1 John
1 John 1
1 John 1:1-2
அப்போஸ்தலனாகிய யோவான் இதைக் கிறிஸ்தவர்களுக்கு எழுதினான்.
ஆதிமுதல் இருந்தது
"ஆதிமுதல் இருந்ததும்" என்ற சொற்றொடர் சகலமும் உருவாக்கப்படுவதற்கு முன்பதாகவே இருந்த இயேசுவைக் குறிக்கிறது. இதை நீங்கள் "சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பதாகவே இருந்தவரைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
ஆரம்பம்
"எல்லாவற்றினுடைய ஆரம்பம்" அல்லது "உலகம் சிருஷ்டிக்கப்பட்டது"
நாங்கள் கேட்டவைகள்
"நாங்கள் கேட்டவைகள்" என்ற சொற்றொடர் இயேசு அவர்களுக்குப் போதித்தவைகளைக் குறிக்கிறது. இதை "அவர் போதித்தவைகளைக் கேட்டோம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
நாங்கள்
வசனங்கள் 1 மற்றும் 2 ல், "நாங்கள்" என்ற வார்த்தை யோவானையும், இயேசு பூமியில் இருந்தபோது அவரை அறிந்தவர்களையும் குறிக்கிறது, ஆனால் யோவான் யாருக்காக எழுதுகிறானோ அந்த ஜனங்கள் அல்ல.
நாங்கள் எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் உற்றுப்பார்த்ததும்
"நாங்களே அவரைப் பார்த்தோம்."
எங்கள் கரங்கள் தொட்டது
"நாங்கள் எங்கள் கைகளினாலே அவரைத் தொட்டோம்"
ஜீவவார்த்தை
இது இயேசுவைக் குறிக்கிறது. "ஜனங்களை என்றென்றும் வாழச்செய்கிறவர் இவரே. "
ஜீவன் வெளிப்பட்டது
இது இயேசு பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. இது "தேவன் அவரை பூமிக்கு அனுப்பினார் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
நாங்கள் பார்த்தோம்
"நாங்கள் அவரைப் பார்த்தோம் "
சாட்சி கொடுத்தோம்
"அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறோம்"
நித்திய ஜீவன்
இந்த சொற்றொடர் நாம் என்றென்றும் வாழ்வதற்கு காரணராகிய இயேசுவைக் குறிக்கிறது. இதை "அவர் நம்மை என்றென்றும் வாழவைக்கிறார் " என்று மொழிபெயர்க்கலாம்.
பிதாவோடு இருந்தது
"அவர் பிதாவாகிய தேவனோடு இருந்தார் "
எங்களுக்கு வெளிப்பட்டது
"ஆனால் அவர் நம் மத்தியில் வாழ வந்தார் "
1 John 1:3-4
நாங்கள் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் உங்களுக்கும் அறிவிக்கிறோம்
"நாங்கள் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் உங்களுக்கும் அறிவிக்கிறோம்"
நாங்கள்...எங்களோடு...நம்முடைய
இந்த பிரதிபெயர்கள் யோவானையும், இயேசு உயிரோடிருப்பதைப் பார்த்து இப்பொழுது அதைப்பற்றி ஜனங்களுக்கு போதிக்கிறவர்களைக் குறிக்கிறது.
நீங்கள்
"நீங்கள் " என்ற வார்த்தை யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த ஜனங்களைக் குறிக்கும் பன்மை.
எங்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள். மற்றும் எங்களுடைய ஐக்கியம் பிதாவோடு உள்ளது
இங்கு ஐக்கியம் என்ற வார்த்தை நெருங்கிய உறவைக் குறிக்கிறது. இந்த வாக்கியங்கள் "எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருங்கள் மற்றும் பிதாவாகிய தேவனுக்கு நாம் சிநேகிதர்களாக இருக்கிறோம் " என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
எங்களுடைய ஐக்கியம்
யோவான் தன்னுடைய நிருபத்தை வாசிக்கிறவர்களை சேர்க்கிறாரா அல்லது விட்டுவிடுகிறாரா என்பது தெளிவாக இல்லை. இதை நீ எந்த விதத்திலும் மொழிபெயர்க்கலாம்.
கிறிஸ்து
கிறிஸ்து என்ற வார்த்தை பெயர் அல்ல, தலைப்பு. இதற்கு "தெரிந்துகொள்ளப்பட்டவர் " என்று அர்த்தம். இங்கு நமது இரட்சகராக இருக்க தேவன் இயேசுவைத் தெரிந்துகொண்டார் என்பதைக் குறிக்கிறது.
உங்களுடைய சந்தோஷம் நிறைவாகட்டும்
"உங்கள் சந்தோஷத்தை நிறைவாக்குவதற்கு" அல்லது "உங்களை முழுமையாக சந்தோஷப்படுத்த"
1 John 1:5-7
நாங்கள் கேட்டிருக்கிறோம்
இங்கு "நாங்கள் " என்கிற வார்த்தை யோவானையும் இயேசு பூமியிலிருந்தபோது அவரை அறிந்தவர்களையும் குறிக்கிறது.
நீங்கள்
"நீங்கள் " என்ற வார்த்தை பன்மை. மற்றும் யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களைக் குறிக்கிறது.
தேவன் ஒளியாக இருக்கிறார்
தேவன் முற்றிலும் சுத்தமும், பரிசுத்தமுமாக இருக்கிறார் என்பதே இதின் அர்த்தம். இதை "தேவன் சுத்த ஒளியைப்போல சுத்த நீதியுள்ளவராக இருக்கிறார் " என்று மொழி பெயர்க்கலாம். நன்மையை ஒளியோடு இணைக்கும் கலாச்சாரங்கள் உருவகத்தினை விவரிக்காமல் ஒளியின் கருத்தினை வைக்கலாம்.
அவருக்குள் எவ்வளவும் இருள் இல்லை
தேவன் ஒருபோதும் பாவம் செய்வதில்லை மற்றும் தேவன் எவ்விதத்திலும் பொல்லாதவர் இல்லை என்பதே இதின் அர்த்தம். இதை "அவருக்குள் பாவத்தின் இருள் இல்லை " என்று மொழி பெயர்க்கலாம். தீமையை இருளோடு இணைக்கும் கலாச்சாரங்கள் உருவகத்தினை விவரிக்காமல் இருளின் கருத்தினை வைக்கலாம்.
நாம்...நமக்கு
வசனங்கள் 6
7 ல் பிரதிபெயர்களான "நாம்" மற்றும் "நமக்கு" என்பவைகள் விசுவாசிகளையும், யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களையும் குறிக்கிறது.
நாம் சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறோம்
"நாம் உறுதியாக பொய் சொல்கிறோம்"
இருளில் நட
"பொல்லாதவைகளை செய் " அல்லது "எப்பொழுதும் தீமையானதை செய் " என்பது இதின் அர்த்தம்.
ஒளியில் நட
"நன்மையானவைகளை செய் " அல்லது "எப்பொழுதும் நலமானதை செய் " என்பது இதின் அர்த்தம்.
இயேசுவின் இரத்தம்
இது இயேசுவின் மரணத்தைக் குறிக்கிறது.
1 John 1:8-10
நாம்
வசனங்கள் 8, 9, மற்றும் 10 ஆகியவைகளில் "நாம் " என்ற சொற்றொடர் அநேகமாய் நடக்கக்கூடிய ஆதாரமற்ற சூழ்நிலையைத் துவக்குகிறது.
நாம்...நமக்கு
வசனங்கள் 8
10 ல் "நாம் " மற்றும் "நமக்கு " என்கிற பிரதிபெயர்கள் எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.
