தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

42. இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்

OBS Image

தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பின நாளில், அவருடைய இரண்டு சீஷர்கள் பக்கத்து ஊருக்குப் போய் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசுவுக்கு நடந்ததைப் பற்றி பேசி, அவர்தான் மேசியா என்று நம்பினோம் ஆனால் அவர் கொலை செய்யபட்டார் என்று பேசிக்கொண்டு நடந்து சென்றார்கள். அப்போது அந்தப் பெண்கள், இயேசு மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களால் அதை நம்ப முடியவில்லை.

OBS Image

இயேசு அங்கே தோன்றி, அவர்களோடு நடந்து சென்று, அவர்கள் பேசுகிறதைப் பற்றி அவர்களிடம் கேட்டார். அவர்கள் இயேசுவைக் கண்டுபிடிக்கவில்லை. பதிலாக, கடந்த சில நாட்களாக இயேசுவுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். அந்த சீஷர்கள் எருசலேமில் நடந்த காரியங்களைக் குறித்து ஒன்றும் தெரியாத யாரோ ஒருவர் என்று நினைத்து இயேசுவிடம் எல்லாவற்றையும் சொன்னார்கள்

OBS Image

வேதத்தில் மேசியாவைக் குறித்து முன்பு தீர்கத்தரிசிகளால் சொல்லப்பட்ட, அதாவது, கெட்ட மனிதர்கள் மேசியாவை துன்பப்படுத்தி, கொலை செய்வார்கள், ஆனாலும் அவர் மூன்று நாளுக்குப் பின் மறுபடியும் அவர் உயிர்த்தெழுவார் என்று சொல்லப்பட்டதையும் அவர்களுக்கு இயேசு விவரித்துச் சொன்னார்

OBS Image

அந்த இரண்டு பேரும் தங்கும்படி இருந்த அந்த ஊர் வந்தது, அப்போது சாயங்காலமாய் இருந்ததினால், அவர்களோடு தங்கும்படி இயேசுவை அழைத்தார்கள், எனவே இயேசு அவர்களோடு வீட்டிற்குள் போனார். அவர்கள் இரவு சாப்பிட உட்கார்ந்தபோது, இயேசு அப்பத்தை எடுத்து அதற்காக தேவனுக்கு நன்றி சொல்லி, அந்த அப்பத்தை பிட்டார். உடனே அவர்கள் அது இயேசு என்று புரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் கண்களுக்கு இயேசு மறைந்தார்.

OBS Image

அவர் இயேசு தான்! அதினால் தான் அவர் தேவனுடைய வார்த்தையைச் சொல்லும் போது நமக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது என்று அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். உடனே அவர்கள் இருவரும் எருசலேமுக்குப் போனார்கள். அவர்கள் வந்து, சீஷர்களைப் பார்த்து, இயேசு உயிரோடிருக்கிறார்! நாங்கள் அவரைப் பார்த்தோம் என்றார்கள்!

OBS Image

அப்படி சீஷர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அவர்கள் இருந்த அறையில் இயேசு அங்கே தோன்றி உங்களுக்கு சமாதானம்! என்று சொன்னார். சீஷர்கள் அவரை ஆவி என்று நினைத்தார்கள். இயேசு அவர்களிடத்தில், ஏன் பயப்படுகிறீர்கள்? நான் தான், இயேசு! என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். ஆவிக்கு என்னைப் போல் சரீரம் இருக்காது. அவர் ஆவி இல்லை என்று அவர்களுக்கு காண்பிக்க, சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார். அவர்கள் மீன் துண்டுகளைக் கொடுத்தார்கள், அவர் அதை சாப்பிட்டார்.

OBS Image

மேலும் இயேசு, என்னைப் பற்றி தேவனுடைய வார்த்தையில் எழுதபட்டிருக்கிற எல்லா நிறைவேற வேண்டும். இப்படி சம்பவிக்கும் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கேன். அநேக வருடங்களுக்கு முன்பு வேதத்தில், தீர்கத்தரிசிகள் நான் மேசியா என்றும், பாடுபட்டு, மரித்து மறுபடியும் உயிர்தெழுவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு எல்லாவற்றையும் புரியும்படி விவரித்துச் சொன்னார்.

OBS Image

மேலும் அந்தத் தீர்கத்தரிசிகள் என்னுடைய சீஷர்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எல்லோரும் பாவத்தை விட்டு, மனந்திரும்பினால், தேவன் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று அவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் அதை எருசலேமில் ஆரம்பித்து, எல்லா இடங்களுக்கும் போவார்கள். நான் செய்ததும், எனக்கு நடந்த எல்லாவற்றிக்கும் நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள் என்றார்.

OBS Image

நாற்பது நாட்கள், இயேசு அவருடைய சீஷர்களுக்கு அநேகந்தரம் தோன்றினார். சீஷர்கள் அல்லாத 5௦௦க்கும் அதிகமான பேருக்கும் அதே சமயத்தில் தோன்றினார்! மேலும் அவர் உயிரோடிருக்கிறார் என்று சீஷர்களுக்குக் காண்பித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து போதித்தார்.

OBS Image

இயேசு அவருடைய சீஷர்களிடத்தில், வானத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றிலும் எனக்கு தேவனால் அதிகாரம் கொடுக்கபட்டிருக்கிறது. எனவே, நீங்கள் போய் எல்லோரையும் என்னுடைய சீஷராக்குங்கள். அதின் அடையாளமாக அவர்களை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பேரில் ஸ்நானம் பண்ணுங்கள். நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு சொல்லி, அதற்கு கீழ்படிய சொல்லுங்கள். நான் எப்போதும் உங்களோடு இருப்பேன். என்றார்.

OBS Image

இயேசு உயிர்தெழுந்து நாற்பது நாட்களுக்குப்பின் சீஷர்களிடத்தில், நீங்கள் எருசலேமில் தங்கியிருங்கள், பிதா உங்களுக்கு வல்லமை கொடுப்பார். அதின் அடையாளமாக பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வருவார். பின்பு இயேசு பரலோகத்திற்கு ஏறிப்போனார். அவர்கள் அவரைப் பார்த்துகுக் கொண்டிருக்கும் போது மேகம் அவரை மறைத்தது. எல்லாவற்றின் மேலும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, அவர் பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.

வேதாகம கதை: மத்தேயு 28:16-20; மாற்கு 16:12-20; லூக்கா 24:13-53; யோவான் 20:19-23; அப்போஸ்தலர் 1:1-11