேவன் விரும்புகிறார்.

பிள்ளைகள் இன்னும் பிறவாமலும்

"குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு"

நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலிருக்கையில்

"அவர்கள் ஒன்றும் செய்யவில்லையென்பதால்"

அவருக்காக

"தேவனுக்காக"

மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான், என்று அவளுக்கு சொல்லப்பட்டது.

தேவன் ரெபேக்காளிடம் சொன்னது, "மூத்த மகன் இளையமகனுக்கு பணிவிடை செய்தான்."

"அப்படியே யாக்கோபைச் சிநேகித்து,ஏசாவை வெறுத்தேன்"

"யாக்கோபை எவ்வளவு அதிகமாக நேசித்தார் என்பதை ஒப்பிட்டுச் சொல்வதற்காகவே ஏசாவை தேவன் வெறுத்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

Romans 9:14-16

ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? பவுல் இக்கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கவில்லை. தேவன் அநீதியுள்ளவர் என்பதை முடிவுக்கு கொண்டுவந்து கேள்வியை திருத்தம் செய்ய அவர் இக்கேள்வியைப் பயன்படுத்தினார்.

ஒருபோதும்

"அது சாத்தியமில்லை!" அல்லது "நிச்சயமாக இல்லை!" இந்த விளக்கங்கள் இவைகள் சம்பவிக்குமென்பதை உறுதியாக மறுக்கின்றன. உங்களுடைய சொந்த மொழியிலும் இதற்கொத்த மொழிநடையிருக்கலாம்,அதை இங்கு பயன்படுத்தவும்.

அவர் மோசேயிடம் சொல்வது

"தேவன் மோசேயிடம் சொல்கிறார்"

ஆகையால் விரும்பிகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல

"மக்களுக்கு என்ன தேவை என்பதினால் அல்ல, அல்லது ஏனெனில் அவர்கள் கடினமாக முயற்சித்தார்கள்,"

ஆகையால் ஓடுகிறவானாலும் அல்ல

தன்னுடைய இலக்கை நோக்கி அதை எப்படியாவது பெற்றுவிடவேண்டுமென்று விடாமுயற்சியுடன் ஓடுகிற ஓட்டபந்தய வீரருடன் பவுல் ஒப்பிடுகிறார்.

Romans 9:17-18

வேதம் சொல்லுகிறது என்னவெனில்

இங்கு வேதம், தேவன் பார்வோனுடன் பேசிக்கொண்டிருப்பது போல ஆளுருவாக்கப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் சொன்னார் என்று வேதம் பதிவு செய்கிறது"

நான்...என்னுடைய

தேவன் அவரை குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்.

உன்னிடத்தில்

ஒருமை

என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்

"அந்த மக்கள் பூமியெங்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கபடுவதற்கு"

யாரை கடினப்படுத்த விரும்புகிறாரோ, அவனை கடினப்படுத்துகிறார்

யாரை பிடிவாதமுள்ளவனாக தேவன் மாற்ற விரும்புகிறார்களோ, அவனை பிடிவாதமுள்ளவனாக மாற்றுகிறார்.

Romans 9:19-21

நீ

ஏதோவொரு மனிதனிடம் பேசிக்கொண்டு இருப்பதுபோல் பவுல் தன்னுடைய போதனைகளின் நிறைகுறைகளை சொல்லிக்கொண்டுள்ளார்,இங்கே நீங்கள் பன்மையையும் பயன்படுத்தலாம்.

அவர்...அவருடைய

இவைகள் தேவனை குறிக்கிறது.

உருவாக்கப்பட்டவன் சொல்லுகிற தென்ன....தினசரி பயன்பாட்டில்?

மிதியிட்ட ஒரே களிமண்ணிலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்கும், ஒரு பாத்திரத்தை கனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு பவுல் இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

Romans 9:22-24

அவர்...அவருடைய

"தேவன்...தேவனுடைய"

கோபக்கினைப் பாத்திரங்கள்... இரக்கத்தின் பாத்திரங்கள்

கோபக்கினைக்குத் தகுதியான மக்கள்...இரக்கத்திற்குத் தகுதியான மக்கள்.

அவருடைய மகிமையின் ஐஸ்வர்யம்

"அவருடைய மகிமை,மிகுந்த மதிப்புள்ளது."

அவருடைய மகிமைக்காக முன்பே ஆயத்தமாக்கபட்டிருந்தது.

" மகிமையை வெளிப்படுத்துவதற்காக ஆயத்தமாக்கப்பட்டிருந்தது"

எங்களையும்

பவுல் மற்றும் உடன் விசுவாசிகள்

Romans 9:25-29

அவர் ஓசியாவில் சொல்லியுள்ளபடி: "ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதியுள்ளபடியே தேவன் சொல்லுகிறார்."

ஓசியா

ஓசியா என்பவர் தீர்க்கதரிசி.

எனக்கு மக்கள் அல்லாதர்வர்களை என்னுடைய மக்கள் என்று சொல்லி அழைப்பேன்

"என்னுடைய மக்கள் அல்லாதவர்களை என்னுடைய மக்களாக தெரிந்துகொள்வேன்"

பிரியமில்லாதவளை பிரியமுள்ளவள் என்று சொல்லி அழைப்பேன்

" சிநேகிக்கப்படாதவளை நான் சிநேகிக்க அவளை தெரிந்து கொண்டேன்."

ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்

"ஜீவனுள்ள" என்ற வார்த்தை தேவன் ஒருவரே "சத்தியமானவர்" என்ற உண்மையைக் குறிக்கிறது, பொய் விக்கிரகங்களைப் போன்றது அல்ல, இதை "உண்மையான தேவனின் குழந்தைகள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

Romans 9:30-31

இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்?

"இதை நாம் கட்டாயமாக சொல்லவேண்டும்"

அந்த யூதரல்லாத மக்கள்

"நாம் அந்த யூதரல்லாத மக்கள் என்று சொல்லுவோம்"

நீதியில் வழிநடத்து

"தேவனைப் பிரியப்படுத்த முயற்சி செய்தல்"

நீதியை அடைந்தார்கள்,அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே

"அவருடைய குமாரனை விசுவாசித்து தேவனைப் பிரியப்படுத்துவது"

அதை அடையவில்லை

"நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்ததினால் நீதியை அடையவில்லை"

Romans 9:32-33

ஏனென்றல்

அவர்கள் நீதியை அடையவில்லை ஏன்?

கிரியைகளினால்

"தேவனை பிரியப்படுத்தும் செயல்களை தொடர்ந்து செய்வது" அல்லது" நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பதினால்"

இடறுதலுக்கான கல்

"இடறுகிற மக்கள் மேலுள்ள கல்"

எழுதியிருக்கிறபடி

"ஏசாயா தீர்க்கதரிசி எழுதியுள்ளார்"

சீயோன்

இடத்தின் பெயர்

அதை விசுவாசிக்கிறவன்

ஆகவே மனிதனுக்காக கல் நிற்கிறது,இதை "அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்" என்று மொழிபெயர்க்கவேண்டும்.

Romans 10

Romans 10:1-3

என் இருதயத்தின் விருப்பம்

"என்னுடைய உயர்ந்த விருப்பம்"

அவர்களுக்காக, அவர்களுடைய இரட்சிப்பதற்காக

"அவரேதான் யூதர்களை இரட்சிக்கிறார்"

Romans 10:4-5

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்

"கிறிஸ்து நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றிவிட்டார்."

விசுவாசிக்கிற யாருக்கும் நீதி உண்டாகும்

"அவரை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரையும் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக நிலைநிறுத்துவதற்கு"

நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதி

"நியாயப்பிரமாணம் எப்படி மனிதனை தேவனுக்கு முன்பாக நிலைநிறுத்துகிறது.

நியாயப்பிரமாணத்தின் நீதியை நடப்பிக்கிறவன் அவருடைய நீதியினாலே பிழைப்பான்

"நியாயப்பிரமாணத்திற்கு பூரணமாக கீழ்ப்படிகிறவன் பிழைப்பான் ஏனெனில் தேவனுக்கு முன்பாக நியாயப்பிரமாணம் அவனை நிறுத்தும்."

பிழைப்பான்

இது 1) நித்திய வாழ்வு அல்லது 2) தேவனுடன் ஐக்கியமாய் உள்ள மனிதனின் வாழ்க்கை.

Romans 10:6-7

விசுவாசத்தினாலாகும் நீதியானது சொல்லுகிறது

இங்கு "நீதியானது"பேசும் மனிதனாக" சித்தரிக்கப்படுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: " விசுவாசம் எப்படி மனிதனை நீதியுள்ளவனாக்குகிறது என்பதை பற்றி மோசே எழுதுகிறார்."

உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக

"உங்களுக்குள்ளே சொல்லவேண்டாம்." அவர்களுக்குள்ளே ஒருவன் இருப்பதாக நினைத்து மோசே மக்களுடன் உரையாடுகிறார்.

பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார்?

தன் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருப்போருக்கு போதிக்க பவுல் கேள்வியைப் பயன்படுத்துகிறார்.அவருடைய முந்தைய அறிவுரையாகிய"சொல்ல வேண்டாம்" என்ற கேள்விக்கு எதிர்மறையான பதில் தேவைப்படுகிறது.மாற்று மொழிபெயர்ப்பு: "பரலோகத்திற்கு போக யாரும் முயற்சி செய்யகூடாது."

அது கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி

"அதினால் அவர்களுக்காக கிறிஸ்து பூமிக்கு இறங்கிவருவார்."

பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்

மோசே இக்கேள்வியை தன் உரையாடலை கேட்போருக்கு போதிப்பதற்கு பயன்படுத்துகிறார்.அவருடைய முந்தைய அறிவுரையாகிய "சொல்லவேண்டாம்"என்ற கேள்விக்கு எதிர்மறையான பதில் தேவைப்படுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "யாரும் கீழே இறங்கிபோக முயற்சி செய்யக்கூடாது,இறந்தவர்களின் ஆவிகள் இருக்கும் இடத்திற்கு நுழையவேண்டாம்."

அது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின

"அவர்கள் கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிரோடு எழும்பிவரப்பண்ணுவதற்காக"

Romans 10:8-10

ஆதலால் இது என்ன சொல்லுகிறது?

"இது" என்ற வார்த்தை 10:6 ல் "நீதியை" குறிக்கிறது. இங்கு பவுல்"நீதியை" பேசுகின்ற மனிதனாக சித்தரிக்கிறார்.அவர் சொல்லப்போகிற பதிலுக்காக கேள்வியைப் பயன்படுத்தி பவுல் வலியுறுத்துகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு : "ஆதலால் இதன் மூலம் மோசே சொல்லுகிறது"

இந்த வார்த்தை உனக்கு சமீபமாய் உள்ளது

"செய்தி இங்கே இருக்கிறது"

உன் வாயில்

"வாய்" என்ற வார்த்தை பேசுகின்ற நபரை குறிக்கிறது.இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம் : "இது உங்களுக்கு நீங்கள் சொல்லுவது."

