தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Philippians

Philippians 1

Philippians 1:1-2

பவுலும் தீமோத்தேயுவும்

"பவுல் மற்றும் தீமோத்தேயுவிடமிருந்து" என்று இதை மொழிபெயர்க்கலாம். இதை, "பவுலும் தீமோத்தேயுவுமாகிய நாங்கள் இந்தக் கடிதத்தை எழுதினோம்." ஒரு கடிதத்தின் ஆசிரியரை அறிமுகப்படுத்தும் வழிமுறை உங்கள் மொழியில் வேறு இருக்கலாம், அதைப் பயன்படுத்துங்கள்.

கிறிஸ்து இயேசுவின் ஊழியர்கள்

"நாங்கள் கிறிஸ்து இயேசுவின் ஊழியக்காரர்கள்." "நாங்கள்" என்ற கூற்று மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது.

கிறிஸ்து இயேசுவுக்குள் வேறுபிரிக்கப்பட்ட அனைவருக்கும்

"கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் அனைவரும்."

கண்காணிகளும் உதவிக்காரர்கள்

"சபையின் தலைவர்கள்"

உங்களுக்குக் கிருபை

மக்கள் மீது ஆசீர்வாதத்தை வாழ்த்தும் இதுவும் ஒரு வழி.

உங்களுக்கு

"உங்களுக்கு" என்ற இந்தப் பெயர்ச்சொல் பிலிப்பியச்சபை விசுவாசிகளைக் குறிக்கிறது.

நம்முடைய தகப்பனாகிய தேவன்

பெயற்சொல் "நம்முடைய" என்பது பவுலையும், தீமோத்தேயுவையும், மற்றும் பிலிப்பிய விசுவாசிகளையும் சேர்த்து கிறிஸ்துவுக்குள்ளான அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது.

Philippians 1:3-6

நான் நன்றி கூறுகிறேன்....நான் ஜெபிக்கிறேன்....நான் நன்றி செலுத்துகிறேன்

"நான்" என்கிற வார்த்தை பவுலைக் குறிக்கிறது.

உங்களுக்கு

"உங்களுக்கு என்கிற வார்த்தை பிலிப்பிய விசுவாசிகளைக் குறிக்கிறது.

சுவிசேஷத்தில் உங்கள் ஐக்கியத்திற்காக நன்றி செலுத்துகிறேன்

தங்களைப் போல பிலிப்பிய விசுவாசிகளும் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுகிறார்கள் என்பதால் பவுல் தேவனுக்கு தன்னுடைய நன்றியை வெளிப்படுத்துகிறார். "நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கிறதினால் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்"

நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்

"நான் உறுதியாய் இருக்கிறேன்"

துவங்கினவர்

"துவங்கின தேவன்" அல்லது "துவக்கின தேவன்"

அதை முடித்திடுவார்

"அதை முடித்திட தொடருவார்"

Philippians 1:7-8

இது எனக்கு சரி

"இது எனக்கு சரியாக இருக்கிறது" அல்லது "இது எனக்கு நல்லது"

என்னுடைய இருதயத்தில் உங்களை வைத்திருக்கிறது

இது ஒரு மரபுத்தொடர் ; இதை "நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று மொழிபெயர்க்கலாம்."

கிருபையில் என்னுடைய பங்காளிகள்

"என்னோடு கூட கிருபையில் பங்குவகிக்கிறவர்கள்" அல்லது "என்னோடு கிருபையில் பகிர்ந்து கொள்ளுகிறவர்கள்"

தேவன் என்னுடைய சாட்சியாய் இருக்கிறார்

"தேவன் அறிந்திருக்கிறார்" அல்லது "தேவன் புரிந்துகொள்ளுகிறவர்"

கிறிஸ்து இயேசுவின் அன்பின் ஆழத்தில்

"அன்பில் ஆழத்தில்" என்கிற பதம் ஒரு மரபுத்தொடர் ஆகும். இது நம்முடைய உணர்ச்சிகள் வருகிற நமக்குள் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. இதை, "கிறிஸ்து இயேசு எனக்குக் கொடுத்த எல்லா அன்போடும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 1:9-11

பெருகவும்

"வழிந்தோடவும்"

அறிவிலும், முழு புரிந்துகொள்ளுதலிலும்

அவர்கள் அறிந்து புரிந்துகொள்ள வேண்டியதை நீங்கள் வெளிப்படையாக சொல்லலாம்: "தேவனை எது பிரியப்படுத்துமோ அதை நீங்கள் கற்றுக்கொண்டு தெளிவாக புரிந்துகொள்ளும்போது"

நான் இதை செய்கிறேன்

"நான் இதற்காக ஜெபிக்கிறேன்"

அருமையானக் காரியங்களை இருக்கிற

"தேவனுக்கு மிகவும் பிரியமான" கிறிஸ்துவின் நாளில் நீங்கள் குற்றமற்றவர்களும் இடரலற்றவர்களுமாய் இருக்கும்படி

"குற்றமற்றதும் இடறலற்றதும்" என்கிற பதம் ஒரு மனிதனின் பரிசுத்தத்தை உறுதிப்படுத்தும் இரட்டை அர்த்த்தமுடைய பதம் ஆகும். இதை, "இயேசு திரும்பவரும்போது நீங்கள் குற்றமற்றவர்களாய் இருக்கிறீர்கள்."என்று மொழி பெயர்க்கலாம்.

கிறிஸ்துவின் நாள்

"கர்த்தரின் நாள்" அல்லது "நியாயத்தீர்ப்பின் நாள்"

கூட

"நானும் கூட ஜெபிக்கிறேன்" நீங்கள் நிரப்பப்படுவீர்கள்

இதை ஒரு செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கலாம். "தேவனுக்கு நீங்கள் அதிகமதிகமாய் கீழ்ப்படிய இயேசு கிறிஸ்து செய்வார்."

நீதியின் கனிகளால் நிரம்பி

இது, மரத்தில் வளரும் கனிகளோடு தேவனுக்கு அதிகமதிகமாய்க் கீழ்ப்படியும் விசுவாசிகளை ஒப்பிடுகிறது.

தேவனுக்கு மகிமையும் துதியும்

இதை ஒரு தனி வாக்கியமாக மொழிபெயர்க்கலாம். "நீங்கள் செய்யும் நற்காரியங்களைப் பார்த்து மக்கள் தேவனுக்கு துதியையும் கனத்தையும் கொடுப்பார்கள்."

Philippians 1:12-14

இப்பொழுது எனக்கு வேண்டும்

"இப்பொழுது" என்கிற வார்த்தை ஒரு எழுத்தின் புதியப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.

எனக்கு நடந்தக் காரியங்கள்

பவுல் தான் சிறையில் இருந்த நேரத்தைக் குறிக்கிறார். இதை நீங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடலாம்: "இயேசுவைக் குறித்து பிரசங்கம் பண்ணினதற்காக நான் அனுபவித்தப் பாடுகள்"

சுவிசேஷம் அறிவித்தல் வளரும்படி செய்தது

"அனேக ஜனங்களை கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கச் செய்தது."

கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகள்

"இயேசுவைக் குறித்து நான் பிரசங்கம் பண்ணினதற்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது"

அரண்மனை முழுவதும் கிறிஸ்துவுக்குள்ளான எனது கட்டுகள் தெரியவந்தது

இதை ஒரு செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "ஏனென்றால் நான் கிறிஸ்துவைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்லுவதால் தான் நான் இங்கு இருக்கிறேன் என்று அரண்மனைக் காவலாளிகளுக்கு தெரியும்."

அரண்மனைக் காவலாளிகள்

ரோம பேரரசரைப் பாதுகாக்க உதவும் ஒரு கூட்ட வீரர்கள் தான் இவர்கள்.

