தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Corinthians

1 Corinthians 1

1 Corinthians 1:1-3

எங்களுடைய சகோதரனான சொஸ்தெனே

இது பவுலும் கொரிந்தியர்களும் சொஸ்தெனேயுவை அறிந்திருந்தார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "நானும் நீங்களும் அறிந்த சகோதரன் சொஸ்தெனே."

பரிசுத்தர்களாக அழைக்கப்பட்ட

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் அவர்களை பரிசுத்தர்களாக அழைத்தார்,"

எல்லாரோடும்

கிறிஸ்துவர்கள் அனைவரோடும் கூட. மறு மொழிபெயர்ப்பு: "கூட சேர்ந்து"

அவர்களுடைய கர்த்தரும் எங்களுடைய கர்த்தரும்

இயேசு பவுலுடைய மற்றும் கொரிந்தியர்களுடைய கர்த்தர்; அதே போல எல்லா சபையின் கர்த்தருமாயிருக்கிறார்.

உங்களுக்கு

"உங்களுக்கு" என்ற வார்த்தை கொரிந்துவிலிருக்கும் விசுவாசிகளைக் குறிக்கிறது.

1 Corinthians 1:4-6

நான் நன்றி சொல்லுகிறேன்

மறு மொழிபெயர்ப்பு: "பவுலாகிய நான் நன்றி தெரிவிக்கிறேன்"

கிறிஸ்துவாகிய இயேசு உங்களுக்குக் கொடுத்த தேவனுடைய கிருபையை

"கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்களுக்கு தேவனுடையக் கிருபையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்."

உங்களை ஐசுவரியவான்களாக்கியிருக்கிறார்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கிறிஸ்து உங்களை ஐசுவரியவான்களாக்கியிருக்கிறார்" அல்லது 2. தேவன் உங்களை ஐசுவரியவான்களாக்கியிருக்கிறார்."

எல்லா வழியிலும் உங்களை ஐசுவரியவான்களாக்கியிருக்கிறார்

"உங்களை அனேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் ஐசுவரியவான்களாக்கியிருக்கிறார்."

எல்லா செய்தியிலும்

தேவனுடைய செய்தியை அனேக வழிகளில் மற்றவர்களுக்கு சொல்ல தேவன் உதவி செய்தார்.

எல்லா அறிவும்

தேவனுடைய செய்தியை அனேக வழிகளில் புரிந்துகொள்ள உங்களுக்கு தேவன் உதவி செய்தார்.

கிறிஸ்துவைக் குறித்த சாட்சி

"கிறிஸ்துவைக் குறித்த செய்தி"

உங்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்டு

மறு மொழிபெயர்ப்பு: "உங்களுடைய வாழ்க்கைளை முழுவதும் மாற்றி."

1 Corinthians 1:7-9

அதனால்

"விளைவாக"

ஆவிக்குரிய வரத்தில் குறைவில்லாமல்

"எல்லா ஆவிக்குரிய வரத்தையும் உடைய" கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் வெளிப்படுத்தும் நேரம்" அல்லது 2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னையே வெளிப்படுத்தும் நேரம்."

நீங்கள் பழுதற்று இருப்பீர்கள்

தேவன் உங்களை நியாயம்தீர்க்க ஒரு காரணமும் இருக்காது.

தன்னுடைய குமாரனுடைய ஐக்கியத்துக்குள் உங்களை அவர் அழைத்திருக்கிறார்

தேவன் உங்களை தம்முடைய குமாரனுள் இருக்கும் புதிய ஜீவனுக்குள் பங்குபெற உங்களை அழைக்கிறார்."

1 Corinthians 1:10-11

நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொண்டு

"ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாக வாழுகிறீர்கள் என்று"

உங்கள் மத்தியில் ஒரு பிரிவினையும் வராமல்

நீங்கள் தனித்தனி குழுக்களாக உங்களுக்குள்ளாக பிரிந்துபோகாமல்

ஒரே மனதோடும் ஒரே காரணத்தோடும் ஒன்றாக சேர்க்கப்படுங்கள்

"ஒற்றுமையாக வாழுங்கள்"

குலோவேயாளின் மக்கள்

பெண்ணாகிய குலோவேயாள் தலையாய் இருக்கும் வீட்டுக் குடும்ப நபர்கள், ஊழியர்கள் மற்றும் மற்றவர்கள்.

உங்களுக்குள்ளாக பிரிவினைவாதங்கள் உண்டாகிக்கொண்டிருக்கிறது

"நீங்கள் ஒன்றுக்கொன்று வாக்குவாதம் பண்ணும் குழுக்களாக இருக்கிறீர்கள்."

1 Corinthians 1:12-13

உங்களில் ஒவ்வொருவனும் சொல்லுகிறீர்கள்

பவுல் பொதுவான பிரிவினை சிந்தையை வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்து பிரிந்தா இருக்கிறார்?

பவுல், கிறிஸ்து பிரிந்திருக்கவில்லை ஆனால் ஒன்றாயிருக்கிறார் என்னும் சத்தியத்தை உறுதிப்படுத்த விரும்புகிறார். "நீங்கள் செய்வதுபோல கிறிஸ்துவை பிரிக்க சாத்தியமில்லை."

பவுல் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டாரா?

பவுலோ மற்ற அப்போஸ்தலர்களோ அல்ல கிறிஸ்துவே சிலுவையில் அறையப்பட்டார் என்று உறுதியாக சொல்ல பவுல் விரும்புகிறார். "உங்கள் இரட்சிப்புக்காக அவர்கள் பவுலை சிலுவையில் சாகக் கொடுக்கவில்லை."

பவுலின் நாமத்திலா நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

இயேசுவின் நாமத்தில் நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம் என்பதை பவுல் உறுதிபடுத்த விரும்புகிறார். "மக்கள் உங்களை பவுலின் நாமத்தில் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை."

1 Corinthians 1:14-16

நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்

கொரிந்துவில் அனேகரை தான் ஞானஸ்நானம் பண்ணவில்லை என்பதால் தான் எவ்வாறு நன்றியுள்ளவனாயிருக்கிறேன் என்பதை பவுல் மிகையாகக் கூறுகிறார்.

கிறிஸ்பு

கிறிஸ்தவனாய் மாறிய தேவாலயத்தின் ஆளுநராயிருந்தவன்.

காயு

அப்போஸ்தலனாகிய பவுலோடு பிரயாணம் பண்ணினவன்.

ஒருவரும் என்னால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் என்பதற்காக

"நான் அநேகரை ஞானஸ்நானம் பண்ணுவிப்பதிலிருந்து ஓய்ந்துவிட்டேன், ஏனென்றால் அவர்கள் பின்னர் நான் தான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பெருமைப்பாராட்டுவார்கள்."

ஸ்தேவானின் வீட்டார்

இது ஸ்தேவான் தலைவனாயிருந்த வீட்டின் குடும்ப நபர்களையும், அடிமைகளையும் குறிக்கிறது.

1 Corinthians 1:17

கிறிஸ்து என்னை ஞானஸ்நானம் பண்ணுவிக்க அனுப்பவில்லை

இது பவுலின் ஊழியத்தில் ஞானஸ்நானம் என்பது பிரதான இலக்கு அல்ல என்று அர்த்தப்படுகிறது.

மனித ஞானத்தின் வார்த்தைகள்

"வெறுமனே மனித ஞானத்தின் வார்த்தைகள்"

கிறிஸ்துவின் சிலுவை அதனுடைய வல்லமையினின்று வெறுமையாக்கப்படக்கூடாது.

ம.மொ. "மனித ஞானம் கிறிஸ்துவின் சிலுவையின் வல்லமையை வெறுமையாக்கக்கூடாது."

1 Corinthians 1:18-19

சிலுவையைக் குறித்த செய்தி

"சிலுவையில் அறையப்படுதலைக் குறித்த பிரசங்கம்" அல்லது "கிறிஸ்து சிலுவையில் மரிக்கிறதைக் குறித்த செய்தி"

முட்டாள்தனமாயிருக்கிறது

"புத்தியில்லாததாய் இருக்கிறது" அல்லது "துச்சமாய் இருக்கிறது"

மரிக்கிறவர்களுக்கு

"மரிக்கிறது" ஆவிக்குரிய மரணத்தைக் குறிக்கிறது.

அது தேவனுடைய வல்லமை

"அது தேவன் நமக்குள் வல்லமையோடு கிரியை செய்வதைக் குறிக்கிறது"

ஞானிகளின் புரிந்துகொள்ளுதலை அவமாக்கி

ம.மொ. "ஞானிகளைக் குழப்பு" அல்லது "ஞானிகள் போடும் திட்டங்கள் முழுவதும் தோற்றுப்போகும்படி திட்டங்கள் போடு"

1 Corinthians 1:20-21

ஞானி எங்கே? அறிஞன் எங்கே? இந்த உலகத்தின் விவாதிகள் எங்கே?

உண்மையான ஞானி எங்கேயும் காணவில்லை என்பதை பவுல் உறுதிப்படுத்துகிறார். ம.மொ. "சுவிசேஷத்தின் ஞானத்தோடு ஒப்பிடும்போது, ஞானியும் இல்லை, அறிஞனும் இல்லை, விவாதிக்கிறவனும் இல்லை!"

அறிஞன்

மிகவும் படித்தவன் என்று அறியப்படுபவன்.

விவாதிகன்

தனக்கு தெரிந்தவைகளைக் கொண்டு விவாதிக்கிறவன் அல்லது இதுபோன்ற விவாதங்களில் தேர்ந்தவன்.

உலகத்தின் ஞானத்தை தேவன் முட்டாள்தனமாக்கவில்லையா?

இந்த உலகத்தின் ஞானத்துக்கு தேவன் செய்ததை உறுதியாகச் சொல்லும்படி பவுல் இந்தக் கேள்வியைப் பயன்படுத்தி இருக்கிறார். ம.மொ. "தேவன் நிச்சயமாக உலகத்தின் ஞானத்தை முட்டாள்தனமாக மாற்றி உள்ளார்." அல்லது "அவர்கள் முட்டாள்தனமானது என்று நினைத்துக்கொண்டிருந்த செய்தியை உபயோகப்படுத்த தேவன் சந்தோஷப்பட்டார்.

விசுவசிக்கிறவர்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "அதை நம்பும் அனைவரும்" (UDB) அல்லது 2. "அவரை நம்புபவர்கள்"

1 Corinthians 1:22-23

நாங்கள் பிரசங்கிக்கிறோம்

"நாங்கள்" என்ற வார்த்தை பவுலையும் மற்ற சுவிசேஷகர்களையும் குறிக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து

"சிலுவையில் மரித்த கிறிஸ்துவைக் குறித்து"

தடைக் கல்

சாலையில் இருக்கும் தடைக் கல்லால் ஒரு மனிதன் தடுக்கி விழுவதற்கு ஏதுவாகிறது போல, இரட்சிப்பு சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவிடமிருந்து என்ற செய்தி யூதர்களுக்கு. ம.மொ. "ஏற்றுக்கொள்ள முடியாதது" அல்லது "மிகவும் வெறுப்பூட்டுகிற"

1 Corinthians 1:24-25

தேவன் அழைத்தவர்களுக்கு

"தேவன் அழைத்த மக்களுக்கு"

நாங்கள் கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம்

ம.மொ. "நாங்கள் கிறிஸ்துவைக் குறித்து போதிக்கிறோம்" அல்லது "நாங்கள் கிறிஸ்துவைக் குறித்து எல்லா மக்களுக்கும் சொல்லுகிறோம்"

தேவனுடைய வல்லமையும்,ஞானமுமான கிறிஸ்து, தேவன் தம்முடைய ஞானத்தையும்,வல்லமையையும் கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தேவனுடைய முட்டாள்தனம்...தேவனுடைய பலவீனம்

இது தேவனுடைய இயல்புக்கும் மனிதனுடைய இயல்புக்குமான வேறுபாடு. தேவனிடம் முட்டாள்தனமோ அல்லது பலவீனமோ ஏதாகிலும் இருந்தாலும், மனிதனுடைய சிறந்த இயல்பைவிட தேவனுடைய பலவீனம் மிகவும் உயர்ந்தது.

1 Corinthians 1:26-27

உங்கள் மேல் உள்ள தேவனுடைய அழைப்பு

"உங்களைப் பரிசுத்தர்களாக தேவன் எவ்வாறு அழைத்தார்."

உங்களில் அநேகர் இல்லை

"உங்களில் ஒரு சிலர் மட்டும்" மனித நிலைமை

"மக்களுடைய தீர்ப்பு" அல்லது "நல்லது என்ன என்பதின் மக்கள் கருத்துக்கள்"

உயர்ந்த பிறப்பு

"உங்களுடைய குடும்பம் முக்கியமானதோ" அல்லது "மேன்மையானதோ" காரணமாக இருக்கலாம்.

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தின் முட்டாள்தனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

யூதத் தலைவர்கள் முக்கியமில்லாதவர்கள் என்று கருதியவர்களை, தமக்கு இந்தத் தலைவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமில்லை என்பதைக் காட்டவே தேவன் இந்த தாழ்மையானவர்களைத் தெரிந்துகொண்டார்.

பலமுள்ளது எதுவோ அதை வெட்கப்படுத்தும்படி தேவன் இந்த உலகத்தின் பெலவீனமானதைத் தெரிந்துகொண்டார்.

முந்தின வாக்கியத்தின் கருத்தை வேறு வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ளது.

1 Corinthians 1:28-29

தாழ்ந்ததும் வெறுக்கப்பட்டதும்

உலகம் தவிர்க்கும் மக்கள். ம.மொ. "தாழ்ந்த மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள்"

ஒன்றுமில்லை என்று கருதப்படும் காரியங்கள்

"மதிப்பில்லாதவை என்று மக்கள் பொதுவாகக் கருதுபவைகள்"

ஒன்றுமில்லாத நிலைமைக்குக் கொண்டுவருதல்

"முக்கியத்துவத்தை எடுத்துப்போடுதல்"

மதிப்புள்ளவைகளாகக் கருதப்படுபவை

"மதிப்புள்ளதாக பொதுவாக மக்கள் கருதுபவைகள்" அல்லது "பண மதிப்பு அல்லது மரியாதைக்குரிய தகுதி உடையப் பொருட்கள் என்று மக்கள் நினைப்பவை"

அவர் இதை செய்தார்

"தேவன் இதை செய்தார்."

1 Corinthians 1:30-31

தேவன் செய்த காரியத்தின் நிமித்தம்

இது சிலுவையில் கிறிஸ்துவின் கிரியையைக் குறிக்கிறது.

எங்களுக்கு...நம்முடைய

"எங்களுடைய" என்ற வார்த்தையில் பவுல் கொரிந்தியர்களை சேர்க்கிறார்.

இப்பொழுது நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறீர்கள்

"இப்பொழுது நீங்கள் கிறிஸ்து இயேசுவின் மூலம் இரட்சிப்பை பெற்றுக்கொண்டீர்கள்" தேவனிடத்திலிருந்து நமக்காக ஞானமான கிறிஸ்து இயேசு

ம.மொ. "தேவன் எப்படி ஞானமுள்ளவர் என்பதை நமக்கு தெளிவுப்படுத்தின கிறிஸ்து இயேசு."

"பெருமைபேசுகிறவன், கர்த்தருக்குள் பெருமை பேசட்டும்"

ம.மொ. "ஒரு மனிதன் பெருமை பேசினால், கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதைப் பற்றி பேசக்கடவன்."

1 Corinthians 2

1 Corinthians 2:1-2

பேசுவதில் புலமை

நம்பவைக்கும் மற்றும் மென்மையான முறையில் பேசுவது.

ஒன்றும் அறிய வேண்டாமல்

பவுல் மனித கருத்துகளுக்குத் தன் கவனத்தைத் திருப்பாமல் கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்குத் தன கவனத்தைத் திருப்புகிறார். தான் "கிறிஸ்துவைத் தவிர...ஒன்றும் அறியாமல்" என்று சொல்லியதால், தான் முழு கவனத்தையும் கிறிஸ்துவின் மேல் செலுத்துகிறேன் என்று உறுதியாகச் சொல்லுகிறார்.

1 Corinthians 2:3-5

நான் உங்களோடு இருந்தேன்

"நான் உங்களை வந்து சந்தித்தேன்"

பெலவீனத்திலும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "சரீரப்பிரகாரமான பலவீனம்" (UDB பார்) அல்லது 2. "குறைச்சலாக உணர்தல்"

நம்பவைத்தல்

ஒத்துக்கொள்ளச் செய்தல் அல்லது மக்கள் ஒரு காரியத்தை செய்யவோ அல்லது நம்பவோ செய்வது.

அவர்கள்

பவுலின் செய்தியும் சுவிசேஷத்தின் பிரகடனமும்.

1 Corinthians 2:6-7

ஞானத்தைப் பேசு

"ஞான வார்த்தைகளைப் பேசு"

முதிர்ந்த

ம.மொ. "முதிர்ந்த விசுவாசிகள்"

நம்முடைய மகிமைக்காக

"நம்முடைய வரப்போகும் மகிமையை உறுதிப்படுத்த"

1 Corinthians 2:8-9

மகிமையின் கர்த்தர்

"மகிமையான கர்த்தராகிய இயேசு"

ஒரு கண்ணும் காணாதவைகள், ஒரு காதும் கேட்காதவைகள், ஒரு மனதும் கற்பனை செய்யாதவைகள்

இந்த மூன்றும் மனிதனுடைய எல்லா உறுப்புகளையும் குறிக்கிறது எதற்கு என்றால் தேவன் ஆயத்தம்பண்ணின காரியங்களைக் குறித்து ஒரு மனிதனும் அறியான் என்பதை உறுதியாய் சொல்லவே.

தம்மை நேசிக்கிறவர்களுக்கு தேவன் ஆயத்தம் பண்ணின காரியங்கள்

தன்னை நேசிக்கிறவர்களுக்கு கர்த்தர் பரலோகத்தில் அதிசயமான ஆச்சரியங்களை உருவாக்கியிருக்கிறார்.

1 Corinthians 2:10-11

காரியங்கள் இவைகளே

இயேசுவையும் சிலுவையையும் குறித்த உண்மைகள்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆவியைத் தவிர யார் ஒருவனுடைய நினைவுகளை அறிவான்?

அந்த மனிதனைத் தவிர ஒருவனும் அவனுடைய நினைவுகளை அறியான் என்பதை உறுதிப்படுத்தி சொல்லவே இந்தக் கேள்வியைப் பவுல் இங்கு பயன்படுத்தி இருக்கிறார். ம.மொ. "ஒரு மனிதனின் ஆவியைத் தவிர அவன் என்ன நினைக்கிறான் என்பதை யாரும் அறியார்கள்"

மனிதனின் ஆவி

"ஆவி" என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் அசுத்த அல்லது தீமையான ஆனால், தேவனுடைய ஆவியிலிருந்து வேறுபட்ட ஆவியைக் குறிக்கிறது.

1 Corinthians 2:12-13

ஆனால் நாங்கள்

"நாங்கள்" என்பது பவுலையும் அவனைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்களையும் குறிக்கிறது.

