தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Revelation

Revelation 1

Revelation 1:1-3

அவருடைய ஊழியர்கள்

கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்

துரிதமாய் நடக்கவேண்டியவை

மறு மொழிபெயர்ப்பு: "சீக்கிரமாக நடக்க வேண்டிய சம்பவங்கள்"

அதைத் தெரியப்படுத்தி

"அது சொல்லப்பட்டது"

காலம் சமீபமாயிருக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: "துரிதமாக( சீக்கிரமாக) நடக்க வேண்டிய காரியங்கள் சீக்கிரமாக நடக்கும்"

Revelation 1:4-6

சமாதானம் இவரிடத்திலிருந்து, இவர் யாரென்றால்

"தேவனிடத்திலிருந்து சமாதானம், அவர் யாரென்றால்"

ஆவிகள்

தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பதாக இவைகள் இருப்பதால் இந்த ஆவிகள் தேவதூதர்கள் என்று அறியப்படுகிறது.

எங்களை விடுதலையாக்கி

மறு மொழிபெயர்ப்பு: "எங்களை விடுதலையாக்கி"

எங்களை ஒரு ராஜ்யமாக செய்து

"எங்களை வேறு பிரித்து எங்களை ஆளுகை செய்யத் துவங்கி"

Revelation 1:7-8

அல்பா மற்றும் ஒமேகா

இது கலாச்சார ரீதியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கிரேக்க எழுத்துக்கள் அறியாதவனுக்கு அல்பா என்றாலும் ஒமேகா என்றாலும் ஒன்றும் புரிவதில்லை; அதினால், தங்களது மொழியில் இதற்கு தகுந்த சமமான வார்த்தைகளைக் கண்டறியவேண்டும். அ முதல் ஃ வரை .துவக்கமுதல்

Revelation 1:9-11

உங்களுடைய ... உங்கள்

ஏழு சபைகளின் விசுவாசிகள்

ஏசுவிலுள்ள பாடுகளையும், ராஜ்யத்தையும், நீடிய பொறுமையையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளுபவர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய ராஜ்யத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளுபவர்கள். நானும் உங்களோடு பாடுகளையும் சோதனைகளை நீடிய பொறுமையோடு சகிக்கவும் செய்கிறேன். ஏனென்றால், உங்களோடு நானும் ஏசுவுக்கு சொந்தமானவன்.

தேவனுடைய வார்த்தை நிமித்தம்

மறு மொழிபெயர்ப்பு: "நான் தேவனுடைய வார்த்தையைக் குறித்து சொன்னதினிமித்தம்."

ஆவியில்

தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டு

கர்த்தருடைய நாள்

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் ஆராதிக்கும் நாள்

எக்காளத்தைப் போல அதிக சத்தமான குரல்

குரல் மிகவும் சத்தாமாக இருத்தால் அது எக்காளத்தைப் போலக் கேட்டது.

சிமிர்னாவுக்கும், பெர்கமுவுக்கும், தியத்திராவுக்கும், சர்தைக்கும், பிலதெல்பியாவுக்கும் மற்றும் லவோதிக்கேயாவுக்கும்

இப்பொழுது தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் ஆசியாவிலுள்ள பட்டணங்களின் பெயர்கள் இவைகள்.

Revelation 1:12-13

யாருடைய சத்தம்

இங்கு "சத்தம்" என்ற வார்த்தை பேசுகிறவனைக் குறிக்கிறது.

கச்சை

இடுப்பை அல்லது நெஞ்சுப்பகுதியில் சுற்றி கட்டப்பட்டுள்ள ஒரு துணியின் பகுதி.

Revelation 1:14-16

தலையும் தலைமுடியும் பஞ்சைப்போல வெண்மையாக இருக்கிறது

பனியைப் போல வெண்மையாய்

இந்த இரண்டு கூற்றுகளும் அவருடைய தலையும் மயிரும் எவ்வாறு வெண்மையாக இருக்கிறது என்று அழுத்தி சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெருவெள்ளத்தின் இரைச்சல்

இது பெரிய மிகவும் வேகமாக பாய்ந்து கொண்டிருக்கும் வெண்மையான தண்ணீர் இடும் சத்தம் போல இருக்கிறது.

Revelation 1:17-18

அவருடைய ஊழியர்கள்

கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்

துரிதமாய் நடக்கவேண்டியவை

மறு மொழிபெயர்ப்பு: "சீக்கிரமாக நடக்க வேண்டிய சம்பவங்கள்"

அதைத் தெரியப்படுத்தி

"அது சொல்லப்பட்டது"

காலம் சமீபமாயிருக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: "துரிதமாக நடக்க வேண்டிய காரியங்கள் துரிதமாக நடந்தேறும்.

Revelation 1:19-20

குத்துவிளக்குகளின் மத்தியில் இருக்கிற மனித குமாரன் தொடர்ந்து பேசுகிறார்.

பொன் குத்துவிளக்குகள்

1:12 இல் இதை மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

துருக்கியாகிய ஆசிய சபைகள்

1:11 இல் இதை மொழிபெயர்த்ததைப் போல இதை மொழிபெயர்க்கவும்.

Revelation 2

Revelation 2:1-2

அப்போஸ்தலர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள்

"தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுபவர்கள்"

Revelation 2:3-5

எபேசுவிலிருக்கும் விசுவாசிகளுக்கான மனித குமாரனுடைய செய்தியை இது தொடர்கிறது.

ஆதி அன்பு

"கிறிஸ்துவுக்கான உங்களுடைய உண்மையான அன்பு" என்று இது அர்த்தம் கொள்ளுகிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன்

உங்களுடைய விளக்குத் தண்டை அகற்று

ஒவ்வொரு விளக்குத் தண்டும் ஏழு சபைகளின் ஒவ்வொரு சபையைக் குறிக்கிறது.

Revelation 2:6-7

எபேசுவிலிருக்கும் விசுவாசிகளுக்கான மனுஷக் குமாரனுடைய செய்தியை இது தொடர்கிறது.

நிக்கொலஸ்தர்கள்

நிக்கோலாஸ் என்பவனுடைய போதனைகளைப் பின்பற்றினவர்கள் உங்களுக்கு காது இருந்தால், கவனியுங்கள்

ஆவிக்குரியக் காதுகள். இது தேவனுடைய (சத்தத்தைக்)

கேட்கக்கூடியவனும் அவருடைய செய்தியை புரிந்துகொள்ளுபவனுமானவன் என்று அர்த்தம் கொள்ளும்.

நான் சாப்பிட அனுமதிப்பேன்

"நான் அவர்களுக்கு சாப்பிட அனுமதி அளிப்பேன்"

Revelation 2:8-9

சிமிர்னா

1:11 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

முதலும் கடைசியும்

1:7 இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 2:10-11

உங்களில் சிலரைப் பிசாசானவன் சிறைச்சாலையில் போட இருக்கிறான்

மறு மொழிபெயர்ப்பு: "உங்களில் சிலரைப் பிசாசானவன் சிறைச்சாலையில் போடும்படி செய்வான்."

உங்களுக்கு காது இருந்தால், கவனியுங்கள்

2:7 இல் உள்ள மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்.

Revelation 2:12-13

Revelation 2:14-15

பாலாக்

ஒரு ராஜாவினுடைய பெயர்

இஸ்ரவேலின் பிள்ளைகளுக்கு முன்பாக தடுப்புக் கல்லை வீச பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன்.

மறு மொழிபெயர்ப்பு: "இஸ்ரவேல் ஜனங்களை எவ்வாறு பாவம் செய்ய வைக்கவேண்டும் என்று பாலாக்குக்குச் காட்டினவன்."

விக்கிரகங்களுக்குப் படைத்த உணவை சாப்பிட

மறு மொழிபெயர்ப்பு: "விக்கிரகங்களுக்கு உணவை பலி கொடுத்துவிட்டு பின்பு அதை உண்பது."

விபச்சாரம் செய்து இரு

மறு மொழிபெயர்ப்பு: "உடலுறவு பாவம் செய்" அல்லது "தவறான உடலுறவு கொள்"

Revelation 2:16-17

என்னுடைய வாயிலிருந்து வரும் பட்டயத்தின் மூலம்

1:16 இல் உள்ள "வாளைக்" குறிக்கிறது.

உங்களுக்கு காது இருந்தால் காதுள்ளவன்

2:7 இல் உள்ள மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்.

ஜெயம்(வெற்றி) கொள்ளுகிறவனுக்கு

மறு மொழிபெயர்ப்பு: "வெற்றி கொள்ளுகிற யாராயிருந்தாலும், அவனுக்கு"

Revelation 2:18-19

Revelation 2:20-21

ஆனால் உங்களுக்கு எதிராக எனக்கு இது இருக்கிறது

2:24 எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 2:22-23

வியாதிப் படுக்கையில் அவளை வீசி

மறு மொழிபெயர்ப்பு: "நான் அவளை வியாதிப்படுத்துவேன்" அல்லது "நான் அவளை சுகவீனத்தின் மூலம் தண்டிப்பேன்."

வேசித்தனம் பண்ணுகிற

"வேசித்தனம் செய்கிற"

அவள் செய்ததுக்கு அவர்கள் மனம்திரும்பி

மறு மொழிபெயர்ப்பு: "அவளைப் போல இருந்ததற்கு அவர்கள் மனம்திரும்புகிறார்கள்"

அவளுடைய பிள்ளைகளை சாகும்படி அடிப்பேன்

மறு மொழிபெயர்ப்பு: "நான் அவளுடைய பிள்ளைகளைக் கொலை செய்வேன்"

எண்ணங்களையும் விருப்பங்களையும் அராய்கிறவர் நான்

மொழிபெயர்ப்பு: "நான் எண்ணங்களையும் விருப்பங்களையும் ஆராய்கிறேன்" அல்லது "நான் மனதையும் இருதயங்களையும் ஆராய்கிறேன்"

Revelation 2:24-25

சாத்தானுடைய ஆழமானக் காரியங்கள்

மறு மொழிபெயர்ப்பு: "சாத்தானுடைய பொய் காரியங்கள்" அல்லது "சாத்தானுடைய பொய்கள்"

Revelation 2:26-29

ஜெயம் கொள்ளுகிறவர்

மறு மொழிபெயர்ப்பு: "வீழ்த்துகிற யாராயினும்"

நான் அவனுக்குக் கொடுப்பேன்

"அவனுக்கு" என்ற வார்த்தை ஜெயம் கொள்ளுகிறவனைக் குறிக்கிறது.

