தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Peter

1 Peter 1

1 Peter 1:1-2

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு; பேதுரு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளுகிறார்.

"இயேசு கிறிஸ்துவின் செய்தியாளனாகிய பேதுருவாகிய நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

பொந்து

இது தற்கால வடக்கு துருக்கியாகும்.

கலாத்தியா

இது தற்கால துருக்கியின் மையப்பகுதியாகும்.

கப்பத்தோக்கியா

இது தற்கால கிழக்கு மையத் துருக்கியாகும்.

ஆசியா

இது தற்கால மேற்கு துருக்கியாகும்.

பித்தினியா

இது தற்கால வட மேற்கு துருக்கியாகும்.

முன்னறிவு

சாத்தியமான அர்த்தங்கள் 1. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்னமே அறிந்துகொள்ளுவது அல்லது 2. "முன்பே தீர்மானித்தது" (UDB)

அவருடைய ரத்தம் தெளித்தல்

இது இயேசுவின் ரத்தத்தை ஒரு பலியாகவும், மோசே இஸ்ரவேல் தேசத்தின் மீது ரத்தம் தெளித்ததையும் குறிக்கிறது.

கிருபை உங்களுக்கு இருப்பதாக

"கிருபை உங்களோடுகூட இருப்பதாக" என்ற வார்த்தைகள் தான் எழுதும் மக்களுக்கு அவர் பொதுவாகக் கூறும் வாழ்த்து ஆகும். சில மொழிகளில், பொதுவான வாழ்த்தை இங்கு இடுவது சாதாரண செயலாகும். ""நீங்கள்" மற்றும் "உங்களுடைய" என்ற வார்த்தைகள் மேலே குறிப்பிட்டுள்ள புவியியல் இடங்களில் வாழ்ந்தவர்களைக் குறிக்கிறது.

1 Peter 1:3-5

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

"நம்முடைய" மற்றும் "நமக்கு" என்ற வார்த்தைகள் பேசுபவரையும், பேதுருவையும், மற்றும் இங்கு சேர்த்து கூறப்பட்டுள்ள விசுவாசிகளையும் குறிக்கிறது.

அவர் நம்மை மீண்டும் பிறக்கச் செய்தார்

எழுத்தாளர், இயேசுவால் மட்டுமே நமக்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பிறப்பைக் குறித்து பேசுகிறார். "அவர் நம்மை மீண்டும் வாழவைக்கிறார்."

சுதந்திரத்துக்கான நம்பிக்கைக்காக

"அவர் உறுதிப்படுத்தினதை நமக்கு நிச்சயம் செய்வார் என்று நமக்கு தெரியும்." (UDB)

ஒதுக்கப்பட்ட

"எங்களுக்காக பாதுகாக்கப்பட்ட" அல்லது "எங்களுக்காக வைக்கப்பட்ட" (UDB)

கறைபட்ட

"பாவத்தால் பாதிக்கப்படாத" அல்லது "பாவம் பாதிக்க முடியாது"

கடைசி நேரங்களில்

"கிறிஸ்து பூமிக்குத் திரும்பும்போது"

1 Peter 1:6-7

● இதில் நீங்கள் களிகூருங்கள்

"இதில்" என்ற வார்த்தை 3

5 இல் கூறப்பட்டுள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது. "தேவன் என்ன செய்தாரோ அதினால் நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்" ● இப்பொழுது நீங்கள் துக்கமாயிருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது

"நீங்கள் துக்கமாயிருக்கிறது சரியும் ஒழுங்காயும் இருக்கிறது" அது தங்கத்தை விட விசேஷமானது

"தேவன் தங்கத்தை மதிப்பதைவிட உங்கள் விசுவாசத்தை மதிக்கிறார்" ● அக்கினியால் அழிக்கப்படுவது உங்கள் விசுவாசத்தை சோதிக்கிற

"தங்கம் அக்கினியால் சோதிக்கப்பட்டும் அது நித்திய நித்திய காலம் இருக்காது." ● இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது

"இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது"

1 Peter 1:8-10

● நீங்கள் அவரைக் கண்டதில்லை

"உங்கள் சொந்தக் கண்களால் நீங்கள் அவரைக் கண்டதில்லை" அல்லது "நீங்கள் சரீரப்பிரகாரமாக அவரை கவனித்ததில்லை." "உங்கள்" என்ற எல்லா வார்த்தைகளும் 01:01 இல் கூறப்பட்டுள்ள விசுவாசிகளைக் குறிக்கிறது.