உன் இருதயத்திலும்

"இருதயம்" என்ற வார்த்தை மனிதனின் சிந்தையை அல்லது அவன்நினைக்கிறதை குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: " மேலும் உங்களுக்குள்ளே நீங்கள் நினைத்துகொண்டிருப்பது"

கர்த்தராகிய இயேசுவை உன் வாயினால் ஒப்புக்கொண்டு

"நீ கர்த்தராகிய இயேசுவை அறிக்கையிடும்போது"

உன்னுடைய இருதயத்திலே விசுவாசி

"உண்மையென ஏற்றுக்கொள்"

நீ இரட்சிக்கப்படுவாய்

இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: " தேவன் உங்களை இரட்சிப்பார்."

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே ஒப்புக்கொள்ளப்படும்

"தன்னுடைய மனதில் நம்பிக்கைவைத்து தேவனுக்கு முன்பாக நீதியாகயிருந்து, மேலும் வாயினாலே மனிதன் அறிக்கையிடுகிறான், தேவன் அவனை இரட்சிக்கிறார்."

Romans 10:11-13

அவரை விசுவாசிக்கிறவன் யாரோ அவன் வெட்கப்பட்டுபோவதில்லை

" அவரை விசுவாசிக்கிற யாரும் வெட்கப்படுவதில்லை " இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம் :" தேவன் அவரை நம்பிகிறவர்களை வெட்கப்படுத்தமாட்டார்." மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனை விசுவாசிக்கிற அனைவரையும் அவர் கனம் பண்ணுவார்.

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை

"இந்த விதத்திலே, தேவன் யூதர்களையும், யூதரல்லாதவர்களையும் சமமாக நடத்துகிறார்."

அவரைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐஸ்வரிய சம்பன்னராயிருக்கிறார்

"அவரை நம்புகிறவர்களை ஐஸ்வரியத்தால் ஆசிர்வதிக்கிறார்."

ஆதலால் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவன் யாரும் இரட்சிக்கபடுவான்

"நாமம்" என்ற வார்த்தை பூரணமனிதனைக் குறிக்கிறது.இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: "அவரை நம்புகிறவர்களை கர்த்தர் இரட்சிப்பார்."

Romans 10:14-15

அவரை விசுவாசியாதவர்கள் எப்படி தொழுதுகொள்ளுவார்கள்?

கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்காதவர்களை மையப்படுத்தி வலியுறுத்த பவுல் இக்கேள்வியைப் பயன்படுத்துகிறார். "அவர்கள்" என்ற வார்த்தை தேவனுக்கு சொந்தமாகாதவர்களை குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு:" அவரை விசுவாசிக்காதவர்கள் அவரை தொழுதுகொள்ளமுடியாது"

அவரைக் குறித்து கேள்விபடாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?

இதே காரணத்திற்காக பவுல் வேறொரு கேள்வியையும் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்புகள்: "அவருடைய செய்தியைக் கேள்விப்படாதவர்கள் அவரை விசுவாசிக்கமாட்டார்கள்" அல்லது "அவரைப் பற்றிய செய்தியைக் கேள்விப்படாததினால் அவரை விசுவாசிக்கமாட்டார்கள்."

பிரசங்கம் செய்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?

இதே காரணத்திற்காக பவுல் வேறொரு கேள்வியைப் பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "யாராவது செய்தியை அவர்களுக்கு சொல்லவில்லையானால் அவர்கள் எப்படி கேள்விப்படுவார்கள்"

அனுப்பபடாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?

இதே காரணத்திற்காக பவுல் வேறொரு கேள்வியை பயன்படுத்துகிறார்."அவர்கள்" என்ற வார்த்தை தேவனுக்கு சொந்தமானவர்களைக் குறிக்கிறது. "இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "அவர்களை யாராவது அனுப்பாவிட்டால் செய்தியை மற்ற மக்களுக்கு அவர்களால் சொல்லமுடியாது."

நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்!

செய்தியைக் கேள்விபடாதவர்களிடத்திற்கு பயணம்பண்ணி அறிவித்துவருபவர்களின் "பாதங்களுக்கு" பிரசித்துவம் படுத்த பவுல் இதை பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயாரப்பு: "தூதர்கள் வந்து நமக்கு நற்செய்தியை அறிவிப்பது எவ்வளவு ஆச்சரியமானது."

Romans 10:16-17

இப்படியிருக்க அவர்கள் அனைவரும் கேள்விப்படவில்லையே

"யூதர்கள் அனைவரும் கேள்விப்படவில்லையே"

நம்முடைய செய்திகளைவிசுவாசித்த, கர்த்தர்?

அநேக யூதர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கமாட்டார்கள் என்று வேதத்தில் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் என்பதை பவுல் கேள்வியைப் பயன்படுத்தி வலியுறுத்துகிறார். இங்கு "நாம்" என்பது தேவனையும் ஏசாயாவையும் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: " கர்த்தாவே,நம்முடைய செய்தியை அநேகர் விசுவாசிக்கவில்லை."

Romans 10:18

இப்படியிருக்க நான் சொல்லுகிறேன், அவர்கள் கேள்விபடவில்லையா? "ஆமாம்,அதிக நிச்சயமாக,இதை வலியுறுத்த பவுல் கேள்வியை பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "ஆதலால் நான் சொல்லுகிறேன் நிச்சயமாக யூதர்கள் கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை கேள்விப்படுவார்கள்.

அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் உலகத்தின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே

இவ்விரண்டு அறிக்கைகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை வலியுறுத்த பயன்படுத்தப்பட்டது."அவர்களுடைய" என்ற வார்த்தை சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் குறிக்கிறது.இங்கு அவர்கள் மனிததூதர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவனைபற்றி மக்களுக்கு சொல்லுவார்கள். அவர்களுடைய படைப்பு எப்படி தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் பற்றி சாட்சி சொல்வதைக் குறிக்கிறது.இங்கு பவுல் வசனத்தின்மூலம் வெளிப்படுத்தலாம். மாற்று மொழிபெயர்ப்பு: "வேதத்தில் எழுதியுள்ளபடி ,சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தேவனுடைய வல்லமைக்கும் மகிமைக்கும் ஆதாரமாக உள்ளன, உலகத்திலுள்ள அனைவரும் அதைப் பார்த்து தேவனைப்பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்வார்கள்."

Romans 10:19

இன்னும், நான் சொல்லுகிறேன், இஸ்ரவேலர் அதை அறியவில்லையா?

இதை வலியுறுத்த பவுல் இக்கேள்வியை பயன்படுத்துகிறார். "இஸ்ரவேலர்" என்ற வார்த்தை இஸ்ரவேல் நாட்டில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "மீண்டும் நான் சொல்லுகிறேன் இஸ்ரவேல் மக்கள் செய்தியை அறிந்திருந்தார்கள்."

முதலாவது மோசே, நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்...நான் உன்மேல் குழப்பத்தை உண்டாக்குவேன்...

தேவன் சொன்னதை மோசே எழுதிவைத்துள்ளார் என்று அர்த்தம்."நான்" என்பது தேவனை குறிக்கிறது,"நீங்கள்" என்பது இஸ்ரவேலரைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் உங்களுக்கு எரிச்சலை முதலில் உண்டாக்குவார் என்றும்....தேவன் குழப்பத்தை உங்களுக்குள் எழும்பிவரப்பண்ணுவார்..."

என்னுடைய மக்கள் அல்லாதவர்களைக்கொண்டு

"அந்த நாட்டை சேராத மக்களென்று எண்ணப்பட்டவர்கள்" அல்லது "எந்த நாட்டையும் சேராத மக்கள்"

புரிந்துகொள்ளாத தேசம்

"என்னையும் என்கட்டளைகளையும் அறியாத தேசத்தின் மக்கள்"

உங்களுக்கு கோபமூட்டுவேன்

"நான் உனக்குகோபத்தை உண்டாக்குவேன்."

Romans 10:20-21

ஏசாயா தைரியங்கொண்டு சொல்லுகிறான்

தேவன் சொன்னதை ஏசாயா எழுதினான் என்றுஅர்த்தம்.

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன்

"நான்" மற்றும் "என்னை" என்ற வார்த்தைகள் தேவனை குறிக்கிறது.இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம். "யூதரல்லாத மக்கள் என்னை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்கள்." இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம்: ஏற்கனவே நடந்தமுடிந்த சம்பவங்களைப்போல் வருங்கால காரியங்களைப்பற்றி தீர்க்கதரிசிகள் அடிக்கடி பேசுவார்கள்.இது தீர்க்கதரிசனம் உண்மையென வலியுறுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு:" யூதரல்லாத மக்கள் என்னைக் காணாதிருந்தும் என்னைக் கண்டார்கள்."

நான் வெளிப்படுத்தினேன்

"நான் என்னை தெரியப்படுத்தினேன்" மாற்று மொழிபெயர்ப்பு: நான் என்னை வெளியரங்கமாக்கிவிட்டேன்."

அவர் சொல்கிறார்

தேவன், ஏசாயாவின் மூலம் சொல்லுகிறார்.

நாள்முழுவதும்

தேவனின் தொடர்முயற்சியை வலியுறுத்த இந்தச் சொற்றொடரைப் பவுல் பயன்படுத்தினார்.மாற்று மொழிபெயர்ப்பு:"தொடர்ச்சியாக"

கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்து பேசுகிறவர்களாய் இருக்கிற மக்களிடத்தில் என் கையை நீட்டினேன்

மாற்று மொழிபெயர்ப்பு: "நான் உன்னை வரவேற்று உனக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன், ஆதலால் நீங்கள் என்னுடைய உதவியை புறந்தள்ளி தொடர்ந்து கீழ்ப்படியாமல் உள்ளீர்கள்." "நான்" "என்னுடைய" என்ற வார்த்தைகள் தேவனைக் குறிக்கிறது.

Romans 11

Romans 11:1-3

நான் இன்னும் சொல்லுகிறேன்

பவுலாகிய" நான்" இன்னும் சொல்லுகிறேன்"

தேவன் தம்முடைய மக்களைப் புறந்தள்ளினாரா?

பவுல் இந்த கேள்விகளை தேவனுடைய மக்களாக யூதரல்லாதோரைச் சேர்த்ததினால் ,யூத மக்களின் இருதயம் கடினப்பட்டிருந்தது,அவர்களுக்கு பதில் சொல்லுவதற்காக இக்கேள்விகளைப் பயன்படுத்தினார்.

ஒருபோதும் கூடாது

"அது சாத்தியமில்லை!" அல்லது "நிச்சயமாக இல்லை!" இந்த விளக்கம் நடக்கவிருப்பவைகளை நிச்சயமாக மறுக்கிறது. உங்களுடைய சொந்த மொழியில் இதற்கொத்த மொழிநடை இருந்தால் இங்கு பயன்படுத்தவும். 9:14 ல் எப்படி மொழிபெயர்த்துள்ளீர்கள் என்று பார்க்கவும்.

பென்யமீன் கோத்திரம்

இது பென்யமீன் சந்ததியிலிருந்து வந்த கோத்திரத்தை குறிக்கிறது.இஸ்ரவேல் மக்களிலிருந்து தேவன் பிரித்தெடுத்த 12 கோத்திரங்களில் ஒன்று.

