தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Mark

Mark 1

Mark 1:1-3

உன்னுடைய ... உன்னுடைய

ஒருமை

கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருடைய பாதைகளை நேராக்குங்கள்

இந்த இரண்டு கட்டளைகளும் ஒரே காரியத்தை தான் குறிக்கிறது: முக்கியமான ஒருவரை சந்திக்க “ஆயத்தமாகுங்கள்.” உங்கள் மொழியில் இவை (இரண்டும்) ஒரே அர்த்தத்தைக் கொடுத்தால், UDB செய்வதுபோல இரண்டாம் வரியை நீங்கள் நீக்கிவிடலாம்.

Mark 1:4-6

யோவான் வந்தபொழுது

மாற்கு 1:1, 2, 3 இல் யோவானைக்குறித்தே சொல்லப்பட்டுள்ளது என்று உங்கள் வாசகர்கள் புரிந்துகொள்ள கவனமாய் இருங்கள்.

அவன்...அவனுக்கு...அவனுடைய

யோவான்

யூதேயா தேசம் முழுவதும் மற்றும் எருசலேம் மக்கள் அனைவரும்

“யூதேயாவிலிருந்தும் எருசமிலேமிலிருந்தும் அநேகர்”

Mark 1:7-8

அவன் பிரசங்கித்தான்

யோவான் பிரசங்கித்தான்

கீழே தாழ்ந்து அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக் கூட நான் தகுதியில்லை

ஒரு வேலைக்காரனின் மிகவும் கீழ்த்தரமான வேலையைக் கூட செய்ய தான் பாத்திரவான் அல்ல என்று யோவான் சொல்லுகிறான்.

கீழே தாழ்ந்து

“கீழே குனிந்து”

பரிசுத்த ஆவியினால் உங்களை ஞானஸ்நானம் பண்ணி

தண்ணீர் ஞானஸ்நானம் எப்படி மக்களை தண்ணீரோடு தொடர்பு கொள்ளச் செய்கிறதோ, அதுபோல ஆவியின் ஸ்நானம் மக்களை பரிசுத்த ஆவியோடு தொடர்பு கொள்ளச் செய்கிறது.

Mark 1:9

Mark 1:10-11

நீங்கள் அறிந்துகொள்ளும்படி

“நான் உங்களுக்கு நிரூபிப்பேன்”

உங்களுக்கு

வேதபாரகருக்கும் மக்களுக்கும்

முடக்குவாதனைப் பார்த்து அவர் சொன்னார்

“அவர் நடக்கமுடியாதவனைப் பார்த்து சொன்னார்”

அவர்கள் எல்லாருக்கும் முன்பாக

“அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தாருக்கு முன்பாக”

Mark 1:12-13

அவர் வெளியே போகும்படி கட்டாயப்படுத்தினர்

இயேசுவை பலவந்தமாய் வெளியே துரத்தினார்கள்.

அவன் காடுகளில் இருந்தான்

“அவன் காடுகளில் தங்கி இருந்தான்”

நாற்பது நாட்கள்

“40 நாட்கள்”

அவன் ...கூட

“அவன் ...மத்தியில்”

Mark 1:14-15

யோவான் கைது செய்யப்பட்ட பின்

“யோவான் சிறையில் வைக்கப்பட்ட பின்.” மறு மொழிபெயர்ப்பு: “யோவானைக் கைது செய்த பிறகு”

தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்தி

“தேவனிடமிருந்து வந்த நற்செய்தியை பிரசங்கித்து”

காலம் நிறைவேறினபோது

“இப்பொழுது நேரமாயிற்று”

Mark 1:16-18

அவர் சிமியோனையும் அந்திரேயாவையும் பார்த்தார்”

“இயேசு சிமியோனையும் அந்திரேயாவையும் பார்த்தார்”

வலையைப் போடுதல்

“வலையை வீசுதல்”

அவர்கள் மீனவர்களாய் இருந்தபடியினால்”

“அவர்கள் மீனவர்கள் ஆனபடியினால்”

என் பின்னே வாருங்கள்”

“என்னைப் பின்பற்றுங்கள்”

நான் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்

அவர்கள் மீன்களைப் பிடித்தது போல மக்களைப் பிடிப்பதற்கு அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்.

அவர்கள் வலைகளை விட்டு அவர் பின்னே சென்றார்கள்.

“ இயேசுவைப் பின்பற்றுவதற்காக அவர்களுடைய வேலையை அவர்கள் விட்டுவிட்டார்கள்.”

Mark 1:19-20

படகில்

“அவர்களுடைய படகில்”

வலைகளை சரிசெய்தல்

“வலைகளைப் பழுது பார்த்தல்”

கூலியாட்கள்

“அவர்களுக்கு வேலை செய்த வேலையாட்கள்”

அவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்

“யாக்கோபும் யோவானும் இயேசுவோடு சென்றனர்”

Mark 1:21-22

Mark 1:23-26

அவர்களுடைய ஆலயம்

இயேசு தாம் போதிக்க துவங்கினதும், இப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் நடந்து வந்திருக்கிற ஆராதனை இடம் இதுவாகும்.

எங்களை அழிக்கவா வந்தீர்

மறு மொழிபெயர்ப்பு: “எங்களை அழிக்காதீர்”

Mark 1:27-28

Mark 1:29-31

அவர்கள் சென்றபிறகு

இயேசுவுக்கு பின் சீமோனும் அந்திரேயாவும் சென்ற பிறகு

அவள் காய்ச்சல் அவளை விட்டு நீங்கியது

மறு மொழிபெயர்ப்பு: “சீமோனின் மாமிஅவளுக்கு இருந்த காய்ச்சலிலிருந்து குணமாக்கப்பட்டாள்”

அவள் அவர்களுக்கு சேவை செய்யத் துவங்கினால்

மறு மொழிபெயர்ப்பு: “அவர்களுக்கு உணவும் பானமும் கொடுத்தாள்”

Mark 1:32-34

அவருக்கு...அவர்...அவன்...அவருக்கு

இயேசு

முழு நகரமும் கதவண்டையில் கூடியது

“அந்தப்பட்டணத்திலிருந்து அநேகர் கதவுக்கு வெளியே கூடியிருந்தார்கள்”

Mark 1:35-37

ஒரு தனிமையான இடம்

“அவர் தனிமையாக இருக்கும்படியான ஒரு இடம்”

எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்

மறு மொழிபெயர்ப்பு: “அநேகர் உம்மைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்”

Mark 1:38-39

அவர்...அவர்...அவன்...அவன்

இயேசு

நாம் வேறு எங்கேயாவது போவோம்

“நாம் வேறு இடத்திற்குப் போக வேண்டும்.”

அவர் கலிலேயா முழுவதும் போனார்

“அவர் கலிலேயாவில் அநேக இடங்களுக்குப் போனார்”

Mark 1:40-42

ஒரு குஷ்டரோகி அவரிடத்தில் வந்தான்; அவன் முழங்கால் படியிடும்போது அவன் அவரைக் கெஞ்சினான். அவன் அவரிடம் சொன்னான்.

“ஒரு குஷ்டரோகி இயேசுவிடம் வந்தான்; குஷ்டரோகி முழங்கால்படியிடும் போது இயேசுவைக் கெஞ்சினான். குஷ்டரோகி யேசுவிடம் சொன்னான்”

நீ விரும்பினால்

“உன்னை சுத்தமாக்க நீ விரும்பினால்”

நீர் என்னை சுத்தமாக்கலாம்

“நீர் என்னை சுகமாக்கலாம்” குஷ்டரோகம் உள்ளவர்கள் அசுத்தமானார்கள் என்று கருதப்பட்டனர். சமுதாயத்திற்கு வெளியே துரத்தப்பட்டிருந்தனர். ஆனால் குஷ்டரோகம் நீங்கினவுடனே அந்த மனிதன் சமுதாயத்துக்குள் வரலாம்.

நான் விரும்புகிறேன்

“நான் உன்னை சுத்தமாக்க விரும்புகிறேன்”

Mark 1:43-44

அவனுக்கு...அவனுக்கு...அவனுக்கு

குஷ்டரோகி குணமானான்

உன்னை காண்பி

“உன் தோலைக் காண்பி”

Mark 1:45

அவன் சென்றான்...அவன் பரப்பினான்

“அந்த மனிதன் வெளியே சென்றான்...அந்த மனிதன் பரப்பினான்”

எல்லாரிடமும் சொல் மற்றும்...வார்த்தையைப் பரப்பு

“அநேகரிடம் சொல்லத் துவங்கினான்” (UDB)

ஒவ்வொருவரும்

அவன் சந்தக்கிற ஒவ்வொருவரும்

இயேசு சுதந்திரமாக பட்டணத்துக்குள் போக முடியவில்லை

“மக்கள் கூட்டம் இயேசுவை பட்டணங்களில் சுதந்திரமாக உலாவ முடியாமல் தடுத்தது”

எல்லா இடங்களிலிருந்தும்

“பிரதேசம் எங்கிலுமிருந்து” (UDB)

Mark 2

Mark 2:1-2

அவர் ஒரு வீட்டில் இருப்பதாக அங்கிருந்த மக்கள் கேள்விப்பட்டனர்

“அவர் அதே வீட்டில் தங்கி இருப்பதாக அங்கிருந்த மக்கள் கேள்விப்பட்டனர்”

அவர்களுக்கு பின்பு உள்ளே இடமில்லாமல் போனது

“அவர்களுக்கு உள்ளே இடமில்லாமல் போனது”

Mark 2:3-4

முடக்குவாதக்காரனைக் கொண்டுவந்தார்கள்

“நடக்க முடியாத அல்லது அவன் கைகளை அசைக்கமுடியாத ஒரு மனிதனைக் கொடுவந்தார்கள்”

நான்கு பேர்

“4 மக்கள்”

கேட்க முடியவில்லை

“இயேசு இருந்த இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை”

Mark 2:5-7

அவர்கள் விசுவாசத்தைக் கண்டு

“அந்த மனிதர்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்று கண்டு.” இது 1. முடக்குவாதக்காரனை சுமந்தவர்களுக்கு மட்டும் தான் விசுவாசம் இருந்தது என்றோ அல்லது 2. முடக்குவாதக்காரனுக்கும் அவனை சுமந்தவர்களுக்கும் விசுவாசம் இருந்தது என்றும் அர்த்தப்படும்.

