Colossians
Colossians 1
Colossians 1:1-3
( இந்த நிரூபம் பவுல் மற்றும் தீமோத்தேயுவிடமிருந்து கொலோசெய விசுவாசிகளுக்கானது. )
தேவனுடைய சித்தத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்
"கிறிஸ்து இயேசுவுக்கு அப்போஸ்தலனாக இருக்கும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் "
நம்முடைய சகோதரன்
"நம்முடைய" என்பதில் பவுல் அவருடைய ஜனங்களையும் சேர்த்துக்கொள்கிறார்.
தேவனுக்காய் வேறுபிரிக்கப்பட்டவன்
குற்றமற்றவன் அல்லது சுத்திகரிக்கப்பட்டவன் அல்லது பரிசுத்தவான் என்பது அர்த்தம். "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
உங்களுக்குக் கிருபை
மற்றவர்கள்மேல் ஆசீர்வாதத்தைக் கொடுப்பது அல்லது விரும்புவது.
உங்களுக்குக் கிருபை
"உங்களுக்கு" என்பது கொலோசெய பரிசுத்தவான்கள் மற்றும் விசுவாசமுள்ள சகோதரர்களைக் குறிக்கிறது.
நாங்கள் உங்களுக்காக எப்பொழுதும் ஜெபிக்கிறோம்
இது "நாங்கள் உங்களுக்காக அடிக்கடி மற்றும் கருத்தாய் ஜெபித்தோம் " என்பதைத் தெரிவிக்கிறது.
Colossians 1:4-6
நாங்கள் கேள்விப்பட்டோம்
"நாங்கள்" என்பதில் பவுல் அவருடைய ஜனங்களைத் தவிர்க்கிறார்.
கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள உங்கள் விசுவாசம்
"கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள உங்கள் நம்பிக்கை"
உங்கள் விசுவாசம்...உங்களுக்குள் இருக்கிற...உங்களுக்காக
"உங்கள்" என்பது கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
எல்லோர்மேலும் நீங்கள் கொண்டிருக்கிற அன்பு
"எல்லோரையும் நீங்கள் நேசிக்கிறீர்கள்"
தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்டது
இதற்கு சுத்தமாக இருப்பது அல்லது பாவத்தினின்று விலகி, தேவனுக்கு பயனுள்ளதாக இருப்பது என்று அர்த்தம். "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
பரலோகத்தில் உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையின் எதிர்பார்ப்பினால்
"பரலோகத்திலே தேவன் வைத்திருக்கிறதின் மீதான உங்களுடைய உறுதியான நம்பிக்கையின் முடிவு"
நம்பிக்கையின் எதிர்பார்ப்பு
"நீங்கள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டீர்கள் என்று நம்புங்கள்"
கனி தந்து வளருகிறது
இந்த உருவகமானது ஆகாரத்தைத்தருகிற மற்றும் வளருகிற மரம் அல்லது செடியோடு, மக்களை மாற்றுகிற மற்றும் அநேக ஜனங்கள் அதை விசுவாசிப்பதினாலே உலகம் முழுவதும் பரவுகிற சுவிசேஷத்தோடு ஒப்பிடுகிறது.
உலகமெங்கும்
இது மிகைப்படுத்திச் சொல்லக்கூடியது. சுவிசேஷமானது உலகமெங்கும் பரவி வளருகிறது.
சத்தியத்தில் தேவனுடைய கிருபை
"உண்மையான தேவனுடைய கிருபை" அல்லது "உண்மையான தேவனுடைய தயவு"
Colossians 1:7-8
அதை நீங்கள் எப்பாப்பிராவினிடத்திலிருந்து கற்றுக்கொண்டதைப்போல
"அதை எப்பாப்பிராத்து உங்களுக்குக் போதித்ததைப்போல" அல்லது "எப்பாப்பிராத்து உங்களுக்குப் போதித்ததை நீங்கள் முழுவதுமாகப் புரிந்துகொண்டீர்கள்"
அது
"அது" என்பது அவர்களுடைய (கொலோசெய விசுவாசிகள் ) வாழ்க்கையில் சுவிசேஷத்தினுடைய தாக்கம் அல்லது முடிவைக் குறிக்கிறது.
நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்
கொலோசெய விசுவாசிகள்.
எப்பாப்பிராத்து
எப்பாப்பிராத்து என்பவர் கொலோசெய மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்.
நம்முடைய பிரியமான...நமக்கு
"நம்முடைய" மற்றும் "நமக்கு" என்ற வார்த்தைகள் பவுலையும் அவனுடைய சகஊழியர்களையும் குறிக்கிறதே தவிர கொலோசெய விசுவாசிகளை அல்ல.
அவன் எங்களுக்கு வெளிப்படுத்தினார்
"எப்பாப்பிராத்து எங்களுக்குத் தெரியப்படுத்தினான் "
ஆவிக்குள்ளான உங்களுடைய அன்பு
"பரிசுத்த ஆவியானவர் நீங்கள் விசுவாசிகளை நேசிக்கும்படிச் செய்தார் "
Colossians 1:9-10
இந்த அன்பினிமித்தம்
"ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர், நீங்கள் மற்ற விசுவாசிகளை நேசிக்கும்படிச் செய்தார் "
நாங்கள் உங்களைப் பற்றிக் கேட்ட நாள்முதல்
"எப்பாப்பிராத்து உங்களைப்பற்றி எங்களுக்கு சொன்ன நாள்முதல் "
நாங்கள் கேட்டோம்
இது பவுலையும் தீமோத்தேயுவையும் குறிக்கிறதே தவிர கொலோசெய விசுவாசிகளை அல்ல.
நாங்கள் ஜெபிப்பதை நிறுத்தவில்லை
"நாங்கள் தேவனிடத்தில் அடிக்கடி மற்றும் கருத்தாய் ஜெபித்தோம் "
நீங்கள் அவருடைய சித்தத்தின் அறிவினாலே நிரப்பப்படவேண்டுமென்று கேட்கிறோம்
"அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான அறிவினால் அவர் உங்களை நிரப்பும்படியாக நாங்கள் தேவனிடத்தில் கேட்கிறோம்"
ஞானத்திலும், ஆவிக்குரிய விவேகத்திலும்
"பரிசுத்த ஆவியானவரால் ஞானமும், ஆவிக்குரிய விவேகமும் கொடுக்கப்பட்டுள்ளது"
நீங்கள் கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளும்படி
"கர்த்தருக்கு பிரியமுண்டாகும்விதத்தில் நீங்கள் வாழும்படிக்கு"
கனிகொடுங்கள்
இந்த உருவகம் கனி நிறைந்த செடியை விசுவாசியின் நற்கிரியைகளோடு ஒப்பிடுகிறது. ஒரு செடி வளர்ந்து கனி தருவதைப்போல எல்லா விசுவாசிகளும் தேவனை அறிவதில் வளர்ந்து நற்செயல்களைச் செய்வதினால் கனி கொடுக்கவேண்டும்.
Colossians 1:11-12
நாங்கள் ஜெபிக்கிறோம், நீங்கள்
"நாங்கள்" என்பது பவுல் மற்றும் தீமோத்தேயு, ஆனால் கொலோசெயர்கள் அல்ல. "ஜெபிக்கிறோம், நீங்கள்" கொலோசெய விசுவாசிகள்.