அவர் முன்னறிந்துகொண்ட

"அவர் காலத்திற்கு முன்பே தெரிந்துகொண்டார்"

எலியாவைக்குறித்து சொல்லிய இடத்தில் வேதம் சொல்லுகிறதை அறியீர்களா, இஸ்ரவேலுக்கு விரோதமாக தேவனுடன் எப்படி மன்றாடிக்கொண்டிருக்கிறான் ?

"வேதத்தில் எழுதியுள்ளது என்ன என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியும்.இஸ்ரவேலுக்கு விரோதமாக எலியா தேவனிடம் மன்றாடுவார் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

வேதம் என்ன சொல்லுகிறது

பவுல் வேதத்தில் எழுதியுள்ளவைகளைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் கொலை செய்தார்கள்

இஸ்ரவேல் மக்கள் கொன்றார்கள்

நான் மட்டும் மீதியாய் இருக்கிறேன்

"நான்" என்ற பிரதிபெயர் எலியாவை குறிக்கிறது.

Romans 11:4-5

ஆனால் அவனுக்கு உண்டான தேவ உத்தரவு என்ன

தன்னுடைய வாசகர் அடுத்த கருத்துக்கு செல்லப் பவுல் இக்கேள்வியைப் பயன்படுத்துகிறார்.

தேவ உத்தரவு சொல்லுகிறதென்ன

"தேவன் எப்படி பதிலளிப்பார்"

அவனை

"அவனை" என்ற பிரதிப்பெயர் எலியாவைக் குறிக்கிறது.

ஏழாயிரம் மனிதர்கள்

" 7,000 மனிதர்கள்."

Romans 11:6-8

கிருபையினால்

தேவனுடைய இரக்கம் எப்படி கிரியை செய்கிறது என்று பவுல் தொடர்ந்து விளக்குகிறார். "ஆதலால் இன்னும் தேவனுடைய இரக்கம் கிருபையினாலே செயல்படுகிறது."

அடுத்தது என்ன?

"நாம் எதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்?" மாற்று மொழிபெயர்ப்பு: "இதைதான் நாம் நினைத்துக் கொள்ளவேண்டும்."

கனநித்திரையின் ஆவியையும்,காணாதிருக்கிற கண்களையும்,கேளாதிருக்கிற காதுகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்

ஆவிக்குரியரீதியில் அவர்களுக்கு இருக்கும் மந்தநிலையின் உண்மையை உருவகப்படுத்தி காட்டுகிறது.அவர்களால் ஆவிக்குரிய சத்தியத்தைப் பார்க்கவும் பேசவும் முடியாது.

காணாதிருக்கிற கண்கள்

ஒரு மனிதனுடைய கண்களைப் பார்க்கும் கருத்துருக்கொள்கையானது சமஅளவில் புரிந்துகொள்ளப்பட்டாதாக எண்ணப்பட்டது.

கேளாதிருக்கிற காதுகள்

காதுகளினால் கேட்கும் கருத்துருகொள்கையானது சமஅளவில் கீழ்ப்பட்டிருப்பதாக எண்ணப்பட்டது.

Romans 11:9-10

அவர்களுடைய பந்தி அவர்களுக்கு சுருக்கும் கண்ணியுமாய் இருக்கட்டும்

"பந்தி" என்பது விருந்தினை பிரதிநிதிப்படுத்துகிறது, மேலும் "சுருக்கும்" " கண்ணியும்" தண்டனையைப் பிரதிநிதிப்படுத்துகிறது.

இடறுதலுக்கான கல்

"அவர்களை பாவம் செய்ய தூண்டுவது "

அவர்களுக்கு பதிலுக்கு பதிலளித்தல்

"அவர்களை பழிவாங்க அனுமதி அளிகின்ற காரியம்."

அவர்களுடைய முதுகை எப்பொழுதும் குனியப்பண்ணும்

தன்னுடைய சத்துருக்களை முதுகில் எப்பொழுதும் பாரத்தை சுமக்கிறஅடிமைகளாக்க வேண்டுமென தாவீது தேவனிடம் கேட்கிறான்.

Romans 11:11-12

இப்படியிருக்க,விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள்?

"அவர்கள் பாவம் செய்ததினால் தேவன் அவர்களை நித்தியமாக தள்ளிவிட்டாரோ?"

ஒருபோதும் கூடாது

"அது சாத்தியமில்லை!" அல்லது "நிச்சயமாக இல்லை" இந்த விளக்கம் நடக்கவிருப்பவைகளை நிச்சயமாக மறுக்கிறது.இதே மாதிரியான விளக்கம் உங்களது மொழியிலும்இருக்கலாம்.அதை இங்கே பயன்படுத்தவும் 9:14 ல் எப்படி மொழிபெயர்த்துள்ளீர்கள் என்று பார்க்கவும்.

வைராக்கியத்தை உண்டாக்கு....சந்தேகத்தினாலே

நீங்கள் 10:19 ல் உள்ளபடியே இந்த சொற்றொடரை மொழிபெயர்க்கவும்.

Romans 11:13-14

சந்தேகத்தினால் உண்டாகும் வைராக்கியம்

நீங்கள் 10:19 ல் உள்ளபடியே இந்த சொற்றொடரை மொழிபெயர்க்கவும்.

Romans 11:15-16

அவைகள்

இந்த பிரதிப்பெயர் யூத அவிசுவாசிகளைக் குறிக்கிறது.

இறந்தோரிலிருந்து ஜீவன் உண்டாயிருந்தால் அவர்களுடைய அங்கீகாரம் எப்படியிருக்கும்

"அப்படியானால்,கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கும்போது,தேவன் எப்படி அவர்களை அங்கீகரித்துக் கொள்ளுவார்.மரணத்திலிருந்து ஜீவனை திரும்ப பெற்றதுபோல உள்ளது!"

மேலும்முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாய் இருந்ததால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாய் இருக்கும்

பவுல் பின்வருபவர்களான ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு இஸ்ரவேலரின் முற்பிதாக்கள்,அறுவடை செய்யப்பட்ட முதற்தானியங்கள்,அந்த மனிதர்களின் சந்ததியினரான இஸ்ரவேலர்களைபின்பு அறுவடை செய்யப்பட்ட தானியத்திலிருந்து பிசைந்தமாவுடன் ஒப்பிடுகிறார்.

வேரானது பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்

பவுல் பின்வருபவர்களான ஆபிரகாம்,ஈசாக்கு, யாக்கோபு, இஸ்ரவேலரின் முற்பிதாக்களை மரத்தின் வேருடனும், அந்த மனிதர்களின் சந்ததியினரான இஸ்ரவேலர்களை மரத்தின் கிளைகளுடன் ஒப்பிடுகிறார்.

பரிசுத்தம்

பரிசுத்தமான மக்கள் தேவனுக்குரியவர்கள் மேலும் அவர்களை தேவனுக்கு ஊழியம்செய்யும்படி வேறுபிரித்து அவருக்கு கனத்தை தருவார்கள்.

Romans 11:17-18

பவுல் யூதரல்லாத விசுவாசிகளை ஒரே மனிதனாக பாவித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.

நீயும், காட்டொலிவ மரமும்

"நீ" என்ற பிரதிபெயரும் "காட்டொலிவமரம்" என்ற சொற்றொடரும் இயேசு கிறிஸ்துவின்மூலமாய் இரட்சிப்பைப் பெற்ற யூதரல்லாத மக்களைக் குறிக்கிறது.

அவைகளுக்குள் ஒட்டவைக்கப்பட்டு இருந்தது

" மரத்தில் மீதியிருந்த கிளைகளுடன் இணைக்கப்பட்டு இருந்தது"

ஒலிவமரத்தின் ஆணிவேர்

தேவனுடைய வாக்குத்தத்தம்

அந்த கிளைகளுக்கு விரோதமாக பெருமைபராட்டாதே

"தேவன் புறந்தள்ளின யூதமக்களைக் காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் அல்ல."

நீ வேரைச் சுமக்காமல் ,வேர் உன்னை சுமக்கிறதென்று நினைத்துக்கொள்

"தேவனால் நீங்கள் ஆசீர்வதிக்கபட்டு உள்ளீர்கள்; உங்களால் தேவன் ஆசீர்வதிக்கப்படுவதில்லை"

Romans 11:19-21

பவுல் யூதரல்லாத விசுவாசிகளை ஒரே மனிதனாக பாவித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

கிளைகள் முறித்துபோடப்பட்டுள்ளன

இந்த சொற்றொடர் தேவனால் புறந்தள்ளப்பட்ட யூதமக்களைக் குறிக்கிறது. இதை செய்வினையில் மாற்றலாம்; "தேவன் கிளைகளை முறித்துப்போட்டார்".

நான் ஒட்டவைக்கப்படுவதற்கு

இந்த சொற்றொடர் தேவனை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட யூதரல்லாத விசுவாசிகளைக் குறிக்கிறது.இதை செய்வினையில் மாற்றலாம்: "அவர் என்னில் இணைக்கப்படுவதற்கு"

அவைகள் முறித்துப்போடப்பட்டன

இதை செய்வினையில் மாற்றலாம்: "அவர் அவைகளை முறித்துப்போட்டார்."

அவற்றினுடைய...அவைகள்

"அவற்றினுடைய" மற்றும் "அவைகள்" விசுவாசிக்காத யூதமக்களைக் குறிக்கிறது.

நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்

"உன்னுடைய நம்பிக்கையினால் நீ நிற்கிறாய்."

சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க,உன்னையும் தப்பவிடமாட்டார்

" தேவன் சுபாவக்கிளைகளை மன்னிக்காமலிருக்க ,அவர் உன்னையும் மன்னிக்கமாட்டார்."

சுபாவக் கிளைகள்

இந்த சொற்றொடர் யூத மக்களைக் குறிக்கிறது.

Romans 11:22

பவுல் யூதரல்லாத விசுவாசிகளை ஒரே மனிதனாக பாவித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

தேவனுடைய தயவான செய்கைகளையும் கண்டிப்பையும் பார்

பவுல் யூதரல்லாத விசுவாசிகளுக்கு நினைவுபடுத்திச் சொல்லுகிறது யாதெனில் தேவன் அவர்களுடன் மிகவும் தயவுள்ளவாரக இருந்தாலும் ,அவர்களை நியாயந்தீர்த்து தண்டிக்கத் தயங்கமாட்டார்.

நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய்

"இல்லாவிட்டால் தேவன் உன்னை வெட்டிப்போடுவார்."

Romans 11:23-24

பவுல் யூதரல்லாத விசுவாசிகளை ஒரே மனிதனாக பாவித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராவிட்டால்

"யூதர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க ஆரம்பித்துவிட்டால்"

அவர்கள் மீண்டும் ஒட்டவைக்கப்படுவார்கள்

"தேவன்அவர்களை ஓட்டவைப்பார்"

ஒட்டவைக்கப்படுவது

உயிருள்ள மரக்கிளையை வேறொரு மரக்கிளையுடன் ஒட்டவைத்து இணைப்பது பொதுவான நடைமுறை,அதினால் அந்த புதிய மரத்துடன் சேர்ந்து வளரும்.

சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு ,சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரத்திலே ஓட்டவைக்கப் பட்டிருந்தால், சுபாவக்கிளையாகிய யூதர்கள் தங்கள் சுயஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

பவுல் தேவனுடைய மக்களின் அங்கத்தினர்களை மரத்தின் கிளைகளுடன் ஒப்பிடுகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு: செய்வினையை பயன்படுத்தி மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் உங்களை சுபாவ காட்டொலிவமரத்திலிருந்து வெட்டி,சுபாவ நல்ல ஒலிவமரத்தில் ஒட்டவைத்து ,அவர் இந்த யூதர்களை அவர்களுக்கு சொந்தமான சுபாவக்கிளைகளுடன் ஒட்டவைப்பது அதிக நிச்சயமல்லவா?

அவர்கள்... அவைகள்

அவர்கள் அல்லது அவைகள் என்று வரும் எல்லா சம்பவங்களும் யூதர்களைக் குறிக்கிறது.

Romans 11:25

நான் "நான்" என்ற பிரதிப்பெயர் பவுலை குறிக்கிறது.

நீங்கள்...உங்களையே....உங்களுடைய

"நீங்கள்" மற்றும் "உங்களையே" என்ற பிரதிபெயர்கள் யூதரல்லாத விசுவாசிகளைக் குறிக்கிறது.நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

"இதினால் நீங்கள் உங்களைவிட புத்தியுள்ளவன் நீங்கள்தான் என்று நினைக்காதிருங்கள்." யூத அவிசுவாசிகளைவிட யூதரல்லாத விசுவாசிகள் அதிக புத்தியுள்ளவர்கள் என்று விசுவாசித்தார்கள்.

இஸ்ரவேலரின் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும்

இயேசுவின்மூலம் வரும் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள சில யூதர்கள் மறுத்தனர்.

யூதரல்லாத மக்களின் நிறைவு உண்டாகும்வரைக்கும்

இங்கு "வரைக்கும்"என்ற வார்த்தை யூதரல்லாத மக்கள் அனைவரையும் தேவன் சபைக்கு கொண்டுவந்தபின்பு அநேக யூதர்கள் விசுவாசிப்பார்கள் என்பதை வெளிப்படுத்தி காட்டுகிறது.

Romans 11:26-27

இந்த பிரகாரம் எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள்

இந்த வாக்கியத்தை செய்வினையிலும் சொல்லலாம்: "இப்படி தேவன் எல்லா யூதர்களையும் இரட்சிப்பார்"

எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள்

இது மிகைபடுத்திக்கூறுவதாகும் : அநேக யூதர்கள் இரட்சிக்கபடுவார்கள்.

Romans 11:28-29

ஒருபுறமும் ....மற்றொருபுறமும்

இந்த சொற்றொடர்கள் ஆதாரத்திற்குரிய இரண்டு வெவ்வேறு உண்மைகளை ஒப்பிடப் பயன்படுத்தப்பட்டது.பவுல் இந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தி தேவன் எப்படி யூதர்களை புறந்தள்ளினார் என்று விளக்குகிறார்,ஆனாலும் இன்னும் அவர்கள்மேல் அன்புவைத்துள்ளார்.

உங்கள்நிமித்தம் அவர்கள் வெறுக்கப்பட்டார்கள்

"யூதரல்லாத விசுவாசிகளான உங்களால் தேவன் யூதர்களை வெறுக்கிறார்." யூதரல்லாத மக்களிடம் தேவன் வைத்துள்ள அன்பு உன்னதமானது.யூதர்களின்மேலுள்ள அவரின் அன்பு வெறுக்கப்பட்டதைப்போல் ஒப்பிடப்பட்டுள்ளது

.தேவனுடைய கிருபைவரங்களும்,அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே

"ஆதலால் தேவனுடைய கிருபைவரங்களையும் தேவனுடைய அழைப்பையும் மாற்றமுடியாது.

Romans 11:30-32

நீங்கள் முற்காலத்தில் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள்

"நீங்கள் கடந்த காலத்தில் கீழ்ப்படியவில்லை." "நீங்கள்" என்ற பிரதிபெயர் பன்மையில் யூதரல்லாத விசுவாசிகளைக் குறிக்கிறது.

தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப் போட்டார்

அவருக்கு யாரும் கீழ்ப்படியாமலிருக்கும்படி தேவன் ஏற்படுத்திவிட்டார் என அர்த்தம்கொள்ளலாம். சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தப்பிக்கமுடியாததுபோல: அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே தேவன் ஒவ்வொருவரையும் கைதிகளாக ஏற்படுத்தினார்.

Romans 11:33-34

ஆ! தேவனுடைய ஐஸ்வரியம்,ஞானம்,அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது

"தேவனுடைய அறிவினாலும்,ஞானத்தினாலும் பெறும் அநேக பலன்கள் எவ்வளவு ஆச்சரியமானவைகள்."

அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள்,அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

"அவர் தீர்மானித்துள்ள காரியங்களை எங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை மேலும் அவர் எப்படி எங்களுக்குள் கிரியைகள் செய்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை."

Romans 11:35-36

அவருக்கு

"அவருக்கு" என்ற பிரதிபெயர் 11:35 இல் தேவனுக்கு கொடுக்கும் மனிதனை குறிக்கிறது.

அதினால் அது அவனுக்கு திருப்பித்தரப்படும்

"ஆகவே தேவன் அவனுக்கு திரும்பக் கொடுத்துவிடுவார்."

அவருக்கு

சகல ஆதாரங்களும் "அவருக்கு" 11:36 இல் உள்ளபடி தேவனை குறிக்கிறது.

Romans 12

Romans 12:1-2

அப்படியிருக்க,சகோதரரே,தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறேன்

"உடன் விசுவாசிகளே,ஆதலால் தேவன் உங்களுக்கு கொடுத்த மிகுந்த இரக்கம் அதிகமாக உங்களுக்கு இருக்க விரும்புகிறேன்."

உங்கள் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து

இங்கு பவுல் "சரீரங்கள்" என்ற வார்த்தையை முழுமனிதனைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார். பவுல் தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்களை யூதர்கள் மிருகத்தை கொன்று,பின்பு தேவனுக்கு பலியிடுவதை கிறிஸ்துவ விசுவாசிகளுடன் ஒ,ப்பிடுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு:உங்களை தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுங்கள் ,நீங்கள் உயிரோடு இருக்கும்போதே ஆலய பலிபீடத்தில் தியாகபலியாகவேண்டும்.

பரிசுத்தம்,தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது

இதன் அர்த்தம் 1) நன்நடத்தையில் தூய்மை, "தேவனைப் பிரியப்படுத்துவது" அல்லது 2) தேவனுக்கு மட்டும் அர்ப்பணித்து அவரையேப் பிரியப்படுத்துவதாகும்."

உங்களுடைய ஆவிக்குரிய ஆராதனை

சாதகமான அர்த்தங்களாவன 1) "தேவனை ஆராதிக்க சிந்திக்கும் சரியான வழி" அல்லது 2) "ஆவியில் நீங்கள் எப்படி தேவனை ஆராதிக்கிறீர்கள்."

இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல்

இதை இவ்வாறு அர்த்தம் கொள்ளலாம். 1)" உலகம் நடக்கிறதுபோல் நீங்கள் நடக்ககூடாது". அல்லது 2)" உலகம் செய்கிறதை நினைக்கக்கூடாது."

வேஷம் தரிக்கவேண்டாம்

இதை இவ்வாறு அர்த்தம் கொள்ளலாம் 1 ")நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்று உலகம் சொல்லக்கூடாது." அல்லது "என்னத்தை சிந்திக்க...வேண்டாம்." அல்லது 2) "உலகம் செய்கிறபடி செய்ய உங்களை அனுமதிக்கவேண்டாம்." அல்லது "என்னத்தை சிந்திக்க....வேண்டாம்."

இந்த உலகம்

உலகத்தில் வாழ்கின்ற அவிசுவாசிகள்

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்

இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "ஆதலால் தேவன் நீங்கள் நினைக்கிறவிதத்தை மாற்றுவாராக" அல்லது " ஆதலால் முதலில் நீங்கள் சிந்திக்கும்விதத்திலிருந்து தேவன் நீங்கள் நடக்கும் விதத்தை மாற்றுவாராக."

Romans 12:3

அல்லாமலும்,எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே

இங்கு "கிருபை" தேவன் பவுலை அப்போஸ்தலராகவும் சபைக்கு தலைவராகவும் தெரிந்துகொண்டிருப்பதைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "ஆதலால் தேவன் என்னை தயக்கமின்றி அப்போஸ்தலனாக இருக்கும்படி தெரிந்துகொண்டார்."

உங்களில் யாரானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்

"யாரும் அவர்கள் மற்ற மக்களைவிட சிறந்தவர்களென்று நினைக்கக்கூடாது."

ஆகவே தெளிந்த புத்தியுள்ளவனாக எண்ணவேண்டும்

இதை புதிய வாக்கியத்தில் இவ்வாறு மொழிபெயர்க்கலாம்: " ஆகவே உங்களைப்பற்றி எப்படி நினைக்கிறீகள் என்பதில் தெளிந்த ஞானம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும்."

அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே

"தேவன் உங்களுக்கு விசுவாசத்தின் அளவின்படி கொடுத்துள்ளார். . நீங்கள் சரியாக சிந்திக்க வேண்டும்."

Romans 12:4-5

அதற்காக

கிறிஸ்துவர்கள் மற்ற மக்களைவிட சிறந்தவர்கள் என்று ஏன் நினைக்கக்கூடாது என பவுல் விளக்குகிறார்.

நமக்கு ஒரே சரீரத்தில் அநேக அவயங்கள் இருப்பதுபோல்

கிறிஸ்துவின் அனைத்து விசுவாசிகளையும் சரீரத்தின் வெவ்வேறு உறுப்புகளுடன் பவுல் ஒப்பிடுகிறார்.விசுவாசிகள் வெவ்வேறு வழிகளில் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தாலும் ,கிறிஸ்துவுக்கு சொந்தமான ஒவ்வொருவருக்கும் ஊழியம் செய்வது முக்கியமென்பதை பவுல் வலியுறுத்துகிறார்.

அவயங்கள்

கண்கள்,வயிறு,மற்றும் கைகள் போன்ற பொருட்கள்

மற்றவர்களின் தனிப்பட்ட அவயங்கள்

"ஒவ்வொரு விசுவாசியும் மற்ற விசுவாசியின் அவயங்களாக உள்ளார்கள்." மாற்று மொழிபெயர்ப்பு: "ஒவ்வொரு விசுவாசியும் மற்ற எல்லா விசுவாசிகளுடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளார்கள்."

Romans 12:6-8

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நமக்கு வெவ்வேறு வரங்களும் உண்டு

"அவருக்காக வித்தியாசமானக் காரியங்களை செய்யும் திறமைகளை நம்மனைவருக்கும் தேவன் இலவசமாகத் தந்துள்ளார்."

அவருடைய விசுவாச அளவின்படி நடக்கட்டும்

சாதகமான அர்த்தங்களவன 1) "தேவன் நமக்கு கொடுத்த விசுவாச அளவிற்குட்பட்டு தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் சொல்லட்டும்." அல்லது 2) "நம்முடைய விசுவாச போதனைகள் ஏற்றுக்கொள்ளுகிறபடி அவன் தீர்க்கதரிசனம் சொல்லட்டும்."

