தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Jude

Jude 1

Jude 1:1-2

ஊழியக்காரனாகிய யூதா

யூதா யாக்கோபினுடைய சகோதரன். மாற்று மொழிபெயர்ப்பு: "நான் ஊழியக்காரனாகிய யூதா."

யாக்கோபினுடைய சகோதரன்

யாக்கோபும் யூதாவும் இயேசுவினுடைய உடன்பிறவா சகோதரர்கள்.

பிதாவாகிய தேவனுக்குள் பிரியமானவர்கள்

"பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார் "

இயேசு கிறிஸ்துவுக்காக வைக்கப்பட்டவர்கள்

"இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்காக இப்பொழுது காக்கப்பட்டவர்கள் "

உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது

"உங்களுக்கு " இந்த நிருபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இருந்த எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு இரக்கமும், சமாதானமும் அன்பும் அதிகமாக பெருகக்கடவது."

Jude 1:3-4

நான் உங்களுக்கு எழுத முயற்சி செய்தேன்

"உங்களுக்கு எழுத நான் அதிக வாஞ்சையாக இருந்தேன்

நம்முடைய பொதுவான இரட்சிப்பு

" நாம் அதே இரட்சிப்பைப் பகிர்ந்து கொள்கிறோம் "

நான் எழுதவேண்டியது

"எழுதவேண்டியதின் தேவையை நான் உணர்ந்தேன் " அல்லது "எழுதவேண்டியதின் அவசரத் தேவையை நான் உணர்ந்தேன் "

விசுவாசத்திற்காக நீங்கள் ஊக்கமாகப் போராடவேண்டுமென்று உங்களுக்கு உணர்த்துவதற்காக

"உண்மையான போதனையைக் காக்கும்படிக்கு உங்களை உற்சாகப்படுத்த"

ஒப்புக்கொடுக்கப்பட்ட

"தேவன் இந்த உண்மையான போதனையைக் கொடுத்தார் "

சில மனிதர்கள் திருட்டுத்தனமாக வந்திருக்கிறார்கள்

"சில மனிதர்கள் விசுவாசிகளுடைய கவனத்தை தங்களிடம் ஈர்க்காமலேயே விசுவாசிகளுக்குள்ளே வந்திருக்கிறார்கள் "

அவர்களுடைய ஆக்கினை பூர்வத்திலேயேஎழுதப்பட்டிருக்கிறது

"இந்த மனிதர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள் என்று பூர்வகாலத்திலேயே எழுதப்பட்டது "

நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக் கேதுவாக மாற்றுகிறவர்கள்

"ஒருவன் பாலுணர்வு பாவத்தில் தொடர்ந்து வாழ, தேவனுடைய கிருபை அனுமதிக்கிறது என்று போதிக்கிறவர்கள் "

நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிறவர்கள்

இயேசுகிறிஸ்து உண்மையானவர் இல்லை அல்லது தேவனிடம் போகும் ஒரே வழி இல்லை என்றும் போதிக்கிறார்கள்.

மறுதலிப்பது

ஒன்றை உண்மை இல்லை என்று சொல்வது.

Jude 1:5-6

நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்

"நீங்கள் நினைவுகூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன் "

நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்

யூதா தங்களுக்குப் போதிக்கப்பட்டிருந்த மோசே எழுதினவைகளை முக்கியமாக குறிப்பிடுகிறார். மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் மோசே எழுதினவைகளை அறிந்திருக்கிறீர்கள்."

கர்த்தர் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்தார்

"முந்தின காலத்தில் கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து இரட்சித்தார் "

ஆனால் அதற்குப்பின்பு

" பின் நாட்களில்" அல்லது " ஒன்று நடந்ததற்குப் பின்பு "

...அவர்களுடைய சொந்த மேன்மை

தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவிகள் அல்லது பொறுப்புகளைக் காத்துக்கொள்ளாத தூதர்கள்.

அவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டுவிட்டனர்

"அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சொந்த இடத்தை இழந்துவிட்டார்கள் "

கர்த்தர் அவர்களை நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்தில் வைத்தார்

"கர்த்தர் இந்தத் தூதர்களை அந்தகாரத்தில் சிறைவைத்தார் "

...மகா நாள்

தேவன் ஜனங்களை நியாயம் தீர்க்கிற கடைசி நாள்.