விடிவெள்ளி நட்சத்திரம்

விடியும் முன் தோன்றும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்

Revelation 3

Revelation 3:1-2

Revelation 3:3-4

அவர்களுடைய துணிகளை அழுக்காக்காத

அழுக்கான துணிகள் பாவமான அவர்களது வாழ்க்கைகளைக் குறிக்கிறது.

வெண்மையாக உடுத்தி இருந்தவர்கள்

வெண்மையான துணிகள் சுத்தமான வாழ்க்கையைக் குறிக்கிறது.

Revelation 3:5-6

ஜெயம் கொள்ளுகிறவர்

மறு மொழிபெயர்ப்பு: "வீழ்த்துகிற யாராயினும்"

உங்களுக்கு காது இருந்தால், சபைகள்

3:7 இல் உள்ள மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்.

Revelation 3:7-8

தாவீதின் திறவுகோல்

"திறவுகோல்" என்ற வார்த்தை ஆவிக்குரிய அதிகாரத்தை அல்லது வல்லமையைக் குறிக்கிறது.

Revelation 3:9-11

சாத்தனின் சபை ...யூதர்கள் ஆனால் இல்லை

2:9 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

தாழக் குனித்து

இது அர்ப்பணிப்பின் அடையாளம், ஆனால் ஆராதனையின் அடையாளம் அல்ல.

அவைகளை சோதிக்கும்படி

மறு மொழிபெயர்ப்பு: "அது அவைகளை சோதிக்கும்"

Revelation 3:12-13

ஜெயம் கொள்ளுகிறவர்

மறு மொழிபெயர்ப்பு: "வீழ்த்துகிற யாராயினும்"

என்னுடைய தேவனுடைய சபையில் தூண்

"தூண்" என்பது தேவனுடைய ராஜ்யத்தில் நிரந்தரமான மற்றும் முக்கியமான அங்கமாக மாறுகிறதைக் குறிக்கிறது.

Revelation 3:14-16

ஆமெனின் வார்த்தைகள்

மறு மொழிபெயர்ப்பு: "ஆமென் என்று அழைக்கப்படுகிறவருடைய வார்த்தைகள்"

Revelation 3:17-18

Revelation 3:19-20

விரும்பி மனந்திரும்பு

"ஜாக்கிரதைப்பட்டு மனந்திரும்பு"

நான் கதவின் அருகிலிருந்து தட்டுகிறேன்

"கதவு" என்பது கிறிஸ்து நுழைய விரும்பும் நம்முடைய வாழ்க்கையைக் குறிக்கிறது, அல்லது ஆத்துமாவைக் குறிக்கிறது.

என்னுடைய சத்தத்தைக் கேட்கிற

"சத்தம்" என்பது கிறிஸ்துவின் அழைப்பைக் குறிக்கிறது.

கதவைத் திறக்கிற

கிறிஸ்துவை உள்ளே வரவேற்கிறதை இது குறிக்கிறது.

அவனோடு சாப்பிட

இது உறவையும், நட்பையும், மற்றும் ஐக்கியத்தையும் குறிக்கிறது.

Revelation 3:21-22

ஜெயம் கொள்ளுகிறவர்

2:7 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். மறு மொழிபெயர்ப்பு: "வீழ்த்துகிற யாராயினும்."

உங்களுக்கு காது இருந்தால், சபைகள்

2:7 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 4

Revelation 4:1-3

இந்தக் காரியங்களுக்குப் பிறகு

இயேசு ஏழு சபைகளுக்கு பேசினதை யோவான் கண்ட பிறகு.(2:1

3:22).

வானத்தில் ஒரு கதவு திறந்திருக்கிறதை

மொழிபெயர்ப்பு: "வானத்தின் நுழைவு வாயில்"

வச்சிரக்கல் மற்றும் பதுமராகமும்

பகுதி

விளையேறப்பெற்ற கற்கள். அவைகள் என்ன நிறத்தில் இருந்தன என்பது தெரியவில்லை.

வானவில்

மழை பெய்யும்போது சூரியன் அவைகளுக்குப் பின்பாக ஒளிவீசும்போது மக்கள் பார்க்கும் நிறங்கள்.

கோமேதகம்

ஒரு பச்சை நிறக்கல்

விலையேறப்பெற்ற கல்.

Revelation 4:4-5

மின்னல் வெளிச்சம்

மின்னல் தோன்றும்போது அது எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும் உங்கள் மொழியில் உள்ள வார்த்தையைப் பயன்படுத்தவும்.

இரைச்சலும், இடியின் சத்தமும்

"இடி எழுப்பும் சத்தம் போல"

Revelation 4:6

கடல் கண்ணாடி

சாத்தியமான பல அர்த்தங்கள் 1) கடல் கண்ணாடியாக சொல்லப்படுதல் அல்லது 2) கண்ணாடி என்றால் அது ஒரு கடலாக இருந்தது என்று பேசப்பட்டிருந்தால். எப்படி அது கண்ணாடி போல இருந்தது அல்லது ஒரு தெளிவான கடல் என்று கூற முடியும். மா.மொ: "ஒரு கடல் கண்ணாடி போன்று மென்மையாக "அல்லது" ஒரு கண்ணாடி கடல் போன்ற படர்ந்தது" (காண்க: உருவகம்)

படிகம் போன்ற

அது படிகம் போல் தெளிவாக இருந்தது என்று கூற முடியும். , மா.மொ: "படிகம் போல தெளிவாக" (பார்க்க: உவமை) # சிம்மாசனத்தில் மத்தியில் மற்றும் அரியணை சுற்றி

"உடனடியாக அரியணை சுற்றி" அல்லது "அரியணையை நெருங்கி அதை சுற்று"

நான்கு ஜீவன்கள்

"நான்கு உயிரினங்கள்" அல்லது "நான்கு உயிருள்ள காரியம்"

Revelation 4:7-8

இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவரும்

தேவன் எல்லா நேரங்களிலும் இருக்கிறார்.

Revelation 4:9-11

என்றென்றும், எப்பொழுதும்

இந்த இரண்டு வார்த்தைகள் ஒரேமாதிரியான அர்த்தங்கள் கொண்டுள்ளது. ஒரு உறுதிப்படுத்தலுக்காக இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் கர்த்தரும் எங்கள் தேவனும்

பேசுகிறவர்கள், கேட்கிறவர்கள் அல்ல

அவைகள் இருந்தன சிருஷ்டிக்கப்பட்டது

"இருந்தவைகளும்" மற்றும் சிருஷ்டிக்கப்பட்டவைகளும்" ஒரே மாதிரியான அர்த்தங்கள் கொண்டுள்ளவை.

Revelation 5

Revelation 5:1-2

Revelation 5:3-5

தாவீதின் வேர்

மறு மொழிபெயர்ப்பு: "தாவீது ராஜாவின் சந்ததியும் தலைமுறையும்" (UDB)

Revelation 5:6-7

Revelation 5:8

அவர் புஸ்தக சுருளை எடுத்தபோது

"அவர்" என்ற வார்த்தை ஆட்டுக்குட்டியானவரைக் குறிக்கிறது.

Revelation 5:9-10

அவர்கள்

"அவர்கள்" என்ற வார்த்தை நான்கு ஜீவன்களையும்மற்றும் இருபத்து நான்கு மூப்பர்களையும் குறிக்கிறது.

அடிக்கப்பட்டவர் நீர்

மறு மொழிபெயர்ப்பு: "அவர்கள் உம்மைக் கொலை செய்தனர்."

Revelation 5:11-12

20,00,00,000

(பார்: எண்கள் மொழிபெயர்ப்பு)

Revelation 5:13-14

Revelation 6

Revelation 6:1-2

நான்

எல்லா "நான்" என்ற வார்த்தைகளும் ஆசிரியர், யோவானைக் குறிக்கிறது.

ஏழு முத்திரைகளில் ஒன்றை திறந்து

ஏழு முத்திரைகளில் முதலாம் முத்திரையை திறந்து

Revelation 6:3-4

இரண்டாம் முத்திரையைத் திறந்து

இரண்டாவது முத்திரையைத் திறந்து

தீச் செவப்பு

மறு மொழிபெயர்ப்பு: "பிரகாசமான சிவப்பு"

அதின் சவாரி செய்பவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் அதின் சவாரி செய்பவருக்கு அனுமதி அளித்தார்..." (பார்க்க: செய்வினை அல்லது செய்யப்பட்டு வினை)

Revelation 6:5-6

மூன்றாம் முத்திரையைத திறந்து

"மூன்றாவது முத்திரையைத் திறந்து""

கீனிக்ஸ்

இது ஏறக்குறைய 1.14 லிட்டருக்கு சமமான திரவ அளவைக் குறிக்கும் ஒரு பிரத்தியேக அளவை இது குறிக்கிறது.

கோதுமையின் அளவு

ஒரு லிட்டருக்கான அளவுக்கு ஒத்த பிரத்தியேக அளவை இது குறிக்கிறது.

ஒரு தினார்

ஒரு நாள் கூலிக்கான மதிப்பை இந்த காசு பெரும்.

