தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Thessalonians

1 Thessalonians 1

1 Thessalonians 1:1

பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் சபைகளுக்கு

இந்தக் கடிதத்தை எழுதினவர் பவுல் தான் என்பதை UDB தெளிவாக்குகிறது

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக

உங்களுக்கு என்ற வார்த்தை தெசலோனிக்கேய விசுவாசிகளைக் குறிக்கிறது

1 Thessalonians 1:2-3

நாங்கள் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்

இதை மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ள கூற்று. இதை ''நாங்கள் அடிக்கடி தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்' என்று மொழிபெயர்க்கப்படலாம்.''

நாங்கள் எப்பொழுதும்

நாங்கள் என்பது பவுலையும், சில்வானையும் மற்றும் தீமோத்தேயுவையும் குறிக்கின்றதேயன்றி தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல

எங்கள் ஜெபங்களில் உங்களைக்குறித்து விண்ணப்பம் பண்ணுகிறோம்

நாங்கள் உங்களுக்காக ஜெபம்பண்ணுகிறோம்

இடைவிடாமல் உங்களை நினைவுகூருகிறோம்

நாங்கள் அடிக்கடி நினைக்கிறோம்

விசுவாசத்தின் கிரியை

விசுவாசத்தின் செயல்பாடுகள் அல்லது நீங்கள் தேவனை நம்புவதினால் அவருக்காக நீங்கள் செய்யும் கிரியைகள் (UDB)

நம்பிக்கையில் பொறுமை

நம்பிக்கையுடன் பொறுமையாயிருப்பது

1 Thessalonians 1:4-5

சகோதரரே

சக விசுவாசிகளே

உங்கள் அழைப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்

நீங்கள் அவருடைய ஜனங்களாகும்படி தேவன் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் (UDB) அல்லது நீங்கள் அவருக்கு விசேஷவிதமாக ஊழியம் செய்யும்படிக்கு தேவன் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்

நாங்கள் அறிந்திருக்கிறோம்

நாங்கள் அறிந்திருக்கிறோம் என்ற வார்த்தை பவுலையும், சில்வானையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல

வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும்

1 . பவுலும் அவனோடிருந்தவர்களும் பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தப்பட்டு பிரசங்கித்தார்கள் என்று அறியலாம். 2. பரிசுத்த ஆவியானவரின் முழுநிச்சயமான செயலினால் சுவிசேஷமானது விசுவாசிகள்மேல் வல்லமையான தாக்கத்தை உண்டாக்கினது என அறியலாம்

முழு நிச்சயமாக

அதேபோலவே (UDB)

எப்படிப்பட்ட மனிதர்கள்

நாங்கள் எப்படிப்பட்ட நடக்கையுள்ளவர்களாயிருந்தோம் (UDB)

1 Thessalonians 1:6-7

நீங்கள் எங்களைப் பின்பற்றுகிறவர்களாகி

எங்களைப்போல செய்வது அல்லது பின்தொடர்வது. நீங்கள் எங்களைப்பின்பற்றினீர்கள் என்பது மாற்று மொழிபெயர்ப்பாகும்

வார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்

போதகத்தை வரவேற்றீர்கள் அல்லது போதகத்தை ஏற்றுக்கொண்டீர்கள்

மிகுந்த உபத்திரவத்திலும்

நீங்கள் மிகுதியாக பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அல்லது மிகுதியான உபத்திரவத்திலும்

அகாயா

இது தற்போதைய கிரேக்க நாட்டிலிருந்த பழம்பெரும் மாவட்டமாகும்

1 Thessalonians 1:8-10

தொனித்தது

பரம்பினது

அகாயா

இது தற்போதைய கிரேக்க நாட்டிலிருந்த பழம்பெரும் மாவட்டமாகும்

எல்லா இடங்களிலேயும்

பிரதேசத்தின் முழுவதுமுள்ள அனேக இடங்களிலும்

அவர்கள்தாமே

தெசலோனிக்கேய விசுவாசிகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அந்த சுற்றுப்புறமெங்கும் உள்ள முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டிருந்த சபைகளை குறித்துப் பவுல் குறிப்பிடுகிறான்

அவர்கள் தாமே

அவர்கள்தாமே என்ற வார்த்தை அவர்களை முக்கியப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது

