தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Luke

Luke 1

Luke 1:1-4

கணக்குகள்

"அறிக்கைகள்" அல்லது "விரிவுரைகள்" அல்லது "உண்மையான கதைகள்"

நாங்கள்

இந்தப் பகுதியில் உள்ள "நாங்கள்" என்ற வார்த்தை தியோப்பிலுவை தவிர்த்து இருக்கலாம், ஆனால் இந்த பாடப்பதிப்பு அதைப் பிரத்தியேகமாகச் சொல்லவில்லை.

ஆதியிலிருந்த சாட்சிகள்

"முதலாவது இவைகள் நடைபெற்றபோது பார்த்தார்கள்" என்று இது மொழிபெயர்க்கப்படலாம்.

வார்த்தையின் ஊழியர்களாய் ஆனார்கள்

மற்ற சாத்தியமான அர்த்தங்கள் என்னவென்றால், "தேவனுடைய செய்தியை மக்களுக்குச் சொல்லி அவரை சேவிப்பது"அல்லது "இயேசுவைக் குறித்த நல்ல செய்தியை மக்களுக்குக் கற்றுகொடுப்பது."

அவர்களைக்குறித்து எங்களிடம் சொல்லி

"எங்களிடம்" என்ற பதம் இந்தக் கூற்றில் பிரத்தியேகமானது. இது தியோப்பிலுவை சேர்க்கவில்லை.

எல்லாவற்றையும் துல்லியமாக விசாரித்து

என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளுவதில் அவர் ஜாக்கிரதையாக இருந்தார் என்று இது அர்த்தப்படுகிறது. இந்த காரியங்களைக் குறித்து தான் எழுதுவது சரிதான் என்பதை நிச்சயித்துக்கொள்ள, என்ன நடந்தது என்று பார்த்தவர்களிடம் அநேகமாக பேசியிருக்கலாம். "நடந்த எல்லாவற்றையும் ஜாக்கிரதையோடு ஆராய்ச்சி செய்தார்" என்றும் மற்றொரு மொழிபெயர்ப்பாக செய்யலாம்.

மிகவும் சிறப்பான

கனத்தையும் மரியாதையும் தியோப்பிலுவேக்கு காண்பிக்கும்படி லூக்கா இதை சொன்னார். இது மாதிரியான வாழ்த்து தியோப்பிலு ஒரு முக்கியமான அரசாங்க அலுவலர் என்று கூறுகிறது. மற்ற மொழிபெயர்ப்புகளின் வழிகள் என்னவென்றால் "மதிப்புக்குரிய" அல்லது "கனத்துக்குரிய" என்று ஆகும். சிலர் இந்த வாழ்த்தை ஆரம்பத்தில் போடப் பார்த்து , "தியோப்பிலுவேக்கு" ள்ளது "பிரியமான ... தியோப்பிலுவே" என்று சொல்லுவார்கள்.

தியோப்பிலு

இந்த பெயரின் அர்த்தம் "தேவனுடைய நண்பன்." இது இந்த மனிதனின் குணாதிசயமாகவோ அல்லது அவருடையப் பெயராகவோ இருக்கலாம். அனேக மொழிபெயர்ப்புகள் இது பெயராகவே வைத்துள்ளது.

Luke 1:5-7

யூதேயாவின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில்

"ஏரோது யூதேயாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்"

யூதேயா

"யூதேயாவின் பிரதேசம்" அல்லது "யூதேயா பகுதி" என்றும் மொழிபெயர்க்கப்படலாம். சில மொழிகள் "யூதேயாவில் வாழ்ந்த மக்களை" என்று சொல்லுவர்.

ஒரு நிச்சயமானதாக ... இருந்தது

"ஒரு பிரத்தியேகமானதாக ... இருந்தது" அல்லது "ஒன்று இருந்தது." ஒரு கதையின் முக்கியமான கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஒரு வழி இது. உங்கள் மொழி எவ்வாறு இதை செய்யும் என்று பாருங்கள்.

பிரிவுகள்

"ஆசாரியர்களின் பிரிவுகள்" அல்லது "ஆசாரியர்களின் குழு" என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.

அபியாவின்

"அபியாவிலிருந்து வந்த." இந்த ஆசாரியர்களின் குழுவில் அபியா ஒரு முதியோன். அவர்களில் அனைவரும் இஸ்ரவேலின் முதல் ஆசாரியனான ஆரோனிலிருந்து வந்தவர்கள்.

அவனுடைய மனைவி

"சகரியாவின் மனைவி" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

... குமாரத்திகளிலிருந்து வந்த

"...னுடைய சந்ததிகளின் ஒருவன்" அல்லது "ஆரோனிலிருந்து வந்தவன்." இது "சகரியாவும் அவனது மனைவி எலிசபெத் ஆகிய இருவரும் ஆரோனிலிருந்து வந்தவர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

தேவனுக்கு முன்பாக

"தேவனுடைய பார்வையில்" அல்லது "தேவனுடையக் கருத்தில்"

நடக்கிற

"கீழ்ப்படிகிற"

எல்லா கர்த்தருடையக் கட்டளைகளையும் தேவைகளையும்

இது, "தேவன் கட்டளையிட்ட மற்றும் எதிர்ப்பார்க்கிற அனைத்தும்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

ஆனால்

இந்த வேற்றுமையைக் காட்டும் வார்த்தை இங்கே தொடர்ந்து வருகிறவை எதிர்பார்த்ததின் எதிர்ப்பதமாக இருக்கிறது. மக்கள், தாங்கள் செய்தது சரி என்றால் தங்களை தேவன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள அனுமதிப்பார் என்று எதிர்பார்த்தனர். இந்த தம்பதி சரியானதை செய்திருந்தாலும், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

Luke 1:8-10

தேவனுக்கு முன்பாக

"தேவனுடைய பிரசன்னத்தில்." தெளிவுபெறுவதர்க்காக, "எருசலேமில் உள்ள ஆலயத்தில்" என்னும் மறைமுக தகவலை சேர்க்க சில மொழிபெயர்ப்பாளர்கள் விரும்பலாம்.

அவர்களது நடைமுறை

"அவர்களது பாரம்பரியம்" அல்லது "முக்கியமான முடிவுகள் எடுக்கும் அவர்களது நடைமுறை பழக்கம்"

சீட்டுப்போட்டு அவனைத் தெரிந்தெடுத்து

சீட்டு என்னவென்றால், ஒரு காரியத்தில் முடிவு எடுக்கும்படிக்கு வீசவோ அல்லது உருட்டவோ குறியீடு போடப்பட்ட ஒரு கல். தேவன் தான் விரும்பும் ஆசாரியனைத் தெரிந்தெடுக்க சீட்டுபோடுதலை தேவன் பயன்படுத்துகிறார் என்று ஆசாரியர்கள் விசுவாசித்தார்கள்.

முழு மக்கள் கூட்டத்தார்

"அனேக மக்கள்" அல்லது "அதிக மக்கள்"

வெளியே

இதை "ஆலயக் கட்டிடத்தின் வெளியே" அல்லது "ஆலயத்தின் வெளிப்புறம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 1:11-13

கர்த்தருடைய

கர்த்தரிடத்திலிருந்து" அல்லது "கர்த்தரை சேவிப்பவர்கள்" அல்லது "கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள்"

அவனுக்கு தென்பட்டு

"சடிதியில் அவனிடம் வந்து" அல்லது "சடிதியில் சகரியாவோடு இருந்து"

உங்கள் பிரார்த்தனை கேட்கப்பட்டது

"நீங்கள் கேட்டுக்கொண்டதை தேவன் கேட்டார்." பின்வருபவை மறைத்து சொல்லப்பட்டவை மற்றும் இது சேர்க்கப்படலாம்: "அதை கொடுப்பார்." சகரியா ஜெபித்த காரியத்தை தேவன் கேட்டது மட்டுமல்ல; அவர் அதை செய்து தரப்போகிறார்.

அவனுடைய பெயர் யோவான் என்று அழைக்கப்படுவான்

"அவனுக்கு யோவான் என்கிற பெயரைக் கொடுப்பார்" அல்லது "அவனுக்கு யோவான் என்று பெயரிடு"

Luke 1:14-15

சகரியாவோடு தூதன் பேசுவதைத் தொடர்ந்தான்.

அதற்கு

"ஏனென்றால்" அல்லது "இதற்கு சேர்த்தார்போல." சில மொழிபெயர்ப்புகளில் இந்த வார்த்தை இல்லாமல் இருக்கலாம்.

கர்த்தருடையப் பார்வையில் அவன் பெரியவனாயிருப்பான்

இது "கர்த்தருக்கு முக்கியமான காரியங்களை செய்வான்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

காட்டமான பானம்

"புளிப்பாக்கப்பட்ட பானங்கள்" அல்லது "போதையேற்றப்பட்ட பானங்கள்." இது மக்களை போதைப்படுத்தும் மது வகைகளைக் குறிக்கிறது.

அவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பார்

"பரிசுத்த ஆவியானவர் அவரை பெலப்படுத்துவர்." அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்துவார்." இதை, "பரிசுத்த ஆவியானவர் அவரை ஆளுகை செய்வார்" என்று மொழிபெயர்த்தீர்களானால், ஒரு தீய ஆவி ஒரு மனிதனுக்கு என்ன செய்யும் என்பது போல இதை தெரிய வைத்துவிடாதீர்கள்.

அவனுடைய தாயின் வயிற்றில் இருக்கும்போதும் கூட

"கூட" என்ற வார்த்தை இது ஒரு ஆச்சரியப்பட வைக்கும் செய்தி என்று இதைக் குறிக்கிறது. ஜனங்கள் முன்பு கூட பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளனர், ஆனால் பிறக்காத குழந்தை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதை

ஒருவரும் கேட்டதில்லை.

Luke 1:16-17

(சகரியாவோடு தூதன் பேசுவதைத் தொடர்ந்தான்.)

இஸ்ரவேலின் மகன்களில் அநேகர்

சகரியா சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது போல தோன்றினால், இந்த பதம், "இஸ்ரவேலின் சந்ததிகளில் அநேகர்" அல்லது " இஸ்ரவேலாகிய தேவனுடைய ஜனங்களில் அநேகர்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த மாற்றம் செய்யப்பட்டால், "அவர்களுடைய தேவன்" என்பதை "உங்களுடைய தேவன்' (பன்மை) என்று மாற்றியமைக்க மறந்துவிடாதீர்கள்.

அவருக்கு முன்பாக

அவன் போய் கர்த்தர் வரப்போகிறார் என்று ஜனங்களுக்கு தெரியப்படுத்துவார்.

எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும்

"எலியாவுக்கு இருந்த அதே ஆவியும் வல்லமையும்." "ஆவி" என்ற வார்த்தை தேவனுடைய ஆவியையோ அல்லது எலியாவின் மனப்பான்மை அல்லது நினைக்கும் வழியையோ இது குறிக்கிறது. "ஆவி" என்ற வார்த்தை "பேயையோ" அல்லது "தீய ஆவியையோ" குறிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தகப்பன்களுடைய இருதயம் அவர்களுடைய பிள்ளிடம் இருதயங்கள் திரும்பி

இது "தகப்பன்களை மீண்டும் பிள்ளைகள் மேல் கவனம் செலுத்தத் தூண்டுவது" அல்லது "தங்களுடையப் பிள்ளைகளிடம் உள்ள அவர்களுடைய உறவை முன் போல மாற்ற தகப்பன்களை ஏவி" என்று மொழிபெயர்க்கலாம். இது தாய்களுக்கும் பொருந்தும், ஆனால் தந்தைகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கர்த்தருக்காக ஆயத்தப்பட்டு

இது "கர்த்தருடைய செய்தியை நம்புவதற்கு ஆயத்தப்படுதல்" அல்லது "கர்த்தருக்குக் கீழ்ப்படிய ஆயத்தப்படுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.

(தூதரின் செய்தி நிறைவுபெறுகிறது)

Luke 1:18-20

இது நடக்கும் என்று நான் எப்படி அறிவேன்

இது, "நீர் சொன்னது நடக்கும் என்று எப்படி நடக்கும் என்று நான் தீர்க்கமாய் அறிந்துகொள்ளுவது?"

என்னுடைய வார்த்தைகளை நம்புங்கள்

"நான் சொன்னதை நம்புங்கள்"

நேர்த்தியான நேரத்தில்

"சரியான நேரத்தில்." இது "தீர்மானிக்கப்பட்ட நேரத்தில்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 1:21-23

இதற்கிடையில்

"மற்றும்" என்று இதை மொழிபெயர்க்கலாம் அல்லது "தூதனும் சகரியாவும் பேசிக்கொண்டிருந்தபொழுது" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆலயத்தில் ஏன் அவன் அவ்வளவு நேரம் இருந்தான் என்று ஆச்சரியப்பட்டு

இது நேர்மறை வாக்கியமாக: "அவர்கள் ஆச்சரியப்பாட்ட்டார்கள், 'ஆலயத்தில் ஏன் அவன் அதிக நேரம் இருக்கிறான்?'' என்று மொழிபெயர்க்கலாம்.

வெளியே வந்து

"ஆலயக் கட்டிடத்திலிருந்து வெளியே வந்து."

Luke 1:24-25

அவன் மனைவி

"சகரியாவின் மனைவி"

கர்ப்பமடைந்து

"கர்ப்பம் ஆகி" (UDB). ஜனங்களை சந்தேகப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு கூற்றை பயன்படுத்தவும்.

இது தான் கர்த்தர் எனக்கு செய்தார்

இந்த பதம் கர்த்தர் தான் அவளை பிரசவம் ஆகச் செய்தார் என்னும் உண்மையை குறிக்கிறது.

என்னை கவனித்து

"என்னை தயவாய்க் கருதி" அல்லது "என் மீது அனுதாபப்பட்டு" அல்லது "என் மீது தயவாய் இருந்து" என்று இந்த பதம் அர்த்தம் கொள்ளுகிறது.

Luke 1:26-29

காபிரியேல் தூதன் தேவனால் அனுப்பப்பட்டான்

இது செய்வினையில் "தேவன் காபிரியேல் தூதனைப் போகுமாறு சொன்னார்."

நிச்சயிக்கப்பட்டு

"உறுதியளித்து" அல்லது "திருமணம் செய்ய சத்தியம் பண்ணி." இது, மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்ய ஒரு ஒப்பந்தம் செய்திருந்தனர்" என்று அர்த்தப்படுகிறது.

அவளிடம் வந்து

"மரியாள் இருக்குமிடம் வந்து" அல்லது "மரியாள் இருக்குமிடம் சென்று"

வாழ்த்துக்கள்

"களிகூரு" அல்லது "சந்தோஷப்படு." இது ஒரு பொதுவான வாழ்த்து.

பாக்கியம் பெற்றவளே

இது, "மிகவும் பாக்கியம் பெற்றவளே" அல்லது "கிருபைப்பெற்றவளே" அல்லது "தயவைப் பெற்றுக்கொண்டவளே" என்று மொழிபெயர்க்கலாம்.

மிகவும் கஷ்டப்பட்டு

"பயந்து" அல்லது "குழம்பி"

இது என்ன மாதிரியான வாழ்த்துதலாய் இருக்குமோ

மரியாள் வார்த்தைகளைத் தனி தனியாகப் புரிந்துகொண்டாள், ஆனால் ஏன் தூதன் தன்னிடம் சொன்னான் என்று புரிந்துகொள்ளவில்லை.

Luke 1:30-33

தேவனிடத்தில் தயவு பெற்றான்

இது, "தேவன் தம்முடையக் கிருபையை உங்களுக்கு தர முடிவெடுத்திருக்கிறார்" அல்லது "தேவன் உங்கள் மேல் தயவாய் இருக்கிறார்" அல்லது "தேவன் தம்முடைய தயவை உங்களுக்குக் காட்டுகிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னதமானவருடையக் குமாரன் என்று அழைக்கப்பட்டு

இது, "உன்னதமானவருடையக் குமாரன் என்று அழைக்கப்படுவார்" அல்லது "அவரே உன்னத தேவனின் குமாரன் என்று மக்கள் அங்கிகரிப்பார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுத்து

இது, "தன்னுடைய மூதாதையன் தாவீது போல ராஜாவாக ஆளுகை செய்ய அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு" என்று மொழிபெயர்க்கப்படலாம். சிங்காசனம் ஆளுகை செய்ய ராஜாவின் அதிகாரத்தைக் குறிக்கிறது.

அவர் தந்தை

மூதாதையர்களைக் குறிக்க "தந்தைகள்" என்ற வார்த்தையையும் "குமாரர்கள்" என்ற வார்த்தை சந்ததிகளைக் குறிக்க வேதாகமம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறது. "அவர்" என்ற வார்த்தை மரியாளின் மகனைக் குறிக்கிறது.

Luke 1:34-35

இது எப்படி நடக்கும்

இது, "இது எப்படி சாத்தியமாகும்?" என்று மொழிபெயர்க்கலாம். எப்படி நடக்கும் என்று மரியாள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அது நடக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை.

உங்கள் மேல் வந்து

இந்த பதமும் அடுத்து வரும் பதமும் , பரிசுத்த ஆவியானவர் மரியாள் கன்னிகையாயிருந்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் கர்ப்பந்தரிக்கச் செய்வார் என்று சொல்லும் வழிகள். ஒரு சரீர உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தவும். இது ஒரு அற்புதம்.

...உடைய வல்லமை

இது, "அவருடைய வல்லமை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

உங்கள் மேல் நிழலிட்டு

"ஒரு நிழலைப் போல மூடிடுவார்" அல்லது "உன்னோடு அவர் இருப்பார்" அல்லது "இது நடைபெறச் செய்வார்" என்று மொழிபெயர்க்கப்படலாம். மீண்டும், இங்கு, உடல் சம்பந்தமான உறவு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவும்.

பரிசுத்தமானவர்

"பரிசுத்தப் பிள்ளை"அல்லது "பரிசுத்தக் குழந்தை"

அழைக்கப்படுவார்

இது, "மக்கள் அவரை அழைப்பார்கள்" அல்லது "அவர் தான் என்று மக்கள் அங்கிகரிப்பார்கள்."

Luke 1:36-38

(மரியாளோடு தூதன் பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தான்:)

உன்னுடைய உறவினர்

பிரத்தியேக உறவு என்ன என்று குறிப்பிடவேண்டுவது உங்களுக்கு அவசியமானால், அநேகமாக எலிசபெத்து மரியாளுடைய அத்தையோ அல்லது பெரிய அத்தையாகவோ இருக்கலாம்.

அவளுடைய வயோதிப நாட்களில் அவளும் கருவுற்றாள்

"அவள் வயது சென்றவளாக இருந்தாலும், ஒரு மகன் பெறக் கர்ப்பமடைந்தாள்" அல்லது "அவள் முதிர்வயதாய் இருந்தாலும், அவள் கர்ப்பம் அடைந்து ஒரு குமாரனைப் பெறுவாள்." ஆனால், மரியாளும் எலிசபெத்தும் கர்ப்பம் அடைந்த போது வயதானவர்கள் என்று புரிந்துகொள்ளத்தக்கதாக மொழிபெயர்க்க வேண்டாம்.

தேவனுக்கு ஒன்றும் முடியாததல்ல!

"தேவனுக்கு எல்லாம் செய்ய முடியும் என்பதால்" என்று இதை மொழிபெயர்க்கலாம். எலிசபெத்துக்கு தேவன் செய்தது, தேவனால் எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஒரு அத்தாட்சி ஆக இருக்கிறது. அதனால், தேவனுக்கு மரியாளையும் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரிபிக்க அவரால் முடியும் என்பதும் புரிகிறது.

நான் கர்த்தருடைய வேலைக்காரி

"நான் கர்த்தருடைய ஊழியக்காரி." அவளுடைய தாழ்மையும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதையும் குறிக்கிற பதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியக்காரியாய் இருக்கிறதைக் குறித்து அவள் பெருமைப் பாராட்டவில்லை.

இது எனக்கு நடக்கட்டும்

"இந்தக் காரியங்கள் எனக்கு நடக்கட்டும்." மரியாள் தனக்கு நடக்கும் என்று தூதன் சொன்னவைகள் நடக்கவேண்டும் என்னும் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள்.

Luke 1:39-41

இப்பொழுது

கதையின் புதியப் பகுதியை இந்த வார்த்தை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழி இதை எவ்வாறு செய்கிறது என்று பாருங்கள். சில மொழிபெயர்ப்புகள் இந்த அறிமுக வார்த்தையை உபயோகப்படுத்தாமல் இருக்கலாம்.

எழுந்திருந்து

"துவங்கி" அல்லது " ஆயத்தமாகி" என்று இதை மொழிபெயர்க்கலாம்.

மலை தேசம்

"மலைப்பகுதி" அல்லது "மலைநிலங்கள்" அல்லது "இஸ்ரவேலின் மலைப்பகுதி"

அவள் சென்ற இடம்

இதை "பின்னர் அவள் சென்றாள்" அல்லது "அவள் வந்து சேர்ந்தபொழுது, அவள் சென்றால்."

பாய்ந்து

"சடிதியாய் நகர்ந்து"

Luke 1:42-45

அவள்

இது இன்னும் தெளிவாக அல்லது இன்னும் இயற்கையாய் சொல்ல வேண்டும் என்றால், "எலிசபெத்து" என்று சொல்லலாம். ஆனால், இந்த மொழிபெயர்ப்பு, முந்தின வசனத்தை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்பதைப்பொறுத்தது.

உன்னுடையக் கர்ப்பத்தின் கனி

இதை, "உன்னுடையக் கர்ப்பத்தில் உள்ளக் குழந்தை" அல்லது "நீ சுமக்கப்போகும் குழந்தை" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

என்னுடையக் கர்த்தரின் தாய் என்னிடம் வருகிறது எப்படி?

இதை, "என்னுடையக் கர்த்தரின் தாய் என்னிடம் வந்தது எவ்வளவு நன்றாக இருக்கிறது!" என்று மொழிபெயர்க்கலாம். எலிசபெத்து தகவலைக் கேட்கவில்லை. ஆனால், அவள் கர்த்தருடையத் தாய் தன்னிடம் வந்ததைக் குறித்து அவள் சந்தோஷப்பட்டதையும் ஆச்சரியப்பட்டதையும் அவள் காண்பிக்கிறாள்.

கர்த்தருடைய தாய்

இது, "கர்த்தருடைய தாயாகிய நீங்கள்" என்று மொழிபெயர்க்கலாம், ஏனென்றால் இது மரியாளைக் குறிக்கிறது.

பாய்ந்து

"சடிதியாய் நகர்ந்து" அல்லது "ஆற்றலோடு திரும்பி"

விசுவாசிக்கிறவள் ஆசீர்வதிக்கப்பட்டவள்

இதை, "விசுவாசிக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" அல்லது "நீங்கள் விசுவாசித்ததால் நீங்கள் ஆனந்தமாயிருப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கர்த்தரிடமிரிந்து அவளுக்குப் பேசப்பட்டக் காரியங்கள்

இதை, "அவளுக்குக் கர்த்தரிடமிருந்து கொடுக்கப்பட்ட செய்திகள்" அல்லது "கர்த்தர் உனக்கு சொன்ன காரியங்கள்."

Luke 1:46-47

என்னுடைய ஆத்துமா ... என்னுடைய ஆவி

இது, "ஓ, நான் எப்படி" அல்லது "எப்படி நான்" என்று ஆழமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படலாம். கவிதையின் ஒரு வடிவத்தை, ஒரே காரியத்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் சொல்லுகிற இடத்தில், மரியாள் உபயோகிக்கிறாள். "ஆத்துமா" மற்றும் "ஆவி" இரண்டும் ஒரு மனிதனின் ஆவிக்குரியப் பகுதியைக் குறிக்கிறது. அவளுடைய ஆராதனை அவளுடைய உள்ளானப் பகுதியிலிருந்து வருகிறது என்கிறாள். முடியுமானால், இந்த இரண்டையும் இரண்டு சற்றே வித்தியாசமான வார்த்தைகளாய் அல்லது பதங்களாய், ஆனால், ஒரே அர்த்தங்களைக் கொண்டதாய் மொழிபெயர்க்கவும்.

உயர்த்தி

"மிகவும் கனப்படுத்தி" அல்லது "மிகவும் துதித்து"

அதில் களிகூர்ந்து

"அதைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டு" அல்லது "அதைக் குறித்து சந்தோஷப்பட்டு"

என்னுடைய இரட்சகராகிய தேவன்

"என்னைக் காப்பாற்றுகிற தேவன்" அல்லது "என்னைக் காப்பாற்றும் தேவன்"

Luke 1:48-49

மரியாள் தேவனைத் துதிப்பதைத் தொடர்ந்தாள்

தாழ்ந்த

"முக்கியமல்லாத" அல்லது "சாதாரண" அல்லது ஏழ்மையான." மரியாளுக்கு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்து இல்லை.

கவனம் செலுத்தி

"அதைக் குறித்து நினைத்து" அல்லது "நினைவுகூர்ந்து." இதை, "மறக்காமல்" என்று மொழிபெயர்க்கலாம். இது தேவன் நினைவுகூரும் திறமையைப் பொறுத்ததல்ல, நினைவுகூறுவதற்கு உள்ள அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.

இப்பொழுதிலிருந்து

"இப்பொழுதிலும் வருங்காலத்திலும்"

வல்லவர்

இது தேவனைக் குறிக்கிறது. இது, "தேவன், வல்லமையானவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

அவர் பெயர்

"அவர்"

Luke 1:50-51

மரியாள் தேவனைத் துதிப்பத்தைத் தொடர்ந்தாள்

மற்றும்

முந்தின வசனத்தை மொழிபெயர்த்ததை பொறுத்து சில மொழிகள் இந்த தொடர்புப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தாமலிருக்கலாம்.

அவருடையக் கிருபை ...

இது, "இதற்கு தேவக்கிருபை" அல்லது "அவர் இதற்காக தேவக்கிருபையைக் காண்பிக்கிறார்" அல்லது "அவர் இதற்காக இரக்கம் செய்து" என்று மொழிபெயர்க்கலாம்.

தலைமுறை தலைமுரையானவர்கள்

இதை, "ஒவ்வொரு தலைமுறையும்" அல்லது "எல்லா தலைமுறையின் மக்களும்" அல்லது "ஒவ்வொரு காலத்தில் இருந்த மக்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவருக்கு பயந்து

பயப்படுதலைத் தாண்டி இதற்கு ஆழமான அர்த்தங்கள் உண்டு. இது மரியாதையையும், கனத்தையும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதையும் குறிக்கும்.

அவருடைய புயத்தால்

"அவருடைய கரத்தால்."இது தேவனுடைய பலத்தைக் குறிக்கும் உருவகம் ஆகும்.

சிதறப்பட்டு

இது, "(அவர்களை) அங்கும் இங்கும் ஓடும்படி செய்து" அல்லது "துரத்தி" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 1:52-53

தேவனைத் துதிப்பதை மரியாள் தொடர்ந்தாள்

அவர் ராஜாக்களை சிங்காசனத்திலிருந்து கீழிறக்கினார்

இது, "ராஜாக்களின் அதிகாரங்களை அவர் உரிந்துபோட்டார்" அல்லது அவர் ராஜாக்கள் ஆளுவதை நிறுத்தச் செய்தார்" என்று மொழிபெயர்க்கலாம். சிங்காசனம் என்பது ஒரு ராஜா உட்காரும் இருக்கை, அது ஒரு அதிகாரத்தின் அடையாளம். ஒரு ராஜா தன்னுடைய சிங்காசனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டால், ஒரு ராஜாவாய் ராஜ்யபாரம்பண்ண அவனுக்கு இனி அதிகாரம் இல்லை என்று அர்த்தம்.

தாழ்ந்தவர்களை உயர்த்தி இருக்கிறார்

இந்த உருவகத்தில், முக்கியமல்லாதவர்கள் குறைந்த முக்கியத்துவம் உள்ளவர்களை விட பெரியவர்கள். உங்கள் மொழியில் இப்படி ஒரு உருவகம் இல்லை என்றால், இதை, "தாழ்மையானவர்களை முக்கியப்படுத்தினார்" அல்லது "மற்றவர்களால் கனப்படுத்தாதவர்களை அவர் கனப்படுத்தினார்" என்று மொழிபெயர்க்கவும்.

அனேக நல்ல பொருட்கள்

இது, "அனேக நல்ல உணவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 1:54-55

தேவனைத் துதிப்பதை மரியாள் தொடர்ந்தாள்

அவர் உதவி செய்து

"கர்த்தர் உதவி செய்தார்"

அவர் ஊழியன் இஸ்ரவேல்

"இஸ்ரவேல்" என்பது ஒரு இஸ்ரவேல் தேசத்தை, அல்லது இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது. வாசகர்கள் இஸ்ரவேல் என்னும் பெயரை உடைய ஒரு மனிதனோடு இதை ஒப்பிட்டு குழப்பம் அடைந்தால், இதை, "இஸ்ரவேல் தேசமாகிய, அவர் ஊழியன்" அல்லது "அவர் ஊழியர்கள், இஸ்ரவேல்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் உறுதியளித்தது போல

"அவர் உறுதியளித்ததால்"

அவர் சந்ததிகள்

"ஆபிரகாமின் சந்ததிகள்"

இது தான் மரியாளின் செய்தியின் முடிவு.

Luke 1:56-58

அவளுடைய வீட்டுக்குத் திரும்பினாள்

"மரியாள் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினாள்"

அவளுடைய பிள்ளையைப் பெற்றாள்

"(அவளுடையக் குழந்தையை) பிரசவித்தாள்" அல்லது அவள் குழந்தையைப் பெற்று"

அவளுடைய அண்டைவீட்டார் மற்றும் உறவினர்

"எலிசபெத்தினுடைய அண்டைவீட்டாரும் உறவினர்களும்"

Luke 1:59-61

எட்டாம் நாளில்

இது, "குழந்தைப் பிறந்து எட்டாம் நாளில்" அல்லது "குழந்தை எட்டுநாள் வயதானபோது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள்

இதை, "சகரியாவும், எலிசபெத்தின் நண்பர்களும் உறவினர்களும் அல்லது சும்மா "ஜனங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ண

இதை, "குழந்தையை விருத்தசேதனம் பண்ணும்படி" அல்லது "குழந்தையின் விருத்தசேதன விசேஷத்துக்கு" என்று மொழிபெயர்க்கலாம். ஒருவர் குழந்தையை விருத்தசேதனம் பண்ணுவார், மற்றவர்களெல்லாம் இந்தக் குடும்பத்தோடு கொண்டாடும்படி வந்திருந்தார்கள்.

அவர்கள் அவனை அழைப்பார்கள்

"அவர்கள் அவனுக்குப் பெயர்சூட்டப்போகிறார்கள்" அல்லது "அவனுக்குப் பெயரிட அவர்கள் விரும்பினார்கள்"

அவனுடைய தகப்பன் பெயரை சார்ந்து

இதை, "அவர் தகப்பன் போல" அல்லது "அவன் தகப்பன் பெயர்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த பெயரால்

எலிசபெத்து பெயர் சொன்னதாலும், அவர்கள் அவளோடு பேசிக்கொண்டிருந்ததாலும், இதை, "அந்தப் பெயரால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 1:62-63

அவர்கள் அடையாளங்களைச் செய்தனர்

"அவர்கள்" என்பது விருத்தசேதன நிகழ்ச்சிக்கு வந்தவர்களைக் குறிக்கிறது.

அவனுடைய தந்தை

"குழந்தையின் தந்தை"

அவனை என்ன பெயரால் அழைக்க அவர் விரும்பினார்

இதை, "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று சகரியா விரும்புகிறாரோ" அல்லது "தனது மகனுக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று அவன் விரும்புகிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் கேட்டான்

"சகரியா கேட்டான்." எழுத்து பலகையைக் கேட்க அவன் சைகைகளை பயன்படுத்தியிருக்கலாம்.

எழுத்துப் பலகை

இதை, "எழுத எதோ ஒன்று" என்று மொழிபெயர்க்கலாம். சில மொழிபெயர்ப்பாளர்கள், "அவர்கள் ஒன்றை அவனிடம் கொடுத்தபொழுது" என்பதை சேர்க்க விரும்பலாம்.

மிகவும் ஆச்சரியப்பட்டு

"அதிசயப்பட்டு"

Luke 1:64-66

அவன் வாய் திறக்கப்பட்டது ... அவன் நாவு விடுதலையாக்கப்பட்டது

இந்தக் கூற்றெல்லாம் அவனால் இப்பொழுது பேச முடிந்தது என்று அர்த்தம் சொல்லுகிறது.

அவர்களைச் சுற்றிலும் வாழ்ந்த அனைவருக்கும் பயம் பற்றிக்கொண்டது

இது, "சகரியாவையும் எலிசபெத்தையும் சுற்றிலும் வாழ்ந்தவர்கள் பயந்திருந்தனர்" அல்லது "தேவனைக் குறித்து அவர்களெல்லாம் அதிசயித்து இருந்தார்கள்" ஏனென்றால் தேவன் வல்லமையுள்ளவர் என்பதைப் பார்த்தார்கள். "அவர்களைச் சுற்றி வாழ்ந்தவர்கள்" என்பது அவர்களுடைய அண்டைவீட்டாரை மாத்திரம் குறிப்பிடவில்லை, ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த அனைவரையும் அது குறிக்கிறது.

நடந்த எல்லாம் பேசப்பட்டது

இது, "நடந்த எல்லாவற்றையும் குறித்து மக்கள் பேசிக்கொண்டிருந்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவைகளைக் குறித்து கேள்விப்பட்டார்கள்

"அவைகள்" என்ற வார்த்தை நடந்த சம்பவங்களைக் குறிக்கிறது.

நினைத்துக்கொண்டிருந்து

"யோசித்துக்கொண்டிருந்து"

பின்னர் சொன்னார்

இதை, "கேட்டிருந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்தக் குழந்தை என்னவாகும்?

இதை, "இந்தக் குழந்தை எவ்வளவுப் பெரிய மனிதனாய் வளருமோ?" அல்லது "இந்தக் குழந்தை எவ்வளவு பெரிய மனிதாகப்போகிறது!" இது ஆச்சரியத்தைக் காண்பிக்க பயன்படுத்தப்பட்ட பதில் எதிர்பாராத கேள்வி. அந்தக் குழந்தையைக் குறித்து கேள்விபட்டதை வைத்து அது எவ்வளவு முக்கியமானக் ஒரு மனிதனாய் வளரும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

கர்த்தருடையக் கரம் அவனோடிருந்தது

"கர்த்தருடைய வல்லமை அவனோடிருந்தது" அல்லது "கர்த்தர் அவனுக்குள் வல்லமையாய்க் கிரியை செய்கிறார்." இது உருவகத்தின் ஒரு எடுத்துக்காட்டு; "கர்த்தருடையக் கரம்" என்பது அவருடைய வல்லமையைக் குறிக்கிறது.

Luke 1:67-68

இந்த தீர்க்கதரிசனத்தைப் பேசி

இது, "தீர்க்கதரிசனம் சொல்லி, மற்றும் இதை தான் அவன் சொன்னான்" என்று மொழிபெயர்க்கலாம். நேரிடை வாக்கியங்களை இயல்பான வழிகளில் அறிமுகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

இஸ்ரவேலின் தேவன்

"இஸ்ரவேலின் மேல் ஆளுகை செய்கிறவர்' அல்லது "இஸ்ரவேல் ஆராதிக்கும் தேவன்." இங்கு இஸ்ரவேல் என்பது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. சகரியாவும் அவன் பேசிக்கொண்டிருந்த அனைவரும் இஸ்ரவேல் தேசத்துக்கு உரியவர்கள்.

எங்களிடம் வந்து

"எங்களுக்கு உதவி செய்ய வந்து" என்று இந்தக் கூற்று அர்த்தப்படுகிறது.

அவனுடைய ஜனங்கள்

"தேவனுடைய ஜனங்கள்"

Luke 1:69-71

சகரியா தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தொடர்ந்தார்

அவருடையஊழியன் தாவீது

"அவரை சேவித்த, தாவீது ராஜா"

தேவன் பேசினது போல

இதை, "இது தான் தேவன் உறுதியாய் சொன்னது" என்று மொழிபெயர்க்கலாம்.

தன்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளால் சொன்னார்

இதை, "தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம். தீர்க்கதரிசிகள்மூலம் தேவன் பேசின போது, அவர்களுடைய சொந்த சத்தத்தையே அவர்கள் உபயோகித்தனர். ஆனால் தேவன் தாம் விரும்புவதை அவர்கள் பேசும்படி செய்தார்.

நம்முடைய விரோதிகள் ... நம்மை வெறுக்கும் அனைவரும்

இந்த இரண்டு கூற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிரானவர்களைக் குறிக்கறது. இதை, "நம்மோடு யுத்தம் பண்ணுகிறவர்களும், நம்மை காயப்படுத்த விரும்புகிறவர்களும்" என்று மொழிபெயர்க்கலாம்.

கரம்

"வல்லமை" அல்லது "ஆளுகை." "கரம்" என்ற வார்த்தை தேவனுடையப் பிள்ளைகளைத் துன்புறுத்த உபயோகப்படுத்தப்படும் வல்லமையோடும் ஆளுகையோடும் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

Luke 1:72-75

சகரியா தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தொடர்ந்தார்

இரக்கம் காண்பிக்க

"இரக்கமாய் இருக்க" அல்லது "அவரது இரக்கத்துக்கு ஒத்தாற்போல நடக்க"

நினைவில்கொள்

இந்த சந்தர்ப்பத்தில், "நினைவுகொள்ளுங்கள்" என்பது மறந்துவிடாதீர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆனால், உடன்படிக்கையைக் காத்துக்கொள்ளுங்கள் அல்லது எதோ ஒன்றை நிறைவேற்றுங்கள் என்று இது அர்த்தம்கொள்ளுகிறது.

நம்முடைய விரோதிகளின் கைகளிலிருந்து

"நம்முடைய விரோதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து" அல்லது "சேதப்படுத்தப்பட்டு மற்றும் நம்முடைய எதிரிகளால் அடிமைப்படுத்தப்பட்டு." "கரம்" என்பது ஒருவன் மற்றவன் மீது வைத்துள்ள பாதிக்கும் கட்டுப்பாட்டையோ அல்லது அதிகாரத்தையோ குறிக்கிறது.

பயமில்லாமல்

இதை, "நம்முடைய எதிரிகளுக்கு பயப்படாமல்" என்று மொழிபெயர்க்கலாம்.

பரிசுத்தத்திலும் நீதியிலும்

"பரிசுத்த மற்றும் நீதியின் வழிகளில்" (UDB) அல்லது "நாம் பரிசுத்தமான மற்றும் நீதியின் வழியில் வாழும்போது" அல்லது "நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து, நீதியைச் செய்யும்போது"

அவருக்கு முன்பாக

"அவருடையப் பிரசன்னத்தில்" அல்லது "அவருடைய சித்தத்தின் படி"

நம்முடைய எல்லா நாட்களிலும்

"நம்முடைய வாழ்நாள் முழுவதும்"

Luke 1:76-77

சகரியா தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தொடர்ந்தான், ஆனால், இப்பொழுது அவர் தன்னுடைய புதிதாகப் பிறந்த குமாரனிடம் நேராகப் பேசுகிறார்.

தீர்க்கதரிசியாக அழைக்கப்படுவாய்

இதன் அர்த்தம் என்னவென்றால், அவன் உண்மையிலேயே தீர்க்கதரிசியாக இருப்பான் மற்றும் மக்கள் அவ்வாறே அவனை அறிவர். இதை தெளிவுபடுத்தும்படி, இதை, "தீர்க்கதரிசியாக இருப்பான் என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னதமானவருடைய

இதை, "உன்னதமானவரை சேவிப்பவன்" அல்லது "உன்னதமானவருக்காகப் பேசுகிறவன்." என்று மொழிபெயர்க்கலாம்.

தங்களுடையப் பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலம் அவர்கள் எவ்வாறு இரட்சிக்கப்படுவார்கள்

இதை, "அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதன் மூலம் தேவன் அவர்களை எவ்வாறு இரட்சித்துக்கொள்ளுவார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 1:78-79

(சகரியா தன்னுடைய புதிதாகப் பிறந்த மகனுக்கு தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தொடர்ந்தார்.)

அவருடைய திவ்விய இரக்கத்தினால்

இதை, "அவர் நம்மிடம் தயவோடும் இரக்கத்தோடும் இருப்பதால்."

நம்முடைய தேவனுடைய

இந்த வசனங்கள் முழுவதிலும் "நம்முடைய" மற்றும் "நமக்கு" என்ற வார்த்தைகள் யாவரையும் சேர்த்து சொல்லுகிறதை இருக்கிறதைப் பார்க்கவும்.

உதிக்கும் சூரியனைப் போல

"சூரிய உதயம் போல" அல்லது "காலை வெளுப்பைப் போல."

அவர் ...மீது பிரகாசிப்பார்

"அவர் அறிவைக் கொடுப்பார்" என்பதற்கான உருவகம் இதுவாகும். இதை, "அவர் ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுப்பார்," என்று மொழிபெயர்க்கலாம்.

இருளில் அமர்ந்திருக்கும் மக்கள்

"சத்தியத்தை அறியாத மக்கள்" என்பதைக் குறிக்கும் உருவகம் இதுவாகும்.

மரண நிழலில் இருப்பவர்கள்

"மரிக்கப்போகும் மக்கள்" அல்லது "தாங்கள் சீக்கிரம் மரித்த்விடுவோம் என்று பயப்படும் மக்கள்" என்பதாக அர்த்தப்படும் உருவகம் இதுவாகும்.

வழிநடத்தி

"போதித்து" என்பதற்கு இது உருவகமாகும்.

நம்முடைய பாதங்கள்

இது பாதத்தை மாத்திரம் அல்ல ஒரு முழு மனிதனையும் குறிக்கிறது. இதை, "நமக்கு" என்று மொழிபெயர்க்கலாம்.

சமாதானத்தின் பாதையினுள்

இந்த உருவகத்தின் அர்த்தம் என்னவென்றால், "சமாதானத்தின் வாழ்க்கைக்குள்" அல்லது "தேவனோடு சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை" ஆகும். இதை, "சமாதானத்தின் பாதையில் நடப்பது" அல்லது "தேவனோடு சமாதானத்தைக் கொண்டுவரும்படி வாழுவது." என்று மொழிபெயர்க்கலாம். "நம்முடைய பாதங்கள்" என்பதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்த்களோ அதற்கு இது ஒத்திருப்பதை தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

Luke 1:80

தொடர்ந்து வளர்ந்தார்

"வளர்ந்தார் (மற்றும் ஒரு மனிதன் ஆனார்)." அவர் வனாந்திரமான பகுதிகளில் வாழ்ந்தபோது அவர் ஒரு குழந்தையாக இல்லை என்பதை இந்த மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்தவேண்டும்.

ஆவியிலே பெலனானார் "ஆவிக்குரிய முதிர்ச்சி அடைந்தார்" அல்லது"ஒரு வலுவான நன்னடத்தையை வளர்த்துக்கொண்டார் "அல்லது" தேவனோடு உள்ள அவரது உறவில் பலமாக வளர்ந்தார் "

வரை

இது அவசியமில்லாமல் ஒரு நிறுத்தும் புள்ளியைக் குறிக்கவில்லை. யோவான் வெளிப்படையாக பிரசங்கிக்கத் துவங்கிய பின்பும் தொடர்ந்து வனாந்திரத்தில் வாழ்ந்து வந்தான். எனவே "நேரம் வரைக் கூட" என்று சொல்வது இன்னும் தெளிவாக இருக்கும்."

வெளிப்படையாக தோன்று

இது " முன்பதாக போ " அல்லது "வெளிப்படையாக பிரசங்கம் செய்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.

Luke 2

Luke 2:1-3

இப்பொழுது

மற்றொரு பாடத்தை ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார் என்பதை இந்த வார்த்தைக் காட்டுகிறது.

இது இப்படியாக நடந்தது

இந்தக் கூற்று ஒரு காரியத்தின் துவக்கம் இது தான் என்று காண்பிக்கிறது. ஒரு காரியத்தின் துவக்கத்தை காட்டும் வழி உங்கள் மொழியில் இருக்கலாம். அதை நீங்கள் பயன்படுத்தலாம். சில பதிப்புகள் இந்தக் கூற்றை சேர்க்கவில்லை.

சீசர் அகஸ்து

"அரசர் அகஸ்து" அல்லது "பேரரசர் அகஸ்து." அகஸ்து தான் ரோம சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர்.

ஒரு தீர்ப்பை அனுப்பினான்

ஒரு தீர்ப்பு என்பது ஒரு கட்டளை அல்லது ஆணை. இது "கட்டளையிடப்பட்டது" அல்லது "ஆணையிடப்பட்டது" அல்லது கட்டளைக் கொடுத்து."

குடிமதிப்பு

குடிமதிப்பு என்பது ஒரு பகுதியிலோ அல்லது முழு நாட்டிலோ உள்ள எல்லா மக்களையும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை செய்து குறிப்பு வைக்கிறது ஆகும். இது வரி வசூலிக்க உபயோகப்படுத்தப்பட்டது.

ரோம உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் குடிமதிப்பு எழுதவேண்டும்

இதை, "ரோம உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் பெயர்ப்பதிவு செய்யும்படி" அல்லது " ரோம உலகத்தில் வாழும் அனைத்து மக்களையும் எண்ணிக்கை செய்து அவர்களது பெயர்களை எழுதும்படி" என்று மொழிபெயர்க்கலாம்.

ரோம உலகம்

இதை, "ரோம அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட உலகத்தின் பகுதி" அல்லது "ரோம பேரரசரால் ஆளுகளை செய்யப்பட்ட நாடுகள்" அல்லது "ரோம சாம்ராஜ்யம்" என்று மொழிபெயர்க்கலாம்.

சிரேனியு

சிரேனியு என்பவனை சிரியா ஆளுநராக நியமித்தார்கள்..

எல்லாரும் சென்றனர்

இதை, "எல்லாரும் கிளம்பினார்கள்" அல்லது "எல்லாரும் போய்க்கொண்டிருந்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தன்னுடைய சொந்த பட்டணம்

"தன்னுடைய மூதாதையர் வாழ்ந்த பட்டணம்"

குடிமதிப்புக்காக கணக்கிடப்படும்படி

"பதிவேட்டில் தங்களுடைய பெயர் எழுதப்பட" அல்லது "அரசாங்க கணக்கில் சேர்க்கப்ப்படும்படி"

Luke 2:4-5

யூதேயாயாவிலுள்ள பெத்தலகேம் என்னும் நகரத்திற்கு பிரயாணப்பட்டார்கள்

இதை, "யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் பட்டணம் வரை போனார்கள்." நாசரேத்தை விட பெத்லகேம் (கடல் மட்டத்திலிருந்து) உயரமாய் இருந்தது.

தாவீதின் நகரம்

பெத்லகேம் ஒரு பட்டணம் என்று அழைக்கப்பட்டது அதன் அளவை வைத்து அல்ல ஆனால் அதன் முக்கியத்துவத்தை வைத்து. தாவீது ராஜா அங்கு பிறந்திருந்தார் மற்றும் மேசியா அங்கு தான் பிறப்பார் என்கிற தீர்க்கதரிசனமும் இருக்கிறது. "தாவீதின் நகரம்" என்பது "தாவீது ராஜாவின் நகரம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

பதிவு செய்துகொள்ள

இதை, "தன்னுடையப் பெயர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட" அல்லது "எண்ணிக்கையில் சேர்க்கப்பட" என்று மொழிபெயர்க்கலாம்.

மரியாளோடு

நாசரேத்திலிருந்து யோசேப்போடு மரியாள் பிராயாணம் பண்ணினாள். பெண்களும் வரி செலுத்தினார்கள் என்று சொல்லலாம். அதனால், மரியாளும் பிரயாணப்பட்டு பதிவு செய்துகொள்ளுவது தேவையாய் இருந்தது.

அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டவள்

இதை, "அவனுடைய மணவாட்டி" அல்லது "அவனுக்காக வாக்குப்பண்ணப்பட்டவள்." ஒரு நிச்சயம் பண்ணப்பட்ட இருவர் சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்; ஆனால், அவர்களுக்குள் சரீர நெருக்கம் ஏதும் இருக்காது.

Luke 2:6-7

அவர்கள் அங்கு இருக்கும்போது

"மரியாளும் யோசேப்பும் பெத்லகேமில் இருக்கும்போது"

வேலை வந்தது

"வேளையாயிற்று"

அவளுடையக் குழந்தையை பிரசவிக்க

"அவளுடைய குழந்தையைப் பெற்றெடுக்க." மக்களை சங்கடப்படுத்தாத பொதுவான வாக்கியத்தைப் பயன்படுத்துங்கள்.

அவரைத் துணிகளில் சுற்றி

இதை, "நன்றாக ஒரு விரிப்பினால் அவரைச் சுற்றி வைத்தார்கள்" அல்லது "ஒரு விரிப்பை கச்சிதமாக அவரை சுற்றினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த செயல் ஒரு புதிதாகப் பிறந்தக் குழந்தையின் மேல் காட்டப்படும் அன்பையும் கரிசனையையும் குறிக்கும் ஒரு வெளிப்பாடு.

முன்னணை

மக்கள் வைக்கோல் அல்லது மற்ற உணவை மிருகங்கள் சாப்பிடும்படி மக்கள் இடும் ஒரு வகையான பெட்டி அல்லது

. இது பொதுவாக சுத்தமாகவும் அதனுள் மிருதுவான மற்றும் காய்ந்த வைக்கோல் இருக்கும். இது குழந்தைக்கு ஒரு பஞ்சு மெத்தைப் போல இருந்திருக்கும். மிருகங்களை பாதுகாக்கவும் எளிதாக உணவு அளிக்கவும் பொதுவாக வீட்டிற்கு அருகில் வைப்பது வழக்கம். மரியாளும் யோசேப்பும் மிருகங்களுகாகப் பயன்படுத்தப்படும் அறையில் இருந்தனர்.

விருந்தினர் அறை

விருந்தினர்களுக்கும் அல்லது பிரயாணப்படுகிறவர்களுக்கும் இருக்கும் தனியான இடம்.

விருந்தாளிகள் அறையில் இடமில்லாதிருந்ததால்

"அவர்கள் தங்கும்படி விருந்தாளிகள் அறையில்இடம் இல்லாதிருந்தது." அனைவரும் குடிமதிப்பு எழுத அங்கு சென்றபடியினால் இந்த நிலைமை உண்டாயிருக்கலாம்.

அங்கு இடமில்லாததினால்

முன்னணையில் மரியாள் ஏன் தன பிள்ளையைக் கிடத்தினாள் என்பது புரியவில்லை என்றால் மறைத்து சொல்லப்பட்ட தகவலாகிய அவர்கள் மிருகங்கள் தங்கும் அறையில் தங்குவது குறித்து வெளிப்படையாகவே சொல்லலாம். வசனம் 7 இல் உள்ள தகவலின் வரிசையை மாற்றலாம். "அவர்கள் விருந்தாளிகள் அறையில் தங்கும்படி இடமில்லாதிருந்ததினால் அவர்கள் மிருகங்கள் அறையில் தங்கினார்கள். அவள் தன்னுடையக் குமாரனை பெற்று எடுத்து தன்னுடைய முதல் குழந்தையை அவள் துணிகளில் சுற்றினாள். பின்பு அவள் அவரை முன்னணியில் கிடத்தினாள்.

Luke 2:8-9

அதே பகுதியில்

"அந்தப் பகுதியில்" அல்லது "பெத்லகேம் அருகில்"

காவல் காத்துக் கொண்டிருந்தனர்

"பார்த்துக்கொண்டிருந்தனர்" அல்லது "அவைகளைப் பத்திரமாக காத்துக்கொள்ள காவல் கொண்டிருந்தனர்"

ஆட்டு மந்தைகள்

"ஆடுகளின் கூட்டம்"

இரவில்

இதை, "சூரியன் அஸ்தமனமானப் பின்பு இருளாக இருந்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவன்" அல்லது "கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதன்."

அவர்களுக்குத் தோன்றி

"அவர்களிடம் வந்து"

Luke 2:10-12

பயப்படாதிருங்கள்

"பயப்படுவதை நிறுத்துங்கள்"

ஏனென்றால் நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்லப்போகிறேன்

"ஏனென்றால் நான் உங்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்துள்ளேன்" அல்லது "நான் உங்களுக்கு சில நற்செய்திகளை சொல்லுவேன்."

எல்லா மக்களுக்கும் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் அது

இதை, "எல்லா மக்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தும்" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லா மக்களும்

சிலர் இது யூத மக்களைக் குறிக்கிறது என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் இது எல்லா மக்களையும் குறிக்கிறது என்று கருதுகிறார்கள்.

தாவீதின் நகரம்

இதை, "தாவீதின் நகரமாகிய பெத்லகேமில்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்குக் கொடுக்கப்படும் அடையாளம் இதுதான்

இதை, "தேவன் இந்த அடையாளத்தை உங்களுக்கு கொடுப்பார்" அல்லது "தேவனிடத்திலிருந்து வரும் அடையாளத்தை நீங்கள் பார்ப்பீர்கள்."

அடையாளம்

தூதன் சொன்னது உண்மை என்று நிரூபிக்க இருக்கலாம் அல்லது மேய்ப்பர்களுக்கு குழந்தையை அடையாளப்படுத்த உதவியாக இருக்கும் என்பதற்காக இருக்கலாம். இதை, "முதலாவது புரிந்துகொள்ளுதலுக்கான "நிரூபணம்" என்றோ அல்லது இரண்டாவதற்கு "வேறுபட்ட குறி" என்று மொழிபெயர்க்கலாம்.

துணிகளில் சுற்றி

இதை, "விரிப்பில் நன்றாக சுற்றி" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 2:13-14

பரம சேனையின் திரள்

"சேனை" என்கிற வார்த்தை உண்மையான சேனையையும் குறிக்கலாம், அல்லது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவையும் இது குறிக்கலாம்.

தேவனைத் துதித்து

இதை, "அவர்கள் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்."

உன்னதத்தில் தேவனுக்கு மகிமை

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "உன்னதத்தில் தேவனுக்கு மகிமையை செலுத்துங்கள்" அல்லது "தேவனுக்கு உன்னதமான மகிமையைக் கொடுங்கள்." இதை, "உன்னதத்தில் தேவனுடைய மகிமையைப் பற்றி பேசுங்கள்" அல்லது "தேவனுக்கு உன்னத துதி செலுத்துங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகட்டும்

தேவன் பிரியமாயிருக்கிற பூமியில் இருக்கும் மனிதர்கள் சமாதானம் அடையட்டும்.

Luke 2:15-16

அவர்களிடமிருந்து

"மேய்ப்பர்களிடமிருந்து"

ஒருவருக்கொருவர்

"ஒருவருக்கொருவர்"

நாம்...நமக்கு

மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்ததால், "நாங்கள்" மற்றும் நமக்கு" என்பவைகளை சேர்த்து சொல்லும் வடிவம் உள்ள மொழிகள் இங்கு அவ்வடிவங்களைப் பயன்படுத்தவேண்டும்.

Luke 2:17-20

மக்கள் அறிய வைத்தனர்

"மேய்ப்பர்கள் மக்களிடம் சொன்னார்கள்"

அவர்களுக்கு சொன்னவைகளை

இதை, "தூதர்கள் மேய்ப்பர்களுக்கு சொன்னவைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்தப் பிள்ளை

"குழந்தை"

மேய்ப்பர்களால் தங்களுக்குச் சொல்லப்பட்டவைகள்

இதை, "அவைகளை ஜாக்கிரதையாக நினைவுகூர்ந்து" அல்லது

சந்தோஷமாக நினைவு கூர்ந்து என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பொக்கிஷம் என்பது மிகவும் விலையேறப்பெற்றதும் மதிப்புள்ளதுமாகும். தன்னுடைய மகனைக் குறித்து சொல்லப்பட்டவைகள் மிகவும் விசேஷமானது என்று மரியாள் கருதினாள்.

திரும்பி

இதை, "மந்தை வயல்வெளிக்குத் திரும்பி"

தேவனை....மகிமைப்படுத்துகிற

இது, "தேவனுடைய மகத்துவத்தைக் குறித்து பேசுகிற"

Luke 2:21

அவர் நாமம் இயேசு என்று அழைக்கப்படும்

"அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்" அல்லது "அவருக்கு இயேசு என்றப் பெயரைக் கொடுத்தனர்"

தூதனால் அவர் அழைக்கப்பட்டபடி

இதை, "தூதன் அவரை அழைத்தப் பெயர்" அல்லது "தூதனால் அவர் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த பெயர் இது தான்."

Luke 2:22-24

வேண்டப்பட்ட நாட்களின் எண்ணிக்கை

இதை, "தேவனுக்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களுடைய சுத்திகரிப்புக்காக

"அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தப்படுத்தப்பட்ட" அல்லது "தேவன் அவர்களை சுத்தவான்கள் என்று மீண்டும் கருதும்படி"

கர்த்தருக்குக் அவரை ஒப்புக்கொடுக்கும்படி

"கர்த்தரிடம் அவரைக் கொண்டுவரும்படி" அல்லது "கர்த்தருடைய பிரசன்னத்தில் கொண்டுவரும்படி." ஆண்களாய் இருக்கும் முதற் பிறந்தவன் மீது தேவனுடைய உரிமையை அங்கிகரிக்கும் சடங்கு இது.

எழுதப்பட்டபடி

இது, "எழுதப்பட்டதால் இதை அவர்கள் செய்தனர்."

கருவறையை திறக்கும் ஆண்

"ஆணாகப் பிறக்கும் முதல் குழந்தையைக்" குறிக்கும் மரபுப்பெயர் இது. மக்களுடையதும் வீட்டு விலங்குகளின் முதற்பிறந்தவைகளுக்குமான நியாயப்பிரமாணம் இது, ஆனால் இதை இங்கு, "முதற்பிறந்த மகன்" என்று மொழிபெயர்க்கலாம்.

காட்டுப்புறாக்கள்

விதைகளை உண்டு மலைப் பகுதிகளில் வாழும் சாதாரணப் பறவைகள் இவைகள். இரண்டு கைகளால் பிடிக்கக்கூடிய வகையில் சிறியதாக இருக்கும் இவைகளை மக்கள் உண்பர்.

புறாக்குஞ்சுகள்

மலையில் அல்லது குன்றுகளில் வாழ்ந்து விதைகளைத் தின்னும் பறவைகள் இவைகள். இரண்டு கைகளில் பிடிக்கின்ற அளவுக்கு இவைகள் சிறியவைகள். மக்கள் இவைகளை சாப்பிடுவார்கள்.

Luke 2:25-26

தேவபக்தி

"தேவன் மேல் பக்தி உள்ள" அல்லது "தேவனுக்கு விசுவாசமாய்"

இஸ்ரவேலின் ஆறுதலானவர்

இதை, "இஸ்ரவேலுக்கு ஆறுதல் செய்கிறவர்" என்று மொழிபெயர்க்கலாம். இது "மேசியா" அல்லது "கிறிஸ்துவுக்கு" மாற்றுப் பெயர்.

பரிசுத்த ஆவியானவர் அவர் மீது இருந்தார்

"பரிசுத்த ஆவியானவர் அவரோடு இருந்தார்" தேவன் அவரோடு விசேஷமான வழியில் இருந்தார்; ஞானத்தையும் அவருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் தேவன் இருந்தார்.

பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு இது வெளிப்படுத்தப்பட்டது

இதை, "பரிசுத்த ஆவியானவர் அவருக்குக் காண்பித்தார்" அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சொல்லியிருந்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

கர்த்தராகிய கிறிஸ்துவைக் காணாமல் அவர் மரிக்கமாட்டார்

இதை, "தான் மரிக்கும் முன்பதாக அவரைப் பார்ப்பார்" அல்லது "கர்த்தரின் கிறிஸ்துவைப் பார்த்த பிறகே அவர் மரிப்பார்" என்று மொழிபெயர்க்கலாம். "கர்த்தர் என்ற வார்த்தை இங்கு தேவனைக் குறிக்கிறது.

Luke 2:27-29

வந்து

"இதை "சென்று" என்று மொழிபெயர்க்கலாம்.

பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு

இதை, "தேவனால் வழிநடத்தப்பட்டு" என்று மொழிபெயர்க்கலாம் அல்லது "பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

பெற்றோர்கள்

"இயேசுவின் பெற்றோர்கள்"

நியாயப்பிரமாணத்தின் வழக்கத்திற்கு தேவையான

"தேவனுடைய நியாயப்பிரமாணம் வேண்டுகிறது"

அவரை ஏற்றுக்கொண்டு

"அவரை எடுத்துக்கொண்டு"

இப்பொழுது உம்முடைய ஊழியன் சமாதானத்தோடு கடந்துபோகட்டும்

இதை, "நான் உம்முடைய வேலையாள். நான் சமாதானத்தோடு பிரிந்து போகட்டும்." என்று மொழிபெயர்க்கலாம். சிமியோன் தன்னைத்தான் குறிப்பிடுகிறார்.

பிரிந்து

"மரிக்க" என்பதன் தீயச்சொல்லை மறைத்து சொல்லும் வழிமுறை இதுவாகும்.

உம்முடைய வார்த்தையின்படி

இதை, "நீர் சொன்னபடி" அல்லது "நீர் சொன்னதுபோல" அல்லது "நான் செய்வேன் என்று நீர் சொன்னதினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 2:30-32

உம்முடைய இரட்சிப்பு

தேவன் மக்களைக் காப்பாற்றப் பயன்படுத்துபவராகிய இயேசுவை இது குறிக்கிறது.

ஆயத்தமாக்கப்பட்டது

"திட்டம் பண்ணப்பட்டது" அல்லது "நடக்கும்படி செய்து"

எல்லா மக்களின் பார்வையின் முன்பும்

"எல்லா மக்கள் குழுக்களும் பார்க்கும்படி"

அவர் அப்படியாக இருப்பார்

இரட்சிப்பைத் தரும் ஒருவரை இது குறிக்கிறது.

சத்தியத்தை வெளிப்படுத்த வெளிச்சம்

இதை, "வெளிச்சமானது எவ்வாறு மக்கள் சரியாகப் பார்க்க உதவுகிறதோ, அதுபோல, இந்தக் குழந்தை தேவனுடைய சத்தியத்தை சரியாக பெற்றுக்கொள்ளாத எல்லா மக்களுக்கும் உதவி செய்யும்" என்று மொழிபெயர்க்கலாம்.

இஸ்ரவேல் மக்களின் மகிமையை இருப்பார்

இதை, "இஸ்ரவேலின் மக்களுக்கு இந்த மகிமை வருவதற்கான காரணமாய் இவர் இருப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 2:33-35

இஸ்ரவேலில் அநேகர் விழவும் எழுந்திருக்கும்படிக்கும் முன்குறிக்கப்பட்ட

இதை, "தேவனிடமிருந்து இஸ்ரவேலில் அநேகரை விழத்தள்ள அல்லது தேவனோடு நெருங்கிச்சேர செய்ய முன்குறிக்கப்பட்ட" என்று மொழிபெயர்க்கலாம். இந்த உருவகத்தில், தேவனிடமிருந்து விலகுவதை அல்லது தேவனோடு நெருங்கிச் சேர்வதையும் குறிக்க "விழுதல்" அல்லது "எழும்புதல்" என்ற இரு வார்த்தைகள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. இது, "தேவன் இஸ்ரவேலில் சிலரை தம்மிடமிருந்து விலகிச்செல்லவும் சிலர் தம்மோடு நெருங்கிச் சேரவும் செய்ய இவருக்குத் திட்டம் செய்திருக்கிறார்."

உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப் போகும்

இந்த உருவகம், மரியாள் உணர்ந்த ஆழமான சோகத்தை விளக்குகிறது. இதை, "நீர் மிகவும் துக்கிப்பீர்" அல்லது "உன்னுடைய இருதயம் நொறுங்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அனேக இருதயங்களின் யோசனைகள் வெளிப்படுத்தப்படும்

இதை, "அனேக மக்களின் இருதயத்தின் யோசனைகள் வெளிப்படுத்தப்படும்" அல்லது "தேவனைக் குறித்து மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்படும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 2:36-38

அவளுடையத் திருமணத்திற்கு பிறகு

"அவள் அவனைத் திருமணம் செய்தப் பிறகு"

எண்பத்து நான்கு வயதுடைய ஒரு விதவை

சாத்தியமான அர்த்தங்கள் 1. அவள் என்பத்து நான்கு வருடங்கள் விதவையாய் இருந்திருக்கிறாள் அல்லது 2. "அவள் ஒரு விதவை; இப்பொழுது அவளுக்கு என்பத்து நான்கு வயது.

ஆலயத்தை விட்டு நீங்கிப்போனதில்லை

அவள் ஆலயத்தில் அதிக நேரம் செலவு செய்ததை சொல்லும்படி இந்த மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம். இதை, "ஆலயத்தில் எப்பொழுதும் இருந்தாள்" அல்லது "அடிக்கடி ஆலயத்தில் இருப்பாள்" என்கிற இந்த அர்த்தத்தை உயர்வு நிவிற்சி இல்லாமல் சொல்லலாம் என்று மொழிபெயர்க்கலாம்.

உபவாசங்களோடும் ஜெபங்களோடும்

"உணவு உண்பதைத் தவிர்த்து ஜெபம் பண்ணுதல்"

அவர்களிடத்தில் வந்து

"அவர்களை நாடிவந்து" அல்லது "மரியாளிடத்திற்கும் யோசேப்பினிடத்திற்கும் சென்று"

எருசலேமின் இரட்சிப்பிற்காக

இதை, "எருசலேமை இரட்சிக்கிறவர்" அல்லது "தேவனுடைய ஆசீர்வாதத்தையும் தயவையும் எருசலேமிற்கு திரும்பவும் கொண்டு வருகிறவர்" என்று மொழிபெயர்க்கலாம். இங்கு, "இரட்சிப்பு" என்ற வார்த்தை அதை செய்யும் மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Luke 2:39-40

கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் செய்யவேண்டும் என்று அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கர்த்தரின் நியாயப்பிரமாணம் அவர்கள் செய்யும்படி எதிர்பார்க்கிறது" அல்லது 2. "கர்த்தர் கட்டளையிட்ட நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் செய்ய வேண்டி இருக்கிறது."

ஞானத்தில் பெருகி

"அதிக ஞானவானாகி" அல்லது "ஞானமானத்தை கற்றுக்கொண்டு"

அவர் மேல் தேவக் கிருபை இருந்தது

இது, "தேவன் அவரை ஆசீர்வதித்தார்" அல்லது "தேவன் அவரோடு விசேஷமான வழியில் இருந்தார்"

Luke 2:41-44

அவருடையப் பெற்றோர்

"இயேசுவின் பெற்றோர்"

அவர்கள்மேலே சென்றனர்

எருசலேம் மலையில் இருந்தது, அதனால் மக்கள் அந்த இடத்திற்குப் போக மேலே செல்லவேண்டும்.

விருந்திற்காக நாட்களின் எண்ணிக்கை முழுவதும் அவர்கள் தங்கினப் பிறகு

"விருந்தின் பண்டிகையின் நாட்கள் முழுவதும் முடிந்தபிறகு" அல்லது "வேண்டிய நாட்களின் எண்ணிக்கை முழுவதும் விருந்தின் கொண்டாட்டம் முடிந்த பிறகு"

அவர்கள் யூகித்தனர்

"அவர்கள் நினைத்தனர்"

ஒரு நாள் பிரயாணம் அவர்கள் பிரயாணப்பட்டார்கள்

"அவர்கள் ஒரு நாள் பிரயாணப்பட்டார்கள்" அல்லது "மக்கள் ஒரு நாளளவும் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்றார்கள்."

Luke 2:45-47

அவரைக் காண முடியாத பொழுது

"மரியாளும் யோசேப்பும் இயேசுவைக் காணமுடியாத பொழுது"

அது நடந்தது

கதையில் ஒரு முக்கிய நிகழ்வைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுகிறது. உங்கள் மொழியில் இதைச் செய்யும் வழி இருக்குமானால், இங்கு அதைப் பயன்படுத்த கருதுங்கள்.

ஆலயத்துக்குள்

இதை, "ஆலய வெளிப்பிரகாரத்தில்" அல்லது "ஆலயத்தில்" என்று மொழிபெயர்க்கலாம்.

நடுவில்

இது சரியான மையப்பகுதியை சொல்லுகிறதில்லை. ஆனால், "அவர்கள் நடுவில்" அல்லது "ஒன்றாக அவர்களோடு" அல்லது "அவர்களின் நடுவில்" என்று மொழிபெயர்க்கலாம்.

போதகர்கள்

"மதப் போதனையாளர்கள்" அல்லது "தேவனைக் குறித்து மக்களுக்குக் கற்பிப்பவர்கள்"

அவருடைய புரிந்துகொள்ளுதலால்

இது, "அவர் எவ்வளவு தேவனைக் குறித்து புரிந்துகொண்டார் என்பதால்" அல்லது "தேவனைக் குறித்து நிறைய புரிந்திருந்ததைக் குறித்து"என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய பதில்கள்

இது, "அவர்களுக்கு எவ்வாறு நன்றாக பதிலளித்தார் என்பதில்" அல்லது "அவர்களுடையக் கேள்விகளுக்கு அவர் நன்றாக பதிலளித்தார் என்பதில்."

Luke 2:48-50

அவர்கள் அவரைப் பார்த்தபொழுது

"மரியாளும் யோசேப்பும் அவரைக் கண்டபொழுது"

ஏன் நீர் எங்களை இவ்வாறு நடத்தினீர்?

இது, "நீர் எப்படி இதை செய்யலாம்?" என்று மொழிபெயர்க்கலாம். வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர் தங்களோடு இல்லாததால் இது ஒரு மறைமுகக் கடிந்துகொள்ளுதல் என்றும் சொல்லலாம்.

நீங்கள் ஏன் என்னைத் தேடிக்கொண்டிருந்தீர்கள்?

இது, "ஏன் நீங்கள் இரண்டுபேரும் என்னை மற்ற இடங்களில் தேடினீர்கள்?"

இதோ

இந்தப் பதம் ஒரு புதிய அல்லது முக்கியமான நிகழ்வைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது செயல்பாடுகள் எங்கு துவங்குகிறது என்று காண்பிக்கவும் உதவுகிறது. உங்கள் மொழியில் இதைக் குறிக்க ஒரு பதமிருக்குமானால் இங்கு அதைப் பயன்படுத்துவது இயற்கையாக இருக்கும்.

உங்களுக்கு அது தெரியுமா...?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வியை துவங்குகிறது. அவர்களுக்கு அது தெரியுமா தெரியாதா என்று அறிய இயேசு முற்படவில்லை, ஆனால், அவர் அவர்களிடம் எதையோ சொல்லுகிறார். இதை, "நீங்கள் அறிந்திருக்கவேண்டும்."

என்னுடைய தந்தையின் வீட்டில்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "என்னுடைய தந்தையின் வீட்டில்" அல்லது 2. "என்னுடைய தந்தையின் வேலையாக." இரண்டு காரியத்திலும், "என்னுடைய தந்தை" என்று இயேசு சொன்னபொழுது, அவர் தகப்பனைக் குறிக்கிறார். அவர் "வீடு" என்று அரத்தப்ப்படும்படி சொல்லியிருந்தால், அவர் ஆலயத்தைக் குறிப்பிடுகிறார். "வேலை" என்று அவர் சொல்லியிருந்தால், அவர் தேவன் தனக்கு செய்யும்படி கொடுக்கப்பட்ட வேலையைக் குறிப்பிடுகிறார். ஆனால், அடுத்த வசனம், அவருடையப் பெற்றோர்கள் அவர் சொல்வதைப் புரிந்துகொள்ளாததினால் அதை இன்னும் அதிகமாக விளக்காமல் இருப்பது நல்லது.

Luke 2:51-52

அவர் அவர்களோடு வீட்டுக்குத் திரும்பினார்

"இயேசு மரியாளோடும் யோசேப்போடும் வீட்டுக்குப் போனார்."

அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இருந்தார்

"அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார்" அல்லது " அவர்களுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிந்திருந்தார்."

பத்திரப்படுத்தி

"ஜாக்கிரதையாக நினைவுகூர்ந்து" அல்லது "சந்தோஷமாக ...குறித்து நினைவு கூர்ந்து." பொக்கிஷம் என்பது விலையேறப்பெற்ற அல்லது, மதிப்புமிக்க ஒன்று. தன்னுடையக் குமாரன் செய்ததும் சொன்னதுமானக் காரியங்கள் மிகவும் விசேஷமானது என்று கருதினாள்.

ஞானத்திலும் சரீர வளர்ச்சியிலும் வளர்ந்து

"மிகவும் ஞானவானாகி பெலப்பட்டார்"

தேவனுடைய தயவிலும் மக்களுடைய தயவிலும் வளர்ந்தார்

இதை, "மக்கள் அவர் மேல் அதிகமதிகமாய் பிரியம் வைத்தார்கள், தேவன் அவரை அதிகமதிகமாய் ஆசீர்வதித்தார்."

Luke 3

Luke 3:1-2

அனனியா காய்பாவின் ஆசாரியத்துவத்தின் நேரம்

அவர்கள் ஒன்றாக ஆசாரியர்களாக ஊழியம் செய்தனர்.

Luke 3:3

அவன் பிரயாணப்பட்டான்

"யோவான் பிரயாணப்பட்டான்"

மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்து

இதை, "மக்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பினார்கள் என்பதைக் காண்பிக்க

அவர்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதைப் பிரசங்கித்து" என்று மொழிபெயர்க்கலாம்.

பாவங்களின் மன்னிப்பிற்காக

"பாவங்களின் மன்னிப்பிற்காக தான் மனந்திரும்புதல்."

Luke 3:4

எழுதப்பட்டது போல ... தீர்க்கதரிசி

இதை, தீர்க்கதரிசியாகிய ஏசாயா தன்னுடைய புஸ்தகத்தில் எழுதினதுபோல" அல்லது "தீர்க்கதரிசி தன்னுடைய புஸ்தகத்தில் எழுதின வார்த்தைகளை யோவான் நிறைவேற்றினான்." வசனங்கள் 4

6 தான் ஏசாயா 40:3

5 இல் சொல்லப்பட்டது.

வழி

"பாதை" அல்லது "சாலை"

ஆயத்தம் செய்து...அவருடைய பாதைகளை செவ்வையாக்கி

இந்தப் பகுதி எபிரேய கவிதை நடையில் உள்ளது. எபிரேய கவிதை நடை முக்கியமான கூற்றை திரும்பத் திரும்ப சொல்லியிருக்கும். "கர்த்தரின் பாதையை ஆயத்தம் செய்" என்பது "அவருடையப் பாதைகளை நேராக்கு" என்பதை சொல்ல மற்றொரு வழி. முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், முதலாவது இருப்பது, அது ஒரு முறை தான் நிகழ்கிறது என்பதைக் குறிக்கிறது; ஆனால், இரண்டாவதாக இருப்பது அதைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதை சொல்லுகிறது.

கர்த்தரின் பாதையை ஆயத்தப்படுத்து

இந்த சாலை உருவகம் "மனந்திரும்பி கர்த்தர் வரும்போது ஆயத்தமாய் இரு" என்பதன் அர்த்தமாகும்.

அவருடையப் பாதைகளை நேராக்கு

இந்த பாதையின் உருவகம் "கர்த்தர் வரும்படி தொடர்ந்து ஆயத்தப்படுங்கள்" என்று அர்த்தப்படுகிறது.

Luke 3:5-6

(ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து நேரிடைக்கூற்று தொடர்கிறது.)

எல்லாப் பள்ளங்களும் நிரப்பப்படும்

இதை, "சாலையில் இருக்கும் ஒவ்வொரு தாழ்வானப் பகுதிகளையும் அவர்கள் நிரப்புவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். முக்கியமான மனிதர் வருவதற்காக மக்கள் சாலைகளை பழுது பார்க்கும்போது பள்ளமான இடங்களை மண்ணிட்டு நிரப்பி சமம் செய்வார்கள். இது முந்தின வசனத்தில் துவங்கின உருவகம் ஆகும்.

ஒவ்வொரு மலையும் குன்றும் சமமாக்கப்படும்

இதை, "அவர்கள் ஒவ்வொரு மலையையும் குன்றையும் சமமாக்குவார்கள்" அல்லது "சாலையில் உள்ள ஒவ்வொரு மேடான பகுதியையும் அவர்கள் அகற்றுவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய இரட்சிப்பைப் பாருங்கள்

இதை, "தேவன் எவ்வாறு மக்களைப் பாவங்களிலிருந்து ரட்சிக்கிறார் என்று கற்றுக்கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 3:7

அவரால் ஞானஸ்நானம் பெறுங்கள்

"யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக்கு"

விரியன் பாம்புகளின் குட்டிகளே

இது ஒரு உருவகம் ஆகும். விரியன் பாம்புகள் ஆபத்தானவைகளும், தீமையைக் குறிப்பதாகவும் இருக்கிறது. இதை, "தீய விரியன் பாம்புகளே!" அல்லது "விரியன் பாம்புகளைப்போல தீயவர்களே!" என்று மொழிபெயர்க்கலாம்.

யார் உங்களை எச்சரித்தது

இந்த பதில் எதிர்பாராத கேள்வியைத் துவக்குகிறது. தேவன் அவர்களை தண்டியாதபடிக்கு தங்களை ஞானஸ்நானம் பண்ணுவிக்கும்படி யோவானிடம் மக்கள் கேட்பதால் யோவான் அவர்களைக் கடிந்துகொண்டார். ஆனால் அவர்கள் பாவம் செய்வதை நிறுத்த விரும்பவில்லை. இந்த முழு பதில் எதிர்பாராத கேள்வியையும், "இந்தமுறையில் தேவனுடையக் கோபத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது" அல்லது "வெறுமனே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தேவனுடையக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?" என்று மொழிபெயர்க்கலாம்.

வரப்போகிற கோபாக்கினையிலிருந்து

இதை, "வரப்போகும் தண்டனையிலிருந்து" அல்லது "தேவன் கிரியை செய்யப்போகும் தன்னுடைய கோபாக்கினையிலிருந்து" அல்லது "தேவன் உங்களை தண்டிக்க இருக்கிறதினால்" என்று மொழிபெயர்க்கலாம். "கோபாக்கினை" என்கிற வார்த்தை தேவனுடைய தண்டனையைக் குறிக்கப் பயன்படுகிறது. ஏனென்றால் அவருடையக் கோபம் தண்டனைக்கு முந்தி இருக்கிறது.

Luke 3:8

(யோவான் கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

மனந்திரும்புதலினால் வரும் கனிகளை கொடுங்கள்

இதை, "நீங்கள் மனந்திரும்பிவிட்டீர்கள்என்பதைக் குறிக்கும் வகையில் நீங்கள் கனிகளைக் கொடுங்கள்" அல்லது "உங்களுடையப் பாவத்திலிருந்து திரும்பிவிட்டீர்கள் என்று காண்பிக்க நற்கிரியைகளை செய்யுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த உருவகத்தில், ஒரு மனிதனின் நடக்கை ஒரு கனிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு செடியானது தனக்கு சரியான தகுந்த கனிகொடுக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறது போல மனந்திரும்பிவிட்டேன் என்று சொல்லும் ஒரு மனிதன் அதற்கு தகுந்த நீதியின் வாழ்க்கை வாழ எதிர்பார்க்கப்படுகிறான்.