அவருடைய மகிமையின் வல்லமையின்படி எல்லா ஆற்றலிலும் பலப்படுத்தப்பட
"அவருடைய மகிமையின் வல்லமையினால் எல்லா ஆற்றலிலும் பலத்தைக்கொடுத்திட"
எல்லாப் பொறுமையிலும் நீடியசாந்தத்திலும்
"விசுவாசிப்பதையும், பொறுமையாக இருப்பதையும் விட்டுவிடாமல் இருக்க"
நீங்கள் மகிழ்ச்சியோடு பிதாவிற்கு நன்றி செலுத்துவதினால்
"நீங்கள் பிதாவிற்கு மகிழ்ச்சி நிறைந்த எண்ணத்தோடு நன்றி செலுத்துவதினால்"
பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினார்
பங்கடைவதற்கு பிதா நம்மை ஏற்றுக்கொண்டார்.
நம்மைத் தகுதிபடுத்தினார்
பவுல் கொலோசெய விசுவாசிகளையும் சேர்த்துக்கொள்கிறார்.
சுதந்திரத்தின் பங்கிற்காக
"சுதந்திரத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக"
ஒளியில்
"அவருடைய பிரசன்னத்தின் மகிமையில்"
வேறுபிரிக்கப்பட்டவர்களுக்காக
"நீதியின் குற்றங்கள் இல்லாதவர்களுக்காக" அல்லது "சிறப்பான பயன்பாட்டிற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்". "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
அவருக்காக
"பிதாவிற்காக"
Colossians 1:13-14
அவர் மீட்டெடுத்தார்
"பிதாவாகிய தேவன் மீட்டெடுத்தார்"
நம்மை மாற்றினார்
"நம்மைக் கொண்டுசென்றார் ". "நம்மை" என்பது பவுலையும், மற்றும் கொலோசெய விசுவாசிகளையும் சேர்த்துக் கூறுகிறது.
அவருடைய அன்பின் குமாரன்
"பிதாவாகிய தேவனுடைய பிரியமான குமாரனாகிய இயேசு கிறிஸ்து"
அவருடைய குமாரனுக்குள் நமக்கு மீட்பு உண்டு
"அவருடைய குமாரன் நம்மை மீட்கிறார் "
பாவங்களின் மன்னிப்பு
"அவருடைய குமாரன் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார் " அல்லது "பிதா அவருடைய குமாரன் மூலமாக நம்மை மன்னிக்கிறார் "
Colossians 1:15-17
குமாரன் அதரிசனமான தேவனுடைய ரூபமாக இருக்கிறார்
குமாரனாகிய இயேசு எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வதின் மூலமாக, பிதாவாகிய தேவன் எப்படிப்பட்டவர் என்பதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.
அவர் முதற்பேரானவர்
"குமாரன் முதற்பேரானவர் ". குமாரனுக்கு முன்னதாக எதுவும் இருந்ததில்லை.
ஏனென்றால் அவரால்
"ஏனென்றால் குமாரனால்"
ஏனென்றால் அவர் மூலமாக எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டது
"ஏனென்றால் எல்லாவற்றையும் குமாரன் சிருஷ்டித்தார் "
சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவராலும், அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது
சிங்காசனங்கள், கர்த்தத்துவங்கள், துரைத்தனங்கள் மற்றும் அதிகாரங்களோடு சேர்த்து எல்லாவற்றையும் குமாரன் அவருக்காக சிருஷ்டித்தார்.
துரைத்தனங்கள்
பிரபுக்களால் ஆளுகை செய்யப்பட்ட நிலங்கள்.
அவர் எல்லாவற்றிக்கும் முந்தினவர்
"அவர் எல்லாவற்றிக்கும் முன்னதாகவே இருந்தார் "
அவருக்குள் எல்லாம் நிலைநிற்கிறது
"அவர் எல்லாவற்றையும் நிலைநிறுத்துகிறார்."
Colossians 1:18-20
அவரே தலையானவர்
"தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து தலையாக இருக்கிறார் "
அவருடைய சரீரமாகிய சபைக்கு அவர் தலையாக இருக்கிறார்
இந்த உருவகம், சபைக்கு இயேசுவினுடைய நிலையை, மனித சரீரத்திலுள்ள தலையோடு ஒப்பிடுகிறார். தலையானது சரீரத்தை ஆளுவதைப்போல, இயேசு சபையை ஆளுகிறார்.
அதிகாரத்தை உருவாக்குதல்
முதல்வரானவர் அல்லது ஸ்தாபகர். இயேசு சபையைத் துவங்கினார்.
மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேரானவர்
இயேசு, மரிக்கவும் மற்றும் திரும்ப உயிரோடு வரவும், மீண்டும் மரிக்காத முதல் நபராக இருக்கிறார்.
அவருடைய சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவேண்டுமென்று தீர்மானிப்பது தேவனுக்குப் பிரியமாக இருப்பதினால்
"எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் வாழச்செய்ய பிதாவாகிய தேவன் பிரியப்பட்டார் "
மூலமாக
"மூலமாக" என்ற முன்னிடைச் சொல்லிற்கான கிரேக்க வார்த்தை, இயேசு சிலுவையில் மரித்தபோது சிந்தின அவருடைய இரத்தத்தினாலே, தேவன் ஜனங்களுக்கு சமாதானத்தையும், ஒப்புரவாகுதலையும் கொண்டுவருகிறார் என்பதனைக் காட்டும் வழி அல்லது பாதை என்ற கருத்தைக் கொண்டுள்ளது. இந்த முன்னிடைச் சொல் 20 வசனத்தில் இரண்டுமுறைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Colossians 1:21-23
மற்றும் நீங்களும்
"மற்றும் கொலோசெய விசுவாசிகளாகிய நீங்களும்."
தேவனுக்கு அந்நியராயிருந்தீர்கள்
கிரேக்க வார்த்தை தெரிந்தெடுப்பதின் ஆதாரத்தினை உள்ளடக்கியது. ஆகவே, அது "தேவனிடத்திலிருந்து வேற்றுமைப்படுத்தப்பட்டார்கள்" அல்லது "தேவனைப் புறம்பே தள்ளினார்கள்" அல்லது "தேவனுக்கு விரோதமானவர்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
உங்களுடைய சிந்தையினாலும், துர்கிரியைகளினாலும் அவருக்கு சத்துருக்களாக இருந்தீர்கள்
நீங்கள் பொல்லாத சிந்தனைகளைச் சிந்தித்ததினாலும், தீயக் காரியங்களைச் செய்ததினாலும் அவருக்கு விரோதிகளாக இருந்தீர்கள்.
மரணத்தின் மூலமாக தேவன் உங்களைக் கிறிஸ்துவின் மாம்ச சரீரத்தோடு ஒப்புரவாக்கினார்
தேவன் உங்களைக் கிறிஸ்துவிடத்தில் ஒப்புரவாக்கினபோது, அவர் கிறிஸ்துவைப் பார்க்கவில்லை, ஆனால் உங்களைச் சிலுவையில் உள்ளவர்களாகவும், கிறிஸ்து மரித்தபோது நீங்கள் மரிப்பதை அவர் பார்த்தார்.
குற்றமற்றவர்கள்
"குற்றம் இல்லாமல்"
கண்டிக்கப்படாதவர்கள்
"குற்றமில்லாதவர்கள்." எந்தப் பாவத்திலும் குற்றம்சாட்டமுடியாதவர்கள்.