உங்களிடத்தில் நாங்கள் அடைந்த வரவேற்பு எப்படிப்பட்டதென்று

நீங்கள் எங்களை எப்படி பட்சமாய் வரவேற்றீர்கள். (UDB)

பரலோகத்திலிருந்த தம்முடைய குமாரனை

பரலோகத்திலிருந்த தேவனுடைய குமாரனை

யாரை எழுப்பினார்

யாரை தேவன் எழுப்பினார்

நம்மை விடுவிக்கிறவராய் இருக்கிற

'' நம்மை'' என்ற வார்த்தையிலே பவுல் அனைத்து விசுவாசிகளையும் உள்ளடக்குகிறான்

1 Thessalonians 2

1 Thessalonians 2:1-2

நீங்களே

நீங்களே என்ற வார்த்தை தெசலோனிக்கேய சபை விசுவாசிகளைக் குறிக்கிறது

எங்களின் வருகை

''எங்களின்'' வருகை என்ற வார்த்தை பவுலையும், சில்வானையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறது, தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல

பிரயோஜனமற்றதாய் இருக்கவில்லை

மிகவும் பிரயோஜனமுள்ளதாயிருந்தது

பாடுபட்டு நிந்தை அடைந்தான்

பவுல் அடிக்கப்பட்டு பிலிப்பியாவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். தரக்குறைவாக நடத்தப்பட்டு மற்றும் அவமதிக்கப்பட்டான்

அனேக எதிர்ப்புகளின் மத்தியில்

அனேக எதிர்ப்புகளை சந்திக்கும்போது

1 Thessalonians 2:3-4

எங்கள் போதகமானது

''எங்கள்'' என்ற பிரதிப்பெயர் வார்த்தை பவுலையும், சில்வானையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறது

துர்ஆசையுள்ளதாயும், கபடமுள்ளதாயும், வஞ்சகத்தினாலும் அல்ல

உண்மையுள்ளதாயும் , சுத்தமுள்ளதாயும், நேர்மையுள்ளதாயும் இருந்தது

நம்முடைய இருதயங்களை ஆராய்கிற தேவன்

நம்முடைய சிந்தைகளையும் நம்முடைய செயல்களையும் ஆராய்கிற தேவன்

1 Thessalonians 2:5-6

நாங்கள்

''நாங்கள்'' என்ற வார்த்தை பவுலையும், சில்வானையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறது.

இச்சகமான வசனங்களை பயன்படுத்தவில்லை

முகஸ்துதி செய்யவில்லை

பொருளாசையுள்ளவர்களாய் மாயம் பண்ணவுமில்லை

உங்களிடத்தில் நாங்கள் பெற்றுக்கொள்ளும்படிக்கு பேராசைபடவுமில்லை

சில உபாயங்களை உங்களிடத்தில் பெற்றுக்கொண்டிருக்க முடியும்

எங்களுக்கு சில பொருட்களை கொடுக்கப்பண்ணவும் செய்திருக்கக்கூடும்

1 Thessalonians 2:7-9

ஒரு தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல

தாய் தன் பிள்ளைகளை பரிவாய் தேற்றுவது போல பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் தெசலோனிக்கேய விசுவாசிகளிடத்தில் பரிவாய் பேசினார்கள்

நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்தோம்

உங்களை நேசித்தோம்

நீங்கள் எங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனீர்கள்

நாங்கள் உங்கள் மேல் கரிசனைகொண்டவர்களாயிருந்தோம்

எங்களுடைய பிரயாசமும் வருத்தமும்

''பிரயாசம்'' மற்றும் ''வருத்தம்'' என்கிற ஒத்த வார்த்தைகள் கடுமையாகவும், நன்றாக உழைப்பதையும் குறிக்கிறது.''நம்முடைய முயற்சிகள்.''