பாவம் இல்லை
"பாவம் செய்வதில்லை" அல்லது "ஒருபோதும் பாவம் செய்ததில்லை"
வஞ்சிப்பது
"தந்திரம்" அல்லது "ஏமாற்றுதல்"
நமக்குள் சத்தியம் இல்லை
"அவர் சொன்னது சத்தியம் என்று நாம் விசுவாசிப்பது இல்லை"
அவர்...அவருக்கு...அவருடைய
இந்தப் பிரதிபெயர்கள் அனேகமாக இயேசுவைக் குறிக்கிறது, ஆனால் அவைகள் பிதாவாகிய தேவனைக் குறிக்கலாம். உங்களுடைய மொழி அனுமதித்தால் பிரதிபெயர்களின் பல அர்த்தங்களை விட்டுவிடுவது நல்லது.
உண்மையும் நீதியும்
"விசுவாசமும் நன்மையையும் "
நம் பாவங்களை மன்னிக்கவும், எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்திகரிக்கவும்
"நாம் செய்த தவறுதல்களை நமக்கு முற்றிலுமாக மன்னிப்பார்."
நாம் அவரை பொய்யராக்குகிறோம்
"இது அவரைப் பொய்யர் என்று அழைப்பதற்கு சமம், ஏனென்றால் நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம் என்று அவர் சொன்னார். " "ஏனென்றால் நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம் என்று அவர் சொன்னார் " என்ற சொற்றொடர்
அவருடைய வார்த்தை நமக்குள் இல்லை
இது "நாம் புரிந்துகொள்ளவில்லை அல்லது "அவர் சொல்வதற்கு நாம் கீழ்ப்படியவில்லை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 2
1 John 2:1-3
என் பிரியமான பிள்ளைகள்
யோவான் அவர்களுடைய தலைவனாகவும், மூத்த மனிதனாகவும் இருந்தார். அவர்களுக்கு அவருடைய அன்பைக் காண்பிப்பதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இது "கிறிஸ்துவுக்குள் என் பிரியமான பிள்ளைகள் " அல்லது "என் சொந்தப் பிள்ளைகளைப்போல நீங்கள் எனக்குப் பிரியமானவர்கள் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நான் இந்தக்காரியங்களை எழுதுகிறேன்
"நான் இந்த நிருபத்தை எழுதுகிறேன் "
ஆனால் யாராவது பாவம் செய்தால்
இது நடக்கப்போவதைப் போன்ற ஒன்று. "ஆனால் யாராவது ஒருவர் பாவம் செய்யும்போது "
நாம்...நமக்கு
வசனங்கள் 1
3 ல் இந்த வார்த்தைகள் யோவானையும், அவர் யாருக்கு எழுதுகிறாரோ அந்த ஜனங்களையும் குறிக்கிறது.
பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவர்
"பிதாவாகிய தேவனிடத்தில் பேசுகிற மற்றும் நம்மை மன்னிக்கும்படி அவரிடம் கேட்கிற ஒருவர் "
நீதிபரராகிய இயேசு கிறிஸ்து
"பூரணராயிருக்கிற ஒரே ஒருவர், அந்த நபர்தான் இயேசு கிறிஸ்து "
அவர் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கிறார்
"இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த ஜீவனை நமக்காக பலியாக்கினார், ஆகவே அதின் முடிவாக தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார் "
இதினால் நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம், நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால்
"நாங்கள் அவரை அறிந்திருக்கிறோம் " என்ற சொற்றொடருக்கு " எங்களுக்கு அவரோடு ஐக்கியம் உண்டு " என்று அர்த்தம். இதை "நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் சொல்லுகிறதை நாம் செய்தால், நமக்கு அவரோடு நல்ல ஐக்கியம் உண்டு என்பதில் உறுதியாக இருக்கலாம் "என்று மொழிபெயர்க்கலாம்.
அவருக்கு...அவருடைய
இந்த வார்த்தைகள் தேவனை அல்லது இயேசுவைக் குறிக்கும்.
1 John 2:4-6
சொல்லுகிறவன்
"சொல்லுகிற எவனும் " அல்லது "சொல்லுகிற நபர் "
நான் கர்த்தரை அறிந்திருக்கிறேன்
இது "எனக்கு தேவனோடு நல்ல ஐக்கியம் உண்டு" என்று மொழிபெயர்க்கப்படலாம்
கைக்கொள்ளாமல்
"செய்யாமல் " அல்லது "கீழ்ப்படியாமல் "
அவருடைய கற்பனைகள்
"தேவன் அவனுக்கு செய்யச்சொல்வது "
அவனுக்குள் சத்தியமில்லை
"தேவன் சொல்வது உண்மையென்று அவன் விசுவாசிக்கவில்லை "
கைக்கொள்ளுதல்
"செய்தல் " அல்லது "கீழ்ப்படிதல் "
அவருடைய வார்த்தை
"தேவன் அவனுக்கு செய்யச்சொல்வது "
தேவனுடைய அன்பு
அனுகூலமான அர்த்தங்கள் 1) "தேவனுக்காக நம்முடைய அன்பு " அல்லது 2) "நமக்காக தேவனுடைய அன்பு."
அவனுக்குள் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்
இதை "ஆனால், செய்யும்படி தேவன் கட்டளையிடுகிறவைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள், எல்லாவிதத்திலும் தேவனை நேசிக்கிற ஜனங்களாவார்கள் " அல்லது "தேவன் ஜனங்களுக்குச் செய்யும்படிச் சொல்வதை அவர்கள் செய்யும்போது ஜனங்களுக்கான தேவனுடைய அன்பு அதின் இலக்கை அடைகிறது"என்கிற செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்.
இதினால் நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அறிகிறோம்
"நாம் அவருக்குள் இருக்கிறோம்" என்ற சொற்றொடருக்கு விசுவாசி தேவனோடு எப்பொழுதும் இணைக்கப்பட்டிருக்கிறார் அல்லது விசுவாசிக்கு தேவனிடம் தொடர்ச்சியான ஐக்கியம் உண்டு என்று அர்த்தம். 1யோவானில் "அவருக்குள் நிலைத்திருப்பது" என்னும் சொற்றொடர் ஒரே அர்த்தம் கொள்வதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை "தேவன் சொல்வதற்கு நாம் கீழ்ப்படியும்போது, அவரோடு நமக்கு ஐக்கியம் உண்டு என்று உறுதியாக இருக்கலாம்" என்று மொழிபெயர்க்கலாம்.
அவன் நிலைத்திருக்கிறான்
"அவனுக்கு ஐக்கியம் உண்டு"
இயேசுகிறிஸ்து நடந்தது போலவே தானும் நடப்பதற்குத் தன்னைக் கட்டாயமாக்குதல்
"இயேசுகிறிஸ்து வாழ்ந்ததுபோல வாழவேண்டும் " அல்லது "இயேசுகிறிஸ்து செய்ததுபோலவே தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும்"
1 John 2:7-8
பிரியமான
இதை "சிநேகிதர்கள்" அல்லது "கிறிஸ்துவுக்குள் அன்பான விசுவாசிகள் " என்று மொழிபெயர்க்கலாம்.
நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, பழைய கற்பனையையே எழுதுகிறேன்
ஒருவரையொருவர் நேசிக்க யோவான் இயேசுவின் கட்டளையைக் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். இது "நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்க நான் உங்களுக்கு எழுதுகிறேன். அது நீங்கள் செய்யவேண்டிய புதிய காரியமல்ல ஆனால் அது உங்களுக்கு சொல்லப்பட்ட பழைய கற்பனையே" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஆதியில் இருந்து
"கிறிஸ்துவை நீங்கள் முதன்முதல் விசுவாசித்ததிலிருந்து"
மேலும், நான் உங்களுக்குப் புதிய கற்பனையை எழுதுகிறேன்
இதை "ஆனால் ஒருவிதத்தில் நான் உங்களுக்கு எழுதுகிற கற்பனை புதியது " என்று மொழிபெயர்க்கலாம்.
