தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Timothy

1 Timothy 1

1 Timothy 1:1-2

பவுல்

"பவுல் இடமிருந்து" அல்லது "பவுலாகிய நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்"

கட்டளையின்படி

"கட்டளையால்" அல்லது "அதிகாரத்தால்" அல்லது "தேவன் என்னை அப்போஸ்தலனாகக் கட்டளையிட்டதால்"

நம்முடைய...நம்முடைய...நம்முடைய

பவுல் தன்னைக் குறித்தும், தீமோத்தேயுவையும், அநேகமாக மற்ற மக்களையும் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.

நம்முடைய இரட்சகராகிய தேவன்

"நம்மை காப்பாற்றின தேவன்"

நம்முடைய நம்பிக்கையாகிய கிறிஸ்து

"நம்முடைய நம்பிக்கையாய் இருக்கிற கிறிஸ்து இயேசு" அல்லது "வருங்காலத்தைக் குறித்து நம்முடைய நம்பிக்கையை வைத்திருக்கும் கிறிஸ்து இயேசு."

தீமோத்தேயுவுக்கு

"இது தீமோத்தேயுவிற்கு எழுதப்பட்டக் கடிதம்"

உண்மையான மகன்

இந்தப் பதம் தீமோத்தேயுவுக்கும் பவுலுக்கும் உண்டான நெருங்கிய உறவை ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உறவிற்கு ஒப்பிடுகிறது. தீமோத்தேயு பவுலின் உண்மையான மகன் அல்ல, ஆனால் அவன் பவுலுக்கு அதே அளவு கனத்தையும், கீழ்ப்படிதலையும், எந்த மகனும் தனது தந்தைக்கு தரும் சேவையையும் கொடுத்தான். மறு மொழிபெயர்ப்பு: "நீ எனக்கு உண்மையான மகனைப் போன்றவன்."

தேவனிடமிருந்து கிருபையும், இரக்கமும், சமாதானமும்

"தேவனிமிருந்து வருகிற கிருபையும், இரக்கமும், சமாதானமும் உங்களுடையதாவதாக" அல்லது "தயவு, இரக்கம், மற்றும்அவருக்குள் இருக்கும் சமாதானத்தை நீ அனுபவிப்பாயாக"

நம்முடைய தந்தையாகிய தேவன்

"நம்முடைய தகப்பனாகிய தேவன்"

நம்முடையக் கர்த்தராகிய கிறிஸ்து இயேசு

"நம்முடையக் கர்த்தராயிருக்கிற கிறிஸ்து இயேசு"

1 Timothy 1:3-4

நான் உன்னை வேண்டிக்கொண்டபடியே

"நான் உன்னோடு கேட்டுக்கொண்டபடியே" அல்லது "நான் அதிகாரத்தோடு உன்னைக் கேட்டுக்கொண்டபடி" அல்லது "நான் உனக்கு சொன்னது போலவே."

உன்னை

ஒருமையில் இருக்கிறது.

எபேசுவில் இருக்க

"எபேசு பட்டணத்திலே எனக்காக காத்திருங்கள்"

அவர்கள் கவனமும் செலுத்தக்கூடாது

"அவர்கள் மிகுதியான கவனம் செலுத்தக் கூடாது" அல்லது "கவனம் செலுத்தக் கூடாதபடி அவர்களுக்கு கட்டளையிடவேண்டும்"

வம்சவரலாறுகள்

ஒரு மனிதனின் பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்கள் பற்றி எழுதப்பட்ட அல்லது வாய் வழியாக சொல்லப்பட்ட தொகுப்பு வம்சவரலாறு ஆகும். இவைகள் யூத கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானவைகள் ஏனென்றால், அவைகள் எந்த கோத்திரம் இஸ்ரவேலுக்கு உள்ளாக இருக்கிறது என்பதை நிலைநிறுத்துகிறது. மத்தேயு 1 மற்றும் லூக்கா 3 இதற்கு நல்ல வேதாகம எடுத்துக்காட்டுகள் ஆகும்.

தர்க்கங்களை உண்டுபண்ணுகிற

"மக்களை கோபமுடன் தவிர்க்கச் செய்யத் தூண்டுகிற." எந்த கதைகள் அல்லது வம்சவரலாறுகள் மூலம் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று மக்கள் விவாதம் செய்கிறார்கள்.

தேவனுடைய திட்டத்திற்கு உதவுவதைத் தவிர்த்து

"விசுவாசத்தில் பெற்றுக்கொண்டது" அல்லது "விசுவாசத்தால் நிறைவேற்றப்பட்டது"

1 Timothy 1:5-8

கற்பனையின் நோக்கம்

"அறிவுரையின் நோக்கம்" அல்லது "அப்போஸ்தலர்களாகிய நாங்கள் உங்களை செய்யச் சொல்லுவது"

கற்பனை

அல்லது "கட்டளை"

அன்பு

சாத்தியமான அர்த்தங்கள் 1. தேவனுக்கான அன்பு (UDB) அல்லது 2. ஒருவன் தன் அண்டை அயலகத்தார் மேல் உள்ள அன்பு.

சுத்த இருதயத்தில் இருந்து

"நீங்கள் செய்வதில் ஒரு பாவமும் இல்லாமல் செய்ய விரும்புவது"

நல்ல மனசாட்சி

"தவறுக்கு பதில் நல்லதை தெரிந்தெடுத்த மனசாட்சி" அல்லது "தவறுக்கு பதில் நல்லதை தெரிந்தெடுக்கக் கூடிய மனசாட்சி"

உண்மையான

"நேர்மையான" அல்லது "சத்தியமான" அல்லது "ஏமாற்றுதல் இல்லாமல்." மேடையில் இருக்கும் ஒரு நடிகனுக்கான எதிர்மறையான வார்த்தை இது.

நியாயப்பிரமாணம்

மோசேயின் நியாயப்பிரமாணம்

அவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை

"அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும்" அல்லது "அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை"

அவர்கள் வற்புறுத்துவது என்ன

"அவர்கள் நிச்சயமாக கூறுவது என்ன" அல்லது "அவர்கள் நம்பிக்கையோடு கூறுவது என்ன"

ஆனால்

"இப்பொழுது"

நியாயப்பிரமாணம் நல்லது என்று நாம் அறிவோம்

"நியாயப்பிரமாணம் பிரயோஜனமானதென்று நாம் புரிந்துகொள்ளுகிறோம்" அல்லது "நியாயப்பிரமாணம் நன்மையானது என்று நாம் அறிவோம்"

இதை ஒருவன் நேர்மையாக உபயோகித்தால்

"இதை யாராயினும் சரியாக உபயோகப்படுத்தினால்" அல்லது "அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அதை உபயோகப்படுத்தினால்"

1 Timothy 1:9-11

நமக்கு இது தெரியும்

"அதென்னவென்றால், இதை நாம் புரிந்துகொள்ளுகிறோம்" அல்லது "ஏனென்றால் நாம் இதை உணர்ந்திருக்கிறோம்" அல்லது "நமக்கு இது தெரியும்"

நீதிமானுக்காக உருவாக்கப்படவில்லை

"நீதியான மனிதனுக்காகக் கொடுக்கப்படவில்லை" அல்லது "கீழ்ப்படிகிற ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படவில்லை" அல்லது "தேவனுக்கு முன்பாக நீதியாக இருக்கும் மனிதனுக்காகக் கொடுக்கப்படவில்லை"

தங்களது தகப்பன்மாரையும் தாய்மாரையும் கொலை செய்கிறவர்கள்

"தங்களது தகப்பன்மாரையும் தாய்மாரையும் கொலை செய்கிறவர்கள்" அல்லது "தங்களது தகப்பன்மாரையும் தாய்மாரையும் சரீரப்பிரகாரமாக காயப்படுத்துகிறவர்கள்"

வேசித்தனம் செய்கிறவர்களும்

இது எழுத்தின்பிரகாரம் பெண்பாலின வார்த்தையும் ஆண்பாலின வார்த்தையும் ஆகும். மற்ற இடங்களில் இதை தேவனுக்கு விசுவாசமாய் இல்லாத மக்களுக்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் திருமணத்திற்கு வெளியில் தவறான உறவு வைத்திருக்கும் எல்லாரையும் சேர்த்து சொல்லுகிறது போல இதன் அர்த்தம் உள்ளது.

ஆண்புணர்ச்சிக்காரர்

"மற்ற ஆணோடு தவறான உறவு வைக்கும் ஆண்கள்." கிரேக்கத்தில் உள்ள வார்த்தை மற்ற ஆணோடு உறவு வைக்கும் இன்னொரு ஆணை பிரத்தியேகமாக சொல்லுகிறது.

அடிமைகளாக மக்களை கடத்துபவர்கள்

"அடிமைகளாக விற்றுப்போட மக்களைக் கடத்துபவர்கள்" அல்லது "அடிமைகளாக விற்றுப்போட மக்களை எடுப்பவர்கள்"

ஆரோக்கியமான உபதேசம்

"சரியான போதனைகள்" அல்லது "சத்தியமான அறிவுரைகள்"

ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான சுவிசேஷம்

"ஆசீர்வாதமான தேவனுக்குரிய மகிமையைக் குறித்த சுவிசேஷம்" அல்லது "ஆசீர்வாதமான மற்றும் மகிமையான தேவனுடைய சுவிசேஷம்"

எனக்கு ஒப்புவிக்கப்பட்டதுமான

"தேவன் எனக்குக் கொடுத்ததும் அதற்காக என்னை உக்கிராணக்காரனாக செய்ததும்"

1 Timothy 1:12-14

நான் நன்றி சொல்லுகிறேன்

"நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்" அல்லது "நான் நன்றி அறிவிக்கிறேன்"

என்னை உண்மையுள்ளவன் என்று அவர் எண்ணினார்

"அவர் என்னை நம்பத்தகுந்தவன் என்று எண்ணினார்" அல்லது "நான் சார்ந்திருக்கக் கூடியவன் என்று எண்ணினார்"

ஊழியத்தில் என்னை வைத்தார்

"ஊழியதிற்காய் என்னை நியமித்தார்" அல்லது "அதனால் ஊழியம் செய்யக் கூடிய இடத்தில் என்னை வைத்தார்"

முன்னே தூஷிக்கிறவனாக இருந்த என்னை

"கிறிஸ்துவுக்கு விரோதமாக தீமையை நான் பேசியிருந்தாலும்" அல்லது "கடந்த காலத்தில் தூஷிக்கிறவனாக இருந்த ஒருவனுக்கு"

மூர்க்கமான மனிதன்

"மற்றவரை காயப்படுத்தும் ஒருவன்." மற்றவரைக் காயப்படுத்தும் நியாயம் தனக்கு இருக்கிறது என்று நம்புகிறவன்.

