32. பிசாசு பிடித்திருந்தவனையும் வியாதியாய் இருந்த ஒரு இயேசு குணமாக்குதல்
இயேசுவும் அவருடைய சீஷர்களும், படகில் கேசரநேத் என்னும் ஊரில் வாழும் ஜனங்களிடத்திற்கு போனார்கள். அங்கே அவர்கள் சேர்ந்தபோது, படகில் இருந்து இறங்கினார்கள்.
அங்கே ஒருவன் பிசாசு பிடித்திருந்தவனாயிருந்தான்.
ஒருவரும் அடக்கமுடியாத அளவு பலமுள்ளவனாயிருந்தான். சில சமயம் ஜனங்கள் சங்கிலிகளால் அவன் கை, கால்களைக் கட்டியும் அவைகளை அவன் .
அவன் அங்கே இருந்த கல்லறையில் வாழ்ந்து வந்தான். அவன் இரவும் பகலும் மிகவும் சத்தமிட்டு, துணி எதுவும் போடாமல், சில நேரங்களில் கற்களால் அவனைக் காயபடுத்திக் கொள்வான்.
அந்த மனிதன், இயேசுவினிடத்தில் ஓடி வந்து, அவர் காலில் விழுந்தான். பின்பு இயேசு அவனுக்குள் இருந்த பிசாசை, அவனை விட்டு வெளியே போ! என்று சொன்னார்.
அந்த பிசாசு, மிகவும் சத்தமாய், உன்னதமான தேவனுடைய குமாரனே! உமக்கும் எனக்கும் என்ன? என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றது! இயேசு அந்த பிசாசை பார்த்து, உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டார். நாங்கள் நிறையப்பேர் இருக்கிறோம் அதினால் லேகியோன் என்றது. [லேகியன் என்றால் ரோமாவின் இராணுவத்தின் அநேக ஆயிர யுத்த வீரர்கள் என்பதாகும்.]
பிசாசுகள் இயேசுவிடம் அவைகளை அந்த எல்லையை விட்டுத் துரத்த வேண்டாம்! என்று கெஞ்சின. பக்கத்தில் மலையில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன, அந்த பன்றிக் கூட்டத்திற்குள் அவைகளை அனுப்பும்படி இயேசுவிடம் கெஞ்சின, அவர் சரி என்று போக சொன்னார்.
எனவே அந்த பிசாசுகள், அவனை விட்டு, அந்த பன்றிக் கூட்டத்திற்குள் புகுந்தன. அந்த மந்தையில் இருந்த 2,௦௦௦ பன்றிகள் வேகமாக ஓடி, கடலில் விழுந்து செத்துப்போயின.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், நடந்ததைப் பார்த்து, ஊருக்குள் ஓடிப்போய், இயேசு செய்ததை எல்லோருக்கும் சொன்னார்கள். அந்த ஊர் ஜனங்கள் வந்து பிசாசு பிடித்திருந்தவன் உடை அணிந்து, அமைதியாக எல்லோரையும்போல இருப்பதைப் பார்த்தார்கள்.
அந்த ஜனங்கள் மிகவும் பயந்து, இயேசுவை அவர்களுடைய ஊரை விட்டுப் போகும்படி சொன்னார்கள். உடனே இயேசு படகில் ஏறினார். பிசாசு பிடித்திருந்தவன் இயேசுவோடுகூட போக அவரிடத்தில் கெஞ்சினான்.
ஆனால், இயேசு அவனிடத்தில், இல்லை. நீ உன்னுடைய வீட்டிக்குப் போய், தேவன் உனக்குக் கிருபையாய் இறங்கி செய்தவைகளை எல்லோருக்கும் சொல்லும்படி சொன்னார்.
எனவே அவன் போய் எல்லோருக்கும் இயேசு செய்தவைகளை சொன்னான். அவனுடைய கதையைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசு கடலின் அக்கரையில் சேர்ந்தபிறகு, திரளான ஜனங்கள் அவரைச் சுற்றி முன்னும் பின்னும் நெருக்கினார்கள். அந்த கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக பெரும்பாடு உள்ள ஒரு பெண், தன்னுடைய எல்லா பணத்தையும் மருத்துவர்கள் குணமாக்குவார்கள் என்று செலவழித்தும், நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.
இயேசு அநேக வியாதியஸ்தர்களை குணமாக்கினார் என்று கேள்விப்பட்டு, நான் எப்படியாகிலும், அவரைத் தொட்டால் என் வியாதி சுகமாகும் என்று நினைத்து, இயேசுவுக்கு பின்னாடி வந்து, அவருடைய துணியைத் தொட்டாள். அவரைத் தொட்டவுடனே, அவள் சுகமானாள்.
உடனே, இயேசு, தம்மிடத்தில் இருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்து, திரும்பி, என்னைத் தொட்டது யார்? என்று கேட்டார். சீஷர்கள் இயேசுவினிடத்தில், இவ்வளவு நெருக்கமான கூட்டத்தில் என்னைத் தொட்டது யார்? என்று ஏன் கேட்கிறீர் என்று கேட்டார்கள்.
அந்தப் பெண் இயேசுவின் காலில் விழுந்து, மிகவும் நடுக்கத்தோடு, அவள் செய்ததையும், அதினால் நடந்ததையும் இயேசுவிடம் சொன்னாள். உன்னுடைய விசுவாசம் உன்னை விடுவித்தது. நீ சமாதானமாய் போகலாம் என்று இயேசு அவளிடத்தில் சொன்னார்.
வேதாகம கதை:மத்தேயு 8:28-34; 9:20-22; மாற்கு 5:1-20; 5:24b-34; லூக்கா 8:26-39; 8:42b-48