36. மறுரூபப்படுதல
ஒருநாள், இயேசு தம்முடைய சீஷர்கள் மூன்று பேர், பேதுரு, யாக்கோபு, யோவான் என்பவர்களை அவரோடு கூட்டிக்கொண்டு, மலையின் மேல் ஜெபிக்கும்படி போனார். [இந்த யோவான், இயேசுவை ஸ்நானம் பண்ணினவன் இல்லை].
இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய துணி, வெளிச்சத்தைப் போல வெள்ளையாயிற்று. அந்த வெண்மை இந்த பூமியில் ஒருவராலும் ஆக்கமுடியாத வெண்மையாயிருந்தது.
பின்பு மோசேயும், தீர்க்கதரிசியான எலியாவும் தோன்றினர். அவர்கள் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தவர்கள். அவர்கள் இயேசுவிடம் அவருடைய மரணத்தைப் பற்றி பேசினார்கள். ஏனெனில் இயேசு சீக்கிரமாய் எருசலேமில் மரிக்கப்போகும் சமயமாயிருந்தது.
மோசேயும், எலியாவும் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த சமயத்தில், பேதுரு இயேசுவைப் பார்த்து, நாம் இங்கேயே இருப்பது நல்லது. நமக்கு மூன்று கூடாரங்களை இங்கே போடுவோம். அதில் ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்கும் இருக்கட்டும் என்று தான் என்ன சொல்கிறான் என்று அறியாமல் சொன்னான்.
பேதுரு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு வெண்மேகம் அவர்களை சூழ்ந்து கொண்டது. அந்த மேகதிலிருந்து ஒரு சத்தம் வந்து, இவர் நான் நேசிக்கும் என்னுடைய மகன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன் என்றது. அதைக் கேட்ட மூன்று சீஷர்களும் நடுங்கி, தரையில் விழுந்தனர்.
பின்பு இயேசு அவர்களைத் தொட்டு, பயப்படாதிருங்கள், எழுந்திருங்கள் என்றார். அவர்கள் எழுந்து பார்த்தபோது அங்கே இயேசு மட்டும் இருந்தார்.
இயேசுவும் அந்த மூன்று சீஷர்களும் மலையிலிருந்து கீழே இறங்கி போனார்கள். இயேசு அவர்களிடத்தில் அங்கே நடந்த எதையும் ஒருவருக்கும் சொல்ல வேண்டாம், நான் சீக்கிரமாய் மரித்து, மறுபடியும் உயிர்த்தெளுவேன் அதற்கு பின்பு நீங்கள் அதை ஜனங்களுக்கு சொல்லலாம் என்றார்.
வேதாகம கதை: மத்தேயு 17:1-9; மாற்கு 9:2-8; லூக்கா 9:28-36