ஆனால் நான் கிருபைப் பெற்றேன்

"ஆயினும் தேவனிடத்தில் இருந்து கிருபைப் பெற்றேன்" அல்லது "ஆயினும் தேவன் என் மீது கிருபையைக் காட்டினார்."

அவிசுவாசத்தினால் நான் ஒன்றும் அறியாதவனைப் போல செயல்பட்டேன்

விளக்கம்

ஆனால்

"மற்றும்"

விசுவாசத்திலும் அன்பிலும் நிரம்பி வழிந்தது

"மிகவும் அதிகமாக இருந்தது" அல்லது "போதுமான அளவிற்கு மேலாக இருந்தது"

1 Timothy 1:15-17

இந்த செய்தி நம்பத்தகுந்தது

"இந்த வாக்கியம் உண்மை"

எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரம்

"ஒரு சந்தேகம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்" அல்லது "முழு நிச்சயத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட தகுதியானது"

முதலாவது நான் இரக்கம் கொடுக்கப்பட்டேன்

"தேவன் எனக்கு முதலாவது இரக்கம் காட்டினார்" அல்லது "நான் முதலாவது தேவனிடம் இருந்து இரக்கம் பெற்றேன்"

எக்காலத்துக்கும் ராஜா

"நித்திய ராஜா" அல்லது "என்றென்றைக்குமான பிரதான ஆட்சியாளர்"

கனமும் மகிமையும் உண்டாவதாக

"கனப்படுத்தப்பட்டு மகிமை செலுத்தப்படுவாராக" அல்லது "மக்கள் உம்மை கனப்படுத்தி மகிமை செலுத்துவார்களாக"

1 Timothy 1:18-20

இந்தக் கட்டளையை உங்கள் முன் வைக்கிறேன்

"இந்தக் கட்டளையை உனக்கு கொடுக்கிறேன்" அல்லது "இந்த கட்டளையை உனக்கு நான் ஒப்புவிக்கிறேன்"

குழந்தை

மகன் அல்லது மகள் என்ற வார்த்தைகளை விட குழந்தை என்ற இப்பதம் மிகப் பொதுவானதாகும். ஆனால் அது தகப்பனோடு உள்ள பந்தத்தையே குறிக்கிறது. பவுல் தனக்கு தீமோத்தேயுவிடம் இருக்கும் அன்பிற்கு உருவகமாக இதை பயன்படுத்துகிறார்.

நல்லப் போராட்டத்தில் ஈடுபட்டு

"முயற்சி எடுக்கிறதற்கு பாத்திரமான போராட்டத்தில் பங்குபெற்று" அல்லது "எதிரிகளை தோற்கச்செய்ய கடினமாக உழைத்து." இந்த உருவகத்தின் அர்த்தம், "கர்த்தருக்காக கடினமாக வேலை செய்யுங்கள் (UDB) என்பதாகும்.

விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்தி

தங்களது விசுவாசத்தை பாறைகளால் சேதமடைந்த கப்பலுக்கு ஒப்பிடும் இன்னொரு உருவகத்தை பவுல் இங்கு பயன்படுத்துகிறார். இந்த உருவகம், "அவர்களது விசுவாசத்திற்கு ஏற்பட்டது என்னவாயினும் அது பேரழிவு" (UDB) என்பது அர்த்தமாகும். நீங்கள் இதை பயன்படுத்தவேண்டும் அல்லது உங்கள் மொழியில் புரிந்துகொள்ளப்படும் என்றால் அதே போல் உள்ள உவமானத்தை உபயோகிக்கவேண்டும்.

அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்

"தேவன் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்."

1 Timothy 2

1 Timothy 2:1-4

முதலாவதாக

"மிகவும் முக்கியமாக" அல்லது "மற்ற எல்லாவற்றிற்கும் முன்னதாக." ஜெபத்தின் (விண்ணப்பங்களை ஏறெடுத்தல், ஜெபங்கள், மன்றாட்டு, நன்றிகூறுதல்) பயிற்சி தான் மிகவும் முக்கியமானது.

நான் உற்சாகப்படுத்துகிறேன்

"நான் கெஞ்சுகிறேன்" அல்லது "நான் கேட்கிறேன்"

மரியாதை

"மக்கள் நம்மை மதிக்கிற வகையில்." தேவ பக்தியோடு கூட்டு சேர்க்கப்படும்போது, அதன் அர்த்தம், மற்ற மக்கள் தேவனை கனப்படுத்தவும் எங்களை மதிக்கவும்" என்பதாகும்.

1 Timothy 2:5-7

தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் ஒரே மத்தியஸ்தர்

ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகாமல் இருக்கிற இருதரத்தார்களுக்கு இடையில் சமாதானமான முறையில் காரியங்களை பேசி முடிக்கும் நபர் தான் மத்தியஸ்தர். இங்கு, தேவனோடு சமாதான உறவில் நுழையும்படி உதவி செய்கிற இயேசுவைக் குறிக்க இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தன்னையே கொடுத்து

"மனப்பூர்வமாய் மரித்து"

மீட்கும் பொருளாக

"விடுதலையின் விலையாக" அல்லது "விடுதலை அடைய ஒரு கூலியாக"

சரியான நேரத்தில் சாட்சியாக

"இது சரியான நேரத்தில் உள்ள அவரது சாட்சி" அல்லது "இந்த நேரங்களில் உள்ள சாட்சி"

இந்த நோக்கத்திற்காக

"இதற்காக" அல்லது "இந்தக் காரணத்திற்காக" அல்லது "இந்த சாட்சிக்காக"

பிரசங்கியாக ஆக்கப்பட்டு

"பிரசங்கம் பண்ணுகிறவனாக நியமிக்கப்பட்டு" அல்லது "கிறிஸ்துவால் பிரசங்கிக்கிறவனாக நியமிக்கப்பட்டு"

நான் உண்மையைப் பேசுகிறேன்

"நான் உண்மையைப் பேசுகிறேன்" அல்லது "நான் சத்தியத்தைப் பேசுகிறேன்"

நான் பொய் பேசவில்லை

"நான் பொய் சொல்லவில்லை"

விசுவாசத்திலும் உண்மையிலும்

"விசுவாசத்தைக் குறித்தும் உண்மையைக் குறித்தும்" அல்லது "விசுவாசத்தோடும் உண்மையோடும்.

1 Timothy 2:8-10

எல்லா இடங்களிலும் உள்ள மனிதர்கள்

"எல்லா இடங்களிலும் ஆண்கள்" அல்லது "எங்கும் உள்ள ஆண்கள்"

உயர்த்த

"உயர்த்துவதால்" அல்லது "தூக்குவதால்"

பரிசுத்தக் கைகள்

"தேவனுக்காக பிரித்தெடுக்கப்பட்டக் கைகள்." இது பாவத்தை தவிர்க்கும் ஒரு மனிதனுக்கான ஆகுபெயர்.

கோபமும் சந்தேகங்களும் இல்லாமல்

"மற்றவர் மேல் கோபத்தைக் காட்டாமல், மற்றவரோடு வாக்குவாதம் பண்ணாமலும்" அல்லது "தேவனை சந்தேகிக்காமலும் மற்றவர் மேல் கோபப்படாமலும்"

நாணத்தோடும்

"தங்கள் மேல் தவறான ஈர்ப்பு கொண்டு வராமல் இருக்க" அல்லது "மக்களுக்கும் தேவனுக்கும் சரியான மரியாதைக் கொடுக்கும் வழியில்"

பின்னப்பட்ட முடியோடு

"தங்களது முடி சரியாக இருக்க மிகவும் கடினமாக வேலை செய்து"

நல்லக் கிரியைகளின் மூலம் தெய்வபக்தியை சொல்லி

" நல்லக் காரியங்களை செய்து தாங்கள் தேவனுக்குரியவர்கள் என்று காண்பிக்க விரும்பி"

1 Timothy 2:11-12

ஒரு பெண் கற்றுக்கொள்ள வேண்டும்

"ஒரு பெண் கற்றுக்கொள்ள" அல்லது "ஒரு பெண் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்"

அமைதியில்

"சத்தமில்லாமல்" அல்லது "அமைதியான நடக்கையில்"

எல்லா ஒத்துழைப்போடும்

"தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய ஆயத்தமாய்"

நான் ஒரு பெண்ணை அனுமதிக்கமாட்டேன்

"நான் ஒரு பெண்ணையும் அனுமதிக்க மாட்டேன்"

1 Timothy 2:13-15

ஆதாம் முதலாவது உருவாக்கப்பட்டான்

"தேவன் ஆதாமைத் தான் முதலாவதாக உருவாக்கினார்" அல்லது "ஆதாம் தேவனால் முதலாவது உருவாக்கப்பட்டான்"

பின்பதாக ஏவாள்

"பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்" அல்லது "அடுத்தது ஏவாள்"

ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை

"பாம்பினால் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை"

மீறுதலில் முழுவதும் வஞ்சிக்கப்பட்டாள்

"வஞ்சிக்கப்பட்டு தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல்." இந்தக் கூற்றின் முக்கிய கருத்து என்னவென்றால், தேவனுடைய சட்டத்திற்கு முதலாவது ஏவாள் தான் கீழ்ப்படியாமல் போனாள். ஆதாம் அல்ல. அவள் முழுவதும் வஞ்சிக்கப்பட்டதால் அவள் கீழ்ப்படியாமல் போனாள்.

