தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

3 John

3 John 1

3 John 1:1-4

மூப்பர்

இது அப்போஸ்தலனும் இயேசுவின் சீஷனுமாகிய யோவானைக் குறிக்கிறது. அவன் சபையில் தலைவனாக இருப்பதினாலோ அல்லது வயதில்முதிர்ந்தவனாக இருப்பதினாலோ தன்னை "மூப்பர் " என்று குறிப்பிடுகிறார். ஆசிரியருடைய பெயர் வெளிப்படுத்தப்படலாம்: "நான், மூப்பனாகிய யோவான், எழுதுகிறேன்."

காயு

யோவான் இந்த நிரூபத்தை யாருக்கு எழுதினாரோ அந்த சகவிசுவாசியே இவன்.

நான் சத்தியத்தில் நேசிக்கிறவன்

மாற்று மொழிபெயர்ப்பு: "நான் உண்மையாய் நேசிக்கிறவன் "

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

"நீ எல்லாவற்றிலும் நன்றாக இருந்து சுகமாயிரு"

உன்னுடைய ஆத்துமா செழிக்கிறது போல

"உன்னுடைய ஆவியிலே நன்றாக இருப்பதைப்போல"

சகோதரர்கள்

"சகவிசுவாசிகள்"

நீங்கள் சத்தியத்தில் நடப்பதுபோல, உன்னுடைய உண்மைக்கு சாட்சி கொடுத்தது

"நீ தேவனுடைய சத்தியத்தின்படி வாழ்கிறாய் என்று எனக்குச் சொன்னார்கள்" அல்லது "

என் பிள்ளைகள்

யோவான் இயேசுவுக்குள் விசுவாசிக்கப் போதித்தவைகளைப் பிள்ளைகளுக்கு ஒப்பிடுகிறார். இது அவர்களுக்காக அவர் கொண்டுள்ள அன்பையும் கரிசனையையும் வலியுறுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "என்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகள் "

3 John 1:5-8

நீ உண்மையைச் செய்கிறாய்

"தேவனுக்கு உண்மையானது எதுவோ, அதை நீ செய்கிறாய் " அல்லது "நீ தேவனுக்கு உண்மையாய் இருக்கிறாய்"

சகோதரர்களுக்காகவும் அந்நியர்களுக்காகவும் பணிசெய்

"சக விசுவாசிகளுக்கும் நீ அறியாதவர்களுக்கும் உதவி செய்"

உன்னுடைய அன்பை சபைக்குமுன்பாகச் சாட்சியாக சொன்னவர்கள்

இது "நீ அவர்களை எப்படி நேசித்தாய் என்பதைப் பற்றி சபையிலே விசுவாசிகளுக்கு அவர்கள் சொன்னார்கள்" என்னும் புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கப்படலாம்.

தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களது பயணத்திற்கு நீ வழிவிட்டனுப்புவாய்

"தயவுகூர்ந்து, தேவனைக் கனப்படுத்தும் விதமாக அவர்களது பயணத்திற்கு வழிவிட்டனுப்பவும்"

ஏனெனில் நாமத்தினிமித்தம் அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்

இங்கு "நாமம்" என்பது இயேசுவைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசுவைப் பற்றி ஜனங்களுக்கு சொல்வதற்காக அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்."

புறஜாதியாரிடம் ஒன்றும் வாங்கவில்லை

இங்கே "புறஜாதியான்" என்பதற்கு யூதனல்லாதவன் என்று அர்த்தமில்லை. இயேசுவை விசுவாசிக்காதவன் என்று அர்த்தம். மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லப்படுகிறவர்களிடமிருந்து ஒன்றையும் வாங்கவில்லை"

ஆகையால் நாம்

இங்கு "நாம்" என்பது யோவானையும் எல்லா விசுவாசிகளையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது.

நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருக்கும்படி

" தேவனுடைய சத்தியத்தை ஜனங்களுக்கு சொல்வதற்கு அவர்களுடைய வேலையில் நாம் அவர்களுக்கு உதவி செய்யும்படி"

3 John 1:9-10

சபை மக்கள்

இது காயு மற்றும் தேவனை ஆராதிக்க ஒன்றாகக் கூடின விசுவாசக் கூட்டத்தாரையும் குறிக்கிறது.

தியோத்திரேப்பு

இவன் சபையின் உறுப்பினராக இருந்தவன்.