கிறிஸ்துவுக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது
இதை "அது புதியது, ஏனென்றால் கிறிஸ்து செய்ததும் புதியது, நீங்கள் செய்கிறதும் புதியது" என்று மொழிபெயர்க்கலாம்.
இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது
இங்கு "இருள் " தீமையையும், "ஒளி" நன்மையையும் குறிக்கிறது. இதை "ஏனென்றால் நீங்கள் தீமை செய்வதை விட்டுவிட்டு அதிகமதிகமாக நன்மை செய்கிறீர்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 2:9-11
சொல்லுகிறவன்
"சொல்லுகிற எவனும் " அல்லது "சொல்லுகிறவர்கள். " இது ஒரு குறிப்பிட்ட நபரைக் குறிக்கவில்லை.
அவன் ஒளியில் இருக்கிறான்
இதுவே சரியாக வாழ்வதைக் குறித்து பேசுகிற விதமாகும். ஜனங்கள் சரியானதைச் செய்யும்போது, அதை அவர்கள் இருளில் மறைக்காமல் வெளிச்சத்தில் செய்யலாம். இதை "அவன் சரியானதைச் செய்கிறான் " அல்லது "அவன் வெளிச்சத்திலிருந்து சரியானதைச் செய்கிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.
இருளில் இருப்பது
இதுவே பாவத்திலே வாழ்வதைக் குறித்து பேசுகிற விதமாகும். ஜனங்கள் தவறானவைகளைச் செய்யும்போது, அவர்கள் இருளிலே மறைக்க விரும்புகிறார்கள். இதை "இருளில் இருக்கிறவன் ,தீமையானதைச் செய்கிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.
அவனிடத்தில் இடறுவதற்கான தருணம் ஒன்றும் இல்லை
"எதுவும் அவனை இடறச் செய்யாது." "இடறுதல்" என்ற வார்த்தை, ஆவியிலே அல்லது நீதியிலே தோல்வியடைவது என்னும் அர்த்தம்கொள்ளும் உருவகம் ஆகும். இதை "எதுவும் அவனை பாவத்திற்குள்ளாக்காது" அல்லது "தேவனுக்கு பிரியமானதைச் செய்ய அவன் ஒருபோதும் தவறமாட்டான்"
இருளில் இருப்பதும் இருளில் நடப்பதும்
ஒரு சக விசுவாசியை வெறுப்பது எவ்வளவு தீமையானது என்பதை கவனத்தைக் கொண்டுவர இதே ஆலோசனை இரண்டு முறை சொல்லப்பட்டது. இதை "இருளில் வாழ்வது" அல்லது "பாவ இருளில் வாழ்வது"
அவன் எங்கே போகிறான் என்பதை அறியாமல் இருக்கிறான்
இது "அவன் செய்வது தீமையானது என்பதைக்கூட அறியாமல் இருக்கிறான்" என்றும் மொழிபெயர்க்கக்கூடிய உருவகம்.
இருளானது அவன் கண்களைக் குருடாக்கினது
"இருளானது அவன் பார்க்கமுடியாதபடி செய்தது." இதை "பாவம் அவனை சத்தியத்தைப் புரிந்துகொள்ளமுடியாதபடி செய்தது" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 2:12-14
அன்பான பிள்ளைகள்
2:1 ல் நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது
இது செய்வினை எழுவாயோடு மொழிபெயர்க்கப்படலாம்: "தேவன் உங்களுடைய பாவங்களை மன்னித்துள்ளார் "
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம்
"கிறிஸ்துவின் நாமம்" என்பது கிறிஸ்துவையும் அவர் செய்த எல்லாவற்றையும் குறிக்கிற ஆகுபெயராகும். இது "கிறிஸ்து உங்களுக்காக செய்தவைகளினாலே" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பிதாக்களே, உங்களுக்கு எழுதுகிறேன்
இங்கு "பிதாக்கள்" என்ற வார்த்தை உருவகம். மற்றும் இது தேறின விசுவாசிகளைக் குறிக்கிறது. இது "தேறின விசுவாசிகளாகிய உங்களுக்கு எழுதுகிறேன்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
"உங்களுக்கு ஐக்கியம் உண்டு"
ஆதியிலிருந்து இருக்கிறவர்
"எப்பொழுதும் வாழ்ந்தவர் " அல்லது "எப்பொழுதும் இருக்கிறவர்." இது "இயேசுவை" அல்லது "பிதாவாகிய தேவனை" குறிக்கிறது.
வாலிபரே
இந்த உருவகம் புதிய விசுவாசிகளாக இல்லாமல், ஆவிக்குரிய பக்குவத்தில் வளருகிறவர்களைக் குறிக்கிறது. இது "இளம் விசுவாசிகள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது
இது "நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திருக்கிறீர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
மேற்கொள்ளுதல்
"ஜெயித்தது" அல்லது "வெற்றி பெறுவது" அல்லது "முறியடிக்கப்பட்டது"
1 John 2:15-17
உலகத்தை நேசிக்காதிருங்கள்
2: 15
17 ல் "உலகம்" என்ற வார்த்தை, ஜனங்கள் செய்கிற எல்லாக் காரியங்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய, தேவனைக் கனப்படுத்தாத காரியங்களையும் குறிக்கிறது. இது "தேவனைக் கனப்படுத்தாத உலகத்தில் உள்ள மக்களைப் போல நடந்துகொள்ளவேண்டாம்"
உலகத்தில் உள்ள காரியங்களையோ
"தேவனைக் கனவீனப்படுத்துகிறவர்கள் விரும்புகிற அதே காரியங்கள் வேண்டாம்"
அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை
இதற்கு "அவன் தேவனை நேசிக்கவில்லை" என்று அர்த்தம்.
ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை
இதை "ஒரு நபர் ஒரே சமயத்தில் இந்த உலகத்தையும், தேவனை கனவீனப்படுத்துகிற எல்லாவற்றையும் நேசிப்பதோடு பிதாவையும் நேசிக்க முடியாது" என்று மொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பு குறிப்புகள்
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை
இது இந்த உலகத்தில் உள்ள சில காரியங்களினுடைய பட்டியல். "உலகத்தில் உள்ளவைகளெல்லாம்"என்பதன் அர்த்தம் என்ன என்பதை இது விளக்குகிறது.
மாம்சத்தின் இச்சை
"சரீர இன்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தீவிர ஆசை"
கண்களின் இச்சை
நாம் காண்கிறவைகளை அடையவேண்டும் என்கிற தீவிர ஆசை"
ஜீவனத்தின் பெருமை
"ஒரு நபர் தனக்கு இருப்பதைக் குறித்து பெருமைகொள்வது" அல்லது "தங்களுடைய காரியங்களினால் மக்கள் அடைகிற பெருமை"
ஜீவன்
இங்கு இது மக்கள் வாழ்வதற்காக தாங்கள் வைத்திருக்கிற உடைமைகள், சொத்துக்கள் போன்ற காரியங்களைக் குறிக்கிறது.
பிதாவினுடையதல்ல
இதை "பிதாவிடமிருந்து வரவில்லை" அல்லது "பிதா நமக்கு எப்படி வாழவேண்டுமென்று கற்றுக்கொடுப்பதல்ல" என்று மொழிபெயர்க்கலாம்.
ஒழிந்து போகும்
"ஒரு நாள் இல்லாமல் போகும்"
1 John 2:18-19
சிறு பிள்ளைகள்
2:1 ல் நீங்கள் இதை எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
இது கடைசி காலம்
"கடைசி காலம்" என்கிற சொற்றொடர், இயேசு திரும்ப பூமிக்கு வந்து எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்ப்பதற்கு சற்று முந்தின நேரத்தைக் குறிக்கிறது. இதை "இயேசு சீக்கிரமாய் திரும்ப வருவார் " என்று மொழிபெயர்க்கலாம்.
