2 Thessalonians
2 Thessalonians 1
2 Thessalonians 1:1-2
நீங்கள்
நீங்கள் என்பது தெசலோனிக்கேயர் சபையில் உள்ள விசுவாசிகளைக் குறிக்கிறது
சில்வான்
சில்வான் என்பது சீலா என்பதின் லத்தின் பதம் ஆகும். அப்போஸ்தல புத்தகத்தில் பவுலுடன் பிரயாணம் செய்தவருமாகிய சீலா இவர்தான்
2 Thessalonians 1:3-5
நாம்
நாம் என்பது பவுலையும், தீமோத்தேயுவையும், சீலாவையும் குறிப்பதேயன்றி தெசலோனிகேயர்களை அல்ல
கர்த்தருக்கு எப்பொழுதும் ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
கர்த்தருக்கு நாம் இடைவிடாமல் ஸ்தோத்திரம் செலுத்துவதாகும்
இதுவே செய்யத்தக்கது
இப்படி செய்வதே நல்ல காரியம் அல்லது இது நல்லது ஆகும்
ஒருவருக்கொருவர்
ஒவ்வொரு சக விசுவாசிகளிடமும்
உங்களுக்காக
உங்களுக்காக என்ற வார்த்தை தெசலோனேக்கியா சபையின் விசுவாசிகளைக் குறிக்கிறது
நாங்கள் எங்களையே
எங்களையே என்ற ( பிரதிப்பெயர்) பவுலின் மேன்மைப்பாராட்டுதலை முக்கியப்படுத்துகிறது
பாடுகளும் உபத்திரவங்களும் என்ற வார்த்தைகள் அவர்கள் எவ்வாறு துன்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்ற ஒரே கருத்தினை வெவ்வேறு விதங்களில் முக்கியத்துவப்படுத்துகிறது
நீங்கள் பாத்திரராக எண்ணப்படுவதற்கு
தேவன் உங்களை தம்முடைய ராஜ்யத்தில் வைப்பதற்கு விலையுயர்ந்தவர்களாக கருதுவதாகும்
2 Thessalonians 1:6-8
தேவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
தேவன் நீதியுள்ளவர் அல்லது தேவன் நீதிபரர்
உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டாகும்படிக்கு
இந்த சொல் எச்சம் எடுத்துக்காட்டு தேவன் திரும்ப வருவார் என்ற வார்த்தைகளை விட்டுவிடுகிறது. இது ''தேவனுடைய வருகை உங்களுக்கு இளைப்பாறுதலைத் தரும்'' என்றும் மொழிபெயர்க்கப்படலாம்
அவருடைய வல்லமையின் தூதர்கள்
தேவனுடைய வல்லமையுள்ள தூதர்கள்
அவர் எரிகிற அக்கினியில் பதில் செய்வார்
அவர் பற்றியெரிகிற அக்கினியைக்கொண்டு தண்டனை அளிப்பார் (UDB) அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அக்கினியைக்கொண்டு தண்டனை அளிப்பார்
2 Thessalonians 1:9-10
''அவர்கள்'' உபத்திரவப்படுவார்கள்
''சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாத மக்கள்''
நித்திய அழிவு
நம்பிக்கையே இல்லாமல் நித்தியமாக அழிக்கப்படுவதின் செயல் முறையாகும்
அவர் வரும் அந்த நாளில்
இயேசு வரும் கர்த்தருடைய அந்த நாளில்
அவருடைய பரிசுத்தவான்களால் மகிமைப்படும்படிக்கு
இந்த செயற்பாட்டு சொற்றொடரை, ''இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அவரை மகிமைப்படுத்துவார்கள்'' என்றும் குறிப்பிடலாம்
அதிசயப்படும்படி
வியக்கும்படி அல்லது பயபக்தியுடன் நிற்கும்படி
உங்களுக்கு
தெசலோனிக்கேயாவிலுள்ள விசுவாசிகளுக்கு
2 Thessalonians 1:11-12
இதற்காகவே நாம் வேண்டுதல் செய்கிறோம்
நாங்களும் வேண்டுதல் செய்கிறோம்
நாங்கள்
நாங்கள் என்ற ( பிரதிப்பெயர்) பவுலையும், சீலாவையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது
நாங்களும் இடைவிடாமல் உங்களுக்காக ஜெபிக்கிறோம்