நாங்கள் உங்களுக்கு பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் நாங்கள் வேலை செய்தோம்

நீங்கள் எங்களுக்கு உதவி செய்யாமலிருக்கும்படிக்கு எங்களுடைய பிழைப்புக்காக நாங்களே கடினமாக உழைத்தோம்

1 Thessalonians 2:10-12

பரிசுத்தமாகவும், நீதியாகவும், பிழையின்மையாகவும்

நீதியுள்ளவர்களாய்

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு

தேவனுக்கு எப்படி பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்கு சொல்லுகிறதுபோல பவுலும் அவனோடிருந்தவர்களும் விசுவாசிகளுக்கு புத்தியும், தேறுதலும் சொன்னார்கள்

உங்களை அழைத்தவர்

உங்களைத் தெரிந்துகொண்டவர்

1 Thessalonians 2:13

இதற்காகவே...அதை

நாங்கள் தேவனுக்கு இடைவிடாமல் நன்றி செலுத்துத்துகிறதை

நீங்கள் ஏற்றுக்கொண்டபோது

பவுலினால் செய்யப்பட்ட பிரசங்கத்தை, பவுலின் அதிகாரத்திலிருந்து அல்ல, அதை தேவனிடத்திலிருந்து வந்ததாக தெசலோனிக்கேய மக்கள் விசுவாசித்தார்கள்

1 Thessalonians 2:14-16

அவர்கள் சபைகளை பின்பற்றுகிறவர்களாகி

ஆதி விசுவாசிகள் எப்படி யூத தலைவர்கள் மூலமாக துன்பத்தை அனுபவித்தார்களோ அதுபோல தெசலோனிக்கேயர்களும் துன்பத்தை அனுபவித்தார்கள். மாற்றுமொழிபெயர்ப்பு : மற்ற சபைகளைப்போல ஆனார்கள்

உங்கள் சுய ஜனங்களிலிருந்து

மற்ற தெசலோனிக்கேயர்களிலிருந்து

அவர்கள்; நாங்கள் பேச தடை செய்கிறார்கள்

நாங்கள் பேசுவதை நிறுத்தவேண்டுமென்கிறார்கள்

தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறதற்காக

தொடர்ந்து பாவம் செய்ய

கோபம் அவர்கள்மேல் வந்தது

தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வந்தது அல்லது தேவனுடைய கோபம் அவர்கள்மேல் வந்தது

1 Thessalonians 2:17-20

சரீரத்தின்படி அல்ல, இருதயத்தின்படி உங்களோடிருந்து

சரீரத்தின்படி தூரமாயிருந்தும் உங்களுக்காக வேண்டிக்கொண்டிருந்தோம்

உங்கள் முகத்தை காணவேண்டுமென்று

பார்க்கவேண்டுமென்று அல்லது உங்களோடிருக்கவேண்டுமென்று

பவுலாகிய நான் மறுபடியும்

பவுலாகிய நான் இரண்டுமுறை பிரயாசப்பட்டேன்

அவருடைய வருகையிலே நம்முடைய நம்பிக்கை என்னவாக இருக்கும்

மாற்றுமொழிபெயர்ப்பு : கர்த்தராகிய இயேசுவின் வருகையிலே நீங்களும் மற்றவர்களும் எங்களுக்கு நம்பிக்கையையும், சந்தோஷமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பீர்கள்

1 Thessalonians 3

1 Thessalonians 3:1-3

நாங்கள் இனி பொறுத்திருக்கக்கூடாமல்

நாங்கள் உங்களைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருக்கமுடியாது நாங்கள் என்ற வார்த்தை பவுலையும், சில்வானையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேயர்களை அல்ல

அத்தேனே பட்டணத்தில் தங்கிவிடுவது நலமாய் தோன்றிற்று அத்தேனே பட்டணத்தில் தங்கிவிடுவது எனக்கும், சில்வானுக்கும் நலமாய் தோன்றிற்று

அத்தேனே

அக்காயா மாகாணத்திலிருந்த ஒரு நகரம் தற்போதைய கிரேக்க நாடு

நம்முடைய சகோதரன்

கிறிஸ்துவின் உடன் சகோதரன்

ஒருவனும் அசைக்கபடாதபடிக்கு

ஒருவனும் துயரப்பபடாதபடிக்கு அல்லது ஒருவனும் அசைக்கபடாதபடிக்கு

நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம்

நாங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம்

1 Thessalonians 3:4-5

நாங்கள் உங்களுடனேகூட இருந்தோம்

''நாங்கள்''என்ற (பிரதி பெயர்)வார்த்தை பவுலையும், சில்வானையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறது, தெசலோனிக்கேய விசுவாசிகளை(ஜனங்களை) அல்ல

உபத்திரவங்களை சகிக்க

மற்றவர்களால் துன்புறுத்தப்ப்படும்படிக்கு

நான் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்

நான் என்ற வார்த்தை பவுலைக் குறிக்கிறது. நான் உங்களைக் குறித்து அறிந்துகொள்வது எனக்கு அவசியமாயிருக்கிறது (UDB)