அதினாலே நாம் அறிகிறோம்
இதை "இதினாலே நாம் அறிகிறோம்" அல்லது "அநேக அந்திக்கிறிஸ்துகள் வந்திருப்பதினால் , நாம் அறிகிறோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
அநேக அந்திகிறிஸ்துகள் வந்திருக்கிறார்கள்
"கிறிஸ்துவுக்கு விரோதமாக அநேக ஜனங்கள் உண்டு."
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள்
"அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்"
ஆனால் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை
"ஆனால், அவர்கள் உண்மையாகவே எவ்விதத்திலும் நம்முடையவர்களாக இருக்கவில்லை" அல்லது "அவர்கள் உண்மையாகவே முதலிடத்தில் நம்முடைய குழுவில் அங்கமானவர்களல்ல." அவர்கள் உண்மையாகவே நம்முடைய குழுவில் அங்கமாக இல்லாமலிருந்தற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் விசுவாசிகளாக இல்லாமலிருந்ததே.
அவர்கள் நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருந்திருப்பார்கள்
இது "ஏனெனில், அவர்கள் உண்மையாகவே விசுவாசிகளாக இருந்திருப்பார்களானால் அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கமாட்டார்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர்கள் நம்முடையவர்களல்ல என்பது தெரியும்படிக்கே பிரிந்துபோனார்கள்
இது "அவர்கள் உண்மையாகவே விசுவாசிகள் இல்லை என்பதை தேவன் நமக்குக் காண்பிக்கும்படியாக அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள்" என்ற செய்வினை எழுவாயோடு சொல்லப்படலாம்.
1 John 2:20-21
ஆனால் நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள்
"ஆனால் பரிசுத்தர் உங்களை அபிஷேகம் செய்திருக்கிறார்." பழைய ஏற்பாட்டிலே "அபிஷேகம்" என்பது ஒரு நபரின்மீது எண்ணெயை ஊற்றி தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக பிரித்துவிடுவதைக் குறிக்கிறது. இங்கு "அபிஷேகம்" என்பது இயேசு விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்து தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக அவர்களைப் பிரித்துவிடுவதைக் குறிக்கிறது. இது " ஆனால் பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவியை உங்களுக்குக் கொடுத்துள்ளார்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
சத்தியத்தினால் ஒரு பொய்யும் இல்லை
"சத்தியத்திலிருந்து ஒரு பொய்யும் வருவதில்லை." "சத்தியம்" என்கிற சொற்றொடர், முழுவதும் சத்தியமாக இருக்கிற தேவனைக் குறிக்கிறது. இது "சத்தியமுள்ளவரிடமிருந்து ஒரு பொய்யும் வராது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 2:22-23
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்?
பொய்யர்கள் யார் என்பதை வலியுறுத்துவதற்காக யோவான் கேள்வியைப் பயன்படுத்தியுள்ளார். இது "யார் பொய்யன்? இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே" என்கிற பதிலோடு கூடிய கேள்வியாக மொழிபெயர்க்கப்படலாம்.
இயேசுவே கிறிஸ்து என்று மறுதலிப்பது
"இயேசுவைக் கிறிஸ்து என்று சொல்ல மறுப்பது"அல்லது "இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று சொல்வது"
பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பது
இதை "பிதாவையும் குமாரனையும் குறித்த சத்தியத்தைச் சொல்ல மறுப்பது" அல்லது "பிதாவையும் குமாரனையும் நிராகரிப்பது" என்று மொழிபெயர்க்கலாம்.
பிதாவையுடையதல்ல
"பிதாவைச் சேர்ந்ததல்ல"
குமாரனை அறிக்கைசெய்வது
"குமாரனைக் குறித்த சத்தியத்தை பேசுவது"
பிதாவையுடையது
"பிதாவைச் சேர்ந்தது"
1 John 2:24-26
நீங்களோ
2:24
26 ல் "நீங்கள்" என்ற வார்த்தை, யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களைக் குறிக்கும் பன்மை.
ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களுக்குள் நிலைத்திருக்கட்டும்
"ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்து விசுவாசியுங்கள்." அவர்கள் எப்படி அதைக் கேள்விப்பட்டார்கள், அவர்கள் எதைக் கேள்விப்பட்டார்கள், மற்றும் "ஆதி" என்பதின் அர்த்தம் என்ன என்பது தெளிவுபடுத்தப்படலாம் : நீங்கள் முதலாவது விசுவாசிகளானதிலிருந்து நீங்கள் விசுவாசித்தபடி, இயேசுவைக் குறித்து நாங்கள் உங்களுக்குக் கற்பித்தவைகளை தொடர்ந்து விசுவாசியுங்கள்."
நீங்கள் ஆதிமுதல் கேட்டவைகள்
இதை "நீங்கள் முதலாவது விசுவாசிகளானபோது இயேசுவைக் குறித்து நாங்கள் உங்களுக்குப் போதித்தவைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.
நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால்
"நாங்கள் உங்களுக்குப் போதித்தவைகளை நீங்கள் தொடர்ந்து விசுவாசித்தால்"
குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருங்கள்
2: 5
6 ல் இது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
நித்திய ஜீவன் ; இது அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்
"நித்திய ஜீவன் ; இதுவே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்" அல்லது "நம்மை நித்தியமாய் வாழவைப்பதற்காக அவர் வாக்குத்தத்தம் செய்தார் "
அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்தார்
இங்கு "அவர் " என்ற வார்த்தை அழுத்தமாக இயேசுவைக் குறிக்கும் . "நமக்கு" என்ற வார்த்தை யோவானையும், எல்லா விசுவாசிகளையும் மற்றும் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களையும் சேர்த்துக் குறிக்கிறது.
உங்களை வஞ்சிப்பது
"உங்களைப் பொய்யை விசுவாசிக்க வைக்க முயற்சிப்பது" அல்லது "தேவனையும் அவருடைய சத்தியத்தையும் விட்டு உங்களை திசைதிருப்ப விரும்புவது"
1 John 2:27-29
மேலும் நீங்களும்
2:27
29 ல் "நீங்கள்" என்ற வார்த்தை பன்மை மற்றும் யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த விசுவாசிகளைக் குறிக்கிறது.
அபிஷேகம்
இது "தேவனுடைய ஆவி" யைக் குறிக்கிறது. 2:20 ல் "அபிஷேகம்" பற்றிய குறிப்பைப் பார்க்கவும்.