எல்லாரும் பார்க்கும்படி

"ரோமிலுள்ள மற்ற அநேகருக்கும் தெரியும் நான் ஏன் சிறையில் இருக்கிறேன் என்று."

சகோதரர்களுள் அநேகரும்...வார்த்தையைப் பேசுகிறார்கள்

"சகோதரர்களுள் அநேகரும் கூட நம்பிக்கையோடும், தைரியத்தோடும், நான் சிறைப்படுத்தப்பட்டதைக் குறித்து பயமில்லாமலும் தேவனுடைய வார்த்தையைப் பேசுகிறார்கள்."

அதிகமான தைரியத்தோடும் பயமில்லாமலும்

"முழுவதுமான நம்பிக்கையோடு"

Philippians 1:15-17

சிலர் கிறிஸ்துவையும் கூட அறிவித்தனர்

"சில மக்கள் கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை பிரசங்கம் பண்ணுகிறார்கள்"

பொறாமையாலும், விரோதத்தாலும்

"ஏனென்றால், மக்கள் என்னைக் கவனிக்க அவர்கள் விரும்புவதில்லை; அவர்கள் பிரச்னையை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள்."

நல்ல எண்ணத்தில் மற்றவர்களும்

"ஏனென்றால், அவர்கள் தயவாயும் உதவி செய்ய விரும்பினதாலும், மற்றவர்கள் அதை செய்தனர்"

அவர்கள்

"...மக்கள்"

நான் நியமிக்கப்பட்டுள்ளேன்

இதை செய்வினைப் பதமாக மொழிபெயர்க்கலாம்: "தேவன் என்னைத் தெரிந்தெடுத்தார்."

சுவிசேஷத்தை பாதுகாக்க

"இயேசுவின் செய்தி உண்மையானது என்று எல்லாருக்கும் போதிக்க"

ஆனால் மற்றவர்கள் கிறிஸ்துவை அறிவிக்கிறார்கள்

"மற்ற ஜனங்கள் கிறிஸ்துவைக் குறித்து போதிக்கிறார்கள்."

சுயனலமானதும் கேடான நோக்கங்களும்

"இயேசுவை அவர்கள் நேசிப்பதால் அல்ல, நான் சிறைச்சாலையில் இருந்தபொழுது எனக்கு அதிகமான துன்பம் அவர்கள் வருவிக்கிறார்கள் என்பதால்."

Philippians 1:18-19

அதனால் என்ன

இயேசுவைக் குறித்து அவர்களுள் சிலர் ஏன் போதிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல என்று பவுல் குறிப்பிடுகிறார்.

எந்த வழியிலும், உண்மையிலோ நடிப்பிலோ, கிறிஸ்துவை அறிவிக்கிறார்கள்

"கிறிஸ்துவைக் குறித்து அறிவிக்கும் வரையில், அவர்கள் நல்லக் காரணங்களுக்காகவோ தீயக் காரணங்களுக்காகவோ செய்கிறார்கள் என்பது பற்றிக் கவலையில்லை."

நான் அதில் மகிழ்ச்சியடைவேன்

"மக்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்"

ஆனால் உண்மையில்

"சரியாக" அல்லது "நான் சந்தோஷமாக இருக்கிறேன்"

நான் சந்தோஷப்படுவேன்;

"நான் கொண்டாடுவேன் " அல்லது "நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்"

இது என்னுடைய விடுதலைக்கு நடத்தும்

"தேவன் என்னை சிறையிலிருந்து விடுதலையாக்குவார்."

உங்களுடைய ஜெபங்களாலும் இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுப்பதாலும்

"நீங்கள் ஜெபிப்பதாலும் கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்கு உதவி செய்வதாலும்."

இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர்

இதை "பரிசுத்த ஆவியானவர்" என்று மொழிபெயர்க்கலாம்"

Philippians 1:20-21

இது என்னுடைய நம்பிக்கையான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்

இது ஒரே காரியத்தை இரண்டு விதமாக சொல்லி, பவுல் தான் எவ்வாறு கிறிஸ்துவைக் கனப்படுத்தும் வகையில் வாழுகிறார் என்பதை குறிப்பிடுகிறார். இது, "நான் உண்மையாக விசுவாசிக்கிறேன்"

எல்லா தைரியத்தோடும், எல்லா வேளையும் முக்கியமாக இப்பொழுது

"ஆனால், எப்பொழுதும் எனக்கு இருந்ததுபோல, இப்பொழுது எனக்கு போதுமான தைரியம் இருக்கும்."

என் சரீரத்தினால் கிறிஸ்துவுக்கு மகிமைக் கொண்டுவருவேன்

"தன்னுடைய வாழ்க்கையை அல்லது வாழும் முறையை குறிக்கப் பவுல் "சரீரம்" என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்." இது, "நான் செய்யும் எல்லாவற்றின் மூலமும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவேன்."

சாவினாலாகிலும், ஜீவனாலாகிலும்

"நான் வாழ்ந்தாலும் அல்லது மரித்தாலும்"

எனக்கு, கிறிஸ்து எனக்கு வாழ்வு, சாவு எனக்கு ஆதாயம்

"ஏனென்றால், நான் வாழ்ந்துகொண்டே இருந்தாலும், கிறிஸ்துவுக்காக வாழுவேன், நான் மரிப்பது அதனிலும் மேல்."

Philippians 1:22-24

ஆகிலும், சரீரத்தில் வாழ்வது என்னுடையக் கிரியைக்கு பலனுண்டு பண்ணுவதால்

"பலன்" என்கிற வார்த்தை பவுலின் வேலையின் நல்ல பலன்களைக் குறிக்கிறது. இது, "ஆகிலும், நான் சரீரத்தில் வாழ்வது மக்களைக் கிறிஸ்துவை நம்பச்செய்ய எனக்கு அதிக தருணங்களைத் தருவதானால்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த இரண்டு தருணங்களாலும் நான் நெருக்கப்படுகிறேன்

"வாழவேண்டுமா அல்லது சாக வேண்டுமா என்று தெரிந்துகொள்ளுவதில் நான் நெருக்கப்படுகிறேன்."

நான் பிரிந்து சென்று கிறிஸ்துவுடனே இருக்க நான் விரும்புகிறேன்

"பிரிந்து" என்பது "சாக" என்று சொல்லுவதின் வேறு வகையாகும்." இதை, "நான் கிறிஸ்துவுடனே போய் இருப்பேன் என்பதால், மரிக்க விரும்புகிறேன்." என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய நலனுக்காக நான் சரீரத்தில் இருப்பது அவசியமாய் இருக்கிறது

"நான் என்னுடைய சரீரத்தில் வாழ்வது உங்களுக்கு மிக உதவியாய் இருக்கும்."

Philippians 1:25-27

நான் இதைக் குறித்து தைரியமாய் இருப்பதால்

"இதைக் குறித்து நான் அறிந்திருப்பதால்"

நான் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்

"நான் தொடர்ந்து வாழுவேன் என்று அறிந்திருக்கிறேன்." அல்லது "நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்."

உங்கள் எல்லாரோடும் தொடருவேன்

"நான் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பேன்."

முடிவாக, உங்களோடு நான் மறுபடியும் இருக்கும்போது என்னைக் குறித்து நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பெருமைப் பாராட்டவேண்டும்

அதனால், நான் உங்களிடத்தில் மறுபடியும் வரும்போது, கிறிஸ்து இயேசுவுக்காய் நான் செய்தவைகளிநிமித்தம் நீங்கள் என்னைக் குறித்து பெருமைப்படுவீர்கள்."

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தகுதியாக மட்டும் வாழுங்கள்

"உங்களுடைய வாழ்க்கையை தகுதியான முறையில் மாத்திரம் வாழுங்கள்."