அடிக்கடி
நீங்கள்
(பன்மை பிரதிப்பெயர்)தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளைக் குறிக்கிறது
உங்களுடைய எல்லா நல்ல வாஞ்சைகளையும் நிறைவேற்றுகிறது
நீங்கள் நன்மை செய்ய விரும்பும் எல்லா வழிகளுக்காகவும் உங்களைத் தகுதிப்படுத்துகிறது
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்கள் மூலமாக மகிமைப்படும்படிக்கு
நீங்கள் கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்தும்படிக்கு
நீங்களும் அவரால்
இயேசு உங்களையும் மகிமைப்படுத்துவார் # நம்முடைய தேவனுடைய கிருபையினாலே
நம்முடைய தேவனுடைய கிருபையினாலே
2 Thessalonians 2
2 Thessalonians 2:1-2
இப்பொழுது
''இப்பொழுது'' என்ற வார்த்தை தலைப்பில் ஒரு மாறுதலைக் கொடுக்கிறது
நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (UDB)
நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
நாங்கள் என்ற வார்த்தை பவுலையும், சீலாவையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது
உங்களை
உங்களை என்பது தெசலோனிக்கே விசுவாசிகளைக் குறிக்கிறது
நீங்கள் எளிதாக அசைக்கபடாதபடிக்கு
இந்தக் காரியங்கள் உங்கள் மனதை எளிதாக அசைக்காதபடிக்கு
வார்த்தையினாலாவது அல்லது எங்களிடத்திலிருந்து வந்த நிருபத்தினாலாவது
சொல்லப்பட்ட வார்த்தையினாலாவது அல்லது எழுதப்பட்ட நிருபத்தினாலாவது
நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு
உங்களுக்குச் சொல்லுகிறேன்
2 Thessalonians 2:3-4
உங்களை வஞ்சிப்பான்
இது தெசலோனிக்கேயர் விசுவாசிகளை குறிக்கிறது
அது வராது
கர்த்தருடைய நாள் வராது
பாவ மனுஷன் வெளிப்படுவான்
தேவன் அந்த பாவ மனுஷனை வெளிப்படப்பண்ணுவார்
கேட்டின் மகன்
அவனால் இயன்ற எல்லாவற்றையும் அழிப்பவன் அல்லது கெடுப்பவன் # தேவன் எனப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ
ஜனங்கள் ஆராதிக்கிற அனைத்தும்
2 Thessalonians 2:5-7
உங்களுக்கு ஞாபகமில்லையா
இந்த அணி இலக்கணக் கேள்வியானது பவுலின் போதகத்தை விசுவாசிகிறவர்களுக்கு நினைப்பூட்டுதலாக பயன்பட்டது. என்ற வாக்கியத்தை உங்களுக்கு ஞாபகம் உள்ளதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று மொழிபெயர்க்கப்படலாம்
நீங்கள் அறியாமலிருக்கிறீர்களா
நீங்கள் என்பது தெசலோனிக்கியா விசுவாசிகளைக் குறிக்கிறது
இந்தக் காரியங்கள்
இந்தக் காரியங்கள் என்பது இயேசுவின் வருகை, கர்த்தருடைய நாள் மற்றும் பாவமனுஷன் போன்றவற்றைக் குறிக்கிறது
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு
தேவன் அந்த பாவ மனுஷனை வெளிப்படப்பண்ணும்வரைக்கும்
அக்கிரமத்தின் இரகசியம்
மனித அறிவுக்கு எட்டாத இந்த புனிதமான இரகசியம் தேவனுடைய வெளிப்பாட்டினாலே அறியப்படும்
2 Thessalonians 2:8-10
பின்பு அந்த பாவ மனுஷன் வெளிப்படுவான்
பின்பு தேவன் அந்த பாவ மனுஷனை வெளிப்படப்பண்ணுவார். பாவ மனுஷன் என்பது அந்திகிறிஸ்துவுக்கு மறுபெயர் ஆகும்
வாயின் சுவாசத்தினாலே
பேசப்பட்ட அவருடைய வல்லமையான வார்த்தையினாலே
தம்முடைய வெளிப்படுதலினாலே ஒன்றுமில்லாமல் ஆக்குவார்