அவருடைய அபிஷேகம் போதிப்பதுபோல
"ஏனென்றால் அவருடைய அபிஷேகம் உங்களுக்குப் போதிக்கிறது"
எல்லாக் காரியங்களும்
இங்கு இந்த சொற்றொடர் மிகைப்படுத்திக் கூறக்கூடியது. இது "நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய காரியங்களெல்லாம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவருக்குள் நிலைத்திரு
இந்த சொற்றொடர் உள்ளான மற்றும் வெளிப்படையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இப்பொழுது
இந்த நிரூபத்தினுடைய புதிய பகுதியைக் குறிப்பிட இந்த வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரியமான பிள்ளைகள்
2:1 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அவர் காணப்படுகிறார்
"நாங்கள் அவரைப் பார்க்கிறோம்"
உறுதியான
"நம்பிக்கை"
அவருடைய வருகையில் அவருக்கு முன்பாக
"அவருடைய வருகை" என்ற சொற்றொடர் இயேசு உலகத்தின் ராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் மீண்டும் வருவதைக் குறிக்கிறது. இது "அவர் எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்க்க திரும்ப வரும்போது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவரில் பிறந்தவன்
"தேவனில் பிறந்தவன்" அல்லது "தேவனுடைய பிள்ளை"
1 John 3
1 John 3:1-3
பிதா நமக்குப் பாராட்டின அன்பு எப்படிப்பட்டது என்பதைப் பார்க்கவும்
"நம்முடைய பிதா நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கவும்"
நமக்கு அளித்தார்
"நமக்குக் கொடுக்கப்பட்டது" அல்லது "நமக்குக் காண்பிக்கப்பட்டது"
நமக்கு...நாம்
3:1
3 ல் இந்த ஆகுபெயர்கள் யோவானையும், அவருடைய ஜனங்களையும், எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படவேண்டும்
இதை செய்வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "பிதா நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கவேண்டும்"
உலகம் அவரை அறிந்திராததினால், நம்மையும் அறியவில்லை
இங்கு "உலகம்" என்பது தேவனைக் கனப்படுத்தாத மக்களைக் குறிக்கிறது. உலகம் எதை அறியவில்லையோ, அது தெளிவுபடுத்தப்படலாம் : "தேவனைக் கனப்படுத்தாதவர்கள், நாம் தேவனைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தேவனை அறியவில்லை "
அது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை
இதை "தேவன் வெளிப்படுத்தவில்லை" என்ற செய்வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்.
அவர்மேல் வைத்திருக்கிற இந்த நம்பிக்கையையுடைய ஒவ்வொருவரும், அவர் சுத்தமுள்ளவராக இருப்பதுபோல தன்னையும் சுத்தப்படுத்துகிறது. கிறிஸ்து சுத்தமுள்ளவராக இருப்பதினால், கிறிஸ்துவை, அவர் இருக்கிறவண்ணமாகவே காண நம்பிக்கையாக எதிர்பார்க்கிற ஒவ்வோருவரும் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள்.
1 John 3:4-6
பாவம் செய்வது
"தொடர்ந்து பாவம் செய்வது"
நியாயப்பிரமாணமில்லாததைச் செய்வது
"தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய மறுப்பது"
நீங்கள்
இங்கு "நீ " என்பது பன்மை, மற்றும் இது யோவான் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களைக் குறிக்கிறது.
கிறிஸ்து வெளிப்பட்டார்
இது "கிறிஸ்து தோன்றினார்" அல்லது "பிதா கிறிஸ்துவை வெளிப்படுத்தினார்" என்ற செய்வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கப்படலாம்
அவருக்குள் நிலைத்திருக்கிறது
இது 2: 5
6 ல் எப்படி மொழிபெயர்க்கப்பட்டதென்று பார்க்கவும்.
அவரைக் கண்டதும் இல்லை, அறிந்ததும் இல்லை
இது வலியுறுத்துவதற்காக, ஒரே காரியத்தை இரண்டு வெவ்வேறான விதங்களில் சொல்லுகிறது. இது "அவரை உண்மையாக விசுவாசிக்கவே இல்லை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 3:7-8
அன்பான பிள்ளைகள்
இதை நீங்கள் 2:1 ல் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்பதைப் பார்க்கவும்.
ஒருவனும் உங்களை வஞ்சிக்கக்கூடாது
இது "ஒருவனும் உங்களை முட்டாளாக்கக்கூடாது" அல்லது "ஒருவனும் உங்களை ஏமாற்றக்கூடாது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நீதியைச் செய்கிறவன், கிறிஸ்து நீதியுள்ளவராக இருப்பதுபோல தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்
இது சரியானதைச் செய்கிறவன், கிறிஸ்து தேவனுக்குப் பிரியமாக இருப்பதுபோல தானும் தேவனுக்குப் பிரியமாக இருக்கிறான்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
பாவம் செய்வது
"தொடர்ந்து திரும்பத்திரும்ப பாவம் செய்வது"
பிசாசினால்
"பிசாசைச் சேர்ந்தவன்" அல்லது "பிசாசைப்போல"
ஆதியிலிருந்து
இது மனிதர்கள் முதலில் பாவம் செய்ததற்கு முந்தின சிருஷ்டிப்பின் ஆரம்ப காலத்தைக் குறிக்கிறது. இது "சிருஷ்டிப்பின் ஆரம்ப காலத்திலிருந்து" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்
இது "தேவன் அவருடைய குமாரனை வெளிப்படுத்தினார் " என்ற செய்வினை வாக்கியத்தொடரோடு மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 3:9-10
தேவனால் பிறந்திருக்கிறவர்கள்
இது "தேவனால் அவருடைய பிள்ளையாக்கப்பட்டவர்கள்" என்ற செய்வினை வாக்கியத்தொடரோடு மொழிபெயர்க்கப்படலாம்.
பாவம் செய்வதில்லை
"தொடர்ந்து பாவம் செய்யமுடியாது"
தேவனுடைய வித்து
இது பூமியிலே விதைக்கப்பட்டு வளருகிற சரீர வித்தை, தேவன் விசுவாசிகளுக்குள் வைத்த, பாவத்தை எதிர்க்கவும், தேவனுக்குப் பிரியமானதைச் செய்யவும் வல்லமையைத் தரும் பரிசுத்த ஆவியானவரோடு ஒப்பிடுகிறது. இது "பரிசுத்த ஆவியானவர் " என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
அவன் தேவனால் பிறந்திருக்கிறவன்
இது "தேவன் அவனுக்கு புதிய ஆவிக்குரிய வாழ்வைக் கொடுத்திருக்கிறார் " அல்லது "அவன் தேவனுடைய பிள்ளை" என்ற செய்வினை வாக்கியத்தொடராக மொழிபெயர்க்கலாம்.
இதில் தேவனுடைய பிள்ளைகள் மற்றும் சாத்தானுடைய பிள்ளைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது "இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பிள்ளைகளையும், சாத்தானுடைய பிள்ளைகளையும் அறிகிறோம்" என்ற செய்வினை வாக்கியத்தோடு மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 3:11-12
நாம் அன்புகூறவேண்டும்
இங்கு, "நாம் " என்ற வார்த்தை அனைத்து விசுவாசிகளையும் குறிக்கிறது.
மேலும் அவன் ஏன் அவனைக் கொன்றான் ? ஏனென்றால்
யோவான் தன்னுடைய ஜனங்களுக்குப் போதிக்க கேள்வியைப் பயன்படுத்துகிறார். இது "அவன் அவனைக் கொன்றான், ஏனென்றால் "என்ற அறிக்கையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
அவனுடைய கிரியைகள் பொல்லாதவைகளும், அவனுடைய இளைய சகோதரனுடையவைகள் நீதியுள்ளவைகளாகவும் இருந்தது
இது "ஏனென்றால், அவன் எப்பொழுதும் பொல்லாத காரியங்களைச் செய்துவந்தான், அவனுடைய இளைய சகோதரன் நல்ல காரியங்களைச் செய்துவந்தான்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
1 John 3:13-15
வியப்படையவேண்டாம்
"ஆச்சரியப்படவேண்டாம்."