Revelation 6:7-8

Revelation 6:9-11

அவர்கள் திட நம்பிக்கைக் கொண்டிருந்தனர்

ம.மொ. "அவர்கள் உறுதியாக நம்பினார்கள்" அல்லது "அவர்கள் பலமாக நம்பினார்கள்"

Revelation 6:12-14

சாக்குத் துணியைப் போல சூரியன் கருத்தது

சூரியன் மிகவும் கருத்தது.

Revelation 6:15-17

படைத் தளபதிகள்

இந்த வார்த்தை யுத்தத்தை தலைமை தாங்கும் வீரர்களைக் குறிக்கிறது.

குகைகளில் மறைத்து

மறு மொழிபெயர்ப்பு: "மலையில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் மறைத்து" அல்லது "நிலத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியில் மறைத்து வைத்து"

அவருடைய முகம்

"அவருடைய" என்ற பெயர்ச்சொல் தேவனைக் குறிக்கிறது.

Revelation 7

Revelation 7:1-3

பொதுவான தகவல்:

யோவான் முத்திரை குறிக்கப்பட்ட தேவனுடைய 1,44,000 ஊழியர்களின் தரிசனத்தை விவரிக்க தொடங்குகிறார். ஆட்டுக்குட்டியானவர் ஆறாம் மற்றும் ஏழாம் முத்திரைகள் திறப்பதற்கு இடையே இது நடைபெறுகிறது.

பூமியின் நான்கு மூலைகளிலும்

பூமி தட்டையாகவும் மற்றும் காகிதத்தாளைப்போல சதுரமாக இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. "நான்கு மூலைகளிலும்" என்ற சொற்றொடர் வடக்கு, தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு குறிக்கிறது.

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை

"முத்திரை" என்ற வார்த்தை இங்கே ஒரு மெழுகு முத்திரை மீது குறியிடப்பட அழுத்த பயன்படுத்தப்படும் ஒரு கருவியை குறிக்கிறது. இங்கே, தேவனுடைய மக்கள் மீது இந்த கருவி குறி வைக்கப்பட பயன்படுத்தப்படுகிறது மா.மொ: " குறிக்கும் சாதனம் "அல்லது" முத்திரை "(பார்க்க: ஆகுபெயர்)

நெற்றிகளின் மீது முத்திரையிடுதல்

"முத்திரை" என்ற வார்த்தை குறியை குறிக்கிறது. இந்த குறி மக்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள், அவர் அவர்களை பாதுகாப்பார் என்று என்று காட்டுகிறது. மா.மொ: "நெற்றிகளில் அடையாளம் போடு" (பார்க்க: ஆகுபெயர்)

நெற்றிகளில்

முகத்தின் மேல், கண்களின் மேலே

Revelation 7:4-6

முத்தரிக்கப்பட்டவர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய அடையாளம் தங்கள் மேல் உள்ளவர்கள்"

பன்னிரண்டு ஆயிரம்

ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000

144,000

ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 ஆக பன்னிரண்டு குழுக்கள்.

இஸ்ரவேல் ஜனங்களின் எல்லா கோத்திரங்களும்

இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் யாக்கோபின் குமாரர்கள் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.

Revelation 7:7-8

இது இஸ்ரவேலின் கோத்திரங்களில் இருந்து தெரிந்தெடுப்பைத் தொடர்கிறது.

Revelation 7:9-10

ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக மற்றும் சிங்காசனத்துக்கு முன்பாகவும் நிற்கிற

மறு மொழிபெயர்ப்பு: "ஆட்டுக்குட்டியானவருக்கும் சிங்காசனத்துக்கும் முன்பாக நிற்கிற"

வெண் வஸ்திரங்கள்

"இங்கு வெண்மை" என்ற நிறம் பரிசுத்தத்தைக் குறிக்கிறது.

இரட்சிப்பு ...உடையது ... ஆட்டுக்குட்டியானவருக்கு

மறு மொழிபெயர்ப்பு: "சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற நம்முடைய தேவனும் நம்மை ரட்சித்த ஆட்டுக்குட்டியானவரும்" அல்லது "இரட்சிப்பு சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற நம்முடைய தேவனிடத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவரிடத்திலிருந்தும் வருகிறது."

Revelation 7:11-12

எல்லா தூதர்களும் ... ஜீவன்கள்

மறு மொழிபெயர்ப்பு: "எல்லா தூதர்களும் சிங்காசனத்தை சுற்றியும், மூப்பர்களை சுற்றியும்,நான்கு ஜீவன்களைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர்"

நான்கு ஜீவன்கள்

4:6

8 இல் குறிப்பிடப்பட்டுள்ள அதே நான்கு ஜீவன்கள் இவைகள்

துதி, மகிமை ... நம்முடைய தேவனுக்கு உண்டாகட்டும்

மறு மொழிபெயர்ப்பு: "நம்முடைய தேவன் எல்லா துதிக்கும் மகிமைக்கும் ஞானத்துக்கும் நன்றிக்கும் கனத்துக்கும் வல்லமைக்கும் பெலத்துக்கும் பாத்திரர்"

என்றென்றும், எப்பொழுதும்

இந்த இரண்டு வார்த்தைகள் ஒரேமாதிரியான அர்த்தங்கள் கொண்டுள்ளது. ஒரு உறுதிப்படுத்தலுக்காக இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Revelation 7:13-14

அவர்கள் தங்கள் வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கினார்கள்

"வெண்மை" நிறம் பரிசுத்தத்தைக் குறிக்கிறது, "ரத்தம்" பொருட்களை பொதுவாக சுத்தம் செய்யும் தண்ணீருக்கு சமமாக்கப்பட்டுள்ளது. பரிசுத்தம் "கழுவப்படுவதாலும்" அல்லது கிறிஸ்துவின் ரத்தத்தில் மூடப்படும் போதும் பெறப்படுகிறது.

Revelation 7:15-17

அவர்கள், அவர்களுக்கு, அவர்களுடைய

இந்த எல்லா பெயர்ச்சொல்லும் மகாப் பெரிய உபத்திரவத்தைக் கடந்து வந்தவர்களைக் குறிக்கிறது.

சூரியன் சூடாக இருப்பதில்லை

இது சூரியன் இனி என்றும் சூட்டினால் மக்களை வாதிக்காது என்று அர்த்தப்படுகிறது.

Revelation 8

Revelation 8:1-2

அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது

சாத்தியமான அர்த்தங்கள் 1. தேவன் அவர்களுக்கு ஏழு எக்காளங்களைக் கொடுத்தார்" அல்லது 2. "ஆட்டுக்குட்டியானவர் அவர்களுக்கு ஏழு எக்காளங்களைக் கொடுத்தார்."

Revelation 8:3-5

Revelation 8:6-7

பூமியில் அது வீசப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "தூதன் அதை பூமியின் மீது வீசினான்." அதில் மூன்றில் ஒரு பங்கு எரிக்கப்பட்டது, மரங்களில்மூன்றில் ஒரு பங்கு, பச்சைப் புற்களில்

மூன்றில் ஒரு பங்கு

மறு மொழிபெயர்ப்பு: "பூமியில் மூன்றில் ஒரு பங்கை அது எரித்தது, மூன்றில் ஒரு பங்கு மரங்களை எரித்தது, எல்லா பச்சைப் புற்களையும் எரித்தது."

Revelation 8:8-9

எதோ தீயில் எரிகிற ஒரு பெரிய மலை வீசப்பட்டது

"தூதன், எதோ தீயில் எரிகிற ஒரு பெரிய மலையை வீசினான்"

மூன்றில் ஒரு பங்கு கடல் ஜீவராசிகள் சாக மூன்றில் ஒரு பங்கு கடல் ரத்தமாக மாறியது, மூன்றில் ஒரு பங்கு கப்பல்கள் அழிந்தன"கடல் ஜீவராசிகள் அழிந்தன

ரத்தமாக மாறி

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ரத்தத்தைப் போல சிவப்பாகியது" அல்லது 2. உண்மையாகவே "ரத்தமாக மாறிற்று"

Revelation 8:10-11

எரியும் தீவட்டியைப் போல, ஒரு பெரிய நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து விழுந்தது

"எரியும் தீவட்டியைப் போல எரிந்துகொண்டிருந்த ஒரு பெரிய நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து விழுந்தது." ஒரு பெரிய நட்சத்திரத்தின் தீ ஒரு தீவேட்டியின் தீயைப் போல இருக்கிறது.

தீவட்டி

ஒரு முனையில் தீ எரியூட்டப்பட்டிருக்கும் ஒரு தடி. எரிபந்தம் போல விழுந்தது. அந்த நட்சத்திரத்தின் பெயர் "எட்டி"

ஒரு கசப்பான சுவையைக் கொண்டிருக்கும் # செடியினுடையப் பெயர் நிமித்தம் இந்த நட்சத்திரம் "எட்டி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

எட்டி

நட்சத்திரத்தால் விஷம் ஏற்றப்ப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "கசப்பு" அல்லது "விஷத்தன்மைக் கொண்டது"

Revelation 8:12

சூரியனின் மூன்றில் ஒன்று அடிக்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "காரிருள் மூன்றில் ஒரு பங்கு சூரியனை மூடியது."

Revelation 8:13

மூன்று தூதர்களால் இன்னமும் ஒலிக்கப்படவேண்டிய மீதமுள்ள எக்காளங்கள் நிமித்தம்

மறு மொழிபெயர்ப்பு: "ஏனென்றால், தங்களுடைய எக்காளங்களை ஊதாத மூன்று தூதர்கள் சீக்கிரமாக ஒலிக்கப்போகிறார்கள்."

Revelation 9

Revelation 9:1-2

சுரங்கப்பாதை

நிலத்தின் அடியில் இருக்கும் நீளமான மற்றும் குறுகலான பாதை

ஆழமும் மற்றும் முடிவில்லாததுமான

மறு மொழிபெயர்ப்பு: "முடிவில்லாத ஆழம்."

