தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

38. இயேசுவைக் காட்டிக்கொடுத்தல்

OBS Image

ஒவ்வொரு வருடமும் யூதர்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். ஏனெனில் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முன்னோர்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கினார். இயேசு பிரசங்கம் செய்யவும், போதிக்கவும் ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குப் பின், இயேசு அவருடைய சீஷர்களோடு பஸ்காவை எருசலேமில் கொண்டாட விரும்புவதாகவும், அங்கே அவர் அங்கே கொலை செய்யப்படபோவதாகவும் சீஷர்களிடத்தில் சொன்னார்.

OBS Image

இயேசுவின் சீஷர்களில் ஒருவன் பெயர் யூதாஸ். அவன் சீஷர்களின் பணத்திற்குப் பொறுப்பாளராய் இருந்தான். ஆனாலும் அவ்வப்போது அந்த பணத்தைத் திருடி செலவு செய்வான். இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு வந்தவுடன், யூதாஸ் யூதர்களின் தலைவர்களை சந்தித்து, பணம் கொடுத்தால், தான் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டான். யூதர்கள் இயேசுவை மேசியா என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவரைக் கொலை செய்ய விரும்புவதையும் யூதாஸ் அறிந்திருந்தான்.

OBS Image

யூத தலைவர்கள், பிரதான ஆசாரியர்கள் மூலமாய் யுதாசுக்கு, இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தனர். தீர்கத்தரிசிகள் முன்பு சொன்னபடியே நடந்தது, யூதாஸ் பணத்தை வாங்கிக் கொண்டு, புறப்பட்டுப் போய், இயேசுவை அவர்கள் பிடிக்க, காட்டிக் கொடுக்கும்படி நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

OBS Image

எருசலேமில், இயேசு தம்முடைய சீஷர்களோடு பஸ்காவை கொண்டாடினார். பஸ்காவை சாப்பிடும்போது இயேசு அப்பத்தை எடுத்து, இதை வாங்கி சாப்பிடுங்கள், நான் உங்களுக்காகக் கொடுக்கும் என்னுடைய சரீரம் என்றார். என்னை நினைக்கும்படி இதைச் செய்யுங்கள் என்றார். இயேசு அவர்களுக்காக மரிக்கப் போவதையும், தம்மையே அவர்களுக்கு பலியாக கொடுக்கப் போவதையும் சொன்னார்.

OBS Image

பின்பு இயேசு பாத்திரத்தில் திராட்சை ரசத்தை எடுத்து, இது புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் உங்களுக்காக இரத்தம் சிந்தும் போது, தேவன் உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். இதை நீங்கள் குடிக்கும் போதெல்லாம், நான் உங்களுக்குச் செய்கிறதை நினையுங்கள் என்றார்.

OBS Image

பின்பு இயேசு சீஷர்களிடத்தில், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார். சீஷர்கள் திடுக்கிட்டு, யார் அப்படி செய்வான் என்றார்கள், அதற்கு இயேசு, நான் யாருக்கு அப்பம் கொடுக்கிறேனோ அவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று சொல்லி, யுதாசுக்கு கொடுத்தார்.

OBS Image

யூதாஸ் அப்பம் வாங்கினவுடனே சாத்தான் அவனுக்குள் புகுந்தான். யூத தலைவர்கள் இயேசுவை பிடிக்க அவர்களுக்கு உதவும்படி யூதாஸ் போனான். அது இரவு நேரமாயிருந்தது.

OBS Image

சாப்பிட்டு முடித்து, இயேசுவும் அவருடைய சீஷர்களும், ஒலிவ மலைக்குப் போனார்கள். இயேசு அவர்களிடத்தில், மேய்ப்பனை அடிப்பேன் அப்போது ஆடுகள் எல்லாம் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடியே. நீங்கள் எல்லோரும் இந்த இரவில் என்னை விட்டு போவீர்கள் என்று சொன்னார்.

OBS Image

பேதுரு அவரிடத்தில், எல்லோரும் உம்மை விட்டுப் போனாலும் நான் போவதில்லை! பின்பு இயேசு பேதுருவினிடத்தில், சாத்தானுக்கு நீங்கள் எல்லோரும் வேண்டும், ஆனாலும் உன்னுடைய விசுவாசம் வீணாகாதபடிக்கு, உனக்காக நான் ஜெபித்தேன். இன்று இரவில், சேவல் கூவுகிறதற்கு முன்பு நீ என்னை மூன்று தரம் தெரியாது என்று சொல்லுவாய் என்றார்.

OBS Image

பின்பு பேதுரு இயேசுவினிடத்தில், நான் மரித்தாலும், உம்மை தெரியாது என்று சொல்ல மாட்டேன்! மற்ற சீஷர்களும் அப்படியே சொன்னார்கள்.

OBS Image

பின்பு இயேசு தம்முடைய சீஷர்களோடு கெத்சமனே என்னும் ஒரு இடத்திற்கு போனார்கள். அங்கே, பிசாசு அவர்களை சோதிக்காதபடிக்கு ஜெபிக்கும்படி சீஷர்களிடம் சொல்லி விட்டு, இயேசு தனியே ஜெபிக்கும்படி போனார்.

OBS Image

இயேசு மூன்று முறை, பிதாவே உமக்கு சித்தமானால் இந்த உபத்திரவத்தின் பாத்திரத்தில் நான் குடிக்க வேண்டாம், ஆனால் இந்த ஜனங்களின் பாவங்களை மன்னிக்க வேறு வழி இல்லையென்றால், உம்முடைய சித்தத்தின்படி செய்கிறேன் என்று ஜெபித்தார். இயேசு மிகவும் வேதனைப்பட்டு, அவருடைய வேர்வை இரத்தத்தின் துளிகளாய் விழுந்தது. அவரை பெலனடைய செய்ய தேவன் தூதர்களை அனுப்பினார்.

OBS Image

இயேசு ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும் சீஷர்களிடத்தில் வந்தார், அவர்களோ தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் மூன்றாவது முறை வந்து, எழுந்துருங்கள்! என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வருகிறான் என்றார்.

OBS Image

யூதாஸ், யூத தலைவர்களோடும், படை வீரர்களோடும், பெரிய ஜனக்கூட்டத்துடனும், கையில் கத்தியும், குச்சிகளையும் வைத்துக் கொண்டு இயேசுவினிடத்தில் வந்தார்கள். யூதாஸ், போதகரே, என்று சொல்லி வாழ்த்தி, அவரை முத்தமிட்டான். அவரைக் காட்டிக் கொடுக்கும்படி இப்படிச் செய்தான். இயேசு முத்தத்தினால் என்னைக் காட்டிக் கொடுக்கிறாயா? என்று யுதாஸிடம் கேட்டார்.

OBS Image

படை வீரர்கள் இயேசுவைப் பிடித்தார்கள். அப்போது பேதுரு தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரதான ஆசாரியனின் சேவகன் காதை வெட்டிப் போட்டான். இயேசு அவனைப் பார்த்து, கத்தியை கீழே போடு! என் தகப்பனிடத்தில் என்னை பாதுகாக்கும்படி சண்டை போடும் தூதர்களை கேட்க முடியும். ஆனால் நான் கண்டிப்பாக என்னுடைய தகப்பனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லி, அவனுடைய காதை குணமாக்கினார். பின்பு, அவருடைய சீஷர்கள் எல்லோரும் ஓடிப் போனார்கள்.

வேதாகம கதை: மத்தேயு 26:14-56; மாற்கு 14:10-50; லூக்கா 22:1-53; யோவான் 12:6; 18:1-11