சகோதரர்கள்
"சகவிசுவாசிகள் "
உலகம் உங்களைப் பகைத்தால்
இங்கு "உலகம் " என்கிற வார்த்தை தேவனைக் கனப்படுத்தாத மக்களைக் குறிக்கிறது. இது "தேவனைக் கனப்படுத்தாத அவர்கள், தேவனைக் கனப்படுத்துகிற உங்களை வெறுத்தால் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நாம் மரணத்தைக் கடந்து ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்
" நாம் இனி ஒருபோதும் ஆவியில் மரித்தவர்கள் அல்ல ஆனால் ஆவியில் பிழைத்திருக்கிறவர்கள்"
மரணத்தில் நிலைத்திருப்பது
"இன்னும் ஆவியில் மரித்திருக்கிறது "
தன் சகோதரனைப் பகைக்கிறவன் கொலைப்பாதகனாக இருக்கிறான்
இது, மற்றொரு விசுவாசியைப் பகைக்கிற ஒருவரை கொலைப்பாதகனோடு ஒப்பிடுகிறது. கொலைக்கு பகை காரணமாக இருப்பதினால், பகைக்கிற எவனையும், மற்றவனைக் கொலைசெய்யும் ஒருவனைப்போல குற்றமுள்ளவனாக தேவன் கருதுகிறார். இது "மற்றொரு விசுவாசியை வெறுக்கிற எவரும், ஒருவனைக் கொலை செய்பவனைப்போல குற்றமுள்ளவனாக இருப்பான்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நித்தியஜீவனை உடையவர்கள் அவருக்குள் வாழ்கிறார்கள்
"நித்தியஜீவன் " என்பது மரித்தபின்பு விசுவாசிகளுக்கு தேவன் கொடுக்கிற ஒன்று. ஆனால் இது, இந்த வாழ்க்கையில் பாவம் செய்வதை நிறுத்தவும், தேவனுக்குப் பிரியமானதைச் செய்யவும் உதவும்படிக்கு தேவன் விசுவாசிகளுக்குக் கொடுக்கிற வல்லமையாகும். இது "ஆவிக்குரிய வாழ்வின் வல்லமை அவருக்குள் கிரியை செய்கிறது" என்று மொழிபெயர்க்கப்படமுடியும்.
1 John 3:16-18
கிறிஸ்து நமக்காகத் தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார்
"கிறிஸ்து விருப்பமாகவே அவருடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார் " அல்லது "கிறிஸ்து விருப்பத்தோடு நமக்காக மரித்தார் " என்பதே இது சொல்கின்ற அர்த்தம்.
உலகத்திற்குரிய பொருட்கள்
இது "பணம், ஆகாரம் அல்லது உடைகள் போன்ற பொருளாதார ஆஸ்திகள் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவனுடைய சகோதரன் தேவையில் இருப்பதைப் பார்த்தல்
"சகவிசுவாசிக்கு உதவி தேவை என்பதை உணர்வது "
மேலும் அவனிடமிருந்து தன்னுடைய இரக்கமான இருதயத்தை அடைத்துக்கொண்டால்
"ஆனால் அவனுக்கு இரக்கம் காண்பிக்காமல்" அல்லது "ஆனால் தானாக அவனுக்கு உதவி செய்யாமல்" என்பதே இது சொல்கின்ற அர்த்தம்.
அவனுக்குள் தேவனுடைய அன்பு நிலைத்திருப்பது எப்படி?
யோவான் அவனுடைய ஜனங்களுக்குப் போதிக்க கேள்வியைப் பயன்படுத்துகிறார். இது "தேவனுடைய அன்பு அவனுக்குள் இல்லை" என்ற அறிக்கையாக மொழிபெயர்க்கப்படலாம்.
என் அன்பு பிள்ளைகள்
2:1 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
நாம் வசனத்தினாலும் நாவினாலும் அன்புகூரவேண்டாம்
"வசனத்தினாலும்" மற்றும் "நாவினாலும்" என்ற சொற்றொடர்கள் அடிப்படையில் ஒரே அர்த்தமுடையவை. இவைகள் ஒருவன் என்ன சொல்கிறான் என்பதைக் குறிக்கிறது. இதை "நீங்கள் மக்களை நேசிக்கிறீர்கள் என்று வெறும் வார்த்தையில் சொல்லவேண்டாம்" என்று மொழிபெயர்க்கலாம்.
ஆனால் கிரியையிலும் உண்மையிலும்
இது "ஆனால் நீங்கள் உண்மையாகவே மக்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் காண்பியுங்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 3:19-22
நாம் சத்தியத்திற்குரியவர்கள்
இது "இயேசு நமக்கு கற்பித்த விதத்தின்படி நாம் வாழ்கிறோம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நம்முடைய இருதயத்தை நிச்சயப்படுத்துதல்
3:19
22 ல் "இருதயம்" என்ற வார்த்தை ஒருவனுடைய மனசாட்சியை அல்லது ஒருவன் பாவமான காரியத்தைச் செய்கிறான் என்று தேவன் அவனை எச்சரிப்படையச் செய்யும் அவனுடைய யோசனையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது.இதை "நாம் தேவனுடைய பிரசன்னத்தில் குற்றமுள்ளவர்களாக உணரமாட்டோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவன் நம்முடைய இருதயத்தைவிட பெரியவர்
இது "தேவன் நம்முடைய இருதயத்தைக் காட்டிலும் சிறந்த நியாயாதிபதி என்பதை நாம் அறிந்திருக்கிறோம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
மேலும் அவருடைய பார்வைக்குப் பிரியமான காரியங்களைச் செய்வது
இதை "நாம் அவருக்குப் பிரியமானவைகளைச் செய்கிறோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 3:23-24
இது அவருடைய கட்டளை
இது "இதுதான் தேவன் நாம் செய்யும்படி விரும்புவது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவன் அவரிலும், தேவன் அவனிலும் நிலைத்திருக்கிறார்
2:5
6 ல் இது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது
இதை "ஏனென்றால் தேவன் நம்மை ஒருவரையொருவர் நேசிக்க வைக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனால் பிறந்தவன்
இந்த உருவகம், பிள்ளைக்குத் தகப்பனோடு இருக்கிறதுபோல தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் என்ற அர்த்தம் கொண்டுள்ளது.
மேலும் அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் தேவனால் பிறந்தும், தேவனை அறிந்தும் இருக்கிறார்கள்
இதை "ஏனென்றால் தங்களுடைய சகவிசுவாசிகளை நேசிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளானவர்களும் அவரை அறிந்தும் இருக்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவன் அன்பாயிருப்பதினால், அன்பாக இல்லாதவன் தேவனை அறியான்
இதை "அனைத்து மக்களையும் நேசிப்பதே தேவனுடைய குணாதிசயம். தங்களுடைய சகவிசுவாசிகளை நேசிக்காதவர்கள் தேவனை அறியாதவர்கள், ஏனென்றால், ஜனங்களை நேசிப்பதே தேவனுடைய குணம்" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 4
1 John 4:1-3
எல்லா ஆவிகளையும் நம்பவேண்டாம்
4:1
3 ல் "ஆவி " என்ற வார்த்தை ஆவிக்குரிய வல்லமை அல்லது ஒருவனுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிற அல்லது தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஒன்று. இது "ஆவியிலிருந்து செய்தியைப் பெறுவோம் என்று சொல்லுகிற எல்லாத் தீர்க்கதரிசிகளையும் நம்பவேண்டாம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஆனால் ஆவிகளைச் சோதித்துப்பாருங்கள்
இது "தீர்க்கதரிசி சொல்வதைக் கவனமாக கேட்பதற்கு நிச்சயமுள்ளவர்களாக இருங்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
மாம்சத்தில் வந்தது
"மனித உருவமெடுத்தது" அல்லது "மாம்ச சரீரத்தில் வந்தது"
இதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆவி
இது "அவைகள் கிறிஸ்துவை எதிர்க்கிற போதகர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நீங்கள் கேள்விப்பட்டது வருகிறது
இது "அப்படிப்பட்ட மக்கள் நம் மத்தியிலே வருகிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது
இது "இப்பொழுதும் அவர்கள் இங்கு இருக்கிறார்கள்!" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 4:4-6
தேவனுக்குரியவர்கள்
"நீங்கள் தேவனைச் சேர்ந்தவர்கள்."
அன்பான பிள்ளைகளே
2:1 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
அந்த ஆவிகளை ஜெயித்தீர்கள்
இது "தவறான போதனைகளை நீங்கள் விசுவாசிக்கவில்லை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உங்களுக்குள் இருக்கிற அவர்
"அவர் " தேவனைக் குறிக்கிறது.