நான் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்

''பொறுத்துக்கொள்ள முடியாமல்'' என்ற( மொழிநடை)அவர்களைக் குறித்து தெரிந்துகொள்ளவேண்டுமென்றிருக்கிற அதிக வாஞ்சையைக் காட்டுகிறது

நான் அனுப்பினேன்

நான் தீமோத்தேயுவை அனுப்பினேன்

வீணாக

உபயோகமற்ற

1 Thessalonians 3:6-7

எங்களிடத்தில் வந்தது

எங்களிடம் என்பது பவுலையும், சில்வானையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது, தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல

உங்கள் விசுவாசத்தின் நற்செய்தி

உங்கள் விசுவாசத்தின் நல்ல அறிக்கை

நீங்கள் எப்பொழுதும் எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் அடிக்கடி என்னை நினைத்துக்கொள்ளுகிறீர்கள்

நீங்கள் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்கள்

நீங்கள் எங்களைக் காண விரும்புகிறீர்கள்

உங்களுடைய விசுவாசத்தின் மூலமாக

கிறிஸ்துவில் இருக்கிற உங்கள் விசுவாசத்தின் மூலமாக அல்லது கிறிஸ்துவின்மேல் கொண்டுள்ள உங்கள் நம்பிக்கையின் மூலமாக

1 Thessalonians 3:8-10

நாங்கள் இப்பொழுது வாழ்கிறது

நாங்கள் மிகவும் தைரியமுள்ளவர்களாயிருக்கிறோம்

நாங்கள் இப்பொழுது வாழ்கிறோம்

''நாங்கள் ''என்ற பிரதிப்பெயர் பவுலையும், சில்வானையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல

நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்

இது ஒரு மரபுச்சொல் மாற்றுமொழிபெயர்ப்பு : நீங்கள் மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் (UDB)

நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக் குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம். மாற்றுமொழிபெயர்ப்பு : தேவன் உங்களுக்கு செய்தவைகளுக்காக நாங்கள் அவருக்கு போதுமான நன்றி செலுத்த முடியாதவர்களாய் இருக்கிறோம். நாங்கள் எங்கள் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது உங்களைக்குறித்து அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறோம்

இரவும் பகலும்

அடிக்கடி

மிகவும் கடுமையாக

ஊக்கமாக

உங்கள் முகத்தைக் காண

உங்களை சந்திக்க

1 Thessalonians 3:11-13

நம்முடைய தேவன்

நம்முடைய தேவனிடத்தில் இப்படியாக ஜெபிக்கிறோம்

நம்முடைய தேவனும்...கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்

நாம் என்கிற வார்த்தை தெசலோனிக்கேய விசுவாசிகளையும் பவுலோடு இருக்கிறவர்களையும் குறிக்கிறது

பிதா தாமே

தாமே என்கிற வார்த்தை பிதாவை முக்கியத்துவப்படுத்துகிறது

எங்களை உங்களிடத்திற்கு நேராக நடத்த

பவுல் தெசலோனிக்கேயர்களை விட்டுவிட்டு தங்களை மாத்திரம் சொல்லுகிறான்

நாங்களும் செய்கிறோம்

நாங்கள் என்ற பிரதிப்பெயர் பவுலையும், சில்வானையும், தீமொத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேயர்களை அல்ல

அவர் செய்வாராக

நாம் வேண்டிக்கொள்கிறதை தேவன் செய்வாராக

நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது

நம்முடைய கர்த்தராகிய இயேசு திரும்பவும் பூமிக்கு வரும்போது

அவருடைய பரிசுத்தவான்களோடு

அவருக்கு சொந்தமான எல்லாரோடும் கூட (UDB)

1 Thessalonians 4

1 Thessalonians 4:1-2

நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்

''நாங்கள்''என்ற வார்த்தை பவுலையும், சில்வானையும், தீமொத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேயர்களை அல்ல

நீங்கள் கேட்டு ஏற்றுக்கொண்டதிலிருந்து

நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்

நீங்கள் நடக்க வேண்டும்

நட என்பது ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கிறது. மாற்றுமொழிபெயர்ப்பு : நீங்கள் இப்படியே நடக்கவேண்டும்