புகைத் தூண்

தீயிலிருந்து எழும்பும் உயரமான புகை மேகம்.

Revelation 9:3-4

வெட்டுக்கிளிகள்

பெரியக் கூட்டமாகப் பறக்கும் பூச்சிகள்

தேள்களுக்கு ஒப்பான வல்லமை

மற்ற மிருகங்களைக் கொட்டி விஷம் செலுத்தும் வல்லமை தேள்களுக்கு உண்டு.

தேள்கள்

தங்கள் வால்களில் கொடுக்குகள் வைத்திருக்கும் தேனீக்களைப் போல விஷக் கொடுக்குகள் கொண்டிருக்கும் சிறிய விலங்குகள்

நெற்றி

கண்களுக்கு மேல் உள்ள முகத்தின் மேற்ப்பகுதி.

Revelation 9:5-6

அவைகள்

வெட்டுக்கிளிகள்

அந்த மக்கள்

வெட்டுக்கிளிகள் கொட்டின மக்கள்

ஏக்கம்

விருப்பம்

Revelation 9:7-9

வெட்டுக்கிளிகள்

அறியப்படுகிற பொருட்களால் சம்பந்தப்படுத்தி வெட்டுக்கிளிகள் விளக்கப்பட்டுள்ளது.

Revelation 9:10-12

வெட்டுக்கிளிகளைக் குறித்து விளக்குவதை யோவான் தொடர்கிறார்.

ஆழமும் மற்றும் முடிவில்லாததுமான

9:1 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். முடிவில்லாத ஆழம்

அபெத்தோன் ... அபொல்லியோன்

இரண்டு பெயர்களும் "அழிவு" என்கிற அர்த்தத்தைக் குறிக்கிறது.

Revelation 9:13-15

பொன் பலிபீடத்தின் கொம்புகள்

பலிபீடத்தின் மேலே நான்கு முனைகளிலும் இருக்கிற கொம்பு வடிவம் உள்ள பொருட்கள்.

அந்த மணி நேரத்தில், நாளில், மாதத்தில், வருடத்தில்

இந்த வார்த்தைகள், ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொல்லும்படியாக, ஏதோ ஒரு பொதுவான நேரத்தை அல்ல, உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மறு மொழிபெயர்ப்பு: "அந்த சரியான நேரத்தில்"

Revelation 9:16-17

200,000,00

5:11 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 9:18-19

அவைகளின் வால்கள் பாம்புகளைப் போல் இருந்தது

குதிரைகளின் வால்கள் பாம்புகளுக்கு ஒப்பனையாக்கப்பட்டுள்ளது. சாத்தியமான அர்த்தங்கள்: 1. அவைகளின் வால்கள் பாம்புகளுக்கு இருந்தது போல தலைகளைக் கொண்டிருந்தது" (UDB) அல்லது 2. அவைகளின் வால்கள் ஒல்லியாகவும் முனையில் பெரியதாகவும் பாம்புக்கு ஒத்தாற்போல இருந்திருக்கிறது."

Revelation 9:20-21

இந்த வாதைகளால் கொல்லப்படாதவர்கள்

"வாதை கொல்லாதவர்கள்"

பார்க்க முடியாத, கேட்க்க முடியாத, அல்லது நடக்க முடியாத காரியங்கள்

சிலைகள். மறு மொழிபெயர்ப்பு: "உயிரற்ற பொருட்கள்"

Revelation 10

Revelation 10:1-2

Revelation 10:3-4

Revelation 10:5-7

என்றென்றைக்கும், எப்பொழுதும் ஜீவிக்கிறவர்

"இவர்" தேவனைக் குறிக்கிறது.

அதில் இருக்கிற அனைத்தும் (3 முறை)

இது நிலத்திலும் கடலிலும் அல்லது நிலத்திலும் வாழும் தாவரங்களையும், மிருகங்களையும், மனிதர்களையும் குறிக்கிறது.

நிறைவேற்றப்படும்

"நடக்கப்போகிறது"

Revelation 10:8-9

நான்

இது யோவானைக் குறிக்கிறது

கசப்பு

இது புத்தகத்தின் செய்தியானது சங்கடப்படுத்துவதாகவும் அசவுகரியப்படுத்துவதாகவும் இருக்கும் என்று அர்த்தம் கொடுக்கிறது.

Revelation 10:10-11

Revelation 11

Revelation 11:1-2

எனக்குக் கொடுக்கப்பட்டது ...எனக்கு சொல்லப்பட்டது

"எனக்கு" மற்றும் "எனக்கு" என்ற வார்த்தைகள் யோவானைக் குறிக்கிறது.

மிதிக்கப்பட்டு

ஒரு பொருள் மீது நடப்பதினால் அப்பொருள் மதிப்பில்லாததைப் போல நடத்துவது.

நாற்பத்தி இரண்டு மாதங்கள்

மறு மொழிபெயர்ப்பு: "42 மாதங்கள்"

Revelation 11:3-5

இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு குத்து விளக்குகளுமே அந்த இரண்டு சாட்சிகள்

இந்த இரண்டு சாட்சிகள் முன்பதாகவே ஒலிவ மரங்களாகவும் குத்துவிளக்குகளாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Revelation 11:6-7

எல்லா வகையான வாதைகளாலும் பூமியை வாதித்து

பூமியில் நடைபெறவேண்டிய எல்லா கஷ்டங்களையும் ஏற்படுத்துவதை இந்த பதம் குறிக்கிறது.

ஆழமும் முடிவில்லாததுமான

"முடிவில்லாததுமான" என்ற வார்த்தை கீழ்ப்பாகம் இல்லாதது என்று அர்த்தம். இந்த இரண்டு வார்த்தைகளும் குழி மிகவும் ஆழமாய் இருக்கிறதைக் குறிக்கிறது. முடிவில்லாத ஆழம்

Revelation 11:8-9

மூன்றரை நாட்கள்

"3 முழு நாட்களும் ஒரு அரை நாளும்" அல்லது "3.5 நாட்கள்" அல்லது 31/2 நாட்கள்"

Revelation 11:10-12

மூன்றரை நாட்கள்

"3 முழு நாட்களும் ஒரு அரை நாளும்" அல்லது "3.5 நாட்கள்" அல்லது 31/2 நாட்கள்"

Revelation 11:13-14

ஏழாயிரம் மக்கள்

"7,000 மக்கள்"

Revelation 11:15

Revelation 11:16-17

இருபத்திநான்கு மூப்பர்கள்

“24 மூப்பர்கள்"

அவர்கள் முகங்கள் கீழாக

முழு உடலின் முன் பாகத்தையும் "முகம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Revelation 11:18

உம்முடைய உக்கிரம்...உம்முடைய ஊழியர்கள்...உம்முடைய நாமம்

"உம்முடைய" என்ற வார்த்தை தேவனைக் குறிக்கிறது.

முக்கியமல்லாத

மறு மொழிபெயர்ப்பு: "கீழான" அல்லது "தாழ்ந்த" அல்லது "அந்தஸ்த்தில் குறைவான"

Revelation 11:19

Revelation 12

Revelation 12:1-2

வானத்தில் ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "ஒரு பெரிய அடையாளம் வானத்தில் தோன்றியது" அலல்து "யோவானாகிய நான் வானத்தில் ஒரு பெரிய அடையாளத்தைக் கண்டேன்"

சூரியனை உடுத்தியிருந்த ஒரு பெண்

மறு மொழிபெயர்ப்பு: "சூரியனை உடுத்தியிருந்த பெண்"

பன்னிரண்டு நட்சத்திரங்கள்

12 நட்சத்திரங்கள்.

Revelation 12:3-4

வலு சர்ப்பம்

ஒரு பெரிய மூர்க்கமான பல்லியைப் போன்ற ஊரும் பிராணி. யூதர்களுக்கு இது தீமை மற்றும் குழப்பத்தின் அடையாளமாயிருந்தது.

Revelation 12:5-6

அவளுடைய குழந்தை தேவனுக்காகப் பிடுங்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் அவளுடையக் குழந்தையை தன்னிடம் துரிதமாக எடுத்துக்கொண்டார்."

Revelation 12:7-9

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். வசனம் 9 இல் வலு சர்ப்பமானது "பிசாசாகவும் அல்லது சாத்தானாகவும்" அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய வலு சர்ப்பம்...பூமியில் வீசப்பட்டது...அவருடைய தூதர்கள்

மறு மொழிபெயர்ப்பு: தேவன் பெரிய வலு சர்ப்பத்தையும் அவனுடைய தூதர்களையும் பரலோகத்துக்கு வெளிய வீசி அவைகளை பூமிக்கு அனுப்பினார்.

Revelation 12:10

நான்

இது யோவானைக் குறிக்கிறது.

இரவும் பகலும்

"இரவும் பகலும்" என்ற வார்த்தைகள் எல்லா நேரத்தையும் குறிக்க சேர்த்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது; அவன் சகோதரர்களை தொடர்ந்து குற்றப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

Revelation 12:11-12

சாத்தானால் பாவத்தில் குற்றப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த கிறிஸ்துவின் விசுவாசிகளைக் குறித்து வானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது.

Revelation 12:13-14

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

வலு சர்ப்பம் தான் பூமியில் வீசப்பட்டதை உணர்ந்தது

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் தன்னை வானத்திலிருந்து வீசி பூமிக்கு அனுப்ப்பினார் என்பதை உணர்ந்திருந்தது.

நேரம், நேரங்கள், பகுதி நேரம்

மறு மொழிபெயர்ப்பு: "3.5 வருடங்கள்" அல்லது "3 1/2 வருடங்கள்" அல்லது "மூன்று முழு வருடங்களும் ஒரு பாதி வருடமும்"

Revelation 12:15-17

சர்ப்பம்

12:9 ன்படி இது வலு சர்ப்பத்தைப் போன்ற ஒரு ஜீவராசியே.

