தமிழ்: Open Bible Stories

Updated ? hours ago # views See on DCS

16. மீட்பர்கள்

OBS Image

யோசுவா மரித்த பின்பு, இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படியாமல், அவருடைய கட்டளைகளின்படி செய்யாமலும், வாக்கு பண்ணபட்ட கானானில் இருந்த மற்ற ஜனங்களை துரத்திவிடாமல். உண்மையான யேகோவா தேவனை ஆராதிக்காமல், அவர்களுடைய தேவர்களை ஆராதித்தனர். இஸ்ரவேலருக்கு ராஜா இல்லாததினால், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பார்வைக்கு நலமாய் தோன்றியதைச் செய்தனர்.

OBS Image

இப்படியே இஸ்ரவேலர்கள் தேவனுக்குக் கீழ்படியாமல் அநேக வருடங்கள் இப்படியே செய்து வந்தனர். தேவனுக்கு இஸ்ரவேலர் கீழ்படியாததினால் அவர்களை தண்டிக்கும்படி, விரோதிகள் கையில் ஒப்புக்கொடுப்பார். அவர்கள் இஸ்ரவேலரின் உடைமைகளைத் திருடி, அவர்களுடைய எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அவர்களில் அநேகரை கொன்று போடுவார்கள். இஸ்ரவேலரை விரோதிகள் மிகவும் ஒடுக்கினபின்பு, அவர்கள் மனந்திரும்பி தேவன் அவர்களை மீட்க்கும்படி ஜெபிப்பார்கள்

OBS Image

அவர்கள் மனந்திரும்பிய ஒவ்வொரு முறையும் தேவன் இஸ்ரவேலரை காப்பாற்றி, அவர்களை இரட்சித்தார். எப்படியெனில், விரோதிகளுடன் யுத்தம் செய்து அவர்களைக் காப்பாற்றும்படி ஒரு இரட்சகன் என்று ஒவ்வொரு முறையும் தேவன் அநேகரை அனுப்பினார். அவர்கள் இஸ்ரவேலரைக் காப்பாற்றி, அவர்களை ஆளுவார்கள். இப்படியே தேவன் அநேகரை எழுப்பினார். அவர்கள் அருகில் இருந்த மீதியானியர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தபோதும் தேவன் இப்படியே செய்தார்.

OBS Image

மீதியானியர்கள் இஸ்ரவேலரின் எழு வருடத்தின் விளைச்சலை எடுத்துக்கொண்டனர். இஸ்ரவேலர் மிகவும் பயந்து மீதியானியர்கள் தங்களை காணாதபடி கெபிகளில் ஒளிந்து கொண்டனர். இறுதியாக தேவன் அவர்களை விடுதலையாக்கும்படி அவரிடத்தில் அழுதனர்.

OBS Image

கிதியோன் என்னும் ஒருவன் இஸ்ரவேலில் இருந்தான். ஒரு நாள் அவன் மீதியானியர்கள் காணாதபடி மறைந்து கதிர்களை போரடித்துக் கொண்டிருந்தான். அப்போது தேவதூதன் கிதியோனிடம் வந்து, பராக்கிரமசாலியே தேவன் உன்னோடு இருக்கிறார். போய் இஸ்ரவேலரை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிப்பாய் என்றார்.

OBS Image

கிதியோனுடைய தகப்பன் விக்கிரகத்திற்கு பலியிடும்படி ஒரு பலிபீடத்தை வைத்திருந்தான். தேவன் அதை இடித்துப் போடும்படி கிதியோனிடம் சொன்னார். ஆனால் வன் ஜனங்களுக்கு பயந்ததினால், இரவு வரும்வரை காத்திருந்தான். இரவில் அதை இடித்துப் போட்டு, தேவனுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனுக்கு பலி செலுத்தினான்.

OBS Image

மறுநாள் காலையில் பலிபீடம் இடிக்கப்பட்டு இருப்பதை பார்த்த ஜனங்கள் மிகவும் கோபமடைந்து, கிதியோனை கொன்று போடும்படி அவனுடைய வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவனுடைய தகப்பன், உங்கள் தேவனுக்கு நீங்கள் ஏன் உதவ வேண்டும், அவர் தேவனானால் அவர் தாமே அவரை காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றான். இப்படி அவன் சொன்னதினால் கிதியோனை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

OBS Image

மீதியானியர்கள் இஸ்ரவேலரை கொள்ளையிடும்படி மிகவும் திரளாய் வந்தனர். அவர்கள் எண்ணக்கூடாதிருந்தனர். அப்போது கிதியோன் இஸ்ரவேலரை யுத்தம் பண்ணும்படி கூட்டி, நிஜமாகவே தேவன் தன்னை இஸ்ரவேலை மீட்க அனுப்புவதற்கு தேவனிடத்தில் இரண்டு அடையாளத்தை கேட்டான்.