உங்களுக்கு உள்ளாகவே சொல்லிக்கொள்வது

"உங்களுக்கு உள்ளாக சொல்லிக்கொள்வது" அல்லது "உங்கள் இருதயங்களில் சொல்லிகொல்லுவது" அல்லது "நினைக்கிறது"

எங்களுடையத் தகப்பனாக ஆபிரகாம் எங்களுக்குண்டு

"ஆபிரகாம் எங்களுடைய மூதாதையன்" அல்லது "நாங்கள் ஆபிரகாமுடைய சந்ததி." ஏன் இதை அவர்கள் சொல்லவேண்டும் என்பது தெளிவாக இல்லை என்றால், நீங்கள் மறைத்து சொல்லப்பட்ட தகவலையும் சேர்த்துக்கொள்ளலாம்: "தேவன் அவர்களைத் தண்டிக்கமாட்டார் என்பதால்."

Luke 3:9

(யோவான் கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

மரங்களின் வேரருகே கோடரியானது வைக்கப்பட்டிருக்கிறது

இந்த உருவகம், தண்டனை ஆரம்பமாகப்போகிறது என்பதைக் காட்டுகிறது. இதை, "மரங்களின் வேரருகே கோடரியானது வைக்கப்பட்டது போல இருக்கிறது" அல்லது "மரங்களின் வேரருகே கோடாரியை வைத்த மனிதனைப் போல தேவன் இருக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.

நல்லக் கனி கொடாத மரமெல்லாம் வெட்டப்படுகிறது

இது ஒரு செய்யப்பாட்டு வினைக் கூற்று. இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "நல்லக் கனிகொடாத எல்லா மரத்தையும் அவர் வெட்டிப்போடுகிறார்."

அக்கினியில் எறியப்படுகிறது

இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "அதை அவர் அக்கினியில் போடுகிறார்."

Luke 3:10-11

அவரிடம் கேட்டு, சொல்லுகிறது

அவரிடம் கேட்டு சொன்னது" அல்லது "யோவானைக் கேட்டு"

பதிலளித்து அவர்களிடம் சொன்னது

"அவர்களுக்கு பதிலளித்து, சொல்லுகிறது" அல்லது "அவர்களுக்கு பதிலளித்து" அல்லது "சொன்னது"

அதுபோல செய்யுங்கள்

"அதே காரியத்தைச் செய்யுங்கள்." இதை, "உணவு ஒன்றும் இல்லாதவனுக்கு கொஞ்சம் உணவு கொடுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 3:12-13

ஞானஸ்நானம் பெறும்படிக்கு

"யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் பண்ணுவிக்கும்படி"

அதிகப் பணம் வாங்கி சேர்க்காதீர்கள்

"அதிகப் பணம் கேட்காதீர்கள்" அல்லது "அதிகப் பணம் வாங்கி சேர்ப்பதை நிறுத்துங்கள்." வரி வசூலிப்பவர்கள் அவர்கள் வாங்குவதற்கு மேலாக வாங்குகிறார்கள். அவர்களுடைய மனந்திரும்புதலுக்கு சாட்சியாக அவர்கள் அதை நிறுத்த வேண்டும்.

நீங்கள் வாங்கவேண்டியதற்கு அதிகமாக

"வாங்கிக்கொள்ள நீங்கள் அதிகாரம் பெற்றதற்கு அதிகமாக"

Luke 3:14

சேவகர்கள்

"படையில் வேலை செய்யும் மனிதர்கள்"

எங்களைக் குறித்து என்ன? நாங்கள் என்ன செய்யவேண்டும்?

இதை, "நீர், கூட்டத்தாரும், வரி வசூலிப்பவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை சொன்னீர். சேவகர்களாகிய எங்களைக் குறித்து என்ன, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று மொழிபெயர்க்கலாம். "நாங்கள்" மற்றும் "நாம்" என்கிற வார்த்தைகளில் யோவான் சேர்த்து சொல்லப்படவில்லை.

பொய்யாய் குற்றம் சாட்டாதிருங்கள்

இதை, "அதே போல, அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக ஒருவனையும் பொய்யாக குற்றம் சாட்டாதிருங்கள்" அல்லது "குற்றமரியாத ஒருவன் சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்தான் என்று சொல்லாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். சேவகர்கள் பணம் பெறுவதற்காக பொய்யான குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர்.

உங்கள் கூலியில் திருப்தியாயிருங்கள்

"உங்கள் சம்பளத்தில் திருப்திப்படுங்கள்" அல்லது "உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் திருப்திப்படுங்கள்"

Luke 3:15-16

மக்களைப் போல

இது யோவானிடம் வந்த மக்களையேக் குறிக்கிறது. இதை, "ஏனென்றால் மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களுக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்

"நான் தண்ணீர் பயன்படுத்தி ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" அல்லது "நான் தண்ணீரைக் கொண்டு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்"

அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்பதற்குக் கூட நான் தகுதியில்லை

இதை, "அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கக் கூட முக்கியமற்றவன்" என்று மொழிபெயர்க்கலாம். பாதரட்சையின் வாரை அவிழ்ப்பது என்பது ஒரு அடிமையின் வேலையாய் இருக்கிறது. அவருடைய அடிமையாய் இருக்கக்கூடத் தகுதியில்லை. ஏனென்றால் வரப்போகிறவர் மிகவும் பெரியவர் என்று யோவான் சொல்லுகிறார்.

பாதரட்சைகள்

பாதரட்சைகள் என்பது காலணியின் கீழ்பாகத்தைக் காலோடு சேர்த்து பிடிக்க வார்களைக் கொண்டிருக்கும் காலணிகளாகும். இதை, "காலணிகள்" அல்லது "செருப்புகள்" அல்லது "தோற்செருப்பு" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்

இந்த உருவகம் ஒரு மனிதனை தண்ணீரோடு தொடர்புபடுத்தும் எழுத்தின்பிரகாரமான ஞானஸ்நானத்தை பரிசுத்த ஆவியானவருக்கும் அக்கினிக்கும் தொடர்புபடுத்தும் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தை ஒப்பிடுகிறது.

Luke 3:17

(யோவான் கிறிஸ்துவைக் குறித்து போதிப்பதைத் தொடர்ந்தார்)

அவருடைய தூற்றுக்கூடை...

இந்த உருவகம், கிறிஸ்து அநீதிக்காரரிடமிருந்து நீதிமான்களைப் பிரித்தெடுக்கிறதை ஒரு மனிதன் கோதுமையிலிருந்து பதரை பிரிப்பதற்கு ஒப்பிடுகிறது. இதை, தொடர்பை இன்னும் தெளிவுப்படுத்த வேண்டி ஒரு உருவகமாகவே மொழிபெயர்க்கலாம்: "கிறிஸ்து தன்னுடைய கைகளில் தூற்றுக்கூடை உள்ளவனைப் போல இருக்கிறார்."

அவருடைய தூற்றுக்கூடை அவருடையக் கையில் இருக்கிறது

இதை, "அவர் ஆயத்தமாய் இருப்பதால் அவர் தூற்றுக்கூடையைப் பிடித்திருக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.

தூற்றுக்கூடை

இது கோதுமையை மேலே வீசிப் பிடித்து பதரை அகற்றப் பயன்படும் ஒரு உபகரணம். கனமுள்ள தானியம் கீழே விழும் தேவையில்லாத பதர் காற்றினால் அடித்துச் செல்லப்படும். இது கவர்கோலுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவருடைய அடிக்களம்

இது தான் மக்கள் பதரை தானியத்திலிருந்து பிரிக்கும் இடம் ஆகும். இதை, "அவருடைய நிலம்" அல்லது "தானியத்திலிருந்து பதரை அவர் பிரிக்கும் நிலம்" என்று மொழிபெயர்க்கலாம்.

கோதுமையை சேர்க்கும்படி

இதை, "பின்பு அவர் கோதுமையை சேகரிப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

களஞ்சியம்

"சேமிப்புக்கிடங்கு" அல்லது "தானியக்கிடங்கு" என்று மொழிபெயர்க்கலாம். இங்கு தான் தானியம் பின்னர் பயன்படுத்தும்படி பாதுகாப்பாக வைக்கப்படும்.

பதரை அக்கினியில் எரித்து

பதர் ஒன்றுக்கும் உதவாது, அதனால் மக்கள் அதை எரித்துவிடுவார்கள்.

Luke 3:18-20

இன்னும் அனேக புத்திமதிகளோடு

இதை, "இன்னும் அனேக உந்துதலோடு" அல்லது "யோவான் மக்கள் மனந்திரும்பும்படி அனேக முறை உற்சாகப்படுத்தினார்..." என்று மொழிபெயர்க்கலாம்.

காற்பங்கு தேசாதிபதி ஏரோதை கடிந்துகொண்டார்

"காற்பங்கு தேசாதிபதி ஏரோது பாவம் செய்தான் என்று சொன்னார்." ஏரோது காற்பங்கு தேசாதிபதியாக இருந்தான், அரசன் அல்ல. கலிலேயாவை மட்டும் ஆளுகை செய்யதுகொண்டிருந்தான்.

தன்னுடைய தம்பியின் மனைவியை திருமணம் செய்துகொண்டதால்

"தன்னுடைய சொந்த சகோதரனுடைய மனைவியை ஏரோது திருமணம் செய்துகொண்டதால்"

யோவானைச் சிறையில் அடைத்து வைத்தான்

"அவன் தன்னுடைய சேவகரை நோக்கி யோவானைச் சிறையில் அடைக்கும்படி சொன்னான்."

Luke 3:21-22

இப்பொழுது அது நடந்தது

கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தை குறிக்கும்படி இந்தக் கூற்று இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதைச் செய்ய ஒரு வழி இருக்குமானால், இங்கு அதை செய்ய பாருங்கள்.

எல்லா மக்களும் யோவானால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருந்த பொழுது

இந்தக் கூற்று "எல்லா மக்களும்" என்பது யோவானோடு இருந்த மக்களைக் குறிக்கிறது. இதை, "யோவான் எல்லா மக்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது."

இயேசுவும் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்

இதை, "யோவான் இயேசுவுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்."

பரலோகம் திறந்தது

"ஆகாயம் திறந்தது" அல்லது "ஆகாயம் திறக்கப்பட்டது." இது மேகங்கள் கலைந்து செல்லும் அந்த சாதாரண நிகழ்வைப் போலல்ல. ஆனால் அது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆகாயத்தில் ஒரு துவாரம் உண்டாயிருக்கலாம்.

பரிசுத்த ஆவியானவர் அவர் மீது இறங்கினார்

"பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மீது வந்திறங்கினார்"

புறா

புறா என்பது ஆலயப் பலிகளிலும் உணவுகளிலும் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சாதுவான பறவை. அது

ஒத்திருக்கும்.

புறாவுக்கு ஒத்த சரீர அமைப்பில்

"புறாவைப் போல சரீர அமைப்பில் காணப்பட்டது"

Luke 3:23-24

இப்பொழுது

இந்த வார்த்தையானது (சொல்லப்பட்டுவந்த) கதையிலிருந்து இயேசுவின் வயதிற்கும், அவருடைய மூதாதையர்களைப் பற்றின தகவலுக்கும் மாறுகிறதைக் குறிக்கிறது. அது லூக்கா 3:37 வசனத்தோடு முடிகிறது. பின்வருபவை தகவல்கள் என்று சொல்ல உங்கள் மொழியில் ஏதேனும் வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தவும்.

இயேசு தாமே

"இந்த இயேசு" அல்லது "இந்த மனிதன் இயேசு"

இவர் யோசேப்பின் மகன் (மகனாக இருக்க வேண்டியவர்)

"அவர் யோசேப்பின் மகன் என்று அறியப்பட்டவர்" அல்லது "அவர் யோசேப்பின் மகன் என்று எண்ணப்பட்டார்" அல்லது "மக்கள் இவர் யோசேப்பின் மகன் என்று நினைத்துக்கொண்டனர்"

ஏலியின் மகன்

சில மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு புதிய வாக்கியத்தை துவங்க விரும்பினர்: "ஏலியின் மகனாகிய யோசேப்பு" அல்லது "யோசேப்பின் தந்தை ஏலி."

ஏலியின் மகன், மாத்தாத்தின் மகன், லேவியின் மகன்...

"மகன்" என்கிற வார்த்தை மறைத்து சொல்லப்பட்டத் தகவல். இந்த அட்டவணை, "ஏலியின் மகனாக இருந்தவர்" மாத்தாத்தின் மகனாக இருந்தவர்" லேவியின் மகனாக இருந்தவர்..." அல்லது "யோசேப்பு ஏலியின் மகன், ஏலி மாத்தாத்தின் மகன், மாத்தாத்து லேவியின் மகன்" அல்லது "மாத்தாத் ஏலியின் தகப்பன், மாத்தாத்து லேவியின் மகன்..." என்று மொழிபெயர்க்கப்படலாம். உங்கள் மொழியில் மூதாதையர்களை எவ்வாறு மக்கள் அட்டவணை இடுவார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அதே முறையை இந்த முழு அட்டவணைக்கும் பயன்படுத்தலாம்.

Luke 3:25-26

(இது இயேசுவின் மூதாதையர்களின் அட்டவணையின் தொடர்ச்சி)

மத்தத்தியாவின் மகன், ஆமோசின் மகன்..."

இதை, "மத்தத்தியாவின் மகனானவன், ஆமோசின் மாகனானவன்..." அல்லது "யோசேப்பு மத்தத்தியாவின் மகன், ,மத்தத்தியா ஆமோசின் மகன்..." அல்லது "யோசேப்பின் தந்தை மத்தத்தியா" அல்லது "அமோஸ் மத்தத்தியாவின் தந்தை..." என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வசனத்தில் உபயோகப்படுத்தின அதே வார்த்தை முறையை இங்கும் பயன்படுத்தவும்.

Luke 3:27-29

(இது இயேசுவின் மூதாதையர்களின் அட்டவணையின் தொடர்ச்சி)

யோவன்னாவின் மகன், ரேசாவின் மகன்...

இதை, "யோவன்னாவின் மகனாகிய, ரேசாவின் மகனாகிய..." அல்லது யோதா யோவன்னாவின் மகன், யோவன்னா ரேசாவின் மகன்..." அல்லது "யோதாவின் தந்தை யோவன்னா, ரேசா யோவன்னாவின் தந்தை..." என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வசனத்தில் உபயோகப்படுத்தின அதே வார்த்தை முறையை இங்கும் பயன்படுத்தவும்.

Luke 3:30-32

(இது இயேசுவின் மூதாதையர்களின் அட்டவணையின் தொடர்ச்சி)

சிமியோனின் மகன், யூதாவின் மகன்...

இதை, "சிமியோனின் மகனாகிய, ரேசாவின் மகனாகிய..." அல்லது லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன்..." அல்லது "சிமியோனின் தந்தை லேவி, சிமியோன் யூதாவின் தந்தை..." என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வசனத்தில் உபயோகப்படுத்தின அதே வார்த்தை முறையை இங்கும் பயன்படுத்தவும்.

Luke 3:33-35

(இது இயேசுவின் மூதாதையர்களின் அட்டவணையின் தொடர்ச்சி)

அம்மினதாபின் மகன், அதுமினின் மகன்...

இதை, "அம்மினதாபின் மகனாகிய, அதுமினின் மகனாகிய..." அல்லது "லேவி அம்மினதாபின் மகன், சிமியோன் அதுமினின் மகன்..." அல்லது " நாகஷோனின் தந்தை அம்மினதாப், அதுமின் அம்மினதாபின் தந்தை..." என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வசனத்தில் உபயோகப்படுத்தின அதே வார்த்தை முறையை இங்கும் பயன்படுத்தவும்.

Luke 3:36-38

(இது இயேசுவின் மூதாதையர்களின் அட்டவணையின் தொடர்ச்சி)

காயினானின் மகன், அர்ப்பக்சாத்தின் மகன்...

இதை, "காயினானின் மகனாகிய, அர்ப்பகசாத்தின் மகனாகிய..." அல்லது "லேவி காயினானின் மகன், காயினான் அர்ப்பகசாத்தின் மகன்..." அல்லது "சேலாவின் தந்தை காயினான், அர்ப்பகசாத்து காயினானின் தந்தை..." என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வசனத்தில் உபயோகப்படுத்தின அதே வார்த்தை முறையை இங்கும் பயன்படுத்தவும்.

தேவனுடையக் குமாரன் ஆதாம்

இதை, "தேவனால் படைக்கப்பட்ட ஆதாம்" அல்லது "தேவனிடத்திலிருந்து வந்த ஆதாம்" அல்லது "ஆதாம் என்னும் மகன் தேவனிடத்திலிருந்து வந்தவன் என்று நாம் சொல்லலாம்.

Luke 4

Luke 4:1-2

பின்பு இது யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தப் பிறகு என்பதைக் குறிக்கிறது. இதை, "இயேசு ஞானஸ்நானம் பண்ணுவிக்கப்பட்ட பிறகு" என்று மொழிபெயர்க்கலாம்.

பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு

இதை செய்வினைக் கூற்றாக, "ஆவியானவர் அவரை நடத்தினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

அங்கு பிசாசினால் சோதிக்கப்பட்டார்

இதை, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போகும்படி சாத்தானால் சோதிக்கப்பட்டார்" என்று மொழிபெயர்க்கலாம். அவர் அந்த நேரம் முழுவதும் சோதிக்கப்பட்டாரா அல்லது அந்த நேரம் முடிவிலா என்பது தெளிவில்லை. இதை செய்வினை கூற்றாக, "பிசாசு அவரை அங்கு சோதித்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் உண்ணவில்லை

"அவர்" என்பது இயேசுவைக் குறிக்கிறது.

Luke 4:3-4

நீர் தேவனுடைய மகனானால்

பிசாசானவன் அவரை தான் தேவனுடைய மகன் என்று நிரூபிக்கும்படி சவால் விடுவது போல இருக்கிறது.

இந்தக் கல்

பிசாசு கல்லைப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அல்லது அருகில் இருக்கும் கல்லைக் காண்பிக்கிறான்.

அது எழுதப்பட்டுள்ளது

"வேதத்தில் எழுதப்பட்டுள்ளது" அல்லது "வேதம் சொல்லுகிறது" அல்லது "வேதத்தில் தேவன் சொல்லியிருக்கிறார்." இந்தக் நேரிடைக்கூற்று உபாகமம் 8:3 இல் இருந்து எடுக்கப்பட்டது.

மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை

இதை, "மக்கள் அப்பத்தினால் மாத்திரம் பிழைக்க முடியாது" அல்லது "ஒரு மனிதனை வாழவைப்பது உணவு மாத்திரம் அல்ல" என்று மொழிபெயர்க்கலாம். "அப்பம்" என்கிற வார்த்தை பொதுவான உணவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதன் உயிர் வாழ உணவு மட்டும் போதாது என்பது தான் காரியம். இயேசு வேதத்தைக் குறிப்பிடுகிறார் ஏனென்றால் அவர் அந்தக் கல்லை அப்பமாக மாற்றப்போவதில்லை என்பதால்.

Luke 4:5-7

உயர்ந்த இடம்

"உயர்ந்த மலை"

ஒரு மணித்துளியில்

"ஒரு பொழுதில்" அல்லது "சடிதியில்"

அதனால்

"அதனால்"

எனக்கு முன்பாகக் கீழே குனிந்து வணங்கி என்னை ஆராதித்தால்

இதை, "எனக்கு முன்பாக நீர் முழங்கால்படியிட்டால்" அல்லது "என்னை வணங்கி என்னை ஆராதித்தால்" அல்லது "எனக்கு முன்பாக குனிந்து வணங்கினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

இவை எல்லாம் உம்முடையதாகும்

இதை, "இந்த எல்லா ராஜ்யங்களையும் உமக்குத் தருவேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 4:8

அவனுக்கு பதிலளித்து சொன்னது

"அவனுக்கு பதில்கொடுத்தார்" அல்லது "அவனுக்கு மறு உத்தரவு கொடுத்து"

அது எழுதப்பட்டிருக்கிறது

இது, "வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது" அல்லது "வேதம் சொல்லுகிறது" அல்லது "வேத்தத்தில் தின் சொல்லுகிறார் என்று மொழிபெயர்க்கலாம். இயேசு உபாகமம் 6:13 ஐ சொல்லுகிறார்.

உங்களுடைய கர்த்தராகிய தேவனை ஆராதிக்கவேண்டும்

தான் பிசாசை வணங்க முடியாது என்று ஏன் சொல்லுகிறார் என்பதற்காக இயேசு வேதத்தில் இருந்து நியாயப்பிரமாணத்தை குறித்து சொல்லுகிறார்.

உன்

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை பெற்றுக்கொண்ட பழைய ஏற்பாட்டின் மக்களைக் குறிக்கிறது. நீங்கள் "உன்" என்கிற வார்த்தையை ஒருமையிலேயே வைக்கலாம். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் அதற்குக் கீழ்ப்படியவேண்டுமே; அல்லது "உங்கள்" என்று பன்மையிலேயே இருக்கட்டும் ஏனென்றால் எல்லா மக்களும் அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டுமே.

அவர்

இது கர்த்தராகிய தேவனைக் குறிக்கிறது.

Luke 4:9-11

மிகவும் உயர்த்த இடம்

இது ஆலயத்தின் கூரையின் ஒரு மூலை. யாராவது தவறியோ அல்லது அங்கிருந்து கீழே விழுந்தாலோ அவர்கள் கண்டிப்பாக படுகாயமோ அல்லது மரித்தோவிடுவார்கள்.

நீர் தேவனுடைய மகனானால்

பிசாசு அநேகமாக இயேசு தான் தேவனுடைய மகன் என்று நிரூபிக்கச் செய்ய சவால் விடுகிறவனாய் இருப்பான்.

உம்மைக் கீழே விழச் செய்யும்

"நிலத்தில் கீழே விழுங்கள்"

அது எழுதப்பட்டுள்ளது

இதை, " "வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது" அல்லது "வேதம் சொல்லுகிறது" அல்லது "வேத்தத்தில் சொல்லுகிறார் என்று மொழிபெயர்க்கலாம். பிசாசு சங்கீதம் 91:11

12 ஐ பகுதியாக சொல்லி இயேசுவை கட்டிடத்தில் இருந்து கீழே குதிக்கச் செய்ய தூண்டும் ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறான்.

அவர் கட்டளை இடுவார்

"அவர்" என்பது தேவனைக் குறிக்கிறது.

Luke 4:12-13

அது சொல்லப்பட்டிருக்கிறது

இதை, "வேதம் சொல்லுகிறது" அல்லது "அது எழுதப்பட்டுள்ளது" என்று மொழிபெயர்க்கப்படலாம். இயேசு உபாகமம் 6:16 ஐ குறிக்கிறார்.

நீங்கள் கண்டிப்பாகக் கர்த்தராகிய தேவனை சோதிக்கக்கூடாது

இதை, "உங்களுடைய கர்த்தராகிய தேவனை சோதிக்கக்கூடாது" என்று மொழிபெயர்க்கலாம். இந்த ஆலயத்திலிருந்து குதித்து தேவனை சோதனைக்கு உட்படுத்தமாட்டேன் என்பதால் இயேசு இந்த வசனத்தைக் குறிப்பிட்டார். இந்த கட்டளை தேவனுடைய மக்களுக்கு.

மற்றொரு சமயம் வரை

"மற்றொரு சந்தர்ப்பம் வரை."

Luke 4:14-15

ஆவியானவருடைய வல்லமையோடு

இதை, "ஆவியானவர் அவருக்கு வல்லமையைக் கொடுக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம். மனிதர்கள் செய்யக் கூடாத காரியங்களை செய்ய வைத்த தேவன் இயேசுவோடு விசேஷமான வழியில் செயல்பட்டார்.

அவரைப் பற்றிய செய்தி பரவியது

இதை, "இயேசுவைக் குறித்த செய்தியை மக்கள் பரப்பினார்கள்," அல்லது "மக்கள் மற்றவர்களிடம் ஏசுவைக் குறித்து சொல்லிக்கொண்டிருந்தனர்" அல்லது "ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு அவரைக் குறித்த செய்தி கடத்திவிடப்பட்டது" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டவர்கள் அவரைக் குறித்து மற்றவர்களிடம் சொன்னார்கள்; மற்றவர்கள் இன்னும் மற்றவர்களிடம் அவரைக் குறித்து சொன்னார்கள்.

சூழ்ந்துள்ள பகுதிகள் முழுமையிலும்

கலிலேயாவை சுற்றியுள்ள இடங்களையும் பகுதிகளையும் இது குறிக்கிறது.

எல்லாரும் அவரைத் புகழ்ந்தார்கள்

"எல்லாரும் அவரைக் குறித்து மேன்மையான காரியங்களை சொன்னார்கள்" அல்லது "எல்லா மக்களும் அவரைக் குறித்து நல்லக் காரியங்களை சொன்னார்கள்."

Luke 4:16-17

அவரை வளர்த்தின இடத்தில்

இதை, "அவருடையப் பெற்றோர் அவரை வளர்த்த இடம்" அல்லது "அவர் வளர்ந்த இடம்" அல்லது "அவர் குழந்தையாக இருந்த பொழுது வாழ்ந்த இடம்" என்று மொழிபெயர்கலாம்.

அவருடைய வழக்கத்தைப் போல

"அவர் எப்பொழுதும் செய்தது போல." ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திற்கு போவது அவருக்கு வழக்கமான ஒன்று.

தீர்க்கதரிசி ஏசாயாவின் தோற்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது

இதை ஒரு செய்வினைக் கூற்றோடு, "யாரோ ஒருவன் தீர்க்கதரிசி ஏசாயாவின் தோற்சுருளை அவருக்குக் கொடுத்தான்" என்பதில் உள்ளதுபோல மொழிபெயர்க்கலாம்.

ஏசாயா தீர்க்கதரிசியின் தோற்சுருள்

இது தோற்சுருளில் எழுதப்பட்ட ஏசாயாவின் புத்தகத்தைக் குறிக்கிறது. ஏசாயா அனேக ஆண்டுகளுக்கு முன்பு எழுதின வார்த்தைகளை யாரோ ஒருவன் தோற்சுருளில் அதை அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அது எழுதப்பட்ட இடத்தில்

"தோல்சுருளில் சொல்லப்பட்ட இடம்" அல்லது "இந்த வார்த்தைகள் தோற்சுருளில் சொல்லப்பட்ட இடம்"

Luke 4:18-19

(ஏசாயா 61:1

2 இல் உள்ளதை கொண்ட தோற்சுருளை இயேசு படித்தார்"

கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்

"தேவன் என் மீது விசேஷமான முறையில் இருக்கிறார்." இது தேவனுடைய வார்த்தைகளை உரிமைக் கோருவதாகும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.

சிறையானவர்களுக்கு விடுதலையை தேரிவிக்கும்படி

இதை, "சிறைப்படுத்தப்பட்டவர்களிடம் அவர்கள் விடுதலையாகப் போகலாம் என்று சொல்லும்படி" அல்லது "போர்க் கைதிகளை விடுதலையாக்கும்படி" என்று மொழிபெயர்க்கலாம்.

குருடரின் பார்வை திரும்பக் கிடைக்க

"குருடர் பார்க்கமுடியும் என்று அறிவிக்க" அல்லது "குருடருக்குப் பார்வை கொடுக்கும்படி" அல்லது "குருடர் மறுபடியும் பார்க்கச் செய்யும்படி"

நெருக்கப்பட்டவர்களை விடுதலை ஆக்கும்படி

"கடினமாக நடத்தப்பட்டவர்களை விடுதலை ஆக்கும்படி"

கர்த்தருடைய தயவுள்ள வருஷத்தை அறிவிக்கும்படி

இதை, "இந்த வருடத்தில் தான் கர்த்தருடைய தயவை அவர் காட்டுவார் என்று அறிவிக்க" அல்லது "கர்த்தர் தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கிறார் என்று எல்லாரிடமும் சொல்ல" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 4:20-22

பின்பு அவர் தோற்சுருளை மூடினார்

"பின்பு இயேசு தோற்சுருளை சுருட்டினார்"

ஜெப ஆலயத்தின் வேலையாள்

மிகுந்த அக்கறையுடனும் பயபக்தியுடனும் வேத வாக்கியங்கள் அடங்கிய தோற்சுருள்களை எடுத்து பின்பு அதனுள் வைத்து வைக்கும் ஜெப ஆலய வேலையாளை இது குறிக்கிறது.

அவர்மேல் பதிந்து இருந்தது

"அவர் மீது நோக்கமாய் இருந்தது" அல்லது "அவரைப் பார்த்துக்கொண்டிருந்தது"

உங்களுடையக் காதுகள் கேட்க வேத வாக்கியங்கள் நிறைவேறியது

இதை, "நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது தானே வேதம் நிறைவேறும் என்று சொல்லப்பட்டவைகள் நிறைவேறுகிறது" என்று மொழிபெயர்க்க்லாம் அந்த நேரத்தில் தானே தன்னுடைய செயலினாலும் பேச்சினாலும் இயேசு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

அவருடைய வாயிலிருந்து வரும் கிருபையின் வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு

"அவர் சொல்லிக்கொண்டிருந்த கிருபையானக் காரியங்களைக் குறித்து அதிசயித்து."

இது யோசேப்பின் மகன் அல்லவா?

இது "இது யோசேப்பினுடைய மகன்தான் அல்லவா?" அல்லது "இது யோசேப்புனுடைய மகன்தான்" அல்லது "அவருடைய தகப்பன் யோசேப்புதான்" என்று மொழிபெயர்த்திருக்க முடியும். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் என்று மக்கள் நினைத்தனர். யோசேப்பு ஒரு மதத் தலைவர் இல்லை, ஆகவே, அவன் செய்ததை அவனது மகன் பிரசங்கிப்பார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Luke 4:23-24

உன்னுடைய சொந்த ஊரில்

இது இயேசு வளர்ந்த பட்டணமாகிய நாசரேத்தில் இருந்தது.

எந்த தீர்க்கதரிசியும் அவனுடைய சொந்த தேசத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

எங்களுக்கு இயேசுவைத் தெரியும் என்று ஜனங்கள் நினைத்து அவரை விசுவாசிக்க மறுத்ததினால் இயேசு ஜனங்களைக் கடிந்துகொண்டிருந்தார்.

சொந்த தேசம்

இதை "சொந்த பட்டணம்" அல்லது "சொந்த ஊர்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 4:25-27

(இயேசு ஜெப ஆலயத்தில் இருந்த மக்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்.)

நான் உண்மையாக சொல்லுகிறேன்

"நான் சத்தியமாக சொல்லுகிறேன்." இந்த பதம், பின்வரும் வாக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உண்மையையும், துல்லியத்தையும் வலியுறுத்த பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விதவைகள்

விதவை என்பவள் தனது கணவன் மரித்துப் போன ஒரு பெண்.

எலியாவின் நாட்களில்

இதை, "இஸ்ரவேலில் எலியா தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்த பொழுது" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் எலியா தேவனுடைய தீக்கதரிசிகளில் ஒருவன் என்பாதை அறிந்திருந்தார்கள். உங்களுடைய வாசகர்கள் இதை அறிந்திருக்கவில்லையென்றால், மறைந்திருக்கும் இந்தத் தகவலை வெளிப்படையாக்கி, "UDB இல் உள்ளதுபோல செய்யலாம்.

ஆகாயம் மழை பொழியாமல் அடைக்கப்பட்டபோது

இதை, "ஆகாயத்திலிருந்து ஒரு மழையும் வராதபொழுது" அல்லது "மழையே இல்லாத பொழுது" என்று மொழிபெயர்க்கலாம். இது ஒரு உருவகம் ஆகும். ஆகாயத்தை ஒரு கூரையைப் போல பாவித்து அது மேலே உள்ள தண்ணீரை கீழே வரவிடாமல் தடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அங்கு பெரிய பஞ்சம் உண்டாயிருந்த பொழுது

"மிகவும் பயங்கரமான உணவு பற்றாக்குறையின் போது" அல்லது "மக்களுக்கு போதிய உணவு இல்லாத பொழுது." பஞ்சம் என்பது நீண்ட நாட்கள்தாவரங்கள் போதிய உணவை மக்களுக்குக் கொடுக்காத சமயம் ஆகும்.

சாரிபாத்தில் வாழும் ஒரு விதவை

சாரிபாத்தில் வாழ்ந்தவர்கள் யூதர்களல்ல; அவர்கள் புரஜாதியினர். இதை, "சாரிபாத்தில் வாழ்ந்த புறஜாதி விதவை" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுசுவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு சாரிபாத்தில் இருப்பவர்கள் புறஜாதியினர் என்பதை அறிந்திருந்திருந்திருப்பார்கள்.

சிரியனாகிய நாமான்

சிரியா என்னும் நாட்டிலிருந்து வருபவன் சிரியன் ஆவான். சிரியாவின் மக்கள் புரஜாதியினர்; அவர்கள் யூதர்கள் அல்ல. இதை, "சிரியாவில் இருந்து வந்த புரஜாதியினன் நாமான்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 4:28-30

நகரத்தை விட்டு வெளியே தள்ளி

இதை, "நகரத்தை விட்டு வெளியேப் போக கட்டாயப்படுத்தி" என்று மொழிபெயர்க்கலாம்.

மலையின் கொடுமுடியில்

"மலையின் சிகரம்"

அவைகளுக்கு நடுவில்

இதை, "அவர்களின் நடுவில்" அல்லது "அவரைக் கொலை செய்ய முயற்சித்தவர்களின் மத்தியில்" என்று மொழிபெயர்க்கலாம். "சும்மா" என்கிற வார்த்தை "சரியாக" என்கிற வார்த்தைக்கு ஒத்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் நடந்துபோவதை ஒன்றும் தடுக்கமுடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

அவருடைய வழியில் போனார்

"வெளியே போனார்." மக்கள் அவரைப் போக செய்ய முயற்சித்த இடத்திற்கு பதிலாக அவர் திட்டம் பண்ணியிருந்த இடத்திற்கு இயேசு போனார்.

Luke 4:31-32

அவர் கீழே போனார்

"இயேசு மலைக்கு கீழாகப் போனார்." கப்பர்நகூம் நாசரேத்தைவிட கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்து இருக்கிறது.

கலிலேயாவில் உள்ள கப்பர்நகூம் பட்டணம்

இயேசு கலிலேயாவில் ஏற்கனவே இருந்ததால், இதை, "கலிலேயாவில் உள்ள மற்றொரு பட்டணம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அதிசயித்து

"மிகவும் ஆச்சரியப்பட்டு" அல்லது "அதிசயித்து"

அவர் அதிகாரத்தோடு பேசினார்

இதை, "அவருடைய வார்த்தையில் அதிகாரம் இருந்தது" அல்லது "அதிகாரத்தில் இருந்தவரைப் போல பேசினார்."

Luke 4:33-34

அசுத்தமான பிசாசின் ஆவியை உடையவன்

"அசுத்த பிசாசு பிடித்திருந்தவன்."

அவன் பெரிய சத்தத்தோடு கூப்பிட்டான்

"அவன் சத்தமாக கத்தினான்." "அவனுடைய ஈரலின் உச்சத்தில் இருந்து கத்தினான்" என்னும் ஆங்கில ஆகுபெயரைப் போல சில மொழிகள் இதற்கு ஆகுபெயரை வைத்திருக்கும்.

நாங்கள் உம்மோடு என்ன செய்யவேண்டும்?

இதை, "நாம் எந்த விஷயத்தில் ஒத்திருக்கிறோம்?" அல்லது "உம்மிடத்தில் செய்ய எங்களுக்கு ஒன்றுமில்லை!" என்று மொழிபெயர்க்கலாம். இது ஒரு ஈடுபாடோடுக்கூடிய பதில். இந்த பதிலின் அர்த்தம் என்னவென்றால் "எங்களைத் தொந்தரவு செய்ய உமக்கு உரிமை இல்லை!"

Luke 4:35-37

இயேசு பிசாசைக் கடிந்து கொண்டு, சொன்னார்

"இயேசு பிசாசைக் கடிந்துகொண்டு சொன்னது," அல்லது "இயேசு கண்டிப்புடன் பிசாசிடம் சொன்னார்"

அவனை விட்டு வெளியே வா

இதை, "அவனைத் தனியே விடு" அல்லது "அவனைக் கஷ்டப்படுத்துவதை நிறுத்து" என்று மொழிபெயர்க்கலாம்.

இது என்ன மாதிரி வார்த்தைகள்

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. ஒரு மனிதனில் இருந்து பிசாசுகளை வெளியே போகச் சொல்லும் அதிகாரத்தை அவர் பெற்றிருந்ததால் மக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இதை, "இது அற்புதமான வார்த்தைகள்" அல்லது "அவருடைய வார்த்தைகள் அற்புதமாய் இருக்கிறது!"

அவர் அசுத்த ஆவிகளுக்கு வல்லமையோடும் அதிகாரத்தோடும் கட்டளையிட்டார்

அவர் அசுத்த அவைகளுக்குக் கட்டளையிடும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

செய்தி பரவத் துவங்கியது

"இயேசுவைக் குறித்த செய்தி பரவத்துவங்கியது" அல்லது "மக்கள் இயேசுவைக் குறித்த செய்தியைப் பரப்பினார்கள்"

Luke 4:38-39

அவள் அதிகமான ஜுரத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்

சில மொழிகளில் மக்கள், "அவள் வியாதிபட்டிருந்தாள்; அவளுடைய தோல் மிகவும் சூடாய் இருந்தது" என்று சொல்லுவார்கள்.

சீமோனின் மாமி

"சீமோனின் மனைவியின் தாய்"

காய்ச்சலைக் கடிந்துகொண்டார்

"காய்ச்சலிடம் கண்டிப்பாகப் பேசினார்" அல்லது "காய்ச்சல் அவளை விட்டுப் போகும்படி கட்டளையிட்டார்" (UDB). இதை, "அவளுடைய தோல் குளிர்ந்துபோகும்படி அவர் கட்டளையிட்டார்" அல்லது "வியாதி அவளைவிட்டு நீங்கும்படி கட்டளையிட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 4:40-41

சத்தமிட்டு

"கூச்சலிட்டு" அல்லது "உரத்தசத்தமாய்"

பிசாசுகளைக் கடிந்துகொண்டார்

"பிசாசுகளிடம் கண்டிப்புடன் பேசினார்"

அவர்களை அனுமதிக்கவில்லை

"அவர்களை அனுமதிக்கவில்லை"

Luke 4:42-44

உதயமானபோது

"சூரியன் உதித்தபொழுது" அல்லது "விடியலில்"

தனித்த இடத்தில்

"வனாந்திர இடம்" அல்லது "மக்கள் ஒருவரும் வாழாத இடம்" அல்லது " மனித நடமாட்டம் இல்லாத இடம்"

அநேகப் பட்டணங்களுக்கு

இதை, "மற்ற அநேகப் பட்டணங்களில் இருந்த மக்களுக்கு"

நான் இங்கு அனுப்பப்பட்டதன் காரணம்

இதை செய்வினைக் கூற்றாக, "தேவன் என்னை அனுப்பினதின் காரணம் இது தான்" என்பதில் இருப்பதைப் போல மொழிபெயர்க்கலாம்.

Luke 5

Luke 5:1-3

இப்பொழுது இது நடந்தது

கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தை குறிக்க இது குறிக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்வதற்கு ஏதேனும் வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அவர்களுடைய வலைகளைக் கழுவிக்கொண்டு

மறுபடியும் மீன்களைப் பிடிக்கும்படி அவர்களுடைய மீன்பிடி வலைகளை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள்ளே அதைக் கொண்டுபோகும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்

"கரையிலிருந்து இன்னும் கொஞ்ச தூரம் படகை கொண்டு செல்ல பேதுருவைக் கேட்டுக்கொண்டார்."

இயேசு அமர்ந்திருந்து மக்களுக்குப் போதித்தார்

ஒரு ஆசிரியரின் பொதுவான நிலை அமர்ந்திருத்தல் ஆகும்.

படகில் இருந்துகொண்டு மக்களுக்கு போதித்தார்

"அவர் படகில் அமர்ந்திருந்த பொழுது மக்களுக்கு போதித்தார்." கரையிலிருந்து கொஞ்ச தூரம் உள்ளிருந்த படகில் இயேசு அமர்ந்தவாறே கரையில் இருந்த மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

Luke 5:4-7

அவர் பேசியதை முடித்தவுடன்

"மக்களுக்கு இயேசு கற்றுகொடுப்பதை முடித்தவுடன்"

எஜமானனே

"எஜமானன்" என்று அந்தக் கிரேக்க வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது "எஜமானன்" என்பதற்கான சாதாரண வார்த்தை இதுவல்ல. இது ஒரூ நபரை சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒருவனை குறிக்க அல்ல, அதிகாரமுடைய ஒருவனைக் குறிக்கிறது. இதை நீங்கள் "தலைவர்" அல்லது "மென்முறையாளர்" அல்லது அதிகாரத்தில் இருப்பவனைக் குறிக்கப் பயன்படும் வார்த்தையை இங்கு பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: "ஐயா."

உம்முடைய வார்த்தையில்

"உம்முடைய வார்த்தையின் நிமித்தம் " அல்லது "நீர் என்னை இதை செய்ய சொன்னதால்"

செய்கைக்காட்டி

அவர்கள் கரைக்கு அப்பால் இருந்ததால், அவர்கள் செய்கைகள் செய்தனர்; அநேகமாக கரங்களை அசைத்திருப்பர்.

அவர்கள் மூழ்கத்துவங்கினர்

"படகுகள் மூழ்கத்துவங்கின." புரிந்துகொள்ள தேவையானால், மறைத்து சொல்லப்பட்ட தகவலை வெளிப்படையாக்கி, "மீன்கள் கனமாய் இருந்ததால் படகுகள் மூழ்கத்துவங்கின" என்பது போல மொழிபெயர்க்கலாம்.

Luke 5:8-11

இயேசுவின் முழங்காலில் விழுந்து

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இயேசுவின் பாதத்தில் விழுந்து" அல்லது 2. "நிலத்தில் விழுந்து இயேசுவின் பாதத்தில்" அல்லது 3. "இயேசுவின் முன்பு முழங்கால்படியிட்டு." பேதுரு எதேட்சையாக விழவில்லை. தாழ்மையின் அடையாளமாகவும் இயேசுவிற்கு மரியாதை செலுத்தவும் அவன் அவ்வாறு செய்தான்.

பாவமான மனிதன்

"மனிதன்" என்பதற்கான வார்த்தை "ஒரு ஆணைக்" குறிக்கிறது; பொதுவான "மனிதகுலத்தை" அல்ல.

நீங்கள் மனிதர்களைப் பிடிப்பீர்கள்

"பிடிப்பீர்கள்" என்கிற வார்த்தை கிறிஸ்துவைப் பின்பற்ற மக்களை சேர்க்கிறதைக் குறிக்கும் உருவகம் இது. இந்த உருவகத்தோடு, "நீங்கள் மீன்களைப் பிடிப்பது போல மக்களைப் பிடிப்பீர்கள்" அல்லது "நீங்கள் மக்களை உள்ளேகொண்டு வருவீர்கள்"என்பதில் உள்ளது போல மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 5:12-13

இதோ அங்கு முழுவதும் குஷ்டரோகம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்

"இதோ" என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனை நமக்கு அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தவும். ஆங்கிலம், "முழுவதும் குஷ்டரோகத்தோடு ஒரு மனிதன் அங்கிருந்தான்" என்று பயன்படுத்துகிறது.

அவன் முகங்குப்புற விழுந்தான்

"அவன் நிலம் வரைக் குனித்தான்" (UDB) அல்லது "அவன் முழங்கால்படியிட்டு தனது முகத்தால் நிலத்தைத் தொட்டான்"

அவனை வேண்டிக்கொண்டான்

"அவனைக் கெஞ்சினான்" அல்லது "அவனோடு தயவாய்க் கெஞ்சினான்" (UDB)

நீங்கள் விரும்பினால்

"நீங்கள் விரும்பினால்"

Luke 5:14

யாரிடமும் சொல்லாமல்

இது எதிர்மறை கூற்று. இதை எதிர்மறையாக மொழிபெயர்க்கலாம்: "யாரிடமும் சொல்லாதீர்கள்." மறைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், "நீ சுகமானாய்."

சுத்தமானதினிமித்தமான பலி

அவர்கள் சுத்தமானப் பிறகு ஒரு பிரத்தியேக பலி இடவேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. இது ஒரு மனிதனை சடங்கு முறைப்படி சுத்தமாக இருக்க அனுமதிக்கிறது. மத சடங்குகளில் மறுபடியும் பங்குபெற (அம்மனிதனுக்கு) முடியும்.

அவர்களுக்கு சாட்சியாக

"ஆசாரியர்களுக்கு சாட்சியாக" அல்லது "ஆசாரியர்கள் நீ உண்மையில் குணமானாய் என்று அறிந்துகொள்ளும்படி." இயேசு குஷ்டரோகியை குணமாக்கினார் என்கிற உண்மை ஆலயத்தில் இருந்த ஆசாரியர்களை எதிர்த்திருக்கும்..

Luke 5:15-16

அவரைக் குறித்த அறிக்கை

"இயேசுவைக் குறித்த செய்தி." இது, "இயேசு ஒரு மனிதனைக் குணமாக்கினதைக் குறித்த அறிக்கை" அல்லது "இயேசு மக்களை குணமாக்கினதைக் குறித்த அறிக்கை" என்றும் இது அர்த்தப்படும்.

அவரைக் குறித்த செய்தி மிகவும் வேகமாகப் பரவியது

"அவரைக் குறித்த செய்து வெகு தூரம் வரை சென்றது" அல்லது "மக்கள் அவரைக் குறித்த செய்தியை மற்ற இடங்களிலும் சொல்லிக்கொண்டிருந்தனர்"

வனாந்திரமான இடங்கள்

"தனிமையான இடங்கள்" அல்லது "அமைதியான இடங்கள்" அல்லது " ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள்"

Luke 5:17

அது நடந்தது ... என்னவென்றால்

கதையின் ஒரு புதியப் பகுதியின் ஆரம்பததைக் குறிக்கும் ஒரு கூற்று இதுவாகும். உங்கள் மொழியில் இதை செய்ய வழிகள் இருந்தால், அதை இங்கு பயன்படுத்தப் பாருங்கள்.

Luke 5:18-19

இப்பொழுது சில மனிதர்கள் தூக்கிக்கொண்டு வந்தார்கள்

இது கதையில் வந்த புதிய மக்கள். இவர்கள் புதிதாக வந்தவர்கள் என்பதை சொல்ல உங்கள் மொழியில் ஏதேனும் வழி இருக்கும். ஆங்கிலத்தில் அப்படி செய்ய முடியும்: "சில மனிதர்கள் தூக்கிக்கொண்டு வந்தனர்" அல்லது "தூக்கிக்கொண்டு மனிதர்கள் இருந்தனர்."

விரிப்பு

இதை, "தூக்கும் அட்டை" அல்லது "மெத்தை" அல்லது "தூக்குப்படுக்கை" அல்லது "மஞ்சம்"

முடக்குவாதம் ஆகி இருந்தான்

"தானே நகர முடியாதவன்"

கூட்டத்தினிமித்தம் அவனை எந்த வழியில் உள்ளே கொண்டு வருவது என்று அறியாமல்

சில மொழிகளில் இதனை வரிசையை மாற்றுவது மிகவும் இயற்கையாக இருக்கும். "மக்கள் கூட்டத்தின் மிகுதியால், அந்த மனிதனை உள்ளே கொண்டு போக முடியவில்லை. அதனால்..."

வீட்டின் மேலே சென்றனர்

வீட்டுக்கு தட்டையான கூறையிருந்தது; சில வீடுகள் ஏணியையோ அல்லது படிக்கட்டுகளையோ கொண்டிருந்தது. அது வீட்டுக்கு மேலே செல்லா சுலபமாய் இருந்தது.

இயேசுவுக்கு நேர் முன்பு

"நேரிடையாக இயேசுவின் முன்பு" அல்லது "உடனே இயேசுவின் முன்பு"

Luke 5:20-21

மனிதன்

பெயர் தெரியாதவனிடம் பேசும்போது அவனை குறிப்பிட பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வார்த்தை இது. இது கேவலப்படுத்த அல்ல; ஆனாலும் மரியாதைத் தரவும் அல்ல. சில மொழிகள் "நண்பன்" அல்லது "சகோதரன்" அல்லது "ஐயா" என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது

"நீ மன்னிக்கப்பட்டாய்" அல்லது "நான் உன் பாவங்களை மன்னித்தேன்" (UDB)

இதைக் குறித்து கேள்வி கேளுங்கள்

"இதை கலந்தாலோசியுங்கள்" அல்லது "இதைக் குறித்து விவாதியுங்கள்." இதை, "இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்று கலந்து ஆலோசனை செய்யுங்கள்."

தேவ தூஷணம் சொல்லுகிற இவர் யார்?

இயேசு சொன்னவற்றினால், மக்கள் எவ்வளவு ஆச்சரியத்தோடும் கோபத்தோடும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு பதில் எதிர்பாராத கேள்வி இது. இதை, "இந்த மனிதன் தேவ தூஷணம் சொல்லுகிறான்" அல்லது "அதை சொன்னதினிமித்தம் தேவ தூஷணம் செய்கிறான்" அல்லது "தேவனை அப்படி தூஷிக்க அவன் என்ன நினைத்துகொண்டிருக்கிறான்?" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனைத் தவிர யார் பாவங்களை மன்னிக்க முடியும்?

இந்த பதில் எதிர்பாராதக் கேள்வி, "தேவனைத் தவிர ஒருவரும் பாவங்களை மன்னிக்கமுடியாது" அல்லது "தேவன் மாத்திரமே பாவங்களை மன்னிக்க முடியும்" என்றும் மொழிபெயர்க்கலாம். மறைத்துச் சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், பாவங்களை மன்னிக்க முடியும் என்று ஒரு மனிதன் சொல்லுவானாகில் அவன் தான் தேவனாக இருக்கிறேன் என்று சொல்லுகிறான்.

Luke 5:22-24

உங்கள் இருதயங்களில் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்

இதை, "இதைக் குறித்து உங்கள் இருதயங்களில் விவாதம் பண்ணக்கூடாது" அல்லது "நான் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு என்பதை நீ சந்தேகிக்கக்கூடாது."

உங்கள் இருதயங்களில்

ஒரு மனிதன் சிந்திக்கும் அல்லது நம்பும் மனிதனின் பகுதியைக் குறிக்கும் ஒரு மரபுப்பெயர். சில மொழிகளில் இந்தக் கூற்றை சேர்க்காதது மிகவும் இயற்கையாக இருக்கும்.

எது சொல்வதற்கு சுலபம்

இயேசு இந்த பதில் எதிர்பாராத கேள்வியை, தனது பாவங்களை மன்னிக்கும் வல்லமையை தான் செய்யப்போகும் குணமாக்கும் அற்புதத்தையும் தொடர்புபடுத்துகிறார். இந்த முழு கேள்வியும், "'உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' என்று சொல்லுவது சுலபம் தான், ஆனால் தேவன் மாத்திரமே ஒரு முடவனைப் பார்த்து 'எழுந்து நட' என்று சொல்லமுடியும்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் அறிந்திருக்கலாம்

இயேசு வேதபாரகரிடத்திலும், பரிசேயர்களிடத்திலும் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள்" என்கிற வார்த்தை பன்மையில் உள்ளது.

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைத்தானே குறிப்பிடுகிறார். நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு முடக்குவாதக்க்காரனுக்கு சொல்லுகிறார். "உனக்கு" என்கிற வார்த்தை ஒருமையில் உள்ளது.

Luke 5:25-26

உடனடியாக

"ஒரே தரம்" அல்லது "அப்பொழுதே"

ஆச்சரியம் எல்லாரையும் பிடித்தது

"அதைக் கண்டவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்"

பயத்தால் நிரம்பி

"மிகவும் பயந்து" அல்லது "ஆச்சரியத்தால் நிரப்பப்பட்டு"

அசாதாரண காரியங்கள்

"ஆச்சரியமானக் காரியங்கள்" அல்லது "வித்தியாசமானக் காரியங்கள்"

Luke 5:27-28

இந்தக் காரியங்கள் நடந்தப் பிறகு

முந்தின வசனங்களில் என்ன நடந்ததோ அதை இது குறிக்கிறது.

வரி வசூலிப்பவனைப் பார்த்து

அதென்னவென்றால், "ஒரு வரி வசூலிப்பவனைக் கவனத்துடன் பார்த்து" அல்லது "ஒரு வரி வசூல் செய்கிறவனை கவனத்தோடு பார்த்து" என்பதாகும்.

வரி வசூல் செய்யும் இடம்

"வரி சாவடி" அல்லது "வரி வசூலிக்கும் நிலையம்." இது அரசாங்கத்திற்கு மக்கள் வரி செலுத்தும்படி சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சாவடி அல்லது மேஜை ஆகும்.

என்னைப் பின்பற்று

இதை, "என்னுடைய சீடனாய் இரு" அல்லது "வா, என்னை உன்னுடைய போதகராக எண்ணி பின்பற்று" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லாவற்றையும் விற்றுவிட்டு

"வரிவசூலிக்கும் வேலையை விட்டுவிட்டு"

Luke 5:29-32

பெரிய விருந்து

இது, நிறைய உணவோடு பானங்களோடு விருந்தாளிகளோடு இருக்கும் ஒரு விருந்து அல்லது கொண்டாட்டம்.

வீட்டில்

"லேவியின் வீட்டில்"

மேஜையில் சாய்ந்துகொண்டு

இதை, "மேஜையில்" அல்லது "மேஜையில் அமர்ந்து" என்று மொழிபெயர்க்கலாம். கிரேக்க முறைப்படி விருந்துண்ணும்போது மேஜையில் சாய்ந்து கொண்டு இடது கையை சில தலையணையின் மேல் வைத்து அமர்ந்திருப்பர்.

முறுமுறுத்தனர்

"குற்றம் சாட்டினர்" அல்லது "விரும்பாததை சுட்டிக் காட்டினர்"

தனது சீடர்களுக்கு

"இயேசுவின் சீடர்களுக்கு"

நீங்கள் ஏன் சாப்பிடுகிறீர்கள்

இயேசு பாவிகளோடு அமர்ந்துகொண்டு உணவு அருந்திக்கொண்டிருந்ததை ஏற்றுக்கொள்ளாத பரிசேயர்களும் வேதபாரகர்களும் இந்த பதில் எதிர்பாராதக் கேள்வியின் மூலம் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டினர். "நீங்கள்" பன்மையில் உள்ளது. இதை, "நீங்கள் பாவிகளோடு சேர்ந்து சாப்பிடக்கூடாது!" என்று மொழிபெயர்க்கலாம்.

மருத்துவர்

"மருத்துவர்" அல்லது "வைத்தியன்"

Luke 5:33-35

அவர்கள் அவரிடம் சொன்னார்கள்

"மதத் தலைவர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்"

யாராவது செய்யமுடியுமா

அவர்கள் அறிந்திருந்த சூழ்நிலையையே மக்கள் சிந்திக்கும்படி செய்ய இயேசு இந்த பதில் எதிர்பாராத கேள்வியைக் கேட்டார். இதை, "மணவாளனுடையத் தோழர்களை மணவாளன் அவர்களோடிருக்கும்போது உபவாசியுங்கள் என்று ஒருவரும் சொல்லமாட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மணவாளனுடையத் தோழர்கள்

"விருந்தாளிகள்" அல்லது "நண்பர்கள்." திருமணம் செய்யப் போகும் மனிதனோடு சேர்ந்து கொண்டாடுகிறவர்கள் இந்த நண்பர்கள்.

ஆனால் நாட்கள் வருகிறது, அப்பொழுது

"ஆனால் ஒரு நாளில்" (UDB) அல்லது ஆனால் சீக்கிரத்தில்."

மணவாளன் அவர்களிடமிருந்து எடுக்கப்படுவார்

இது உருவகம் ஆகும். இயேசு தன்னைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். இதை, "அதே முறையில், என்னுடைய சீடர்கள் நான் அவர்களோடு இருக்கும்போது உபவாசிக்க மாட்டார்கள்" என்பத்தோடு சேர்த்து வெளிப்படையாக்கிச் சொல்லலாம்.

Luke 5:36

ஒரு மனிதனும் கிழிக்கமாட்டான்

"ஒருவனும் கிழிக்கமாட்டான்" அல்லது "மக்கள் ஒருபோதும் கிழிக்க மாட்டார்கள்" (UDB"

பழுதுபார்த்து

"சரிசெய்து"

சேர்க்கமாட்டார்கள்

"ஓட்டுப் போட மாட்டார்கள்" அல்லது "அது ஒவ்வாது"

Luke 5:37-39

(இயேசு மதத் தலைவர்களிடம் வேறொரு உவமையை சொல்லுகிறார்)

ஒரு மனிதனும் இடமாட்டான்

"ஒருவனும் இடமாட்டான்" (UDB) அல்லது "மக்கள் ஒருபோதும் வைக்கமாட்டார்கள்"

புதிய திராட்சை ரசம்

"திராட்சை பழரசம்." இது இன்னும் புளிப்பேற்றப்படாத திராட்சை ரசத்தைக் குறிக்கிறது.

திராட்சை ரசத் துருத்திகள்

இந்த பைகள் மிருகத்தின் தோல்களில் இருந்து செய்யப்படுபவை. இதை, "திராட்சை ரசப் பைகள்" அல்லது "தோல் பைகள்" (UDB) என்றும் மொழிபெயர்க்கலாம்.

புதிய திராட்சை ரசம் துருத்திகளைக் கிழித்து விடும்

"புதிய திராட்சை ரசம் புளித்துப் பெருகும்போது, இனி விரியமுடியாதப் பழையத் துருத்திகளைக் கிழியச் செய்யும்." இயேசுவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் திராட்சை ரசம் புளிப்பேற்றப்படுவது மற்றும் உப்புவதின் மறைத்து சொல்லப்பட்ட தகவலை அறிந்திருந்திருப்பார்கள்.

திராட்சை ரசம் சிந்திப்போகும்

"திராட்சை ரசம் பைகளிலிருந்து சிந்திப்போகும்."

புதிய துருத்திகள்

"புதிய துருத்திகள்" அல்லது "புதிய திராட்ச ரசப் பைகள்"

பழைய திரட்சை ரசம்

"புளிப்பாக்கப்பட்ட திராட்சைரசம்"

"பழையது சிறந்தது' என்று அவர் சொல்லுகிறார்

"அதனால்தான் புதியதை முயற்சி செய்ய விரும்பவில்லை" என்பதை சேர்த்தால் உகந்ததாக இருக்கும். மதத்தலைவர்களின் பழையப் போதனைகளையும் இயேசுவினுடைய புதிய போதனைகளையும் முரண்பட வைக்கிற உருவகம் இதுவாகும். பழையப் போதனைகளுக்குப் பழகிப்போனவர்கள் புதிய காரியங்கள் இயேசுவின் போதனைகளில் இருந்து வருவதை கவனிக்க விரும்புகிறதில்லை என்பது தான் குறிப்பு.

Luke 6

Luke 6:1-2

அது நடந்தது

கதையின் புதியப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்துவதை கருதவும்.

தானிய நிலங்கள்

இந்த நிகழ்வில், கோதுமையை வளர்க்கும்படியாக அதன் விதைகள் தூவப்பட்ட பெரிய இடங்கள் இவைகள். அவைகள் செடியின் முதிர்ந்த கதிர்களை அல்லது விதைகளைப் பிடித்திருக்கிறது.

தானியத்தின் நுனிகள்

இது கோதுமைச் செடியின் நீளமான புல்லைப்போல இருக்கும் உச்சிப் பகுதியாகும். இது முதிர்ந்த தானியத்தை அல்லது செடியின் விதைகளைக் கொண்டிருக்கிறது.

ஓய்வுநாளில் செய்யத் தகாததை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்

இதை, "ஓய்வுநாளில் ஏன் தானியத்தைக் கொய்தீர்கள்? என்று மொழிபெயர்க்கப்படலாம். இது ஒரு பதில் எதிர்பாராத கேள்வி. இதன் அர்த்தம், "ஓய்வுநாளில் தானியம் கொய்வது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு விரோதமானது!" "நீங்கள்" என்கிற வார்த்தை பன்மையில் இருக்கிறது; அது சீடர்களைக் குறிக்கிறது.

Luke 6:3-5

நீங்கள் வாசிக்கவில்லையா?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம். அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளாததால் இயேசு அவர்களை மென்மையாகக் கண்டித்தார். இதை, "நிச்சயமாக நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்" (UDB) அல்லது "நீங்கள் வாசித்ததிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவசமூகத்து அப்பம்

"பரிசுத்த அப்பம்" அல்லது "தேவனுக்கு படைக்கப்பட்ட அப்பம்"

மனுஷக் குமாரன்

இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஓய்வுநாளின் கர்த்தர்

"ஓய்வுநாளின் உரிமையாளன்." இதை, "ஓய்வுநாளில் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உடையவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 6:6-8

பின்பு அது நடந்தது

கதையின் ஒரு பகுதியின் துவக்கத்தை குறிக்க இந்தப் பதம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இவ்வாறு செய்ய ஏதேனும் வழி இருக்குமானால், அதை இங்கு உபயோகப்படுத்தப் பார்க்கலாம்.

கை சூம்பியிருந்தது

கை நீட்ட முடியாத அளவிற்கு அந்த மனிதனுடையக் கை சூம்பி இருந்தது. உள்ளங்கை மடங்கி சூம்பிப்போய் சிரியதாகவும் சுருங்கினதாகவும் அது இருந்திருக்கலாம்.

அவரை நோக்கமாய் கவனித்துக்கொண்டிருந்தார்கள்

"இயேசுவை அவர்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்"

அவர்கள் கண்டுபிடிக்கும்படி

இதை, "அவர்கள் கண்டுபிடிக்க விரும்பினபடியால்" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லாருக்கும் நடுவில்

இதை, "எல்லாருக்கு முன்பாக" என்று மொழிபெயர்க்கலாம். (UDB) இயேசு அந்த மனிதனை எல்லாரும் பார்க்கும்படியான இடத்தில் நிற்கும்படி கூறினார்.

Luke 6:9-11

அவர்களுக்கு

"பரிசேயர்களுக்கு"

இது நியாயப்பிரமாணத்தின்படிதானா?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம். பரிசேயர்கள் இதைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் ஓய்வுநாளில் குணமாக்குவது நியாயப்பிரமாணத்தினபடிதான் என்பதை பரிசேயர்கள் அறிந்திருக்க இயேசு விரும்பினார். இதை, "எது நியாயப்பிரமாணத்தின்படி இருக்கும்? நல்லது செய்வது தான்" அல்லது "மோசேயின் நியாயப்பிரமாணம் என்ன செய்ய அனுமதி அளித்துள்ளது?" என்று மொழிபெயர்க்கலாம்.

உன் கையை நீட்டு

"உன் கையை நீட்டிப்பிடி" அல்லது "உன் கையை நீட்டு"

பழையபடி ஆக்கப்பட்டது

"குணமாக்கப்பட்டது"

Luke 6:12-13

பின்பு அது நடந்தது

கதையின் ஒரு புது பகுதியின் துவக்கத்தை குறிக்க இந்தப் பதம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இவ்வாறு செய்ய ஏதேனும் வழி இருக்குமானால், அதை இங்கு உபயோகப்படுத்தப் பார்க்கலாம்.

அந்த நாட்களில்

"அந்த சமயத்தில்" அல்லது "அதற்கு பிறகு அதிக நாட்கள் அல்ல" அல்லது "ஒரு நாளில்"

அவர் வெளியே போனார்

"இயேசு வெளியே போனார்"

அவர்களில் இருந்து பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து

"அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்தார்" அல்லது "அவருடைய சீடர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்தார்"

அவர்களை 'அப்போஸ்தலர்கள்' என்று பெயரிட்டார்

"அவர் அவர்களை 'அப்போஸ்தலர்கள்' என்று அழைத்தார்" அல்லது "அப்போஸ்தலர்களாக அவர்களை நியமித்தார்" அல்லது "அப்போஸ்தலர்களாக அவரால் மாற்றப்பட்டவர்கள்"

Luke 6:14-16

(இயேசு அப்போஸ்தலர்கலாகத் தெரிந்துகொண்ட பன்னிரண்டு பேர்களின் அட்டவணை இது)

இவைகள் அவர்களின் பெயர்கள்

இந்த அட்டவணை என்னவென்று தெளிவுப்படுத்த, பெயர்களை அறிமுகப்படுத்தும் இந்தப் பதம் ULB இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. சில மொழிபெயர்ப்பாளர்கள் இதை சேர்க்க விரும்புவதில்லை.

அவனுடைய சகோதரன் அந்திரேயா

"சீமோனின் சகோதரன் அந்திரேயா"

செலோத்தே

சாத்தியமான அர்த்தங்கள் 1. "வைராக்கியமுள்ளவன் அல்லது 2. "பக்திவைராக்கியமானவன்." முதல் அர்த்தம், இவன் யூத மக்கள் ரோம ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறவேண்டும் என்று விரும்பும் கூட்டத்தாரோடு பங்குள்ளவன் என்பதைக் காட்டுகிறது. இதை, "தேச பக்தி உள்ளவன்" அல்லது "தேசியவாதி" என்று மொழிபெயர்க்கப்படலாம். இரண்டாம் அர்த்தம், அவன் தேவனை கனப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறவன் என்பதைக் காட்டுகிறது. இதை, "பற்றுள்ளவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

துரோகியானவன்

இதை, "தனது நண்பனைக் காட்டிக்கொடுத்தவன்" அல்லது "தனது நண்பனை எதிரிகளிடம் திருப்பினவன்" அல்லது "எதிரிகளிடம் தன நண்பனைக் குறித்து சொல்லி நண்பனுக்கு ஆபத்தை வருவித்தவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 6:17-19

அவர்களோடு

"அவர் தெரிந்துகொண்ட பன்னிரண்டு பேரோடு" அல்லது "தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களோடு"

குணமாக்கப்படவேண்டி

இதை செய்வினை வினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "இயேசுவுக்காக அவர்களை குணமாக்கும்படி." உங்களுடைய வாசகர்களுக்கு இயேசு அவர்களை குணமாக்கினார் என்பது தெளிவாக இல்லை என்றால், அவர்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லலாம்: "பின்பு இயேசு அவர்களை குணமாக்கினார்."

அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்கள்

"அசுத்த ஆவிகளால் துன்பப்படுத்தப்பட்டவர்கள்." இதை, "அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவர்கள்" அல்லது "அசுத்த ஆவிகளால் ஆளுகை செய்யப்படுகிறவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். செய்வினையில் மொழிபெயர்க்க வேண்டுமானால் UDB ஐப் பார்க்கவும்.

அவர்களும் குணமாக்கப்பட்டார்கள்

இதை செய்வினையோடு, "இயேசு குணமாக்கினார்" என்று மொழிபெயர்க்கலாம். அசுத்த ஆவிகளில் இருந்து மக்கள் குணமாவதைப் பேசும் வழக்கம் இல்லையென்றால், இதை, "இயேசு அவர்களை விடுதலை ஆக்கினார்" அல்லது "இயேசு தீய ஆவிகளை அவர்களை விட்டுப் போக செய்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

குணமாகும் வல்லமை அவரிடத்திலிருந்து வந்தது

இதை, "மக்களை குணமாகும் வல்லமை அவருக்கிருந்தது." என்று மொழிபெயர்க்கலாம். தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டபோது இயேசு எந்த வல்லமையையும் இழக்கவில்லை.

Luke 6:20-21

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

இந்தப் பதம் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும், தேவன் யாருக்காவது தமது தயவைக் கொடுக்கிறார் அல்லது அவர்களது நிலைமை நன்றாகவோ அல்லது ஆக்கப்பூர்வமாகவோ இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஏழையாய் இருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

"ஏழையாய் இருக்கிறவர்கள் தேவனுடைய தயவை பெற்றுக்கொள்ளுவார்கள்" அல்லது "ஏழையாய் இருக்கிற நீங்கள் நன்மையடைகிறீர்கள்" அல்லது "ஏழையாய் இருக்கிற உங்களுக்கு எத்தனை நல்லது" அல்லது "ஏழையாய் இருக்கிற உங்களுக்கு மிகவும் நன்று."

தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுடையது

"தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குரியது." இதன் அர்த்தம், 1. "நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு சொந்தமானவர்கள்" அல்லது 2. "தேவனுடைய ராஜ்ஜியத்தில் உங்களுக்கு அதிகாரம் உண்டு" என்பவை ஆகும். ராஜ்ஜியத்திற்கான வார்த்தை இல்லாத மொழிகள், "தேவன் உங்களுடைய ராஜா" அல்லது "தேவன் உங்களுடைய ஆளுநர்" என்று சொல்லலாம்.

நீங்கள் சிரிப்பீர்கள்

"நீங்கள் சந்தோஷத்தோடு சிரிப்பீர்கள்" அல்லது "நீங்கள் சந்தோஷமாய் இருப்பீர்கள்"

Luke 6:22-23

(இயேசு தனது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

"நீங்கள் தேவனுடைய தயவை பெற்றுக்கொண்டீர்கள்" அல்லது "உங்களுடைய நன்மைக்காய்" அல்லது "உங்களுக்கு எத்தனை நன்மை"

அவர்களுடைய கூட்டிலிருந்து தள்ளிவிடும்போது

"உங்களைத் தள்ளிவிடும்போது"அல்லது "உங்களைப் புறக்கணிக்கும் போது"

உங்களை அவமானப்படுத்தும்போது

"உங்களைக் குற்றப்படுத்தும்போது"

மனுஷக் குமாரனுக்காக

"மனுஷக் குமாரன் நிமித்தம்" அல்லது "மனுஷக் குமாரனோடு நீ அங்கமாய் இருப்பதினால்" அல்லது "அவர்கள் மனுஷக் குமாரனை புறக்கணிக்கிறதினால்."

அந்த நாளில்

"இந்தக் காரியங்களை அவர்கள் செய்யும்போது" அல்லது "அது நடைபெறும்போது"

பெரிய பலன்

"நல்ல வருமானம்" அல்லது "அதினிமித்தம் நல்ல ஈவுகள்"

Luke 6:24-25

(இயேசு தனது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

உங்களுக்கு ஆபத்து

இந்தப் பதம் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறது. "நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்பதன் எதிர்பதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும், மக்களுக்கு நேராக தேவனுடையக் கோபம் திருப்பப்பட்டிருக்கிறது அல்லது எதிர்மறையான அல்லது தீமையானது அவர்களை எதிர்நோக்கி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஆபத்து

"ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது" அல்லது "ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஆபத்து வரும்." இதை, "ஐசுவரியவான்களாயிருக்கிற உங்களுக்கு எத்தனை துக்கம்" அல்லது "ஐசுவரியவான்களாகிய நீங்கள் துக்கமடைவீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டீர்கள்

"நீங்கள் ஏற்கனவே நிரம்பப் பெற்றிருக்கிறீர்கள்" அல்லது "நீங்கள் பெற இருப்பதெல்லாவற்றையும் நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்"

உங்கள் ஆறுதல்

"உங்களை ஆறுதல் செய்கிறதை" அல்லது "உங்களை திருப்திசெய்கிறதை" அல்லது "உங்களை சந்தோஷப்படுத்துகிறதை"

திருப்தியாயிருக்கிறவர்கள்

"வயிறு நிரம்பி இருக்கிறவர்கள்" அல்லது "நிறைய சாப்பிடுபவர்கள்"

நகைக்கிறவர்கள்

"இப்பொழுது சந்தோஷமாய் இருக்கிறவர்கள்"

Luke 6:26

(இயேசு தனது சீடர்களுக்கு போதிக்கிறதைத் தொடர்ந்தார்)

உங்களுக்கு ஆபத்து

"உங்களுக்கு எத்தனை பயங்கரம்" அல்லது "ஆபத்து உங்களுக்கு வரும்" அல்லது "நீங்கள் எத்தனை சோகமாக இருக்க வேண்டும்" அல்லது "நீங்கள் என்ன துக்கம் அடையப்போகிறீர்கள்"

எல்லா மனிதர்களும்

"எல்லா மக்களும்" அல்லது "எல்லாரும்"

அதே வழியில் கள்ளத் தீர்க்கதரிசிகளை நடத்தியிருந்தால்

"கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து நன்றாகப் பேசி"

Luke 6:27-28

(இயேசு தன்னுடைய சீடர்கள் அல்லாதவர்களையும் சேர்த்து அங்கிருந்த முழு கூட்டத்திடமும் பேசத் துவங்கினார்)

அன்பு செலுத்துங்கள்...நன்மை செய்யுங்கள்...ஆசீர்வதியுங்கள்...ஜெபம் பண்ணுங்கள்

இதில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்க வேண்டும்; ஒரே ஒருமுறை மாத்திரம் அல்ல.

உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள்

"உங்கள் எதிரிகள்மேல் அக்கறைக்காட்டுங்கள்" அல்லது "உங்கள் எதிரிகளுக்கு நன்மை எதுவோ அதை செய்யுங்கள்"

உங்களை சபிக்கிறவர்கள்

"உங்களை எப்பொழுதும் சபிக்கிறவர்கள்"

உங்களைத் தவறாக நடத்துகிறவர்கள்

"உங்களை எப்பொழுதும் தவறாக நடத்துகிறவர்கள்"

Luke 6:29-30

(இயேசு கூட்டத்தாருக்கு அவர்களது எதிரிகளை நேசிக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதைத் தொடர்ந்தார்)

உங்களை அடிக்கிறவர்களுக்கு

"யாரொருவன் உங்களை அடித்தால்"

ஒரு கன்னத்தில்

"உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில்"

அவனுக்கு மற்றதையும் காட்டுங்கள்

இதை, "அவன் மறுபக்கமும் அடிக்கும்படி உங்கள் முகத்தைத் திருப்புங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பிடித்து வைக்காதீர்கள்

"எடுத்துக்கொண்டு போவதிலிருந்து அவனைத் தடுக்காதீர்கள்"

உங்களைக் கேட்கிற எல்லாருக்கும் கொடுங்கள்

இதை, "உங்களை யாராவது எதையாவது கேட்டால், அதை அவனுக்குக் கொடுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனைக் கேட்காதீர்கள்

"அவனிடம் கேட்காதீர்கள்" அல்லது "வற்புறுத்தாதீர்கள்."

Luke 6:31-34

(இயேசு கூட்டத்தாருக்கு அவர்களது எதிரிகளை நேசிக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதைத் தொடர்ந்தார்)

மக்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே அவர்களுக்கும் செய்யுங்கள்

சில மொழிகளில், இதன் வரிசையை மாற்றுவது மிகவும் இயற்கையாய் இருக்கும். "மக்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்" அல்லது "அவர்கள் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதேபோல நீங்கள் அவர்களை நடத்துங்கள்."

உங்களுக்கு என்ன பலன்?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை ஒரு வாக்கியத்தோடு மொழிபெயர்க்கலாம்: "அதற்காக நீங்கள் எந்த பலனையும் பெறமாட்டீர்கள்." இதை, "அதை செய்வதால் உங்களுக்கு என்ன புகழ் கிடைக்கும்? அல்லது "நீங்கள் விசேஷமானவர்கள் என்று யாரேனும் நினைப்பார்களா? மற்றுமொரு சாத்தியமான அர்த்தம், "என்ன பலன் உங்களுக்குக் கிடைக்கும்."

Luke 6:35-36

(இயேசு கூட்டத்தாருக்கு அவர்கள் தங்கள் எதிரிகளை நேசிக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதைத் தொடர்ந்தார்)

உங்களுடைய பலன் மிகுதியாயிருக்கும்

"பெரிய பலனை நீங்கள் பெறுவீர்கள்" அல்லது "நீங்கள் நல்ல வருமானம் பெறுவீர்கள்" அல்லது "அதனால் நீங்கள் நல்ல ஈவுகளைப் பெறுவீர்கள்"

உன்னதமானவரின் மகன்களாய் நீங்கள் இருப்பீர்கள்

"மகன்களாய்" என்கிற மரபுப்பெயர் "மகன்களைப் போல" என்பதின் அர்த்தம் கொண்டுள்ளது. தங்கள் எதிரிகளை நேசிக்கிறவர்கள் தேவன் நடப்பதுபோல நடக்கிறார்கள் என்பதைக் இது குறிக்கிறது. இதை, "உன்னதமான தேவனுடைய குழந்தைகளைப் போல நீங்கள் நடப்பீர்கள்" அல்லது "உன்னதமானவரைப் போல இருப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். "மகன்கள்" என்கிற வாரத்தை பன்மையில் உள்ளது. இது "தேவனுடையக் குமாரன்" என்னும் இயேசுவின் பெயரோடு குழப்பிடவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றியில்லாத தீய மக்கள்

"அவருக்கு நன்றி சொல்லாதவர்களும் தீமையானவர்களும்" உங்களுடைய தகப்பன்

இது தேவனைக் குறிக்கிறது. "பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தை" என்று சொல்லுவதால் அது தெளிவுபெறும்.

உங்களுடைய பிதா

இது தேவனைக் குறிக்கிறது. "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா" என்று சொல்வதால் இதை இன்னும் தெளிவுபடுத்தலாம்.

Luke 6:37

(இயேசு மக்களை நியாயந்தீர்க்காதீர்கள் என்பதை கூட்டத்தாருக்கு போதித்தார்)

நியாயந்தீர்க்காதீர்கள்

"மக்களை நியாய்ந்தீர்க்காதீர்கள்" அல்லது "மக்களை குற்றப்படுத்தாதீர்கள்"

மற்றும்

இதை, "பலனாக" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்களும் நியாய்ந்தீர்க்கப்பட மாட்டீர்கள்

யார் நியாயந்தீர்க்கப்படமாட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவன் உங்களை நியாயந்தீர்க்கமாட்டார்" அல்லது 2. "ஒருவரும் உங்களை நியாயந்தீர்க்கமாட்டார்கள்." இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் யார் நியாய்ந்தீர்க்கமாட்டார்கள் என்பதை வெளிப்படையாக்குகின்றன.

குற்றப்படுத்தாதீர்கள்

"மக்களைக் குற்றப்படுத்தாதீர்கள்"

நீங்களும் குற்றப்படுத்தமாட்டீர்கள்

யார் குற்றப்படுத்தமாட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவன் உங்களை குற்றப்படுத்தமாட்டார்" அல்லது "ஒருவரும் உங்களைக் குற்றப்படுத்தமாட்டார்கள்." இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளுமே யார் குற்றபடுத்தமாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்

இயேசு யாரை மன்னிப்பார் என்று சொல்லவில்லை. சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவன் உங்களை மன்னிப்பார்" அல்லது 2." அவர்கள் உங்களை மன்னிப்பார்கள்." முதலாவதான மொழிபெயர்ப்பு யார் மன்னிப்பார் என்பதை வெளிப்படையாக்கியுள்ளது.

Luke 6:38

(இயேசு மக்களை நியாயந்தீர்க்காதீர்கள் என்பதை கூட்டத்தாருக்கு போதித்தார்)

அது உங்களுக்குக் கொடுக்கப்படும்

யார் கொடுப்பார் என்று இயேசு வெளிப்படையாக சொல்லவில்லை. சாத்தியமான அர்த்தங்கள் 1. "யாராவது உங்களுக்குக் கொடுப்பார்கள்" அல்லது 2. "தேவன் உங்களுக்குக்கொடுப்பார்." இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளுமே கொடுக்கிறவரை வெளிப்படுத்துகிறது.