நதியைப் போல

மறு மொழிபெயர்ப்பு: "பெரிய அளவில்"

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

வலு சர்ப்பம் தனது வாயிலிருந்து ஊற்றின நதியை இது தன் வாயைத் திறந்து விழுங்கினது.

மறு மொழிபெயர்ப்பு: "நிலத்தில் ஒரு துவாரம் திறந்தது. பின்னர் தண்ணீர் அந்த துவாரத்தின் வழியே சென்றது."

Revelation 13

Revelation 13:1-2

பின்பு நான் கண்டேன்

இங்கு "நான்" யோவானைக் குறிக்கிறது.

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 13:3-4

ஆனால் அந்த புண் ஆற்றப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "ஆனால் அந்தப் புண் ஆறியது"

மிருகத்தைத் தொடர்ந்தது

"மிருகத்துக்குக் கீழ்ப்படிந்து"

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

யார் அதை எதிர்த்து சண்டை பண்ணுவது?

மறு மொழிபெயர்ப்பு: "மிருகத்துக்கு தேராக சண்டைபண்ணி யாரும் வெற்றி பெற முடியாது!"

Revelation 13:5-6

மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது...அவன் அனுமதிக்கப்பட்டிருந்தான்

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் மிருகத்துக்குக் கொடுத்தார்...தேவன் மிருகத்தை அனுமதித்திருந்தார்."

நாற்பத்தி இரண்டுமாதங்கள்

“42 மாதங்கள்"

அவருடைய நாமத்தை கெடுத்து

மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய நற்பெயரை அல்லது சுபாவத்தைக் கெடுத்து"

Revelation 13:7-8

மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது...அவன் அனுமதிக்கப்பட்டிருந்தான்

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் மிருகத்துக்குக் கொடுத்தார்...தேவன் மிருகத்தை அனுமதித்திருந்தார்."

நாற்பத்தி இரண்டுமாதங்கள்

“42 மாதங்கள்"

அவருடைய நாமத்தை கெடுத்து

மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய நற்பெயரை அல்லது சுபாவத்தைக் கெடுத்து"

Revelation 13:9-10

காதுள்ளவன் எவனோ

தேவனுடைய செய்தியைப் புரிந்துகொள்ளும்படி கேட்க திராணி உடைய என்று பொருள்படுகிறது. காதுள்ளவன் கேட்கக்கடவது.

Revelation 13:11-12

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

பூமியையும் அதில் வாழுகிறவர்களையும் ...செய்ய

"பூமியில் இருக்கிற அனைவரையும் ...செய்ய"

பயங்கரமான புண் குனமாக்கப்பட்டவன்

மறு மொழிபெயர்ப்பு: "குணமாக்கப்பட்ட பயங்கரமான புண் உடையவன்."

Revelation 13:13-14

அவன் செய்தான்

"பூமியிலிருந்து வந்த மிருகம் செய்தது"

வாளால் காயப்படுத்தப்பட்டவன்

மறு மொழிபெயர்ப்பு: "யாரோ ஒருவனால் வாளால் காயம்பட்டவன்"

Revelation 13:15-17

அவன் அனுமதிக்கப்பட்டன

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் பூமியிலிருந்துவந்த மிருகத்தை அனுமதித்தார்"

அந்த சொருபத்துக்கு சுவாசம் கொடுக்க

ம. மொ.

"சொருபத்துக்கு உயிர் கொடுக்க"

மிருகத்தை வணங்க மறுத்த அனைவரையும் கொலை செய்ய

ம.மொ. "மிருகத்தை வணங்க தவிர்க்கிற யாரையும் கொலை செய்ய"

Revelation 13:18

மனிதனின் இலக்கம் இது

சாத்தியமான அர்த்தங்கள் 1. இலக்கம் ஒரு மனிதனைக் குறிக்கலாம். அல்லது 2. எல்லா மனிதக் குலத்தையும் குறிக்கலாம்.

666

"அறுநூற்று அறுபத்தாறு"

Revelation 14

Revelation 14:1-2

நான் பார்த்தேன்

இங்கு "நான்" யோவானைக் குறிக்கிறது.

ஆட்டுக்குட்டியானவர்

இது ஏசுவைக் குறிக்கிறது. 5:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

144,000

7:4.இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

தங்களுடைய நெற்றிகளில் அவருடைய பெயரையும் அவருடைய தகப்பனுடையப் பெயரையும் எழுதப்பட்டிருந்தது

ம. மொ. "ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய தகப்பனும் தங்களது பெயர்களை அவர்களுடைய நெற்றிகளில் எழுதினர்."

Revelation 14:3-5

அவர்கள் பாடினர்

"144,000 பேர் பாடினர்"

இவர்களே தங்களை பெண்களால் கறைபடுத்திக்கொள்ளாதவர்கள்

" ம.மொ. "அந்த 144,000 பேர் கர்ப்பில் தூய்மையாய் இருக்கும் கன்னிகைகளைப் போல ஆவிக்குரிய தூய்மை உடையவர்கள். பொய் தெய்வங்களை வணங்கி தங்களை கறைபடுத்தாதவர்கள்."

Revelation 14:6-8

Revelation 14:9-10

தேவனுடையக் கோபாக்கினையாகிய மதுவைக் குடிப்பார்கள்

இங்கு "மதுவைக் குடி" என்பது தேவனுடைய கோபாக்கினையை அனுபவி என்று அர்த்தப்படுகிறது.

ஆயத்தமாக்கப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "தேவன் ஆயத்தம் பண்ணின"

கோபக் கலசம்

தேவனுடையக் கோபத்தைக் குறிக்கும் மதுவால் கலசம் நிரப்பப்பட்டிருக்கிறது.

கலப்படமில்லாமல் ஊற்றப்பட்டு

தண்ணீரால் கலக்கப்படாத மதுவை இது குறிக்கிறது. இது, அவர்கள் தேவனுடைய் கோபத்தை முழுவதும் அனுபவிப்பார்கள் என்று அர்த்தப்படுகிறது.

அவருடைய பரிசுத்த தூதர்கள்

"தேவனுடைய பரிசுத்த தூதர்கள்"

Revelation 14:11-12

அவர்களுடைய துன்புறுத்தலிலிருந்து

"அவர்களுடைய தொடர்

வேதனையிலிருந்து"

Revelation 14:13

அவர்களுடையக் கிரியைகள் அவர்களைத் தொடரும்

ம.மொ. "தேவன் அவர்களுடையக் கிரியைகளுக்கு அவர்களுக்கு பதில் செய்வார்."

Revelation 14:14-16

மனுஷக் குமாரனுக்கு ஒப்பானவர்

1:13 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

வளைந்த வாள்

புல்லையும் தானியத்தையும் திராட்சைக் குலைகளையும் அறுக்கப் பயன்படும் வளைந்த அரிவாள்.

ஆலயத்திலிருந்து வெளியே வந்து

"பரலோக ஆலயத்திலிருந்து வெளியே வந்த"

பூமி அறுவடை செய்யப்பட்டது

ம.மொ. அவர் பூமியை அறுவடை செய்தார்."

Revelation 14:17-18

பூமியின் எல்லா மனிதற்குமான தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்த உவமையை இது தொடர்கிறது.

Revelation 14:19-7

பூமியின் எல்லா மனிதர்க்குமான தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்த உவமையை இது தொடர்கிறது.

பெரிய மது ஆலை...மது உற்பத்தி ஆலை

இது அதே கிடங்கைக் குறிக்கிறது.

கடிவாளம்

குதிரையை இயக்குவதற்காக குதிரையின் தலையைச் சுற்றி கட்டப்படும் ஒரு கருவி.

Revelation 14:8-20

விழுந்த, விழுந்த

இந்த வார்த்தை திரும்ப சொல்லப்பட்டது அழுத்தி சொல்லுவதற்காக.

விழுந்த...அவள் மீது மிகுந்த கோபாக்கினையை வருவித்து

"பாபிலோனால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மிகவும் தீமையான நகரங்கள் (அல்லது நகரம்) எல்லாம் முழுவதும் அளிக்கப்பட்டது! தேவன் அவைகளின் மனுஷரை தண்டித்தார்; ஏனென்றால், எப்படி ஒரு விபச்சாரி மனிதர்களை காட்டமான மதுவைக் குடிக்கச் செய்து பிரதிபலானாக விபச்சாரம் செய்ய வைப்பாளோ அது போல அவர்கள் எல்லா ஜாதி மக்களையும் தேவனை மறுதலிக்கத் தூண்டினர்."

Revelation 15

Revelation 15:1

பின்பு நான் கண்டேன்...நிறைவேற்றப்பட்டது

இங்கு 15:2

16:21 இல் என்ன நடக்க இருக்கிறதோ அதற்கான ஒரு சிறு குறிப்புதான் 15:1 ஆம் வசனம்.

பெரியதும் மகத்துவமுமான

ம.மொ. "மிகவும் என்னை ஆச்சரியப்படுத்தின ஒரு காரியம்" அவர்களோடு தேவனுடையக் கோபாக்கினை நிறைவேற்றப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு: "இந்த வாதைகள் தேவனுடையக் கோபாக்கினையை நிறைவேற்றியது."

Revelation 15:2

Revelation 15:3-4

உங்களுடைய நீதியான கிரியைகள் அறியப்பட செய்யப்பட்டது

ம.மொ. "எல்லாரும் உங்களுடைய நீதீயானக் கிரியைகளை பார்த்தும் அறிந்தும் இருக்கிறார்கள்."