முடக்குவாதக்காரன்

“நடக்கக்கூடாத மனிதன்”

மகன்

ஒரு தகப்பன் தன் மகனுக்காக அக்கறைக் காட்டுவதைப் போல இயேசு தான் அந்த மனிதன் மீது அக்கறை இருக்கிறது என்று காட்டுகிறார்

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது

இது 1. “தேவன் உன் பாவங்களை மன்னித்தார் என்றோ அல்லது (2:7 ஐ பார்) அல்லது 2. “நான் உன் பாவங்களை மன்னித்தேன் என்றோ அர்த்தப்படலாம்.

அவர்களது இருதயங்களில் நிதானித்தார்கள்

“அவர்களாகவே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்”

எப்படி இந்த மனிதன் இவ்வாறு பேசமுடிகிறது?

“இந்த மனிதன் இவ்வாறு பேசக்கூடாது.”

தேவனைத் தவிர யார் பாவங்களை மன்னிக்கமுடியும்?

“தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்க முடியும்.”

Mark 2:8-12

அவர்களுக்குள்ளாகவே அவர்கள் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்

வேதபாரகர்கள் அவனவனுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

உங்கள் இருதயங்களில் என்ன சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அவருடைய அதிகாரத்தை சந்தேகப்பட்டதற்காக வேதபாரகர்களை இயேசு கடிந்துக் கொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “வேதபாரகர்களாகிய நீங்கள் என்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கிறீர்களா?

எது சுலபம்...?

முடக்குவாதக்காரனை அவர் குணமாக்கின போது வேதபார்கர்கள் அவர் பாவத்தை மன்னித்தார் என்று அறிந்துகொள்ளவும்; அவனுடைய பாவங்களால் அவன் முடமானான் என்றும் அதனால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதானால் அவன் நடக்க முடியும் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் வேதபாரகர்களை நினைவுபடுத்தும்படியாய் இயேசு இந்த கேள்வியைக் கேட்டார்.

சொல்லுவதற்கு எது எளிது...’உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றோ’ அல்லது ‘எழுந்து...நட என்று சொல்லுவதோ?

“’உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று’சொல்லுவது எளிதா? அல்லது ‘எழுந்து...நட என்று சொல்லுவது எளிதா?

Mark 2:13-14

அந்த மக்கள் அவரிடம் வந்தார்கள்

“அவர் இருக்கும் இடத்திற்கு மக்கள் சென்றனர்”

Mark 2:15-16

லேவியின் வீடு

“லேவியின் வீடு”

இயேசுவோடும் அவருடைய சீடர்கலோடும் அநேக வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்; ஏனென்றால் அவரை அநேகர் பின்தொடர்ந்தனர்.

“இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் அவரை பின் பற்றின அநேக வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.”

“ஏன் இவர் வரிவசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிட்டுக்கொண்டிருகிறார்?”

வேதபாரகர்களும் பரிசேயர்களும் இயேசு செய்கிறதை நிராகரித்தனர் என்பதைக் காட்டினர். மறு மொழிபெயர்ப்பு: “வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து அவர் உண்ணவும் குடிக்கவும் கூடாது.”

Mark 2:17

அவர் அவர்களுக்கு சொன்னார்

“பரிசேயர்களுக்கு சொன்னார்”

“உடலில் பலம் உள்ளவர்களுக்கு வைத்தியன் தேவை இல்லை; வியாதிப்பட்டவர்களுக்கு தான் ஒருவன் வேண்டும்”

இயேசு அடுத்த வாக்கியத்தில் தான் விளக்குகிற உருவகத்தை இங்கு பயன்படுத்துகிறார். தாங்கள் பாவிகள் என்று அறிந்தவர்களுக்காக அவர் வந்தார். தங்களை நீதிமான்கள் என்று கருதுபவர்களுக்கு அல்ல.

நான் நீதிமான்களை அழைக்க வரவில்லை அல்ல; ஆனால் பாவிகளையே

“நான் தாங்கள் பாவிகள் என்று அறிந்தவர்களுக்காக வந்தேன். தங்களை நீதிமான்கள் என்று கருதுபவர்களுக்கு அல்ல.

Mark 2:18-19

மணவாளன் தங்களோடிருக்கும்போது திருமண உதவியாளர்கள் உபவாசம் இருக்கலாமா?

இந்த பதில் எதிர்பாரா கேள்வி மூலம் இயேசு நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார். “ஒரு மனிதன் ஒரு மனுஷியை திருமணம் பண்ணும்போதும், அவன் அவர்களோடு இருக்கிறதினால் அவன் தோழர்களுக்கு உணவு இல்லாமல் போகாது” (UDB)

Mark 2:20-22

மணவாளன் எடுத்துக்கொள்ளப்படுவான்

இயேசு தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பரம் ஏறுதலையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.ஆனால் இயேசுவைக் கொலைசெய்தவர்களோ அல்லது அவரை எழுப்பி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்கிற தேவனோ மணவாளனை எடுத்துக்கொண்டு போவார். உங்கள் மொழி வினையாளனைக் குறிப்பிடுவதை எதிர்பார்த்தால் நன்றாக செய்யவும். மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் மணவாளனை எடுத்துக்கொண்டு போவார்கள்” அல்லது “மக்கள் மணவாளனை எடுத்துக்கொள்வார்கள்” அல்லது “மணவாளன் போவான்”

அவர்களுக்கு...அவர்கள்

திருமண உதவியாளர்கள்

ஒரு மனிதனும் பழைய துணியோடு புதிய துணியை சேர்த்து தைக்கமாட்டான்.

புதிய துணியை இன்னும் சுருங்கவில்லை ஆதலால், புதிய துணியை பழைய துணியோடு சேர்த்து தைத்தால் புதியதில் ஓட்டை விழுந்துவிடும். புதிய பழைய துணியாகிய இரண்டும் கெட்டுவிடும்.

Mark 2:23-24

இதுபார், ஓய்வுநாளில் செய்யத்தகாததை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?

“பார்! ஓய்வுநாளைக் குறித்த யூத சட்டத்தை மீறுகிறார்கள்.”

கதிர்களைக் கொய்து சாப்பிட்டார்கள் ... ஓய்வுநாளில் செய்யத்தகாததை அவர்கள் செய்கிறார்கள்.

மற்றவர் நிலத்தில் கதிர்களைக் கொய்து உண்பது திருட்டு என்று கருதப்படுவதில்லை (UDB பார்). ஆனால் கேள்வி என்னவென்றால் ஓய்வுநாளில் ஒருவன் சட்டத்துக்கு புறம்பானதை செய்யலாமா.

அது

கதிர்கள்

கதிர்கள்

இது புல்லைப்போல இருக்கும் கோதுமை செடியின் மேற்பகுதி. அது முதிர்ந்த தானியத்தை அல்லது செடியின் விதையையோ வைத்து இருக்கும்.

பார்

மறு மொழிபெயர்ப்பு: “நான் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதில் கவனம் செலுத்துங்கள்.”

Mark 2:25-26

ஓய்வுநாளைக் குறித்து இயேசு வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் கற்றுக்கொடுப்பதைத் தொடர்ந்தார்.

தாவீது ...அதை நீங்கள் வாசிக்கவில்லையா? எப்படி அவன் சென்றான்.

வேதபாரகரும் பரிசேயரும் வாசித்திருப்பார்கள் என்று இயேசு அறிவார். ஆனால் அவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டதால் அவர்களை வேண்டுமென்றே குற்றப்படுத்துகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: “தாவீது என்ன ...நினைவுகூறுங்கள்...அவனோடு மற்றும் எவ்வாறு அவன் சென்றான்” அல்லது “நீங்கள் தாவீது என்னே ...னான் என்று புரிந்துகொண்டிருப்பீர்கள் ஆனால்...அவனோடு, அவன் சென்றான் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்”

அபியத்தார்

யூத சரித்தரத்தில் தாவீதின் ராஜ்யத்தில் இருந்த பிரதான ஆசாரியர்களில் ஒருவன்.

“தேவனுடைய வீட்டுக்குள் எப்படி அவன் சென்றான்.”

“தாவீது தேவனுடைய வீட்டுக்குள் சென்றான்.” (UDB)

Mark 2:27-28

ஓய்வுநாளைக் குறித்து இயேசு வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் கற்றுக்கொடுப்பதைத் தொடர்ந்தார்.

Mark 3

Mark 3:1-2

இயேசு தேவாலயத்துக்குள் நடந்தார்.

“இயேசு தேவாலயத்துக்குள் நுழைந்தார்”

தளர்ந்த கைகளோடு ஒரு மனிதன்

“முடங்கின கைகளோடு ஒரு மனிதன்”

அவர் அவனை குணப்படுத்துவாரா என்று அவனை கவனித்தனர்.

“பரிசேயர்கள் அந்த தளர்ந்த கைகளையுடைய மனிதனை இயேசு குணப்படுத்துவாரா என்று பார்த்தனர்.”

Mark 3:3-4

அனைவரது மத்தியிலும் எழுந்து நில்.

“இந்தக் கூட்டத்தின் மத்தியிலும் எழுந்து நில்.”

இது நியாயமா...?

“அவர்கள் அமைதியாய் இருந்தனர்,” என்பதை எழுத்தாளர் குறிப்பிடுகிறார்; இயேசு அவர்களுக்கு சவால் விட்டு அவர்களிடம் பதிலை எதிர்பார்க்கிறார் போலும். மறு மொழிபெயர்ப்பு: “ஓய்வுநாளில் நல்லதோ கேட்டதோ செய்வதற்கு நியாயம் தான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்; உயிரைக் காப்பாற்ற, கொல்ல அல்ல.