நிறைய பணம்

"பெரியத் தொகை"

நிறையப் பணம் ... உங்களுடைய மடி

இந்த வாக்கியத்தின் வரிசை மாற்றப்பட்டு செய்வினை வினைச் சொல் பயன்படுத்தப்படலாம். "அவர்கள் உங்கள் மடியில் பெரியத் தொகையை அமுக்கி குலுக்கி நிரம்பி வழிந்தோடும்படியாய் போடுவார்கள். இயேசு, தானிய விற்பனையாளன் பெரியத் தொகையைக் கொடுக்கும் உருவகத்தைப் பயன்படுத்தினார். இதை ஒரு உவமையாக மொழிபெயர்க்கலாம்: "தானிய விற்பனையாளன் தானியத்தை அமுக்கி குலுக்கி அது சிந்திப்போகுமளவுக்கு போடுகிறது போல, அவர்கள் உங்களுக்கு நிறையக் கொடுப்பார்கள்.

அதே அளவு உங்களுக்கு அளக்கப்படும்

இதை, "உங்களுக்கு காரியங்களை அளக்கும்படியாக அதே அளவின் அளவை அவர்கள் பயன்படுத்துவார்கள்" அல்லது "அதே அளவுகளில் அவர்கள் உங்கள் காரியங்களை அளப்பார்கள்."

Luke 6:39-40

(இயேசு மக்களை நியாயந்தீர்க்காதீர்கள் என்பதை கூட்டத்தாருக்கு போதித்தார்)

ஒரு குருடன் மற்ற குருடனை வழிநடத்த முடியுமா?

அவர்கள் ஏற்கனவே அறிந்தக் காரியத்தைக் குறித்து அவர்கள் சிந்திக்கும்படி இயேசு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியைக் கேட்டார். இதை, "ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியாது, இல்லையா?" அல்லது "ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியாது என்று நாமெல்லாருக்கும் தெரியும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் செய்தால்

"ஒருவன் செய்தால்" என்று சொல்ல சில மொழிகள் தெரிந்தெடுக்கும்.

அவர்கள் இருவரும் குழியில் விழுவார்கள், அப்படித்தானே?

இது மற்றுமொரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "அவர்கள் இருவரும் குழியில் விழமாட்டார்களா?" அல்லது "அவர்கள் இருவரும் குழியில் விழுவார்கள்" (UDB)

ஒரு சீடன் தன குருவைவிட பெரியவன் அல்ல

இதன் அர்த்தம், 1. "ஒரு சீடனுக்கு தனது குருவைவிட அதிக அறிவு இருக்காது" அல்லது 2. "ஒரு சீடனுக்கு தனது குருவைவிட அதிகாரம் இருக்காது" என்பதாக இருக்கலாம். இதை, "ஒரு சீடனும் தனது குருவை மிஞ்சிப்போனதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் முழுமையாக பயிற்சி பெற்றவுடன்

"நன்றாகப் பயிற்சி பெற்ற எல்லா சீடர்களும்." இதை ஒரு செய்வினை வினைச் சொல்லோடு, "குருவால் முழுமையாகக் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சீடனும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 6:41-42

(இயேசு மக்களை நியாந்தீர்க்கக்கூடாது என்பது பற்றி கூட்டத்தாருக்குப் தொடர்ந்து போதித்தார்)

ஏன் நீங்கள் பார்க்கிறீர்கள்

மற்றவர்களை நோட்டமிட்டு அல்லது நியாயந்தீர்க்கிறதைக் குறித்த ஒரு உருவகம் ஆகும். இதை UDB இல் உள்ளது போல உவமையாக மொழிபெயர்க்கலாம். "ஏன் நீங்கள் நோட்டமிடுகிறீர்கள்...என்பது போல..."

ஒரு மிகச் சிறியக் குச்சி

இதை, "துரும்பு" அல்லது "சிறு துகள்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

சகோதரன்

இது சக யூதனையோ அல்லது இயேசுவில் விசுவாசமாய் இருக்கிற சக விசுவாசியையோ குறிக்கலாம்.

மரத்துண்டு

இது, "உத்திரம்" அல்லது "மரக்கட்டை" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 6:43-44

(இயேசு மக்களை நியாந்தீர்க்கக்கூடாது என்பது பற்றி கூட்டத்தாருக்குப் தொடர்ந்து போதித்தார்)

அதனால்

"ஏனென்றால்." நம்முடைய குணாதிசயம் வெளிப்பட்டுவிடும் என்பதால் நம்முடைய சகோதரரை நாம் நியாயந்தீர்க்கக்கூடாது என்கிற உண்மையை இணைக்கிற வார்த்தை இது.

நல்ல மரம்

"பலமுள்ள மரம்"

கெட்டுப்போன

"கெட்டுப்போய்க் கொண்டிருக்கிற." இதை, "கேட்ட" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒவ்வொரு மரமும் அறியப்படுகிறது

"அறிந்துகொள்ளப்படுகிறது." இதை, ஒரு செய்வினை வினைச்சொல்லோடு, "மக்கள் மரத்தை அறிவார்கள்" அல்லது "மக்கள் ஒரு மரத்தை அறிந்து கொள்ளுவார்கள்வார்கள்" என்பதில் உள்ளது போல மொழிபெயர்க்கலாம்.

அத்தி

அத்தி மரத்தின் இனிப்பாக ருசிகொடுக்கும் பழம். அத்தி மரத்திற்கு முற்கள் இருக்காது.

முற்புதர்

முட்களுள்ள ஒரு செடியோ அல்லது புதரோ.

திராட்சை

திராட்சைக் கொடியின் இனிப்பான பழம். திராட்சைக் கொடியில் முற்கள் இருக்காது.

நெருஞ்சிச் செடி

முட்களுள்ள ஒரு கொடியோ அல்லது புதர்ச்செடி ஆகும்.

மக்களுடையக் கிரியைகள் அவர்கள் எவ்வாறானவர்கள் என்பதைக் காட்டிவிடும் என்பதை சொல்லும் உருவகம் தான் இந்த வசனங்கள். வேண்டுமானால், UDB இல் உள்ள கடைசி வாக்கியத்தில் இருக்கிறது போல விளக்கலாம்: "அதே வழியில்..."

Luke 6:45

(இயேசு மக்களை நியாந்தீர்க்கக்கூடாது என்பது பற்றி கூட்டத்தாருக்குப் தொடர்ந்து போதித்தார்)

மக்கள் பாதுகாப்பான இடத்தில் பொக்கிஷங்களை சேர்த்துவைக்கிறதற்கும் ஒரு மனிதனுடைய நினைவுகளையும் இந்த வசனங்களில் உள்ள உருவகம் ஒப்பிடுகிறது. UDB இல் உள்ளது போல உவமை அணியில்லாமல் இதை மொழிபெயர்த்து பயன்படுத்தலாம்.

நல்ல மனிதன்

"நல்லவன்." "நல்ல" என்கிற வார்த்தை நீதிமானை அல்லது நேர்மையானவனை இங்கு குறிக்கிறது. "மனிதன்" என்கிற வார்த்தை ஆண் அல்லது பெண்ணைக் குறிக்கிறது. இதை "ஒரு நல்ல ஆள்" அல்லது "நல்ல மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய இருதயத்தின் நல்ல பொக்கிஷம்

"அவனுடைய இருதயத்தில் அவன் கொண்டிருக்கும் நல்லக் காரியங்கள்" அல்லது "அவன் மதிக்கிறவைகள்."

வெளியே கொண்டு வருகிறது

இதை உருவகம் இல்லாமல் மொழிபெயர்க்கலாம்: "அவனுடைய வாழ்க்கையை வாழுகிறான்" அல்லது "செய்து காண்பிக்கிறான்" அல்லது "காட்டுகிறான்" (UDB).

நல்லது எதுவோ அதை

"நல்லக் காரியங்கள்"

அவனுடைய இருதயத்தின் நிறைவினால் அவனுடைய வாய் பேசுகிறது

"அவனுடைய இருதயத்தில் நினைக்கிறவைகள் அவனுடைய வாயிலிருந்து வருகிறவற்றை பாதிக்கறது" அல்லது "அவனுடைய இருதயத்தில் மதிக்கிறவைகள் அவனுடைய வாயிலிருந்து வருகிறவற்றைத் தீர்மானிக்கிறது." இதை இருதயத்தையோ அல்லது வாயையோ குறிப்பிடாமல், "ஒரு மனிதன் என்ன சொல்லுகிறானோ அதையே அந்த மனிதன் நினைத்துக்கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டுகிறது" அல்லது "அவன் நினைத்துக்கொண்டிருப்பவை அவன் என்ன பேசுகிறானோ அதை பாதிக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 6:46-48

(இயேசு மக்களுக்கு தமக்குக் கீழ்ப்படிவதின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்கிறார்)

ஒரு மனிதன் வீட்டைக் கட்டுகிறான்...

கற்பாறையின் மேல் வீட்டைக் கட்டுகிற மனிதனை இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு வாழுகிறவனுக்கு இந்த உருவகம் ஒப்பிடுகிறது.

அஸ்திபாரம்

"அடிப்படை" அல்லது "ஆதாரம்"

கற்பாறை

இது நிலத்துக்கடியில் உள்ள ஒரு பெரிய கடினமான பாறை.

கடினமான பாறையை அஸ்திபாரமாகக் கொண்டு வீட்டைக் காட்டி

"வீட்டின் அஸ்திபாரத்தை ஆழமாக அதை எட்டக்கூடிய அளவு தோண்டி" அல்லது "கடினமானப் பாறையில் வீட்டைக் கட்டவேண்டும்." சில கலாச்சாரத்தில் வீடுகளை கல் அஸ்திபாரத்தில் கட்டுவது அறியப்படாமல் இருக்கலாம். அது போல சமயத்தில், இதை ஒரு பொதுவான முறையில், "திடமான நிலத்தில் வீட்டின் அஸ்திபாரத்தைப் போட வேண்டும் என்று மொழிபெயர்க்கலாம்.

பெரு வெள்ளம்

"வேகமாக நகரும் தண்ணீர்" அல்லது "ஆறு"

எதிராக பாய்ந்து

"எதிராக மோதி"

அது நன்றாகக் கட்டப்பட்டுள்ளதால்

"அந்த மனிதன் அதை நன்றாகக் காட்டியுள்ளதால்"

Luke 6:49

(இயேசு மக்களுக்கு தமக்குக் கீழ்ப்படிவதின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்கிறார்)

ஒரு மனிதன் வீட்டைக் கட்டுகிறான்...

அஸ்திபாரம் இல்லாமல் வீட்டைக் கட்டுகிற மனிதனை இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் வாழுகிறவனுக்கு இந்த உருவகம் ஒப்பிடுகிறது.

அஸ்திபாரம்

"அடிப்படை" அல்லது "ஆதாரம்"

அஸ்திபாரம் இல்லாமல்

இதை, "அவன் ஆழமாகத் தோண்டி முதலாவது அவன் அஸ்திபாரம் போடவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

பெரு வெள்ளம்

"வேகமாக நகரும் தண்ணீர்" அல்லது "ஆறு"

எதிராக பாய்ந்து

"எதிராக மோதி"

உடைந்தது

"கீழே விழுந்து" அல்லது "தனித்தனியாக வந்தது"

Luke 7

Luke 7:1

மக்கள் கேட்கும்படி

இதை, "கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு" அல்லது "மக்களுக்கு"அல்லது "மக்கள் கேட்கும்படி" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 7:2-5

அவனுக்கு பிரியமானவன்

"நூற்றுக்கதிபதியால் மதிக்கப்பட்ட ஒருவன்" அல்லது "அவன் மரியாதை செலுத்தினவன்"

இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டவனாய்

"அவன் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டதினால்"

அவனுடைய அடிமையை மரிப்பதிலிருந்து காப்பாற்ற

"அவன் மரித்துப்போகாமல் இருக்க அவனைக் காப்பாற்றும்படியாக" அல்லது "அவனுடைய அடிமையை மரிக்கவிடாமல் இருக்க"

அவன் தகுதியானவன்

"நூற்றுக்கதிபதி தகுதியானவன்"

நம்முடைய நாடு

"நம்முடைய மக்கள்." இது யூத மக்களைக் குறிக்கிறது.

Luke 7:6-8

உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கொள்ளாதிருங்கள்

"என்னுடைய வீட்டுக்கு வருவதின் மூலம் உங்களை கஷ்டப்படுத்தாதீர்கள்." இதை, "உங்களைக் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை" என்று மொழிபெயர்க்கலாம். நூற்றுக்கதிபதி யேசுவிடம் சாந்தமாகப் பேசிகொண்டிருந்தான்.

என்னுடைய கூரையின் கீழ் நுழைந்து

"என்னுடைய வீட்டுக்குள் வந்து." "என்னுடையக் கூரையின் கீழ் நுழைந்து" என்பது மரபுப்பெயர் ஆகும். உங்களுடைய மொழியில், "என்னுடைய வீட்டுக்குள் வந்து" என்று அர்த்தம் கொள்ளும் மரபுப்பெயர் இருக்குமானால், இங்கு பயன்படுத்துவது நல்லதா என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்

இதை, "கட்டளையை மட்டும் கொடும்" என்று மொழிபெயர்க்கலாம். இயேசு பேசினாலும் தனது வேலையாள் குணமாவான் என்று நூற்றுக்கதிபதி புரிந்துகொண்டான்.

என்னுடைய வேலையாள் குணமாவான்

இங்கு, "வேலையாள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை பொதுவாக "பையன்" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வேலையாள் இளைஞன் என்றும் அவன்மீதுள்ள நூற்றுக்கதிபதியின் பாசத்தையும் காட்டுகிறது.

என்னுடைய வேலையாளுக்கு

இங்கு, "வேலையாள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை "வேலையாள்" என்பதன் சரியான வார்த்தை ஆகும்.

Luke 7:9-10

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்

இயேசு தான் அவர்களுக்கு சொல்லவிருக்கும் ஆச்சரியாமான காரியத்தை வலியுறுத்திச் சொல்ல இதை சொன்னார்.

இதைப் போல விசுவாசத்தை நான் இஸ்ரவேலிலும் கூட பார்த்ததில்லை

கருத்து என்னவென்றால், யூத மக்களிடம் இப்படிப்பட்ட விசுவாசத்தை இயேசு எதிர்பார்க்கிறார் என்பதாகும். ஆனால் அவர்களுக்கு இல்லை. புஜாதியினர் இப்படிப்பட்ட விசுவாசத்தை வைத்திருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இந்த மனிதனுக்கிருந்தது. செய்திருப்பதைப் போல இந்த மறைத்து சொல்லப்பட்ட தகவலை நீங்களும் சேர்த்துக்கொள்ளலாம்.

அனுப்பப்பட்டவர்கள்

"ரோம அதிகாரி இயேசுவிடம் அனுப்பின மக்கள்"

Luke 7:11-15

அது நடந்தது

இந்தப் பதம் கதையின் ஒரு புதுப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதாவது வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தப் பாருங்கள்.

இதோ, ஒரு செத்த மனிதன்

"இதோ" என்கிற வார்த்தை கதையில் செத்துப்போன மனிதனின் அறிமுகத்திற்கு நம்மை அழைக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம். ஆங்கிலம், "ஒரு செத்துப்போன மனிதன் இருந்தான். அவன்..." என்பதைப் பயன்படுத்துகிறது.

நகர வாயில்

இதை, "நகரத்திற்கான நுழைவு வாயில்" என்று மொழிபெயர்க்கலாம்.

தனது தாய்க்கு ஒரே மகன்

"ஒரு பெண்ணின் ஒரே மகன்"

விதவை

கணவனை இழந்த ஒரு பெண்.

அவளுக்காக மிகுந்த மனஉருக்கம் அடைந்து

"அவளுக்காக மிகவும் துக்கப்பட்டு"

முன்னே வந்து

சில மொழிகள் "முன்னே சென்று" அல்லது "கூட்டத்திடம் வந்து" என்று சொல்லும்.

பாடை

இது ஒரு படுக்கை போன்றது. இதில் அடக்கம் பண்ணும் இடத்திற்கு மரித்தவர்களை எடுத்து செல்வர். இது பிணம் அடக்கம் பண்ணப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

தனது அதிகாரத்தை வலியுறுத்தும்படி இயேசு இதைச் சொன்னார். இதன் அர்த்தம், "எனக்குச் செவிகொடுங்கள்" என்பதாகும்,

மரித்த மனிதன்

"செத்துப்போயிருந்த மனிதன்." அந்த மனிதன் இன்னும் மரிக்கவில்லை, அவன் உயிருடன் இருக்கிறன்.

Luke 7:16-17

அவர்கள் எல்லார் மீதும் பயம் வந்தது

இதை, "பயம் எல்லாரையும் ஆட்கொண்டது" அல்லது "அவர்கள் பயத்தால் நிரப்பப்பட்டிருந்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒரு பெரிய தீர்க்கதரிசி

இதுஎதோ ஒரு அடையாளம் தெரியாத தீர்க்கதரிசியை அல்ல, இயேசுவைக் குறிக்கிறது. இதை, "இந்தப் பெரிய தீர்க்கதரிசி" என்று மொழிபெயர்க்கலாம்.

நம்முடைய மத்தியில் எழுப்பப்பட்ட

"நம்முடன் இருக்க வந்த" அல்லது "நமக்கு தோன்றின" அல்லது "நாம் பார்த்துவிட்டோம்"

பார்த்துக்கொள்ளப்பட்ட

"அக்கறைக்காட்டப்பட்ட"

இந்த அறிக்கை

"இந்த வார்த்தை" அல்லது "இந்த செய்தி" அல்லது "இந்தத் தகவல்"

முன்னே சென்றது

"வெளியே சென்றது" அல்லது "பரவியது"

அவரைக் குறித்த இந்த செய்தி முன்னே சென்றது

இதை, மக்கள் இயேசுவைக் குறித்த செய்தியை பரப்பினார்கள்" அல்லது மக்கள் மற்றவர்களிடம் இயேசுவைக் குறித்து சொன்னார்கள்." "இந்த அறிக்கை" என்பது வசனம் 16 மக்கள் சொன்னவற்றைக் குறிக்கிறது.

Luke 7:18-20

அவனிடம் சொன்னார்கள்

"யோவானிடம் சொன்னார்கள்"

இந்த எல்லாக் காரியங்களையும்

"இயேசு செய்துகொண்டிருந்த எல்லாக் காரியங்களையும்"

கர்த்தரிடம் அனுப்பி, சொன்னது

(இயேசுவிடம்) கேட்கும்படி சொல்லி, (யோவான்) கர்த்தரிடத்தில் அனுப்பினான்."

அவர் எங்களை உம்மிடத்தில், "நீர் தான் வரப்போகிறவரா? என்று கேட்கச் சொல்லி அனுப்பினார்

(யோவான்) எங்களை உம்மிடத்தில் அனுப்பினார். "'நீர் தான் வரப்போகிறவரா?' என்று அவர் கேட்கிறார்" அல்லது "(யோவான்) எங்களை உம்மிடத்தில், "நீர் தான் வரப்போகிறவரா' என்று கேட்க அனுப்பினார்." (UDB)

நாம் எதிர்பார்க்கவேண்டியது

"நாம் காத்திருக்கவேண்டியது" அல்லது "நாம் வரும்படிக்கு எதிர்பார்க்கவேண்டியது"

Luke 7:21-23

அசுத்த ஆவிகளிடமிருந்து

இதை, "மக்களை அசுத்த ஆவிகளிடமிருந்து விடுதலை ஆக்கினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

கொடுத்த

"கொடுத்த"

தேவையுள்ள மக்கள்

"ஏழை மக்கள்"

யோவானுக்கு அறிவித்து

யோவானிடம் சொல்லி"

என்னுடையக் கிரியைகளினிமித்தம் என்னை விசுவாசிப்பதை நிறுத்தாத மனிதன் பாக்கியவான் இதை, "என்னுடையக் கிரியைகளினிமித்தம் என்னை விசுவாசிப்பதை நிறுத்தாத மனிதனுக்கு எத்தனை நன்மை" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒருவன்

இது ஒரு குறிப்பிட்ட மனிதன் அல்லாததால், இதை, "மக்கள்" அல்லது யாராயினும்" அல்லது "யாராய் இருந்தாலும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 7:24-26

(இயேசு யோவான் ஸ்நானகனைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்)

நீங்கள் என்னத்தைப் பார்க்க வெளியே செல்லுகிறீர்கள்

இயேசு இந்தப் பதத்தை மூன்று பதில் எதிர்பாராக் கேள்விகளில் பயன்படுத்தினத்தின் காரணம் என்னவென்றால், யோவான் ஸ்நானகன் எப்படிப்பட்ட மனிதன் என்று மக்கள் நினைக்கச் செய்யும்படிக்காகவே. இதை, "இதைப் பார்க்கவா நீங்கள் வெளியே போகிறீர்கள்...? உண்மையில் இல்லை!" அல்லது "நீங்கள் உண்மையில் இதைப் பார்க்க வெளியே போவதில்லை...!" என்று மொழிபெயர்க்கலாம்.

காற்றில் அசையும் நாணலையா

இந்த உருவகத்தை உவமானமாக மொழிபெயர்க்கலாம்: "காற்றினால் அசையும் நாணலைப் போன்ற ஒரு மனிதன்." இதற்கு இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உண்டு. 1. "நாணல் காற்றினால் சுலபமாக அசையும், அதுபோல தனது மனதை சுலபமாக மாற்றிக்கொள்ளுபவனை இது குறிக்கிறது. 2. காற்று வீசும்போது நாணல்கள் சத்தமிடும், அதனால், அதிகமாகப் பேசினாலும் அதில் முக்கியமானக் காரியம் ஒன்றையும் பேசாமல் இருப்பவனைக் குறிக்கலாம்.

மெல்லிய வஸ்திரம் தரித்திருந்து

"விலையேறப்பெற்ற வஸ்திரம் தரித்திருந்து." ஐசுவரியவான்கள் இப்படிப்பட்ட ஆடைகளை அணிவார்கள்.

ராஜாக்களின் அரண்மனைகள்

அரண்மனை என்பது பெரிய விலை உயர்ந்த ராஜா வாழும் வீடு ஆகும்.

ஆனால்

"நீங்கள் அதைப் பார்க்கப் போகவில்லை என்றால், பின்பு"

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

அவர் அடுத்து சொல்லப்போகும் காரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி இயேசு இதை சொன்னார்.

தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் அதிகமாய்

"சாதாரண தீர்க்கதரிசி அல்ல" அல்லது "சாதாரண தீர்க்கதரிசியைவிட முக்கியமான தீர்க்கதரிசி"

Luke 7:27-28

(இயேசு யோவான் ஸ்நானகனைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்)

இவன் தான் எழுதப்பட்டவன்

"அந்த தீர்க்கதரிசியானவன் எழுதப்பட்ட தீர்க்கதரிசிகளுள் ஒருவன்" அல்லது "முன்னமே எழுதப்பட்ட தீர்க்கதரிசிகளுள் ஒருவன் தான் யோவான்."

இதோ...

இந்த வசனத்தில், மல்கியா 3:1 இல் சொல்லப்பட்ட செய்தியாளன் யோவான் தான் என்பதை மல்கியா தீர்க்கதரிசனத்தில் இருந்து இயேசு குறிப்பிடுகிறார்.

உம்முடைய முகத்திற்கு முன்பதாக

"உமக்கு முன்பாக" அல்லது "உமக்கு முன்பாகப் போய்." "உமக்கு" என்கிற வார்த்தை ஒருமையில் உள்ளது ஏனென்றால், தேவன் மேசியாவிடம் இந்தக் கூற்றை சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு கூட்டத்தாரோடு பேசிக்கொண்டிருந்தார், அதனால் "உங்களுக்கு" என்பது பன்மையில் இருக்கிறது. இயேசு இதை, தான் அடுத்து சொல்லப்போகும் ஆச்சரியமானக் காரியத்தின் உண்மையை வலியுறுத்த இதை சொன்னார்.

பெண்களிடத்தில் பிறந்தவர்களில்

"பெண் பிறக்கச் செய்தவர்களில்." இந்த உவமான அணி எல்லா மக்களையும் குறிக்கிறது. இதை, "இதுவரையில் வாழ்ந்த எல்லா மனிதரிலும்" என்று மொழிபெயர்க்கலாம்.

யோவானைவிட பெரியவன் ஒருவனும் இல்லை

இதை ஆக்கப்பூர்வமாக, "யோவான் தான் மிகப் பெரியவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய ராஜ்யத்தில் மிகவும் சிறியவன்

தேவன் நிறுவப்போகும் ராஜ்யத்திற்கு பங்குள்ள ஒருவனை இது குறிக்கிறது. இதை, "தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனைவிடப் பெரியவனாக

"யோவானை விட உயர்ந்த ஆவிக்குரிய அந்தஸ்த்தில்"

Luke 7:29-30

(இந்த புத்தகத்தின் ஆசிரியர் லூக்கா மக்கள் எவ்வாறு யோவானுக்கும் இயேசுவுக்கும் பதில் அளித்தனர் என்று தனது கருத்தைக் கூறுகிறார்)

தேவன் நீதியானவர் என்று அறிவித்தனர்

"தேவன் தன்னைத் தான் நீதியுள்ளவராகக் காண்பித்தார் என்று அவர்கள் சொன்னார்கள்" அல்லது "தேவன் நீதியாய் செயல்பட்டார் என்று அவர்கள் சொன்னார்கள்"

யோவானுடைய ஞானஸ்நானத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள்

"யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள்" அல்லது " யோவான் ஞானஸ்நானம் பண்ணினவர்கள்"

அவரால் ஞானஸ்நானம் கொடுக்கப்படாதவர்கள்

"யோவான் ஞானஸ்நானம் கொடுக்காதவர்கள்" அல்லது "யோவானால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள மறுத்தவர்கள்" அல்லது "யோவானின் ஞானஸ்நானத்தை புறக்கணித்தவர்கள்"

அவர்களுக்கான தேவ ஆலோசனை

"அவர்களுக்கான தேவனுடைய நோக்கம்" அல்லது "அவர்களுக்கான தேவனுடையத் திட்டம்" அல்லது "தேவன் அவர்களுக்காக செய்ய விரும்பியது"

அவர்களுக்கான தேவ ஆலோசனையைத் தள்ளினார்கள்

"தேவன் அவர்களுக்கு சொன்னதற்கு கீழ்ப்படியாமல் இருக்கத் தெரிந்துகொண்டார்கள்" அல்லது "தேவனுடைய சித்தத்தை நம்ப மறுப்பதைத் தெரிந்துகொண்டார்கள்"

அவனால் ஞானஸ்நானம் பெறாதவர்கள், அவர்களுக்கான தேவ ஆலோசனையை தள்ளிவிட்டார்கள்

யோவானின் ஞானஸ்நானத்தை அவர்கள் தள்ளினதினால் அவர்களுக்கான தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆவிக்குரிய ஆயத்தம் இல்லாதிருந்தார்கள் எனபதை சொல்லுவதைப் போல உள்ளது.

Luke 7:31-32

இயேசு யோவான் ஸ்நானகனையும் தன்னையும் மக்கள் எவ்வாறு புறக்கணித்தனர் என்பதைக் கூறுகிறார்)

எதற்கு நான் ஒப்பிடுவது

இது பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம் இது. இயேசு தான் செய்யப்போகும் ஒப்புமையை அறிமுகம் செய்ய இதை பயன்படுத்தினார். இந்த முழு கேள்வியையும், "இந்த சந்ததியை இதற்கு நான் ஒப்பிடுகிறேன். இதைப் போலத்தான் இருக்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்,

இந்த சந்ததியின் மக்கள்

"இப்போழுது வாழுகிற மக்கள்" அல்லது "இந்த மக்கள்" அல்லது "இந்த சந்ததியின் மக்களாகிய நீங்கள்"

அவர்கள் இது போல இருக்கிறார்கள்

இது இயேசுவின் ஒப்பிடுகிரறதின் துவக்கம். இது உவமானம் ஆகும். மற்ற குழந்தைகள் நடந்துகொண்டதைப் பார்த்து ஒரு போதும் திருப்தியடையாத குழந்தைகளைப் போல இந்த தலைமுறையின் மக்கள் இருக்கிறார்கள் என்று இயேசு கூறுகிறார்.

சந்தை

இது மக்கள் தங்களது பொருட்களை விற்கும்படி வரும் ஒரு பெரிய திறந்தவெளி இடம்.

புல்லாங்குழல்

இது ஒரு முனையில் அல்லது முனையின் மீது காற்று ஊத்தி வாசிக்கப்படும் ஒரு நீளமான உள்ளே காலியான இசைக் கருவி ஆகும்.

நீங்கள் ஆடவில்லை

"ஆனால் நீங்கள் இசைக்கு ஆடவில்லை"

நீங்கள் அழவில்லை

"ஆனால் நீங்கள் எங்களோடு அழவில்லை.."

Luke 7:33-35

(இயேசு மக்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இயேசு அவர்களைக் குழந்தைகளோடு ஒப்பிடுகிறார் என்று விளக்கிக்கொண்டிருந்தார்)

'# அவனுக்கு பிசாசு இருக்கிறது' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்

யோவானைக் குறித்து மக்கள் சொன்னதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார். இதை எதிர்மறையாக, "அவனுக்கு பிசாசு இருக்கிறது" அல்லது "அவனுக்கு பிசாசு இருக்கிறதினால் அவனைக் குற்றப்படுத்துகிறீர்கள்" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அப்பம் புசியாமல்

"உணவு சாப்பிடாமல்." இதை, "அடிக்கடி உபவாசித்து" என்று மொழிபெயர்க்கலாம். இது யோவான் உணவை ஒருபோதும் சாப்பிட்டதில்லை என்று அர்த்தம் கொள்ள அல்ல.

மனுஷக் குமாரன்

இயேசு தான் தான் மனுஷக் குமாரன் என்று மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினதினால், இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம். '# இதோ, இவன் பெருந்தீனிக்காரன்' என்று சொல்லுகிறீர்கள்

தன்னை மனுஷக் குமாரன் என்று மக்கள் சொன்னதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார். இதை எதிர்மறையாக, "அவன் பெருந்தீனிக்காரன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்" அல்லது "அவன் நிறைய உணவு சாப்பிடுகிறதினால் அவனைக் குற்றப்படுத்துகிறீர்கள்" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். "மனுஷக் குமாரனை" மனுஷக் குமாரனாகிய நான்" என்பதைப் போல மொழிபெயர்க்காதீர்கள் ஆனால், எதிர்மறைக் கூற்று, "நான் பெருந்தீனிக்காரன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் பெருந்தீனிக்காரர்

"அவர் பேராசையாக தின்பவர்" அல்லது "அவர் வழக்கமாக அதிகமாக உண்பவர்"

குடிகாரன்

"குடிப்பவன்" அல்லது "வழக்கமாகக் குடிப்பவன்"

ஞானமானது தனது பிள்ளைகளால் நீதியுள்ளதென்று எண்ணப்படும்

இந்த சூழ்நிலைக்கு இயேசு சேர்க்கும் ஒரு நீதிமொழியாக இது இருக்கலாம். ஏனென்றால், அவரையும் யோவானையும் புறக்கணித்தவர்கள் ஞானமாக செயல்படவில்லை.

Luke 7:36-38

பரிசேயரில் ஒருவன்

இது ஒரு புதியக் கணக்கின் ஆரம்பம்.

மேஜையில் சாய்ந்து உண்பதற்காக இருந்தான்

"மேஜையில் உணவிற்காக அமர்ந்தான்." இது மேஜையை சுற்றி உட்கார்ந்து இரவு உணவு அருந்தும் மனிதர்கள் இவ்வாறு நிம்மதியாக அமர்ந்து உணவை உண்பது வழக்கம்.

பாவியாய் இருந்தவள்

"பாவ வாழ்க்கை வாழ்ந்தவள்" அல்லது "பாவ வாழ்க்கை வாழ்வதற்கான பேரைப் பெற்றவள்." அவள் விபச்சாரியாக இருந்திருக்கலாம்.

கண்டப் பிறகு

இது ஒரு பெரிய வாக்கியத்தைத் துவங்குகிறது. UDB இல் உள்ளது போல, பெரிய வாக்கியத்தை சிறிது சிறிதாக பிரிப்பது சில மொழிகளில் மிகவும் இயற்கையாக இருக்கும்.

வெண்கலவைக் கல் குடுவை

"மெல்லிய கல்லினால் ஆன ஒரு கலசம்." பரணி என்பது மெல்லிய வெள்ளைக் கல். மக்கள் விலையேறப்பெற்ற பொருட்களை வெண்கலவைக் கல் கலசத்தில் சேர்த்து வைப்பார்கள்.

பரிமளதைலம்

"பரிமளதைலத்தோடு." இந்த தைலம் நல்ல வாசனையைக் கொண்டுள்ள ஒரு எண்ணை இதுவாகும். மக்கள் தங்கள் மீது தேய்த்துக்கொண்டோ அல்லது தங்களது துணிகளில் பூசிக்கொண்டோ நன்றாக வாசனையாய் இருப்பதற்கு அப்படி செய்வார்கள்.

அவளது தலையில் உள்ள முடியினால்

"அவளுடைய முடியினால்"

Luke 7:39-40

அவன் அவனுக்குள்ளே நினைத்து சொல்லியது

"அவன் தனக்குத்தானே சொன்னது"

இயேசு தீர்க்கதரிசியானால், பின்பு அவர் அறிவார்

இயேசு பாவமானப் பெண் தன்னைத் தொட அனுமதித்ததால் இயேசு தீக்கதரிசி அல்ல என்று பரிசேயன் எண்ணினான். இதை, "இயேசு தீர்க்கதரிசி இல்லையென்று தெளிவாகத் தெரிகிறது. அவர் தீர்க்கதரிசியானால், அவருக்குத் தெரிந்திருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

சீமோன்

இது இயேசுவைத் தனது வீட்டிற்கு அளித்த பரிசேயனுடைய பெயர் இதுவாகும். இது சீமோன் பேதுரு அல்ல.

Luke 7:41-43

(இயேசு மன்னிக்கப்பட்ட மனிதர்கள் குறித்து ஒரு கதையை சீமோனுக்கு சொன்னார்)

ஒரு கடன் கொடுப்பவனுக்கு இரண்டு கடனாளிகள் இருந்தனர்

"கடன் கொடுப்பவனுக்கு இரண்டு கடனாளிகள் இருந்தனர்"

ஐநூறு தினார்கள்

"ஐநூறு நாள் கூலி." "தினார்கள்" என்பது "தினார்" என்பதன் பன்மைச் சொல் ஆகும்.

ஐம்பது தினார்கள்

"ஐம்பது நாள் கூலி"

அவர்களுக்குக் கொடுக்கும்படியான பணம் இல்லாததினால்

"அதைத் திருப்பிச் செலுத்தும்படியான பணம் அவர்களுக்கு இல்லாதிருந்ததால்"

அவன் அவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டான்

"அவன் அவர்களுடையக் கடன்களை மன்னித்தான்" அல்லது "அவர்களுடையக் கடன்களைத் தள்ளிவிட்டான்."

நான் நினைக்கிறேன்

சீமோன் தனது பதிலைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாய் இருந்தான். இதை, "அநேகமாக" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் சரியாக நியாயம் தீர்த்தீர்கள்

நீங்கள் சரி."

Luke 7:44-45

அந்த பெண்ணிடம் திரும்பினப் பிறகு

"பெண்ணைப் பார்த்து." இயேசு அந்தப் பெண்ணிடம் திரும்பினத்தின் மூலம் சீமோனின் கவனத்தையும் அந்தப் பெண்ணிடம் திருப்பினார்.

என்னுடைய கால்களுக்குத் தண்ணீர்... ஒரு முத்தம்

வரவேற்கப்பட்ட விருந்தாளிகளுக்கு காட்டப்படும் அடிப்படையான வரவேற்கும் முறை இருக்கிறது. அந்தப் பெண்ணின் மிகவும் திகமான நன்றியுணர்வை சீமோனின் நாகரீகம் இல்லாமைக்கு இயேசு ஒப்பிடுகிறார்.

என்னுடைய பாதங்களை முத்தமிடுவதை அவள் நிறுத்தவில்லை

இதை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தலாம்: "என்னுடைய பாதங்களைத்# தொடர்ந்து முத்தமிட்டாள்."

Luke 7:46-47

(இயேசு சீமோனிடம் பேசுவதைத் தொடர்ந்தார்)

என்னுடைய தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணவில்லை

"என்னுடைய தலையில் எண்ணை பூசவில்லை." ஒரு கனம் பொருந்திய விருந்தினரை வரவேற்கும் முறை இது. இதை, "என்னுடைய தலையில் எண்ணைப் பூசி என்னை வரவேற்கவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடையப் பாதங்களை அபிஷேகம் செய்து

இது பொதுவான வழக்கம் அல்ல; அந்தப் பெண் அப்படி செய்து இயேசுவை மிகவும் கனப்படுத்தினாள்.

அதிகமாக மன்னிக்கப்பட்டு

இதை செய்வினையாக, "அதிகமாக மன்னிப்பைப் பெற்றவன்" அல்லது "தேவன் அதிகமாக மன்னித்தவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

மிகவும் அன்புகூர்ந்தாள்

"தன்னை மன்னித்தவரை மிகவும் நேசித்தாள்" அல்லது "தேவனையும் அதிகமாக நேசித்தாள்." சில மொழிகளில் யாரை நேசிக்கிறாள் என்பதை சொல்லவேண்டும்.

கொஞ்சமாக மன்னிக்கப்பட்டவன்

"கொஞ்சமாக மன்னிக்கப்பட்டவன்" அல்லது "கொஞ்சமாக மன்னிக்கப்பட்டவன் யாராயினும்." இந்த வாக்கியத்தில் ஒரு பொதுவான கொள்கை இயேசு சொல்லுகிறார். எப்படியாயினும், சீமோன் என்பவனுக்கு கொஞ்சம் தான் அன்பிருக்கிறது என்று இயேசு சொல்லுவதை சீமோன் புரிந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறான்.

Luke 7:48-50

உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது

"நீ மன்னிக்கப்பட்டாய்." இது செய்வினை சொல்லோடு சேர்த்து வெளிப்படுத்தலாம்: "நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்."

உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது

"உன்னுடைய விசுவாசத்தினால் நீ ரட்சிக்கப்பட்டாய்." "விசுவாசம்" என்கிற காரியத்தை ஒரு வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "நீ விசுவாசிக்கிறதால், நீ காப்பாற்றப்படுகிறாய்."

சமாதானத்தோடு போ

இது "போய் வருகிறேன்" என்றும் மற்றும் ஆசீர்வாதத்தையும் அதே நேரத்தில் சொல்லும் ஒரு வழி. இதை, "நீ போகிறதால், இனி கவலைக் கொள்ளாதே" அல்லது "நீ போகும்போது தேவனுடைய சமாதானம் உன்னோடிருக்கும்போது (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 8

Luke 8:1-3

பின்பு அது நடந்தது

கதையின் புது பகுதியின் துவக்கத்தை இந்தப் பதம் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வழி இருக்குமானால், இங்கு அதைப் பயன்படுத்த பாருங்கள்.

அசுத்த ஆவிகளிடத்திலிருந்தும் வியாதிகளில் இருந்தும் குணமாக்கப்பட்டவன்

இதை செய்வினை வினைச் சொற்களோடு, "அசுத்த ஆவிகளிடத்திலிருந்தும் வியாதிகளில் இருந்தும் இயேசுவால் குணமாக்கப்பட்டவன்."

மரியாள் ... மற்ற அனேக பெண்கள்

பெண்களில் மூன்று பேரும் பெயரிடப்பட்டிருந்தனர்: மரியாள், யோவன்னா, சூசன்னா.

ஏரோதின் காரியக்காரனாகிய கூசாவின் மனைவி யோவன்னா

இதை, கூசாவாகிய ஏரோதின் காரியக்காரனின் மனைவி யோவன்னா" என்று மொழிபெயர்க்கலாம். யோவன்னா கூசாவின் மனைவி. கூசா என்பவன் ஏரோதின் காரியக்காரன்.

Luke 8:4-6

விதைக்கிறவன் சில விதைகளை விதைக்கும்படி வெளியே போனான்

இதை, "ஒரு விவசாயி நிலத்தில் சில விதைகளை விதைக்கப் புறப்பட்டுப் போனான்."

வழியருகே

"சாலை" அல்லது "பாதை." மக்கள் நடந்து நடந்து நிலம் கடினமாகி இருக்கலாம்.

அவைகள் காலால் மிதிக்கப்பட்டது

இதை, "ஆவிகள் வளரமுடியாமல் மக்கள் அடிக்கடி அவைகளை மிதித்தனர்" அல்லது "UDB இல் உள்ளது போல செய்வினை வினை சொல்லோடு" மொழிபெயர்க்கலாம்.

அவைகளை பட்சித்துபோட்டது

"அவைகளை எல்லாம் உண்டு"

அவைகள் உலர்ந்துபோயிற்று

"செடிகள் காய்ந்து உதிர்ந்து போனது"

அவைகளுக்கு ஈரத்தன்மை இல்லாதிருந்தது

இதை, "நிலம் மிகவும் காய்ந்து இருந்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 8:7-8

(இயேசு உவமை சொல்வதைத் தொடர்ந்தார்)

அவைகளை நசுக்கி

முட்செடிகள் எல்லா வளமையையும், தண்ணீரையும், சூரிய ஒளியையும் எடுத்து விவசாயி அதை நன்றாக வளர்க்கவிடாமல் செய்கிறது.

கதிர் வளர்த்து

"அறுவடையை வளர்த்து" அல்லது "அதிக விதைகளை வளர்த்து"

கேட்கிறதற்கு காதுள்ள எவனும் கேட்கக்கடவன்

சில மொழிகளில் இரண்டாமவன் இலக்கணத்தைப் பயன்படுத்துவது மிகவும் இயற்கையாக இருக்கும்: "கேட்கிறதற்கு காதுள்ள நீங்கள், கேளுங்கள்."

கேட்கிறதற்கு காதுள்ள எவனும்

"கேட்க முடியும் யாராயினும்" அல்லது "என்னைக் கேட்கிற யாராயினும்"

கேட்கட்டும்

"அவன் நன்றாகக் கவனிக்கட்டும்" அல்லது "நான் சொல்லுகிறதற்கு கவனம் செலுத்தட்டும்."

Luke 8:9-10

நீங்கள் புரிந்துகொள்ளக் கூடிய பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள்

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடும் மறைத்து சொல்லப்பட்ட தகவலான, தேவன் தான் கொடுக்கிறவர் என்கிற கூற்றோடும் சேர்த்து, "தேவன் உங்களுக்குப் புரிந்துகொள்ளும் ஈவைக் கொடுத்திருக்கிறார்" அல்லது "தேவன் நீங்கள் புரிந்துகொள்ளும்படி உங்களுக்கு முடியப்பண்ணினார்."

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை

மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகள் இவைகள். இவைகளை இயேசு வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

கண்டாலும் அவர்களால் உண்மையில் பார்க்கமுடியாது

"அவர்கள் பார்த்தாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது." வினைச் சொல் வினையேற்றானை வினவினால், "அவர்கள் காரியங்களைப் பார்த்தாலும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது" அல்லது "அவர்கள் காரியகள் நடப்பதைப் பார்த்தாலும் அவர்களால் அவைகளைப் புரிந்துகொள்ள முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.

கேட்கிறதினால் அவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை

"அவர்கள் கேட்கிறதினால், அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்."வினைச் சொல் வினையேற்றானை வினவினால், "அவர்கள் அறிவுரைகளைக் கேட்டாலும் அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளமாட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 8:11-13

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார். அவர் அந்த உவமையின் அர்த்தத்தை விளக்கிக்கொண்டிருந்தார்)

அவர்களுடைய இருதயத்தில் இருக்கிற வார்த்தையைபிசாசு வந்து எடுத்துக்கொண்டு போவான்

இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கேட்டிருந்த தேவனுடைய வார்த்தையை அவன் மறக்கச் செய்கிறான் என்பதாகும்.

எடுத்துக்கொண்டு

இந்த உவமையில், ஒரு பறவை விதைகளைப் பிடுங்குவது ஒரு உருவகம் ஆகும். இந்த படத்தை வைக்க உங்கள் மொழியில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அவர்கள் விசுவாசம் வைத்து ரட்சிக்கப்படமுடியாமல்

இதை ஒரு செய்வனை வினைச் சொல்லோடு, "தேவன் அவர்களை இரட்சிக்கும் பலனில்லாமல் போக அவர்கள் விசுவாசியாமல்" என்று மொழிபெயர்க்கலாம். இதுவே பிசாசின் குறிக்கோளாய் இருக்கிறதினால், இதை, "பிசாசு, 'அவர்கள் விசுவாசிக்கக்கூடாது என்றும் அவர்கள் இரட்சிக்கப்படக்கூடாது என்றும் நினைக்கிறதினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

சோதனை காலத்தில் பின்வாங்கிப்போவார்கள்

"அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கும்போது அவர்கள் விசுவாசத்திலிருந்து விழுந்து போவார்கள்" அல்லது "அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கும்போது அவர்கள் விசுவாசிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

Luke 8:14-15

(இயேசு உவமையின் அர்த்தத்தை விளக்குவதைத் தொடர்ந்தார்)

கவலைகளால் நெருக்கப்படுகிறார்கள்

"இந்த வாழ்க்கையைக் குறித்த கவலைகளும் ஐசுவரியங்களும் இன்பங்களும் அவர்களை நெருக்குகிறது" அல்லது "களைகள் செடிகளை வளர விடாமல் தடுப்பது போல, கவலைகளும், ஐசுவரியங்களும், இந்த வாழ்க்கையின் இன்பங்களும் இந்த மக்களை முதிர்ச்சியடைவதிலிருந்து தடுக்கிறது."

கவலைகள்

"மக்கள் நினைத்து கவலைப்படும் காரியங்கள்"

இந்த வாழ்க்கையின் இன்பங்கள்

"மக்கள் இந்த வாழ்க்கையில் அனுபவிக்கும் காரியங்கள்"

அவரால் முதிர்ச்சியினுடைய பலனை அடைய முடிவதில்லை

"பழுத்த கனியை அவர்கள் கொடுப்பதில்லை." இந்த உருவகம் உவமானமாக மொழிபெயர்க்கப்படலாம்: "வளர்ந்து கனிகொடாத ஒரு செடியைப் போல அவர்கள் முதிர்ச்சி அடைந்து நல்ல காரியங்களை செய்கிறதில்லை."

பொறுமையுடன் கனிகொடுத்து

"விடாமுயற்சி செய்து கனிகொடுத்து." இந்த உருவகம் உவமானமாக மொழிபெயர்க்கப்படலாம்: "நல்ல செடிகள் பொறுமையாக இருந்து நல்லக் கனியைக் கொடுப்பது போல, அவர்கள் நல்லக் காரியங்களை செய்வார்கள்."

Luke 8:16-18

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

ஒரு விளக்கு

இது ஒரு திரியுடனும் எரிப்பதற்காக ஒலிவ எண்ணையுடனும் இருக்கும் ஒரு சிறு குவளை போன்றது.

விளக்குத் தண்டு

"ஒரு மேஜை" அல்லது "ஒரு அலமாரி"

அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளும் இல்லை

இதை ஆக்கப்பூர்வமாக, "மறைத்து வைக்கப்பட்ட எல்லாக் காரியங்களும் வெளிப்படுத்தப்படும்" என்று மொழிபெயர்க்கலாம்.

வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை

இதை, "ரகசியம் என்று சொல்லப்படும் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து அறியப்படும்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் எவ்வாறு கவனிக்கிறீர்கள்

இதை, "நீங்கள் உங்களுக்கு சொல்லுகிறவற்றிற்கு நீங்கள் எப்படி செவிசாய்க்கிறீர்கள்" அல்லது "தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் எவ்வாறு செவிசாய்க்கிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உள்ளவன் எவனோ

"புரிந்துகொள்ளுதலை உடையவன் எவனோ" அல்லது "நான் கற்றுக்கொடுப்பதை பெற்றுக்கொள்ளுகிறவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுக்கு இன்னும் அதிகம் கொடுக்கப்படும்

"அவனுக்கு அதிகம் கொடுக்கப்படும்." இதை, செய்வினை வினைச் சொல்லோடு, "தேவன் அவனுக்கு அதிகமாகக் கொடுப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

இல்லாதவனுக்கு

இதை, "புரிந்துகொள்ளுதல் இல்லாதவனுக்கு" அல்லது "நான் கற்றுக்கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளாதவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 8:19-21

சகோதர்கள்

இவர்கள் இயேசுவின் இளைய சகோதரர்கள்.

அவருக்கு சொல்லப்பட்டது

"மக்கள் அவரிடம் சொன்னார்கள்" அல்லது "யாரோ ஒருவன் அவரிடம் சொன்னான்"

உம்மைக் காண வாஞ்சையாய்

"உம்மைப்ப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்" அல்லது "அவர்கள் உம்மைப் பார்க்க விரும்புகிறார்கள்"

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே எனது தாயும் எனது சகோதரர்களும் ஆவர்

இந்த உருவகத்தை உவமானமாக மொழிபெயர்க்கலாம்: "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிறவர்கள் எனக்கு தாயைப் போன்றவர்களும் சகோதரர்களைப் போன்றவர்களும் ஆவர்" அல்லது "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிறவர்கள் எனக்கு தாயைப் போலவும் சகோதரர்களைப் போலவும் முக்கியமானவர்கள்."

Luke 8:22-23

இப்பொழுது அது நடந்தது

கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தை குறிக்கும்படி இந்தக் கூற்று இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்குமானால், இங்கு அதை செய்ய பாருங்கள்.

அவர்கள் படகில் சென்றபொழுது

"அவர்கள் சென்றபொழுது"

தூங்கினார்

"உறங்கினார்"

ஒரு பலத்தக் காற்றோடு கூடிய இடிமுழக்கம் உண்டாயிற்று

"சடிதியில் மிகவும் பலமானக் காற்று வீசத் துவங்கியது"

Luke 8:24-25

எஜமானனே

இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது "எஜமானன்" என்கிற வார்த்தையின் பொதுவான வார்த்தை அல்ல. இது அதிகாரத்தை உடையவனைக் குறிக்கிறது; ஒருவனை அடிமையாக வைத்துள்ளதைக் குறிக்கிறதில்லை. இதை, "முதலாளி" அல்லது "மென்முறையாளர்" அல்லது "அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை பொதுவாக அழைக்கும் வார்த்தையைப் பயன்படுத்தலாம். எ.கா. "ஐயா"

கடிந்துகொண்டு

"கடினமாகப் பேசி"

அவைகள் நின்றது

"காற்றும் அலைகளும் நின்றது"

உங்களுடைய விசுவாசம் எங்கே?

இது ஒரு பதில் எதிர்பாராத கேள்வி. அவர்கள் அவர்களை அவர் பார்த்துக்கொள்ளுவர் என்று நம்பாததால், இயேசு அவர்களை மென்மையாகக் கடிந்துகொண்டார். இதை, "உங்களுக்கு விசுவாசம் வேண்டும்" அல்லது "நீங்கள் என்னை நம்பியிருந்திருக்க வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

யார் இவர்? இதை, "என்ன வகை மனிதர் இவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் கட்டளையிடுகிறார்

இது புதிய வாக்கியத்தின் துவக்கம்: "அவர் கட்டளை இடுகிறார்."

Luke 8:26-27

கதரேனருடைய நாட்டில்

கதரேனர்கள் கதரேன் பட்டணத்து மக்கள் ஆகும்.

கலிலேயாவின் எதிராக

கலிலேயா கடலின் மறுப்பக்கத்தில்"

பட்டணத்திலிருந்து வந்த ஒரு மனிதன்

"கதரேன் பட்டணத்திலிருந்து வந்த ஒரு மனிதன்"

பிசாசுகள் இருந்தன

"அவன் பிசாசுகளால் அடக்கப்பட்டிருந்தான்"

அவன் துணி அணியாமல் இருந்தான்

"அவன் துணி போடாமல் இருந்தான்"

கல்லறைகள்

இது செத்த மக்களை அடக்கம் பண்ணப்பட்ட இடங்கள், அநேகமாக குகைகள். மனிதன் அதில் வாழுகிறான் என்னும் உண்மை நிலத்தில் தோண்டப்பட்ட குழி அல்ல என்பதைக் குறிக்கிறது.

Luke 8:28-29

அவன் இயேசுவைப் பார்த்த பொழுது

"பிசாசுகள் இருந்தவன் இயேசுவைப் பார்த்த பொழுது"

அவன் கத்தினான்

"அவன் அலறினான்" அல்லது "அவன் கூக்குரலிட்டான்"

அவருக்கு முன்பாக விழுந்தான்

"இயேசுவுக்கு முன்பாக நிலத்தில் விழுந்தான்." அவன் தற்செயலாக விழவில்லை. அவன் இயேசுவுக்கு பயந்ததினால் இப்படி செய்தான்.

உரத்த சத்தமாய் சொன்னான்

"சத்தமாய் அவன் சொன்னான்" அல்லது "அவன் கத்தினான்"

எனக்கும் உமக்கும் என்ன

இதை, "ஏன் என்னை கஷ்டப்படுத்துகிறீர்"

அவனை அனேக முறை பிடித்திருந்தது

"அவனை அனேக முறை பிடித்திருந்தது." இதை, "அனேக முறை அது அவனுக்குள் போய் இருந்தது" என்று மொழிபெயர்க்கலாம். இந்த மற்றும் அடுத்த வாக்கியம், இயேசு அவனிடம் போவதற்கு முன்னதாக, பிசாசு அனேக முறை என்ன செய்தது என்பதை சொல்லுகிறது.

அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டப்பட்டிருந்து காவலில் வைக்கப்பட்டிருந்தாலும்,

இதை செய்வினை வினைச் சொற்களோடு, "மக்கள் அவனை சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டப்பட்டிருந்து காவலில் வைத்திருந்தாலும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 8:30-31

சேனை

இது அனேக மக்களையோ அல்லது சேனை வீரர்களையோ குறிக்கப் பயன்படும் வார்த்தையோடு வைத்து இதை மொழிபெயர்க்கவும். இதை, "ஒரு சேனை" அல்லது "படை" என்று மொழிபெயர்க்கலாம்.

பாதாளத்திற்குப் போகும்படி

"மனிதனை விட்டு பாதாளத்திற்குப் போகும்படி"

Luke 8:32-33

மலையில் அங்கு அநேகப் பன்றிகளுள்ள ஒரு கூட்டம் மேய்ந்துகொண்டிருந்தது

"மலையில் அநேகப் பன்றிகள் உள்ள ஒரு கூட்டம் புல்லைத் தின்றுகொண்டிருந்தது"

துரிதப்பட்டு

"வேகமாக ஓடி"

Luke 8:34-35

அவைகள் ஓடியது

"அவைகள் வேகமாக ஓடியது"

அவனுக்குள் இருந்த பிசாசுகள் விரட்டப்பட்ட மனிதனைக் கண்டு

"பிசாசுகள் விட்டுப்போன மனிதனைக் கண்டு"

அவன் துணி அணிந்து

"அவன் ஆடை அணிந்திருந்தான்"

அவன் சரியான மனநிலையில் இருந்தான்

"அவன் தெளிவடைந்திருந்தான்" அல்லது "அவன் சாதரணமாக (எல்லாரைப்போல) நடந்துகொண்டான்."

இயேசுவின் பாதத்தில் அமர்ந்துகொண்டு

இதை, "நிலத்தில் அமர்ந்துகொண்டு இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் பயந்திருந்தனர்

"அவர்கள் இயேசுவைக் குறித்து பயந்திருந்தார்கள்."

Luke 8:36-37

அங்கு நடந்தவற்றைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்

இயேசு அந்த மனிதல் இருந்து பிசாசுகளைத் துரத்தும் போது கூட இருந்த மக்கள்.

காப்பற்றப்பட்ட

"காப்பாற்றப்பட்ட" அல்லது "விடுதலையாக்கப்பட்ட" அல்லது "குணமாக்கப்பட்ட"

கதரேன் நாட்டில்

"அந்தப் பகுதி" அல்லது "கதரேன் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த இடம்"

திகில் அவர்களைப் பிடித்திருந்தது

"மிகவும் பயந்து போனார்கள்"

Luke 8:38-39

ஆனால் அந்த மனிதன்

"இயேசுவும் அவரது சீடர்களும் போகும் முன்னமே" அல்லது "இயேசுவும் அவரது சீடர்களும் கடல் பிரயாணம் போகும் முன்பு" என்று சிலர் (வாக்கியத்தை) துவங்கவேண்டி இருக்கும்.

இயேசு அவனை அனுப்பினார்

"இயேசு மனிதனை வெளியே அனுப்பினார்"

உன்னுடைய வீட்டுக்கு

"உன்னுடைய வீட்டாரிடத்திற்கு" அல்லது "உன்னுடையக் குடும்பத்திற்கு"

Luke 8:40-42

கூட்டத்தார் அவரை வரவேற்றார்கள்

இதை, "கூட்டத்தார் சந்தோஷமாக அவரை வாழ்த்தினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

இதோ, யவீரு என்பவன் அங்கு வந்தான்

"இதோ" என்னும் வார்த்தை கதையின் புதிய மனிதன் யவீருவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்கலாம். ஆங்கிலம், "அங்கு ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யவீரு ஆகும்" என்று பயன்படுத்துகிறது.

ஜெப ஆலயத்தலைவர்களில் ஒருவன்

"அந்த இடத்தின் ஜெப ஆலயத்தலைவர்களில் ஒருவன்" அல்லது "அந்தப் பகுதியின் ஜெப ஆலயத்தில் மக்கள் கூடும் ஜெப ஆலயத்தின் ஒரு தலைவன்"

அவன் இயேசுவின் காலில் விழுந்தான்

  1. "இயேசுவின் பாதத்தில் குனிந்தான்" அல்லது 2. "இயேசுவின் பாதத்தில் கீழே விழுந்தான்." யவீரு தற்செயலாக விழவில்லை. அவன் இதை ஒரு தாழ்மையின் அடையாளமாயும் இயேசுவின் மேலுள்ள மரியாதையின் நிமித்தமும் இப்படி செய்தான்.

அவள் மரித்துக்கொண்டிருக்கிறாள்

"அவள் மரிக்கப்போகிறாள்" அல்லது "அவள் மரணத்திற்கு அருகில் இருக்கிறாள்"

ஆனால் அவர் போக எத்தனிக்கையில்

சில மொழிபெயர்ப்பாளர்கள் முதலாவது இதை சொல்லுவது அவசியமாய் இருந்தது: "அதனால் இயேசு அவனோடு போக சம்மதித்தார்."

மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள்

"இயேசுவை சுற்றிலும் மக்கள்

Luke 8:43-44

(யவீருவின் மகளை குணமாக்க போய்க்கொண்டிருந்த வழியில் இந்த நிகழ்வு நடந்தது)

இரத்தப்போக்கு இருந்தது

"ரத்தம் வழிவது இருந்தது." அதற்கான சரியான நேரமாய் இல்லையென்றாலும், அவள் அநேகமாக கர்ப்பப்பையில் இருந்து ரத்தம் அவளுக்கு வழிந்திருக்கலாம். இந்த சூழ்நிலையைக் குறிக்க சொல்க் காலாச்சாரத்தில் மென்மையான வழி இருக்கலாம்.

அவர்களில் ஒருவராலும் குணமாக்க முடியவில்லை

"ஆனால் அவர்களில் ஒருவர்கூட அவளை குணமாக்க முடியவில்லை"

அவருடைய அங்கியின் ஓரத்தைத் தொட்டாள்

"தேவனுடைய சட்டத்தில் உள்ளதுபோல, அவருடைய அங்கியின் ஓரத்தைத் தொட்டு."சடங்கு ஆடை போல யூத ஆண்கள் தங்களது அங்கிகளின் ஓரத்தில் தொங்கல்களை அணிவார்கள். அவள் இதைத்தான் தொட்டாள் என்பது போல இருக்கிறது.

Luke 8:45-46

(யவீருவின் மகளை குணமாக்க போய்க்கொண்டிருந்தார்)

எஜமானன்

"எஜமான்" என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை "எஜமான்" என்பதற்கான சாதாரண வார்த்தை அல்ல. ஒருவனை மற்றவன் அடிமையாய் வைத்திருந்தவன் அல்ல, இது அதிகாரத்தில் இருக்கும் ஒருவனைக் குறிக்கிறது. இதை, "முதலாளி" அல்ல "மென்முறையாளர்" அல்லது "அதிகாரத்தில் இருக்கும் ஒருவனை உங்கள் மொழியில் குறிப்பிடும் வார்த்தையோடு" மொழிபெயர்க்கலாம். "ஐயா" போன்ற வார்த்தைகள்.

ஒரு கூட்ட ஜனங்கள் உம்மீது சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே

இதை சொல்லியதால், இயேசுவை யாராயினும் தொட்டிருக்கலாம் என்பதைப் பேதுரு குறிப்பிடுகிறார். இந்த மறைத்து சொல்லப்பட்ட தகவலை UDB இல் உள்ளது போல வெளிப்படையாக்கலாம்.

என்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை நான் அறிவேன்

"என்னிலிருந்து குணமாக்கும் வல்லமை புறப்பட்டதை நான் உணர்ந்தேன்." இயேசு வல்லமையை இழக்கவில்லை அல்லது பலவீனப்படவில்லை, ஆனால் அவருடைய வல்லமை அந்தப் பெண்ணை குணமாக்கியது.

Luke 8:47-48

(யவீருவின் மகளை குணமாக்க போய்க்கொண்டிருந்த வழியில் இயேசு அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

அவள் செய்ததை மறைக்க முடியாது என்பதை

"அவள் தான் இயேசுவைத் தொட்டாள் என்பதை ரகசியமாக வைக்க அவளுக்கு முடியவில்லை."

சமூகத்தில்

"பார்வையில்" அல்லது "கேட்பதில்" அல்லது "முன்னிலையில்"

இயேசுவுக்கு முன்பாக விழுந்து

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இயேசுவுக்கு முன்பாக தாழக் குனிந்து" அல்லது 2. "இயேசுவின் பாத்தத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து." அவள் தற்செயலாக விழவில்லை. அவள் தாழ்மையின் மற்றும் இயேசுவின் மேலுள்ள் மரியாதையினிமித்தம் அவள் அவ்வாறு செய்தாள்.

மகள்

இது ஒரு பெண்ணோடு கனிவோடு பேசும் முறை. உங்கள் மொழியில் தயவைக் காட்ட வேறு வழி இருக்கலாம்.

உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது

"உன்னுடைய விசுவாசத்தினால் நீ நலமானாய்." "விசுவாசம்" என்கிற யோசனை வினைச்சொல்லோடு சேர்த்து, "நீ விசுவாசித்ததால் நீ குணமானாய்" என்று மொழிபெயர்க்கலாம்.

சமாதானத்தோடு போ

இது "போய் வா" என்று சொல்லி அதே நேரத்தில் ஆசீர்வதிக்கும் ஒரு வழி. இதை, "நீ போகும் போது, இனிமேல் கவலைப் படாதே" அல்லது "தேவன் நீ போகும் போது சமாதானம் தருவாராக" (UDB).

Luke 8:49-50

(தாம் குணமாக்கின பெண்ணோடு அவர் பேசிக்கொண்டிருந்ததை முடித்தபொழுது ஒரு செய்தியாளன் யவீருவின் வீட்டிலிருந்து வந்தான்)

அவர் பேசிக்கொண்டிருக்கையில்

"இயேசு அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கையில்"

ஜெப ஆலயத் தலைவன்

இது யவீருவைக் குறிக்கிறது. அவன் அந்த இடத்தின் ஜெப ஆலயத்தின் தலைவர்களுள் ஒருவனாய் இருந்தான்.

அவர் அவனுக்கு பிரதியுத்திரமாக

"இயேசு யவீருவுக்கு பதில் கொடுத்தார்." இயேசு, செய்தியாளனிடம் அல்ல, ஜெப ஆலயத் தலைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவள் காப்பாற்றப்படுவாள்

"அவள் நன்றாக இருப்பாள்" அல்லது "அவள் திரும்பவும் வாழ்வாள்." (UDB)

Luke 8:51-53

(அவனது மகள் மரித்துப் போய்விட்டாள் என்பதை அறிந்தும் இயேசு யவீருவின் வீட்டிற்கு போவதைத் தொடர்ந்தார்)

பின்பு அவர் அந்த வீட்டிற்கு வந்த பொழுது, அவர்

ஏனென்றால், இயேசு தனியே அந்த வீட்டிற்கு போகாததினால், இதை, "அவர்கள் அந்த வீட்டிற்கு வந்த பொழுது, இயேசு" என்று மொழிபெயர்க்கலாம்.

பேதுரு, யோவான், யாக்கோபு, அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயையும் தவிர

"பேதுரு, யோவான், யாக்கோபு, அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயையும் மட்டுமே அவர் உள்ளே வர அனுமதித்தார்"

அவளுக்காக துக்கித்து அழுதுகொண்டிருந்த மக்கள் எல்லாரும்

"தாங்கள் எவ்வளவு துக்கமாய் இருக்கிறோம் என்றும் அந்தப் பெண் மரித்துப் போனதால் சத்தமாக அழுதுகொண்டிருந்தவர்களும்"

Luke 8:54-56

குழந்தையே, எழுந்திரு

"சிறுப்பெண்ணே, எழுந்திரு"

அவளுடைய ஆவி திரும்பிற்று

"ஆவி: என்கிற வார்த்தையை, "சுவாசம்" அல்லது "உயிர்" என்று மொழிபெயர்க்கலாம். இந்த பதத்தை, "அவள் மீண்டும் உயிர்பெற்றாள்" அல்லது "அவள் மீண்டும் உயிரோடு இருக்கிறாள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9

Luke 9:1-2

பன்னிரண்டு பேர்

இயேசு தனது அப்போஸ்தலர்களாக தெரிந்துகொண்ட பன்னிரண்டு சீடர்களின் குழு இது.

வல்லமையும் அதிகாரமும்

இந்த பன்னிரண்டு பேரும் மக்களை குணப்படுத்த திறனும் அதிகாரமும் பெற்றிருந்தார்கள் என்பதைக் காட்ட இந்த இரண்டு வார்த்தைகளும் இணைத்து சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு யோசனைகளையும் சேர்த்து சொல்லும் வார்த்தையை வைத்து இந்தப் பதத்தை மொழிபெயர்க்கவும்.

வியாதிகள்

"நோய்கள்." இது ஒரு மனிதனை பெலவீனப்படுத்துவது எது என்பதைக் குறிக்கிறது.

அவர்களை வெளியே அனுப்பு

இதை, "அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புங்கள்" அல்லது "அவர்களிடம் போகச் சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:3-4

அவர் அவர்களிடம் சொன்னார்

"பின்பு இயேசு பன்னிரண்டு பேரோடு சொன்னார்"

ஒன்றையும் எடுத்துக்கொள்ளாதிருங்கள்

இதை, "உங்களோடு ஒன்றையும் எடுத்துக் கொள்ளாது இருங்கள்" அல்லது "உங்களோடு எதையும் கொண்டு போகாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய பிரயாணத்திற்காய்

"உங்களுடைய போக்கிற்காக" அல்லது "நீங்கள் பிரயாணம் பண்ணும்போது." முழு பிரயாணத்திற்கும், கிராமம் விட்டு கிராமம் போய் இயேசுவிடம் திரும்பி வரும்வரை, அவர்கள் ஒன்றும் கொண்டுபோகக் கூடாது.

கம்பு

"தடி" அல்லது "நடைத் தடி." சமமல்லாத நிலத்தில் நடக்கும்போது சமநிலையை வைத்துக்கொண்டு விழாமல் நடக்க பயன்படும் ஒரு பெரிய தடி கம்பாகும். இது எதிராளிகளிடமிருந்து தற்காக்க ஒரு ஆயுதமாகவும் பயன்படும்.

எந்த வீட்டிற்கு நீங்கள் பிரவேசித்தாலும்

"நீங்கள் நுழையும் எந்த வீடும்"

அங்கு தங்கி இருங்கள்

"அங்கு இருங்கள்" அல்லது "விருந்தாளிகள் போல அங்கு தற்காலிகமாக தங்கி இருங்கள்"

அந்த இடத்திலிருந்து

"அந்தப் பட்டணத்தில் இருந்து" அல்லது "அந்தப் பகுதியில் இருந்து"

Luke 9:5-6

(இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டுவதைத் தொடர்ந்தார்)

உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு

இதை, "உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நீங்கள் இப்படித்தான் செய்யவேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் பிரிந்து சென்றனர்

"இயேசு இருந்த இடத்தை விட்டு அவர்கள் போனார்கள்"

எல்லா இடத்திலும்

"அவர்கள் சென்ற எல்லா இடத்திலும்"

Luke 9:7-9

காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது

இது இஸ்ரவேலின் நான்கில் ஒருப் பகுதியை ஆளுகை செய்யும் எரோதாகிய அந்திப்பாவைக் குறிக்கிறது.

அவன் மிகவும் குழம்பிப்போய் இருந்தான்

"அவன் கவலையாய் இருந்தான்" அல்லது "அந்த செய்தியால் மிகவும் கலங்கி இருந்தான்" அல்லது "அவன் கலக்கத்தில் இருந்தான்" (UDB)

நான் யோவானை சிரைச்சேதம் செய்தேன்

இதை, "யோவானின் தலையை வெட்ட நான் என்னுடைய சேவகர்களுக்குக் கட்டளை இட்டேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:10-11

வெளியே அனுப்பப்பட்ட்டவர்க்கள்

"இயேசு அனுப்பின பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்"

திரும்ப வந்தார்கள்

"இயேசு இருந்த இடத்திற்கு திரும்பினார்கள்"

அவர்கள் அவரிடம் சொன்னார்கள்

"அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்"

அவர்கள் செய்த எல்லாவற்றையும்

அவர்கள் மற்றப் பட்டணங்களுக்கு சென்ற பொழுது அவர்கள் செய்த அற்புதங்களையும் போதனைகளையும் இது குறிக்கிறது.

அவர்களைக் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருக்கப் போனார்

இதை, "அவர் அவர்களை தம்மோடு கூட்டிக்கொண்டு போனார்; அவர்களும் அவர்களாகவே சென்றார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் அவர்களாகவே சென்றார்கள்.

Luke 9:12-14

அந்த நாள் முடிவுக்கு வந்த பொழுது

"சூரிய அஸ்தமனத்தில்" அல்லது "நாள் முடிந்த பொழுது" அல்லது "சாயங்காலம் வந்த பொழுது"

கூட்டத்தைக் கலைத்து

"கூட்டத்தார் போகும்படி சொல்லி"

நாம் போய் உணவு வாங்கி வராவிட்டால்

இதை, "நாம் போய் உணவை வாங்கி வரும்வரை" அல்லது "நாம் போய் உணவை கொடுக்கும் வரை" என்று மொழிபெயர்க்கலாம். அல்லது ஒரு புதிய வாக்கியத்தை துவக்கலாம், "நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுக்க நீர் விரும்பினால், நாம் போய் உணவை வாங்க வேண்டும்."

ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்கள்

இந்த எண் அங்கு இருந்திருக்கக் கூடிய பெண்களையும் குழந்தைகளையும் சேர்க்கவில்லை.

அவர்களை அமரச்செய்து

"அவர்களிடம் உட்காரச் சொல்லுங்கள்"

Luke 9:15-17

அதனால் அவர்கள் அதை செய்தனர்

ஐம்பது ஐம்பது பேராக சீடர்கள் அந்தக் கூட்டத்தை அமரச் செய்தனர்.

பின்பு அவர்

"இது இயேசுவைக் குறிக்கிறது"

அப்பங்கள்

இது குறிப்பிட்ட அளவு சமைக்கப்பட்ட அப்பம். இதை, "முழு அப்பங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பார்த்து

"பார்த்துக்கொண்டிருக்கையில்" அல்லது "பார்த்த பிறகு"

வானத்தை

இது ஆகாயத்திற்கு நேராய் மேலே பார்ப்பதைக் குறிக்கிறது. யூதர்கள் ஆகாயத்திற்கு மேலே வானம் இருக்கிறதாக நம்புகிறார்கள்.

முன்பில் வைத்து

"கொடுக்க" அல்லது "கொடுத்து விட" அல்லது "கொடுக்கும்படி"

திருப்தியடைந்தார்கள்

இதை, "அவர்கள் சாப்பிட விரும்பின வரை அவர்கள் சாப்பிட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:18-19

பின்பு அது நடந்தது

இது கதையின் ஒரு புது பகுதியின் துவக்கத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

அவர் ஜெபித்துக்கொண்டிருக்கையில்

இது இயேசுவைக் குறிக்கிறது.

தனித்து ஜெபித்துக்கொண்டிருந்தார். சீடர்கள் இயேசுவோடு இருந்தனர். ஆனால், அவர் தனிமையில் ஒருவராக ஜெபித்துக்கொண்டிருந்தார்.

பதிலாக அவர்கள் சொன்னார்கள்

"அவருக்கு பதிலாக அவர்கள் சொல்லியது"

யோவான் ஸ்நானகன்

சில மொழிகள், "நீர் யோவான் ஸ்நானகன் என்று சொல்லுகிறார்கள்" என்பதை சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறது.

முந்தையக் காலத்திலிருந்து

"பூர்வக்காலத்தில் வாழ்ந்தவர்"

மீண்டும் உயிர்த்துள்ளார்

"மீண்டும் உயிர்பெற்று இருக்கிறார்"

Luke 9:20-22

அவர் அவர்களிடம் சொன்னார்

"இயேசு தனது சீடர்களிடம் சொன்னார்"

பதிலாக பேதுரு சொன்னான்

"பேதுரு பதிலளித்து சொன்னார்" அல்லது "பேதுரு பதிலாக சொல்லியது"

அவர்களை எச்சரித்து இயேசு போதித்தார்

இதை, "இயேசு அவர்களை எச்சரித்து போதித்தார்" அல்லது "இயேசு அவர்களை மிகவும் எச்சரித்தார்" (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று

"ஒருவரிடமும் சொல்லக்கூடாது" அல்லது "அவர்கள் யாரிடமும் சொல்லக் கூடாது." இது ஒரு செய்யப்பாட்டுவினைக் கூற்றாகும். மறு மொழிபெயர்ப்பு: "அவர்களை எச்சரித்து, இயேசு, 'யாரிடமும் சொல்லக்கூடாது' என்று சொன்னார்."

அநேகப் பாடுகளை மனுஷக் குமாரன் படவேண்டும்

இதை, "மக்கள் மனுஷக் குமாரனை மிகவும் பாடுபட வைப்பார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். வசனம் 22 ஐயும் UDB இல் இருப்பது போல செய்வினை கூற்றாக மொழிபெயர்க்கலாம்.

மீண்டும் உயிர்பெற்று

"மீண்டும் ஜீவன் பெற்று"

மூன்றாம் நாளில்

"மரித்து மூன்றாம் நாளில்" அல்லது "அவர் மரித்தப் பிறகு மூன்றாம் நாளில்"

Luke 9:23-25

பின்பு அவர்

இது இயேசுவைக் குறிக்கிறது.

அவர்கள் எல்லாருக்கும்

இயேசுவோடு இருந்த சீடர்களைக் குறிக்கிறது.

என் பின்னால் வரும்படி

"என்னைப் பின்பற்றும்படி" அல்லது "என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கும்படி" அல்லது "ஒரு சீடனாக என்னோடு வரும்படி"

தன்னைத்தான் வெறுத்து

இதை, "தன்னுடைய சுய விருப்பங்களுக்கு விட்டுக்கொடாமல்" அல்லது "தன்னுடைய விருப்பங்களை தவிர்த்து"

தன்னுடைய சிலுவையை தினமும் எடுத்து

"தன்னுடைய சிலுவையை தினமும் தூக்கி." இதற்கு, "தினமும் பாடுபட ஆயத்தமாய் இருக்கிறது" என்கிற அர்த்தமும் இருக்கிறது.

என்னைப் பின்பற்றுங்கள்

"என்னோடு வாருங்கள்" அல்லது "என்னைப் பின்பற்றத் துவங்கி என்னைப் பின்பற்றவதைத் தொடருங்கள்"

ஒரு மனிதனுக்கு என்ன லாபம்

இதை, "ஒரு மனிதனுக்கு என்ன லாபம்" அல்லது "ஒரு மனிதன் நல்லது எதையும் பெற்றுக்கொள்ளமாட்டான்" என்று மொழிபெயர்க்கலாம்.

முழு உலகத்தையும் ஒருவன் ஆதாயப்படுத்தினாலும்

"உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் அவன் பெற்றுக்கொண்டாலும்"

தன்னையே அவன் இழந்தாலும் அல்லது நஷ்டப்பட்டாலும்

இதை, "அவனே அழிந்துபோனாலும் அல்லது தொலைந்துபோனாலும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:26-27

(இயேசு தன்னுடைய சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

என்னுடைய வார்த்தைகள்

"நான் சொன்னவைகள்" அல்லது "நான் போதித்தவைகள்"

அவனைக் குறித்து மனுதக் குமாரனும் வெட்கப்படுவார்

இதை, "மனுஷக் குமாரன் வெட்கப்படுவார்"

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய மகிமையில் வரும்போது

இயேசு தன்னைக் குறித்து மூன்றாம் மனித இலக்கணத்தில் பேசிக்கொண்டிருந்தார். இதை முதல் மனித இலக்கணத்தில், "நான் என்னுடைய மகிமையில் வரும்போது" என்று மொழிபெயர்க்கலாம்.

இங்கு நின்று கொண்டிருக்கும் சிலர்

இங்கு இயேசு தான் பேசிக்கொண்டிருந்த சிலரை குறிப்பிடுகிறார். இதை, "இங்கு இப்பொழுது நின்றுகொண்டிருக்கும் சிலர்" (UDB)

அவர்கள் தேவ ராஜ்யத்தைப் பார்க்கும் வரை மரணத்தை ருசிபார்க்கமாட்டார்கள்

இதை, "அவர்கள் மரிக்கும் முன்பு அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்ப்பார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

மரணத்தை ருசியார்கள்

"மரணத்தை அனுபவிக்கமாட்டார்கள்" அல்லது "மரிக்க மாட்டார்கள்"

தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கும்வரை

"அவர்களில் சிலர்" என்பதை நீங்கள் மொழிபெயர்ப்பதைப் பொறுத்து, இதை, "நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும்வரையில்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:28-29

பின்பு அது நடந்தது

இந்தப் பதம் கதையின் ஒரு முக்கியமானப் பகுதியைக் குறிக்க உதவுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

இந்த வார்த்தைகள்

முந்தய வசனங்களில் இயேசு தனது சீடர்களிடத்தில் என்ன பேசினாரோ அதை இது குறிக்கிறது.

மலையில்

இதை, "மலையின் பக்கத்தில்" என்று மொழிபெயர்க்கலாம். அவர்கள் மலையில் எத்தனை மேலே சென்றனர் என்பது தெளிவாக இல்லை.

அவருடைய முகத்தின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது

இதை, "அவருடைய முகத் தோற்றம் மாறிற்று" என்று மொழிபெயர்க்கலாம்.

