2 John
2 John 1
2 John 1:1-3
மூப்பர்
இது அப்போஸ்தலனும் இயேசுவின் சீஷனுமாகிய யோவானைக் குறிக்கிறது. அவன் சபையில் தலைவனாக இருப்பதினாலோ அல்லது வயதில்முதிர்ந்தவனாக இருப்பதினாலோ தன்னை "மூப்பர் " என்று குறிப்பிடுகிறார். ஆசிரியருடைய பெயர் வெளிப்படுத்தப்படலாம்: "நான், மூப்பனாகிய யோவான், எழுதுகிறேன்."
நமக்குள் நிலைத்திருக்கிறதும் நம்மோடு என்றென்றும் இருக்கக்கூடியதுமான சத்தியத்தினிமித்தம்
இது "ஏனென்றால் நாம் தொடர்ந்து சத்தியத்தை விசுவாசிக்கிறோம், என்றென்றும் விசுவாசிப்போம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
தெரிந்துகொள்ளப்பட்ட பெண்ணிற்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் மூப்பர்
கிரேக்க மொழியில் நிருபங்கள் இப்படித்தான் துவங்கியிருக்கின்றன. இது "நான், மூப்பனாகிய யோவான் விசுவாசிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
அவர்கள் எல்லோரும்
இது சகவிசுவாசிகளைக் குறிக்கிற பிரதிபெயர்.
சத்தியத்தில் நான் நேசிக்கிறவர்கள்
இது "நான் உண்மையாய் நேசிக்கிறவர்கள் " என்றும் மொழிபெயர்க்கலாம்.
நமக்குள் நிலைத்திருக்கிற சத்தியத்தினிமித்தம்
முழு அர்த்தமும் வெளிப்படுத்தப்படலாம்: "ஏனென்றால் இயேசுவின் செய்தியின் சத்தியம் நாம் அதை விசுவாசித்ததினால் அது நமக்குள் வாழ்கிறது, அது நமக்குள் என்றென்றும் வாழும்."
சத்தியத்திலும் அன்பிலும்
இது "அவைகள் உண்மையுள்ளவைகள் மற்றும் அவைகள் நம்மை நேசிக்கின்றன" என்றும் மொழிபெயர்க்கலாம். மாற்று மொழிபெயர்ப்பு: "ஏனென்றால், அவைகள் நம்மை உண்மையாய் நேசிக்கின்றன."
2 John 1:4-6
யோவான், சபையை "ஒரு பெண்ணாகவும் " விசுவாசிகளை "அவளுடைய பிள்ளைகளாகவும் " கருதி சபையோடு தொடர்ந்து பேசுகிறார். (1:1 பார்க்கவும்)
உங்கள் பிள்ளைகளில் சிலர்
"உங்கள் " என்கிற வார்த்தை ஒருமை.
பிதாவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட கற்பனையின்படி
"பிதாவாகிய தேவன் நமக்கு கட்டளையிட்டபடி"
நான் உனக்கு புதிய கற்பனைகளாக எழுதாமல்
" நீ ஒரு புதிய காரியத்தைச் செய்யவேண்டும் என்று நான் உனக்கு கட்டளையிடாமல் "
ஆனால் ஆதிமுதல் நமக்கிருந்த
" ஆனால் நாம் முதலில் விசுவாசித்தபோது நாம் என்னசெய்யவேண்டும் என்று கிறிஸ்து கட்டளையிட்டாரோ, அதையே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
நாம் ஒருவரைஒருவர் நேசிக்கவேண்டும்
இது "நாம் ஒருவரைஒருவர் அன்புகூறவேண்டும் என்று அவர் கட்டளையிட்டார் " என்ற புதிய வாக்கியத்திலே மொழிபெயர்க்கலாம்.