அவருக்கு முன்பாக
"தேவனுக்கு முன்பாக"
தொடர்ந்து நிலைத்திருப்பது
"தொடர்ந்து ஸ்திரமாய் ஸ்தாபிக்கப்பட்டது" அல்லது "உறுதியான"
விசுவாசத்தில் நிலைத்திருப்பது
"அசையாத" அல்லது "உறுதியான"
சுவிசேஷத்தின் நம்பிக்கை
"சுவிசேஷத்தில் நம்பிக்கையாய் இருப்பது"
வானத்தின் கீழிருக்கிற எல்லா சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்ட அந்த சுவிசேஷத்திற்காக பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்
"வானத்தின் கீழிருக்கிற எல்லா சிருஷ்டிகளுக்கும் ஜனங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். இதே சுவிசேஷத்தைத்தான் பவுலாகிய நான் தேவனுக்கு ஊழியம் செய்வதில் பிரசங்கிக்கிறேன்."
Colossians 1:24-27
இப்பொழுது நான் சந்தோஷமடைகிறேன்
"இப்பொழுது பவுலாகிய நான் சந்தோஷமடைகிறேன்"
உங்கள்நிமித்தம்
"கொலோசெய விசுவாசிகளாகிய உங்கள்நிமித்தம்"
உங்களுக்கான என்னுடைய பாடுகளில்
"நான் உங்களுடைய பலனுக்காக பாடுகள் படுகிறேன்"
கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுவேன்
பவுல் சபையினிமித்தமாகத் தொடர்ந்து அனுபவிக்கிற எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும்பற்றிப் பேசுகிறார். பவுல் முதலாவது விசுவாசியானபோது இந்தப் பாடுகளைக் கிறிஸ்து அவனுக்கு வெளிப்படுத்தினார்.
நான் சபைக்கு ஊழியம் செய்கிறேன்
"பவுலாகிய நான், சபைக்குத் தேவையானவைகளைச் செய்யப்பார்க்கிறேன்"
இரகசியமாகிய சத்தியம்
"இரகசியம்"
பூர்வகாலங்களில் மறைக்கப்பட்டிருந்தது
இது சிருஷ்டிப்பின் காலங்களிலிருந்து பேதுரு புறஜாதியினருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தக் காலம்வரைக்கும் குறிக்கிறது.
அவருடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது
"அவருடைய சீஷர்களுக்கு தெளிவாக்கப்பட்டது." இது யூதர்கள் மற்றும் புறஜாதிகள் ஆகிய இருதிறத்தாரையும் சேர்த்துச் சொல்லுகிறது.
புறஜாதிகளுக்குள்ளே விளங்கின இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் என்னவென்று தேவன் தெரியப்படுத்த விரும்பினவர்கள்
புறஜாதியினருக்கான அவருடைய திட்டம் உண்மையாகவே எவ்வளவு அருமையானது என்பதை தேவன் அவருடைய ஜனங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினார்.
மகிமையின் நம்பிக்கை
"தேவனுடைய மகிமையில் பங்கடைவதற்கு நம்பிக்கையோடு எதிர்பார்த்தல்"
Colossians 1:28-29
நாம் அறிவிக்கிறவர் இவரே
"பவுல் மற்றும் தீமோத்தேயுவாகிய நாம் அறிவிக்கிற கிறிஸ்து இவரே"
நாங்கள் எந்த மனுஷனையும் கடிந்துகொள்ளுகிறோம்
"நாங்கள் எல்லோரையும் ஞானமாய் கண்டிக்கிறோம்"
நாங்கள் எந்த மனுஷனையும் நிறுத்தும்படி
"நாங்கள் எந்த மனுஷனையும் தேவனுக்கு முன்பாக நிறுத்தும்படி"
பூரணம்
"ஆவிக்குரிய முதிர்ச்சி"
நான் பிரயாசப்படுகிறேன்
"பவுலாகிய நான் பிரயாசப்படுகிறேன்"
எனக்குள்ளே கிரியை செய்கிற அவருடைய திட்டத்தின்படி
"எனக்குள் கிரியை நடப்பிக்கிற கிறிஸ்துவின் நோக்கங்களுக்காக"
Colossians 2
Colossians 2:1-3
நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன்
"பவுலாகிய நான், கொலோசெய விசுவாசிகளாகிய நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன்"
உங்களுக்காக மிகுந்த போராட்டம் எனக்கு உண்டாயிருந்தது
பவுல் அவர்களுடைய பரிசுத்தத்திற்காகவும், அவர்கள் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதற்காகவும் அதிகமான முயற்சியை ஈடுபடுத்தியுள்ளார்.
லவோதிக்கேயாவில் இருக்கிறவர்கள்
இது கொலோசே பட்டணத்திற்கு அருகில் உள்ள பட்டணம், இங்கு இருந்த சபைக்காகத்தான் பவுல் ஜெபித்துக்கொண்டிருந்தான்.
சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற அனைவரும்
"அநேகரை நான் தனிப்பட்டவிதத்தில் காணவில்லை" அல்லது "அநேகரை நான் முகமுகமாய்ப் பார்க்கவில்லை."
அவர்களுடைய இருதயங்கள்
"பவுலைச் சிறைச்சாலையில் காணாத எல்லா விசுவாசிகளுடைய இருதயங்கள்"
ஒன்றாய் இணைக்கப்பட்டு
உண்மையான நெருங்கிய உறவில் ஒன்றாக இணைக்கப்பட்டு. இது "ஒன்றாகக் கட்டுவது" அல்லது "நெருக்கமாக ஒன்றாய் இணைப்பது" என்றும் மொழிபெயர்க்கலாம்.
நிச்சயமாக புரிந்துகொள்ளுதலிலிருந்து வருதல்
இந்தக் காரியங்களை அறிந்துகொள்ளுவதில் நிச்சயத்தைக் கொண்டிருப்பது.
தேவனுடைய இரகசியம்
இது தேவனால் மட்டுமே வெளிப்படுத்தப்படும் ஞானமாகும்.
கிறிஸ்துவாகிய அவர்
இயேசு கிறிஸ்துவே தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமாகும்.
ஞானம் அறிவு என்பவைகளின் மறைக்கப்பட்டப் பொக்கிஷங்கள்
ஞானம் அறிவு என்பவைகளின் பெரிய ஐசுவரியம் அல்லது ஆஸ்தி.
ஞானம் மற்றும் அறிவு
அறிவு என்பது ஒன்றைக்குறித்ததான தகவல் மற்றும் தெரிந்துகொள்ளும் உண்மைகள், புரிந்துகொள்ளுதல் என்பது அந்தத் தகவலை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்திருப்பது மற்றும் ஞானம் என்பது அந்தத் தகவலை எப்பொழுது பயன்படுத்துவது அல்லது அப்பியாசப்படுத்துவது என்பதைத் தெரிந்திருப்பது.
அவருக்குள் இருக்கிறது
"அவருக்குள்" என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது.
Colossians 2:4-5
நான் இதைச் சொல்லுகிறேன்
"பவுலாகிய நான், இதைச் சொல்லுகிறேன்"
உங்களை ஏமாற்றுவது
"கொலோசெய விசுவாசிகளாகிய உங்களை தவறான இடத்திற்கு அல்லது முடிவிற்கு நடத்துவது"
நயவசனிப்பான பேச்சு
ஒரு காரியத்தைக் குறித்து உங்களை வசப்படுத்தும் பேச்சு அல்லது ஒரு கருத்தை நம்பச்செய்வது.