வெண்மையும் பிரகாசமும்

"வெண்மையும் பிரகாசமும்" அல்லது "மிகவும் வெண்மையாக பிரகாசித்து" அல்லது "அற்புதமானன வெண்மையாகவும் மின்னலைப் போல பிரகாசமும்" (UDB)

Luke 9:30-31

இதோ, இரண்டு மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்

"இதோ" என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு நம்மை அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தவும். இதை, "சடிதியாக, அங்கு இரண்டு மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர்" அல்லது "சடிதியில் இரண்டு மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

மகிமையாக காணப்பட்டவர்கள்

இந்தக் கூற்று மோசேயைக் குறித்தும் எலியாவைக் குறித்தும் தகவலை சேர்க்கிறது. "அவர்கள் மகிமையாய்க் காணப்பட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவரது விடுப்பு

"அவருடைய போகுதல்" அல்லது "இந்த உலகத்தை அவர் எப்படி விட்டுப் போவார்." இதை, "அவரது மரணம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:32-33

அவர்கள் அவரது மகிமையை கண்டார்கள்

இது அவர்களை சுற்றி இருந்த பிரகாசமான ஒளியை குறிக்கிறது. இதை, "இயேசுவிடமிருந்து வருகிற பிரகாசமான ஒளியைக் கண்டனர்" அல்லது "அவர்கள் இயேசுவிடம் இருந்து வந்த மிகவும் பிரகாசமான ஒளியைப் பார்த்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவரோடு இரண்டு மனிதர்கள் நின்றுகொண்டு இருந்தனர்

இது மோசேயையும் எலியாவையும் குறிக்கிறது.

அது நடந்தது

இது செயல்பாடு எங்கு ஆரம்பிக்கிறது என்பதைக் குறிக்க இது பயன்படுகிறது. உங்கள் மொழிபெயர்ப்பில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

எஜமான்

"எஜமான்" என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த வார்த்தை, பொதுவாக மொழிபெயர்க்கப்படும், "எஜமான்" என்கிற வார்த்தையாக அல்ல. இது அதிகாரத்தில் இருக்கும் ஒருவனைக் குறிக்கிறது. ஒருவனை அடிமையாக வைத்திருக்கும் ஒருவனை அல்ல. இதை, "முதலாளி" அல்லது "மென்முறையாளர்" அல்லது "அதிகாரத்தில் இருக்கும் ஒரு மனிதனைக் குறிக்கும் வார்த்தையோடு மொழிபெயர்க்கலாம். எ.டு. "ஐயா"

உறைவிடம்

"கூடாரம்" அல்லது "கூரை வீடு"

Luke 9:34-36

இந்தக் காரியங்களை அவர் சொல்லிக்கொண்டிருந்த பொழுது

"பேதுரு இந்தக் காரியங்களை சொல்லிகொண்டிருந்த பொழுது"

அவர்கள் பயந்திருந்தனர்

இந்த முதிர்ந்த சீடர்கள் மேகங்களைப் பார்த்து பயப்படவில்லை. இந்தப் பதம், மேகத்தோடு அவர்கள் மீது வித்தியாசமான பயம் அவர்களைப் பிடித்துக்கொண்டிருந்ததைக் குறிக்கிறது. இதை, "அவர்கள் பேதலித்துப் போயிருந்தனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

மேகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகி இருந்தது

ஒரு சத்தம் பேசினது என்று சொல்லுவது இயற்கையாக இல்லை என்றால், "தேவன் மேகத்தில் இருந்து அவர்களோடு பேசினார்" என்று மொழிபெயர்க்கவும்.

என்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மகன்

இதை, "நான் தெரிந்துகொண்ட என்னுடைய மகன்" (UDB) அல்லது "என்னுடைய மகன், தெரிந்துகொள்ளப்பட்டவன்" என்று மொழிபெயர்க்கலாம். "தெரிந்துகொள்ளப்பட்ட" என்னும் வார்த்தை தேவனுடைய குமாரனைப் பற்றி கூடுதல் தகவலைத் தருகிறது. இது தேவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தனர் என்று சொல்லவில்லை.

அந்த நாட்கள்

உயிர்த்தெழுதலுக்கு பிறகு இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்களை அல்லது இயேசு இந்த கூற்றை சொன்ன நேர் பின்பான நாட்களாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Luke 9:37-40

அது நடந்தது

இது கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க உதவுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

இதோ, கூட்டத்தில் இருந்து ஒரு மனிதன்

"இதோ" என்ற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தவும். ஆங்கிலம், "கூட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் சொன்னான்," என்று பயன்படுத்துகிறது.

இதோ, ஒரு ஆவி

"இதோ" என்னும் வார்த்தை மனிதனின் கதையில் ஒரு தீய ஆவியை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்கலாம். ஆங்கிலம், "ஒரு தீய ஆவி இருந்தது..." என்று பயன்படுத்துகிறது.

கஷ்டப்பட்டு அவனை விட்டுப் போனது

சாத்தியமான அர்த்தங்கள் 1. "அது என் குழந்தையை விட்டுப் போகவில்லை" (UDB) 2. "அவனை விட்டுப் போகும்பொழுது என்னுடைய மகன் மீது அது பலமாய் இருக்கிறது..."

வாயில் நுரைதள்ளி

ஒரு மனிதனுக்கு ஆவி பிடித்திருக்கும்போது, அவனுக்கு மூச்சுவிடும் பிரச்சனையும் விழுங்குவதில் பிரச்சனையும் இருக்கும். இது அவர்களின் வாயைச் சுற்றிலும் வெண்மையான நுரையை உண்டாக்குகிறது. உங்கள் மொழியில் இதை விளக்க ஏதேனும் வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

Luke 9:41-42

இயேசு பதிலளித்து சொன்னார்

"பதிலில் இயேசு சொன்னார்"

அவிசுவாசமான கேடான சந்ததியே

இது கூடியிருந்த மக்களைப் பார்த்து சொல்லப்பட்டது. சீடர்களைப் பார்த்து அல்ல.

நான் எதுவரைக்கும் உங்களோடு இருந்து பொறுமையாய் இருக்கவேண்டும்?

இது பதில் எதிர்பாராத கேள்வி. இயேசு பதிலை எதிர்பார்க்கவில்லை. அர்த்தம் என்னவென்றால், "நான் எவ்வளவோ செய்துவிட்டேன் ஆனால் இன்னும் நீங்கள் விசுவாசிக்கிறதில்லை!" என்பதாகும்.

உன் மகனை இங்கு கொண்டு வா

தன்னிடம் பேசின அந்தத் தகப்பனைப் பார்த்து இயேசு நேரிடையாகப் பேசினார்.

அவன் வந்துகொண்டிருக்கையில்

"அவன் வழியில் வருகிறபோது" அல்லது "வழியில்"

கடிந்துகொண்டார்

"கடினமாகப் பேசி"

Luke 9:43-45

தேவனுடைய மகத்துவத்தைப் பார்த்து அவர்கள் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்

இயேசு தான் அற்புதம் செய்தார், ஆனால் கூட்டத்தார் இந்த சுகப்படுத்தலுக்குப் பின்பாக தேவனுடைய வல்லமை இருக்கிறதை அறிந்துகொண்டார்கள்.

அவர் செய்தது

"இயேசு செய்தது"

உங்கள் காதுகளில் இந்த வார்த்தைகள் ஆழமாக செல்லட்டும்

இது ஒரு மரபுப்பெயர் ஆகும். இதன் அர்த்தம், "கவனமாகக் கேட்டு நினைவில் கொள்ளுங்கள்" அல்லது "இதை மறக்காதீர்கள்" என்பதாகும்.

மனுஷக் குமாரன்

மூன்றாமவன் இலக்கணத்தில் இயேசு தன்னைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம்.

கரங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டு

"ஒப்புவிக்கப்பட்டு" (UDB) அல்லது "அதிகாரிகளிடம் மனுஷக் குமாரனை மனிதர்கள் ஒப்புவிப்பார்கள்"

அவர்களுக்குப் புரியவில்லை

இதை, "அவர் மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 9:46-48

அவர்கள் மத்தியில்

"சீடர்கள் மத்தியில்"

அவர்களது இருதயங்களில் யோசனைப் பண்ணினார்கள்

"தனித்தனியாக நினைத்துக்கொண்டு" அல்லது "தங்களது சொந்த நினைவில் கருதிக்கொண்டு"

என்னை அனுப்பினவர்

"என்னை அனுப்பின தேவன்" (UDB)

Luke 9:49-50

யோவான் பதில் சொன்னான்

"பதிலாக, யோவான் சொன்னான்" அல்லது "யோவான் இயேசுவுக்கு பிரதியுத்திரமாக." பெரியவனாய் இருக்கிறதைக் குறித்து இயேசு சொன்னதற்கு யோவான் பிரதி சொன்னான். அவன் ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பிசாசுகளை கட்டாயமாகத் துரத்தும் இந்த மனிதன் சீடர்கள் மத்தியில் என்ன பதவியில் இருப்பான் எனபதை அறிந்து கொள்ள விரும்பினான்.

எஜமான்

"எஜமான்" என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த வார்த்தை, பொதுவாக மொழிபெயர்க்கப்படும், "எஜமான்" என்கிற வார்த்தையாக அல்ல. இது அதிகாரத்தில் இருக்கும் ஒருவனைக் குறிக்கிறது. ஒருவனை அடிமையாக வைத்திருக்கும் ஒருவனை அல்ல. இதை, "முதலாளி" அல்லது "மென்முறையாளர்" அல்லது "அதிகாரத்தில் இருக்கும் ஒரு மனிதனைக் குறிக்கும் வார்த்தையோடு மொழிபெயர்க்கலாம். எ.டு. "ஐயா"

உங்களுக்கு விரோதி அல்லாதவன் உங்களுக்கு சாதகமானவன்

இதை, "உங்களை ஒருவன் தடுக்கவில்லை என்றால், அவன் உங்களுக்கு உதவுகிறான் எனபது போல அது" அல்லது "உங்களுக்கு எதிராக ஒருவனும் வேலை செய்கிறதில்லை என்றால், அவன் உங்களுக்காக வேலை செய்கிறான் என்று அர்த்தம்." சில புது மொழிகள் இதே அர்த்தம் சொல்லும் பழமொழிகளைக் கொண்டுள்ளன.

Luke 9:51-53

அது நடந்தது

இது கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க உதவுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்த பொழுது

"அவர் மேலே போக வேண்டிய நேரம் வந்தது" அல்லது "அவர் மேலே போக அநேகமாக நேரமாயிற்று"

முடிவாக

"தீர்க்கமாக" அல்லது "வேண்டுமென்றே"

தமது முகத்தை

இது ஒரு மரபுப்பெயர் ஆகும். இதன் அர்த்தம், "தனது மனதை நிலைப்படுத்தி" அலல்து "தீர்மானித்து" அல்லது "உறுதியாக யோசித்து" (UDB) என்பதாகும்.

அவருக்காக ஆயத்தம் செய்ய

அநேகமாகப் பேசுவதற்கும், தங்குவதற்குமான இடத்தையும் சாப்பிடுவதற்கான உணவையும் அவருடைய வருகைக்காகவும் ஆயத்தம் செய்யவேண்டுவதைக் குறிக்கிறது.

அவரை ஏற்றுக்கொள்ளவில்லை

"அவரை வரவேற்கவில்லை" அல்லது "அவர் தாங்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை"

Luke 9:54-56

இதைப் பார்த்து

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் பார்த்து"

வானத்திலிருந்து அக்கினி வர கட்டளையிட்டு அவர்களை அழிக்கச் செய்யும்

தேவனை தள்ளினவர்களை எலியா போன்ற தீர்க்கதரிசிகள் இவ்வாறு தான் தண்டித்தார்கள் என்று அவர்கள் அறிந்திருந்ததினால், யாக்கோபும் யோவானும் இந்த வகையான நியாயத்தீர்ப்பை ஆலோசனையாகக் கூறினார்கள்.

அவர் திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்

"இயேசு யாக்கோபையும் யோவானையும் திரும்பி அதட்டினார்." சீடர்கள் எதிர்பார்த்ததுபோல இயேசு சமாரியர்களைக் கடிந்துகொள்ளவில்லை.

Luke 9:57-58

யாரோ ஒருவன்

இது சீடர்களுள் ஒருவன் அல்ல.

நரிகளுக்குக் குழி உண்டு...அவரது தலை சாய்க்க அவருக்கு இடமில்லை

அந்த மனிதனை பின்பற்றுவதானால் அந்த மனிதனுக்கு வீடில்லாமல் கூட இருக்கலாம் என்பதை இயேசு சொல்ல வருகிறார். மறைத்து சொல்லப்பட்ட தகவலை, "உங்களுக்கு வீடு இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்" என்று வெளிப்படையாக்கலாம்.

நரிகள்

இது நாய்களுக்கு ஒத்த நில விலங்குகள். அவைகள் நாய்க்கூண்டிலும் அல்லது நிலத்தில் உள்ளக் குழியிலும் உறங்கும்.

ஆகாயத்துப் பறவைகள்

"ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்"

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைக் குறித்து படர்க்கை இலக்கணத்தில் பேசுகிறார். இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய தலையை சாய்க்க எங்கும் இடமில்லை

"என்னுடைய தலையைக் கிடத்த ஒரு இடமும் இல்லை" அல்லது "தூங்க ஒரு இடமும் இல்லை." இது ஒரு உயர்வு நிகழ்ச்சி. இயேசு தன்னை எங்கும் தங்கும்படி வரவேர்க்கவில்லை என்பதை இயேசு சொல்ல மிகைப்படுத்தி சொல்லுகிறார்.

Luke 9:59-60

என்னைப் பின்பற்றுங்கள்

இதை, "என்னைப் பின்பற்றுபவராக இருங்கள்" அல்லது "என்னுடைய சீடனாய் இருந்து என்னோடு வாருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் முதலாவது போக அனுமதியும்

இதை, "நான் அதை செய்வதற்கு முன்பதாக, என்னைப் போகவிடும்" என்று மொழிபெயர்க்கலாம். இது இயேசுவிடம் மனிதனின் வேண்டுகோள்.

மரித்தோர் தங்களது சொந்த மரித்தோரை அடக்கம் செய்யட்டும்

"மரித்துப்போனவர்கள் அவர்களது மரித்தோரை அடக்கம் செய்யட்டும்." மரித்தோர் இனி யாரையும் அடக்கம் செய்ய முடியாது; அதனால், மறைத்து சொல்லப்பட்ட அர்த்தம் என்னவென்றால், "ஆவிக்குரிய மரணம் அடைந்தவர்கள் மரித்தோரை அடக்கம் செய்யட்டும்" என்பதாகும்.

Luke 9:61-62

நான் உம்மை பின்பற்றுவேன்

"நான் ஒரு சீடனாக உம்மிடம் சேர்ந்து கொள்ளுகிறேன்" அல்லது "நான் உம்மை பின்பற்ற ஆயத்தமாய் இருக்கிறேன்" அல்லது "நான் உம்மைப் பின்பற்றுவேன் என்று வாக்குக்கொடுக்கிறேன்"

நான் போய்வருகிறேன் என்று சொல்லுவதை முதலாவது அனுமதியுங்கள்

இதை, "நான் அதை செய்வதற்கு முன்பதாக, நான் போய்வருகிறேன் என்ற நான் சொல்லட்டும்" அல்லது "நான் போய்வருகிறேன் அன்பதை நான் அவர்களிடத்தில் சொல்லட்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய வீட்டில் இருக்கிற அவர்களிடம்

என்னுடைய வீட்டார்" அல்லது "என்னுடைய வீட்டு மக்கள்" ஒருவனும் இல்லை...தேவனுடைய ராஜ்யத்திற்கு பாத்திரமாய்

இதை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் கொள்கை என்று இயேசு இதைக் குறிப்பிடுகிறார். மறைத்து சொல்லப்பட்ட அர்த்தம் என்னவென்றால், "என்னைப் பின்பற்றுவதைத் தவிர்த்து உன்னுடைய முற்காலத்து மக்களிடம் நீ கவனமாய் இருந்தால் என்னுடைய ராஜ்யத்திற்கு நீ சரியானவனில்லை" என்பதாகும்.

கலப்பையின் மேல் கை வைத்தவன்

"நிலத்தை உழுதலைத்துவங்கி." விவசாயிகள் கலப்பையைப் பயன்படுத்தி நிலத்தை ஆயத்தம் செய்து அதில் விதைகளைப் போடுவார்கள். கலப்பையைப் பார்த்து அறியாத மக்களுக்காக பொதுவான வழியில் இதை மொழிபெயர்க்கலாம்: "நிலத்தை ஆயத்தம் பண்ண ஆயத்தம் செய்து."

பின்பதாகப் பார்த்து

நிலத்தை உழுகிறவன் பின்னாகப் பார்த்தால் அவன் கலப்பை எங்கு போக வேண்டுமோ அதை சரியாக செலுத்த முடியாது. நன்றாக உழவேண்டுமானால் அவர்கள் முன்னேறி செல்லுவதை நோக்கவேண்டும்.

சரியாக பொருந்தி

"உபயோகமாய்" அல்லது "சரியான"

Luke 10

Luke 10:1-2

எழுபது

சில பதிப்புகள், "எழுபத்தி இரண்டு" என்று சொல்லுகிறது. இதைக் குறிப்பிட நீங்கள் ஒரு குறிப்பை கீழே எழுதலாம்.

அவர்களை ஜோடு ஜோடாக அனுப்பினார்

"இரண்டு பேர் குழுவாக அவர்களை அனுப்பினர்" அல்லது "ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் இருக்கிறவிதமாக அவர் அனுப்பினார்"

அவர் அவர்களிடம் சொன்னார்

இது மனிதர்கள் உண்மையில் வெளியே செல்லும் முன். இதை, "இதைத் தான் அவர் அவர்களிடம் சொன்னார்" அல்லது "அவர்கள் வெளியே போகும் முன்னர் அவர் சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம்.

அறுவடை மிகுதி ஆனால் வேலையாட்களோ கொஞ்சம்

"அங்கு நிறைய தானியம் விளைந்திருக்கிறது ஆனால் அதைக் கொண்டுவர போதிய ஆள் இல்லை." இந்த உருவகம், தேவனுடைய ராஜ்யத்தில் கொண்டுவரப்படும்படி ஆயத்தமாய் இருந்த அநேக மக்கள் இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகும்.

Luke 10:3-4

(தாம் அனுப்பப்போகும் 70 மக்களுக்கு வழிகாட்டுவதை இயேசு தொடர்கிறார்)

உங்களுடைய வழியில் புறப்பட்டுப் போங்கள்

இதை, "பட்டணங்களுக்குப் போங்கள்" அல்லது "மக்களிடத்தில் போங்கள்" அல்லது "போய் மக்களைக் கொண்டுவாருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஓநாய்களுக்கு உள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன்

இது ஒரு உவமானம். இதன் அர்த்தம் என்னவென்றால், இயேசு அனுப்புகிற மக்களை, அவர்கள் போகிற இடத்தில் உள்ள மக்கள் தாக்கக்கூடும். இதை, "நான் உங்களை அனுப்பும்போது. ஆட்டுக்குட்டிகளை ஓநாய்கள் காயப்படுத்துவது போல அவர்கள் உங்களைக் காயப்படுத்துவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். மற்ற விலங்குகளின் பெயர்களையும் சொல்லலாம்.

ஆட்டுக்குட்டிகள்

"ஆட்டுக்குட்டிகள் ஆடுகளின் குட்டிகள். அவைகளை தாக்கும் மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவைகளுக்கு முடியாது.

ஓநாய்கள்

ஓநாய்கள் பெரிய நாய்களுக்கு ஒத்திருக்கும் விலங்குகள். அவைகள் ஆட்டுக்குட்டிகள் போன்ற மற்ற மிருகங்களைத் தாக்கி உண்ணும். "ஓநாய்கள்" என்னும் வார்த்தையை பொதுவான வார்த்தையைக் கொண்டு மொழிபெயர்க்கலாம்: "காட்டு நாய்கள்" அல்லது "மூர்க்கமான நாய்கள்" அல்லது "உங்கள் மக்கள் அறிந்திருக்கும் நாய் போல விசேஷமான மிருகத்தின் பெயரோடும்" என்று மொழிபெயர்க்கலாம். எடுத்துக்காட்டுகள்: "சென்னாய்கள்" அல்லது "நரிகள்"

பணப்பையைக் கொண்டுபோகாதீர்கள்

"உங்களோடு பணப்பையைக் கொடுபோகாதிருங்கள்"

வழியில் ஒருவனையும் வாழ்த்த வேண்டாம்

பட்டணத்திற்கு அவர்கள் துரிதமாய் போய் இந்த வேலையை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அவர்களிடத்தில் காட்டமாக இருக்கும்படி சொல்லவில்லை.

Luke 10:5-7

(இயேசு தான் அனுப்பும் 70 பேருக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

இந்த வீட்டின் மீது சமாதானம் இருப்பதாக

"இந்த வீட்டில் இருக்கும் மக்கள் சமாதானத்தைப் பெறுவார்களாக." இது வாழ்த்து மற்றும் ஆசீர்வாதம் இரண்டுமேயாகும்.

சமாதானத்தின் மனிதன்

"சமாதானமான மனிதன்" தேவனோடும் மனிதனோடும் சமாதானத்தை விரும்புகிற மனிதன் இவன்.

உங்களுடைய சமாதானம் அவன் மேல் தங்கும்

இதை, "நீங்கள் அவனை ஆசீர்வதித்த சமாதானம் அவனுக்கிருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

இல்லையென்றால்

"சமாதானத்தின் மனிதன் ஒருவனும் இல்லையென்றால்" அல்லது "வீட்டின் உரிமையாளன் சமாதானத்திற்கு தகுதியான மனிதன் இல்லையென்றால்"

அது உங்களுக்குத் திரும்பும்

"நீங்கள் அந்த சமாதானத்தை அடைவீர்கள்"

அதே வீட்டில் தங்கி இருங்கள்

இதை, "அதே வீட்டில் தூங்குங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். நாள் முழுவதும் அதே வீட்டில் அவர்கள் தங்கி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் ஒவ்வொரு ராத்திரியும் அவர்கள் இருக்கும் அதே வீட்டில் தூங்கவேண்டும்.

ஏனென்றால் வேலையாள் கூலிக்குப் பாத்திரனாய் இருக்கிறான்

இயேசு தாம் அனுப்பும் மனிதர்களுக்காகப் பயன்படுத்தும் இது ஒரு பொதுவான கொள்கை. அவர்கள் கற்றுக்கொடுத்துக்கொண்டும் மக்களை குணமாக்கிக்கொண்டும் இருப்பார்கள் என்பதால், மக்கள் அவர்களுக்கு தங்க இடமும் உன்ன உணவும் கொடுக்க வேண்டும்.

வீடு வீடாக செல்லாதிருங்கள்

இதன் அர்த்தம், "ஒவ்வொரு ராத்திரியும் ஒவ்வொரு வீட்டில் போய் தூங்காதீர்கள்" என்பதாகும்.

Luke 10:8-9

(இயேசு தாம் அனுப்பும் 70 மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

உங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டால்

"உங்களை அவர்கள் வரவேற்றால்"

உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருகிறதை சாப்பிடுங்கள்

"அவர்கள் கொடுக்கும் உணவு எதுவானாலும் சாப்பிடுங்கள்"

பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது

இது தேவனுடைய ராஜ்யத்தின் கிரியைகள் அவர்களை சுற்றிலும் எல்லா இடங்களிலும் சீடர்களின் குணமாக்குதலிலும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலும் நடந்துகொண்டிருக்கும் உண்மையை குறிக்கிறது. இதை, "இப்பொழுது உங்களை சுற்றிலும் தேவனுடைய ராஜ்யத்தை நீங்கள் பார்க்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 10:10-12

(இயேசு தாம் அனுப்பும் 70 மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்

"உங்களை அவர்கள் புறக்கணித்தால்"

உங்களுடைய பட்டணத்தில் இருக்கிற மண் நம்முடையப் பாதங்களில் படிந்திருந்தால் உங்களுக்கு விரோதமாக துடைத்துப்போடுவோம்!

இதை, "எங்களை நீங்கள் புறக்கனித்தது போல, நாங்களும் உங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவோம். எங்களுடைய கால்களில் படியும் தூசியைக் குட உதறிவிடுவோம்" என்று மொழிபெயர்க்கலாம். இயேசு இரண்டு இரண்டு பேராக அனுப்புவதால், இதை இரண்டு பேர்கள் சொல்வதாக இருக்கிறது. "நாங்கள்" என்கிற முன்னிலை இலக்கணம் உடைய மொழிகள் அதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

இந்தப் பதம் ஒரு எச்சரிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதன் அர்த்தம், நீங்கள் எங்களை புறக்கணித்தாலும், ராஜ்ஜியம் இங்கு இருக்கிறது என்னும் கருத்து மாறாது என்பதாகும்.

தேவனுடைய ராஜ்ஜியம் சமீமபாய் இருக்கிறது

"தேவனுடைய ராஜ்ஜியம் உங்களை சுற்றிலும் இருக்கிறது."

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

தாம் அனுப்பும் 70 மக்களுக்கு இயேசு இதை சொல்லுகிறார். அவர் முக்கியமானதை சொல்ல வருகிறார் என்பதால் இதை சொன்னார் .

நியாயத்தீர்ப்பின் நாள்

இந்தப் பதம், "அந்த நாள்" என்று சொல்லுகிறது. பாவிகளின் கடைசி நியாயத்தீர்ப்பின் நேரத்தை இது குறிக்கிறது என்று சீடர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இந்தப் பட்டணத்தைக் காட்டிலும், சோதோம் பட்டணத்திற்கு இது தாங்கக்கூடியதாக இருக்கும்

"அந்தப் பட்டணம் கடுமையாக தீர்க்கப்படுவதைப் பார்க்கிலும் சோதோம் நியாய்ந்தீர்க்கப்படாது." இதன் அர்த்தம், "சோதோமைப் பார்க்கிலும் அந்தப் பட்டணம் கடுமையாக நியாயந்தீர்க்கப்படும்" என்பதாகும்.

Luke 10:13-15

(இயேசு 70 பேரிடம் பேசிக்கொண்டிருந்ததை முடித்து விட்டு திரும்பி மூன்று பட்டணத்து மக்களுடன் பேசுகின்றார்)

கோராசீன் பட்டணமே! உனக்கு ஆபத்து!! பெத்சாயிதாவே உனக்கு ஐயோ!

கோராசீன் மற்றும் பெத்சாயிதா பட்டணத்து மக்கள் அங்கிருந்து அவரைக் கவனித்துக் கொண்டிருந்தது போல அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

அதிசயமான கிரியைகள் உன் மத்தியில் செய்யப்பட்டிருந்தால்

இதை செய்வினை வினைச்சொல்லோடு UDB இல் இருக்கிறது போல மொழிபெயர்க்கலாம்: "நான் உங்களுக்காகச் செய்த அற்புதங்கள்."

தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டது

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "அவைகளை யாராவது தீருவிலும் சீதோனிலும் செய்திருந்தார்களானால்."

அவர்கள் முன்பே மனந்திரும்பி இருந்தார்களானால்

"அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பொல்லாதவர்கள் தாங்கள் தங்களுடையப் பாவங்களுக்காக வருத்தப்பட்டிருந்ததைக் காட்டியிருப்பார்கள்" (UDB)

இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்துகொண்டு

"இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து." மக்கள் மிகவும் சோகமாய் இருக்கும்போது, அவர்கள் அரிக்கும் சொரசொரப்பான துணியை அவர்கள் அணித்து கொள்ளுவார்கள். தலையில் சாம்பலைப் போட்டுக்கொள்ளுவார்கள். சாம்பலில் கூட உட்கார்ந்து கொள்ளுவார்கள். அவர்கள் மிகவும் சோகமாய் இருக்கும்போதும் தேவனுக்கு எதிராக பாவம் செய்திருக்கும் போதும் அவர்கள் இவ்வாறு செய்வார்கள்.

தீருவிற்கும் சீதோனுக்கும் தாங்கக் கூடியதாய் இருக்கும் ... உங்களுக்கு இருக்கிறதை விட

"தீரு மற்றும் சீதோனின் மக்களைவிட தேவன் உங்களைத் தண்டிப்பார்." UDB இல் உள்ளதுபோல, இதற்கான காரணம் வெளிப்படுதப்படலாம்: "நான் அற்புதம் செய்வதை நீங்கள் பார்த்திருந்தும், நீங்கள் மனந்திரும்பி என்னில் விசுவாசம் வைக்காததினால்!"

நியாயத்தீர்ப்பின் நாளில்

"தேவன் எல்லாரையும் நியாயந்தீர்க்கும் கடைசி நாளில்" (UDB) கப்பர்நகூமே

கப்பர்நகூமில் இருக்கும் மக்கள் தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பதைப்போல அவர்களிடம் இயேசு பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் அங்கு இல்லை..

நீங்கள் வானபரியந்தம் உயர்த்தப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா

இந்த பதில் எதிர்பாராக் கேள்வியில் இயேசு கோராசீன் மக்களை அவர்களுடையப் பெருமைக்காகக் கடிந்துகொண்டார். இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "நீங்கள் பரலோகம் வரை செல்லுவீர்களா" அல்லது "தேவன் உங்களை கனப்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா?"

உயர்த்தப்படுவீர்கள் என்று

"உயர்த்தப்பட என்னும் ஆகுபெயரின் அர்த்தம், "கனப்படுத்தப்படுவீர்கள்" என்பதாகும்.

Luke 10:16

(இயேசு தாம் அனுப்பும் 70 மக்களுக்கும் போதிப்பதை முடித்தார்)

உங்களுக்கு செவிகொடுக்கிறவன் எனக்கும் செவிகொடுக்கிறான்

இதை, "உங்களுக்கு யாராவது செவிகொடுத்தால், அது எனக்கு செவிகொடுக்கிறதற்கு சமமாய் இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களை தள்ளுகிறவன் என்னை தள்ளுகிறான்

இதை, "உங்களை ஒருவன் ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது, அது என்னை ஏற்றுக்கொள்ளாததுபோல இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளாமல் போகிறான்

இதை, "என்னை ஒருவன் ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது , அவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளாமல் போகிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னை அனுப்பினவர்

இது தந்தையாகிய தேவனைக் குறிக்கிறது. இதை, "என்னை அனுப்பின தேவன்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

Luke 10:17-20

(சில நேரம் கடந்தப் பிறகு, எழுபது சீடர்கள் இயேசு இருந்த இடத்திற்கு திரும்பினார்கள்)

எழுபது

நீங்கள் கீழ்குறிப்பை சேர்க்கலாம்: "சில பதிப்புகள் "70' இற்கு பதிலாக '72' ஐ வைத்திருக்கிறது.

எழுபது பேர் திரும்பினார்கள்

சில மொழிகளில், UDB சொல்லுவது போல இந்த எழுபது பேர் முதலாவது போனார்கள் என்று சொல்லுவது அவசியமாய் இருக்கிறது.

வானத்தில் இருந்து சாத்தான் மின்னலைப் போல விழுகிறதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இயேசு ஒரு உவமானத்தை வைத்து தேவன் எப்படி 70 சீடர்கள் பட்டணங்களில் பிரசங்கித்துக் கொண்டிருந்த பொழுது சாத்தானை வீழ்த்திக்கொண்டிருந்தார் என்பதை விவரித்தார்.

சர்பங்களின் மேலும் தேள்களின் மேலும் நடக்கிற அதிகாரம்

"பாம்புகளின் மேல் நடக்கிற அதிகாரம், தேள்களை நசுக்கிற அதிகாரம்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "இது உண்மையான பாம்புகளையும் தேள்களையும் குறிக்கிறது" அல்லது 2. "பாம்புகளும் தேள்களும் தீய ஆவிகளுக்கான உருவகம் ஆகும். UDB இதை தீய அவைகளைக் குறிக்கும் வகையில் மொழிபெயர்த்துள்ளது.

சர்ப்பங்களையும் தேள்களையும் மேற்கொள்ளவும்

அவர்கள் இதை செய்தாலும் காயப்பட மாட்டார்கள் என்பது மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் வெளிப்படையாக்கலாம்: "சர்ப்பங்களின் மீதும் தேள்களின் மீதும் நடந்தாலும் நீங்கள் காயப்படமாட்டீர்கள்"

சத்துருவின் சகல வல்லமையையும் மேற்கொள்ளவும்

"சத்துருவின் எதிரிகளை நொறுக்க நான் உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறேன்" அல்லது "சத்துருக்களை வீழ்த்த நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்." சத்துரு சாத்தானே.

இதில் களிகூருங்கள்

"இதில்" என்னும் வார்த்தை "ஆவிகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறது என்னும் பின்வரும் வாக்கியத்தைக் குறிக்கிறது.

உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்காக

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கவும்: "தேவன் உங்கள் பெயர்களை பரலோகத்தில் எழுதியிருக்கிறார்" அல்லது "உங்கள் பெயர்கள் பரலோக குடிமக்களின் பெயர்கள் உடைய அட்டவணையில் இருக்கிறது".

Luke 10:21

(இயேசு தன்னுடைய சீடர்களின் முன்பில் தன்தகப்பனிடம் நேரிடையாகப் பேசத் துவங்கினர்)

வானத்திற்கும் பூமிக்கும் தேவனே

"வானத்திலும் பூமியிலும் இருக்கும் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் எஜமானனே"

இந்தக் காரியங்கள்

சீடர்களின் அதிகாரத்தைக் குறித்து இயேசுவின் முந்தையப் போதனைகளை இது குறிக்கிறது. சீடர்களே அதின் அர்த்தத்தை புரிந்துகொள்ள "இந்தக் காரியங்கள்" என்றே அதை விடுவது சிறந்தது.

ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்

"ஞானமுள்ள மற்றும் படித்த மக்களிடமிருந்து." இதை, "தங்களை ஞானிகள் மற்றும் கற்றுத்தேறினவர்கள் என்று நினைக்கிற மக்களிடமிருந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

சிறுகுழந்தைகளைப் போலக் கல்லாதவர்கள்

கிரேக்கத்தில் உள்ள வார்த்தை மிகவும் சிறியக் குழந்தைகளைக் குறிக்கிறது. சாத்தியமான அர்த்தங்கள் 1. "கல்லாத" (ULB) அல்லது 2. "உங்களுடைய சத்தியத்தை உடனே எற்றுக்கொள்ளுகிறவர்கள்" (UDB). சிறுக் குழந்தைகளைப் போல

இது, ஞானமும் அறிவும் இல்லாத மக்கள் அல்லது தாங்கள் ஞானம் மற்றும் அறிவு இல்லாதவர்கள் என்று அறிந்தவர்களைக் குறிக்கும் உவமானமாகும்.

உம்முடையப் பார்வைக்கு பிரியமாய் இருந்தது

"அதை செய்வது நல்லதென்று நீர் கண்டபடியினால்"

Luke 10:22

(இயேசு இப்பொழுது சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்)

"இயேசுவின் தனது சீடர்களுக்கு சொன்னார்" என்பது போலுள்ள நீங்கள் ஒரு அறிமுக குறிப்பீட்டை சேர்க்கவேண்டி இருக்கும்.

எல்லாக் காரியங்களும் என் பிதாவினால் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: # "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடம் ஒப்புவித்தார்."

மகன்

இயேசு படர்க்கை இலக்கண வாயிலாகத் தன்னையே குறிப்பிடுகின்றார்.

மகன் யார் என்று அறிந்திருக்கிறார்

"அறிந்திருக்கிறார்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, சொந்த அனுபத்தின் மூலம் அறிந்திருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்த அளவிற்கு பிதாவாகிய தேவன் இயேசுவை அறிந்திருக்கிறார்.

தகப்பனைத் தவிர

இதன் அர்த்தம், "மகன் யார் என்று தகப்பனுக்கு மட்டுமே தெரியும்" என்பதாகும்.

தகப்பன் யார் என்று அறிந்திருக்கிறார்

இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள "அறிந்திருக்கிறார்" என்னும் வார்த்தை, சொந்த அனுபத்தின் மூலம் அறிந்துகொள்ளுதல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இயேசு தன்னுடைய தகப்பனாகிய தேவனை அந்த வழியில் அறிந்திருந்தார்.

குமாரனைத் தவிர

இதன் அர்த்தம், "தகப்பன் யார் என்று மகனுக்கு மட்டுமே தெரியும்" என்பதாகும்.

அவரை வெளிப்படுத்த வேண்டும் என்று மகன் சித்தம் கொள்ளுபவனுக்கு

இதை, "மகன் தகப்பனை அவர்களுக்கு வெளிப்படுத்தினால் ஒழிய மக்கள் தகப்பன் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 10:23-24

அவர்களிடம் தனிமையில் சொன்னார்

"அவர்களிடம் மட்டும்." இது அநேகமாக பிந்தின நேரத்திலாக இருக்கலாம். UDB இதை வெளிப்படையாக்குகிறது: "சீடர்கள் அவரோடு தனியாக இருந்தபொழுது."

நீங்கள் பார்க்கிற காரியங்களைப் பார்க்கிறவர்கள் பாக்கியவான்கள்

இதை, "நீங்கள் பார்க்கிற காரியங்களைப் பார்க்கிறவர்களுக்கு எத்தனை நன்மை" என்று மொழிபெயர்க்கலாம். இது அநேகமாக இயேசு பேசுவதைக் கேட்க வருகின்ற எல்லாரையும் குறிக்கலாம்.

நீங்கள் பார்க்கிற காரியங்கள்

"நான் செய்ய நீங்கள் பார்த்தவைகள்"

நீங்கள் கேள்விப்பட்டவைகள்

"நான் சொல்ல நீங்கள் கேட்டவைகள்"

Luke 10:25-28

இதோ

இந்த நிகழ்வு பின்னர் நடக்கிறது. UDB இல் உள்ளது போல வாசகர்களுக்கு நீங்கள் தெளிவுப்படுத்தலாம்: "ஒரு நாள், இயேசு மக்களுக்குப் போதித்துகொண்டிருந்த பொழுது."

இதோ, ஒரு நியாயசாஸ்திரி

"இதோ" என்கிற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்கலாம். ஆங்கிலம், "ஒரு நியாயசாஸ்திரி..." என்று உபயோகம் செய்கிறது.

அவரை சோதித்து

"இயேசுவை சோதித்து"

நியாயபிரமாணத்தில் எழுதியிருக்கிறது என்ன

இதை ஒரு செயவினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "மோசே நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதி இருக்கிறார்" அல்லது "வேதம் என்ன சொல்லுகிறது?"

நீங்கள் அதை எப்படி வாசிக்கிறீர்கள்?

"அதில் நீங்கள் என்ன வாசித்தீர்கள்?" அல்லது "அது சொல்லுகிறது இன்னதென்று நீங்கள் என்னத்தைப் புரிந்துகொண்டீர்கள்?"

நீங்கள் அன்பு கூறவேண்டும் ...

உபாகமம் 19:18 ஐ அவன் குறிப்பிட்டு பதிலளித்தான். # உன்னுடைய அண்டைவீட்டான்

இது உங்களுடைய சமூகத்தின் உறுப்பினர்களைக் குறிக்கிறது. இதை "உங்களுடைய சக கிறிஸ்தவன்" அல்லது "உங்கள் சமூகத்தின் மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 10:29-30

ஆனால் நியாயசாஸ்திரி அவனை நியாயப்படுத்த விரும்பி, சொன்னான்,

இதை, "ஆனால் அவன் தன்னை நியாயப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினதால், அவன் சொன்னான்," அலல்து "அவன் நீதிமானாக காட்டிக்கொள்ள, அவன் சொன்னான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுக்கு பதிலளித்து இயேசு சொன்னார்

இதை, "பதிலாக, இயேசு ஒரு கதையை அவனுக்கு சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் திருடர்கள் மத்தியில் விழுந்தான்

"அவன் திருடர்களால் சூழப்பட்டான்." இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "சில திருடர்கள் அவனை தாக்கினார்கள்"

அவனுடையப் பொருட்களையெல்லாம் அவனிடமிருந்து உரிந்துகொண்டார்கள்

"அவன் வைத்திருந்த எல்லாவற்றையும் எடுத்துகொண்டார்கள்" அல்லது "அவனுடைய எல்லாக் காரியங்களையும் திருடிவிட்டார்கள்"

Luke 10:31-32

(இயேசு "யார் என்னுடைய அண்டை வீட்டுக்காரன்?" என்று கேட்ட மனிதனிடம் தன்னுடையக் கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

தற்செயலாய்

ஒரு மனிதனும் திட்டம் பண்ணாதக் காரியம்

ஒரு ஆசாரியன்

இந்தப் பதம் கதையில் ஒரு புது மனிதனை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அவனுடையப் பெயரைக் குறிப்பிடவில்லை.

அவன் அவனைப் பார்த்த பொழுது

"ஆசாரியன் அந்தக் காயம் பட்ட மனிதனைக் கண்ட பொழுது." ஆசாரியன் என்பவன் மிகவும் பக்தியுள்ள மனிதன், அதனால் பார்க்கிறவர்கள் அவன் உதவி செய்வான் என்று நினைத்துக்கொள்ளுவார்கள். அவன் செய்யாததினால், இந்தப் பதம், "அவன் அவனைப் பார்த்த பொழுதிலும்" என்று எதிர்பாராத பலனுக்கு கவனத்தைக் கொண்டுவரும்படி மொழிபெயர்க்கலாம்.

அவன் பக்கத்தில் கடந்து சென்றான்

"சாலையின் மற்றொரு பகுதி வழியாக அவன் அந்த மனிதனைக் கடந்து போனான்"

அவன் கடந்துபோனான்

அவன் அந்த மனிதனுக்கு உதவவில்லை என்பது மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது. இதை வெளிப்படையாக்கலம்: "அந்தக் காயம் பட்ட மனிதனுக்கு உதவாமல் அவன் கடந்து போனான்."

Luke 10:33-35

(இயேசு "யார் என்னுடைய அண்டை வீட்டுக்காரன்?" என்று கேட்ட மனிதனிடம் தன்னுடையக் கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

ஒரு சமாரியன்

அவனுடையப் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு புதிய மனிதனை இது அறிமுகப்படுத்துகிறது. அவன் சமாரியன் என்று மட்டும் நமக்குத் தெரியும். யூதர்கள் சமாரியர்களை வெறுத்தார்கள். ஒரு காயப்பட்ட யூதனுக்கு அவன் உதவமாட்டான் என்று நினைத்திருப்பார்கள்.

அவன் அவனைப் பார்த்தப் பொழுது

"சமாரியன் காயம் பட்ட மனிதனைக் கண்ட பொழுது"

அவன் இரக்கத்தினால் தள்ளப்பட்டான்

"அவனுக்காக அவன் வேதனைப்பட்டான்"

எண்ணையையும் திராட்சை ரசத்தையும் ஊற்றி அவனுடையக் காயங்களைக் கட்டினான்

அவன் முதலில் எண்ணையையும் திராட்சை ரசத்தையும் ஊற்றியிருப்பான், ஆதலால், இதை, "அவன் திராட்சை ரசத்தையும் எண்ணையையும் புண்ணில் ஊற்றி ஒரு துணியால் அதை சுற்றிக் கட்டினான்" என்று மொழிபெயர்க்கலாம். திராட்சை ரசம் புண்களை சுத்தப்படுத்தப் பயன்பட்டது. அநேகமாக என்னை அவைகள் சீல்பிடிப்பதிலிருந்து தடுக்கப் பயன்பட்டிருக்கலாம்.

அவனுடைய சொந்த மிருகம்

"அவனுடைய சொந்த சுமக்கும் மிருகம்." கனமான சுமைகளை சுமக்க அவன் பயன்படுத்திவரும் மிருகம் இது. அது அநேகமாக கழுதையாக இருக்கலாம்.

இரண்டு தினார்கள்

"இரண்டு நாள் கூலி." "தினார்கள்" என்பது "தினார்" என்பதன் பன்மைச் சொல்லாகும்.

புரவலர்

"சத்திரக்காரன்" அல்லது "சத்திரத்தை கவனிக்கும் நபர்"

Luke 10:36-37

(இயேசு "யார் என்னுடைய அண்டை வீட்டுக்காரன்?" என்று கேட்ட மனிதனிடம் பேசுவதைத் தொடர்ந்தார்)

இந்த மூன்றில் யார் என்று நீ நினைக்கிறார்

இதை, "நீ என்ன நினைக்கின்றாய்? இந்த மூன்று மனிதரில் யார்."

அண்டை வீட்டான்

"தன்னைத்தான் உண்மையான அண்டை வீட்டானாகக் காண்பித்து" (UDB)

திருடர்கள் மத்தியில் விழுந்த அவனுக்கு

"திருடர்களால் தாக்கப்பட்ட மனிதன்"

Luke 10:38-39

அவர்கள் பிராயாணப்பட்டுப் போகையில்

"இயேசுவும் அவருடைய சீடர்களும் பிராயாணப்பட்டுப் போகையில்."இது கதையின் புதியப் பகுதியாக இருக்கிறதினால், "அவர்கள்" யார் என்று சொல்லுவது சில மொழிகளுக்கு மிகவும் இயற்கையாக இருக்கும். இது கதையின் புதியப் பகுதி என்று குறிக்க உங்கள் மொழியில் ஒரு வழி இருக்கலாம்.

ஒரு கிராமம்

இது ஒரு கிராமத்தை புதிய இடமாக அறிமுகப்படுத்துகிறது, ஆனால் அதை பெயரிட்டு சொல்லவில்லை.

மார்த்தாள் என்று பெயருடைய ஒரு பெண்

இது மார்த்தாளை ஒரு புதியக் கதாப் பாத்திரமாக அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை குறிக்க ஏதேனும் ஒரு வழி இருக்கலாம்.

கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து

இதை, "கர்த்தர் போதிப்பதை தரையில் அமர்ந்து கவனித்து" என்று மொழிபெயர்க்கலாம். அந்த நாட்களில் கற்றுக்கொள்ளுகிறவனுக்கான ஒரு பொதுவான நிலை.

Luke 10:40-42

உமக்குக் கவலை இல்லையா

செய்யும்படி நிறைய வேலை இருக்கும்போது மரியாள் அவருடையப் பாதத்தில் அமர்ந்து அவரைக் கவனிக்க அவர் அனுமதித்ததைக் குறித்து மார்த்தாள் குறைக்கூறினாள். அவள் கர்த்தரை மரியாதை செய்ததால், அவளுடையக் குறைகூருதலை மென்மையாக்கும்படி, பதில் எதிர்பாராக் கேள்வியைப் பயன்படுத்தினாள். இதை, "நீர் கவலைப்படுவதில்லைப் போலத் தெரிகிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படாதக் காரியம்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "அவளிடமிருந்து இந்த தருணத்தை நான் எடுத்துப்போட மாட்டேன்" அல்லது 2. "அவள் என்னைக் கவனித்ததின் மூலம் அவள் சம்பாதித்தை நான் அவள் இழந்துபோக செய்யமாட்டேன்."

Luke 11

Luke 11:1

அது நடந்தது

இந்தப் பதம் கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்துங்கள்.

அவர் ஜெபித்து முடித்தப் பொழுது

சில மொழிகளில் மாற்றுப் பெயர்ச்சொல்லாகிய "அவர்" என்கிற வார்த்தைக்கு பதில் அவருடைய பெயர் "இயேசுவை" பயன்படுத்துவது இயற்கையாக இருக்கும். "அவர் ஜெபித்து முடித்தப் பொழுது" என்று சொல்லுவதற்கு முன்னதாக இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தார் என்று சொல்லுவது இன்னும் இயற்கையாக இருக்கும். (UDB பார்)

Luke 11:2

இயேசு அவர்களிடத்தில் சொன்னார்

"இயேசு தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார்"

உம்முடைய நாமம் பரிசுத்தப்படட்டும்

இதை, "எல்லா மக்களும் உம்மை கனம் பண்ணட்டும்" அல்லது "உம்முடைய நாமத்தை எல்லாரும் கனம்பண்ணச் செய்யும்" என்று மொழிபெயர்க்கலாம். இதன் அர்த்தம், "உம்மை எல்லாரும் கனம்பண்ணுவதை நாங்கள் விரும்புகிறோம்" என்பதாகும்.

உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக

"உம்முடைய ராஜ்யத்தை நிறுவும்." இதன் அர்த்தம், "மக்களை நீர் ஆளுகை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்" என்பதாகும்.

Luke 11:3-4

(இயேசு எப்படி ஜெபிக்கவேண்டும் என்று தமது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

எங்களுடைய அன்றன்றுள்ள அப்பம்

இதை, "ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவு" என்று மொழிபெயர்க்கலாம். மக்கள் தினந்தோறும் சாப்பிட்ட விலை குறைவான உணவு தான் அப்பம். இங்கு இது உணவைப் பொதுவாகக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்களுடையப் பாவங்களை எங்களுக்கு மன்னியும்

"உமக்கு விரோதமாக நாங்கள் பாவம் செய்ததை எங்களுக்கு மன்னியும்" அல்லது "எங்களுடையப் பாவங்களை மன்னியும்"

ஏனென்றால் நாங்களும் மன்னிக்கிறோம்

"நாங்களும் மன்னிக்கிறதினால்"

எங்களுக்குக் கடன்பட்டவர்களை

"எங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களை" அல்லது "எங்களுக்கு தீமையானக் காரியங்களை செய்தவர்களை"

எங்களை சோதனைகளில் நடத்தாதிரும்

இது பேச்சு வடிவம்.இதன் அர்த்தம், "சோதனைகளில் இருந்து தூர நடத்தும்" என்பதாகும்.

Luke 11:5-8

(இயேசு ஜெபத்தைக் குறித்து தமது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

உங்களில் யார் வைத்திருப்பீர்கள்

இதை, "உங்களில் ஒருவன் வைத்திருக்கிறான் என்று அனுமானியுங்கள்" அல்லது "நீங்கள் வைத்துள்ளீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். ஒரு சூழ்நிலையில் இருந்தால் என்ன நடக்கும் எனபதை மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக இயேசு பதில் எதிர்பாராக் கேள்விகளைப் பயன்படுத்தினார்.

எனக்கு மூன்று துண்டு அப்பங்களைக் கடனாகக் கொடு

"மூன்று அப்பத் துண்டுகளை நான் கடனாக வாங்கிக்கொள்ளட்டும்" அல்லது "எனக்கு மூன்று அப்பத் துண்டுகளைக் கொடு பின்னர் நான் அதற்கானதை செலுத்துவேன்." வீட்டுக்குள் இருக்கிறவனிடம் தனது விருந்தாளிக்குக் கொடுக்க ஒன்றுமில்லாதிருந்தது.

மூன்று அப்பத்துண்டுகள்

அப்பத்தை ஏன் ஒருவன் கேட்க வேண்டும் என்று சொல்லி உங்கள் மக்கள் ஆச்சரியப்படுவார்களானால், "சமைக்கப்பட்ட உணவு" அல்லது "ஆயத்தம் பண்ணப்பட்ட உணவு" என்று மொழிபெயர்க்கலாம்.

சாலையிலிருந்து சற்றே வந்து

இதை, "பிராயாணம் பண்ணிகொண்டிருந்தான்; சற்றே என்னுடைய வீட்டிற்கு வந்துவிட்டான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுக்கு முன்பாக வைக்க எதுவும்

"அவனுக்குக் கொடுக்க ஆயத்தம் பண்ணப்பட்ட எந்த உணவும்"

என்னால் எழுந்திருக்க முடியவில்லை

"எழுந்திருப்பது எனக்கு சவுகரியமாக இல்லை"

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு தனது சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார், அதனால், "உங்களுக்கு" என்னும் வார்த்தை பன்மையில் இருக்கிறது.

நீங்கள் அவனுடைய நண்பனாய் இருக்கிறதினால் உங்களுக்கு அவன் அப்பம் கொடுக்க

இயேசு சீடர்கள தான் அந்த அப்பம் கேட்ட்டவன் போலக் கருதி அவர்களிடம் பேசினார். வாசகர்களாகிய உங்களை இது குழப்பும் என்றால், இதை, "அவனுக்கு அப்பம் கொடுங்கள் ஏனென்றால் அவன் உன் நண்பன்" என்று மொழிபெயர்க்கலாம்.

வெட்கமில்லாமல் தொடர்ந்து கேட்குதல்

அப்பம் கேட்கிறவன் தனது நண்பனுக்கு நடு ராத்திரியில் எழுந்து அவனுக்காக அப்பம் கொண்டுவருவது அசவுகரியமானக் காரியம் எனபதை அவன் அறியவில்லை எனபதை இது குறிக்கிறது.

Luke 11:9-10

(இயேசு ஜெபத்தைக் குறித்து என்று தமது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

கேளுங்கள் ... தேடுங்கள் ... தட்டுங்கள்

தனது சீடர்கள் தொடர்ந்து ஜெபிக்கும்படி உற்சாகப்படுத்த இயேசு இந்தக் கட்டளைகளைக் கொடுத்தார். இந்த இடத்தில் சரியாக இருக்கக்கூடிய "நீங்கள்" என்கிற வடிவைப் பயன்படுத்துங்கள். இந்தக் கட்டளைகளை, "கேட்டுகொண்டே இருங்கள் ... தேடிக்கொண்டே இருங்கள்... தட்டிக்கொண்டிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கேளுங்கள்

இந்த வினைச்சொல்லில் சில மொழிகள் நிறைய தகவல் கேட்கிறதை இருக்கலாம். எதை, "உங்களுக்குத் தேவையானதை தேவனிடத்தில் கேளுங்கள்" "உங்களுக்கு தேவையானதை தேவனிடத்தில் தேடுங்கள்" "கதவைத் தட்டுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அது உங்களுக்குக் கொடுக்கப்படும்

இதை ஒரு செய்வினை வினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "தேவன் உங்களுக்குக் கொடுப்பார்" அல்லது "நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்."

தட்டுங்கள்

சில முறைக் கதவைத் தட்டுவது என்பது வீட்டிற்கு வெளியே நிற்கிறீர்கள் என்று ஒருவன் அறிந்துகொள்ளும்படி செய்யும் செயலாகும். இதை உங்கள் கலாச்சாரத்தில் மக்கள் என்ன செய்வார்கள் என்பதை வைத்து மொழிபெயர்க்கலாம். எடுத்துக்காட்டாக: "கூப்பிடுதல்" அல்லது "இருமுதல்" அல்லது "கைத்தட்டுதல்"

அது உங்களுக்குத் திறக்கப்படும்

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கவும்: "தேவன் உங்களுக்காக கதவைத் திறப்பார்" அல்லது "தேவன் உங்களை உள்ளே வரவேர்ப்பார்."

Luke 11:11-13

(இயேசு ஜெபத்தைக் குறித்து என்று தமது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

இயேசு அதே அர்த்தம் உள்ள பதில் எதிரபாராத மூன்று கேள்விகளைக் கேட்டார்: தந்தைகள் தங்களைக் கேட்கும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கிறது போல, நாமும் தேவனைக் கேட்கும் போது தேவன் நமக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கிறார்.

உங்களில் யார் ... பதிலாக, அவனுக்கு கல்லைக் கொடுப்பீர்கள்

இதை, "உங்கள் மகன் உங்களிடம் ஒரு அப்பத் துண்டைக் கேட்டால், அதற்கு பதிலாக, அவனுக்கு கல்லைக் கொடுப்பது யார்?" அல்லது "உங்கள் மகன் உங்களிடம் சாபிடுவதர்காக, ஒரு அப்பத் துண்டைக் கேட்டால், அவனுக்கு நிச்சயமாக கல்லைக் கொடுக்கமாட்டீர்கள்!" என்று மொழிபெயர்க்கலாம்.

அப்பத் துண்டு

"அப்பத்தின் துண்டு" அல்லது "அப்பக் கட்டு." உங்கள் மக்கள் பொதுவாக அப்பம் உண்ணமாட்டார்கள் என்றால், இதை, "சமைக்கப்பட்ட உணவின் துண்டு" அல்லது "காய்கறி" என்று மொழிபெயர்க்கலாம். இயேசு ஒரு சாத்தியமான சூழ்நிலையை ஆலோசனையாக சொல்லுகிறார். அவ குறிப்பிட்டு அப்பத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை.

அல்லது மீனிற்கு பதிலாக ஒரு பாம்பு?

"அல்லது அவன் ஒரு மீனைக் கேட்டால், அதற்கு பதிலாக, யார் அவனுக்கு பாம்பைக் கொடுப்பார்கள்?"

தேள்

தேள் என்பது சிலந்திப் பூச்சிக்கு ஒத்த ஒன்றாகும். ஆனால் அது விஷக்கொடுக்குள்ள ஒரு வால் இருக்கிறது. நீங்கள் இருக்கிற இடத்தில் தேள்கள் என்றால் என்னவென்று தெரியவில்லை என்றால், அதை, "விஷமுள்ள சிலந்திப் பூச்சி" அல்லது "கொட்டும் சிலந்திப் பூச்சி" என்று மொழிபெயர்க்கலாம்.

பொல்லாதவர்களாகிய நீங்கள் அறிந்திருக்கும்போது

"பொல்லாதவர்களாகிய நீங்கள் அறிந்திருப்பதால்" அல்லது "நீங்கள் பாவிகளாய் இருந்தாலும், நீங்கள் அறிந்திருக்கிரீர்கள்"

பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தை எத்தனை அதிகமாய் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்

"பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தை பரிசுத்த ஆவியைக் கொடுப்பது எத்தனை நிச்சயம்." இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை, "பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தை பரிசுத்த ஆவியைக் கொடுப்பதுஉறுதி என்று நீங்கள் நிச்சயித்துக்கொள்ளலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 11:14-15

பிசாசை அவர் துரத்திக்கொண்டிருக்கிறார்

"ஒரு மனிதனுக்குள் இருந்து இயேசு ஒரு பிசாசைத் துரத்திக்கொண்டிருக்கிறார்" அல்லது "ஒரு மனிதுக்குள் இருந்து பிசாசு விட்டுப் போக செய்துகொண்டிருந்தார்."

அது பேசாமல் இருந்தது

பிசாசு பேசமுடியாமல் இருந்தது என்பது சாத்தியமில்லாதாய் இருக்கிறது. வாசகர்கள் அநேகமாக இந்தப் பிசாசுக்கு மக்களை பேசத் தடை செய்யும் வல்லமை இருக்கிறது என்று புரிந்திருப்பார்கள். இந்த மறைக்கப்பட்டத் தகவலை வெளிப்படையாக்கலாம்: "பிசாசு அந்த மனிதனை பேசமுடியாமல் செய்தது."

அது நடந்தது

செய்கை துவங்குகிற இடத்தில் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்குமானால் அதை இங்குப் பயன்படுத்தவும். மனிதனுக்குள் இருந்து பிசாசு வெளியே வரும்போது, இயேசுவை சில மக்கள் குற்றப்படுத்தினார்கள்; இந்தக் காரியம் இயேசுவை தீய ஆவிகளைக் குறித்தப் போதிக்க வகை செய்தது.

பிசாசு வெளியே வந்த பொழுது

"மனிதனுக்குள் இருந்து பிசாசு வெளியே வந்த பொழுது" அல்லது "பிசாசு மனிதனை விட்டுப் போன #

பொழுது"ஊமையன் பேசினான

"பேசமுடியாமல் இருந்த மனிதன் பேசினான்"

பெயெல்செபூலினால் ... அவர் பிசாசுகளைத் துரத்துகிறார்

"பிசாசுகளின் தலைவனான பெயெல்செபூலின் வல்லமையால் அவர் பிசாசுகளைத் துரத்துகிறார்."

Luke 11:16-17

மற்றவர்கள் அவரை சோதித்தனர்

"மற்ற மக்கள் இயேசுவை சோதித்தனர்." அவருடைய அதிகாரம் தேவனிடத்தில் இருந்து வந்தது என்பதை அவர்களுக்கு நிரூபிக்க அவர்கள் விரும்பினர்.

பரலோகத்தில் இருந்து வருகிற அடையாளத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்

"பரலோகத்தில் இருந்து வருகிற அடையாளத்தை கொடுக்க அவரிடம் கேட்டனர்" அல்லது "பரலோகத்தில் இருந்து வருகிற அடையாளத்தை அவரிடம் வற்புறுத்தினர்." அவருடைய அதிகாரம் தேவனிடத்தில் இருந்து வந்தது என்று அவர்களுக்கு இவ்வாறு அவர் நிரூபிக்க விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு ராஜ்யமும் அதற்கு எதிராகவே பிரிந்திருக்கிறது

இதை, "ராஜ்ஜியத்தில் இருக்கும் மக்கள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது" என்று மொழிபெயர்க்கலாம்.

பாழாகிவிடும்

"அது அழிக்கப்படும்"

தனக்குத்தான் பிரிந்திருக்கும் ஒவ்வொரு ராஜ்ஜியம்

"ஒருவருக்கு ஒருவர் சண்டையிடும் குடும்ப உறுப்பினர்களையுடைய குடும்பம் அழிக்கப்படும்" அல்லது "தங்களுக்குள் சண்டையிடும் உறுப்பினர்களை உடைய குடும்பம் குடும்பமாய் இருக்காது." "வீடு" என்பது ஒரு குடும்பத்தை அல்லது வீட்டில் உள்ள மக்களைக் குறிக்கிறது.

விழுந்தது

"இடிந்து விழுந்து அழிந்தது." இடியும் வீட்டினுடைய பிம்பம் ஒரு குடும்பத்தின் நபர்கள் சண்டையிட்டு அழிந்துபோகும் குடும்பததைக் குறிக்கிறது.

Luke 11:18-20

(இயேசு கூட்டத்தாரோடு பிசாசுகளைப் பற்றி பேசுவதைத் தொடர்ந்தார்)

சாத்தான் தனக்குள்ளே பிரிந்திருந்தானானால்

"சாத்தானும் அவனுடைய ராஜ்யத்தின் உறுப்பினர்களும் அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொண்டிருந்தார்களானால்."

அவனுடைய ராஜ்யம் எப்படி நிற்கும்

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "சாத்தனுடைய ராஜ்ஜியம் நிலைக்க முடியாது" அல்லது "சாத்தனுடைய ராஜ்ஜியம் விழுந்துபோகும்."

நான் பெயெல்செபூலினால் பிசாசுகளைத் துரத்துகிறதானால்

"பெயெல்செபூலின் வல்லமையினால் நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்லுவீர்களானால்." அவருடைய வாதத்தின் அடுத்தப் பகுதியை வெளிப்படையாக சொல்லலாம்: "சாத்தான் தனக்குள்ளாகவே பிரிந்திருக்கிறான் என்று அர்த்தம்."

உங்களைப் பின்பற்றுபவர்கள் எதினால் பிசாசுகளைத் துரத்துகிறார்கள்

"எந்த வல்லமையினால் உங்களைப் பின்பற்றுபவர்கள் பிசாசுகளைத் துரத்துகிறார்கள்." இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. இதை, "உங்களைப் பின்பற்றுபவர்களும் பெயெல்செபூலின் வல்லமையினால் தான் பிசாசுகளைத் துரத்துகிறார்கள் என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம். இவ்வாக்கியத்தின் மறைத்து சொல்லப்பட்டக் காரியத்தை வெளிப்படையாக்கலாம்: "இது உண்மை இல்லை என்று நமக்கு தெரியும்."

அவர்கள் உங்களின் நீதிபதிகளாக இருப்பார்கள்

"தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறவர்கள் நான் பெயெல்செபூலின் வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொன்னதால் அவர்கள் உங்களை நியாயந்தீர்ப்பார்கள்."

தேவனுடைய விரல்களினால்

"தேவனுடைய விரல்" தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது.

பின்பு தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்தது

"தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்தது எனபதை இது காட்டுகிறது"

Luke 11:21-23

(இயேசு கூட்டத்தாரோடு பிசாசுகளைப் பற்றி பேசுவதைத் தொடர்ந்தார்)

ஒரு பெலவான் ...

இந்தக் ஒரு உருவகம் ஆகும். ஒரு பெலவான் வெளியில் இருந்து தாக்கப்பட்ட பிம்பத்தைப் போல, பிசாசுகளைத் துரத்துவதின் மூலம் இயேசு பிசாசின் ராஜ்யத்தை வெளியில் இருந்து தாக்குகிறார்.

அவனுடையப் பொருட்கள் பத்திரப்பட்டிருக்கிறது

"அவனுடையப் பொருட்களை ஒருவனும் திருட முடியாது"

ஒரு மனிதனின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்ளுவான்

இதை, "அவனுடைய பொருட்களை திருடி" அல்லது "அவன் விரும்பும் எதையும் அவன் எடுத்துக்கொண்டு" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னோடு இல்லாதவன்

"எனக்கு ஆதரவு அளிக்காதவன்" அல்லது "என்னோடு வேலை செய்யாதவன்"

எனக்கு எதிராய் இருக்கிறான்

"எனக்கு எதிராக வேலை செய்து." இது சாத்தானோடு வேலை செய்கிறதாக இயேசு சொன்னவர்களைக் குறிக்கிறது.

Luke 11:24-26

(இயேசு கூட்டத்தாரோடு பிசாசுகளைப் பற்றி பேசுவதைத் தொடர்ந்தார்)

தண்ணீரில்லாத இடங்கள்

இது, பிசாசுகள் சுற்றிக்கொண்டிருக்கும் "தனித்துவிடப்பட்ட இடங்களைக்" (UDB) குறிக்கிறது.

ஒன்றையும் காணாமல்

"ஆவிகள் ஒரு ஓய்வையும் காணவில்லை என்றால்"

நான் வந்த என் வீட்டிலிருந்து

இது வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனைக் குறிக்கும் உருவகம் ஆகும். இதை, "நான் வாழ்ந்துகொண்டிருந்த மனிதன்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB). வசனம் 26 UDB இதை ஒரு உருவகமாக மொழிபெயர்த்துள்ளது.

வீடு பெருக்கப்பட்டு ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிரதைக் கண்டு

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "யாரோ ஒருவர் வீட்டைக் கூட்டி சுத்தம் செய்து எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் வைத்திருப்பதைக் கண்டு."

பெருக்கி

"காலிசெய்து." பிசாசு விட்டு சென்றப் பிறகு தேவனுடைய ஆவியினால் தன்னை நிரப்பாத மனிதனுடைய நிலைமையை இந்த உருவகம் குறிக்கிறது.

Luke 11:27-28

அது நடந்தது

இந்தப் பதம் கதையில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தவும்.

கூட்டத்தாருக்கு மேல் அவளுடைய சத்தத்தை உயர்த்தினாள்

"கூட்டத்தாரின் சத்தத்தைக் காட்டிலும் அவள் சத்தமாகப் பேசினாள்"

உம்மை சுமந்த கர்ப்பமும் உமக்கு பால் கொடுத்த முலைகளும் பாக்கியமுள்ளது

"உம்மை சுமந்த மற்றும் உமக்கு பால் ஊட்டின முலைகள் உடைய அந்தப் பெண்ணுக்கு எத்தனை நன்மை" அல்லது "உம்மை சுமந்த கர்ப்பம் மற்றும் உமக்குப் பால் ஊட்டின முலைகளை உடைய பெண் எத்தனை சந்தோஷமாக இருப்பாள்." ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தினது முழுப் பெண்ணையும் குறிக்கவே.

பாக்கியமுள்ளது

இதை, "எத்தனை சந்தோஷம்" அல்லது "தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 11:29-30

இந்த சந்ததி

"அந்த நேரத்தில் வாழ்ந்த மக்கள்" (UDB)

அடையாளத்தைத் தேடுகிறார்கள்

"என்னை அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்" அல்லது "உங்களில் அனேகர் உங்களுக்கு அடையாளத்தைக்கொடுக்க விரும்புகிறார்கள்." எந்த வகையான அடையாளத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை UDB இல் இருக்கிறதைப் போல வெளிப்படையாக சொல்லலாம்.

அவர்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்பட முடியாது

"தேவன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கமாட்டார்"

யோனாவின் அடையாளம்

இதை, "யோனாவிற்கு நடந்தது என்னவோ" அல்லது "தேவன் யோனாவிற்கு நடப்பித்த அற்புதம்" (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

யோனாவே அடையாளம் ஆனது...அது போலவே

இதன் அர்த்தம் என்னவென்றால், நினிவேயின் மக்களுக்கு யோனா அடையாளமாக இருந்தது போலவே, யூதர்களுக்கு தேவனிடத்தில் இருந்து வந்த அடையாளமாக இயேசு இருக்கிறார்.

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைத் தான் குறிப்பிடுகின்றார்.

Luke 11:31

தென்தேசத்து ராணி

சேபாவின் ராணியைக் குறிக்கிறது. சேபா என்பது இஸ்ரவேலின் தெற்கில் இருக்கும் ராஜ்ஜியம் ஆகும்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே கூடஎழுந்திருப்பாள்

"அவர்களும் எழுந்து நின்று நியாயந்தீர்ப்பாள்"

பூமியின் கடைமுனையில் இருந்து அவள் வந்தாள்

"அவள் மிகவும் தூரத்தில் இருந்து வந்தாள்." "பூமியின் கடைமுனையில் இருந்து" என்பது "மிகவும் தூரதேசத்தில் இருந்து" என்பதன் மரபுப்பெயர் ஆகும்.

சாலொமோனைவிடப் பெரியவர் இங்கு இருக்கிறார்

"ஆனாலும் நீங்கள் எனக்கு செவிகொடுக்கவில்லை" என்பதே இயேசு அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி சொன்ன கடிந்துகொள்ளுதல் ஆகும்.

Luke 11:32

அவர்கள் மனந்திரும்பினதால்

"நினிவேயின் மனிதர்கள் மனந்திரும்பினார்கள்.

பெரியவர்

இயேசு இதை சொன்னப் பொழுது, அவர் தன்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

யோனாவைக் காட்டிலும் பெரியவர் இங்கு இருக்கிறார்

"ஆனாலும் நீங்கள் மனந்திரும்பவில்லை" என்பது இயேசு அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி சொன்ன கடிந்துகொள்ளுதல் ஆகும்.

Luke 11:33-36

(இயேசு கூட்டத்தாருக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

இயேசு தனது போதனையைக் கூட்டத்தில் இருந்த எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால், அவைகளை விவரிப்பதைக் காட்டிலும், அந்த படிவம் சாதாரணமாக மொழிபெயர்ப்பது சிறந்ததாய் இருக்கும்.

ஒரு விளக்கு

இது ஒரு திரியையும் எரிப்பானாக ஒலிவ எண்ணையையும் உடைய ஒரு சிறிய கிண்ணம் ஆகும். முக்கியமானக் கருத்து என்னவென்றால் அது வெளிச்சம் தரும்.

மரக்காலுக்குள் போட்டு வைத்து

"மரக்காலுக்குள் மறைத்து வைத்து"

விளக்குத்தண்டு

"மேஜையின் மேலே" அல்லது "அலமாரியில் வைத்து"

உங்கள் கண் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது

இது அநேக சொல்லலங்காரம் கொண்டுள்ளது.. கண் என்பது பார்வைக்கு மரபுப்பெயர், அது புரிந்துகொள்ளுதலுக்கு உருவகமாக இருக்கிறது. சரீரம் ஒரு மனிதனின் வாழ்வைக் குறிக்கும் மரபுப்பெயர். இதை, "உங்கள் கண் உங்கள் வாழ்வின் விளக்காய் இருக்கிறது" அல்லது "உங்கள் பார்வை உங்கள் வாழ்வின் விளக்காய் இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம். இயேசு எல்லாருக்கும் பொதுவான சத்தியத்தை சொல்லிக்கொண்டிருப்பதால், இதை, "கண் என்பது ஒரு மனிதனின் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்கள் கண் நன்றாய் இருக்கிறது என்றால்

"உங்கள் பார்வை நன்றாய் இருக்கிறது என்றால்" அல்லது "உங்களுக்கு நன்றாய்ப் பார்க்க முடிகிறது என்றால்"

முழு சரீரமும் ஒளியால் நிரம்பி இருக்கும்

ஒளி என்பது சத்தியத்தின் உருவகம். இந்த உருவகத்தின் அர்த்தம், "உங்கள் முழு வாழ்க்கையும் சத்தியத்தின் ஒளியால் நிரப்பப்பட்டிருக்கும்" அல்லது "அவனுடைய முழு வாழ்க்கையும் சத்தியத்தால் நிரப்பட்டிருக்கும்" என்பதாகும்.

கண் கெட்டதாய் இருந்தால், உங்கள் சரீர்ர முழுவதும் இருளால் நிறைந்திருக்கும்

பொய்யான வாழ்க்கைக்கான உருவகம் இருள் ஆகும். இந்த உருவகத்தின் அர்த்தம், "உங்கள் பார்வைக் கெட்டதாய் இருக்குமானால், உங்கள் முழு சரீரமும் பொய்யாய் இருக்கும்" என்பதாகும்.

Luke 11:37-38

சாய்ந்திருந்து

"மேஜையில் அமர்ந்து." மேஜையை சுற்றிலும் இவ்வாறு சுகமாக அமர்ந்து நல்ல நிம்மதியாக உணவை உண்பது மனிதர்களுக்கு வழக்கமாய் இருந்தது.

கழுவி

"அவருடையக் கைகளைக் கழுவி" அல்லது "சடங்காச்சாரமாக சுத்தமாக இருக்க அவருடையக் கைகளைக் கழுவி." தேவனுக்கு முன்பாக தீட்டில்லாமல் இருக்க மக்கள் கைகளைக் கழுவ வேண்டும் என்று ஒரு சட்டத்தை பரிசேயர்கள் வைத்திருந்தனர்.

Luke 11:39-41

குப்பிகள் மற்றும் கிண்ணங்களின் வெளிப்புறம்

பாத்திரங்களின் வெளிப்புறங்களை சுத்தம் செய்வது பரிசேயர்களின் சடங்கு முறைகளின் ஒருப் பகுதி.

ஆனால் உங்கள் உள்ளத்தில் பேராசை மற்றும் போல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது

இது ஒரு உருவகம். இது பாத்திரங்களின் உட்புறத்தைக் கவனியாமல் தவிர்க்கிற வழியை தங்களது சொந்த நிலையை தவிர்க்கிறதற்கு ஒப்பாய் இருக்கிறது.

வெளிப்புறத்தை செய்தவர் உட்புறத்தையும் செய்யவில்லையா?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. தேவனுக்கு தெரிந்திருக்கிற காரியத்தில் தங்களது இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை பரிசேயர்கள் புரிந்துகொள்ளாததினால் இயேசு கடிந்து கொண்டார். இதை ஒரு வாக்கியமாக UDB இல் இருக்கிறது போல மொழிபெயர்க்கலாம்.

உங்களில் இருக்கிறதை ஏழைகளுக்குக் கொடுங்கள்

"உங்களில் இருக்கிறது என்னவோ அதை ஏழைகளுக்குக் கொடுங்கள்." அர்த்தம் என்னவென்றால், "வெளியில் சுத்தம் பண்ணுவதை விட தேவனுக்காக உட்புறத்தைப் பயன்படுத்துங்கள்" என்பதாகும்.

Luke 11:42

(இயேசு பரிசேயர்களிடம் பேசுவதைத் தொடர்ந்தார்)

நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து மற்றும் எல்லா தோட்டத்தின் பூண்டுகளிலும் தசமபாகம் தருகிறீர்கள்

"நீங்கள் தேவனுக்கு ஒற்தலாம் மருக்கொழுந்து மற்றும் எல்லா தோட்டத்தின் பூண்டுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறீர்கள்." தங்கள் வருமானத்தில் பரிசேயர்கள் எவ்வாறு வைராக்கியமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எடுத்துக்காட்டுகள் கொடுக்கிறார்.

ஒற்தலாம் மற்றும் மருக்கொழுந்து

இவைகள் மூலிகைகள். மக்கள் இந்த இலைகளை உணவில் சுவையின் மணத்திற்காக பயன்படுத்துவார்கள். மக்கள் ஒற்தலாம் மற்றும் மருக்கொழுந்து பற்றி அறியவில்லை என்றால், அவர்கள் அறிந்த பொதுவானப் பெயர்களை பயன்படுத்தலாம் அல்லது பொதுவான சொற்களான "மூலிகைகளைப்" பயன்படுத்தலாம்.

மற்ற எல்லா தோட்டத்தின் பூண்டுகள்

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "மற்ற எல்லா காய்கறியும்" அல்லது 2. "மற்ற எல்லா தோட்டத்தின் மூலிகையும்" அல்லது "மற்ற எல்லா தோட்டத்தின் செடியும்."

மற்ற எந்தக் காரியங்களையும் செய்யத் தவறாமல்

இந்த எதிர்மறை வாக்கியத்தை ஆக்கப்பூர்வமான வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "மற்ற எல்லா நல்லக் காரியங்களையும் எப்பொழுதும் செய்து" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 11:43-44

(இயேசு பரிசேயர்களிடம் பேசுவதைத் தொடர்ந்தார்)

முன் இருக்கைகள்

"சிறந்த இருக்கைகள்"

மக்கள் அறியாமல் மேலே நடந்து போகும் அடையாளமற்ற நீங்கள் கல்லறைகளைப் போல இருக்கிறீர்கள்

இது ஒரு உவமானம். பரிசேயர்கள் குறிக்கப்படாத கல்லறைகள் போல் இருக்கிறார்கள் ஏனென்றால், அவர்கள் சடங்காச்சாரமாக செய்ய சித்தமாய் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களை சுற்றிலும் இருக்கிற மக்களை அசுத்தமாகச் செய்தார்கள். UDB இல் இந்த ஒற்றுமை ஓரளவு தெளிவாக இருக்கிறது.

குறிக்கப்படாத கல்லறைகள்

இந்தக் கல்லறைகள் நிலத்தில் தோண்டப்பட்டு பிணம் அடக்கம்பண்ணப்பட்ட குழிகள் ஆகும். மற்றவர்கள் காணும்பொருட்டு பொதுவாக கல்லறைகள் மேல் வைக்கப்படும் வில்லைக் கற்கள் அவர்களிடத்தில் இல்லை. மக்கள் கல்லறைகள் மேல் நடக்கும்போது, அவர்கள் தீட்டுள்ளவர்கள் ஆகிறார்கள்.

Luke 11:45-46

சுமக்க மிகவும் கடினமான சுமையை நீங்கள் மனிதர்மேல் சுமத்துகிறீர்கள்

"மனிதர் சுமக்க முடியாத அளவு கனமான சுமைகளை அவர்கள் மீது சுமத்துகிறீர்கள்." மக்களுக்கு அதிகமான சட்டங்களைக் கொடுப்பதை சுமப்பதற்கு பாரமான சுமைகளைக் கொடுப்பதற்கு ஒப்பிடும் உருவகம் இது. இதை, "மக்கள் பின்பற்றவேண்டி அதிகமான சட்டங்களை அவர்களுக்குக் கொடுத்து மக்களை பாரப்படுத்துகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய சொந்த விரல்களால் கூட அந்த சுமையை நீங்கள் தொடுவது கூட இல்லை

"உங்களது விரல்களுள் ஒன்றைப் பயன்படுத்தி அந்த சுமைகளை சுமக்க அவர்களுக்கு உதவி செய்கிறதில்லை." இதன் அர்த்தம், "உங்களுடைய சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிய நீங்கள் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்கிறதில்லை"என்பதாகும்.

Luke 11:47-48

(இயேசு தொடர்ந்து நியாயப்பிரமாணப் போதகர்களிடம் பேசிக்கொண்டிருந்தததைத் தொடர்ந்தார்)

இன்னமும்

தங்களுடைய மூதாதையர்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள் என்கிற உண்மையை மறுக்கிறதற்கும் அவர்களைக் கனம்பண்ணுவதற்கும் இடையேயான வித்தியாசத்தைப் பார்க்க இது கவனத்தைத் திருப்புகிறது.

அதனால் உங்கள் முன்னோர் செய்த கிரியைகளுக்கு நீங்களே சாட்சிகளும் உடன்பட்டவர்களுமாய்

இது மறைத்து சொல்லப்பட்ட கடிந்துகொள்ளுதல்: "ஆனால் நீங்கள் அவர்களை மறுதலிக்கவில்லை." தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்பட்டதைக் குறித்து அவர்கள் அறிவார்கள், ஆனால் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்ததற்காய் அவர்களுடைய முன்னோர்களை அவர்கள் கடிந்துகொள்ளவில்லை.

