23. இயேசுவின் பிறப்பு
மரியாள் நீதிமானாயிருந்த யோசேப்புக்கு நியமிக்கபட்டிருந்தாள். அவள் கர்ப்பமாய் இருந்ததினால், அது அவனுடைய குழந்தை இல்லை என்பதினால், அவளை அவமானப்படுத்த விரும்பாமல், சமாதானமாய், விவாகரத்து செய்ய விரும்பினான். அவன் அதைச் செய்யும்முன்னே, தேவன்தூதன் அவன் சொப்பனத்தில் வந்து அவனோடு பேசினான்.
தேவதூதன் யோசேப்பினிடத்தில், யோசேப்பே, மரியாளை உன் மனைவியாய் சேர்த்துக் கொள்ள பயப்படாதே, அந்தக் குழந்தை பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கிறது. அவள் ஒரு ஆண் பிள்ளையைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயர் வை, [இயேசு என்பதற்கு யேகோவா மீட்ப்பர் என்று அர்த்தம்] அவர் ஜனங்களின் பாவங்களை நீக்குவார்.
பின்பு மரியாளை யோசேப்பு திருமணம் செய்து, அவனுடைய வீட்டில் தன்னுடைய மனைவியாய் சேர்த்துக் கொண்டான். ஆனால் அவள் பிள்ளைப்பெறும் வரை, அவளைத் தொடவில்லை.
மரியாளுக்கு பிரசவம் ஆகப்போகும் சமயத்தில், யோசேப்பும், மரியாளும் பெத்லேகேம் என்னும் தூரமான ஊருக்கு போகவேண்டியிருந்தது. ஏனெனில், ரோம அதிகாரிகள் இஸ்ரவேலர்களை கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால் ஒவ்வொருவரும் தங்கள் முன்னோர் இருந்த ஊர்களுக்குப் போக வேண்டியிருந்தது. தாவீது ராஜா பெத்லகேமிலே பிறந்ததினால், அவனுடைய சந்ததியில் வந்த யோசேப்பும், மரியாளும் அங்கே போக வேண்டியிருந்தது.
யோசேப்பும் மரியாளும் பெத்லேகேம் போனபோது, அவர்கள் தங்கும்படி மிருகஜீவன்கள் இருக்கும் இடத்தை தவிர வேறு இடம் இல்லை. அந்த இடத்தில் மரியாளுக்குக் குழந்தை பிறந்து, அங்கே ஒரு மெத்தைக்கூட இல்லை, எனவே குழந்தையை முன்னணையிலே வைத்து, அந்தக் குழந்தைக்கு, இயேசு என்று பெயர் வைத்தார்கள்.
அந்த இரவில் சில மேய்ப்பர்கள், வயல்வெளியில் ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்தனர். உடனே வெளிச்சம் போல் ஒரு தேவதூதன் தோன்றினான், அவர்கள் பயந்தனர். தேவதூதன் அவர்களைப் பார்த்து, பயப்படாதிருங்கள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேசியா, ராஜா, பெத்லகேமிலே பிறந்திருக்கிறார்! என்றான்.
துணிகளில் சுற்றி, முன்னணையிலே வைத்திருக்கும் குழந்தையை போய் பாருங்கள் என்றதும், வானத்தில் தேவதூதர்கள் தோன்றினர். அவர்கள் தேவனைத் துதித்து, தேவனுக்கு மகிமையும், பூமியிலே சாமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகட்டும் என்றனர்.
தேவதூதர்கள் மறைந்த பின்பு, மேய்ப்பர்கள் அந்தக் குழந்தையை பார்க்கும்படி அவர்கள் ஆடுகளை விட்டுப் போனார்கள். தூதர்கள் சொன்னபடியே அவர்கள் முன்னணையிலே இருந்த இயேசுவை பார்த்து ஆச்சரியமடைந்தனர். அவர்கள் தங்கள் மந்தையினிடத்திற்கு திரும்பி, அவர்கள் கேட்டவைகளையும், பார்த்தவைகளையும் நினைத்து தேவனைத் துதித்தார்கள்.
கிழக்குப் பகுதியில் இருந்த சில மனிதர்கள், வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களைப் பார்த்து, அதைப்பற்றி அறிந்திருந்ததினால் [வான சாஸ்திரிகள்], யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்று அறிந்து, அந்தக் குழந்தையைப் பார்க்கும்படி, தூரத்திலிருந்து பிரயாணமாய், பெத்லேகேமில் இயேசுவும் அவருடைய பெற்றோரும் இருந்த இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இயேசுவையும், அவருடைய தாயையும் பார்த்து, பணிந்து வணங்கி, துதித்தனர். அவர்கள் இயேசுவுக்கு விலையேறப்பெற்ற பரிசுகளைக் கொடுத்து, பின்பு வீடு திரும்பினர்.
வேதாகம கதை: மத்தேயு 1; லூக்கா 2