நமக்கு இலவசமாக தேவனால் கொடுக்கப்பட்ட

"தேவன் நமக்கு இலவசமாக கொடுத்தார்" அல்லது "தேவன் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்"

ஆவிக்குரிய வார்த்தைகளையும் ஆவிக்குரிய ஞானத்தையும் வியாக்கியானம் பண்ணுகிற ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் தொடர்புகொள்கிறார் விசுவாசிகளுக்கு ஆவியானவருடைய சொந்த வார்த்தைகளில் தேவனுடைய சத்தியத்தையும் தம்முடைய சொந்த ஞானத்தையும் கொடுக்கிறார்.

1 Corinthians 2:14-16

ஆவிக்குரியவன் அல்லாதவன்

பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளாத கிறிஸ்துவனல்லாதவன்.

அவர்கள் ஆவிக்குரிய பகுத்தறிவோடு இருப்பதால்

"இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவருடைய உதவி தேவை என்பதால்"

ஆவிக்குரியவன்

ம.மொ. "ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட ஒரு விசுவாசி. தேவனுக்கு புத்தி சொல்லும்படி அவருடைய மனதை அறிந்தவன் யார்?

கர்த்தருடைய

மனதை ஒருவனும் அறிந்ததில்லை என்பதை உறுதியாய் சொல்லவே பவுல் இந்தக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். ம.மொ. "ஒருவனும் கர்த்தருடைய மனதை அறிய முடியாது. இவ்வாறு, தான் ஏற்கனவே அறியாததை ஒருவனும் அவருக்குப் போதிக்க முடியாது."

1 Corinthians 3

1 Corinthians 3:1-2

ஆவிக்குரிய மக்கள்

ஆவியானவருடைய வல்லமையில் வாழுகிற மக்கள்.

மாமிசத்துக்குரியவர்கள்

தங்களுடைய சொந்த விருப்பங்களைத் தொடர்கிறவர்கள்.

கிறிஸ்துவில் குழந்தைகளானவர்கள்

கொரிந்தியர்கள் வயதிலும் புரிந்துகொள்ளுதலிலும் இளமையான குழந்தைகளோடு ஒப்பிடப்படுகிறார்கள். ம.மொ. "கிறிஸ்துவில் மிகவும் இளைய விசுவாசிகள்"

நான் உங்களுக்கு பாலை உண்ணக்கொடுத்தேன் மாமிசத்தையல்ல

கொரிந்தியர்கள் பாலை மட்டுமே குடிக்ககூடும் குழந்தைகளைப் போல சுலபமான சத்தியங்களை மாத்திரம் எடுத்துக்கொள்ளுகிறார்கள். பெரிய சத்தியங்களை புரிந்துகொள்ள இப்பொழுது உணவை உண்ணக்கூடிய குழந்தைகளைப் போல அவர்கள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.

நீங்கள் இன்னும் ஆயத்தம் ஆகவில்லை

"கிறிஸ்துவைப் பின்பற்றுவதைக் குறித்த கடினமான போதனைகளைப் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை"

1 Corinthians 3:3-5

இன்னும் மாமிசத்திலே

பாவத்தின் அல்லது உலகத்தின் ஆசாபாசங்களுக்கு ஒத்து நடக்கிற நடக்கை.

நீங்கள் மாமிசத்துக்கு ஒத்து நடக்கிறீர்களா

பவுல் கொரிந்தியர்களுடைய பாவ நடக்கையைக் கடிந்து கொள்ளுகிறார். ம.மொ. "உங்களுடைய பாவ விருப்பங்களுக்குத்தக்கதாக நீங்கள் நடந்து கொள்ளுகிறீர்கள்."

நீங்கள் மனித முறைமைகளுக்குத்தக்கதாக நடக்கிறதில்லையா?

மனித முறைமைகளுக்கு ஒத்து கொரிந்தியர்கள் வாழுகிறார்கள் என்பதால் கடிந்துகொள்ளுகிறார். ம.மொ. "நீங்கள் மனித முறைமைகளை பின்பற்றுகிறீர்கள்."

நீங்கள் மனிதர்களைப் போல வாழுகிறதில்லையா?

ஆவியானவர் இல்லாதவர்கள் வாழுகிறது போல அவர்கள் வாழுவதால் பவுல் கடிந்துகொள்ளுகிறார்.

பின்பு அப்பொல்லோ யார்? மற்றும் பவுல் யார்?

பவுல், தானும் அப்பொல்லோவும் சுவிசேஷங்களின் ஆதாரமல்ல என்பதை உறுதிப்படுத்தி, அதனால் சுவிசேஷத்தைப் பின்பற்றும் குழுக்களை மேன்மைப்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறார். ம.மொ. "அப்பொல்லோவையும் பவுலையும் பின்பற்றும் குழுக்கள் கூட்டுவது தவறு!"

நீங்கள் விசுவாசிக்க ஏதுவான வேலையாட்கள்

பவுல் தனது சொந்தக் கேள்விக்கு, தானும் அப்பொல்லோவும் தேவனுடைய வேலையாட்கள் என்று பதிலளிக்கிறார். ம.மொ. "பவுலின் போதனை மூலமாகவும் மற்றும் அப்பொல்லோவின் போதனையின் மூலமாக நீங்கள் சுவிசேஷத்தை விசுவாசித்தீர்கள்."

எங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கொடுத்தக் கடமைகள்

ம.மொ. "கர்த்தர் பவுலுக்கும் அப்பொல்லோவுக்கும் கடமைகளைக் கொடுத்தார்."

1 Corinthians 3:6-7

நடப்பட்ட

விளையும்படி நடப்பட வேண்டிய விதைக்கு தேவனை அறிகிற அறிவு ஒப்பிடப்பட்டுள்ளது.

நீர் பாய்ச்சப்பட்ட

விதைகளுக்குத் தண்ணீர் தேவை. அதுபோல விசுவாசம் வளர்வதற்கு மேலும் போதனைத் தேவையாய் இருக்கிறது.

வளர்ச்சி

செடிகள் வளர்ந்து பெருகுவதுபோல, விசுவாசமும் தேவனை அறிகிற அறிவும் வளர்ந்து ஆழமாயும் பலமாகவும் மாறவேண்டும்.

நடுகிறவனும்...ஒன்றுமல்ல, தேவனே விளையச் செய்கிறார்.

பவுல் தானோ அல்லது அப்பொல்லோவோ விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பொறுப்பல்ல, தேவனே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார்.

1 Corinthians 3:8-9

விதைப்பவனும் நீர் பாயச்சுகிறவனும் ஒன்று

கொரிந்து சபைக்கு தானும் பவுலும் ஊழியம் செய்வதை பவுல் ஒரே வேலையான விதைக்கிறதையும் நீர் பாய்ச்சுகிறதையும் ஒப்பிடுகிறார்.

தன்னுடைய சொந்த கூலி

ஒரு வேலையாள் எவ்வாறு நன்று வேலை புரிந்துள்ளான் என்பதைப் பொறுத்து கொடுக்கப்படும் பணத்தின் அளவு.

நாங்கள்

பவுலும் அப்பொல்லோவும், கொரிந்து சபை அல்ல.

தேவனுடைய உடன் வேலையாட்கள்

பவுல் தன்னையும் அப்பொல்லோவையும் தேவனுடைய உடன் வேலையாட்கள் என்று கருதுகிறார்.

தேவனுடைய தோட்டம்

மக்கள் தோட்டத்தை பதனிட்டு கனிகொடுக்க செய்கிறது போல, தேவன் கொரிந்து விசுவாசிகளை பார்த்துகொள்ளுகிறார்.

தேவனுடைய கட்டிடம்

மக்கள் ஒரு கட்டிடத்தை கட்டுவதுபோல, கொரிந்து விசுவாசிகளை தேவன் வடிவமைத்து உருவாக்கினார்.

1 Corinthians 3:10-11

எனக்குக் கொடுக்கப்பட்ட தேவக் கிருபையின்படி

"தேவன் எனக்கு இலவசமாகக் கொடுத்த வேலையின்படி"

நான் அஸ்திபாரம் இட்டேன்

இயேசுக் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் குறித்தும் இரட்சிப்பைக் குறித்தும் தனது போதனையை ஒரு கட்டிடத்துக்குப் போடும் அஸ்திபாரத்திற்கு ஒப்பிடுகிறார்.

மற்றொருவன் அதன் மீது கட்டுகிறான்

இந்த விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய வகையில் உதவி செய்து மற்ற வேலையாள் தொடர்ந்து சபையில் இந்த வேலையைக் "கட்டுகிறான்."

ஒவ்வொரு மனிதனும்

தேவனுடைய வேலையாட்களைப் பொதுவாக இது குறிக்கிறது. ம.மொ. "தேவனை சேவிக்கும் ஒவ்வொரு மனிதனும்."

அஸ்திபாரமாக இடப்பட்ட அவர் ஒருவரைத் தவிர

தனது அஸ்திபாரத்தின் மீது கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, அஸ்திபாரம் மாற்றப்படமுடியாது. இந்த காரியத்தில், பவுலால் கட்டப்பட்ட கொரிந்து சபையின் ஆவிக்குரிய அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே. ம.மொ. "பவுலாகிய நான் இட்ட அஸ்திபாரத்தைத் தவிர"

1 Corinthians 3:12-13

பொன்னினாலோ, வெள்ளியாலோ, விலையேறப்பெற்ற கற்களாலோ, மரத்தாலோ, வைக்கோளாலோ, வக்கிப்புல்லாலோ, யாராயினும் அஸ்திபாரத்தைக் கட்டினால்

தனது வாழ்நாளில் ஒரு மனிதனின் ஆவிக்குரிய நடக்கையையும் கிரியைகளையும் கட்ட உபயோகப்படுத்தப்படும் ஆவிக்குரிய காரியங்களை பவுல் ஒரு புது கட்டிடத்தைக் கட்ட பயன்படும் சாதனங்களுக்கு ஒப்பிடுகிறார். ம.மொ. "ஒரு மனிதன் விலையுயர்ந்த அல்லது நீண்ட நாள் உழைக்கக்கூடிய அல்லது விலைக் குறைவான அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களாலோ கட்டினால்"

விலையேறப்பெற்ற கற்கள்

"அதிக விலையான கற்கள்"

அவனுடைய வேலை வெளியாக்கப்படும், ஏனென்றால் பகல் வெளிச்சம் அதை வெளிக்காட்டும்

கட்டுமானப்பணியாளனின் முயற்சிகளை பகல் வெளிச்சம் எவ்வாறு வெளிப்படுத்துகிறதோ அவ்வாறு தேவனுடையப் பிரசன்னத்தின் ஒளி ஒரு மனிதனின் முயற்சிகளையும் கிரியைகளையும் வெளிப்படுத்தும். ம.மொ. "அவனுடைய வேலையின் தரத்தை பகல் வெளிச்சம் காட்டும்."

ஏனென்றால் அது அக்கினியில் வெளிப்படுத்தப்படும்; ஒவ்வொருவனும் என்ன செய்தானோ அதன் தரத்தை அக்கினி வெளிப்படுத்தும்.

ஒரு அக்கினி அப்படி கட்டிடத்தின் வலுவை வெளிப்படுத்தி அல்லது பலவீனத்தை அழிக்கிறதோ, அது போல தேவனுடைய அக்கினி ஒரு மனிதனின் முயற்சிகளையும் கிரியைகளையும் நியாயம்தீர்க்கும். ம.மொ. "அவனுடைய வேலையின் தரத்தை அக்கினி வெளிப்படுத்தும்."

1 Corinthians 3:14-15

நிலைத்து

"நிலைத்திருந்து" அல்லது "பிழைத்திருந்து"

ஒருவனுடைய வேலை எரிக்கப்பட்டால்

ம.மொ. "எவனுடைய வேலையையாவது அக்கினி அழித்துப்போட்டால்" அல்லது "அக்கினியானது ஒருவனின் வேலையைக் கெடுத்தால்"

"யாரோ ஒருவனின்" அல்லது "அவன்", அல்லது "அவனுக்கு"

இந்த வார்த்தைகள் ஒரு "மனிதனைக்" குறிக்கிறது. ம.மொ. "மனிதன்" அல்லது "அவன்" (UDB)

அவன் நஷ்டத்தை அனுபவிப்பான், ஆனால் அவனே காப்பாற்றப்படுவான்

"அவன் செய்த வேலை அக்கினி பரிட்சையிலிருந்து தப்பித்திருந்தால் அவன் செய்ததும் மற்றும் அவன் ஏதாகிலும் பரிசு சம்பாதித்திருந்தாலும் அதையும் அவன் இழப்பான், ஆனால் தேவன் அவனைக் காப்பார்.

1 Corinthians 3:16-17

நீங்கள் தேவனுடைய ஆலயம் என்றும் தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறார் என்றும் நீங்கள் அறியவில்லையா?

ம.மொ. "நீங்கள் தேவனுடைய ஆலயம் மற்றும் தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறார்."

அழித்தல்

"கெடுத்து" அல்லது "சேதப்படுத்தி"

தேவன் அந்த மனிதனை அழிப்பார். ஏனென்றால், தேவனுடைய ஆலயம் பரிசுத்தம், அது போல நீங்களும் பரிசுத்தர்கள்.

ம.மொ. "தேவன் அந்த மனிதனை அழிப்பார் ஏனென்றால் தேவனுடைய ஆலயமும் நீங்களும் பரிசுத்தம்."

1 Corinthians 3:18-20

ஒரு மனிதனும் தன்னைத்தானே வஞ்சித்துக்கொள்ள வேண்டாம்.

இந்த உலகத்தில் தான் தான் ஞானி என்னும் பொய்யை ஒருவனும் நம்பக்கூடாது.

இந்த காலத்தில்

"இப்பொழுது"

அவன் ஞானி ஆவதற்கு "முட்டாள்" ஆகட்டும்

"தேவனுடைய உண்மையான ஞானம் பெற்றுக்கொள்ள அந்த மனிதன் உலகம் முட்டாள்தனம் என்று நினைப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்."

"அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரங்களாலேயே பிடிக்கிறார்"

தாங்கள் அறிவாளிகள் என்று நினைப்பவர்களை தேவன் கண்ணிவைத்து பிடிக்கிறார். பின்பு அவர்களுடைய சொந்த திட்டங்களை வைத்து அவர்களைப் பிடிக்கிறார்.

ஞானிகளின் ஞானத்தை கர்த்தர் அறிவார்

ம.மொ. "தாங்கள் ஞானிகள் என்று என்னும் மக்களின் திட்டங்களை கர்த்தர் அறிவார்" அல்லது "ஞானிகளின் அனைத்து திட்டமிடுதலையும் தேவன் உன்னிப்பாகக் கேட்கிறார்."

கெட்டுப்போன

"உபயோகமற்ற." ம.மொ. "தகுதி இல்லாத" அல்லது "குறிப்பில்லாத"

1 Corinthians 3:21-23

மக்களைக் குறித்து ஒரு மேன்மைபாராட்டும் இல்லை!

கொரிந்து சபை விசுவாசிகளுக்கு பவுல் எச்சரிக்கை விடுக்கிறார். ம.மொ. "ஒரு தலைவன் மற்ற தலைவனை விட எவ்வாறு சிறந்தவன் என்று பெருமை பேசவேண்டாம்."

பெருமை பேசுதல்

"அதிகமான பெருமையை வெளிக்காட்டுவது." கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டிய சமயத்தில், கொரிந்து சபை விசுவாசிகள் பவுல் அல்லது அப்பொல்லோ அல்லது கேபா என்பவர்களை மேன்மைப்பாராட்டிக்கொண்டிருந்தனர்.

நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து தேவனுக்குரியாவர்

"நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர்."

1 Corinthians 4

1 Corinthians 4:1-2

இந்தத் தொடர்பில்

ம.மொ. "ஏனென்றால் நாங்கள் இந்த உக்கிராணக்காரர்கள்"

உக்கிராணக்காரர்களாக இருப்பதற்கு வேண்டியவை இது

ம.மொ. "நாம் (இப்படி) இருக்கவேண்டும்"

1 Corinthians 4:3-4

நான் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவது ஒரு சிறிய காரியம்

மனித நியாயத்தீர்ப்புக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகும் உள்ள வித்தியாசத்தை பவுல் ஒப்பிடுகிறார். மனிதன் மீது உள்ள மனிதனின் நியாயத்தீர்ப்பு தேவனுடைய நியாயத்தீர்ப்போடு ஒப்பிடப்படும்போது மிகவும் சின்னக் காரியம்.

ஏற்ப்படுத்தப்பட்ட மாற்றத்தைக் குறித்து நான் அறியவில்லை

ம.மொ. "நான் ஒரு குற்றப்படுத்தலையும் நான் கேட்கவில்லை"

அது நான் வெகுளி என்று அர்த்தமில்லை; கர்த்தர் அறிவார் நான் வெகுளியோ அல்லது குற்றவாளியோ என்று."

1 Corinthians 4:5

அதனால், நியாயந்தீர்க்காதீர்கள்

அவர் வரும் போது தேவன் நியாயந்தீர்ப்பார், நாங்கள் நியாயந்தீர்க்க இருக்கவில்லை.

கர்த்தர் வருவதற்கு முன்பு

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது.

இருதயங்களின்

"மக்களின் இருதயங்களின்"

இருளின் மறைபொருட்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, இருதயங்களின் ஆலோசனைகளைத் தெரியப்படுத்தி

தேவன் மக்களின் நினைவுகளையும் யோசனைகளையும் தெரியப்படுத்துவார். கர்த்தருக்கு முன்பாக ஒன்றும் மறைக்கப்படாது.

1 Corinthians 4:6-7

உங்களுடைய நன்மைக்காக

"உங்களுடைய நலனுக்காக"

எழுதப்பட்டவைகளை விட்டு அதற்கு புறம்பாய் போகாதீர்கள்

"வேதத்தில் எழுதப்பட்டவைகளுக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள்"

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை யார் பார்க்கிறார்கள்?

பவுலினாலும் அப்பொல்லோவினாலும் சுவிசேஷத்தை விசுவாசித்ததால் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கும் கொரிந்தியர்களைப் பவுல் கடிந்துகொண்டார். ம.மொ. "நீங்கள் மற்ற மனிதர்களைவிட மேன்மையானவர்களல்ல."

நீங்கள் இலவசமாய் பெற்றுக்கொள்ளாதது உங்களிடம் என்ன உள்ளது?

அவர்கள் வைத்துள்ள யாவும் தேவன் இலவசமாய் அவர்களுக்குக் கொடுத்தார் என்று உறுதிப்படுத்துகிறார். ம.மொ. "உங்களிடம் உள்ள எல்லாம், தேவன் அந்தக் காரியங்களை உங்களுக்குக் கொடுத்தார்!"

நீங்கள் ஏதோ செய்ததுபோல ஏன் நீங்கள் பெருமை பாராட்டுகிறீர்கள்?

தாங்கள் பெற்றுக்கொண்டதின் நிமித்தம் பெருமை பாராட்டுகிறவர்களை பவுல் கடிந்து கொள்ளுகிறார். ம.மொ. "நீங்கள் பெருமைப் பாராட்ட உங்களுக்கு அதிகாரம் இல்லை" அல்லது "பெருமையே பாராட்டாதீர்கள்."

1 Corinthians 4:8-9

ஏற்கனவே

தனது கருத்தைத் தெரிவிக்க பவுல் முரண்பாடான மொழியைப் பயன்படுத்துகிறார்.