நியாயம்

மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி

Mark 3:5-6

“உன் கையை வெளியே நீட்டு”

“உன் கையை எட்டிப்பிடி”

இயேசு அவன் கையைத் திரும்ப தந்தார்

“இயேசு அவன் கையை குணப்படுத்தினார்” அல்லது “அவனுடைய கை முன் இருந்தது போல இயேசு மாறச் செய்தார்”

எரோதியர்களோடு சேர்ந்து ஆலோசனை செய்தனர்

மறு மொழிபெயர்ப்பு: “எரோதியர்களோடு கூடி” அல்லது “எரோதியர்களோடு சந்தித்து திட்டங்களைத் தீட்டினர்.”

Mark 3:7-8

அவர் செய்தவற்றை கேட்டான்

“இயேசு செய்து கொண்டிருந்த அற்புதங்களை எல்லாம் கேள்விப்பட்டான்”

அவர்கள் அவரிடம் வந்தார்கள்

“கூட்டம் இயேசு இருந்த இடத்துக்கு சென்றனர்”

Mark 3:9-10

அவருக்கு ஒரு படகை ஆயத்தப்படுத்தும்படி அவர் அவருடைய சீடர்களுக்கு சொன்னார்

“இயேசு அவரது சீடர்களுக்கு: ‘எனக்கு ஒரு படகை ஆயத்தம்பண்ணுங்கள்.”

கூட்டத்தாரின் அழுத்தம் பெரியதாக இருந்தது

“அவரைத் தொடும்படிக்கு கூட்டம் முந்தி தள்ளியது” (UDB)

வருத்தப்படுகிற யாவரும் அவர்மேல் மோதினர்

“அவரைத் தொடும்படி எல்லா வியாதிப்பட்டவர்களும் முந்தி தள்ளினர்”

Mark 3:11-12

அவர்கள்...அவர்கள்...அவர்களுக்கு

அசுத்த ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள்

Mark 3:13-16

அவரோடு அவர்கள் இருக்கவும் மற்றும் அவர் அவர்களைப் பிரசங்கிக்க அனுப்பவும்

“அவரோடு அவர்கள் இருக்கவும் மற்றும் அவர் அவர்களைப் பிரசங்கிக்க அனுப்பவும்” அல்லது “அவரோடு இருக்கவும் மற்றும் அவர் அவர்களை பிரசங்கிக்க அனுப்பவும்” (UDB)

Mark 3:17-19

ததேயு

Mark 3:20-22

“அவர்கள் உண்ணமுடியாத அளவு மக்கள் கூட்டம் கூடினர்”

“கூட்டம் அதிகமானதால் அவர்களுக்கு உண்ணுவதற்கு நேரமில்லாமல் போனது” அல்லது “அவர் தங்கியிருந்த இடத்தில் மறுபடியும் மக்கள் கூடினர். அவரை அநேகர் சுற்றி நின்றனர்.அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் சாப்பிட நேரமில்லாமல் போனது.” (UDB)

“அவரைப் பிடிக்க அவர்கள் வெளியே சென்றனர்”

அவரைப் பிடிக்கவும் அவரைக் கட்டாயப்படுத்தி அவர்களோடு வீட்டுக்கு செல்ல வைக்கவும் குடும்பத்தின் நபர்கள் வீட்டுக்கு வந்தனர்.

Mark 3:23-25

சாத்தானே எவ்வாறு சாத்தானைத் துரத்தமுடியும்?

“சாத்தானே தன்னைத்தான் வெளியே துரத்தமட்டான்” அல்லது “சாத்தான் அவனுடைய சொந்த அசுத்த ஆவிகளுக்கு எதிராகப் போகமாட்டான்”

Mark 3:26-27

Mark 3:28-30

Mark 3:31-32

அவருக்கு ஆள் அனுப்பி அவரை அழைத்தார்கள்.

“இயேசுவின் தாயும் அவரது இளைய சகோதரர்களும் அவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று சொல்லி அவரை வெளியே அவர்களிடத்தில் கொண்டுவர ஒருவனை வீட்டுக்குள் அனுப்பினார்கள்.”

Mark 3:33-35

Mark 4

Mark 4:1-2

ஏரியில் தள்ளி

“ஏரியில் படகைத் தள்ளி”

அவர் அதன் மீது உட்கார்ந்தார்

“அவர் படகின் மீது உட்கார்ந்தார்”

Mark 4:3-5

இயேசு உவமையை சொல்லத் தொடங்கினார்.

Mark 4:6-7

இயேசு உவமை சொல்வதைத் தொடர்ந்தார்

அவைகள் சுட்டெரிக்கப்பட்டன

“அவைகள் எரிக்கப்பட்டன”

Mark 4:8-9

இயேசு உவமை சொல்வதைத் தொடர்ந்தார்

கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்

இந்த உவமையை “கவனமாய்க் கேட்கிறவனுக்கு அர்த்தம் புரியும்.”

Mark 4:10-12

இயேசு உவமையை சொல்லி சற்றே முடித்திருந்தார்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது

“தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்” அல்லது “நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்”

அவர்கள் நோக்குகிறார்கள், ஆனால் பார்ப்பதில்லை

அவர்கள் நோக்குகிறார்கள், ஆனால் பார்ப்பதில்லை

“அவர்கள் நோக்குகிறார்கள் ஆனால் பார்ப்பதற்கு மறுக்கிறார்கள்” அல்லது “அவர்கள் பார்த்தாலும் புரிந்துகொள்ளுவதில்லை”

Mark 4:13-15

இயேசு அந்த உவமையை தனது சீடர்களுக்கு விளக்குகிறார்.

இந்த உவமை உங்களுக்குப் புரிந்ததா? எவ்வாறு மீதமுள்ள உவமையை புரிந்துகொள்ளுவீர்கள்?

“இந்த உவமையைப்புரிந்துகொள்ள உங்களுக்கு முடியவில்லை என்றால், மீதமுள்ள உவமையை எப்படி புரிந்துகொள்ளுவீர்கள்.”

Mark 4:16-17

இயேசு அந்த உவமையை தனது சீடர்களுக்கு விளக்குகிறார்.

Mark 4:18-20

இயேசு அந்த உவமையை தனது சீடர்களுக்கு விளக்குகிறார்.

Mark 4:21-23

இயேசு உவமையை விளக்குவதை முடித்தார். இயேசு தனது சீடர்களுக்கு மற்றொரு உவமையை சொல்லத் தொடர்ந்தார்.

“வீட்டுக்குள்ளே ஒரு விளக்கைக் கூடையின் அடியிலோ அல்லது படுக்கையின் அடியிலோ வைக்கவா கொண்டுவருவீர்கள்?”

“நிச்சயமாக வீட்டுக்குள்ளே ஒரு விளக்கைக் கூடையின் அடியிலோ அல்லது படுக்கையின் அடியிலோ வைக்க கொண்டு வரமாட்டீர்கள்.”

காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்

மாற்கு 04:08, 4:9 இல் மொழிபெயர்த்தது போல மொழிபெயர்க்கவும்.

Mark 4:24-25

இயேசு தனது சீடர்களுக்கு மற்றொரு உவமையை சொல்லத் தொடர்ந்தார்.

எந்த அளவை உபயோகிக்கிறீர்களோ அந்த அளவைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்; இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்ளுவீர்கள்

எந்த அளவை உபயோகிக்கிறீர்களோ அந்த அளவைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்; இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்ளுவீர்கள்

“நன்றாக கவனித்தால், தேவன் உங்களுக்கு அதிகமான புரிந்துகொள்ளுதலைக் கொடுப்பார்.”

இருப்பவன் யாராயினும்

“என்னுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுபவன் யாராயினும்.”

Mark 4:26-29

இயேசு தனது சீடர்களுக்கு மற்றொரு உவமையை சொல்லத் தொடர்ந்தார்.

தனது விதைகளை விதைக்கும் ஒருவனைப் போல

“தனது விதைகளை விதைக்கிற ஒரு விவசாயியைப் போல”

அறுவடைக் கத்தி

வளைந்த கத்தி அல்லது கதிர் அறுக்கப் பயன்படும் ஒரு கூர்மையான கொக்கி

Mark 4:30-32

இயேசு தனது சீடர்களுக்கு மற்றொரு உவமையை சொல்லத் தொடர்ந்தார்.

“தேவனுடைய ராஜ்யத்தை எதனோடு ஒப்பிடமுடியும்; எந்த உவமையை உபயோகப்படுத்தி இதை விளக்க முடியும்?”

“தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்று இந்த உவமையைக் கொண்டு நான் விளக்க முடியும்.”

Mark 4:33-34

அவர்கள் கேட்கிறதற்கு திறன் உள்ள வரை

“அவர்கள் புரிந்துகொள்ளும் வரை”

Mark 4:35-37

Mark 4:38-39

இயேசுவும் அவரது சீடர்களும் ஒரு குளத்தைக் கடக்கும்போது கடும் புயல் துவங்கியது.

நாங்கள் சாகிறதைக் குறித்து நீர் அக்கறைப்படவில்லையா?

நீர் இந்த சூழ்நிலைக்கு உமது கவனத்தைத் திருப்பவேண்டும்; நாம் எல்லாரும் சாகப்போகிறோம்!”

நாம் சாகப்போகிறோம்

“நாம்” ஏசுவையும் சீடர்களையும் சேர்த்து குறிக்கிறது.

கடிந்துகொண்டு

“கண்டிப்புடன் திருத்தினார்” அல்லது “கண்டித்து”

சமாதானம், அமைதலாய் இரு

“சமாதானம்” , “அமைதலாய் இரு” என்ற இரு பதத்தின் அர்த்தமும் ஒன்று போல உள்ளது..

Mark 4:40-41

ஏசுவும் அவரது சீடர்களும் ஒரு குளத்தைக் கடக்கும்போது கடும் புயல் துவங்கியது.

ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்?

“நீங்கள் பயந்ததைக் குறித்து நான் மனமடிந்து போனேன்.”