Revelation 15:5-6

இந்தக் காரியங்களுக்குப் பிறகு

"மக்கள் பாடி முடித்தப் பிறகு"

சாஷ்

மேல் உடம்பில் அணியப்படும் ஒரு அலங்காரத் துணி.

Revelation 15:7-8

குறிப்புகள்:

நான்கு ஜீவராசிகள்

4:6. இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 16

Revelation 16:1

நான் கேட்டேன்

ஆசிரியர் யோவான் (1:9) கேட்டார்.

தேவனுடையக் கோபாக்கினையின் கலசம்

15:7 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். தேவனுடைய கோபம்

Revelation 16:2

அவனுடைய கலசத்தை ஊற்றினான்

ம.மொ. "தன்னுடைய கலசத்திலிருந்த மதுவை ஊற்றினான்" அல்லது "தன்னுடயக் கலசத்திலிருந்த தேவனுடையக் கோபாக்கினையை ஊற்றி"

வேதனை மிகுந்த கொப்பளங்கள்

"வேதனைமிகுந்த புண்கள்." இது ஆறாத புண்களிலிருந்தோ அல்லது காயங்களிலிருந்தோ வந்த தொற்றாயிருக்கலாம்.

மிருகத்தின் அடையாளம்

13:17.இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 16:3

தன்னுடைய கலசத்தை ஊற்றி

16:2 இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

சமுத்திரம்

உலகத்தின் எல்லா உப்பு நீர் நிலைகளையும் குறிக்கிறது.

மரித்துப்போன ஒருவனின் ரத்தம் போல

தண்ணீர் சிவப்பாகவும் கெட்டியாகவும் நாற்றமெடுக்கிறதாகவும் மாறிற்று என்று பொருள்படுகிறது.

Revelation 16:4-7

தன்னுடைய கலசத்தை ஊற்றி

16:2 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

ஆறுகளும் நீர் ஊற்றுகளும்

எல்லா நல்ல நீர் நிலைகளையும் குறிக்கிறது.

தண்ணீர்களின் தூதன்

இது மூன்றாம் தூதனைக் குறிக்கிறது. இவன் தேவனுடையக் கோபாக்கினையை ஆறுகளின் மேலும் நீர் ஊற்றுகளின் மேலும் ஊற்ற அதிகாரம் உடையவனாயிருந்தான். நீர்

"நீர்" தேவனைக் குறிக்கிறது

நீங்கள் தான்

"நீங்கள்" என்பது தேவனை குறிக்கிறது. (பார்க்க: நீங்கள் பதங்கள்)

இருந்தவரும் இருக்கிறவரும்

1:4. இல் இது போன்றதொரு கூற்றை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். எப்பொழுதும் கூட இருப்பவர்

உம்முடைய பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் ரத்தத்தை சிந்தினவர்கள்

ம.மொ. "பரிசுத்தவான்களையும் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்த தீய மனிதர்கள்."

நீர் அவர்களுக்குக் குடிக்க ரத்தம் கொடுத்தீர்

தேவன் அந்த தீய மனிதர்களை தான் ரத்தமாக மாற்றிய தண்ணீரைக் குடிக்கச் செய்வார்."

நான் பலிபீடம் பதில் சொன்னதைக் கேட்டேன்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "பலிபீடத்தின் அருகில் இருந்த தூதன் சொன்னதைக் கேட்டேன்" அல்லது 2.. "பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் பலிபீடத்தின் அடியிலிருந்து சொன்னதைக் கேட்டேன்."

Revelation 16:8-9

அவனுடைய கலசத்தை ஊற்றினான்

16:2 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

மக்களை சுட்டெரிக்க அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது

யோவான் சூரியனை ஒரு மனிதனைப் போல பாவித்து சொல்லுகிறார். ம.மொ. "மக்களை மிகவும் அதிகமாக சுட்டெரிக்கும்படி சூரியனை ஏவி"

கொடிய சூட்டினால் வாதிக்கப்பட்டார்கள்

ம.மொ. "தாங்கமுடியாத சூடு அவர்களை எரித்தது."

தேவனுடைய நாமத்தை தூஷித்தார்கள்

ம.மொ. "அவர்கள் தேவனை தூஷித்தார்கள்"

Revelation 16:10-11

தன கலசத்தில் இருந்ததை ஊற்றி

16:2 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.கலசத்தில் இருந்த தேவ கோபாக்கினையை ஊற்றி

மிருகத்தின் சிங்காசனம்

மிருகத்தின் வல்லமையின் மையம், அநேகமாக ராஜ்யத்தின் தலைநகரமாய் இருக்கக்கூடும்.

அவர்கள் பற்கடித்தனர்

மிருகத்தின் ராஜ்யத்தில் இருந்தவர்கள் பற்கடித்தனர்.

அவர்கள் வெட்கப்படுத்தினர்

"அவர்கள் சபித்தனர்"

Revelation 16:12-14

ஐபிராத்தும், அதின் தண்ணீரும் வற்றியது

ம.மொ. "ஐபிராத் மற்றும் தண்ணீரை வற்றிப் போகச் செய்தது" தவளைகளைப் போல இருந்தது

தவளை தண்ணீர் அருகில் வாழும் ஒரு சிறிய பிராணி. # யூதர்கள் அவைகளை அசுத்தமானவைகளாகக் கருதினர்.

வலு சர்ப்பம்

12:3 இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 16:15-16

நான் ஒரு திருடன் போன்றவர்

3:3 இல் இதே மாதிரியான கூற்றை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். நான் திருடனைப் போல வருவேன்

அவனுடைய வெட்கக்கேடான நிலைமையை பார்க்கிறார்கள்

"அவர்கள்" என்ற வார்த்தை இங்கு மக்களைக் குறிக்கிறது.

அவர்கள் அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தனர்

"பிசாசுகளின் ஆவிகள் ராஜாக்களையும் அவர்களுடைய சேனைகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தனர்"

அந்த இடம் இவ்வாறு அழைக்கப்பட்டது

"மக்கள் அழைக்கும் இடம்"

அர்மெகேதொன்

இது அந்த இடத்தின் பெயர்.

Revelation 16:17-19

தேவன் பாபிலோனை முழுவதுமாக அழித்தார்.

அவனுடைய கலசத்தை ஊற்றி

16:2 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும். கலசத்தில் இருந்த தேவ கோபாக்கினையை ஊற்றி.

மகாப்பரிசுத்த ஸ்தலத்திலிருந்தும் சிங்காசனத்திலிருந்தும் ஒரு பெரிய சத்தம் வந்தது

யாரோ ஒருவர் சிங்காசனத்தில் அமர்ந்தோ அல்லது அதின் அருகிலிருந்தோ சத்தமாக பேசினதாக அர்த்தப்படுகிறது. யார் பேசுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

பெரிய நகரம் பிரிக்கப்பட்டது

ம.மொ. "பூமி அதிர்ச்சி பெரிய நகரத்தை பிரித்தது"

தேவன் தம்முடைய நினைவுக்குக் கொண்டுவந்தார்

"பின்பு தேவன் நினைந்தருளினார்" அல்லது "பின்பு தேவன் நினைத்தார்"

தம்முடைய உக்கிர கோபத்திலிருந்து செய்யப்பட்ட மதுவை அந்த நகரத்துக்குக் கொடுத்தார்

தேவன் பயங்கரமாக மக்களைத் தண்டித்து அவர்களை மோசமாக கஷ்டப்பட செய்தார்.

அவர் நகரத்துக்கு கலசத்தைக் கொடுத்தார்

"அவர் அந்த நகரத்தை அந்த கலசத்திலிருந்து குடிக்கும்படி கட்டாயப்படுத்தினார்"

லிருந்து தயாரிக்கப்பட்ட மது

ம.மொ. "குறிக்கும் மது"

Revelation 16:20-21

Revelation 17

Revelation 17:1-2

Revelation 17:3-5

முத்து

வழுவழுப்பானதும் கெட்டியானதும் வெண்மையானதுமான உருள்மணி

Revelation 17:6-7

ரத்தம் குடித்த

அவள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் அநேகரைக் காயப்படுத்தி கொலைசெய்தாள் என்று இது அர்த்தப்படுகிறது.

ரத்த சாட்சிகள்

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்ததற்காக மரித்தவர்கள்.

ஏன் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்?

"நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது."

Revelation 17:8

தூதன் யோவானோடு பேசுவதைத் தொடர்ந்தான்.

தங்கள் பெயர் எழுதப்படாதவர்கள்

ம.மொ. "இயேசு எழுதாத பெயர்கள்"

Revelation 17:9-10

தூதன் யோவானோடு பேசுவதைத் தொடர்ந்தான்.

அந்தப் பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகள்

இங்கு, "அமர்ந்திருக்கும்" என்பது அந்த இடங்களின் மீதும் அந்த மக்களின் மீதும் அவள் அதிகாரம் கொண்டிருந்தாள் என்று அர்த்தப்படுகிறது.

Revelation 17:11

தூதன் யோவானோடு பேசுவதைத் தொடர்ந்தான்.

Revelation 17:12-14

தூதன் யோவானோடு பேசுவதைத் தொடர்ந்தான்.

Revelation 17:15

நீ பார்த்த தண்ணீரே விபச்சாரியானவள் அமர்ந்திருந்த இடம்

17:1 இல் உள்ள இதே மாதிரியான கூற்றை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

மக்கள், திரள் கூட்டம், ஜாதிகள், மொழிகள்

இந்த எல்லா வார்த்தைகளும் ஒரே மாதிரியான அர்த்தங்கள் கொண்டுள்ளதென்றாலும், குறிபிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்தவே. ம.மொ. "உலகத்தின் மக்கள் அனைவரும்"

Revelation 17:16-17

தூதன் யோவானோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தான்.