தேவன் எங்களை அப்போஸ்தலர்களாக காட்சிக்கு வைத்திருக்கிறார் ... பவுல் இங்கு தேவன் தம்முடைய அப்போஸ்தலர்களை உலகம் பார்க்க காட்சிக்கு வைத்த இரண்டு வழிகளை இங்கு தெரியப்படுத்துகிறார்.

எங்களை அப்போஸ்தலர்களாக காட்சிக்கு வைத்திருக்கிறார்

தங்களுடைய மரண தண்டனைக்கு முன்பதாக அவமானப்படும்படிக்கு ரோம ராணுவ அணிவகுப்பின் கடைசியில் இருக்கும் கைதிகளைப் போல தேவன் அப்போஸ்தலர்களை காட்டுகிறார்.

மரணதண்டனைக்கு விதிக்கப்பட்ட மனிதர்களைப் போல

கொல்லப்படப்போகும் மனிதர்களைப் போல தேவன் அப்போஸ்தலர்களைக் காட்சிக்கு வைத்தார்.

தூதர்களுக்கும் மனிதர்களுக்கும்

மனிதகுலத்துக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளாகிய இரண்டிற்கும்.

1 Corinthians 4:10-11

கிறிஸ்துவுக்காக நாங்கள் முட்டாள்கள் என்றால், கிறிஸ்துவில் நீங்கள் ஞானிகள்

கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதைக்குறித்த உலகத்தின் பார்வையையும் கிறிஸ்துவ பார்வையையும் வித்தியாசப்படுத்திக்காட்ட பவுல் எதிர்சொற்களை உபயோகிக்கின்றார்.

நாங்கள் பலவீனர், ஆனால் நீங்கள் பலவான்கள்

கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதைக்குறித்த உலகத்தின் பார்வையையும் கிறிஸ்துவ பார்வையையும் வித்தியாசப்படுத்திக்காட்ட பவுல் எதிர்சொர்களை உபயோகிக்கின்றார்.

நீங்கள் கனத்துக்குரியவர்கள் என்று வைக்கப்பட்டிருக்கிறீர்கள்

"கொரிந்துவின் மக்களே உங்களை ஜனங்கள் மதிப்புக்குரிய இடத்துள் வைத்துள்ளனர்"

நாங்கள் கனவீனத்துக்குரியவர்களாக வைக்கப்பட்டிருக்கிறோம்

"அப்போஸ்தலர்களாகிய எங்களை மக்கள் மதிப்புக்குரிய இடத்தில் வைத்திருக்கவில்லை."

இந்த நேரம் வரையில்

ம.மொ. "இப்பொழுது வரை" அல்லது "இச்சமயம் வரை"

மிருகத்தனமாக அடிக்கப்பட்டு

ம.மொ. "சரீரப்பிரகாரமான அடிகளால் தண்டிக்கப்பட்டு"

1 Corinthians 4:12-13

நாங்கள் தூஷிக்கப்படும்போது, நாங்கள் ஆசீர்வதிக்கிறோம்

"ஜனங்கள் எங்களை தூஷிக்கும்போது, நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம்"

தூஷணம்

ம.மொ. "குத்தப்பட்டு." அநேகமாக: "கேவலம்" அல்லது "சாபம்"

நாங்கள் துன்புறுத்தப்படும்போது

"ஜனங்கள் எங்களை துன்புறுத்தும்போது"

நாங்கள் தூஷிக்கப்ப்படும்போது

"எங்களை மக்கள் அநியாயமாக கேவலப்படுத்தும்போது"

நாங்கள் உலகத்தின் கழிவாகிவிட்டோம்; மற்றும் கழிவாக இன்னும் எண்ணப்படுகிறோம்.

"நாங்கள் உலகத்தின் கழிவாகிவிட்டோம்; மற்றும் நாங்களும் எங்களை அவ்வாறே கருதுகின்றனர்."

1 Corinthians 4:14-16

நான் இவைகளை எழுதுவது உங்களை வெட்கப்படுத்தும்படி அல்ல, ஆனால் உங்களை சீர்படுத்தும்படிக்கு

ம.மொ. "நான் உங்களை வெட்கப்படுத்த எத்தனிக்கவில்லை, ஆனால் உங்களை முன்னேற்றவே" அல்லது "நான் உங்களை வெட்கப்படுத்த முயற்சிக்கவில்லை, ஆனால் உங்களை சீர்படுத்தவே"

பத்தாயிரம் ஆசிரியர்கள்

ஒரு ஆவிக்குரிய தகப்பனின் முக்கியத்துவத்தை உணர்த்தும்படி, அவனை வழிநடித்தின மக்களின் எண்ணிக்கையின் ஏற்றம்.

பிள்ளைகள்...தகப்பன்

பவுல் கிறிஸ்துவுக்கு நேராக அவர்களை வழிநடத்தினதால், அவன் கொரிந்து மக்களுக்கு தகப்பனைப் போன்றவன்.

சரி

ம.மொ. "முன்னேற்றம்" அல்லது "இன்னும் மேம்படுத்த"

தூண்டி

ம.மொ. "வலுவாக உற்சாகப்படுத்தி" அல்லது "வலுவாக சிபாரிசு செய்து"

1 Corinthians 4:17-18

இப்பொழுது

அவர்களது மூர்க்கத்தனமான நடத்தையைக் கண்டிக்கும் வண்ணமாக பவுல் தான் எழுதுவதை மாற்றினார்.

1 Corinthians 4:19-21

நான் உங்களிடத்தில் வருவேன்

"நான் உங்களை சந்திப்பேன்"

பேச்சில் அடக்கம் அல்ல

ம.மொ. "வார்த்தைகளால் ஆனது அல்ல" அல்லது "நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதைப் பொறுத்து அல்ல" (UDB)

உங்களுக்கு என்ன வேண்டும்?

கொரிந்தியர்கள் செய்த தவறுகளுக்கு பவுல் அவர்களை கடிந்துகொண்டிருந்ததால், தனது கடைசி முறையிடுதலை அவர்களிடம் செய்கிறார். ம.மொ. "இப்பொழுது என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்."

நான் உங்களிடத்தில் தடியோடு வருவதா அல்லது அன்போடும் மென்மையின் ஆவியோடும் வருவதா?

கொரிந்தியர்களை பவுல் சந்திக்கும்போது பயன்படுத்தலாம் என்று எண்ணின இரண்டு எதிரான மனநிலைகளை அவர்களுக்கு முன் வைக்கிறார். ம.மொ. "நான் உங்களிடத்தில் வந்து கடினமாகக் கற்றுகொடுக்க விரும்புகிறீர்களா? அல்லது நான் உங்களிடத்தில் அன்பைக் காண்பித்து, மென்மையாக உங்களை நடத்த விரும்புகிறீர்களா?."

மென்மையாக

ம.மொ. "இறக்கம்" அல்லது "மிருதுவான"

1 Corinthians 5

1 Corinthians 5:1-2

புறஜாதிகள் மத்தியில் கூட இது அனுமதிக்கப்படவில்லை

"புறஜாதிகள் கூட இதை அனுமதிக்கவில்லை."

...கூட உறங்குதல்

"நடந்துகொண்டிருக்கிற உடலுறவு கொள்ளுதல்"

தகப்பனுடைய மனைவி

தனது தகப்பனின் மனைவி, ஆனால் அவனுடைய தாய் போல் அல்ல.

அதற்கு பதிலாக துக்கம் கொண்டாடலாமல்லவா?

"கொரிந்தியர்களைக் கடிந்துகொள்ளும்படி பயன்படுத்தின பதில் எதிர்பாரா கேள்வி." ம.மொ. "இதற்காக நீங்கள் துக்கமுகமாய் இருக்கக்கூடாது!"

இதை செய்தவன் எவனோ அவன் உங்கள் மத்தியில் இருந்து நீக்கப்பட வேண்டும்

"இதை செய்தவனை உங்கள் மத்தியில் இருந்து நீங்கள் நீக்கிவிட வேண்டும்."

1 Corinthians 5:3-5

ஆவியில் இருந்து

தனது எண்ணங்களில் அவர்களோடு பவுல் இருக்கிறார். "என்னுடைய எண்ணங்களில் உங்களோடு நான் இருக்கிறேன்."

இந்த மனதினை நான் ஏற்கனவே நியாயம்தீர்த்துவிட்டேன்

"நான் இந்த மனிதனை குற்றம்புரிந்தவனாய்க் காண்கிறேன்"

ஒன்றாக சேர்ந்து

"சந்தித்து"

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில்

இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும்படி ஒன்றாகக் கூடிவருதலைக் குறிக்கும்.

இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்புக்கொடுங்கள்

சபைக்கு அகத்தே இருக்கும் உலகத்தில் அதாவது சாத்தானுடைய இடத்தில் அவன் வாழும்படி, ஒரு மனிதனை # தேவனுடைய மக்கள் மத்தியில் இருந்து அகற்றுவதைக் இது குறிக்கிறது. மாமிசத்தின் அழிவுக்காக

தேவன் அவனுடைய பாவத்துக்காக தண்டிக்கும்போது அந்த மனிதன் தனது உடலில் சுகவீனம் அடைவதற்கு.

1 Corinthians 5:6-8

கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த முழு மாவையும் புளிப்பாக்கும் என்பதை நீங்கள் அறியீர்களா?

ரொட்டி முழுவதும் பரவும் கொஞ்சம் புளிப்பைப் போல, ஒரு சிறிய பாவம் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தை முழுவதும் கெடுக்கும்.

பலியிடப்பட்டது

"கர்த்தராகிய தேவன் கிறிஸ்து இயேசுவை பலியிட்டார்"

நம்முடைய பஸ்காவின் ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து பலியிடப்பட்டார்

பஸ்காவின் ஆட்டுக்குட்டி எவ்வாறு இஸ்ரவேலின் பாவங்களை ஒவ்வொரு ஆண்டும் விசுவாசத்தின் மூலம் மூடியதோ, அது போல, கிறிஸ்துவின் மரணம் விசுவாசத்தினால் கிறிஸ்துவை நம்பும் அனைவரது பாவங்களையும் நித்திய நித்தியமாக மூடுகிறது.

1 Corinthians 5:9-10

விபச்சாரம் செய்கிறவர்கள்

கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் என்று சொல்லியும் இந்த வகையில் நடக்கிறவர்களை இது குறிக்கிறது.

இந்த உலகத்தின் துர்குணசாலிகள்

துற்குணமாக வாழும் வழியைத் தெரிந்துகொண்ட விசுவாசிகள் அல்லாத மக்கள்.

பேராசைக்காரர்கள்

"பேராசை உள்ளவர்கள்" அல்லது "மற்றவர் எல்லாரும் வைத்திருக்கும் எல்லாவற்றையும் தங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறவர்கள்"

கொள்ளைக்காரர்

"பணத்தையோ, பொருளையோ ஏமாற்றுபவர்கள்" என்று இதன் அர்த்தம்.

அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், நீங்கள் உலகத்துக்கு வெளியே போகவேண்டும்

இந்த நடக்கை இந்த உலகத்தில் ஒரு இடத்தில் கூட இல்லாமல் இல்லை. ம.மொ. "அவர்களைத் தவிர்த்து இருக்கவேண்டுமானால், எல்லா மனிதரையும் தவிர்க்கவேண்டும்."

1 Corinthians 5:11-13

அழைக்கப்பட்ட எவனும்

கிறிஸ்துவின் விசுவாசி என்று தன்னை அழைக்கும் எவனும்

சபைக்கு வெளியில் இருப்பவர்களை நியாயந்தீர்ப்பதில் நான் எவ்வாறு ஈடுபட்டேன்?

ம.மொ. "சபைக்கு சொந்தம் அல்லாதவர்களை நான் நியாய்ந்தீர்க்கமாட்டேன்."

சபைக்கு உள்ளிருப்பவர்களை நீங்கள் நியாயந்தீர்க்க நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா?

"சபைக்கு உள்ளிருப்பவர்களை நீங்கள் நியாந்தீர்க்கவேண்டும்."

1 Corinthians 6

1 Corinthians 6:1-3

பிரச்சனை

ம.மொ. "ஒத்துக்கொள்ளாதத்தன்மை" அல்லது "வாக்குவாதம்"

நீதிமன்றம்

அவ்விடத்து அரசாங்க நீதிபதி வழக்குகளைக் கவனித்து யார் சரியானவன் என்று தீர்மானிக்கும் இடம்.

பரிசுத்தவான்களிடம் போகாமல், விசுவாசியல்லாது நீதிபதியின் முன்பு போகிறது என்ன?

கொரிந்தியர்கள் தங்களது பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். ம.மொ. "சக விசுவாசியின் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்களை ஒரு அவிசுவாசியான நீதியின் முன்பு கொண்டுபோகாதீர்கள். விசுவாசிகள் தங்களது வாக்குவாதங்களைத் தங்களுக்கு உள்ளாகவே தீர்த்துக்கொள்ளவேண்டும்."

பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்று நீங்கள் அறியவில்லையா?

உலகத்தை நியாயந்தீர்க்க வரப்போகும் காரியத்தை இங்கு குறிப்பிடுகிறார்.

நீங்கள் உலகத்தை நியாய்ந்தீர்ப்பீர்களானால், இந்த சொற்பக் காரியங்களை தீர்த்துக்கொள்ள உங்களுக்கு முடியவில்லையா?

எதிர்காலத்தில் அவர்களுக்கு இந்த முழு உலகத்தையும் நியாயந்தீர்க்கும் திறமையும் பொறுப்பும் கொடுக்கப்படும். அதனால் இப்பொழுது அவர்களுக்குள் எழும்பும் சின்னச் சின்ன பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு முடியும். ம.மொ. "நீங்கள் எதிர்காலத்தில் இந்த உலகத்தையே நியாய்ந்தீர்க்கப்போகிறதினால், இந்த காரியத்தை நீங்கள் இப்பொழுது தீர்த்துக்கொள்ள முடியும்."

காரியங்கள்

"பிரச்சனைகள்" அல்லது "விதண்டாவாதங்கள்"

தேவதூதர்களையும் நாம் நியாயம் தீர்ப்போம் என்று உங்களுக்கு தெரியாதா?

"நாம் தூதர்களை நியாய்ந்தீர்க்கப்போகிறோம் என்று உங்களுக்குத் தெரியும்."

நாம்

பவுல் தன்னையும் கொரிந்தியர்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். இந்த உலகத்தின் காரியங்களை நாம் எப்படி அதிகமாக நியாய்ந்தீர்க்கமுடியாமல் # போகும்?

ம.மொ. "நமக்கு தூதர்களை நியாயந்தீர்க்கும் பொறுப்பும் திறமையையும் கொடுக்கப்படும், இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் கண்டிப்பாக நியாய்ந்தீர்க்கமுடியும்.

1 Corinthians 6:4-6

தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தமாக நீங்கள் ஏதாகிலும் நியாயந்தீர்க்க வேண்டியிருந்தால்

ம.மொ. "தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தமாக நீங்கள் ஏதாகிலும் நியாயந்தீர்க்க நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால்" அல்லது "இந்த வாழ்க்கையின் முக்கியமான காரியங்களை நீங்கள் சரி செய்ய வேண்டியிருந்தால்" (UDB)

ஏன் நீங்கள் இவ்வாறான வழக்குகளை வைத்துள்ளீர்கள்

"இது போன்ற வழக்குகளை நீங்கள் ஒப்புக்கொடுக்கக்கூடாது."

சபையில் மதிப்பு இல்லாதவர்கள்

வழக்குகளை கையாளும் முறைகளைப் பார்த்து பவுல் கொரிந்தியர்களைக் கடிந்துகொள்ளுகிறார். சாத்தியமான அர்த்தங்கள் 1. "தீர்மானிக்க தகுதியில்லாத சபையின் அங்கத்தினர்களிடம் இது போன்ற வழக்குகள் கொடுப்பதை நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்." அல்லது 2. "சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் இது போன்ற வழக்குகள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்." அல்லது 3. "மற்ற விசுவாசிகளால் அங்கீகரிக்கப்படாத விசுவாசிகளிடம் கூட இது போன்ற வழக்குகளைக் கொடுக்கலாம்."

உங்களுக்கு வெட்கமுண்டாக

ம.மொ. "உங்களுடைய கனவீனதுக்காக" அல்லது "இந்தக் காரியத்தில் நீங்கள் எவ்வாறு தோற்றீர்கள் என்பதைக் காட்டும்விதமாக." (UDB)

சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும்படியான ஞானம் உள்ளவர்கள் உங்கள் மத்தியில் இல்லையா? ம.மொ. "விசுவாசிகள் மத்தியில் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி உங்கள் நடுவே இருக்கும் ஞானமுள்ள விசுவாசியை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்."

பிரச்சனை

"விவாதம்" அல்லது "எதிர்வாதம்"

அது இருப்பதுபோல

ம.மொ. "இப்பொழுது இருப்பது போல" அல்லது "அதற்கு பதிலாக" (UDB) ஒரு விசுவாசி மற்ற விசுவாசியோடு உள்ள வழக்கை ஒரு அவிசுவாசியான # நீதிபதியிடம் கொண்டு செல்ல நீதிமன்றம் செல்லுகிறார்.

ம.மொ. "தங்களுக்குள் பிரச்சனை உள்ள விசுவாசிகள் தங்களுக்கென்று ஒரு நல்ல தீர்ப்பு செய்யும்படி ஒரு அவிசுவாசியான நீதிபதியிடம் போகின்றனர்."

அந்த வழக்கு வைக்கப்படுகிறது

"ஒரு விசுவாசி அந்த வழக்கை ஒப்புக்கொடுக்கிறார்."

1 Corinthians 6:7-8

தோல்வி

ம.மொ. "வீழ்ச்சி" அல்லது "இழப்பு"

ஏமாற்றுதல்

ம.மொ. "தந்திரம்" அல்லது "வஞ்சித்து"

தவறால் ஏன் துன்பப்படக்கூடாது? ஏன் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவிடக்கூடாது? ம.மொ. "நீதிமன்றத்துக்கு அவர்களைக் கொண்டு செல்லுவதைவிட அவர்களால் ஏமாற்றப்படுவதும் மற்றவர்களால் தவறு செய்ய உங்களை ஒப்புகொடுப்பதும் நல்லது."

உங்கள் சொந்த சகோதரரும் சகோதரிகளும்

கிறிஸ்துவின் விசுவாசிகளான ஒவ்வொருவரின் அனைத்து சகோதரர்களும் சகோதரிகளும். ம.மொ. "உங்கள் சொந்த சக விசுவாசிகள்."

1 Corinthians 6:9-11

உங்களுக்கு அது தெரியுமா

இந்த உண்மையை அவர்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் உணர்த்துகிறார். ம.மொ. "உங்களுக்கு ஏற்கனவே தெரியும்."

தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்

தேவன் நியாயத்தீர்ப்பின் நாளில் நீதிமான்கள் என்று தீர்க்கமாட்டார் பின்னர் அவர்களால் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியாது.

ஆண் விபச்சாரிகள்

ஒரு ஆண் மற்ற ஆணோடு விபச்சாரம் செய்ய தன்னை ஒப்புக்கொடுப்பது; பணத்திற்காக புணருதல் இல்லை எனலாம். ஓரினச்சேர்க்கை செய்பவர்கள்

ஒரு ஆணோடு மற்றொரு ஆண் புணர்வது.