Luke 11:49-51

(இயேசு மதத் தலைவர்களுடன் பேசுவதைத் தொடர்ந்தார்)

இந்தக் காரணத்திற்காக

இது பின்வரும் வாக்கியத்தை குறிக்கிறது. அவர்களுடைய தகப்பன்மார்கள் செய்தது போல இந்த சந்ததி தான் அவர்களைக் கொலை செய்வார்கள் என்பதைக் காண்பிக்க தேவன் இன்னும் அதிகமான தீர்க்கதரிசிகளை அனுப்புவார்.

தேவனுடைய ஞானம் சொன்னது

தேவன் தன்னுடைய ஞானத்தில் சொன்னார் அல்லது "தேவன் ஞானமாக சொன்னார்"

நான் அவர்களிடத்தில் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அனுப்புவேன்

"என்னுடைய மக்களிடத்தில் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அனுப்புவேன்"

அவர்களில் சிலரை அவர்கள் துன்புறுத்தி கொலைசெய்வார்கள்

சிந்தப்பட்ட இரத்தம் தீர்க்கதரிசிகளின் கொலையைக் குறிக்கிறது.

இதை, "கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்கும் பொறுப்பாளிகளாக பிடிக்கப்படுவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

சகரியா

2 நாளாகமத்தில் 24:20

22 இல் சொல்லப்பட்ட ஆசாரியனாக இருக்கலாம். இது யோவான் ஸ்நானகனின் தந்தை அல்ல.

Luke 11:52

(இயேசு நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிறவர்களிடம் அவர்கள் தேவனுக்கு விரோதமாக எப்படி பாவம் செய்தார்கள் என்பதைக் குறித்து சொல்லிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

நீங்கள் அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள்

இது ஒரு உருவகம். இதன் அர்த்தம், "தேவனுடைய சத்தியம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மக்களைப் போகவிடாமல் தடுத்துவிட்டீர்கள்" என்பதாகும். இதை UDB இல் உள்ளது போல ஒரு உவமானமாக மொழிபெயர்க்கலாம்.

திறவுகோல்

ஒரு வீட்டிற்கு அல்லது வைப்பு அறையினை திறக்க பயன்படுத்தும் கருவி என்பதைக் குறிக்கிறது.

நீங்களும் அதிலே பிரவேசிக்கிறதில்லை

"அறிவைப் பெறும்படி நீங்களும் அதிலே நுழைவதில்லை." இந்த உருவகத்தின் அர்த்தம், "நீங்களும் அந்த அறிவைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்பதாகும்.

Luke 11:53-54

இயேசு அங்கிருந்து கடந்து போனப் பிறகு

"பரிசேயனின் வீட்டை விட்டு இயேசு போனப்பிறகு"

அவருடைய சொந்த வார்த்தைகளால் அவரைப் பிடிக்கப் பார்த்து

இது ஒரு உருவகம். அவர்கள் இயேசு ஏதாகிலும் தவறாக சொன்னாள் அதை வைத்து அவரைக் குற்றப்படுத்த விரும்பினார்கள். இதை உருவகமில்லாமல் UDB இல் உள்ளது போல நீங்கள் மொழிபெயர்க்கலாம்.

Luke 12

Luke 12:1

அதே வேளையில்

"அவர்கள் அதை செய்து கொண்டிருந்தபொழுது"

அநேகமாயிரம் மக்கள் திரள்

"ஆயிரமாயிரம் மக்கள்" அல்லது "ஒரு பெரிய கூட்டம்"

ஒருவரை ஒருவர் மிதித்துக்கொண்டனர்

அங்கு எத்தனை திரள் மக்கள் இருந்தனர் என்று கூற மிகைப்படுத்தப்பட்ட கூற்று இது. இதன் அர்த்தம், "அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கால் வைத்தனர்."

அவர் தனது சீடர்களுக்கு சொல்லத் துவங்கினார், முதலாவது

"இயேசு முதலாவது தனது சீடர்களிடம் பேசத் துவங்கி அவர்களிடத்தில் சொன்னார்"

எச்சரிக்கையாய் இருங்கள்

"ஆபத்திநிமித்தம் விழிப்பாய் இருங்கள்" அல்லது "உங்களை அதற்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்"

மாயை என்கிற பரிசேயர்களின் புளித்த மா

இது உருவகம். இதை, ஒரு உவமானமாக மொழிபெயர்க்கலாம்: "புளித்த மா போல உள்ள பரிசேயர்களின் மாயைக்கு" புளித்த மா எப்படி ஒரு முழு அப்ப மாவிலும் பரவுகிறதோ அதுபோல அவர்களுடைய மாய்மாலம் முழு மாய்மாலமாயி பரவுகிறது. இந்த முழு எச்சரிப்பும், "பரிசேயர்களைப் போல நீங்களும் மாயக்காரர்கள் ஆகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். அவர்களுடைய தீய நடவடிக்கைகள் ஒரு பெரிய அளவு மாவைப் பாதிக்கிற புளித்த மாவைப்போல எல்லாரையும் பாதிக்கிறது." என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:2-3

(இயேசு தனது சீடர்களுக்கு மாயைக்கு எதிராக எச்சரிப்பதைத் தொடர்ந்தார்)

வெளியாக்கப்படாத மறைபொருள் ஒன்றும் இல்லை

இதை, "மறைத்துவைக்கப்பட்ட எல்லாம் காண்பிக்கப்படும்" அல்லது "மக்கள் இரகசியமாக செய்யும் எல்லாவற்றையும் மக்கள் கண்டுப்பிடிப்பார்கள்"என்று மொழிபெயர்க்கலாம்.

அறியப்படாத இரகசியமும் இல்லை

வாக்கியத்தின் இந்தப் பகுதி வெவ்வேறு வார்த்தைகளை சத்தியத்தை வலியுறுத்த முதல் பகுதியில் இருக்கும் அதே காரியத்தை சொல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காதிலே சொன்னது

இதை, "மற்ற மனிதனுக்கு காதோடு காதாக சொன்னான்" என்று மொழிபெயர்க்கலாம்.

உள் அறைகளில்

"பூட்டிய அறையில்." இதை, "பூட்டிய கதவுகளுக்குப் பின்னால்" அல்லது "தனிமையில்" அல்லது "இரகசியத்தில்" என்று மொழிபெயர்க்கலாம்.

அறிவிக்கப்படும்

"சத்தமாய் சொல்லப்படும்" அல்லது "மக்கள் அறிவிப்பார்கள்"

வீட்டுக்கூரைகளில் இருந்து

இஸ்ரவேலில் இருந்த வீடுகள் தட்டையான வீட்டுக் கூரைகளோடு இருந்தது; அதனால் மக்கள் மேலே போய் அதன் மீது நிற்க முடியும். வாசகர்களுக்கு இது புரியாதா புதிராய் இருக்குமானால், இதை இன்னும் அதிகமான விளக்கத்தோடு, "எல்லாரும் கேட்கக்கூடிய வகையில் உள்ள உயர்ந்த இடத்தில் இருந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:4-5

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

அவர்கள் செய்யும்படி அவர்களுக்கு ஒன்றுமில்லை

"அவர்கள் வேறு ஒன்றையும் செய்யமுடியாது" அல்லது "அவர்கள் இனி எந்த சேதத்தையும் ஏற்படுத்தமுடியாது" அல்லது "அவர்கள் இனி உங்களைக் காயப்படுத்த முடியாது"

அவருக்கு பயப்படுங்கள்

இதை, "தேவனுக்கு பயப்படுங்கள்" அல்லது "தேவனுக்கு பயப்படுங்கள் ஏனென்றால்"

அவர் கொலை செய்தப் பின்பு

"அவர் உங்களைக் கொலை செய்தப் பிறகு" அல்லது "அவர் யாரையாவது கொலை செய்தப் பிறகு"

உங்களை நரகத்தில் வீச அதிகாரம் இருக்கிறது

இதை, "மக்களை நரகத்தில் வீச அதிகாரம் இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:6-7

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

இரண்டு சிறிய காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகள் விற்கப்படுவதில்லையா?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. இதை, "அடைக்கலான் குருவிகளைக் குறித்து நினைத்துப் பாருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை வாங்கும் அளவிற்கு அவைகளுக்கு கொஞ்ச மதிப்பே உள்ளது. (UDB)

அடைக்கலான் குருவிகள்

அடைக்கலான் குருவிகள் மிகவும் சிறிய விதைத் தின்னும் பறவைகள்.

தேவனுடையப் பார்வையில் அவைகளில் ஒன்றும் மறந்துபோவதில்லை

"தேவன் அவைகளில் ஒன்றையும் மறப்பதில்லை!" (UDB) அல்லது "எந்த அடைக்கலான் குருவியையும் ஒருபோதும் தள்ளுவதில்லை!"

உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது

"உங்கள் தலையில் இருக்கிற முடி எத்தனை என்று தேவன் அறிவார்"

பயப்படாதிருங்கள்

"மக்களைப் பார்த்து பயப்படாதிருங்கள்" அல்லது "உங்களைக் காயப்படுத்தும் மக்களுக்கு பயப்படாதிருங்கள்"

அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தமானவர்கள்

"அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் உங்களை தேவன் மதிக்கிறார்"

Luke 12:8-10

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

மனிதர்களுக்கு முன்பதாக என்னை அறிக்கைப்பண்ணும் ஒவ்வொருவனும்

"தான் என்னுடைய சீடன் என்று மற்றவர்களிடம் சொல்லுகிற யாராயினும்" அல்லது "எனக்கு நேர்மையாய் இருக்கிறான் என்று மற்றவர்கள் முன்பாக சொல்லுகிற யாராயினும்"

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைத் தான் குறிப்பிடுகிறார். இதை, "மனுஷக் குமாரனாகிய நான்" என்று மொழிபெயர்க்கலாம்.

மனிதர்கள் முன்பு என்னை மறுதலிக்கிறவன்

"மக்கள் முன்பு என்னை தள்ளுகிறவன்." இதை, "தான் என்னுடைய சீடனாய் இருக்கிறான் என்று மற்றவர்கள் முன்பு அறிக்கையிட மறுக்கிறவன்" அல்லது "தான் எனக்கு நேர்மையாய் இருக்கிறேன் என்று சொல்ல மறுக்கிற எவனாயினும்" என்று மொழிபெயர்க்கலாம்.

மறுதலிக்கப்படுவான்

"தள்ளிவிடப்படுவான்." இதை, "மனுஷக் குமாரன் அவனை மறுதலிப்பார்" அல்லது "அவன் என்னுடைய சீடன் என்று நான் சொல்லமாட்டேன்"

மனுஷக் குமாரனுக்கு விரோதமாக பேசும் ஒவ்வொருவனும்

"மனுஷக் குமாரனைக் குறித்து தவறாக பேசும் ஒவ்வொருவனும்"

அவனுக்கு அது மன்னிக்கப்படும்

"அவன் மன்னிக்கப்படுவான்" அல்லது "தேவன் அவனை அதற்காக மன்னிப்பார்"

பரிசுத்த ஆவியானவரைத் தூஷித்து

இதை, "பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தீமையாக பேசி" அல்லது "பரிசுத்த ஆவியானவர் தீமையானவர் என்று சொல்லி" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:11-12

(இயேசு தனது சீடர்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

ஜெப ஆலயத்திற்கு முன்பாக

"ஜெப ஆலயத்திற்குள் மதத் தலைவர்கள் முன்பாக உங்களை விசாரிக்கும்படி" (UDB)

அதிகாரிகள்

"நாட்டில் வல்லமையுள்ள மற்ற மக்கள்" (UDB)

அந்த மணிநேரத்தில்

"அந்த நேரத்தில்" அல்லது "பின்பு"

Luke 12:13-15

மனிதன்

இது ஒரு அந்நியனை குறிப்பிடும் ஒரு சாதாரண வழி என்று சிலர் சொல்லுகிறார்கள். இயேசு அந்த மனிதனைக் கடிந்துகொல்லுகிறார் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். உங்கள் மொழியில் இந்த வகையில் மக்களை குறிப்பிடும் வழிகள் இருக்கலாம். சிலர் இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதில்லை.

என்னை நீதிபதியாக அல்லது மத்தியஸ்தானாக வைத்தவன் யார்?

இது பதில் எதிர்பாராக் கேள்வி. இதை, "நான் உங்களுக்கு நீதிபதியோ அல்லது மத்தியஸ்தரோ அல்ல." என்று மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் பன்மை வடிவ வார்த்தைகளான "உங்கள்" அல்லது "உங்களுடைய" என்பவைகளைப் பயன்படுத்தலாம். பன்மை வார்த்தைகள் உள்ள மொழிகள் அவைகளைப் பயன்படுத்தலாம்.

மத்தியஸ்தர்

மக்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாட்டை தீர்த்துவைப்பவன் மத்தியஸ்தன்.

அவர் அவர்களிடத்தில் சொன்னார்

"அவர்களிடத்தில்" என்னும் வார்த்தை முழு மக்கள் கூட்டத்தையும் குறிக்கிறது. இதை, "இயேசு கூட்டத்தாரிடம் சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லா பேராசை விருப்பங்களில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்

"எல்லா வகையான பேராசையில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்" இதை, "பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசைக்கு உங்களை அனுமதிக்காதீர்கள்"அல்லது "இன்னும் அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்கிற உந்துதலால் உங்களைக் கட்டுபடுத்த வைக்காதீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

யாரோ ஒருவனுடைய வாழ்க்கை

இது உண்மையின் ஒரு பொதுவான வாக்கியம். இது எந்த ஒரு பிரத்தியேக மனிதனையும் குறிக்கவில்ல்லை. சில மொழிகளில் இதை வெளிப்படுத்த வழிகள் இருக்கிறது.

திரளான ஆஸ்தி

"எத்தனைப் பொருட்கள் அவன் சொந்தமாக வைத்திருந்தான்" (UDB) அல்லது "எத்தனை சொத்து அவனுக்கிருக்கிறது"

Luke 12:16-19

பின்பு இயேசு அவர்களிடம் சொன்னார்

இயேசு அநேகமாக இன்னும் அந்தக் கூட்டத்தாரோடு பேசிக்கொண்டிருக்கலாம்.

அதிகமாக விளைந்தது

"நல்ல அறுவடை விளைந்தது"

தானியக்கிடங்கு

தானியக்கிடங்குகள் என்பது விவசாயிகள் வளர்த்தும் கதிர்களையும் உணவையும் அறுவடை செய்த பிறகு சேர்த்து வைக்கும் இடம்.

பொருட்கள்

"ஆஸ்திகள்"

என்னுடைய ஆத்துமாவிற்கு நான் சொல்லுவேன்

"நான் எனக்குள்ளே சொல்லுவேன்" (UDB)

Luke 12:20-21

(இயேசு ஐசுவரியவானின் உவமை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

உன்னுடைய ஆத்துமாவை உன்னிடத்தில் இருந்து கேட்கப்படுகிறது

இதை, "நீ இன்றைக்கு மரித்துப்போவாய்" அல்லது "இன்று இராத்திரி உன்னில் இருந்து உன்னுடைய ஜீவன் எடுக்கப்பட்டுப்போக இருக்கிறது"

அவைகள் யாருடையதாகும்

"நீ சேர்த்துள்ளதை யார் சொந்தம்கொண்டாடுவார்?" அல்லது "நீ ஆயத்தம் பண்ணினதை யார் வைத்துக்கொள்ளுவார்?" இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. அந்த மனிதன் இனி அவைகளை வைத்திருக்க மாட்டான் என்பதை சொல்லுவதற்கான உருவகம் ஆகும்.

பொக்கிஷங்களை சேர்த்துவைத்து

"விலை மதிப்புள்ள பொருட்களை சேர்த்து வைத்து"

ஐசுவரியவான் அல்ல

"ஏழ்மையான" அல்லது "கஞ்சன்" அல்லது "பெருந்தன்மையில்லாமல்"

தேவனுக்கு நேராக

இதை, "தேவனுடையப் பார்வையில்" அல்லது "தேவனைப் பொருத்தமட்டில்." என்று மொழிபெயர்க்கலாம். அர்த்தம் என்னவென்றால், தேவனுக்கு முக்கியமான காரியங்களில் இந்த மனிதன் முதலீடு செய்யவில்லை, அல்லது தேவன் பலன் தரும்படி" என்பதாகும்.

Luke 12:22-23

அதனால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

"அதனால்" அல்லது "அந்தக் காரணத்திற்காக" அல்லது "இந்தக் கதை கற்றுக்கொடுப்பதினிமித்தம்"

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

"நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புகிறேன்" அல்லது "இதை நீ கவனமாக கவனிக்கவேண்டும்"

உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து

என்னத்தை உண்போம்

இதை, "உங்களுடைய வாழ்க்கையைக் குறித்தது; என்னத்தை நீங்கள் உண்பீர்கள் என்று" அல்லது "வாழும்படி போதுமான உணவு வைத்திருப்பதைக் குறித்து" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய சரீரத்தைக் குறித்து

என்னத்தை உடுப்போம்

இதை, "உங்களுடைய சரீரத்தைக் குறித்தும்: நீங்கள் என்னத்தை உடுப்பீர்கள் என்று" அல்லது "உங்கள் சரீரங்களில் போடும்படி போதுமான துணிகள் வைத்திருப்பதைக் குறித்து" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:24-26

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

காகங்கள்

இது 1. "அதிகமாக தானியத்தைத் தின்னும் பறவையான காக்கைகளைக் குறிக்கலாம்" அல்லது 2. "அண்டங் காக்கைகள்

செத்துப்போன மிருகங்களில் இருந்து மாம்சத்தைத் தின்னும் பறவைகள்" என்பவைகளையும் குறிக்கலாம். இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் கருங்காக்கைகளை உண்ண முடியதபடியினால் மதிப்பில்லாததாய் நினைத்திருப்பார்கள்.

பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எத்தனை விசேஷமானவர்கள்!

இது ஒரு ஆச்சரிய வாக்கியம். இது, தேவனுக்கு பறவைகளைக் காட்டிலும் மனுஷர் அதிக மதிப்புள்ளவர்கள் என்பதை வலியுறுத்துகிறது.

வாழ்நாளில் ஒரு முழத்தைக் கூட்ட

இது ஒரு உருவகம். ஒரு முழம் என்பது நேரம் அல்ல, நீளத்தின் அளவாகும். ஒரு பொருளை அல்லது கயிறை நீளமாக்குவதைப்போல் மனிதனின் வாழ்நாளை நீடிப்பதாகும்.

Luke 12:27-28

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

காட்டுபுஷ்பங்கள்

காட்டுப்புஷ்பங்கள் காட்டிலுள்ள நிலங்களில் வளரும் மிகவும் அழகியப் பூக்கள். உங்கள் மொழியில் இந்தப் பூவிற்கான வார்த்தை இல்லை என்றால், அதே போல உள்ள மற்றொரு பூவின் பெயரை மாற்றாக பயன்படுத்தலாம் அல்லது "பூக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவைகள் நூற்பதுமில்லை

"துணிகளை செய்ய அவைகள் நூல்களை செய்வதில்லை" அல்லது "நூல்கண்டுகளை அவைகள் செய்வதில்லை."

சாலொமோன் அவனுடைய எல்லா மகிமையிலும்

"பெரிய சொத்து வைத்திருந்த சாலொமோன்" அல்லது "மிகவும் அழகான ஆடைகளை உடுத்தின சாலொமோன்"

தேவன் வயலில் இருக்கும் புல்லுகளை உடுத்துவிப்பீர் என்றால்

"இதுபோல வயலில் இருக்கும் புல்லுகளுக்கு தேவன் உடுத்துவிப்பர் என்றால்" அல்லது "இவ்வளவு அழகான ஆடைகளை வயலில் இருக்கும் புல்லுகளுக்குக் கொடுத்திருப்பார் என்றால்." "புல்லுகளை உடுத்தி" என்பது "புல்லுகளை அழகாக்கி" என்பதன் உருவகம் ஆகும்.

எத்தனை அதிகமாக அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்

புல்லுகளை அவர் கவனித்துக்கொள்ளுவதை விட மக்களை அவர் கவனித்துக்கொள்ளுவார் என்பதை வலியுறுத்தும் ஒரு ஆச்சரியக்கூற்றாகும்.

Luke 12:29-30

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்பதைப் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்

"என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்பதை நோக்காதிருங்கள்" அல்லது "உண்ணவும் குடிக்கவும் அதிகமாக ஆசைப்படாதிருங்கள்"

உலகத்தின் எல்லா நாடுகளும்

இதை, "மற்ற நாடுகளின் எல்லா மக்களும்" அல்லது "உலகத்தின் எல்லா அவிவிசுவாசிகளும்" என்று மொழிபெயர்க்கலாம். "நாடுகள்" என்பது "அவிவிசுவாசிகளைக்" குறிக்க உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Luke 12:31-32

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

அவருடைய ராஜ்யத்தை தேடுங்கள்

"தேவனுடைய ராஜ்யத்தின் மேல் நோக்கமாய் இருங்கள்" அல்லது "தேவனுடைய ராஜ்யத்தை மிகவும் அதிகமாய் விரும்புங்கள்"

இந்தக் காரியங்கள் உங்களுக்குக் கூடச் சேர்க்கப்படும்

"இந்தக் காரியங்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்." "இந்தக் காரியங்கள்" என்பது உணவையும் உடையையும்" குறிக்கிறது.

சிறு மந்தை

இயேசு தனது எல்லா சீடர்களையும் மந்தை என்று அழைக்கிறார். மந்தை என்பது மேய்ப்பன் அக்கறைக்காட்டும் ஒரு கூட்ட ஆடுகளை அல்லது செம்மறியாடுகளைக் குறிக்கும். இதை, சிறு குழு" அல்லது "நெருங்கிய குழு" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:33-34

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

ஏழைகளுக்குக் கொடு

"விற்பனையில் இருந்து நீ சம்பாதிக்கும் பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு"

உங்களுக்காக பணப்பைகளை செய்யுங்கள் ... பரலோகத்தில் பொக்கிஷம்

இதை, "இந்த வகையில் உங்களுக்காக பணப்பையை செய்துகொள்ளுவீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். பணப்பைகளும் பரலோகத்தில் பொக்கிஷமும் ஒரே காரியம் தான். இவை இரண்டும் பரலோகத்தில் உள்ள தேவனுடைய ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது.

பிய்ந்து போகாத(ஓட்டையில்லாத) பணப்பைகள்

"ஓட்டைகள் உண்டாகாது இருக்கும் பணப்பைகள்"

தீர்ந்து போகாது

"குறைந்து போகாது" அல்லது "குறைவாய்ப் போகாது"

Luke 12:35-36

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

உங்களுடைய நீளமான அங்கிகள் இடுப்புகளில் கட்டப்படட்டும்

மக்கள் நீளமான தொங்கும் அங்கிகளை அணிந்துகொள்ளுவர். அவர்கள் வேலை செய்யும்போது அவைகள் இடையூறாய் இராமல் இருக்க அவைகளை அரைகளில் கட்டிக்கொள்ளுவார்கள். இந்த வெளிப்படையான தகவலைக் காண்பிக்க, இதை, "சேவை செய்ய ஆயத்தமாக உங்கள் அங்கிகள் உங்கள் அரைகளில் கட்டப்பட்டிருக்கட்டும்" அல்லது "சேவை செய்ய ஆடை அணிந்து ஆயத்தமாய் இருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய விளக்குகள் அணையாமல் எரியட்டும்

"உங்களுடைய விளக்குகளை எரியவிட்டுக்கொண்டே இருங்கள்"

விளக்குகள்

இவைகள் ஒரு திரியையும் எரிப்பானாக ஒலிவ எண்ணையையும் கொண்டிருக்கும் சிறிய குப்பிகள் ஆகும்.

தங்களுடைய எஜமான்களை நோக்கிக் கொண்டிருக்கும் மக்களைப் போல இருங்கள்

இது இரு உவமானம் ஆகும். இது, இயேசுவின் வருகைக்கு காத்திருக்கும் சீடர்களை தங்கள் எஜமான் திரும்பி வருவதற்கு காத்திருக்கும் வேலையாட்களோடு ஒப்பிடுகிறது. இது உவமையின் துவக்கமும் கூட.

திருமண விருந்திலிருந்து திரும்பி

"திருமண விருந்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி"

Luke 12:37-38

(இயேசு தனது சீடர்களுக்கு உவமையைப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

பாக்கியவான்கள்

"எவ்வளவு நல்லது"

எஜமான் வரும்போது அவர் காண்பவன்

"எஜமானுக்காக காத்திருக்கிறவர்களை அவர் திரும்ப வரும்போது அவரால் காணப்படுபவர்கள்" அல்லது "எஜமான் திரும்பும்போது ஆயத்தமாய் இருக்கிறவர்கள்"

அவர் அரைக் கட்டிக்கொண்டு...அவர்களை அமரச்செய்து

இது முந்தின வசனங்களின் நேர் எதிராக உள்ளது. ஏனென்றால் வேலைக்காரர்கள் தங்கள் எஜமானுக்கு விசுவாசமாய் இருந்ததால், எஜமான் இப்பொழுது அவர்களுக்கு சேவை செய்வத்தின் மூலம் பலனளிப்பார்.

அவருடைய நீண்ட அங்கியை தனது அரையில் கட்டிக்கொள்ளுவார்

இதை வெளிப்படையானத் தகவலாக மொழிபெயர்க்கலாம்: "அவர் சேவை செய்ய தன்னுடைய அங்கியை அரையில் கட்டி ஆயத்தமாவார்" அல்லது "அவர் சேவை செய்யும்படி உடுத்திக்கொள்ளுவார்"

இராத்திரியின் இரண்டாம் சாமத்தில்

இதை, "இரவில் பிந்தி" அல்லது "நாடு இராத்திரிக்கு சற்று முன்பு" என்று மொழிபெயர்க்கலாம். இரண்டாம் சாமம் என்பது இரவு 9.00 மணியில் இருந்து நள்ளிரவு வரை ஆக்கும்.

அல்லது மூன்றாம் சாமத்திலும்

இதை, "அல்லது பிந்தின இராத்திரியில் அவர் வந்தால்" என்று மொழிபெயர்க்கலாம். மூன்றாம் ஜாமம் நள்ளிரவில் இருந்து விடியல் 3.00 மணி வரை தான்.

Luke 12:39-40

(இயேசு தனது சீடர்களுக்கு உவமையைப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

மனுஷக் குமாரன் எந்த மணிநேரத்தில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால்

திருடனுக்கும் மனுஷக் குமாரனுக்கும் இடையில் ஒரே ஒற்றுமை என்னவென்றால் இந்த இரண்டு பேரும் எப்பொழுது வருவார்கள் என்பது மக்களுக்கு தெரியாது என்பதுதான். அதனால் அவர்கள் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

மனுஷக் குமாரன் வரும்பொழுது

இயேசு தன்னைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதை, "மனுஷக் குமாரனாகிய நான் வரும்பொழுது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:41-44

இவன் யார்?

இது பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம் ஆகும். பேதுருவின் கேள்விக்கு இயேசு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இந்த உவமை அவர்களுக்குத் தான் என்பதை விசுவாசமுள்ள விசாரணைக்காரனாக இருக்க விரும்புகிறவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை ஒரு வாக்கியத்தோடு அறிமுகப்படுத்தலாம்: "இருக்கிற எல்லாருக்கும் நான் சொன்னேன்"

உண்மையும் விவேகமுமான விசாரணைக்காரன்

வேலைக்காரர்கள் தங்கள் எஜமான் திரும்பி வருவதை எதிர்பார்க்கும் போது எவ்வாறு உண்மையாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய உவமையை சொல்லுகிறார்.

மற்ற வேலையாட்களுக்கு மேலாக கர்த்தர் வைக்கும் அவன்

"தம்முடைய மற்ற வேலையாட்களுக்கு மேலாக வைக்கப்பட்டவன்"

அந்த வேலையாள் ஆசீர்வதிக்கப்பட்டவன்

"அந்த வேலையாளுக்கு அது எத்தனை நன்மை"

கர்த்தர் வரும்போது அதை செய்பவனைக் கர்த்தரால் காணப்படுகிறவன்

இதை, "அந்த வேலை செய்வதாக அவனைக் கர்த்தர் தாம் வரும்போது பார்த்தால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:45-46

(இயேசு தனது சீடர்களுக்கு உவமையைப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

அந்த வேலையாள்

கர்த்தர் மற்ற வேலையாட்கள் மேல் அதிகாரியாகப் போடப்பட்ட வேலையாளை இது குறிக்கிறது.

என்னுடையக் கர்த்தர் அவருடைய வருகையைத் தாமதித்தால்

இதை, "என்னுடைய எஜமான் சீக்கிரமாக வரமாட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆண் மற்றும் பெண் வேலையாட்கள்

இங்கு "ஆண் மற்றும் பெண் வேலையாட்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள், "ஆண் பிள்ளைகள்" மற்றும் "பெண் பிள்ளைகள்" என்று சாதாரணமாக மொழிபெயர்க்கப்பட்டவைகள். வேலையாட்கள் இள வயதானவர்கள் என்று குறிக்கலாம் அல்லது அவர்கள் எஜமானுக்கு பிரியமாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கலாம்.

உண்மையில்லாதவர்களோடு அவனுடையப் பங்கை வைத்தார்

"உண்மையில்லாதவர்களோடு அவனை சேர்த்துவிட்டார்" அல்லது "உண்மையில்லாதவர்களை அவர் அனுப்புகின்ற இடத்திற்கு அவனையும் அனுப்பினர்"

Luke 12:47-48

(இயேசு தனது சீடர்களுக்கு உவமையைப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

அநேக அடிகளால் அடிக்கப்படுவான்

"அநேக முறை தாக்கப்படுவான்" அல்லது "அநேக முறை சாட்டையால் அடிக்கப்படுவான்." இதை செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "அவனுடைய எஜமான் அவனை அநேக அடிகள் அடிப்பார்" அல்லது "அவனுடைய எஜமான் அவனை கடுமையாக தண்டிப்பார்"

அதிகமாய்க் கொடுக்கப்பட்டவர்களிடத்தில் அதிகமாய்க் கேட்கப்படும்

இதை செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "அதிகமாய்ப் பெற்றவனிடத்தில் அதிகமாய்க் கேட்கப்படும்" அல்லது "எஜமான் தான் யாரிடத்தில் அதிகமாய்க் கொடுத்தாரோ அவர்களிடத்தில் அவர் அதிகமாய்க் கேட்பார்."

அவர்கள் ஒப்புவித்தார்கள்...அவர்கள் கேட்பார்கள்

"அவர்கள்" என்னும் வார்த்தை ஒரு பிரத்தியேக மக்கள் குழுவைக் குறிக்கிறது. இதை, "எஜமான் ஒப்புவித்தார்...எஜமான் கேட்பார்" என்று மொழிபெயர்க்கலாம். முந்தின வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மொழிபெயர்த்திருந்தீர்களானால், UDB யைப் பின்பற்றுவதை நினைத்துக்கொள்ளுங்கள்.

யாருக்கு அதிகமாக ஒப்புவிக்கப்பட்டதோ

"பார்த்துக்கொள்ள யாரிடம் அதிகமான சொத்து கொடுக்கப்பட்டுள்ளதோ" அல்லது "யாருக்கு அதிகமான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ"

Luke 12:49-50

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

பூமியின் மேல் அக்கினியைப் போடா வந்தேன்

"நான் பூமியன் மீது அக்கினியை வீச வந்தேன்" அல்லது "நான் பூமியை கொளுத்திப்போட வந்தேன்." இந்த உருவகத்தின் சாத்தியமான அர்த்தங்கள் 1. "நியாயத்தீர்ப்பு" அல்லது 2. "சுத்திகரிப்பு" அல்லது 3. "பிரிவினை"

அது பற்றி அறிய வேண்டுமென்று நான் எப்படி விரும்புகிறேன்

அவர் இது நடக்கவேண்டும் என்று எப்படி விரும்புகிறார் என்பதின் உணர்வுப் பூர்வமானக் கூற்றாய் இருக்கிறது. இதை, "அது ஏற்கனவே பற்றிபிடித்திருக்க விரும்புகிறேன்" அல்லது மிகவும் பொதுவாக, "அது ஏற்கனவே துவங்கியிருக்க நான் விரும்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆகிலும் நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானமும் உண்டு

ஞானஸ்நானம் பாடுபடுவதற்கான உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தண்ணீர் ஒரு மனிதனை மூடுவது போல, பாடுகள் இயேசுவை மூடிக்கொள்ளும். இதை, "நான் பாடுகளினால் ஸ்நானம் பண்ணப்படுவேன்" அல்லது ஒரு உவமானமாக: "தண்ணீரினால் ஞானஸ்நானம் பெரும் ஒரு மனிதன் தண்ணீரினால் மூடப்படுவது போல நானும் பாடுகளினால் மூடப்பட வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆயினும்

"ஆயினும்" என்கிற வார்த்தை அவர் ஸ்நானம் பண்ணப்படும் முன்னதாக அவர் பூமியின் மீது அக்கினியைப் போட முடியாததைக் காண்பிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அது முடியும்வரை நான் எவ்வளவு நெருக்கப்படுகிறேன்!

இந்தக் கூற்று அவர் எப்படி நெருக்கப்பட்டிருந்தார் என்பதைக் காண்பிக்கிறது. இதை, "நான் மிகவும் பயங்கரமாக நெருக்கப்படுகிறேன்; இந்த பாடுகள் முடியும்வரை அப்படியே தான் இருப்பேன்!" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:51-53

(இயேசு தனது சீடர்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

நான் பூமியில் சமாதானத்தைக் கொண்டு வரும்படி வந்தேன் என்று நினைக்கிறீர்களா?

இது ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. தங்களது எதிரிகளிடமிருந்து தங்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். இதை, "நான் பூமியில் சமாதானத்தைக் கொண்டு வர நான் வந்தேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால் அதற்கு பதிலாக பிரிவினையை உண்டுபண்ண

"ஆனால் நான் பிரிவினையைக் கொண்டு வர வந்தேன்"

பிரிவினை

"பகைமை"அல்லது "வேற்றுமையுணர்வு"

வீட்டில் ஐந்து பேர் பிரிந்து இருக்கிறார்கள்

குடும்பங்களில் கூட இருக்கும் பிரிவினைகளின் வகையின் எடுத்துக்காட்டு இது.

Luke 12:54-56

தென்றல் வரப்போகிறது

"மழை வரப்போகிறது" அல்லது "மழைப் பெய்யப்போகிறது" (UDB)

பூமியும் வானங்களும்

"பூமியும் ஆகாயமும்" அல்லது "காலசூழ்நிலை"

நிகழ் காலத்தை அனுமானிக்க உங்களுக்கு எப்படி தெரியவில்லை?

இந்த பதில் எதிர்பாராக் கேள்வி ஒரு கண்டிதமாக பயன்படுத்தப்படிருக்கிறது. இதை, "நிகழ் காலத்தை நிதானிக்க உங்களுக்கு தெரிய வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 12:57-59

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

சரியானது என்ன என்று ஏன் நீங்களே தீர்க்கக்கூடாது

இது கடிந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பதில் எதிர்பாராக் கேள்வி. இதை, "நல்லது என்ன என்பதை நீங்களே பகுத்து அறியவேண்டும்." என்று மொழிபெயர்க்கலாம். இயேசு நல்லது என்ன என்பதைப் பற்றி போதிக்கிறார் என்பதை அறிமுகப்படுத்துகிறது.

உங்களுக்காகவே

"உங்கள் சொந்த சிந்தனையில்" அல்லது "அதை செய்ய உங்களுக்கு நேரம் இருக்கும்போதே" (UDB). கேட்கிறவர்கள், யாருடைய கட்டாயமும் இல்லாமல் தங்களது சொந்த விருப்பத்திலேயும் ஞானத்திலும் செயல்பட வேண்டும்.

உன்னுடைய எதிராளியோடு போகும்போது

இது இன்னொரு உவமையின் துவக்கம். இயேசு இன்னும் நடக்காத சூழ்நிலையை தேவனுடைய வரப்போகிற நியாயத்தீர்ப்பை ஒரு உருவகமாக பயன்படுத்தி இருக்கிறார்.

ஏனென்றால் நீ போகும்போது

இயேசு ஒரு கூட்டத்தாரிடம் பேசினாலும், அவர் சொல்லும் சூழ்நிலை தனியே போகும் ஒருவனைக் குறிப்பதாக இருக்கிறது. அதனால் சில மொழிகளில், "நீங்கள்" என்னும் வார்த்தை ஒருமையில் இருக்கிறது.

அவனோடு காரியத்தை சரிசெய்துவிடு

"உன்னுடைய எதிராளிகளோடு காரியத்தை சரிசெய்துவிடு"

நீதிபதி

இது ஒரு நியாயதிபதியைக் குறிக்கிறது. ஆனால், இங்கு இந்த வார்த்தை மிகவும் குறிப்பாகவும் பயமுறுத்துகிறதாயும் இருக்கிறது.

Luke 13

Luke 13:1-3

அந்த சமயத்தில்

இந்தப் பதம் இந்த நிகழ்வை இயேசு மக்கள் கூட்டத்திற்கு போதிக்கும் நிகழ்வு இருக்கும் அதிகாரம் 12 இன் முடிவிற்கு இணைக்கிறது.

இரத்தத்தை அவர்களது பலிகளில் கலந்தான் பிலாத்து

இது ஒரு பேச்சிலக்கண அணி.. இதில், அவர்களுடைய மரணம் அவர்களது இரத்தத்திற்கு ஒப்பாய் பேசப்பட்டுள்ளது. இதை, "அவர்களது பலிகளை செலுத்திக்கொண்டிருந்த பொழுது, பிலாத்துவால் கொல்லப்பட்டவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். பிலாத்து தானே கொலை செய்யாமல், அதை செய்யும்படி அவனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டிருப்பான்.

இந்த கலிலேயர்கள் மிகவும் பாவமுள்ளவர்கள் என்று நினைக்கிறீர்களா

"இந்தக் கலிலேயர்கள் அதிக பாவிகளாய் இருந்தார்களா" அல்லது "இது கலிலேயர்கள் அதிக பாவிகள் என்று நிருபிக்கிறதா?" இது பதில் எதிர்பாரா கேள்வி. இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "இந்தக் கலிலேயர்கள் அதிக பாவம் உள்ளவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" அல்லது கட்டளையாக "இந்த கலிலேயர்கள் அதிக பாவிகள் என்று நினைக்காதீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

இல்லை, நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு "இல்லை" என்பதை வலியுறுத்தும்படி "நான் உங்களுக்கு சொல்லுகிறேன்" என்று சொன்னார். இதை, "நிச்சயமாக இல்லை!" என்று மொழிபெயர்க்கலாம். சாத்தியமான அர்த்தங்கள் 1. "அவர்கள் உண்மையில் அதிக பாவம் உள்ளவர்கள் அல்ல" அல்லது 2. "அவர்களுடைய பாடுகள் அதை உண்மையில் நிரூபிக்கவில்லை." இதை, " நீங்கள் அப்படி நினைக்கிறது தவறு" என்று மொழிபெயர்க்கலாம்.

அதே வழியில் நீங்கள் அழிந்துபோவீர்கள்

"நீங்கள் எல்லாரும் மரித்துப் போவீர்கள்" "அதேப் போல" என்கிற பதம், "அதே பலன்" என்று அர்த்தப்படுகிறது. அதே முறையில் அல்ல.

அழிந்து

"உங்கள் வாழ்க்கையை இழந்து" அல்லது "மரித்து"

Luke 13:4-5

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

அல்லது அவர்கள்

பாடுபட்ட மக்களைக் குறித்து இயேசு கொடுக்கும் இரண்டாம் எடுத்துக்காட்டு. இது, "அல்லது, அவர்களை நினைவுகூருங்கள்" அல்லது "அவர்களைக் குறித்து நினையுங்கள்" என்று துவங்கலாம். இதை பின்வரும் பதில் எதிர்பாராக் கேள்வியோடு இணைக்கும் பொருட்டு "அவர்களைக் குறித்து என்ன" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் மிகவும் மோசமான பாவிகள் என்று நினைக்கிறீர்களா

"அவர்கள் அதிகமான பாவம் உடையவர்களா" அல்லது "அவர்கள் அதிகமான பாவம் உடையவர்கள் என்பதை இது நிரூபிக்கிறதா?" இது பதில் எதிர்பாரா கேள்வி. இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "அவர்கள் மிகவும் பாவிகளாய் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" அல்லது கட்டளையாக "அவர்கள் மிகவும் பாவிகள் என்று நினைக்காதிருங்கள்."

மற்ற மனிதர்கள்

"மற்ற மக்கள்"

இல்லை, நான் சொல்லுகிறேன்

இயேசு "இல்லை" என்பதை வலியுறுத்தும்படி "நான் உங்களுக்கு சொல்லுகிறேன்" என்று சொன்னார். இதை, "நிச்சயமாக இல்லை!" என்று மொழிபெயர்க்கலாம். சாத்தியமான அர்த்தங்கள் 1. "அவர்கள் உண்மையில் அதிக பாவம் உள்ளவர்கள் அல்ல" அல்லது 2. "அவர்களுடைய பாடுகள் அதை உண்மையில் நிரூபிக்கவில்லை." இதை, " நீங்கள் அப்படி நினைக்கிறது தவறு" என்று மொழிபெயர்க்கலாம்.

அழிந்து

"உங்கள் வாழ்க்கையை இழந்து" அல்லது "மரித்து"

Luke 13:6-7

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

இயேசு இந்த உவமையை சொன்னார்

அவர்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது அழிந்துபோக வேண்டும் என்று முந்தய வசனத்தில் சொன்னதை விவரிக்க இயேசு இந்த உவமையை சொன்னார்.

அது நிலத்தை கெடுத்துப்போட ஏன் விடுகிறீர்

இது பதில் எதிர் பாராத கேள்வி. இதை ஒரு வாக்கியமாக UDB இல் உள்ளது போல அல்லது ஒரு கட்டளையாக மொழிபெயர்க்கலாம்: "அது நிலத்தைக் கெடுக்க விடாதிரும்."

Luke 13:8-9

(இயேசு இந்தக் கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அதை விட்டுவிடும்

இதை, "மரத்திற்கு ஒன்றும் செய்யாதிரும்" அல்லது "அதை வெட்டிப்போடாதிரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அதற்கு எரு போட்டு

"நிலத்தில் எரு போட்டு." எரு என்பது மிருகத்தின் சாணி. செடிகளுக்கும் மரங்களுக்கும் நிலத்தை பண்படுத்தி மக்கள் இதை நிலத்தில் போடுவார்கள்.

வெட்டி

இதை, "அதை நான் வெட்டிப்போட விடும்" அல்லது "அதை வெட்டிப் போட எனக்கு கட்டளையிடும்" என்று மொழிபெயர்க்கலாம். வேலையாள் ஒரு ஆலோசனையை வைக்கிறான். அவன் ஒரு கட்டளையை தனது முதலாளிக்கு சொல்லவில்லை .

Luke 13:10-11

ஓய்வுநாளில்

"ஓய்வு நாளில்." சில மொழிகள், "ஓய்வுநாள்" என்று சொல்லும் ஏனென்றால் எந்த ஒய்வு நாள் என்று நமக்கு தெரியாது.

இதோ

"இதோ" என்னும் வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம். ஆங்கிலம், "ஒரு பெண்மணி இருந்தால், அவள்..." என்று சொல்லுகிறது.

பெலவீனத்தின் தீய ஆவி

"அவளை பெலவீனப்படுத்தின ஒரு தீய ஆவி"

Luke 13:12-14

உன்னுடைய பலவீனத்தில் இருந்து விடுதலை ஆகு

"உன்னுடைய வியாதியிலிருந்து நீ சுகமானாய்." இதை சொல்லுவதில் இருந்து, இயேசு அதை நடக்கப் பண்ணினார். இதை ஒரு கட்டளையாக (ULB) அல்லது ஒரு வாக்கியமாக (UDB) மொழிபெயர்க்கலாம்.

அவர் தம் கரங்களை அவள் மீது வைத்தார்

"அவர் அவளைத் தொட்டார்"

இயேசு சுகமாக்கினதினால் கோபமடைந்து

இதை, "இயேசு சுகமாக்கினார் என்பதால் கோபமடைந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

பதிலளித்து சொன்னது

"சொன்னார்" அல்லது "பிரதி சொன்னார்"

வந்து சுகமாகிக்கொள்ளுங்கள்

"அந்த ஆறுநாட்களும் வந்து சுகம் பெற்றுக்கொள்ளுங்கள்"

Luke 13:15-16

கர்த்தர் அவனுக்கு பதில் அளித்தார்

"ஜெப ஆலயத் தலைவனுக்கு கர்த்தர் பிரதியுத்திரமாக"

உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் கழுதையை அவிழ்ப்பதில்லையா

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "நீங்கள் உங்கள் கழுதையை அவிழ்க்கிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கழுதையையோ அல்லது மாட்டையோ

மக்கள் தண்ணீர் கொடுத்து கவனித்துக்கொள்ளும் மிருகங்கள் இவைகள்.

ஆபிரகாமின் குமாரத்தி

"ஆபிரகாமின் சந்ததி"

சாத்தான் கட்டி வைத்திருக்கிற

இது ஒரு உருவகம். இதன் அர்த்தம், "சாத்தானால் முடக்கப்பட்டவள்" என்பதாகும். இந்த உருவகத்தை அப்படியே வைத்து அர்த்தத்தை வெளிப்படையாக்கலாம்: "இந்த வியாதியினால் சாத்தான் கட்டிவைக்கப்பட்ட."

பதினெட்டு நீண்ட வருடங்கள்

"நீண்ட" என்ற வார்த்தை அந்த பெண் பாடுபட்ட பதினெட்டு வருடங்கள் மிகவும் நீண்ட நாட்கள் என்பதை வலியுறுத்துகிறது. மற்ற மொழிகளில் இதை வலியுறுத்த வேறு வழி இருக்கலாம்.

அவசியமில்லையா

இது பதில் எதிர்பாரா கேள்வியை ஆரம்பிக்கிறது. ஓய்வு நாளில் அந்தப் பெண்ணை குணமாக்குவது சரி என்று மக்களை ஒத்துக்கொள்ள வைக்க இயேசு இதைப் பயன்படுத்தினார். இதை, ஒரு வாக்கியமாக, "இது சரி என்று நீங்கள் நிச்சயமாக எற்றுக்கொள்ளுவீர்கள்" (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

அவளுடைய கட்டுகளை அவிழ்க்க

இது ஒரு உருவகம். இதை, "சாத்தானிடம் இருந்து அவளை அவிழ்த்துவிட" அல்லது "இந்த வியாதியிலிருந்து கட்டுகளை அவிழ்க்க" என்றும் மொழிபெயர்க்கலாம்.

Luke 13:17

இந்தக் காரியங்களை அவர் சொன்ன பொழுது

"இயேசு இந்தக் காரியங்களை சொன்னப் பொழுது"

அவர் செய்த மகிமையான காரியங்கள்

"இயேசு செய்துகொண்டிருந்த மகிமையான காரியங்கள்"

Luke 13:18-19

(ஜெப ஆலயத்தில் இருந்த மக்களுக்கு கற்றுக்கொடுப்பதை இயேசு தொடர்ந்தார்)

தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டது

இயேசு என்ன பேச விரும்புகிறாரோ அதை அறிமுகம் செய்யும் பதில் எதிர் பாராக் கேள்வி இது. இதை ஒரு வாக்கியமாகவும் மொழிபெயர்க்கலாம்: "தேவனுடைய ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்று நான் உங்களுக்கு சொல்லுவேன்."

எதற்கு நான் அதை ஒப்பிடுவேன்

இது முந்தைய பதில் எதிர்பாராக் கேள்வி போலத் தான். இயேசு என்ன பேச விரும்புகிறாரோ அதை அறிமுகம் செய்ய இதைப் பயன்படுத்தினார். சில மொழிகள் இதை இரண்டையும் பயன்படுத்தலாம், சில மொழிகள் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம்.

கடுகு விதை

கடுகு விதைகள் பெரிய செடிகளாக வளரும் சிறிய விதைகள் ஆகும். இவைகள் அறியப்படவில்லை என்றால், இதைப் போன்றதொரு விதையாக இதை மொழிபெயர்க்கலாம் அல்லது "ஒரு சிறிய விதை" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய தோட்டத்தில் போட்டான்

"அவனுடைய தோட்டத்தில் விதைத்தான்." மக்கள் சில வகையான விதைகளை தோட்டத்தில் வீசுவார்கள்.

ஒரு பெரிய மரம்

இது கருத்தைக் கூற மிகைப்படுத்திக் கூறுகிறதாகும். இதை, "ஒரு பெரிய செடி" என்று மொழிபெயர்க்கலாம்.

வானத்தின் பறவைகள்

"ஆகாயத்தின் பறவைகள்." இதை, "ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்" அல்லது "பறவைகள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

Luke 13:20-21

(இயேசு ஜெப ஆலயத்தில் பேசுவதைத் தொடர்ந்தார்)

தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவேன்?

இயேசு என்ன பேச விரும்புகிறாரோ அதை அறிமுகம் செய்யும் பதில் எதிர் பாராக் கேள்வி இது. இதை UDB இல் உள்ளதுபோல ஒரு வாக்கியமாகவும் மொழிபெயர்க்கலாம்.

அது ஒரு புளித்தமாவு போல இருக்கிறது

ஒரு சிறு அளவு புளித்தமா ஒரு பெரிய அளவு மாவை உப்பப்பண்ணப் போதுமானது. UDB இல் உள்ளது போல இதை தெளிவாக மொழிபெயர்க்கலாம்.

மூன்று படி அளவு மாவு

இதை, "பெரிய அளவு மாவு" அல்லது "பெரிய அளவு மாவை உங்கள் கலாச்சாரத்தில் குறிப்பிடும் வார்த்தையை இங்கு பயன்படுத்தலாம்.

Luke 13:22-24

குறுகலான வாசலில் நுழையப் பாடுபடுங்கள்

"இடுக்கமான வாசல் வழியே கடந்துபோக கடுமையாக உழையுங்கள்." இது தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய உருவகத்தின் ஒரு பகுதி. இந்த உருவகத்தில், தேவனுடைய ராஜ்ஜியம் ஒரு வீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு ஒரு கூட்ட மக்களுக்குப் பேசிக்கொண்டிருந்தார். அதனால், "நீங்கள்" என்று இந்தக் கட்டளையில் மறைத்து சொல்லப்பட்டுள்ள வார்த்தை பன்மையில் இருக்கிறது.

இடுக்கமான வாசல்

ராஜ்யத்தின் பங்காளியாக மாறுகிறது ஒரு இடுக்கமான வாசல் வழியே பிரவேசிக்கிறதைக் குறிக்கிறது. வாசல் இடுக்கமாய் இருக்கிறது என்னும் உண்மை சில மக்களே அதன் வழியாய் பிரவேசிக்க முடியும் என்பதை சொல்லுகிறது. இந்த குறிப்பான அர்த்தத்தை தக்க வைக்கும் வகையில் இதை மொழிபெயர்க்கவும்.

Luke 13:25-27

(இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதைப் பற்றி சொல்லுவதைத் தொடர்ந்தார்)

வீட்டின் உரிமையாளன்

இது தேவனைக் குறிக்கிறது. "தேவன்" என்று இதை மொழிபெயர்க்கலாம்.

நீ வெளியே நிற்கலாம்

இயேசு கூட்டத்தாரிடத்தில் பேசிகொண்டிருந்தார். "நீங்கள்" என்னும் படிவம் பன்மையில் இருக்கிறது. அவர்கள் கதவு வழியாக நுழைந்து ராஜியத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என்பது போல அவர் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

என்னை விட்டு அகன்று போங்கள்

"என்னை விட்டுப் போங்கள்"

தீய செய்கைக்காரர்

"தீமை செய்யும் மக்கள்"

Luke 13:28-30

(இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதைப் பற்றி சொல்லுவதைத் தொடர்ந்தார்)

பற்கடிப்பு

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "நீங்கள் கோபமாய் இருக்கிறதினால் பற்கடிப்பீர்கள்" அல்லது 2. "நீங்கள் வலியில் இருக்கிறதினால் பற்கடிப்பீர்கள்." உங்கள் கலாச்சாரம் கோபத்தை பற்கடிப்போடு சேர்த்து பார்க்காது என்றால், இதை, "கோபத்தில் பற்கடிக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம். அல்லது உங்கள் கலாச்சாரத்தில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வழியை சொல்லலாம்: "காலை தரையில் மிதிப்பது" அல்லது "பற்களைக் கடிப்பது" அல்லது "உருமுதல்"

ஆனால் நீங்கள்

நீங்கள் வெளியே வீசப்பட்டீர்கள்

"ஆனால் நீங்களே வெளியே வீசப்படுவீர்கள்"

அவர்கள் வந்தடைவார்கள்

"மக்கள் வருவார்கள்"

கடைசியில் இருக்கிறவர்கள் முந்தினவர்கள் ஆவார்கள்

இது கனத்தைக் குறித்தது அல்லது முக்கியத்துவத்தைக் குறித்தது. இதை, "மிகவும் முக்கிய மில்லாதவர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்" அல்லது "கனவீனப்படுத்தப்பட்டவர்கள் சிலர் கனப்படுத்தப்படுவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 13:31-33

சிறிது நேரம் கழித்து

"இயேசு பேசி முடித்தப் பிறகு.

இவ்விடத்தை விட்டுப் போய்விடும் ஏனென்றால், ஏரோது உம்மைக் கொலைசெய்ய விரும்புகிறான்

இதை இயேசுவிற்கு ஒரு எச்சரிக்கையாக மொழிபெயர்க்கவும். வேறு இடத்திற்குப் போய் பாதுகாப்பாய் இருக்க அவர்கள் அவருக்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஏரோது உம்மைக் கொல்ல விரும்பினான்

"ஏரோது உம்மைக் கொலைசெய்ய விரும்புகிறான்." ஏரோது இயேசுவைக் கொலை செய்ய மக்களுக்குக் கட்டளையிடலாம்.

அந்த நரி

இயேசு ஏரோதை நரி என்று சொல்லுகிறார். நரி எனபது ஒரு சிறிய வனவிலங்காகும். இது ஒரு உருவகம் ஆகும். சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஏரோது ஒரு பெரிய ஆபத்து ஒன்றுமில்லை" அல்லது 2. "ஏரோது தந்திரக்காரான்"

எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியை கொலை செய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத செயல்

யூதத் தலைவர்கள் அநேக தேவனுடைய தீர்க்கதரிசிகளை எருசலேமில் கொலை செய்துள்ளனர். தன்னையும் அங்கே கொலை செய்வார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். மறு மொழிபெயர்ப்பு: "எருசலேமில் தான் யூதத் தலைவர்கள் தேவனுடைய செய்தியாளர்களைக் கொலை செய்தனர்."

Luke 13:34-35

(இயேசு எருசலேமுக்கு போகும் முன்பு பரிசேயர்களுடன் பேசுவதைத் தொடர்ந்தார்)

எருசலேம், எருசலேம்

எருசலேமின் மக்கள் தன்னை கவனித்துக்கொண்டிருந்ததைப் போல இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்காக இயேசு எத்தனை துக்கமாய் இருக்கிறார் என்பதைக் காண்பிக்க இதை அவர் இரண்டு முறை சொன்னார்.

தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன்னிடத்தில் அனுப்பினவர்கள் கல் எறிந்தவளே

ஒரு பட்டணத்திடம் பேசுவது அன்னியமாக இருந்தால், இயேசு உண்மையில் பட்டணத்தின் மக்களிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக சொல்லலாம்: "தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து தேவன் உங்களிடத்தில் அனுப்புகிரவர்களை கல் எறிகிற மக்கள் நீங்கள்."

உன் பிள்ளைகளை கூட்டிச்சேர்க்க

"உன்னுடைய மக்களைக் கூட்டிச் சேர்க்க" அல்லது "உன்னைக் கூட்டி சேர்க்க" கோழி தன் குஞ்சுகளை அதன் சிறகுகளின் மறைவில் சேர்க்கிறதுபோல

இந்த உருவகம் எப்படி ஒரு கோழி தன் குஞ்சுகளை சேதத்திலிருந்து காக்க அதன் சிறகுகளால் மூடுவதை விவரிக்கிறது.

உங்கள் வீடு பாழாகிவிட்டது

இது உருவகம். சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவன் உங்களைப் புறக்கணித்துவிட்டார்" அல்லது 2. "உங்களுடையப் பட்டணம் காலியாக உள்ளது." இதன் அர்த்தம் என்னவென்றால், தேவன் எருசலேமின் மக்களைக் காப்பதை விட்டுவிட்டார், அதனால் அவர்களை எதிரிகள் தாக்கி துரத்தலாம்.இதை, "உங்களுடைய வீடு பாலாய்ப்போகும்" அல்லது "தேவன் உங்களைப் புறக்கணிப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் சொல்லும்வரை என்னைக் காண்பதில்லை

"நீங்கள் சொல்லும் நேரம் வரும் வரை என்னை நீங்கள் காணமாட்டீர்கள்" அல்லது "என்னை அடுத்த முறை என்னைக் காணும்போது நீங்கள் சொல்லுவீர்கள்"

Luke 14

Luke 14:1-3

அப்பம் சாப்பிட

"சாப்பிட" அல்லது "உணவிற்காக." அப்பம் உணவின் முக்கியமானக ஒரு பகுதி. இந்த வாக்கியத்தில் உணவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்

அவர் தவறு ஏதாவது செய்தால், அவரைக் குற்றப்படுத்தலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதோ, அவருக்கு முன்பதாக ஒரு மனிதன்

"இதோ" என்கிற வார்த்தை கதையில் ஒரு புதிய மனிதனை அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும். ஆங்கிலம், "அவருக்கு முன்பதாக ஒரு மனிதன், அவன்..." என்பதைப் பயன்படுத்துகிறது.

நீர்க்கோவை வியாதியினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான்

நீர்க்கோவை என்பது சரீரத்தின் பகுதிகளில் தண்ணீரினால் உண்டாகும் வீக்கங்கள். சில மொழிகளில் இந்த நிலைக்கு வேறு பெயர் இருக்கலாம். இந்த பதத்தை, "உடல் பாகங்கள் தண்ணீரினால் வீங்கி இருப்பதால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

குணமாக்குவது நியாயமா ?

"நம்மை குணமாக்க நியாயப் பிரமாணம் அனுமதிக்கிறதா"

Luke 14:4-6

அவர்கள் அமைதியாய் இருந்தனர்

மதத் தலைவர்கள் இயேசுவின் கேள்விக்கு பதில் கூற மறுத்தனர்.

இயேசு மனிதன் மீது கைகளை வைத்தார்

"இயேசு மனிதனைத் தொட்டார்"

மகனையோ அல்லது எருதையோ வைத்துள்ள உங்களில் ஒருவன் ... அவனை உடனடியாக வெளியே இழுக்க மாட்டானா

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. அவர்கள் தங்களது மகனுக்கோ அல்லது எருதுக்கோ ஓய்வுநாளிலும் கூட உதவுவார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வைக்க விரும்பினார். அதனால், ஓய்வு நாளில் மக்களை குணமாக்கியதும் சரி. இதை, "உங்களுக்கு இருக்கும் மகனோ அல்லது எருதோ ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், நீங்கள் கண்டிப்பாக அதை வெளியே எடுப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களுக்கு பதில் சொல்ல முடிய வில்லை

இதை, "அவர்களுக்கு சொல்ல ஒன்றுமில்லை" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவின் கேள்விக்கு அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்று அர்த்தமில்லை, ஆனால், அவர் சரியாக சொன்னார் என்றும் அதைக் குறித்து அவர்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை என்பதும் தான் காரியம்.

Luke 14:7-9

(இயேசு பரிசேயனுடைய வீட்டில் இருந்தவர்கள் இடத்தில் பேசுவதைத் தொடர்ந்தார்)

கனத்தின் இருக்கைகள்

கனம் கொடுக்கப்படும் மக்களுக்கான இருக்கைகள்

வெட்கத்தில்

"பின்பு நீங்கள் வெட்கம் அடைவீர்கள்"

Luke 14:10-11

(இயேசு பரிசேயனுடைய வீட்டில் இருந்தவர்கள் இடத்தில் பேசுவதைத் தொடர்ந்தார்)

தாழ்ந்த இடம்

"முக்கியம்ல்லாதவர்களுக்கான இருக்கை"

மேலே போங்கள்

"கனமான இருக்கைக்குப் போங்கள்"

தன்னைத் தான் உயர்த்துகிறவன்

"முக்கியவானாக காணப்பட முயசிக்கிறவன்" அல்லது "முக்கியமான பதவியை எடுப்பவன்"

தாழ்த்தப்படுவான்

"முக்கியமல்லாதவனாகக் காட்டப்படுவான்" அல்லது "முக்கியமல்லாத பதவி கொடுக்கப்படுவான்"

தன்னைத் தாழ்த்துகிறவன்

"முக்கியமல்லாதவனாக காணப்பட விரும்புகிறவன்" அல்லது "முக்கியமல்லாத பதவியை எடுக்கிறவன்"

உயர்த்தப்படுவான்

"முக்கியமானவனாகக் காட்டப்படுவான்" அல்லது "முக்கியமான பதவி கொடுக்கப்படுவான்"

Luke 14:12

அவர்கள் செய்யலாம்

"ஏனென்றால் அவர்கள் செய்யக்கூடும்"

Luke 14:13-14

(இயேசு பரிசேயனுடைய வீட்டில் இருந்தவர்கள் இடத்தில் பேசுவதைத் தொடர்ந்தார்)

அவர்கள் உங்களுக்குத் திரும்ப செலுத்த முடியாது

இதை, "விருந்திற்கு உங்களை பதிலுக்கு அவர்களால் அழைக்க முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.

நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்

"மரித்தோரிலிருந்து நீதிமான்கள் உயிர்த்தெழச் செய்யப்படும் போது"

Luke 14:15-17

அவன் பாக்கியவான்

ஒரு பிரத்தியேக மனிதனைக் குறித்து மனிதன் பேசவில்லை. இதை, "ஆசீர்வதிக்கப்பட்டவன், அவன்" அல்லது "எல்லாருக்கும் எவ்வளவு நல்லது" என்று மொழிபெயர்க்கலாம்.

அப்பம் புசிக்கிறவன்

இதை, "உணவு உண்ணப் போகிறவன்" என்று மொழிபெயர்க்கலாம். "அப்பம்" என்னும் வார்த்தை முழு உணவையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விருந்து ஆயத்தம் பண்ணப்பட்ட பொழுது

இதை, "விருந்திகான நேரத்தில்" அல்லது "விருந்து துவங்கப்போகும் நேரத்தில்" என்று மொழிபெயர்க்கலாம்.

அழைக்கப்பட்டவர்கள்

"அவனால் அழைக்கப்பட்டவர்கள்"

Luke 14:18-20

(இயேசு உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

போக்குச் சொல்ல

இங்கு, "விருந்திற்கு வர முடியாது என்று சொல்ல" என்று அர்த்தம்.

தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்

"தயவு செய்து என்னை மன்னியுங்கள்" அல்லது "என்னுடைய மன்னிப்பு கோருதலை ஏற்றுக்கொள்ளுங்கள்"

ஐந்து ஜோடி ஏர் மாடுகள்

ஏர் மாடுகள் கனமான சுமையை இழுக்கவும் அல்லது மற்ற கடினமான வேலையை செய்யவும் மக்கள் பயன்படுத்தும் மாடுகள் அல்லது எருதுகள் ஆகும். ஏர் மாடுகள் ஜோடி ஜோடியாக பொதுவாக வேலை செய்யும்.

ஒரு மனைவியை திருமணம் செய்து

உங்கள் மொழியில் இருக்கும் இயற்கையான கூற்றைப் பயன்படுத்தவும். சில மொழிகள், "திருமணம் செய்துகொண்டு" அல்லது "ஒரு மனைவியை எடுத்துக்கொண்டு" என்று சொல்லலாம்.

Luke 14:21-22

(இயேசு உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

கோபம்கொண்டு

"தான் அழைத்த மக்கள் மேல் கோபம் கொண்டு"

வேலையாள் சொன்னான்

UDB இல் உள்ளது போல எஜமான் கட்டளையிட்டதை வேலையாள் செய்தான் என்று மறைத்து சொல்லப்பட்ட தகவலை தெளிவாக சொல்ல வேண்டியதாய் இருக்கலாம்: "வேலைக்காரன் வெளியே சென்று அதை செய்தப் பிறகு, அவன் திரும்ப வந்து சொன்னான்."

Luke 14:23-24

(இயேசு உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

தெருக்களிலும் வீதிகளிலும்

இது பட்டணத்திற்கு வெளியே இருக்கும் சாலைகளையும் பாதைகளையும் குறிக்கிறது. இதை, "பட்டணத்திற்கு வெளியே இருக்கும் முக்கியமான சாலைகளும் பாதைகளும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அந்த மனிதர்கள்

"மனிதர்கள்" என்னும் வார்த்தை "வளர்ந்த ஆண்களைக்" குறிக்கிறது. பொதுவான மக்களை அல்ல.

முதலாவது அழைக்கப்பட்டவர்கள்

"நான் முதலாவது அழைத்த"

என்னுடைய விருந்தை ருசிப்பார்கள்

"நான் ஆயத்தம் பண்ணின விருந்தை ருசித்து சந்தோஷிப்பார்கள்"

Luke 14:25-27

தன்னுடைய தகப்பனை வெறுக்காமல் என்னிடம் வருகிறவன் ... அவன் என்னுடைய சீடனாய் இருக்க முடியாது

இதை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தலாம்: "என்னிடம் வருகிறவன், தன்னுடைய தகப்பனை வெறுக்கிறவனே என்னுடைய சீடனாய் இருக்க முடியும்"

வெறுப்பு

மற்ற யாரை விடவும் இயேசுவை நேசிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் ஒரு மிகைப்படுத்துதல் ஆகும். இந்த நடக்காத சம்பவத்தின் காரியம் தவறாகப் புரிந்துகொள்ளுவார்கள் என்றால், இதை, "என்னிடம் வருகிறவன் தன்னுடைய தகப்பனைக் காட்டிலும் என்னை நேசிக்கவில்லை என்றால் ... அவன் என்னுடைய சீடனாய் இருக்க முடியாது" அல்லது "என்னிடம் வருகிறவன், தன்னுடைய தகப்பனைக் காட்டிலும் என்னை நேசிக்கிறவன் எனக்கு சீடனாய் இருக்க முடியும்."

ஆம், தன்னுடைய ஜீவனையும் கூட

"அவனுடைய சொந்த ஜீவனையும் கூட"

தன்னுடைய சிலுவையை சுமந்து என் பின்னே வராதவன் எனக்கு சீடனாய் இருக்க முடியாது

இதை ஆக்கப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்: "எனக்கு சீடனாக இருக்க விரும்புகிறவன், தன்னுடைய சொந்த சிலுவையை சுமந்து என்னைப் பின்பற்றக்கடவன்."

தன்னுடைய சிலுவையை சுமந்து

இதன் அர்த்தம், "சாகவும் விருப்பமாய்" என்பதாகும். மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் பொதுவாக சிலுவையை சுமக்கச் செய்து அதில் தொங்க வைத்து கொல்லப்படுவர். இயேசுவைப் பின்பற்றும் மக்கள் வரப்போகும் உபத்திரவங்களை சகித்து பாடுபடவும் விருப்பமாய் இருக்க வேண்டும்.

Luke 14:28-30

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

உங்களில் ஒருவன்

இது பதில் எதிர்பாரா கேள்வி. பிரத்தியேக சூழ்நிலையில் மக்கள் என்ன செய்வார்கள் என்பதை நினைக்க அவர்களை எதுவும் செய்ய இயேசு இதைப் பயன்படுத்துகிறார். இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "உங்களில் ஒருவன் கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்குப் பார்க்கக்கடவன்."

கோபுரம்

திராட்சத் தோட்டத்தில் உள்ள காவல் கோபுரமாகக் கூட இது இருக்கலாம். சில மொழிகள் இதை, "உயர்ந்த கட்டிடம்" அல்லது "உயர்ந்த மேடை" என்று மொழிபெயர்க்கும்.

மற்றபடி

"முதலாவது அவன் செலவைக் கணக்குப் பார்க்கவில்லை என்றால்"

அஸ்திவாரம் இடும்போது

"அவன் அஸ்திபாரம் கட்டினபோது." இதை, "அவன் கட்ட ஆரம்பிக்கும்போது"என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 14:31-33

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

அல்லது

முடிவை எடுக்கும் முன்பு மக்கள் செலவை கணக்குப் பார்க்கும் சூழ்நிலையை அறிமுகம் செய்ய இயேசு இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.

எந்த ராஜா...முதலாவது உட்கார்ந்து ஆலோசனைப் பெற மாட்டான்

இது மற்றொரு பதில் எதிர்பாரா கேள்வியைத் துவக்குகிறது. இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "ஒரு ராஜா...முதலாவது உட்கார்ந்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுவான் என்று நீங்கள் அறிவீர்கள்"

ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஜாக்கிரதையாக சிந்தித்து" அல்லது 2. "தனது ஆலோசகர்களுக்கு செவிகொடுத்து"

இல்லையென்றால்

"அவன் மற்ற அரசனை வீழ்த்த முடியாது என்று உணர்ந்தானானால்" அல்லது "தனது இராணுவம் மற்ற இராணுவத்தை வீழ்த்த முடியாது என்று அவன் தீர்மானித்தால்" (UDB)

தூதுவன்

"செய்தியாளன்" அல்லது "பிரதிநிதி"

தனக்கிருக்கும் அனைத்தையும் ஒருவன் விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எனக்கு சீடனாக முடியாது

இதை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தலாம்: "உங்களுக்கிருக்கும் அனைத்தையும் விட்டுக்கொடுக்கிறவர்கள் மாத்திரமே என்னுடைய சீடர்களாக முடியும்."

தனக்கிருக்கும் எல்லாவற்றையும் விட்டு

"அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் பின்பாக வைத்து"

Luke 14:34-35

(இயேசு தம்மைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு பேசுகிறதைத் தொடர்கிறார்)

உப்பு நல்லது

"உப்பு உபயோகமானது"

எப்படி அதை மீண்டும் சாரம் ஆக்கப்படும்

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "அதை மீண்டும் சாரமாக்க முடியாது" அல்லது "ஒருவனும் அதை சாரம் ஆக்க முடியாது" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நிலத்துக்காகிலும் அல்லது எருவுக்காகிலும்

"எரு குவியல்" என்பதை "கலப்புக் குவியல் அல்லது "உரம்" என்று மொழிபெயர்க்கலாம். எருவை தோட்டத்தையும் நிலங்களையும் எருவூட்டப் பயன்படுத்துகிறார்கள். கெட்டுப்போன உணவை எருவோடு சேர்க்கலாம் ஆனால் உப்பு சாரமற்றுப் போனால் அதற்கும் கூடப் பயன்படுத்தமுடியாது. அது முற்றிலும் உபயோகமற்றது.

கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்

இதை ஒரு கட்டளையாகவும் மொழிபெயர்க்கலாம்: "உங்களுக்குக் கேட்கிறதற்கு காதுகள் இருந்தால், கவனியுங்கள்" அல்லது "நான் சொல்லுவதை நீங்கள் கேட்டால், கவனம் செலுத்துங்கள்."

கேட்கிறதற்கு காதுள்ளவன்

"யாரெல்லாம் கேட்கமுடியுமோ" அல்லது "என்னைக் கேட்க முடிகிற யாரானாலும்"

அவன் கேட்கட்டும்

"அவன் நன்றாகக் கவனிக்கட்டும்" அல்லது "நான் சொல்லுவதற்கு அவன் கவனம் செலுத்தட்டும்"

Luke 15

Luke 15:1-2

இந்த மனிதன் பாவிகளை வரவேற்கிறார்

"இந்த மனிதன் பாவிகளை தன்னுடைய சமூகத்தில் வரவிடுகிறார்" அல்லது "இந்த மனிதன் பாவிகளோடு ஐக்கியமாய் இருக்கிறார்"

இந்த மனிதன்

அவர்கள் இயேசுவைக் குறித்துப் பேசுகின்றனர்.

அவர்களோடும் சாப்பிடுகிறார்

"அவர்களோடும்" என்னும் வார்த்தை இயேசு பாவிகளை தன்னிடம் வர அனுமதித்ததால் அது தவறு என்று நினைக்கின்றனர். ஆனால் இன்னும் மோசம் என்னவென்றால் அவர் அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகிறார் என்பது தான்.

Luke 15:3-5

இயேசு இந்த உவமையை அவர்களோடு சொன்னார்

"அவர்களிடத்தில்" என்பது மதத் தலைவர்களைக் குறிக்கிறது.

உங்களில் யார் ஒருவன்...தொன்நூற்றொன்பதை விடாமல்...பினாலே போய்...அதைக் கண்டுபிடிக்கும் வரை?

இது பதில் எதிர்பாராக் கேள்வி. மக்களில் ஒருவன் ஒரு ஆட்டை தொலைத்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக அதைத் தேடிப் போவார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார். இதை UDB இல் இருக்கும் ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "சில மொழிகள் இது ஒரு ஆட்டைத் தொலைத்த மனிதனைப் பொருத்தது அல்ல; இது ஒரு இன்னும் நடைபெறாத ஒன்றைக் கூறும் சூழ்நிலை என்பதைக் காட்டும்.

உங்களில் யாரொருவன், நூறு ஆடுகளை வைத்திருந்தால்

"உங்களில் ஒருவன்" என்று சொல்லி இந்த உவமை ஆரம்பிப்பதால், சில மொழிகள் இந்த உவமையை முன்னிலை இலக்கணத்திலே தொடரும்: "உங்களுக்கு நூறு ஆடுகள் இருந்தால்" என்று.

Luke 15:6-7

(இயேசு இந்த உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவன் வீட்டிற்கு வரும் பொழுது

"ஆட்டின் உரிமையாளன் வீட்டிற்கு வரும்போது" அல்லது "நீங்கள் வீட்டிற்கு வரும்போது" (UDB). முந்தின வசனத்தில் சொல்லப்பட்டது போல ஆட்டின் உரிமையாளனை குறிப்பிடுங்கள்.

நான் உங்களிடத்தில் சொல்லுகிறேன்

"நான்" என்கிற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. அவர் ஒரு கூட்டத்தின் மக்களிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார். அதினால் இந்த "உங்களிடத்தில்" என்பது பன்மையில் இருக்கிறது.

அதைப்போல

"அதே வழியில்" அல்லது "மேய்ப்பர்களும், அவனது நண்பர்களும் அண்டைவீட்டுக்காரர்களும் சந்தோஷப்படுவார்கள்"

வானத்தில் சந்தோஷம் இருக்கும்

"வானத்தில் இருக்கும் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள்"

மனந்திரும்பத் தேவையில்லாத தொன்னூற்றொன்பது நீதிமான்கள்

"தாங்கள் நீதிமான்கள் என்று நினைக்கும் தொன்னூற்றொன்பது பேர்" உண்மையில் தொன்னூற்றொன்பது பேர் நீதிமான்கள் இருக்கிறார்கள் என்று இயேசு சொல்லவில்லை. மாற்றாக, வஞ்சப்புகழ்ச்சியை என்னும் அணியை இயேசு பயன்படுத்தினார். ஏனென்றால் அவர் நீதிமான்கள் அல்லாத தங்களை நீதிமான்கள் என்று எண்ணிகொண்டிருந்தவர்களைக் குறித்து பேசுகிறார்.

Luke 15:8-10

(இயேசு மதத் தலைவர்களிடம் பேசுவதைத் தொடர்ந்தார்)

எந்தப் பெண்...விளக்கை கொளுத்த மாட்டாள்...அதைக் கண்டுபிடிக்கும் வரையில் அதை கவனமாகத் தேடுவார்?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. யாராவது வெள்ளி காசை தொலைத்திருந்தால், அதை அவர்கள் கவனமாக தேடுவார்கள். இந்த வாக்கியம், "பத்து வெள்ளிக் காசுகளை உடைய ஒரு பெண் ஒரு வெள்ளிக்காசைத் தொலைத்திருந்தால், அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடுவாள்" என்று மொழிபெயர்க்கலாம்.

எந்தப் பெண்

இது ஒரு யோசிக்கப்பட்ட (இன்னும் நடக்காத) சூழ்நிலை. இது ஒரு உண்மையான பெண்ணைப் பற்றின கதை அல்ல. இதைக் காண்பிக்க சில மொழிகளில் நிறைய வழிகள் உண்டு.

அதைப் போல

"அதே வழியில்" அல்லது "அந்தப் பெண்ணோடு மக்கள் சந்தோஷமாய் இருந்ததுபோல"

மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்

இதை, "ஒரு பாவி மனந்திரும்பினால்" என்று மொழிபெயர்க்கலாம்

Luke 15:11-12

ஒரு மனிதன் இருந்தான்

இது உவமையின் துவக்கம். உங்கள் மொழியில் இயற்கையாக இருக்கிறது போல இதை அறிமுகப்படுத்தவும். சில மொழிகள், "அங்கு ஒரு மனிதன் இருந்தான், அவன்" என்று சொல்லலாம்.

இப்பொழுது எனக்கு கொடு

மகன் தனது தகப்பன் உடனே, இப்பொழுதே தனக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். இந்த செயலைக் குறிக்க கட்டளை வடிவம் உள்ள வார்த்தைகள் உடைய மொழிகள், அதை இங்கு பயன்படுத்தலாம்.

நான் சுதந்தரிக்க இருக்கும் சொத்து

"நீர் மரிக்கும்போது எனக்கு தர நீர் தீர்மானித்திருக்கும் உம்முடைய சொத்தின் பகுதி"

Luke 15:13-14

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

கட்டிக்கொண்டு

"அவனுடையப் பொருட்களைக் கட்டிக்கொண்டு" அல்லது "அவனுடையப் பொருட்களைப் பையில் இட்டு(வைத்துக்கொண்டு)"

துன்மார்க்கமாய் வாழ்ந்ததினால்

இதை, "தனக்கு தேவையற்ற காரியங்களில் தனது எல்லாப் பணத்தையும் செலவு செய்து"

ஒரு பெரிய பஞ்சம் உண்டாயிற்று

"அங்கு ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று" (UDB) அல்லது "போதிய உணவு அங்கு இல்லை"

பஞ்சம்

குறைவான உணவு இருக்கும் நேரம் பஞ்சகாலம் ஆகும். இது குறைவான மழை பெய்தாலும், நன்றாகக் கதிர்கள் விளையாததாலும் உண்டாகிறது.

அவனுக்குத் தேவை உண்டானது

"அவனுக்கு தேவையானது இல்லாமல் இருந்தது" அல்லது "போதிய அளவு இல்லாமல்"

Luke 15:15-16

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவன் சென்றான்

"அவன்" என்னும் வார்த்தை இளைய மகனைக் குறிக்கிறது.

