Hebrews
Hebrews 1
Hebrews 1:1-3
ஒளி
"வெளிச்சம்"
அவருடைய சாராம்சத்தின் குணம்
ஒரு நபர் குமாரனைப் பார்க்கும்பொழுது தேவன் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்கிறான்.
அவருடைய வல்லமையின் வார்த்தை
"அவருடைய வல்லமையுள்ள வார்த்தை"
பாவங்களுக்கான சுத்திகரிப்பை அவர் பெற்றுவிட்டார்
"பாவத்திலிருந்து நம்மை சுத்திகரித்து முடித்துவிட்டார் "
Hebrews 1:4-5
எந்த தூதர்களுக்காவது எப்போதாவது அவர் சொன்னது உண்டா,...?
" தேவன் எந்த தூதர்களுக்கும் சொன்னதில்லை,...."
மீண்டும்,...?
"மீண்டும், அவர் எந்த தூதர்களுக்கும் சொன்னதில்லை,...."
Hebrews 1:6-7
அவருடைய ஊழியர்கள்
தூதர்கள்
ஆவிகள் ... அக்கினி ஜூவாலைகள்
அர்த்தங்கள் : 1) அவர் தூதர்களை அவருக்கு ஊழியம் செய்யும் அக்கினி ஜுவாலைகளைப் போலாக்குகிறார். 2) அவர் காற்றையும் அக்கினி ஜுவாலைகளையும் அவருடைய தூதுவராக்குகிறார்.
Hebrews 1:8-9
குமாரனைக் குறித்து அவர் சொல்லுகிறார்
" தேவன் குமாரனைக் குறித்து சொல்லுகிறார் "
செங்கோல்
ராஜா அல்லது ராணி அதிகாரத்தைக் காண்பிப்பதற்காக பிடித்திருக்கும் விசேஷித்த கோல்
மகிழ்ச்சியின் எண்ணெயினால் உன்னை அதிகமாய் அபிஷேகம் பண்ணினார்
"உனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்"
மகிழ்ச்சியின் எண்ணெய்
அனுகூலமான அர்த்தங்கள் : 1) கொண்டாட்டங்களின் போது ஜனங்கள் உபயோகிக்கும் நறுமண எண்ணெய் அல்லது 2) மனிதர்கள் ராஜாக்களான போது அபிஷேகம் பண்ணப்பட உபயோகப்படுத்தின எண்ணெய், இந்த "மகிழ்ச்சி" தேவன் கொடுக்கிற கனத்திலிருந்து வருகிறது.
Hebrews 1:10-12
குமாரன் தேவ தூதர்களைவிட பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக வேதவசனங்களைக் குறிப்பிடுகிறார்.
கந்தையாய் போதல்
பழையவை ஆகுதல்
ஆடை
உடுத்துவது
சுருட்டி வை
பழைய ஆடைகளை பயன்படுத்தி முடித்த பின்பு அவற்றை என்ன செய்வாய் என்பதற்காக வினைசொல் பயன்படுத்தவும்.
மேலாடை
அங்கி அல்லது வெளியே அணியும் அங்கி
முற்று பெறாத
முடிவு பெறாது
Hebrews 1:13-14
பாதபடி
அமரும்போது பாதங்களை வைக்கும் இடம்
சுதந்தரிக்கப் போகிறவர்கள்
சுதந்தரிப்பவர்கள்
எல்லா தூதர்களும் ஆவிகள் இல்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "எல்லா தூதர்களும் இருக்கிற ஆவிகள் "
Hebrews 2
Hebrews 2:1
அடைவது
மாற்று மொழிபெயர்ப்பு: "பெறுவது" # அடித்துச் செல்
விலகிச் செல்
ஏற்றுக்கொள்ளக்கூடிய
உண்மையென நிரூபிக்கப்பட்டது
ஒவ்வொரு மீறுதலும் கீழ்ப்படியாமையும் தண்டனையைப் பெறுகிறது
மாற்று மொழிபெயர்ப்பு: " பாவம் செய்கிற மற்றும் கீழ்ப்படியாத ஒவ்வொரு மனிதனும் தண்டனையைப் பெற்றுக்கொள்வான். "
Hebrews 2:2-4
அலட்சியம்
"கவனமில்லாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல்"
பகிர்ந்தளிக்கப்பட்டது
கொடுக்கப்பட்டது, வழங்கப்பட்டது
அவருடைய சொந்த சித்தத்தின்படி "அவர் அதைச் செய்ய விரும்புகிற விதமாகவே"
Hebrews 2:5-6
Hebrews 2:7-8
மனுக்குலம்
மக்கள்
அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையும் அவர் விட்டுவைக்கவில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "அவர் எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினார் "
Hebrews 2:9-10
தூதர்களைவிட கீழாக...மகிமையும் கனமும்
2:7ல் செய்தது போல இவைகளையும் மொழிபெயர்க்கவும்.
Hebrews 2:11-12
அவர்களை சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவில்லை
"அவருடைய சகோதரர்கள் என்று அழைப்பது பிரியமானது"
Hebrews 2:13-15
மறுபடியும் அவர் சொல்லுகிறார்,
: "தேவனைக் குறித்து கிறிஸ்து என்ன சொன்னார் என்பதை மற்றொரு வேதவாக்கியத்தில் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார்: "
எல்லோரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்ள
மாற்று மொழிபெயர்ப்பு: " எல்லோரும் மனிதர்களே "
வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக வாழ்ந்தார்கள்
இந்த வார்த்தை உருவகமும், மரண பயத்திற்கு அடிமைகள் என்பதையும் குறிக்கிறது.
Hebrews 2:16-18
அடைவது
மாற்று மொழிபெயர்ப்பு: "பெறுவது"
Hebrews 3
Hebrews 3:1-4
நம்முடைய அறிக்கை
மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் அறிக்கைபண்ணுகிறவர் " அல்லது " நாம் நம்புகிறவர் "
Hebrews 3:5-6
தேவனுடைய வீடு
தேவனுடைய குடும்பத்தின் மக்கள்
நம்பிக்கையின் மேன்மை பாராட்டல்
" நமக்கு நம்பிக்கை உண்டு என்பதையே மேன்மை பாராட்டுவோம் "
Hebrews 3:7-8
Hebrews 3:9-11
பிரியமில்லாத
" மகிழ்ச்சி இல்லாத"
அவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் விலகிப்போகிறார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: " அவர்கள் என்னைப் பின்பற்ற எப்பொழுதும் மறுக்கிறார்கள் "
அவர்கள் என் இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள்
"நான் இருக்கும் இடத்தில் அவர்களை இளைப்பாற விடமாட்டேன்"
Hebrews 3:12-13
அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்காவது
" உங்களில் யாருக்காவது அவிசுவாசமுள்ள, பொல்லாத இருதயம் " அல்லது " உங்களில் யாரையாவது பொல்லாதவைகளைச் செய்யும்படி நடத்துகிற அவிசுவாசமுள்ள இருதயம் "
விலகுகிற இருதயம்
" உங்களை விலகப்பண்ணுகிற இருதயம்." மாற்று மொழிபெயர்ப்பு, புதிய வாக்கிய ஆரம்பம்: "வழி விலகாதே "
ஜீவனுள்ள தேவன்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) " உண்மையாய் ஜீவிக்கிற மெய்யான தேவன் "2) " ஜீவன் தருகிற தேவன் "
இன்றைக்கு என்று அழைக்கப்பட்டது
இன்னமும் வாய்ப்பு உண்டு
உங்களில் ஒருவனும் பாவத்தின் வஞ்சனையினால் கடினமடையாதபடி
" இறுமாப்படைந்து, மற்றவர்கள் உன்னை வஞ்சிக்க இடம்கொடுத்து, பாவங்கள் செய்வது" அல்லது " நீ பாவங்கள் செய்யாமல், உன்னை வஞ்சித்துக் கொள்ளாமல், இறுமாப்படையாமல் இரு "
Hebrews 3:14-15
நாம்
எழுதுகிறவர் மற்றும் வாசிக்கிறவர்கள்
நம்பிக்கை
முழு நம்பிக்கை
முடிவு வரை
மரணம்
அவருடைய சத்தம்
"தேவன் " அல்லது "தேவன் சொல்லுகிறது"
கடினப்படுத்தல்
3:13 ல் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்பதைப் பார்க்கவும்.