யார் இவர்

“இந்த மனிதன் யார் என்று நாம் ஜாக்கிரதையாக சிந்திக்கவேண்டும்!”

Mark 5

Mark 5:1-2

Mark 5:3-4

அவன் பாதங்களில் சங்கிலிகள்

“அவன் பாதங்களில் இரும்பு சங்கிலிகள்”

கீழ்ப்படுத்து

“கட்டுப்படுத்து”

Mark 5:5-6

Mark 5:7-8

அவன் கத்தினான்

“அசுத்த ஆவி கத்தியது”

உம்மோடு நான் செய்ய வேண்டியது என்ன

மறு மொழிபெயர்ப்பு: “நான் உம்மோடு செய்யவேண்டியது ஒன்றுமில்லை”

என்னை துன்பப்படுத்தாதீர்

“என்னைக் கொடுமைப் படுத்தாதீர்” (UDB)

Mark 5:9-10

அவன் அவரிடம், “என் பெயர் சேனை, ஏனென்றால் நாங்கள் அநேகர்” என்று சொன்னான்.

அந்த மனிதனுக்குள் இருந்த ஆவிகள் அந்த மனிதனுள் ஒரு தீய ஆவி அல்ல ஆனால் அநேக ஆவிகள் உள்ளன என்று யேசுவிடம் சொன்னது.

Mark 5:11-13

அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்

“இயேசு அசுத்த ஆவிகளை அனுமதித்தார்”

ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள்

“ஏறக்குறைய 2000 பன்றிகள்”

Mark 5:14-15

அவனது சரியான மனதில்

“சாதாரண மனதில்”

Mark 5:16-17

பிசாசுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மனிதன்

“பிசாசுகள் கட்டுப்படுத்தி இருந்த அந்த மனிதன்”

Mark 5:18-20

தேக்கொபோலிஸ்

கலிலேயாக் கடலின் தென் கிழக்கில் உள்ள பிரதேசம்.

Mark 5:21-24

Mark 5:25-27

பன்னிரண்டு வருடங்களாக

“12 வருடங்களாக”

Mark 5:28-29

Mark 5:30-32

‘யார் என்னைத் தொட்டது’ என்று நீர் சொல்லுகிறீர்?’

மறு மொழிபெயர்ப்பு: “யாரோ ஒருவர் உம்மைத தொட்டார் என்பதைக் கேள்விப்படும்போது நாங்கள் அதிசயப்படுகிறோம்.”

Mark 5:33-34

மகளே

இயேசு இந்த வார்த்தையை உருவகமாக பயன்படுத்தி இந்த பெண் ஒரு விசுவாசி என்பதைக் குறிக்கிறார்.

Mark 5:35

ஏன் போதகரைத் தொல்லைப்படுத்தவேண்டும்”

மறு மொழிபெயர்ப்ப்பு: “போதகரை நாம் இனி தொந்தரவு செய்யக்கூடாது”

Mark 5:36-38

யார் அழுகிறார்களோ

“துக்கத்தினால் யார் அழுகிறார்களோ”

Mark 5:39-40

ஏன் நீங்கள் கவலையாய் இருக்கிறீர்கள் மற்றும் ஏன் நீங்கள் அழுகிறீர்கள்?

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் கவலையாயும் அழுதுகொண்டும் இருக்கக்கூடாது.”

Mark 5:41-43

அவள் பன்னிரண்டு வயது உடையவளாய் இருந்தாள்

“அவள் 12 வயது உடையவளாய் இருந்தாள்”

அவர் அவர்களைக் கண்டிப்போடு கட்டளையிட்டார்

“அவர் உறுதியாக அவர்களுக்கு சொன்னார்”

Mark 6

Mark 6:1-3

இது மரியாளுக்கு மகனும் யாக்கோபு மற்றும் யோசே, யூதா சீமோனுக்கு சகோதரருமான தச்சனுடைய மகனல்லவா? அவருடைய சகோதரிகள் நம்மோடு இங்கு இல்லையா”

“அவர் ஒரு சாதாரண தச்சன்! அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாம் அறிவோம்! அவர் தாயாகிய மரியாளையும் அறிவோம்! அவருடைய இளைய சகோதரர் யாக்கோபு, யோசே, யூதா, மற்றும் சீமோன் அவர்களையும் அறிவோம்! மற்றும் அவரது இளைய சகோதிரிகள் நம்மோடு இங்கு வாழுகிறார்கள்!” (UDB) இது இயேசு எப்படி இது போன்ற காரியங்களை செய்ய முடிந்தது என்று சந்தேகத்தை எழுப்பும் பதிலை எதிர்பாரா கேள்வி.

Mark 6:4-6

தீர்க்கதரிசி கனம் இல்லாமலில்லை; தவிர

“என்னையும் மற்ற தீர்க்கதரிசிகளையும் மற்ற இடங்களில் மக்கள் கனம் பண்ணுகிறது உண்மைதான் ஆனால் எங்களுடைய சொந்த ஊர்களில் இல்லை. எங்களுடைய வீடுகளில் வசிக்கும் மக்களும் மற்றும் உறவினர்களும் எங்களை கணம் பண்ணுவதில்லை!” (UDB)

Mark 6:7-9

இரண்டு இரண்டு பேராக

“இரண்டிரண்டாக” அல்லது “ஜோடியாக”

இரண்டு அங்கிகளை உடுத்தாமல்

“மற்றொரு சட்டையை எடுக்காமல்”

Mark 6:10-11

நீங்கள் திரும்பும்வரை அங்கேயே இருங்கள்

“பட்டணத்தை விட்டுப் போகும் வரை அந்த வீட்டிலேயே தங்கி இருங்கள்”

Mark 6:12-13

Mark 6:14-15

யோவான் ஸ்நானகன் எழுப்பப்பட்டான்

“தேவன் யோவான் ஸ்நானகனை எழுப்பினார்”

Mark 6:16-17

அவனுடைய சகோதரன் பிலிப்புவினுடைய மனைவி

“அவனுடைய சகோதரனான பிலிப்புவினுடைய மனைவி”

அவளை எதிராக வைத்து

“விரோதமாகப் பிடித்து”

Mark 6:18-20

அவளை எதிராக வைத்து

“விரோதமாகப் பிடித்து”

அவன் திகைத்து போனான்

“அவன் குழம்பிப்போனான்”

Mark 6:21-22

Mark 6:23-25

ஒரு தட்டின் மீது

“ஒரு தட்டின் மீது”

Mark 6:26-29

அவனுடைய ஆணையின் நிமித்தமும் அவனுடைய விருந்தாளிகளுக்காகவும்

“அவன் சத்தியம் பண்ணினதை அவனது விருந்தாளிகள் கேள்விப்பட்டதால்,”

தட்டின் மீது

“தட்டின் மீது”

Mark 6:30-32

Mark 6:33-34

Mark 6:35-36

Mark 6:37-38

ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்கள்

“5 அப்பங்கள் 2 மீன்கள்.”

Mark 6:39-41

நூறுகளாகவும் ஐம்பதுகளாகவும்

“100 மற்றும் 50பது களாக”

ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்கள்

“5 அப்பங்கள் 2 மீன்கள்.”

இரண்டு மீன்கள்

“2 மீன்கள்.”

Mark 6:42-44

பன்னிரண்டு கூடைகள்

“ 12 கூடைகள்”

ஐந்தாயிரம் மனிதர்கள்

மறு மொழிபெயர்ப்பு: “5,000 மனிதரும் மற்றும் அவர்களது குடும்பத்தார்”

Mark 6:45-47

பெத்சாயிதா

கலிலேயாக் கடலின் வடக்கு கரையில் உள்ள ஒரு பட்டணம்

Mark 6:48-50

Mark 6:51-52

அவர்களது மனது புரிந்துகொள்ளுதலில் மந்தமாக இருந்தது

“அவர் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.”

Mark 6:53-55

“தூக்குதட்டு”

“மக்களை சுமப்பதற்கான விரிப்புகள்”

Mark 6:56

அவருடைய வஸ்திரத்தின் ஓரம்

“அவருடைய வஸ்திரத்தின் தொங்கல்” அல்லது “அவருடைய அங்கியின் தொங்கல்”

Mark 7

Mark 7:1

Mark 7:2-4

பித்தளைப் பாத்திரங்கள், இன்னும் உண்ணும்போது உட்காரும் அமர்வுகள்

உண்ணும்போது இந்தக் காலத்தில் இருந்த யூதர்கள் அமர்வில் சாய்ந்துகொண்டு அமரிந்திருப்பர். மறு மொழிபெயர்ப்பு: “குப்பிகள், இன்னும் உண்ணும்போது உட்கார இருக்கைகள்”

Mark 7:5

மூதாதயர்களின் சம்பிரதாயப்படி ஏன் உம்முடைய சீடர்கள் வாழ்வதில்லை, அவர்கள் கைக் கழுவாமல் ரொட்டி உண்கிறார்கள்?

“மூதாதையர்களின் பாரம்பரியத்துக்கு உம்முடைய சீடர்கள் கீழ்ப்படியவில்லை! எங்களுடைய முறைமையின்படி அவர்கள் கைகளை அவர்கள் கழுவி இருக்கவேண்டும்!”

ரொட்டி

உணவு

Mark 7:6-7

“ஏசாயா உங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லி இருக்கிறான் மாய்மாலக்காரர்களே,”

ஏசாயாவின் வார்த்தைகள் 29:13

14.

Mark 7:8-10

வேகமாக

பெலனாக

தீமையாக பேசுபவர்

“சபிப்பவர்”

Mark 7:11-13

என்னிடத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட உதவி எதுவாயினும் அது கொர்பான் ஆகும்

வேதபாரகருடைய சம்பிரதாயத்தின் படி பணமோ பொருளோ ஆலயத்துக்கு வாக்கு பண்ணப்பட்டால் மற்ற எந்த ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.

கொர்பான்

வார்த்தைகள் எவ்வாறு ஒலிக்கிறது என்பதை வாசகர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஆசிரியர் விரும்பியிருக்கிறார். அதுபோல் உங்கள் மொழியில் ஏதாவது ஒரு எழுத்து இந்த வார்த்தையின் ஒலி போல இருக்குமானால் அதைப் பயன்படுத்தவும்.

