26. இயேசு ஊழியத்தை ஆரம்பித்தல்
இயேசு, சாத்தனின் சோதனையில் விழாமல், கலிலேயாவுக்கு வந்தார். இது அவர் வாழ்ந்த ஊர் ஆகும். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஒவ்வொரு இடம் சென்று, பிரசங்கித்தார். எல்லோரும் அவரைப் பற்றி நன்மையாய் சொன்னார்கள்.
இயேசு, தாம் சிறுவயதில் வாழ்ந்த நாசரேத்து என்னும் ஊருக்கு போயிருந்தார். ஓய்வுநாளில் தேவனை ஆராதிக்கும்படி போனார். அங்கே இருந்த தலைவர்கள் ஏசாயா தீர்கத்தரிசன சுருளை இயேசுவிடம் கொடுத்து, அதை வாசிக்கும்படி சொன்னார்கள். எனவே இயேசு அதைத் திறந்து அவர்களுக்கு வாசித்தார்.
தேவன் எனக்கு அவருடைய ஆவியைத் தந்தார். எனவே நான் நல்ல செய்தியை பிரசங்கிப்பேன், காவலில் இருப்பவர்களை விடுவிக்கவும், குருடரை பார்வையடைய செய்யவும், ஒதுக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், என்னை அனுப்பினார். இந்த சமயத்தில், தேவன் நமக்கு தயவாய் உதவி செய்வார் என்று வாசித்தார்.
இயேசு அதை வாசித்து முடித்து உட்கார்ந்ததும், எல்லோரும் அவரை கூர்ந்து கவனித்தனர். மேசியாவைப் பற்றி அவர் வாசித்தார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். நான் வாசித்த இந்தக்காரியங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று இயேசு சொன்னார். எல்லோரும் அவரைக் பற்றி ஆச்சரியப்பட்டு, இவன் யோசேப்பின் மகன் தானே என்றார்கள்.
அவர்களுக்கு இயேசு சொன்னது, சொந்த ஊரில் ஒரு தீர்கத்தரிசியை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எலியா தீர்கத்தரிசி வாழ்ந்த சமயத்தில், அநேக விதைவைகள் இஸ்ரவேலில் இருந்தனர், அப்போது மூன்றரை வருடம் மழை இல்லாதிருந்தது. தேவன், எலியாவுக்கு உதவும்படி இஸ்ரவேலில் இருந்து ஒரு விதைவையை அனுப்பவில்லை மாறாக வேறு தேசத்திலிருந்து ஒரு விதைவை அனுப்பினார்.
இயேசு மேலும் சொன்னது என்னவென்றால், எலிசாவின் நாட்களில், இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தனர். ஆனால் எலிசா அவர்களில் யாரையும் குணமாக்காமல், இஸ்ரவேலின் எதிரிகளின் இராணுவத்தலைவனாகிய நாகமானின் குஷ்டரோகத்தை மட்டும் குணமாக்கினான். இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள், இயேசுவின் மேல் மிகவும் கோபமடைந்தனர்.
நாசரேத்து ஜனங்கள் இயேசுவைப் பிடித்து, ஆராதிக்கும் இடத்தை விட்டு, வெளியே தள்ளினார்கள். அவரைக் கொலை செய்யும்படி, உயரமான இடத்திலிருந்து தள்ள முயற்சித்தார்கள். ஆனால் இயேசுவோ அந்தக் ஜனக்கூட்டத்திலிருந்து நடந்து நாசரேத்திலிருந்து போய்விட்டார்.
பின்பு, இயேசு கலிலேயா ஊர் முழுவதும் போனார், அங்கே திரளான ஜனங்கள் வியாதியாய் இருந்தவர்களையும், முடியாதவர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களில், சிலர் பார்க்க முடியாமலும், நடக்க முடியாமலும், கேட்க முடியாமலும், பேச முடியாமலும் இருந்தனர். இயேசு அவர்களை குணமாக்கினார்.
மேலும், பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அசுத்த ஆவிகளை இயேசு வெளியேறும்படிக் கட்டளையிட்டார். அவைகள் வெளியே போனது. சில ஆவிகள் சத்தமாய், நீர் தேவனுடைய மகன்! அங்கே இருந்த ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, தேவனைத் துதித்தார்கள்.
பின்பு, அப்போஸ்தலர்கள் என்று அழைத்த பனிரெண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்தார். அந்த அப்போஸ்தலர்கள் இயேசுவோடு சென்று, அவரிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
வேதாகம கதை: மத்தேயு 4:12-25; மாற்கு 1:14-15; 35-39; 3:13-21; லூக்கா 4:14-3௦, 38-44