Hebrews 3:16-19
அவர்கள் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள்
"தேவன் அவர்களை அவர் இருக்கும் இடத்தில் இளைப்பாற அனுமதிக்கமாட்டார் "
நாம்
ஆசிரியர் மற்றும் வாசிக்கிறவர்கள்
Hebrews 4
Hebrews 4:1-2
ஆதலால்
கீழ்ப்படியாதவர்கள் எவர்களோ அவர்களை தேவன் தண்டிப்பார் (3:19)
உங்களில் ஒருவனும் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தத்தை அடைய தோற்றுப்போனவர்களாக காணப்படவேண்டாம்
மாற்று மொழிபெயர்ப்பு: "அவர் இருக்கிற இடத்தில் நீ இளைப்பாறுவதில்லை என்று உங்களில் ஒருவனுக்கும் தேவன் சொல்லமாட்டார் " அல்லது "தேவன் இருக்கிற இடத்தில் இளைப்பாறுவீர்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தேவன் சொல்லுவார் "
நாம் இருக்கவேண்டும்
ஆசிரியர்கள் மற்றும் வாசிக்கிறவர்கள் அனைவரும்
நமக்கு
ஆசிரியருக்கும் வாசிக்கிறவர்களுக்கும்
கேட்டவர்கள் அதோடு விசுவாசம் இல்லாமல் கேட்டார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவின் செய்தியைக் கேட்டவர்கள் விசுவாசிக்கவில்லை"
Hebrews 4:3-5
அவருடைய சிருஷ்டிப்பின் கிரியைகள் உலகத்தோற்ற முதலே முடிந்திருந்தது.
மாற்று மொழிபெயர்ப்பு: "உலகம் சிருஷ்டிக்கப்பட்டதற்கு முன்பதாகவே அவருடைய திட்டங்கள் முழுமையாக உண்டாக்கப்பட்டது."
அவர்கள் என் இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள்
"அவர்கள் என்னோடு நான் இருக்கும் இடத்தில் இளைப்பாறமாட்டார்கள்"
Hebrews 4:6-7
தேவனுடைய இளைப்பாறுதல் இன்னும் சிலருக்காக முன்குறிக்கப்பட்டுள்ளது
"தேவன் இன்னும் ஒருசிலரை அவர் இருக்கும் இடத்தில் அவரோடு இளைப்பாறப்பண்ணுகிறார் "
அவருடைய சத்தம்
"தேவன்" அல்லது "தேவன் சொல்லுகிறது"
உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.
மாற்று மொழிபெயர்ப்பு: "இறுமாப்போடு அவருக்கு கீழ்ப்படியாமல் இருக்கவேண்டாம்."
Hebrews 4:8-11
தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறவன்
"தேவன் இருக்கும் இடத்தில் அவரோடு இளைப்பாறுகிறவர்கள்"
இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஆர்வமாய் இருப்போம்
"தேவன் இருக்கும் இடத்தில் அவரோடு இளைப்பாற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்யவேண்டும்"
ஆர்வம்
"அதிக விருப்பம்"
கீழ்ப்படியாமையிலே விழுதல்
மாற்று மொழிபெயர்ப்பு: "அதே விதமான கீழ்ப்படியாமை"
அவர்கள் செய்தது
வனாந்திரத்தில் தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் பண்ணின இஸ்ரவேலர்கள் செய்தது
Hebrews 4:12-13
கர்த்தருடைய வார்த்தை
கர்த்தருடைய எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட செய்தி
ஜீவனுள்ள செயல்படுகிற
தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளதாக இருந்தது; அது வல்லமை உள்ளதாகவும் இருக்கிறது.
இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்தையும்விட கருக்கானது
தேவனுடைய வார்த்தை நம்முடைய உள்ளந்திரியங்களில் ஊடுருவுகிறது.
இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறது
தேவனுடைய வார்த்தை நம்முடைய இரகசிய நினைவுகளையும் கூட வெளிப்படுத்துகிறது.
நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவருடைய கண்களுக்கு முன்பாக சகலமும் நிர்வாணமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது
"நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நியாயம் தீர்க்கும் தேவன், எல்லாவற்றையும் காணக்கூடியவராக இருக்கிறார் "
Hebrews 4:14-16
பரிதபிக்காத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லை
"பரிதபிக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு "
அவர் பாவமில்லாதவர்
மாற்று மொழிபெயர்ப்பு: "அவர் பாவம் செய்யவில்லை"
கிருபையின் சிங்காசனம்
மாற்று மொழிபெயர்ப்பு: "கிருபை இருக்கிற தேவனுடைய சிங்காசனம்" அல்லது " கிருபையாய் இருக்கிற தேவன் உட்கார்ந்திருக்கிற அவருடைய சிங்காசனம்"
Hebrews 5
Hebrews 5:1-3
ஜனங்களுக்கு பதிலாக செயல்படுவது
மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்களுக்கு பதிலாக செயல்படுவது"
கட்டாயம் செய்யவேண்டியவை
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவையானவை"
Hebrews 5:4-5
Hebrews 5:6
அவரும் சொல்லுகிறார்
தேவனும் சொல்லுகிறார் (5:5)
Hebrews 5:7-8
அவர் மாம்சத்திலிருந்த காலங்களில்
மாற்று மொழிபெயர்ப்பு: " அவர் பூமியில் வாழ்ந்தபோது"
Hebrews 5:9-11
நீங்கள் கேட்பதற்கு மந்தமுள்ளவர்கள்
"நீங்கள் புரிந்துகொள்வதில் பெலவீனமானவர்கள்" அல்லது "நீங்கள் கவனிக்க விரும்புவதில்லை"
Hebrews 5:12-14
பால்
ஆவிக்குரிய அடிப்படை சத்தியங்கள்
திடமான ஆகாரம்
"கடினமான ஆவிக்குரிய சத்தியங்கள்"
Hebrews 6
Hebrews 6:1-3
நாம் கடந்து போகவேண்டும்
மாற்று மொழிபெயர்ப்பு: "நாம் முன்னேறிச் செல்லவேண்டும் "
கரங்களை வைக்குதல்
ஒருவரை ஒரு தனிப்பட்ட சேவைக்காகவோ அல்லது பதவிக்காகவோ வேறுபிரித்து அமர்த்துவதற்காக செய்யப்பட்ட முறை.
Hebrews 6:4-6
பரலோக ஈவை ருசிபார்த்தவர்கள்
இது தேவன் இரட்சித்த விசுவாசிகளைக் குறிக்கிறது.
தேவனுடைய நல்வார்த்தைகளை ருசிபார்த்தவர்கள்
இது அவரவர்களுக்கான தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்த விசுவாசிகளைக் குறிக்கிறது.
தேவனுடைய குமாரனை அவர்கள் தங்களுக்காக மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள்
ஜனங்கள் கர்த்தரைவிட்டு விலகுவது, இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைவதைப் போன்றது.
விழுந்து போனவர்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனை விட்டுத் திரும்பினவர்கள்"
Hebrews 6:7-8
Hebrews 6:9-10
மறந்துவிடுவதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் நீதியுள்ளவர், அவர் மறப்பதில்லை"
Hebrews 6:11-12
இது விசுவாசிகளுக்கான ஆலோசனையின் தொடர்ச்சி
ஜாக்கிரதை
கவனமான கடின உழைப்பு
மந்தகுணம்
சோம்பேறித்தனம்
மாதிரியைப் பின்பற்றுபவன்
மற்றொருவருடைய நடக்கையைப் போலவே நடக்கும் ஒருவர்
Hebrews 6:13-15
அவர் சொன்னார்
தேவன் சொன்னார்
Hebrews 6:16-18
Hebrews 6:19-20
நமக்கு முன்னோடியானவர்
"நமக்கு முன்னே சென்றவர் "
Hebrews 7
Hebrews 7:1-3
அவர் தகப்பனில்லாமல் இருந்தார்
மெல்கிசேதேக்கு தகப்பனில்லாமல் இருந்தார்
நாட்களின் துவக்கமும் வாழ்வின் முடிவும் இல்லாமல்
மெல்கிசேதேக்கு எப்பொழுது பிறந்தார் அல்லது எப்பொழுது இறந்தார் என்பதைக் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
Hebrews 7:4-6
லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தைப் பெறுகிறவர்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "லேவி வம்சத்தில் ஆசாரியர்கள் ஆனவர்கள்." லேவி வம்சத்தார் அனைவரும் ஆசாரியர்கள் ஆகவில்லை.