பகிர்ந்து கொடுக்கிற வரமுள்ளவன்

இதின் அர்த்தத்தை வெளிப்படுத்தலாம்: "தேவையில் உள்ள மக்களுக்கு பணஉதவிகள் அல்லது மற்ற பொருளுதவிகளை கொடுக்கும் வரங்கள் உடையவன்."

Romans 12:9-10

உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக

மாற்று மொழிபெயர்ப்பு:" பாசாங்கற்ற அன்பு இருக்கட்டும்" அல்லது "உண்மையான அன்பு இருக்கட்டும்"

சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாய் இருங்கள்

அவர்கள் எந்தவித மக்களாக இருக்கவேண்டுமென விசுவாசிகளுக்குச் சொல்வதற்கு,பவுல் 9வித பொருட்கள் அடங்கிய பட்டியலுடன் ஆரம்பிக்கிறார். ஒவ்வொன்றும் "ஒன்றைக்குறித்தும்...நிகழ்வுகளில் " உள்ளதை தருகிறது.நீங்கள் சில பொருட்களை "அதைக்குறித்து...செய்...." என்று மொழிபெயர்க்கவேண்டியதாயிருக்கும்.12:13 க்கு அந்த பட்டியல் சொல்லுகிறது.

சகோதர சிநேகத்திலே

"உங்களுடைய சகவிசுவாசிகளின்மேல் எப்படி நீங்கள் அன்புவைத்துள்ளீர்கள்"

பட்சமாய் இருங்கள்

மாற்று மொழிபெயர்ப்பு: குடும்பஉறுப்பினர்களைப் போல "உண்மையுள்ளவர்களாக இருங்கள்."

ஒருவருக்கொருவர் கனம்,மதிப்பு கொடுப்பதிலும்

" ஒருவருக்கொருவர் கனமும் மதிப்பும்" அல்லது, புதிய வாக்கியத்தை பயன்படுத்துவது,"உன்னுடைய சகவிசுவாசிகளை எப்படி கனப்படுத்தி அவர்களுக்கு மதிப்பு கொடுப்பாய்."

Romans 12:11-13

அவர்கள் எவ்வித மக்களாக இருக்கவேண்டுமென்று விசுவாசிகளுக்கு பவுல் தொடர்ந்து சொல்லுகிறார். இந்த பட்டியல் 12:9 இல் ஆரம்பிக்கிறது.

அசதியாய் இல்லாமல் கவனமாயிருங்கள்; ஆவியிலே அனலாய் இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

"உங்களுடைய வேலையில் சோம்பேறியாக இருக்ககூடாது, ஆனால் ஆவியை பின்பற்ற வாஞ்சையாயிருந்து கர்த்தருக்கு ஊழியம்செய்யுங்கள்."

நம்பிக்கையிலே சந்தோஷமாய் இருங்கள்

"நம்முடைய நம்பிக்கை தேவனிடம் உள்ளதால் மகிழ்ச்சியாய் இருங்கள்"

உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "பாடுகள் நிறைந்த காலங்கள் வரும்போது பொறுமையாய் இரு"

ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "இடைவிடாமல் ஜெபிக்க நினைத்துக்கொள்ளுங்கள்."

பரிசுத்தவான்களின் குறைவில் உதவிசெய்யுங்கள்

12:9 இல் ஆரம்பித்த பட்டியலின் இறுதிபொருளிது. "பரிசுத்தவான்களின் தேவைகளில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்" அல்லது "அதற்காக" அல்லது "சக கிறிஸ்துவர்கள் துன்பத்தில் இருக்கும்போது,அவர்களுடைய தேவைகளில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்."

உபசரிக்க உங்களையே தாருங்கள்

"எங்காவது அவர்களுக்கு தங்கவேண்டியநிலை ஏற்பட்டால் உங்களது வீட்டிற்கு வரவழைத்து உபசரியுங்கள்"

Romans 12:14-16

ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாக இருங்கள்

மாற்று மொழிபெயர்ப்புகள்: "ஒருவர் மற்றவருடன் ஒத்துப்போவது" அல்லது "மற்றவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வது"

மேட்டிமையானவைகளைச் சிந்திக்காதே

"மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம்."

தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

"தகுதியில்லாத மக்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்"

உங்களையே புத்திமான்களென்று எண்ணவேண்டாம்

"மற்றவர்களைவிட உங்களுக்கு அதிக அறிவு இருக்கிறதென்று நினைக்கவேண்டாம்."

Romans 12:17-18

12:17

12:21 இல் ,அவர்களுக்கு தீமை செய்தவர்களை அவர்கள் எவ்வாறு கையாளவேண்டுமென்று பவுல் சொல்லுகிறார்.

தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்

"உங்களுக்கு தீமையான காரியங்களைச் செய்தவர்களுக்கு நீங்கள் தீமையான காரியங்களைச் செய்யாதிருங்கள்."

எல்லா மனிதர்களுக்கும் முன்பாக நல்ல காரியங்களைச் செய்யுங்கள்

"எல்லோராலும் நல்லதென்று நினைக்கப்படுவதையே செய்யுங்கள்."

கூடுமானால் உங்களான மட்டும் எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள்

" அனைவரோடும் சமாதானமாய் வாழ உங்களால் என்னசெய்யமுடியுமோ அதையே செய்யுங்கள்."

கூடுமானால் உங்களால் ஆனமட்டும்

" உங்களைக் , கட்டுப்படுத்தி ,பொறுப்புணர்வு உள்ளவர்களாக்க"

Romans 12:19-21

அவர்களுக்கு தீமை செய்தவர்களை அவர்கள் எவ்வாறு கையாளவேண்டுமென்று தொடர்ந்து பவுல் சொல்லுகிறார்.இந்த பகுதி 12:17 இல் ஆரம்பிக்கிறது.

பழிவாங்குதல் எனக்குரியது,நானே பதிற்செய்வேன்

இந்த சொற்றொடர்கள் அடிப்படையில் ஒரே கருத்துடையது மேலும் வலியுறுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்று மொழிபெயர்ப்பு: "நான் நிச்சயமாக உன்னைப் பழிவாங்குவேன்."

உன் சத்துரு...அவனுக்கு போஜனங்கொடு...அவனுக்கு பானம்கொடு...நீ இப்படி செய்வதினால், நீ குவிப்பாய்...நீ தீமையினாலே வெல்லப்படாமல்,தீமையை நன்மையினாலே வெல்லு.

"உன்" மற்றும் "நீ" என்ற எல்லா வடிவமைப்புகளும் ஒரு நபரைப்பற்றி சொல்ல பயன்படுத்தப்பட்டது.

ஆதலால் உன் சத்துரு பசியாயிருந்தால் ...அவன் தலை

12:20 இல் வேறொரு வேதப்பகுதியை மேற்கோள்காட்டுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "ஆகவே இதுவும் எழுதியிருக்கிறபடியால், உன் சத்துரு பசியாயிருந்தால்....அவன் தலை,"

அவனைப் போஷி

"அவனுக்கு உணவு கொடு"

அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்

சத்துருக்கள் தண்டனைபெறுவதை அவர்களின் தலையின்மேல் அக்கினித்தழல்கள் தொடர்ந்து ஊற்றப்படுவதுடன் பவுல் ஒப்பிடுகிறார். சாதகமான அர்த்தங்களாவன 1) "உங்களை அவன் எப்படி கொடுமைப்படுத்தினான் என்பதைப் பற்றி உணர்த்த மிகவும் தீங்கனுபவித்த மனிதனை ஏற்படுத்து." அல்லது "உன் சத்துருவை மிகவும் மோசமாக நியாயம் தீர்க்கப்படுவதற்கான காரணத்தை தேவனுக்கு கொடுக்கவேண்டும்."

தீமையினாலே வெல்லப்படாமல்,தீமையை நன்மையினாலே வெல்லு

பவுல் "தீமையை"உயிருள்ளதாக பாவித்து சித்தரிக்கிறார்.இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "தீயவர்கள் உங்களைத் தோற்கடிக்காமல் ஆதலால் நன்மையானதைச் செய்து தீமை செய்கிறவர்களைத் தோற்கடிக்கவும்."

Romans 13

Romans 13:1-5

எந்த மனிதனும் கீழ்ப்படிய

"எல்லா கிறிஸ்துவர்களும் கீழ்ப்படியவேண்டும்" அல்லது "அனைவரும் கீழ்ப்படியவேண்டும்"

மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு

"அரசாங்க அதிகாரிகள்"

அதற்காக

"ஆதலால்"

உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது

"அதிகாரத்தில் உள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள் ஏனெனில் தேவன் அவர்களை அங்கு வைத்துள்ளார்.

அந்த அதிகாரம்

"அந்த அரசாங்கத்தின் அதிகாரம்."

எதிர்ப்பவர்கள்

"அரசாங்கத்தின் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள்"

Romans 13:6-7

இதற்காகவே

" ஆதலால் தீமைசெய்கிறவர்களை அரசாங்கம் தண்டிக்கிறது"

நீங்கள்.... வரியை அனைவருக்கும் செலுத்துங்கள்

இதை பவுல் விசுவாசிகளுக்கு சொல்லுகிறார்.

அதற்காக

"இதற்காக தான் நீங்கள் வரிகளை செலுத்தவேண்டும்.

ஆஜராகு

"நிர்வாகம் செய்" அல்லது "வேலை செய்"

சுங்கம்

கலால் வரி

Romans 13:8-10

ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்

"நீங்கள் அரசாங்கத்திடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்றக் கடனை திருப்பி தந்துவிடுங்கள்." பவுல் விசுவாசிகளுக்கு எழுதுகிறார்.

தவிர

புதிய வாக்கியம்: "மற்ற கிறிஸ்துவர்கள் மேல் அன்புவைத்திருப்பது ஒரு கடன்,இந்த கடனை மட்டும் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம்"

அதற்காக, "உன்னால் முடியாது...".தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அன்பு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை இப்போது பவுல் அதற்காக காண்பிக்கிறார்.

அதற்காக,உன்னால் முடியாது...."

13:9இல் வரும் எல்லா ஆதாரங்களும் ஒருமையில் சொல்லப்பட்டுள்ளன,ஒருமனிதன் மட்டும் இருப்பதாக பாவித்து மக்கள் கூட்டத்தில் செய்தியைச் சொன்னவர் பேசிக்கொண்டிருக்கிறார்.அதினால் நீங்கள் இங்கு பன்மை வடிவமைப்புகளைப் பயன்படுத்தாலாம்.

இச்சியாதிருப்பாயாக

பெற்றுக்கொள்ள ஆசைப்படுவது, அல்லது தன்னிடம் இல்லாததை அடைய விரும்புவது, உள்ளதிலிருந்து அல்லது பெற்று தனக்கு உடைமையாக்கி கொள்ளுதல்

அன்பு பொல்லாங்கு செய்யாது

"இந்த சொற்றொடர் வருணனையின் மூலம் அன்பானது மனிதனாகி மற்ற மக்களுக்கு இரக்கம் காட்டுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "அயலாகத்தரை நேசிக்கும் மக்கள் அவர்களுக்கு பொல்லாங்கு செய்யமாட்டார்கள்."

