34. இயேசு சொன்ன மற்ற கதைகள்
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு பல கதைகளை சொன்னார். உதாரணமாக, அவர் சொன்னார், தேவனுடைய ராஜ்யம் கடுகு விதையை ஒருவன் அவனுடைய நிலத்தில் விதைப்பது போன்றது. கடுகு விதை எல்லா விதைகளிலும் சின்னது.
ஆனால் கடுகு விதை வளரும் போது, தோட்டத்தில் உள்ள எல்லா மரங்களிலும் பெரியதாகி, பறவைகள் வந்து, அதின் கிளைகளில் கூடு கட்டும் அளவு பெரிதாகும்.
இயேசு சொன்ன வேறு கதை, அதாவது, தேவனுடைய ராஜ்யம் புளித்த மாவைப் போன்றது, அதை ஒரு பெண் எடுத்து அது புளிக்கும்வரை மூடி வைப்பதற்கு சமம்.
தேவனுடைய ராஜ்யம், ஒரு புதையலை நிலத்தில் பதுக்கி வைப்பதை போன்றது. வேறொருவன் அதைப் பார்த்து, அவன் அதை அதிகமாய் விரும்பி, வேறொரு இடத்தில் அதை பதுக்கி வைப்பான். அதினால் மிகவும் சந்தோஷப்பட்டு, தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் இருக்கும் நிலத்தை வாங்குவான்.
தேவனுடைய ராஜ்யம், விலையேறப்பெற்ற முத்தைப் போன்றது. அதை வியாபாரம் செய்பவன் பார்த்து, தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த முத்தை வாங்குவது போன்றது.,
சில மனிதர்கள், தாங்கள் நல்ல காரியங்களை செய்வதினால் இயேசு அவர்களை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தார்கள். அவர்கள் நன்மை செய்யாதவர்களை வெறுத்தார்கள், எனவே இயேசு அவர்களுக்கு ஒரு கதையை சொன்னார். இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஜெபிக்கும்படி, தேவனுடைய ஆலயத்திற்குப் போனார்கள். அதில் ஒருவன் வரி வசூலிப்பவன், மற்றவன் மதத் தலைவன்.
திருடுகிற, அநியாயம் செய்கிற, விபச்சாரம் செய்கிற, மற்றும் இங்கே இருக்கும் மற்ற வரி வசூலிப்பவர்களைப் போல, நான் பாவி இல்லை. எனவே உமக்கு நன்றி, ஆண்டவரே, என்று மதத் தலைவன் ஜெபித்தான்.
உதாணரமாக, வாரத்தில் இரண்டு முறை உபவாசம் எடுக்கிறேன், என்னுடைய சம்பளம் மற்றும் எனக்கு வரும் எல்லாவற்றிலும் பத்து சதவீதம் உமக்கு தசமபாகம் தருகிறேன் என்றான்.
ஆனால், அந்த வரி வசூலிப்பவன், மதத் தலைவனைவிட தூரத்தில் நின்று, வானத்தைப் பார்க்க மனதில்லாமல், தன்னுடைய நெஞ்சில் அடித்து, தேவனே தயவாய் எனக்கு இறங்கும், நான் பாவியான மனுஷன் என்றான்.
பின்பு இயேசு, உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லுகிறேன், மதத் தலைவனின் ஜெபத்தை அல்ல, அந்த வரி வசூலிப்பவனின் ஜெபத்தையே தேவன் கேட்டு, அவனை நீதிமானாக்கினார்.தேவன் பெருமையாய் நினைக்கிறவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார், ஆனால் தாழ்மையாய் இருக்கிறவர்களை ஏற்றுக்கொள்வார் என்றார்.
வேதாகம கதை: மத்தேயு 13:31-33, 44-46; மாற்கு 4:30-32; லூக்கா 13:18-21; 18:9-14