ஒரே ஆவியில் தரித்திருங்கள், ஒரே ஆத்துமாவில்

இந்த இரண்டு பதங்களும் ஒரே காரியத்தை சொல்லி, எல்லாரும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையோடு இருக்கிறது, என்பதின் முக்கியத்துவத்தைக் குறித்து சொல்லும் வழி. இது, "ஒற்றுமையில் வாழ்வதைத் தொடருங்கள்" அல்லது "நீங்கள் எல்லாரும் ஒரே மனிதர் போல வாழுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காக சேர்ந்து போராடி

"மற்றவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும்பொருட்டு அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கற்றுக்கொடுப்பதில் ஒன்றாக வேலை செய்து."

Philippians 1:28-30

எதைக்குறித்தும் பயப்படாதிருங்கள்

இது பிலிப்பிய விசுவாசிகளுக்கான கட்டளை.

உங்களை எதிர்ப்பவர்களிடமிருந்து

"உங்களை எதிர்ப்பவர்களிடமிருந்து"

அது அவர்களின் அழிவினும் உங்கள் இரட்சிப்பின் அடையாளம், தேவனிடமிருந்து வரும் இரட்சிப்பு

"உங்கள் தைரியம் அவர்களை தேவன் அழிப்பார் என்பதை அவர்களுக்குக் காட்டும், ஆனால் அவர் உங்களை பாதுகாப்பார்."

அவரில் விசுவாசம் வைப்பதற்கு மாத்திரம் அல்ல, அவர்நிமித்தம் பாடுபடவும் கிறிஸ்துவினிமித்தம் அது உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

இதை செய்வினை வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் கனத்தை மட்டும் தேவன் உங்களுக்கு கொடுக்கவில்லை, அவரோடு பாடுபடும் கனத்தையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

என்னிடத்தில் கண்டதும் கேட்டதுமான போராட்டத்தையே நீங்களும் அனுபவிக்கவேண்டும் என்பதால்

"இப்பொழுதும் என்னிடத்தில் இருக்கும் பாடுகளை நீங்கள் பார்த்து கேட்டு இருப்பதால், அதே பாடுகளையே நீங்களும் ஏற்கிறீர்கள்"

Philippians 2

Philippians 2:1-2

ஏதேனும் அதனால் இருக்குமானால்...ஏதேனும் இருந்தால்...ஏதேனும் இருந்தால்...ஏதேனும் இருந்தால்

"இருந்தால்" என்கிற வாக்கியக் கட்டுமானத்தை பவுல், இவையெல்லாம் உண்மையில் இருக்கிறது என்பதைக் காட்டப் பயன்படுத்துகிறார்." மறு மொழிபெயர்ப்பு: "அதனால்..."

ஆவியின் ஐக்கியம்

"ஆவியானவரோடு இருக்கும் ஐக்கியம்"

Philippians 2:3-4

ஒன்றையும் சுயநலத்தினாலோ அல்லது வீண் பெருமையினாலோ செய்யாதிருங்கள்

"ஒன்றையும் உங்கள் சந்தோஷத்திற்காகவோ அல்லது மற்ற மக்களைவிட உங்களை முக்கியமாக உங்களையே உணரவைக்கவோ செய்யாதிருங்கள்."

மனத்தாழ்மையினாலே

"மனம்" என்கிற வார்த்தை மற்றவர்களை நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்றும் அவர்களைக் குறித்த நம்முடைய மனநிலையையும் இங்குக் குறிக்கிறது. இதை, "தாழ்மையாயிருங்கள்; கருதுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களளுடைய சொந்த தேவைகளையே பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்

"பார்த்துக்கொண்டு" என்கிற பதம் ஒரு மரபுத்தொடர் ஆகும். அது, "பொறுப்பெடுத்து" அல்லது "கவலை" என்று அர்த்தப்படுகிறது. இதை, "உங்களுடைய தேவைகளைப் பற்றி மாத்திரம் கவலைக் கொள்ளாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 2:5-8

கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்த அதே சிந்தை உங்களில் இருக்கக்கடவது

இங்கு, "சிந்தை" என்கிற வார்த்தை ஒரு மனிதனின் மனநிலையை அல்லது அவர்கள் எவ்வாறு யோசிக்கிறார்கள்" என்பதையோ குறிக்கிறது. இதை, "கிறிஸ்து இயேசுவைப் போலவே மனநிலையில் இருங்கள்" அல்லது "கிறிஸ்து இயேசுவைப் போலவே காரியங்களைக் குறித்து சிந்தியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 2:9-11

கிறிஸ்து இயேசுவுக்கிருந்த சிந்தையைக் குறித்து விவரிப்பதைப் பவுல் தொடருகிறார்.

தேவன் அவரை மிகவும் அதிகமாக உயர்த்தினார்

"தேவன் இயேசுவை மிகவும் அதிகமாக உயர்த்தினார்"

எல்லா பெயர்களுக்கு மேலான பெயர்

இங்கு, "பெயர்" என்கிற வார்த்தை கனத்தை அல்லது உயர்வைக் குறிக்கிறது. இதை, "எல்லா உயர்வுக்கும் மேலான உயர்வு" அல்லது "எல்லா கனத்துக்கும் மேலான கனம்" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லா முழங்காலும்

இங்கு, "முழங்கால்" என்கிற வார்த்தை ஒரு முழு மனிதனையும் குறிக்கிறது. இதை, "எல்லா மனிதனும்" அல்லது "எல்லா ஜீவனும்" என்று மொழிபெயர்க்கலாம்.

பூமிக்கு அடியில்

"நரகம்" என்று அழைக்கப்படும், மக்கள் மரித்தப்பிறகு போகும் இடத்தை இது குறிக்கிறது. பிசாசுகள் வாழும் இடமான "பாதாளத்தையும்" இது குறிக்கிறது.

எல்லா நாவும்

இங்கு, "நாவு"என்கிற வார்த்தை ஒரு முழு மனிதனையும் குறிக்கிறது. இதை, "எல்லா மனிதனும்" அல்லது "எல்லா ஜீவனும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 2:12-13

எனக்கு அருமையானவர்களே

"என்னுடைய பிரியமான சக விசுவாசிகளே"

என்னுடைய பிரசன்னத்தில்

"நான் உங்களோடு இருக்கும்போது"

நான் இல்லாமல் இருக்கும்போது

"நான் உங்களோடு இல்லாமல் இருக்கும்போது"

உங்களுடைய இரட்சிப்பிறகு பிரயாசப்படுங்கள்

"தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தொடருங்கள்"

பயமும் நடுக்கமும்

தேவனுக்கு முன்பாக பயபக்தி என்பதை வலியுறுத்த இந்த ஒரே அர்த்தத்தைக் கொண்டுள்ள இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "ஆழமான பயபக்தி" அல்லது "முழுமையான பயபக்தி"

விருப்பம் செய்கை ஆகிய இரண்டிற்கும்

தேவன் நம்மை தூண்டி அவருடைய வேலையை செய்வதற்கு தகுதியும் படுத்துகிறார்.

Philippians 2:14-16

முறுமுறுத்தல் மற்றும் விவாதங்கள் இல்லாமல்

"தீயக் காரியங்களை சொல்லாதிருங்கள்"

குற்றமற்ற நேர்மையான பிள்ளைகள்

"மக்கள் நீங்கள் தவறு செய்தீர்கள் என்று உங்களைக் குறித்து சொல்லாமல் இருக்கும்படி காரியங்களை நன்றாகச் செய்யுங்கள்"

பழுதில்லாமல்

"பழுது" என்கிற வார்த்தை, பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு பலியிடக் கொண்டுவரப்படும் பழுதற்ற மிருகத்தை, நடக்கையில் நேர்மையான விசுவாசியோடு ஒப்பிடுகிறது. இதை, "முற்றிலும் குற்றமில்லாத தேவனுடையப் பிள்ளைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

சுடர்களைப் போல பிரகாசிக்க

தேவனை கனவீனப்படுத்தும் மக்கள் மத்தியில் தேவனை கனப்படுத்தும் வகையில் வாழும் விசுவாசிகளை, இருளில் ஒளி வீசும் சுடருக்கு இது ஒப்பிடுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "தேவனை கனப்படுத்தும் வகையில் வாழுங்கள்"

உலகத்தில்

"உலகம்" என்கிற வார்த்தை தேவனை கனப்படுத்தாத எல்லா காரியங்களையும் நடக்கைகளையும் குறிக்கிறது.