ஆகையால்

எனவே அன்பானது பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது."

Romans 13:11-12

இரவு கடந்துவிட்டது

தற்போதைய பாவவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

பகல் சமீபமானது

"கிறிஸ்து சீக்கிரமாய் திரும்பிவருவார்."

அந்தகாரத்தின் கிரியைகள்

இரவு நேரத்தில் அக்கிரமச் செயல்களைச் செய்யவிரும்புகின்றனர்,யாரும் அவர்களைப் பார்க்கமுடியாது

ஒளியின் ஆயுதங்களை தரித்துக்கொள்ளக்கடவோம்

" நம்மை பாதுகாக்க தேவனை நாம் அனுமதிக்கவேண்டும்.அதினால் அந்த கிரியைகளைச் செய்வதினால், நாங்கள் செய்கிறதை மக்கள் பார்க்க விரும்புகிறோம்."

Romans 13:13-14

நாம்

பவுல் தன்னுடைய வாசகர்களையும் மற்ற விசுவாசிகளோடு தன்னையும் சேர்த்துகொள்ளுகிறார்.

பகலில் நடக்கிறதைப் போல்

"பார்க்கக்கூடிய விதத்தில்" "எல்லோரும் நம்மை பார்த்துத் தெரிந்துகொள்ளுவதற்கு"

கலவரம்

“மற்ற ஜனங்களுக்கு எதிராக சதிசெய்து வாதாடுதல்”

பொறாமை

"மற்ற மனிதர்களுடைய வெற்றிக்கு விரோதமான எதிர்மறையான உணர்ச்சிகள் அல்லது மற்றவர்கள் மேலுள்ள அனுகூலம்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்

ஜனங்கள் பார்க்கும்வண்ணமாக கிறிஸ்து நமது வெளிப்புற ஆடையாக இருந்தாரேயாகில் அவருடைய நல்ல குணாதிசயங்களை ஏற்றுக்கொள்வதே இதின் அர்த்தம்.

தரித்துக்கொள்

கட்டளைகளுக்கு உங்களது மொழியில் பன்மை வடிவமைப்பு இருந்தால் இங்கு பயன்படுத்தவும்.

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமல்

"உங்களது பழைய தீய இருதயத்திற்கு எவ்வித வாய்ப்பும் அக்கிரமக் கிரியைகள் செய்ய அனுமதியளிக்காதீர்கள்"

Romans 14

Romans 14:1-2

பவுல் விசுவாசிகள் சரியான வாழ்கை வாழ தொடர்ந்து போதித்துக்கொண்டு இருக்கிறார்.

விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்

சில பொருட்களைச் சாப்பிடுவதையும் குடிப்பதையும் குற்றமாக நினைப்பவர்களைக் குறிக்கிறது.

இவ்வித கேள்விகளுக்கு இன்னும் தீர்ப்பு கொடுக்கப்படவில்லை

"ஆதலால் அவர்களோடு அவைகளைப்பற்றி தர்க்கம்பண்ணவேண்டாம்."

ஒருவன் எந்த பதார்த்தத்தையும் புசிக்கலாம் என்று நம்புகிறான், ஆனால் மறுபுறம்

"ஒருபுறம்" மற்றும் "மறுபுறம்" என்ற சொற்றொடர்கள் இரண்டு வெவ்வேறு விதங்களில் சிலவற்றைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதை அறிமுகம் செய்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: " ஒருமனிதனுக்கு எதையும் சாப்பிடுவதற்கான விசுவாசமுள்ளது, ஆனால்"

Romans 14:3-4

பவுல் விசுவாசிகள் சரியான வாழ்கை வாழ தொடர்ந்து போதித்துக்கொண்டு இருக்கிறார்.

மற்றவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாய் தீர்க்கிறதற்கு நீ யார்?

மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்கிறவர்களுடன் தர்க்கம்பண்ண பவுல் இக்கேள்வியை பயன்படுத்துகிறார்.மாற்று மொழிபெயர்ப்பு: "நீ தேவனல்ல,அவனுடைய வேலைக்காரர்களில் யாரையும் குற்றவாளியாய் தீர்க்க உனக்கு அனுமதியில்லை."

நீ ,உன்

ஒருமை

அவனுடைய எஜமானுக்கு முன் விழுந்தாலும் நின்றாலும்

மாற்று மொழிபெயர்ப்பு: "வேலைக்காரனை ஏற்றுக்கொள்வதோ ,வேண்டாமா என்று அவனுடைய எஜமானால் மட்டுமே தீர்மானம் பண்ணமுடியும்."

அவன் நிலைநிறுத்தபடுவான்,தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே

இதை செய்வினைச் சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்:" எனவே கர்த்தர் அவனை ஏற்றுக்கொள்ளுவார்,ஏனென்றால் அவர் வேலைக்காரனை ஏற்றுக்கொள்ளகூடியவனாக உருவாக்கினார்."

Romans 14:5-6

அன்றியும்,ஒருபுறம் ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் மதிப்புள்ளதாய் கணக்கிடுகிறான்: மறுபுறம் வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாய் கணக்கிடுகிறான்

"ஒருபுறம்" மற்றும் "மறுபுறம்" என்ற சொற்றொடர்கள் இரண்டு வெவ்வேறு விதங்களில் சிலவற்றை நினைப்பதற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "அன்றியும் ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விஷேசமாக எண்ணுகிறான்: வேறாருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்."

அவனவன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாய் இருக்ககடவன்

இதின் முழுஅர்த்தத்தை வெளிப்படுத்தலாம்:"ஒவ்வொருவரும் செய்கின்ற செயல்கள் நிச்சயமாக தேவனைக் கனப்படுத்தும்."

நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் ; கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்

"ஒருவன் குறிப்பிட்ட நாளில் ஆராதனை செய்கிறது கர்த்தரை கனப்படுத்துமா"

புசிக்கிறவன் , கர்த்தருக்கென்று புசிக்கிறான்

"மனிதன் சாப்பிடுகிற எல்லாவித உணவுப்பொருட்களும் கர்த்தரைக் கனம்படுத்துமா"

புசியாதிருக்கிறவன், கர்த்தருக்கென்று புசியாதிருப்பான்

"மனிதன் சாப்பிடாத எவ்வித உணவுப்பொருட்களும் கர்த்தரைக் கனப்படுத்துமா"

Romans 14:7-9

நம்மில்...நாம்

பவுல் வாசகர்களைச் சேர்த்துக்கொள்ளுகிறார்.

மரணமடைந்தவர்களும் பிழைக்கிறவர்களும்

மாற்று மொழிபெயர்ப்பு: இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும்."

Romans 14:10-11

பவுல் விசுவாசிகள் சரியான வாழ்கை வாழ தொடர்ந்து போதித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படியிருக்க நீ குற்றவாளியென்று தீர்க்கிறது என்ன? நீ அற்பமாய் எண்ணுகிறதென்ன?

தன்னுடைய வாசகர்கள் மத்தியில் தனிப்பட்டவர்களுடன் எப்படி தர்க்கம்பண்ணவேண்டுமென்பதை பவுல் செயல்விளக்கப்படுத்திக் காட்டுகிறார். மாற்று மொழிபெயர்ப்புகள்:"நியாயம்தீர்க்கிறது தவறானது...அவர்களை அற்பமாய் நினைப்பதும் உங்களுக்குத் தவறானது நம்மில்...நாம்

பவுல் வாசகர்களைச் சேர்த்துக்கொள்ளுகிறார். ரணமடைந்தவர்களும் பிழைக்கிறவர்களும்

மாற்று மொழிபெயர்ப்பு: இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும்."

நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

"நியாயாசனம்" நியாயம் தீர்க்கும் தேவனின் அதிகாரத்தைக் குறிக்கிறது." மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் நம் எல்லோரையும் நியாயம் தீர்ப்பார்."

ஜீவனைக்கொண்டு

இந்த சொற்றொடர் பிரமாணத்தையும் உறுதிசாசன வாக்குத்தத்தம் ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் நிச்சயமாக ,அது உண்மையானது."

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவுயாவும் தேவனுக்கு துதியை செலுத்தும்.

பவுல் "முழங்கால்" மற்றும் "நாவு" பூரண மனிதனைக் குறிக்கிறது. அத்துடன் கர்த்தர் "தேவன்" என்ற வார்த்தையை அவரையே குறிக்க பயன்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "ஒவ்வொரு மனிதனும் வணங்கி எனக்கு துதியை செலுத்துகிறார்கள்."

Romans 14:12-13

தன்னைக்குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிப்பான்

"நம்முடைய செய்கைகளை தேவனுக்கு முன்பாக விளக்கவேண்டும்"

ஒருவனும் முன்பாக தடுக்கலையும் இடறலையும் போடக்கூடாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்

இங்கு ''தடுக்கல்" மற்றும் "இடறல்" அடிப்படையில் ஒன்று தான்.மாற்று மொழிபெயர்ப்பு: "அதற்குபதிலாக நோக்கத்தை உண்டுபண்ணி எதையும் செய்யவேண்டாம். அல்லது எதையாவதை சொல்லுங்கள் அது சகவிசுவாசிக்குள் விளைவை ஏற்படுத்தி பாவம் செய்ய ஆரம்பித்துவிடுவார்.

Romans 14:14-15

கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்

" நான் உறுதியாக உள்ளேன். ஏனென்றால் என்னுடைய ஐக்கியம் கர்த்தராகிய இயேசுவோடு இருக்கிறது.

ஒரு பொருளைத் தீட்டுள்ளது என்று சொல்லுகிறவன் யாரோ, அது அவனுக்கு தீட்டுள்ளதாக இருக்கும்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்:"ஆதலால் மனிதன் சிலவற்றை தீட்டுள்ளதென நினைத்தால்,அது அவனுக்கு தீட்டுள்ளதாக இருக்கும்,அவன் அதைவிட்டு விலகியிருக்கவேண்டும்."

உணவினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டானால்

" உன்னுடைய சகவிசுவாசியின் நம்பிக்கையை உணவு பழக்கத்தினால் விசனம் உண்டாக்கினால் ." இங்கு "உன்னுடைய" என்ற வார்த்தை விசுவாசத்தில் உறுதியையும் மற்றும் "சகோதரன்" விசுவாசத்தில் பலவீனமுள்ளதையும் குறிக்கிறது.

நீ அன்பாய் நடக்கிறவன் அல்ல

"அப்படியென்றால் நீங்கள் ஒருபோதும் அன்பாக இருக்கமாட்டீர்கள்."

Romans 14:16-17

உங்களுடைய நன்மையான செயல்களால் அவர்கள் துஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

மாற்று மொழிபெயர்ப்பு : "அங்குள்ள மக்கள் அது அவர்களுக்கு தீமையானது என்று சொன்னால்,உங்களது பார்வையில் அது அவர்களுக்கு நன்மையானதாய் இருந்தாலும்,அந்தக் காரியங்களை செய்யவேண்டாம்."

உங்களுடைய நல்ல செயல்கள்

விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற மக்களின் செயல்களைக் குறிக்கிறது.

மக்கள்

இந்த அமைப்பில், மற்ற விசுவாசிகளைக் குறிக்கிறது.