மாம்சத்தின்படி உங்களோடு இல்லாமல்
"சரீரத்தின்படி உங்களோடு இல்லாதது"
நான் ஆவியில் உங்களோடு இருக்கிறேன்
"நான் தொடர்ந்து உங்களைப்பற்றி நினைக்கிறேன்"
நல்ல ஒழுங்கு
பவுல், அவர்களுடைய ஒற்றுமை மற்றும் அவர்களுடைய நம்பிக்கையின் உறுதி அல்லது கிறிஸ்துவிலுள்ள நம்பிக்கையைக் குறித்து மெச்சிக்கொள்கிறார் அல்லது பாராட்டுகிறார்.
Colossians 2:6-7
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் நட
இது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அல்லது சீரான வழியில் வாழ்வதைத் தெரிவிக்கிறது.
நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டது
"கொலோசெய விசுவாசிகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது"
அவருக்குள் உறுதியாக நாட்டப்பட்டவர்களாக இருங்கள்
இந்த உருவகம், ஒரு செடி நன்றாய் வளருவதற்கு ஆழமாக வேர்கொள்ளும் விதம் அவசியம் என்பதனை விசுவாசிகள் ஆவிக்குரிய முதிர்ச்சியடைவதற்கு உறுதியான விசுவாசம் அவசியம் என்பதோடு ஒப்பிடுகிறது.
அவர்மேல் கட்டப்பட்டவர்களாக இருங்கள்
இந்த உருவகம், ஒரு கட்டிடம் உறுதியான அஸ்திபாரத்தின்மேல் கட்டப்படவேண்டிய அதேவிதமாக கிறிஸ்தவ வாழ்க்கையும் கிறிஸ்துவின்மேல் அமைந்துள்ளதாக இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.
விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாக இருங்கள்
இயேசுகிறிஸ்துவில் உள்ள உங்களுடைய விசுவாசத்தின்மேல் அமைந்துள்ள வாழ்க்கை வாழுங்கள்.
ஸ்தோத்திரத்தோடு பெருகுங்கள்
தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்காக.
Colossians 2:8-9
பாருங்கள்
எச்சரிக்கையாயிருங்கள். இதை "எச்சரிக்கை" அல்லது "கவனமாயிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
உங்களைக் கைப்பற்றும்
இந்த உருவகம், ஒரு நபர் சரீரரீதியாக கட்டாயமாகப் பிடித்துவைக்கப்பட்ட விதத்தினை, தவறான உபதேசத்தினால் ஒரு மனிதன் உணர்வுபூர்வமாக அல்லது ஆவிக்குரியரீதியில் எப்படிப் பிடிக்கப்பட்டு கைப்பற்றப்படுகிறான் என்பதோடு ஒப்பிடுகிறது.
உங்களைக் கைப்பற்றும்
"கொலோசெய விசுவாசிகளாகிய உங்களைக் கைப்பற்றும்"
தத்துவம்
தேவனுடைய வார்த்தையிலிருந்து வராத ஆனால் தேவனைக் குறித்தும், ஜீவனைக் குறித்தும் மனிதனுடைய யோசனையின் அடிப்படையில் அமைந்த மதம் சார்ந்த உபதேசம் அல்லது நம்பிக்கை.
வஞ்சிக்கப்படுதல்
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கைக்கு நேராக நடத்தாமல் தவறாக நடத்தும் ஆலோசனைகள். அவர்கள் ஒன்றுமில்லாதவர்களும் மதிப்பற்றவர்களுமாக இருக்கிறார்கள். அவர்களால் ஒன்றும் தர இயலாது.
மனிதனுடைய பாரம்பரியமும், உலகத்தின் பாவவழிபாடுகளும்
யூதருடைய பாரம்பரியங்கள் மற்றும் புறஜாதியினருடைய நம்பிக்கைமுறைகள் இரண்டுமே மதிப்பற்றவைகள்.
கிறிஸ்துவுக்குப் பின்பதாக
"கிறிஸ்துவைப் பொருத்தவரை." கிறிஸ்துவின்மேல் அமைந்துள்ள நம்பிக்கைமுறைகள் மாத்திரமே மதிப்புடையவைகள்.
ஏனென்றால் தேவனுடைய குணத்தின் பரிபூரணமெல்லாம் அவருடைய சரீரத்திற்குள் வாசமாயிருக்கிறது.
"தேவனுடைய பரிபூரண குணம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வாசமாயிருக்கிறது." தேவனுடைய எல்லாக் குணாதிசயங்களும் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது என்று குழம்பிக்கொள்ளக்கூடாது, இது உண்மையற்றது.
Colossians 2:10-12
அவருக்குள்
"இயேசு கிறிஸ்துவுக்குள்"
நீங்கள்
"கொலோசெய விசுவாசிகளாகிய நீங்கள்"
முழுவதும் பரிபூரணமுள்ளவர்கள்
"பூரணமாக்கப்பட்டவர்கள்"
தேவன் உங்களுக்கு விருத்தசேதனம் செய்தார்...
இந்த உருவகம், விருத்தசேதனத்தில் மாம்சமானது கத்தியினால் கத்திரிக்கப்படுவது அல்லது நீக்கப்படுவதைப்போலவே, தேவனும் விசுவாசிகளுடைய பாவங்களை நீக்கிப்போட்டார் அல்லது எடுத்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
அவரோடு அடக்கம்பண்ணப்பட்டார்கள்
இந்த உருவகமானது, மாம்சசரீரம் மரிக்கும்போது பூமிக்குள்ளே போடப்பட்டு மண்ணினாலே மூடப்படுவதைப்போல, இரட்சிப்பின்போது பழைய சுபாவங்கள் நித்தியமாக எவ்வாறு எடுத்துப்போடப்பட்டது என்பதை விளக்குகிறது.
அவரோடு எழுந்தவர்கள்
இந்த உருவகமானது, மரணத்திலிருந்து எழுந்த ஒருவனுக்கு மீண்டுமாக ஜீவன் கொடுக்கப்பட்டதைப்போல விசுவாசிகளுக்குப் புதிய சுபாவங்கள் கொடுக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.
Colossians 2:13-15
நீங்கள் மரித்தவர்களாயிருந்தபோது
"கொலோசெய விசுவாசிகளாகிய நீங்கள் ஆவிக்குரியப்பிரகாரமாக மரித்தபோது"
உங்கள் பாவங்களினாலும், மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலும் நீங்கள் மரித்துப்போனீர்கள்
இரண்டு காரியங்களில் நீங்கள் மரித்துப்போனீர்கள், 1) கிறிஸ்துவுக்கு எதிராக பாவமான வாழ்க்கை வாழும்போது நீங்கள் ஆவிக்குரியரீதியில் மரணமடைந்தீர்கள், மற்றும் 2) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் விருத்தசேதனம் பண்ணப்படவில்லை.
அவர் உங்களை ஆக்கினார்
"இயேசு கிறிஸ்து கொலோசெய விசுவாசிகளாகிய உங்களை ஆக்கினார் "
நம்முடைய எல்லா மீறுதல்களிலிருந்தும் நம்மை மன்னித்தார்
"இயேசுகிறிஸ்து யூதர்களாகிய எங்களையும், புறஜாதியாராகிய உங்களையும் நம்முடைய எல்லா மீறுதல்களிலுமிருந்தும் நம்மை மன்னித்தார் "
நீங்கள் மரித்தவர்களாயிருந்தீர்கள்...அவர் உங்களை உயிர்ப்பித்தார்
இந்த உருவகம், மரித்த மனிதன் மீண்டுமாக சரீரப்பிரகாரமாக உயிரோடு வருவதைப்போல, பாவம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து புதிய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வருவதைக் காட்டுகிறது.