திருடன்

"மற்றவர்களிடமிருந்து திருடுபவன்." அல்லது "கொள்ளையன்"

பேராசைக்காரன்

ம.மொ. " மற்றவர்கள் குறைச்சலோடு இருக்கும்படி அதிகமாக எடுத்துக்கொள்ளுபவன்.

கொள்ளைக்காரன் : ம.மொ. "ஏமாற்றுபவன்" அல்லது "தங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களிடமே திருடுபவர்கள்"

நீங்கள் சுத்தமாக்கப்பட்டீர்கள்

தேவன் உங்களை சுத்தமாக்கினார்.

நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்

தேவன் உங்களை பரிசுத்தமாக்கினார் அல்லது சுத்திகரித்தார்.

நீங்கள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டீர்கள்

தேவன் உங்களைத் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொண்டார்.

1 Corinthians 6:12-13

"எனக்கு எல்லாச் சட்டமும் உண்டு"

ம.மொ. "'நான் என்னவேண்டுமானால் செய்யலாம்,' சிலர் சொல்லுகிறார்கள்" அல்லது "நான் எதுவும் செய்ய நான் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்"

எல்லாம் அனுகூலமாய் இருக்காது

"ஆனால் எல்லாம் எனக்கு நன்மையாக இருக்காது"

அவர்களில் உள்ள எதினாலும் நான் அடிமையாக்கப்டேன்

ம.மொ. "இந்தக் காரியங்கள் என்னை ஆளுகை செய்து எஜமானாய் இருக்கமுடியாது."

"வயிற்றுக்காக உணவு, உணவுக்காக வயிறு"

ஆனால் தேவன் இரண்டையும் அழியப்பண்ணுவார்.

ம.மொ. "சிலர் சொல்லுகிறார்கள், 'இந்தக் காரியங்கள் என்னை ஆளுகை செய்து எஜமானாய் இருக்கமுடியாது. வயிற்றுக்காக உணவு, உணவுக்காக வயிறு'. ஆனால் தேவன் இரண்டையும் அழியப்பண்ணுவார். ."

வயிறு

சரீரம்

அழித்து

"ஒழித்து"

1 Corinthians 6:14-15

கர்த்தரை எழுப்பி

இயேசுவை மீண்டும் உயிரோடு இருக்கச் செய்து

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அங்கமாய் இருக்கிறது என்று அறியீர்களா?

நம்முடைய கைகள் கால்கள் நம்முடைய சொந்த சரீரத்தின் அவையவங்களாய் இருப்பது போல, நம்முடைய சரீரங்களும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கமாய் இருக்கிறது, ம.மொ. "உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அங்கமாயிருக்கிறது"

நான் கிறிஸ்துவின் அங்கத்தினர்களை எடுத்து விபச்சாரக்காரர்களோடு சேர்க்க முடியுமா?

ம.மொ. "நீங்கள் கிறிஸ்துவின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள், நான் உங்களை விபச்சாரர்களோடு சேர்க்கமாட்டேன்."

அது இல்லாமல் இருக்கட்டும்!

ம.மொ. "அது ஒருபோதும் நடக்கக்கூடாது!"

1 Corinthians 6:16-17

உங்களுக்கு இது தெரியுமா

"உங்களுக்கு ஏற்கனவே தெரியும்." அவர்களுக்கு உண்மை ஏற்கனவே தெரியும் என்பதை பவுல் உறுதிப்படுத்துகிறார்.

ஆனால், கர்த்தரோடு இணைகிறவன் அவரோடு ஒரே ஆவியாகிறான்.

ம.மொ. "கர்த்தரோடு இணைந்த மனிதன் அவரோடு ஒரே ஆவியாய் இருக்கிறான்."

1 Corinthians 6:18

...லிருந்து ஓடு

ஒரு ஆபத்திலிருந்து தப்பியோடும் ஒரு மனிதனின் சாயலுக்கு பாவத்தை ஒதுக்கும் மனிதனின் ஆவிக்குரிய சாயல் ஒப்பிடப்படுகிறது. ம.மொ. "...லிருந்து ஓடு"

செய்கிற

ம.மொ. "செய்கிற" அல்லது "நடத்துகிற"

"மற்ற எல்லாப் பாவமும் அவன் சரீரத்துக்கு வெளியே செய்கிறான்"

ஆனால் தவறான உறவு கொள்ளுகிறவன் தன்னுடைய சொந்த சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான்.

விபச்சாரம் செய்வதால் ஒருவனின் சரீரம் வியாதினால் நோய்வாய்ப்படலாம், ஆனால் மற்ற பாவங்கள் அதே போல சரீரத்தை பாதிப்பதில்லை.

1 Corinthians 6:19-20

உங்களுக்கு இது தெரியுமா

"உங்களுக்கு ஏற்கனவே தெரியும்." அவர்களுக்கு உண்மை ஏற்கனவே தெரியும் என்பதை பவுல் உறுதிப்படுத்துகிறார்.

உங்கள் சரீரம்

ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்துவனின் சரீரமும் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாய் இருக்கிறது.

பரிசுத்த ஆவியானவரின் ஆலயம்

ஒரு ஆலயம் என்பது தெய்வீக ஜீவன்களுக்கு அவைகள் தங்கும்படி தத்தம் செய்யப்பட்டது. அதே போல, ஒவ்வொரு கிறிஸ்துவை விசுவாசிக்கும் கொரிந்தியனின் சரீரமும் பரிசுத்த ஆவியானவர் அவைகளுக்குள் வாசம் செய்வதால் அவைகள் ஆலயம் போன்றது.

நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள்

தேவன் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து கொரிந்தியர்களை விடுவிக்க விலை கொடுத்திருக்கிறார். ம.மொ "தேவன் உங்கள் விடுதலைக்காக விலை கொடுத்திருக்கிறார்."

அதனால்

ம.மொ. "அதினால்" அல்லது "இது உண்மையாக இருப்பதால்" அல்லது "இந்தக் காரணத்தினால்"

1 Corinthians 7

1 Corinthians 7:1-2

இப்பொழுது

பவுல் தனது போதகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகம் செய்கிறார்.

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக் குறித்து

சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள,கொரிந்து ஜனங்கள் பவுலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

ஒரு மனிதன்

இந்த இடத்தில் இது ஒரு கணவனையோ அல்லது புருஷனையோ குறிக்கிறது

அது நல்லது

ம.மொ. "அது சரியாகவும் எற்றுக்கொள்ளுவதாகவும் உள்ளது"

தன்னுடைய மனைவியோடு படுக்காமல் இருப்பது நல்லது என்று சொல்ல சில நேரங்கள் உண்டு

ம.மொ. "ஒரு மனிதனுக்கு அறவே உடல் உறவு கொள்ளுதல் இல்லாமல் இருந்தால் நல்லது."

ஆனால் அனேக தவறான நடக்கைகளின் சோதனைகள் இருப்பதால்

ம.மொ. "விபச்சாரம் செய்ய மக்கள் சோதனையை சந்திப்பதால்."

ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மனைவியை வைத்திருக்கக்கடவன், மற்றும் ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனை வைத்திருக்கவேண்டும்

பலப் பெண்களைத் திருமணம் செய்யும் கலாச்சாரத்துக்கு தெளிவு படுத்த, "ஒவ்வொரு ஆணும் ஒரு மனைவியை வைத்திருக்கக்கடவன், மற்றும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஒரே கணவனை வைத்திருக்கக்கடவள்."

1 Corinthians 7:3-4

அடிப்படை உரிமை

தங்களது கடமை, தொடர்ந்து உடலுறவு கொள்ள கணவனும் மனைவியும் கடமை கொண்டுள்ளனர்.

1 Corinthians 7:5-7

உடலுறவு கொள்ளுவதில் ஒருவர் மற்றவரை தவிர்க்காமல் இருக்கவும்

ம.மொ. "உங்கள் துணைக்கு தரும் திருப்தியை மறுக்காதீர்கள்"

உங்களை ஜெபத்தில் அர்ப்பணம் செய்ய

ஆழமான ஜெபத்தில் இருக்க அவர்கள் உடலுறவு இல்லாமல் ஒரு சில நாட்கள் கடத்தலாம் என்று ஒன்றாக அவர்கள் முடிவு செய்தனர்; யூத மார்க்கத்தில் அது 1

2 வாரங்கள்.

உங்களையே அர்ப்பணித்து

"உங்களையே தத்தம் செய்து"

மீண்டும் கூடி வாருங்கள்

உடலுறவு கொள்ளுவதற்கு திரும்புங்கள்

உங்களுக்கு சுயக் கட்டுப்பாடு இல்லாததால்

ம.மொ. "சில நாட்களுக்குப் பிறகு, உங்கள் உடலுறவு ஆசைகள் கட்டுப்படுத்த முடியாதாகி விடும்."

இதை உங்களுக்கு நான் கட்டளையாக அல்ல யோசனையாக சொல்லுகிறேன்

ஜெபத்தில் இருக்க அவர்கள் உடலுறவு இல்லாமல் ஒரு சில நாட்கள் கடத்தலாம் என்று பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுரை சொல்லுகிறார். ஆனால் இது விசேஷ காரியாமாதளால், மற்றபடி இது தொடர் தேவை அல்ல.

நான் இருப்பதுபோல

பவுலைப்போல திருமணம் செய்யாமல் (முன்னாள் திருமணம் செய்து அல்லது திருமணமே செய்யாமல்).

இந்த வகையோ அல்லது மற்ற வகையோ, ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து தனக்கான வரத்தைப் பெற்றுள்ளான்

ம.மொ. "தேவன் ஒருவனுக்கு ஒரு திறமையையும் மற்றவனுக்கு மற்றொரு திறமையைக் கொடுக்கிறார்."

1 Corinthians 7:8-9

திருமணம் செய்யாமல்

"இப்பொழுது திருமணம் செய்யாமல்"; இது முன்பு திருமணம் செய்தவர்களையும் திருமணம் செய்யாதவர்களையும் குறிக்கிறது.

விதவை

மரித்துப்போன கணவனை இழந்த ஒரு பெண்

அது நல்லது

சரியானது மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை இந்த வார்த்தைக் குறிக்கிறது. ம.மொ. "அது சரியானதும் எற்றுக்கொள்ளக்கூடியதும்"

திருமணம் செய்துகொள்

கணவனும் மனைவியுமாக இருக்கிறார்கள்.

வேகிறதைப் பார்க்கிலும்

ம.மொ. "உடலுறவின் மீது தீராத பற்றோடு வாழுதல்."

1 Corinthians 7:10-11

திருமணமான

கணவனோ அல்லது மனைவியோ உடைய

பிரிந்திருக்கக் கூடாது

சாதாரண பிரிவுக்கும் சட்டப்படியான விவாகரத்துக்கும் ஆனா வித்தியாசத்தை நிறைய கிரேக்கர்கள் வித்தியாசப்படுத்தி பார்க்கமாட்டார்கள். "பிரிவு" என்பது தம்பதிகளுக்கு திருமண வாழ்க்கை என்பது இனி இல்லை.

விவாகரத்து செய்யக் கூடாது

"பிரியக் கூடாது" என்பது போலவே தான் இது. இது சட்டப்படியான விவாகரத்தையோ அல்லது சாதாரண பிரிவையோ குறிக்கலாம்.

அவனோடு ஒப்புரவாகி

"அவள் தனது கணவனோடு உள்ள பிரச்சனைகளை தீர்த்து அவனிடம் திரும்ப வேண்டும்."

1 Corinthians 7:12-14

திருப்தி

"தீர்மானித்து" அல்லது "திருப்தியாகி"

விசுவாசமல்லாத கணவன் வேறுபிரிக்கப்பட்டதால்

"தேவன் விசுவாசமல்லாத கணவனை வேறுபிரித்ததால்"

விசுவாசமல்லாத மனைவி வேறுபிரிக்கப்பட்டதால்

"தேவன் விசுவாசமல்லாத மனைவியை வேறுபிரித்ததால்"

அவர்கள் வேறுபிரிக்கப்பட்டார்கள்

"தேவன் அவர்களை வேறுபிரித்தார்"

1 Corinthians 7:15-16

இந்த காரியத்தில், சகோதரன் அல்லது சகோதரி அவர்களது உறுதிமொழியில் கட்டப்பட்டவர்களல்ல

இந்தக் காரியத்தில், விசுவாசிக்கும் திருமணம் ஆன நபரின் கடமை இனி தேவையில்லை."

உன் கணவரை நீ இரட்சித்துக்கொள்ளுவாயா இல்லையா என்று எப்படி அறிவாய்?

"நீ அவிசுவாசியான கணவனை இரட்சித்துக் கொள்ளுவாய் என்று உனக்கு தெரியாது."

உன் மனைவியை நீ இரட்சித்துக்கொள்ளுவாயா இல்லையா என்று நீ எப்படி அறிவாய்?

"நீ அவிசுவாசியான மனைவியை இரட்சித்துக் கொள்ளுவாய் என்று உனக்கு தெரியாது."

1 Corinthians 7:17-19

ஒவ்வொருவனும்

"ஒவ்வொரு விசிவாசியும்"

எல்லா சபைகளிலும் இது என்னுடைய சட்டம்

பவுல் இதே முறையில் எல்லா சபையில் உள்ள விசுவாசிகளும் நடக்கப் போதித்தார். விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்டபோது யாராவது விருத்தசேதனம் # பண்ணப்பட்டிருந்தனரா

பவுல் விருத்தசேதனம் பண்ணினவர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தார் (யூதர்கள்). ம.மொ. "விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள், தேவன் உங்களை விசுவாசத்துக்கு அழைத்தபோது நீங்கள் ஏற்கனேவே விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தீர்கள்."

விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்டபோது யாராவது விருத்தசேதனம் பண்ணப்படாமலிருந்தனரா

பவுல் விருத்தசேதனம் பண்ணாதவர்களைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார் (யூதர்கள்). ம.மொ. "விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள், தேவன் உங்களை விசுவாசத்துக்கு அழைத்தபோது நீங்கள் ஏற்கனவே விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தீர்கள்."

1 Corinthians 7:20-24

அழைப்பில்

இந்த "அழைப்பு" நீங்கள் ஈடுபட்டிருந்த வேலையையோ அல்லது சமூக ஸ்தானத்தையோ இது குறிக்கிறது. "நீங்கள் செய்தது போல வாழ்ந்து வேலை செய்" (UDB)

தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் அடிமையாய் இருந்தீர்களா? ம.மொ. "விசுவாசத்துக்கு உங்களை தேவன் அழைத்தபோது அடிமையாய் இருந்தவர்களுக்கு."

கர்த்தர் விடுவித்தவன்

இந்த விடுத்தலையைப் பெற்றவன் தேவனால் மன்னிக்கப்பட்டதால் பிசாசினிடமிருந்தும் பாவத்தினிடமிருந்தும் விடுதலை ஆனான்.

நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்

ம.மொ. "கிறிஸ்து உங்களுக்காக மரித்ததால் உங்களை வாங்கி இருக்கிறார்."

நாம் விசுவாசத்துக்கு அழைக்கப்பட்டபோது

ம.மொ. "தேவன் நம்மை விசுவாசத்துக்கு அழைத்த போது."

நாங்கள்...நாம்

கிறிஸ்துவர்கள் எல்லாரையும் இது குறிக்கிறது.

1 Corinthians 7:25-26

திருமணம் செய்யாதவர்களைக் குறித்து இப்பொழுது கர்த்தரிடமிருந்து என்னிடம் ஒரு கட்டளையும் இல்லை

இந்த சூழ்நிலையைக் குறித்து கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து பேசுபவை ஒன்றும் பவுலுக்கு தெரியாது. ம.மொ. "திருமணம் செய்யாத மக்களைக் குறித்து கர்த்தரிடம் இருந்து ஒரு கட்டளையும் என்னிடம் இல்லை."

என்னுடையக் கருத்து

திருமணத்தைக் குறித்த இந்த யோசனைகள் தன்னுடையவை என்று பவுல் உறுதிப்படுத்துகிறார்

கர்த்தரிடமிருந்து வந்த நேரிடையான கட்டளை அல்ல.

அதனால்

ம.மொ. "அதினால்" அல்லது "இதனால்"

வரப்போகும் பிரச்சனை

ம.மொ. "வரப்போகும் சேதம்"

1 Corinthians 7:27-28

திருமண உடன்படிக்கையினிமித்தம் எந்த பெண்ணோடாவது கட்டப்பட்டிருக்கிறீர்களா

திருமணம் ஆனவர்களுக்கு பவுல் பேசுகிறார். ம.மொ. "நீங்கள் திருமணம் செய்திருந்தால்."

அதிலிருந்து விடுதலையை தேடாதீர்கள்

ம.மொ. "திருமண உடன்படிக்கையிலிருந்து விடுபட முயற்சிக்காதீர்கள்."

நீ மனைவியிடமிருந்து விடுதலைப் பெற்றவனோ அல்லது திருமணம் ஆகாதவனோ?

திருமணம் ஆகாதவர்களைப் பார்த்து பவுல் பேசுகிறார். ம.மொ. "நீங்கள் திருமணம் செய்யாதிருந்தால்."

மனைவியைத் தேடாதீர்கள்

ம.மொ. "திருமணம் செய்ய முயற்சிக்காதீர்கள்.'

உடன்பட்ட

"செயல்பட்ட" அல்லது "ஈடுபட்ட"

அவர்களிடமிருந்து உங்களை நான் தப்புவிக்கிறேன்

ம.மொ. "அவர்களை நீங்கள் வைத்திருக்க நான் விரும்பவில்லை."

1 Corinthians 7:29-31

நேரம் குறைவாயிருக்கிறது

ம.மொ. "குறைவான நேரம் இருக்கிறது" அல்லது "நேரம் ஏறக்குறைய கடந்துவிட்டது."

கதறி

ம.மொ. "அழுது" அல்லது "கண்ணீரோடு துக்கப்பட்டு"

அவர்களுடைய பொருட்களை அவர்கள் வைத்திருக்கவில்லை

ம.மொ. "அவர்கள் எதையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை."

உலகத்தோடு தொடர்பு வைத்திருப்பவர்கள்

ம.மொ. "அவிசுவாசிகளோடு தினந்தோறும் தொடர்பிலிருப்பவர்கள்."

அதனோடு எந்த தொடர்பும் இல்லாதவர்கள் போல

ம.மொ. "அவிசுவாசிகளோடு தொடர்பு இல்லாதவர்கள் போல."

ஏனென்றால் இந்த உலகத்தின் முறைமை ஒரு முடிவுக்கு வருகிறது

ஏனென்றால் உலகத்தின்மேல் உள்ள சாத்தானுடைய ஆளுகை சீக்கிரம் நின்றுபோகும்.

1 Corinthians 7:32-34

கவலைகளிலிருந்து விடுதலை

ம.மொ. "அமைதியாக" அல்லது "கவலையில்லாமல்"

அதைக்குறித்து கரிசனைப்பட்டு

ம.மொ "கவனம் வைத்து"

அவன் பிரிந்திருக்கிறான்

ம.மொ. "தேவனையும் அவனது மனைவியையும் பிரியப்படுத்த முனைகிறான்.

1 Corinthians 7:35

நிர்பந்தம்

ம.மொ. "பாரம்" அல்லது "கட்டுப்பாடு"

அதற்கு தத்தம் செய்து

ம.மொ. "அதன் மீது முழு கவனம் செலுத்தலாம்."