1 Thessalonians 4:3-6

வேசி மார்க்கத்திற்கு விலகி இருங்கள்

நீங்கள் வேசி மார்க்கத்தின் செயல்களுக்கு விலகி இருங்கள்

எப்படி (அனுபவிப்பது)ஆண்டுகொள்ள என்று அறிந்து

எப்படி வாழவேண்டுமென்று அறிந்து

மோக இச்சை

தவறான காம இச்சை [ஆசை]

ஒரு மனிதனும்

ஒருவனும் அல்லது ஒரு நபரும்

மீறுதல் மற்றும் தவறுதல்

இரண்டு வார்த்தைகளும் ஒரே சிந்தனையையுடைய கருத்தை இரண்டு விதங்களில் வலியுறுத்துகிறது

தேவன் நீதிசரிகட்டுகிறவராய் இருக்கிறார்

தேவன் மீறுதல் செய்தவர்களை தண்டிப்பார்,

சாட்சியாக முன்னெச்சரிக்கபட்டுள்ளது

உங்களுக்கு சொல்லப்பட்டும், கடுமையாக எச்சரிக்கப்பட்டும் உள்ளது

1 Thessalonians 4:7-8

தேவன் நம்மை [இதற்காக]அழைக்கவில்லையா

'' நம்மை ''என்பது விசுவாசிகளைக் குறிக்கிறது

இதைத் தள்ளிவிடுகிறவன்

இந்த போதனையை தள்ளிவிடுகிறவன் அல்லது இந்த போதனையை நிராகரிக்கிறவன்

1 Thessalonians 4:9-12

சகோதர சிநேகம்

சகோதர்களுக்கான அன்பு

நீங்கள் மக்கதொனியாவிலுள்ள எல்லா சகோதரர்களுக்கும் இதை செய்கிறீர்கள்

நீங்கள் மக்கதொனியா முழுவதுமுள்ள விசுவாசிகளுக்கு அன்பு காட்டுகிறீர்கள்

நாட்டம் கொள்ளுதல்

தேடுதல் அல்லது ஆசையுடன் பின்பற்றுதல்

உங்கள் சொந்த அலுவல்களை கவனியுங்கள்

மற்றவர்களுடைய காரியங்களில் தலையிட்டுக்கொள்ளாதிருங்கள். மாற்று மொழிபெயர்ப்பு: உங்களின் சொந்த வேலைகளை கவனியுங்கள்

உங்கள் சொந்த கைகளால் வேலை செய்யுங்கள்

நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கு உங்கள் சொந்த வேலைகளைச் செய்யுங்கள்

நீங்கள் செம்மையாய் நடவுங்கள்

நீங்கள் மரியாதைக்குறியவர்களாகவும், கனத்திற்குரியவர்களாகவும் நடந்துகொள்ளுங்கள்.

விசுவாசத்தில் புறம்பே இருக்கிறவர்களுக்கு

கிறிஸ்துவை விசுவாசியாமலிருக்கிறவர்களுக்கு

உங்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல் இருக்கவும்

உங்களுக்கு ஒரு தேவையும் இல்லாமல் இருக்கவும்

1 Thessalonians 4:13-15

நாங்கள் இப்படி விரும்புகிறதில்லை

''நாங்கள்'' என்ற (பிரதிப்பெயர் ) வார்த்தை பவுலையும், சில்வானையும், தீமொத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேயர்களை அல்ல

நீங்கள் தவறாக புரிந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை

நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்

நீங்கள் துக்கம் அடைய வேண்டாம்

நீங்கள் புலம்ப வேண்டாம்

எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையில்லாத மற்றவர்களைப்போல்

விசுவாசியாதவர்களைப் போல

நாம் விசுவாசித்தால்

''நாம்'' என்ற பிரதிப்பெயர் )வார்த்தை பவுலையும், அவனைக் கேட்பவர்களையும் குறிக்கிறது

திரும்பவும் எழுதல்

வாழும்படி திரும்பவும் மரித்தொரிலிருந்து எழுந்திருத்தல்

அவருக்குள் மரித்தவர்களை இயேசு வரும்போது கூட்டிக்கொண்டு வருவார்

கிறிஸ்துவோடு மரித்த விசுவாசிகளை அவர் திரும்ப வரும்போது உயிர்பிப்பார்

நாங்கள் இப்படி சொல்லுகிறோம்

''நாங்கள்'' என்பது பிரதிப்பெயர் )பவுலையும், சில்வானையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேயர்களை அல்ல