Jude 1:7-8

அப்படிப்போலவே

இது தூதர்கள் எப்படியாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை இழந்தார்கள் என்பதை சோதோம் கொமோரா மக்களோடு ஒப்பிடுகிறது.

அவர்களைச் சுற்றியுள்ள பட்டணங்கள்

"அவர்களுக்கு அருகில் உள்ள பட்டணங்கள் "

அதே விதமாகவே தங்களைக் கொடுத்தார்கள்

தூதர்கள் பொல்லாதவைகளைப் பின்பற்றுவதற்குத் தங்களைக் கொடுத்ததுபோலவே சோதோம் கொமோரா மக்களும் தங்களை விபச்சாரத்திற்கு ஒப்புக்கொடுத்தனர்.

விபச்சாரம் செய்து முறையற்ற ஆசைகளை நாடினார்கள்

ஜனங்கள் திருமணத்தைவிட்டு தவறாக உறவு வைத்திருந்தார்கள். ஆண்கள் ஆண்களோடும், பெண்கள் பெண்களோடும் உறவு வைத்திருந்தார்கள்.

அவர்கள் கொடுக்கப்பட்டார்கள்

"சோதோம் மற்றும் கொமோரா மக்கள் கொடுக்கப்பட்டார்கள் "

நித்திய அக்கினியின் தண்டனையை அனுபவிக்கிறவர்களுடைய உதாரணங்களாக

சோதோம் கொமோரா மக்களுடைய அழிவு, தேவனை வேண்டாமென்று விலக்குகிறவர்களுக்கு நடக்கவிருப்பவைகளுக்கு எடுத்துக்காட்டானது.

இவர்களும் மாசுபடுத்துகின்றனர்

"இவர்கள் " என்பது ஓடையிலே குப்பைகளை வீசி அதின் தண்ணீரைக் குடிப்பதற்கு மோசமானதாக்குகிறதைப் போலவே விபச்சாரத்தினாலே தங்கள் சரீரங்களை அசுத்தப்படுத்துகிற, தேவனை வேண்டாமென்று விலக்குகிற மக்களைக் குறிக்கிறது.

மகிமையானவைகளைக் குறித்து

"தேவனுடைய மகத்துவமான தூதர்களைக் குறித்து"

Jude 1:9-11

சரீரத்தைப் பற்றி தர்க்கம் பண்ணினார்கள்

சரீரத்தை யார் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் தர்க்கம் பண்ணினார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "யார் சரீரத்தை சுதந்தரிப்பார்கள் என்பதைக் குறித்து தர்க்கித்தார்கள்."

(மிகாவேல்) அவருக்கு விரோதமாக கொண்டுவரத் துணியவில்லை

மிகாவேல் பிசாசைக் கடிந்துகொள்வதிலிருந்து மாறினார் . மாற்று மொழிபெயர்ப்பு: "அவர் விலக்கினார் "

கடிந்துகொள்ளுதல் அல்லது தூஷணமான வார்த்தைகள்

"வலுவான தூஷணம் அல்லது அவமரியாதையான வார்த்தைகள் "

ஆனால் இந்த ஜனங்கள்

"இந்த ஜனங்கள் " முன்னதாகவே சொல்லப்பட்ட அவபக்தியுள்ள ஜனங்கள்.

அவர்கள் புரிந்துகொள்ளாத எல்லாக் காரியங்களையும் தூஷிக்கிறார்கள்

"அவர்களுக்கு அர்த்தம் தெரியாதவைகளுக்கு விரோதமாக அவமரியாதையாகப் பேசுவது "

காயீனுடைய வழி

காயீன் தன்னுடைய சகோதரன் ஆபேலைக் கொன்றான்

பிலேயாம் கூலிக்காகச் செய்த குற்றம்

பிலேயாம் பணத்திற்காக தீர்க்கதரிசனம் சொல்ல நாடினான்.

கோராவினுடைய முரட்டாட்டம்

கோரா மோசேயினுடைய தலைமைத்துவத்திற்கும் ஆரோனுடைய ஆசாரியத்துவத்திற்கும் எதிராக முரட்டாட்டம் செய்தான்.

Jude 1:12-13

யூதா உருவகங்களின் தொகுப்புகளோடு தொடருகிறார்

இவர்களே

"இவர்கள்" அவபக்தியுள்ள மனிதர்களைக் குறிக்கிறது.