தன்னையே கூலிக்காகக் கொடுத்தான்

இதை, "வேலை செய்ய எடுத்தான்" அல்லது "வேலை செய்யத் துவங்கினான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அந்த நாட்டின் குடிமகன்களில் ஒருவன்

"அந்த நாட்டின் மனிதன்"

பன்றிகளுக்கு உணவு கொடுக்க

"அவனுடையப் பன்றிகளுக்கு உணவு கொடுக்க"

ஆசையாய் சாப்பிட்டிருப்பான்

"அவன் சாப்பிட மிகவும் விரும்பி"

தவிடு

இவைகள் கடற்மரத்தில் வளரும் கொட்டையின் பயனற்றப் பொருள். இதை, "கடற்மரக் கூடு" அல்லது "தவிடு" அல்லது "கொட்டையின் பயனற்றப் பொருள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 15:17-19

(இயேசு தனது கதையைத் தொடர்ந்தார்)

தன்னிலே தெளிந்து

"புத்தி தெளிந்து" அல்லது "தனது சூழ்நிலையை உணர்ந்து" அல்லது "தெளிவாக யோசிக்கத் துவங்கி" என்னுடைய தகப்பனுடைய வேலையாட்கள் எத்தனைப் பேருக்கு அளவுக்கு அதிகமான உணவு இருக்கிறது

இது ஆச்சரியப்படுதலின் ஒரு பகுதி. இதை, "என் தகப்பனுடைய எல்லா வேலையாட்களுக்கும் உண்பதற்குப் போதிய உணவு இருக்கிறது" (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

பசியால் சாகிறேன்

இது மிகைப்படுத்துதல் அல்ல. இந்த வாலிபன் உண்மையில் பசியால் வாடுகிறான்.

நான் பரலோகத்திற்கு விரோதமாக பாவம் செய்தேன்

"நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தேன்.' யூத மக்கள் சில நேரங்களில் "தேவன்" என்கிற வார்த்தைக்கு பதிலாக "பரலோகம்" என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவர்.

உம்முடைய மகன் என்று இனி அழைக்கப்பட தகுதி இல்லை

"உன்னுடைய மகன் என்று நான் அழைக்கப்பட தகுதி இல்லை." ஒரு மகன் தனது தகப்பனின் சொத்தில் பகுதியை சுதந்தரிக்க உரிமை உடையவன்.

இனி தகுதி இல்லை

"இனிமேல் தகுதி இல்லை" (UDB). அர்த்தம் என்னவென்றால், கடந்த காலத்தில் அவன் தகுதியாய் இருந்தான், ஆனால் இப்பொழுது அவனுக்கு தகுதி இல்லை.

உம்முடைய வேலையாட்களுள் ஒருவனாக மாற்றும்

"என்னை வேலைக்காரனாய் கருதும்" அல்லது "என்னை எடுத்துக்கொள்ளும், நான் உம்முடைய வேலையாட்களுள் ஒருவனாவேன்"

Luke 15:20-21

(இயேசு தனது உவமையைத் தொடர்ந்தார்)

இளைய மகன் விட்டு விட்டு தனது தகப்பனிடம் வந்தான்

"அந்த நாட்டை விட்டு தனது தகப்பனிடம் போக துவங்கினான்"

இரக்கத்தினால் அசைக்கப்பட்டு

"அவன் மீது பரிதாபப்பட்டு" அல்லது "தன்னுடைய இருதயத்தில் இருந்து அவனை மிகவும் நேசித்து"

கட்டியணைத்து முத்தமிட்டு

தகப்பன் தான் மகன் மீது அன்பாய் இருப்பதைக் காண்பிக்கவும் மகன் வீட்டுக்கு வருவதால் அவன் சந்தோஷமாய் இருக்கிறதைக் காட்டவும், இதை செய்தான். ஒரு தகப்பன் தனது மகனை கட்டியணைத்து முத்தமிடுவதை உங்கள் மக்கள் அந்நியமாய் நினைப்பார்கள் ஆனால், உங்கள் கலாச்சாரத்தில் மற்ற ஆண்களிடம் ஒரு ஆண் எவ்வாறு அன்பு காட்டுவான் என்பதோடு இதை மாற்றிக்கொள்ளலாம். அல்லது பொதுவாக இதை, "அவனை மிகவும் அன்போடு வரவேற்றார்" என்று மொழிபெயர்க்கலாம்.

பரலோகத்திற்கு விரோதமாக பாவம் செய்து

"தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து"

உம்முடைய பார்வையில்

"உம்முடைய சமூகத்தில்" இதை, "நான் பாவம் செய்ததை நீர் பார்த்தீர்" அல்லது "உமக்கு அது தெரியும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 15:22-24

(இயேசு தன்னுடைய உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

சிறந்த அங்கி

"வீட்டில் இருந்த சிறந்த அங்கி." அங்கி என்பது வஸ்த்திரத்தின் மேல் இடப்படும் நீளமான துணி ஆகும். அங்கிகள் அறியப்படாத இடங்களில், இதை, "சிறந்த மேல்சட்டை" அல்லது "சிறந்த வஸ்திரம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனது கையில் மோதிரம் இட்டு

மனிதர்கள் தங்கள் விரல்களில் ஒன்றில் மோதிரத்தை அணிவது அதிகாரத்தின் அடையாளத்தைக் குறிக்கிறது.

பாதரட்சை

பாதரட்சை ஒரு வகையான காலணி. பாதரட்சைகள் அறியப்படாத இடங்களில், இதை, "காலணிகள்" என்று மொழிபெயர்க்கலாம்..

கொளுத்தக் கன்று

கன்று என்பது இளைய மாடு. கன்றுகள் நன்றாக வளர வேண்டும் என்பதற்காக மக்கள் சிறந்த உணவைக் கொடுப்பார்கள். சிறந்த விருந்து வைக்கவேண்டும் என்று விரும்பினால்,, அதை அவர்கள் உண்பர். இதை, "சிறந்த கன்று" அல்லது ""நாம் அதிக உணவு கொடுத்துக்கொண்டிருந்த இளைய எருமை" அல்லது "கொளுத்ததாய் நாம் மாற்றிக்கொண்டிருந்த இளைய மிருகம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அதைக் கொலைசெய்து

மறைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், மாம்சத்தை சமைக்க வேண்டும் எனபது தெளிவுபடுத்தப்படலாம்: "அதைக் கொன்று சமைத்து"

என்னுடைய செத்துப்போய் இருந்தான்; ஆனால் இப்பொழுது உயிரோடு இருக்கிறான்

இது உருவகம் ஆகும். ஒரு மகன் குடும்பத்தை விட்டு நெடுங்காலம் சென்றதை மரித்துப்போனதற்கு ஒப்பிடுகிறது; திரும்பி வந்தது மீண்டும் உயிரோடு இருப்பதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. UDB இல் உள்ளது போல இதை உவமானமாகக் கூட மொழிபெயர்க்கலாம்.

அவன் தொலைந்து போனான் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்

இது ஒரு உருவகம். இளைய மகன் குடும்பத்தை விட்டு நெடுங்காலம் சென்றதை தொலைந்துபோனதற்கு ஒப்பிடுகிறது; திரும்பி வந்தது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதை, "அவன் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டது போல இருக்கிறது" (UDB) அல்லது "அவன் தொலைந்து போய் இருந்து வீடு திரும்பி இருக்கிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 15:25-27

(இயேசு தன்னுடைய உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

வேலையாள்

"வேலையாள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த வார்த்தை பொதுவாக "பையன்" என்றே மொழிபெயர்க்கப்படும். இது வேலையாள் மிகவும் இளையவன் என்பதைக் காட்டுகிறது.

இந்தக் காரியங்கள் என்னவாகும்

"என்ன நடக்கிறது" (UDB)

கொளுத்தக் கன்று

இதை, "சிறந்த கன்று" அல்லது "நாம் அதிக உணவு கொடுத்துக்கொண்டிருந்த இளைய எருமை" அல்லது "கொளுத்ததாய் நாம் மாற்றிக்கொண்டிருந்த இளைய மிருகம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 15:28-30

(இயேசு தன்னுடைய உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

உம்முடைய கற்பனையில் ஒன்றையும் நான் முறிக்கவில்லை

"உம்முடையக் கட்டளைகளில் எதற்கும் கீழ்ப்படியாமல் போகவில்லை" அல்லது "எனக்கு செய்ய சொன்ன எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் கீழ்ப்படிந்திருந்தேன்" (UDB)

விருந்து வைக்க

"கொண்டாட" என்றும் மொழிபெயர்க்கலாம்.

உம்முடைய மகன்

"உம்முடைய அந்த மகன்." தான் எத்தனை கோபமாக இருக்கிறான் என்பதைக் காட்ட மூத்த மகன் தன்னுடைய சகோதரனைக் குறிப்பிடுகிறான்.

உம்முடைய சொத்தை விபச்சாரிகளிடத்தில் அழித்துப்போட்ட

இதை, "உம்முடைய எல்லா சொத்தையும் விபச்சாரிகளிடத்தில் விரயம் செய்து" அல்லது "உம்முடைய எல்லா பணத்தையும் விபச்சரிகளுக்குக் கொடுத்து வீசி" என்று மொழிபெயர்க்கலாம்.

கொழுத்தக் கன்று

இதை, "சிறந்த கன்று" அல்லது ""நாம் அதிக உணவு கொடுத்துக்கொண்டிருந்த இளைய எருமை" அல்லது "கொழுத்ததாய் நாம் மாற்றிக்கொண்டிருந்த இளைய மிருகம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 15:31-32

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

இந்த உம்முடைய சகோதரன்

இப்பொழுது வீட்டிற்கு வந்தது அவனுடைய சகோதரன் என்று தகப்பன் அவனுக்கு நினைவுபடுத்துகிறார்.

செத்துப்போய் இருந்தான்; ஆனால் இப்பொழுது உயிரோடு இருக்கிறான்

இது உருவகம் ஆகும். ஒரு மகன் குடும்பத்தை விட்டு நெடுங்காலம் சென்றதை மரித்துப்போனதற்கு ஒப்பிடுகிறது; திரும்பி வந்தது மீண்டும் உயிரோடு இருப்பதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. UDB இல் உள்ளது போல இதை உவமானமாகக் கூட மொழிபெயர்க்கலாம்.

அவன் தொலைந்து போனான் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்

இது ஒரு உருவகம். இளைய மகன் குடும்பத்தை விட்டு நெடுங்காலம் சென்றதை தொலைந்துபோனதற்கு ஒப்பிடுகிறது; திரும்பி வந்தது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதை, "அவன் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டது போல இருக்கிறது" (UDB)அல்லது "அவன் தொலைந்து போய் இருந்து வீடு திரும்பி இருக்கிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16

Luke 16:1-2

(இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

இயேசுவும் தனது சீடர்களோடு பேசினார்

இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டவர்களின் கூட்டத்தில் இருந்தாலும், கடைசி பகுதி பரிசேயர் வேதபாரகர்களுக்கு நேராக திருப்பப்பட்டது.

அது அவனுக்கு தெரிவிக்கப்பட்டது

"ஐசுவரியவானுக்கு அது அறிவிக்கப்பட்டது"

அவனுடையப் பொருட்களை வீணாக செலவு செய்து

"அவனுடைய உடைமைகளை சிதறச்செய்து" அல்லது "ஐசுவரியவானின் சொத்தை முட்டாள்தனமாக செலவு செய்து"

உன்னைக் குறித்து நான் கேள்விப்படுகிறது என்ன?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. ஐசுவரியவான் சொல்லுகிறான், "நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று நான் கேள்விப்பட்டேன்."

உன்னுடைய அலுவல்களைக் குறித்து கணக்கு ஒப்புவி

இதை, "மற்றவனுக்கு ஒப்புவிக்கும்படி காரியங்களை ஒழுங்குப்படுத்து" அல்லது "ஒப்புக்கொடுக்கும்படி காரியங்களை நேராக்கு" அல்லது "என்னுடையப் பணத்தைக் குறித்து நீ எழுதின கணக்கை ஆயத்தம்பண்ணு" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:3-4

(இயேசு தனது கதை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

நான் என்ன செய்யவேண்டும்

மேற்பார்வையாளன், தனது விருப்பத்தேர்வுகளை மறுபரிசீலனை செய்யும்பொருட்டு இந்தக் கேள்வியை தன்னிடமே கேட்டுக்கொண்டான்.

என்னுடைய எஜமான்

இது ஐசுவரியவானைக் குறிக்கிறது. இதை, "என் முதலாளி" என்று மொழிபெயர்க்கலாம். எஜமான் ஒரு அடிமை அல்ல.

நான் தோண்டுவதற்கு பெலன் எனக்கு இல்லை

"நிலத்தைத் தோண்டுவதற்கு பெலன் எனக்கு இல்லை" அல்லது "என்னால் தோண்ட முடியவில்லை"

நான் மேர்பார்வையாளன் பணியிலிருந்து நீக்கப்பட்டபோது

இதை, "நான் மேற்பார்வையாளன் பணியை இழந்தபோது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:5-7

(இயேசு தனது கதை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவனுடைய எஜமானின் கடனாளிகள்

"அவனுடைய எஜமானுக்கு கடன்பட்ட மக்கள்" அல்லது "அவனுடைய எஜமானுக்கு எதோ ஒன்றை கடன்பட்டவர்கள்." இந்தக் கதையில் ஒலிவ எண்ணெயும் கோதுமையும் கடனாளிகள் கடன்பட்டிருக்கிறார்கள்.

அவன் கூப்பிட்டான்...அவன் அழைத்தான் (வ.5)

"மேற்பார்வையாளன் கூப்பிட்டான்...மேற்பார்வையாளன் கேட்டான்"

நூறு அளவு ஒலிவ எண்ணை

"ஏறக்குறைய 3400 லிட்டர் ஒலிவ எண்ணை"

அவன் சொன்னான்...அவனிடம் சொன்னான் (வ.6)

"கடனாளி சொன்னான்...மேற்பார்வையாளன் கடனாளியிடம் சொன்னான்"

நூறு அளவு கோதுமை

"ஏறக்குறைய 22,000 கோதுமை தானியத்தின் லிட்டர்கள்"

அவன் சொன்னான்...அவன் சொன்னான்...அவன் அவனிடம் சொன்னான் (வ.7)

"மேற்பார்வையாளன் சொன்னான்...கடனாளி சொன்னான்...மேற்பார்வையாளன் சொன்னான்"

Luke 16:8-9

(இயேசு தனது கதை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

எஜமான் ... மெச்சிக்கொண்டான்

மேற்பார்வையாளன் கடன்கள் குறைக்கப்பட்ட கடனாளிகள் எஜமான் மேற்பார்வையாளனுக்குக் கடன்களைக் குறைக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார் என்று நினைத்து எஜமானனை மிகவும் பெருந்தன்மையானவர் என்று புகழ்ந்திருப்பார்கள்.

மெச்சிக்கொண்டு

"புகழ்ந்து" அல்லது "நெஞ்சார பேசி" அல்லது "அங்கீகரித்து"

அவன் புத்தியாக செயல்பட்டான்

"அவன் மிகவும் அறிவாக செயல்பட்டான்" அல்லது "அவன் புத்தியானக் காரியத்தை செய்தான்"

இந்த உலகத்தின் மகன்கள்

தேவனைக் குறித்து அறியாத அல்லது கவலைப்படாத இந்த மேர்பார்வையாளனைப் போல இருக்கிறவர்களை இது குறிக்கிறது. இதை, "இந்த உலகத்தின் மக்கள்" அல்லது "உலக மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒளியின் மகன்கள்

இது ஒன்றையும் மறைத்து வைக்க இல்லாத நீதியின் மக்களைக் குறிக்கிறது. இதை, "ஒளியின் மக்கள்" அல்லது "ஒளியில் வாழ்கிற மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

"நான்" இயேசுவைக் குறிக்கிறது. இயேசு கதை சொல்லி முடித்திருந்தார். "நான் உங்களுக்கு சொல்லுகிறேன்" என்னும் கூற்று அதை தங்களது வாழ்க்கையில் மக்கள் அவ்வாறு அதை அப்பியாசிக்கவேண்டும் என்று சொல்லும் மாற்றத்தை இது குறிக்கிறது.

உலக ஐசுவரியம்

இது பூமிக்குரிய ஐசுவரியத்தைக் குறிக்கிறது. இது, உடை, உணவு, பணம், விலையேறப்பெற்ற பொருட்கள் இவைகளை அடக்கியுள்ளது.

நித்திய வாசஸ்தலங்கள்

இது தேவன் வாழுகிற பரலோகத்தைக் குறிக்கிறது.

Luke 16:10-12

(இயேசு மக்களுக்கு தொடர்ந்து போதித்துகொண்டிருந்தார்)

அதனால்

இதை, "அதனால்" அல்லது "இந்தக் காரியத்திற்கு ஒப்பாய்"

மெய்யான ஐசுவரியத்தைக் கொண்டு உங்களை யார் நம்புவார்?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "ஒருவரும் உங்களை மெய்யான சொத்திற்காக நம்பமாட்டார்கள்" அல்லது "நீங்கள் பராமரிக்கும்படி ஒருவரும் உண்மையான ஐசுவரியத்தை கொடுக்கமாட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்கு சொந்தமானதை உங்களுக்குக் கொடுப்பவன் யார்

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "உங்களுக்கென்று ஒருவனும் ஐசுவரியத்தை உங்களுக்குக் கொடுக்கமாட்டான்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:13

(இயேசு மக்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்தார்)

வேலையாளாலும் முடியாது

இதை, "ஒரு வேலையாளால் முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.

அர்பணிக்கப்பட்ட

"பிரதிஷ்டை செய்யப்பட்ட" அல்லது "பற்றோடு"

மற்றவனை வெறுத்து

"மற்றவனை வெறுப்பாகக் கொண்டு" அல்லது "மற்றவரை இகழ்வாகப் பார்த்து" அல்லது "மற்றவனை வெறுத்து"

உங்களுக்கு ஊழியம் செய்யமுடியாது

இயேசு ஒரு கூட்ட மக்களிடத்தில் பேசிகொண்டிருந்தார். "உங்களுடைய" என்று பன்மையில் வார்த்தை இருக்கும் மொழிகள் அதை இங்கு பயன்படுத்தவும்.

ஊழியம் செய்ய

"அடிமையாய் இருக்க"

அவன் வெறுப்பான்

"வேலைக்காரன் வெறுப்பான்"

Luke 16:14-15

பணப்பிரியர்கள்

"பணத்தை நேசிக்கிறவர்கள்" அல்லது "பணம் வைத்திருப்பதை நேசிக்கிறவர்கள்" அல்லது "பணத்திற்காக மிகவும் ஆசைப்படுகிறவர்கள்"

அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணினார்கள்

இதை, "பரிசேயர்கள் இயேசுவை பரியாசம் பண்ணினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் அவர்களுக்கு சொன்னார்

"இயேசு பரிசேயர்களுக்கு சொன்னார்"

மனிதர்கள் பார்வைக்கு முன்பதாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள்

"மக்களுக்கு உங்களை நன்றாக காண்பிக்க முயர்சிக்கிறீர்கள்"

தேவன் உங்கள் இருதயங்களை அறிவார்

"உங்களுடைய உண்மையான விருப்பங்களை அறிவார்" அல்லது "உங்களுடைய நோக்கங்களை தேவன் அறிவார்"

மனிதருக்கு முன்பாக உயர்வாகக் கருதப்படுகிறது

இதை, "மனிதர்கள் மிகவும் முக்கியம் என்று நினைக்கும் காரியங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடையப் பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது

இதை, "தேவன் வெறுக்கிறார்" அல்லது "தேவன் வெறுக்கும் காரியங்கள் இவைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:16-17

(இயேசு பரிசேயர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்

இது அந்த காலம் வரைக்கும் எழுதப்பட்ட எல்லா தேவனுடைய வார்த்தையையும் குறிக்கிறது.

யோவான் வந்தார்

இதை, "யோவான் ஸ்நானகன் வந்து பிரசங்கித்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது

இதை, "தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் குறித்து நாங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம்" என்று மொழிபெயர்க்கலாம்.

எல்லாரும் பலவந்தமாய் உள்ளே பிரவேசிக்க முயற்சிக்கின்றனர்

இதை, "அனேக மக்கள் அதனுள் போக எல்லாவற்றையும் செய்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். இயேசுவின் போதனைகளைக் கேட்டு அதை எற்றுக்கொள்ளுகிறவர்களைக் குறிக்கிறது.

வானமும் பூமியும் ஒழிந்துபோவது சுலபமாய் இருக்கும்

"வானமும் பூமியும் ஒழிந்து போகாது என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரியும்"

ஒரு எழுத்தின் உறுப்பு

"ஒரு எழுத்தின் மிகவும் சிறிய பகுதி." இதை, "நியாயப்பிரமாணத்தின் சிறிய காரியம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவமாய்ப் போக

"நியாயப்பிரமாணத்தில் இருந்து எடுக்கப்பட"

Luke 16:18

(இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

மாற்றப்படாத நியாயப்பிரமாணத்தின் ஒரு எடுத்துக்காட்டாய் இது இருப்பதால், இந்த வசனம், "எடுத்துக்காட்டாக" என்னும் வார்த்தைகளோடு துவங்கலாம்.

தன்னுடைய மனைவியை விவாகரத்து பண்ணும் ஒவ்வொருவனும்

"தன்னுடைய மனைவியை விவாகரத்து பண்ணும் யாராயினும்" அல்லது "தனது மனைவியை விவாகரத்து பண்ணும் எந்த மனுஷனும்" அல்லது "ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தால்"

விபச்சாரம் செய்கிறான்

"விபச்சாரம் செய்த குற்றவாளியாகிறான்"

ஒன்றை திருமணம் செய்கிறவன்

"ஒரு பெண்ணை திருமணம் செய்கிறவன்" அல்லது "ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்தால்"

Luke 16:19-21

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

ஒரு ஐசுவரியவான்

இது உண்மையில் ஒரு மனிதன் அல்லது இயேசு ஒரு காரியத்தை சொல்ல, சொன்ன ஒரு கதையா என்று தெளிவாக இல்லை.

இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற உடுப்பையும் உடுத்தியிருந்தவன்

"மெல்லிய வஸ்திரத்தாலும் இரத்தாம்பர சாயம் பூசப்பட்ட துணிகளை உடுத்துகிறவனும்" அல்லது "விலையேறப்பெற்ற துணிகளை உடுத்துகிறவன்." மெல்லிய வஸ்திரமும் இரத்தாம்பர சாயமும் மிகவும் விலையுள்ளதாய் இருந்தது.

தன்னுடைய அதிகமான செல்வத்தால் ஒவ்வொரு நாளும் சுகமாய் வாழ்ந்து வந்தான்

இதை, "தினமும் விருந்து செய்தான்" அல்லது "தினமும் விலை உயர்ந்த உணவுகளை சாப்பிட்டான்" அல்லது "அதிக பணத்தை செலவு செய்து விரும்பியவற்றை வாங்கினான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய வாசலில் லாசரு என்று பெயர்கொண்ட ஒரு பிச்சைக்காரன் இருந்தான்

"மக்கள் லாசரு என்று பெயர்கொண்ட ஒரு பிச்சைக்காரனை அவனுடைய வாசலில் போட்டிருந்தனர்"

பிச்சைக்காரன்

"உணவிற்காக மக்களிடத்தில் பிச்சைக் கேட்கவேண்டிய ஒரு ஏழை மனிதன்"

அவனுடைய வாசலில்

ஐசுவரியவானின் வீட்டு வாசலில்" அல்லது "ஐசுவரியவானின் சொத்தின் நுழைவு வாயிலில்"

பருக்களால் மூடப்பட்டு

"அவனுடைய சரீரம் முழுவதும் பருக்களோடு"

சாப்பிட மிகவும் ஆசையாய்

"சாப்பிட விரும்பி" அல்லது "சாப்பிட தான் அனுமதிக்கப்பட விரும்பி"

ஐசுவரியவானின் மேசையிலிருந்து விழுகிறதை

இதை, "ஐசுவரியவான் சாப்பிடும்போது அவனுடைய மேஜையிலிருந்து எதேட்சையாக விழும் உணவின் துணிக்கைகள்" அல்லது "ஐசுவரியவானின் மேஜையில் இருந்து வீசப்படும் மீதமுள்ளவைகள்"

அதுவுமல்லாமல்

இதை, "அதற்கு கூட்டாக" அல்லது "ஆயினும்." இது லாசருவைக் குறித்து சொல்லியதைப் பார்க்கிலும் பின்வருபவை கேடுள்ளதாய் இருக்கிறது.

நாய்கள்

நாய்கள் அசுத்தமான விலங்குகள். லாசரு மிகவும் வியாதிப்பட்டு இருந்தான். நாய்கள் தனது புண்களைத் தின்பதைக் கூட தடுக்க முடியாமல் பலவீனமாய் இருந்தான்.

Luke 16:22-23

(இயேசு தனது கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

இப்பொழுது அது வந்தது

கதையின் ஒரு பகுதியின் துவக்கத்தைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வலியிருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

ஆபிரகாமின் மார்பிற்கு தூதர்களால் தூக்கிச்செல்லப்பட்டு

"பின்பு தூதர்கள் லாசருவை ஆபிரகாமின் மார்பிற்கு தூக்கிச்சென்றனர்"

ஆபிரகாமின் மார்பு

விருந்தில் ஆபிரகாமும் லாசருவும் விருந்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இருந்திருக்கலாம். லாசருவின் தலை ஆபிரகாமின் மார்புக்கு அருகில் இருந்திருக்கலாம். இது வரவழைக்கப்பட்ட விருந்தாளிகளை விருந்து கொடுக்கும் கிரேக்க முறை. இந்த பதத்தை, "ஆபிரகாமின் பக்கத்தில்" அல்லது "ஆபிரகாமுக்கு அடுத்து" அல்லது "ஆபிரகாமுக்கு அருகில் சாய்ந்து" அல்லது "ஆபிரகாமுக்கு அடுத்து உட்கார்ந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதனைப்படுகிறதில் இருந்து

"தொடர்ந்து துன்பப்படுத்தப்பட்டு" அல்லது "அதிகமான வலியை அவன் அனுபவிக்கும்போது"

அவன் கண்களை அவன் ஏற்றேடுத்துப் பார்த்த பொழுது

இந்த உருவகம், அவன் மேலே பார்த்தான்" என்று அர்த்தப்படுகிரது.

அவருடைய மடியில் லாசரு

இதை, "ஆபிகாமின் அருகில் லாசரு இருப்பதை" அல்லது "அவருக்கு அருகில் லாசரு அமர்ந்திருப்பதை" அல்லது "லாசரு அவரோடு இருப்பதாக" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:24

(இயேசு தனது கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவன் கூப்பிட்டு சொன்னான்

"ஐசுவரியவான் கூப்பிட்டு சொன்னான்" அல்லது "அவன் ஆபிரகாமை நோக்கி சத்தமிட்டான்"

என் மீது கிருபையாயிரும்

இதை, "என் மீது பரிதாபம் கொள்ளும்" அல்லது "தயவுசெய்து என் மீது இரக்கமாய் இரும்" என்று மொழிபெயர்க்கலாம்.

லாசருவை அனுப்பி

இதை, "லாசுருவை அனுப்புவதின் மூலம்" அல்லது "தயவுசெய்து லாசருவை என்னிடம் அனுப்புங்கள்" அல்லது "லாசுருவை என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய விரலின் நுனியை (தண்ணீரில்) தோய்த்து

இது தேவைப்பட்ட சிறிய அளவைக் குறிக்கிறது. இதை, "அவன் அவனது விரலின் நுனியை ஈரமாக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த அக்கினிஜுவாலையில் நான் வேதனைப் படுகிறேன்

"நான் இந்த அக்கினித்தழலில் நான் மிகவும் வேதனைப் படுகிறேன்" அல்லது "நான் பயங்கரமாய் அக்கினியில் கஷ்டப்படுகிறேன்"

Luke 16:25-26

(இயேசு தனது கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

குழந்தை

ஐசுவரியவானும் ஆபிரகாமின் சந்ததிகளில் ஒருவன்

நல்லக் காரியங்கள்

"அருமையானக் காரியங்கள்" அல்லது "ரம்மியமானக் காரியங்கள்"

அதே போல தீயக் காரியங்கள்

இதை, "தீயக் காரியங்களைப் பெற்றுக்கொண்டு" அல்லது "அவனை வேதனைப் படுத்தும் காரியங்களைப் பெற்றுக்கொண்டான்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதனை

"தாங்கமுடியாத வலி"

அதுவுமல்லாமல்

"இந்தக் காரணத்திற்காக"

ஒரு பெரிய பிளவு வைக்கப்பட்டிருக்கிறது

இதை, "தேவன் உனக்கும் எங்களுக்கும் நடுவே ஒரு பெரிய பிளவை உண்டுபண்ணி இருக்கிறார்" (UDB)

ஒரு பெரிய பிளவு

"ஆழமான, செங்குத்தான, அகலமான பள்ளத்தாக்கு" அல்லது "ஒரு பெரிய பிரிவு" அல்லது "ஒரு பெரிய பள்ளம்" (UDB)

அதைத் தாண்டி வர விரும்புகிறவர்கள்

"அந்தப் பிளவைத் தாண்டி வர விரும்புகிறவர்கள்" அல்லது "அதைத் தாண்டி வர யாராவது விரும்பினால்"

Luke 16:27-28

(இயேசு தனது கதையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

என்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்

இதை, "என்னுடைய தகப்பன் வீட்டுக்குப் போக லாசருவிடம் சொல்லுங்கள்" அல்லது "தயவு செய்து என்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்."

என்னுடைய தகப்பன் வீடு

"என்னுடையக் குடும்பம்." இது சரீரப்பிரகாரமான வீட்டைக் குறிக்காமல் இருக்கலாம். அவர்கள் அவனுடைய தகப்பனுடைய வீட்டில் வாழவில்லை என்றாலும், ஐசுவரியவான், லாசரு தனது குடும்ப உறுப்பினர்களை எச்சரிக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவன் அவர்களை எச்சரிக்கும்படி

இதை, "அவர்களை எச்சரிக்கும்படி லாசருவிடம் சொல்லும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களும் வந்து விடுவார்கள் என்ற பயத்தினால்

இதை, "அவர்களும் வராதபடிக்கு" (UDB) அல்லது "அவர்கள் எச்சரிக்கப்பட்டால் அவர்கள் வராமல் போகலாம்" என்று மொழிபெயர்க்கலாம். அவர்கள் மனந்திரும்பினால் தான் அங்கு போக முடியும் என்பது மறைத்து சொல்லப்பட்டிருக்கிறதினால், அதை தெளிவுப்படுத்தி, "அவர்கள் மனந்திரும்பி இங்கு வராமல் இருக்க" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதனையுள்ள இந்த இடம்

இதை, "நாங்கள் துன்பத்தை அனுபவிக்கும் இந்த இடம்" அல்லது "உக்கிரமான வழியை அனுபவிக்கும் இடம்" அல்லது "நாங்கள் துன்புறுத்தப்படும் இந்த இடம்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 16:29-31

அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு

"மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதினவைகள் உன் சகோதரர்களுக்கு உண்டு," இதை, "மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதினவைகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்

"உன்னுடைய சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிக்கும் செவிகொடுக்க வேண்டும்"

மரித்தோரிலிருந்து யாராவது அவர்களிடத்தில் போனால்

இதை, "ஒரு மரித்துப் போன மனிதன் அவர்களிடத்தில் போனால்" அல்லது "மரித்த ஒருவன் அவர்களிடத்தில் போய் அவர்களை எச்சரித்தால்" என்று மொழிபெயர்க்கலாம்.

மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அவர்கள் செவிகொடாமல் போனால்

"மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதினவைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்தாமல் போனால்"

அவர்கள் இதன் மூலமாயும் இணங்கச் செய்ய வைக்க முடியவில்லை

"அவர்களை நம்பவைக்க முடியவில்லை" அல்லது "அவர்கள் நம்பமாட்டார்கள்"

Luke 17

Luke 17:1-2

பாவம் செய்ய வைக்கும் காரியம் வருவது உறுதி

இதை, "மக்களை பாவம் செய்யவேண்டி சோதிக்கிற காரியங்கள் நிச்சயம் நடக்கும் (UDB) அல்லது "மக்களை பாவம் செய்யத் தூண்டும் காரியங்களைத் தடுப்பது இயலாத காரியம்" நேயர் மொழிபெயர்க்கலாம்.

அவைகள் எவனால் வருகிறதோ

"சோதனைகள் வரச்செய்கிற எவனானாலும்" அல்லது "மக்களை சோதிக்கப்பட செய்கிற எந்த மனிதனானாலும்"

எந்திரக்கல் அவனுடையக் கழுத்தில் கட்டப்பட்டு அவன் வீசப்பட்டால்

இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "அவர்கள் அவனுடையக் கழுத்தை சுற்றி ஏந்திரக்கல்லைக் கட்டி அவனை வீசினால்" அல்லது "யாராவது அவனுடையக் கழுத்தில் கனமான கல்லை அவனுடையக் கழுத்தில் கட்டி அவனைத் தள்ளினால்."

எந்திரக்கல்

இது கோதுமை தானியத்தை மாவாக அரைக்கப் பயன்படும் ஒரு பெரிய கனமான கல். இதை, "ஒரு கனமான கல்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த சிறியரில்

இதை, "சின்னக் குழந்தைகள்" அல்லது "கொஞ்சம் விசுவாசம் உள்ள இந்த மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

இடற

இதை, "பாவம் செய்ய" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 17:3-4

உன்னுடைய சகோதரர்

"உன்னுடைய சக விசுவாசி" என்பதும் ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த "சகோதரர்கள்" என்பதும் பொதுவாக சேர்க்கப்படும்.

அவனைக் கடிந்துகொண்டு

"அவனை எச்சரித்து" அல்லது "அவன் செய்தது தவறு என்று அவனிடம் அழுத்தி சொல்லு" அல்லது "அவனைத் திருத்தி"

அவன் பாவம் செய்தால்

இது அநேகமாக வருங்காலத்தில் நடைபெறப்போகும் நிகழ்வு என்று சொல்லும் ஒரு சார்புநிலை வாக்கியம் ஆகும்.

அவன் ஏழு தரம் பாவம் செய்தாலும்

இது தற்காலிக வருங்கால சூழல். அது நடக்காமலே போகலாம்; ஆனால் அது நடந்தால், இயேசு மன்னிக்கும்படி மக்களிடம் கூறுகிறார்.

ஒரு நாளில் எழுதரம்

இதை, "ஒரு நாளில் அநேக முறை" என்று மொழிபெயர்க்கலாம். வேதாகமத்தில் ஏழு என்னும் எண் பூரணத்தைக் குறிக்கிறது.

Luke 17:5-6

எங்களுடைய விசுவாசத்தைப் பெருகப்பண்ணும்

"தயவுசெய்து எங்களுக்கு அதிகமாக விசுவாசத்தைக் கொடும்" அல்லது "தயவுசெய்து எங்களுடைய விசுவாசத்தோடு அதிகமான விசுவாசத்தைக் கூட்டும்"

உங்களுக்கு கடுகு விதை அளவு விசுவாசம் இருக்குமானால்

இதை, "கடுகு விதை போல சிறிய அளவு விசுவாசம் இருந்தால்" அல்லது "கடுகு விதை அளவு உங்கள் விசுவாசம் பெரியதாக இருந்தால், ஆனால் அது இல்லை" என்று மொழிபெயர்க்கலாம். இந்த பதத்தின் (இலக்கணக்) கட்டுமானம் அவர்களுக்கு கடுகு விதை அளவு விசுவாசம் கூட இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

வேரோடு பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக

இதை, உன்னையே நீ வேரோடு பிடுங்கி கடலில் நட்டு" அல்லது "நிலத்தில் இருந்து உன்னுடைய வேரை எடுத்து கடலில் உன்னுடைய வேரைப் போடு" என்று மொழிபெயர்க்கலாம்.

அது உனக்குக் கீழ்ப்படியும்

"மரம் உனக்கு கீழ்ப்படியும்." பலன் சார்புநிலையைப் பொறுத்தது. அவர்களுக்கு விசுவாசம் இருந்தால் அது ஆகும்.

Luke 17:7-8

(இயேசு தனது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

ஆனால் உங்களில் யார் ஒருவன்

"ஆனால் உங்களில் யார்" அல்லது "ஆனால் உங்களில் யார் ஒருவன்" என்று மொழிபெயர்க்கலாம். இது பதில் எதிர்பாரா கேள்வியின் ஒருப் பகுதி. இதை, "உங்களில் ஒருவன்" அல்லது "உங்களில் ஒருவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்"என்னும் பதங்களைத் துவக்கமாகக் கொண்டு ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம். இதை எவ்வாறு செய்யவேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டை UDB இல் பார்க்கவும்.

யார் உங்களில் வேலைக்காரன் உள்ளவன்

இயேசு அங்கிருந்த கூட்டத்தாரிடம், ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களைப் பார்த்து கேட்டுக்கொண்டிருந்தார். இதை, "ஆனால் உங்களில் யார், வேலைக்காரன் உங்களுக்கு இருந்தால்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒரு வேலைக்காரன் உழுதுகொண்டு அல்லது ஆடுகளை மேய்த்துக்கொண்டு

"உங்கள் நிலங்களை உழுகிற அல்லது உங்களுடைய ஆடுகளைப் பார்த்துக்கொள்ளுகிற வேலைக்காரன்"

உழுது

"உழுவது" என்றால் விதைகளை விதைக்கும் பொருட்டு நிலத்தைத் திருத்தி அல்லது குறுகலான பாத்தி வெட்டுதல் ஆகும்.

ஆனால் அவன் அவனிடம் சொல்லமாட்டானா

இது பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "ஆனால் பதிலாக நீ அவனிடம் சொல்லுவாய்" அல்லது "அதற்கு பதிலாக, இதைத்தான் நீ அவனிடம் சொல்லுவாய்" என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னுடைய ஆடையை சுற்றி அறைக்கச்சைக் கட்டி வேலை செய்

"உன்னுடைய இடுப்பில் உன் துணியைக் கட்டி எனக்கு வேலை செய்" அல்லது "ஒழுங்காக ஆடை அணிந்து என்னைக் கவனி." மக்கள் தங்களது இடுப்பைச் சுற்றிலும் துணியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள் ஏனென்றால், அப்பொழுதுதான் அவர்களது ஆடை அவர்கள் வேலை நடுவில் தொந்தரவு செய்யாது.

அதன் பிறகு

"எனக்கு சேவை செய்த பிறகு"

Luke 17:9-10

(இயேசு தனது சீடர்களுக்கு போதிப்பதைத் தொடர்ந்தார்)

அவன் நன்றி சொல்லவில்லை

முந்தின இரண்டு வசனங்களை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்த்தீர்களோ அதைப் பொறுத்து இதை, "அவன் நன்றி சொல்ல மாட்டான்" அல்லது "நீ நன்றி சொல்லமாட்டாய்" என்று மொழிபெயர்க்கலாம்.

காரியங்கள் கட்டளையிடப்பட்டது

"அவன் செய்யும்படி நீ கட்டளையிட்டக் காரியங்கள்"

அவன் செய்வானா?

இதை, "சரியா?" அல்லது "இது உண்மை இல்லையா? என்று மொழிபெயர்க்கலாம். இந்த பதில் எதிர்பாரா கேள்வியோடு, இயேசு தான் சொல்லுகிற யாவும் உண்மை என்று தனது சீடர்களை அங்கிகரிக்கும்படி உற்சாகப்படுத்தினார்.

நீங்களும்

இயேசு தனது சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். "உங்களை" என்பதைப் போன்ற பன்மை வார்த்தை உள்ள மொழிகள் அதை இங்கு பயன்படுத்தவும்.

சொல்ல வேண்டும்

"தேவனிடம் சொல்லவேண்டும்"

நாங்கள் அப்பிரயோஜனமான வேலைக்காரர்கள்

இதை, "நாங்கள் சாதாரண அடிமைகள்" அல்லது "உம்முடையப் பாராட்டுக்கு வேலைக்காரர்களாகிய நாங்கள் தகுதியில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 17:11-13

அது நடந்தது

இந்தப் பதம் கதையின் ஒரு புதுப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதாவது வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்தப் பாருங்கள்.

எருசலேமுக்குப் போகிற வழியில்

எருசலேமுக்கு அவர்கள் பிரயாணம் பண்ணுகையில்"

குஷ்டரோகிகளாய் இருந்த பத்து மனிதர்களால் அவர் சந்திக்கப்பட்டார்

இதை செய்வினையில் மொழிபெயர்க்கலாம்: "குஷ்டரோகிகளாய் இருந்த பத்து மனிதர்கள் அவரை சந்தித்தனர்" அல்லது "குஷ்டரோகம் இருந்த பத்து மனிதர்கள் அவரை சந்தித்தனர்."

அவர்கள் அவர்களுடைய சத்தத்தை உயர்த்தினார்கள்

இதென்னவேன்றால், "அவர்கள் உரத்த சத்தமாய் கூப்பிட்டார்கள்" அல்லது "அவர்கள் சத்தமாகக் கூப்பிட்டார்கள்" என்பதாகும்.

எஜமான்

இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் "எஜமான்" என்கிற வார்த்தை "எஜமான்" என்னும் சாதாரணமாகப் பயன்படும் வார்த்தை அல்ல. இது அதிகாரம் உள்ள ஒருவனைக் குறிக்கிறது. மற்றவனை அடிமையாக வைத்திருக்கிறவனை அல்ல. இதை, "முதலாளி" அல்லது "மென்முறையாளர்" அல்லது அதிகாரத்தில் இருக்கும் நபரைக் குறிக்கப்பயன்படும் வார்த்தையைப் பயன்படுத்தலாம். "ஐயா" என்ற வார்த்தைப் போல.

எங்கள் மீது இரக்கமாயிரும்

இதை, "எங்களை சுகமாக்குவத்தின் மூலம் எங்களுக்கு இரக்கம் காட்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 17:14-16

போய் உங்களை ஆசாரியர்களிடத்தில் காண்பியுங்கள்

மறைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், "அவர்கள் உங்களைப் பரிசோதிக்கும்படி" என்பதாகும். அதை தெளிவாக சொல்லலாம்.

அது இவ்வாறு நடந்தது

இந்தப் பதம் கதையின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

அவர்கள் சுத்தமானார்கள்

"அது இவ்வாறு நடந்தது" என்பதால் குறிக்கப்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வு இது. இதை, "அவர்களுடைய குஷ்டரோகத்தினின்று அவர்கள் குணமாக்கப்பட்டவுடன் அவர்கள் சுத்தமானார்கள்" அல்லது "அவர்கள் அவர்களது குஷ்டரோகத்தினின்று குணமாக்கப்பட்டார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் குணமாக்கப்பட்டான் என்பதைக் கண்டு

"அவன் குணமாக்கப்பட்டான் என்று உணர்ந்து" அல்லது "இயேசு அவனைக் குணமாக்கினார் என்று உணர்ந்து"

அவன் திரும்பி வந்து

"அவன் இயேசுவிடம் திரும்பினான்"

உரத்த சத்தத்தோடு தேவனை மகிமைப் படுத்தி

"சத்தமாக தேவனை மகிமைப் படுத்தி"

அவன் அவர் பாதத்தில் விழுந்தான்

"அவன் முழங்கால் படியிட்டு இயேசுவின் பாதத்தின் அருகே தனது முகத்தை வைத்து." இதை இயேசுவைக் கனப்படுத்த செய்தான்.

Luke 17:17-19

இயேசு பதிலளித்து சொன்னது

இதை, "இயேசு கூட்டாத்தாருக்கு சொன்னது" என்று மொழிபெயர்க்கலாம். இயேசு அந்த மனிதன் செய்ததற்கு பதில் சொன்னாலும் அவரை சுற்றியிருந்த கூட்டத்தாரோடு பேசிக்கொண்டிருந்தார்.

பத்து பேர் சுத்தமாக்கப்படவில்லையா?

இது மூன்று பதில் எதிர்பாரா கேள்விகளுள் முதலாவது கேள்வி. இயேசு இவைகளைப் பயன்படுத்தி சுற்றியிருந்த மக்களுக்கு பத்து பேரில் ஒருவன் மாத்திரம் தேவனை மகிமைப் படுத்த திரும்பி வந்ததின் நிமித்தம் தான் எவ்வாறு ஆச்சரியத்தோடும் துக்கத்தோடும் இருக்கிறதைக் காண்பித்தார். இதை, "பத்து மனிதர்கள் குணமாக்கப்பட்டார்கள்" அல்லது "தேவன் பத்து மனிதர்களை குணமாக்கினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒன்பது பேர் எங்கே?

இந்த பதில் எதிர் பாரா கேள்வியை, "மற்ற ஒன்பது பேரும் கூட வந்திருக்கவேண்டும்" அல்லது "ஏன் மற்ற ஒன்பது பேர் வரவில்லை?" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த அந்நியனைத் தவிர மற்ற யாரும் தேவனுக்கு மகிமை செலுத்த வரவில்லையா?

இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை, "ஒருவனும் வரவில்லை, அனால், இந்த அந்நியன் தேவனை மகிமைப்படுத்த வந்தான்." அல்லது "பத்து மனிதர்கள் சுகமாக்கப்பட்டிருந்தாலும் இந்த அந்நியன் மாத்திரமே தேவனை மகிமைப்படுத்த வந்தான்" அல்லது "இந்த அந்நியன் மாத்திரமே தேவனை மகிமைப்படுத்த வந்தான் என்பது உண்மையாய் இருக்கலாமா?" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த அந்நியன்

சமாரியர்களுக்கு யூதுரல்லாத மூதாதையர்கள் இருந்தனர்; யூதர்களைப் போல அவர்கள் தேவனை ஆராதிக்கிறவர்கள் அல்ல.

உன்னுடைய விசுவாசம் உன்னை குணமாக்கியது

"உன்னுடைய விசுவாசத்தினால் நீ நன்றானாய்." "விசுவாசம்" என்கிற வார்த்தை ஒரு வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கப்படலாம்: "நீ விசுவாசித்ததால், நீ குணமாக்கப்பட்டாய்."

Luke 17:20-21

பரிசேயர்களால் கேட்கப்பட்டு

இதை ஒரு செய்வினை வினைச் சொல்லோடு, "பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டனர்" என்று மொழிபெயர்க்கலாம். இது கதையின் ஒரு புதுப் பகுதியின் துவக்கம். சில மொழிபெயர்ப்புகள், "ஒரு நாள்" அல்லது "அன்றொருநாள்" என்று இதைத் துவக்குகிறது.

தேவனுடைய ராஜ்ஜியம் வரும்போது

இதை நேர்மறைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "தேவனுடைய இராஜ்ஜியம் எப்பொழுது வரும்?"

தேவனுடைய இராஜ்ஜியம் காணக்கூடிய வகையில் வராது

இதை, "தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும், நீங்கள் காணமாட்டீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம். அவர்கள் பூமிக்குரிய இராஜ்யத்தை எதிர்நோக்கி இருப்பதினால் அவர்கள் மத்தியில் இயேசு ஏற்கனவே ராஜாவாக இருக்கிறதை அவர்கள் காணமுடியவில்லை.

தேவனுடைய இராஜ்ஜியம் உங்கள் மத்தியில் இருக்கிறது

இதை, "தேவனுடைய இராஜ்ஜியம் இங்கு இருக்கிறது" அல்லது "உங்கள் மத்தியில் ஆளுகை செய்வதை தேவன் ஏற்கனவே துவங்கிவிட்டார்"

Luke 17:22-24

நாட்கள் வரும்

இதை, "ஒரு நேரம் வரும்" அல்லது "ஒரு நாள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் காண விரும்புவீர்கள்

"நீங்கள் பார்க்க மிகவும் ஆசைப்படுவீர்கள்" அல்லது "நீங்கள் அனுபவிக்க விரும்புவீர்கள்." அவருடைய சீடர்கள் அவர் ஆட்சி செய்வதைப் பார்க்க முன்னமே விரும்பினார்கள். ஆனால் உபத்திரவக் காலம் வரும்; அதனால், அவர் ஏற்கனவே ஆட்சி செய்துகொண்டிருக்கலாம் என்று விரும்புவார்கள்.

மனுஷக் குமாரனின் நாட்களில் ஒன்றில்

இதை, "மனுஷக் குமாரன் ராஜாவாய் ஆளுகை செய்யும்போது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் பின்பு போகாதிருங்கள்

"அவர்களுக்குப் பின்தொடராதிருங்கள்"

மின்னல் தோன்றுவதுபோல

இது ஒரு உவமானம். இதை, "மின்னல் தோன்றும்போது எவ்வாறு எல்லாருக்கும் தென்படுகிறதோ" அல்லது "சடிதியில் மின்னல் தோன்றுகிறது போல" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய நாளில் மனுஷக் குமாரனும் அப்படியே

இதை, "மனுஷக் குமரன் ஆளும்படி வரப்போகும் நாளிலும் அப்படியே இருக்கும்: என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 17:25-27

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

ஆனால் முதலாவது அவர் பாடுபடவேண்டும்

"ஆனால் மனுஷக் குமாரன் முதலாவது பாடுபடவேண்டும்." இயேசு தன்னைக் குறித்து படர்க்கை இலக்கணத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

நோவாவின் நாட்களில் நடந்தது போல

இதை, "நோவாவின் நாட்களில் மக்கள் செய்து கொண்டிருந்ததைப் போல" அல்லது "நோவா வாழ்ந்த பொழுது மக்கள் செய்துகொண்டிருந்ததைப் போல" என்று மொழிபெயர்க்கலாம். "நோவாவின் நாட்கள்" என்பது தேவன் உலகத்தின் மக்களை தண்டித்த வேளையைக் குறிக்கிறது.

மனுஷக் குமாரன் நாட்களிளும் அது போல நடக்கும்

இதை, "மனுஷக் குமாரனின் நாட்களுளிலும் மக்கள் அதே காரியங்களை செய்வார்கள்" அல்லது "மனுஷக் குமாரன் வரும்போது அதே காரியங்களை மக்கள் செய்துகொண்டிருப்பார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். "மனுஷக் குமாரனுடைய நாட்கள்" என்பது மனுஷக் குமாரன் வரும் நேரத்திற்கு முன்னதான சமயத்தை குறிப்பிடுகிறது.

அவர்கள் உண்டும் குடித்து, திருமணம் செய்துகொண்டும் திருமணம் செய்யப்பட்டும் இருந்தார்கள்

மக்கள் சாதாரண காரியங்களை செய்துகொண்டிருந்தார்கள். தேவன் தங்களை நியாயம்தீர்க்கப்போகிறார் என்பதைக் குறித்தக் கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தது.

பேழை

"கப்பல்" அல்லது "விசைப்படகு"

Luke 17:28-29

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

லோத்துவின் நாட்களில் நடந்தது போல

இதை, "மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், லோத்தின் நாட்களில் எப்படி நடந்ததோ" அல்லது "லோத்து வாழ்ந்த பொழுது மக்கள் செய்துகொண்டிருந்தது போல" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் சோதோம் கொமோரா பட்டணங்களை தண்டிக்கும் சமயத்திற்கு முன்னால் உள்ள நேரத்தை "லோத்துவின் நாட்கள்" என்கிற பதம் குறிக்கப்படுகிறது.

அவர்கள் சாப்பிட்டார்கள்

"சோதோமின் மக்கள் சாப்பிட்டார்கள்"

வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்தது

"அக்கினியும் கந்தகமும் மழையைப் போல வானத்திலிருந்து விழுந்தது"

Luke 17:30-31

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

அதே போல இருக்கும்

இது, "இது அது போல இருக்கும்" என்று அர்த்தப்படுகிறது. UDB இல் உள்ளது போல லோத்துவின் நாட்கள் எவ்வாறு இருந்தது என்று தெளிவாக சொல்லப்படலாம்: "மக்கள் ஆயத்தம் இல்லாதிருந்தார்கள்."

மனுஷக் குமாரன் வெளிப்படும் நாளில்

"மனுஷக் குமாரன் தோன்றும்போது" அல்லது "மனுஷக் குமாரன் வரும்போது"

வீட்டில் மேலிருப்பவனை வீட்டினுள் இறங்க விடாமல் இருங்கள்

"வீட்டின் மேல் இருப்பது யாராய் இருந்தாலும் கீழே போகக் கூடாது" அல்லது "வீட்டின் மேல் யாராவது இருந்தால், அவன் கீழே போகவே கூடாது"

வீட்டின் மேல்

வீட்டுக் கூரை தட்டையாக இருந்தது. மக்கள் அதின் மீது உட்காரலாம்.

அவனுடையப் பொருட்கள்

"அவனுடைய சொந்தப் பொருட்கள்" அல்லது "அவனுடையக் காரியங்கள்"

திரும்ப வந்து

மறைத்து சொல்லப்பட்ட தகவல் என்னவென்றால், UDB இல் சொல்லப்பட்டதைப் போல தெளிவாக சொல்லப்படலாம்: "அவர்கள் எதேனும் பொருட்களை எடுக்க வீட்டுக்குளே போகக் கூடாது; அவர்கள் துரிதமாய் செயல்படவேண்டும்"

Luke 17:32-33

லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்

இது ஒரு எச்சரிக்கை. இதை, "லோத்தின் மனைவி செய்தது போல நீங்கள் செய்யாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். அவள் சோதோமைத் திரும்பிப் பார்த்ததால் சோதோம் மக்களோடு அவளும் தண்டிக்கப்பட்டாள்.

தனது வாழ்க்கையை லாபமாக ஆக்கப் பார்க்கிறவன் அதை இழந்துபோவான்

"தங்களது வாழ்வை காப்பாற்ற நினைக்கும் மக்கள் அதை இழந்துபோவார்கள்" அல்லது "தன் பழைய வாழ்க்கையை காப்பாற்ற முயற்சிக்கிறவன் அவைகளை இழந்துபோவான்"

தனது வாழ்க்கையை இழந்துபோகிறவன் அதை மீட்டுக்கொள்ளுவான்

"ஆனால் தங்களது வாழ்க்கையை இழக்கும் மக்கள் அதை மீட்டுக்கொள்ளுவார்கள்" அல்லது "தங்களது பழைய வாழ்கையை விட்டுவிடுகிறவர்கள் அதை மீட்டுக்கொள்ளுவார்கள்"

Luke 17:34-37

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

அந்த இராத்திரியில்

மனுஷக் குமாரன் இராத்திரியில் வரும்போது என்ன நடக்கும் என்பதை இது குறிக்கிறது.

ஒரு மெத்தையில் இரண்டு மனிதர்கள் இருப்பார்கள்

இது இரண்டு மனிதர்கள் இராத்திரியில் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றிய ஒரு நடைபெறாத தற்காலிக சூழ்நிலை. இதை, "ஒரு படுக்கையில் இரண்டு மனிதர்கள் இருக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

மெத்தை

"படுக்கை" அல்லது "கட்டில்"

ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான் மற்றவன் கைவிடப்படுவான்

"ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான் மற்றவன் விட்டுவிடப்படுவான்." இதை செய்வினை வினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "தேவன் ஒருவனை எடுத்துக்கொண்டு மற்றவனை விட்டுவிடுவார்" அல்லது "தூதன் ஒருவனை எடுத்துக்கொண்டு மற்றவனை விட்டுவிடுவான்."

இரு பெண்கள் அரைத்துக்கொண்டிருப்பார்கள்

இது அந்த நேரத்தில் இரண்டு பெண்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றிய ஒரு நடைபெறாத தற்காலிக சூழ்நிலை. இதை, "இரண்டு பெண்கள் தானியத்தை அரைத்துக்கொண்டிருக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

சில பதிப்புகள், "இரண்டு மனிதர்கள் வயலில் இருந்தார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்." லூக்காவின் சிறந்த பதிப்புகளில் இந்த வாக்கியம் இடம் பெறவில்ல்லை.

கர்த்தாவே, எங்கே?

"கர்த்தாவே, எங்கு இது நடக்கும்?" (UDB)

பிணம் எங்கேயோ அங்கு கழுகள் கூடும்

தெளிவாக, இந்த பழமொழி, "அது தெளிவாக இருக்கும்" அல்லது "அது நடக்கும்போது உங்களுக்கு தெரியும்" என்று அர்த்தம் கொள்ளுகிறது. இதை ஒரு உவமானமாக மொழிபெயர்க்கலாம்: "கழுகுகள் கூடுகிறது அங்கு ஒரு செத்தப் பிணம் இருக்கிறதைக் காட்டுவது போல இந்தக் காரியங்கள் மனுஷக் குமாரன் வெளிப்படப்போவதைக் காட்டுகிறது."

கழுகுகள்

கழுகுகள் பேரைக் கூட்டமாகப் பறந்து தாங்கள் காணும் செத்துப்போனப் பிணங்களின் மாம்சத்தை தின்னும் பெரிய பறைவைகள் ஆகும். இந்த வகையில் இந்த பறவைகளை விளக்கலாம் அல்லது உங்கள் இடத்தில் இதுபோல செய்யும் பறவையை நீங்கள் குறிப்பிடலாம்.

Luke 18

Luke 18:1-2

(இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

பின்பு அவர்

பின்பு இயேசு

சொல்லுகிறார்

இதை ஒரு புதிய வாக்கியத்தைத் துவக்க பயன்படுத்தலாம்: "அவர் சொன்னார்" (UDB)

சோர்ந்துபோகாதிருங்கள்

இதை, "ஜெபிக்கிறதில் சோர்ந்து போகாதிருங்கள்" அல்லது "விசுவாசத்தை இழந்து போகாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நிஜமான ஒரு பட்டணத்திலே உண்மையான ஒரு நியாயாதிபதி இருந்தான்

"உண்மையான" என்னும் வார்த்தைகள் பட்டணத்தையும் நியாயதிபதியையும் குறிப்பிடாமல், இது நடந்தது என்று சொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பயந்து

"மரியாதை செய்து" (UDB)

மக்களை மதிக்காமல்

"மனுஷருக்கு ஒரு மதிப்பும் கொடுக்கவில்லை"

Luke 18:3-5

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

விதவை

விதவை என்பவள் தனது கணவனை மரிக்கக் கொடுத்தவள். இயேசுவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவளை தீயவர்களுக்கு எதிராக தற்காப்பு இல்லாதவள் போல நினைத்திருப்பார்கள்.

எதிராக நீதி கிடைக்கும்படி உதவி செய்யும்

இதை, "தண்டியும்" அல்லது "அவர்களுக்கு எதிராக வஞ்சத்தீர்வு கிடைக்கச்செய்யும்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய எதிரி

"என்னுடைய எதிராளி" அல்லது "என்னைக் காயப்படுத்த முயற்ச்சிக்கும் மனிதன்." இது சட்டப்பிரச்ச்னையில் என்னுடைய எதிராளி. அந்த ஆண் அந்தப் பெண்ணின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறானா அல்லது அந்தப் பெண் ஆணின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிராளா என்பது தெளிவு இல்லை.

தேவனுக்கு பயப்படு

"தேவனுக்கு மரியாதைக் கொடு"

மனிதன்

இது "மக்களை" பொதுவாகக் குறிக்கிறது.

எனக்கு துன்பம் உண்டாக்கி

இதை, "என்னைத் தொந்தரவு செய்து" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னை சோர்வாக்கி

"என்னை களைப்பாக்கி"

அவள் விடாமல் வருகிறதினிமித்தம்

"என்னிடம் தொடர்ந்து வருகிறதினால்"

Luke 18:6-8

(இயேசு ஜெபத்தைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்)

அநீதியுள்ள நியாதிபதி சொல்லுவதைக் கவனித்துப் பாருங்கள்

"அநீதியுள்ள நீதிபதி சற்றே சொன்னாவற்றை நினைத்துப் பாருங்கள்." இயேசு ஏற்கனவே அந்த நீதிபதி சொன்னதை சொன்னது போல உங்கள் வாசகர்கள் புரிந்துகொள்ள மொழிபெயருங்கள்.

தேவன் கொண்டுவராமல் இருப்பாரா

தம்முடைய போதினைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் புரிந்துகொள்ள ஏதுவானவர்கள் என்பதை இந்த பதில் எதிர்பாரா கேள்வி மூலம் இயேசு குறிப்பிடுகிறார். இதை, "தேவன் நிச்சயமாக கொண்டுவருவார்" அல்லது "தேவன் நிச்சயமாக கொண்டுவருவார் என்று நீங்கள் உறுதியாயிருக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்

"அவர் தெரிந்துகொண்ட மக்கள்"

அவர்களிடத்தில் அவர் பொறுமையாய் இருக்கமாட்டாரா?

தேவனைக் குறித்து ஏற்கனவே தம்மைக் கேட்கிறவர்கள் அறிந்திருக்கவேண்டியத்தை அம்மக்களுக்கு இயேசு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியின் மூலம் நினைவுபடுத்துகிறார். இதை, "அவர்களிடத்தில் அவர் பொறுமையாய் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்திருக்கவேண்டும் என்று மொழிபெயர்க்கலாம்.

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைத்தானே குறிப்பிடுகிறார்.

அவர் விசுவாசத்தைக் காண்பாரா

சீடர்கள் தொடர்ந்து விசுவாசித்து ஜெபிக்கவேண்டி அவர்களை உற்சாகப்படுத்துவதே இந்த உவமையின் நோக்கம் ஆகும். எதிர்மறையான பதிலை எதிர்பார்க்கும் இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை இயேசு பயன்படுத்துகிறார். இந்த கேள்வியின் அர்த்தம் என்னவென்றால், "ஆனால், மனுஷக் குமாரனாகிய நான் திரும்பி வரும்போது என்னை விசுவாசிக்காத மக்களை நான் காண்பேன் என்று அறிந்திருக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 18:9-10

பின்பு அவர்

"பின்பு இயேசு"

சில

"சில மக்கள்"

தங்களை நீதிமான்கள் என்று எண்ணினவர்கள்

"சுய நீதிமான்களாய் இருந்தவர்கள்" அல்லது "தாங்கள் நீதிமான்களாய் இருக்கிறோம் என்று நினைத்தவர்கள்" (UDB)

வெறுத்து

"அற்பமாய் எண்ணி" அல்லது "அவர்களிலும் மேன்மையாக எண்ணி"

ஆலயத்திற்குள்

"ஆலயப் பிரகாரத்திற்குள்ளாக"

Luke 18:11-12

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

பரிசேயன் நின்று அவனைக் குறித்து இந்தக் காரியங்களை ஜெபித்தான்

இந்த கிரேக்க பாடப்படிவத்தின் அர்த்தம் தெளிவாக தெரியவில்லை. சாத்தியமான அர்த்தங்கள் 1. "இந்தப் பிரகாரமாக பரிசேயன் நின்றுகொண்டு ஜெபித்தான்" அல்லது 2. "பரிசேயன் நின்றுகொண்டு ஜெபித்தான்"

திருடர்கள்

மக்களை கட்டாயப்படுத்தி கொடுக்கவைத்து அல்லது அவர்களைக் கட்டாயப்படுத்துவதுபோல பயமுறுத்தி பொருட்களை திருடுறவன் கள்ளன்.

உபவாசம்

"உபவாசித்தல்" என்றால் உணவைப் புசியாமல் இருத்தல் ஆகும். பரிசேயர்கள் இதை ஒரு வாரத்தில் இரண்டு தரம் செய்தனர்.

பெற்றுக்கொள்ள

"சம்பாதித்துக் கொள்ள"

Luke 18:13-14

(இயேசு இந்த மக்களோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

அவனுடையக் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து

இந்த உருவகம், "வானத்தைப் பார்த்து" அலல்து "மேலே பார்த்து" என்று அர்த்தப்படுகிறது.

தன்னுடைய மார்பை அடித்து

இது மிகப்பெரிய துக்கத்தின் சரீரப்பிரகாரமான அடையாளம். இந்த மனிதனின் மனந்திரும்புதலையும் தாழ்மையையும் இது காட்டுகிறது.

பாவியாகிய என்மீது கிருபையாய் இரும் தேவனே

இதை, தேவனே, நான் படு பாவியாக இருந்தாலும் என் மீது கிருபையாயிரும்" அல்லது "தேவனே தயவாய் என் மீது கிருபையாயி ரும். நான் பெரிய பாவி" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்த மனிதன்

"வரி வசூலிப்பவன்"

மற்றவனைக் காட்டிலும்

"மற்ற மனிதனைக் காட்டிலும்" அல்லது "மற்ற மனிதனுக்கு பதிலாக" அல்லது "மற்ற மனிதன் அல்ல." இதை, "மற்றவன் நீதிமானாக்கப்படவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

ஏனென்றால், தன்னைத்தான் உயர்த்துகிறவன்...

இந்த கதை கூறும் மையக் கருத்தோடு இந்தப் பதத்தைப் பயன்படுத்தி முக்கியமான கருத்தைக் கூறுகிறார்.

உயர்த்தப்படுவான்

"மிகவும் கனப்படுத்தப்படுவான்"

Luke 18:15-17

அவர்களைத் தொட, ஆனால்

இதை இரண்டு வாக்கியங்களாக மொழிபெயர்க்கலாம்: "அவர்களைத் தொடும்படி. ஆனால்"

கடிந்துகொண்டு

இயேசுவிடம் குழந்தைகளைக் கொண்டு வரும் பெற்றோரோடு சீடர்கள் பெரிய தர்க்கத்தில் இருந்தனர்.

இடம் கொடுங்கள்

"அனுமதிக்கொடுங்கள்"

சின்னக் குழந்தைகள்

மக்கள் கொண்டு வருகிற சிறுக் குழந்தைகளைக் குறிக்கும் "பாலகர்கள்" என்னும் வார்த்தையைக் காட்டிலும் இது வித்தியாசமான வார்த்தை. "சின்னக் குழந்தைகள்" "பாலகர்களை" விட பெரியவர்கள்.

அவர்களை தடுக்காதிருங்கள்

"அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்" அல்லது "சின்னக் குழந்தைகளை வர விடாமல் தடுக்காதீர்கள்"

இவர்களைப் போன்றவர்களுக்கு உரியது

யாதை, "இந்த சின்னக் குழந்தைகளைப் போல இருக்கிற மக்களுக்கு உரியது" என்று மொழிபெயர்க்கலாம்.

மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

"நிச்சயமாக நான் உங்களுக்கு சொல்லுகிறேன்." தாம் சொல்ல வருவதின் முக்கியத்துவத்தில் இந்தக் கூற்றை உபயோகப்படுத்தி இயேசு வலியுறுத்துகிறார்.

குழந்தையைப் போல

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பவர்களின் மனநிலையை ஒரு குழந்தையின் மனநிலைக்கு ஒப்பிடும் ஒரு உவமானம் இதுவாகும். ஒத்துப்போகும் குறிப்புகள் என்னவென்றால் தாழ்மையும் நம்பிக்கையும். இந்த உவமானம், "ஒரு குழந்தை தாழ்மையாயும் நம்பிக்கையாயும் இருக்கிறதுபோல அவர்கள் தேவனுடைய ராஜியத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள்" என்று அர்த்தப்படுகிறது.

அதில் பிரவேசித்து

இதை, "தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்து" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

Luke 18:18-21

நல்லது

"கவனித்து கீழ்ப்படியத் தகுதியான"

நான் என்ன செய்யவேண்டும்

"நான் என்ன செய்ய தேவையை இருக்கிறது" அல்லது "என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்ன"

சுதந்தரி

"உண்மையான முதலாளி ஆகும்படி." இது பொதுவாக மரித்துப்போனவனின் சொத்தையே குறிக்கும். லூக்கா இந்த உருவகத்தை, ஆட்சிசெய்கிறவன் நித்திய ஜீவனை சம்பாதிக்க முடியாது என்றும் எல்லாரும் நித்திய நித்தியமாய் யாரும் வாழுகிறதில்லை என்று புரிந்துகொண்டான் என்று காண்பிக்கப் பயன்படுத்தியுள்ளார்.

தேவனைத் தவிர ஒருவனும் நல்லவன் இல்லை

இதை இரண்டு வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம்: "ஒரு மனிதனும் உண்மையாக நல்லவன் இல்லை. தேவன் ஒருவரே நல்லவர்."

கொலை செய்ய வேண்டாம்

"கொலை செய்யாதிருப்பாயாக"

இந்த எல்லாக் காரியங்கள்

"இந்த எல்லாக் கட்டளைகள்"

Luke 18:22-23

இயேசு அதைக் கேட்டபொழுது

"அந்த மனிதன் சொன்னதை இயேசு கேட்ட பொழுது"

அவர் அவனிடம் சொன்னார்

"அவனுக்கு அவர் பதிலளித்தார்"

இன்னும் ஒரு குறை உண்டு

"நீ இன்னமும் ஒரு காரியத்தை செய்யவேண்டும்" அல்லது "நீ செய்யவேண்டிய இன்னுமொரு காரியம் உண்டு"

உனக்கிருக்கும் எல்லாவற்றையும் விற்று

"உன்னுடைய எல்லா பொருட்களையும் விற்று" அல்லது "உனக்கு சொந்தமான எல்லாவற்றையும் நீ விற்று"

பகிர்ந்துகொடு

"கொடு"

ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடு

"ஏழை மக்களுக்கு பணத்தைக் கொடு"

Luke 18:24-25

அவன் மிகவும் துக்கமானான்

இது அநேக கிரேக்க பதிப்புகளில் இல்லை. அதனால் அநேக ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இதை தவிர்த்து விட்டார்கள்.

ஒரு ஊசியின் காதில் ஒட்டகம் போகும்படி

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கூடாத காரியமானதால், இயேசு உயர்வு நவிற்சியை உபயோகப்படுத்தி "ஐசுவரியவான் இரட்சிக்கப்படுவது மிகவும் கடினமானக் காரியம்" என்பதை சொல்லுவதாகத் தோன்றுகிறது.

ஒட்டகம்

இது ஒரு மாட்டைவிட அல்லது ஒரு குதிரையை விட ஒரு பெரிய மிருகம்.

ஊசியின் காது

தைக்கும் ஊசியின் முனையில் நூல் நுழைக்க இருக்கும் ஒரு துவாரம் தான் ஊசியின் காது.

Luke 18:26-27

அதைக் கேட்டிருந்தவர்கள்

இதை, "இயேசு சொன்னதை கேட்ட மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பின் யார் இரட்சிக்கப்படுவான்?

அவர்கள் ஒரு பதிலுக்காகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது சாத்தியமே. ஆனால் இது பதில் எதிர்பாரா கேள்வி போல உள்ளது. இதன் அர்த்தம், "பின்பு ஒருவனும் இரட்சிக்கப்படமுடியாது!"

இரட்சிக்கப்பட

"பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட"

தேவனால் கூடும்

"தேவனால் செய்யக் கூடும்.

Luke 18:28-30

நமக்கு சொந்தமான எல்லாம்

"நம்முடைய எல்லா சொத்தும்" அல்லது "நம்முடைய எல்லா பொருளும்"

மெய்யாகவே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

தான் சொல்லப் போகும் காரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த இயேசு இந்த பதத்தைப் பயன்படுத்துகிறார்.

விட்டுவிட்டவன்...பெற்றுக்கொள்ளாமல்

இதை ஆக்கப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்: "விட்டுவிட்ட எல்லோரும்...பெற்றுக்கொள்ளுவார்கள்" (UDB)

வரப்போகும் உலகத்தில், நித்திய வாழ்க்கை

இதை, "வரப்போகும் உலகத்தில் நித்திய வாழ்க்கையும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 18:31-33

பார்

எருசலேமுக்கு இயேசு கடைசி தடவை போகிறபோது இயேசுவின் ஊழியத்தில் இருக்கிற மிகப்பெரிய மாற்றத்தை இது குறிக்கிறது.

தீர்க்கதரிசிகள்

இது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைக் குறிக்கிறது.

நிறைவேற்றப்படும்

"நடக்கும்" அல்லது "நடந்தேறும்"

மனுஷக் குமாரன்

இயேசு "மனுஷக் குமாரன்" என்று தன்னைக் குறித்து பேசுகிறார். "அவர்" என்று சொல்லுவதிலும் தன்னையே குறிக்கிறார்.

மூன்றாம் நாளில்

இது அவர் மரித்து மூன்றாம் நாளைக் குறிக்கிறது. எப்படியாயினும், சீடர்கள் இதை இன்னும் அறியவில்லை, அதனால் இந்த வசனத்தை மொழிபெயர்க்கும்போது இந்த விளக்கத்தை சேர்க்காமல் இருப்பது நல்லது.

Luke 18:34

இந்தக் காரியங்கள் ஒன்றையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

"இந்தக் காரியங்களில் எதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை"

இந்தக் காரியங்கள்

எருசலேமில் இயேசு எவ்வாறு பாடுபட்டு மரித்து பின் உயிரோடு மரித்தோரிலிருந்து எழுத்ந்திருப்பார், என்பதைக் குறித்து இயேசு சொன்னவற்றை இது குறிக்கிறது.

இந்த வார்த்தை அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது

இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "அவர் சொல்லிக்கொண்டிருந்ததை அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்க தேவன் செய்தார்" (UDB).

சொல்லப்பட்டக் காரியங்கள்

இதை செய்வினை வடிவில் மொழிபெயர்க்கலாம்: "இயேசு சொன்னக் காரியங்கள்"

Luke 18:35-37

அருகில் வந்து

"நெருங்கி"

உண்மையாக ஒரு குருட்டு மனிதன் அமர்ந்திருந்தான்

"அங்கு ஒரு குருடன் அமர்ந்திருந்தான்." "உண்மையாக" என்னும் வார்த்தை கதைக்கு முக்கியமானவான் அந்த மனிதன் தான் அதனால் அவனுடையப் பெயர் கொடுக்கப்படவில்லை.

கெஞ்சினான்; கேட்டு

இதை இரண்டு வாக்கியங்களாய் மொழிபெயர்க்கலாம்: "கெஞ்சினான். அவர் கேட்ட பொழுது"

அவர்கள் அவனிடம் சொன்னார்கள்

கூட்டத்தில் இருந்த மக்கள் அந்த குருடனிடம் சொன்னார்கள்.

நசரேயனாகிய இயேசுவே

கலிலேயாவில் இருக்கும் நாசரேத்து என்னும் ஊரிலிருந்து இயேசு வந்தவர்.

கடந்து போய்க்கொண்டிருந்தார்

"அவனைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்

Luke 18:38-39

கத்தினான்

"கூப்பிட்டு" அல்லது "சத்தமிட்டு"

தாவீதின் குமாரன்

இயேசு தாவீதினுடைய சந்ததி, இஸ்ரவேலின் மிகவும் முக்கியமான ராஜா.

என் மேல் இரக்கமாய் இரும்

"என் மீது தயவாய் இரும்" அல்லது "என் மீது இரக்கம் காட்டும்"

அவர்கள்

"மக்கள்"

அமைதலாய் இருக்கும்படி

"சத்தம் போடாமல் இருக்கும்படி" அல்லது "கத்தாமல் இருக்கும்படி"

இன்னும் அதிகமாய் கத்தினான்

அவன் இன்னும் அதிக சத்தமாய் கூப்பிட்டான் அல்லது தொடர்ந்து கத்தினான் என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 18:40-41

Luke 18:42-43

உன்னுடைய விசுவாசம் உன்னை குணமாக்கியது

இதை, "நீங்கள் என்னை விசுவாசித்ததால் நான் உன்னை குணமாக்கினேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவரைப் பின்தொடர்ந்து

"அவரைப் பின்பற்ற துவங்கி" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனை மகிமைப்படுத்தி

"தேவனுக்கு மகிமை செலுத்தி" அல்லது "தேவனை துதித்து" (UDB)

Luke 19

Luke 19:1-2

இதோ, ஒரு மனிதன் இருக்கிறான்

"இதோ' என்கிற வார்த்தை கதையில் ஒரு புதிய குழுவிற்கு நம்மை அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்கலாம். ஆங்கிலம், "அங்கு ஒரு மனிதன் இருக்கிறான்..." என்பதைப் பயன்படுத்துகிறது.

Luke 19:3-4

இயேசு யார் என்று பார்க்க அவன் முயற்சிக்கிறான்

"சகேயு இயேசு யார் என்று பார்க்க முயற்சிக்கிறான்"

காட்டத்திமரம்

"ஒரு காட்டத்தி மரம்." அது 2.5 சென்டிமீட்டர்கள் வட்டமுள்ள சிறிய உருண்டையான கனியைக் கொடுக்கிறது. இதை வெறுமனே, "அத்தி மரம்" அல்லது "ஒரு மரம்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஏனென்றால் அவன் உயரத்தில் குறைவாய் இருந்தான்

"அவன் குள்ளமாய் இருந்தான்."

Luke 19:5-7

இடம்

"மரம்" அல்லது "சகேயு இருந்த இடம்"

அவர் பாவியாய் இருந்த ஒரு மனிதனைக் காண அவர் சென்றார்

"இயேசு ஒரு பாவியின் வீட்டிற்கு அவனைக் காணும்படி சென்றார்."

ஒரு பாவி

"வெளிப்படையாக ஒரு பாவி" அல்லது "உண்மையான பாவி" (UDB) அல்லது "தெளிவாக ஒரு பாவி"

Luke 19:8-10

கர்த்தர்

இது இயேசுவைக் குறிக்கிறது.

இரட்சிப்பு இந்த வீட்டுக்கு வந்தது

"இரட்சிப்பு" என்கிற பிரிவு பெயர்ச்சொல் "காப்பாற்றுதல்" என்னும் வினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம். தேவன் இந்த வீட்டாரைக் காப்பாற்றினார்" (UDB).

வீடு

"வீடு" என்கிற வார்த்தை வீட்டில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது அல்லது குடும்பத்தைக் குறிக்கிறது.

அவனும் கூட

"இந்த மனிதன் கூட" அல்லது "சகேயும் கூட"

ஆபிரகாமின் மகன்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஆபிரகாமின் சந்ததி" அல்லது 2. "ஆபிரகாமுக்கு இருந்தது போல விசுவாசம் இருக்கிற மனிதன்."

தொலைந்து போன மக்கள்

"தேவனை விட்டு தூரமாய் போனவர்கள்" அல்லது " பாவம் செய்ததினிமித்தம் தேவனைவிட்டு தூரம் போனவர்கள்"

Luke 19:11-12

உடனடியாக தேவனுடைய ராஜ்ஜியம் தோன்றும் என்று

"தேவனுடைய ராஜ்யத்தை உடனடியாக ஆட்சி செய்ய துவங்குவார் என்று"

பிரபுவாகிய ஒருவன்

"ஆளும் கூட்டாரை சேர்ந்த ஒரு மனிதன்" அல்லது "முக்கியமான குடும்பத்தில் இருந்து ஒரு மனிதன்." இதை, "முக்கியமான மனிதன்" அல்லது "மிகவும் உயர்ந்த பதவியில் இருக்கிற மனிதன்" என்று மொழிபெயர்க்கலாம்.

தனக்கென ஒரு ராஜ்யத்தை பெற்றுக்கொள்ளும்படி

"ராஜாவை ஆகும்படி" அல்லது "அவன் வாழ்ந்த நாட்டில் ராஜாவாகும்படி."

Luke 19:13-15

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவன் அழைத்தான்

"அவன்" அந்த பிரபுவைக் குறிக்கிறது.

அவர்களுக்கு பத்து ராத்தல் திரவியம் கொடுத்தான்

இதை, "ஒவ்வொருவருக்கும் ஒரு ராத்தல் திரவியம் கொடுத்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

பத்து ராத்தல் திரவியம்

இதை, "பத்து விலையேறப்பெற்ற காசுகள்" அல்லது "அதிக தொகையுள்ள பணம்" என்று மொழிபெயர்க்கலாம். ஒருவனின் நான்கு மாத சம்பளத்தின் மதிப்பு ஒரு ராத்தல் திரவியத்திற்கு உண்டு.