இயேசு தம்முடைய வருகையில் வெளிப்படுபோது அந்த பாவ மனுஷனை அழிப்பார்
அந்த பாவ மனுஷனின் வருகை சாத்தானின் செய்கையினாலே இருக்கும்
அந்த பாவ மனுஷன் எல்லா வல்லமையும், அடையாளங்களையும், பொய்யான அற்புதங்களையும் செயல்படுத்தும்படிக்கு சாத்தான் அவனுக்கு பலன்கொடுப்பான்
2 Thessalonians 2:11-12
இந்த காரணத்துக்காகவே இதற்காகவே
ஏனென்றால் ஜனங்கள் சத்தியத்தை நேசிக்காமல் போனபடியினாலே
அவர்கள் பொய்யை நம்பும்படிக்கு தேவன் அவர்களுக்குள்ளே கொடிய வஞ்சகத்தை அவர்களுக்கு அனுப்பினார்
அவர்களை வஞ்சிக்கும்படிக்கு தேவன் அந்த பாவ மனுஷன் அனுமதித்தார்
அவர்கள் எல்லோரும் நியாயந்தீர்க்கப்படும்படிக்கு
தேவன் அவர்களை நியாயந்தீர்ப்பார்
2 Thessalonians 2:13-15
ஆனால்
ஆனால் என்ற வார்த்தை தலைப்பில் ஒரு மாறுதலைக் கொடுக்கிறது
நாங்கள் எப்பொழுதும் நன்றி செலுத்துவோம்
நாங்கள் அடிக்கடி நன்றி செலுத்துவோம்
நாங்கள்
நாங்கள் என்ற ( பிரதிப்பெயர்) பவுல், சீலா மற்றும் தீமோத்தேயுவைக் குறிக்கிறது
நீங்கள்
நீங்கள் என்ற ( பிரதிப்பெயர்) தெசலோனிக்கேயர் விசுவாசிகளைக் குறிக்கிறது
கர்த்தருக்கு பிரியமான சகோதரரே
சகோதரரே கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார்
இரட்சிப்பின் முதற்பலனாய் இருப்பதினால்
நீங்கள் ஜனங்களுக்குள்ளே விசுவாசிக்க முந்திக்கொண்டபடியினாலே (UDB)
ஆவியை சுத்திகரித்தல்
தேவன் தம்முடைய ஆவியினாலே இரட்சிக்கவும் உங்களை தமக்கென்று தெரிந்துகொள்ளவும் செய்வார் (UDB)
சத்தியத்தில் விசுவாசமாயிருக்கவும்
சத்தியத்தை நம்பவும் அல்லது சத்தியத்தின்மேல் நம்பிக்கை வைக்கவும்
முறைமைகளைக் கைக்கொள்ளவும்
இந்த முறைமைகள் பவுலும், மற்ற அப்போஸ்தலர்களும் போதித்து கையளிக்கப்பட்ட கிறிஸ்துவின் சத்தியங்கள் சார்ந்த முறைமைகளே
நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்
நாங்கள் உங்களுக்கு போதித்தோம்
வார்த்தையினாலோ அல்லது எங்களுடைய நிருபத்தினாலோ
உங்களுக்கு தனிப்பட்டமுறையிலோ அல்லது உங்களுக்கு அனுப்பப்பட்ட நிருபத்தில் எழுதப்பட்ட வார்த்தையினாலோ நாங்கள் உங்களுக்குப் போதித்தவைகள்
2 Thessalonians 2:16-17
இப்பொழுது
என்ற வார்த்தை தலைப்பில் ஒரு மாறுதலைக் கொடுக்கிறது
நம்முடைய கர்த்தர்....நம்மை நேசித்தும் நமக்குக்கொடுத்தும்
நம்முடைய என்பதும் நம்மை என்பதும் பவுலை கேட்பவர்களையும் குறிக்கிறது
கர்த்தராகிய இயேசு தாமே
''அவர்தாமே'' என்ற வார்த்தை கர்த்தராகிய இயேசு என்ற சொற்றொடருக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது
உங்கள்
இந்த பன்மை வார்த்தை தெசலோனிக்கேய சபையின் விசுவாசிகளைக் குறிக்கிறது
உங்கள் இருதயங்களைத் தேற்றவும், ஸ்திரப்படுத்தவும்
உங்களைத் தேற்றவும், உங்களை பலப்படுத்தவும்
2 Thessalonians 3
2 Thessalonians 3:1-3
இப்பொழுது
என்ற வார்த்தை தலைப்பில் ஒரு மாறுதலைக் கொடுக்கிறது
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...நாங்கள்
எங்களுக்காக என்பதும் நாங்கள் என்பதும் பவுலையும், சீலாவையும் தீமோத்தேயுவையும் குறிப்பதேயன்றி அவர்களைக் கேட்பவர்களை அல்ல.