பிள்ளைப்பேற்றினாலே அவள் இரட்சிக்கப்படுவாள்

"தேவன் அவளுடைய வாழ்வின் இயல்பான வட்டத்தில் அவளைப் பாதுகாப்பாக வைப்பார்."

அவர்கள் தொடர்ந்தால்

"அவர்கள் அதிலே இருந்தால்" அல்லது "அவர்கள் அவ்வாறு வாழ்வதைத் தொடர்ந்தார்களானால்" விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும்

"இயேசுவை நம்புவதிலும் மற்றவரை நேசிப்பதிலும் பரிசுத்த வாழ்வு வாழ்வதிலும்"

தெளிந்த புத்தியோடு

"சுயக் கட்டுப்பாட்டோடு" அல்லது "சிறந்தது எது என்ற விழிப்புணர்வோடு"

1 Timothy 3

1 Timothy 3:1-3

புருஷனும் மனைவியும்

இந்தப் பதத்தின் அர்த்தம், "ஒரு பெண்ணின் மனிதன்." என்பதாகும். சாதாரணமாக, "ஒரு மனைவியை மட்டும் வைத்திருக்கவேண்டும்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (UDB). இது முன்னமே விதவையாக்கப்பட்ட ஆண்களையும், விவாகரத்துப் பெற்ற ஆண்களையும் அல்லது திருமணம் ஆகாத ஆண்களையும் தவிர்த்து கூறுகிறதா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தெளிந்த புத்தியுள்ளவன்

"ஞானமான வழிகளை யோசிக்கிறவன்" அல்லது "ஆரோக்கியமான நியாயத்தீர்ப்பை உபயோகப்படுத்துகிறவன்" அல்லது "யோசிக்கிறவன்" அல்லது "புத்தியுள்ளவன்"

ஒழுக்கமுள்ளவனாய்

"நன்றாய் நடந்துகொள்ளுகிறவன்"

விருந்தோம்பலுள்ளவனும்

"அந்நியரை வரவேற்கிற"

மதுபானத்திற்கு அடிமையாகாமல்

"குடிகாரனல்லாமல்" அல்லது "அதிகமான மதுவைக் குடியாமல்"

சண்டைபண்ணுகிறவனாய் இல்லாமல்

"தர்க்கம் பண்ணவும் சண்டை பண்ணவும் விரும்புகிறவனாக இல்லாமல்"

பண ஆசைக்காரன்

நேரிடையாக திருடுகிறவனாக அல்லது ஏமாற்றித் திருடுகிற மனிதனாக இருக்கலாம். மற்றவர்களுக்காகக் கவலைப்படாமல் ஆனால் நேர்மையாகப் பணம் சம்பாதிக்கிறவனாக இருக்கலாம்.

நல்ல வேலை

"கனமான வேலை"

1 Timothy 3:4-5

தன்னுடைய சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவன், தன்னுடைய குழந்தைகளை எல்லா மரியாதையோடும் கீழ்ப்படியப்பண்ணுகிறவன்

சாத்தியமான அர்த்தங்கள்

  1. "கண்காணியானவனின் குழந்தைகள் அவனுக்குக் கீழ்ப்படிவதைப் போல மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்துவர் (UDB) அல்லது 2. "தன்னுடையக் குடும்பத்தை சமாளிக்கிற கண்காணி தன்னுடைய குடும்பத்தை மதிக்கவும் வேண்டும்"

தன்னுடைய சொந்தக் குடும்பத்தை நடத்தி

"தன்னுடையக் குடும்பத்தை கவனிக்கிறவன்" அல்லது "வீட்டில் வாழும் மக்களை வழி நடத்துகிறவன்"

எல்லா மரியாதையோடும்

"எல்லா" என்னும் வார்த்தை "எல்லா மக்களை" அல்லது "எல்லா நேரத்திலும்" அல்லது "எல்லா சூழ்நிலையிலும்" என்று குறிக்கலாம்.

ஒரு மனிதன் அறியவில்லை என்றால்

"ஒரு மனிதனுக்குத் தெரியவில்லை என்றால்" அல்லது "ஒரு மனிதனுக்கு முடியாத பொழுது" அல்லது "ஒரு மனுதனுக்கு முடியவில்லை என்று நினைத்தால்"

தேவனுடைய சபையை எப்படி கவனித்துக் கொள்ளுவான்

இந்த பதில் எதிர்பாராத கேள்வியை, "தேவனுடைய சபையை அவன் கவனிக்க முடியாது" அல்லது "அவன் தேவனுடைய சபையை வழி நடத்த முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.

1 Timothy 3:6-7

அவன் புதிதாக மனந்திரும்பினவனாக இருக்கக்கூடாது

"அவன் புதிய விசுவாசியாக இருக்கக்கூடாது" அல்லது "சிறிது நாட்களுக்கு முன்பு விசுவாசியானவனாய் இருக்கக்கூடாது" அல்லது "அவன் முதிர்ந்த விசுவாசியாக இருக்க வேண்டும்"

பிசாசைப் போல ஆக்கினையில் விழுந்து

"பிசாசு பெருமைபட்டதைப் போல செய்து அதனால் பிசாசு ஆக்கினையை அடைந்ததுபோல தானும் அடைந்து"

வெளியில் இருக்கிறவர்களோடு நற்சாட்சி பெற்றிருக்க வேண்டும்

"இயேசுவை விசுவாசியாதவர்கள் அவனை நல்லவன் என்று நினைப்பது அவசியமாகிறது" அல்லது "சபைக்கு வெளியில் இருக்கிறவர்கள் அவனை நல்லவன் என்று நினைக்க வேண்டும்" (UDB)

நிந்தனையில் விழுந்து

"தனக்கு வெட்கம் உண்டாக்கி" அல்லது "அவனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க யாருக்கும் காரணத்தைக் கொடுத்து"

அதில் விழுந்து ... பிசாசின் கண்ணியில்

"பிசாசு தன்னை பிடிக்க அனுமதித்து." சாத்தான் கண்ணியை வைத்து" அல்லது "கண்ணி என்பது சாத்தான் விசுவாசிகளை அவர்கள் உணராமலேயே பாவம் செய்ய வைக்க தந்திரம் செய்வதைக் குறிக்கிற உவமையாகும்.

1 Timothy 3:8-10

உதவிக்காரரும், அந்தப்படியே

"கண்காணிகளுக்கு தகுதிகள் இருக்கிறது போல, உதவிக்காரருக்கும் தகுதிகள் இருக்கிறது.

மதிக்கத்தக்கவர்களாய்

"மரியாதைக்கு பாத்திரராய் இருக்க வேண்டும்"

இரு நாக்கு உள்ளவர்களாய் இருக்கக்கூடாது

"ஔ காரியத்திற்கு அர்த்தமில்லாத இன்னொன்றை சொல்லக்கூடாது" அல்லது " ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து ஒருவரிடம் ஒன்றைக் கூறிவிட்டு மற்றொருவரிடம் வேறு அர்த்தத்துடன் அதை சொல்லக் கூடாது"

அதிக மதுபானம் பண்ணாமல்

"அதிகமான மதுவிற்கு அடிமையாகாமல்" அல்லது "அதிகமான மதுவிற்கு அர்ப்பணிக்காமல்"

பேராசை இல்லாமல்

"இழிவான ஆதாயம் தேடாமல்"

வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத்தின் சத்தியத்தை அவர்கள் காத்துக்கொள்ளவேண்டும்

"நாம் விசுவாசிக்கிறதும் தேவன் நமக்கு வெளிப்படுத்தினதுமான உண்மையான செய்தியை தொடர்ந்து விசுவாசிக்கவேண்டும்." இது தேவன் அந்த பொழுதில் அவர்களுக்கு காண்பித்துக்கொண்டிருந்ததும் சிறிது காலம் இருந்ததுமான உண்மையைக் குறிக்கிறது.

சுத்த மனசாட்சியோடு

"அவர்கள் ஒரு தவறும் செய்யவில்லை என்று அறியும் மனசாட்சியோடு"

அவர்கள்...முன்னதாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்

"அவர்கள் ஊழியம் செய்ய தகுதியானவர்களா என்று சோதித்து அறியப்படவேண்டும்" அல்லது "அவர்கள் தங்களைத் தாங்களே ஆராய்ந்து அறியவேண்டும்"

அவர்கள் குற்றம் சாட்டுதலுக்கும் மேலானவர்கள்

"ஒருவரும் அவர்களிடத்தில் எந்தத் தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்" அல்லது "அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கிறதினால்" அல்லது "அவர்கள் ஒரு தவறு செய்யாததினால்"

1 Timothy 3:11-13

பெண்களும் அதே போல

"மனைவிகள், அதே போல தகுதிகள் உடையவர்களாய் இருக்க வேண்டும்" அல்லது "உதவிக்கார பெண்களுக்கும் உதவிக்கார ஆண்களைப் போல தகுதிகள் இருக்க வேண்டும்." பெண்கள் என்னும் பொதுவான வார்த்தை பெண்களைப் பொதுவாகக் குறிக்கலாம். ஆனால், இது உதவிக்காரரின் மனைவிகளை அல்லது உதவிக்காரப் பெண்களைக் குறிப்பது போல உள்ளது. ஏனென்றால் முந்தின மற்றும் பின்வரும் வசனங்கள் தெளிவாக உதவிக்காரரைப் பற்றியே பேசுகின்றன.