Mark 7:14-16

“எல்லாரும் என்னைக் கவனித்து புரிந்துகொள்ளுங்கள்”

“கவனி” மற்றும் “புரிந்துகொள்” அர்த்தத்தில் ஒரே மாதிரி உள்ளது; இயேசு இங்கு அழுத்தம் தர இவைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

ஒருவனின் உள்ளிருந்து அதுவே வெளியே வருகிறது

“அது ஒருவனின் உள்ளானவன்” அல்லது “அதுவே ஒருவன் யோசிக்கிறது, பேசுகிறது, செய்கிறதுமாகும்”

வசனம் 16: அநேக பழங்கால அதிகாரிகள் இந்த சொற்களை சேர்த்து இருந்தனர்: கேட்கிறதற்கு காதுகளிருக்குமானால், அவன் கேட்கட்டும்

தான் சொல்லிக்கொடுத்ததை தன்னைப் பின்பற்றும் ஒவ்வொரு விசுவாசியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தையும், வேதத்தின் மேலுள்ள தன்னுடைய அதிகாரத்தைக் குறிக்கவும் இந்தப் பதத்தை இயேசு சேர்க்கிறார்.

Mark 7:17-19

நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?

மறு மொழிபெயர்ப்பு: “நான் உங்களுக்கு போதித்த பிறகு நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன்.”

Mark 7:20-23

Mark 7:24-26

கீழே விழுந்து

“முழந்தாற் படியிட்டு”

ஜாதியில் சிரோபேனிக்கியா

சிரியாவிலுள்ள பேநிக்கியாயா பட்டணத்தில் பிறந்தவள்

Mark 7:27-28

குழந்தைகள் முதலாவது உண்பதற்கு கொடுக்கப்படட்டும்

“குழந்தைகள் முதலாவது உண்ணட்டும்” அல்லது “முதலாவதாக நான் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.”

குழந்தைகள்

யூதர்கள். மறு மொழிபெயர்ப்பு: “நான் யூதர்களுக்கு முதலாவது சேவை செய்ய வேண்டும்.”

ரொட்டி

உணவு

நாய்கள்

யூதரல்லாதவர்

குழந்தைகளின் ரொட்டி துகள்களை மேஜையின் கீழிருக்கும் நாய்கள் தின்னுமே

“யூதரல்லாத எனக்கு இந்த சின்ன வழியில் உதவலாமே”

ரொட்டித் துகள்கள்

ரொட்டியின் மிகவும் சின்னத் துண்டுகள்

Mark 7:29-30

Mark 7:31-32

வழியே வந்து

“பிரயாணப்பட்டு வந்து”

தேக்காபோலிஸ்

“பத்து பட்டணங்கள்” (UDB பார்), கலிலேயாக் கடலின் தென்கிழக்குப் பகுதி.

யார் செவுடன்

“கேட்க திராணி இல்லாதவன்”

பேசுவதில் குளறுபடி உள்ளவன்

“தெளிவாய் பேசக்கூடாதவன்”

Mark 7:33-35

எப்பத்தா

வார்த்தைகள் எவ்வாறு ஒலிக்கிறது என்பதை வாசகர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஆசிரியர் விரும்பியிருக்கிறார். அதுபோல் உங்கள் மொழியில் ஏதாவது ஒரு எழுத்து “எப்பத்தா” வார்த்தையின் ஒலி போல இருக்குமானால் அதைப் பயன்படுத்தவும்.

பெருமூச்சுவிட்டு

தான் சந்தோஷமாக இல்லை என்பதை நீளமாக மூச்சை இழுத்து விட்டு தெரியப்படுத்துகிறான்.

அவனுடைய நாவின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டது

“அவனுடைய நாவைப் பிடித்திருந்ததை இயேசு அவிழ்த்தார்” அல்லது “அவனைத் தெளிவாகப் பேச விடாதிருந்ததை இயேசு குணப்படுத்தினார்”

Mark 7:36-37

Mark 8

Mark 8:1-4

மூன்று நாட்கள்

“3 நாட்கள்”

அவர்கள் மயங்கி விழலாம்

சாத்தியமான அர்த்தங்கள்: 1. “தற்காலிகமாக சிந்தையை இழக்கலாம்” அல்லது 2. “அவர்கள் பெலவீனப்படலாம்”

இந்த மக்களை திருப்தி படுத்த இந்த வனாந்திரத்தில் போதுமான ரொட்டிகளை எங்கு வாங்குவது?

இயேசு தங்களை உணவு தேட சொல்லுவார் என்று நினைத்து தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். மறு மொழிபெயர்ப்பு: “இந்த இடம் ரொம்பவும் வனாந்திரமாக இருக்கிறது; இந்த மக்களை திருப்தி படுத்த இந்த வனாந்திரத்தில் போதுமான ரொட்டிகளை வாங்க ஒரு இடமும் இல்லை!” (UDB)

Mark 8:5-6

கீழே உட்கார்

மேஜை இல்லாத போது எவ்வாறு உங்கள் மக்கள் சாப்பிட அமருவார்கள் என்பதைக் குறிக்கும் உங்கள் மொழியின் சொல்லைப் பயன்படுத்துங்கள்.

Mark 8:7-10

தல்மனுத்தா

கலிலேயாக் கடலின் வடமேற்கு கரையில் உள்ள ஒரு பகுதி.

Mark 8:11-13

தேடி

“பெறப் பிரயாசப்பட்டு”

பெருமூச்சு விட்டு

மாற்கு 7:33, 34 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

ஏன் இந்த சந்ததி அடையாளத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்?

இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார். மறு மொழிபெயர்ப்பு: “இந்த சந்ததி அடையாளத்தைத் தேடக்கூடாது.”

இந்த சந்ததி

“எல்லா மக்களும்”

Mark 8:14-15

விழித்திருந்து காவல் பண்ணு

இந்த இரண்டு சொற்களும் பொதுவான அர்த்தங்கள் கொண்டுள்ளது மற்றும் இங்கு இவைகளை அழுத்தி சொல்ல பயன்படுத்தி இருகிறார்கள்.

பரிசேயர்களின் புளிப்பு மற்றும் ஏரோதின் புளிப்பு

மறு மொழிபெயர்ப்பு: “பரிசெயர்களின் பொய் உபதேசங்கள் மற்றும் ஏரோதின் பொய்யான உபதேசங்கள்”

Mark 8:16-17

ரொட்டி இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் நிதானிக்கிறீர்கள்?

அவர்கள் புரிந்து கொள்ளவில்லை ஆதலால் இயேசு கஷ்டப்பட்டார். மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் இவ்வுலகத்துக்குரிய ரொட்டியைக் குறித்து நான் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது.”

Mark 8:18-19

உங்களுக்கு கண்கள் உண்டு, நீங்கள் பார்ப்பதில்லை? உங்களுக்கு காதுகள் உண்டு, நீங்கள் கேட்பதில்லை? உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு வருத்தப்பட்டார். மறு மொழிபெயர்ப்பு: “உங்களுக்கு கண்கள் இருந்தும் நீங்கள் பார்ப்பது என்ன என்று புரிந்துகொள்ளவில்லை! உங்களுக்கு காதுகள் இருந்தும் நீங்கள் கேட்பதைப் புரிந்துகொள்ளவில்லை! நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்!”

Mark 8:20-21

“நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?”

மறு மொழிபெயர்ப்பு: “நான் பூமிக்குரிய ரொட்டியைக் குறித்து பேசவில்லை என்று இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கவேண்டும்.”

Mark 8:22-23

பெத்சாயிதா

யோர்தான் நதியின் கிழக்கில் ஒரு நகரம்

Mark 8:24-26

Mark 8:27-28

Mark 8:29-30

Mark 8:31-32

மனுஷக் குமாரன் அநேகப் பாடுகள் படவேண்டும்; அவர் மூப்பர்களாலும், பிரதான ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், புறக்கணிக்கப்பட்டு, கொல்லப்பட்டு மீண்டும் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்.

மறு மொழிபெயர்ப்பு: “மூப்பர்களும், பிரதான ஆசாரியரும், வேதபாரகர்களும், மனுஷக் குமாரனை புறக்கணித்து, கொலை செய்வர், தேவன் அவரை மீண்டும் உயிரோடு எழுப்புவார்.”

மூன்று நாட்கள்

“3 நாட்கள்”

Mark 8:33-34

பேதுருவின் கடிந்துகொள்ளுதலுக்கு இயேசு பதிலளிக்கிறார்.

Mark 8:35-37

க்காக

சீடர்கள் தங்களையே மரிக்கப்போகும் குற்றவாளிகளாக நினைத்துக்கொள்ளவேண்டுவதற்கான காரணத்தை தன்னுடைய சீடர்களுக்கு இயேசு சொல்லுகிறார்.

Mark 8:38

இந்த உலகத்தில எதையும் வைத்திருப்பதை விட தன்னைப் பின்பற்றுவது எவ்வளவு விளையேறப்பட்டது என்று கூட்டத்தாருக்கும் தனது சீடர்களுக்கும் சொல்லி இருந்தார்.

Mark 9

Mark 9:1-3

இயேசு தன்னை பின்பற்றுவதைக் குறித்து தனது சீடர்களிடமும் மக்களிடமும் இப்பொழுது தான் சொல்லி இருந்தார்.

பிரகாசமான

“மிகவும் வெண்மையான”

உலகத்தில் உள்ள சலவை செய்பவன் அவைகளை சலவை செய்யக்கூடும்

“சலவைப் பொடி” துணிகளில் உள்ள கரைகளை எடுத்து அதை வெண்மையாக்கப் பயன்படும் ரசாயனம்; “சலவை செய்பவன்” என்பவன் கரை நீக்குவதை செய்பவன்.