வியாபாரம் செய்து

இதை, "இந்தப் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்து" அல்லது "இன்னும் அதிகம் சம்பாதிக்க இந்த பணத்தை பயன்படுத்துங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய மக்கள்

"அவனுடைய நாட்டின் மக்கள்"

ஸ்தானாதிபதிகளின் கூட்டம்

"பிரதிநிதிகள்" அல்லது "செய்தியாளர்கள்"

பின்பு அது நடந்தது

இந்த பதம் கதையின் முக்கியமான நிகழ்வைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு

"அவன் ராஜாவானப் பிறகு"

என்ன லாபம் அவர்கள் சம்பாதித்தார்கள்

"அவர்கள் எத்தனை பணம் சம்பாதித்தார்கள்"

Luke 19:16-17

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

முதல்

"முதல் வேலையாள்"

அவனுக்கு முன்பாக வந்தான்

"அவனுக்கு" என்பது பிரபுவைக் குறிக்கிறது.

ராத்தல்

19:13 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

நன்றாக செய்தாய்

"நீ நன்றாக செய்தாய்." உங்கள் மொழியில் வேலை கொடுத்தவன் வேலை செய்தவனைப் பாராட்டுவதற்கு சொற்கள் இருக்கலாம். "நன்றாக வேலை செய்தாய்" போன்ற பதங்கள்.

Luke 19:18-19

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

உம்முடைய ராத்தலினால், ஆண்டவனே, ஐந்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது

இதை, "ஆண்டவனே, நீர் எனக்கு கொடுத்த பணத்தை வைத்து, நான் ஐந்து மடங்கு அதிகமாக சம்பாதித்தேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

ராத்தல்

19:13 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

நீ ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு

இதை, "நீ ஐந்து பட்டணங்களின் மீது அதிகாரியாய் இருப்பாய்' என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 19:20-21

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

ராத்தல்

19:13 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

கடினமான மனிதன்

"கண்டிப்பான மனிதன்" அல்லது "தனது வேலையாட்களிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறவர்" அல்லது "கடினமுள்ள மனிதன்"

நீர் வைக்காததை எடுக்கிறவர்

இதை, "நீர் இடாததை வெளியே எடுக்கிறவர்" அல்லது "உம்முடையதல்லாததை நீர் எடுக்கிறவர்" என்று மொழிபெயர்க்கலாம். இது பேராசையுள்ளவனை குறிக்கும் ஒரு நீதிமொழியாகும்.

அறுக்கிறவர்

"அறுவடை" அல்லது "சேர்க்கிற" அல்லது "கூட்டு சேர்க்கிற"

விதைக்காதாதை அறுக்கிறவர்

"நட்டாததை அறுக்கிறவர்." இது ஒரு உருவகம். வேலையாள் தனது எஜமானனை தான் நாட்டாத செடியிலிருந்து உணவை எடுக்கிற ஒரு விவசாயிக்கு ஒப்பிடுகிறார்.

Luke 19:22-23

(இயேசு தனது உவமையை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

கடினமான மனிதன்

"கண்டிப்பான மனிதன்"

நான் கடினமான மனிதன் என்று, எடுக்கிறவன்

தனது வேலையாள் தன்னைக் குறித்து சொல்லுகிறதை திரும்பவும் அந்த பிரபு சொல்லுகிறான். அது உண்மை என்று அவன் சொல்லவில்லை.

என்னுடையப் பணத்தை நீ ஏன் போடவில்லை

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வியை துவக்குகிறது. இது ஒரு கடிந்துகொல்லுதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை, "நீ என்னுடைய பணத்தைப் போட்டிருக்க வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய பணத்தை வங்கியில் போட்டு

இதை, "வங்கிக்கு என்னுடையப் பணத்தை கடனாகக் கொடுத்து" என்று மொழிபெயர்க்கலாம். வங்கி இல்லாத கலாச்சாரங்கள், "பணத்தை யாராவது கடனாக வாங்குவதற்கு நீ கொடுத்திருக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.

வங்கி

மக்களுக்கு பணத்தை பத்திரமாக பணத்தை வைத்திருக்கும் ஒரு வியாபாரம் ஆகும். அதனால், அது அதிகமானப் பணத்தை அல்லது வட்டியை தங்கள் பணத்தை வங்கியில் வைக்கிறவர்களுக்குக் கொடுக்கும்.

நான் அதை வட்டியோடு அதை வாங்கியிருப்பேன்

இதை, "அந்த தொகையையும் வட்டியையும் சேர்த்து நான் சம்பாதித்திருப்பேன்" அல்லது அதிலிருந்து லாபத்தை நான் சம்பாதித்திருப்பேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

வட்டி

ஒருவர் தன் பணத்தை வங்கியில் வைத்திருந்தால், அப்பணத்திற்காக வங்கி கொடுக்கும் தொகையாகும்.

Luke 19:24-25

(இயேசு தனது உவமை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

பிரபு

பிரபு ராஜாவானான். உங்களுடைய வாசகர்களுக்கு தெளிவாக்கும் வார்த்தையோடு மொழிபெயர்க்கவும்.

அருகில் நின்று இருந்தவர்கள்

"அவர்களுக்கு அருகில் நிற்கும் மக்கள்"

ராத்தல்

19:3 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

Luke 19:26-27

(இயேசு தனது உவமை சொல்லுவதைத் தொடர்ந்தார்)

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இது ராஜா பேசுகிறது. சில மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை, "பின்பு ராஜா பதில் அளித்து சொன்னது, 'நான் உங்களுக்கு சொல்லுகிறேன்'" அல்லது "ஆனால் ராஜா சொன்னார், 'நான் இது உங்களுக்கு சொல்லுகிறேன்'" (UDB) என்று துவங்க விரும்புகிறார்கள்.

உள்ளவனுக்கு

இதை செய்வினை வினைச் சொல்லோடு, "நான் அவனுக்கு அதிகமாகக் கொடுப்பேன்" அல்லது "நான் கொடுத்ததை நன்றாக உபயோகப்படுத்துகிறவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

அதிகமாகக் கொடுக்கப்படும்

இது "நான் அவனுக்கு அதிகமாகக் கொடுப்பேன்" என்ற செய்வினையோடு மொழிபெயர்க்கப்படலாம்.

இல்லாதவனுக்கு

இதை, "அவனுக்குக் கொடுக்கப்பட்டதை பயன்படுத்தாதவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய இந்த எதிரிகள்

அங்கு எதிரிகள் யாரும் இல்லாததினால், சில மொழிகள், "என்னுடைய எதிரிகளான அவர்கள்" என்று சொல்லும்.

(இது தான் உவமையின் முடிவும் சகேயுவின் வீட்டில் நடந்த ஆலோசனையின் முடிவு)

Luke 19:28

இந்தக் காரியங்களை அவர் சொன்னபொழுது

"அவர்"என்ற வார்த்தை முந்தைய உவமையில் சொல்லப்பட்ட ராஜா அல்ல, மாறாக இயேசுவைக் குறிக்கிறது. சில பதிப்புகள் இதை, "இயேசு இந்தக் காரியங்களை சொன்னப் பிறகு" என்று தெளிவாக மொழிபெயர்த்துள்ளது.

எருசலேமுக்கு போகிறார்

எருசலேம் 975 மீட்டர்கள் எரிகோவைவிட உயர்ந்த இடத்தில் அமைந்து இருக்கிறது.

Luke 19:29-31

அது வந்தது

இது கதையின் ஒரு புதிய பகுதியை அறிமுகப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் வழி இருந்தால், அதை இங்கு பயன்படுத்தவும்.

அவர் அருகில் இருந்த பொழுது

"அவர்" என்பது இயேசுவைக் குறிக்கிறது. அவருடைய சீடர்கள் அவரோடு பிராயணப்பட்டார்கள்.

பெத்பகே

ஒலிவ மலையில் எருசலேமில் இருந்து, கெதரோன் பள்ளத்தாக்குக்கு எதிராயிருக்கிற பெத்பகே என்னும் கிராமம்.

ஒலிவமலை எண்ணப்பட்ட மலை

"ஒலிவ மலை எண்ணப்பட்ட மலை" அல்லது "ஒலிவ மர மலை எண்ணப்பட்ட மலை"

Luke 19:32-36

அனுப்பப்பட்டவர்கள்

இதை செய்வினை வினைச் சொல்லோடு, "இயேசுவால் அனுப்பப்பட்டவர்கள்" அல்லது "இயேசு அனுப்பின இரண்டு சீடர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கழுதைக் குட்டியின் மீது தங்கள் துணிகளைப் போட்டு

"கன்று குட்டியின் மேல் அவர்களுடைய துணிகளைப் போட்டு." இந்த இடத்தில், இது வெளியே போடும் அங்கிகளை அல்லது துணிகளைக் குறிக்கிறது.

அவர்களுடைய துணிகளை விரித்தார்கள்

இதை, "மக்கள் தங்கள் துணிகளை விரித்தார்கள்" அல்லது "மற்றவர்கள் தங்களது அங்கிகளை விரித்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

Luke 19:37-38

அவர் நெருங்கிப் போய்க்கொண்டிருந்த பொழுது

"இயேசு அருகில் போய்க்கொண்டிருந்தது போல" அல்லது "இயேசு நெருங்கிக்கொண்டிருந்த பொழுது." இயேசுவின் சீடர்கள் அவரோடு பிராயணம் பண்ணிகொண்டிருந்தார்கள்.

அவர்கள் பார்த்த அற்புதக் கிரியைகள்

இதை, "இயேசு செய்ய அவர்கள் பார்த்த மகத்தானக் காரியங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்

இதை இயேசுவைக் குறித்து அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கர்த்தர்

அது தேவனைக் குறிக்கிறது.

உன்னதத்தில் மகிமை

இதை, "உன்னதத்திலிருக்கும் அவருக்கு மகிமை உண்டாவதாக" அல்லது "உன்னதத்திலிருக்கும் அவருக்கு துதி உண்டாகட்டும்" என்று மொழிபெயர்க்கலாம். இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடும் பெயர்ச்சொல்லோடும் UDB இல் உள்ளது போல தேவனுக்கு யார் துதி செய்கிறார்கள் என்பதை சொல்லுகிற வகையில் இதை மொழிபெயர்க்கலாம்.

Luke 19:39-40

உம்முடைய சீடர்களை கண்டியும்

இதை, "இந்தக் காரியங்களை செய்வதை நிறுத்த உம்முடைய சீடர்களுக்கு சொல்லும்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

அவர் அடுத்தது என்ன சொல்லுவான் என்பதை வலியுறுத்தும்படி இயேசு இதை சொன்னார்.

இவர்கள் அமைதியாய் இருந்தால்

இது நடைபெறாத தற்காலிக சூழ்நிலை. இயேசு, "இல்லை, நான் அவர்களை கண்டிக்க மாட்டேன், ஏனென்றால் # இந்த மக்கள் அமைதியாய் இருந்தால்..." என்று சொன்னபோது என்னத்தை சொல்லவருகிறார் என்பதை சில மொழிபெயர்ப்பாளர்கள் தெளிவுபடுத்த விரும்புகிறார்கள்.

கல்லுகள் கூப்பிடும்

"கல்லுகள் துதிகளை சொல்லும்"

Luke 19:41-42

சமீபமாய் வந்து

"நெருங்கியபோது" அல்லது "அருகில் சென்றபோது"

பட்டணம்

எருசலேமைக் குறிக்கிறது.

அவர் அதற்காய் அழுதார்

"அதற்காய்" என்னும் வார்த்தை எருசலேம் பட்டணத்தைக் குறிக்கிறது. ஆனால் இது அந்தப் பட்டணத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது.

உனக்கு தெரிந்திருந்தால்

இதை, "நீ அறிந்திருக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன்" அல்லது "நீ அறிந்திருக்கவில்லை என்று நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம். இது ஒரு ஆச்சரியமான விஷயம். எருசலேமின் மக்கள் இவைகளை அறியவில்லை என்பதால் இயேசு தனது துக்கத்தை வெளிப்படுத்தினார். மறைத்து சொல்லப்பட்ட தகவலை வாக்கியத்தின் கடைசியில் சேர்க்கலாம்: "உங்களுக்கு சமாதானம் இருந்திருக்கும்."

உன்னை

"உன்னை" என்னும் வார்த்தை ஒருமைல் இருக்கிறது. இயேசு அந்த பட்டணத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இது இயற்கைக்கு முறன்பட்டு இருக்குமானால், "உன்னை" என்பதன் பன்மையைப் பயன்படுத்தலாம்.

உங்களுடைய கண்களுக்கு அவைகள் மறைக்கப்பட்டிருக்கிறது

இதை, "நீங்கள் அவைகளை இனிமேல் பார்க்கமுடியாது" அல்லது "அறிந்துகொள்ள உங்களால் முடியாது" (UDB).

Luke 19:43-44

(இயேசு தொடர்ந்து எருசலேமின் பட்டணத்திற்கு வெளியே இருந்து பேசுவதைத் தொடர்ந்தார்)

ஏனென்றால்

பின் வருபவைதான் இயேசுவின் துக்கத்திற்குக் காரணம்.

உன் மீது அந்த நாட்கள் வரும்

அவர்கள் கடினமான சமயங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. சில மொழிகளில் வரப்போகும் சமயத்தைக் குறித்து பேசமாட்டார்கள். இதை, "வருங்காலத்தில், இந்தக் காரியங்கள் உங்களுக்கு நடக்கும்" அல்லது "சீக்கிரமாக நீங்கள் துன்பமான நேரங்களை பார்ப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உன்

"உன்" என்கிற வார்த்தை ஒருமையில் இருக்கிறது, ஏனென்றால் இயேசு பட்டணத்தைப் பார்த்து பேசிகொண்டிருக்கிறார். ஆனால் இது வழக்கத்திற்க்கு முரண்பட்டு இருக்குமானால், "உன்னை" என்பதன் பன்மையைப் பயன்படுத்தலாம்.

தடுப்புச்சுவர்

தடுப்புச்சுவர் என்பது பட்டணத்திலிருந்து மக்களை வெளியே போகவிடாமல் தடுக்கும் சுவர் ஆகும்.

அவர்கள் உன்னை தரையில் விழும்படி அடிப்பார்கள்

இயேசு பட்டணத்தைப் பார்த்து பேசுகிறதினால், இது பட்டணத்தின் சுவர்களையும், கட்டிடங்களையும் குறிக்கிறது. இதை, "உன்னுடைய சுவர்களை அவர்கள் அழிப்பார்கள்" அல்லது "உன்னுடைய பட்டணத்தை அவர்கள் அழிப்பார்கள்."

உனக்கு இருக்கும் உன் பிள்ளைகளையும்

இது அந்தப் பட்டணத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. நீங்கள் இந்த இடத்தில் "உன்" என்னும் வார்த்தையின் பன்மையைப் பயன்படுத்தியிருந்தால், இதை,"பட்டணத்திலிருக்கும் மக்களாகிய உங்களை அவர்கள் அழித்துப்போடுவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஒரு கல்லின் மீது இன்னொரு கல் இருக்க

அவர்கள் விடமாட்டார்கள்

கற்களினால் கட்டப்பட்ட இந்த பட்டணத்தை எதிரிகள் முற்றிலும் அழித்துப்போடுவார்கள் என்பதை வெளிக்காட்டும் ஒரு உயர்வு நவிற்சி. இதை, "ஒரு கல்லையும் அதனுடைய இடத்தில் இருக்க அவர்கள் விடமாட்டார்கள்" என்பதில் உள்ளதுபோலமொழிபெயர்க்கலாம்.

உங்களுக்கு தெரியாது

"நீங்கள் அறியவில்லை" அல்லது "நீங்கள் அங்கிகரிக்கவில்லை.

Luke 19:45-46

வெளியே துரத்தி

"தூக்கி வீசி" அல்லது "வெளியே துரத்தி" அல்லது "போகும்படி கட்டாயப்படுத்தி"

அது எழுதப்பட்டிருக்கிறது

இதை, "வேதம் சொல்லுகிறது" அல்லது "தீர்க்கதரிசிகள் இந்த வார்த்தைகளை வேதத்தில் எழுதியிருக்கின்றனர்" என்று மொழிபெயர்க்கலாம். இது ஏசாயா 56:7 இல் இருக்கும் கூற்று ஆகும்.

என்னுடைய வீடு

"என்னுடைய" என்பது தேவனைக் குறிக்கிறது.

ஜெப வீடு

"என்னிடம் மக்கள் ஜெபிக்கும் இடம்"

கள்ளர் குகை

"திருடர்கள் ஒளிந்துகொள்ளும் இடம்." இது ஒரு உருவகம். இதை ஒரு உவமானமாக மொழிபெயர்க்கலாம்: "கள்ளர்களின் குகை போல."

Luke 19:47-48

ஆலயத்தில்

"ஆலயப் பிரகாரங்களில்" அல்லது "ஆலயத்தில்"

பிரதான ஆசாரியர்கள்

"உயர்ந்த பதவியில் இருக்கும் ஆசாரியர்கள்" அல்லது "மிகவும் முக்கியமான ஆசாரியர்கள்"

அவரை மிகவும் கவனமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள்

"இயேசு என்ன சொல்லுகிறாரோ அதற்கு அவர்கள் உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருந்தார்கள்"

Luke 20

Luke 20:1-2

அது நடந்தது

கதையின் ஒரு புதியப் பகுதியின் துவக்கத்தைக் குறிக்க இந்தக் கூற்று பயன்படுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம், அதை நீங்கள் இங்கு பயன்படுத்தலாம்.

Luke 20:3-4

அவர் அவர்களுக்கு பதிலளித்து சொன்னார்

"இயேசு பதிலளித்தார்."

யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்தில் இருந்து வந்ததா அல்லது மனிதர்களிடம் வந்ததா?"

இதை, "மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரம் பரலோகத்தில் இருந்து வந்ததா அல்லது மனிதர்களிடமிருந்து வந்ததா?" அல்லது "யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க தேவன் சொன்னாரா அல்லது மக்கள் சொன்னார்களா?"

பரலோகத்திலிருந்து

"தேவனிடமிருந்து." "யெகோவா" என்னும் தேவனுடைய பெயரை யூதர்கள் குறிப்பிடுவதைத் தவிர்த்தார்கள். அடிக்கடி அவர்கள் "பரலோகம்" என்கிற வார்த்தையை அவரைக் குறிக்கும் வார்த்தையாகப் பயன்படுத்தினார்கள்.

Luke 20:5-6

அவர்கள் யோசனை பண்ணினார்கள்

இதை, "அவர்கள் கலந்துரையாடினார்கள்" அல்லது "அவர்களது பதிலை அவர்கள் கருத்தில் கொண்டார்கள் என்று மொழிபெயர்க்கலாம்.

பரலோகத்திலிருந்து

"தேவனிடமிருந்து." முந்தய வசனத்தில் கேள்வி எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, இதை, "தேவன் செய்தார்" அல்லது "தேவன் அவனை அதிகாரப்படுத்துவார்" என்று மொழிபெயர்க்கலாம். சில மொழிகள் எதிர்மறைக் கூற்றை தெரிந்தெடுக்கிறது. இந்த வாக்கியத்தின் துவக்கம் இவ்வாறு மொழிபெயர்க்கப்படலாம்: "தேவன் அவரை ஏற்படுத்தினார் என்று நாம் சொன்னால்."

அவர் சொல்லுவார்

"இயேசு சொல்லுவார்"

எங்களைக் கல்லெறிந்து

"எங்கள் மீது கல் வீசிக் கொலை செய்து." தேவனையோ அல்லது அவருடைய தீர்க்கதரிசிகளையோ கேலி செய்கிறவர்களை கல்லெறியும்படி தேவனுடைய நியாயப்பிரமாணம் கட்டளையிட்டிருக்கிறது.

Luke 20:7-8

அவர்கள் பதில் அளித்தனர்

"பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், மற்றும் மூப்பர்கள் பதில் அளித்தனர்."

அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று பதில் அளித்தனர்

சில மொழிகள் இதை நேர் கூற்று வாக்கியமாக இருப்பதை விரும்பும்: "அவர்கள், "எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.

எங்கிருந்து வந்ததோ

"யோவானின் ஞானஸ்நானம் வந்த இடத்திலிருந்து." இதை, "ஞானஸ்நானம் கொடுக்கும்படி யோவானுக்கு அதிகாரம் வந்த இடத்திலிருந்து" அல்லது "யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் கொடுத்தவர்"

நானும் சொல்ல மாட்டேன்

இதை, "நான் உங்களுக்கு சொல்ல மாட்டேன்" அல்லது "நீங்கள் என்னிடம் சொல்லாதது போல நானும் உங்களுக்கு சொல்லமாட்டேன்"என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 20:9-10

திராட்சத் தோட்டக்காரருக்கு அதை வாடகைக்கு விட்டு

"பணபரிமாற்றம் செய்துகொண்டு அதை சில திராட்சத் தோட்டக்காரர்கள் பயன்படுத்தும்படி அனுமதித்து" அல்லது "அதை சில திராட்சத் தோட்டக்காரர்கள் பயன்படுத்தும்படி அனுமதித்து பின்னர் பணம் கொடுக்கும்படி செய்து"

திராட்சத்தோட்டக்காரர்கள்

திராட்ச தோட்டங்களை பராமரித்து திராட்சைப் பலன்களை வளர்ப்பவர்கள் இந்த மக்கள். இதை, திராட்சை விவசாயிகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

திராட்சத் தோட்டத்தின் பலன்களிலிருந்து

"திராட்சைகளில் சிலதை" அல்லது "திராட்சத் தோட்டத்திலிருந்து விளையச் செய்யப்பட்ட சிலவற்றை." இது திராட்சையிலிருந்து உண்டாக்கப்பட்ட பொருட்களையும் குறிக்கிறது அல்லது திராட்சைகளை விற்று சம்பாதித்த பணத்தையும் இது குறிக்கலாம்.

வெறுங்கையோடு அவனைத் திருப்பி அனுப்பி

இதை, "ஒரு பணமும் கொடுக்காமல் அவனை அனுப்பி விட்டார்கள்" அல்லது "திராட்சைகள் இல்லாமல் அவனை அனுப்பி விட்டார்கள்"என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 20:11-12

(இயேசு தனது உவமைகள் சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவனை கேவலமாக நடத்தி

"அவனை அவமானப்படுத்தி"

அவனைக் காயப்படுத்தி

"அவனைக் காயப்படுத்தி"

ஆயினும் மூன்றாம்

"மூன்றாம் வேலையாளையும்." "ஆயினும்" என்கிற வார்த்தை நில உரிமையாளன் இரண்டாமவனையே அனுப்பி இருக்ககூடாது என்றாலும், அவன் எல்லை மீறி மூன்றாமவனையும் அனுப்பினான் என்னும் உண்மையைக் குறிக்கிறது.

Luke 20:13-14

(இயேசு தனது உவமைகள் சொல்லுவதைத் தொடர்ந்தார்)

திராட்சத் தோட்டக்காரர்கள் அவனைப் பார்த்தபொழுது

"உரிமையாளனின் மகனை விவசாயிகள் பார்த்த பொழுது"

Luke 20:15-16

(இயேசு தனது உவமைகள் சொல்லுவதைத் தொடர்ந்தார்)

அவனை தோட்டத்திற்கு வெளியே வீசினார்கள்

"திராட்சைகளை வளர்ப்பவர்கள் திராட்சத் தோட்டத்தைவிட்டு மகனைக் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பினார்கள்"

அந்த தோட்டத்தின் ஆண்டவர் அவர்களுக்கு பிறகு என்ன செய்வான்?

இயேசு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை திராட்சத் தோட்டத்தின் உரிமையாளன் என்ன செய்வான் என்பதைப் பற்றி தன்னைக் கேட்கிறவர்கள் கவனம் கொள்ளும்படி செய்யப் பயன்படுத்தினார். இதை ஒரு கட்டளையாகவும் மொழிபெயர்க்கலாம்: "அதனால் இப்பொழுது, திராட்சத் தோட்டத்தின் உரிமையாளன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதைக் கவனியுங்கள்."

தேவன் அதைத் தடுப்பாராக!

"அது நடப்பதிலிருந்து தேவன் தடுப்பாராக!" அல்லது "அது ஒருபோதும் நடக்காதிருப்பதாக!" மேசியாவை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்பதால், தேவன் அவர்களை எருசலேமிலிருந்து அகற்றிவிடுவார் என்று மக்கள் இந்த உவமையின் மூலம் புரிந்துகொண்டார்கள். இந்த பயங்கரமான காரியம் நடக்காது என்று அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

Luke 20:17-18

(இயேசு கூட்டத்தாரோடு பேசுவதைத் தொடர்ந்தார்)

ஆனால் அவர்களைப் பார்த்தார்

ஆனால் இயேசு அவர்களை கூர்ந்து பார்த்தார்" அல்லது "இயேசு அவர்களை நேராகப் பார்த்தார்." அவர் சொல்லுவதை புரிந்துகொள்ளும்படி அவர்களை பொறுப்பாளிகளாகப் பிடிக்கும்படி இதை அவர் செய்தார்.

வேதம் என்ன பொருள்படுகிறது

இந்த பதில் எதிர்பாரா கேள்வியை, "பின்னர் வேதம் இதைக் குறித்து சொல்லுகிறது என்ன?" அல்லது "இந்த வேதத்தை நீங்கள் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவேண்டும்"

கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலைக் கல் ஆயிற்று

இந்தஉருவகம் சங்கீதங்களின் உருவகத்தினின்று எடுக்கப்பட்ட தீர்க்கதரிசனம்.

கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்

"வைத்துக் கட்டுவதற்கு தகுதி இல்லாத கல் என்று கட்டுகிறவர்களால் சொல்லப்பட்ட கல்." அந்தக் காலத்தில் மக்கள் வீட்டின் சுவரையும் மற்ற கட்டிடங்களையும் கற்களை வைத்து கட்டினார்கள்.

மூலைக் கல்

ஒரு கட்டிடத்தை வலுவாக்க மிகவும் முக்கியமானக் கல். இதை, "பிரதானக் கல்" அல்லது "மிகவும் முக்கியமானக் கல்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

கல்லின் மேல் விழும் எல்லாரும்

"அந்தக் கல்லின் மீது விழும் யாராயினும்." மேசியாவை புறக்கணிக்கும் அனைவருக்கும் என்ன நடக்கும் என்பதைக் காட்டும் இது ஒரு தீர்க்கதரிசன உருவகம் ஆகும்.

துண்டுகளாக உடைந்துபோவார்கள்

"துண்டுகளாக்கப்படுவார்கள்." இது கல்லின் மேல் விழுவதன் பலன்.

அது யார் மீது விழுகிறதோ

"ஆனால் அந்தக் கல் யார் மீது விழுகிறதோ." இந்த உருவகம் மேசியா தன்னை புறக்கணித்தவர்களைத் தண்டிக்கும் செயலைக் குறிக்கும் தீர்க்கதரிசனம்.

Luke 20:19-20

அவர் மீது கைகளைப் போட வகை தேடினார்கள்

"இயேசுவை கைது செய்ய வகை தேடினார்கள்." "கைகளைப் போட" என்பது இங்கு "கைது செய்ய" என்னும் அர்த்தம் கொள்ளும் உருவகம் ஆகும்.

அந்த மணி நேரத்தில்

"உடனே"

மக்களுக்கு அவர்கள் பயந்தார்கள்

இதனால் தான் இயேசுவை அவர்கள் உடனடியாக கைது செய்யவில்லை. மக்கள் இயேசுவின் மீது மரியாதை வைத்திருந்தனர். இயேசுவைக் கைது செய்தால் மக்கள் என்ன செய்வார்கள் என்று மதத் தலைவர்கள் பயந்தனர். சில மொழிபெயர்ப்புகளில் இதை வெளிப்படையாக்கவேண்டி இருக்கும்: "அவர்கள் மக்களுக்கு பயந்ததினால் அவர்கள் அவரைக் கைது செய்யாமல் இருந்தனர்."

அவர்கள் வேவுகாரர்களை அனுப்பினார்கள்

"வேதபாரகர்களையும் பிரதான ஆசாரியர்களையும் அனுப்பி இயேசுவை கவனித்தார்கள்"

அவருடைய வார்த்தைகளில் தவறைக் கண்டுபிடிக்க

"இயேசு ஏதாகிலும் தவறாக சொன்னால் அதில் அவரைக் குற்றப்படுத்த விரும்பினார்கள்"

அவரை ஒப்புக்கொடுக்கும்படி

"அவரைக் கொண்டுவரும்படி" அல்லது "அவரை ஒப்புக்கொடுக்கும்படி"

ஆளுனரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும்

"ஆட்சி" மற்றும் "அதிகாரம்" என்பது ஒரே காரியத்தை சொல்லும் இரண்டு வழிகள். இதை ஒன்று அல்லது இரண்டு வெளிப்படுத்தல்களைக் கொண்டு மொழிபெயர்க்கலாம். இயேசுவை ஆளுநரிடம் ஒப்புக்கொடுக்கும் காரணத்தை வெளிப்படையாக்கலாம்: "ஆளுநர் இயேசுவை தண்டிப்பார் என்று."

Luke 20:21-22

ஆனால் தேவனுடைய வழியைக் குறித்து நீங்கள் கற்றுக்கொடுங்கள்

இது வேவுகாரர்கள் இயேசுவைக் குறித்து அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவதின் ஒருப் பகுதி.

நீர் யாராலும் தூண்டப்படாமல்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "முக்கியமானவர்கள் விரும்பாவிட்டாலும் நீர் உண்மையை சொல்லுகிறீர்" (UDB) அல்லது 2. "ஒருவனைத் தவிர்த்து மற்றவன் மேல் தயவு வைக்கிறதில்லை."

இராயனுக்கு வரி செலுத்துவது நியாயமா

இயேசு "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தனர். அவர் "ஆம்" என்று சொன்னால், அந்நிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த சொன்னார் என்று யூதர்கள் கோபப்படுவார்கள். அவர் "இல்லை" என்று சொன்னால், மதத்தலைவர்கள் ரோம அரசாங்கத்திடம் இயேசு ரோம சட்டதிட்டங்களை மீறுகிறார் என்று சொல்லலாம்.

இது நியாயமா

அவர்கள் தேவனுடைய சட்டத்தைக் கேட்கிறார்கள், இராயனுடைய சட்டத்தை அல்ல. இதை, "நம்முடைய சட்டம் அனுமதிக்கிறதா" என்று கூட மொழிபெயர்க்கலாம்.

இராயன்

இராயன் ரோம அரசாங்கத்தின் ராஜாவாயிருந்தபடியினால், அவர்கள் ரோம அரசாங்கத்தை இராயன் என்னும் பெயரைக் கொண்டு குறிப்பிடலாம்.

Luke 20:23-24

ஆனால் இயேசு அவர்களது தந்திரத்தைப் புரிந்துகொண்டார்

"அவர்கள் எவ்வளவு தந்திரமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்" அல்லது "அவர்கள் அவரை தந்திரமாய் பிடிக்க நினைக்கிறார்கள் என்பதை இயேசு பார்த்தார்"

ஒரு தினார்

"ஒரு நாள் கூலியின் பெறுமானமுள்ள ஒரு காசு."

சொரூபமும் மேலெழுத்தும்

"படமும் பெயரும்"

Luke 20:25-26

அவர் அவர்களிடம் சொன்னார்

"பின்பு இயேசு அவர்களிடம் சொன்னார்"

இராயன்

"இராயன்" என்பது ரோம அரசாங்கத்தைக் குறிக்கிறது.

அவர் சொன்னவற்றை குற்றப்படுத்த முடியவில்லை

"அவர் சொன்னதில் தவறு இருப்பதாக அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை."

அவர்கள் அதிசயித்தனர்

"அவர்கள் ஆச்சரியப்பட்டனர்" அல்லது "அவர்கள் ஆச்சரியப்பட்டனர்" (UDB)

Luke 20:27-28

உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லுகிறவர்கள்

யூதப் பிரிவுகளில் ஒன்றான சதுசேயர்கள் எவரும் உயிர்த்தெழ மாட்டார்கள் என்று சொல்லுவதால் இந்த பதத்தில் சொல்லப்பட்டவர்களோடு அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சில் சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இருக்கிறது என்றும் சிலர் இல்லை என்றும் சொல்லுகிறார்கள் என்றும் அர்த்தம் அல்ல.

ஒரு மனிதனின் சகோதரன் மனைவி இருக்க குழந்தை இல்லாமல் மரித்தால்,

"குழந்தையில்லாமல் மனைவி மட்டும் இருக்க ஒரு மனிதனின் சகோதரன் மரித்தால்"

குழந்தை இல்லாமல் இருக்கிறது

"ஆனால் குழந்தை இல்லாமல்"

சகோதரனின் மனைவியை அந்த மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும்

"தனது மரித்துப்போன சகோதரனின் மனைவியை அவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும்"

Luke 20:29-33

(சதுசேயர்களைத் தொடர்ந்து இயேசுவிடம் ஒரு கதை சொல்லத் துவங்கினர்)

ஏழு சகோதரர்கள் இருந்தனர்

இது நடந்திருக்கலாம். ஆனால் இயேசுவை சோதிக்கும்படி இப்படி ஒரு கதையை அவர்கள் உண்டாக்கி இருந்தார்கள்.

குழந்தை இல்லாமல் மரித்து

"குழந்தைகள் இல்லாமல் இறந்து" அல்லது "மரித்தாயிற்று, ஆனால் குழந்தை இல்லை"

இரண்டாமவனும் அப்படியே

இதை, "இரண்டாமவன் அவளைத் திருமணம் செய்தான், அதே காரியம் நடந்தது" அல்லது "இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம் செய்தான், குழந்தை இல்லாமல் மரித்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

மூன்றாமவன் அவளை எடுத்துக் கொண்டான்

"மூன்றாமவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்."

அது போல ஏழு பேரும் அவளை குழந்தை இல்லாமல் விட்டுவிட்டு மரித்தனர்

இதை, "அதே போல ஏழு பேரும் அவளைத் திருமணம் முடித்து குழந்தை இல்லாமல் மரித்துப் போனார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உயிர்த்தெழுதலில்

"மக்கள் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும்போது" அல்லது "மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு வரும்போது" (UDB). "வரப்போகும் உயிர்த்தெழுதலில்" அல்லது "மரித்துப்போனவர்கள் மரித்தோரிலிருந்து எழுப்பப்படும்போது" என்பதில் உள்ளது போல உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லுபவர்கள் சதுசேயர்கள் என்று காட்ட சிலமொழிகளில் வழி இருக்கிறது.

Luke 20:34-36

இந்த உலகத்தின் மகன்கள்

"இந்த உலகத்தின் மக்கள்" அல்லது "இந்த காலத்தின் மக்கள்." பரலோகத்தில் இருப்பவர்களுக்கு அல்லது "உயிர்த்து எழுதலுக்கு அப்பால் வாழுபவர்களுக்கு முரணாக இது இருக்கிறது.

திருமணம் செய்தும் திருமணம் செய்யப்பட்டும்

அந்தக் கலாச்சாரத்தில், பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களைக்குறித்தும் தங்களுடைய கணவன்மார்களுக்கு திருமணத்தில் கொடுக்கப்படுவதைக் குறித்தும் பேசப்படுகிறது. இதை, "திருமணம் முடிக்கப்பட்டு" என்று மொழிபெயர்க்கலாம்.

பாத்திரராக எண்ணப்படுவார்கள்

"தேவன் பாத்திரமாகக் கருதிடும் மக்கள்"

உயிர்த்து எழுதலைப் பெற்றுக்கொள்ள

"மரித்தோரிலிருந்து எழுப்பப்பட" அல்லது "மரித்தோரிலிருந்து எழுப்ப"

திருமணம் செய்யாமலும் திருமணத்தில் கொடுக்கப்படாமலும்

"திருமணம் செய்யப்பட மாட்டார்கள்." இது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு.

அவர்கள் இனிமேல் மரிக்கமாட்டார்கள்

இதை, "அவர்கள் இனி மரிக்க முடியாது" என்று மொழிபெயர்க்கலாம். இது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு.

தேவனுடைய மகன்கள்

"தேவனுடையப் பிள்ளைகள்"

உயிர்த்தெழுதலின் மகன்கள்

"மரித்தோரிலிருந்து எழுப்பப்படாதவர்கள்"

உயிர்த்தெழுதலின் மகன்களான தேவனுடைய மகன்கள்

இதை, "மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்கள், தேவனுடைய மகன்களாக காட்டப்படுவார்கள்" என்று மொழிபெயர்க்கப்படுவார்கள்.

Luke 20:37-38

(இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

மரித்தோர் எழுந்திருப்பார்கள் என்று மோசேயும் காண்பித்தார்

"மரித்தவர்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவார்கள் என்று மோசேயும் காண்பித்திருக்கிறார்." "ஆயினும்" என்கிற வார்த்தை, மரித்தோர் உயிர்த்தெழுவார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதைப் பார்த்து சதுசேயர்கள் ஆச்சரியப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் மோசேயும் அதைக் குறித்து எழுதி இருக்கிறார் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

முட்செடி என்று குறிப்பிட்டுள்ள இடத்தில்

"எரியும் முட்செடிக் குறித்து அவன் எழுதின வேதத்தின் பகுதியில்" அல்லது "எரியும் முட்செடியைக் குறித்துள்ள வேதவாக்கியத்தில்"

கர்த்தரை அவன் கூப்பிட்ட பொழுது

"கர்த்தரை மோசே அழைத்தப் பொழுது"

ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்

"ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவன்." அவர்கள் எல்லாரும் அதே தேவனை ஆராதித்தார்கள்.

இப்பொழுது அவர் மரித்தவர்களின் தேவனல்ல

"கர்த்தர் மரித்தவர்களின் தேவனல்ல" அல்லது "மரித்துப்போனவர்கள் மற்றும் தங்களது ஆவியில் மரித்துபோனவர்களுக்கும் தேவனல்ல கர்த்தர்."

ஆனால் ஜீவிக்கிற

"ஆனால் ஜீவிக்கிற மக்களுடைய தேவன்" அல்லது "ஆவிகள் உயிரோடிருக்கிரவர்களின் தேவன்." இது தெளிவாக இல்லையென்றால், நீங்கள் மறைத்து சொல்லப்பட்ட தகவலை சேர்க்க வேண்டும்: "அவர்களுடைய சரீரம் செத்துப்போனாலும்."

ஏனென்றால் எல்லாரும் அவருக்காக பிழைத்திருக்கிறார்கள்

"ஏனென்றால், தேவனுடையப் பார்வையில் அவர்கள் எல்லாரும் இன்னமும் உயிரோடிருக்கிறார்கள்." இதை, "அவர்களுடைய ஆவிகள் உயிரோடிருக்கிறது என்பதை தேவன் அறிந்திருக்கிறதினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 20:39-40

சில வேதபாரகர்கள் பதில்கொடுத்தனர்

"சில வேதபாரகர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்"

அவரிடம் கேட்க அவர்களுக்கு தைரியம் இல்லை

"அவரிடம் கேட்க பயந்தனர்" அல்லது "அவர்கள் தங்களை கஷ்டபடுத்திக்கொள்ளவில்லை." மறைத்து சொல்லப்பட்டதான கேள்விகளின் நோக்கமும் அவரால் கேட்காமல் இருந்ததின் காரணமும் வெளிப்படையாக்கப்படலாம்: "அவரிடம் தந்திரக் கேள்விகளை கேட்க அவர்கள் துணியவில்லை, ஏனென்றால் மீண்டும் மீண்டும் அவரது ஞானமான பதில்களால் தாங்கள் முட்டாள்களைப் போல தெரிவோம் என்று பயப்பட்டார்கள்."

Luke 20:41-44

அவர்கள் எப்படி சொல்லுகிறார்கள்

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "ஏன் அவர்கள் சொல்லுகிறார்கள்" அல்லது "அவர்கள் சொல்லுகிறதை நாம் நினைத்துப் பார்ப்போம்" அல்லது "அவர்கள் சொல்லுகிறதைக் குறித்து நான் பேசுவேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

தாவீதின் மகன்

"தாவீது ராஜாவின் சந்ததி." "மகன்" என்கிற வார்த்தை சந்ததியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.இந்த இடத்தில், தேவனுடைய ராஜ்யத்தை ஆளும் ஒருவரைக் குறிக்கிறது.

கர்த்தர் என்னுடைய கர்த்தரிடம் சொன்னார்

"தேவனாகியக் கர்த்தர் என்னுடைய கர்த்தரிடம் சொன்னார்" அல்லது "தேவன் என்னுடைய கர்த்தரிடம் சொன்னார்" என்று மொழிபெயர்க்கலாம். இது "யேகோவா என்னுடையக் கர்த்தரிடம் சொன்னார்" என்னும் சங்கீதம் 110 :1 ஆம் வசனத்தில் இருந்து எடுக்கப்பட்ட கூற்று ஆகும். ஆனால் யூதர்கள் "யேகோவா" என்று சொல்லுவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக "கர்த்தர்" என்று சொல்லுவார்கள்.

என்னுடையக் கர்த்தர்

தாவீது கிறிஸ்துவை "என்னுடைய கர்த்தர்" என்று குறிப்பிடுகிறார்.

என்னுடைய வலது கரம்

வலது பக்கம் கனத்திற்குரிய இடம். தேவன், "என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும்" என்று சொல்லி மேசியாவைக் கனபடுத்துகிறார்.

உம்முடைய எதிரிகளை உமக்கு பாதபடியாக்கிப் போடும் வரை

இது ஒரு உருவகம். இதை, "உம்முடைய எதிரிகளை உமக்கு பாதபடி போல மாற்றும் வரை" அல்லது "உமக்காக நான் உம்முடைய எதிரிகளை ஜெயிக்கிற வரை" என்று மொழிபெயர்க்கலாம்.

பாதபடி

பாதபடி என்பது மக்கள் தங்கள் கால்களை வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும்.

அவர் எப்படி தாவீதின் குமாரன் ஆவார்?

கிறிஸ்து எவ்வாறு தாவீதின் குமாரன் ஆவார்?" இது பதில் எதிர் பாரா கேள்வி. இதை, "கிறிஸ்து வெறுமனே தாவீதின் சந்ததி அல்ல என்று இது காண்பிக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 20:45-47

ஜாக்கிரதை

"எதிராக காவலாய் இருங்கள்"

நீளமான அங்கிகளை அணிந்து நடக்க விரும்புகிறவர்கள்

நீளமான அங்கிகள் அவர்களை முக்கியமானவர்களாகக் காண்பிக்கும். இதை, முக்கியமான அங்கிகளை அணிந்து கொண்டு சுற்றி நடக்க விரும்புகிறவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

விதவைகளின் வீடுகளையும் அவர்கள் பட்சித்துபோட்டார்கள்

"அவர்கள் விதவைகளின் வீடுகளையும் தின்றார்கள்." விதவைகளுடைய பொருட்களை எல்லாம் அவர்கள் எடுத்துக்கொண்டனர்" என்று இந்த உருவகம் அர்த்தப்படுகிறது.

வீடுகள்

"வீடுகள்" என்கிற வார்த்தை அவர்களுடைய எல்லா பொருட்களையும் குறிக்கிறது.

பார்வைக்கு நீளமான ஜெபங்கள் செய்வார்கள்

"நீதிமான் போல நடித்து நீண்ட ஜெபங்களை செய்கிறார்கள்" அல்லது "மக்கள் அவர்களைப் பார்க்கவேண்டும் என்று நீண்ட ஜெபங்களை செய்கிறார்கள்"

பார்க்கும்படி

"தாங்கள் அவர்களைப்போல அல்ல என்று மக்கள் தங்களைக்குறித்து எண்ணும்படி நினைப்பார்கள் என்று" அல்லது "மற்றவர்களைப் பார்க்கிலும் அவர்களை மென்மையாக எண்ணுவார்கள் என்பதற்காக"

இவர்கள் மிகுந்த ஆக்கினை அடைவார்கள்

இதை, "மற்றவர்களைப் பார்க்கிலும் அதிக ஆக்கினையைப் பெற்றுக்கொள்ளுவார்கள்" அல்லது "மற்றவர்களைவிடவும் தேவன் அவர்களை பயங்கரமாக தண்டிப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 21

Luke 21:1-4

ஈவுகள்

"பொக்கிஷங்கள்"

பொக்கிஷசாலை

"சேகரிக்கும் பெட்டி" அல்லது "பணப்பெட்டி" அல்லது "ஆலய கணக்குப் பெட்டி" (UDB). தேவனுக்கான ஈவை மக்கள் ஆலயத்திலிருக்கும் இந்தப் பெட்டிகளுள் ஒன்றில் போடுவார்கள்.

இரண்டு காசுகள்

"இரண்டு சிறிய காசுகள்" அல்லது "இரண்டு சிறிய ஈயக் காசுகள்." முன்பு மக்கள் உபயோகித்த மதிப்பு மிகவும் குறைவாக உள்ள காசுகள் இவைகள். இதை, "உங்கள் கலாச்சாரத்தில் உள்ள பணப் பரிவர்த்தனையில் உபயோகப்படுத்தும் மிகவும் குறைவான காசைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். "இரண்டு பைசா" என்பது போல.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு தனது சீடர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். "உங்களுக்கு" என்கிற வார்த்தை பன்மையில் உள்ளது.

அவர்களுடைய பரிபூரணத்தில் இருந்து காணிக்கைகளைக் கொடுத்தார்கள்

இதை, "நிறையப் பணத்திலிருந்து கொஞ்சத்தைக் கொடுத்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவளுடைய வறுமையில், எல்லாவற்றையும் கொடுத்தாள்

இதை, "அவளுக்குக் கொஞ்சம் தான் இருந்தது ஆயினும் அவள் எல்லாவற்றையும் கொடுத்தாள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 21:5-6

காணிக்கைகள்

"தேவனுக்கு மக்கள் கொடுத்தவைகள்."

நாட்கள் வரும்

"நேரம் இருக்கும்" அல்லது "ஒரு நாளில்"

ஒரு கல்லும் இன்னொரு கல்லின் மீதி இருக்காது

இதை ஆக்கப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்: "அதனுடைய இடங்களிலிருந்து எல்லா கல்லும் அகற்றப்படும்." இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "ஒரு கல்லின் மீது இன்னொரு கல் இருக்க எதிரிகள் விடமாட்டார்கள்."

அது இடிக்கப்படாது

இதை ஆக்கப்பூர்வமாக, "அவைகள் இடிக்கப்படும்" என்று மொழிபெயர்க்கலாம். இதை செய்வினைக் கூற்றாகவும் மொழிபெயர்க்கலாம்: "எல்லாக் கல்லையும் எதிரிகள் இடித்துப்போடுவார்கள்."

Luke 21:7-9

அவர்கள் அவரைக் கேட்டனர்

"சீடர்கள் இயேசுவைக் கேட்டனர்" அல்லது "இயேசுவின் சீடர்கள் அவரைக் கேட்டனர்"

இந்தக் காரியங்கள்

இயேசு தற்பொழுது பேசினக் காரியங்கள். ஆலயம் அழிந்துபோவதைக் குறித்து இயேசு சற்றே பேசி இருந்தார்.

நீங்கள் வஞ்சிக்கப்படாதிருக்க

பொய்களை நீங்கள் நம்பாமல்." இயேசு தனது சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள்" என்கிற வார்த்தை பன்மையில் இருக்கிறது.

என்னுடைய நாமத்தில்

இதை, "நான் என்று சொல்லி" அல்லது "என்னுடைய அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி"

முடிவு

"உலகத்தின் முடிவு" அல்லது "எல்லாவற்றின் முடிவு"

உடனடியாக முடிவு வராது

"உலகத்தின் முடிவு போர்களும் கலவரங்களும் முடிந்த உடனே வராது." "முடிவு" என்கிற பெயர்ச்சொல் வினைச் சொல்லாக மொழிபெயர்க்கப்படலாம்: "இந்தக் காரியங்கள் நடந்த உடனே உலகம் முடிவுக்கு வராது."

Luke 21:10-11

பின்பு அவர் அவர்களிடம் சொன்னார்

"பின்பு இயேசு தனது சீடர்களிடம் சொன்னார்." முந்தின வசனத்தில் இயேசு சொன்னதின் தொடர்ச்சிதானே தவிர என்பதால், சில மொழிகள், "பின்பு அவர் அவர்களிடம் சொன்னார்" என்று சொல்ல முற்படுவதில்லை.

நாடுகள் நாடுகளுக்கு எதிராக எழும்புகிறது

இது, "ஒரு நாடு மற்ற நாடுகளை தாக்கும்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

நாடு

இது அந்த அந்த இடங்களில் உள்ள மக்கள் குழுவைக் குறிக்கிறது. நாடுகளை அல்ல.

இராஜ்ஜியங்களுக்கு விரோதமாக இராஜ்யங்களும்

"இராஜ்யங்கள் மற்ற ராஜ்யங்களுக்கு விரோதமாக எழும்பும்" அல்லது "ஒரு இராஜ்ஜியம் மற்ற இராஜ்ஜியங்களைத் தாக்கும்"

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்

"பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உண்டாகும்" அல்லது "பசி நேரங்களும், அனேக மக்களைக் கொள்ளும் வியாதிகளின் நேரமும்"

பயங்கரமான நிகழ்வுகள்

"மக்களை திகிலடையச் செய்யும் நிகழ்வுகள்" அல்லது "மக்களை பயமுறுத்தும் நிகழ்வுகள்"

Luke 21:12-13

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

இந்தக் காரியங்கள்

வசனங்கள் 8

11 றில் இயேசு நடக்கும் என்று சொன்ன பயங்கரமானக் காரியங்களை இது குறிக்கிறது.

அவர்கள் உங்கள் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள்

"அவர்கள் உங்களைக் கைது செய்வார்கள்" அல்லது "அவர்கள் உங்களைப் பிடித்துக்கொண்டு போவார்கள்." சில மொழிகளில் யார் இதை செய்வார்கள் என்பதை சொல்லவேண்டும் என்று தேவையாயிருக்கும்: "மக்கள் உங்கள் மேல் அவர்களது கைகளை வைப்பார்கள்" அல்லது "எதிரிகள் உங்கள் மேல் அவர்களுடையக் கைகளை வைப்பார்கள்."

நீங்கள்

இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். "நீங்கள்" என்கிற வார்த்தை பன்மையில் உள்ளது.

ஜெப ஆலயங்களுக்கு உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்

"ஜெப ஆலயங்களின் தலைவர்களிடம் உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்" சீடர்கள் இயேசுவைப் பின்பற்றுவதால் அவர்களுக்கு செவிகொடுக்க மற்ற எல்லா யூதர்களையும் ஜெப ஆலயத் தலைவர்கள் தடை செய்வார்கள்.

சிறைச்சாலைகள்

"சிறைச்சாலைக்கு உங்களை ஒப்புக்கொடுத்து" அல்லது "உங்களை சிறையில் இட்டு."

உங்களுக்கு சாட்சி

"நீங்கள் என்னைக் குறித்த சாட்சியை அவர்களுக்கு சொல்லவே"

Luke 21:14-15

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

உங்கள் இருதயங்களில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்

"உங்கள் மனதை நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்" அல்லது "தீர்க்கமாக தீர்மானித்துக்கொள்ளுங்கள்"

உங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள அல்ல

"அவர்களுடையக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீங்கள் என்ன சொல்லி உங்களைப் பாதுகாப்பது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம்."

வார்த்தைகளும் ஞானமும்

"ஞானத்தின் வார்த்தைகள்" அல்லது "ஞானமான வார்த்தைகள்"

நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் வார்த்தைகளையும் தருவேன்

"என்ன ஞானமானக் காரியங்களை சொல்லவேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லுவேன்"

உங்களுடைய எதிராளிகள் எதிர்பேசவோ அல்லது எதிர் வாதம் செய்யவோ கூடாதவைகள்

இதன் பொருள், "உங்களுடைய எதிரிகள் இந்த வார்த்தைகளுக்கு எதிராக வாதம் செய்யவோ அல்லது இந்த வார்த்தைகள் தவறு என்று சொல்லவோ முடியாது."

Luke 21:16-19

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.)

நீங்கள் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்

"நீங்கள் அதிகாரிகளிடம் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்" அல்லது "நீங்கள் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்"

உங்களில் சிலரை அவர்கள் கொலை செய்வார்கள்

"உங்களில் சிலரை அவர்கள் கொலை செய்வார்கள்." சாத்தியமான அர்த்தங்கள்

  1. "அதிகாரிகள் உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள்" அல்லது 2. "உங்களை ஒப்புக்கொடுப்பவர்கள் உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள்." முதல் அர்த்தம் அநேகமாக சரியாகப் பொருந்தலாம்.

என்னுடைய நாமத்தினிமித்தம்

"என்னிமித்தம்" அல்லது "நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம்."

உங்கள் தலையில் உள்ள ஒரு முடியும் அழிந்துபோகாது

இதை ஆக்கப்பூர்வமாக மொழிபெயர்க்கலாம்: "உங்கள் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் பாதுகாப்பாய் இருக்கும்." இந்த உருவகத்தின் அர்த்தம், "நீங்கள் துன்புறுத்தப்பட மாட்டீர்கள்" என்பதாகும். இது ஒரு முழு மனிதனையும் குறிக்கும் ஒரு மனிதனின் சிறிய பாகமாகும். இவ்வாறு குறிப்பதன் மூலம் முழு மனிதனும் அழிக்கப்படமாட்டான் என்பதைக் காட்டுகிறது. இயேசு ஏற்கனவே சிலர் கொல்லப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். "ஆனால் இந்தக் காரியங்கள் உண்மையில் உங்களை சேதப்படுத்த முடியாது" என்பதில் உள்ளதை, சிலர் ஆவிக்குரிய வகையில் நாம் காயப்படமாட்டோம் என்று புரிந்துகொள்ளுகிறார்கள்.

ஆனால் உங்கள் பொறுமையில்

"நிலைத்திருக்கிறதினிமித்தம்." இதை, "நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை என்றால்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்கள் ஆத்துமாக்களை நீங்கள் லாபமாக்கிக்கொள்ளுவீர்கள்

"நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்வீர்கள்" அல்லது "நீங்கள் என்றென்றும் வாழுவீர்கள்."

Luke 21:20-22

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

எருசலேம் இராணுவங்களால் சூழ்ந்திருக்கிறது

இது செய்வினை வினைச்சொல்லோடு வெளிப்படுத்தப்படலாம்: "எருசலேமை சூழ்ந்துள்ள இராணுவங்கள்."

அதேனென்றால், அழிவு சமீபமாய் இருக்கிறது

"அது சீக்கிரமாக அழிக்கப்படும்" அல்லது "அவர்கள் அதை சீக்கிரம் அழித்துவிடுவார்கள்."

ஓடுங்கள்

'ஆபத்திற்கு விலகி ஓடுங்கள்"

இது பழிவாங்குதலின் நாட்கள்

"இது தண்டனையின் நாட்கள்" அல்லது "இந்த நாட்களில் மக்கள் தண்டிக்கப்படுவார்கள்" அல்லது "தேவன் # நகரத்தைத் தண்டிக்கும் நேரம் இது" (UDB)

எழுதப்பட்ட இந்தக் காரியங்கள்

"வேதத்தில் எழுதப்பட்டக் காரியங்கள்"

Luke 21:23-24

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.)

தேசத்தில் மிகுந்த இடுக்கண் உண்டாகும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேசத்தின் மக்கள் துன்பப்படுவார்கள் 2. "தேசத்தில் சரீரப்பிரகாரமான அழிவு உண்டாகும்.

இந்த மக்களுக்கு கோபாக்கினை

"இந்த மக்களுக்கு கோபாக்கினை உண்டாகும்." இதை, "இந்த மக்கள் தேவனுடைய கோபத்தை அனுபவிப்பார்கள்" அல்லது 2. "தேவன் இந்த மக்கள் மீது மிகுந்த கோபமாய் இருப்பார்" என்று மொழிபெயர்க்கலாம். மறைத்து சொல்லப்பட்ட தண்டனைப் பற்றிய தகவலை வெளிப்படையாக்கலாம்: "இந்த மக்கள் தண்டிக்கபடுவார்கள்" அல்லது "தேவன் இந்த மக்களைத் தண்டிப்பார்."

வாளின் கருக்கினாலே விழுவார்கள்

"அவர்கள் வாளின் முனையினால் கொல்லப்படுவார்கள்." இது எதிரிப் படை வீரர்களால் கொல்லப்படுவதைக் குறிக்கிறது.

எல்லா நாடுகளிலும் கைதிகளாகக் கொண்டு செல்லப்படுவார்கள்

இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "அவர்களுடைய எதிரிகள் அவர்களை சிறைப்பிடித்து மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லுவார்கள்."

எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "புறஜாதிகள் எருசலேமை வென்று கைப்பற்றுவார்கள்" அல்லது 2. "புறஜாதிகள் எருசலேம் நகரத்தை அழித்துப்போடுவார்கள்" அல்லது 3. "புறஜாதியார் எருசலேம் மக்களை அழித்துப்போடுவார்கள்."

Luke 21:25-26

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

நாடுகளில் தத்தளிப்பு உண்டாகும்

இதை, "தேசங்களின் மக்கள் தத்தளிப்பார்கள்" அல்லது 2. "தேசங்களின் மக்கள் மிகவும் கலக்கத்தோடு இருப்பார்கள்."

கடல் அலைகளின் இறைச்சலினாலும் அலைகளினாலும் உண்டாகிற இடுக்கணில் இருந்து

"கடலின் இறைச்சலாலும் அலைகளின் சத்தத்தாலும் அவர்கள் குழப்பம் அடைவார்கள் என்பதால்" அல்லது "கடலின் பேரோசையினாலும் அவற்றின் மூர்க்கமான அசைவினாலும் அவர்கள் மிகவும் பயந்து போவார்கள்." இது அசாதாரணமான சுழற்காற்று அல்லது கடல்களால் உண்டாகும் அழிவுகளையும் இது குறிக்கிறது.

உலகத்தின் மேல் வருகிற காரியங்களால்

"உலகத்தில் நடக்கப்போகிறக் காரியங்களால்" அல்லது "உலகத்திற்கு நடக்கப்போகிறக் காரியங்களால்."

வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்

"வானங்களில் உள்ள வல்லமையானக் காரியங்கள் அசைக்கப்படும்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஆகாயத்தில் இருக்கிற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் பொதுவாக போகும் வழியில் செல்லாது" அல்லது 2. "வானங்களில் உள்ள வல்லமையான ஆவிகள் கலக்கத்தில் இருக்கும். முதல் அர்த்தம் சிபாரிசு செய்யப்படுகிறது.

Luke 21:27-28

(வருங்காலத்தைக் குறித்து இயேசு தனது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்)

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைத்தானே குறிப்பிடுகிறார்.

மேகத்தில் வருகிறார்

இதை, "மேகத்திலே கீழே வருகிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.

வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்

இதை, "வல்லமையாக மகிமையாக" அல்லது "அவர் மிகவும் வல்லமையையாகவும் மிகவும் மகிமையாயும் இருப்பார்" என்று மொழிபெயர்க்கலாம். "வல்லமை" என்பது உலகத்தை நியாயந்தீர்க்கும் அவருக்கிருக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. "மகிமை" என்கிறது பிரகாசமான வெளிச்சத்தைக் குறிக்கலாம். தேவன் சில சமயம் தனது மகத்துவத்தை மிகவும் பிரகாசமான ஒளிக்கு ஒப்பாகக் காட்டி இருக்கிறார்.

எழுந்து நில்

இதை, "நம்பிக்கையோடு எழுந்து நில்" என்று மொழிபெயர்க்கலாம். சிலநேரம் மக்கள் பயப்படும்போது, பார்க்கவோ அலது சேதப்படவோ தவிர்ப்பதற்காய் கீழே தவழுவார்கள். அவர்கள் இனி பயப்படவில்லை என்றால், அவர்கள் எழுந்திருப்பார்கள்.

உங்கள் தலைகளை உயர்த்துங்கள்

இது , "மேலே பாருங்கள்" என்பதின் ஆகுபெயராகும். மேலே பார்ப்பதால், அவர்களைக் காப்பாற்றுபவர்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்.

உங்களுடைய விடுதலை சமீபமாய் இருப்பதால்

இதை, "உங்களை விடுவிக்கிறவர் உங்களிடம் வருவதால்" அல்லது "நீங்கள் சீக்கிரம் விடுவிக்கப்படுவீர்கள்." என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 21:29-31

மொக்குகள் விரியும்போது

"புதிய இலைகள் வளரத் துவங்கும்போது"

நீங்களே பார்த்து அறிந்துகொள்ளலாம்

இதை, "மக்கள் தாங்களே பார்த்து அறிந்துகொள்ளுவார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கோடைக்காலம் சமீபமாய் இருக்கிறது

"கோடைக்காலம் துவங்கப்போகிறது." இஸ்ரவேலில் கோடைக்காலம் மிகவும் வறட்சியை இருக்கும், அதனால், கதிர்கள், கோடைகாலத் துவக்கத்திலே அறுவடை செய்யப்படும். அர்த்தம் என்னவென்றால், "அறுவடைக் காலம் துவங்க ஆயத்தமாயிருக்கிறது." அவர்கள் பார்த்து அறிந்துகொள்ளுவார்கள் என்பது மறைத்து சொல்லப்பட்டத் தகவல்.

தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது

"தேவனுடைய ராஜ்ஜியம் சீக்கிரம் நிறுவப்படும்" அல்லது "தேவன் அவரது ராஜ்யத்தின் மேல் ஆட்சி செய்வார்."

Luke 21:32-33

இந்த சந்ததி

சாத்தியமான அர்த்தங்கள், 1. "இயேசு சொன்ன அடையாளங்களில் முதலாவதைப் பார்க்கும் சந்ததி" அல்லது 2. "இயேசு பேசிகொண்டிருந்த சந்ததி." முதல் அர்த்தம் பொருத்தமானது.

வானமும் பூமியும் கடந்துபோகும்

"வானமும் பூமியும் வாழ்வதை நிறுத்திவிடும்." "வானம்" என்கிற வார்த்தை இங்கு ஆகாயத்தையும் அதற்கும் மேலாக இருக்கும் பிரபஞ்சத்தையும் குறிக்கும்.

என்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் கடந்து போகாது

"என்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் செயல்படுவதை நிறுத்தாது" அல்லது "என்னுடைய் வார்த்தைகள் ஒருபோதும் தோற்றுப்போகாது." இதை, "என்னுடைய வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும்" அல்லது "நான் சொல்லுபவை நிச்சயமாக நடக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 21:34-35

உங்கள் இருதயங்கள் பாரப்படாதிருப்பதாக

"நீங்கள் அவைகளால் நிறையப்படாதபடிக்கு"

பெருந்திண்டியினாலும்

"கட்டுப்பாடிலாத சுய உரிமைக் காட்டுதல்" அல்லது "உங்களை சந்தோஷப்படவைக்கும் காரியங்களை அதிகமதிகமாக செய்வது." இதை சில குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளோடு, "நிறைய உண்பது" என்று மொழிபெயர்க்கலாம்.

வாழ்க்கையின் கவலைகள்

"இந்த வாழ்க்கையைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுவது.

ஏனென்றால் அந்த நாள் சடிதியில் உங்கள் மேல் வரும்

சிலருக்கு மறைத்து சொல்லப்பட்ட தகவல் தெளிவுபடுத்தப்பட வேண்டும்: "நீங்கள் ஜாக்கிரதையாய் இருக்கவில்லை என்றால், அந்த நாள் உங்கள் மீது சடிதியாக வரும்." அந்த நாளின் வருகை, ஆயத்தமில்லாதவர்களுக்கும் அதைப் பார்க்கிறவர்களுக்கும் சடிதியாகவும் எதிர்பார்க்கமுடியாததுமாய் இருக்கும் போலத் தெரிகிறது.

அந்த நாள்

இதை மிகவும் குறிப்பாக, "மனுஷக் குமாரன் வரும் நாள்" என்று மொழிபெயர்க்கலாம்.

சடிதியாக ஒரு வலைபோல

இது ஒரு உவமை. இதன் அர்த்தம், "ஒரு மிருகத்தைப் பிடிக்கும் ஒரு கண்ணி போல நீங்கள் எதிர்பாராத பொழுது" என்பதாகும்.

அது எல்லார் மேலும் வரும்

"அது எல்லாரையும் பாதிக்கும்" அல்லது "அந்த நாளின் நிகழ்வுகள் எல்லாரையும் பாதிக்கும்"

முழு உலகத்தின் மேல்

"முழு உலகத்தின் மேற்பரப்பில்" அல்லது "முழு உலகத்தின் மேலும்"

Luke 21:36

இந்தக் காரியங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இந்தக் காரியங்களைத் தாங்கிக்கொள்ளும்படி" அல்லது 2. "இந்தக் காரியங்களைத் தவிர்க்கும்படிக்கு."

நடைப்பெறப்போகும் இந்தக் காரியங்கள்

"நடக்கப்போகும் இந்தக் காரியங்கள்." நடைபெறப்போகும் உபத்திரவம், சண்டை, சிறைப்படுத்துதல் போன்ற கொடியக் காரியங்களைக் குறித்து இயேசு சற்றே சொல்லி இருந்தார்.

மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கும்படி

"மனுஷக் குமாரன் முன்பு தைரியத்தோடு நிற்கும்படி." இது அநேகமாக மனுஷக் குமாரன் எல்லாரையும் நியாயந்தீர்க்கும்படி அமர்ந்திருப்பதாக இருக்கலாம். ஆயத்தமில்லாத மனிதன் மனுஷக் குமாரன் முன்பு நிறுக்கும்போது பயத்தோடு நிற்பான். நம்பிக்கையற்றவனாய் நிற்பான்.

Luke 21:37-38

அவர் கற்றுக்கொடுத்த நாட்களின் போது

"அவர் கற்றுக்கொடுக்கும் நாட்களின்போது." பின்வரும் வசனங்கள் அவர் மரிக்கும் முன்பு இயேசுவும் மக்களும் ஒவ்வொரு நாளும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி சொல்லுகிறது.

ஆலயத்தில்

இதன் அர்த்தம், "ஆலயத்தில்" அல்லது "ஆலயப் பிரகாரங்களில்."

இரவில் அவர் வெளியே போவார்

"அவர் நகரத்திற்கு வெளியே சென்ற இரவில்" அல்லது "அவர் ஒவ்வொரு இரவும் வெளியே போவார்"

எல்லா மக்களும்

இது நம்ப முடியாதா ஒரு காரியம். இதன் அர்த்தம், "எண்ணிக்கைக்கு அடங்காத மக்கள்" அல்லது "அநேகமாக யாவரும்" என்பதாகும்.

அதிகாலையில் வந்து

"அதிகாலையில் வந்து" அல்லது "ஒவ்வொரு காலையும் சீக்கிரம் வந்து"

அவரைக் கேட்க

"அவரைக் கற்றுக்கொடுப்பதைக் கேட்க"

Luke 22

Luke 22:1-2

புளிப்பில்லாத அப்பப்பண்டிகை

இந்தப் பெயரால் இந்தப் பண்டிகை அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால் பண்டிகையின் போது, யூதர்கள் புளிப்போடு செய்யப்பட்ட அப்பத்தை புசிக்கமாட்டார்கள். இதை, "புளிப்பில்லாத அப்பப்பத்தை உண்ணும் ஒரு பண்டிகை."

புளிப்பில்லாத அப்பம்

அது உப்பி எழும்ப இந்த அப்பத்தில் புளிப்பில்லை. இது, "புளிப்பில்லாத அப்பம்" என்றும் அழைக்கப்படும்.

நெருங்கி வந்து

"துவங்க ஆயத்தமாய் இருந்தது"

எப்படி இயேசுவை கொலை செய்தார்கள்

"இயேசுவை எப்படி அவர்கள் கொலை செய்ய செய்தனர்." ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவைத் தாங்களே கொலை செய்ய அதிகாரம் இல்லை, ஆனால் அவர்கள் மற்றவர்களை வைத்து கொலை செய்யலாம் என்று நம்பினார்கள்.

மக்களைக் குறித்து பயந்து

சாத்தியமான அர்த்தங்கள் 1. "மக்கள் என்ன செய்வார்களோ என்று பயந்து" அல்லது 2. "மக்கள் இயேசுவை ராஜாவாக ஆக்கிவிடுவார்கள் என்று பயந்து"

Luke 22:3-4

சாத்தான் யூதாஸ் ஸ்காரியோத்துக்குள் புகுந்தான்

இது அநேகமாக பிசாசு பிடித்திருப்பதற்கு மிகவும் சமமாய் இருக்கிறது.

பிரதான ஆசாரியர்கள்

"ஆசாரியர்களின் தலைவர்கள்"

தளபதிகள்

"ஆலயக் காவல்காரர்களின் தலைவர்கள்"

இயேசுவை அவர்களுக்கு எப்படி ஒப்புக்கொடுப்பதென்பது

இதை, "இயேசுவை எப்படி கைது செய்ய அவர்களுக்கு உதவுவது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:5-6

அவர்கள்

"பிரதான ஆசாரியர்களும் தளபதிகளும்"

அவனுக்குப் பணம் கொடுக்க

"அவன்" என்கிற வார்த்தை யூதாஸைக் குறிக்கிறது.

ஒத்துக்கொண்டு

"ஏற்றுக்கொண்டு" அது அடிக்கடி வந்தாலும்.

அவரை ஒப்புக்கொடுக்க

"இயேசுவை கைது செய்ய அவர்களுக்கு உதவும் படி"

கூட்டத்தாரிடமிருந்து தள்ளி

"தனித்து" அல்லது "அவரை சுற்றி கூட்டம் இல்லை" (UDB)

Luke 22:7-9

புளிப்பில்லா அப்பத்தின் நாள்

"புளிப்பில்லாத அப்பத்தின் நாள்" அல்லது "தட்டையான அப்பத்தின் நாள்." இந்த நாளில் தான் யூதர்கள் புளிப்பாக செய்யப்பட்ட எல்லா அப்பங்களையும் வீட்டுக்கு வெளியே கொண்டுபோவார்கள். பின்பு அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஏழு நாள் கொண்டாடுவார்கள்.

பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படவேண்டும்

"பஸ்கா விருந்துக்காக மக்கள் ஆட்டைக் கொலை செய்ய வேண்டும்." ஒவ்வொரு குடும்பமும் அல்லது மக்கள் குழுவும் ஒரு ஆட்டுக்குட்டியை கொன்று ஒன்றாக சேர்த்து உண்பர். அநேக ஆட்டுக்குட்டிகள் கொல்லப்பட்டது.

நாம் உண்ணும்படி

இயேசு, பேதுருவையும் யோவானையும் சேர்த்து "நாங்கள்" என்று சொன்னார். பேதுருவும் யோவானும் உணவு உண்ணும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஆயத்தாமாக்கு

"ஆயத்தப்படுத்து" என்று இந்த பொதுவான வார்த்தை அர்த்தப்படுகிறது. இயேசு பேதுருவையும் யோவானையும் பார்த்து எல்லா சமையலையும் செய்யுங்கள் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆயத்தங்கள் செய்யுங்கள்

"உணவுக்கான ஆயத்தம் செய்யுங்கள்" அல்லது "உணவை ஆயத்தம் செய்யுங்கள்"

Luke 22:10-11

அவர் பதிலளித்தார்

"அவர்" என்கிற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது.

தண்ணீர்குடம் சுமந்து வருகிற ஒரு மனிதன் உங்களை சந்திப்பான்

இதை, "நீங்கள் தண்ணீர்குடம் சுமந்து வரும் ஒரு மனிதனைப் பார்ப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தண்ணீர்குடம் சுமந்து

"ஒரு தண்ணீர் உள்ளக் குடத்தை சுமந்து." அவன் அநேகமாக அவனுடைய தோளில் சுமந்து வந்திருக்கலாம்.

அவனைப் பின்தொடர்ந்து அவனது வீட்டுக்குள் சென்றனர்

இதை, "அவரைப் பின் தொடர்ந்து அவனது வீட்டுக்குள் செல்லவும்."

போதகர் உனக்கு சொல்லுகிறார்

இது சீடர்களுக்கு இயேசு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதின் நேரிடைக் கூற்றை இது துவங்குகிறது. UDB இதை எதிர்மறைக் கூற்றாக கொடுக்கிறது: "எங்களுக்குக் காண்பிக்க நம்முடையப் போதகர் கூறுகிறார்."

போதகர்

இது இயேசுவைக் குறிக்கிறது.

பஸ்காவை சாப்பிடுங்கள்

"பஸ்காவின் உணவை சாப்பிடுங்கள்"

Luke 22:12-13

(யோவானுக்கும் பேதுருவுக்கும் தொடர்ந்து இயேசு அறிவுரைகளை கொடுத்துக்கொண்டிருந்தார்)

அவன் உங்களுக்குக் காண்பிப்பான்

"வீட்டு எஜமானன் உங்களுக்குக் காண்பிப்பான்"

மேலறை

"மேல் மாடியில் இருக்கும் அறை." உங்களுடைய சமுதாயத்தில் மற்ற அறைகளுக்கு மேலாக அறைகள் இருக்கும் கட்டமைப்பு இல்லை என்றால், நகரங்களில் உள்ள கட்டிடங்களை எப்படி குறிப்பிடுவீர்களோ அதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

அதனால் அவர்கள் சென்றனர்

"அதனால் பேதுருவும் யோவானும் சென்றனர்"

Luke 22:14-16

மிகவும் ஆசையாய் இருந்தேன்

"நான் மிகவும் விரும்பினேன்" (UDB)

ஏனென்றால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு அடுத்து என்ன சொல்லுகிறாரோ அதன் முக்கியத்துவத்தை இந்தக் கூற்று வலியுறுத்துகிறது.

அது நிறைவேறும் வரை

சாத்தியமான அர்த்தங்கள் 1. "பஸ்காப் பண்டிகையின் முழு குறிக்கோளும் நிறைவேறும் வரை" அல்லது 2. "கடைசி பஸ்காப் பண்டிகையாய் நாம் கொண்டாடும் வரை." இதை செய்வினை வினைச் சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "தேவன் அதை நிறைவேற்றும் வரை" அல்லது "பஸ்காப் பண்டிகையின் குறிக்கோளை தேவன் நிரைவேற்றும் வரை."

Luke 22:17-18

அவர் நன்றி தெரிவித்தவுடன்

"தேவனுக்கு அவர் நன்றி தெரிவித்தவுடன்"

அவர் சொன்னார்

"அவரது அப்போஸ்தலர்களிடம் சொன்னார்"

உங்களுக்கு உள்ளாகவே பகிர்ந்து கொள்ளுங்கள்

இதை, "அதி இருக்கும் திராட்சை ரசத்தை உங்களுக்குள்ளாகவே பகிர்ந்து கொள்ளுங்கள்" அல்லது "அதிலிருந்து கொஞ்சம் திராட்ச் ரசத்தை எல்லாரும் குடியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஏனென்றால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

இயேசு அடுத்து என்ன சொல்லுகிறாரோ அதன் முக்கியத்துவத்தை இந்தக் கூற்று வலியுறுத்துகிறது.

திராட்சைத் தோட்டத்தின் பலன்

இது திராட்சைகளில் இருந்து பிழியப்படும் பழச்சாறு ஆகும். திராட்சை ரசம் பதப்படுத்தப்பட்ட திராட்சைப்பழ ரசத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

தேவனுடைய இராஜ்ஜியம் வரும் வரை

இதை, "தேவனுடைய இராஜ்ஜியம் நிறுவப்படும்வரை" அல்லது "தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தை நிறுவும்வரை" அல்லது "தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தை ஆளும் வரை" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:19-20

அப்பம்

இந்த அப்பத்தில் புளிப்பில்லை, அதனால், அது தட்டையாக இருந்தது.

அவர் அதைப் பிட்டு

"அவர் அதை கிழித்து" அல்லது "அவர் அதைப் பிய்த்து." அவர் அதை அநேகத் துண்டுகளாகப் பிட்டிருக்கலாம் அல்லது இரண்டாக மட்டும் பிய்த்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்து அவர்களே பிய்த்துக்கொள்ளும்படியும் சொல்லி இருக்கலாம். சாத்தியமானால், இரண்டு சூழ்நிலைகளையும் குறித்து சொல்லும் ஒரு கூற்றை உபயோகப்படுத்தவும்.

இது என்னுடைய சரீரம்.

சாத்தியமான அர்த்தங்கள், 1. "இந்த அப்பம் என்னுடைய சரீரம்" அல்லது 2. "இந்த அப்பம் என்னுடைய சரீரத்தைக் குறிக்கிறது."

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட என்னுடைய சரீரம்

"நான் உங்களுக்குக் கொடுக்கும் என்னுடைய சரீரம்" அல்லது "நான் உங்களுக்காக தியாகம் செய்யப்போகும் என்னுடைய சரீரம்." பெற்றுக்கொள்ளுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும் என்று அவசியப்படும் மொழிகள், "உங்கள் நன்மைக்காக என்னுடைய சரீரத்தை கொள்ளும்படியாக அதிகாரிகளுக்குக் கொடுப்பேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

இதை செய்யுங்கள்

"இந்த அப்பத்தை புசியுங்கள்"

என்னை நினைவுகூர்ந்து

"என்னை நினைவுகூரும்படி"

இந்த குப்பி

"குப்பி" என்கிற வார்த்தை குப்பியில் இருக்கும் திராட்சை ரசத்தைக் குறிக்கிறது. இதை, "இந்தக் குப்பியில் இருக்கும் திராட்சை ரசம்" அல்லது "இந்த திராட்சை ரசம்" என்று மொழிபெயர்க்கலாம்.

இது என்னுடையப் புதிய உடன்படிக்கையின் என்னுடைய இரத்தமாய் இருக்கிறது

"என்னுடைய இரத்தத்தால் இந்த புது உடன்படிக்கையானது செயல்படப்போகிறது" அல்லது "என்னுடைய இரத்தத்தால் இந்த புது உடன்படிக்கையானது சட்டத்துக்குட்படுத்தப்படப்போகிறது" அல்லது "நான் மரிக்கும்போது என்னுடைய புண்களிலிருந்து வடியும் ரத்தம்." இயேசு தனது பிட்கப்படும் சரீரம் மற்றும் சிந்தப்படும் இரத்தத்தைப் பற்றி கூறுவதின் மூலம் தனது மரணத்தைப் பற்றி பேசுகிறார்.

Luke 22:21-23

(இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்)

என்னைக் காட்டிக்கொடுக்கிறவன்

"என்னைக் காட்டிக் கொடுப்பவன்"

ஏனென்றால், மனுஷக் குமாரன் நிச்சயமாகப் போவார்"

"ஏனென்றால், உண்மையில், மனுஷக் குமாரன் போய்விடுவார்" அல்லது "மனுஷக் குமாரன் மரித்து விடுவார்."

ஆனால் அவரைக் காட்டிக்கொடுப்பவனுக்கு ஆபத்து

"மனுஷக் குமாரனை காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஆபத்து!" அல்லது "ஆனால், மனுஷக் குமாரனைக் காட்டிக்கொடுப்பவனுக்கு எத்தனைக் கொடுமையாக இருக்கும்!"

Luke 22:24-25

பின்பு அவர்களுக்குள்ளாக ஒரு வாதம் எழுந்தது

"அப்போஸ்தலர்கள் அவர்களுக்குள்ளாக விவாதிக்கத் துவங்கினர்" (UDB)

மிகப்பெரிய

"மிகவும் முக்கியமான"

அவர் அவர்களுக்கு சொன்னார்

"இயேசு அப்போஸ்தலர்களுக்கு சொன்னார்"

அவர்களுக்கு மேலாக ஆளுமைத்துவம் கொண்டு

"அவர்களை கடுமையாக ஆளுகை செய்து" அல்லது "அவர்கள் மேல் அதிகாரத்தை செலுத்த விரும்புவார்கள்"

அழைக்கப்பட்டார்கள்

இதை, "அது போல அழைக்கப்பட விரும்பி" அல்லது "அவர்களை அழைத்து." மக்கள் அந்த ஆளுனர்களை மதிப்புள்ள ஆளுநர்கள் என்று நினைக்கிறதில்லை.