Hebrews 7:7-10
பாலுறுப்புக்கள்
ஆணுடைய உடலுறுப்புகளுக்கான நாகரீகமான பதத்தை அல்லது முழு சரீரத்திற்கான பொதுவானப் பதத்தைப் பயன்படுத்தவும்.
Hebrews 7:11-12
ஆரோனுடைய முறையின்படி....தேவை என்ன?
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆரோனைப்போல இல்லாமல் மெல்கிசேதேக்கைப் போல வேறொரு ஆசாரியன் எழும்பவேண்டிய அவசியம் ஒருவருக்கும் இல்லை."
Hebrews 7:13-14
Hebrews 7:15-17
மனித வம்சத்திற்கு சம்பந்தமான நியாயப்பிரமாணம்
கிறிஸ்து லேவியின் வம்சத்தாராய் இல்லாமலேயே ஆசாரியராக இருக்கிறார்.
மெல்கிசேதேக்கின் முறைமைக்குப்பின்பு
மாற்று மொழிபெயர்ப்பு: "மெல்கிசேதேக்கு போல"
Hebrews 7:18-19
நியாயப்பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை
நியாயப்பிரமாணம் "பெலவீனமானதும் பிரயோஜனமற்றதும்" ஆகவே "நிராகரிக்கவேண்டியதையும்" இது காட்டுகிறது.
கிட்டச்சேர்வது
"நெருங்கி வருவது"
Hebrews 7:20-21
இந்த சிறந்த நம்பிக்கை, பிரமாணம் எடுக்காமல் உண்டாவதில்லை
" நாம் சிறந்த நம்பிக்கைக் கொள்வதற்கு" அல்லது "கிறிஸ்து ஆசாரியராக நியமிக்கப்பட யாராவது ஒருவர் பிரமாணம் எடுக்கவேண்டியதாயிற்று"
நீர் என்றென்றும் ஆசாரியராயிருக்கிறீர்
"நீரே என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் "
Hebrews 7:22-24
உத்திரவாதம்
"நிச்சயம்" அல்லது "வாக்குத்தத்தம்"
அவருடைய ஆசாரியத்துவம் மாறாதது
"அவர் என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராக நிலைத்திருக்கிறார் "
Hebrews 7:25-26
ஆகவே
"எனவே கிறிஸ்து நம்முடைய பிரதான ஆசாரியராக என்றென்றும் இருக்கிறார் "
அவர் மூலமாக
"அவர் செய்ததினிமித்தமாக "
Hebrews 7:27-28
அவருக்கு வேண்டியதில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவுக்குத் தேவையில்லை"
நியாயப்பிரமாணம் ஏற்படுத்துகிறது
"தேவன் நியாயப்பிரமாணத்திலே ஏற்படுத்தப்பட்டார் "
குமாரனை ஏற்படுத்தின நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு வந்த ஆணையின் வார்த்தை
"அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தப் பின்பு தேவன் ஆணையிட்டு தன் குமாரனை ஏற்படுத்தினார் "
பூரணராக்கப்பட்டவர்
" தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து பூரணரானார் "
Hebrews 8
Hebrews 8:1-2
Hebrews 8:3-5
சாயலும் நிழலும்
"மாதிரி "
வகை
"வடிவம் "
Hebrews 8:6-7
கிறிஸ்து பெற்றுக்கொண்டார்
"தேவன் கிறிஸ்துவுக்குக் கொடுத்தது"
பிழையில்லாதது
பரிபூரணம்
Hebrews 8:8-9
பார்க்கவும்
மாற்று மொழிபெயர்ப்பு: "பார் " அல்லது "கவனி " அல்லது "நான் சொல்லப்போகிறவைகளை நன்றாக கவனிக்கவும்."
Hebrews 8:10
Hebrews 8:11-12
Hebrews 8:13
Hebrews 9
Hebrews 9:1-2
ஆசிரியர் முதலாம் உடன்படிக்கைக்கும் இரண்டாம் உடன்படிக்கைக்கும் உள்ள ஒப்புமையைத் தொடருகிறார்.
முதலாம் உடன்படிக்கை
இதை 8:7 ல் செய்தது போல மொழிபெயர்க்கவும்.
நிபந்தனைகள்
"விளக்கமான போதனைகள்" அல்லது "விதிகள்" அல்லது "வழிமுறைகள் "
சார்பாக
ஆசிரியர் 8:7லிருந்து கலந்துரையாடலைத் தொடருகிறார்.
அங்கே அறை ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது
"இஸ்ரவேலர்கள் அறையை ஆயத்தம் பண்ணினார்கள் "
தேவசமூகத்தின் அப்பம்
" தேவனுக்கு முன்பாக வைக்கிற அப்பம்" அல்லது "ஆசாரியர்கள் தேவனுக்கு படைத்த அப்பம் "
Hebrews 9:3-5
இரண்டாம் திரைக்குப் பின்னே
முதல் திரையானது ஆசரிப்புக்கூடாரத்தின் வெளிச் சுவர், ஆகவே "இரண்டாம் திரை " என்பது "பரிசுத்த ஸ்தலத்திற்கும்" "மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும்" இடையில் இருந்த திரை.
அதற்கு உள்ளே
"உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளே "
துளிர்த்த
"மலர்ந்த" அல்லது "முளைத்த" அல்லது "வளர்ந்து விருத்தியடைந்த "
கற்பலகை
எழுதப்பட்டிருந்த சமனான கல் துண்டுகள்.
வடிவம்
ஒன்றின் வடிவத்தினைக் காட்ட பொறிக்கப்பட்டவை
கேரூபீன்கள் நிழலிட்டிருந்தன
"கேரூபீன்கள் மேலே இருந்தன"
பாவநிவாரண பாத்திர மூடி
உடன்படிக்கைப் பெட்டிக்கு மேல் பகுதி
Hebrews 9:6-7
இந்தக் காரியங்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட பின்பு
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆசாரியர்கள் இந்தக் காரியங்களை ஆயத்தப்படுத்தின பின்பு"
ஆயத்தப்படுத்தப்பட்டது
"முன்னதாகவே ஆயத்தப்படுத்தப்பட்டது "
காணிக்கை இல்லாமல் இல்லை
"எப்பொழுதும் படைப்பது " அல்லது "அவர் எப்பொழுதும் படைக்க வேண்டும்"
Hebrews 9:8-10
வழி...இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் இன்னும் வழியை வெளிப்படுத்தவில்லை"
மகா பரிசுத்த ஸ்தலம்
அனுகூலமான அர்த்தங்கள்: 1) பூமியின் ஆசரிப்புக்கூடாரத்தின் உள்அறை. அல்லது 2) பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னம்.
முதலாம் ஆசரிப்புக்கூடாரம் இன்னும் நிற்கிறது
அனுகூலமான அர்த்தங்கள்: 1) ஆசரிப்புக்கூடாரத்தின் வெளி அறை இன்னும் நிற்கிறது. அல்லது 2) "பலியிடும் முறைகள் தொடர்கின்றன "
உதாரணம்
"படம் "
தற்போதைய நேரம்
"இப்பொழுது"
ஆராதனை செய்கிறவனுடைய மனசாட்சியைப் பூரணப்படுத்தல்
"ஆராதனை செய்கிறவனை குற்றங்களிலிருந்து விலகச் செய்தல் "
சடங்கான ஸ்நானங்கள்
"விதிமுறைகள்" அல்லது "அடையாள செய்கைகள் "
மாம்சத்திற்கான நிபந்தனைகள்
"மாம்ச சரீரத்திற்கான விதிமுறைகள் "
இவைகளெல்லாம் மாம்சத்திற்காக கொடுக்கப்பட்ட நிபந்தனைகள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் இந்த நிபந்தனைகளையெல்லாம் மாம்சத்திற்காக கொடுத்திருக்கிறார் "
புதிய கட்டளை
"புதிய உடன்படிக்கை"
Hebrews 9:11-12
நன்மையான காரியங்கள்
"புதிய கட்டளைகள் " (9:8)
மகா பரிசுத்த ஸ்தலம்
பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னம்
Hebrews 9:13-15
சடங்காச்சாரமாக தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட சாம்பல்...