நல்லொழுக்கமுள்ளவர்களாய்

"ஒழுங்காக நடந்து"

அவதூறு பண்ணாதவர்கள்

"மற்றமக்களைக் குறித்து தீமையாகப் பேசாமல் அவர்கள் இருக்க வேண்டும்"

சமநிலையில் இருக்கின்றவர்கள்

"அவர்கள் எதையும் மிகுதியாய் செய்கிறதில்லை"

ஒரு மனைவியின் புருஷன்

இந்தப் பதம், "ஒரு பெண் மனிதர்" என்று அர்த்தப்படுகிறது. இதை, "ஒவ்வொரு மனிதனும் ஒரு மனைவியை வைத்து" என்று மொழிபெயர்க்கலாம். இது முன்னமே விதவையாக்கப்பட்ட ஆண்களையும், விவாகரத்துப் பெற்ற ஆண்களையும் அல்லது திருமணம் ஆகாத ஆண்களையும் தவிர்த்து கூறுகிறதா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தங்களது வீட்டையும் குழந்தைகளையும் நன்றாக கவனித்துக்கொள்ளும்

"தங்களது வீட்டில் வசிக்கும் மற்றவர்களையும், தங்களது குழந்தைகளையும் சரியாக பார்த்துக்கொள்ளுகிற"

அவர்களுக்கு

"அந்த உதவிக்காரர்களுக்கு" அல்லது "அந்த ஆயர்களுக்கு, உதவிக்காரர்களுக்கு, உதவிக்காரப் பெண்களுக்கு" அல்லது "அந்த சபைத் தலைவர்களுக்கு"

தங்களுக்கு சேர்த்துக்கொள்வார்கள்

"தங்களுக்கு பெற்றுக்கொள்ளுவார்கள்" அல்லது "தங்களுக்கு ஆதாயம் பண்ணிக்கொள்வார்கள்"

நல்ல நிலைமை

சாத்தியமான அர்த்தங்கள் 1. "சபைக்குள்ளே ஒரு நன்மதிப்பு" அல்லது 2. "தேவனுக்கு முன்பாக நிற்கத்திராணியாக" அல்லது 3. "சபையில் பதவி ஒரு முன்னேற்றம், எ.கா. "ஆயருக்கு நிற்க"

பெற்றுக்கொள்ள ... விசுவாசத்தில் மிகவும் தைரியம்

"ஆதாயம்பண்ண ... தங்களது விசுவாசத்தைக் குறித்து பேச மிகுந்த தைரியத்தை" அல்லது "தாங்கள் விசுவாசிக்கிறது உண்மை என்பதால் தைரியப்பட்டு" அல்லது "தாங்கள் விசுவாசிக்கிறது இன்னது என்று அறிந்திருக்கிறதினால், மனிதர்களுக்கு முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் தைரியப்பட்டு" அல்லது "தாங்கள் விசுவாசிக்கிறதைக் குறித்து பேச மிகுந்த தைரியத்தை ... பெற்றுக்கொள்ள"

1 Timothy 3:14-15

இந்தக் காரியங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன்

"இந்த அறிவுரைகளை நான் உங்களுக்கு எழுதுகிறேன்"

நான் உங்களை சீக்கிரமாய் வந்து காண நம்பிக்கையாய் இருக்கிறேன்

"ஆயினும், நான் உங்களிடத்தில் சீக்கிரம் வர நம்பிக்கையாய் இருக்கிறேன்"

ஆனால் நான் தாமதித்தால்

"அங்கு நான் சீக்கிரமாக வரமுடியவில்லை என்றால்" அல்லது "அங்கு சீக்கிரமாக வந்து இருப்பதற்கு ஏதாகிலும் தடை செய்தால்"

அதனால் நான் எழுதுகிறேன் ... வழிநடத்தப்பட வேண்டும்

"தேவனுடைய குடும்பத்தை எப்படி நீங்கள் வழிநடத்த வேண்டும்"

சத்தியத்தின் ஆதாரமும் தூணும்

இந்த சினையாகுபெயர், தேவன் சத்தியத்தைக் காண்பிக்கும் ஒரு பெரிய திடமான மேடையைக் குறித்ததாகும்.

1 Timothy 3:16

ஒன்றாக நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்

"எல்லாக் கேள்விகளுக்கும் அப்பால்" அல்லது "ஒரு சந்தேகமும் இல்லாமல்." பின்வருகிறது ஒரு பாடலாக இருக்கலாம், அல்லது ஒரு கவிதையாக இருக்கலாம், அல்லது ஆதித் திருச்சபையின் எல்லா விசுவாசிகளும் பகிர்ந்துகொண்ட முக்கியமான உபதேசங்களின் அட்டவணையாக இருக்கலாம்.

மாம்சத்தில்

"ஒரு உண்மையான மனிதனாக"

தேவபக்திக்குரிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் மகா மேன்மையாய் இருக்கிறது

"தெய்வபக்தியோடு எப்படி வாழ்வது என்பதைப் பற்றி நமக்கு தேவன் வெளிப்படுத்தின சத்தியம் மகா மேன்மையுள்ளது.

ஆவியானவரால் நீதியுள்ளவராக்கப்பட்டார்

"தான் யார் என்று இயேசு கூறினாரோ அது தான் அவர் என்று பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்தினார்"

நாடுகள் மத்தியில் சொல்லப்பட்டார்

"அனேக நாடுகளில் உள்ள மக்கள் இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்கு சொன்னார்கள்"

உலகத்தில் விசுவாசிக்கப்பட்டார்

"உலகத்தின் அனேக பகுதியில் உள்ள மக்கள் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்"

1 Timothy 4

1 Timothy 4:1-2

விசுவாசத்தை விட்டு

"இயேசுவில் விசுவாசிக்கிறதை நிறுத்தி" அல்லது "தாங்கள் விசுவாசிக்கிறதில் இருந்து விலகி" பிற்காலங்களில்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "பவுலின் காலங்களை விட பிந்திய காலம், "வரப்போகும் காலம்" அல்லது "வருங்காலம்" அல்லது 2. "பவுலின் சமயம், "முடிவுக்கு முன் இருக்கும் நேரத்தில்."

கவனம் செலுத்துங்கள்

"கவனம் செலுத்துவதின் மூலம்" அல்லது "அவர்கள் கவனம் செலுத்துகிறதினால்" அல்லது "கவனிக்கும்பொழுது" அல்லது "இவர்கள் கவனம் செலுத்துகிறவர்கள்"

வஞ்சிக்கிற ஆவிகளும் பிசாசுகளின் போதனைகளும்

"மக்களை வஞ்சிக்கும் ஆவிகளும் பிசாசுகள் கற்றுக்கொடுக்கும் காரியங்களும்"

பொய்யருடைய மாயத்தினால்

"பொய் சொல்லும் மாயக்காரர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டு"

அவர்களது மனசாட்சியிலே சூடுண்ட

இந்த உவமை, எஜமான்கள் அடிமைகளின் அல்லது மிருகங்களின் தோல்களின் மேல் தங்களுக்கு சொந்தம் என்று சொல்லத் தழும்பு உண்டாக்க சூடான உலோகத்தை வைத்து அழுத்துவதைக் குறிக்கிறது. சாத்தியமான அர்த்தங்கள் 1. அடையாளம் கண்டுகொள்ளக் கூடியக் குறி, "அவர்கள் மாயக்காரர்கள் என்று கண்டும் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்," அல்லது 2. அவர்களுடைய மனசாட்சி மரித்துப்போய் இருக்கிறது, "ஒரு சூடான உலோகத்தை அவர்களுடைய மனசாட்சியின் மீது வைத்து அழுத்தி அதை மரத்துப்போக செய்தது போல."

1 Timothy 4:3-5

அவர்கள் கண்டிப்பாக

"அந்த மக்கள் கண்டிப்பாக"

திருமணம் பண்ணாதிருக்க

"விசுவாசிகள் திருமணம் பண்ணாதிருக்கத் தடைபண்ணி" அல்லது "திருமணம் செய்துகொள்ளுவதில் இருந்து விசுவாசிகளைத் தடுத்து"

தடுத்து ... உணவைப் பெற்றுக்கொள்ளுவதைத்

"மக்கள் உணவு உண்பதிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்து" அல்லது "மக்களைத் தடுத்து ... உணவு உண்பதில் இருந்து" அல்லது "சில உணவு வகைகளை உண்பதில் இருந்து...மக்களுக்கு அனுமதி மறுத்து." "மக்கள்" என்னும் வார்த்தை இங்கு அநேகமாக "விசுவாசிகளாய்" இருக்கலாம். (UDB)

சத்தியத்தை அறிந்துகொள்ளும் விசுவாசிகள்

"சத்தியத்தை அறிந்த விசுவாசிகள்" அல்லது "சத்தியத்தைக் கற்றுக்கொண்ட விசுவாசிகள்"

நன்றியோடு எடுத்துக்கொள்ளும் எதையும் மறுக்கப்படுவதில்லை

"தேவனுக்கு நாம் நன்றி சொல்லும் எதையும் நாம் வீசிவிடுவதில்லை" அல்லது "தேவனுக்கு நன்றி சொன்ன எதையும் நான் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதில்லை" அல்லது "நன்றியோடு நான் உண்ணும் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும்."

தேவனுடைய வார்த்தையினாலும் ஜெபத்தினாலும் அது பரிசுத்தம் பண்ணப்படும்

"தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதாலும் அவரிடம் ஜெபிப்பதாலும் அவைகளை தேவனுடையப் பயன்பாட்டிற்காக நாம் பிரித்தெடுக்கிறோம்" அல்லது "தேவன் வெளிப்படுத்தின சத்தியத்தோடு ஒத்துப்போகும் ஜெபத்தோடு அவைகளை தேவனுடையப் பயன்பாட்டிற்காக நாம் பிரித்தெடுக்கிறோம்"

1 Timothy 4:6-8

இந்தக் காரியங்களை முன்பதாக வைத்து

"விசுவாசிகளின் மனதில் இந்த எண்ணங்களைப் போடுங்கள்" அல்லது "விசுவாசிகள் இந்த வார்த்தைகளை நினைவுகூற உதவி செய்யுங்கள்." "நினைவுகள்" மற்றும் வார்த்தைகள்" 4:5 இல் இருக்கும் எல்லாப் போதனைகளையும் குறிக்கிறது.