1 Peter 1:11-12

● அவர்கள் அறிந்துகொள்ள தேடினார்கள்

"அவர்கள் அறிந்துகொள்ள முயற்சித்தார்கள்" அல்லது "அவர்கள் அதைக் குறித்து விசாரித்தார்கள்." "அவர்கள்" என்ற வார்த்தை தீர்க்கதரிசிகளைக் குறிக்கிறது. ● இந்தக் காரியங்களை அவர்கள் உங்களுக்குக் கொடுத்திருந்தனர்; அவர்களுக்காக அல்ல

சில மொழிகளில், நல்ல விஷயங்களை எதிர்மரையானக் காரியங்களுக்கு முன்பதாக இடுவது இயல்பே. "அவர்கள் இந்தக் காரியங்களை உங்களுக்காக கொடுத்தனர், அவர்களுக்கு அல்ல."

1 Peter 1:13-14

● உங்கள் மனதின் அறையைக் கட்டிக்கொள்ளுங்கள்

"செயல்பாட்டிற்காக உங்கள் மனதை ஆயத்தப்படுத்துங்கள்." அங்கியை அணிந்திருக்கும்போது, (வேலைசெய்யும்படி இருக்கிறவன்) அந்த அங்கியை தன் அறைக்கச்சையினுள் இட்டு வேலைக்கு ஆயத்தமாவான். உங்கள் யோசனையில் மயங்கி

"சுயக்கட்டுப்பாட்டோடு இருங்கள்"

1 Peter 1:15-17

ஒருவரே

"தேவன்"

பாகுபாடற்ற

"நேர்மையாக"

உங்கள் பிரயாணத்துக்கான நேரத்தை பயத்தோடு செலவு செய்யுங்கள்

"பூமியில் நீங்கள் தங்கியிருக்கும் காலத்தில் தேவனுக்காக மரியாதையோடு வாழுங்கள்"

1 Peter 1:18-19

...லிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள்

"தேவன் ...லிருந்து உங்களை காப்பாற்றி இருக்கிறார்." அல்லது "தேவன் ...லிருந்து உங்களைப் பாதுகாத்திருக்கிறார்"

ஆட்டுக்குட்டியைப்போல

உங்களுடையப் பாவங்களை தேவன் மன்னிக்கும்படி அவர் பலியாக்கப்பட்டார்.

குற்றமில்லாத மற்றும் கரையற்ற

"ஒரு குறையுமில்லாத." இங்கு இரண்டு வழிகளில் ஒரே காரியம் சொல்லப்பட்டிருக்கிறது.

1 Peter 1:20-21

கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்

"தேவன் கிறிஸ்துவைத் தெரிந்துகொண்டார்"

அவர் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளார்

"தேவன் அவரை நீங்கள் அறியும்படி செய்திருக்கிறார்." உலகத்தின் அஸ்திபாரம்

"சிருஷ்டிப்பின் துவக்கம்"

1 Peter 1:22-23

சகோதர அன்பு

நண்பர்களுக்கும் அல்லது உறவினர்களுக்கும் இடையேயான இயல்பான மனுஷிக அன்பு இது.