OBS Image

முதலாவது, கிதியோன் ஆட்டுத்தோலை தரையிலே போட்டு, காலையின் பனி தோலின் மேல் மட்டும் நனைக்கும்படி தேவனிடத்தில் கேட்டான். தேவன் அப்படியே செய்தார். அடுத்த நாள் இரவு, அந்த தோல் நனையாமலிருக்கவும், தரை முழுவதும் பனி பெய்திருக்கும் படி கேட்டான். அப்படியே தேவன் செய்தார். இந்த இரண்டு அடையாளத்தினால் தேவன் அவனை உறுதியாய் இஸ்ரவேலை மீட்க மீதியானியரிடத்தில் அனுப்புவதை அறிந்து கொண்டான்.

OBS Image

பின்பு கிதியோன் யுத்த புருஷர்களை அழைத்தான். 32,௦௦௦ பேர் வந்தனர். ஆனால் இது மிகவும் அதிகம் என்று தேவன் சொன்னதினால், யுத்தத்திற்கு பயந்த 22,௦௦௦ பேரை திருபி அனுப்பி விட்டான். பின்னும் தேவன் அதிகம் என்றதினால், தன்னோடு 3௦௦ பேரை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான்.

OBS Image

அந்த இரவில் தேவன் கிதியோனிடம், அவர்கள் பயப்படாமல் யுத்தம் பண்ணும்படி, மீதியானியர் இருக்கும் பாளையத்திற்கு போய் அவர்கள் அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கேட்க சொன்னார். எனவே கிதியோன் மீதியானியர் பாளையத்தில் ஒருவன் தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னான். அதாவது, கிதியோனின் ராணுவம் நம்மை தோற்கடிக்கும்! என்றான். இதைக் கிதியோன் கேட்டதும், தேவனைத் துதித்தான்.

OBS Image

கிதியோன் திரும்பி வந்து, அவனோடே இருந்த 3௦௦ பேருக்கும் எக்காளமும், மண்பானையும், தீப்பந்தமும் கொடுத்தான். பின்பு அவர்கள் மீதியானியர் இருக்கும் பாளையத்தை சுற்றி வளைத்தனர். தங்கள் கைகளில் மண் பானைகளை வைதிருந்ததினால் மீதியானியரால் அவர்களின் தீப்பந்தத்தை பார்க்க முடியவில்லை.

OBS Image

பின்பு ஒரே சமயத்தில் கிதியோனின் மனிதர்கள் பானையை உடைத்து, தீப்பந்தத்தை எடுத்து, எக்காளம் ஊதி, யெகோவாவின் பட்டயம், கிதியோனின் பட்டயம் என்று சத்தமிட்டனர்.

OBS Image

தேவன் மீதியானியரை குழப்பமடைய செய்ததினால் அவர்கள் தங்களில் ஒருவரையொருவர் வெட்டி, காயபடுத்திக் கொண்டனர். உடனே கிதியோன் மேலும் அநேக இஸ்ரவேலரை கூட்டி, மீதியானியரைப் பின் தொடர்ந்து, அவர்களில் அநேகரை கொன்று போட்டனர். அன்று 12௦,௦௦௦ மீதியானியர்கள் மரித்தனர். இப்படியாக தேவன் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பைத் தந்தார்.

OBS Image

ஜனங்கள் கிதியோனை தங்களுக்கு ராஜாவாக்கும் படி விரும்பினார்கள். ஆனால் கிதியோன் அப்படி செய்ய அனுமதியாமல், மீதியானியரிடத்தில் இருந்து எடுத்து வந்த தங்க ஆபரணங்களை கொடுக்கும்படி கேட்டான். அவர்கள் எல்லோரும் தந்தனர்.

OBS Image

பின்பு கிதியோன் அதினால் ஆசாரியர்கள் பயன் படுத்தும் ஒரு ஏபோத்தை உண்டாக்கினான். அதை ஒரு விக்கிரகமாக நினைத்து, ஜனங்கள் தொழுக ஆரம்பித்தனர். எனவே தேவன் இஸ்ரவேலை தண்டித்தார். அவர்களுடைய விரோதிகளிடம் ஒப்புக் கொடுத்தார். அவர்கள் தங்களை விடுவிக்கும்படி வேண்டினர், பின்பு வேறொரு மீட்பரை அனுப்பி அவர்களை விடுவித்தார்.

OBS Image

இப்படியே அநேகந்தரம் ஆயிற்று. இஸ்ரவேலர் பாவம் செய்வதும், தேவன் அவர்களைத் தண்டிப்பதும், பின்பு அவர்கள் மனந்திரும்புவதும், தேவன் ஒருவனை அனுப்பி அவர்களை மீட்பதுமாய் இருந்தது. தேவன் இஸ்ரவேலரை அநேக வருடங்களாய் அவர்களை இரட்சித்து, விரோதிகளிடமிருந்து மீட்டார்.

OBS Image

இறுதியில், தங்களை ஆளும்படி ராஜா வேண்டும் என்று ஜனங்கள் தேவனிடத்தில் கேட்டனர். ஏனெனில் மற்ற தேசங்களைப் போல இருக்கவும் யுத்தத்தில் முன் நின்று அவர்களை நடத்தவும் விரும்பினர். தேவன் அதை விரும்பவில்லை, ஆனால் அவர்கள் கேட்டது போலவே ராஜாவை ஏற்படுத்தினார்.

வேதாகம கதை: நியாயாதிபதிகள் 1-3; 6-8; 1சாமுவேல் 1-1௦