கோணலும் மாறுபாடுமான சந்ததி

இந்த சந்ததி எவ்வளவு மோசமாய் இருக்கிறது என்பதை சொல்ல ஒரு வித்தியாசமான முறை இது. இதை, "தேவனை கனப்படுத்தாத மக்கள் மத்தியில்"

மகிமைக்கு

"களிகூர" அல்லது "சந்தோஷப்பட"

கிறிஸ்துவின் நாளில்

இயேசு தன்னுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து பூமியை ஆளுகை செய்யத் திரும்ப வரப்போகும் நேரத்தைக் குறிக்கிறது. இதை, "கிறிஸ்து திரும்பும் போது" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் வீணாக ஓடுவதில்லை அல்லது வீணாக உழைப்பதில்லை

இங்கு "ஓடுவதில்லை...உழைப்பதில்லை" என்பது ஒரே காரியத்தை இரண்டு வித்தியாசமான முறையில் சொல்லுகிறது. மக்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க பவுல் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை வலியுறுத்த இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

Philippians 2:17-18

மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின் மீதும் ஊழியத்தின் மீதும் நான் காணிக்கையாக என்னுடைய வாழ்க்கை வார்க்கப்பட்டுப்போனாலும், உங்களோடுள்ள என்னுடைய மகிழ்ச்சி பெரிதாயிருக்கும்.

பழைய ஏற்பாட்டில் தேவனை ஆராதிப்பவனால் கொண்டுவரப்படும் பலிக்கான மிருகத்தின் மேலோ அல்லது பக்கத்திலோ ஊற்றப்படும் ஒலிவ எண்ணை அல்லது திராட்ச ரசத்திற்கு பவுல் தன்னுடைய மரணத்தை ஒப்பிடுகிறார். தேவனுக்குப் பிரியமானவர்களாக பிலிப்பிய விசுவாசிகளை மாற்ற தான் மரிக்க வேண்டியது அவசியமானால் அதையும் தான் சந்தோஷமாக செய்வேன் என்று பவுல் இதன் மூலம் சொல்லுகிறார். "ஊற்றப்பட்டது" என்னும் செய்யப்பட்டு வினைக் கூற்றை, செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கப்படலாம்: "ரோமர்கள் என்னைக் கொலை செய்ய வகைதேடினாலும், என்னுடைய மரணம் தேவன் மேல் உங்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படுதலையும் பெருகச்செய்யுமானால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்."

அதே போல

"அவ்வாறே"

நீங்களும் என்னோடுகூட பெரிய சந்தோஷத்தோடு களிகூருங்கள்

"பெரிய சந்தோஷத்தோடு களிகூருங்கள்" என்கிற கூற்று வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை, "நீங்களும் என்னோடு மிகவும் மகிழ்ந்திருக்க விரும்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 2:19-21

ஆனால் கர்த்தராகிய இயேசுவில் எதிர்பார்க்கிறேன்

இது, "ஆனால், கர்த்தராகிய இயேசு விரும்பினால், நான் எதிர்பார்க்கிறேன்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

ஏனென்றால் அவர்கள் எல்லாரும்

"அவர்கள்" என்கிற வார்த்தை பிலிப்புவிற்கு தான் அனுப்ப நம்பமுடியாத ஒரு கூட்ட ஜனத்தை இங்கு குறிக்கிறது. பவுல், (பிலிப்பிற்கு) போகவேண்டிய மக்களை தான் நம்பி அனுப்ப முடியாமல் இருப்பதைக் குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.

Philippians 2:22-24

தீமோத்தேயு தன்னை நிரூபித்துள்ளான்

தீமோத்தேயு தன்னைக் குறித்து நிருபித்த காரியத்தை வெளிப்படையாக சொல்லலாம்: "கிறிஸ்துவின் காரியங்களைக் குறித்து அக்கறையுள்ளவனாக தீமோத்தேயு தன்னைக் காண்பித்துள்ளான்."

ஒரு பிள்ளை தன் தகப்பனுக்கு ஊழியம் செய்வதுபோல, அவன் எனக்கு ஊழியம் செய்தான்

ஒரு தகப்பனுக்கு அவன் பிள்ளை செய்யும் ஊழியத்திற்கு தனக்கு தீமோத்தேயு செய்த ஊழியத்தை பவுல் ஒப்பிடுகிறார். கிறிஸ்துவுக்கு சேவை செய்வதில் ஒரு தகப்பன் மகன் உறவு தனக்கும் தீமோத்தேயுவுக்கும் இருந்தது என்பதைப் பவுல் வலியுறுத்துகிறார்.

சுவிசேஷத்தை பரப்புவதற்கு

"சுவிசேஷத்தைக் குறித்து மக்களிடம் சொல்லுவதில்"

நான் மீண்டும் சீக்கிரம் வருவேன் என்று கர்த்தருக்குள் நம்பிக்கையாய் இருக்கிறேன்

இதை, "கர்த்தருடைய சித்தமானால், நிச்சயமாக நான் சீக்கிரம் வருவேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 2:25-27

எப்பாப்பிரோதீத்து

பவுலுக்கு சிறைச்சாலையில் உதவி செய்யும்படி பிலிப்பி சபையால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன்.

என்னுடைய சகோதரனும், உடன் வேலையாலும், உடன்சேவகனும்

இங்கு "சேவகன்" என்பது மாம்ச போர்களை செய்யும் மனிதனை ஆவிக்குரிய போர்களில் சண்டையிடும் விசுவாசிக்கு ஒப்பிடுகிறது. ஒரு விசுவாசி சுவிசேஷத்தை பிரசித்தப்படுத்த தீமைக்கு எதிராக போராடவேண்டும் என்பதை பவுல் வலியுறுத்துகிறார். இதை, "எங்களோடு வேலை செய்து போராடும் உடன் விசுவாசி" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய செய்தியாளனும் என்னுடைய தேவையில் உதவி செய்கிறவனும்

"உங்களுடைய செய்திகளைக் கொண்டுவருகிறவன் மற்றும் என்னுடையத் தேவைகளில் எனக்கு உதவி செய்கிறவன்"

அவன் மிகவும் வருத்தப்பட்டு உங்களோடு இருக்கும்படி மிகவும் வாஞ்சிக்கிறான்

"அவன் மிகவும் வருந்தி உங்கள் எல்லாரோடும் இருக்கும்படி விரும்புகிறான்."

துக்கத்தின் மேல் துக்கம்

இந்த கூற்றின் முழு அர்த்தத்தையும் வெளிப்படையாக்கலாம்: "சிறைச்சாலையில் இருப்பதால் இருக்கும் துக்கத்தின் மேல் சேர்க்கப்பட்ட துக்கம்."

Philippians 2:28-30

எப்பாப்பிரோதீத்துவை வரவேற்று

"எப்பாப்பிரோத்தீத்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்"

கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டு

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கர்த்தரில் ஒரு உடன் விசுவாசியாக மிகவும் சந்தோஷப்பட்டு" அல்லது 2. "கர்த்தராகிய இயேசு நம்மை நேசிப்பதால் நமக்கிருக்கும் மிகப் பெரிய சந்தோஷத்தோடு" (UDB)

கிறிஸ்துவின் வேலையை செய்து

"கிறிஸ்துவுக்காக வேலை செய்து" (UDB)

என்னுடைய தேவைகளை சந்தித்து

"எனக்குத் தேவையானதைத் தந்து"

Philippians 3

Philippians 3:1-3

கடைசியாக, என்னுடைய சகோதரர்களே

"இப்பொழுது, போய்க்கொண்டிருக்கும், என்னுடைய சகோதரர்களே" அல்லது "மற்ற காரியங்களைக் குறித்து, என்னுடைய சகோதரர்களே"

கர்த்தரில் களிகூருங்கள்

"கர்த்தர் செய்த எல்லாவற்றாலும் சந்தோஷமாய் இருங்கள்."