தேறினவனாகி

"பயிற்றுவிக்கப்பட்டு" (UDB). தேவன் தீமோத்தேயுவை பலப்படுத்தி தேவனுக்குப் பிரியமானதை செய்ய கற்றுக்கொடுக்கிறார்.

விசுவாசத்தின் வார்த்தைகள்

"மக்களை விசுவாசிக்கச் செய்யும் வார்த்தைகள்"

கிழவிகளின் பேச்சுமாய் இருக்கிற சீர்கேடான கட்டுக்கதைகள்

"சீர்கெட்டதும் கிழவிகளின் புராணங்களும்." கதைகள் என்பதைக் குறிக்கும் வார்த்தையே "புராணங்கள்" என்பதற்குமான வார்த்தை. "கிழவிகள்" என்று சொல்லுகையில் பவுல் வேண்டுமென்றே பெண்களை இழிவுபடுத்துகிறதில்லை. ஆண்கள் இளமையிலேயே மரித்துவிடுவார்கள் என்று அவரும் அவரது வாசகர்களும் அறிவார்கள். வயோதிபத்தால் தளர்ந்த மனதுடன் இருக்கும் ஆண்களை விட நிறைய பெண்கள் உள்ளனர். தெய்வபக்தியில் உங்களை பயிற்றுவியுங்கள்

"மிகவும் தேவபக்தியோடு இருக்க உங்களைப் பயிற்றுவியுங்கள்" அல்லது "தேவனைப் பிரியப்படுத்தும் வழிகளில் நடக்க உங்களைப் பயிற்றுவியுங்கள்" அல்லது "மிகவும் தெய்வபக்தியோடு மாற கடினமாக வேலை செய்யுங்கள்"

சரீரப் பயிற்சி

"உடற்பயிற்சி"

இந்த வாழ்க்கையின் வாக்குத்தத்தைப் பிடித்திருக்கிறது

"இந்த வாழ்க்கைக்கு நல்லது" அல்லது "இந்த வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது"

1 Timothy 4:9-10

எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமாக

"உங்களுடைய முழுமையான நம்பிக்கைக்கு பாத்திரமாக" அல்லது "உங்களுடைய முழு நம்பிக்கைக்கு பாத்திரமாக"

ஏனென்றால், இது அதற்காக

"இது தான் காரணம்"

நாம் போராடி மிகவும் கடினமாக உழைக்கிறோம்

"நாம் யுத்தம்பண்ணி மிகவும் கடினமாக உழைக்கிறோம்" அல்லது "நம்முடைய எதிரிகளோடு மற்றும் நாம் மிகவும் கடினமாக உழைக்கிறோம்"

ஜீவிக்கிற தேவன் மேல் நமக்கு நம்பிக்கை இருக்கிறது

"நம்முடைய நம்பிக்கையை ஜீவிக்கிற தேவன் மேலே வைத்திருக்கிறோம்" அல்லது "நம்முடைய நம்பிக்கையை ஜீவிக்கிற தேவன் மேலே வைத்திருக்கிறோம்"

விசேஷமாக விசுவாசிகளுடைய

"ஆனால் அவர், பிரத்தியேகமாக அவரை விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்கும் இரட்சகர் அவர்"

1 Timothy 4:11-13

இந்தக் காரியங்களை அறிவித்து கற்றுக்கொடு

"இந்தக் காரியங்களைக் கட்டளையிட்டு கற்றுக்கொடு" அல்லது "நான் சற்றே குறிப்பிட்ட காரியங்களை கட்டளையிட்டு கற்றுக்கொடு"

உன்னுடைய இளம் வயதைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டைப் பண்ணாதிருப்பானாக

"நீ இளைய வயதுள்ளவன் ஆதலால் உன்னை ஒருவனும் முக்கியமில்லை என்று கருதாதிருப்பானாக"

வாசிக்கிறதில் பங்குபெறு

"வேத வாக்கியங்களை வாசி" அல்லது "தேவனுடைய வார்த்தையை மக்கள் முன்னிலையில் வாசிக்கிறதைத் தொடர்ந்துசெய்"

பங்குபெறு ... புத்திசொல்லுகிறதில்

"மற்றவர்களுக்கு புத்திசொல்லு" அல்லது "தேவனுடைய வார்த்தையை தங்களது வாழ்க்கையில் அப்பியாசிக்க மற்றவர்களை உற்சாகப்படுத்து"

1 Timothy 4:14-16

மூப்பர்கள் கைகளை வைத்தபொழுது

தீமோத்தேயுவின் மீது சபை மூப்பர்கள் கைகளை வைத்து தேவன் தாம் கட்டளையிட்ட வேலையை செய்ய தேவன் தீமோத்தேயுவை திடன்கொள்ளச் செய்யும்படி ஜெபிக்கும் ஒரு சடங்கு இருக்கிறது.

உன்னையும் உனக்கு செவிகொடுக்கிறவர்களையும் காத்துக்கொள்ளுவாய்

"பொய்யான செய்திகளை நம்புகிறதில் இருந்தும் தவறான காரியங்கள் செய்கிறதில் இருந்தும் உன்னையும் உனக்கு செவிகொடுக்கிறவர்களையும் ரட்சித்துக்கொள்ளுவாய்." கள்ளப் போதகத்தை நம்புகிறவர்களும் தவறானக் கிரியைகள் செய்கிறவர்களும் அதின் பலனாகப் பாடுகள் அனுபவிக்க வேண்டும். கள்ளப்போதகத்தை நம்பி மற்றும் தவறு செய்து, தீமோத்தேயுவும் அவனது நண்பர்களும் பாடுபடுவதை பவுல் விரும்பவில்லை.

உனக்குள் இருக்கும் வரத்தை இழந்துவிடாதே

"தேவன் உனக்குக் கொடுத்த வரத்தைப் பிரயோஜனப்படுத்து"

தீர்க்கதரிசனத்தின் மூலம்

"சபை மூப்பர்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசின போது"

இந்தக் காரியங்களுக்காக அக்கறைப்படு, அவைகளில் நிலைத்திரு

"இந்த எல்லாக் காரியங்களையும் செய்து அவைகளின் படி நட"

உன்னுடைய வளர்ச்சி எல்லா மக்களுக்கும் காணப்படட்டும்

"மற்ற மக்கள் உன்னுடைய வளர்ச்சியைக் காணும் பொருட்டு" அல்லது "அவைகளை செய்வதில் உன்னுடைய முன்னேற்றத்தை மற்ற மக்கள் காண்பார்கள் "

உன்னைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாயிரு

"உன்னை ஜாக்கிரதையாய் நடத்து" அல்லது "உன்னுடைய நடக்கையைக் கட்டுப்படுத்து"

இந்தக் காரியங்களில் தொடர்ந்திரு

"இந்தக் காரியங்கள் செய்வதில் நிலைத்திரு"

1 Timothy 5

1 Timothy 5:1-2

பவுல் இந்தக் கட்டளைகளை தீமோத்தேயு என்கிற ஒரு மனிதனுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். "உனக்கு" என்னும் வார்த்தையின் வேறு வடிவங்களை மொழிகள் கொண்டிருந்தாலோ அல்லது வேறு வடிவக் கட்டளைகளை கொண்டிருந்தாலோ அவைகளை ஒருமையில் பயன்படுத்தலாம்.

முதிர்வயதுள்ள மனிதனைக் கடிந்துகொள்ளாதே

"வயாதான மனிதனோடு மிகவும் கடினமாகப் பேசாதே" அவனை ஒரு தகப்பனைப் போலக் கருதி புத்திசொல்லு

"உன்னுடைய தகப்பனை உற்சாகப்படுத்துவதுபோல அவனையும் உற்சாகப்படுத்து"

இளைய ஆண்களை சகோதரர்களைப் போலக் கருதி புத்திசொல்லு

"இளைய சகோதரர்களை உன்னுடைய சகோதர்கள் போல பாவித்து புத்திசொல்லு" அல்லது "வாலிபர்களை சகோதரர்களைப் போல நடத்து"

முதிர்ந்த பெண்களை ஒரு தாயைப் போலக் கருதி புத்திசொல்லு

"உன்னுடைய தாயைப் போல முதிர்வயது பெண்களை நடத்து" அல்லது "உன்னுடைய தாயை உற்சாகப்படுத்துவதுபோல முதிர்வயது பெண்களை உற்சாகப்படுத்து"

இளைய பெண்களை சகோதரிகளாக

"உன்னுடைய இளைய சகோதரிகளிடம் நடந்துகொள்ளுவது போல இளையப் பெண்களிடம் நடந்துகொள்" அல்லது "உன்னுடைய சகோதரியை நடத்துவது போல இளைய பெண்களை நடத்து"

1 Timothy 5:3-4

கனம்

"மரியாதை செலுத்து மற்றும் தேவைகளுக்குக் கொடு"

விதவைகள், உண்மையான விதவைகள்

"விதவைகள், தேவையில் இருக்கும் விதவைகள்" அல்லது "விதவைகள், அவர்களுக்குக் கொடுக்க ஒருவரும் இல்லாத விதவைகள்"

ஆனால், ஒரு விதவை

"ஆனால் ஒரு விதவை"

குழந்தை

"தனது குழந்தை என்று அவள் கருதும் யாராக இருந்தாலும்" அல்லது "அவளை தாய் என்று சொல்லும் யாரானாலும்"

பேரக்குழந்தைகள்

"தன் வாரிசாக அவள் கருதும் யாராயினும்" அல்லது "அவளைத் தாய் என்றோ பாட்டி என்றோ அழைக்கும் யாராயினும்"

அவர்கள் முதலாவது

"மற்ற எல்லாவற்றிற்கும் முதலாவது அவர்கள்" அல்லது "இதை முதன்மையாக அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்"

கனத்தைக் காண்பிக்கக் கற்றுக்கொள்ள

"தங்களது பரிதாபத்தைக் காட்டட்டும்" அல்லது "தெய்வபக்தியைக் காட்டட்டும்" அல்லது "தங்களது மதத்தை நிரூபிக்கட்டும்" அல்லது "அவர்களது கடமைகளை செய்ய பயிலட்டும்"

அவர்களுக்குரிய வீடுகளில்

"அவர்களுடையக் குடும்பங்களுக்கு" அல்லது "அவர்களது வீடுகளில் வாழுகிறவர்களுக்கு"

அவர்களது பெற்றோருக்கு பதில் செய்ய

"அவர்களது பெற்றோருக்குத் திரும்பக் கொடுக்க" அல்லது "அவர்களுக்கு அவர்கள் பெற்றோர் செய்த நன்மைகளைத் திரும்பவும் அவர்களுக்குக் கொடுக்க"

ஏனென்றால், இது தேவனுக்குப் பிரியம்

"அவர்கள் இவைகளை செய்யும்போது தேவன் சந்தோஷப்படுவார்" அல்லது "இந்த காட்டப்பட்ட கனத்தின் கிரியை தேவனைப் பிரியப்படுத்தும்.