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல,அது நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோசமுமாய் இருக்கிறது

"தேவனுடைய ராஜ்யத்தை புசித்துக் குடித்து ஆளுகை செய்ய அவர் நிறுவவில்லை.அவரோடு நல்ல உறவு இருக்கவும் மேலும் பரிசுத்த ஆவியின் மூலம் பெறுகின்ற சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெறவுமே நிறுவினார்."

Romans 14:18-19

இவைகளில் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன்

"கிறிஸ்துவுக்கு இந்த விதத்தில் ஊழியம் செய்கிறது."

மக்களால் அங்கீகரிக்கப்பட்டது

இதை செய்வினைச்சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்: "அவருடையதை மக்கள் அங்கீகரிப்பார்கள்" அல்லது "மக்கள் அவரை மதிப்பார்கள்"

ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும்,ஒருவருவரோடு நட்புறவை வைத்துக்கொள்ளவும் நாடுவோம்

" சமாதானமாக வாழவும்,ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாக வாழவும் நாடக்கடவோம்"

Romans 14:20-21

மாம்சம் புசிக்கிறதும்,மதுபானம் குடிக்கிறதும்,வேறுஎதைச் செய்தாலும் , உன்னுடைய சகோதரருக்கு குற்றமாக காணப்பட்டால்

"உன்னுடைய சக சகோதரன் பாவம்செய்வதை தடுக்க மாம்சம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும், அல்லது இடறுதலுக்கான செயல் எதையும் செய்யாமலிருப்பது நல்லது.

Romans 14:22-23

உங்களிடம் இருக்கும் இந்த குறிப்பிட்ட நம்பிக்கைகள்

இது மீண்டும் உணவைக்குறித்தும்,குடிப்பதைக்குறித்தும் முந்தைய வசனத்தில் சொல்லபட்டுள்ளதையும் குறிக்கிறது.

நீ...உன்....உன்னுடைய

ஒருமை.ஆகவே பவுல் விசுவாசிகளோடு பேசிக்கொண்டுள்ளார். இதைப் பன்மையிலும் மொழிபெயர்க்கலாம்.

நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்

"தாங்கள் செய்ய தீர்மானித்ததில் குற்ற உணர்வு இல்லாதவர்கள் பாக்கியவான்கள்"

ஒருவன் சந்தேகத்தோடு புசித்தால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான்

இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்:"சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள் என்று சரியாக தெரியாமல் , ஒருவன் சரியானது என நினைத்து சாப்பிட்டுவிட்டால் தேவன் அவனைத் தவறு செய்தவனாகப் பார்க்கிறார்.அல்லது "சாப்பிடகூடாத உணவுப்பொருட்கள் என்று சரியாகத் தெரியாமல்,ஒருவன் சரியானது என்று நினைத்து சாப்பிட்டுவிட்டால் அவனுடைய மனசாட்சி உறுத்திக்கொண்டேயிருக்கும்

ஏனெனில் இது விசுவாசத்தினால் வராதது.

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்:" அவன் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னதை விசுவாசித்திருந்தும்,அவன் சிலவற்றைச் சாப்பிட்டதால் தேவன் அவனை தவறு செய்துவிட்டான் என்று சொல்லுகிறார்."

விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே

"நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ,அதை நீங்கள் செய்யாத பொழுது பாவம் செய்கிறீர்கள்."

Romans 15

Romans 15:1-2

இப்பொழுது

இந்த வார்த்தைகளை உங்களுடைய மொழியில் மொழிபெயர்த்து பயன்படுத்தும்போது இது புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தி தர்க்கத்துக்கு வழிவகுக்கும்.

பலமுள்ளவர்கள்

"நாங்கள் விசுவாசத்தில் பலமுள்ளவர்கள் " "நாம்" என்ற பிரதிப்பெயர் பவுலையும்,அவருடைய வாசகர்களையும், மற்ற விசுவாசிளையும் குறிக்கிறது.

பலவீனமுள்ளவர்கள்

"விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்கள்"

அவனைப் பலப்படுத்த

"அவனுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த"

Romans 15:3-4

உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என் மேல்விழுந்தது

"தேவனை நிந்திக்கும் நிந்தைகள் கிறிஸ்துவின்மேல் விழுந்தது."

முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது

"கடந்த காலத்தில் வேதத்தில் எழுதியுள்ளவைகள் எல்லாம் நமக்கு தகவல் தருவதற்காக எழுதப்பட்டதுள்ளது."

நாம்...நமக்கு

பவுல் தம்முடைய வாசகர்களையும் மற்ற விசுவாசிகளையும் சேர்த்துச் சொல்லுகிறார்.

Romans 15:5-7

ஒருவேளை இயலக்கூடிய...தேவன்...அளிக்கும்

மாற்று மொழிபெயர்ப்பு: "நான் ஜெபிக்கிறேன்...தேவன்...அளிப்பார்"

ஒருவருக்கொருவர் ஒரே சிந்தையாய் இருப்பது

"ஒருவருக்கொருவர் ஒப்பந்தத்தில் இருப்பது" அல்லது "ஒற்றுமையாய் இருப்பது"

ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு

மாற்று மொழிபெயர்ப்பு: "ஒரே வாயினால் பேசுவதுபோல் இணைந்து மகிமைப்படுத்துவது"

Romans 15:8-9

அதற்காக நான் சொல்லுகிறேன்

"நான்" என்பது பவுலைக் குறிக்கிறது.

கிறிஸ்து விருத்தசேதனத்தின் ஊழியக்காரனாக்கபட்டார்

"இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு உதவிசெய்யும்படி வந்தார்."

பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு

"யூதர்களின் முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த வாக்குதத்தத்தை தேவன் உறுதியாக்குவதற்கு"

எழுதியிருக்கிறபடி

"வேதத்தில் எழுதப்பட்டுள்ளது"

யூதரல்லாத மக்களுக்கு

" யூதரல்லாத மக்களுக்கு கிறிஸ்து ஊழியக்காரனாக்கப்பட்டார்.

Romans 15:10-11

மீண்டும் அவர் சொல்கிறார்

"மீண்டும் மோசே சொல்கிறார்"

அவருடைய மக்களுக்கு

"தேவனுடைய மக்களுடன்"

அவரை ஸ்தோத்தரி

"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"

Romans 15:12

ஈசாயின் வேர்

மாற்று மொழிபெயர்ப்பு:"ஈசாயின் வம்சம்" சரீரத்தின்படி ஈசாய் தாவீது ராஜாவின் தகப்பன்.

Romans 15:13

எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக

"மிகுந்த சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு

"உங்களுக்கு நம்பிக்கை நிரம்பிவழியும்படி"

Romans 15:14

சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்கள்

"தேவனைப் பின்பற்றுவதற்குரிய போதிய அறிவினால் நிரப்பப்பட்டது"

Romans 15:15-16

தேவன் எனக்களித்த வரத்தின்படியே

"தேவன் எனக்கு அருளிய வரம்" அவனுடைய மனமாற்றத்திற்கு முன்பு அவன் கிறிஸ்துவர்களை துன்புறுத்தியும் கூட அவன் அபோஸ்தலனாக நியமிக்கப்பட்டதற்கதான வரம்.

அந்நியர்களுடைய காணிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறியிருக்கலாம்

“அன்னியர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபோது தேவன் அவர்களில் பிரியப்பட்டிருக்கலாம்”

Romans 15:17-19

ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக் குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைப்பாராட்ட எனக்கு இடமுண்டு.

"ஆதலால் தேவன் எனக்கு தந்த அவருடைய ஊழியத்தினால் கிறிஸ்து இயேசுவைப்பற்றி மேன்மைபாராட்டுவதற்கான காரணமெனக்குண்டு."

யூதரல்லாத மக்களை வார்த்தையினாலும்,செய்கையினாலும்,கீழ்ப்படியப்செய்யும்படிக்கு, அற்புத அடையாளாங்களின் பலத்தினாலும்,தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை

".என் வார்த்தைகளிலும்,செய்கைகளிலும்,அடையாளத்தின் வல்லைமையிலும்,பரிசுத்த ஆவியானவர் மூலம் நடக்கும் அற்புதங்களாலும் யூதரல்லாத மக்கள் கீழ்ப்படிவதற்காக,கிறிஸ்து என் மூலம் நிறைவேற்றினவைகளை மட்டும் பேசுகிறேன்

இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும்

எருசலேம் பட்டணத்திலிருந்து இல்லிரிக்கம் தேசத்திற்குள் சென்று இத்தாலிய பிராந்தியத்தில் முடிவடைகிறது.

Romans 15:20-21

மேலும் இவ்விதத்தில் கிறிஸ்துவின் நாமத்தை அறியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க நான் வாஞ்சையாய் இருக்கிறேன்

மாற்று மொழிபெயர்ப்பு: " ஆகவே நற்செய்தியை அறிவிக்கப்படாத இடங்களில் பிரசங்கம் செய்ய நான் வாஞ்சையாய் இருக்கிறேன்."

அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் வந்தார்கள்

"அவரைப்பற்றி அவர்களுக்கு யாரும் சொல்லவில்லை"

Romans 15:22-23

நான் தடைபட்டேன்

பவுலை தடை செய்தது யார் என்பது முக்கியமில்லை.மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் என்னைத் தடை செய்தார்கள்" அல்லது "என்னை மக்கள் தடை செய்தார்கள்."

Romans 15:24-25

வழியாக

நான் ரோமாபுரி வழியாக செல்லும்போது" அல்லது "நான் பயணத்தில் இருக்கும்போது"

உங்களிடத்தில் வந்து திருப்தியடைந்து

"உங்களோடு காலத்தைச் செலவழித்து" அல்லது "உங்களைச் சந்திப்பதில் சந்தோஷப்பட்டு"

ஸ்பானியா

மொழிபெயர்ப்பு பெயர்களையும்,தெரியாதவைகளை மொழியாக்கத்தையும் பார்க்கவும்.

Romans 15:26-27

இப்படி செய்வது நல்லதென்று எண்ணினார்கள்

மாற்று மொழிபெயர்ப்பு: "மக்கெதொனியாவிலும் அகாயாவிலும் உள்ள விசுவாசிகள் இதைச் செய்வதற்குப் பிரியமாய் இருந்தார்கள்" அல்லது "செய்வதில் சந்தோஷப்பட்டார்கள்"

உண்மையில், அவர்கள் அவர்களுடைய கடனாளிகள்

" உண்மையில் மக்கெதொனியாவிலும் அகாயாவிலும் உள்ள மக்கள் எருசலேமில் உள்ளவர்களுக்குக் கடனாளியுமாய் இருக்கிறார்கள்."

எப்படியென்றால் யூதரல்லாத மக்கள் ஆவிக்குரியக் காரியங்களைப் பகிர்ந்துகொண்டு,அவர்களுக்கும் கடனாளியாக இருப்பதினால் ,அவர்களுக்கும் ஊழியம் செய்யவேண்டும்.

யூதரல்லாத மக்களும் தங்களுடைய ஆவிக்குரிய காரியங்களை எருசலேம் விசுவாசிகளுக்கு பகிர்ந்துகொண்டதால் ,எருசலேம் விசுவாசிகளுக்கு யூதரல்லாத மக்களும் கடன்பட்டிருகிறார்கள்.