அவளை அவாந்தரமாகவும் நிர்வாணமாகவும் ஆக்கி

"அவள் வைத்திருக்கும் அனைத்தையும் திருடி அவளை ஒன்றுமில்லாமல் விட்டுவிடுங்கள்"

அவளுடைய மாமிசத்தை துவம்சம்செய்து அவளை முற்றிலும் அக்கினியால் அவர்கள் எரிப்பார்கள்

இந்த இரண்டு கூற்றுகளும் அவளை முழுவதும் அழிப்பதைக் குறிக்கிறது.

தேவனுடைய வார்த்தைகள் நிறைவேறும்வரை

ம.மொ. "தான் நடக்கும் என்று சொன்னவைகளை தேவன் நிறைவேற்றும்வரை"

Revelation 17:18

தூதன் யோவானோடு பேசுவதைத் தொடர்ந்தான்.

Revelation 18

Revelation 18:1-3

அருவருக்கத்தக்க பறவை

"அருவருப்பான பறவை" அல்லது "வெறுக்கத்தக்க பறவை"

எல்லா ஜாதிகளுக்கும்

இந்த பதம் ஒவ்வொரு நாட்டின் மக்களையும் குறிக்கிறது.

மதுவைக் குடித்து...அவளோடு விபச்சாரம் செய்து

மற்ற நாடுகளின் ஜனங்கள் பாபிலோன் நகரத்தோடு சேர்ந்துகொண்டு அவளின் பாவங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

அது அவளுக்கு ஆக்கினையைக் கொண்டு வந்தது

"அது தேவன் அவர்களைத் தண்டிக்க எதுவாயிருந்தது"

வியாபாரி

பொருள்களை விற்பவன்

உடைய வல்லமையினால்

ம.மொ. "அவள் தன்னுடைய ஆடம்பரத்தில் அதிக பணம் செலவு செய்ததினால்"

Revelation 18:4-6

Revelation 18:7-8

பரலோகத்திலிருந்து வந்த சத்தம் பேசுவதைத் தொடர்ந்தது

அவள் தன்னைத் தானே மகிமைப்படுத்தினாள்

"பாபிலோனின் மக்கள் தங்களைத் தாங்களே மகிமைப்படுத்தினார்கள்."

அவள் அக்கினியால் விழுங்கப்படுவாள்

ம.மொ. "அக்கினி அவளை முழுவதும் எரித்துப்போடும்"

Revelation 18:9-10

அவளோடு விபச்சாரம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் போனவர்கள்

"பாபிலோன் மக்கள் செய்தது போல ராஜாக்களும் அவர்கள் மக்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து எதிர்த்தார்கள்.

ஆபத்து, ஆபத்து

இது அழுத்தி சொல்லுவதற்க்காக திரும்ப சொல்லப்பட்டுள்ளது.

Revelation 18:11-13

அவளுக்காகத் துக்கம்கொண்டாடுங்கள்

"பாபிலோன் மக்களுக்காக துக்கம்கொண்டாடுங்கள்"

பளிங்கு

கட்டிடங்களுக்காக உபயோகிக்கப்படும் விலைமதிப்புள்ள கல்

நறுமண சுவையூட்டு

உணவுக்கு சுவைக் கூட்டும் சாதனம்

Revelation 18:14

நீங்கள் ... கனி

இங்கு "நீங்கள்" பாபிலோனின் மக்களைக் குறிக்கிறது.

உங்கள் முழு பலத்தோடு ஏங்கின

"மிகவும்வும் விரும்பிய"

ஒருபோதும் காணப்படாது

ம.மொ. "அவர்களை ஒருபோதும் நீங்கள் காணமாட்டீர்கள்"

Revelation 18:15-17

அலங்கரித்து

ம.மொ. "அவர்கள் தங்களைத் தாங்களே அலங்கரித்துக்கொண்டார்கள்" அல்லது "அவர்கள் அணிந்தார்கள்"

விலையேறப்பெற்ற நகைகள்

"விலைமதிப்புள்ள ரத்தினங்கள்" அல்லது "பொக்கிஷமாக்கப்பட்ட ரத்தினங்கள்"

முத்துகள்

17:4. எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 18:18-20

அவள் (பாபிலோன் )எரிகிற

"அவள்" பாபிலோன் நகரத்தைக் குறிக்கிறது.

இந்த பெரிய நகரத்தைப் போல ஒரு நகரம் எது?

ம.மொ. "இந்த பெரிய நகரமான பாபிலோனைப் போல ஒரு நகரமும் இல்லை."

Revelation 18:21-22

Revelation 18:23-24

தூதன் யோவானோடு பேசிக்கொண்டிருந்ததைத் தொடரந்தான்.

Revelation 19

Revelation 19:1-2

நான் கேட்டேன்

"நான்" இங்கு யோவானைக் குறிக்கிறது.

அல்லேலுயா

இந்த வார்த்தை "தேவனைத் துதி" அல்லது "நான் தேவனைத் துதிப்போம்" இரு அர்த்தப்படும்.

பெரிய விபச்சாரியானவள்

பொய்யான தெய்வங்களை ஆராதிக்கும்படி மக்களை வழிநடத்தின பூமியில் உள்ள மக்களை ஆளும் அநீதியான மக்களை இது குறிக்கிறது.

பூமியைக் கெடுத்தவர்கள்

ம.மொ. "பூமியின் மக்களை கெடுத்தவர்கள்."

Revelation 19:3-4

அல்லேலுயா

19:1 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

என்றென்றைக்கும் எப்பொழுதும் அவளிடமிருந்து

"என்றென்றைக்கும் எப்பொழுதும் விக்கிரக ஆராதனைக்காரர்களிடமிருந்து." ம.மொ: "தங்களுக்குள்ளாக விபச்சாரம் செய்தவர்கள் என்றென்றைக்கும் எப்பொழுதும் துன்பப்படுவார்கள்."

இருபத்துநான்கு மூப்பர்கள்

24 மூப்பர்கள்

Revelation 19:5

நம்முடைய தேவனைத் துதிப்போம்

இங்கு "நம்முடைய" என்பது பேசுபவரையும் மற்றும் எல்லா தேவனுடைய ஊழியர்களையும் குறிக்கும்.

முக்கியமல்லாதவர்களும் வல்லமைப் படைத்தவர்களும்

இந்த இரண்டு வார்த்தைகளையும் எல்லா தேவனுடைய மக்களையும் குறிக்கவே பேசுகிறவர் பயன்படுத்துகிறார்.

Revelation 19:6

அல்லேலுயா

19:1 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 19:7-8

முந்தின வசனத்தில் ஆரம்பத்த பாடல் இங்கு தொடர்கிறது

நாம் கொண்டாடுவோம்

இங்கு''நாம்''தேவனுடைய எல்லா ஊழியர்களையும் குறிக்கிறது # அவருக்கு மகிமை செலுத்துங்கள்

தேவனுக்கு மகிமை செலுத்துங்கள் # ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விசேஷம்....அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம் செய்துகொண்டாள்

இது நம்முடைய மக்களோடு இயேசுவின் நிலையான இணைப்பைக்குறிக்கிறது

ஆட்டுக்குட்டியானவர்

5:6இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்

Revelation 19:9-10

ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்து

இந்தக் கல்யாணம் தம்முடைய மக்களோடு இயேசுவின் என்றென்றைக்குமான இணைப்பைக் குறிக்கிறது.

முகங்குப்புற விழுந்தேன் நான்

முகங்குப்புற விழுகிறது என்னவென்றால் ஒருவன் தன்னைத் தரையில் கிடத்தி, முகத்தைத் தாழ்த்தி மரியாதையையும் சேவை செய்ய விருப்பத்தையும் தெரிவிப்பதாகும். 19:3 இல் உள்ள குறிப்பைப் பார்க்கவும்.

Revelation 19:11-13

பின்பு நான் வானம் திறப்பதைப் பார்த்தேன்

இந்த வெளிப்பாடு ஒரு புதிய தரிசனத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இந்த யோசனையை 15:5 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

அவர் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட அங்கியை அணிந்திருந்தார்

ம.மொ."அவர் ரத்தத்தால் கறையான அங்கியை அணிந்திருந்தார்" அல்லது "அவர் ரத்தம் சொட்டுகிற அங்கியை அணிந்திருந்தார்"

Revelation 19:14-16

அவர் வாயிலிருந்து கூர்மையான வாள் போகிறது

1:16 இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

ஜாதிகளை அழித்து

"நாடுகளை அழித்து" அல்லது "நாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து"

இரும்பு கம்பால் (கோலால்)அவர்களை ஆளுகை செய்து

12:5இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

ஒரு பெயரை தனது அங்கியிலும் தொடையிலும் எழுதியிருந்தார்

ம.மொ. "அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் தான் பெயர் இருந்தது."

Revelation 19:17-18

சுயாதீனரும் அடிமையும், முக்கியமல்லாதவரும், வல்லமைபடைத்தவரும்

எல்லா மனுஷரையும் குறிக்க தூதன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

Revelation 19:19-20

Revelation 19:21

மீதமுள்ள மற்றவர்கள்

"மிருகத்தின் சேனையையைத் தவிர உள்ளவர்கள்

வாயிலிருந்து புறப்பட்டு வந்த வாள்

1:16 இல் இதை எவ்வாற மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

Revelation 20

Revelation 20:1-3

பின்பு நான் கண்டேன்

இங்கு "நான்" யோவானைக் குறிக்கிறது.