1 Timothy 5:5-6

ஆனால் உண்மையான விதவை தனியே விடப்படுகிறாள்

"ஆனால், உண்மையில் விதைவையாய் இருக்கிறவளுக்குக் குடும்பம் இருக்காது"

வேண்டுதல்களோடும் ஜெபங்களோடும் அவள் எப்பொழுதும் அவர் முன் காத்திருக்கிறாள்

"தேவனுக்காக வேண்டுதல்களோடும் ஜெபங்களோடும் அவள் பொறுமையோடு காத்திருக்கிறாள்"

எப்படியாயினும்

"ஆனால்"

பகட்டை விரும்பும் பெண்

"தன்னுடைய சொந்த சுகபோகத்திற்காக வாழும் பெண்"

செத்தவள்

இந்த உவமை, தேவனுக்கு அவள் செவிகொடுக்க முடியாததைக் குறிக்கிறது. இதை, "ஒரு செத்த மனிதனைப்போல், அவள் தேவனுக்கு செவிகொடுக்கவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

உயிரோடு

இது சரீரப்பிரகாரமான வாழ்க்கையைக் குறிக்கிறது.

1 Timothy 5:7-8

இந்தக் காரியங்களைப் பிரசங்கம் பண்ணு

"இந்தக் காரியங்களைக் கட்டளையாகக் கொடு" அல்லது "இந்தக் காரியங்களை அதிகாரத்தோடு கற்றுக்கொடு." தீமோத்தேயு பவுலின் வார்த்தைகளைத் தான் முதலில் கீழ்ப்படிந்து மற்றவர்கள் கீழ்ப்படியக் கட்டளையிடவும் வேண்டும்.

அதனால் அவர்கள் குற்றம் சாட்டப்படாதபடிக்கு

"அவர்களிடத்தில் ஒருவரும் குற்றம் கண்டுபிடிக்காதபடிக்கு." சாத்தியமான அர்த்தங்கள் 1. "இந்த விதவைகளும் அவர்களது குடும்பங்களும்" (UDB) அல்லது 2. "சபை." பெயர்வினைகளை "அவர்கள்" என்று சொல்வது சிறந்ததாய் இருக்கும்.

அவனது உறவினர்களுக்கு கொடுக்காமல் இருக்கிறவன்

"அவனது உறவினர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்காதவன்" அல்லது "அவனது உறவினர்களின் தேவைகளில் உதவி செய்யாமல்"

அவனது சொந்த உறவினர்களுக்கு

"அவனுடைய எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கு" அல்லது "அவனுடைய வீட்டில் வசிக்கிறவர்கள்"

அவனது சொந்த வீட்டாருக்கு

"அவனுடைய குடும்பத்திற்கு" அல்லது "அவனுடைய வீட்டில் வசிப்பவர்களுக்கு"

அவன் விசுவாசத்தை மறுதலித்தவன்

"அவன் விசுவாசத்தை மறுதலித்தவன் போல நடந்துகொள்ளுகிறான்" அல்லது "நாம் விசுவாசிக்கும் சத்தியத்திற்கு எதிராக அவன் நடக்கிறான்" அல்லது "அவனுடைய விசுவாசத்திற்கு எதிராக தனது முதுகைத் திருப்பினான்"

...விசுவாசிகளை விட மோசமானவன்

"...இயேசுவை விசுவாசியாமல் இருப்பவனை விட மோசம்" அல்லது "இயேசுவை விசுவாசியாமல் இருப்பவர்கள் மேன்மையானவர்கள்..." இயேசுவை விசுவாசியாதவர்கள் கூட தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளுகிறார்கள்; விசுவாசிகள் எத்தனை அதிகம் செய்ய வேண்டும்!

1 Timothy 5:9-10

விதவையாக சேர்த்துக்கொள்

எழுதப்பட்டதோ இல்லையோ விதவைகளின் ஒரு அட்டவணை உள்ளதுபோல இருக்கிறது. சபை இந்தப் பெண்களின் இருப்பிடம், உடை, மற்றும் உணவின் தேவைகளை சந்திக்கிறது. அந்தப் பெண்கள் சபைக்கு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுபது வயதிற்கு குறையாதவர்கள்

அறுபது வயதுக்கு உள்ளாக இருக்கும் விதவைகள் மறுத்திருமணம் செய்வார்கள். ஆனால், அறுபது வயதிற்கு மேல் உள்ள விதவைகளை சபைதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு புருஷனையுடைய மனைவி

"தனது புருஷனுக்கு விசுவாசமாய் இருக்கும் ஒரு பெண்"

அவள் நல்ல செய்கைகளுக்காக அறியப்பட வேண்டும்

ஒரு பெண் செய்ய அறியப்படவேண்டிய நல்லக் கிரியைகளின் எடுத்துக்காட்டுகளைப் பின்வரும் பதங்கள் கூறுகிறது.

கால்களைக் கழுவி

"உதவி செய்ய சாதாரண வேலை செய்து." மண்ணிலும் அழுக்கிலும் நடந்து வந்த மக்களின் அழுக்கான கால்களை கழுவுதல் என்பது மற்ற மக்களின் தேவைகளை சந்தித்து அவர்களின் வாழ்க்கையை இன்னும் சந்தோஷமாக மாற்றுவதற்கான உவமை ஆகும்.

பரிசுத்தவான்கள்

"தேவனுடைய பரிசுத்த மக்கள்"

எல்லா நற்கிரியைகளையும் பின்பற்றி

"நற்கிரியைகளை செய்வதற்காக அறியப்பட்டு"

1 Timothy 5:11-13

ஆனால் இளைய விதவைகளைப் பொருத்தமட்டில், அவர்களை அந்த அட்டவணையில் சேர்க்க மறுத்துவிடுங்கள்

"இளைய விதவைகளை அந்த அட்டவணையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள்" சபை உதவி செய்யும் அறுபது வயதுக்கு மேற்பட்ட விதவைகளின் அட்டவணை இது.

கிறிஸ்துவுக்கு விரோதமாக சரீரப் பிரகாரமான விருப்பங்களால் மேற்கொள்ளப்பட்டு

"அவர்களது காமவிகாரத்தினால் கிறிஸ்துவிடமிருந்து திருப்பப்படுவார்கள்" அல்லது "ஆவிக்குரிய அற்பணிப்பை விட்டுவிட தூண்டும் காம விருப்பங்களைக் கொண்டுள்ளார்கள்"

முதலாவது அர்ப்பணிப்பை முறித்து

"அவர்களது முதலாவது அர்ப்பணிப்பை காத்துக்கொள்ளவில்லை" அல்லது "முன்னதாக செய்வதாக வாக்குப்பண்ணினதை அவர்கள் செய்யவில்லை"

அர்ப்பணம்

சபை தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால் சபைக்கு தங்கள் வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதாக அவர்கள் செய்த உடன்படிக்கை தான் விதவைகளின் அர்ப்பணம்.

புறங்கூறுதல்

இந்த மக்கள் மற்ற மக்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுகிறவர்கள்.

அவர்கள் சொல்லக் கூடாதக் காரியங்கள்

"குறிப்பிட தகுதி இல்லாத காரியங்கள்"

1 Timothy 5:14-16

எங்களை குற்றப்படுத்த

எங்களை என்னும் வார்த்தையை மொழிபெயர்க்கிறவர் சேர்த்து உள்ளார். "அவர்களுக்கு" என்கிற வார்த்தைப் பெண்களைக் குறிப்பிடுகிற குறிப்பாக இதை எடுக்கலாம்.

சாத்தானைப் பின்பற்றிப் போனார்கள்

"கிறிஸ்துவின் பாதையை விட்டு சாத்தானைப் பின்தொடர்ந்தார்கள்"

விசுவாசிக்கிற எந்த பெண்ணும்

"கிறிஸ்தவப் பெண்" அல்லது "கிறிஸ்துவில் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும்"

விதவைகள் உள்ளவர்கள்

"அவளது உறவினவர்கள் மத்தியில் விதவைகள் உள்ளவர்கள்"

உண்மையான விதவைகள்

"அவர்களுக்குக் கொடுக்கும்படி ஒருவரும் இல்லாத பெண்கள்"

1 Timothy 5:17-18

கனத்திற்கு தகுதியாகக் கருதுங்கள்

எல்லா விசுவாசிகளாகிய நீங்கள் நினைக்க வேண்டும்...தகுதியாக"

இரட்டிப்பான கனம்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இரண்டு வகை கனம்: மரியாதை (கொடுப்பது)" அல்லது "2. "மற்றவர்கள் பெறுவதைக் காட்டிலும் அதிக மரியாதை"

வார்த்தையிலும் கற்றுக்கொடுப்பதிலும் வேலை செய்கிறவர்கள்

"தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம்பண்ணி போதிக்கிறவர்கள்"

வாய்க்கட்டு

மிருகங்கள் வாய்த் திறவாமல் இருக்க அவைகளின் மூக்கு துவாரத்தின் மேலே போடப்படும் ஒரு கடிவாளம்

ஏர் மாடு

ஒரு பெரிய பலமான மாட்டைபோன்ற ஒரு மிருகம்.