மறைந்திருக்கும் பாறை

கப்பலை மூழ்கடிக்கும் தண்ணீருக்கு அடியில் உள்ள பாறைகள் போல, இந்த ஜனங்கள் விசுவாசிகளுக்கு ஆபத்தானவர்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கிற ஆபத்தான பாறைகளைப் போல இருக்கிறவர்கள். "

உங்களுடைய அன்பின் விருந்துகளில், அவர்கள் உங்களுடன் விருந்து உண்ணும்போது

"உங்களுடைய ஐக்கிய விருந்துகளில் அவர்கள் உங்களுடன் உண்ணும்போது".

தண்ணீரில்லாத மேகங்கள்

தோட்டங்களுக்கு தண்ணீர் தராத மேகங்களைப் போல, இந்த ஜனங்கள் விசுவாசிகளுக்காக அக்கறை கொள்ளாதவர்கள்

கனியற்ற இலையுதிர்ந்த மரங்கள்

கோடைகால இறுதியில் கனி கொடுக்காத சில மரங்களைப்போல, ஆகவே இந்த அவபக்தியுள்ள ஜனங்களுக்கு விசுவாசமும் நீதியின் கிரியைகளும் இல்லை.

கனி இல்லாமல், இரண்டுமுறை மரித்தது

உறைபனியினாலே இரண்டுமுறை கொல்லப்பட்டு கனி கொடுக்காத மரங்களைப் போல, ஆகவே அவபக்தியுள்ள ஜனங்களுக்கு மதிப்பில்லை மற்றும் அவர்களுக்குள் ஜீவனும் இல்லை.

வேரோடு பிடுங்கப்பட்டது

நிலத்திலிருந்து முழுவதுமாக வேரோடு பிடுங்கிப் போடப்பட்ட மரங்களைப் போல, அவபக்தியுள்ள ஜனங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிற தேவனிடமிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடலின் கொடிய அலைகள்

கடலின் அலைகள் பலமான காற்றினாலே வீசப்படுவதைப் போல, ஆகவே அவபக்தியுள்ள ஜனங்கள் விசுவாசத்தின் அஸ்திபாரங்கள் இல்லாமல் பல திசைகளிலே சுலபமாகச் சென்றனர்.

சொந்த வெட்கத்தின் நுரைதள்ளுதல்

காற்றின் காரணமாக கொடிய அலைகள் எழும்பி அசுத்தமான நுரையை கிளப்பிவிடுவதுபோல், ஆகவே இந்த மனிதர்கள் தங்களுடைய தவறான போதனைகள் மற்றும் செய்கைகளினாலே அவர்களையே வெட்கப்படுத்திக்கொள்கிறார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "அலைகள் நுரைகளையும் அசுத்தங்களையும் மேலே கொண்டு வருவது போல, இந்த மனிதர்கள் தங்களுடைய வெட்கத்தினாலே மற்றவர்களை அசுத்தப்படுத்துகிறார்கள்."

கருமையும் இருளும் நித்தியமாக முன்குறிக்கப்பட்டிருக்கிற வழிதவறி அலைகிற நட்சத்திரங்கள்

பிரயாணத்திற்கு நம்பமுடியாதபடி செய்கிற கணிக்கமுடியாதபடி நகருகிற சில நட்சத்திரங்களைப்போல , ஆகவே நீங்கள் இந்த ஜனங்களைப் பின்பற்றக்கூடாது.

Jude 1:14-16

யூதா அவபக்தியுள்ள ஜனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுகிறார்

இந்த ஜனங்கள்...அவர்களுடைய கிரியைகள்...அவர்களுக்கு இருக்கிற

இது அவபக்தியுள்ள ஜனங்களைக் குறிக்கிறது.

ஆதாமிலிருந்து ஏழாவது வரிசை

ஆதாமிலிருந்து ஏழாவது சந்ததி. ஆதாம் ஒரு சந்ததியாக எண்ணப்பட்டால் ஆறாவது சந்ததி என்று சில மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன.

பார், தேவன்...

"கவனி, தேவன் ", அல்லது "இதோ, தேவன் "

எல்லாக் கடினமான காரியங்கள்

"எல்லாக் கடினமான வார்த்தைகள் "

முறுமுறுக்கிறவர்கள், முறையிடுகிறவர்கள்

எப்பொழுதும் சரியான காரியத்தை செய்வதற்கு எதிராக கீழ்ப்படியாத, கரைபடிந்த இருதயமுள்ள மக்கள். முறுமுறுக்கிறவர்கள் இதை சாந்தமாக செய்கிறார்கள், முறையிடுகிறவர்கள் இதை அதிக வெளிப்படையாக செய்கிறார்கள்.