அவர்களில் முதன்மையாக இருக்க விரும்புகிறவன்

"அவர்களுடைய தலைவனைப்போல செயல்பட விரும்புகிறவன்"

எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை

"எங்களை" என்ற வார்த்தை யோவானையும் அவனோடு உள்ளவர்களையும் குறிக்கிறது. காயுவை சேர்த்து அல்ல.

அவன் எப்படியாய் நமக்கு எதிராக பொல்லாத வார்த்தைகளோடு ஏளனமான காரியங்களையும் சொல்கிறான்

"அவன் எப்படியாய் நமக்கு விரோதமாக நிச்சயமாக உண்மையில்லாத பொல்லாத காரியங்களைச் சொல்லுகிறான்"

அவன் அவனே

"அவனே" என்ற வார்த்தை இந்த காரியங்களைச் செய்கிற தியோத்திரேப்புவைக் குறிக்கிறது.

சகோதரர்களை ஏற்றுக்கொள்வதில்லை

"சகவிசுவாசிகளை ஏற்றுக்கொள்வதில்லை"

விருப்பமாய் இருப்பவர்களையும் தடைசெய்வது

இந்த சொற்றொடரில் சில வார்த்தைகள் விடுபட்டுள்ளன, ஆனால் அவர்கள் புரிந்துகொண்டார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "விசுவாசிகளை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்களையும் அவன் தடை செய்கிறான்"

அவர்களை வெளியே துரத்துகிறான்

"அவன் அவர்களை வெளியே தள்ளுகிறான்." "அவர்களை" என்ற வார்த்தை சகவிசுவாசிகளை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்களைக் குறிக்கிறது.

3 John 1:11-12

தீமையானதைப் பின்பற்றாதே

"ஜனங்கள் செய்கிற தீமையான காரியங்களை நீயும் செய்யாதே"

ஆனால் நன்மையானதை

சில வார்த்தைகள் விடுபட்டுள்ளன ஆனால் அவர்கள் புரிந்துகொண்டார்கள். மாற்று மொழிபெயர்ப்பு: "ஆனால் ஜனங்கள் செய்கிற நன்மையான காரியங்களைப் பின்பற்றுங்கள்."

தேவனுடைய

"தேவனைச் சேர்ந்தது"

தேவனைக் கண்டதில்லை

மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடையதில்லை" அல்லது "தேவனை விசுவாசிக்கவில்லை"

தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றான்

மாற்று மொழிபெயர்ப்பு: "தேமேத்திரியு அவரைக் குறித்து நன்றாகப் பேசுவான் என்று அறிந்த எல்லா விசுவாசிகளும்."

தேமேத்திரியு

இந்த மனிதனே, அவன் பார்க்க வரும்போது காயுவும் சபைமக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று யோவான் விரும்பினவன்.

சத்தியத்தினாலும்

"சத்தியமே அவனைப்பற்றி நன்றாகப் பேசுகிறது." இங்கு "சத்தியம்" ஒரு நபர் பேசுவதைப்போல குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்று மொழிபெயர்ப்பு: "அவனைக்குறித்து அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அவைகள் உண்மையானவை."

நாங்களும் சாட்சிகொடுக்கிறோம்

இங்கு "நாங்கள்" என்பது யோவானையும் அவனோடு உள்ளவர்களையும் குறிக்கிறது. காயுவை சேர்த்து அல்ல. மாற்று மொழிபெயர்ப்பு: "நாங்களும் தேமேத்திரியுவைப்பற்றி நன்றாகப் பேசுகிறோம்."

உங்களுக்குத் தெரியும்

"உங்கள்" என்ற வார்த்தை ஒருமை மற்றும் இது காயுவைக் குறிக்கிறது.

3 John 1:13-15

மையினாலும் இறகினாலும்

"கடிதத்தில்"

முகமுகமாக

"ஒன்றாக" அல்லது "தனி நபராக"

உனக்கு சமாதானம் உண்டாவதாக

"தேவன் உனக்கு சமாதானம் தருவாராக"

சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக

மாற்று மொழிபெயர்ப்பு: "அங்கே ஒவ்வொரு விசுவாசிகளையும் தனித்தனியாக எனக்காக வாழ்த்துங்கள்"

சிநேகிதர்கள்

"உன்னுடைய சிநேகிதர்கள்." மாற்று மொழிபெயர்ப்பு: "இங்குள்ள விசுவாசிகள்."