இந்த ஒரே காரியத்தை உங்களுக்கு எழுதுவது எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை

"அதே போதனைகளை நான் சந்தோஷமாக உங்களுக்கு எழுதுகிறேன்."

அவைகள் உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்

"அவைகள்" என்கிற மாற்றுப்பெயர்ச்சொல் பவுலின் போதனைகளைக் குறிக்கிறது. அவைகள் விசுவாசிகளைப் பாதுகாப்பாக வைக்கும் என்பதை மிகவும் வெளிப்படையாகவே மொழிபெயர்க்கலாம். "ஏனென்றால், பொய்யானதைப் போதிப்பவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றும்."

எச்சரிக்கையாய் இருங்கள்

"ஜாக்கிரதையாய் இருங்கள்" அல்லது "பார்த்துக்கொள்ளுங்கள்"

நாய்கள்...தீயதை செய்பவர்கள்...விருத்தசேதனக்காரர்கள்

கள்ளப் போதகர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வெவ்வேறான வழிகள்.

நாய்களிடமிருந்து

"நாய்கள்" என்கிற வார்த்தை யூதரல்லாதவரைக் குறிக்க யூதர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அவர்கள் அசுத்தர்கள் என்று கருதப்பட்டார்கள். அவமானப்படுத்துவதற்காய் பவுல் கள்ளப் போதகர்களை நாய்களோடு ஒப்பிடுகிறார். அசுத்தமாகக் கருதப்படும் வேறு ஏதாவது மிருகம் உங்கள் கலாச்சாரத்தில் இருந்தால், அந்த மிருகத்தின் பெயரை இங்கு ஒரு அவமானமாகப் பயன்படுத்தவும்.

விருத்தசேதனக்காரர்கள்

"சேதப்படுத்த" செய்ய என்றால் வெட்ட அல்லது மூர்க்கத்தனமாக வெட்ட என்று அர்த்தம். கள்ளப்போதகர்களை அவமானப்படுத்த இந்த செயலை பவுல் மிகைப்படுத்தி கூறுகிறார். நுனித்தோலை வெட்டின அல்லது விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைத் தான் தேவன் காப்பாற்றுவார் என்று கள்ளப்போதகர்கள் சொல்லுகிறார்கள்.

ஏனென்றால், நாங்கள்

"நாங்கள்" என்கிற வார்த்தை தன்னையும் கிறிஸ்துவில் விசுவாசமாய் இருக்கிற எல்லா உண்மையான விசுவாசிகளையும், பிலிப்பிய விசுவாசிகளையும் சேர்த்துக் குறிக்கிறது.

உண்மையான விருத்தசேதனம்

பவுல் இந்தப் பதத்தை சரீர விருத்தசேதனம் அல்ல ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் விசுவாசிகளைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அதென்னவென்றால், இவர்கள் விசுவாசத்தின்மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள். இதை, "உண்மையாக தேவனுடைய மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மாம்சத்தில் நம்பிக்கையில்லாமல்

"சரீரத்தை அறுப்பத்தின் மூலம் மாத்திரம் தேவனை பிரியப்படுத்தலாம் என்று நம்பிவிடாதீர்கள்."

Philippians 3:4-5

எப்படியாயினும்

"ஆயினும்" அல்லது "எப்படியாயினும்"

மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். தான் மாம்சத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறான் என்று நினைத்தால், நான் இன்னும் அதிகமாய் வைக்கலாம்

இது, சாத்தியம் என்று நினைக்கும்படியான நிலை என்று பவுல் நம்பாத ஒரு இக்கட்டான சூழ்நிலை. மக்கள் என்ன செய்தார்களோ அதினிமித்தம் தேவன் அவர்களைக் காப்பது சாத்தியமானால், பின்பு தேவன் கண்டிப்பாக அவனை இரட்சிப்பார். இதை, "தேவனைப் பிரியப்படுத்த யாரொருவன் போதுமான அளவு செய்திருக்க முடியுமானால், அது நானாகத்தான் இருக்கும்" (UDB)

நான் நானே

"நானே" என்கிற என்ற வார்த்தையைப் பவுல் வலியுறுத்தும்படிப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நிச்சயமாக, நான்"

நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டவன்

இதை, "செய்வினை சொல்லாக மொழிபெயர்க்கலாம்: "ஒரு ஆசாரியன் என்னை விருத்தசேதனம் பண்ணினார்."

எட்டாம் நாள்

"நான் பிறந்த பின்பு ஏழாம் நாள்" (UDB)

எபிரெயரின் எபிரேயன்

"எபிரேயப் பெற்றோர்களை உடைய ஒரு எபிரேய மகன்."

நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்

"ஒரு பரிசேயனாய், நான் முற்றிலும் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவன்."

Philippians 3:6-7

நான் பக்தி வைராக்கியத்தோடு சபையைத் துன்புறுத்தினேன்

"கிறிஸ்துவ விசுவாசிகளைக் காயப்படுத்த நான் மிகவும் உறுதியாயிருந்தேன்."

நியாயப்பிரமானத்திற்குறிய நீதியின்படி குற்றமற்றவன்

"நியாயப்பிரமாணத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்"

அவைகளை நான் ஒன்றுமில்லாதவைகள் என்று எண்ணுகிறேன்

தன்னுடைய எல்லா நீதியின் மத செயல்பாடுகளும் கிறிஸ்துவுக்கு முன்பாக தகுதியில்லை" என்று பவுல் நிறைவு செய்கிறார்.

Philippians 3:8-11

உண்மையில்

"உண்மையாக" அல்லது "சத்தியமாக"

இப்பொழுது நான் எண்ணுகிறேன்

"இப்பொழுது" என்கிற வார்த்தை பரிசேயனாக இருந்ததைத் தவிர்த்து கிறிஸ்துவின் விசுவாசியாய் மாறினப் பிறகு எவ்வாறு பவுல் மாறிவிட்டார் என்பதை வலியுறுத்துகிறது. இதை வெளிப்படையாக்கலாம்: "இப்பொழுது நான் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்."

நான் எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணுகிறேன்

கிறிஸ்துவைத் தவிர மற்ற எதின் மீதும் நம்பிக்கை வைக்கிறது தகுதியானது இல்லை என்று பவுல் கூறுகிறார். இதை, "நான் எல்லாவற்றையும் மதிப்பில்லாதது என்று எண்ணுகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மகத்துவத்தினால்

என்னுடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிறது மிகவும் மதிப்புள்ளது ஆகையால்."

அவருக்காக நான் எல்லாவற்றையும் எறிந்துவிட்டேன்

இதை, "அவராலே நான் எல்லாவற்றையும் விரும்பியே தவிர்க்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவைகளைக் குப்பை என்று எண்ணுகிறேன்

ஒரு மனிதன் நம்பும் எதையும் பவுல் தூக்கி எறியும் குப்பைக்கு ஒப்பிடுகிறார். அவைகள் எவ்வாறு மதிப்பில்லாதவை என்று அவர் வலியுறுத்துகிறார். இதை, "அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்" அல்லது "அவைகளை முற்றிலும் மதிப்பில்லாதவை என்று எண்ணுகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் கிறிஸ்துவை ஆதாயம்பன்னும்படி

"நான் கிறிஸ்துவை மாத்திரம் வைத்துக்கொள்ள"

இப்பொழுது, நான் அவருக்குள் இருக்கிறதாகக் காண்கிறேன்

"அவருக்குள் இருக்கிறதாகக் காண்கிறேன்" என்கிற கூற்று அவரோடுள்ள, நெருங்கிய உறவையோ அல்லது அவரோடு ஒன்றாக இருப்பதையோ அர்த்தமாக்குகிறது.

நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதி எனக்கு இல்லை

"நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து என்னுடைய சுய முயற்ச்சியால் தேவனைப் பிரியப்படுத்த நான் விரும்பவில்லை."

பதிலாக, நான்

"பதிலாக, நான்" அல்லது "சரியாக எதிரானதை நான்"

கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் தேவனிடத்திலிருந்து வருகிற நீதியையே உடையவனாய் இருக்கிறேன்

"நான் கிறிஸ்துவின் மீது என்னுடைய விசுவாசத்தை வைத்திருப்பதால் தேவன் என்னை ஏற்றுக்கொண்டார்."

அவரை அறிகிறதின் நீதி அது

"இதை, "நான் அவரை அறியும்படி எனக்கு கிறிஸ்து மாத்திரம் போதும்"

அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை

"நமக்கு ஜீவனைத் தரும் அவரது வல்லமையை அறிந்துகொள்ளுங்கள்"

அவருடையப் பாடுகளில் ஐக்கியம்

"அவருடையப் பாடுகளைப் பகிர்ந்துகொண்டு."

Philippians 3:12-14

இந்தக் காரியங்களைப் பெற்றுக்கொண்டு

இது, கிறிஸ்துவை அறிகிற அறிவையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிகிறதையும், கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்வதையும், அவருடைய மரணத்திலும் உயிர்த்தேழுதலிலும் கிறிஸ்துவோடு ஒன்றாக்கப்பட்டிருக்கிறதையும் சேர்த்து சொல்லுகிறது "இந்த" என்கிற வார்த்தை.

நான் முற்றிலும் தேறினவன் இல்லை

"நான் இன்னும் பரிபூரணப்படவில்லை" அல்லது "நான் இன்னும் முதிர்ச்சியாகவில்லை"

ஆனால் நாள் தொடர்ந்து முன்னேறுவேன்

"ஆனால் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்" (UDB)

நான் பிடித்துக்கொள்ளலாம்

"நான் இந்தக் காரியங்களைப் பெற்றுக்கொள்ளலாம்"

கிறிஸ்து இயேசுவால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ

இதை செய்வினை சொல்லாக மொழிபெயர்க்கலாம்: "அதனால் தான் இயேசு என்னைத் தம்முடையவன் என்று உரிமைகோருகிறார்."

சகோதரர்களே, ...

பிலிப்பிய விசுவாசிகளைப் பவுல் இங்கு குறிப்பிடுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "சக விசுவாசிகள்"

நான் நானே அதன் மேலுள்ள உரிமையை எடுத்துக்கொண்டேன்

"இவை எல்லாம் எனக்கு சொந்தமானவைகள், ஆயினும்"

எனக்கு பின்பு இருக்கிறவைகளை நான் மறந்து முன்னானவைகளுக்காக நான் முயற்சிக்கிறேன்

ஓட்டப்பந்தயத்தில் ஓடிய தூரத்தைப் பற்றி கவலைப் படாமல் இனி ஓட வேண்டிய தூரத்தைக் குறித்து தான் நோக்கமாயிருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப் போல, பவுல், தன்னுடைய நீதியின் மத செயல்பாடுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கிறிஸ்து தனக்கு முன்பு செய்து முடித்து வைத்திருக்கிற இலக்கின் மீது நோக்கமாய் தான் இருக்கிறதாகப் பேசுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நான் கடந்த காலத்தில் என்ன செய்தேன் என்பதைப் பற்றி நான் அக்கறைக் கொள்ளுவதில்லை."

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்தப் பந்தயப் பொருளை ஜெயிக்க இலக்கை நோக்கி நான் தொடருகிறேன்

ஓடுகிறவன் பந்தயத்தை வெல்ல ஓடுகிறதுபோல, கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதிலும் ஊழியம் செய்வதிலும் தொடருகிறதை சொல்ல அந்த ஒப்பிடுதலைத் தொடர்கிறார். "நான் அவருக்கு சொந்தமாயிருக்கவும், நான் மரித்தப் பிறகு தேவன் என்னை அவரோடு சேர்த்துக்கொள்ளும்படிக்கும், நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறதைத் தொடர்கிறேன்."

Philippians 3:15-16

அதனால் நாம், தேறினவர்கள் யாவரும், அது போல யோசிப்போம்

"விசுவாசத்தில் பலமாய் இருக்கிற எல்லா விசுவாசிகளையும் நான் அதே வழியில் யோசிக்கும்படி உற்சாகப்படுத்துகிறேன்." பவுல் தன்னுடைய சக விசுவாசிகள் தான் 3:8

11 வசனங்களில் சொன்ன அதே வாஞ்சையாய் இருக்கும்படி விரும்புகிறார்.

நீங்கள் நினைத்தால்

"நீங்கள்" என்கிற வார்த்தை பவுலை விட வித்தியாசமாக நினைக்கிறவர்களை அல்லது மறுப்பவர்களைக் குறிக்கிறது.

தேவனும் உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார்

தேவனும் அதை உங்களுக்கு தெளிவுபடுத்துவார்."

எந்த நிலையில் இருந்தாலும்

பவுல் தன்னுடையக் கடிதத்தின் இந்தப் பகுதியை முக்கியமானக் குறிப்பை வலியுறுத்தி முடிக்கிறார். இதை, "என்னவாயிருந்தாலும் சரி" என்று மொழிபெயர்க்கலாம்.

இதை நாம் அடைந்திருப்போமானால், நாம் அதின்படி ஒழுங்காய் நடக்கவேண்டும்

இதை, "நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்ட அதே சத்தியத்துக்குக் கீழ்ப்படிய தொடர்வோம்."

Philippians 3:17-19

சகோதரர்களே, என்னிடத்தில் சேருங்கள்

பவுல், பிலிப்பிய விசுவாசிகளைக் கிறிஸ்துவுக்குள் தன்னுடைய சகோதரர்களாகக் கருதுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

என்னைப் பின்பற்றுங்கள்

"நான் செய்வதை செய்யுங்கள்" அல்லது "நான் வாழுவது போல வாழுங்கள்"

ஜாக்கிரதையாய் கவனியுங்கள்

"ஜாக்கிரதையாக அதைப் பாருங்கள்"

எங்களுடைய எடுத்துக்காட்டுதலால் நடக்கிறவர்கள்

நான் வாழுகிறதுபோல ஏற்கனவே வாழுகிறவர்கள்" அல்லது "நான் செய்கிறது போல ஏற்கனவே செய்கிறவர்கள்"

நான் அடிக்கடி உங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன்

"நான் உங்களுக்கு அநேகமுறை சொல்லியிருக்கிறேன்"

இப்பொழுது உங்களிடத்தில் கண்ணீரோடு சொல்லுகிறேன்

"மிகுந்த துக்கத்தோடு நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்"

கிறிஸ்துவின் சிலுவைக்கு அநேகர் எதிரிகளாக வாழுகிறார்கள்

இங்கு, "கிறிஸ்துவின் சிலுவை" கிறிஸ்துவின் பாடுகளையும் அதை மறந்ததையும் குறிக்கிறது. இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும் அவர் போல பாடுபடவும் மரிக்கவும் விரும்பாதவர்கள் அதின் எதிரிகள். இதை, "இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிறவர்களின் கிரியைகளைப் பார்த்தால், பாடுபடவும் சிலுவையில் மரிக்கவும் விரும்பின இயேசுவுக்கு விரோதமானவர்கள் போலக் கிரியை கிரியைசெய்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் முடிவு அழிவு

"ஒருநாள் தேவன் அவர்களை அழிப்பார்"

அவர்கள் வயிறு அவர்கள் தேவன்

இங்கு, "வயிறு" என்கிற வார்த்தை மாம்ச மோகத்தின் மீதுள்ள மனிதனின் விருப்பத்தைக் குறிக்கிறது. இதை, "தேவனுக்குக் கீழ்ப்படிவதைவிட அவர்கள் உணவின் மீதும் மற்ற மாம்ச மோகங்களில் பிரியப்படுகிறார்கள்."