தற்பெருமையுள்ளவர்கள்

மற்றவர்கள் கேட்பதற்காகத் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்கின்ற ஜனங்கள்.

Jude 1:17-19

அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்

"அப்போஸ்தலர்கள் உங்களுக்குச் சொன்னார்கள் "

அவர்களுடைய...பின்னால்...இவர்களே அவர்கள்

யூதா பரியாசக்காரர்களைக் குறிப்பிடுகிறார்.

பிரிவினைகளை உண்டுபண்ணுகிறவர்கள்

" விசுவாசிகளுக்கிடையே பிரச்சனைகளை உண்டுபண்ணுகிற பரியாசக்காரர்கள் "

அவர்கள் சிற்றின்பப் பிரியர்கள்

"பரியாசக்காரர்கள் பாலுணர்வு பாவத்தை நாடுகிறார்கள் "

Jude 1:20-21

உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு

நீங்கள் பெலத்திலே வளர்ந்து, சரீரத்திலே பெலனடைந்து, ஆகவே தேவனுடைய அறிவில் உங்கள் மனதையும் ஆவியையும் பலப்படுத்தவும், வளர்க்கவும்

பார்ப்பது...

"ஆவலுடன் எதிர்நோக்கிப் பார்ப்பது..."

Jude 1:22-23

சந்தேகத்தில் இருக்கிற சில ஜனங்கள்

"தேவனை தேவனென்று இன்னும் விசுவாசிக்காத சில ஜனங்கள் "

அக்கினியிலிருந்து அவர்களை வெளியே இழுத்து

"அவர்கள் அக்கினிக் கடலிலே போகாமலிருப்பதற்காக"

சிலர்மேல் பயத்தோடு இரக்கம் வைத்து

" மற்றவர்களிடம் தயவாக இருங்கள் ஆனால் அவர்களைப்போல பாவங்கள் செய்ய பயந்திருங்கள் "

மாம்சத்தினால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தை வெறுப்பதால்

"அவர்களுடைய வஸ்திரத்தையும் வெறுக்க வேண்டும், ஏனென்றால் அவைகள் பாவத்தினாலே அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றன." அவர்கள் முழுமையாக பாவமுள்ளவர்களாக இருந்ததினால் அவர்களுடைய வஸ்திரங்கள்கூட அசுத்தமானவைகளாகக் கருதப்பட்டது.

Jude 1:24-25

உங்களை வழுவாதபடிக் காப்பதற்காக

ஒருவன் நடக்கும்போது கல்லினால் தடுமாறி விழுவது, ஆகவே ஒருவன் தேவனுக்கு முன்பாக பாவம் செய்வதினால் இடறுகிறான். மாற்று மொழிபெயர்ப்பு: "அவரைத் தொடர்ந்து நம்புவதற்கு உதவி செய்ய."

அவருடைய மகிமையின் பிரசன்னத்திற்கு முன்பாக உன்னை நிறுத்துவதற்கு

அவருடைய மகிமை அவருடைய மகத்துவத்தைக் காட்டும் ஒளிமிக்க வெளிச்சம். மாற்று மொழிபெயர்ப்பு: " நீங்கள் அவருடைய மகிமையை அனுபவிக்கவும் ஆராதிக்கவும் அனுமதிக்க."

மிகுந்த மகிழ்ச்சியில் மாசற்றதாக

" பாவம் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்தில்." அல்லது "நீ எந்த பாவமும் இல்லாமல் முழுவதும் சந்தோஷமாக இருப்பாய் "

நம்முடைய இரட்சகராகிய ஒரே தேவனுக்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக,

"இயேசுகிறிஸ்து செய்ததினிமித்தம் நம்மை இரட்சித்த ஒரே தேவனுக்கு."

மகிமையும், மாட்சிமையும், அதிகாரமும், வல்லமையும் இப்போதும் எப்போதும் உண்டாவதாக. ஆமென்

தேவனுக்கு எப்பொழுதும் மகிமையும், முழுமையான தலைமைத்துவமும், எல்லாக் காரியங்களின் மேலும் முழு அதிகாரமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்.