1 Corinthians 7:36-38

மரியாதையோடு...நடத்தாமல்

"அன்பாக இல்லாமல்" அல்லது "கனம்பண்ணாமல்"

தனது நிச்சயிக்கப்பட்டவள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தான் திருமணம் செய்துகொள்ளுவேன் என்று தான் வாக்குபண்ணின பெண்." அல்லது 2. "தனது கன்னி மகள்"

அவன் அவளை திருமணம் செய்யட்டும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. தனது நிச்சயிக்கப்பட்டவளை அவன் திருமணம் செய்துகொள்ளட்டும்" அல்லது 2. "அவன் தனது மகளைத் திருமணம் செய்துகொள்ள கொடுக்கட்டும்."

1 Corinthians 7:39-40

அவன் ஜீவனோடிருக்கும் வரை

"அவன் சாகும் வரை" அவள் விரும்பும் யாராயினும்

ம.மொ. "அவள் கேட்கும் யாராயினும்."

கர்த்தருக்குள்

ம.மொ. "புதிய கணவன் ஏற்கனவே விசுவாசியாக இருந்தால்"

என்னுடைய தீர்ப்பு

ம.மொ. "கர்த்தருடைய வார்த்தையில் நான் புரிந்துகொண்டது"

சந்தோஷமாக

மிகவும் திருப்தியாக, மிகவும் ஆனந்தமாக

அவள் இருக்கிறதுபோல வாழ்கிறது

ம.மொ. "திருமணம் ஆகாமலேயே இருத்தல்"

1 Corinthians 8

1 Corinthians 8:1-3

இப்பொழுது

கொரிந்தியர்கள் தன்னை கேட்ட அடுத்த கேள்விக்கு நகருவதைக் குறிக்க பவுல் இந்த வார்த்தையை இங்கு பயன்படுத்துகிறார்.

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவு

பாகாலை ஆராதிப்பவர்கள் கதிரையும், மீன்களையும், அல்லது மாமிசத்தையும் ஒரு தெய்வத்துக்கு பலியிடுவார்கள். அதில் ஒரு பகுதியை ஆசாரியரால் பலிபீடத்தில் எரிப்பார்கள். ஆராதிப்பவனுக்குக் கொடுக்கப்படும் அல்லது சந்தையில் விற்கப்படும் மீதமுள்ளதைக் குறித்து பவுல் பேசுகிறார்.

"நம் எல்லாருக்கும் அறிவு இருக்கிறது" என்பது நமக்குத் தெரியும்

சில கொரிந்தியர்கள் பயன்படுத்தின இந்த பதத்தை பவுல் பயன்படுத்துகிறார். ம.மொ. "நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது போல, 'நம் எல்லாருக்கும் அறிவு இருக்கிறது' என்று நம் எல்லாருக்கும் தெரியும்."

பந்தா பண்ணுதல்

"ஒருவனை பெருமைப்படுத்துவது" அல்லது "தங்களை குறித்து # நினைப்பதற்கு மேலாக ஒருவனை நினைத்துக்கொள்ளுதல்"

அவரால் அந்த மனிதன் அறியப்பட்டிருக்கிறான்

தேவன் அந்த மனிதனை அறிகிறார்."

1 Corinthians 8:4-6

நாங்கள்

பவுலும் கொரிந்தியர்களும்

"உலகத்திலுள்ள விக்கிரகம் ஒன்றுமில்லை" என்று தெரியும்

கொரிந்தியர்கள் பயன்படுத்தின ஒரு சொல்லை பவுல் இங்கு பயன்படுத்துகிறார். ம.மொ. " "நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது போல, 'விக்கிரகத்துக்கு வல்லமையோ அல்லது நமக்கு அர்த்தமோ கிடையாது' என்று நம் எல்லாருக்கும் தெரியும்."

உலகத்திலுள்ள விக்கிரகம் ஒன்றுமில்லை"

ம.மொ. "இந்த உலகத்தில் எந்த விக்கிரகமும் இல்லை."

தேவன்களும் கர்த்தர்களும்

அனேக தெய்வங்களில் பவுல் நம்பிக்கை வைக்கவில்லை, ஆனால் புறஜாதிகள் அதை நம்புகிறார்கள் என்று அவர் அறிகிறார்.

நமக்கு

பவுலும் கொரிந்தியர்களும்

நமக்கு இருக்கிறது

"இதை நாம் நம்புகிறோம்"

1 Corinthians 8:7

அனைவரும்...சிலரும்

"எல்லா மக்களும்...எல்லா மக்களின் ஒரு பகுதி"

கெட்டுப்போன

"அழிந்தது" அல்லது "அடிபட்ட"

1 Corinthians 8:8-10

உணவு நமக்கு தேவனிடம் சிபாரிசு செய்யாது

"கர்த்தரிடத்தில் உணவு கிருபையைப் பெற்றுதராது" அல்லது "நாம் உண்ணும் உணவு தேவன் நம்மில் பிரியப்பட வைக்காது."

நாம் சாப்பிடாமல் இருந்தால் நாம் கெட்டவர்கள் அல்ல; சாப்பிட்டால் நாம் நல்லவர்களும் அல்ல

"நாம் சாப்பிடாமல் இருந்தால் நாம் எதையும் இழக்கப்போவதில்லை; சாப்பிட்டால் நாம் பெற்றுக்கொள்ளப்போவதும் இல்ல."

சாப்பிடத் தகுதியான

"சாப்பிடும்படி உற்சாகப்படுத்தப்பட்டு"

பலவீனர்

தங்களது விசுவாசத்தில் பெலப்படாதவர்கள்

கறியில்

"உணவில்" அல்லது "சாப்பிடும்போது" (UDB)

1 Corinthians 8:11-13

பலவீனமான சகோதரர் அல்லது சகோதரி...அழிக்கப்பட்டால்

சகோதரனோ அல்லது சகோதரியோ அவனுடைய அல்லது அவளுடைய விசுவாசத்தில் வலுவாய் இல்லையென்றால், பாவம் செய்வார்கள் அல்லது தங்களது விசுவாசத்தை இழந்து போவார்கள்."

அதனால்

"இந்தக் கடைசிக் கட்டளையால்"

உணவு ஏற்படுத்துமனால்

"உணவு கொண்டுவருமானால்" அல்லது "உணவு உற்சாகப்படுத்துமானால்"

1 Corinthians 9

1 Corinthians 9:1-2

நான் விடுதலையாகவில்லையா?

கொரிந்தியர்களுக்கு தனக்கு இருக்கும் உரிமைகளை பவுல் இந்த பதில் எதிர்பாரா கேள்வியின் மூலம் நினைப்பூட்டுகிறார். ம.மொ. "நான் விடுதலையாய் இருக்கிறேன்"

நான் அப்போஸ்தலன் இல்லையா?

கொரிந்தியர்களுக்கு தனக்கு இருக்கும் உரிமைகளையும் தான் யார் என்பதையும் பவுல் இந்த பதில் எதிர்பாரா கேள்வியின் மூலம் நினைப்பூட்டுகிறார். ம.மொ. "நான் அப்போஸ்தலன்."

நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்க்கவில்லையா?

கொரிந்தியர்களுக்கு தான் யார் என்பதை பவுல் இந்த பதில் எதிர்பாரா கேள்வியின் மூலம் நினைப்பூட்டுகிறார். ம.மொ. "நான் நமது கர்த்தராகிய இயேசுவை பார்த்திருக்கிறேன்."

என்னொடு நீங்கள் கர்த்தருக்கு வேலையாள் இல்லையா?

கொரிந்தியர்களுக்கு தன்னோடு இருக்கும் உறவை பவுல் இந்த பதில் எதிர்பாரா கேள்வியின் மூலம் நினைப்பூட்டுகிறார். ம.மொ. "கிறிஸ்துவின்மேல் உள்ள உங்கள் விசுவாசம் கர்த்தரில் என்னுடைய வேலையின் பிரதிபலனாய் இருக்கிறது."

நீங்கள் என்னுடைய சாட்சிகள்

ம.மொ. "கிறிஸ்துவின் மேல் உள்ள உங்கள் விசுவாசம் ... உறுதிப்படுத்துகிறது."

1 Corinthians 9:3-6

உண்ணவும் குடிக்கவும் நமக்கு உரிமை இல்லையா?

ம.மொ. "சபைகளிலிருந்து உணவும் பானமும் பெறுவதற்கு முழு உரிமையும் நமக்கு இருக்கிறது."

நாம்

பவுலும் பர்னபாவும்

மற்ற அப்போஸ்தலர்களைப் போலவும் கர்த்தருடைய மற்றும் கேபாவின் சகோதரர்கள் போலவும், விசுவாசியாக இருக்கும் ஒரு மனைவியை நாம் எடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லையா?

ம.மொ. "நம்மிடம் விசுவாசிக்கும் மனைவிகள் இருந்தால், மற்ற அப்போஸ்தலர்களுக்கும், கர்த்தருடைய சகோதர்களுக்கு மற்றும் கேபாவின் சகோதர்களுக்கு நடந்தது போல அவர்களை நாம் எடுத்துக்கொள்ள நமக்கு அதிகாரம் உண்டு."

பர்னபாவும் நானுமா வேலை செய்யவேண்டும்?

ம.மொ. "பர்னபாவும் நானும் சும்மா இருக்க உரிமை உண்டு." அல்லது "ஆனால் என்னையும் பர்னபாவையும் தவிர பணம் சம்பாதிக்க நீங்கள் வேலை செய்ய எதிர்பாருங்கள்."

1 Corinthians 9:7-8

தன்னுடைய சொந்தக் காசை செலவு செய்து வீரனாய் சேவை செய்தவன் யார்?

ம.மொ. "ஒரு வீரன் தன்னுடைய பணத்தை வைத்து சேவை செய்யான்."

திராட்சைத் தோட்டத்தை நாட்டி அதன் கனிகளைப் புசியாதவன் யார்?

ம.மொ. "திராட்சைத் தோட்டத்தை நாட்டினவன் அதன் கனிகளை உண்பான்." அல்லது "திராட்சத் தோட்டத்தை நாட்டி அதன் கனிகளைப் புசிக்கக்கூடாது என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது."

மந்தையை மேய்த்து அதிலிருந்து குடிக்காதவன் யார்?

ம.மொ. "மந்தையை மேய்த்து வேலை செய்தவன் அதிலிருந்து குடிக்கத்தான் செய்வான்." அல்லது "மந்தையை மேய்த்துவிட்டு அதின் பாலைக் குடிக்கக்கூடாது என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது."

இவைகளை நான் மனித அதிகாரத்திலிருந்தா பேசுகிறேன்?

ம.மொ. "நான் இந்தக் காரியங்களை மனித பழக்கவழக்கத்திலிருந்து நான் பேசுகிறதில்லை."

இவைகளை நியாயப்பிரமாணமும் சொல்லுகிறதில்லையா?

ம.மொ. "இது நியாயப்பிரமாணத்தில் தான் எழுதப்பட்டுள்ளது."

1 Corinthians 9:9-11

எருமைகளைக் குறித்தா தேவன் அக்கரைப்படுகிறார்?

ம.மொ. "எருமைகளைக் குறித்து அல்ல தேவன் மிகவும் அக்கரைக் கொள்ளுவது."

நம்மைக் குறித்து நிச்சயமாக அவர் பேசுகிறதில்லையா?

ம.மொ. "தேவன் நிச்சயமாக நம்மைக் குறித்து பேசுகிறார்."

நம்மைக் குறித்து

"நம்மை" என்ற வார்த்தை பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது.

உங்களிடமிருந்து பொருட்களை அறுவடை செய்வது எங்களுக்கு அதிகமோ?

ம.மொ. "உங்களிடமிருந்து பொருட்களை அறுவடை செய்வது எங்களுக்கு அதிகம் அல்ல."

1 Corinthians 9:12-14

மற்றவர்கள்

சுவிசேஷத்தின் மற்ற வேலையாட்கள்

இந்த உரிமை

கொரிந்துவில் இருக்கும் விசுவாசிகளை தன்னுடைய வாழ்வாதாரங்களுக்கு கொடுக்கும்படி எதிர்பார்ப்பது தனது உரிமை என்று பவுல் இங்கு குறிப்பிடுகின்றார். ஏனென்றால் அவர் தான் இவர்களுக்கு முதலாவது சுவிசேஷத்தை சொன்னவர்.

நமக்கு இன்னும் அதிகமாக இல்லையா?

"நமக்கு" என்னும் வார்த்தை பவுலையும் பர்னபாவையும் குறிக்கிறது. ம.மொ. "இன்னும் அதிகமாக இந்த உரிமை எங்களுக்கு இருக்கிறது."

தடையாக இருந்து

"பாரமாக இருந்து" அல்லது "பரவுவதைத் தடுத்து"

சுவிசேஷத்திலிருந்து அவர்களது ஜீவனம் பெற்று

"சுவிசேஷம் சொல்லுவதால் தினமும் வருமானம் பெற்று"

1 Corinthians 9:15-16

இந்த உரிமைகள்

ம.மொ. "இந்த அனுகூலங்கள்" அல்லது "அவர்கள் பெறத் தகுதியானக் காரியங்கள்"

எனக்கு ஏதாகிலும் செய்யப்பட வேண்டும்

ம.மொ. "உங்களிடமிருந்து ஏதாகிலும் பெற்றுக்கொள்ள" அல்லது "எனக்கு தினமும் வருமானம் நீங்கள் கொடுப்பீர்கள்."

விடாய்த்து

ம.மொ. "எடுத்துக்கொண்டு" அல்லது "பிடித்துவைத்து"

நான் இதை கட்டாயம் செய்யவேண்டும்

"நான் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணவேண்டும்"

அப்படியானால், எனக்கு ஆபத்துவரட்டும்

ம.மொ. "அவ்வாறு இருந்தால், நான் துன்பத்தை அனுபவிக்கட்டும்."

1 Corinthians 9:17-18

நான் இதை மனப்பூர்வமாய் செய்வேனானால்

"நான் மனப்பூர்வமாய் பிரசங்கம் செய்வேனானால்"

மனப்பூர்வமாய்

ம.மொ. "சந்தோஷமாக" அல்லது "மனமுவந்து"

எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு இன்னமும் எனக்கு இருக்கிறது

ம.மொ. "தேவன் எனக்குக் கொடுத்த இந்த வேலையை நான் கட்டாயம் செய்யவேண்டும்."

என்னுடைய பிரதிபலன் பிறகென்ன?

ம.மொ. "இது தான் என்னுடைய வெகுமதி."

நான் பிரசங்கம் பண்ணும்போது, சுவிசேஷத்தில் எனக்கிருக்கும் உரிமையை நான் முழுவதும் உபயோகிக்காமல், இலவசமாய் சுவிசேஷத்தைத் தருகிறேன்.

ம.மொ. "பிரசங்கம் பண்ணுவதால் வரும் வெகுமதி ஒரு கடமையாக இல்லாமல் நான் பிரசங்கம் பண்ணமுடிவதே."

சுவிசேஷத்தைத் தந்து

ம.மொ. "சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணி"

சுவிசேஷத்தில் உள்ள என்னுடைய முழு உரிமையையும் எடுத்து

ம.மொ. "நான் பிரயாணம் பண்ணி பிரசங்கம் பண்ணும்படி எனக்கு உதவும்படி மக்களைக் கேள்."

1 Corinthians 9:19-20

அதிகமாக வெற்றிபெறு

"மற்றவரை விசுவாசிக்கத் தூண்டு" அல்லது "கிறிஸ்துவை நம்ப மற்றவர்களுக்கு உதவு"

நான் யூதனைப் போல மாறினேன்

ம.மொ. "நான் யூதனைப் போல நடக்கிறேன்" அல்லது "நான் யூத கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தேன்"

நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்து

ம.மொ. "யூத தலைமைத்துவத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஒப்புக்கொடுத்தும், யூத வேதத்தின் புரிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டும் இருந்தேன்."

1 Corinthians 9:21-23

நியாயப்பிரமாணத்திற்கு வெளியே

இந்த மக்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிகிறதில்லை. இது புறஜாதி நாடுகள். ம.மொ. "யூத சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கும் அப்பால்."

1 Corinthians 9:24-27

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் எல்லாரும் ஓடுவார்கள், ஆனால் ஒருவன் தான் பரிசு வாங்குவான் என்று உங்களுக்கு தெரியுமா?

எதிர்பார்க்கப்பட்ட பதில் என்னவென்றால் இந்தக் கேள்வியின் நிதர்சனங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது: "ஆம், 'எல்லோரும் பந்தயத்தில் ஓடினாலும், ஒருவன் தான் பரிசு பெறமுடியும்."

பந்தயம் ஓடி

பவுல் கிறிஸ்துவுக்காய் வாழுவதும் தேவனுக்காய் வேலை செய்வதையும் ஓட்டம் ஓடுவதற்கும் விளையாட்டு வீரனைப்போல் இருப்பதற்கும் ஒப்பிடுகிறார். ஓட்டப்பந்தயம் போல கிறிஸ்துவ வாழ்க்கையும் செயலும் கண்டிப்பான நெறிமுறைகள் வேண்டும். அதுபோல ஓட்டப்பந்தயம் போல ஒரு கிறிஸ்தவனுக்கு பிரத்தியேக இலக்கு இருக்கிறது.

பரிசு பெற ஓடவேண்டும்

வெற்றிப்பெறத்தக்கதாக அர்ப்பணிப்போடு ஓடுகிறதை தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதை செய்யும் அர்ப்பணிப்போடு ஒப்பிடுகிறார். # மகுடம்

ஒரு விளையாட்டிற்கு ஒரு அதிகாரியால் கொடுக்கப்படும் மகுடம் வெற்றி அல்லது முழுமையாய் செய்ததைக் குறிப்பதாகும்.

நான் நானே தகுதியற்றவனாய் தீர்க்கமுடியாது

இந்த வாக்கியத்தில் எதிர்மறை வடிவம் நேர்மறையாக மாற்றப்பட்டுள்ளது. ம.மொ. "நீதிபதி என்னைத் தகுதியற்றவனாய் தீர்க்கமுடியாது."

1 Corinthians 10

1 Corinthians 10:1-4

நம்முடைய தகப்பன்மார்கள்

யாத்திராகமம் புத்தகத்தில் எகிப்தியர்கள் சேனை பின்தொடரும்போது செங்கடல் வழியாய் ஓடின மோசேயின் காலத்தைகுறிக்கும் காலத்தை பவுல் இங்கு குறிப்பிடுகிறார். "நம்முடைய" என்ற வார்த்தை சேர்த்து சொல்லுகிறதாய் இருக்கிறது. ம. மொ. "எல்லா யூதர்களின் தகப்பன்மார்கள்"

மோசேக்குள்ளாக அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்

ம.மொ. "எல்லாரும் மோசேயை பின்பற்றி அவனுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்."

கடல் வழியே சென்று

எகிப்தை விட்டு வெளியேறின பிறகு மோசேயோடு சேர்ந்து செங்கடலைக் கடந்தனர்.

மேகத்தில்

பகலில் இஸ்ரவேலர்களை வழிநடத்தின மேகம் தேவனுடைய பிரசன்னத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது.