நமக்கு எதிராகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அவர் அழித்துப்போட்டார்
இந்த உருவகம், தேவன் தன்னுடைய நியாயப்பிரமாணத்தை முறிப்பதற்காக அவர் எப்படி நம்முடைய பாவங்களை நீக்கிப்போட்டு நம்மை மன்னித்தார் என்பதை ஒரு காகிதத்தில் எழுதப்பட்டவைகளை ஒரு மனிதர் அழிக்கமுடியும் என்பதோடு ஒப்பிடுகிறது.
அவர்களை வெற்றிபவனிக்கு நடத்தினார்
ரோமர் காலத்தில் ரோம இராணுவத்தினர் வெற்றிபெற்று வீடு திரும்பும்போது, அவர்கள் சிறைபிடித்து வந்தவர்களையும், கைப்பற்றிவந்த உடைமைகளையும் வெளிக்காட்டுவதற்காக "வெற்றிபவனி " செல்வது பொதுவான வழக்கமாக இருந்தது.
Colossians 2:16-17
ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக
புறஜாதியினரை மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றும்படிச்செய்ய விரும்பின யூதர்களுக்கு எதிராக பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறார்.
புசிப்பதில் அல்லது பானம்பண்ணுவதில்
மோசேயினுடைய நியாயப்பிரமாணம், ஒருவன் எதைப் புசிக்கலாம் அல்லது பானம்பண்ணலாம் என்பதை உள்ளடக்கியது. இதை "நீங்கள் புசிப்பதில் அல்லது நீங்கள் பானம்பண்ணுவதில்."
பண்டிகைநாள் அல்லது மாதப்பிறப்பு அல்லது ஓய்வுநாட்களைக் குறித்து
மோசேயினுடைய நியாயப்பிரமாணம், கொண்டாடுவதற்கும், ஆராதிப்பதற்கும், பலிகளை செலுத்துவதற்குமான நாட்கள் எவைகள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.
வருங்காரியங்களுக்கான நிழல்
இந்த உருவகம், நிழலானது ஒரு பொருளினுடைய குணம் மற்றும் வடிவத்தின் நிச்சயமில்லாத கருத்தினைமட்டும் தருகின்றவிதத்தினை, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் போன்ற மதத்தின் பாரம்பரியங்கள் இயேசுகிறிஸ்துவினுடைய உண்மைத்துவத்தினை பகுதியாகமட்டுமே காண்பிக்கும்விதத்தோடு ஒப்பிடுகிறது.
Colossians 2:18-19
ஒருவனும் பந்தயப்பொருளைப் பறித்துக்கொள்ளாதபடி
"ஒருவனும் அவர்களுடைய பந்தயப்பரிசை ஏமாற்றிவிடாதபடிக்கு." இந்த உருவகம், மாயமான தாழ்மையையும், தூதர்களுக்கு செய்யும் ஆராதனையையும் போதிக்கும் மக்களை கொலோசெயர்களுடைய இரட்சிப்பைத் திருடும் கொள்ளையர்களோடு ஒப்பிடுகிறது. இந்த செயப்பாட்டு சொற்றொடர் "ஒருவனும் மற்றவனுடைய பலன்களைத் திருடாதிருப்பானாக" என்ற செய்வினை வடிவத்தில் மொழிபெயர்க்கலாம்.
மாயமான தாழ்மை
"தன்னார்வத் தாழ்மை." மற்றவர்களுக்கு நீங்கள் தாழ்மையாக இருப்பதைப்போலக் காட்சியளிக்கும் காரியங்களைச் செய்வது. இது "பக்தியான சுய
மறுப்பு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
காரியங்களைக் குறித்து விருப்பப்பட்டு
சிந்தையைக் கட்டுப்படுத்தும் உறுதியான எண்ணங்களைக் கொள்ளுதல் அல்லது ஏதோவொன்றை அளவுக்கதிகமாய் ஏற்கனவே பற்றிக்கொண்டிருத்தல்.
மாம்ச சிந்தைகள்
ஆவிக்குரிய மனிதனைப்போல அல்லாமல் இயற்கையான அல்லது பாவியான மனிதனைப்போலச் சிந்தித்தல்.
பற்றிக்கொண்டிரு
குழந்தை தன்னுடைய பெற்றோரை உறுதியாகப் பிடித்துக்கொள்வதைப்போல "உறுதியாகப் புரிந்துகொள்வது" அல்லது "உறுதியாகப் பற்றிக்கொள்வது"
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, முழு சரீரமும் ஆதரிக்கப்படுகிற தலை கிறிஸ்துவே
இந்த உருவகம், சபையின்மீதான கிறிஸ்துவினுடைய அதிகாரத்தை சரீரத்தின் எல்லா அவயவங்களையும் கட்டுப்படுத்தி ஆளுகின்ற மனிதனுடைய தலையோடு ஒப்பிடுகிறது.
Colossians 2:20-23
நீங்கள் கிறிஸ்துவுடனே உலகத்தின் பாவ நம்பிக்கை முறைமைகளுக்கு மரித்ததுண்டானால்
இந்த உருவகம், சரீரரீதியாக மரிக்கிற மனிதன் உலகத்தின் சரீரப்பிரகாரமான வேண்டுகோளுக்கு (சுவாசி, புசி, தூங்கு) கீழ்ப்படியவேண்டியதில்லை, கிறிஸ்துவோடு ஆவிக்குரியரீதியாக மரிக்கிற மனிதன் உலகமுறைமைகளின் ஆவிக்குரிய வேண்டுகோளுக்குக் கீழ்ப்படியவேண்டியதில்லை என்பதனைக் காட்டுகிறது.
நீங்கள் ஏன் உலகத்தின் நம்பிக்கைகளின்கீழ் வாழ்கிறீர்கள்?
உலகத்தின் மாயமான நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்ற கொலோசெயர்களைக் கடிந்துகொள்வதற்காக பவுல் இந்தக் கேள்வியைப் பயன்படுத்தினார். இது "உலகத்தின் வழக்கங்களுக்கு உங்களை அர்ப்பணிப்பதை நிறுத்துங்கள்!" என்ற தகவலாக மொழிபெயர்க்கப்படலாம்.
கீழ்ப்படிந்து வாழ்தல்
"பணிந்து" அல்லது "கொடுத்து" அல்லது "கீழ்ப்படி"
அழிந்துபோதல்
"அழுகிப்போதல்"
இந்த விதிமுறைகள் மனிதன் உருவாக்கின மதம் அல்லது மாயமான தாழ்மை மற்றும் சரீர ஒடுக்கத்தின் "ஞானத்தைக்" கொண்டுள்ளது
இந்த விதிமுறைகள் தாழ்மை மற்றும் கடுமையான சரீர ஒடுக்குதலாகத் தோன்றுவதால் மனிதனுடைய பார்வையில் ஞானமாகத் தெரிகிறது
சரீரத்தை ஒடுக்குதல்
"கடுமையான" அல்லது "இரக்கமற்ற" அல்லது "கண்டிப்பான"
மாம்சத்தின் விருப்பத்திற்கு எதிராக பிரயோஜனமற்றதாக உள்ளது
"உங்களுடைய மனித விருப்பங்களைப் பின்பற்றுவதை நிறுத்துவதற்கு அவர்கள் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்கள்"
Colossians 3
Colossians 3:1-4
தேவன் உங்களைக் கிறிஸ்துவோடு எழுப்பினார்
இந்த உருவகம் கொலோசெய விசுவாசிகளைக் கிறிஸ்துவோடு ஒப்பிடுகிறது. தேவன் கிறிஸ்துவை மரணத்திலிருந்து எழுப்பினதினால், தேவன் அவர்களை மரணத்திலிருந்து எழுப்பப்பட்டிருந்தவர்களாக எண்ணுகிறார்.
