8. யோசேப்பையும் அவனுடைய குடும்பத்தையும் தேவன் காப்பாற்றுதல்
அநேக வருடங்களுக்குப் பிறகு, யாக்கோபு தான் மிகவும் நேசித்த அவனுடைய செல்ல மகனான யோசேப்பை, ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அவனுடைய மூத்த சகோதரர்களை பார்த்து வரும்படி அனுப்பினான்.
யோசேப்பின் சகோதரர்கள் அவனை மிகவும் வெறுத்தனர், ஏனெனில் அவர்களுடைய தகப்பன் எல்லோரையும்விட யோசேப்பை மிகவும் நேசித்தான். அதுவுமல்லாமல் அவர்கள் எல்லோரையும் தான் ஆளுவதுபோல யோசேப்பு சொப்பனம் கண்டிருந்தான், அதினால் யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் வந்தபோது அவனைப் பிடித்து அடிமைக்கொள்கிறவர்களிடத்தில் விற்றுப்போட்டனர்.
யோசேப்பின் சகோதரர்கள் வீடு திரும்பும் முன்னே, அவனுடைய அங்கியை, ஆட்டுக் கடாவின் இரத்தத்தில் நனைத்து, ஏதோ ஒரு விலங்கு அவனைக் கொன்று போட்டிருக்கும் என்று நினைக்கிறோம் என்று சொல்லி அந்த ஆடையை யாக்கோபினிடத்தில் காண்பித்தார்கள். யாக்கோபு மிகவும் வருத்தப்பட்டான்.
அடிமைக்கொள்கிறவர்கள் யோசேப்பை நயல் நதியின் அருகில் இருந்த மிகவும் பெரிய தேசமான எகிப்திற்கு கொண்டு சென்று, உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த ஒரு அதிகாரியினிடம் அவனை விற்றுப்போட்டனர். யோசேப்பு தன் எஜமானுக்கு சரியாய் வேலை செய்தான், தேவன் யோசேப்பை ஆசீர்வதித்தார்.
யோசேப்பின் எஜமானின் மனைவி அவனோடு சந்தோஷமாய் இருக்கும்படி அழைத்தாள், தான் தேவனுக்கு விரோதமான பாவத்தை செய்ய முடியாது என்று மறுத்ததால், அவள் கோபமடைந்து, அவன்மேல் பொய்யான பழிசாட்டி, அவனை காவலில் அடைத்தாள். காவலிலும் யோசேப்பு உண்மையாய் இருந்தான், எனவே தேவன் அவனை ஆசீர்வதித்தார்.
தவறு ஏதும் செய்யாமல் இரண்டாவது வருடமும் சிறையில் இருக்கையில், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் என்பவனுக்கு, இரவில் ஒரு சொப்பனம் உண்டாகி, அதின் விளக்கத்தை அவனுடைய ஆலோசனைக்காரர் முடியவில்லை.
தேவன் யோசேப்புக்கு சொப்பனத்தை விளங்கும் கிருபையை கொடுத்திருந்ததினால், அவன் பார்வோனுக்கு முன்பாக வரவழைக்கப்பட்டு, தேவன் முதல் ஏழு வருடம் செழிப்பையும், பின்வரும் ஏழு வருடம் பஞ்சத்தையும் வரும்படிச் செய்வார் என்று, அந்த சொப்பனத்தின் விளக்கத்தை யோசேப்புக் கூறினான்.
பார்வோனுக்கு யோசேப்பை மிகவும் பிடித்ததினால், யோசேப்பை எகிப்து தேசம் முழுவதுக்கும் பார்வோனுடைய இரண்டாவது அதிகாரியாக்கினான்.
முதல் ஏழு வருடத்தின் அறுவடையை களஞ்சியத்தில் செர்த்து வைக்கும்படி யோசேப்பு ஜனங்களிடம் கூறினான். அதன் பின்பு வந்த ஏழு வருடம் சேர்த்து வைத்த உணவை ஜனங்களுக்கு விற்றான். அது அவர்களுக்கு போதுமான அளவு இருந்தது.
பஞ்சம் எகிப்தில் மட்டுமல்லாமல், யாக்கோபும், அவனுடைய குடும்பத்தாரும் இருந்த கானான் தேசத்திலும் மிகவும் கொடிதாய் இருந்தது.
எனவே யாக்கோபு தன்னுடைய குமாரர்களை எகிப்து தேசத்திற்கு உணவு வாங்கி வரும்படி அனுப்பினான். உணவு வாங்கும்படி யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்பாக நிற்கும்போது அவர்கள் யோசேப்பை அறியவில்லை, ஆனால் யோசேப்புக்கு தன்னுடைய சகோதரர்கள் தான் அவர்கள் என்று விளங்கிற்று.
அவர்கள் மாறிவிட்டார்களோ என்று யோசேப்பு சோதித்தப் பின்பு, நான் தான் உங்கள் சகோதரன், யோசேப்பு! என்று அவர்களிடம் கூறினான். மேலும் பயப்படாதிருங்கள். நீங்கள் எனக்குத் தீமை செய்யும்படி என்னை விற்றுப்போட்டீர்கள், ஆனால் தேவன் அதை நன்மையாக மாறப்பண்ணினார். வந்து எகிப்திலே இருங்கள், நான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் உதவி செய்வேன் என்று அவர்களிடம் கூறினான்.
யோசேப்பின் சகோதரர்கள் மீண்டும் தங்கள் தகப்பனிடம் வந்து, யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்று சொன்னார்கள், யாக்கோபு மிகவும் சந்தோஷமடைந்தான்.
யாக்கோபு முதிர்வயதாகியும், தன்னுடைய எல்லாவற்றோடும் எகிப்துக்கு சென்று, அங்கே வாழ்ந்து, தான் மரிக்கும் முன்னே, யோசேப்பின் இரண்டு குமாரர்களையும் ஆசீர்வதித்தான்.
தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கை அவனிடமிருந்து, ஈசாக்குக்கும், பின்பு யாக்கோபுக்கும், பின்பு அவனுடைய பன்னிரண்டு குமாரருக்கும் அவர்களிடமிருந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் உண்டாயிற்று.
வேதாகம கதை: ஆதியாகமம் 37-5௦