22. யோவானின் பிறப்பு
முன்பு தேவன், அவருடைய ஜனங்களிடம் பேச தீர்கத்தரிசிகளை அனுப்பினார். ஆனால் 4௦௦ வருடங்கள் அவர்களிடமும் தேவன் பேசவில்லை. பின்பு, தேவன் அவருடைய தூதனை, ஆசாரியனாகிய சகரியவிடம் அனுப்பினார். சகரியாவும், அவனுடைய மனைவி எலிசபெத்தும் தேவனை கணம்பன்னினர். அவர்கள் முதிர்வயதாகியும், குழந்தை எதுவும் இல்லாதிருந்ர்கள்.
தேவதூதன் சகரியாவிடம், உன் மனைவி ஒரு ஆண் பிள்ளையை பெறுவாள் என்றான். அவனுக்கு யோவான் என்று பெயரிடு. தேவன் அவனை பரிசுத்த ஆவியினால் நிறைப்பார். மேசியாவை ஏற்றுக்கொள்ள யோவான் ஜனங்களை ஆயத்தப்படுத்துவான்! குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதபடி என் மனைவியும் நானும் வயதானவர்கள், இது உண்மைதான் என்று நான் எப்படி அறிந்து கொள்வேன் ? என்று சகரியா தேவதூதனிடம் கேட்டான்.
அதற்கு தேவதூதன், இந்த நல்ல செய்தியை அறிவிக்கும்படி தேவனால் நான் அனுப்பப்பட்டேன். நீ என்னை நம்பாததினால், குழந்தைப் பிறக்கும்வரை உன்னால் பேச முடியாது என்றான். உடனே, சகரியா ஊமையானான். பின்பு தேவதூதன் போய்விட்டான், சகரியா வீட்டிற்கு போனான், அவனுடைய மனைவி கர்ப்பம் ஆனாள்.
எலிசபெத் ஆறு மாதம் கர்ப்பிணியாய் இருக்கும்போது, அதே தேவதூதன், எலிசபெத்துக்கு சொந்தக்கரியாகிய மரியாள் என்பவளுக்குத் தரிசனமானான். கன்னிகையான இவள் யோசேப்பு என்பவனுக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தாள். தேவதூதன் அவளிடத்தில், நீ கர்ப்பவதியாகி ஒரு ஆண் குழந்தையைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடு. அவர் உன்னதமான தேவனுடைய குமாரனாய் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார் என்றான்.
நான் கன்னிகையாய் இருப்பதினால் இது எப்படி சாத்தியமாகும்? என்று மரியாள் கேட்டாள். அதற்கு தேவதூதன், பரிசுத்த ஆவியும், அவருடைய வல்லமையும் உன்னிடத்தில் வரும், அப்போது அந்தக் குழந்தை பரிசுத்தமாயும், தேவனுடைய குமாரனாயும் இருப்பார். தேவதூதன் சொன்னதை மரியாள் நம்பினாள்.
இது நடந்து முடிந்ததும், மரியாள், எலிசபெத்தை சந்தித்து, அவளை வாழ்த்தினாள், அப்போது, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தைத் துள்ளிற்று. தேவன் அவர்கள் இருவருக்கும் செய்ததை நினைத்து மகிழ்ந்தனர். மூன்று மாதம் அவளை சந்தித்து, பின்பு, மரியாள் அவளுடைய வீட்டிற்குப் போனாள்.
இது நடந்த பின்பு, எலிசபெத் ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். தேவதூதன் சொன்னதுபோல சகரியாவும், எலிசபெத்தும் அவனுக்கு யோவான் என்று பெயர் வைத்தனர். பின்பு சகரியாவை தேவன் பேச வைத்தார். சகரியா பேசியது என்னவென்றால், தேவன் அவருடைய ஜனங்களை நினைத்தருளினார், அவருக்கு மகிமை உண்டாவதாக, நீ, என் மகனே, உன்னதமான தேவனுக்கு நீ தீர்கத்தரிசியாய் இருப்பாய். ஜனங்கள் பாவங்களிலிருந்து எப்படி மன்னிப்பு பெற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுவாய்! என்றான்.
வேதாகம கதை: லூக்கா 1