அந்தக் கன்மலை கிறிஸ்துவே

"கன்மலை" தங்களுடைய பிரயாணங்களில் கிறிஸ்துவின் வலுவானப் பிரசன்னத்தைக் குறிக்கிறது. அவர்கள் அவருடைய பாதுகாப்பையும் ஆறுதலையும் சார்ந்து இருக்கலாம்.

1 Corinthians 10:5-6

ரொம்பவும் பிரியப்படாமல்

"பிரியப்படாமல்" அல்லது "கோபம்" (UDB)

அவைகளில் அநேகம்

இஸ்ரவேலர்களின் தகப்பன்மார்

காட்டில்

இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த எகிப்துக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே இருந்த பாலைவன இடம்.

இவைகள் எடுத்துக்காட்டுகள்

இஸ்ரவேலர்கள் கற்றுக்கொள்ளும்படிக்கான ஒரு பாடமோ அல்லது அடையாளமோ.

தீயக் காரியங்களுக்காக ஆசைப்பட்டு

தேவனை கனவீனப்படுத்தும் காரியங்களை செய்யவோ அல்லது பொருட்களை சேர்க்கவோ உள்ள ஆசை.

1 Corinthians 10:7-8

விக்கிரக ஆராதனைக்காரர்கள்

"விக்கிரகங்களை வணங்கும் மக்கள்"

உண்ணவும் குடிக்கவும் அமர்ந்தனர்

"உணவு சாப்பிட அமர்ந்தனர்"

இருபத்து மூன்றாயிரம் பேர் ஒரே நாளில் மரித்தனர்

"தேவன் ஒரே நாளில் இருபத்து மூன்றாயிரம் பேரைக் கொன்றார்."

அதனால்

ம.மொ. "அவர்கள் அந்த சட்டத்துக்குப் புறம்பான விபச்சாரக் கிரியைகள் செய்ததால்."

1 Corinthians 10:9-10

முறுமுறுக்காதீர்கள்

"முறுமுறுத்தலோடு குற்றப்படுத்தி வெளிப்படுத்துதல் அல்லது வெளியே சொல்லுதல்"

மரண தூதனால் அழிக்கப்பட்டு

ம.மொ. "மரண தூதன் அவர்களை அழித்தான்"

அழித்து

ம.மொ. "முடிவு கட்டி" அல்லது "கொலை செய்து"

1 Corinthians 10:11-13

இந்தக் காரியங்கள் நடந்தது

தீய நடக்கையால் வந்த தண்டனை

நமக்கு எடுத்துக்காட்டுகளாக

"நமக்கு" என்பது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

காலத்தின் முடிவு

"கடைசிக் காலம்"

விழுகாமல்

பாவம் செய்யாமல் அல்லது தேவனை மறுக்காமல்

உன்னை ஒரு சோதனையும் மேற்கொள்ளவில்லை; இது எல்லா மனுக்குலத்துக்கும் பொதுவானதல்ல.

ம.மொ. "எல்லா மக்களும் அனுபவிக்கும் சோதனைகளே உன்னை பாதித்த சோதனைகளும்."

உன் திறமை

உன்னுடைய சரீர அல்லது உணர்வுப்பூர்வமான பலன்."

1 Corinthians 10:14-17

விக்கிரக ஆராதனையை விட்டு ஓடிப்போங்கள்

"விக்கிரகத்தை ஆராதிப்பதை விட்டு திட்டமாய் விலகுங்கள்."

ஆசீர்வாதத்தின் பாத்திரம்

கர்த்தருடையப் பந்தியின் சடங்கில் உபயோகப்படுத்தப்படும் திராட்ச ரசத்தால் நிரம்பி இருக்கும் குப்பியை விவரிக்க பவுல் இதைப் பயன்படுத்துகிறார்.

இது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குவைக்கிறது இல்லையா?

நாம் பகிர்ந்துகொள்ளும் ரசப்பாத்திரம் நாம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குள்ளவர்கள் என்பதைக் காட்டுகிறது. ம.மொ. "நாம் கிறிஸ்துவின் ரத்தத்தில் பங்குகொள்ளுகிறோம்."

நாம் பிட்கும் அப்பம், இது கிறிஸ்துவின் சரீரத்தில் நமது பங்கு இல்லையா?

ம.மொ. "நாம் அப்பத்தைப் பகிரும் போது அவருடைய சரீரத்தில் பங்கு பெறுகிறோம்."

பங்கு வைத்தல்

"பங்குபெறுதல்" அல்லது "மற்றவர்களோடு சமமாகப் பங்குபெறுதல்"

அப்பத் துண்டு

சாப்பிடுமுன் பிட்கப்படும் அல்லது துண்டு துண்டாக வெட்டப்படும் சுடப்பட்ட அப்பத்தின் ஒரு பகுதி.

1 Corinthians 10:18-19

பலியிடப்பட்டதிலிருந்து சாப்பிடுபவர்கள் பலிபீடத்தில் பங்கு உள்ளவர்கள் இல்லையா?

ம.மொ. "பலியிடப்பட்டதிலிருந்து சாப்பிடுபவர்கள் விக்கிரக பலிபீடத்தண்டை ஆராதிக்கிறார்கள்."

பின்னே நான் என்ன சொல்லுகிறேன்?

ம.மொ. "நான் சொல்லுவதை ஆராய்கிறதற்கு" அல்லது "இது நான் சொல்ல முற்பட்டது."

விக்கிரகம் விசேஷமா?

ம.மொ. "விக்கிரகம் என்பது உண்மையானது இல்லை." அல்லது "ஒரு விக்கிரகம் முக்கியமானது இல்லை."

விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு விசேஷமா?

ம.மொ. "விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியமானது அல்ல" அல்லது "விக்கிரகத்துக்குப் படைக்கப்படுகிற உணவு அர்த்தமற்றது."

1 Corinthians 10:20-22

கோப்பையிலிருந்து குடித்து

(யாரோ ஒருவரால்) பகிரப்பட்ட கோப்பையில் இருந்து குடிக்கும் செய்கை, பொதுவாக கோப்பையில் இருப்பதைக் குறிக்கிறதாய் இருக்கும். ஆனால் இது "அதே மேன்மைகளை பகிர்தலை" குறிக்கும் உருவகம் ஆகும்.

நீங்கள் கர்த்தருடைய பந்தியிலும் பிசாசுகளுடைய பந்தியிலும் ஐக்கியம் கொள்ள முடியாது

ம.மொ. "நீங்கள் கர்த்தரையும் பிசாசுகளையும் ஆராதித்தால், நீங்கள் கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனை நேர்மையற்றதாய் போகும்."

தூண்டி

ம.மொ. "கோபப்படுத்தி" அல்லது "நச்சரித்து"

அவரை விட நாம் பெலமுள்ளவர்களா?

ம.மொ. "தேவன் வைக்காதபோது, பிசாசுகளோடு நமக்கு ஐக்கியம் வைக்க முடிகிறதா?" அல்லது "தேவனை விடவும் நாம் பலவான்கள் அல்ல?"

1 Corinthians 10:23-24

"எல்லாம் சட்டத்துக்குட்பட்டது"

சில கொரிந்தியர்களின் முழக்கத்தை பவுல் இங்கு குறிப்பிடுகிறார். ம.மொ. "நாம் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்."

ஒருவனும் சுய நலத்தைத் தேடாமல் இருக்கவேண்டும். அதற்கு பதிலாக ஒவ்வொருவனும் தன் அயலானுடைய நலத்தைத் தேடவேண்டும்.

உங்களுக்கே நன்மை செய்துகொள்ளாமல், மற்றவர்களுக்கு எது நன்மையோ அதை செய்யுங்கள்.

நல்லது

ம.மொ. "நன்மை"

1 Corinthians 10:25-27

சந்தையில்

உணவு போன்ற பொருட்களை மக்கள் விற்கவும் வாங்கவும் உள்ள இடம்.

இந்த பூமியும் அதிலுள்ள யாவும் கர்த்தருடையது

கர்த்தர் பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.

மனசாட்சியின் கேள்விகளைக் கேட்காமல்

மனசாட்சிக்காக உணவு எங்கிருந்து வந்தது என்று அறியாமல் இருப்பது நல்லது; ஆனால் எல்லா உணவும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதோ அல்லவோ, அது கர்த்தரிடத்திலிருந்து வருகிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.

1 Corinthians 10:28-30

மற்ற மனிதரின் மனசாட்சியை வைத்து ஏன் என்னுடைய சுயாதீனம் நியாய்ந்தீர்க்கப்படவேண்டும்?

ம.மொ. "என்னுடைய சுய விருப்பங்கள் மற்றவர் அதை சரியா அல்லது தவறா என்று நம்புவதை வைத்து மாற்றப்பட முடியாது."

நான் அதில் பங்குபெற்றால்

"நான்" பவுலை அல்ல ஆனால் நன்றியறிதலோடு மாமிசத்தை உண்ணும் மக்களைக் குறிக்கிறது. ம.மொ. "ஒருவன் பங்குபெற்றால்" அல்லது "ஒருவன் புசிக்கும்போது"

நன்றியோடு

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவனுக்கு செலுத்தும் நன்றியறிதலோடு அல்லது பாராட்டுவதுமான உணர்வு." அல்லது 2. "விருந்து செய்பவருக்கு செலுத்தும் நன்றியறிதலும் பாராட்டும்."

நான் நன்றி செலுத்தினதுக்கு ஏன் நான் தூஷிக்கப்படவேண்டும்?

ம.மொ. "நான் உணவுக்காக நன்றியறிதலோடு இருக்கும்போதும் ஏன் என்னை தூஷிக்கிறீர்கள்?" ம.மொ. "நான் மற்ற ஒருவன் என்னை குற்றப்படுத்த விடமாட்டேன்."

1 Corinthians 10:31-33

எரிச்சல் கொடுக்காமல்

ம.மொ. "சங்கடப்படுத்தாதீர்கள்" அல்லது "தடைகளை உண்டாக்காதீர்கள்"

எல்லா மக்களையும் பிரியப்படுத்தப்பாருங்கள்"

ம.மொ. "எல்லா மக்களையும் சந்தோஷப்படுத்துங்கள்."

என்னுடைய சுய நன்மையைத் தேடாமல்

ம.மொ. "நான் விரும்புகிறபடி காரியங்களை செய்யாமல்"

அநேகர்

எத்தனை பேர் முடியுமோ அத்தனை பேர்.

1 Corinthians 11

1 Corinthians 11:1-4

நினைவு கூறுங்கள்

ம.மொ. "நினைத்துப்பாருங்கள்" அல்லது "கருதுங்கள்"

இப்பொழுது எனக்கு வேண்டும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இதனால், நான் விரும்புகிறேன்" அல்லது 2. "எப்படியாயினும், எனக்கு வேண்டும்." # அவனுடைய தலை மூடப்பட்டு

"தலைமீது துணியையோ அல்லது ஒரு மூடு திரையையோ வைத்து"

தனது தலையை கனவீனப்படுத்தி

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கனவீனத்தை தன்மீது கொண்டுவருதல்" (UDB) அல்லது 2. "தலையாகிய கிறிஸ்துவின் மீது கனவீனத்தைக் கொண்டுவருதல்."

1 Corinthians 11:5-6

அவள் தலை மூடப்படாமல்

தலை மீது போடப்படும், மூடு திரை இல்லாமல், முகத்தை மூடாமல் அது தோள்பட்டை வரை இருக்கும்.

அவளுடைய தலையைக் கனவீனப்படுத்தி

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தன்மீது கனவீனத்தைக் கொண்டுவருதல்" அல்லது 2. "தனது கணவனுக்கு கனவீனத்தைக் கொண்டுவருதல்."

அவளுடைய தலை வழித்ததுபோல

ஒரு சவரகன் கத்தியை வைத்து அவளுடைய தலையிலுள்ள முடியை எல்லாம் எடுத்ததுபோல.

ஒரு பெண்ணுக்கு அது கனவீனமாய் இருந்தால் ...

நவீன காலம் போல் அல்லாமல், கனவீனத்தின் குறியாகவும் அல்லது தனது தலை முடியை வழித்தவளுக்கு இருக்கும் அவமானத்தின் குறியாகவும் இருக்கிறது.

அவளுடைய தலையை மூடி

"அவளுடைய தலையில் ஒரு துணியாளையோ அல்லது மூடு திரையாளோ வைத்து"

1 Corinthians 11:7-8

அவனுடைய தலையை மூடக்கூடாது

ம.மொ. "அவனுடைய தலையின் மேல் மூடு திரையை வைக்கக்கூடாது."

மனிதனின் மகிமை

தேவனுடைய மகத்துவத்தை மனிதன் வெளிப்படுத்துகிறதுபோல, ஒரு பெண் ஒரு ஆணின் மகிமையை வெளிப்படுத்துகிறாள்.

ஒரு மனுஷியிடமிருந்து ஒரு மனிதன் உருவாக்கப்படவில்லை, ஆனால் மனுஷி மனுஷனிடமிருந்து உருவாக்கப்பட்டாள்

படைப்பில், மனிதனின் விலாஎலும்பை தேவன் அகற்றி பெண்ணை உருவாக்கினார்.

1 Corinthians 11:9-10

அவள் தலை மீது அதிகாரத்தின் அடையாளம் கொண்டுள்ளாள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தனக்கு தலையாக ஒரு மனிதன் இருக்கிறான் என்பதன் அடையாளப்படுத்த" அல்லது 2. "அவள் ஜெபிக்கவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் அதிகாரம் உடையவள் என்பதை அடையாளப்படுத்த"

1 Corinthians 11:11-12

கர்த்தருக்குள்

சாத்தியங்கள் 1. "கிறிஸ்தவர்களுள், கர்த்தருக்கு சொந்தமானவர்கள்" அல்லது 2. "தேவனால் உருவாக்கப்பட்ட நிலையில் உலகம்."

எல்லாம் தேவனிடத்தில் இருந்து வருகிறது

ம.மொ. "தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார்."

1 Corinthians 11:13-16

நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்

ம.மொ. "உங்களுக்கு தெரிந்த அந்த இடத்தின் கலாச்சார முறைமைகளையும் சபையின் நடைமுறைகளையும் வைத்து நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்."

தன் தலை மூடப்பட்ட நிலையில் ஒரு பெண் ஜெபிப்பது ஒழுக்கமா

"தேவனைக் கனப்படுத்த, தேவனிடம் ஜெபிக்கும்போது தனது தலையை மூடி வைக்கவேண்டும்."

அதுவா

"அது" என்ற வார்த்தை வாக்கியத்தில் மீதமுள்ள காரியத்தைக் குறிக்கிறது.

இயற்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லையா

ம.மொ. "இயற்கை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்."

இயற்கையே

இது சமுதாயம் கட்டளையிடப்பட்ட வழியைக் குறிக்கிறது.

அவளுடைய முடி அவளுக்குக் கொடுக்கப்பட்டது

"ஏனென்றால் தேவன் பெண்ணை முடியுடன் படைத்தார்."

வாதித்து

"வார்த்தைகளால் மறுத்து"

1 Corinthians 11:17-19

போதனைகள்

ம.மொ. "வழிகாட்டுதல்" அல்லது "கொள்கைகள்"

ஒன்றாக வந்து

ம.மொ. "ஒன்றாகக் கூடி"

அங்கு பிரிவினைகள் உண்டு

அனேக குழுக்கள் உண்டு; சில குறிப்பிடத்தக்கவை, மற்றவை குறிப்பிடத்தக்கவை அல்ல.

ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் உங்கள் மத்தியில் அறியப்படலாம்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "உங்கள் மத்தியில் உள்ள மிகவும் மதிக்கப்பட்ட விசுவாசிகளை மக்கள் அறிவார்கள் என்பதால்" அல்லது 2. "உங்கள் மத்தியில் உள்ள மற்றவர் முன்பாக இந்த அங்கிகாரத்தை அவர்கள் காண்பிக்கும்பொருட்டாக இருக்கலாம்."

அங்கீகரித்து

ஒரு அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த சம்பவத்தில் அவ்விடத்து சபை.

1 Corinthians 11:20-22

கர்த்தருடைய பந்தியல்ல நீங்கள் உண்பது

ம.மொ. "கர்த்தருடைய பந்தியை நீங்கள் மறுபடியும் உருவாக்குவதுபோல நீங்கள் நினைக்கலாம், ஆனால், அதை நீங்கள் மதிக்கவேண்டிய முறையில் நீங்கள் நடத்துவதில்லை."

கூடி வந்து

"ஒன்றாகக் கூடி"

புசிக்கவும் குடிக்கவும்

ம.மொ. "உணவிற்காகக் அதில் கூடி வருதல்."

வெறுத்து

அவமரியாதையுடனும், கனவீனத்துடனும் நடத்துவது அல்லது வெறுப்பது.

அவர்களை அவமானப்படுத்தி

மற்றவரை சபை கூட்டத்தின் முன்பு குறுகச்செய்து, அவமானப்படுத்தி, கூனச்செய்யுங்கள்.

1 Corinthians 11:23-24

நான் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டதை உங்களிடம் தந்தேன்

ம.மொ. "கர்த்தர் எனக்கு தகவல் கொடுத்தார், அதை நான் உங்களுக்குக் கொடுத்தேன்."

கர்த்தராகிய இயேசு, தான் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்

ம.மொ. "யூதாஸ் ஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த ராத்திரியில், இயேசு."

அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தின பிறகு, அதை பிட்டு

ம.மொ. "இயேசு தமது கரத்தில் அப்பத்தை வைத்து, அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, அதைக் கையில் வைத்திருக்கும்போதே அதிலிருந்து சிறு துண்டுகளாகப் பிட்டார்."

இது என்னுடைய சரீரம்

ம.மொ. "நான் வைத்திருக்கும் அப்பம் என்னுடைய சரீரம்."

1 Corinthians 11:25-26

அவர் பாத்திரத்தை எடுத்து

ம.மொ. "திராட்சை ரசம் உடைய அந்த பாத்திரத்தை அவர் தூக்கி."

நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம் இதை செய்யுங்கள்

"இந்த பாத்திரத்திலிருந்து குடியுங்கள், எப்பொழுதெல்லாம் அதிலிருந்து குடிக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம்."

கர்த்தருடைய மரணத்தை சொல்லுங்கள்

"கர்த்தருடைய மரணத்தின் உண்மையை நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள்." கர்த்தருடைய மரணம் பொதுவாக சிலுவையில் அறையப்படுதலையும் உயிர்த்தெழுதலையுமே குறிக்கிறது.

அவர் வரும்வரை

ம.மொ. "இயேசு பூமிக்கு மீண்டும் வரும்வரை."

1 Corinthians 11:27-30

கர்த்தரின் அப்பத்தை புசித்து அல்லது அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணி

ம.மொ. "கர்த்தரின் பந்தியின் கொண்டாடத்தில் பங்குபெறுதல்"

ஆராய்ந்து

"கருதி" அல்லது "சோதித்து"

சரீரத்தை பகுத்தறியாமல்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "சபை என்பது கர்த்தருடைய சரீரம் என்று தெரிந்துகொள்ளாமல்" அல்லது 2. "தான் கர்த்தருடைய சரீரத்தை கையாளுகிறான் என்று அறியாமல்." (UDB)

1 Corinthians 11:31-32

நம்மைநாமே ஆராய்ந்து

"நம்முடைய நடத்தைகளையும் கிரியைகளையும் ஆராய்ந்து பார்க்க கூர்ந்து பார்க்கிறோம்"

1 Corinthians 11:33-34

சாப்பிடும்படி கூடிவருதல்

கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கும் முன்பு சாப்பிடும்படி கூடி வருதல்

ஒருவருக்காக மற்றவர் காத்திருத்தல்

"உணவு புசிக்க துவங்குமுன் மற்றவரெல்லாம் வர விட்டுவிடுதல்"

அவன் வீட்டிலேயே உண்ணட்டும்

ம.மொ. "இங்கு கூடிவரும் முன்னமே அவன் புசித்துவிடட்டும்"

அது நியாயத்தீர்ப்புக்கென்று இல்லை

ம.மொ. "சுயக் கட்டுப்பாடின்மையால் கூடிவருதல் நியாயத்தீர்ப்பை விளையச்செய்யக்கூடாது."