அவர்கள் மகிமை அவர்கள் வெட்கம்

"அவர்களுக்கு வெட்கத்தை உண்டுபண்ணும் காரியங்களில் பெருமைப்படுகிறார்கள்."

அவர்கள் பூமிக்குரிய காரியங்களைக் குறித்து சிந்திக்கிறார்கள்

இங்கு, "பூமிக்குரிய" என்கிற வார்த்தை தேவனை கனம் பண்ணாத மற்றும் மாம்ச மோகத்தைக் கொடுக்கும் எல்லாக் காரியத்தையும் குறிக்கிறது. இதை, "தங்களை பிரியப்படுத்தும் காரியங்கள் எது என்று தான் அவர்கள் நினைக்கிறார்களே தவிர, தேவனை எது பிரியப்படுத்தும் என்பதைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

Philippians 3:20-21

நம்மைப் பொறுத்தவரை

"நம்மை" என்கிற வார்த்தையில் பவுல் தன்னைக் கவனிக்கிறவர்களையும் சேர்த்துக்கொள்ளுகிறார்.

பரலோகத்தில் நம்முடைய குடியுரிமை

"நம்முடைய வீடு பரலோகத்தில் உள்ளது" அல்லது "நம்முடைய உண்மையான வீடு பரலோகத்தில் உள்ளது."

அங்கிருந்து இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து வரக் காத்திருக்கிறோம்

"நாம் இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து பூமிக்கு திரும்பிவரக் காத்து இருக்கிறோம்."

நம்முடைய அற்பமான சரீரங்களை மறுரூபப்படுத்துவார்

"அவர் நம்முடைய பலவீனமான பூமிக்குரிய சரீரங்களை மாற்றுவார்."

தன்னுடைய மகிமையான சரீரத்திற்கு ஒத்த சரீரங்களாய்

"தன்னுடைய மகிமையின் சரீரத்தைப் போல சரீரங்களாக"

எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தத்தக்கதாக உள்ள அவருடைய வல்லமையால் செய்து

இதை செய்வினைக் கூற்றோடு ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "எல்லாவற்றையும் கீழ்ப்படுத்த அவர் பயன்படுத்தும் அதே வல்லமையினால் நம்முடைய சரீரங்களை அவர் மாற்றுவார்."

Philippians 4

Philippians 4:1-3

ஆதலால், நான் வாஞ்சிக்கிற எனக்கு பிரியமான சகோதரர்களே

"என்னுடைய சக விசுவாசிகளே, நான் உங்களை நேசிக்கிறேன்; உங்களைக் காண மிகுந்த ஆவலுள்ளவனாய் இருக்கிறேன்."

என்னுடைய சந்தோஷமும் கிரீடமும்

"சந்தோஷம்" என்கிற வார்த்தையை பிலிப்பிய சபை தான் தன்னுடைய சந்தோஷத்திற்கு காரணம் என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறார். "கிரீடம்" என்பது இலைகளால் செய்யப்பட்டு ஒரு மனிதன் முக்கியமான விளையாட்டை ஜெயித்தால் அவன் தலை மேல் ஒரு கனத்தின் அடையாளமாக இடுவார்கள். இங்கு, "கிரீடம்" என்பது தேவனுக்கு முன்பாக பிலிப்பிய சபை பவுலுக்கு கனத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. இது ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம், "இயேசுவை நீங்கள் விசுவாசித்ததாலும், நீங்கள் என்னுடைய ஊழியத்தின் பலனாகவும், கனமாகவும் இருக்கிறதினால், நீங்கள் எனக்கு சந்தோஷம் தருகிறீர்கள்."

இந்த வழியில், நீங்கள் கர்த்தருக்காக உறுதியாய் இருங்கள் பிரியமான நண்பர்களே

இது ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம்

"நான் உங்களுக்கு போதித்தது போல நீங்கள் கர்த்தருக்காக வாழ்வதைத் தொடருங்கள், அன்பான நண்பர்களே."

நான் எயோதியாலோடும் சிந்திகேயாவோடும் கெஞ்சுகிறேன்

இந்த இரண்டு பெண்களும் பவுலோடு பிலிப்பிய சபையில் இருந்து அவருக்கு உதவிசெய்தவர்கள். இது, "நான் எயோதியாவையும் சிந்திகேயாவையும் கெஞ்சுகிறேன்" என்று மொழி பெயர்க்கப்படலாம்.

கர்த்தருக்குள் ஒரே மனமாய் இருங்கள்

"ஒரே மனம்" என்கிற பதம், ஒரே மன நிலை அல்லது கருத்து வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதை, "ஒருவரோடொருவர் ஒப்புக்கொண்டிருங்கள் ஏனென்றால் நீங்கள் இருவரும் ஒரே கர்த்தரில் விசுவாசமாய் இருக்கிறீர்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

அன்றியும், என் உத்தமக் கூட்டாளியே, நான் உன்னையும் ஏற்படுத்துகிறேன்

"உன்னை" என்கிற வார்த்தை ஒருமையில் உள்ளது. பவுல் அந்த மனிதனின் பெயரைக் குறிப்பிடவில்லை. அவர் அவனை, "எனது கூட்டாளி" என்று அழைக்கிறார். இது பவுலோடு சுவிசேஷத்தைப் பரப்ப வேலை செய்த ஒருவனைக் குறிக்கிறது. இதை, "ஆம், நான் உன்னையும் கேட்கிறேன், என்னுடைய சக வேலையாளே." என்று மொழிபெயர்க்கலாம்.

கிலேமெந்தோடும்

பிலிப்பிலிருக்கும் சபையில் இருந்த விசுவாசியும் வேலையாளுமான ஒரு மனிதன்.

ஜீவ புஸ்தகத்திலிருக்கும் பெயர்களுடையவர்கள்

"ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள்."

Philippians 4:4-7

எப்பொழுதும், கர்த்தரிடத்தில் களிகூருங்கள்; மறுமடியும் உங்களுக்கு சொல்லுகிறேன், களிகூருங்கள்

பவுல் எல்லா பிலிப்பிய விசுவாசிகளோடும் பேசுகிறார். இது எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிக்க பவுல் இந்தக் கட்டளையை இரண்டு முறை சொல்லி இருக்கிறார். இதை, "களிகூருங்கள், கர்த்தர் செய்ததினிமித்தம்! மறுபடியும் உங்களுக்கு சொல்லுகிறேன், சந்தோஷமாய் இருங்கள்!"

எல்லா மக்களுக்கும் உங்கள் சாந்தகுணம் தெரியப்படவேண்டும்

"நீங்கள் எவ்வளவு தயவுள்ளவர்களாய் இருகிறீர்கள் என்பதை எல்லா மக்களும் அறியவேண்டும்."

கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "ஆவியில் விசுவாசிகளின் அருகில் கர்த்தர் இருக்கிறார்" அல்லது 2. "கர்த்தர் பூமிக்கு திரும்பும் நாள் சமீபமாய் இருக்கிறது."

எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்தி நன்றி செலுத்துங்கள்

உங்களுக்குத் தேவையானதை தேவனிடம் ஜெபத்தோடும் நன்றியோடும் கேளுங்கள்."