ஆசாரியன் தீட்டுப்பட்ட மக்களின் மீது சிறிதளவு சாம்பலைத் தெளிப்பான்.
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நமது மனச்சாட்சியைச் செத்த கிரியைகளிலிருந்து சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்?
"கிறிஸ்து நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார், அவருடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நமது மனச்சாட்சியைச் செத்த கிரியைகளிலிருந்து சுத்திகரிக்கும் "
கிறிஸ்துவின் இரத்தம்...நம்முடைய மனச்சாட்சியைச் சுத்திகரிக்கும்
நாம் செய்த பாவங்களுக்காக இனி நாம் ஒருபோதும் குற்ற உணர்வாக உணரவேண்டியதில்லை ஏனென்றால் இயேசு தம்மைத்தாமே பலியாக்கினார்.
நம்முடைய மனச்சாட்சி
எழுதுகிறவர் மற்றும் வாசிக்கிறவர்களுடைய மனச்சாட்சி
இந்த காரணத்திற்காக
"விளைவாக" அல்லது "இதற்காக"
அபராதம்
"தண்டனை "
தேவனால் அழைக்கப்பட்டவர்கள்
தேவனால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது அவருடைய பிள்ளைகளாக இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
Hebrews 9:16-17
மரணசாசனம்
ஒருவன் மரிக்கும்போது அவனுடைய ஆஸ்திகளை யார் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிற முறையான ஆவணம்
Hebrews 9:18-20
ஆகவே முதலாம் உடன்படிக்கை இரத்தம் இல்லாமல் ஏற்படுத்தப்படவில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆகவே தேவன் முதலாம் உடன்படிக்கையை இரத்தத்தோடு ஏற்படுத்தினார் "
இரத்தத்தை எடுத்து...தண்ணீரோடும்...தெளித்து...புஸ்தகம்...எல்லா ஜனங்கள்
ஆசாரியன் ஈசோப்பை இரத்தத்திலும் தண்ணீரிலும் தோய்த்து இரத்தம் மற்றும் தண்ணீரின் துளிகள் புஸ்தகத்தின் மேலும் ஜனங்களின் மேலும் விழும்படி அசைப்பான்.
ஈசோப்பு
சடங்கின்போது தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் செடி
Hebrews 9:21-22
தெளிக்கப்பட்டது
9:19 ல் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்
குடுவை
"ஒன்றைத் தனக்குள் வைத்துக்கொள்ளும் பொருள் " அல்லது "பாத்திரம் "
ஆசாரிய ஊழியம்
"ஆசாரியர்களுடைய பணி"
எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பட்டது
"ஆசாரியர்கள் எல்லாவற்றையும் சுத்திகரிப்பதற்கு இரத்தத்தைப் பயன்படுத்துவர்"
Hebrews 9:23-24
பரலோகத்திலுள்ள காரியங்களுக்கு சாயலானவைகள் இப்படிப்பட்ட மிருகங்களின் பலிகளினாலே சுத்திகரிக்கப்படும்
மாற்று மொழிபெயர்ப்பு: "பரலோகத்திலுள்ள காரியங்களுக்கு சாயலானவைகளைச் சுத்திகரிக்க ஆசாரியர்கள் இப்படிப்பட்ட மிருகங்களின் பலிகளைப் பயன்படுத்துவர் "
பரலோகத்திலுள்ள காரியங்கள் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்பட வேண்டும்
மாற்று மொழிபெயர்ப்பு: பூமியின் சாயலானவைகளை சுத்திகரிக்க பலிகள் பயன்படுத்தப்படுவதைவிட " பரலோகத்திலுள்ளவைகளை விசேஷித்த பலிகளாலே தேவன் சுத்திகரிக்கவேண்டும்"
Hebrews 9:25-26
அவர் அங்கே செல்லவில்லை
"அவர் பரலோகத்தில் பிரவேசிக்கவில்லை"
அது உண்மையாக இருந்திருந்தால்
"அவர் தம்மைத்தாமே அடிக்கடி பலியிட வேன்டியதாய் இருந்திருந்தால் "
உலகத்தின் ஆரம்பம்
"தேவன் உலகத்தை சிருஷ்டித்தார் "
அவர் வெளிப்படுத்தப்பட்டார்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் அவரை வெளிப்படுத்தினார் "
Hebrews 9:27-28
பலியிடப்பட்ட கிறிஸ்து
மாற்று மொழிபெயர்ப்பு: "தன்னையே பலியிட்ட கிறிஸ்து"
Hebrews 10
Hebrews 10:1-4
உண்மைகளாயிராமல்
"உண்மையானவைகள் இல்லை"
அருகில் சேர்ப்பது
" ஆராதிக்க வருவது" அல்லது "நெருங்கி வருதல்"
அந்த பலிகள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்குமல்லவா?
"அவர்கள் அந்த பலிகளை செலுத்துவதை நிறுத்தியிருப்பார்கள்."
தடைப்பட்டது
"நிறுத்தப்பட்டது"
உண்மைநிலை "சூழ்நிலை"
ஒருதரம் சுத்திகரிக்கப்பட்டது
"தேவன் சுத்திகரித்தவர்கள்"
விழிப்புணர்வு
"உண்டு என்பதன் அறிவு"
செய்த பாவங்களின் நினைப்பூட்டுதல் உண்டு
"மக்கள் செய்த பாவங்களை தேவன் நினைப்பூட்டுகிறார் "
வருஷந்தோறும்
"ஒவ்வொரு வருஷமும் "
காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாவினுடைய இரத்தம் பாவங்களை எடுத்துப்போட இயலாது
"காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாவினுடைய இரத்தம் பாவங்களை எடுத்துப்போடவே முடியாது"
Hebrews 10:5-7
நீர் எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணினீர்
"நீர் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினீர் "
Hebrews 10:8-10
மேலே சொல்லியபடி
மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசு சொன்னார், நான் எழுதியபடி:"
பலிகள், காணிக்கைகள், சர்வாங்க தகனபலிகள்
10:5
6 ல் நீங்கள் செய்ததுபோல இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கவும்.
செலுத்தப்பட்ட பலிகள்
மாற்று மொழிபெயர்ப்பு:, புதிய வரியை ஆரம்பித்தல்: "இவைகளெல்லாம் ஜனங்கள் செலுத்தும் பலிகள் "
பார்,
"நான் உங்களுக்கு சொல்லப்போவதை கவனிக்கவும்:"
தேவனுடைய சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்
"கிறிஸ்து தம்மைத்தாமே பலியிட வேண்டுமென்று தேவன் விரும்பினார், அந்த பலி நம்மை பரிசுத்தப்படுத்தியிருக்கிறது "
Hebrews 10:11-14
உண்மையாகவே
இது 10:1
4 வசனங்களை, அதன்பின் வரும் வார்த்தைகளோடு இணைக்கிறது.
அவருடைய சத்துருக்களைத் தாழ்த்தி அவருடைய பாதபடியாக்கிப்போட்டார்
"தேவன் கிறிஸ்துவின் சத்துருக்களைத் தாழ்த்தி முற்றிலும் வெட்கப்படுத்தினார்." மக்கள் மற்ற மக்களுடைய பாதங்களுக்கு கீழே போடப்பட்டது மிகப் பெரிய அவமானம்.
பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் பரிசுத்தப்படுத்தினவர்கள் "
Hebrews 10:15-16
முதலில்
10:17 ல் அவர் சொல்வதற்கு முன்பு
அவர்களுடைய
பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் (10:14)
அந்த நாட்களுக்குப் பின்பு
"முதலாம் உடன்படிக்கை நிறைவுபெற்றபோது "
Hebrews 10:17-18
பின்பு
10:16 ல் சொல்லப்பட்டவைகளுக்குப் பின்பு
நான் இனி நினைப்பதில்லை
"நான் நினைக்கமாட்டேன் "
மன்னிப்பு உண்டு
"தேவன் மன்னித்துவிட்டார் "
Hebrews 10:19-22
மகா பரிசுத்த ஸ்தலம்
தேவனுடைய பிரசன்னம்
அவருடைய சரீரம்
மாற்று மொழிபெயர்ப்பு: "அவருடைய மரணம் "
திரையின் வழியாக
பூமிக்குரிய ஆலயத்தில் தேவனுடைய உண்மையான பிரசன்னத்திற்கும் ஜனங்களுக்கும் மத்தியில் உள்ள பிரிவினையைக் குறிக்கும் திரை.
தேவனுடைய வீடு
எல்லா விசுவாசிகள்
பூரண நிச்சயம்
நிச்சயத்தின் பலமான உணர்வு
சுத்தமாக்க தெளிக்கப்பட்ட இருதயங்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் இயேசுவினுடைய இரத்தத்தைத் தெளித்து சுத்திகரித்த இருதயங்கள்"
தெளிக்கப்பட்டது
9:19 ல் நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்
Hebrews 10:23-25
நம்முடைய நம்பிக்கையின் அறிக்கையிடுவதில் உறுதியாயிருப்போம்
எதிர்பார்ப்பு
"தேவன் செய்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினதை செய்வார் என்பதினால் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோமென்று தொடர்ந்து ஜனங்களுக்கு சொல்லுவது "
நிச்சயமில்லாத
"உறுதியில்லாமல் போகிற "
நாள் சமீபித்து வருகிறது
மாற்று மொழிபெயர்ப்பு: "இயேசு திரும்ப வருகின்ற நாள் சமீபமாக உள்ளது "
Hebrews 10:26-27
மனப்பூர்வமாக
"முழு புரிந்துகொள்ளுதளுடன் "
பாவங்களுக்கான பலி இனி இல்லை
"தேவன் மன்னிக்கிற நம்முடைய பாவங்களுக்காக ஒருவனும் பலி செலுத்தவேண்டியதில்லை "
Hebrews 10:28-29
இரண்டு அல்லது மூன்று
"2 அல்லது 3 "
எவ்வளவு பெரிய தண்டனையைப் பெறுவான் என்று நினைத்துப் பாருங்கள்...?
மாற்று மொழிபெயர்ப்பு: "இது கொடிதான தண்டனை. ஆனால் இதைவிட கொடிதான தண்டனை.... ஒருவனுக்கு..."
தேவனுடைய குமாரன் மீது மிதித்தது
இந்த வார்த்தை வடிவம் கிறிஸ்து செய்ததை அவமதிக்கும் கடின குணத்தை விளக்கிக் காண்பிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய குமாரன் செய்தவைகளைப் புறக்கணிப்பது "
மிதிக்கப்பட்டது
"கடினமாக மிதிக்கப்பட்டது"
அவர் பரிசுத்தப்படுத்தப்பட்ட இரத்தம்
"தேவன் அவரைப் பரிசுத்தம் செய்த இரத்தம் "
கிருபையின் ஆவி
"கிருபையை அளிக்கும் தேவனுடைய ஆவியானவர் "
Hebrews 10:30-31
நாம் அறிவோம்
எழுதுகிறவர் மற்றும் எல்லா விசுவாசிகளும் அறிவார்கள்
தேவனுடைய கரங்களில் விழுகிறது
மாற்று மொழிபெயர்ப்பு: "முழு நியாயத்தீர்ப்பிற்குக் கீழ் இருப்பது "
Hebrews 10:32-34
நீங்கள் பிரகாசமாக்கப்பட்டப் பின்பு
"நீங்கள் சத்தியத்தைக் கற்றறிந்த பின்பு "
நீங்கள் நிந்தைகளாலும் உபத்திரவங்களினாலும் மக்களுக்கு வேடிக்கையாக்கப்பட்டீர்கள்
"வெளிப்படையாக உங்களை நிந்திப்பதினாலும் உபத்திரவப்படுத்துவதினாலும் மக்கள் உங்களை வேடிக்கையாக்கினார்கள் "
நீங்களே
வாசிக்கிறவர்கள், அவர்களை வேடிக்கையாக்கி சிறைச்சாலையில் அடைத்து அவர்களுடைய ஆஸ்திகளை எடுத்துக்கொண்டவர்களைப்போல இல்லாமல்.
Hebrews 10:35-37
விட்டுவிடுதல்
மதிப்பில்லாதது அல்லது பயனற்றது
இன்னும் கொஞ்சகாலத்தில்
"சீக்கிரத்தில் "
Hebrews 10:38-39
தீர்க்கதரிசியுடைய வார்த்தைகள் 10:37 ல் இருந்து தொடர்ந்துள்ளது.
என்னுடைய நீதிமான்
"என்னுடைய உண்மையுள்ள விசுவாசி "
Hebrews 11
Hebrews 11:1-3
பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் விசுவாசத்தினாலே வாழ்ந்தார்கள்.
விசுவாசம் என்பது ஒருவர் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்போது கொண்டுள்ள நிச்சயம்
"ஒருவர் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்போது கொண்டுள்ள அடித்தளம் "
அதினாலே
"ஏனென்றால் அவர்கள் இன்னும் காணப்படாதவைகளைக் குறித்து நிச்சயமாய் இருந்தார்கள் "
நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய விசுவாசத்தினாலே அங்கீகரிக்கப்பட்டார்கள்
"நம்முடைய முன்னோர்களுக்கு விசுவாசம் இருந்ததினால் தேவன் அவர்களை அங்கீகரித்தார் "
Hebrews 11:4
மிகவும் ஏற்றதான
"மேன்மையான "
ஆபேல் இன்னும் பேசுகிறான்
மாற்று மொழிபெயர்ப்பு: "ஆபேல் செய்தவைகள் தொடர்ந்து நமக்குக் கற்றுக்கொடுக்கிறது "
Hebrews 11:5-6
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்
மாற்று மொழிபெயர்ப்பு: "விசுவாசத்தினாலே ஏனோக்கு மரிக்கவில்லை, ஏனென்றால் தேவன் அவனை எடுத்துக்கொண்டார்"
மரணத்தைப் பார்
"மரணமடைதல்"
அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவனைப்பற்றி சொல்லப்பட்டது
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "ஏனோக்கு தேவனைப் பிரியப்படுத்தினான் என்று தேவன் சொன்னார் " அல்லது 2) ஏனோக்கு தேவனைப் பிரியப்படுத்தினான் என்று ஜனங்கள் சொன்னார்கள் "
அவன் எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு முன்பு
"தேவன் அவனை எடுத்துக்கொண்டதற்கு முன்பு "
Hebrews 11:7
எபிரேயரை எழுதியவர் விசுவாசத்தின்மேலும் ஏனோக்குடைய விசுவாசத்தின்மேலும் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார்.
தேவனால் எச்சரிக்கப்பட்டது
மாற்று மொழிபெயர்ப்பு: "ஏனென்றால் தேவன் அவனை எச்சரித்தார் "
காணாத காரியங்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "ஒருவனும் முன்பு ஒருபோதும் கண்டிராத காரியங்கள் "
உலகம்
அந்த நேரத்தில் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மற்ற மக்கள்.
Hebrews 11:8-10
எழுதியவர் தொடர்ந்து இஸ்ரவேலின் முந்தைய தலைவர்களுடைய விசுவாசத்தின் மேல் கவனம் செலுத்துகிறார்.