Romans 15:28-29

உறுதிப்படுத்து

"பாதுகாப்பாகப் பட்டுவாடா செய்யப்பட்டது"

பலன்

பணம்

கிறிஸ்துவினுடைய பூரண ஆசீர்வாதத்தோடே வருவேன்

மாற்று மொழிபெயர்ப்பு: " நான் கிறிஸ்துவுடைய முழு ஆசீர்வாதத்துடன் வருவேன்."

Romans 15:30-32

இப்பொழுது

பவுல் நல்ல காரியங்களைப் பற்றி பேசுவதை அவர் நம்பிக்கையாயிருந்த (15:29)படி நிறுத்திக்கொண்டார். மேலும் அவர் இப்பொழுது சந்திக்கின்ற ஆபத்துகளைப் பற்றி பேசுகிறார்.உங்களது மொழியில் இதை விவரிக்கலாம்.

நான் வேண்டிக்கொள்கிறேன்

"நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்."

கடும்முயற்சி

"கடினமாக உழை" அல்லது "போராடு"

காப்பாற்றப்பட்டது

"இரட்சிக்கப்பட்டது" அல்லது "பாதுகாக்கப்பட்டது"

Romans 15:33

Romans 16

Romans 16:1-2

பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளைப் பெயர்சொல்லி வாழ்த்துகள் சொல்லுகிறார்.

நான் பெபேயாளுக்கு வாழ்த்து சொல்லுகிறேன்

"நான் உனக்கு மதிப்பளிக்க விரும்புகிறேன் பெபேயாளே"

பெபேயாள்

பெண்ணின் பெயர்

நம்முடைய சகோதரி

"கிறிஸ்துவுக்குள் நம்முடைய சகோதரி" இங்கு "நம்முடைய" என்பது பவுலையும் அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது.

கெங்கிரேயா

கிரேக்கு தேசத்தில் உள்ள துறைமுகப் பட்டணம்

கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்

"நாமனைவரும் கர்த்தருக்கு சொந்தமானதினால் அவளுக்கு வரவேற்பு அளியுங்கள்"

பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி

"விசுவாசிகளுக்கு வரவேற்பு அளிப்பதுபோலவே மற்ற விசுவாசிகளுக்கும் செய்யுங்கள்"

அவளுடைய தேவைகளுக்கு உதவிசெய்யுங்கள்

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "நீங்களும் அவளுக்கு உதவி செய்யவேண்டுமென விரும்புகிறேன்."

அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாய் இருந்தவள்

"அநேகருக்கு உதவி செய்திருக்கிறாள்,எனக்கும் செய்திருக்கிறாள்.

Romans 16:3-5

பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளை பெயர்சொல்லி வாழ்த்துக்கள் சொல்லுகிறார்.

பிரிஸ்கா, ஆக்கில்லா

பிரிஸ்காவை பிரிஸ்கில்லா என்றும் அழைப்பார்கள்.இவர் ஆக்கில்லாவின் மனைவி.

கிறிஸ்து இயேசுவுக்குள் உடன் வேலையாட்கள்

"கிறிஸ்து இயேசுவைப் பற்றி மக்களுக்கு சொல்ல என்னுடன் ஊழியம் செய்கிறவர்கள்"

அவருடைய வீட்டிலே கூடிவருகிற சபையும் வாழ்த்துங்கள்

"ஆராதனை செய்ய அவர்களுடைய கூடிவருகிற விசுவாசிகளையும் வாழ்த்துங்கள்"

எப்பனேத்

ஒரு மனிதனுடைய பெயர்

ஆசியாவின் முதற்பலன்

"எப்பனேத் என்பவன் ஆசியாவிலே முதலில் இயேசுவை விசுவாசித்தவன்

Romans 16:6-8

பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளைப் பெயர்சொல்லி வாழ்த்துகள் சொல்லுகிறார்.

மரியாள்

ஒரு பெண்ணின் பெயர்

யூனியா

இந்த பெயர் இரண்டு பாலினத்தவர்களுக்கும் இப்பெயர் பொருந்தும். 1) யூனியா, பெண்ணின் பெயர் 2) யூனியா, ஆணின் பெயர்

அன்ரேணீக்.....அம்பிலியா

ஆண்களின் பெயர்கள்

கர்த்தருக்குள் பிரியமான என்னை

"என் பிரியமான நண்பனும்,சக விசுவாசியும்"

Romans 16:9-11

உர்பான்...ஸ்தாக்கி...அப்பெல்லே...அரிஸ்தொபூலு...எரோதியாள்...நர்கீசு

இவைகளெல்லாம் ஆண்களின் பெயர்கள்

கிறிஸ்துவில் அங்கீகரிக்கப்பட்டவர்கள்

"கிறிஸ்து அங்கீகரித்துள்ளார்." "அங்கீகாரம்" என்ற வார்த்தை சோதித்து பின்பு நல்ல மனிதராக நிருபிக்கப்பட்டவரைக் குறிக்கிறது.

Romans 16:12-14

பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளை பெயர்சொல்லி வாழ்த்துக்கள் சொல்லுகிறார்.

திரிபேனால்...திரிபோசாள்...பெர்சியாள்

பெண்களின் பெயர்கள்

ரூபு...அசிங்கிரீத்து...பிலேகோன்...எர்மா..பத்திரொபா...எர்மே

ஆண்களின் பெயர்கள்

கர்த்தருக்குள் தெரிந்துக்கொள்ளப்பட்ட

இதை செய்வினைச் சொல்லிலும் மொழிபெயர்க்கலாம்:"சிறந்த பண்புகள் இருந்ததால் கர்த்தர் என்னைத் தெரிந்துகொண்டார்.

அவனுடைய தாயும், நானும்

"அவனுடைய தாய் ,அவர்களை நானும் என் தாயாக நினைக்கிறேன்.

Romans 16:15-16

பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளைப் பெயர்சொல்லி வாழ்த்துக்களைச் சொல்லுகிறார். பிலொலோ...நேரே...ஒலிம்பா

ஆண்களின் பெயர்கள்

பிலொலோகஸ்...நேரெஸ்...ஒலிம்பாஸ்…

ஆண்களுடைய பெயர்கள்

யூலியா

இது ஒரு பெண்ணின் பெயர், இவர் பிலொலோவை திருமணம் செய்திருக்கலாம்.

Romans 16:17-18

அதை நினைத்துப்பார்ப்பதற்கு

"அதற்காக விழித்துக் கொண்டிருப்பது"

பிரிவினைகளையும் தடங்கல் களையும் உண்டுபண்ணும் நபர்கள்

"தேவன் மேலுள்ள விசுவாசத்திற்கு தடையாக விசுவாசிகள் ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்ய காரணமானவர்கள்."

நீங்கள் கற்றுக்கொண்ட போதனைக்கு விரோதமாக போவது

இதை புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்:" நீங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட சத்தியத்திற்கு விரோதமாக போதிக்கிறார்கள்,அதனோடு நாம் ஒத்துபோகமுடியாது.."

அவர்களிடம் இருந்து திரும்பிவருதல்

"அவர்களைவிட்டு தூரமாய் இருங்கள்."

அவர்களுடைய வயிற்றுக்காக

இங்கு "வயிறு"சரீர ஆசைகளைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் தங்களுடைய சுய இச்சைகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்கள்"

அவர்களுடைய நயவசனத்திலும் இச்சகப்பேச்சிலும்

"நயவசனிப்பு" "இச்சகப் பேச்சு"இரண்டும் அடிப்படையில் ஒன்றையே குறிக்கிறது.இந்த மக்கள் விசுவாசிகளை எப்படி" வஞ்சிக்கிறார்கள்" என்று பவுல் வலியுறுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு : "சொல்லுகிற காரியங்கள் யாவும் நன்மையும் உண்மையுமாய் இருக்கிறது."

அறியாதவன்

சாதாரண, அனுபவமற்ற,உள்ளுர்காரன். மாற்று மொழிபெயர்ப்பு: "அறியாமையினால் அவர்களை நம்புவது," அல்லது " போதகர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று அறியாமல் இருக்கிறார்கள்.

Romans 16:19-20

உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது

"இயேசுவுக்கு கீழ்ப்படியும்போது அனைவரும் உங்களைப்பற்றிக் கேட்பார்கள்."

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் காலின்கீழே நசுக்கிப் போடுவார்

"காலின்கீழே நசுக்கிப்போடுவார்" என்ற சொற்றொடர் விரோதியிடமிருந்து முற்றிலும் ஜெயம் பெறுகிறதை குறிக்கிறது

அறியாதவனுக்கு தீங்கானது.

"தீமையோடு கலக்கவில்லை"

Romans 16:21-22

லூகி...யாசோன் ....சொசிபத்தர்...தெர்கியு

ஆண்களின் பெயர்கள்

இந்த நிருபத்தை எழுதின தெர்கியு

பவுல் சொன்னதை தெர்கியு எழுதினான்.

கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்

"கர்த்தருக்குள் இருக்கும் சகவிசுவாசிகளையும் வாழ்த்துகிறேன்"

Romans 16:23-24

காயு...எரஸ்து...குவரத்து

ஆண்களின் பெயர்கள்

உபசரிப்பு

அவனுடைய வீட்டில் விசுவாசிகள் ஆராதனை செய்யக்கூடுவார்கள்.

பொருளாளர்

மக்களின் குழுப் பணத்தைப் பொறுப்புடன் கையாளுபவர்.

16:24

இந்த வசனம் நீக்கப்பட்டது.ஏனெனில் சில, பழைய,நம்பத்தகுந்த, பழங்கால ஏடுகளில் இதை இணைக்கவில்லை.

Romans 16:25-26

இப்பொழுது

இங்கு "இப்பொழுது" என்ற வார்த்தை கடிதத்தின் நிறைவுப்பகுதியைக் குறிக்கிறது.

நிற்கவைப்போம்

மாற்று மொழிபெயர்ப்பு: உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்த"

இயேசுகிறிஸ்துவைபற்றிய பிரசங்கமாகிய சுவிசேஷத்தின்படியே

"இயேசு கிறிஸ்துவைகுறித்து நான் பிரசங்கம்பண்ணின நற்செய்தி"

நீண்ட நாட்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த இரகசியமானது வெளிப்படுத்ததலின் மூலம் வெளியரங்கமாக்கப்பட்டது.

இதை செய்வினைச் சொல்லில் மொழிபெயர்க்கலாம். "அநேக நாட்களாக வைக்கப்பட்டிருந்த இரகசியத்தை விசுவாசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தினார்.

ஆதிகாலம்முதல் அடக்கமாயிருந்து இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களாலே நித்திய தேவனுடைய கட்டளைகளின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும்

இதை செய்வினைச்சொல்லுடன் மொழிபெயர்க்கலாம்:" இப்பொழுது நித்திய தேவன் வேதத்தின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்."

யூதரல்லாத மக்கள் மத்தியில் விசுவாசத்திற்கு கீழ்ப்படிவது

"ஆகவே சகல தேசத்தின் மக்களும் அவருக்கு கீழ்ப்படிவார்கள்."

Romans 16:27

இதைத் தொடர்ந்து நிறைவு அறிக்கை. (See: 16:25)