தானியங்களை போரடிக்கிற

ஒரு மிகவும் கனமான பொருளை அறுவடை செய்யப்பட்ட தானியக் கதிர்கள் மீது ஒட்டி அவைகளில் இருந்து சாப்பிட வேண்டிய தாணியங்களைப் பிரித்தெடுப்பது. ஏர் மாடுகள் வேலை செய்யும்போதே சிலக் கதிர்களை உண்ண அனுமதிக்கப்படுகிறது.

தகுதியான

"பாத்திரமான"

1 Timothy 5:19-20

பெற்றுக்கொண்டு

"செவிகொடுக்க" அல்லது "ஏற்றுக்கொள்ள"

இரண்டு அல்லது மூன்று

"குறைந்தது இரண்டு" அல்லது "இரண்டு அல்லது அதற்கு மேல்"

கடிந்துகொண்டு

"கண்டித்து" அல்லது "திருத்து"

எல்லாருடையப் பார்வைக்கும்

"எல்லாரும் பார்க்கும்படியாக"

மற்றவர்கள் பயப்படும்படி

"பாவம் செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்பதால்"

1 Timothy 5:21-22

நீ

பவுல் தீமோத்தேயு என்கிற ஒருவனுக்கு எழுதுகிறார். அதனால், எல்லா வகையான நீ மற்றும் கட்டளைகளையும் ஒருமையில் வைக்கவும்.

பட்சபாதம்

"முன்னமே நியாயந்தீர்க்கிறது" அல்லது "முடிவு எடுக்கும் முன்பதாக ஒவ்வொருவரின் கதையையும் நீங்கள் கேட்க வேண்டும்." காரியத்தை தீமோத்தேயு கவனிக்கவேண்டும் அதன் பின்பு நியாயந்தீர்க்க வேண்டும்.

பட்சபாதம் பண்ணுதலினால்

"உனக்கு பிரியமான மக்கள் சார்பில் சாய்தல்" அல்லது "உன்னுடைய நண்பர் யார் என்னும் அடிப்படையில்." யார் பங்குபெற்றுள்ளார்கள் என்பதைக் காணாமல் நடந்தவைகளின் அடிப்படையில் தீமோத்தேயு நியாயந்தீர்க்க வேண்டும்.

கைகளை வைத்து

ஒன்று அல்லது அதற்கு மேலான சபைத் தலைவர்கள் மக்கள் மீது கைகளை வைத்து தேவனைப் பிரியப்படுத்துகிற ஊழியம் செய்ய தேவன் அவர்களை பலப்படுத்தும்படி ஜெபிப்பார்கள். இது ஒரு சடங்காக நடைபெறும். இந்த சடங்கில் ஊழியம் செய்ய ஒருவன் நல்ல குணாதிசயத்தை நீண்ட நாட்கள் காண்பிக்கும்வரைக் காத்திருந்து பின்னர் இந்த சடங்கில் சபைக்கு சேவை செய்ய சேர்க்கவேண்டும்.

மற்றவருக்குரிய பாவத்தில் பங்குவகிக்க

"மற்றவரின் பாவத்தில் சேர்ந்து கொள்ளாதீர்கள்" சாத்தியமான அர்த்தங்கள் 1."சபைக்கு வேலை செய்யும்படி பாவத்தினால் குற்றப்படுத்தப்பட்ட ஒருவனை தீமோத்தேயு தெரிந்துகொண்டால், தேவன் அந்த மனிதனின் பாவத்திற்கு அவனைப் பொறுப்பாளியாக பிடிப்பார்." அல்லது 2." மற்றவர் செய்யப் பார்த்த பாவங்களை தீமோத்தேயு செய்யலாகாது.

1 Timothy 5:23-25

(வசனங்கள் 23 எவ்வாறு வசனம் 22 மற்றும் 24

25 வசனங்களோடு பொருந்தும் என்பது தெளிவில்லை. பவுல் சொல்ல மறந்துபோவதற்கு முன்னதாக சொல்ல விரும்பிய தொடர்பில்லாதக் காரியமாய் இருக்கலாம். அது தொடர்புள்ளதாய் இருந்தால், பவுல் நடத்தையைக் குறித்து பேசின முந்தைய வசனத்தில் சொன்ன "சுத்தம்" என்று சொல்லும் வழியாக இருக்கலாம்.)

நீ இனி தண்ணீர் குடிக்கக் கூடாது

அல்லது "தண்ணீர் குடிப்பவனாய் இருப்பதை நிறுத்து" தண்ணீரை மட்டுமே குடிக்கிறவன் (UDB). பவுல் தண்ணீர் குடிப்பதைத் தடுக்கவில்லை. தீமோத்தேயுவை திராட்ச ரசத்தை மருந்தாகப் பயன்படுத்துமாறு ஆலோசனைக் கூறுகிறார்.

(வசனம் 24இல், பவுல் தான் வசனம் 22இல் சொல்லியவற்றை தொடர்கிறார். சில மனிதர்களுடையப் பாவங்களே சீக்கிரமாய் தங்கள் கைகளை வைக்கிறவர்களால் செய்யப்படுகிற பாவங்கள் ஆகிறது.

அவைகள் நியாயத்தீர்ப்புக்கு அவர்களையும் முந்திக்கொள்ளும்

"அவர்களுடையப் பாவங்கள் அந்த மக்களுக்கு முன்பதாக நியாயத்தீர்ப்புக்கு செல்லும்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "சபை இந்த மனிதன் தலைவனாக இருக்கலாமா அல்லது வேண்டாமா என்று நியாயந்தீர்க்கும் நேரத்திற்கு முன்னதாகவே அவர்களுடையப் பாவங்கள் அந்த மனிதன் எப்படிப்பட்டவன் என்று காண்பித்துவிடும்," அல்லது 2. "சபை இந்த மனிதன் குற்றவாளியா அல்லது இல்லையா என்று நியாயந்தீர்க்கும் நேரத்திற்கு முன்னதாகவே அவர்களுடையப் பாவங்கள் அந்த மனிதன் எப்படிப்பட்டவன் என்று காண்பித்துவிடும்" அல்லது 3. "அவர்களுடையப் பாவங்கள் வெளிப்படையாய் இருக்கிறது, தேவன் அவர்களை இப்பொழுதுநியாந்தீர்ப்பார்"

சிலது பின்பாகத் தொடரும்

அந்த மக்களை சிலப்பாவங்கள் பின்தொடரும்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "தீமோத்தேயு சிலப்பாவங்களை பிந்தி வரை அறிந்துகொள்ளமாட்டான், அல்லது 2. "பிந்தைய நேரம் வரை சபை சிலப்பாவங்களை அறிந்திருக்காது" அல்லது 3. "கடைசி நியாயத்தீர்ப்பு வரும்வரை தேவன் சிலப் பாவங்களை நியாயம்தீர்க்கமாட்டார்"

மற்றவைகளை மறைத்து வைக்க முடியாது

"மற்ற நல்லக் கிரியைகள் வரும் காலத்தில் தான் அறியப்படும்"

1 Timothy 6

1 Timothy 6:1-2

நுகத்துக்குட்பட்டு

இதை, ஒரு அடிமையை ஏர் உழும்படியாக தன்னுடைய தோளில் மரக் கட்டை வைக்கப்பட்ட ஏர் மாடாக அல்லது மற்ற பலமான மிருகமாக பார்க்கும் உருவகமாக மொழிபெயர்க்கலாம். இது அடிமைகளுக்கான இரட்டை இலக்கணம் என்பதால் உருவகப்படுத்துவது கடினமாக இருந்தால் அதைத் தவிர்க்கவும். இதை UDB இல் உள்ளது போல கிறிஸ்தவனாய் இருப்பதற்கான உருவகமாக மொழிபெயர்க்கலாம்.

தூஷிக்கப்பட்டு

"தேவனைக் குறித்தும் தேவனுடைய செய்தியைக் குறித்தும் தவறாக சபைக்கு வெளியே இருக்கிறவர்களுக்கு சொல்ல கேட்ட காரியங்கள் இருக்கிறது"

விசுவாசிக்கிற எஜமான்களுடைய அடிமைகள் அவர்களை அவமதிக்கக்கூடாது, ஏனென்றால் அவர்கள் சகோதரர்கள்

ஏனென்றால் விசுவாசிக்கிற அவர்களின் எஜமான் சகோதரர்கள் ஆவார்கள். விசுவாசிக்கிற எஜமான்களுடைய அடிமைகள் அவர்களுடைய எஜமான்களை அவமதிக்கக்கூடாது

அவர்கள அவர்களுக்கு சேவை செய்யவேண்டும்

"விசுவாசியான எஜமான்களுடைய அடிமைகள் அந்த எஜமான்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும்."

1 Timothy 6:3-5

ஒருவன் கற்றுக்கொடுத்தால்

"கற்றுக்கொடுக்கிற யாராயினும்" அல்லது "கற்றுக்கொடுக்கிறவர்கள்." மக்கள் உண்மையில் வித்தியாசமாக போதிக்கிறார்கள் என்று பவுல் அனுமானிக்கிறார்; இது ஒரு சந்தேகிக்கிற சூழ்நிலை அல்ல. யாரோ ஒருவன் ... அவன் ... அவன்

UDB பன்மையை பயன்படுத்துகிறது. "சில மக்கள் ... அந்த மக்கள் ... அவர்கள்." "கற்றுக்கொடுக்கிற" "யாரோ ஒருவன்" என்று சொல்லுவதால், அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம், அல்லது ஒருவனாகவோ அல்லது அதிகமான பேர்களாகவோ இருக்கலாம். இத்தனை அர்த்தங்கள் சொல்லும் வடிவத்தை உங்கள் மொழியில் இருந்தால் பயன்படுத்தவும்.