உங்களை எழுப்பினார்
"உங்களை" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
மேலான காரியங்கள்
"பரலோகக் காரியங்கள்" அல்லது "தேவ காரியங்கள்."
பூமியில் உள்ளவைகள்
"பூலோகக் காரியங்கள்" அல்லது "பூமியின் காரியங்கள்."
நீங்கள் மரித்தீர்கள்
இந்த உருவகம் கொலோசெய விசுவாசிகளைக் கிறிஸ்துவோடு ஒப்பிடுகிறது. கிறிஸ்து உண்மையாக மரித்ததால், தேவன் அவர்களை கிறிஸ்துவோடு மரித்தவர்களாக எண்ணுகிறார்.
தேவன் மறைத்தார்
"தேவன் மறைத்துவைத்தார் "
மகிமையில் அவரோடு
"அவரோடு" என்ற வார்த்தை கிறிஸ்துவைக் குறிக்கிறது.
Colossians 3:5-8
ஆகவே, உங்களுடைய பாவ இச்சைகளை அழித்துப்போடுங்கள்
இது, தீய மனிதன் மரணத்திற்குள் போடப்படுவதைப்போல பாவ இச்சைகளும் முழுமையாக மற்றும் இறுதியாக நீதியுடன் கையாளப்பட்டதைக் காண்பிக்கும் உருவகமாகும்.
அசுத்தமான
"அசுத்தமான நடக்கை"
உணர்வு
"உறுதியான இச்சை நிறைந்த ஆசை"
விக்கிரக ஆராதனையான பொருளாசை
"விக்கிரக ஆராதனையைப்போலவே இருக்கிற பொருளாசை" அல்லது "பொருளாசையில் இருக்கவேண்டாம், ஏனென்றால் அது விக்கிரகங்களை ஆராதிப்பதைப் போன்றது."
இந்தக் காரியங்களினாலே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின்மேல் தேவனுடைய கோபம் வருகிறது
"இந்தக் காரியங்களைச் செய்கிற அவிசுவாசிகளின்மீது தேவனுடைய கோபம் வருகிறது"
நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்
"நீங்கள் முற்காலத்தில் அவர்களோடு உற்சாகமாகப் பங்கெடுத்தபோது, நீங்கள் இந்தக் காரியங்களினால் வாழ்ந்தீர்கள்."
கோபம்
"வன்முறை"
சினம்
"கடுங்கோபம்"
தீய நோக்கங்கள்
"தீர்மானித்து அல்லது தீயக் காரியங்களைச் செய்ய உறுதியெடுத்தது. "இதை "இருதயம், ஜீவன் மற்றும் சுபாவத்தின் துன்மார்க்கம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவமானப்படுத்துதல்
"தூஷணம்" அல்லது "அவமதித்தல் " அல்லது "அவதூறு." இது மற்றவர்களைக் காயப்படுத்திப் பீறிப்போடும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட பேச்சாகும்.
வெட்கம் நிறைந்த, ஒழுக்கக்கேடான பேச்சு
இதை "அசுத்தமான பேச்சு " என்றும் மொழிபெயர்க்கலாம்.
Colossians 3:9-11
நீங்கள் களைந்துபோட்டீர்கள்
"நீங்கள்" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
நீங்கள் பழைய மனிதனையும் அதின் செய்கைகளையும் களைந்துபோட்டு புதிய மனிதனைத் தரித்துக்கொண்டீர்கள்
இந்த உருவகம், பக்தியற்ற நடக்கைகளை நீக்கிப்போட்டு பக்திக்கேதுவான செயல்களைச் செய்யத்துவங்கும் கிறிஸ்தவனையும், அழுக்கான ஆடையை நீக்கிப்போட்டு புதிய சுத்தமான ஆடையைத் தரித்துக்கொள்ளும் மனிதனையும் ஒப்பிடுகிறது.
அவருடைய சாயல்
இது இயேசுகிறிஸ்துவுக்கான ஆகுபெயராகும்.
அவருடைய சாயலின் அறிவு
இயேசுகிறிஸ்துவை அறிந்து, புரிந்துகொள்வதற்காக.
கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை, விருத்தசேதனமுள்ளனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றும் இல்லை, புறஜாதியானென்றும், புறதேசத்தானென்றும், அடிமையென்றும், சுயாதீனனென்றும் இல்லை
இது, தேவன் இனம், மதம், தேசம் மற்றும் ஜாதி (சமூக அந்தஸ்து) ஆகியவை இல்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார் என்பதைச் சொல்லுகிறது. இதை "இனம், மதம், கலாச்சாரம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவை ஒரு பொருட்டல்ல" என்று மொழிபெயர்க்கலாம்
கிறிஸ்துவே எல்லாமும், எல்லாக் காரியங்களிலும் இருக்கிறார்
எதுவும் விலக்கப்படவில்லை அல்லது கிறிஸ்து வாழ்வதிலிருந்து ஒன்றும் தள்ளப்படவில்லை. இதை "கிறிஸ்து முக்கியமானவர் " என்று மொழிபெயர்க்கலாம்.
Colossians 3:12-14
இரக்கமுள்ள இருதயத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்...
ஒரு நபர் ஆடை அணியும்போது வஸ்திரங்களைத் தரித்துக்கொள்வதைப்போல, விசுவாசிகளும் ஒருவரோடொருவர் உள்ள நடக்கையில் இரக்கத்தையும், மனத்தாழ்மையையும் மற்றும் எல்லாவற்றையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
ஆகையால், தரித்துக்கொள்ளுங்கள்
"ஆகையால்" என்பது முதன்மையான கலந்துரையாடல் அல்லது போதித்தல் அடிப்படையில் அமைந்த ஒரு செயலை அல்லது நடக்கை மாற்றத்தைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட விளக்கக் குறியீடாகும்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டப் பரிசுத்தமும், பிரியமுமானவர்கள்
"தேவனுக்குப் பரிசுத்தரும், தெரிந்துகொள்ளப்பட்டப் பிரியமுமானவர்கள்"
இரக்கமும், தயவும், மனத்தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையுமுள்ள இருதயம்
"இரக்கமும், தயவும், தாழ்மையும், சாந்தம் மற்றும் பொறுமையும் கொண்ட உள்ளான மனிதன்"
இரக்கமுள்ள இருதயம்
"இரக்கம் செய்கின்ற இருதயம்" அல்லது "கருதுகின்ற இருதயம்"
தயவு
"நன்மை" அல்லது "சாந்தம்"
தாழ்மை
"மனத்தாழ்மை " அல்லது "மனதின் பணிவு" அல்லது "தன்னடக்கம்"
மனத்தாழ்மை
"சாந்தம்." உணர்வுகளின் வெளிப்புற வெளிப்படுத்துதலுக்குப் பதிலாக தேவனிடத்தில் உள்ள ஆத்தும அமைதி.