மதிப்பிற்குரிய ஆளுநர்கள்

இதை, "கொடையாளர்கள்" அல்லது "மக்களுக்கு உதவி செய்யும் தலைவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:26-27

(இயேசு அப்போஸ்தலர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார்)

உங்களுக்குள்ளே அது அப்படி இருக்ககூடாது

"நீங்கள் இப்படி செயல்படக்கூடாது"

சிறியவன்

"குறைந்த முக்கியத்துவமுள்ள." தலைவர்கள் பொதுவாக மூத்தவர்களாகவே இருப்பார்கள், அவர்களை "மூப்பர்கள்" என்று அழைப்பார்கள். "சிறியவர்கள்" பொதுவாக தலைமைத் தாங்க மாட்டார்கள்.

ஏனென்றால்

இது 26 ஆம் வசனத்தில் இருகிற இயேசுவின் கட்டளையை 27 ஆம் வசனத்தோடு இணைக்கிறது. யோசனை என்னவென்றால், "மிகவும் முக்கியமானவர் சேவை செய்யட்டும் ஏனென்றால் நான் வேலைக்காரன்" அவர்களுள் மிகவும் முக்கியமானவர் இயேசுவானவர் சேவை அவர்களுக்கு செய்கிறார். அதனால், அவர்களுள் மிகவும் முக்கியமானவர் சேவை செய்யவேண்டும்.

வேலை செய்கிறவன்

"வேலையாள்"

எது பெரியது

"யார் பெரியவன்" அல்லது "யார் மிகவும் முக்கியமானவன்." இயேசு, இருபத்தி நான்காம் வசனத்திலுள்ள அப்போஸ்தலர்களுடைய பெரியவன் யார் என்ற கேள்விக்கு இந்த பதில் எதிர்பாரா கேள்வியைக் கேட்டார். இந்த பதில் எதிர்பாராக் கேள்வி, "யார் பெரியவன் என்பதை நீங்கள் நினைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

மேஜையில் அமர்ந்திருப்பவனே

இதை, "உணவு அருந்திக்கொண்டிருப்பவனே" என்று மொழிபெயர்க்கலாம்.

ஊழியம் செய்கிறவன்

"உணவை பரிமாறுகிறவன்" அல்லது "அமர்ந்திருப்பவனுக்கு உணவைப் பரிமாறுகிறவன்." இது வேலைக்காரனைக் குறிக்கிறது.

மேஜையில் அமர்ந்திருப்பான் இல்லையா?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. புகுத்தப்பட்ட பதில் என்னவெனில், "வேலைக்காரனைவிட மேஜையில் அமர்ந்திருப்பவன் அதிக முக்கியமானவன் தான்!" என்பதாகும்.

ஆனாலும் நான் உங்களிளுக்குள் நான் ஒரு வேலைக்காரனைப் போல இருக்கிறேன்.

"ஆயினும்" என்கிற வார்த்தை இங்கு இருக்கிறதன் காரணம் என்னவெனில், மக்கள் இயேசு எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறதற்கும் அவர் உண்மையில் இருக்கும் நிலைக்கும் வித்தியாசங்கள் உண்டு என்பதாலேயே. இதை, " ஆயினும் நான் உங்களுக்கு சேவை செய்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:28-30

(இயேசு அப்போஸ்தலர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார்)

என்னுடைய சோதனைகளில் என்னோடிருக்கத் தொடர்ந்து

"என்னுடையப் பாடுகளில் என்னோடிருந்து"

நானும் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுக்கிறேன் ஏனென்றால் என் தந்தை எனக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுத்து இருக்கிறார்,

சில மொழிகளில் இந்த வரிசையை மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கிறது. "என் தந்தை எனக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறது போல நானும் உங்களுக்கு கொடுக்கிறேன்."

நான் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுக்கிறேன்

"தேவனுடைய ராஜ்யத்தில் உங்களை ஆளுகிறவர்களாக மாற்றுவேன்" (UDB) அல்லது "ராஜ்யத்தில் ஆளும்படி நான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்" அல்லது "நான் உங்களை அரசர்கள் ஆக்குவேன்"

என் தந்தை எனக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுத்தது போல

"என் தந்தை அவருடைய ராஜ்யத்தில் ஒரு அரசனைப் போல ஆளும்படி எனக்கு அதிகாரம் கொடுத்தது போல"

நீங்கள் சிங்காசனத்தில் உட்காருவீர்கள்

"சிங்காசனங்களில் உட்காருங்கள்" என்பது "அரசனுக்கு உரிய வேலையை செய்யுங்கள்" என்பதின் உருவகம் ஆகும். இதன் அர்த்தம், "நீங்கள் அரசர்களைப் போல ஆளுவீர்கள்" அல்லது "நீங்கள் அரசர்களுடைய வேலைகளை செய்வீர்கள்." என்பதாகும்.

சிங்காசனங்கள்

இதை, "அரசர்களுடைய நாற்காலி" அல்லது "அரசர்களுக்காக உண்டாக்கப்பட்ட நாற்காலிக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:31-32

(இயேசு நேரிடையாக சீமோனிடம் பேசுகிறார்)

சீமான், சீமோன்

இயேசு அவனுக்கு சொல்லுவது மிகவும் முக்கியமானக் காரியம் என்று காண்பிக்கவே அவனுடைய பெயரை இரண்டு முறைக் கூப்பிட்டார்.

உங்களை அவன் புடைக்கும்படிக்கு

"உங்களை" என்கிற வார்த்தை எல்லா அப்போஸ்தலர்களையும் குறிக்கிறது. "உங்கள்" என்பதைக் குறிக்க அநேக வார்த்தைகள் உள்ள மொழிகள், பன்மை வார்த்தையை இங்கு பயன்படுத்தவேண்டும்.

கோதுமையைப் புடைக்கிறது போல உங்களை

இந்த உருவகத்தின் அர்த்தம் என்னவென்றால், "ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை சோதித்து அறிந்துகொள்ள" என்பதாகும். UDB இல் உள்ளதன் அர்த்தத்தைப் போல இதை தெளிவாக்கலாம்: "உங்களை சோத்தித்து" இதை உவமையாக மொழிபெயர்க்கலாம்: "முறத்தில் ஒருவன் தானியத்தை புடைப்பதைப் போல" (UDB)

ஆனால் நான் உனக்காக ஜெபித்துள்ளேன்

"உனக்காக" என்கிற வார்த்தை பிரத்தியேகமாக சீமோனைக் குறிக்கிறது. "உங்கள்" என்பதைக் குறிக்க அநேக வார்த்தைகள் உள்ள மொழிகள், பன்மை வார்த்தையை இங்கு பயன்படுத்தவேண்டும்.

உங்கள் விசுவாசம் வீழ்ந்து விடாதபடிக்கு

இதை சாதகமாக, "நீங்கள் தொடர்ந்து விசுவாசத்தில் தொடர" அல்லது "நீங்கள் என்னை நம்புவதில் தொடரும்படி" என்று வெளிப்படுத்தலாம்.

உங்கள் சகோதரர்கள்

இது மற்ற சீடர்களைக் குறிக்கிறது. இதை, "உங்கள் சக விசுவாசிகள்" அல்லது "விசுவாசத்தில் உங்கள் சகோதரர்கள்" அல்லது "மற்ற சீடர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:33-34

(சாத்தான் பேதுருவை சோதிப்பான் என்னும் இயேசுவின் வாக்கியத்திற்கு சீமோன் பேதுரு எதிர்வினையாற்றுகிறான்)

சேவல் கூவாது

இங்கு, சேவல் கரையாது என்பது அந்த நாளின் நேரத்தைக் குறிக்கும் ஆகுபெயராகும். சூரியன் காலையில் தோன்றும் முன்னர் சேவல்கள் அநேகமாகக் கரையும்.

சேவல்கள் கூவாது...நீ மறுதலிக்கும் முன்பு...

இதை ஆக்கப்பூர்வமாக சொல்லலாம்: "சேவல் கூவாது...நீ மறுதலித்தப் பிறகு." இந்த வசனத்தின் பகுதிகளின் வரிசையும் மாற்றப்படலாம்: "என்னை தெரியாது என்று சேவல் இந்த நாளில் கூவும் முன்பு நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்"

இந்த நாள்

யூத நாளானது சூரியன் மறையும் போது துவங்கும். இயேசு சூரியன் மறைந்தப் பிறகு பேசுகிறார். சேவல் அதிகாலையில் தான் கூவும். காலை என்பது "இந்த நாளின்" ஒரு பகுதி. இதை, "இன்று ராத்திரி" அல்லது "காலையில்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:35-36

நான் உங்களை அனுப்பும்போது

இயேசு தனது அப்போஸ்தலர்களோடு பேசிக்கொண்டிருந்தார். மொழிகள் வித்தியாச வித்தியாசமான "உங்களை" வடிவங்கள் இருப்பதால், பன்மை நிலையைப் பயன்படுத்தவும்.

பணப்பை

பணப்பை என்பது பணத்தைப் போட்டு வைக்க உதவும் ஒரு பை. இங்கு அது "பணத்தைக்" குறிக்க உதவுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் பை

இது, "பிரயாணம் பண்ணுகிறவனின் பை" அல்லது அதிலிருக்கும் "உணவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

உங்களுக்கு ஏதாவது குறைவு இருக்கிறதா?

"உங்களுக்கு தேவையானது ஏதாவது உங்களுக்கு வேண்டுமா?" இது, அவர்கள் சென்ற பொழுது அப்படி நன்றாகக் அந்த மக்கள் கவனித்தார்கள் என்று அப்போஸ்தலர்கள் நினைவுகூரும்படிக்கு உதவி செய்யும் ஒரு பதில் எதிர்பாரா கேள்வி.

ஒன்றுமில்லை

"நாங்கள் ஒன்றிலும் குறைவுபடவில்லை"

வஸ்திரம்

"அங்கி" அல்லது "வெளியே அணியப்படும் ஆடை"

பட்டயம் இல்லாதவன் தனது வஸ்திரத்தை விற்கவேண்டும்

இயேசு பட்டயம் இல்லாத ஒரு தனிப்பட்ட மனிதனைக் குறிக்கவில்லை. இதை, "பட்டயம் இல்லாமல் யாராவது இருந்தால், அவன் தனது வஸ்திரத்தை விற்கவேண்டும்."

Luke 22:37-38

என்னைக் குறித்து எழுதப்பட்டவைகள்

"வேதத்தில் என்னைக் குறித்து தீர்க்கதரிசி எழுதினது எதுவோ" (UDB)

அது நிறைவேற்றப்படவேண்டும்

தேவன் வேதத்தில் எழுதின எல்லாவற்றையும் நடந்தேற செய்வார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்திருந்தனர். முழு கூற்றையும் வார்த்தைகளை மாற்றி அமைத்து இதை வெளிப்படையாக்கலாம்: "தேவன் வேதத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்."

அவர் அக்கிரமக்காரரோடு உள்ளவராக எண்ணப்பட்டார்

"மக்கள் அவரை அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணினார்கள்." சில மொழிகளில் இதை வெளிப்படையாக சொல்லவேண்டியது அவசியமாகிறது: "இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்."

அக்கிரமக்காரர்

"சட்டத்தை மீறுபவர்கள்" அல்லது "குற்றவாளிகள்"

என்னைக் குறித்து முன் அறிவித்தக் காரியங்கள் நிறைவேற்றப்படுகிறது

இது கிரேக்கத்தில் தெளிவாக இல்லை. மற்ற சாத்தியமான அர்த்தம் என்னவென்றால், "என்னுடைய வாழ்வு முடிவுக்கு வருகிறது."

அவர்கள் சொன்னார்கள்

இது இயேசுவின் அப்போஸ்தலர்களுள் குறைந்தது இருவரையாவது குறிக்கிறது.

அது போதும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "போதுமான அளவு வாள்கள்" அல்லது 2. "இதைக் குறித்து போதுமான அளவு பேச்சு." இயேசு அவர்கள் வாள்கள் வாங்கவேண்டும் என்று சொன்னபொழுது, அவர் முக்கியமாக அவர்கள் சந்திக்கப்போகும் ஆபத்துகளைக் குறித்துத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்கள் உண்மையில் வாள்கள் வாங்கி சண்டையிடவேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்திருக்காது.

Luke 22:39-40

இரவு உணவுக்குப் பிறகு

இது பஸ்கா விருந்து முடிவடைந்ததைக் குறிக்கிறது.

சோதனைக்குட்படாதபடிக்கு

இதை, "நீங்கள் சோதிக்கப்படாமல்" அல்லது "நீங்கள் சோதிக்கப்படும்போது பாவம் செய்யாமல்" அல்லது "நீங்கள் பாவம் செய்யும்படி உக்கிரமாக சோதிக்கப்படாதபடிக்கு" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:41-42

ஒரு கல் வீசும் தூரம்

இது, "ஒருவன் ஒரு கல்லை வீசும் தூரத்தைக் குறித்த" அர்த்தத்தைக் கூறும் ஆகுபெயராகும். இதை, "குறுகிற தூரம்" அல்லது ஏறக்குறைய "30 மீட்டர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு நீங்கும்படி செய்யும்

இது ஒரு உருவகம் ஆகும். அவர் குடிக்கப்போகும் ஒரு குப்பியைப்போல தான் படப்போகும் பாடுகளை இயேசு குறிப்பிடுகிறார். இதை, "இந்த பாடுகளின் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துப்போடும்" அல்லது "இந்த பாடுகளை என்னை விட்டு எடுத்துப்போடும்"அல்லது "இப்படிப் பாடுபடுவதிலிருந்து என்னை காப்பாற்றும்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனாலும், என்னுடைய சித்தமல்ல, ஆனால் உம்முடைய சித்தம் ஆகட்டும்

இதை, "எப்படியாயினும், என்னுடைய சித்தத்தை விட உம்முடைய சித்தம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:43-44

அவருக்கு தோன்றி

"இயேசுவுக்கு தோன்றி"

அவரை பலப்படுத்தி

"அவரை உற்சாகப்படுத்தி"

வேதனையில் இருந்துகொண்டு, அவர் ஜெபித்தார்

"அவர் வேதனையில் இருந்தார்; அவர் ஜெபித்தார்"

அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத்தின் பெருந்துளிகளாக நிலத்தில் விழுந்தது.

அவருடைய தோலில் இருந்து இரத்தத்தின் பெருந்துளிகளைப் போல அவருடைய வியர்வை மாறி நிலத்தில் விழுந்தது.

Luke 22:45-46

அவர் தனது ஜெபத்திலிருந்து எழும்பினபோது

இதை, "ஜெபத்தை முடித்து இயேசு எழும்பின போது" அல்லது "ஜெபித்துவிட்டு, இயேசு எழுந்து" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்களுடைய துக்கத்தில் அவர்கள் தூங்கியிருந்ததைக் கண்டு

"அவர்கள் மிகவும் துக்கமாய் இருந்ததினால் அவர்கள் உறங்கி இருந்ததைக் கண்டு"

ஏன் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. சாத்தியமான அர்த்தங்கள் 1. "நீங்கள் இப்பொழுது உறங்கிக்கொண்டிருக்கிரீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது, அல்லது 2. "நீங்கள் இப்பொழுது தூங்கக் கூடாது!"

சோதனைக்குட்படாமல்

"சோதிக்கப்படாமல்" அல்லது "சோதிக்கப்படும்போது பாவம்செய்து"

Luke 22:47-48

இதோ, கூட்டம் வருகிறது

"இதோ' என்கிற வார்த்தை கதையில் ஒரு புதிய குழுவிற்கு நம்மை அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதேனும் ஒரு வழி இருக்கலாம். ஆங்கிலம், "அங்கு ஒரு கூட்ட மக்கள் தோன்றினர்" என்பதைப் பயன்படுத்துகிறது.

அவர்களை நடத்தி

இது, "இயேசுவிடம் நடத்தி" என்று மொழிபெயர்க்கப்படலாம். யூதாஸ் மக்களுக்கு இயேசு எங்கிருக்கிறார் என்பதைக் காட்டுகிறான். அவன், கூட்டத்தார் என்ன செய்ய வேண்டும் என்று அவன் சொல்லவில்லை.

அவரை முத்தமிட

இதை, "அவரை ஒரு முத்தத்தால் வாழ்த்தி" அல்லது "அவரை முத்தம் செய்வதின் மூலம் அவரை வாழ்த்த" என்று மொழிபெயர்க்கலாம். மனிதர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களான மற்ற மனிதர்களை வாழ்த்தும்போது அவர்கள் ஒரு கன்னத்திலோ அல்லது இரண்டு கன்னத்திலோ முத்தமிடுவார்கள். ஒரு ஆண் மற்ற ஆணை முத்தமிடுவார் என்பது உங்கள் வாசகர்களுக்கு கூச்சமாக இருக்குமானால், அதை அதிக பொதுவான வழியில், "ஒரு அன்பான வரவேற்ப்பு அவருக்குக் கொடுக்க" என்று மொழிபெயர்க்கலாம்.

மனுஷக் குமாரன்

இயேசு தன்னைக் குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

ஒரு முத்தத்தால் மனுஷக் குமாரனைக் காட்டிக்கொடுக்கிறாயா

இயேசு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை யூதாசைக் கடிந்துகொள்ளப் பயன்படுத்துகிறார். "மனிதக் குமாரனைக் காட்டிக்கொடுக்க முத்தத்தையாப் பயன்படுத்துகிறாய்!" யூதாஸ் கை செய்கையையோ அல்லது "அந்தப் பெரிய கல் அருகில் இருப்பவர்தான்" போன்ற வார்த்தைகளையோ பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அன்பின் அடையாளமான முத்தத்தைப் பயன்படுத்தி பொய்யாய் நடித்தான்.

Luke 22:49-51

இயேசுவை சுற்றி இருப்பவர்கள்

இது இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது.

என்ன நடக்கிறது

இதை, "ஆசாரியர்களும், சேவகர்களும் இயேசுவைக் கைது செய்ய வந்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

பிரதான ஆசாரியனின் வேலையாளை அடித்தான்

"பிரதான ஆசாரியனின் வேலையாளை வாளால் அடித்தான்"

அவனுடையக் காதைத் தொட்டார்

இதை, அவனுடைய காத்து வெட்டப்பட்டிருந்த இடத்தை அவர் தொட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:52-53

வாள்களோடும் தடிகளோடும் ஒரு திருடனைப் பிடிக்க வருகிறது போல வந்திருக்கிறீர்கள்?

என்னைத் திருடன் என்று நினைத்தா வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்கள்?" இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "நான் திருடன் இல்லை என்று உங்களுக்குத் தெரியும்; ஆயினும் வாள்களோடும் தடிகளோடும் என்னிடம் வந்திருக்கிறீர்கள்."

நான் உங்களோடு தினமும் இருந்தேன்

"நான் உங்கள் மத்தியில் எல்லா நாளும் இருந்தேன்"

ஆலயத்தினுள்

இதை, "ஆலயப் பிரகாரங்களில்" அல்லது "ஆலயத்தில்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்கள் கைகளை என்மீது வைத்து

இந்த மரபுப்பெயர், "என்னை கைது செய்து" என்று பொருள்படும்.

அந்தகாரத்தின் இருள்

இதை, "இருளின் அதிகாரத்தின் நேரம்" அல்லது "தான் விரும்புகிற தீமையை சாத்தான் செய்யும் நேரம்" (UDB) என்று மொழிபெயர்க்கலாம். இருளின் அதிகாரம்" என்பது தீய ஆளுநராகிய சாத்தானைக் குறிக்கும் உருவகம் ஆகும்.

Luke 22:54-55

அவரை வேறே பக்கம் நடத்திக்கொண்டுபோய்

"இயேசுவை தோட்டத்திலிருந்து கொண்டுபோய் அங்கு அவரைக் கைது செய்தனர்"

அவர்கள் நெருப்பை தூண்டிவிட்டனர்

இதை, "அவர்களில் சிலர் நெருப்பைத் தூண்டிவிட்டனர்" என்று மொழிபெயர்க்கலாம். அவர்களைக் கதகதப்பாக வைக்கும்படி.

முற்றத்தின் நடுவில்

இது பிரதான ஆசாரியனுடைய வீட்டின் முற்றம். அதற்கு சுற்றிலும் சுவர் இருந்தது ஆனால் கூரை இல்லை.

Luke 22:56-58

அவனை நேராகப் பார்த்து சொன்னான்

"பேதுருவை நேராகப்பார்த்துவிட்டு முற்றத்தில் இருந்த மக்களுக்கு சொன்னான்"

இந்த மனிதனும் அவரோடிருந்தவன்

பேதுரு இயேசுவோடு இருந்தான் என்று அந்தப் பெண் மக்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பேதுருவின் பெயர் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் பேதுரு அதை மறுத்தான்

"ஆனால் பேதுரு அது உண்மை இல்லை என்று சொன்னான்."

பெண்ணே, நான் அவரை அறியேன்

பேதுருவுக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியவில்லை. "பெண்ணே" என்று அழைப்பதின் மூலம் அவன் அவளை அவமானப்படுத்தவில்லை. மக்கள் அவளை அவமானப்படுத்துகிறான் என்று நினைத்துக்கொள்ளுவார்கள் என்றால், கலாச்சார ரீதியில் ஒரு மனிதன் எவ்வாறு ஒரு பெண்ணை அழைப்பான் என்று சொல்லி, அதுபோல இங்கு மொழிபெயர்க்கலாம். இல்லையென்றால், அந்த வார்த்தையையே விட்டுவிடவும் செய்யலாம்.

மனிதா, நான் அல்ல

"பெண்ணைக்" குறித்து மேலே சொல்லப்பட்ட குறிப்பைப் பார்க்கவும்.

Luke 22:59-60

உறுதியாக சொன்னான்

"உறுதிப்படுத்தி சொன்னான்" அல்லது "சத்தமாக சொன்னான்" (UDB)

மெய்யாகவே இந்த மனிதன்

"இந்த மனிதன்" பேதுருவைக் குறிக்கிறது. பேசுகிறவனுக்கு பேதுருவின் பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம்.

அவன் ஒரு கலிலேயன்

மத்தேயு 26:73, பேதுரு பேசும் முறையை வைத்து அவன் கலிலேயன் என்று மக்களால் சொல்ல முடியும் என்று சொல்லுகிறது.

நீ சொல்லுவது என்னவென்று எனக்கு தெரியாது

இந்த மரபுப்பெயர், "நீ சொன்னவை உண்மையே அல்ல" அல்லது "நீங்கள் சொன்னது முழுவதும் பொய்" என்று தீர்க்கமாக சொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அவன் பேசிக்கொண்டிருந்தபொழுது

"பேதுரு பேசிக்கொண்டிருந்த பொழுது"

Luke 22:61-62

கர்த்தருடைய வார்த்தை

"இயேசுவின் வார்த்தைகள்" அல்லது "இயேசு சொன்னவைகள் எவைகளோ"

இன்று

சூரியன் உதயமாகும்போது அல்லது அதற்கு முன்னமே என்ன நடக்கும் என்று இயேசு முந்தய சாயங்காலமே சொல்லி இருந்தார். இதை, "இன்று ராத்திரி" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 22:63-65

அவருடையக் கண்களைக் கட்டியப் பிறகு

"அவர் பார்க்கமுடியாதபடி அவருடையக் கண்களைக் கட்டிய பிறகு"

தீர்க்கதரிசனம் சொல்லு! யார் உன்னை அடித்தது?

இயேசு தீர்க்கதரிசி என்று காவலர்கள் நம்பவில்லை. உண்மையான தீர்க்கதரிசிக்கு யார் அடித்தார்கள் என்று தெரியும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் வெறுமனே இயேசுவை தீர்க்கதரிசி என்று அழைத்தனர், ஆனால் உண்மையில் அவரை தீர்க்கதரிசி என்று நம்பவில்லை. மறு மொழிபெயர்ப்பு: "நீர் தீர்க்கதரிசி என்று நிருபித்துக்காட்டும். யார் உம்மை அடித்தது என்று சொல்லும்" அல்லது "தீர்க்கதரிசியே, யார் உம்மை அடித்தது?"

தீர்க்கதரிசனம் சொல்!

தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தைகளை சொல்லு!" இயேசு பார்க்கக்கூடாதபடிக்கு அவர் கண்கள் கட்டப்பட்டுள்ளதால், தேவன் அவருக்கு யார் அவரை அடித்தது என்று சொல்லவேண்டும் என்பது தான் உட்புகுத்தப்பட்ட தகவல் ஆகும்.

Luke 22:66-68

அவரை ஆலோசனை சங்கத்துக்கு முன்பதாகக் கொண்டுபோனார்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "மூப்பர்கள் சற்றே இயேசுவை ஆலோசனை சங்கத்திற்கு கொண்டுவந்தார்கள்" 2. "காவலர்கள் இயேசுவை தலைவர்களின் ஆலோசனை சங்கத்திற்கு கொண்டு வந்தார்கள்." சில மொழிகள் அவரை யார் கொண்டுவந்தார்கள் என்று சொல்லுவதைத் தவிர்த்து, "அவர்கள்" என்கிற ஒரு மாற்று பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தி சொல்லி விடுவார்கள்.

சொல்லுகிறது

"மூப்பர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்"

எங்களுக்கு சொல்லும்

"நீர் கிறிஸ்து தான் என்று எங்களுக்கு சொல்லும்"

நான் உங்களுக்கு சொன்னாலும் நீங்கள் நம்பப்போகிறது இல்லை

இது தான் இயேசு சொல்லிய இரண்டு ஆதாரமில்லாமல் அனுமானிக்கப்பட்ட கூற்றுகளில் முதலாவது ஆகும். அவர் தேவ தூஷணம் சொல்லுகிறார் என்று அவர்மீது குற்றம் சாட்ட வகை செய்யாதபடி, இவ்வாறே இயேசு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இது நடைபெறவே இல்லை என்பதைக் காட்ட உங்கள் மொழியில் எதாகிலும் வழி இருக்கும்.

நான் உங்களைக் கேட்டாலும் நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள்

இது தான் இரண்டாவது ஆதாரமில்லாமல் அனுமானிக்கப்பட்ட வாக்கியம்.

நான் உங்களுக்கு சொன்னாலும்...நான் உங்களிடத்தில் கேட்டாலும்

இயேசு பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலும் அது காரியம் இல்லை ஏனென்றால் அவர்கள் சரியாக பதில் சொல்ல மாட்டார்கள் என்று இயேசு சொல்லுகிறார். இந்த இரண்டு கூற்றுகளும் சங்கமானது உண்மையை அறிந்துகொள்ள உண்மையில் முற்படுவதில்லை என்பதை இயேசு அறிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.

Luke 22:69-71

(மூப்பர்களின் சங்கத்தோடு இயேசு பேசுவதைத் தொடர்ந்தார்)

இப்பொழுதிலிருந்து

"இந்த நாளில் இருந்து" அல்லது "இந்த நாள் துவங்கி"

மனுஷக் குமாரன்

இயேசு இந்தக் கூற்றை கிறிஸ்துவைக் குறிக்க பயன்படுத்தினார். அவர் தன்னைக் குறித்து பேசினார் என்பதைப் புகுத்திக் கூறுகிறார். ஆனால் மூப்பர்கள் அதைத் தான் அவர் சொல்லுகிறாரா என்று அறிந்துகொள்ள அவரை கேட்க வேண்டி இருந்தது.

சர்வவல்லமையான தேவனுடைய வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பார்

ஒருவரும் அங்கு அமர்ந்திருக்க முடியாது என்று யூதர்கள் அறிந்திருந்தனர். இது, "தேவனோடு தேவனை இருப்பேன்" என்று சொல்லுவதாக அவர்கள் நினைத்துக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய வல்லமை

"சர்வ வல்லமையுள்ள தேவன்." இங்கு "வல்லமை" என்பது அவருடைய நிகரில்லா அதிகாரத்தைக் குறிக்கிறது.

நீர் தேவனுடையக் குமாரனா?

இயேசு தான் தேவனுடையக் குமாரன் என்று தன்னைக் கூறிக்கொள்வதைவதை அங்கு அவர் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்பதற்காக ஆலோசனை சங்கத்தார் அவரை இந்தக் கேள்வி கேட்டனர். இதை, " நீர் அதை சொன்னபோது, நீர் தேவனுடையக் குமாரன் என்று சொன்னீரா?" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் தான் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்

"ஆம், நீங்கள் சொல்லுகிறபடி தான்" (UDB)

நமக்கு இன்னும் சாட்சி தேவை ஏன்?

இது ஒரு பதில் எதிர்பாரா கேள்வி. "நமக்கு வேறொரு சாட்சி தேவை இல்லை!"

அவருடைய சொந்த வாயிலிருந்து

இந்த மரபுப்பெயர் சரீரத்தின் ஒருப் பகுதியைப் பயன்படுத்தி முழு மனிதனையும் குறிக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், "நேரிடையாக அவரிடமிருந்து" என்பதாகும். அவர் சொல்லுகிறார் என்று அவரைக் குற்றப்படுத்தினக் காரியங்களை அவரே சொல்லுகிறார் என்றும் உண்மையை இது வலியுறுத்துகிறது.

Luke 23

Luke 23:1-2

அவர்களின் கூட்டத்தார் முழுவதும்

"எல்லா யூதத் தலைவர்களும்"

எழுந்து

"நின்று" அல்லது "அவர்களுடையக் கால்களில் நின்று"

பிலாத்துவிற்கு முன்பாக

"பிலாத்துவின் முன்பு." இதை, "பிலாத்துவைப் பார்த்து நின்று" என்று மொழிபெயர்க்கலாம்.

நம்முடைய தேசத்தை கெடுக்கிறார்

"நம்முடைய மக்களிடத்தில் பொய்களை சொல்லி பிரச்சனை ஏற்படுத்துகிறார்" (UDB)

உமக்கு கப்பம் கட்டுவதைத் தடுக்கிறார்

"அவர்களிடம் வரி செலுத்தத் தேவை இல்லை என்கிறார்" (UDB)

Luke 23:3-5

பிலாத்து அவரைக் கேட்டான்

"பிலாத்து இயேசுவைக் கேட்டான்"

நீர் சொன்னபடி தான்

இந்த மரபுப்பெயர் "நீர் சொன்னது என்னவோ அது சரியே." இதை, "நீர் என்னைக் கேட்டபடி தான்" (UDB)

திரள்

"மக்கள் கூட்டம்"

நான் இந்த மனிதனில் ஒரு குற்றத்தையும் காணவில்லை

"நான் இந்த மனிதனை எதிலும் குற்றமுள்ளவனாக காணவில்லை."

தூண்டி

"பிரச்சனை ஏற்படுத்தி"

கலிலேயா துவங்கி இந்த இடம் மட்டும்

"அவர் கலிலேயாவில் பிரச்சனை செய்யத் துவங்கினார் இப்பொழுது இங்கு பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார்.

Luke 23:6-7

இதைக் கேட்டு

"கலிலேயாவில் இயேசு போதிக்கத் துவங்கினார் என்று கேள்விப்பட்டோம்"

இதுவா அல்லது

"இருந்தால்"

மனிதன்

இது இயேசுவைக் குறிக்கிறது.

அவன் அறிந்துகொண்டான்

"பிலாத்து அறிந்துகொண்டான்"

அவர் ஏரோதுவின் அதிகாரத்தின் கீழ் இருந்தார்

ஏரோது தான் கலிலேயாவின் ஆளுநர் என்ற மறைத்து சொல்லப்பட்டத் தகவலை இந்த

சொல்லவில்லை. இதை நீங்கள் வெளிப்படையாக்கலாம்: "இயேசு ஏரோதின் அதிகாரத்தின் கீழ் இருந்தார் ஏனென்றால் ஏரோது கலிலேயாவை ஆண்டு வந்தான்."

அவன் அனுப்பினான்

"பிலாத்து அனுப்பினான்"

அவனே

இது எரோதைக் குறிக்கிறது.

அந்த நாட்களில்

இதை, "பஸ்கா பண்டிகையின் போது" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 23:8-10

அவன் சந்தோஷப்பட்டான்

"ஏரோது மிகவும் சந்தோஷப்பட்டான்"

அவன் இயேசுவைக் காணவேண்டும் என்றிருந்தான்

"ஏரோது இயேசுவைக் காண விரும்பினான்"

அவன் அவரைக் குறித்து கேள்விப்பட்டுள்ளான்

"ஏரோது இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டுள்ளான்"

அவன் நம்பிக்கையாய் இருந்தான்

"ஏரோது நம்பிக்கையாய் இருந்தான்."

அவரால் சில அற்புதங்கள் செய்யப்பட பார்க்கலாம் என்று

இதை செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "அவர் சில அற்புதங்கள் செய்வதைக் காண அவன் விரும்பினான்" (UDB)

அவனுக்கு பதிலொன்றும் சொல்லவில்லை

"பதிலளிக்கவில்லை" (UDB) அல்லது "ஏரோதுக்கு பதில் கொடுக்கவில்லை"

நின்று கொண்டு

"அங்கு நின்றுகொண்டிருந்தனர்"

ஆக்ரோஷமாக அவரைக் குற்றப்படுத்தினார்கள்

"பயங்கரமாக இயேசுவைக் குற்றப்படுத்தி" அல்லது "தீமையாக அவரைக் குற்றப்படுத்தி"

Luke 23:11-12

அவரை அழகாக உடுப்பித்து

மொழிபெயர்ப்பு, இயேசுவை கனப்படுத்தவோ அல்லது அக்கறை எடுத்துக்கொண்டு இதை செய்தது போல இதை காட்டிவிடக்கூடாது. அவர்கள் இயேசுவை நையாண்டி பண்ணவும் அவரை கேலி செய்யவும் இதை செய்தனர்.

அந்த நாளிலே ஏரோதும் பிலாத்தும் நெருங்கிய நண்பர்களானார்கள்

இந்த மறைத்து சொல்லப்பட்ட தகவல் என்னெவென்றால், இயேசுவை விசாரிக்க பிலாத்து அனுமதித்ததை ஏரோது பாராட்டினான். இதை நீங்கள் வெளிப்படையாக சொல்லலாம்: "அந்த நாளிலே ஏரோதும் பிலாத்தும் நெருங்கிய நண்பர்களானார்கள் ஏனென்றால் இயேசுவை பிலாத்து நியாயத்தீர்ப்புக்காய் ஏரோதிடம் அனுப்பினதினாலேயே."

முன்பு

"அந்த நாளுக்கு முன்பு"

Luke 23:13-14

பிரதான ஆசாரியரையும், ஆளுநர்களையும், மக்களையும் ஒன்றாக அழைத்து கூட்டி

"பிரதான ஆசாரியரையும், ஆளுநர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூடி சந்திக்கும்படி அழைத்து"

உங்களுக்கு முன்பாக அவரை நான் விசாரித்துவிட்டேன்

"நான் இயேசுவை உங்கள் முன்பாக விசாரித்து விட்டேன்." இதை, "உங்களை சாட்சியாக வைத்து இயேசுவை நான் விசாரித்துவிட்டேன்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நான் ஒரு தவறையும் காணவில்லை

"நான் இவர் ஒரு குற்றவாளி என்று நான் நினைக்கவில்லை" (UDB)

Luke 23:15-17

இல்லை, ஏரோதும் தான்

"ஏரோதும் அவரை குற்றவாளியாகக் காணவில்லை" (UDB)

ஏனென்றால்

"அதனால்" அல்லது "இதை நாங்கள் அறிவோம் ஏனென்றால்"

அவரைத் திரும்பவும் நம்மிடம் அனுப்பியுள்ளான்

"ஏரோது இயேசுவை நம்மிடம் திரும்ப அனுப்பியுள்ளான்." "நம்மிடம்" என்கிற வார்த்தை # இயேசுவோடு ஏரோதிடம் சென்ற பிரதான ஆசாரியர்களையோ வேதபாரகரையோ, திரள் கூட்ட மக்களையோ குறிக்கவில்லை, மாறாக, பிலாத்தையும் அவனுடைய வீரர்களையும் குறிக்கிறது.

மரணத்துக்கு எதுவான யாதொன்றையும் அவர் செய்ததாக காணவில்லை

இதை செய்வினையில் மொழிபெயர்க்கலாம்: "மரணதண்டனை பெறும் அளவிற்கு அவர் எதையும் செய்யவில்லை."

அதனால், நான் அவரை தண்டிப்பேன்

பிலாத்து இயேசுவிடம் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றால் அவரை தண்டிக்காமல் அவன் விடுவித்திருக்கவேண்டும். இந்த வாக்கியத்தை மொழிபெயர்ப்பில் சரியாக பொருத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லை. இயேசு குற்றமற்றவர் என்று பிலாத்து அவரைக் குறித்து அறிந்திருந்தும், மக்கள் கூட்டத்திற்கு பயந்து, இயேசுவை தண்டித்தான்.

இப்பொழுது

"பிலாத்து இதை சொன்னான் ஏனென்றால்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் ஒரு கைதியை விடுதலை செய்ய கடமைப் பட்டுள்ளான்

பிலாத்து அரசிய முறைமையின்படி இதை செய்ய வேண்டியதாய் இருந்தது. மறைத்து சொல்லப்பட்ட தகவலை வெளிப்படையாக்கலாம்: "முறைமையின்படி ஒரு கைதியை அவர்களுக்காக விடுதலை செய்யும்படி அவன் கடமைப் பட்டுள்ளான்."

Luke 23:18-19

அவர்கள் அனைவரும் சேர்ந்து கத்தினர்

"கூட்டத்திலிருந்து எல்லா மக்களும் சேர்ந்து கத்தினர்"

இந்த மனிதனைத் தீர்த்துக்கட்டும்

"இந்த மனிதனை புறம்பாக்கும்!" இது சொன்னதின் மூலம், கூட்டத்தார்: "இந்த மனிதனை வெளியே எடுத்துக்கொண்டுபோய் கொலை செய்யும்" என்று கூறினார்.

ஏனென்றால்

"இந்த ஈடுபாடு காரணமாக" அல்லது "இந்த குற்றத்தால்"

ஒரு குறிப்பிட்ட கலகம்

"நகரத்தின் மக்களால் ரோம அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை தூண்டி விட முயற்சித்து" (UDB)

Luke 23:20-22

அவர்களைப் பார்த்து திரும்பவும் பேசி

"அவர்களிடத்தில் திரும்பவும் பேசி" அல்லது "கூட்டத்தில் அறிந்த மக்களிடம் திரும்பவும் பேசி"

இயேசுவை விடுதலை செய்ய விரும்பி

"ஏனென்றால் அவன் இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான்"

அவன் அவர்களிடம் மூன்றாவது முறையும் சொன்னான்

"பிலாத்து கூட்டாத்தாரிடம் மூன்றாவது முறையாக மறுபடியும் சொன்னான்"

Luke 23:23-25

அவர்கள் மிகவும் உறுதியாயிருந்தனர்

"கூட்டத்தார் கேட்டுக்கொண்டே இருந்தனர்"

உரத்த சத்தத்தோடு

"கத்திக்கொண்டு"

அவரை சிலுவையில் அறியவேண்டும் என்று

"இயேசுவை சிலுவையில் அறையும்படி"

அவர்களுடைய சத்தங்கள்

"கூட்டாத்தாரால் கத்தப்பட்ட வார்த்தைகள்"

அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற

"கூட்டத்தார் கேட்டுக்கொண்டதை செய்ய" (UDB)

அவர்கள் கேட்டுக்கொண்டவனை அவன் விடுதலை செய்தான்

"பிலாத்து மக்கள் விடுதலை செய்யும்படிக் கேட்டுக்கொண்ட பரபாசை விடுதலை செய்தான்"

அவர்களுடைய விருப்பத்திற்கு இயேசுவை அவன் ஒப்புக்கொடுத்தான்

"அவர்கள் இயேசுவுக்கு என்ன செய்ய நினைத்தார்களோ அதை செய்யும்படி அவர்களை அவன் அனுமதித்தான்" அல்லது "பிலாத்து இயேசுவை கூட்டாத்தாரிடம் கொடுத்து அவர்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினார்களோ அதை செய்துகொள்ள அனுமதியும் அளித்தான்."

Luke 23:26

அவரை அவர்கள் நடத்திக்கொண்டு சென்ற பொழுது

"வீரர்கள் இயேசுவை பிலாத்து இருந்த இடத்திலிருந்து கொண்டு சென்ற பொழுது"

சிரேனே ஊரானாகிய சீமோனைப் பிடித்து

ரோம வீரர்கள் அவர்களுடைய சுமைகளை சுமக்க மக்களைக் கட்டாயப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. சீமோனைக் கைது செய்தது போலவோ அல்லது அவன் ஏதோ தவறு செய்தது போலவும் இதை மொழிபெயர்த்துவிட வேண்டாம்.

ஒரு

"பெயரிடப்பட்ட ஒரு மனிதன்"

கிராமத்திலிருந்து வருகிற

"கிராமப்புறத்திலிருந்து எருசலேமுக்குள் வந்து கொண்டிருந்தான்" (UDB)

அவன் மீது சிலுவையை வைத்தார்கள்

"அவனுடைய தோளின் மீது சிலுவையை வைத்தனர்"

Luke 23:27-28

அவருக்காக துக்கித்து

"இயேசுவுக்காக துக்கித்து"

அவரை பின்தொடர்ந்து

"இயேசுவைப் பின்தொடர்ந்து"

எருசலேமின் மகள்களே

"எருசலேமில் இருந்த வந்த மகள்களே"

எனக்காக அழுகிறீர்கள்

"என்னுடைய சூழ்நிலைக்காக அழுகிறீர்கள்"

ஆனால் உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் அழுங்கள்

"பதிலாக, உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்து அழுங்கள்" (UDB)

Luke 23:29-31

அதில் அவர்கள் சொல்லுவார்கள்

"மக்கள் சொல்லும் பொழுது"

மலட்டு

"குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாத பெண்கள்"

பின்பு

"அந்த நேரத்தில்"

மலைக்கு

"மலைக்கு என்று அவர்கள் சொல்லுவார்கள்"

பச்சையான மரத்திற்கு அவர்கள் இப்படி செய்வார்கள் என்றால், அது காய்ந்த பிறகு என்ன நடக்கும்?

இது பதில் எதிர்பாராக் கேள்வி. இது ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "மரம் பச்சையாக இருக்கும்போது அவர்கள் செய்கிறதை நீங்கள் பார்க்கிறீர்கள், மரம் காய்ந்த பிறகு அவர்கள் தீமையானக் காரியங்களை செய்வார்கள் என்பதைக் குறித்து நீங்கள் தீர்க்கமாய் அறிந்து கொள்ளலாம்." அர்த்தம் என்னவென்றால், "நல்ல நேரத்திலே அவர்கள் தீயக் காரியங்கள் செய்கிறதை நீங்கள் பார்க்கிறீர்கள், அதனால் நீங்கள் நிச்சயித்துக்கொள்ளலாம், வருங்காலத்தில் கெட்ட நேரங்களில் அவர்கள் இதிலும் கேடானக் காரியங்களை செய்வார்கள் என்று."

மரம் பச்சையாக இருக்கிறது

பச்சையான மரம் நிகழ்காலத்தில் நன்றாக இருக்கும் காரியத்திற்கான உருவகமாகும். உங்கள் மொழியில் இதற்கு ஒத்த உருவகம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.

அது காய்ந்து இருக்கிறது

காய்ந்த மரத்துண்டு வருங்காலத்தில் இருக்கும் கெட்டக் காரியத்திற்கான உருவகமாகும்.

அவர்கள்

இது ஒன்று ரோம வீரர்களைக் குறிக்க வேண்டும் அல்லது யூதத் தலைவர்களையோ அல்லது ஒருவரையும் குறிப்பாக அல்லாமல் பொதுவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

Luke 23:32

மற்ற மனிதர்கள், இரண்டு குற்றவாளிகள்

"குற்றவாளிகளான மற்ற இரண்டு மனிதர்கள்" (UDB)

அவரோடு அவர்களும் கொண்டுசெல்லப்பட்டார்கள்

"இயேசுவோடு அவர்களும் கொண்டுசெல்லப்பட்டார்கள்" அல்லது "வீரர்கள் இயேசுவோடு மற்ற இரண்டு குற்றவாளிகளையும் கொண்டு சென்றனர்."

கொலை செய்யும்படிக்கு

"அவர்களைக் கொல்லும்படி" அல்லது "அவர்களை கொலை செய்ய"

Luke 23:33-34

அவர்கள் வந்த பொழுது

"அவர்கள்" என்கிற வார்த்தை வீரர்களையும், குற்றவாளிகளையும், இயேசுவையும் குறிக்கிறது.

அவரை சிலுவையில் அறைந்தனர்

"வீரர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தனர்."

வலது பக்கத்தில் இருந்தவன்

"இயேசுவின் வலது பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளுள் ஒருவன்"

இடது பக்கத்தில் இருந்த மற்றவன்

"இயேசுவின் இடது பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளுள் மற்றவன்"

அவர்களை மன்னியும்

"அவர்களை" என்கிற வார்த்தை இயேசுவை சிலுவையில் அறைகிறவர்களைக் குறிக்கிறது.

அவர்கள் செய்கிறது இன்னது என்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

"அவர்கள் செய்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால்." வீரர்கள் தாங்கள் தேவக் குமாரனை சிலுவையில் அறைகிறோம் என்பதை அறியாதிருந்தார்கள். இதை, "அவர்கள் தாங்கள் யாருக்கு இதை செய்கிறார்கள் என்பதை அறியாதிருந்தார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் சீட்டு போட்டார்கள்

வீரர்கள் ஒரு விதமான சூதாட்டத்தில் பங்குபெற்றார்கள். இதை, "அவர்கள் சூதாடினார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய அங்கியைப் பங்கிட்டு

"இயேசுவின் துணியின் ஒரு பங்கை ஒவ்வொரு வீரனும் எடுத்து செல்லும்படி முடிவெடுக்க."

Luke 23:35

நின்று

"அங்கு நின்றுகொண்டிருந்தனர்"

அவர்

இது இயேசுவைக் குறிக்கிறது.

அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளட்டும்

"இயேசு தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முடிய வேண்டும்" அல்லது "சிலுவையில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதில் இருந்து தான் யார் என்று சொல்லுகிறதை அவர் நிரூபிக்கிறதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்."

தெரிந்து கொள்ளப்பட்டவர்

இதை, "தேவன் தெரிந்துகொண்டவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 23:36-38

அவர்

"இயேசு"

அவரை நெருங்கி

"இயேசுவுக்கு அருகில் வந்து"

அவருக்கு கசப்பான காடியைக் கொடுத்து

"இயேசுவுக்கு கசப்பான காடியைக் குடிக்கக் கொடுத்து." அனேக வேதாகம மாணவர்கள், வீரர்கள் இயேசுவை கேலி செய்யவே இதை செய்தனர் என்று நம்புகிறார்கள்; அவர் தாகமாய் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தனர், அதனால் அவருடைய உதடுகளின் அருகில் காடியை வைத்துவிட்டு பின் எடுத்துவிட்டனர். அதை அவர் குடிக்க விட வில்லை.

அவருக்கு மேல் ஒரு அடையாளம்

"ஒரு அறிவிப்புப் பலகை இயேசுவுக்கு மேல் தொங்கவிடப்பட்டது; அதில், எழுதியிருந்தது"

Luke 23:39-41

அவரை அவமானப்படுத்தினான்

"குற்றவாளியும் சொன்னான்"

நீர் கிறிஸ்து அல்லவா?

இந்தக் கேள்வி தகவலை சேர்க்க அல்ல ஆனால் இயேசு உண்மையில் கிறிஸ்துவா என்று சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மற்றவன் பதிலளித்தான்

"மற்ற குற்றவாளி பதிலளித்தான்"

அவனைக் கடிந்துகொண்டு சொன்னான்

"அந்த குற்றவாளியைக் கடிந்துகொண்டு சொன்னான்"

நீயும் அதே தண்டனை அனுபவிக்கிறாய்

"நீ இந்த தண்டனைக்குத் தகுதியானவனாய் இருக்கிறாய் (சிலுவை மரணம்)"

நாம் இங்கு இருப்பது நியாயமே

"நிச்சயமாக, நாம் இந்த தண்டனைக்கு தகுதியானவர்கள்"

இந்த மனிதன்

இந்தக் குற்றவாளி இந்த வார்த்தைகளை இயேசுவைக் குறிக்கப் பயன்படுத்துகிறான்.

Luke 23:42-43

மேலும் அவன்

"குற்றவாளி சொன்னான்"

உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது

"ராஜாவாக அரசாளத் துவங்கும்போது" (UDB)

நிச்சயமாக, உனக்குச் சொல்லுகிறேன்

"நிச்சயமாக" என்பது இயேசு சொல்லும் காரியத்திற்கு உறுதியளிக்கிறது. இதை, "நீ அறிந்துகொள்ளும்படி நான் விரும்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

பரதீசு

நீதிமான்கள் மரித்த பின்னர் போகும் இடம் இது. இதை, "சந்தோஷமான இடம்" அல்லது "நீதிமான்களின் இடம்" அல்லது "மக்கள் நன்றாக வாழும் இடம்" என்று மொழிபெயர்க்கலாம். தேவன் அவனை ஏற்றுக்கொள்ளுவார் என்றும் அவன் தேவனோடு இருப்பான் என்றும் இயேசு அந்த மனிதனுக்கு நிச்சயமாய் சொல்லுகிறார்.

Luke 23:44-45

ஆறாம் மணி வேலையை இருந்தது

"மதியான வேளையை இருந்தபொழுது." இது, அந்த காலத்தில் மணிநேரங்களை எண்ணும்ம் முறை நாள் விடியும் 6 மணி காலை வேலையிலிருந்து துவங்குகிறது என்று காட்டுகிறது.

காரிருள் அந்த இடம் முழுவதும் வந்தது

"முழு தேசமும் இருட்டாகிப்போனது."'

ஒன்பதாம் மணி நேரம் வரை

"மாலை 3 மணி வரை." இது, அந்த காலத்தில் மணிநேரங்களை என்னும் முறை நாள் விடியும் 6 மணி காலை வேலையிலிருந்து துவங்குகிறது என்று காட்டுகிறது.

ஆலயத்தின் திரைச்சீலை

"ஆலயத்தின் உள்ளே இருந்த திரைச்சீலை"

நடுவாகக் கிழிந்தது

"கிழிந்து (அல்லது பிரிந்து) இரண்டு துண்டுகள் ஆனது." இதை, "தேவன் தேவாலயத்தின் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 23:46-47

அபயமிட்டு

"சத்தமிட்டு"

உம்முடைய கரங்களில் என்னுடைய ஆவியை அர்ப்பணிக்கிறேன்

"நான் என்னுடைய ஆவியை உம்முடைய கவனிப்பில் வைக்கிறேன்." இதை, "நான் என்னுடைய ஆவியை, நீர் அதைப் பார்த்துகொள்ளுவீர் என்று அறிந்து கொடுக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

இதைச் சொல்லி

"இயேசு இதை சொன்னப் பிறகு"

அவர் மரித்தார்

"இயேசு மரித்தார்"

என்ன செய்யப்பட்டது

"என்ன நிகழ்ந்தது"

Luke 23:48-49

திரள்

"மக்கள் கூட்டம்"

காட்சி

"நிகழ்வு" அல்லது "என்ன நடக்கிறதென்பதை"

கூடி வந்தவர்கள்

"ஒன்றாகக் கூடினவர்கள்"

செய்யப்பட்டக் காரியங்கள்

"நடந்தக் காரியங்கள்"

திரும்பினர்

"அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பினர்" (UDB)

அவர்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு

இது ஒரு உருவகம். இதன் அர்த்தம் என்னவென்றால், "அவர்கள் மிகவும் கவலையில் இருக்கிறார்கள் என்று காண்பிக்கும்படி அவர்கள் தங்களுடைய மார்பை அடித்துக்கொண்டு சென்றனர்" என்பதாகும்.

அவருக்கு அறிமுகமானவர்கள்

"இயேசுவை அறிந்தவர்கள்" அல்லது "இயேசுவை சந்தித்தவர்கள்"

அவரைப் பின்பற்றினார்கள்

"இயேசுவைப் பின்பற்றினார்கள்"

தூரத்தில்

"இயேசுவுக்கு கொஞ்ச தூரத்தில்"

இந்தக் காரியங்கள்

"நடந்த காரியங்கள்"

Luke 23:50-51

இதோ

"இதோ" என்கிற வார்த்தை கதையில் ஒரு புது மனிதனை அறிமுகம் செய்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம். ஆங்கிலம், "ஒரு மனிதன் இருந்தான் அவன்..."

ஆலோசனை சங்கத்திற்கு உரியவன்

"யூத சங்கத்தின் உறுப்பினன் அவன்"

நல்லவரும் நீதிமானுமான மனிதன்

"அவன் நல்லவரும் நீதிமானுமான மனிதன்"

அவர்களுடைய தீர்மானத்தையும் செயலையும் ஏற்கவில்லை

"யோசேப்பு இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவையும் சங்கத்தின் செயலையும் ஏற்கவில்லை"

யூத பட்டணமான அரிமத்தியாவிலிருந்து

"யோசேப்பு அரிமத்தியா என்று அழைக்கப்பட்ட பட்டணத்திலிருந்து வருகிறான்"

காத்துக்கொண்டிருந்தவன்

"யோசேப்பு காத்துக்கொண்டிருந்தான்"

Luke 23:52-53

இந்த மனிதன்

"யோசேப்பு"

பிலாத்துவை அணுகி, கேட்டான்

"பிலாத்துவிடம் சென்று வினவினான்"

அவன் அதை கீழிறக்கி

"யோசேப்பு இயேசுவின் சரீரத்தை சிலுவையில் இருந்து எடுத்து"

மெல்லிய வஸ்திரத்தில் சுற்றி

சரீரத்தை மெல்லிய வஸ்திரத்தில் சுற்றி"

கல்லறையில் வைத்தான்

"இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தான்" அல்லது "அடக்கம் செய்யும் அறையில் இயேசுவின் சரீரத்தை வைத்தான்"

பாறையில் இருந்து வெட்டப்பட்ட

"மலை முகப்பில் இருந்து யாரோ ஒருவனால் வெட்டப்பட்ட கல்லறை"

ஒருவரும் இதுவரையும் வைக்கப்படாத

"ஒருவரும் ஒருபோதும் ஒரு சரீரத்தையும் அந்தக் கல்லறையில் வைக்கவில்லை" (UDB)

Luke 23:54-56

ஆயத்த நாள்

"சாபத் என்று அழைக்கப்படும் யூத நாளான ஓய்வு நாளுக்கு மக்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்த பொழுது" (UDB)

ஓய்வு நாள் ஆரம்பமாகிக்கொண்டிருந்தது

"சீக்கிரம் பொழுது சாயப்போகிறது ஓய்வு நாள் துவங்கப்போகிறது" (UDB) விடியல் (துவக்கம்) என்பது இங்கு ஒரு நாளின் துவக்கத்திற்கான உருவகம் ஆகும். யூதர்களுக்கு சூரிய அஸ்தமனத்தில் நாள் துவங்குகிறது.

கலிலேயாவிலிருந்து அவரோடு வெளியே வந்தவர்கள்

"கலிலேயா பகுதியிலிருந்து இயேசுவோடு பிராயாணப்பட்டு வந்தவர்கள்"

பின் தொடர்ந்து

"யோசேப்பையும் அவனோடிருந்த மனிதர்களையும் பின்தொடர்ந்து"

கல்லறையைக் கண்டு

"கல்லறையை பெண்கள் கண்டனர்"

அவருடைய சரீரம் எப்படி கிடத்தப்பட்டது

"இயேசுவின் சரீரம் எப்படிக் கல்லறைக்குள் கிடத்தப்பட்டது என்று பெண்கள் கண்டனர்"

அவர்கள் திரும்பினர்

"பெண்கள் தாங்கள் தங்கியிருந்த வீடுகளுக்கு சென்றனர்" (UDB)

கந்தவர்க்கங்களையும் பரிமளத்தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள்

"கந்தவர்க்கங்களையும் பரிமளத்தைலத்தையும் ஆயத்தம் செய்து இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்யும்படி"

அவர்கள் ஓய்ந்திருந்தனர்

"பெண்கள் வேலை செய்யவில்லை"

நியாயப்பிரமாணத்தின்படி

"யூத நியாயப்பிரமாணத்தின்படி" அல்லது "யூத பிரமாணம் வேண்டுவது போல" அல்லது "மோசேயினால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்படி"

Luke 24

Luke 24:1-3

வாரத்தின் முதல் நாளில் அதிகாலையில்

"ஞாயிற்றுக் கிழமையில் விடியலுக்கு முன்பு" (UDB)

வந்து

"வந்து சேர்ந்து." ULB இல் அந்தக் கல்லறையில் ஏற்கனவே இந்த விரிவுரையாளன் அங்கிருந்தது போலவும், பெண்கள் வருகிறதை அங்கிருந்து பார்த்தது போலவும் எழுதப்பட்டிருக்கிறது. UDB இல் பெண்கள் அறியப்படாத ஒரு இடத்திலிருந்து கல்லறைக்கு வந்தது போல எழுதப்பட்டுள்ளது.

கல்லறை

ஒரு மலையின் முகப்பில் இருந்து வெட்டப்பட்ட கல்லறை இது.

கல் உருட்டப்பட்டது

ஒரு பெரிய வெட்டப்பட்ட, வட்ட வடிவமான, கல்லறையின் வாயிலை மூடப் போதுமான அளவுப் பெரிய அளவில் இருந்த கல். அதை உருட்டித்தள்ள ஏழு ஆண்கள் தேவையாய் இருந்தது.

Luke 24:4-5

அது நடந்தது

கதையில் ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறிக்க இந்தப் பதம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதாவது ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்துங்கள்.

பிரகாசமுள்ள வஸ்திரங்கள்

"பிராகாசமான மினுமினுப்பான உடுப்பு"

பயத்தால் நிறைந்து

"பயப்பட்டு"

உயிரோடிருக்கிறவரை ஏன் மரித்தோரிடத்தில் தேடுகிறீர்கள்?

இது பதில் எதிர்பாரா கேள்வியாக்கும். இதை, "மரித்த மக்கள் மத்தியில் உயிரோடிருக்கும் மனிதனை நீங்கள் தேடுகிறீர்கள்" அல்லது "மரித்தவர்களை புதைக்கும் இடத்திற்கு உயிரோடிருக்கிறவரைத் தேடி நீங்கள் வந்திருக்கக்கூடாது" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

ஏன் தேடுகிறீர்கள்

"நீங்கள்" இங்கு பன்மையில் உள்ளது. ஏனென்றால் இது அங்கு வந்திருந்த பெண்களைக் குறிப்பதாலேயே.

Luke 24:6-7

(தூதன் பெண்களோடு பெசிகொண்டிருந்ததைத் தொடர்ந்தான்)

எவ்வாறு என்று நினைவில் கொள்ளுங்கள்

"என்னவென்று நினைவில் கொள்ளுங்கள்"

அவர் உங்களிடத்தில் பேசினார்

ஒரு வாரம் முன்பே இயேசு இதை சொல்லி இருந்தார்.

உங்களுக்கு

"உங்களுக்கு" என்கிற வார்த்தை பன்மையில் உள்ளது. இது பெண்களையும் மற்ற சீடர்களையும் குறிக்கிறது.

மனிதக் குமாரனானவர்

இது எதிர்மறை வாக்கியத்தின் துவக்கம் இது. இதை UDB இல் உள்ளதுபோல மொழிபெயர்க்கலாம்.

மனுஷக் குமாரன் கண்டிப்பாக

"மனிதக் குமாரனுக்கு அது அவசியமாய் இருந்தது." அதி கண்டிப்பாக நடக்கும் என்று தேவன் தீர்மானித்ததினிமித்தம் அது கண்டிப்பாக நடக்கும்.

அவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு

"ஒப்புக்கொடுக்கப்பட்டு" அல்லது "கொடுக்கப்பட்டு." இந்த வாக்கியம் செய்வினை சொல்லாக மொழிபெயர்க்கப்படலாம்: "அவர்கள் மனுஷக் குமாரனாகிய என்னை பாவிகளான மனிதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும்" (UDB) அல்லது "யாராவது மனுஷக் குமாரனைப் பிடிக்க பாவ மனிதர்களை ஏவுவார்கள்."

Luke 24:8-10

அவருடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்து

"இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து"

கல்லறையிலிருந்து திரும்பி

கல்லறைக்கும் அப்போஸ்தலர்களுக்கும் இடையில் இருக்கும் பாதை தான் விரிவுரையாளரின் பார்க்கும் இடம். (ULB) பெண்கள் சென்று விட்டார்கள் என்பதைக் குறிக்கிறது UDB. UDBகு பார்க்கும் இடமானது கல்லறையின் அருகில். இரண்டு வழக்கிலும், பெண்கள் கல்லறையை விட்டு அப்போஸ்தலர்கள் இருந்த இடத்திற்கு சென்றனர்.

மற்ற எல்லாரும்

"பதினோரு அப்போஸ்தலர்களோடு இருந்த மற்ற எல்லா சீடர்களும்."

Luke 24:11-12

அப்போஸ்தலர்களுக்கு இந்த செய்தி வெறும் வெற்றுப் பேச்சாக இருந்தது

"அந்தப் பெண்கள் சொன்னக் காரியங்கள் முட்டாள் தனமானது என்று அப்போஸ்தலர்கள் நினைத்தனர்."

எழுந்து

இது ஒரு எபிரேய மரபுப்பெயர். இது, "கிரியை செய்யத் துவங்கி" என்று அர்த்தப்படுகிறது. பேதுரு தான் செயல்பட முற்பட்டபொழுது அவர் உட்கார்ந்துகொண்டிருந்தாரோ அல்லது நின்றுகொண்டிருந்தாரோ அது முக்கியமில்லை. இதை, "துவங்கினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

கீழே குனிந்து

கல்லறையைப் பார்க்கும்படி "வளைந்து."

மெல்லிய சீலைகள் அவைகளாகவே

"மெல்லிய வஸ்திரங்கள் மட்டும்"

Luke 24:13-14

இதோ

பெண்களையும் பேதுருவையும் வைத்தல்லாமல் மற்றொரு சம்பவத்தின் துவக்கத்தை இது குறிக்கிறது.

அந்த நாளில்

"அதே நாளில்" (UDB)

அறுபது ஸ்தாதியா

"பதினோரு கிலோமீட்டர்கள்." ஒரு ஸ்தாதியா 185 மீட்டர்கள் ஆகும்.

Luke 24:15-16

அது நடந்தது

செயல் எங்கு துவங்குகிறது என்பதைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதாவது வழி இருக்குமானால் அதை இங்குப் பயன்படுத்தவும்.

இயேசு தாமே

"தாமே" என்கிற வார்த்தை இயேசுவையும் அவர் தோன்றினதினால் உண்டான ஆச்சரியத்தையும் கவனிக்கச் செய்கிறது. இதுவரை, பெண்கள் தூதர்களைக் கண்டிருந்தனர், ஆனால் ஒருவரும் இயேசுவைக் கண்டதில்லை.

அவரை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது

"அவர்கள் கண்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது." இதை, "அவரை அறிந்துகொள்வதிலிருந்து அவர்கள் நிறுத்தப்பட்டனர்" அல்லது "ஏதோ ஒன்று அவரை அறிந்துகொள்வதிலிருந்து அவர்களை தடுத்தது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

Luke 24:17-18

நீங்கள் மட்டும் தானா

"நீங்கள்" என்பது இயேசுவைக் குறிக்கிறது. நீங்கள் ஒருமையில் வைக்கவும். இது பதில் எதிர்பாராக் கேள்வியின் துவக்கம். எருசலேமில் நடந்ததை இயேசு அறியாததைக் குறித்து கிலேயோப்பா தனது ஆச்சரியத்தைக் காட்டினான். இதை, "ஒரே மனிதர் நீராகத்தான் இருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Luke 24:19-20

"என்னக் காரியங்கள்?"

"நடந்தது என்ன?" அல்லது "நடந்தக் காரியங்கள் என்ன?"

வார்த்தையிலும் செயலிலும் வல்லவர்

"பெரியக் காரியங்களை செய்யவும் பெரியக் காரியங்களைப் போதிக்கவும்"

தேவனுக்கு முன்பாகவும் மற்ற எல்லா மக்களுக்கு முன்பாகவும் செயலிலும் வார்த்தையிலும் வல்லமையாக

இதன் அர்த்தம், தேவன் இயேசுவை வல்லமையாக இருக்கச் செய்தார். அதனால் மக்கள் அவரை வல்லமையுள்ளவராகக் கண்டனர், என்பதாகும். இதை, "தேவன் அவருக்கு பெரியக் காரியங்களை செய்யவும் போதிக்கவும் வல்லமைக் கொடுத்தார்; மக்களும் ஆச்சரியப்பட்டனர்" என்று மொழிபெயர்க்கலாம்.

மரணத்துக்கு தீர்க்கப்ப்படும்படி அவரை ஒப்புக்கொடுங்கள்

"இயேசுவை கொல்லும்படிக்கு ரோம ஆளுநரிடம் ஒப்புக்கொடுத்தனர்."

Luke 24:21

இஸ்ரவேலை இரட்சிக்கிறவர்

யூதர்கள் ரோமர்களால் ஆளப்பட்டனர். சீடர்கள், ரோம எதிரிகளிடமிருந்து இஸ்ரவேலை விடுவிக்கிற இவர்' என்று நினைத்திருந்தனர்.

இந்தக் காரியங்கள் நடந்ததால்

"அவர் கொல்லப்பட்டதால்" (UDB)

Luke 24:22-24

ஆனாலும் கூட

பெண்களின் இந்த அறிக்கை நல்ல செய்தியாக இருக்கட்டும் என்று ஆண்கள் நினைத்தனர். இயேசுவின் மரணத்திற்கு அடுத்தாற்போல ஒரு தீய சேர்க்கையாக இருக்கக்கூடாது என்றும் நினைத்தனர்.

கல்லறையில் இருந்ததால்

பெண்கள் தான் கல்லறையில் இருந்தனர்

தூதர்களின் தரிசனம்

"ஒரு தரிசனத்தில் தூதர்கள்""

Luke 24:25-27

இயேசு அவர்களுக்கு சொன்னார்

"அவர்கள்" என்கிற இரண்டு அமைப்பு வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

இருதயத்தில் மந்தமாய்

"உங்கள் இருதயங்கள் சோர்வையும் பதில் கொடுக்க தாமதமாயும் இருக்கிறது"

அது அவசியமில்லையா

இது பதில் எதிர்பாராத கேள்வி. இதன் அர்த்தம், "அது அவசியம்" என்பது. இயேசு பாடுகளை அனுபவித்ததின் மூலம் சரியானதை செய்தார். அவ்வாறு அனுபவிக்கவில்லை என்றால் தவறு செய்திருப்பார்.

அவருடைய மகிமையில் பிரவேசிக்கும்படி

இயேசு தம்முடைய அழகையும் மகிமையையும் எல்லாருக்கும் காண்பித்து கனத்தையும் ஆராதனையையும் பெற்றுக்கொள்ளும் நேரத்தை இது குறிக்கிறது.

அவர்களுக்கு இயேசு விளக்கினார்

"அவர்களுக்கு" என்னும் இரண்டு அமைப்பு வார்த்தை முறையை பயன்படுத்தவும்.

Luke 24:28-29

அவர்கள் சமீபமான போது

"அவர்கள் அருகில் வந்த பொழுது" (UDB)

அவர் இன்னும் தூரம் போகிறவர் போல தன்னைக் காண்பித்தார்

அந்த இரண்டு மனிதர்களும் அவருடைய செய்கைகளை வைத்து அவர் வேறு ஒரு இடத்திற்கு போகிறார் என்று அறிந்துகொண்டார்கள். கிராமத்தின் வாசலுக்கு அவர்கள் திரும்பின போதும் அவர் தொடர்ந்து அந்த சாலை வழியே நடந்து கொண்டிருந்தார். இயேசு அவர்களை வார்த்தைகள் மூலமாய் அவர்களை வஞ்சித்தார் என்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை.

அவர்கள் அவரை வருந்தி கேட்டனர்

"அவர்கள் அவரை பலவந்தப்படுத்தினர்." கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், இழுக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக உபயோகப்படுத்தப்பட்ட சரீர பலவந்தம் ஆகும். அது அவர்களுக்கு கொஞ்ச நேரத்தையும், அவரைத் தூண்டிவிட முயற்சியும் தேவைப்பட்டது.

இயேசு உள்ளே சென்றார்

"இயேசு வீட்டுக்குள் நுழைந்தார்"

அவர்களோடு தங்கி இருந்தார்

"அவர்களோடு" என்கிற இரண்டு அமைப்பு முறையைப் பயன்படுத்தவும்.

Luke 24:30-32

அது நடந்தது

கதையில் ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறிக்க இந்தப் பதம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் மொழியில் இதை செய்ய ஏதாவது ஒரு வழி இருக்குமானால், அதை இங்கு பயன்படுத்துங்கள்.

பின்பு அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டது

"பின்பு அவர்கள் புரிந்துகொண்டனர்" அல்லது "பின்பு அவர்கள் உணர்ந்தனர்"

அப்பம்

புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பத்தைக் குறிக்கிறது. பொதுவான உணவை இது குறிக்கவில்லை.

அதை அசீர்வதித்து

இதை, "அதற்காக நன்றி செலுத்தி" அல்லது "தேவனுக்கு நன்றி செலுத்தி" என்று மொழிபெயர்க்கலாம்.

அவர்கள் பார்வையிலிருந்து அவர் மறைந்தார்

இதன் அர்த்தம், அவர் சடிதியில் மறைந்தார் என்பதுதான். இது அவர் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தார் என்று அர்த்தமல்ல.

நம்முடைய இருதயம் எரியவில்லையா...

"நம்முடைய இருதயங்கள் நமக்குள் எரிகிறது" (UDB). இது பதில் எதிர்பாரா கேள்வி.

நமக்குள் நாம்முடைய இருதயங்கள் எரிகிறது

இந்த உருவகம் அவர்கள் யேசுவோடு பேசிக்கொண்டிருந்தபொழுது ஏற்பட்ட தீவிரமான உணர்வுகளை விவரிக்கிறது. இந்தக் கேள்வி, "அவர் எங்களோடு பேசுகையில் நமக்கு தீவிரமான உணர்வுகள் இருந்தது..."

நமக்குள்

அந்த இரண்டு மனிதரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆனால், "நமக்குள்" என்கிற வார்த்தை இந்த வித்தியாசங்களைப் பண்ணும் மொழிகளுக்கு இரட்டு சேர்ப்பு ஆகும்.

அவர் எங்களுக்கு வேதத்தைத் திறந்தபொழுது

"அவர் வேத வாக்கியங்களை எங்களுக்கு விளக்கிச் சொன்னபொழுது." இயேசு ஒரு புஸ்தகத்தையோ அல்லது தோல் சுருளையோ திறக்கவில்லை.

Luke 24:33-35

அவர்கள் எழுந்தனர்

"அவர்கள்" என்ற வார்த்தை இரண்டு மனிதர்களைக் குறிக்கிறது. "அவர்கள்" என்ற இரண்டு அமைப்பு வார்த்தை முறை உள்ள மொழிகள் அதை இங்குப் பயன்படுத்தவும்.

எழுந்து

அல்லது "எழுந்து நின்று"

பதினொன்று

இது இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. யூதாஸ் அவர்களோடு இல்லை.

"நிச்சயமாக, கர்த்தர் உயிர்த்தெழுந்தார்" என்று சொல்லி

பதினோரு அப்போஸ்தலர்களும் அவர்களோடு இருந்தவர்களும் இதை சொன்னார்கள்.

அவர்கள் சொன்னார்கள்

"அந்த இரண்டு மனிதர்கள் சொன்னார்கள்"

வழியில் நடந்த காரியங்கள்

எம்மாவூரின் கிராமத்திற்கு போகிற வழியில் அவர்கள் போய்க்கொண்டிருந்த போது, அவர்களுக்கு இயேசு தென்பட்டத்தை இது குறிக்கிறது.

எப்படி இயேசு அவர்களால் அறியப்பட்டார்

இதை செய்வினை சொல்லாக, "இயேசுவை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்று."

அப்பம் பிட்குதலில்

"இயேசு அப்பத்தை பிட்டபொழுது" அல்லது "இயேசு அப்பத்தைக் கிழித்த பொழுது"

Luke 24:36-37

இயேசு தாமே

"தாமே" என்கிற வார்த்தை இயேசுவின் மீது கவனம் வைக்கிறது. மற்றும் அவர்களுக்கு அவர் தோன்றினதின் ஆச்சரியத்தையும் கவனிக்க செய்கிறது. அநேகர் அவரை, அவர் உயிர்த்தெழுந்த பின்னர் காணவில்லை.

அவர்களுக்கு நடுவில்

இதை, "அவர்கள் எல்லாரும் அவரைப் பார்க்கும் வகையில்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக

"உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" அல்லது "தேவன் உங்களுக்கு சமாதானம் தருவாராக!" (UDB). "உங்களுக்கு" என்ற வார்த்தை பன்மையில் உள்ளது.

அவர்கள் மிரண்டுபோயும் பயத்தால் நிறைந்தும் இருந்தார்கள்

"அவர்கள் நிலைக்குலைந்தும் பயந்தும் இருந்தார்கள்" (UDB)

அவர்கள் ஆவியைப் பார்த்தார்கள் என்று நினைத்து

இயேசு உண்மையில் உயிரோடு இருக்கிறார் என்பதை அறியாதிருந்தார்கள்.

ஒரு ஆவி

ஒரு செத்த மனிதனின் ஆவியை இது குறிக்கிறது.

Luke 24:38-40

நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்

இது அவர்களை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட பதில் எதிர்பாரா கேள்வி. இதை, "பயப்படாதிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஏன் உங்கள் இருதயங்களில் கேள்விகள் எழுகிறது?

உங்கள் இருதயத்தில் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?" இந்த பதில் எதிர்பாரா கேள்வி ஒரு மென்மையான கடிந்துகொள்ளுதல் ஆகும். இதை, "உங்கள் இருதயத்தில் சந்தேகிப்பதை நிறுத்துங்கள்" என்று மொழிபெயர்க்கலாம். அவர் உயிரோடு இருக்கிறதைக் குறித்து அவர்கள் சந்தேகப்படவேண்டாம் என்று இயேசு அவர்களுக்கு சொல்லுகிறார். UDB இல் இருப்பது போல இதை மிகவும் வெளிப்படையாக இருக்கும்படியும் செய்யலாம்.

மாம்சமும் எலும்புகளும்

சரீரத்தைக் குறிக்கும் ஒரு வழி இது.

Luke 24:41-43

நம்பமுடியாத சந்தோஷத்தினால் இன்னமும்

"இது உண்மை என்று இன்னும் நம்பமுடியவில்லை!" அவர்கள் மிகவும் பூரித்து போனார்கள், ஆனால் அதே நேரம், இது நடந்து விட்டது என்பதை நம்புவதும் அவர்களுக்குக் கடினமாக இருந்தது.

ஆச்சரியப்பட்டார்கள்

"அவர்கள் அதிசயித்துப்போனார்கள்." (UDB) அல்லது "இது எப்படி நடந்தது என்று ஆச்சரியப்பட்டார்கள்"

அவர்களுக்கு முன்பு

"அவர்களுக்கு முன்பதாக" அல்லது "அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த பொழுது" (UDB)

Luke 24:44

நான் உங்களோடு இருந்தபொழுது

"முன்பு நான் உங்களோடு இருந்த பொழுது"

மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசனத்திலும், சங்கீதங்களிலும்

இதை செய்வினை சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "மோசேயும், தீர்க்கதரிசிகளும், சங்கீதம் எழுதினவர்களும் எழுதின எல்லாம்."

எல்லாம்....நிறைவேற்றப்படவேண்டும்

"தேவன் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்."

எழுதப்பட்டவைகள் எல்லாம்

"என்னைக் குறித்து எழுதப்பட்டவைகள் எல்லாம்."

Luke 24:45-47

அவர் அவர்களது மனதைத் திறந்தார்

"அவர்கள் புரிந்துகொள்ளும்படி அவர் உதவினார்" (UDB)

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது

"அன்றொரு நாள் இதை தான் மக்கள் எழுதியிருந்தனர்"

மனந்திரும்புதலும் பாவங்களிலிருந்து மன்னிப்பும் பிரசங்கிக்கப்படவேண்டும்

இதை செய்வினை சொற்களோடு மொழிபெயர்க்கலாம்: "மேசியாவைப் பின்பற்றுபவர்கள் மக்கள் மனந்திரும்பவேண்டும் என்றும் தேவன் தங்கள் பாவங்களை மன்னிக்கும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பிரசங்கிக்க வேண்டும்."

மூன்றாம் நாளில்

"இரண்டு இராத்திரிகள் கழித்து"

எல்லா நாட்டவரும்

"எல்லா ஜாதியர்களும்" அல்லது "எல்லா மக்கள் கூட்டமும்"

Luke 24:48-49

நீங்கள் சாட்சிகள்

"என்னைக் குறித்துக் கண்டவைகள் உண்மை என்று நீங்கள் மற்றவர்களிடம் சொல்லவேண்டும்." சீடர்கள் இயேசுவின் வாழ்க்கையையும், மரணத்தையும், உயிர்த்தே ழுதலையும் அறிந்திருப்பதால், அவர்கள் தான் மற்ற மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதைக் குறித்து சொல்ல முடியும்.

என்னுடைய தகப்பனுடைய வாக்குத்தத்தத்தை உங்கள் மேல் நான் அனுப்புகிறேன்

"என் தகப்பன் எனக்கு வாக்கு பண்ணினதை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்."

வல்லமையினால் உடுத்துவிக்கப்பட்டு

"அதிகாரப்படுத்தப்பட்டு" அல்லது "வல்லமையைப் பெற்றுக்கொண்டு." ஒரு மனிதனை உடை எப்படி மூடுகிறதோ அதுபோல தேவனுடைய வல்லமை அவர்களை மூடும்.

உன்னதத்திலிருந்து

"மேலே இருந்து" அல்லது "தேவனிடத்திலிருந்து"

Luke 24:50-51

அது நடந்தது

"அது வந்தது"

அவர் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபொழுது

"அவர்களுக்கு நன்மை செய்யும்படி தேவனை இயேசு கேட்டுக்கொண்டிருந்த பொழுது"

தூக்கிச்செல்லப்பட்டு

யார் இயேசுவை தூக்கி சென்றார்கள் என்பதை லூக்கா தெளிவுபடுத்தவில்லை, அதனால், அது தேவன் தானா அல்லது ஒன்று அல்லது இரண்டு தூதர்களா என்று நமக்கு தெரியவில்லை. உங்கள் மொழியில் யார் சுமந்து சென்றது என்பதைக் குறிப்பாக சொல்ல வேண்டியது அவசியம் ஏனென்றால் UDB என்ன செய்திருக்கிறதோ அதை செய்வது சிறந்தது.

Luke 24:52-53

அவர்கள் அவரை ஆராதித்தார்கள்

இது கீழே குனிகிறதும், முழங்கால் படியிடுகிறதும், தாழ்மையிலும், பயபக்தியிலும், ஆச்சரியத்திலும் மற்றவர் பாதத்தில் முகங்குப்புற விழுகிறதும் இதன் அர்த்தமாகும்.

ஆலயத்தில் தொடர்ந்து

"ஆலயப் பிரகாரங்களுக்கு தினமும் அவர்கள் சென்றார்கள்."

தேவனை ஆசீர்வதித்து

"தேவனை துதித்து" (UDB)