தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

43. சபைகளின் ஆரம்பம்

OBS Image

இயேசு பரலோகம் சென்ற பின்பு, அவருடைய சீஷர்கள் எருசலேமில் இயேசு சொன்னதுபோல தங்கியிருந்தார்கள். அவர்கள் கூடி நம்பிக்கையோடு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

OBS Image

ஒவ்வொரு வருடமும் பஸ்கா முடிந்து 5௦ஆவது நாள், யூதர்கள் பெந்தேகோஸ்தே என்னும் ஒரு நாளை கொண்டாடுவார்கள். பெந்தேகோஸ்தே நாள் வரும்போது, யூதர்கள் கோதுமையின் அறுவடையை, எல்லா ஊர்களிலும் இருக்கும் யூதர்கள் எருசலேமுக்கு வந்து அவர்கள் சேர்ந்து கொண்டாடுவார்கள். அந்த வருடம் இயேசு பரலோகம் சென்ற ஒரு வாரத்தில் பெந்தேகோஸ்தே நாள் வந்தது.

OBS Image

விசுவாசிகள் எல்லோரும் கூடியிருக்கும்போது, உடனே, பெருங்காற்று போன்ற சத்தம் அந்த வீட்டில் உண்டானது. அப்போது எல்லோருடைய தலையின் மேலும் எரிகிற அக்கினி போன்று காணப்பட்டது. அப்போது அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்டார்கள், பின்பு வெவ்வேறு மொழிகளில் அவர்கள் பேசினார்கள். அந்த மொழிகளை பரிசுத்த ஆவியானவர் பேசும்படிச் செய்தார்.

OBS Image

எருசலேமில் இருந்த ஜனங்கள் அந்த சத்தத்தைக் கேட்டு, என்ன நடக்கிறது என்று பார்க்கும்படி கூடி வந்தார்கள். அவர்கள் தேவன் செய்த மகத்துவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்தவர்களின் தாய் மொழிகளை அவர்கள் பேசுகிறதைக் கேட்டு, அங்கே வந்திருந்த எல்லோரும் மிகவும் ஆச்சரியபட்டார்கள்,

OBS Image

ஜனக்கூட்டத்தில் இருந்த சிலர், சீஷர்கள் குடித்திருப்பார்கள் என்றனர். ஆனால் பேதுரு எழுந்து நின்று, என்னை கவனியுங்கள்! நாங்கள் குடிக்கவில்லை, கடைசி நாட்களில் நடக்கும் என்று, யோவேல் தீர்க்கதரிசி சொன்ன தேவனுடைய வார்த்தை என்னவென்றால், என்னுடைய ஆவியை ஊற்றுவேன் என்று சொல்லப்பட்டதை தான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள் என்றான்.

OBS Image

இஸ்ரவேலின் மனிதர்களே, இயேசு ஒரு மனிதனாய், அவர் யார் என்று நீங்கள் அறியும்படி, அநேக அற்புதங்களை தேவனுடைய வல்லமையினால் செய்தார். அதை நீங்கள் அறிந்தும் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள்!

OBS Image

இயேசு மரித்தார், ஆனால் தேவன் அவரை உயிரோடு எழுப்பினார். உம்முடைய பரிசுத்தரை கல்லறையில் கெட்டுப்போக விடமாட்டீர் என்று தீர்க்கதரிசி எழுதினபடி, இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம்.

OBS Image

பிதாவாகிய தேவன் இயேசுவை அவருடைய வலது பக்கத்தில் உட்காரும்படி செய்து அவரை மகிமைப்படுத்தினார். மேலும் தாம் சொன்னபடியே பரிசுத்த ஆவியானவரை எங்களுக்குள் அனுப்பினார். நீங்கள் இப்போது பார்க்கிற யாவையும் பரிசுத்த ஆவியானவரே செய்கிறார்.

OBS Image

நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் தேவன் இயேசுவை எல்லாவற்றிற்கும் ஆண்டவராகவும், மேசியாவாகவும் செய்தார்!

OBS Image

பேதுரு சொன்ன எல்லாவற்றையும் கேட்டதினால் ஜனங்கள் தொடப்பட்டு, நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும்? என்று பேதுருவையும், சீஷர்களையும் பார்த்துக் கேட்டனர்.

OBS Image

பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் எல்லோரும் பாவத்தை விட்டு, மனந்திரும்ப வேண்டும், அப்போது தேவன் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். பின்பு பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியினால் ஸ்நானம் பெறவேண்டும். பின்பு அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் வரங்களையும் கொடுப்பார் என்றான்.

OBS Image

பேதுரு சொன்னதை கேட்டு ஏறக்குறைய 3௦௦௦ பேர்கள் இயேசுவை நம்பினார். பின்பு அவர்கள் எல்லோரும் ஸ்நானம் எடுத்து, எருசலேமின் சபையில் சேர்ந்தனர்.

OBS Image

விசுவாசிகள் தொடர்ந்து, அப்போஸ்தலர்கள் போதித்தததைக் கேட்டனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாய் சந்தித்து, சாப்பிட்டு, மற்றவர்களுக்காக ஜெபித்தனர். அவர்கள் சேர்ந்து தேவனை துதித்து, அவர்கள் அறிந்திருந்த காரியங்களை ,மற்றவர்களுக்கும் அறிவித்தனர். அங்கே இருந்தவர்கள் மத்தியில் நற்சாட்சி பெற்றதினால் அநேகர் விசுவாசிகளாக மாறினர்.

வேதாகம கதை: அப்போஸ்தலர் 2