பொறுமை
"மனவலிமை" அல்லது "நீடிய பொறுமை" அல்லது "சுயக் கட்டுப்பாடு"
ஒருவரையொருவர் தாங்குங்கள்
அன்போடும் ஒற்றுமையோடும் ஒன்றுசேர்ந்து செயல்படுவது. இதை " ஒன்றிணைந்து அல்லது ஒருவரையொருவர் தாங்குவது" என்று மொழிபெயர்க்கலாம்.
எதிரான குறைபாடு
"எதிராகக் குறைகூறுவது"
அன்பு கொள்ளுங்கள்
"அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்"
பரிபூரணத்தின் கட்டு
"நம்மைப் பூரணமாய் ஒன்றுசேர்த்துக் கட்டுவது" அல்லது "நம்மைப் பூரண ஒற்றுமையில் ஒன்றுசேர்த்துக் கட்டுவது"
Colossians 3:15-17
உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது
"உங்கள் இருதயத்தின்மீது அதிகாரம் கொள்வது."
உங்களுடைய இருதயங்கள்
"உங்களுடைய" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
உங்களில் வாழ்வது
"உங்களுக்குள் வாசமாயிருப்பது" அல்லது "உங்களுக்குள் வசிப்பது"
ஒருவருக்கொருவர் புத்திசொல்வது
"ஒருவருக்கொருவர் எச்சரிப்பது"
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்
"எல்லா வகையான பாடல்களினாலும் தேவனைத் துதிக்க"
உங்கள் இருதயத்தில் நன்றியுள்ளவர்களாக
"நன்றிநிறைந்த இருதயங்கள்"
அவர் மூலமாக
"கர்த்தராகிய இயேசுவின் மூலமாக"
Colossians 3:18-21
மனைவிகளே அர்ப்பணியுங்கள்
"மனைவிகளே கீழ்ப்படியுங்கள்"
அதுவே உகந்தது
"அதுவே ஏற்றது" அல்லது ""அதுவே சரியானது"
எதிராகக் கசந்துகொள்ளாதிருங்கள்
"இரக்கமற்றவர்களாக இராதேயுங்கள்" அல்லது "கோபமாயிராதேயுங்கள்"
இதுவே கர்த்தருக்கு மிகவும் பிரியமாக இருக்கிறது.
"நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்போது, கர்த்தர் உங்களிடம் மிகவும் பிரியமாக இருக்கிறார் "
உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தல்
"உங்கள் பிள்ளைகளை எரிச்சலடையச் செய்வது " அல்லது "கோபப்படுவதற்கு உங்கள் பிள்ளைகளைத் தூண்டிவிடுவது"
Colossians 3:22-25
உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
"உங்கள்" என்ற வார்த்தை விசுவாசிகளாகிய கொலோசெய வேலையாட்களைக் குறிக்கிறது.
நீங்கள் செய்கிறதெல்லாம்
"நீங்கள்" என்ற வார்த்தை வேலையாட்களைக் குறிக்கிறது, ஆனால் எல்லாக் கொலோசெய கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கலாம்.
சரீரத்தின்படி உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
"உலகத்தின் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள்"
பார்வைக்கு ஊழியம் செய்யாமல்
உங்கள் எஜமான்கள் கவனிக்கும்போது மாத்திரம் கீழ்ப்படியவேண்டாம்.
ஜனங்களை
பிரியப்படுத்துகிறவர்கள்
இவர்கள், கர்த்தருக்கு பதிலாக மற்ற மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஏதாவது செய்கின்ற ஜனங்கள்.
ஆத்துமாவிலிருந்து
"முழு இருதயத்தோடு"
கர்த்தருக்கேற்ற
"கர்த்தருக்காக"
சுதந்திரத்தின் பலன்
"கர்த்தர் வாக்குப்பண்ணின நம்முடைய பங்கு"
அநீதியானதைச் செய்கிறவன்
இது, ஏதோவொரு விதத்தில் (நீதி, சமூக அல்லது சரீர) தவறானதைத் தீவிரமாகச் செய்கிறவனைக் குறிக்கிறது. இதை "தவறு செய்கிறவன்" அல்லது "தீமையானதைச் செய்கிறவன்" என்று மொழிபெயர்க்கலாம்.
தண்டனையைப் பெறுவான்
தண்டிக்கப்படுவான்.
பட்சபாதம் இல்லை
"ஒருவர் மட்டும் முக்கியப்படுத்தப்படுவதில்லை" அல்லது "ஒருவர் மட்டும் விரும்பப்படுவதில்லை" அல்லது "பிரியமானவர் இல்லை"
Colossians 4
Colossians 4:1
உங்களுடைய வேலைக்காரருக்குக் கொடுங்கள்
"உங்கள்" என்ற வார்த்தை வேலையாட்களின் எஜமான்களாகிய கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
நீதியும், செவ்வையும்
இது எஜமான்கள் தங்களுடைய வேலையாட்களிடத்தில் நீதியானதையும், செவ்வையானதையும் செய்வதற்காக அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுவதாகும்.
பரலோகத்திலிருக்கிற எஜமான்
அவர்களுடைய எஜமானாகிய தேவன் என்பது 1) "வேலையாட்களின் எஜமான்கள் அவர்களுடைய பூமியின் வேலையாட்களை எப்படி நடத்தினார்களோ அப்படியே தேவன் அவர்களையும் நடத்துவார் " 2) "பூமியின் வேலையாட்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ, அதேவிதமாகவே உங்கள் எஜமானாகிய தேவன் உங்களையும் நடத்துவார் " என்பதைக் குறிக்கிறது.
Colossians 4:2-4
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
"விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபம்பண்ணுங்கள்" அல்லது "தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருங்கள்"
நமக்காகவும்
"நமக்கு" என்ற வார்த்தை பவுலையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறதே தவிர கொலோசெய விசுவாசிகளை அல்ல.
தேவன் வாசலைத் திறப்பார்
இது "தேவன் வாய்ப்புகளைத் தருவதற்காக" என்பதின் மரபுச் சொல்.
கிறிஸ்துவின் இரகசியம்
கிறிஸ்து வந்ததற்குமுன்பு புரிந்துகொள்ளப்பட்டிராத இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள்.
அந்த வார்த்தையினாலே நான் கட்டப்பட்டிருக்கிறேன்
"இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை அறிவித்ததினால் நான் இப்பொழுது சிறைச்சாலையில் இருக்கிறேன்"
நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி அதை வெளிப்படுத்தும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள்
"நான் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைப் பேசுகிறவிதத்தில், தெளிவாகப் பேசும்படிக்கு எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் "
Colossians 4:5-6
ஞானமாய் வாழ்வது
"ஞானமாய் இருப்பது"
புறம்பே இருக்கிறவர்கள்
"விசுவாசிகள் அல்லாதவர்கள்"
உங்கள் காலத்தை ஞானமாய் பிரயோஜனப்படுத்துங்கள்
"உங்கள்" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
உங்கள் காலத்தை ஞானமாய் பிரயோஜனப்படுத்துங்கள்
"நீங்கள் செய்வதைக் குறித்து ஞானமாய் இருங்கள்"
உங்கள் வார்த்தைகள் எப்பொழுதும் கிருபையுள்ளதாயும், உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக
உங்களுடைய வசனங்கள் எப்பொழுதும் கிருபையுள்ளதாயும் கவரக்கூடியதாகவும் இருப்பதாக.
நீங்கள் எப்படி உத்தரவு சொல்லவேண்டுமென்று அறிந்துகொள்ளுங்கள்
"நீங்கள் எவருக்கும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டுமென்று அறிந்துகொள்ளவேண்டும்."