Mark 9:4-6

திகைத்து

“மிகவும் பயந்து”

Mark 9:7-8

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் ஒரு மலையின் மீது கூட்டிக்கொண்டு போனார்; அங்கு இயேசு வெண் வஸ்த்திரம் தரித்திருந்தவராய்க் காணப்பட்டார்.

Mark 9:9-10

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் ஒரு மலையின் மீது கூட்டிக்கொண்டு போனார்; அங்கு இயேசு மோசேயோடும், எலியாவோடும் வெண் வஸ்த்திரம் தரித்திருந்தார்.

அதனால் இந்த காரியத்தை தங்களுக்குள் வைத்துக்கொண்டனர்

“அதனால் இந்தக் காரியங்களைக் குறித்து அவர்கள் இதை நடக்கும்போது பார்க்காத யாருடனும் பேசவில்லை.”

“மரித்தோரிலிருந்து எழுப்ப”

“மரித்தப்பிறகு உயிரோடு வர”

Mark 9:11-13

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் ஒரு மலையின் மீது கூட்டிக்கொண்டு போனார்; அங்கு இயேசு மோசேயோடும், எலியாவோடும் வெண் வஸ்த்திரம் தரித்திருந்தார்.

எலியா கண்டிப்பாக...மக்கள் அவரை வெறுப்பர்?

வானத்திலிருந்து எலியா மீண்டும் வருவார் என்று தீர்க்கதரிசனம் முன் அறிவித்திருந்தது; பின்பு மேசியா மனிதக் குமாரன் வந்து ஆளுகை செய்வார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மற்ற தீர்க்கதரிசனங்கள் மனுஷக் குமாரன் பாடுபட்டு மக்களால் வெறுக்கப்படுவார் என்றும் முன் அறிவித்திருந்தது. இவை இரண்டுமே எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் என்று சீடர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.

எலியா வந்து விட்டார்

தீர்க்கதரிசனத்தில் அடிக்கடி இரண்டு நிறைவேறுதல் இருக்கும்.

Mark 9:14-16

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் ஒரு மலையின் மீது கூட்டிக்கொண்டு போனார்; அங்கு இயேசு மோசேயோடும், எலியாவோடும் வெண் வஸ்திரம் தரித்திருந்தார்.

விவாதித்துக்கொண்டு

“ஆலோசித்துக்கொண்டு” அல்லது “விவாதித்துக்கொண்டு” அல்லது “கேள்வி கேட்டுக்கொண்டு”

Mark 9:17-19

இயேசுவும் அவருடைய சீடர்களும் வல்லுநர்களோடு விவாதித்துக்கொண்டிருந்த இடத்திற்கு இயேசு வந்தார்.

அவனுக்குள்ளிருந்து விரட்டி விடும்.

“என்னுடைய மகனுக்குள்ளிருந்து ஆவியை விரட்டும்” அல்லது “பிசாசை புறம்பே துரத்தும்”

உன்னோடு அனுசரித்து

“உன்னை தாங்கி” அல்லது “உன்னோடு சேர்ந்து”

Mark 9:20-22

அந்த மகனின் தந்தை இயேசுவின் சீடர்களால் தனது மகனைக் குணமாக்க முடியவில்லை என்று இப்பொழுது தான் சொல்லி இருந்தார்.

இரக்கம் வையும்

“கிருபை உணரும்” அல்லது “பாசம் வையும்”

Mark 9:23-25

இயேசு அவனிடம், “’உமக்கு முடியுமானால்’? எல்லாக்காரியங்களும்... என்று சொன்னார்.”

இயேசு அந்த மனிதனின் சந்தேகத்தை கடிந்துகொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “இயேசு அவனிடம், ‘ஏன் நீ, “உம்மால் கூடுமானால்”? எல்லாக் காரியங்களும்... சொல்லுகிறாய் என்று சொன்னார்.’” அல்லது “இயேசு அவனிடம், ‘நீ, “உம்மால் கூடுமானால்”? எல்லாக் காரியங்களும்... என்று சொல்லி இருக்கக் கூடாது என்றார்.’”

Mark 9:26-27

இயேசு அந்த மகனை விட்டு அந்த பிசாசை வெளியே வர சொல்லி இருந்தார்.

அந்த மகன் செத்தவனைப் போல இருந்தான்.

“அந்த பையன் செத்தவனாகக் காணப்பட்டான்” அல்லது “அந்த பையன் செத்தவனாகத் தென்பட்டான்”

Mark 9:28-29

சீடர்கள் குணமாக்காத அந்த பிசாசு பிடித்திருந்த பையனை இயேசு இப்பொழுது தான் சொஸ்தமாக்கி இருந்தார்.

Mark 9:30-32

அந்த பிசாசு பிடித்திருந்த பையனை இயேசு இப்பொழுது தான் சொஸ்தமாக்கி இருந்த அந்த வீட்டிலிருந்து அவர்கள் சென்றனர்.

வழியே கடந்து

“கடந்து சென்று” அல்லது “பக்கமாக சென்று”

மூன்று நாட்கள்

“3 நாட்கள்”

Mark 9:33-35

இயேசு தனது சீடர்களுக்கு தனியே போதிக்கும்படி அவர்கள் இப்பொழுது தான் கலிலேயாவிலிருந்து வந்தனர்.

Mark 9:36-37

Mark 9:38-39

தன்னை விசுவாசிக்கும் குழந்தைகளைவிடவும் கூட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்பதை மறுபடியும் இயேசு தனது சீடர்களுக்கு சொன்னார்.

பிசாசுகளைத் துரத்தி

“பிசாசுகளை வெளியே அனுப்பி”

Mark 9:40-41

Mark 9:42-44

எந்திரக்கல்

மாவரைக்கப்பயன்படும் ஒரு பெரியக் கல்

அணைக்கமுடியாத அக்கினி

“அவிக்கமுடியாத தீ”

சில முந்தய படிவங்கள் இந்த வசனத்தை வைத்துள்ளது, மற்றவை இதைக் கொடுக்கவில்லை.

Mark 9:45-46

நரகத்தில் வீசப்பட

“தேவன் உங்களை நரகத்தில் வீசும்படியாக”

சில முந்தய படிவங்கள் இந்த வசனத்தை வைத்துள்ளது, மற்றவை இதைக் கொடுக்கவில்லை.

Mark 9:47-48

அவர்களது புழு

“செத்த பிணங்களை உண்ணும் புழுக்கள்”

Mark 9:49-50

Mark 10

Mark 10:1-4

இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நகூமை விட்டு சென்றனர்.

Mark 10:5-6

உங்களுடைய கடின இருதயங்கள்

“உங்களுடைய இறுமாப்பு”

Mark 10:7-9

அவர்கள் இருவரும் இனி இரண்டு அல்ல ஒரு சரீரமாய் இருக்கிறார்கள்

கணவனும் மனைவியுமாக அவர்களது ஐக்கியத்தை குறிக்கும் ஒரு உருவகம் இதுவாகும்.

Mark 10:10-12

Mark 10:13-14

Mark 10:15-16

Mark 10:17-19

என்னை நல்லவன் என்று ஏன் சொல்லுகிறீர்கள்?

மறு மொழிபெயர்ப்பு: “என்னை நல்லவன் என்று நீங்கள் மறைவாய் சொல்வது இன்னது என்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும் (அல்லது என்னை தேவனாக நீங்கள் மறைத்து சொல்லுவதை), ஏனென்றால் தேவன் மாத்திரமே நல்லவர்!

Mark 10:20-22

Mark 10:23-25

பணக்காரன் தேவ ராஜ்ஜியம் செல்வதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது சுலபமாக இருக்கும்

“ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கூடாத காரியம். அது போல தேவன் தங்கள் வாழ்க்கையை ஆளுகை செய்ய அவர்கள் விட்டுக்கொடுப்பது கூடாத காரியம்.”

ஊசியின் கண்

“ஊசியின் கண்” ஊசி முனையில் உள்ள சிறு துவாரம்.

Mark 10:26-28

பின் யார் இரட்சிக்கப்படுவார்?

“பின்பு யாரும் இரட்சிக்கப்பட முடியாது”

Mark 10:29-31

கைவிடப்பட்ட ஒருவனாகிலும்....பெற்றுக்கொள்ளாமல் இருக்கமாட்டார்

“விடப்பட்ட யாரும்...பெற்றுக்கொள்ளுவர்.”

எனக்காக

“என்னுடைய பிரயோஜனத்துக்காக” அல்லது “என்னுடைய லாபத்துக்காக”

இந்த உலகத்தில்

“இந்த வாழ்வில்” அல்லது “இந்த காலக் கட்டத்தில்”

வரப்போகும் உலகத்தில்

“வரப்போகும் வாழ்வு” அல்லது “வரப்போகும் காலம்”

Mark 10:32-34

மனுஷக் குமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார்

“மக்கள் மனுஷக்குமாரனை ஒப்புக்கொடுப்பர்” அல்லது “மக்கள் மனுஷக்குமாரனை ஒப்புக்கொடுப்பர்.”

Mark 10:35-37

Mark 10:38-40

இயேசு இந்த உலகத்தை ஆளும்போது தாங்கள் அவரது அருகில் உட்கார முடியுமா என்று யாக்கோபும் யோவானும் அவரை சற்றே கேட்டிருந்தனர்.

நான் குடிக்கப்போகும் பாத்திரத்தில்

அவர் அடையப்போகும் பாடுகளைக் குறிக்க இந்த பதத்தை இயேசு பயன்படுத்தினார்.

எனக்குக் கொடுக்கப்படும் அபிஷேகம்

அவர் அடையப்போகும் பாடுகளைக் குறிக்க இந்த பதத்தை இயேசு பயன்படுத்தினார்.

Mark 10:41-42

ஆளுகிறவர்களாக கருதப்படுகிறவர்கள்

“ஆளுகிறவர்களாக எண்ணப்படுகிறவர்கள்”

அதிகாரம்

“கட்டுப்பாடு வை” அல்லது “மீது வல்லமை பெரு”

பயிற்சி

“உபயோகப்படுத்து”

Mark 10:43-45

பெரியவனாக ஆகி

“மதிப்புக்குரியவனாக வைக்கப்பட்டு” அல்லது “மதிக்கபப்ட்டு”

யாராயினும்

“எவராயினும்”

மனுஷக்குமாரன் ஊழியம் கொள்ள வரவில்லை

“மனுஷக்குமாரன் மக்கள் தன்னை சேவிக்கும்படி வரவில்லை”

Mark 10:46-48

இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேமை நோக்கி நடப்பதைத் தொடர்ந்தனர்.