கர்த்தருடைய வசனம் எவ்விடத்திலும் பரவும்படிக்கு
கர்த்தராகிய இயேசுவைப் பற்றியச் செய்தியை அதிகமதிகமான ஜனங்கள் கேள்விப்ப்படும்படியாக
மகிமைப்படும்படிக்கு
ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் செய்தியை கனப்படுத்தும்படிக்கு
உங்களுடன்...உங்களை ஸ்திரப்படுதத்துவார்
இவ்விரு வார்த்தைகளும் தெசலோனிக்கேய சபை விசுவாசிகளைக் குறிக்கிறது
நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கு
தேவன் எங்களை காக்கும்படிக்கு அல்லது தேவன் எங்களைக் மீட்கும்படிக்கு
யார் உங்களை ஸ்திரப்படுத்துவார்
யார் உங்களை பெலப்படுத்துவார்
பொல்லாத மனிதன்
பொல்லாதவன், ''சாத்தான்''
2 Thessalonians 3:4-5
கர்த்தருக்குள்
கர்த்தருடன் இணைந்திருத்தல் (UDB)
நாங்கள்
நாங்கள் என்பது பவுலையும், சீலாவையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது அவர்களைக் கேட்பவர்களை அல்ல
அதைக் குறித்து
அதைப்பற்றி
நீங்கள்
நீங்கள் மற்றும் உங்கள் என்ற வார்த்தைகள் தெசலோனிக்கேய சபை விசுவாசிகளைக் குறிக்கிறது
உங்கள் இருதயங்களை நேராக்க
இந்த வார்த்தை தனி ஒரு உடல் உறுப்பைக் குறிக்காமல், விசுவாசிகள் அனைவரையும் குறிக்கிறது. உங்கள் ''இருதயங்களைக் காத்துக்கொள்ளுங்கள்''
2 Thessalonians 3:6-9
இப்பொழுது
என்ற வார்த்தை தலைப்பில் ஒரு மாறுதலைக் கொடுக்கிறது
நாங்கள் கட்டளையிடுகிறோம்... எங்களிடமிருந்து
நாங்கள் மற்றும் எங்கள் என்ற வார்த்தை பவுலையும், சீலாவையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது
உங்களுக்கு கட்டளையிடுகிறோம்...நீங்கள் விட்டு விலக வேண்டும்
நீங்கள் மற்றும் உங்களுக்கு என்பது தெசலோனிக்கேய விசுவாசிகளைக் குறிக்கிறது
நாங்கள் உங்களுக்கு கட்டளையிடுகிறோம்
நாங்கள் உங்களுக்கு கட்டளையிடுகிறோம் அல்லது நாங்கள் உங்களுக்கு ஆணையிடுகிறோம்
நம்முடைய கர்த்தர்
நம்முடைய என்ற வார்த்தை தெசலோனிக்கேய விசுவாசிகளையும் உள்ளடக்கியது
வீண் அலுவற்காரராய் வாழ்வது
சோம்பேறியையும், வேலை செய்ய சம்மதியாமலும் இருப்பது (UDB)
எங்களை பிரதிபலிப்பது
எங்களைப்போல செயல்படவும்
நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம்
நாங்கள் கடினமாக உழைத்தோம்
எங்களுக்கு அதிகாரம் இல்லாமல் இல்லை
எங்களுக்கு அதிகாரம் உண்டு
2 Thessalonians 3:10-12
நாங்கள்
நாங்கள் என்பது பவுலையும், சீலாவையும், தீமோத்தேயுவையும் குறிக்கிறது தெசலோனிக்கேய விசுவாசிகளை அல்ல
உங்கள்
உங்கள் என்பது தெசலோனிக்கேய விசுவாசிகளைக் குறிக்கிறது
சிலர் வீண் அலுவற்காரராய் சுற்றித்திரிகிறார்கள்
சிலர் வீண் அலுவற்காரராய் வாழ்கிறார்கள் அல்லது சிலர் சோம்பேறியாய் இருக்கிறார்கள்
அமைதலோடும்
அமைதியாக, சமாதானமாக, சாதுவாக
2 Thessalonians 3:13-15
ஆனால்
ஆனால் என்ற வார்த்தை சோம்பேறிகளாய் இருக்கும் விசுவாசிகளையும் கடினமாக உழைக்கும் விசுவாசிகளையும் வேறுபடுத்திக்காட்டுகிறது
நீங்கள்
நீங்கள் என்பது தெசலோனிக்கேய விசுவாசிகளைக் குறிக்கிறது
மனம் தளராதிருங்கள்
இந்த வார்த்தை சோர்ந்துபோகாதிருங்கள் என்பதின் மரபுச்சொல்
அவனை குறித்துக்கொள்ளுங்கள்
வெளியரங்கமாக அவனை அடையாளம் காணுங்கள் (UDB)
2 Thessalonians 3:16-18
சமாதானத்தின் கர்த்தர் தாமே
தாமே என்கிற வார்த்தை சமாதானத்தின் கர்த்தர் அதைத் தனிப்பட்டமுறையில் செய்வார் என்று முக்கியத்துவப்படுத்துகிறது
உங்கள்
உங்கள் என்ற வார்த்தை தெசலோனிக்கேய சபை விசுவாசிகளைக் குறிக்கிறது
இது பவுலாகிய நான் என்னுடைய கையெழுத்தாலே கூறும் வாழ்த்துதல்
பவுலாகிய நான் என் கையேழுத்தால் உங்களை வாழ்த்துகிறேன்