உள்ளத்திலிருந்து உண்மையாக ஒருவரை ஒருவர் நேசியுங்கள்

"ஒருவரை ஒருவர் ஆழமாகவும் நேர்மையாகவும் நேசியுங்கள்"

அழிக்கமுடியாதது

"அழியாதது" அல்லது "நிரந்தரமான"

1 Peter 1:24-25

மாம்சமெல்லாம் புல்லைப்போல இருக்கிறது

"எல்லா மக்களும் புல்லைப் போல அழிந்துபோவார்கள். (UDB)

புல்லின் பூவைப் போல அதன் மகிமை இருக்கிறது

"மக்களுக்கு இருக்கும் மகிமை எல்லாம் நிரந்தரமாய் இருக்காது."

அறிவிக்கப்பட்ட செய்தி

"நாங்கள் அறிவித்த செய்தி"

1 Peter 2

1 Peter 2:1-3

அதனால், தள்ளி வையுங்கள்

"செய்வதை நிறுத்துங்கள்"

புதிதாகப் பிறந்தக் குழந்தைகள்

விசுவாசிகளை வளரும்படிக்கு பால் தேவைப்படும் புதிதாகப் பிறந்தக் குழந்தைகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

ஏங்கி

"தீர்க்கமாக விரும்பி" அல்லது "ஏக்கம் கொண்டு"

இரட்சிப்பில் நீங்கள் வளரலாம்

"நீங்கள் ஆவியில் வளரலாம்." "நீங்கள்" என்ற வார்த்தை 1 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விசுவாசிகளைக் குறிக்கிறது.

கர்த்தர் தயை உள்ளவர் என்பதை நீங்கள் ருசித்திருந்தால்

"கர்த்தர் மிகவும் தயவோடு உங்களோடு நடந்துகொள்ளுகிறார் என்பதை நீங்கள் அனுபவித்தபடியினால்." (UDB)

1 Peter 2:4-5

ஜீவனுள்ள கல்லாயிருக்கிற அவரிடம் வாருங்கள்

இயேசு ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரத்தின் மிகவும் முக்கியமான கல்லுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டு

"ஒரு சிலரால் புறக்கணிக்கப்பட்டு" அல்லது "அநேகரால் புறக்கணிக்கப்பட்டு"

1 Peter 2:6

வேதம் இதை சொல்லுகிறது

"கிறிஸ்துவைக் குறித்து பின்வருபவற்றை எழுத தேவன் ஏவுகிறார்."

இதோ

"நான் முக்கியமானதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்." அல்லது "கவனியுங்கள்!" "இதோ" என்ற வார்த்தை பின்வரும் ஒரு முக்கியமானத் தகவலுக்கு நம்முடைய கவனத்தைத் திருப்புகிறது. உங்கள் மொழியில் இதை செய்ய வேறு வழி இருக்கலாம்.

மூலைக்கல், பிரதானமானதும், தெரிந்துகொள்ளப்பட்டதும், மற்றும் விலையேறப்பெற்றதும்

மறு மொழிபெயர்ப்பு: "மிகவும் முக்கியமான மூலைக்கல்"

1 Peter 2:7-8

கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட கல்

"கட்டுகிறவர்களால் தள்ளப்பட்டக் கல்"

இடறுவதர்க்கேதுவான கல்லும் விழுவதற்கேதுவான கல்லும்

இந்த இரண்டும் ஒரே மாதிரியான அர்த்தத்தைக் கொண்டிருந்தாலும், உறுதிப்படுத்த சேர்த்து சொல்லப்பட்டுள்ளது.

1 Peter 2:9-10

நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட ஜாதி

"நீங்கள்" என்ற வார்த்தை கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளவர்களைக் குறிக்கிறது.