நீங்கள் எழுதின மற்ற காரியங்களைக் குறித்து

"நீங்கள் எழுதின" என்பது பவுல் கொரிந்து விசுவாசிகள் எழுதின கேள்விகளுக்கும் காரியங்களுக்கும் பதில் எழுதுகிறார் என்பது வெளிச்சமாக்குகிறது.

1 Corinthians 12

1 Corinthians 12:1-3

நீங்கள் காரியங்கள் சொல்லப்படாமல் இருப்பது எனக்கு இஷ்டமில்லை

ம.மொ. "நீங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்"

சத்தமில்லாத விக்கிரகங்களுக்கு நீங்கள் வழிதப்ப நடத்தப்பட்டீர்கள்

ம.மொ. "மற்ற மக்கள் உங்களைச் சத்தமிடாத விக்கிரகங்களை ஆராதிக்க இணங்கச்செய்தனர்."

அவர்களால் நீங்கள் நடத்தபட்டீர்கள்

ம.மொ. "அவர்கள் உங்களை நடத்தினார்கள்."

தேவனுடைய ஆவியால் பேசும் எவனும் இப்படி சொல்லமுடியாது

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தன்னுள் தேவனுடைய ஆவியை உடைய ஒரு கிறிஸ்தவனும், இப்படி சொல்ல முடியாது" அல்லது 2. "தேவனுடைய வல்லமையால் தீர்க்கதரிசனம் சொல்லும் எவனும் இப்படி சொல்ல முடியாது."

1 Corinthians 12:4-6

அவைகள் எல்லாம்

கிறிஸ்தவர்கள் செய்யும் "வேறு வேறு வேலைகளை" இது குறிக்கிறது.

1 Corinthians 12:7-8

ஒவ்வொருவனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

ம.மொ. "தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்."

1 Corinthians 12:9-11

பல வகை மொழிகள்

இந்த சொல் வேறு வேறு மொழிகளைப் பேசுவதைக் குறிக்கிறது.

பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்

"மொழிகளை வியாக்கியானம் பண்ணும் திறன்."

1 Corinthians 12:12-13

நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்

ம.மொ. "பரிசுத்த ஆவியானவர் # நாமெல்லாரையும் ஞானஸ்நானம் பண்ணுவித்தார்," ஒரே ஆவியிலிருந்து குடிக்கும்படி செய்யப்பட்டோம்

ம.மொ. "தேவன் ஒரே ஆவியைக் கொடுத்தார்; ஒரு பானத்தைப் பகிர்வதுபோல நாமெல்லாரும் ஆவியைப் பகிர்கிறோம்."

1 Corinthians 12:14-17

கேட்கிற திறன் எங்கே இருக்கிறது? ... நுகரும் திறன் எங்கே இருக்கிறது? ம.மொ. "நீங்கள் எதையும் கேட்க முடியவில்லை"...நீங்கள் எதையும் நுகர முடியவில்லை."

1 Corinthians 12:18-20

எல்லோரும் ஒரே அங்கமாக

ஓவ்வொரு பாகமும் கால்களாய் இருந்தால், பின் கை இருக்காது, கரம் இருக்காது, மார்பிருக்காது, அல்லது தலை இருக்காது. இவை எல்லாமே சேர்ந்து தான் ஒரு சரீரம் ஆகிறது. நாமெல்லாரும் கால்களாய் இருப்போம், சரீரமாக அல்ல.

சரீரம் எங்கே இருக்கிறது?

ம.மொ. "ஒரு சரீரமும் இருக்காது"

அதனால் இப்பொழுது அவர்கள் அனேக அங்கங்கள், ஆனால்,

ம.மொ. "அவர்கள் அனேக அங்கங்களாய் இருப்பதினால், ஆனால்"

1 Corinthians 12:21-24

குறைவான கனமுடையவையாக காணப்படுகிறது

"தாழ்வானதாகக் காணப்பட்டால்"

காண்பிக்கத் தகுதியற்றவை

இது அநேகமாக மக்கள் மறைக்கும் பிறப்புறுப்பைக் குறிக்கலாம்.

1 Corinthians 12:25-27

சரீரத்தில் ஒரு பிரிவினையும் இல்லாமல் இருக்கலாம், ஆனால்

ம.மொ. "சரீரம் ஒன்றாக இருக்கலாம், பின்பு"

ஒரு அங்கம் கனப்படுத்தப்பட்டு

ம.மொ. "ஒரு அங்கத்தினர் கனம் பெறுகின்றார்."

இப்பொழுது நீங்கள் ...

"இப்பொழுது" என்ற வார்த்தை பின்வரும் முக்கியமான குறிப்பிற்கு கவனத்தைத் திருப்பப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1 Corinthians 12:28-29

முதலாவது அப்போஸ்தலர்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "முதலாவது நான் அப்போஸ்தலர்களைக் குறிப்பிடுவேன்" அல்லது 2. "முக்கியப்படுத்தப்படும் முதன்மையான வரம் அப்போஸ்தலர்கள்"

உதவி செய்பவர்கள்

ம.மொ. "மற்ற விசுவாசிகளுக்கு உதவி செய்பவர்கள்" வழிநடத்தும் ஊழியம் செய்பவர்கள்

ம.மொ. "சபையை ஆளுகை செய்பவர்கள்"

வெவ்வேறு பாஷைகளை உடையவர்கள்

பாஷைகளைப் படிக்காமலே ஒன்றுக்கும் மேற்பட்ட அந்நிய மொழிகளைப் பேசும் ஒருவன்.

நாமெல்லாரும் அப்போஸ்தலர்களா?...நாமெல்லாரும் வல்லமையானக் கிரியைகளை செய்கிறோமா?

ம.மொ. "எல்லாரும் அப்போஸ்தலர்கள் அல்ல...சிலர் மட்டுமே வல்லமையான கிரியைகள் செய்கின்றனர்" (UDB)

1 Corinthians 12:30-31

குணமாக்கும் வரம் நாமெல்லாரும் வைத்திருக்கிறோமா?

ம.மொ. "நாமெல்லாருக்கும் குணமாக்கும் வரம் இல்லை."

பெரிய வரங்களை வாஞ்சையோடு நாடுங்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "சபைக்கு உதவும் வரங்களை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள வாஞ்சையோடு தேடவேண்டும்." அல்லது 2. "வைத்துக்கொள்ள குஷியாக இருக்கிறது என்று சொல்லி நீங்கள் பெரியவை என்று நினைக்கும் வரங்களை வாஞ்சையோடு தேடுகிறீர்கள்."

1 Corinthians 13

1 Corinthians 13:1-3

தூதர்களின் பாஷைகள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஒரு நல்பாதிப்புக்காக பவுல் இதை மிகைப் படுத்தி, தூதர்கள் பயன்படுத்தும் மொழிகளை மக்கள் பேசுகிறார்கள் என்று நம்பாமலும், சொல்லுகிறார்." அல்லது 2. "அந்நிய பாஷைகளில் பேசும் சிலர் தாங்கள் தூதர் பாஷைகளைப் பேசுவதாக பவுல் நினைக்கிறார். நான் சத்தமிடுகிற வெண்கலம் அல்லது ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் # ஆகிவிட்டேன்

நான் மிகவும் சத்தமாக கஷ்டப்படுத்தும் ஓசையிடுகிற கருவிகள் போலாகிவிட்டேன்.

எரிக்கப்பட

பழைய மூலப்பிரதிகள் "அதனால் நான் பெருமை பராட்டலாம்." என்று வாசித்தது.

1 Corinthians 13:4-7

அன்பு பொறுமையும் தயவும் உள்ளது

அன்பு ஒரு மனிதனைப் போல உருவகப்படுத்தி பவுல் பேசுகிறார்.

1 Corinthians 13:8-10

1 Corinthians 13:11-13

இப்பொழுது நாம் கண்ணாடியில் பார்க்கிறோம், இருண்ட சாயலைப்போல

கண்ணாடியல்லாத மங்கலான பிரதிப்பளிப்பைத் தரும் வழுவழுப்பான உலோகத்தால் செய்யப்பட்ட முதலாம் நூற்றாண்டின் கண்ணாடிகளை இது குறிக்கிறது.

நேருக்கு நேர்

இதன் அர்த்தம், கிறிஸ்துவோடு நாம் நிதர்சனமாக இருப்போம் என்பதாகும்.

நான் முழுவதும் அறியப்பட்டது போல

ம.மொ. "கிறிஸ்து என்னை முழுவதும் அறிந்தது போல"

1 Corinthians 14

1 Corinthians 14:1-4

அன்பை நாடுங்கள்

"அன்பைத் தொடருங்கள்" அல்லது "அன்பின் வழியைத் தொடருங்கள்"

நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லும்படி

தேவனோடு அந்நியபாஷை பேசுவதைக் காட்டிலும் தீர்க்கதரிசனம் சொல்லுவது எவ்வளவு நல்லது என்பதைப் பவுல் தொடர்ந்து தனது வாதத்தை வைக்கிறார்.

1 Corinthians 14:5-6

தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் பெரியவன்

பவுல் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதைக் காட்டிலும் தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் பெரியது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ம.மொ. "தீக்கதரிசனம் சொல்லுகிறவன் பெரிய வரம் உடையவன்."

எவ்வாறு நான் உங்களுக்குப் பிரயோஜனமாக இருப்பேன்

ம.மொ. "நான் உங்களுக்கு பிரயோஜனமாய் இருக்கமாட்டேன்."

1 Corinthians 14:7-9

என்ன கருவி வாசிக்கப்படுகிறது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?

ம.மொ. "நான் என்ன கருவியை வாசிக்கிறேன் என்று ஒருவனாலும் சொல்ல முடியாது" (UDB)

1 Corinthians 14:10-11

1 Corinthians 14:12-14

ஆவியின் வெளிப்பாடுகள்

இது ஆவிக்குரிய வரங்களைக் குறிக்கிறது.

என்னுடைய மனம் கனியற்றவையாக இருக்கிறது

நான் சொல்லும் வார்த்தைகளை நானே புரிந்துகொள்ள முடியவில்லை.

1 Corinthians 14:15-16

நான் என்ன செய்ய வேண்டும்?

ம.மொ. "இது தான் நான் செய்ய வேண்டும்."

என்னுடைய ஆவியோடு ஜெபம் பண்ணுங்கள்...என்னுடைய மனதோடு பாடுங்கள்

அந்நிய பாஷைகளில் ஜெபிப்பதையோ அல்லது பாடுவதையோ இது குறிக்கிறது.

என்னுடைய மனதோடு

நான் புரிந்துகொள்ளும் வார்த்தைகள் என்பது இதன் அர்த்தம்.

நீங்கள் தேவனை துதிக்கிறீர்கள்...நீங்கள் நன்றி சொல்லுகிறீர்கள்...நீங்கள் சொல்லுகிறீர்கள்

"நீங்கள்" என்ற வார்த்தை இந்தத் தருணத்தில் ஒருமையில் இருந்தாலும், பவுல் மனதில் அல்ல ஆவியில் ஜெபிக்கும் எல்லாரையும் பார்த்து தான் பேசுகிறார்.

வெளி ஆள்

ம.மொ. "மற்ற ஒருவன்"

1 Corinthians 14:17-19

சபையில்

சபைக் கூடி வருகிறதை இது குறிக்கிறது. ம.மொ. "சபைக் கூடுகை"

பத்தாயிரம் வார்த்தைகள்

ம.மொ. "10,000 வார்த்தைகள்"

1 Corinthians 14:20-21

வித்தியாசமான பாஷைகளை உடைய மனிதர்களாலும் அந்நியர்களின் உதடுகளாலும்

இந்த இரண்டும் அடிப்படையில் ஒரே காரியத்தைக் குறிக்கிறது. இவை இங்கு வலியுறுத்தி சொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1 Corinthians 14:22-23

நீங்கள் பைத்தியம் என்று உங்களை சொல்லமாட்டார்களா?

ம.மொ. "நீங்கள் பைத்தியம் என்று உங்களைச் சொல்லுவார்கள்."

1 Corinthians 14:24-25

தான் கேட்கிற எல்லாவற்றினாலும் அவன் குற்றப்படுத்தப்படுவான்; சொல்லப்படும் எல்லாவற்றாலும் அவன் தீர்க்கப்படுவான்

பவுல் அடிப்படையில் இரண்டையும் உறுதிப்பட சொல்லவே பயன்படுத்தியிருக்கிறார்.

அவனுடைய இருதயத்தின் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்

ம.மொ. "தேவன் அவனுடைய இருதயத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துவார்."

1 Corinthians 14:26-28

சொல்லப்பட்டதை வியாக்கியானம் பண்ணுங்கள்

ம.மொ. "அவர்கள் சொன்னதை வியாக்கியானம் செய்யுங்கள்"

1 Corinthians 14:29-30

இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் பேசட்டும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஆராதனையில் இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் தான் பேச வேண்டும்" அல்லது 2. "இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே ஒரே நேரத்தில் பேச வேண்டும்."

சொல்லப்பட்டவைக்கு

ம.மொ. "அவர்கள் சொல்லுகிறதற்கு"

ஒரு உள்வெளிப்பாடு கொடுக்கப்பட்டதானால்

தேவன் ஒரு வெளிப்பாடோ அல்லது அறிவின் வார்த்தையையோ தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிமித்தம் உட்கார்ந்துகொண்டிருப்பவனுக்கு கொடுப்பாரானால்.

1 Corinthians 14:31-33

ஒவ்வொருவராக தீர்க்கதரிசனம் சொல்லுங்கள்

ஒரே நேரத்தில் ஒரு தீர்க்கதரிசி தான் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும்.

எல்லாரும் உற்சாகப்படுத்தப்படலாம்

ம.மொ. "நீங்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்தலாம்."

குழப்பத்தின் தேவன்

மக்கள் எல்லாரையும் ஒரே நேரத்தில் பேசவைத்து தேவன் குழப்பத்தை உண்டுபண்ண மாட்டார்.

1 Corinthians 14:34-36

அமைதியாய் இருங்கள்

சாத்தியமான அர்த்தங்கள்

  1. பேசுவதை நிறுத்துங்கள் அல்லது 2. ஒருவர் தீர்க்கதரிசனம் சொல்லும்போது பேசுவதை நிறுத்துங்கள், அல்லது 3. சபை ஆராதனையின் போது சுத்தமாக சத்தம் போடக் கூடாது.

தேவனுடைய வார்த்தை உன்னிலிருந்து வந்ததா? உங்களை மட்டும் தான் அது வந்தடைந்ததா?

கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கொரிந்தியர்கள் மட்டுமே புரிந்து கொண்டார்கள் என்று இல்லை என்பதை பவுல் வலியுறுத்துகிறார். ம.மொ. "கொரிந்துவில் இருக்கும் உங்களிடமிருந்து தேவனுடைய வார்த்தை வரவில்லை; தேவனுடைய சித்தத்தை புரிந்துகொள்ளும் மக்கள் நீங்கள் மட்டுமல்ல."

உங்களிடமிருந்து வந்து

"உங்களுடைய" என்ற வார்த்தை பன்மையாக இருக்கிறது. இது கொரிந்து விசுவாசிகளைக் குறிக்கிறது.

1 Corinthians 14:37-38

அவன் அங்கீகரிக்க வேண்டும் ...

தனது நிருபங்களை ஒருவன் எற்றுக்கொள்ளும் விதத்தைப் பொறுத்து, உண்மையான மற்றும் பொய்த் தீர்க்கதரிசிகளை சோதிக்க பவுல் ஒரு சோதனையை விரிவுபடுத்துகிறார்.

அவன் அங்கீகரிக்கப்படாமல் போகட்டும்

ம.மொ. "மற்றவர்கள் அவனை அங்கீகரிக்காமல் போகட்டும்."

1 Corinthians 14:39-40

அந்நிய பாஷைகளில் பேசுவதிலிருந்து ஒருவரையும் தடை செய்யாதீர்கள்

சபைக் கூடி வரும்போது அந்நிய பாஷைகளில் பேசுவது அனுமதிக்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் என்று பவுல் தெளிவுபடுத்துகிறார்.

ஆனால் எல்லாக் காரியங்களும் ஒழுங்கும் கிரமுமாய் செய்யப்படக்கடவது

ஒழுக்கமான முறையில் சபை கூடி வருதலை அனுசரிக்கவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார். ம.மொ. "ஆனால் எல்லாவற்றையும் ஒழுங்காகவும் கிராமமாகவும் செய்யுங்கள்" அல்லது "ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்கான முறையில் எல்லாவற்றையும் செய்யுங்கள்."

1 Corinthians 15

1 Corinthians 15:1-2

நினைவுபடுத்தி

"நீங்கள் நினைவுகூர உதவி"

அழுத்தமாக

"பாதுகாப்பாக"

நீங்கள் பாதுகாக்கப்படும் காரியத்தால்

"இதனால் தேவன் உங்களை ரட்சிபபார்."

1 Corinthians 15:3-4

கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்

"நாம் பாவம் செய்ததால் சிலுவையில் மரிக்க கிறிஸ்து தன்னையே ஒப்புக்கொடுத்தார்"

வேதத்தின் படி

பழைய ஏற்பாடு புத்தகங்களைப் பவுல் குறிப்பிடுகிறார்.

1 Corinthians 15:5-7

தோன்றி

"தன்னைக் காண்பித்து"

ஐநூறு

500.

1 Corinthians 15:8-9

எல்லாரிலும் கடைசியாக

ம.மொ. "கடைசியில், மற்றவர்களுக்குத் தோன்றினபிறகு"

தவறான நேரத்தில் பிறந்த குழந்தை

மற்றவர்கள் அனுபவித்த பிரத்தியேக தருணங்களை தானும் அனுபவிக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களைக் குறிக்கும் உருவகம் இது. மற்ற சீடர்கள், இயேசு பூமியில் ஊழியம் செய்த பொழுது பவுல் அவரோடு நேரம் செலவழிக்கவில்லை. ம.மொ. "மற்றவர்களின் அனுபவங்களை தவறவிட்டவர்கள்."

1 Corinthians 15:10-11

தேவனுடைய கிருபை நான் நானாக இருக்கிறேன்

தேவனுடைய கிருபையும் தயவுமே பவுல் இப்பொழுது இருக்கிறதுபோல இருக்கச்செய்கிறது.

வீணாக போகவில்லை

தேவனுடைய தயவின்படி பவுல் வாழ தெரிந்துகொண்டார்.

என்னோடிருக்கும் தேவனுடையக் கிருபை

பவுல் தன்னுடைய வாழ்க்கையைத் தனக்கு காண்பிக்கப்பட்ட தேவக் கிருபைக்கு சான்றளித்தார்.