பர்திமேயு

ஒரு மனுஷனின் பெயர்

திமேயு

குருட்டு பிச்சைக்காரனின் பெயர்

Mark 10:49-50

இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேமை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது எரிகோவுக்கு வெளியே இருந்த குருடன் இயேசுவை நோக்கி கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவரைக் கூப்பிடும்படி கட்டளையிட்டு

“மற்றவரை அவரைக் கூப்பிடும்படி கட்டளையிட்டு”

தைரியமாக இரு

“பயப்படாதே”

Mark 10:51-52

ஏசுவும் அவரது சீடர்களும் எருசலேமுக்குப் போகிறார்கள்.

பார்வை

“பார்க்கும்படியான திறமை”

உடனே

“அந்த நொடி” அல்லது “தாமதமின்றி”

Mark 11

Mark 11:1-3

இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேமுக்குப் போகிறார்கள்.

Mark 11:4-6

Mark 11:7-10

Mark 11:11-12

Mark 11:13-14

Mark 11:15-16

Mark 11:17-19

‘என்னுடைய வீடு எல்லா நாடுகளுக்கும் ஜெப வீடு எனப்படும்’ என்று எழுதப்படவில்லையா?

“தேவன், “என்னுடைய வீடு எல்லா ஜாதியாரும் வந்து ஜெபிக்கும்படியான வீடு என்று அழைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’, ஆனால் கொள்ளையராகிய நீங்கள் பதுங்கும் குகையாக்கினீர்கள்! உங்களுக்கு தெரியுமா!”

Mark 11:20-21

அத்தி மரம் வேர் வரை உலர்ந்து போனது

மறு மொழிபெயர்ப்பு: “அத்தி மரம் வேரோடு காய்ந்து போய் செத்தது.”

Mark 11:22-23

Mark 11:24-26

Mark 11:27-28

நீர் எந்த அதிகாரத்தில் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்

“இந்தக் காரியங்களை” என்ற வார்த்தைகள் இயேசு விற்பனை செய்கிறவர்களின் மேஜைகளை கவிழ்த்து அவர்கள் கற்று கொடுத்து செய்த செயலைக் குறிக்கிறது.

நீர் எந்த அதிகாரத்தில் இந்தக் காரியங்கள் செய்கிறீர் மற்றும் அவர்களுக்கு இதை செய்ய யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது.

மறு மொழிபெயர்ப்பு: “நாங்கள் உமக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை அதனால் நீர் இந்தக் காரியங்களை செய்ய உமக்கு அதிகாரமில்லை.”

Mark 11:29-30

யோவானின் ஞானஸ்நானம் பரத்திலிருந்து வந்ததா அல்லது மனிதனிடம் இருந்து வந்தது? இயேசுவுக்கு இதற்கான பதில் தெரிந்திருந்தாலும் மதத் தலைவர்கள் தன்னைக் கேள்விக்கேட்டதற்காக அவர்களை சோதிக்கும்படி கேட்டார்.

Mark 11:31-33

Mark 12

Mark 12:1-3

திராட்சத்தோட்டத்தைக் குத்தகைக்குவிட்டு

திராட்சைகளைப் பாதுகாக்க முதலாளி மற்றவர்களை ஏற்ப்படுத்தி இருந்தார்.

Mark 12:4-5

Mark 12:6-7

Mark 12:8-9

அதனால், திராட்சத்தோட்டத்தின் முதலாளி என்ன செய்வார்?

மறு மொழிபெயர்ப்பு: “திராட்சத்தோட்டத்தின் முதலாளி என்ன செய்வார் என்று நான் உங்களுக்கு சொல்லுவேன்.”

Mark 12:10-12

நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் வேதத்தில் வாசித்த இந்த வார்த்தைகளை கவனமாக யோசியுங்கள்.”

Mark 12:13-15

ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?

“நீங்கள் என்னைக் குற்றப்படுத்தும்படி நான் தவறாக ஏதாவது சொல்லும்படி முயர்ச்சிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்.”

தினார்

ஒரு நாள் கூலி பெறுமானமுள்ள ஒரு காசு

Mark 12:16-17

Mark 12:18-19

Mark 12:20-23

உயிர்த்தெழுதலில் அவர்கள் மீண்டும் எழும்பும் போது அவள் யாருடைய மனைவியாய் இருப்பாள்? மறு மொழிபெயர்ப்பு: “உயிர்த்தெழுதலில் அவர்கள் மீண்டும் எழும்பும் போது அவள் எல்லா ஏழு சகோதரர்களுடைய மனைவியாக இருக்க முடியாது!”

Mark 12:24-25

தேவனுடைய வல்லமையை...இந்த காரணத்திற்கு தான் தவறாக எடுத்துக்கொண்டீர்கள்?

மாற்று மொழிபெயர்ப்பு: “நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்...தேவனுடைய வல்லமை?”

Mark 12:26-27

அவர்கள் எழுப்பப்பட்டனர்

“தேவன் அவர்களை எழுப்புகிறார்”

Mark 12:28-29

Mark 12:30-31

நிச்சயமாக நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அனைத்தும் அவர் சொன்னபடியே நிறைவேறும் என்பதை அழுத்தி கூறுகிறார்.

கடந்து போய்

“முடிவு”

Mark 12:32-34

Mark 12:35-37

கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று எப்படி வேதபாரகர்கள் சொல்லுகிறார்கள்?

மறு மொழிபெயர்ப்பு: “யூத முறைமைகளை கற்றுக்கொடுக்கும் இவர்கள், கிறிஸ்து தாவீது ராஜாவின் மனித சந்ததி என்று சும்மா சொல்லும்போது அவர்கள் தவறு செய்கிறார்கள்!”

தாவீதின் குமாரன்

“குமாரன்” என்ற வார்த்தை சந்ததியைக் குறிக்கப் பயன்படுகிறது.

அவர் எவ்வாறு தாவீதின் குமாரன் ஆவார்?

மறு மொழிபெயர்ப்பு: “அவர் தாவீதின் குமாரனாய் இருக்க முடியாது!”

Mark 12:38-40

Mark 12:41-42

இரண்டு காசுகள்

“இரண்டு சிறிய காசுகள்”

Mark 12:43-44

“நிச்சயமாக, நான் உங்களுக்கு சொல்லுகிறேன்”

மாற்கு 11:22, 23 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

காணிக்கைப் பெட்டி

இது ஆலயக் காணிக்கையை மக்கள் இடும்போது சேர்க்கிற பெட்டி

மிகுதியாக

“நிறைய”

வறுமை

“இல்லாமை” அல்லது “ஏழ்மை”

Mark 13

Mark 13:1-2

பெரிய கட்டிடங்களைப் பார்க்கிறீர்களா?

மறு மொழிபெயர்ப்பு: “இந்தக் கட்டிடங்கள் எத்தனைப் பெரியது என்று நீங்கள் பார்க்கலாம்.”

Mark 13:3-4

Mark 13:5-6

Mark 13:7-8

வதந்திகள்

“சொல்லப்பட்டது” அல்லது “கிசு கிசு”

Mark 13:9-10

Mark 13:11-13

Mark 13:14-16

பாழாக்குதலின் அருவருப்பு

“அருவருக்கத்தக்க விக்கிரக ஆராதனை”

Mark 13:17-20

Mark 13:21-23

Mark 13:24-27

சூரியன் அந்தகாரப்படுத்தப்படும்

“தேவன் சூரியனை அந்தகாரப்படுத்துவார்”

வானங்களின் வல்லமைகள் அசைக்கப்படும்

“தேவன் வானங்களின் வல்லமைகளை அசைப்பார்”

Mark 13:28-32

Mark 13:33-34

Mark 13:35-37

சேவல்

சாதரணமாக, காலையில் கூவும் முதல் பறவை

கரைதல்

“உரக்கச் சத்தம்” அல்லது “கொக்கரித்தல்”

Mark 14

Mark 14:1-2

Mark 14:3-5

குஷ்டரோகி சீமோன்

இந்த மனிதனுக்கு முன்பே குஷ்டரோகம் இருந்தும் அவன் சுகவீனமாக இல்லை.

நளதம்

இது மிருதுவான, “வெள்ளைக் கல்.”

இந்த வீனடிப்புக்கான காரணம் என்ன?

மறு மொழிபெயர்ப்பு: “இத்தனை விலையேறப்பெற்ற தைலத்தை வீணடிக்க எந்த ஒரு நல்ல காரணமும் இல்லை.”

இந்த தைலத்தை விற்று இருக்கலாம்

“இந்த தைலத்தை நாங்கள் விற்று இருப்போம்” அல்லது “அவள் இந்த தைலத்தை விற்று இருக்கலாம்.”

Mark 14:6-9

ஏன் நீங்கள் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்?

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.”

Mark 14:10-11

யூதாஸ் ஸ்காரியோத்

மாற்கு 3:17 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Mark 14:12-14

Mark 14:15-16

Mark 14:17-19

மேஜையில் சாய்ந்து

உணவு விருந்தின் பொது விருந்தாளிகள் மேஜையில் பாதி படுத்திருக்கும் அமைப்பில் உண்ணும்படி மேஜைகள் மெத்தைகளோடு இருப்பது வழக்கமாக இருந்தது.

ஒவ்வொருவராக

“ஒரு நேரத்தில் ஒருவர்” என்ற முறையில் ஒவ்வொரு சீடனும் அவரைக் கேட்டான்.

நிச்சயமாக நான் இல்லை

“நிச்சயமாக உம்மை கைது செய்யும் உம்முடைய எதிரிகளுக்கு நான் உதவி செய்பவனாக இருக்க முடியாது!”