இது ஆதிமுதலே நீங்கள் கேட்டிருக்கிற மற்றும் நீங்கள் அதற்குள் நடக்கவேண்டியதுமான கற்பனைகள்
"அது " என்ற வார்த்தை அன்பைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "நீங்கள் ஒருவரைஒருவர் நேசிக்கவேண்டும் என்று முதலாவது விசுவாசித்ததினால் அவர் உங்களுக்குக் கட்டளையிட்டார்."
நீங்கள் நடக்கவேண்டியது
"நீங்கள் " என்ற வார்த்தை பன்மை.
2 John 1:7-8
அநேக வஞ்சகர்கள்
இதை "அநேக கள்ளப்போதகர்கள் " அல்லது "அநேக ஏமாற்றுக்காரர்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
அநேக வஞ்சகர்கள் உலகத்தில் வந்திருக்கிறார்கள்
இதை "அநேக கள்ளப்போதகர்கள் சபையோரை விட்டுவிட்டனர்" என்று மொழிபெயர்க்கலாம்.
இயேசுகிறிஸ்து மாம்சத்திலே வந்தார்
இது " இயேசுகிறிஸ்து உண்மையான மனிதனாக வந்தார் "என்னும் அர்த்தம் கொண்ட ஆகுபெயர் ஆகும்.
இது வஞ்சகனும் அந்திகிறிஸ்துவும்"
இதை "இவர்களே மற்றவர்களை வஞ்சிக்கிறவர்களும் கிறிஸ்துவையே எதிர்க்கிறவர்களும்" என்று மொழிபெயர்க்கலாம்.
உங்களை கவனியுங்கள்
"விழித்திருங்கள் " அல்லது "கவனம் செலுத்துங்கள் "
காரியத்தை இழப்பது
இதை "பரலோகத்தில் உன்னுடைய எதிர்கால பலன்களை இழந்துபோவது" என்று மொழிபெயர்க்கலாம்.
பூரண பலன்
இதை "பரலோகத்தில் பரிபூரண பலன்" என்று மொழிபெயர்க்கலாம்
2 John 1:9-11
மீறி நடக்கிறவர்கள்
இது தேவனைக் குறித்தும் சத்தியத்தைக் குறித்தும் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக அறிய விரும்புகிற நபரைக் குறிக்கிறது. மாற்று மொழிபெயர்ப்பு: "தேவனைக் குறித்து அதிகமாக அறிய விரும்புகிறவர்கள்."
கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்கவில்லை
"கிறிஸ்து போதித்தவைகளைத் தொடர்ந்து நம்பவில்லை "
தேவன் இல்லை
"தேவனுக்குரியவன் இல்லை"
உங்களிடம் வந்து
"உங்களிடம்" என்ற வார்த்தை பன்மை.
உங்கள் வீடு
"உங்கள்" என்ற வார்த்தை பன்மை.
அவனுடைய பொல்லாத கிரியைகளில் பங்குபெருகிறவர்கள்
"அவனுடைய துர்க்கிரியைகளில் அவனோடு பங்களிப்பது" அல்லது "அவனுடைய துர்க்கிரியைகளில் அவனுக்கு உதவுவது"
2 John 1:12-13
காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத நான் விரும்பவில்லை
இதை "ஆனால் நான் அவைகளை உங்களுக்கு கடிதத்தில் எழுத விரும்பவில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
முகமுகமாக
இதை "உண்மையில் உங்களுடன்" என்று மொழிபெயர்க்கலாம்.
சந்தோஷம் நிறைவாகும்
இதை "சந்தோஷம் பூரணமாகும்" என்று மொழிபெயர்க்கலாம்.
தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள்
இங்கு யோவான் இன்னொரு சபையை சகோதரியுடன் ஒப்பிடுகிறார். அந்த சபையின் பங்காக இருக்கிற விசுவாசிகளைப் பிள்ளைகளுடன் ஒப்பிடுகிறார். இது எல்லா விசுவாசிகளும் ஆவிக்குரிய குடும்பம் என்பதை வலியுறுத்துகிறது.