1 Corinthians 15:12-14

மரித்தோரிலிருந்து உயிர்தெழுதல் இல்லை என்று உங்களில் சிலர் எப்படி சொல்ல முடியும்?

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் இல்லை என்பதுக்கு எதிராக கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து பவுல் பிரசங்கம் செய்கிறார். ம.மொ. "மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் இல்லை என்று உங்களால் சொல்லவே முடியாது!"

மரித்தோரிலிருந்து உயிர்தெழுதல் இல்லை என்றால், பிறகு கிறிஸ்துவும் உயிர்தெழவில்லை

உயிர்தெழுதல் இல்லை என்று சொல்லுவது கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை என்று சொல்லுவதாகும்.

1 Corinthians 15:15-17

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை என்னும் பொய்க்கு எதிராக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

நாம் தேவனைக் குறித்து பொய் சாட்சி சொல்லுகிறவர்களாக காணப்படுகிறோம்

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை என்றால் நான் பொய் சாட்சி சொல்லுகிறவர்களாய் இருக்கிறோம், அல்லது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்லுகிறோம் என்று பவுல் வாதாடுகிறார்.

உங்கள் விசுவாசம் விருதா; பின், நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள்

அவர்களுடைய விசுவாசம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மேல் உள்ளதால், அது நடைபெறவில்லை என்றால், அவர்களுடைய விசுவாசம் பிரயோஜனமற்றது.

1 Corinthians 15:18-19

எல்லா மக்களிலும்

"விசுவாசிகள் அவிசுவாசிகள் எல்லாரிலும்"

பரிதப்பிக்கப்படவேண்டியவர்கள் நாம்

ம.மொ. "மற்றவர்களைவிட நமக்காக மக்கள் துக்கப்படவேண்டும்."

1 Corinthians 15:20-21

1 Corinthians 15:22-23

ஒன்றும் இல்லை

1 Corinthians 15:24-26

அவர் ஆளவேண்டும்

கிறிஸ்துவைக் குறிக்கிறது.

அவர் தனது எல்லா எதிரிகளையும் தனது காலின் கீழ் போடும் வரை

இது, கிறிஸ்து எல்லா எதிரிகளையும் ஜெயமெடுத்தார் என்பதை அடையாளப்படுத்தி சொல்லுகிறது. ம.மொ. "தேவன் கிறிஸ்துவின் எதிரிகளை அவர் முன் வணங்க வைக்கும் வரை"

அழித்து

"முழுவதும் தோற்கடித்து"

1 Corinthians 15:27-28

"அவர் எல்லாவற்றையும் அவரது காலின் கீழ் போட்டார்"

தகப்பன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் ஆளுகையின் கீழ் வைத்தார்."

1 Corinthians 15:29-30

அவ்வாறு இல்லையென்றால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?

ம.மொ. "மரித்தவர்களுக்காக கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெறுவது பிரயோஜனமற்றதாய் ஆகிவிடும்."

மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுங்கள்

"மரித்தவர்களுக்கு பதிலாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்"

ஒவ்வொரு மணிநேரமும் ஏன் நாம் ஆபத்தில் இருக்கிறோம்?

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழும்பவில்லை என்றால், தங்களுடைய நம்பிக்கையினாலும் போதனைகளினாலும் பவுலும் மற்றவர்களும் ஆபத்திலிருக்கின்றார்கள் என்பதை நியாயப்படுத்தமுடியாது.

1 Corinthians 15:31-32

நான் தினமும் சாகிறேன்

பாவத்தின் மீதுள்ள ஆசைகளை தவிர்ப்பதை இங்கு பவுல் குறிப்பிடுகிறார்.

எபேசுவிலிருக்கும் மிருகங்களோடு நான் சண்டையிட்டால்

சாத்தியமான அர்த்தங்கள் 1. படித்த புறஜாதியரோடு பவுல் வைத்திருந்த விவாதத்தை இங்கு உருவகமாக பவுல் பேசுகிறார். அல்லது 2. ஆபத்தான மிருகங்களோடு சண்டையிட ஒரு அரங்கத்தினுள் தன்னை போட்டது போல.

புசிப்போம், குடிப்போம், நாளை நாம் மரிக்கப்போகிறம்

மரணத்துக்குப் பிறகு ஒரு வாழ்வு இல்லை என்றால், இந்த வாழ்க்கையை முடியும்வரை நன்றாக அனுபவித்து இருப்பது நமக்கு நல்லது. ஏனென்றால், நாளை நமது வாழ்க்கை நம்பிக்கை இல்லாததால் முடிந்துபோகும்.

1 Corinthians 15:33-34

கெட்ட சவகாசம் நல்ல புத்திகளைக் கெடுக்கும்

கெட்டவர்களோடு நீங்கள் வாழ்ந்தால், அவர்களைப் போலவே கிரியை செய்வீர்கள்.

ஜாக்கிரதைப்படுங்கள்

ம.மொ. "இதைக் குறித்து நீங்கள் கவனமாய் சிந்திக்கவேண்டும்."

உங்களுக்கு வெட்கமுண்டாக

ம.மொ. "நீங்கள் கனவீனத்தை உணரவேண்டும்."

ஏனென்றால் உங்களில் சிலருக்கு தேவனைக் குறித்த அறிவு இல்லை

சபையோடு சேர்த்துக்கொள்ளும் சிலர் உண்மையான விசுவாசிகள் அல்ல. அவர்களுக்கு சுவிசேஷ செய்தி தெரியவில்லை.

1 Corinthians 15:35-36

ஆனால் சிலர் சொல்லுவார்கள், "மரித்தவர் எப்படி எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எந்த சரீரத்தில் வருவார்கள்? ம.மொ. "எப்படி தேவன் மரித்தவர்களை எழுப்புவார் ; உயிர்த்தெழுதலில் என்ன வகையான சரீரம் அவர்களுக்கு தேவன் கொடுப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என்று சொல்லுவார்கள்."

சிலர்

ம.மொ. "உயிர்த்தெழுதளைக் குறித்து கேள்வி கேட்பவர்கள்"

சரீரத்தின் வகை

சரீரத்தின் வகை. ஆவிக்குரிய அல்லது பூமிக்குரிய வடிவமோ அல்லது பொருளோ.

நீங்கள் வெகுளியாய் இருக்கிறீர்கள்

ம.மொ. "இதைக் குறித்தும் ஒன்றும் உங்களுக்குத் தெரியவில்லை."

நீங்கள் விதைப்பது மரிக்கும் வரை வளராது

ஒரு நிலத்தின் அடியில் விதைக்கப்படும் வரை வளராது. அது போல, தேவன் உயிர்ப்பிக்கும் முன், தேவனுக்கு முன்பாக ஒரு மனிதன் மரிக்க வேண்டும்.

1 Corinthians 15:37-39

நீங்கள் விதைத்த சரீரமாய் அது இருக்காது

விதையின் உருவகம் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மரித்துப்போன விசுவாசியின் சரீரம் உயிர்ப்பிக்கப்படும்; பின்பு அது இருந்ததுபோல இனி தோன்றாது.

அவர் விரும்புகிற சரீரத்தை அதற்கு தேவன் கொடுப்பார்

ம.மொ. "தேவன் எந்த வகை சரீரம் என்பதை தெரிந்தெடுப்பார்."

1 Corinthians 15:40-41

பரலோக சரீரங்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் மற்றும் வானத்தில் தென்படும் மற்ற வெளிச்சங்களையும் குறிக்கிறது. அலல்து 2. பரலோக வாசிகளான தூதர்களையும் மற்ற இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஜீவன்களையும் இது குறிக்கிறது. ம.மொ. "மனிதர்களிடம் இருக்கும் மகிமையைவிட வித்தியாசமான மகிமை பரலோக சரீரங்களுக்கு இருக்கிறது.

பூமிக்குரிய சரீரங்கள்

மனிதர்களைக் குறிக்கிறது. பரலோகத்தின் சரீரங்களுக்குரிய மகிமை ஒருவகை; பூமிக்குரிய சரீரங்களின் மகிமை # மற்றொரு வகை

ம.மொ. "மனிதர்களிடம் இருக்கும் மகிமையைவிட வித்தியாசமான மகிமை பரலோக சரீரங்களுக்கு இருக்கிறது."

மகிமை

"மகிமையின்" பயன்பாடு, வானத்திலிருக்கும் பொருட்களின் மேல் மனிதக் கண்களுக்கு உள்ள பார்வையின் வெளிச்சத்தைக் குறிக்கிறது.

1 Corinthians 15:42-44

ஒன்றும் இல்லை

1 Corinthians 15:45-46

ஆனால், ஆவிக்குரியது முதலாவது வரவில்லை; முதலாவது இயற்கையானது, அதன் பின்பு ஆவிக்குரியது

ம.மொ. "இயற்கை முதலாவது வந்தது. ஆவிக்குரிய ஜீவன் தேவனிடத்திலிருந்து பின்பு வந்தது."

இயற்கை

பூமியின் முறைகளால் உருவாக்கப்பட்டது, இன்னமும் தேவனோடு சம்பந்தப்பட்டது இல்லை.

1 Corinthians 15:47-49

மனிதன்/மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட ஒன்று, மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது

"பூமியின் மண்ணிலிருந்து தேவன் அவனை உண்டாக்கினார்."

மண்

ம.மொ. "பூமியின் நிலத்திலிருந்து உள்ள பொடிபோல உள்ள பொருட்கள்"

பரலோகத்தின் மனிதன்

இயேசு கிறிஸ்து

பரலோகத்திற்க்குரியவர்கள்

"கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளவர்கள்"

தாங்கிக்கொண்டு

"ஏற்றுக்கொண்டு பிரதிபலிப்பது"

1 Corinthians 15:50-51

தேவனுடைய ராஜ்யத்தை மாமிசமும் ரத்தமும் பிரவேசிக்க முடியாது

மறுபடியும் பிறவாத அல்லது புதிய சிருஷ்டி அல்லதவர்கலையோ பவுல் குறிப்பிடுகிறார்.

அழிந்துபோகிறது அழியாமையை சுதந்தரிக்க முடியாது

பழைய சரீரங்கள் அழிந்துபோகும் ஆனாலும் அழிந்துபோகாத சரீரங்களாய் அவை மாற்றப்படும் என்று பவுல் கூறுகிறார்.

நாம் எல்லாரும் மாற்றப்படுவோம்

ம.மொ. "தேவன் நாமெல்லாரையும் மாற்றிவிடுவார்."

1 Corinthians 15:52-53

நாம் மாற்றப்படுவோம்

ம.மொ. "தேவன் நம்மை மாற்றுவார்."

கண் சிமிட்டும் நேரத்தில்

ஒரு மனிதன் கண் சிமிட்ட எடுக்கும் நேரத்தின் வேகத்தைப் போல அது வேகமாய் நடக்கும்.

கடைசி எக்காளம் ஊதப்படும்போது...எக்காளம் தொனிக்கும்

முக்கிய நிகழ்வுகள் துவங்குமுன் எக்காளம் ஊதப்படுவது வழக்கம். இந்த சமயம் இது பூமியின் சரீரத்தில் கடைசி பெரிய சம்பவம் இது என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

இந்த அழியும் காரியம் அழியாமையை தரித்துக்கொள்ளவேண்டும்

தேவன் நம்முடைய அழியும் சரீரங்களை அழியாமையுடைய சரீரங்களாய் மாற்றுவார்.

1 Corinthians 15:54-55

மரணமே, உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் ( கூர்) கொடுக்கு எங்கே?

கிறிஸ்துவால் மேற்கொள்ளப்பட்ட மரணத்தின் வல்லமையை பவுல்( பரியாசம்)கேலி செய்யும்படி இதை சொல்லுகிறார். ம.மொ. "மரணத்துக்கு ஜெயம் இல்லை. மரணத்துக்கு இனி கொடுக்கு இல்லை."

1 Corinthians 15:56-57

மரணத்தின்( கூர்) கொடுக்கு பாவம்

பாவத்தின் மூலமே நாம் மரணத்தை சந்திக்க அதாவது மரிக்க தீர்க்கப்பட்டோம்.

பாவத்தின் பலன் நியாயப்பிரமாணம்

மோசேக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணம் பாவத்தை விளக்கி, நாம் எவ்வாறு தேவனுக்கு முன்பாக பாவம் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

நமக்கு ஜெயம் தந்து

"நமக்காக மரணத்தை ஜெயித்து"

1 Corinthians 15:58

உறுதியோடும், அசையாதவர்களாயும், கர்த்தருடையக் கிரியைகளில் பெருகுகிறவர்களாயும் இருங்கள்

ம.மொ. "தீர்மானத்தோடு இருந்து கர்த்தருடைய வேலையை விசுவாசமாய் செய்யுங்கள்."

1 Corinthians 16

1 Corinthians 16:1-2

பரிசுத்தவான்களுக்கு

எருசலேமிலும் யூதேயாவிலும் உள்ள ஏழ்மையான யூத கிறிஸ்தவர்களுக்காக தன்னுடைய சபைகளிடமிருந்து பவுல் பணத்தை சேர்த்துவைத்தார்.

நான் சொன்னதுபோல

"நான் பிரத்தியேக நெறிமுறைகளை கொடுத்தது போல"

சேர்த்துவையுங்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "வீட்டில் விடுங்கள்" அல்லது 2. "சபையிலே வையுங்கள்"

நான் வரும்போது ஒரு சேமிப்பும் இருக்காது என்பதால்

ம.மொ. "அதனால், நான் உங்களோடு இருக்கும்போது அதிக பணம் வாங்க உங்களுக்கு அவசியமில்லை"

1 Corinthians 16:3-4

நீங்கள் அங்கீகரிக்கும் யாராயினும்

எருசலேமுக்கு காணிக்கையைக் கொண்டு செல்ல தங்களுடைய சொந்த ஜனங்களையே நியமிக்குமாறு பவுல் சபைகளை அனுமதித்தார். ம.மொ. "நீ ஏற்படுத்தும் யாராயினும்."

நான் நிருபங்களோடு அனுப்புவேன்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "நான் எழுதும் நிருபங்களை நான் உங்களோடு அனுப்புவேன்." அல்லது 2. "நீங்கள் எழுதும் நிருபங்களை நான் உங்களோடு அனுப்புவேன்."

1 Corinthians 16:5-6

என்னுடைய பிரயாணத்தில் நீங்கள் எனக்கு உதவலாம்

கூடுமானால் பொருளாதார உதவி அல்லது சரீர உழைப்பை பவுலுக்கும் அவருடைய ஊழியக் குழுவுக்கும் செய்யலாம்.

1 Corinthians 16:7-9

நான் இப்பொழுது உங்களைக் காண விரும்பவில்லை

தான் குறுகிய காலம் சந்திக்க வரவில்லை ஆனால் நெடுங்காலம் இருக்க விருப்பம் என்பதை பவுல் கூறுகிறார்.

பெந்தெகொஸ்தே

அந்த பண்டிகை வரை பவுல் எபேசுவில் தங்கியிருப்பார். பின்னர், மக்கதோனியா வழியாக பிரயாணப்பட்டு (மே அல்லது ஜூன்), மற்றும் பின்னர் குளிர்காலம் துவங்குமுன்( நவம்பரில்) கொரிந்துவில் வந்து சேர்ந்திடுவார்.

ஒரு அகலக் கதவு திறந்திருக்கிறது

மக்களை சுவிசேஷத்துக்காக சம்பாதிக்க கர்த்தர் அவனுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறார்.

1 Corinthians 16:10-12

பயமில்லாமல் உங்களோடு அவன் இருக்கிறானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

ம.மொ. "உங்களோடு இருக்க பயப்பட ஒரு காரணமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"

ஒருவரும் அவனை வெறுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

பவுலைவிட வயதில் குறைவான தீமோத்தேயுவுக்கு சுவிசேஷத்தின் ஊழியக்காரனாய் பவுலைப் போலவும் அப்பொல்லோவைப் போலவும் அவனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை அவனுக்குக் கிடைக்காமல் போகலாம்.

நம்முடைய சகோதரன் அப்பொல்லோ

கொரிந்துவிலிருக்கும் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்யும்படி அப்பொல்லோ திரும்ப வரும்படி சக விசுவாசியாகவும் சக கிறிஸ்துவின் ஊழியனாகவும் மரியாதையோடு அப்பொல்லோவைப் பவுல் நடத்துகிறார்.

1 Corinthians 16:13-14

ஜாக்கிரதையாய் இருங்கள்

கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கம் செய்கிற அனைவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

விசுவாசத்தில் நிலைத்திருங்கள்

கள்ள போதனைகாரர் தங்கள் விசுவாசத்தை தடுமாறச் செய்யவிடாமல் இருக்க பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

ஆண்களைப் போல நடந்துகொள்ளுங்கள், பெலமாயிருங்கள்

கிறிஸ்துவில் தேர்ந்தவர்களாய் இருங்கள் என்று பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

1 Corinthians 16:15-16

ஸ்தேவானுடைய வீட்டார்

ஸ்தேவான் கொரிந்து சபையின் முதல் விசுவாசிகளில் ஒருவன்.

அப்படிப்பட்டவர்களுக்கு அடங்கி இருங்கள்

அங்கு விசுவாசிகளுக்காக ஊழியம் செய்கிறவர்களை கனத்தோடும் மரியாதையோடும் நடத்த விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார். அவர்களை மூப்பர்களைப் போல நடத்தி அவர்களுக்கு அடங்கி இருங்கள்.

1 Corinthians 16:17-18

ஸ்தேவான், பொர்த்துனாத்து, ஆகாயு

இந்த மனிதர்கள் பவுலோடு நல்ல உறவு வைத்திருக்கும் முதல் கொரிந்துவின் விசுவாசிகள் அல்லது சபை மூப்பர்கள்.

பொர்த்துனாத்து மற்றும் ஆகாயு

இது மனிதர்களின் பெயர்கள்.

ஏனென்றால் அவர்கள் என்னுடைய ஆவிக்கு புத்துயிர் தந்தனர்

அவர்களுடைய சந்திப்பால் பவுல் சந்தோஷம் அடைந்தான்.

1 Corinthians 16:19-20

ஆசியாவிலிருக்கும் சபைகள்

ஆசியாவில் இருக்கும் பெரும்பாலான சபைகள் கொரிந்துக்கு எதிராக ஆசிய கடலின் கிழக்கு கரையில் இருக்கிறது.

ஆக்கிலாவும் பிரிஸ்கில்லாளும்

இந்த தம்பதியர் கிறிஸ்துவின் வழிகளில் அப்பொல்லோவை போதித்து, சுவிசேஷம் சொன்ன ரோமிலிருந்து வந்த விசுவாசிகள்.

1 Corinthians 16:21-24

பவுலாகிய நான் எனது சொந்தக் கைகளால் எழுதுகிறேன்

இந்த நிருபத்தில் உள்ள நெறிமுறைகள் அந்த நிருபங்களின் பெரும்பாலானப் பகுதிகள் தன்னோடு ஊழியம் செய்பவர்களில் ஒருவனால் எழுதப்பட்டிருந்தாலும் தன்னிடமிருந்து வந்தது என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார்.

ஒரு சாபம் அவன் மீது இருக்கட்டும்

ம.மொ. "தேவன் அவனை சபிக்கட்டும்."