Mark 14:20-21

Mark 14:22-25

Mark 14:26-27

பாமாலை

பாமாலை ஒரு வகை பாட்டு. பழைய ஏற்பாட்டின் ஒரு சங்கீதத்தைப் பாடுவது அவர்களுக்கு வழக்கமாய் இருந்தது.

Mark 14:28-29

Mark 14:30-31

நிச்சயமாக நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

மாற்கு 11:22 இல் எவ்வாறு மொழி பெயர்த்தீர் என்று பார்க்கவும்.

என்னை மறுதலித்து

“உங்களுக்கு என்னை தெரியாது என்று சொல்லி”

Mark 14:32-34

Mark 14:35-36

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் கெத்செமனேயில் ஒலிவ மலையில் விழிப்பாய் ஜெபிக்கும்படி விட்டு விட்டார்.

இந்த மணி நேரம் கடந்து போகலாம்

“அவர் அனுபவிக்கும் பாடுகளை தாங்கிக்கொள்ள அவர் பெலப்படுத்தப்படலாம்”

அப்பா

“அப்பா” என்ற கிரேக்க வார்த்தை குழந்தைகள் தங்கள் தகப்பனைக் கூப்பிடும் வார்த்தை. இது நெருங்கிய உறவை காட்டுகிறது. முன்னமே அது அப்பாவைக் குறிப்பிடுவதால் இந்த வார்த்தையை அப்படியே வைத்திருப்பது முக்கியமாக இருக்கலாம்.

இந்த பாத்திரத்தை என்னை விட்டு நீக்கும்

இயேசு சகிக்கவேண்டிய தேவனுடைய கோபாக்கினையை இந்த பாத்திரம் குறிக்கிறது.

Mark 14:37-39

யூதாசைத் தவிர மற்ற சீடர்களோடு இயேசு கெத்செமனே தோட்டத்தில் தொடர்ந்தார்.

அவர்கள் உறங்கி இருப்பதை அறிந்தார்

“பேதுருவும் யாக்கோபும் யோவானும் உறங்கி இருப்பதை அறிந்தார்”

சீமோனே, உறங்கி விட்டாயா

சீமோனே, உன்னை விழித்திரு என்று சொல்லியும் தூங்கினாயோ”

விழித்திருக்கக் கூடாதா

“உங்களுக்கு விழித்திருக்கக் கூட முடியவில்லையா”

ஆவி விரும்புகிறது மாம்சமோ பெலவீனமுள்ளது

“உங்கள் மனம் விரும்புவதை உங்கள் உடல் செய்ய முடிவதில்லை.” மாமிசம் “உடல்”

Mark 14:40-42

யூதாசைத் தவிர மற்ற சீடர்களோடு இயேசு கெத்செமேனே தோட்டத்தில் தொடர்ந்தார்.

அவர்கள் உறங்கி இருப்பதை அறிந்தார்

அவர்கள் உறங்கி இருப்பதை அறிந்தார்

“பேதுருவும் யாக்கோபும் யோவானும் உறங்கி இருப்பதை அறிந்தார்”

நீங்கள் இன்னமும் உறங்கிக் கொண்டு இருக்கிறீர்களா

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் இன்னமும் உறங்குகிறீர்கள்! நீங்கள் இளைப்பாறுகிறீர்கள்!”

Mark 14:43-46

யூதாசைத் தவிர மற்ற சீடர்களோடு இயேசு கெத்செமேனே தோட்டத்தில் தொடர்ந்தார்.

கைகளை வைத்து

“பிடித்து”

Mark 14:47-50

பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகர்களாலும் மூப்பர்களாலும் அனுப்பப்பட்டவர்களால் அந்தத் தோட்டத்தில் இயேசு பிடிக்கப்பட்டார்.

திருடனைப் பிடிப்பதைப் போல வாள்களோடும் தடிகளோடும் வந்திருக்கிறீர்களா?

“திருடனைப் பிடிப்பதைப் போல வாள்களோடும் தடிகளோடும் வந்திருக்கிறீர்கள்”

Mark 14:51-52

பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகர்களாலும் மூப்பர்களாலும் அனுப்பப்பட்டவர்களால் அந்தத் தோட்டத்தில் இயேசு பிடிக்கப்பட்டார்.

மெல்லிய வஸ்திரம்

ஒருவகை சாணல் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட துணி

Mark 14:53-54

Mark 14:55-56

பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகர்களாலும் மூப்பர்களாலும் அனுப்பப்பட்டவர்களால் அந்தத் தோட்டத்தில் இயேசு பிடிக்கப்பட்டார்.

Mark 14:57-59

இயேசுவைக் கைது செய்து யூத பிரதான ஆசாரியர் முன் கொண்டு வரப்பட்டார்.

நாங்கள் கேள்விப்பட்டோம்

“நாங்கள்” என்ற வார்த்தை இயேசுவுக்கு விரோதமாக பொய் சாட்சிகளைக் கொண்டு வந்தவர்களைக் குறிக்கிறது.

Mark 14:60-62

இயேசுவைக் கைது செய்து யூத பிரதான ஆசாரியர் முன் கொண்டு வரப்பட்டார்.

அவர்கள் நடுவில் நின்று

“பிரதான ஆசாரியர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் மூப்பர்களுக்கும் மத்தியில் நின்றார்”

நான்

இவ்வாறு தான் பழைய ஏற்ப்பாட்டில் தேவன் தன்னையே கூப்பிட்ட வார்த்தை.

Mark 14:63-65

இயேசுவைக் கைது செய்து யூத பிரதான ஆசாரியர் முன் கொண்டு வரப்பட்டார்.

அவன் துணிகளைக் கிழித்து

இயேசு சொன்னதைக் கேட்டு வெம்பினதுக்கான அடையாளம்

தேவதூஷணம் என்று கருதி

அவர்கள் எல்லாரும் அவரைக் கண்டனம் பண்ணினார்கள்

“ஆலோசனை சங்கத்தார் அனைவரும் இயேசுவைக் கண்டனம் பண்ணினர்”

Mark 14:66-68

இயேசுவைக் கைது செய்து யூத பிரதான ஆசாரியர் முன் கொண்டு வரப்பட்டார்.

Mark 14:69-70

இந்த நேரத்தில் பேதுரு ஏற்கனவே ஒரு முறை இயேசுவோடு இருந்ததைக் குறித்து மறுதலித்து இருந்தான்.

அவர்களில் ஒருவன்

“சீடர்களில் ஒருவன்”

Mark 14:71-72

நெருப்பின் அருகில் பேதுருவைக் குறித்து தங்களைத் தாங்களே எச்சரிக்கையாய் இருக்கும்படி சொன்ன மக்கள், பேதுரு இயேசுவோடு இருந்தான் என்று சொன்னர்.

அவன் மனங்கசந்தான்

“அவன் மனங்கசந்தான்” என்று சொல்லும்போது அவன் முழுவதும் நொறுக்கப்பட்டான் அல்லது முழுவதுமாக திகைத்துப்போனான் என்று சொல்லுவதற்கான வழி.

Mark 15

Mark 15:1-3

நீர் சொன்னபடி

“நீரே சொல்லிவிட்டீர்”

Mark 15:4-5

Mark 15:6-8

Mark 15:9-11

விடுதலை ஆக்கப்பட்டு

“வெளியே அனுப்பப்பட்டு” அல்லது “மன்னிக்கப்பட்டு” அல்லது “போக விடப்பட்டு”

Mark 15:12-13

Mark 15:14-15

Mark 15:16-18

தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகை

வீரர்கள் தங்கும் இடம் இது.

போர்ச்சேவகர் கூட்டம்

“பெரிய அளவு” அல்லது “அநேகம்”

சிவப்பான மேலங்கியை இயேசுவின் மேல் போட்டார்கள்

கிண்டல் செய்யும் செய்கை இது. சிவப்பு சாயம் ராஜரீகத்துக்கு அடையாளமாகும். இந்த வகையில் அவரை உடுத்துவித்து அவரது, “யூதருக்கு ராஜா” என்ற பெயரைச் சொல்லி கிண்டல் செய்தனர்.

அவருக்கு வணக்கம் செலுத்தி, “யூதருக்கு ராஜா, வாழ்க” என்று சொல்லத் தொடங்கினர்!”

மறுபடியும் அவரைக் கிண்டல் செய்தனர், ஏனென்றால் அவர் யூதருக்கு ராஜா என்று அவர்கள் நம்பவில்லை.

Mark 15:19-21

Mark 15:22-24

Mark 15:25-28

கொள்ளையர்கள் “ஆயுதமுள்ள திருடர்கள்”

Mark 15:29-30

Mark 15:31-32

Mark 15:33-35

Mark 15:36-38

புளிப்பான திராட்சை ரசம்

“கசப்பான காடி”

தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது

தேவன் தேவாலயத்தின் திரைச்சீலையை இரண்டாக கிழித்தார்

Mark 15:39-41

சலோமி

Mark 15:42-44

Mark 15:45-47

முன்னமே தோண்டப்பட்ட கல்லறை

“முன்னமே யாரோ ஒருவரால் தோண்டப்பட்ட கல்லறை”

மெல்லிய வஸ்திரம்

சாணர்ச் செடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு துணி.

இயேசுவின் உடல் வைக்கப்பட்ட இடம்

“யோசேப்பும் மற்றவர்களும் இயேசுவின் உடலை வைத்த இடம்”

Mark 16

Mark 16:1-2

Mark 16:3-4

சமாதி, கல்லறை, அடக்கம் செய்யும் இடம்

Mark 16:5-7

அவர் உயிர்த்தெழுந்தார்!

“அவர் எழுந்தார்” அல்லது “தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்” அல்லது “அவர் தன்னையே மரித்தோரிலிருந்து எழுப்பினார்”

Mark 16:8

Mark 16:9-11

வாரத்தின் முதல் நாளில்

“ஞாயிற்றுக் கிழமை”

Mark 16:12-13

Mark 16:14-16

Mark 16:17-18

Mark 16:19-20