எல்லாப் புரிந்துகொள்ளுதலுக்கும் மேலான

"நம்முடைய மனித ஞானம் புரிந்துகொள்ளுதலுக்கு மேலானது"

உங்களுடைய இருதயங்களையும் நினைவுகளையும் காக்கும்

இது, தேவனுடைய சமாதானத்தை நம்முடைய உணர்வுகளையும் நினைவுகளையும் வருத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு படை வீரனுக்கு ஒப்பிடுகிறது. இதன் முழு அர்த்தத்தையும் வெளிப்படையாக்கலாம்: "ஒரு படை வீரனைப் போல இருந்து உங்களுடைய உணர்ச்சிகளையும் நினைவுகளையும் வாழ்க்கையின் பாடுகளைக் குறித்து வருத்தப்படுவதிலிருந்து காக்கும்."

Philippians 4:8-9

இறுதியாக

இது கடிதத்தின் பகுதியை நிறைவு செய்கிறது. பவுல் பின்னும் தொடர்ந்து, தேவனோடு சமாதானமாக எப்படி விசுவாசிகள் வாழவேண்டும் என்பதைக் குறித்து ஒரு கணக்கைக் கொடுக்கிறார்.

அன்புள்ளவைகள் எவைகளோ

"ரம்மியமான காரியங்கள் எதுவானாலும்"

நற்கீர்த்தி உள்ளவைகள் எவைகளோ

"மக்கள் ரசிக்கும் எந்த காரியமானாலும்" அல்லது "மக்கள் மதிக்கும் எந்தக் காரியங்கள் ஆனாலும்."

அவைகளில், புண்ணியம் இருந்தால்

"அவைகள் நல்ல நெறிகளாக இருந்தால்"

அவைகளில் புகழ் இருந்தால்

"அவைகள் புகழுக்குக் காரணமாய் இருந்தால்"

இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தியுங்கள்

"இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தியுங்கள்"

கற்றுகொண்டதையும், பெற்றுக்கொண்டதையும், என்னிடத்தில் கேட்டதையும், பார்த்ததையும்

"நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து காண்பித்ததையும்"

Philippians 4:10-13

நீங்கள் முன்பும் என்னைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தும் எனக்கு உதவி செய்ய உங்களுக்குத் தருணம் இல்லை

"முன்பு நீங்கள் என்னைக் குறித்து நினைவாய் இருந்தீர்கள் என்று இப்பொழுது நான் அறிவேன், ஆனால், நீங்கள் எனக்கு உதவி செய்ய ஒரு காரணமும் இருந்ததில்லை."

திருப்தியடைய

"திருப்திப்பட" அல்லது "சந்தோஷப்பட"

எல்லா சூழ்நிலைகளிலும்

"என்னுடைய சூழ்நிலை என்னவென்றாலும் பொருட்டில்லை"

எப்படி வாழவேண்டும் என்று எனக்குத் தெரியும்

மறு மொழிபெயர்ப்பு: "சரியான மன நிலை எப்படி வைப்பது என்று எனக்குத் தெரியும்."

தேவையான நேரங்களில்

"எனக்குத் தேவையான எல்லாம் எனக்கு இல்லாதிருந்த பொழுது"

குறைச்சல் இல்லாதிருந்தபொழுது

"என் தேவைக்கு அதிகமாக எனக்கிருந்த பொழுது"

அதிகமாய் இருந்தாலும், பசியாய் இருந்தாலும், மிஞ்சியிருத்தலிலும், தேவைகளிலும்

அதிகமாய் இருந்தாலும், பசியாய் இருந்தாலும், என்கிற கூற்றும், மிஞ்சியிருத்தலிலும், தேவைகளிலும் என்ற கூற்றும் அடிப்படையில் ஒரே அர்த்தத்தை சொல்லுகிறது. பவுல் இந்த கூற்றுக்களை, "எல்லா சூழ்நிலைகளிலும்" என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு

"எனக்கு எல்லாவற்றையும் செய்ய முடியும், ஏனென்றால், கிறிஸ்து எனக்கு பலன் கொடுக்கிறார்."

Philippians 4:14-17

என்னுடையக் கஷ்டங்களில்

"காரியங்கள் கடினமாகும்போது"

சுவிசேஷ பிரயாணமாக

பவுல் இயேசுவைக் குறித்து சொல்ல அனேக பட்டணங்களுக்கு பிரயாணப்படுவார் என்பதை இது குறிக்கிறது.

உங்களைத்தவிர வேறு எந்த சபையும் கொடுக்கல் வாங்கலில் ஆதரவு அளித்தது இல்லை

"எனக்கு பணம் அனுப்பி அல்லது உதவி செய்தது உங்கள் சபை மட்டுமே."

உங்கள் கணக்கில் உங்கள் பலனை அதிகரிக்க நான் நாடுகிறேன்

பவுல், சபையின் ஈவை ஒரு மனிதனின் மேலும் மேலும் பெருகும் சொத்திற்கு ஒப்பிடுகிறார். பிலிப்பியர்கள் ஈவுகளைக் கொடுத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்புகிறார். மறு மொழிபெயர்ப்பு: "தேவன் உங்களுக்கு மேலும் மேலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் கொடுப்பதைப் பார்க்க விரும்புகிறேன்."

Philippians 4:18-20

எல்லாம் எனக்கு பரிபூரணமாய் இருக்கிறது. நான் நிரம்பி உள்ளேன்.

"எனக்குத் தேவையான அனைத்தும் எனக்கு இருக்கிறது, அதற்கு மேலும் இருக்கிறது."

அவைகள் இனிமையான சுகந்த வாசனை, தேவனைப் பிரியப்படுத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலி

பிலிப்பிய சபையின் ஈவை பவுல் பழைய ஏற்பாட்டின் பலிகளுக்கு ஒப்பிடுகிறார். ஆசாரியர்கள் பலிகளை எரிக்கும்போது, அது தேவனுக்குப் பிரியமான சுகந்த வாசனையைக் கொடுக்கும். சபையின் ஈவு தேவனுக்கு மிகுந்த மதிப்புள்ளது என்பதைப் பவுல் வலியுறுத்துகிறார். இதை, "நான் உங்களுக்கு நிச்சயமாய் சொல்லுகிறேன், இந்த ஈவுகள் தேவனுக்கு மிகவும் பிரியமானவைகள்."

உங்கள் தேவைகள் ஒவ்வொன்றையும் கொடுப்பார்

"உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார்"

கிறிஸ்து இயேசுவுக்குள் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி

இதை. "தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி கிறிஸ்து இயேசுவின் மூலமாய் அவர் தருகிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.

இப்பொழுது நமது தேவனுக்கு

"இப்பொழுது" என்கிற வார்த்தை முடிவு ஜெபத்தையும் கடித்தத்தின் இந்தப் பகுதியின் முடிவையும் குறிக்கிறது.

Philippians 4:21-23

கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமான ஒவ்வொருவரையும் வாழ்த்துங்கள்

"கிறிஸ்துவுக்கு சொந்தமான அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனையும் வாழ்த்துங்கள்"

சகோதரர்கள்

இவர்கள், பவுலோடு ஊழியம் செய்தவர்களாக இருக்கலாம், அல்லது பவுலுக்கு ஊழியம் செய்தவர்களாய் இருக்கலாம். மறு மொழிபெயர்ப்பு: "சக விசுவாசிகள்"

முக்கியமாக இராயனுடைய வீட்டார்

இராயனுடைய அரண்மனையில் வேலை செய்த வேலையாட்கள் இவர்கள். இதை, "முக்கியமாக இராயனுடைய அரண்மனையில் வேலை செய்த சக விசுவாசிகள்" (UDB)

உங்களுடைய ஆவியோடு

தேவனோடு உறவு வைக்க உதவும் இதை, அதாவது, "ஆவி" என்கிற வார்த்தையை விசுவாசிகளைக் குறிக்க பவுல் பயன்படுத்துகிறார். இது, "உங்களோடு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.