31. இயேசு தண்ணீரின் மேல் நடப்பது
ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்த பின்பு, அவர்களை அவரவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சீஷர்களைப் பார்த்து, அக்கறைக்கு போக படகை ஒட்டுங்கள் என்று சொன்னார், சீஷர்கள் படகில் ஏறி, போனார்கள். அதற்கு பின்பு இயேசு, ஜெபிக்கும்படி மலைக்குப் போனார். அங்கே தன்னந்தனியாக இரவெல்லாம் ஜெபித்தார்.
அந்த சமயத்தில் சீஷர்கள், படகை ஒட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் காற்றும், புயலும், அவர்களுக்கு எதிராக பலமாய் இருந்ததினால், படகை ஓட்ட மிகவும் கஷ்டமாக இருந்தது. நடு இரவாகியும், பாதிதூரம் தான் போயிருந்தார்கள்.
அப்போது இயேசு ஜெபித்து முடித்து, சீஷர்களை சந்திக்கும்படி, தண்ணீரின்மேல் நடந்து அவர்கள் இருக்கும் படகை நோக்கி வந்தார்.
சீஷர்கள் அவரைப் பார்த்து பூதம் என்று நினைத்து, மிகவும் பயந்தார்கள். இயேசு அவர்கள் பயந்ததை அறிந்து, பயப்படாதிருங்கள். நான் தான் என்று சொன்னார்.
அப்போது பேதுரு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நீர்தான் என்றால், நான் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடத்தில் வர கட்டளைகொடும் என்றான். இயேசு, பேதுருவைப் பார்த்து, வா! என்றார்.
எனவே, பேதுரு, படகில் இருந்து இறங்கி, தரையில் நடப்பதுபோல, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவிடம் போக ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் நடந்தவுடன், இயேசுவை பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்களை, அலையின் மேலும், புயலின் மேலும் திருப்பினான்.
பின்பு, பேதுரு மிகவும் பயந்து, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கதறினான். இயேசு அவனைப் பிடித்துத் தூக்கி விட்டார். பின்பு அவனைப் பார்த்து, உனக்கு கொஞ்ச விசுவாசம் தான் இருக்கிறது! உன்னைக் காப்பாற்ற நீ ஏன் என்னை விசுவாசிக்கவி ல்லை? என்று கேட்டார்.
இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினவுடனே, அலையும், புயலும் அமைதியாயிற்று. தண்ணீரும் அமைதியாயிற்று. அப்போது சீஷர்கள் அவரை பணிந்து, வணங்கி, நீர் உண்மையாகவே தேவனுடைய குமாரன் தான் என்றார்கள்.
வேதாகம கதை: மத்தேயு 14:22-33; மாற்கு 6:45-52; யோவான்6:16-21