29. இரக்கம் இல்லாத வேலைக்காரனின் கதை
ஒருநாள் பேதுரு, இயேசுவினிடத்தில், போதகரே, எனக்கு விரோதமாய் குற்றம் செய்யும் என்னுடைய சகோதரனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை போதுமா? என்று கேட்டான். அதற்கு இயேசு, ஏழு முறை இல்லை, ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும். அவர் சொன்னதின் அர்த்தம் என்னவென்றால், நாம் எப்போதும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பது தான். அதற்கு பின்பு ஒரு கதையை சொன்னார்.
இயேசு சொன்னது, தேவனுடைய ராஜ்யம், ஒரு ராஜா தன்னுடைய கணக்கை அவனுடைய வேலைக்காரனிடத்தில் ஒப்புவிப்பது போன்றது. ஒரு வேலைக்காரன் அநேக வருடங்களின் தொகையாக ருபாய் 200,000 கடனாயிருந்தான்.
அவனால் அந்த பணத்தைத் திரும்ப தரமுடியாமல் போனதினால், ராஜா, அந்த வேலைகாரனையும், அவனுடைய குடும்பத்தையும் அடிமைகளாக விற்று, கடனை அடைக்கும்படி சொன்னான்.
அந்த வேலைக்காரன் ராஜாவின் காலில் விழுந்து, ஐயா, கொஞ்சம் பொறுமையாயிரும், நான் உம்மிடத்தில் வாங்கிய கடனை முழுவதும் தந்து விடுவேன் என்று கெஞ்சினான். எனவே, அந்த ராஜா அவனுக்கு இரக்கம் செய்து, அவனுடைய எல்லா கடனையும் மன்னித்து, அவனை அனுப்பி விட்டான்.
ஆனால், அந்த வேலைக்காரன் ராஜாவினிடத்திலிருந்து போய், அவனிடத்தில் நான்கு மாதத்தொகையாக கடன் வாங்கியிருந்த இன்னொரு வேலைக்காரனைப் பார்த்து, அவனைப் பிடித்து, என்னிடத்தில் வாங்கிய பணத்தை கொடு என்று கேட்டான்!
கடன் வாங்கிய வேலைக்காரன், மற்றவனின் காலில் விழுந்து, கொஞ்சம் பொறுமையாயிரும், நான் உம்மிடத்தில் வாங்கிய கடனை முழுவதும் தருகிறேன் என்று அவனிடத்தில் கெஞ்சினான். ஆனால், இந்த வேலைக்காரன், கடன் வாங்கியவன் மறுபடியும் அதைத் திரும்பத் தரும் வரை, அவனைப் பிடித்து காவலில் வைத்தான்.
அதைப் பார்த்த சிலர், மிகவும் தூக்கப்பட்டு, ராஜாவினிடத்தில் போய், நடந்த எல்லாவற்றையும் சொன்னார்கள்.
உடனே ராஜா, அந்த வேலைக்காரனை கூப்பிட்டு, நீ கெட்டவன்! நீ என்னிடத்தில் கெஞ்சினதினால் நான் உன்னுடைய எல்லா கடனையும் மன்னித்தேன், அதேபோல உன்னிடத்தில் கடன் வாங்கினவனுக்கும் நீ செய்திருக்க வேண்டும் என்று சொல்லி, அவன்மேல் மிகவும் கோபமடைந்து, கெட்ட வேலைக்காரன் வாங்கிய கடனை மறுபடியும் கொடுக்கும்வரை அவனைக் காவலில் போட்டான்.
இதேபோல் நீங்களும் மற்றவர்களை முழு இருதயத்தோடு மன்னிக்கா விட்டால், பரலோகத்தில் இருக்கிற என் தகப்பனும் உங்களுக்கும் இப்படியே செய்வார் என்று இயேசு சொன்னார்.
வேதாகம கதை: மத்தேயு 18:21-35