உங்களை வெளியே அழைத்து

"வெளியே வரும்படி உங்களை அழைத்து" அல்லது "...லிருந்து திரும்பும்படி ஊங்களை அழைத்து"

1 Peter 2:11-12

உங்கள் ஆத்துமாவுக்கெதிரான போர்

"தேவன் மேலுள்ள விசுவாசத்தை அழிக்க வகைதேடி"

1 Peter 2:13-17

உங்கள் சுயாதீனத்தை வைத்துக்கொள்ளாதீர்கள்

"உங்கள் சுயாதீனத்தை உபயோகப்படுத்துங்கள்"

துர்குணத்துக்கு மூடலாக

"தீயக் காரியங்கள் செய்ய ஒரு போக்காக"

1 Peter 2:18-20

ஊழியர்கள்

வீட்டு வேலை செய்யும் விசுவாசிகள்

1 Peter 2:21-23

இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "நீங்களும் உபத்திரவத்தில் இப்படி தான் நடந்துகொள்ளவேண்டும், ஏனென்றால் கிறிஸ்துவும் தன்னுடைய உபத்திரவத்தில் அப்படியே நடந்துகொண்டார்," அல்லது 2. "தேவன் உங்களைத் தெரிந்துகொண்ட பலக் காரணங்களுள் ஒரு காரணம் என்னவென்றால், அவருக்காக நீங்கள் துன்பப்படவே."

அவர் தூஷிக்கப்படும்போது, அவர் திரும்ப தூஷிக்கவில்லை

"இயேசுவை மக்கள் அவதூறு பேசினபோது, இயேசு அவர்களை அவதூறு செய்யவில்லை."

1 Peter 2:24-25

அவர் தாமே

இது இயேசுவை ஒரு உறுதிப்படுத்தலுக்காக் குறிக்கிறது.

நம்முடையப் பாவங்களை

"நம்முடைய" மற்றும் "நாம்" என்ற அனைத்து வார்த்தைகளும் பேசுகிற பேதுருவையும் விசுவாசிகளையும் சேர்த்து குறிக்கிறது.

அவருடையத் தழும்புகளால் நீங்கள் சுகமானீர்கள்

"தேவன் உங்களைக் கிறிஸ்துவின் தழும்புகளால் சுகமாக்கினார்."

நீங்கள் எல்லாரும் அலைந்து கொண்டிருந்தீர்கள்

"நீங்கள்" என்ற வார்த்தை 1.1

25 வரை குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசிகளைக் குறிக்கிறது.

உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பனும் கண்காணியும்

"இயேசு உங்களை வழிநடத்தி பாதுகாக்கிறார்."

1 Peter 3

1 Peter 3:1-2

பேதுரு விசுவாசிகளின் உபத்திரவத்தையும் கிறிஸ்துவின் உபத்திரவத்தையும் குறித்து பேசியிருந்தார்.

இந்த வகையில், மனைவிகளாக இருக்கும் நீங்கள் உங்கள் புருஷருக்கு அடங்கி இருக்கவேண்டும்

"அதனால், மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்."

சிலர்

இந்த "சிலர்" என்ற வார்த்தை புருஷர்களைக் குறிக்கிறது.

அவர்கள் பார்த்து இருக்கிறார்கள்

"அவர்கள்" மற்றும் "அவர்களுக்கு" என்ற வார்த்தைகள் புருஷர்களைக் குறிக்கிறது.

1 Peter 3:3-4

பேதுரு மனைவிகளை புருஷருக்கு அடங்கும்படி போதித்திருந்தார்.

இது செய்யப்படாமல் இருப்பதாக

"இது" என்ற வார்த்தை மனைவிகள் தங்கள் புருஷரை கனப்படுத்துவதைக் குறிக்கிறது.

பதிலாக, உள்ளான மனிதன்

"அது உள்ளான மனிதனோடு செய்யப்படட்டும்."

1 Peter 3:5-6

தங்களது சாந்தமான மற்றும் அமைதியான ஆவியை வெளிப்படுத்தும்படி மனைவிகளுக்கு பேதுரு போதித்திருந்தார்.

நீங்கள் இப்பொழுது அவளுடையக் குழந்தைகள்

"நீங்கள்" என்ற வார்த்தை 1பேதுரு 03:1

2 இல் குறிப்பிடப்பட்டுள்ள மனைவிகளையோ அல்லது பெண்களையோ குறிக்கிறது.

