தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

5. The Son of Promise

OBS Image

பத்து வருடங்களுக்குப்பின் ஆபிராமும் சாராயும் கானானில் வந்து சேர்ந்தார்கள், அப்போது அவர்களுக்குக் குழந்தை இல்லை எனவே சாராய் தன் புருஷனாகிய ஆபிராமினிடத்தில் நான் பிள்ளை பெறாதபடிக்கு தேவன் என் கர்ப்பத்தை அடைத்தார், நான் முது வயதும் ஆனேன் எனவே என்னுடைய வேலைக்காரி ஆகார் என்பவளை நீர் திருமணம் செய்து எனக்கு பிள்ளைப் பெற்றுதாரும் என்றாள்.

OBS Image

எனவே ஆபிராம் ஆகாரை திருமணம் செய்து, அவளுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது, அந்தக் குழந்தைக்கு இஸ்மவேல் என்று ஆபிராம் பெயரிட்டான். அதன் பின்பு ஆகார் மீது சாராய்க்கு மிகுந்த பொறாமை ஏற்பட்டது. இஸ்மவேல் பதிமூன்று வயதாய் இருக்கும்போது ஆபிராமினிடத்தில் தேவன் பேசினார்.

OBS Image

நான் சர்வ வல்லமையுள்ள தேவன். நான் உன்னோடு உடன்படிக்கைப் பண்ணுவேன் என்று தேவன் பேசினார். மேலும் அவர் கூறியது, உன்னை தேசங்களுக்கு தகப்பன் ஆக்குவேன். உனக்கும் உன் சந்ததிக்கும் கானான் தேசத்தை சுதந்திரமாகக் கொடுத்து, நான் என்றென்றைக்கும் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்றார். உன் சந்ததியில் எல்லா ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணவேண்டும் என்றும் கட்டளைக் கொடுத்தார்.

OBS Image

உன்னுடைய மனைவியாகிய சாராய் ஒரு குமாரனைப் பெறுவாள், அவனே வாக்குத்தத்தின் மகன். அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடும்படி கூறினார். நான் அவனோடு உடன்படிக்கைப் பண்ணி, அவனை பெரிய ஜாதியாக்குவேன், என்னுடைய உடன்படிக்கை ஈசாக்குடன் இருக்கும் என்றார். பின்பு ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார், அப்படியென்றால் ஜாதிகளுக்குத் தகப்பன் என்று அர்த்தம். அதுமட்டுமல்லாமல் சராய் என்ற பெயரையும் சாராள் என்று மாற்றினார், அப்படியென்றால் இளவரசி என்று அர்த்தம்.

OBS Image

அந்த நாளில் ஆபிரகாம் தன்னுடைய குடும்பத்தில் இருந்த எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தான். பின்பு பத்து வருடங்களுக்குப் பிறகு ஆபிரகாமுக்கு 1௦௦ வயதும், சாராளுக்கு 90 வயதாய் இருந்த சமயத்தில் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர்.

OBS Image

ஈசாக்கு வாலிபனாய் இருந்தபோது, உன்னுடைய ஒரே குமாரனாகிய ஈசாக்கை எனக்கு பலி செலுத்து என்று தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். பின்னும் ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்படிந்து தன்னுடைய குமாரனை பலி செலுத்தும்படிக்கு ஆயத்தம் பண்ணினான்.

OBS Image

ஆபிரகாமும் ஈசாக்கும் பலி செலுத்தப் போகும் வழியில், ஈசாக்கு தன் தகப்பனிடத்தில், பலி செலுத்தும்படிக்கு நம்மிடத்தில் விறகு உண்டு, ஆடு எங்கே என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், தேவன் தருவார் என்று கூறினான்.

OBS Image

ஆபிரகாம் பலி செலுத்தும் இடம் வந்தபோது, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி அந்த பலிபீடத்தின் மேல் வைத்தான். பின்பு அவனைக் கொலை செய்யப்போகும் நேரத்தில், தேவன் ஆபிரகாமைத் தடுத்து, அவனை ஒன்றும் செய்யாதே, இப்போது நீ எனக்கு பயப்படுவதை அறிந்தேன் ஏனெனில் உன்னுடைய ஒரே குமாரனை கூட எனக்கு விலக்கவில்லை என்றார்.

OBS Image

பக்கத்தில் ஒரு புதரில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆபிரகாம் கண்டு, தன் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தம் செய்த தேவனுக்கு மிகுந்த சாதோஷமாக அந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்தினான்.

OBS Image

பின்பு தேவன் ஆபிரகாமினிடத்தில், நீ உன்னுடைய ஒரே குமாரன் என்றும் பாராமல் எல்லாவற்றையும் எனக்குக் கொடுக்க ஆயத்தமாய் இருப்பதினால், மற்றும் என் வார்த்தைக்கு கீழ்படிந்ததினாலும், நான் உன்னை அசீர்வதித்து, உன்னுடைய சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். பூமியின் வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

வேதாகம கதை: 16-22