உலகத்தில் இருக்கிற அவன்
"அவன் " சாத்தானைக் குறிக்கிறது.
உலகம்
உலகம் என்ற பதம் தேவனுக்குக் கீழ்ப்படியாத மக்களைக் குறிக்கிறது.
அந்த ஆவிகள் உலகத்துக்குரியவர்கள்
இது "அந்த தவறான போதகர்கள், தேவனுக்குக் கீழ்ப்படியாத மக்களே" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஆகையால், அவர்கள் சொல்லுவது உலகத்துக்குரியவைகள்
இது "ஆகவே, தேவனுக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் போதிக்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
மேலும் உலகம் அவர்களுக்குச் செவிகொடுக்கிறது
இது "ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படியாத மக்கள் அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்கள் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 4:7-8
பிரியமானவர்கள்
"அன்பான சிநேகிதர்கள்."
நாம் ஒருவரையொருவர் அன்புகூருவோம்
"விசுவாசிகள் மற்ற விசுவாசிகளை நேசிக்கவேண்டும்."
தேவன் அன்பாயிருக்கிறார்
இந்த உருவகத்திற்கு "அன்பு என்பது தேவனுடைய குணாதிசயம்" என்று அர்த்தம்.
அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது
இதை "ஏனென்றால் தேவன் நம்மை ஒருவரையொருவர் நேசிக்க வைக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனால் பிறந்தவன்
இந்த உருவகம், பிள்ளைக்குத் தகப்பனோடு இருக்கிறதுபோல தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் என்ற அர்த்தம் கொண்டுள்ளது.
மேலும் அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் தேவனால் பிறந்தும், தேவனை அறிந்தும் இருக்கிறார்கள்
இதை "ஏனென்றால் தங்களுடைய சகவிசுவாசிகளை நேசிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளானவர்களும் அவரை அறிந்தும் இருக்கிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவன் அன்பாயிருப்பதினால், அன்பாக இல்லாதவன் தேவனை அறியான்
இதை "அனைத்து மக்களையும் நேசிப்பதே தேவனுடைய குணாதிசயம். தங்களுடைய சகவிசுவாசிகளை நேசிக்காதவர்கள் தேவனை அறியாதவர்கள், ஏனென்றால், ஜனங்களை நேசிப்பதே தேவனுடைய குணம்" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 4:9-10
இதிலே தேவனுடைய அன்பு நம் மத்தியிலே வெளிப்பட்டது,
இது "தேவன் நம்மை நேசித்தார் என்பதை அவர் காண்பித்தார்," என்று மொழிபெயர்க்கப்படலாம்.
அவர் மூலமாக நாம் பிழைக்கும்படிக்கு
இது "இயேசு செய்தவையினாலே நாம் நித்தியமாக வாழும்படிக்கு நம்மைத் தகுதிபடுத்தினார் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
இதிலே அன்பு உண்டாயிருக்கிறது
இது "உண்மையான அன்பு என்னவென்று தேவன் நமக்குக் காண்பித்தார் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
நாம் தேவனை நேசித்ததினாலே அல்ல,
இது "நாம் தேவனை நேசிக்கிற விதத்தைப்போல அல்ல" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பாவநிவிர்த்தி என்றால் கிருபாதாரபலி என்று அர்த்தம்.
மேலும் நம்முடைய பாவங்களுக்கு நிவிர்த்தி செய்கிறதாக இருக்கும்படி தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்
இது "மேலும் தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி அவர் தம்மைத்தாமே பலியாக்க தம்முடைய குமாரனை அனுப்பினார் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 4:11-14
பிரியமானவர்கள்
"அன்பான சிநேகிதர்கள்"
தேவன் இவ்வளவு அதிகமாக நம்மை நேசித்திருந்தால்
இதை "தேவன் இவ்வளவு அதிகமாக நம்மை நேசிப்பதிலிருந்து "
ஒருவரையொருவர் அன்புகூருங்கள்
"விசுவாசிகள் மற்ற விசுவாசிகளை நேசிக்கவேண்டும்."
தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்
நாம் அவருக்குள்ளும், அவர் நமக்குள்ளும் நிலைத்திருக்கிறார்
இது 2:5
6 ல் எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
அவருடைய அன்பு நமக்குள் பூரணப்பட்டிருக்கிறது
இது "தேவனுடைய அன்பு நமக்குள் பரிபூரணப்பட்டிருக்கிறது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
ஏனென்றால் அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்திருக்கிறார்
இது "ஏனெனில் அவருடைய பரிசுத்த ஆவியை நமக்குள் வைத்திருக்கிறார் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பிதாவானவர் குமாரனை உலகத்திற்கு இரட்சகராக இருக்கும்படி அனுப்பினதை நாங்கள் பார்த்து சாட்சி கொடுத்தோம்
இதை "மேலும் அப்போஸ்தலர்களாகிய நாங்கள் தேவனுடைய குமாரனைப் பார்த்து, பிதாவாகிய தேவன் இந்த பூமியிலுள்ள மக்களை இரட்சிப்பதற்காக தன்னுடைய குமாரனை அனுப்பினார் என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லுவோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 4:15-16
இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்கிறவர்களெல்லாம்
"இயேசு தேவனுடைய குமாரன் என்று அவரைப் பற்றிய சத்தியத்தைச் சொல்லுகிறவர்கள்."
தேவன் அவனிலும், அவன் தேவனிலும் நிலைத்திருக்கிறான்
2:5
6 ல் இது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
தேவன் அன்பாயிருக்கிறார்
இது "அன்பு என்பது தேவனுடைய குணாதிசயம்" என்னும் அர்த்தமுடைய உருவகம்.
மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்
இதை "மற்றவர்களைத் தொடர்ந்து நேசிக்கிறவர்கள் தேவனோடு நெருங்கிய உறவு வைத்துள்ளனர், மற்றும் தேவனும் அவர்களோடு நெருங்கிய உறவு வைத்துள்ளார் " என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 4:17-18
நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் நம்பிக்கை கொள்ளும்படியாக, இதில் அன்பு நம் மத்தியில் பூரணப்படுகிறது
அனுகூலமான அர்த்தங்கள் 1) "இது" என்ற வார்த்தை திரும்ப 4:16 ஐக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "மேலும், ஒருவர் அன்பில் வாழும்போது, அவன் தேவனிலும் தேவன் அவனிலும் இருக்கிறார், நம்முடைய அன்பு பரிபூரணப்பட்டிருக்கும். மேலும், நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் பூரண நம்பிக்கை கொண்டிருப்போம்." அல்லது 2) "இது" என்ற வார்த்தை "நம்பிக்கை" ஐக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் எல்லோரையும் நியாயம் தீர்க்கும் நாளிலே நம்மை ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கையாய் இருக்கும்போது, நம்முடைய அன்பு நம் மத்தியில் பூரணப்பட்டிருக்கிறதென்று அறிகிறோம்."
ஏனெனில் அவர் இருக்கிற பிரகாரமாகவே, நாமும் இந்த உலகில் இருக்கிறோம்
"ஏனென்றால் இயேசு தேவனோடு வைத்திருக்கிற அதே உறவை, இந்த உலகத்தில் நாமும் தேவனோடு வைத்துள்ளோம்.
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்
இங்கு "அன்பு" என்பது பயத்தைப் போக்கும் வல்லமையுடைய நபராக விவரிக்கப்பட்டுள்ளது. மாற்று மொழிபெயர்ப்பு: "ஆனால், நம்முடைய அன்பு பூரணமாய் இருக்கும்போது நாம் பயப்படுவதில்லை."