Colossians 4:7-9
என்னைப் பற்றின எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவான்
"எனக்கு நடந்துகொண்டிருப்பவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லுவான்"
உங்களுக்குத் தெரியப்படுத்துவான்
"உங்களுக்கு" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
என்னைப் பற்றின எல்லாக்காரியங்களும்
இந்த பிரதிச்சொல் அப்போஸ்தலனாகிய பவுலைக் குறிக்கிறது.
சக
ஊழியன்
பவுல் ஒரு சுதந்திரவாளியாக இருந்தாலும், அவன் தன்னைக் கிறிஸ்துவின் ஊழியனாகவும், தீகிக்குவைத் தன்னுடைய உடன்ஊழியனாகவும் பார்க்கிறான். இது "உடன் வேலையாள்"என்று மொழிபெயர்க்கப்படலாம்.
எங்களைப்பற்றி அறியவும்
"எங்கள்" என்ற வார்த்தை பவுலையும் அவனுடைய உடன் வேலைக்காரர்களையும் குறிக்கிறதே தவிர கொலோசெய விசுவாசிகளை அல்ல.
உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும்
"உங்களுடைய இருதயங்கள்"என்பது ஒரு நபரை வெளிப்படுத்துவதாகும். "உங்களைத் தேற்றவும்"
ஒநேசிமு
ஒநேசிமு கோலோசேவில் பிலேமோனுடைய ஊழியனாக இருந்தான். அவன் பிலேமோனிடமிருந்து பணத்தைத் திருடிக்கொண்டு ரோமாபுரிக்கு ஓடிப்போனான். அங்கேதான் அவன் பவுலின் ஊழியத்தின் மூலமாகக் கிறிஸ்தவனானான். இப்பொழுது தீகிக்குவும் ஒநேசிமும்தான் கொலோசெவிற்கு பவுலுடைய நிரூபத்தைக் கொண்டுவருகிறவர்கள்.
உண்மையும் பிரியமுமான சகோதரன்
பவுல் ஒநேசிமுவை சக கிறிஸ்தவனாகவும் கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும் கருதுகிறார்.
அவர்கள் தெரியப்படுத்துவார்கள்
"தீகிக்கும், ஒநேசிமுவும் தெரிவிப்பார்கள்"
இவ்விடத்தில் செய்தவைகள்
அவர்கள் பவுல் தற்போது குடியிருக்கும் இடத்தில் நடப்பவைகள் எல்லாவற்றையும் கொலோசெய விசுவாசிகளுக்குத் தெரிவிப்பார்கள். பாரம்பரியத்தின்படி பவுல் ரோமாபுரியில் வீட்டுச்சிறையில் அல்லது சிறைச்சாலையில் இருந்தான்.
Colossians 4:10-11
அரிஸ்தர்க்கு
பவுல் இந்த நிரூபத்தை கொலோசெயர்களுக்கு எழுதினபோது எபேசுவிலே அவனோடு சிறைச்சாலையில் இருந்தவன்.
அவன் வந்தால்
"மாற்கு வந்தால்"
யுஸ்து என்னப்பட்ட இயேசு
இந்த மனிதனும் பவுலுடன் வேலைசெய்தவன்.
விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்திற்காக என்னுடைய உடன்வேலைக்காரர்களாக இருந்தவர்கள்
"இந்த மூன்று மனிதர்கள் மாத்திரம் இயேசுகிறிஸ்து மூலமாக தேவனை இராஜாவாக அறிவிப்பதற்காக என்னோடு வேலைசெய்த யூத விசுவாசிகளாவார்கள்"
விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள் மாத்திரம்
"அரிஸ்தர்க்கு, மாற்கு மற்றும் யுஸ்து ஆகிய இந்த மனிதர்கள் மாத்திரமே விருத்தசேதனமுள்ளவர்கள்"
Colossians 4:12-14
எப்பாப்பிரா
எப்பாப்பிரா கொலோசெவில் உள்ள மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த நபராவார். (1:7 ஐ பார்க்கவும்)
உங்களில் ஒருவன்
"உங்களுடைய பட்டணத்திலிருந்து" அல்லது "உங்களுடைய சக பட்டணத்துமனிதன் "
கிறிஸ்து இயேசுவின் ஊழியன்
"கிறிஸ்து இயேசுவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட சீஷன்"
ஜெபத்தில் எப்பொழுதும் உங்களுக்காகப் போராடுகிறான்
"உங்களுக்காக ஊக்கமாய் ஜெபிக்கிறான்"
நீங்கள் தேறினவர்களாயும், பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கும்படி
"நீங்கள் முதிர்ச்சியடைந்தவர்களாயும் நம்பிக்கையுள்ளவர்களாயும் நிற்கும்படி"
அவன் உங்களுக்காக கடினமாக வேலைசெய்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்
அவன் உங்களுக்காக மிகவும் கடினமாக உழைத்ததை நான் கவனித்திருக்கிறேன்"
லவோதிக்கேயாவில் இருப்பவர்கள்
லவோதிக்கேயா பட்டணத்தில் உள்ள சபை. லவோதிக்கேயா கொலோசெவிற்கு மிக அருகில் இருந்தது.
எராப்போலியில் இருப்பவர்கள்
எராப்போலி பட்டணத்தில் உள்ள சபை. எராப்போலியும் கொலோசேவிற்கு மிக அருகில் இருந்தது.
மற்றும் தேமாவும்
பவுலுடைய மற்றொரு உடன் வேலையாள்.
உங்களை வணங்குகிறார்கள்
"உங்களை வாழ்த்துகிறார்கள்"
Colossians 4:15-17
சகோதரர்களை வாழ்த்துங்கள்
"சகவிசுவாசிகளை வாழ்த்துங்கள்"
லவோதிக்கேயாவில்
கொலோசெவிற்கு மிகவும் அருகில் இருந்த பட்டணம், அங்கும் சபை இருந்தது.
நிம்பாவும், அவளுடைய வீட்டில் கூடுகிற சபையும்
லவோதிக்கேயாவில் நிம்பா என்னும் பெயரையுடைய பெண் வீட்டுசபையை நடத்தினாள். இதை "நிம்பா மற்றும் அவளுடைய வீட்டில் கூடிவருகிற விசுவாசிகளின் கூட்டத்தார் " என்று மொழிபெயர்க்கலாம்.
உங்களிடத்தில் வாசிப்பது
"உங்கள்" என்ற வார்த்தை கொலோசெய விசுவாசிகளைக் குறிக்கிறது.
"நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு கவனமாயிரு" என்று அர்க்கிப்புக்குச் சொல்லுங்கள்.
பவுல், அர்க்கிப்புக்கு தேவன் கொடுத்த இலக்கையும், அவன் அதனை தேவனிடத்தில் நிறைவேற்றவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார் என்பதையும் நினைப்பூட்டுகிறார்.
Colossians 4:18
இந்த வாழ்த்துக்கள் என்னுடைய கையினால் எழுதியது
பவுல்
இந்த நிரூபம் பவுலினால் எழுதப்பட்டது என்பதை கொலோசெய விசுவாசிகள் அறிந்துகொள்ளவேண்டுமென்று விரும்பினான்.
என்னுடைய கட்டுக்களை நினைத்துக்கொள்ளுங்கள்
இதை "நான் சிறையில் இருக்கும்போது என்னை நினைத்து எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.