44. பேதுருவும் யோவானும் ஒரு பிச்சைக்காரனை சுகமாக்குதல்
ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்கு போனார்கள். அப்போது அந்த வாசலில் ஒரு முடவன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
பேதுரு அந்த முடவனைப் பார்த்து, என்னிடத்தில் கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் என்னிடத்தில் இருக்கிறதை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி, இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்றான்!
உடனே தேவன் அவனை குணமாக்கினதினால் அந்த முடவன் நடந்தான். அவன் குதித்து தேவனை மகிமைப் படுத்தினான். அங்கே முன்பதாக இருந்த ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர்.
உடனே சுகம் பெற்ற அந்த மனிதனைப் பார்க்க அநேக ஜனங்கள் அங்கே வந்தனர். பேதுரு அவர்களிடத்தில், அவன் சுகமானான். ஆனால் நீங்கள் ஆச்சரியபட வேண்டாம். எங்களுடைய பலத்தினாலும், நாங்கள் தேவனை ஆராதிப்பதினாலும் அவனை குணமாக்கவில்லை, மாறாக நாங்கள் இயேசுவை நம்புகிறோம் எனவே அவருடைய வல்லமைதான் இவனை குணமாக்கிற்று என்றான்.
ரோமர்களின் அதிகாரியிடம் நீங்கள் தான் இயேசுவை கொலைசெய்ய சொன்னீர்கள். எல்லோருக்கும் ஜீவனைக் கொடுக்கும் இயேசுவை நீங்கள் கொலை செய்தீர்கள். ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். நீங்கள் செய்ததை நீங்கள் அறியாமல் செய்தீர்கள் ஆனால் தீர்கத்தரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறிற்று. தேவனே அப்படி நடக்கும்படி செய்தார், இப்போது நீங்கள் மனந்திரும்பி, தேவனிடத்தில் சேருங்கள். தேவன் உங்களுடைய பாவங்களைப் போக்குவார் என்றான்.
பேதுருவும் யோவானும் செய்ததை யூத தேவாலய தலைவர்கள் கேட்டு, கோபமடைந்து, அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். ஆனால் பேதுரு சொன்ன வார்த்தையைக் கேட்ட அநேகர் விசுவாசித்தனர். இயேசுவை விசுவாசித்தவர்களின் எண்ணிக்கை 5,௦௦௦ ஆக உயர்ந்தது.
அடுத்தநாள், யூத தலைவர்கள் பேதுருவையும், யோவானையும் மற்றும் அந்த சுகம்பெற்ற முடவனையும் மதத் தலைவர்களிடத்தில் கொண்டு போனார்கள். அவர்கள் எந்த வல்லமையினால் இந்த முடவனை சுகமாக்கிணீர்கள்? என்று பேதுருவையும், யோவானையும் கேட்டார்கள்.
பேதுரு அவர்களிடத்தில் இந்த மனிதன் மேசியா என்ற இயேசுவின் நாமத்தினால் சுகம் பெற்றான். நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் தேவன் அவரை மீண்டும் உயிரோடு எழுப்பினார்! நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் இரட்சிக்கபடுவதற்கு இயேசுவைத் தவிர வேறே நாமம் இல்லை என்றான்!
பேதுருவும் யோவானும் தைரியமாக பேசினதைப் பார்த்து, அவர்கள் படிக்காத சராசரி மனிதர்கள் என்று தலைவர்கள் அறிந்திருந்ததினால் ஆச்சரியப்பட்டனர். மேலும் அவர்கள் இயேசுவோடு இருந்ததை அவர்கள் அறிந்து, இனிமேல் இயேசுவைப் பற்றி எந்த பிரசங்கமும் ஜனங்களுக்கு செய்யக்கூடாது என்று அநேகக் காரியங்களையும் சொல்லி பேதுருவையும், யோவானையும் அனுப்பிவிட்டனர்.
வேதாகம கதை: அப்போஸ்தலர் 3: 1-4:22