வெளியே புறப்பட்டு
"வீட்டைவிட்டுப் புறப்பட்டு "
அவன் வெளியே போனான்
"அவன் வீட்டை விட்டுப் போனான் "
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம்
" தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசம் "
உடன் சுதந்திரவாளி
"ஒன்றாய் சுதந்தரிப்பவர்கள் "
கட்டிடக் கலைஞன்
கட்டிடங்களை வடிவமைக்கும் நபர்
Hebrews 11:11-12
ஆசிரியர் ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து தொடர்ந்து எழுதுகிறார்
கர்ப்பந்தரிக்கும் பெலன்
" கர்ப்பமடைவதற்கான சக்தி "
தேவனை எண்ணி
" தேவனை விசுவாசித்து "
எண்ணிக்கையில்லா சந்ததியினர்...வானத்திலுள்ள அதிகமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிக்கையில் அடங்காத மணலைப்போலவும்
மிக அதிக
Hebrews 11:13-14
தேவன் வாக்குத்தத்தம் செய்தது நிச்சயமாக சம்பவிக்கும் என்ற விசுவாசம் தேவனுடைய மக்களின் முந்தைய தலைவர்களுக்கு இருந்தது.
தூரத்திலே இருந்து அவைகளைக் கண்டு அழைத்துக்கொண்டார்கள்
இந்தப் பதமானது எதிர்கால நிகழ்வுகளைக் குறித்த தீர்க்கதரிசிகளின் புரிந்துகொள்ளுதலை தூரத்திலிருந்து வந்துசேருகிற பயணியை வரவேற்பதோடு ஒப்பிடுகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "வரும்காலத்தில் தேவன் என்னசெய்வார் என்பதைப் புரிந்துகொண்டது "
சேர்த்துக்கொண்டு
"ஒத்துக்கொண்டு " அல்லது "ஏற்றுக்கொண்டு"
அயல்நாட்டினர்
"அந்நியர்கள் " அல்லது "வெளியாட்கள் "
சொந்த தேசம்
"தேசம் "
Hebrews 11:15-16
எபிரெயரை எழுதியவர் தேவ மக்களின் முந்தின தலைவர்கள் மற்றும் தேவனுடைய வாக்குத்தத்தங்களில் அவர்களுடைய விசுவாசத்தையும் தொடர்ந்து விவரிக்கிறார்.
உண்மையாகவே
"உண்மையாக " அல்லது "உறுதியாக " அல்லது "இதற்கு கவனம் செலுத்து: "
பரலோக
"பரம தேசம் " அல்லது "பரலோகத்திலுள்ள தேசம் "
அவர்களுடைய தேவன் என்று அழைக்கப்படுவதற்கு தேவன் வெட்கப்படுவதில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: "அவர்கள் அவரை அவர்களுடைய தேவன் என்று அழைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறார் "அல்லது " ...மற்றவர்கள் அவரை தேவன் என்று சொல்வதை..."
Hebrews 11:17
ஒப்புக்கொடுத்தான்...ஒப்புக்கொடுத்தான்
வெகுமதியாக அல்லது தேவனுக்கு பலியாக
ஈசாக்கிலிருந்து உன்னுடைய சந்ததி விளங்கும் "ஈசாக்குடைய சந்ததியை தேவன் உன்னுடைய சந்ததியாக எண்ணுவார் "
அவன் அவனைத் திரும்பப் பெற்றுக்கொண்டான்
" ஆபிரகாம் ஈசாக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டான் "
Hebrews 11:18-19
நீங்கள்
வாசிக்கிறவர்கள்
கட்டளையிடப்பட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
தேவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொள்வது பாரத்தைச் சுமக்க சம்மதிப்பதைப் போன்றது. மாற்று மொழிபெயர்ப்பு: "இஸ்ரவேலர்கள் தேவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை."
Hebrews 11:20-22
எபிரேயரின் ஆசிரியர், தன் மகன் ஈசாக்கை பலியிட தேவனால் வந்த ஆபிரகாமின் சோதனையைப் பற்றி எழுதியிருக்கிறார்.
யாக்கோபு தொழுதுகொண்டான்
"யாக்கோபு தேவனைத் தொழுதுகொண்டான் "
அவனுடைய முடிவு
"அவனுடைய மரணம் "
Hebrews 11:23-26
மோசே பிறந்தபோது, அவனுடைய பெற்றோர்கள் அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "மோசேயின் பெற்றோர்கள் அவன் பிறந்தபின்பு அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தார்கள்
வளர்ந்தான்
"பெரியவனானான் "
தேவனுடைய ஜனங்களோடு துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள
"தேவனுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்பட "
கிறிஸ்துவைப் பின்பற்றுவதின் நிந்தை
"கிறிஸ்துவுக்கு வேண்டியதை அவன் செய்ததினால் அவன்மேல் மக்கள் வைத்திருந்த அவமரியாதை "
அவனுடைய வருங்கால பலன்கள்மேல் கண்களை வைத்து
"அவன் அறிந்ததை செய்வது பரலோகத்தில் அவனுக்கு பலனைச் சம்பாதிக்கும் "
Hebrews 11:27-28
அவன் செய்யவில்லை...அவன் உறுதியாயிருந்து...அவன் பார்த்து
மோசே
காணக்கூடாதவரைப் பார்ப்பதினாலே
"உதவிக்காக தேவனைச் சார்ந்துகொள்வதினாலே "
காணப்படாதது
"பார்க்கமுடியாதது "
Hebrews 11:29-31
அவர்கள் கடந்துபோனார்கள்
இஸ்ரவேலர்கள் கடந்துபோனார்கள்
அவர்கள் மூழ்கிப்போனார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தண்ணீர் அவர்களை மூழ்கடித்தது" அல்லது "அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்"
அவர்கள் ஏழு நாட்கள் சுற்றிவந்தார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "இஸ்ரவேலர்கள் ஏழு நாட்கள் அவைகளைச் சுற்றி நடந்துவந்தார்கள் "
வேவுகாரரைப் பத்திரமாக ஏற்றுக்கொண்டார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "வேவுகாரரைப் பத்திரமாக வைக்க அவர்களை ஒளித்துவைத்தனர் "
Hebrews 11:32-34
இந்தப் புத்தகத்தை எழுதியவர் தொடர்ந்து இஸ்ரவேல் மக்களின் முன்னோர்களுக்கு தேவன் செய்தவைகளைப் பேசுகிறார்.
பின்னும் நான் என்ன சொல்லுவேன்?
மாற்று மொழிபெயர்ப்பு: "அதிகமதிகமான உதாரணங்கள் உண்டு."
எனக்கு காலம் போதாது
மாற்று மொழிபெயர்ப்பு: "எனக்குப் போதிய நேரம் இருக்காது "
ஜெயித்தார்கள்
"முறியடித்தார்கள் "
சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்... அக்கினியின் வல்லமையை அவித்தார்கள்...பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்
இஸ்ரவேல் மக்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்ட வழிகள். மாற்று மொழிபெயர்ப்பு: "சிங்கங்கள் அவர்களைப் பட்சிக்கவில்லை...அக்கினி அவர்களை சுட்டெரிக்கவில்லை...பட்டயம் அவர்களைக் கொல்லவில்லை"
சுகமானார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் அவர்களை குணமாக்கினார் "
Hebrews 11:35-38
புத்தக ஆசிரியர் இஸ்ரவேலில் உள்ள தேவனுடைய ஜனங்களின் தலைவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து எழுதியிருக்கிறார்.
ஸ்திரீகள் தங்களுடைய மரித்தவர்களை திரும்பவும் உயிரோடெழும்பப் பெற்றார்கள்
"மரித்தவர்களை தேவன் உயிரோடு எழுப்பினபோது ஸ்திரீகள் மக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள் "
வேறுசிலர் துன்புறுத்தப்பட்டார்கள்...வேறுசிலர் நிந்தைகளையும் அடிகளையும்...அவர்கள் கல்லெறியுண்டார்கள்...அவர்கள் வாளால் அறுப்புண்டார்கள்...அவர்கள் வெட்டப்பட்டார்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "மக்கள் மற்றவர்களைத் துன்புறுத்தினார்கள் "..." மக்கள் மற்றவர்களை நிந்தித்து அடித்தபோது அவர்கள் துன்பப்பட்டார்கள் "..."மக்கள் அவர்கள்மேல் கல்லெறிந்தார்கள்"..."மக்கள் அவர்களை அறுத்தார்கள்"..."மக்கள் அவர்களை கொலைசெய்தார்கள் "
துன்புறுத்தப்பட்டது
பெரிய வலியை அனுபவிக்கச் செய்வது
விடுதலைபெறச் சம்மதிக்காமல்
மாற்று மொழிபெயர்ப்பு: "மக்கள் அவர்களைக் காவலிலிருந்து விடுவிப்பதற்காக, கிறிஸ்துவை மறுதலிக்க மறுப்பது "
கட்டப்பட்டு காவலில்வைக்கப்பட்டனர்
"மக்கள் அவர்களை சங்கிலிகளினால் கட்டி சிறைக்காவலில் வைத்தார்கள் "
திரிந்தார்கள்
"இடம்விட்டு இடம் சென்றனர் " அல்லது "எல்லா நேரங்களிலும் வாழ்ந்தார்கள் "
குறைவான
"தேவையான " அல்லது "ஒன்றும் இல்லாத " அல்லது " ஏழ்மையான "
Hebrews 11:39-40
எபிரெயரின் ஆசிரியர் அனேக துன்புறுத்தப்பட்ட விசுவாசிகளைக் குறித்து எழுதியிருக்கிறார்.
