தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

33. விவசாயம் செய்பவனின் கதை

OBS Image

ஒருநாள் இயேசு கடற்கரையில் இருந்தார். அங்கே அநேக ஜனங்களுக்கு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். அநேகர் அவர் சொல்வதைக் கேட்க வந்ததினால், அவர் நீரின்மேல் இருந்த ஒரு படகில் ஏறி ஜனங்களுக்கு பிரசங்கம் செய்தார்.

OBS Image

அப்போது இந்தக் கதையை இயேசு சொன்னார். ஒருநாள் விவசாயி விதை போனான். கையில் அவன் விதையை தூவினான், அப்போது சில விதைகள் வழியில் விழுந்தது. ஆனால் பறவைகள் வந்து அவைகளைத் தின்று போட்டது.

OBS Image

சில விதைகள் கற்பாறையின் மேல் விழுந்தது. அந்த விதைகள் சீக்கிரத்தில் முளைத்தது, ஆனால் அதின் வேர் ஆழமாய் இல்லாததினால், சூரிய ஒளியின் சூட்டில் கருகி, ஒன்றும் இல்லாமற் போயிற்று.

OBS Image

மேலும் சில விதைகள் முள்ளுள்ள இடத்தில் விழுந்தது. அந்த விதைகள் வளர ஆரம்பித்தது, ஆனால் முற்கள் அவைகளை நெருக்கிப் போட்டதினால், அவைகளால் பலன் ஒன்றும் கொடுக்க முடியாமல் போனது.

OBS Image

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது. அவைகள் வளர்ந்து, 3௦, 6௦ மற்றும் 1௦௦ ஆக பலன் தந்தது. எனவே தேவனைப் பின்பற்ற விரும்புகிறவர்கள், நான் சொல்வதைக் கேட்கட்டும் என்றார்.

OBS Image

இந்தக் கதை சீஷர்களுக்கு புரியாததினால், இயேசு அவர்களுக்கு தெளிவாக சொன்னார். விதை என்பது, தேவனுடைய வார்த்தை. வழி என்பது ஒருவன், தேவனுடைய வசனத்தைக் கேட்டும் புரியாதவன். பின்பு பிசாசு அந்த வசனத்தை அவனிடத்திலிருந்து எடுத்துப்போடுவான். அவ்வளவுதான். அதற்குப் பின்பு, அவனுக்கு வசனம் புரியாதபடிக்கு பிசாசு செய்வான்.

OBS Image

கற்பாறை என்பது, ஒருவன் தேவனுடைய வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்பவன். ஆனால் சில சோதனைகளும், மனிதர்களால் உபத்திரவமும் வந்தவுடனே தேவனுடைய வழியில் இருந்து விழுவான். அவ்வளவுதான், தேவனை நம்புவதை நிறுத்தி விடுவான்.

OBS Image

முள்ளுள்ள இடம் என்பது, தேவனுடைய வசனத்தை ஒருவன் கேட்டு, அநேகக் காரியங்களைப் பற்றி கவலைப்பட்டு, நிறைய பணம் சம்பாதிக்க உழைத்து, அநேக காரியங்கள் செய்ய முயற்சி செய்து, பின்பு அவனால் தேவனை நேசிக்க முடியாமல், தேவனுடைய வசனத்திலிருந்து அவன் கற்றுக் கொண்டவைகள் அவனை நடத்தாமல், கோதுமையின் பதரைப்போல் பலன் ஒன்றும் கொடுக்காமல் போவான்.

OBS Image

ஆனால் நல்ல நிலம் என்பது, ஒருவன் தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதை நம்பி, கனி கொடுப்பவன்.

வேதாகம கதை: மத்தேயு 13:1-8, 18-23; மாற்கு 4:1-8, 13-20; லூக்கா 8:4-15