கர்த்தர் வரும்பொழுது

கிறிஸ்து திரும்ப வரும்நாளில்

நாம் முந்திக்கொள்வதில்லை

நாம் முன்பதாக செல்வதில்லை

1 Thessalonians 4:16-18

கர்த்தர் தாமே இறங்குவார்

கர்த்தர் தாமே இறங்கி வருவார்

பிரதான தூதன்

"முதன்மை தூதன்"

கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்

உயிரோடிருக்கும் நாமும்

''நாம்'' (பிரதிப்பெயர் ) என்பது விசுவாசிகள் அனைவரையும் குறிக்கிறது

அவர்களுடன்

''அவர்களுடன்'' என்பது உயிர்பிக்கப்பட்ட மரித்த விசுவாசிகள் அனைவரையும் மற்றும் இயேசுவோடு இருக்கும்படி ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்டவர்களையும் குறிக்கின்றது

கர்த்தரை சந்திக்கும்படி மேகத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

வானில் இயேசுவை சந்திப்பது

1 Thessalonians 5

1 Thessalonians 5:1-3

காலங்களையும் சமயங்களையும்

இயேசு கிறிஸ்து திரும்பவும் வரும் நேரத்தில்(UDB)

எல்லாம் நேர்த்தியாக

எல்லாம் ஒழுங்காக அல்லது எல்லாம் சரியாக (UDB)

திருடன் இரவிலே வருவதைப்போல

திருடன் வீட்டை உடைக்கவும் திருடவும் இரவில் வருவதை ஒருவனும் அறியாதிருப்பதைப் போல கர்த்தர் வரும் நாளையும் நாம் அறியக்கூடாது

அவர்கள் சொல்லும்பொழுது

ஜனங்கள் இவ்வாறு சொல்லும்பொழுது

சடுதியான அழிவு

எதிர்பார்த்திராத அழிவு

கர்ப்பவதிகளுக்குண்டான வேதனை

கற்பவதிகளுக்கு சடுதியாக வேதனை வந்து பிள்ளை பிறக்கும் வரை முடிவடையாமலிருப்பதைப் போல அழிவு வரும். அவர்கள் தப்புவதில்லை

1 Thessalonians 5:4-7

இருளில் இருக்கிற ஜனங்களைப் போல அல்ல

இருளில் கிடக்கிற இந்த தீய உலகத்தை சார்ந்தவர்களைப் போல அல்ல

திருடனைப் போல அந்த நாள் உங்களை மேற்கொள்ளாதபடிக்கு

திருடனுக்கு பலியானவன் திகைப்பதுபோல இயேசு கிறிஸ்து வரும் நாளில் நீங்கள் திகைக்காமல் இருக்கும்படிக்கு, மாற்று மொழிபெயர்ப்பு: ஆயத்தமில்லாமல் இருக்கையில் உங்களை பிடிக்கும்படியாக

நீங்கள் பகலின் (வெளிச்சத்தின்)பிள்ளைகளாயிருக்கிறீர்கள்...இரவின் பிள்ளைகள் அல்ல

பகலின் (வெளிச்சத்தின்)பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவைப் பின் பற்றுகிறவர்களையும், இரவின் பிள்ளைகள் உலகத்தை பின் பற்றுகிற மற்ற எல்லாரையும் குறிக்கிறது

நாம் மற்றவர்களைப்போல் தூங்கவேண்டாம்

பவுல்; தூங்குவதை, உலகத்தை நியாயந்தீர்க்க வருகிற இயேசுவின் வருகையை அறியாமலிருப்பதற்கு ஒப்பிடுகிறான்

நாம் மற்றவர்களைப்போல் இயேசு கிறிஸ்துவின் வருகையை அறியாமலிருக்கவேண்டாம்

நாம்

நாம் என்ற வார்த்தை பவுலையும் தெசலோனிக்கேயர்களையும் குறிக்கிறது

விழித்திருப்பவர்களாகவும், தெளிந்தவர்களாகவும்

நாம் கிறிஸ்துவின் வருகைக்கு விழிப்புள்ளவர்களாகவும்

தூங்குகிறவர்கள் இருளிலே தூங்குவார்கள்

இரவிலே தூங்குகிற ஜனங்களுக்கு என்ன சம்பவிக்கிறதேன்று தெரியாதிருக்கிறது போல உலகமும் கிறிஸ்துவின் வருகையை அறியாதிருக்கும்