இந்த ஜனங்கள் எல்லோரும் அவர்களுடைய விசுவாசத்தினாலே தேவனாலே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை
மாற்று மொழிபெயர்ப்பு: " அவர்களுடைய விசுவாசத்தினாலே தேவன் அவர்கள் எல்லோரையும் கனப்படுத்தினார், ஆனால் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை அவர்களே பெற்றுக்கொள்ளவில்லை "
Hebrews 12
Hebrews 12:1-3
இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.
நாம்...நம்மை
ஆசிரியர் மற்றும் வாசிக்கிறவர்கள்
நாம் இத்தனை திரளான சாட்சிகளினால் சூழப்பட்டிருக்கிறோம்
மாற்று மொழிபெயர்ப்பு: "இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறது " அல்லது "இத்தனை திரளான சாட்சிகள் நமக்கு உதாரணங்களாக செயல்படுகின்றன "
சாட்சிகள்
"ஓட்டத்தை " கவனிக்கிற பழையஏற்பாட்டு விசுவாசிகள்
நம்மை பாரப்படுத்துகிற அனைத்தும்
தேவனை நம்பி அவருக்குக் கீழ்ப்படிவதிலிருந்து நம்மை விலக்கிவைக்கும் மனநிலைகள் அல்லது குணங்கள், ஓடுவதற்கு சிரமத்தை உண்டாக்கும் கனமான ஆடைகள் அல்லது பாரங்கள் போன்றவை.
இடர்பாடுகள்
"ஓடுவதைக் கடினப்படுத்துபவை " அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படிவதைக் கடினப்படுத்துவது "
வைத்து...கண்களை
"நேராகப் பார்த்து " அல்லது "அதையே நினைத்து "
துவக்குகிறவரும் முடிக்கிறவரும்
மாற்று மொழிபெயர்ப்பு: "சிருஷ்டிகரும் முடிக்கிறவரும் "
சோர்வு
நீண்டநேரமாக ஓடின ஒருவனைப்போல
களைத்துப்போன
இனி ஒருபோதும் தொடர்ந்து ஓட விரும்பாத ஒருவனைப்போல
Hebrews 12:4-6
எபிரெயரின் ஆசிரியர் கிறிஸ்தவ வாழ்க்கையை ஓட்டப்பந்தயத்தோடு ஒப்பிட்டிருக்கிறார்.
இன்னும் எதிர்க்கவில்லை அல்லது இரத்தம்சிந்தும் அளவிற்கு பாவத்திற்கு எதிராக போராடவில்லை
வாசிக்கிறவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் மிகவும் அதிகமாகத் துன்பப்பட்டார்கள் என்பதை இது வலியுறுத்துகிறது.
எதிர்த்தது...இரத்தம்...வரை
"எதிர்த்தது...இரத்தம்...வரை." ஒருவன் சரியானதைச் செய்வதால், அதற்காக அவன் கொல்லப்பட்டாலும் அதையே செய்வது.
உங்களுக்கு புத்திசொல்ல உற்சாகப்படுத்துவது
பழைய ஏற்பாட்டில் சாலமோன் எழுதியவைகள், கர்த்தரால் நாம் கடிந்துகொள்ளப்படும்போது எவ்வாறு உற்சாகப்படுவது என்பதை ஒருவன் புரிந்துகொள்வதற்கு இது உதவும்
சிட்சையை அற்பமாக எண்ணவேண்டாம்
வாசிக்கிறவர்கள் கர்த்தருடைய சீர்படுத்தலை கவனமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று இது வலியுறுத்துகிறது
கர்த்தருடைய சிட்சை
"கர்த்தர் உன்னை சிட்சிக்கும்போது "
சோர்ந்துபோதல்
மாற்று மொழிபெயர்ப்பு: "மனம் சோர்ந்துபோகுதல்"
Hebrews 12:7-8
சோதனைகளை சிட்சைகளாக சகிப்பது
கஷ்டமான நேரங்களை சீர்படுத்தும் நேரங்களாக நினைத்துக்கொள்ளவேண்டும்.
தகப்பன் சிட்சிக்காத மகன் உண்டா?
மாற்று மொழிபெயர்ப்பு: "ஒவ்வொரு தகப்பனும் தன்னுடைய பிள்ளைகளை சிட்சிக்கிறான் "
முறை தவறிப் பிறந்த பிள்ளைகள்
ஒருவரைஒருவர் திருமணம் செய்துகொள்ளாத ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் பிறந்த பிள்ளைகள்
Hebrews 12:9-11
ஆவிகளின் தகப்பன்
நம்மை சிருஷ்டித்து நம்முடைய ஆவிகளை நமக்குக் கொடுத்து, மற்ற எல்லா ஆவிகளையும் சிருஷ்டித்த கர்த்தர்
நீதியின் கனி
ஒரு மரத்தில் கனி வளருவதைப்போல சிட்சிக்கப்படுவதின் முடிவாக நீதியும் வளருகிறது.
அதினால் பழகினவர்கள்
சிட்சையினால் பழகினவர்கள்
Hebrews 12:12-13
இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்
நெகிழ்ந்த கரங்களை உயர்த்தி தளர்ந்த முழங்கால்களைத் திரும்ப பெலப்படுத்துங்கள்
வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்கிற ஒருவர் கரங்களும் முழங்கால்களும் பெலவீனமான ஓடிக் களைப்படைந்தவனைப் போல் இருக்கிறான். மாற்று மொழிபெயர்ப்பு: "ஓட்டத்தை முடிக்கும் நிச்சயத்தோடு ஓடுகிறவன் தன் சரீரத்தை பெலப்படுத்துவதைபோல உங்களை பெலப்படுத்துங்கள் "
உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்
தேவனுக்குக் கீழ்ப்படிவது என்பது செம்மையான நேர்பாதையில் நடப்பதைப் போன்றது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள் "
முடமாக இருக்கிறவர்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "விட்டுவிட விரும்புகிறவர்கள் "
விலகிப்போனது
"தவறான வழியில் ஒருவனைப் பின்பற்றுவது." மாற்று மொழிபெயர்ப்பு: " தேவனைக் கனப்படுத்தாத ஆனால் சுலபமான காரியங்களைச் செய்ய தீர்மானிப்பதில்லை"
குணமாகும்படிக்கு
" பதிலாக பெலனடைவது "
Hebrews 12:14-21
பரிசுத்தமும்
மாற்று மொழிபெயர்ப்பு: "பரிசுத்தத்தை நாடுங்கள் "
எச்சரிக்கையாக இருங்கள்...ஒருவனும் இழந்துவிடாதபடிக்கும்...கசப்பான வேர் வளராதபடிக்கும்... இல்லாதபடிக்கும்
வாசிக்கிறவர்கள் மூன்று காரியங்களில் "ஜாக்கிரதையாக" இருக்கவேண்டும். மாற்று மொழிபெயர்ப்பு: "ஒருவனும் இழந்துவிடாதபடிக்கும்... எந்தவொரு கசப்பான வேர் வளராதபடிக்கும்... இல்லாதபடிக்கும் "
தேவனுடைய கிருபையை இழந்துவிட்ட
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனுடைய கிருபையைப் பெற்று அதற்காக கடந்துபோவோம் "
கசப்பான வேர்
மற்றவர்கள் பொல்லாதவைகளைச் செய்ய காரணமாக இருப்பவன், ஆகாரத்திலே போட்ட கசப்பான வேரைப் போல் இருக்கிறான்
ஜாக்கிரதையாக இரு...ஏசாவைப்போல
மாற்று மொழிபெயர்ப்பு: "ஜாக்கிரதையாக இரு...உங்களில் ஏசாவைப்போல "
கண்ணீர்விட்டு ஆவலோடு தேடியும்
"அழும்போது உண்மையாக அதைக் கேட்டும் "
Hebrews 12:22-24
நீங்கள்
வாசிக்கிறவர்கள்
வந்தது
"வந்துசேர்ந்தது "
பத்தாயிரம் தேவதூதர்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "எண்ணமுடியா தேவதூதர்களுடைய எண்ணிக்கை"
நியாயாதிபதியாகிய தேவன்...இயேசு, மத்தியஸ்தர்
இயேசு, நீதிமன்றத்தில் நியாயாதிபதியாகிய தேவனிடத்தில் ஜனங்களுடைய குற்றங்களின் மன்னிப்பிற்காக அவருடைய இரத்தம் எப்படி கிரயம் செலுத்தியது என்பதைக் காண்பிக்கும் வழக்கறிஞரைப் போல இருக்கிறார்.