1 Peter 3:7

மனைவிகள் தங்கள் புருஷரை கனப்படுத்தவேண்டும் என்று போதித்திருந்தார், பேதுரு.

அதே வழியில்

"உங்கள் மனைவிகள் உங்களை மதிக்கவேண்டுவது போல"

இதை செய்யுங்கள்

"இதை" என்ற வார்த்தை புருஷர்களுக்கு செய்யுங்கள் என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்பட்டதை குறிக்கிறது.

1 Peter 3:8-9

பேதுரு மனைவிகளுக்கும் புருஷர்களுக்கும் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்த வேண்டும் என்றும், அதனால் அவர்கள் ஜெபங்கள் # தடைபண்ணப்படாமல் இருக்கும் என்பதையும் போதித்திருந்தார்.

உங்கள் அனைவரும்

முந்தின மூன்று பகுதிகள் அடிமைகளையும், மனைவிகளையும், புருஷர்களையும் பார்த்து சொல்லப்பட்டிருந்தது. இந்த பகுதி, இந்தப் பிரிவையும் சேர்த்து மற்ற எல்லா விசுவாசிகளுக்கும் சேர்த்து பேசப்படுகிறது.

அவமதிப்பு

கோபமான வார்த்தைகள் அல்லது செயல்கள்.

எதிர்மறையாக

"எதிர் வழியிலே"

நீங்கள் அழைக்கப்ட்டிருக்கிறீர்கள்

"தேவன் உங்களை அழைத்தார்."

ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி

"தேவன் உங்களை ஆசீர்வதிக்கும்படி"

1 Peter 3:10-12

விசுவாசிகள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்தவேண்டும் என்று போதித்திருந்தார், பேதுரு.

தீமை செய்வதிலிருந்து தனது நாவையும், வஞ்சனைப் பேசுவதிலிருந்து தனது உதடுகளையும் நிறுத்துங்கள்

"தீமையையும் பொய்யையும் பேசுவதை நிறுத்துங்கள்."

...தற்கு எதிராக கர்த்தருடைய முகம் இருக்கிறது

"கர்த்தர் எதிர்க்கிறார்"

1 Peter 3:13-14

எப்படி வாழவேண்டும் என்று பேதுரு விசுவாசிகளுக்கு போதித்துக்கொண்டிருக்கிறார்.

நீங்கள் நன்மையானதை விரும்பினால், உங்களை துன்புறுத்துபவன் யார்?

"நீங்கள் நன்மை செய்தால் உங்களை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்." "நீங்கள்" என்ற வார்த்தை விசுவாசிகளைக் குறிக்கிறது.

அவர்கள் ஐயப்படுவதற்கு நீங்கள் ஐயப்படாதீர்கள். கலங்காமலும் இருங்கள்.

இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே அர்த்தத்தைக் கொண்டுள்ளது. உறுதிப்பட சொல்லும்படி சேர்க்கப்பட்டுள்ளது. "மக்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதற்கு ஐயப்படுவதை நிறுத்துங்கள்."

1 Peter 3:15-17

தங்களை துன்புறுத்துபவர்களுக்கு பயப்படாமலும், நீதியிலும் வாழும்படி பேதுரு விசுவாசிகளுக்குப் போதித்திக்கொண்டிருக்கிறார்.

பதிலாக, கிறிஸ்துவை விலையேறப்பெற்றதாக எண்ணுங்கள்

"கிறிஸ்துவை மிகவும் மதித்து அவருக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படியுங்கள்" என்பது 3.1

14 வரை சொல்லப்பட்டுள்ளதைத் தவிர விசுவாசிகள் என்னென்னக் காரியங்கள் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

விலையேறப்பெற்ற

"பரிசுத்தமான" அல்லது "மிகவும் மதிக்கத்தக்க" அல்லது பொக்கிஷமான"

1 Peter 3:18-20

தங்களை துன்புறுத்துபவர்களுக்கு பயப்படாமலும், நீதியிலும் வாழும்படி பேதுரு விசுவாசிகளுக்குப் போதித்திக்கொண்டிருக்கிறார்.