தர்க்கங்களினால் நோய்வாய்ப்பட்டவனும்

"தர்க்கம் பண்ணுவதையே அவன் விரும்புகிறான்" அல்லது "அவர்கள் வீண் விவாதத்தை விரும்புகிறார்கள்." தர்க்கம் பண்ணுகிற செயலை இந்த மாதிரி மக்கள் விரும்புவார்கள், ஏற்றுக்கொள்ள ஒரு வழியைக் காண அவர்கள் விரும்புவதில்லை.

வார்த்தை சண்டைகள்

"வார்த்தைகள் என்ன அர்த்தம் சொல்லுகிறது என்பதற்காக வாக்குவாதம் பண்ணி" அல்லது "சண்டைகள் உண்டுபண்ணும் வார்த்தைகள்" அல்லது "மற்றவரைக் காயப்படுத்தும் வார்த்தைகள்" பொறாமை

மற்றவர்கள் வைத்திருக்கிறதை வேண்டும் என்ற விருப்பம்"

சண்டை

"விசுவாசிகளுக்கு இடையில் உள்ள வாக்குவாதங்கள்"

அவதூறுகள்

"ஒருவர் மேல் ஒருவர் தவறானக் காரியங்களைப் பொய்யாய் சொல்லுகிறார்கள்"

தீய சந்தேகங்கள்

தங்களுடையக் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தீமை செய்ய முற்படுகிறார்கள் என்று சொல்லுவது

சச்சரவு

அதிக நேரம் நீடிக்கும் வாய்ச்சண்டை

கெட்ட சிந்தைகள்

"தீய சிந்தனைகளால் கெட்டுப்போன மனம்"

1 Timothy 6:6-8

பெரிய ஆதாயம்

"பெரிய நன்மைகளை தருகிற" அல்லது "நமக்கு நிறைய நல்லக் காரியங்களை செய்கிற"

உலகத்தில் ஒன்றும் கொண்டு வந்ததில்லை

"நாம் பிறக்கும்போது ஒன்றையும் கொண்டு வந்ததில்லை"

நாம் எதையும் எடுத்துக்கொண்டு போகவும் முடியாது

"நாம் மரிக்கும் போது எதையும் நாம் எடுத்துக்கொண்டு போக முடியாது."

நாம் செய்வோம்

"கட்டாயம் நாம்"

1 Timothy 6:9-10

விழுந்து

ஒருவனுடைய வாழ்க்கையின் கட்டுப்பாட்டை இழந்ததற்கு அல்லது சிந்தனை (சோதனை) ஆனா உருவகம் ஆகும்.

சோதனையில் விழுந்து

"அவர்கள் தடுக்கமுடியாத அளவிற்கு அதிகமான சோதனைகளை சந்தித்து"

கண்ணியில் ... விழுந்து

"கண்ணியில் அகப்பட்டு." தன்னுடைய சொந்த நலனுக்காக கிரியை செய்யமுடியாத நிலைக்கும் சேதப்படுத்துகிறவர்களுக்கு எதிராக உதவியற்றவர்களாய் இருக்கிற நிலைக்குமான உருவகம் இதுவாகும்.

அனேக மதிகேடும் சீர்கேடுமான இச்சைகளில் ... விழுந்து

"மதிகேடும் சீர்கேடுமானக் காரியங்களை செய்யும் விருப்பங்களால் கட்டுப்படுத்தப்பட்டு" கட்டப்பட்டு

மக்களை மூழ்கச் செய்து

"மக்களை உள்ளுக்குள் இழுத்து"

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறதினால்

"பணத்தை நேசித்தலே எல்லா வகையான தீமைக்கும் காரணமாய் இருக்கிறதினால்"

தங்களை உருவக் குத்திக்கொண்டு ... வேதனைகள்

இந்த உருவகம் வேதனையை தன்னுடைய உடல் முழுவதும் குத்திக்கொள்ள ஒருவன் பயன்படுத்தும் கத்திக்கு அல்லது ஈட்டிக்கு ஒப்பிடுகிறது.

அதை விரும்புகிறவன்

"பணத்தை விரும்புகிறவன்"

விசுவாசத்தை விட்டு வழிவிலகிப் போய்

"சத்தியத்தின் பாதையை விட்டுவிட்டு" அல்லது "சத்தியத்தை விசுவாசிப்பதை விட்டு"

1 Timothy 6:11-12

தேவனுடைய மனிதன்

"தேவனுடைய வேலையாள்" அல்லது "தேவனுக்குரிய மனிதன்"

இந்தக் காரியங்களை விட்டு ஓடி

"இந்தக் காரியங்களை உன்னைக் காயப்படுத்தும் ஜந்துக்களைப் போல நடத்துங்கள்." சாத்தியமான அர்த்தங்கள் 1. "பண ஆசை" (UDB); 2. "வேறு போதனைகள், பெருமை, 6:3

4 வசனங்களில் உள்ள வாக்குவாதங்கள் மற்றும் பண ஆசை."

தொடருதல்

"பின்பாக ஓடுதல்" அல்லது "துரத்துதல்" அல்லது "கிரியை செய்ய சிறந்ததையே செய்"

நல்லப் போராட்டத்தைப் போராடு ... பிடித்துக்கொள் ... ஜீவன்

"சிலர் இதை ஜெயம் பெறுகிறவன் பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஓட்டப்பந்தயத்துக்கான உருவகமாக புரிந்துகொள்ளுகிறார்கள்."

பிடித்துக்கொள்ள ... ஜீவன்

இந்த உருவகத்தை சிலர் நல்லப் போராட்டத்தைப் போராடு என்று சொல்லுவதின் இன்னொரு வழி என்று நினைக்கிறார்கள்: "ஆதாயப்படுத்திக்கொள்ள எல்லாவற்றையும் செய் ... ஜீவன்."

சாட்சி கொடுத்து

"சாட்சி கொடுத்து" அல்லது "சாட்சி சொல்லி"

முன்பதாக

"சந்நிதியில்"

நல்லது எதுவோ அதற்கு

"நீ விசுவாசிக்கிறது எதுவோ அதைப் பற்றி"

1 Timothy 6:13-14

குற்றப்படுத்தலுக்கு மேலாக

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தீமோத்தேயுவிடம் தேவன் ஒரு குற்றத்தையும் காணமாட்டார் (UDB பார்) அல்லது 2. "மற்றவர்களும் தீமோத்தேயுவிடம் ஒரு குற்றத்தையும் காணமாட்டார்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும் போது

"நம்முடைய இயேசு கிறிஸ்து திரும்ப வரும்வரை"

தேவனுக்கு முன்பாக

"தேவனுடைய சமூகத்தில்" அல்லது "தேவனை சாட்சியாகக் கொண்டு"

கிறிஸ்துவுக்கு முன்பதாக

"கிறிஸ்துவின் சமூகத்தில்" அல்லது "கிறிஸ்துவை சாட்சியாக வைத்து"

பொந்தியு பிலாத்துவிற்கு முன்பதாக

"பொந்தியு பிலாத்துவின் சமூகத்தில் நிற்கும்போது"

1 Timothy 6:15-16

சரியான நேரத்தில்

"தகுந்த நேரத்தில்" (UDB)

...பொருத்தப்பட்ட

"...நிறுவப்பட்ட" அல்லது "...தெரிந்துகொள்ளப்பட்ட"

ஆசீர்வதிக்கப்பட்டவர்

"தன்னிலே எல்லா ஆசீர்வாதங்களையும் வைத்துள்ளவர்" அல்லது "எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுக்கிற தேவன்." இது இயேசுவை வெளிப்படப்பண்ணுகிற தந்தையாகிய தேவனைக் குறிக்கிறது.

1 Timothy 6:17-19

நிலையற்ற ஐசுவரியம்

"அவர்கள் சொந்தமாக வைத்துள்ள, இழந்து போகக் கூடிய எல்லாக் காரியங்கள்." இந்தக் குறிப்பு பொருட்களைத் தான் குறிக்கிறது.

நிலையான ஐசுவரியம்

"உண்மையாக நம்மை சந்தோஷப்படுத்தும் காரியங்கள்." இது பூமிக்குரிய பொருட்களையும் குறிக்கலாம், ஆனால் இது அநேகமாக மக்கள் உலகப் பொருட்களால் பெற நினைக்கும் அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்ற நிலைகளைக் குறிப்பதாக இருக்கிறது.

நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்

"பூமிக்குரிய சொத்தை நாடுவதைப் போல நல்லக் கிரியைகள் செய்ய தருணங்களைத் தேடவேண்டும்" அல்லது "பூமிக்குரிய சொத்தை அனுபவிக்கும்போது நீ சந்தோஷப்படுவதைப்போல நற்கிரியைகள் செய்வதில் சந்தோஷப்படுங்கள்"

அஸ்திபாரம்

வீடு கட்டும் பணியில் கட்டப்பட வேண்டிய முதலாவது பாகம். இது முதலாவதான "நிலையான ஐசுவரியத்திற்கும்" நித்தியத்தில் தேவன் மக்களுக்குக் கொடுக்கப்போகும் "உண்மையான வாழ்க்கையின்" துவக்கத்திற்குமான உருவகமாகும்.

நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளுங்கள்

இது ஓட்டப்பந்தயத்தின் உருவகத்தை நினைவுபடுத்துகிறது.

1 Timothy 6:20-21

விலகு ... வீண் விவாதங்களுக்கு

"நீ சொல்லுவதற்கு எதிராக தர்க்கம் பண்ணும் மக்களை விட்டு தள்ளி இரு"

கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக

"அவர் அங்கிருக்கும் உங்கள் அனைவர் மேலும் அவர் தயவை காண்பிப்பாராக" அல்லது "அங்கிருக்கும் உங்கள் அனைவர் மேலும் அவர் தம்முடைய இரக்கத்தைக் காண்பிப்பாராக"