ஆபேலுடைய இரத்தத்தைப்பார்க்கிலும் மிக நன்றாகப் பேசுகிற தெளிக்கப்பட்ட இரத்தம்
மாற்று மொழிபெயர்ப்பு: "காயீன் கொலைசெய்த ஆபேலுடைய இரத்தத்தைப்பார்க்கிலும் நல்ல அர்த்தத்தைக் கொண்டது இயேசுவுடைய தெளிக்கப்பட்ட இரத்தம்"
Hebrews 12:25-26
சீனாய் மலையிலே இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் கிறிஸ்து மரித்தப்பின்பு விசுவாசிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, இன்றைக்கும் நம்மை எச்சரிக்கிற அதே தேவன் நமக்கு இருக்கிறார் என்பதை புத்தகத்தை எழுதியவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
அசை...குலுங்கச்செய்தல்
பூமியை அசையப்பண்ணவும் கட்டிடங்களை அழிக்கவும் பூமியதிர்ச்சி என்ன செய்கிறது என்பதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தவும்.
நீங்கள்
வாசிக்கிறவர்கள்
அவர்கள் தப்பிக்காவிட்டால்
மாற்று மொழிபெயர்ப்பு: "இஸ்ரவேல் ஜனங்கள் நியாயத்தீர்ப்பிற்கு தப்பிக்காவிட்டால் "
நாம்
எழுதியவர் மற்றும் வாசிக்கிறவர்கள்
எச்சரிக்கிறவர்...அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்
"தேவன், எச்சரிக்கிறவர்...தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் "
Hebrews 12:27-29
அசைக்கப்பட்டது
12:26 ல் "அசை" மற்றும் "குலுங்கச்செய்தல்"ஐ நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
நன்றியுள்ளவர்களாக இருப்போம்
"நாம் நன்றி சொல்லுவோம் "
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினி
பொருட்களை சுட்டெரித்துப்போடுகிற நெருப்பைப்போல தேவனுடைய நோக்கத்திற்கு எதிராகப் போகிறவைகளை அழிக்க தேவனுக்கு வல்லமை உண்டு.
Hebrews 13
Hebrews 13:1-2
ஆசிரியர் யூத விசுவாசிகளுக்கு எழுதுகிறார்.
சகோதர அன்பு தொடரட்டும்
மாற்று மொழிபெயர்ப்பு: "உங்கள் குடும்பத்திலுள்ள நபர்களுக்கு நீங்கள் காட்டுவதைப்போல மற்ற விசுவாசிகளுக்கும் தொடர்ந்து உங்கள் அன்பைக் காட்டுங்கள் "
மறவாதிருங்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: "நினைவுகூருங்கள் "
அந்நியரை ஏற்றுக்கொள்ளுங்கள்
மாற்று மொழிபெயர்ப்பு: " உங்களுக்கு நண்பர்களாகத் தெரியாத மக்களையும் உபசரியுங்கள் "
Hebrews 13:3-4
நீங்களும் அவர்களோடு இருந்தவர்களைப்போல...அவர்களுடையதைப்போல உங்களுடைய சரீரங்களும் துன்பப்படுத்தப்பட்டவைப்போல
விசுவாசிகள் தங்களுடைய சொந்தத் துன்பங்களைப் பற்றி நினைப்பதைப்போல மற்ற மக்களுடைய துன்பங்களையும் நினைக்கவேண்டும் என்று இந்த இரண்டு வார்த்தைகளும் அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்களும் அவர்களோடு சிறையில் இருந்தீர்கள், துன்பப்படுத்தப்பட்டீர்கள் "
திருமண மஞ்சம்
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள பாலுறவு
Hebrews 13:5-6
உங்களிடம் உள்ளவைகளே போதுமென்றிருங்கள்
"தேவன் உங்களுக்குக் கொடுத்தவைகளை அனுபவியுங்கள் "
Hebrews 13:7-8
அவர்களுடைய நடக்கையின் முடிவு
அனுகூலமான அர்த்தங்கள்: 1) "அவர்கள் வாழ்ந்த விதம்" அல்லது 2) "அவர்கள் வாழ்ந்து மரித்த விதம்" அல்லது "அவர்கள் அவர்களுடைய முழு வாழ்க்கையையும் வாழ்ந்த விதம் "இன்னும் இயேசுவை விசுவாசிக்கிறார்கள்.
Hebrews 13:9-11
பலவிதமான அந்நிய போதனைகள்
"நாங்கள் உங்களுக்குச் சொன்ன நல்ல செய்தியல்லாமல் அநேக வித்தியாசமான போதனைகள் "
ஆகாரங்களைப் பற்றிய விதிமுறைகளாலே இல்லாமல் கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுவது நல்லது
மாற்று மொழிபெயர்ப்பு: "தேவன் நம்மிடம் எப்படி தயவாக இருந்தார் என்பதை நினைக்கும்போது நாம் பெலவான்களாவோம், ஆனால் தேவனைப்பற்றிய விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவதினால் நாம் பெலவான்களாக முடியாது"
பாவங்களுக்காக பலியிடப்பட்டது
"தேவன் பாவங்களை மன்னிப்பதற்காக பலியிடப்பட்டது"
பாளயத்திற்கு வெளியே
மக்கள் வாழும் இடத்தைவிட்டு தூரத்தில்
Hebrews 13:12-14
இயேசுவின் பலிக்கும் ஆலய பலிகளுக்கும் இடையிலான ஒப்பிடுதல் இங்கு தொடருகிறது.
ஆகையால்
"அந்தப்படியே " அல்லது "ஏனென்றால் பலியிடப்படுகிறவைகளுடைய உடல்கள் பாளயத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்பட்டன " (13:11)
ஆகையால் நாம் போவோம்
"ஏனென்றால் இயேசு நகர வாசலுக்கு வெளியே இருக்கிறார் "
பாளயத்திற்கு வெளியே
13:11 ல் நீங்கள் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.
Hebrews 13:15-17
அவருடைய நாமத்தை ஏற்றுக்கொள்ளும்
மாற்று மொழிபெயர்ப்பு: "நாங்கள் இயேசுவில் நம்புகிறோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது"
Hebrews 13:18-19
Hebrews 13:20-21
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே
அநுகூலமான அர்த்தங்கள்: 1) "தேவன் இரத்தத்தினாலே அவருடைய நித்திய உடன்படிக்கையை நம்மிடம் உறுதிபடுத்தினார் " அல்லது 2) "நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே " இயேசு "நம்முடைய தேவனானார் " அல்லது 3) இரத்தத்தினாலே... தேவன் இயேசுவை "மரணத்திலிருந்து" "திரும்பக் கொண்டுவந்தார்."
உங்களை உருவாக்கி...நமக்குள் நடப்பிக்கிற
ஆசிரியரும் வாசிக்கிறவர்களும்