ஏனெனில் பயமானது வேதனையுள்ளது
"ஏனென்றால், தேவன் எல்லோரையும் நியாயம் தீர்க்க வரும்போது நம்மை தண்டிப்பார் என்று நினைப்பதினால் நாம் பயப்படுகிறோம்"
ஆனால், பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல
"ஒருவன் தேவன் அவனைத் தண்டிப்பார் என்று பயப்படும்பொழுது அவனுடைய அன்பு பூரணப்படவில்லை என்று அர்த்தம்"
1 John 4:19-21
நாம்
இது யோவானையும், அவர் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களையும், மற்றும் எங்கும் இருக்கிற விசுவாசிகளையும் குறிக்கிறது.
அவனுடைய சகோதரனைப் பகைத்தல்
"சகவிசுவாசியைப் பகைப்பது."
அவரிடமிருந்து கட்டளை
"அவர் " தேவனைக் குறிக்கிறது.
1 John 5
1 John 5:1-3
தேவனால் பிறந்தவன்
"தேவனுடைய பிள்ளை "
பிதாவானவர்
"பிதா." மாற்று மொழிபெயர்ப்பு: "நம்மை அவருடைய பிள்ளைகளாக இருக்கச்செய்தவர் "
அவரால் பிறந்தவனிடத்திலும் அன்புகூருவது
"அவருடைய பிள்ளையையும் நேசிப்பது." மாற்று மொழிபெயர்ப்பு: "அவருடைய பிள்ளைகளையும் நேசிப்பது."
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்திலும் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்
"நாம் தேவனை நேசித்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறோம் என்று அறிந்து கொள்ளுகிறோம்"
நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூறுவதாகும்
"ஏனெனில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூருகிறோம்"
அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் இல்லை
"மேலும், அவர் கட்டளையிடுவது பாரமானவையில்லை" அல்லது "மேலும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது கடினமானதல்ல "
1 John 5:4-5
எல்லோரும்
இது எல்லா தேவனுடைய பிள்ளைகளையும் குறிக்கிறது.
உலகத்தை ஜெயிக்கும்
இதை "அவிசுவாசிகள் செய்கிற பொல்லாத காரியங்களைச் செய்ய மறுப்பது "
மேலும், இதுவே ஜெயம்...நம்முடைய விசுவாசம்
இது "தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதை எதிர்க்க நம்முடைய விசுவாசம் நமக்கு வல்லமையைத் தருகிறது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
உலகத்தை ஜெயிக்கிறவன் யார் ?
ஆகுபெயரை உடைய இது அணி இலக்கணக் கேள்வி. "அவன் " என்பது விசுவாசிகளைக் குறிக்கிறது.
1 John 5:6-8
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்
"இயேசு கிறிஸ்துவே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்." இங்கு "ஜலம்" என்பது இயேசுவின் ஞானஸ்நானத்தையும், "இரத்தம்" இயேசுவின் மரணத்தையும் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசு கிறிஸ்து அவருடைய குமாரன் என்பதை இயேசுவின் ஞானஸ்நானத்திலும், அவருடைய சிலுவை மரணத்திலும் தேவன் காண்பித்தார்."
ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும்
இதை "அவர் ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தார் " என்ற புதிய வாக்கியத்தில் மொழிபெயர்க்கலாம். மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக இல்லாமல், அவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவை மரணத்தின் மூலமாக தேவன் நமக்குக் காண்பித்தார்."
அங்கே சாட்சியிடுகிறவைகள் மூன்று
"அங்கே இயேசுவைக்குறித்து சாட்சியிடுகிறவைகள் மூன்று"
ஆவி, ஜலம் மற்றும் இரத்தம்
இங்கு "ஜலம்" மற்றும் "இரத்தம்" ஆகியவை நீதிமன்றத்தில் நின்று ஜனங்களுக்கு தான் கண்டவைகளையும், கேட்டவைகளையும் சொல்லுகிற நபராக விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது
"மேலும் மூன்றும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்கிறது"
1 John 5:9-10
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், தேவனுடைய சாட்சி பெரிதாயிருக்கிறது
மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் மக்கள் சொல்வதை விசுவாசித்தால், தேவன் சொல்வதை நாம் விசுவாசிக்கவேண்டும், ஏனென்றால், தேவன் எப்போதும் சத்தியத்தைச் சொல்கிறார் "
தேவனுடைய குமாரனை விசுவாசிக்கிறவன் அந்த சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்
மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அவர் தேவனுடைய குமாரன் என்பதை உறுதியாய் அறிந்திருக்கிறார்கள்."
அவரைப் பொய்யராக்குகிறான்
"தேவனைப் பொய்யர் என்று அழைக்கிறான் "
ஏனெனில், தேவன் தம்முடைய குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சியை அவன் விசுவாசிக்கவில்லை
"ஏனெனில், தேவன் தம்முடைய குமாரனைக் குறித்து சத்தியத்தை சொன்னார் என்பதை அவன் விசுவாசிப்பதில்லை"
1 John 5:11-12
இதுவே சாட்சி
"தேவன் இதைச் சொல்கிறார்."
இந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது
"நாம் அவருடைய குமாரனோடு இணைந்திருந்தால், நித்தியமாய் வாழ்வோம்," அல்லது "நாம் அவருடைய குமாரனோடு ஒன்றுபட்டிருந்தால், நித்தியமாய் வாழ்வோம்."
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்
இது "இயேசுவில் விசுவாசிக்கிறவன் நித்தியஜீவனை உடையவன்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
1 John 5:13-15
இந்த காரியங்கள்
"இந்த நிரூபம்"
தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு
"நாமம்" என்ற வார்த்தை தேவகுமாரனைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவகுமாரன்மேல் நம்பிக்கையாயிருக்கிற உங்களுக்கு."
மேலும் அவருக்கு முன்பாக நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை இதுவே
"மேலும் நாம் தேவகுமாரனை நம்புவதினால் நாம் இதில் உறுதியாக இருக்கலாம்"
நாம் அவருடைய சித்தத்தின்படி கேட்டால்
"தேவகுமாரன் விரும்புகிற காரியங்களை நாம் கேட்டால் "
நாம் அவரிடத்தில் கேட்ட விண்ணப்பங்கள் நம்மிடமுண்டு என்று நாம் அறிந்திருக்கிறோம்
"நாம் அவரிடமிருந்து கேட்டவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம் "
1 John 5:16-17
சகோதரன்
"சகவிசுவாசி."
தேவன் அவனுக்கு ஜீவன் கொடுப்பார்
இங்கு "ஜீவன் " நித்தியஜீவனைக் குறிக்கிறது.
1 John 5:18-19
நாம் அறிந்திருக்கிறோம்
"நாம் " எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.
பாவம் செய்யமாட்டான்
"வழக்கமாக பாவம் செய்யமாட்டான்."
முழு உலகமும் கிடக்கிறது
"உலகம்" என்பது சாத்தானால் ஆளப்பட்ட உலக முறைகளைக் குறிக்கும் ஆகுபெயர்.
பொல்லாங்கனுக்குள்
"பொல்லாங்கன்" என்பது சாத்தானைக் குறிக்கும் ஆகுபெயர்.
மேலும் முழு உலகமும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது
இதை "சாத்தான் உலகத்திலுள்ள எல்லா அவிசுவாசிகளையும் கட்டுப்படுத்துகிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.
1 John 5:20-21
நாம் அறிந்திருக்கிறோம்
"நாம் " என்பது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.
புத்தியைத் தந்திருக்கிறார்
"சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கு நம்மைத் தகுதிபடுத்தியிருக்கிறார்."
நாம் சத்தியமுள்ளவரை அறிந்திருக்கிறோம்,
"அவரை" என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது.
நாம் அவருக்குள் இருக்கிறோம்
2: 5
6 ல் இது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்று பார்க்கவும்.
அன்பான பிள்ளைகள்
2: 1 ல் இதை நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.