நமக்காகப் பாடுபட்டு

"நமக்காக" என்ற வார்த்தை பேசுகிறவரையும், பேதுருவையும், கேட்கிறவர்களையும் குறிக்கிறது.

காவலில் உள்ள ஆவிகளுக்கு அவர் ஆவியில் சென்று பிரசங்கம் பண்ணினார்

கிறிஸ்து கொல்லப்பட்டப் பிறகு, மரித்தவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஆவிகளுக்கு பிரசங்கம் பண்ணினார்.

1 Peter 3:21-22

பேதுரு கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்தும், மரணத்தைக் குறித்தும், மரித்தவர்களுக்கு கிறிஸ்து செய்த பிரசங்கத்தைக் குறித்தும் விசுவாசிகளோடு பேசிக்கொண்டிருந்தார்.

அது உங்களைக் காப்பாற்றுகிறது

"உங்களை" என்ற வார்த்தை பேதுருவையும் மற்ற எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

1 Peter 4

1 Peter 4:1-2

கிறிஸ்து பரத்திற்கு சென்று உயிர்த்தெழுதலையும் அவரது அதிகாரத்தையும் வல்லமையையும் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அதனால்

தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு போதித்துக்கொண்டிருந்ததின் முடிவை இந்த வார்த்தைக் குறிக்கிறது.

அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக தரித்துக்கொள்ளுங்கள்

"நீங்களும் பாடுபட விரும்புங்கள்"

நீங்களே

அதிகாரம் ஒன்றில் இருக்கும் விசுவாசிகளை இது குறிக்கிறது.

யாராயினும்

"எந்த மனிதனாயினும்"

1 Peter 4:3-6

கிறிஸ்துவுக்காக படும் பாடுகளால் தங்களுக்கு என்ன மதிப்பு என்பதைக் குறித்து விசுவாசிகளுக்கு பேதுரு சொல்லிக்கொண்டிருந்தார்.

காமவிகாரம், துர்இச்சை, மதுபானம், களியாட்டு, வெறி, அருவருப்பான விக்கிரக ஆராதனை

"விபச்சாரம், தீய விருப்பங்கள், களியாட்டுகள், மதுபானம் பண்ணுதல், மற்றும் தேவன் வெறுக்கும் விக்கிரக ஆராதனையும்."

சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது

"கிறிஸ்து நற்செய்தி பிரசங்கம்பண்ணினார்."

1 Peter 4:7-9

எல்லாக் காரியங்களின் முடிவு வருகிறது

"சீக்கிரமாக தேவன் பூமியில் அனைத்தையும் மாற்றுகிறார்." (UDB)

உங்களுடைய யோசனை

"உங்களுடைய" என்ற வார்த்தை எல்லா விசுவாசிகளைக் குறிக்கிறது.

1 Peter 4:10-11

உங்களில் ஒவ்வொருவரும் ஒரு வரத்தை பெற்றுள்ளீர்கள்

"தேவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனி திறனைக் கொடுத்திருக்கிறார்."

1 Peter 4:12-14

நீங்கள் கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்கும்போது, களிகூருங்கள்

"கிறிஸ்து அனுபவித்ததுபோலவே நீங்களும் பாடுகள் அனுபவிக்கிறீர்கள் என்று எண்ணி களிகூருங்கள்." (UDB)

1 Peter 4:15-16

1 Peter 4:17-19

1 Peter 5

1 Peter 5:1-4

உபத்திரவத்தின் மத்தியில் பேதுரு விசுவாசிகளை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.

உங்கள் மத்தியில் உள்ள மூப்பார்கள்

"உங்கள்" என்ற வார்த்தை கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகளைக் குறிக்கிறது.

அதனால்

"இந்தக் காரணத்துக்காக"

தேவனுடைய மந்தை

இது சபையை ஒரு கூட்ட ஆடுகளுக்கு ஒப்பிடுகிறது.