1 Thessalonians 5:8-11

பகலின் பிள்ளைகள்

இது கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களைக் குறிக்கிறது அல்லது வெளிச்சத்தின் பிள்ளைகள்

நாம் தெளிந்தவர்களாய் இருக்க வேண்டும்

நாம் இச்சையடக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்

மார்க்கவசத்தை அணிந்துகொண்டு

ஒரு சேவகன் தன்னுடைய உடலை பாதுகாப்பதற்காக மார்க்கவசம் அணிவது போல விசுவாசத்தினாலும், அன்பிலும் பிழைக்கும் விசுவாசிகள் பாதுகாப்பைப் பெறுவார்கள்

தலைச்சீரா

தலைச்சீரா ஒரு சேவகனின் தலையை பாதுகாப்பதுபோல இரட்சிப்பின் நிச்சயம் ஒரு விசுவாசியை பாதுகாக்கும்

ஆனால் இரட்சிப்பை அடைவதற்கு

இரட்சிப்பை பெற்றுகொள்வதற்க்கு

நாம் தூங்குகிறவர்களாகவோ அல்லது விழிப்புள்ளவர்களாகவோ இருந்தால்

நாம் உயிரோடிருக்கிரவர்களாகவோ அல்லது செத்தவர்களாகவோ இருந்தால்

ஒருவருக்கொருவர் பக்தி விருத்தியாகும்படி செய்யுங்கள்

ஒருவருக்கொருவர் தைரியப்படுத்துங்கள்

1 Thessalonians 5:12-14

உங்களை விசாரிக்கிறவர்களை நீங்கள் மதித்து

சபை நடத்துபவர்களை உயர்வாக என்னவும் உற்சாகப்படுத்தவும்

கர்த்தருக்குள் உங்கள் கண்காணியாயிருக்கிறவர்களுக்கு

சபையில் மூப்பர்களாகவும் போதகர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றுகிறவர்களுக்கு

அவர்களை மிகவும் உயர்ந்த அன்பாய் எண்ணுங்கள்

நீங்கள் அவரை நேசிக்கிறபடியால் அவர்களுக்கு மரியாதையும் கனத்தையும் செலுத்துங்கள்,

1 Thessalonians 5:15-18

எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள், இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

விசுவாசிகள் எல்லாவற்றிலும் சந்தோஷமாய் இருக்கவும் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும், எல்லாவற்றிலும் நன்றியுள்ளவர்களாய் இருக்கும்படி, பவுல் புத்திச் சொல்லுகிறான்

1 Thessalonians 5:19-22

ஆவியை அவித்துப் போடாதிருங்கள்

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் கிரியை செய்வதை தடைபண்ணாதிருங்கள்

தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்

தீர்க்கதரிசனங்களை அலட்சியமாய் எண்ணாதிருங்கள் அல்லது பரிசுத்த ஆவியானவர் ஒருவரிடம் சொல்லுவதை வெறுக்காதிருங்கள்

எல்லாவற்றையும் சோதித்துப்பாருங்கள்

வார்த்தைகளும் செய்கைகளும் தேவனுடைய ஆவியிலிருந்து வருகிறதா என்பதை உறுதி செய்யுங்கள் அதுவே சத்தியமாகும்

1 Thessalonians 5:23-24

உங்களை முழுவதும் பரிசுத்தமாக்குங்கள்

நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு வேறு பிரிக்கப்படுங்கள் அல்லது குற்றமற்றவர்களாய் இருங்கள் (UDB)

உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும்

ஆவி, ஆத்துமா, சரீரம் இவை மூன்றும் ஒரே கருத்தையுடையது ஆனால் முக்கியத்துவப்படுத்துவதற்காக இங்கே மூன்று பதங்களாக குறிக்கப்படுகிறது

நீங்கள் குற்றமில்லாமல் காக்கபடுவதற்க்கு

நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்

அவர் அப்படியே செய்வார்

அவர் உங்களுக்கு உதவி செய்வார்

1 Thessalonians 5:25-28

கர்த்தர் பேரில் ஆணையிடுகிறேன்

கர்த்தர் உங்களோடு பேசுகிறது போல நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்