பார்த்துக்கொண்டு

"அக்கறைக் கொண்டு" அல்லது "மேய்த்து"

ஒரு எஜமானனைப் போல நடவாதே

"முக்கியமான முதலாளி போல நடந்துகொள்ளாதே"

1 Peter 5:5-7

சபையில் இருந்த தலைவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று சற்றே சொல்லியிருந்தார், பேதுரு.

நீங்கள் அனைவரும்

வாலிப சகோதரர்கள் மாத்திரம் அல்ல, இது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

நீங்கள் தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்

"ஒருவருக்கொருவர் தாழ்மையாய் நடந்துகொள்ளவேண்டும்" (UDB)

தேவனுடைய வல்லக் கரத்தின் கீழ்

"தேவனுடைய வல்லமையின் கீழ்"

வைத்து

"அவர் பார்த்துக்கொள்ளும்படி விட்டு விடுங்கள்"

உங்கள் கவலை

"உங்கள் துக்கம்" அல்லது "உங்கள் வேதனை" அல்லது "உங்கள் கவனத்தை சிதறடித்தல்"

அவர் உங்களைக் குறித்து அக்கறை கொள்ளுகிறார்

"அவர் உங்கள் மேல் கருத்தாய் இருக்கிறார்."

1 Peter 5:8-9

பேதுரு சபையில் உள்ள எல்லா விசுவாசிகளையும் இளைஞரையும் பார்த்து, எப்படி வாழவேண்டும் என்று சொல்லி இருந்தார்.

கெர்ச்சிக்கிற சிங்கம் போல

ஏனென்றால், அவன் ஜனங்களை அழிக்க முயற்சிப்பதினால், சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளான்.

அலைந்து திரிகிறான்

"நடந்து கொண்டு" அல்லது "நடந்து வேட்டையாடும்படி"

அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்

"அவனைத் தடுத்துவிடுங்கள்"

உலகத்தில்

"உலகம் முழுவதிலும் உள்ள அனேக இடங்களில்."

1 Peter 5:10-11

பிசாசுக்கு எதிர்த்து நிற்கவும் தைரியமாய் இருக்கவும் பேதுரு விசுவாசிகளுக்கு சொல்லியிருந்தார்.

கொஞ்ச காலத்துக்கு மாத்திரம்

"சிறிய சமயத்திற்கு"

எல்லாக் கிருபையின் தேவன்

"முற்றிலும் தயவுள்ள தேவனானவர்"

கிறிஸ்துவிலுள்ள நித்திய மகிமைக்கு உங்களை அழைத்தவர்

"கிறிஸ்துவில் நாம் இணைக்கப்பட்டதால் தம்முடைய நித்திய மகிமையை பரலோகத்தில் நம்மோடு பகிர்ந்துகொள்வதைத் தெரிந்துகொண்டார். (UDB)

உங்களை சீர்ப்படுத்தி

"உங்களை நிலைநிறுத்தி"

உங்களை ஸ்திரப்படுத்தி

"உங்களைப் பாதுகாத்து"

1 Peter 5:12-14

சில்வானு

சில்வானஸ்

புத்திசொல்லி

"எச்சரித்து" அல்லது "அறிவுரை செய்து" அல்லது "கெஞ்சி"

நான் எழுதினது என்னவோ அது தேவனுடைய சத்தியக் கிருபை

"நான் எழுதினது என்னவோ அது தேவன் நமக்கு தயவாய் செய்த காரியங்களைக் குறித்த செய்தி" (UDB)

அதில் நிலைக்கொண்டிருங்கள்

"இந்த செய்தியை உறுதியாய் நம்புவதைத் தொடருங்கள்"

பாபிலோனில் இருக்கும் அவள்

பாபிலோன் என்பது ரோமிற்கான மறைமுக வார்த்தை.

ஒருவரை ஒருவர் முத்தத்தோடு வாழ்த்துங்கள்

"ஒருவரை ஒருவர் வரவேற்று அன்பு கூறுங்கள்."