ஆழமும் முடிவில்லாத குழியும்

9:1 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.முடிவில்லா ஆழம்

வலு சர்ப்பம்

12:3 இல் இதை எவாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

ஓராயிரம் ஆண்டுகள்

"1000 ஆண்டுகள்"

அவன் விடுதலையாக்கப்படவேண்டும்

ம.மொ. "தேவன் அவனை விடுவிக்கும்படி தூதனுக்குக் கட்டளையிடுவார்"

Revelation 20:4

சிரச்சேதம் செய்யப்பட்டவன்

ம.மொ. "மற்றவர்களால் தலை வெட்டப்பட்டவர்கள்"

Revelation 20:5-6

மரித்த மற்றவர்கள்

"மற்ற எல்லா செத்துப்போன மக்கள்"

ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தது

"1OO0 ஆண்டுகளின் முடிவு" இவைகளைப் போல இருக்கிறவைகளின் மீது இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை

# இங்கு "மரணத்தை" யோவான் வல்லமையுடைய ஒரு மனிதனுக்கு ஒப்பாக்குகிறார். ம.மொ. "இந்த மக்கள் இரண்டாம் மரணத்தை அனுபவிக்கமாட்டார்கள்"

இரண்டாம் மரணம்

2:11 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 20:7-8

பூமியின் நான்கு திசைகளிலும்

7:1

3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்தீர்கள் என்று பார்க்கவும்.

கோகு மற்றும் மாகு

தீர்க்கதரிசி எசேக்கியேல் இந்தப் பெயர்களைக் கொண்டு தான் தூர தேசங்களைக் குறிப்பிடுவார்.

கடலின் மணலத்தனையாய் இருப்பார்கள்

இது ஒரு மிகப் பெரிய சாத்தானின் சேனையின் பெரிய எண்ணிக்கையை உறுதிப்படுத்திகிறது.

Revelation 20:9-10

அவர்கள் சென்றார்கள்

"சாத்தானின் சேனை சென்றது"

எரிகின்ற அக்கினிக் கடல்

"19:20 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 20:11-12

வானமும் பூமியும் அவரது சமூகத்திலிருந்து விலகியது, ஆனால் அவர்களுக்குப் போக இடமில்லை

யோவான் வானத்தையும் பூமியையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு மனிதனாக விவரிக்கிறது. இது, தேவனுடைய சமூகம் பழைய வானத்தையும் பூமியையும் முழுவதுமாக அழித்தது, என்பதைக் குறிக்கிறது.

பலமுள்ளவர்கள் முக்கியமல்லாதவர்கள்

யோவான் இந்த இரண்டு வார்த்தைகளையும் மரித்த யாவரையும் குறிக்கவே பயன்படுத்துகிறார்.

புத்தகங்கள் திறந்திருக்கிறது

ம.மொ. "பின்னர் புத்தகங்கள் திறக்கப்பட்டது"

Revelation 20:13-15

மரித்தவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டார்கள்

ம.மொ. "தேவன் மரித்தவர்களை நியாயம் தீர்த்தார்."

இரண்டாம் மரணம்

2:11 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

Revelation 21

Revelation 21:1-2

நான் கண்டேன்

இங்கு "நான்" யோவானைக் குறிக்கிறது.

தனது மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல

இது புதிய எருசலேம் மிகவும் அழகாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

Revelation 21:3-4

Revelation 21:5-6

அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும் ஆனவர்

இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே மாதிரியான அர்த்தம் உள்ளவை.பின்னர் இவைகள் தேவன் நித்தியமானவர் என்பதை உறுதிப்படுத்தவே இணைக்கப்பட்டுள்ளன.

அல்பா ஒமேக

1:8 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

தாகமுள்ளவனுக்கு...ஜீவத்தண்ணீர்

உண்மையாக விரும்பும் யாருக்கும் ஜீவத்தண்ணீரை தேவன் தருவார் என்று பொருள்.

Revelation 21:7-8

கோழைத்தனமானவர்கள்

"சரியானதைச் செய்ய மிகவும் பயப்படுபவர்கள்"

அருவருக்கத்தக்கவர்கள்

"கேடானதை செய்பவர்கள்"

எரிகின்ற அக்கினிக் கடல் 19:20 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

இரண்டாம் மரணம்

2:11 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 21:9-10

மணவாட்டி, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி

இந்த உருவகம், கல்யாணமானது ஏசுவும் தனது மக்களும் பரிசுத்த நகரத்தில் என்றென்றைக்கும் இருப்பதைக் குறிக்கிறது.

ஆட்டுக்குட்டியானவர்

5:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

பின்பு அவர் என்னை ஆவியில் கொண்டுபோனார்

17:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 21:11-13

எருசலேம்

"பரலோக எருசலேம்" அல்லது "புதிய எருசலேம்"

பளிங்கு

4:6. இல் எவ்வாறு இதை மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

வச்சிரக்கல்

4:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

பன்னிரண்டு வாசல்கள்

"12 வாசல்கள்"

எழுதப்பட்டது

ம.மொ. "தேவன் எழுதினார்"

Revelation 21:14-15

ஆட்டுக்குட்டியானவர்

இது ஏசுவைக் குறிக்கிறது. 5:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 21:16-17

Revelation 21:18-20

வச்சிரக்கல்...இந்திர நீலம்...சந்திரகாந்தம்

4:3 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

மரகதம்...கோமேதகம்...பதுமராகம்...சுவர்ணரத்தினம்...படிகப்பச்சை...புஷ்பராகம்...வைடூரியம்...சுநீரம்...சுகந்தி

இவைகள் விலைமதிப்புள்ள கற்கள்

Revelation 21:21-22

முத்துக்கள்

17:4. இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

கர்த்தராகிய தேவன்...ஆட்டுக்குட்டியானவரும் அதன் ஆலயம்

ஆலயம் தேவனுடைய சமூகத்தைக் குறிக்கிறது. இது, புதிய எருசலேமுக்கு ஆலயம் தேவை இல்லை ஏனென்றால், தேவனும் ஆட்டுக்குட்டியானவும் அங்கு வாழுவார்கள், என்று அர்த்தப்படுகிறது.

Revelation 21:23-25

ஆட்டுக்குட்டியானவர் அதின் விளக்கு

இதின் அர்த்தம், இயேசுவின் மகிமை அந்த நகரத்துக்கு வெளிச்சம் தரும் என்பதாகும்.

அதின் வாசல்கள் அடைக்கப்படுவதில்லை

ம.மொ. "ஒருவனும் வாசல்களை அட்டைப்பதில்லை"

Revelation 21:26-27

ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர் மட்டும்

ம.மொ. "ஆட்டுக்குட்டியானவர் தனது ஜீவ புத்தகத்தில் யார் பெயரை எழுதியிருக்கிறாரோ அவர்கள் மட்டும்"

ஆட்டுக்குட்டியானவர்

5:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

Revelation 22

Revelation 22:1-2

எனக்குக் காண்பித்து

"இங்கு "எனக்கு" என்பது யோவானைக் குறிக்கிறது.

பளிங்கைப் போல தூய்மையாய்

4:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

ஆட்டுக்குட்டியானவர்

5:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

பன்னிரண்டு வகையான கனி

"12 வகையான கனி"

Revelation 22:3-5

அவர் ஊழியர்கள் அவருக்குப் பணிவிடை செய்வார்கள்

"அவருடைய" மற்றும் அவர்" என்பதன் சாத்தியமான அர்த்தங்கள் 1. தகப்பனாகிய தேவனைக் குறிக்கிறது, அல்லது 2. ஆட்டுக்குட்டியானவராகிய தேவனைக் குறிக்கிறது, அல்லது 3. ஒன்றாக சேர்ந்து ஆளுகை செய்யும் தகப்பனாகிய தேவனையும், ஆடுக்குட்டியானவராகிய தேவனையும் சேர்த்து குறிக்கிறது.

Revelation 22:6-7

இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்ததும் சத்தியமும் ஆனவைகள்

"21:5 இதற்கு ஒத்த கூற்றை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

பாருங்கள்! நான் சீக்கிரம் வருகிறேன்

இந்த வாக்கியத்தின் முன்பு உள்ள ஆச்சரியக் குறி பேசுகிறவர் வசனம் 6கும் 7கும் மத்தியில் மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. 7ஆம் வசனத்தில் இயேசு பேசுகிறார். UDB இல் சொல்லப்பட்டது போல.

Revelation 22:8-9

முகங்குப்புற விழுந்து

இதன் அர்த்தம், தரையில் விழுந்து நீட்டிக்கொள்ளுவது என்பதாகும். மரியாதையும் சேவைசெய்யும் விருப்பத்தையும் காண்பிக்கும்பொருட்டு, ஆராதனையின் முக்கியமான ஒரு பகுதி.

Revelation 22:10-11

அவன் என்னிடம் சொன்னான்

"தூதன் என்னிடம் சொன்னான்"

Revelation 22:12-13

அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும் ஆனவர்

இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே மாதிரியான அர்த்தம் உள்ளவை.பின்னர் இவைகள் இயேசு நித்தியமானவர் என்பதை உறுதிப்படுத்தவே இணைக்கப்பட்டுள்ளன.

அல்பா ஒமேக

1:8 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.

அல்பாவும் ஒமேகவும்

இது கலாச்சார ரீதியில் மொழிபெயர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, அல்பாவும் ஓமெகாவும் கிரேக்க எழுத்து அறியாதவர்களுக்கு இது புரியாது. அதனால் அவர்கள் மொழியில் உள்ள தகுந்த வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும்.

முதலும் முடிவும்

1:17 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்,

ஆரம்பமும் முடிவும்

21:6 இல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

Revelation 22:14-15

அவர்கள் அங்கிகளைக் கழுவி...ஜீவ விருட்சத்தின் மரத்திலிருந்து உண்டு

ஆவிக்குரிய பரிசுத்தம் உள்ளவர்கள் நித்திய ஜீவனின் கனிகளை சந்தோஷப்படக் கூடும்

தேவனோடு என்றென்றும் வாழ்வது.

வெளியே

இதன் அர்த்தம் என்னவென்றால் நகரத்தின் வெளிய அவர்கள் இருக்கிறார்கள் மற்றும் பிரவேசிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

நாய்கள்

அந்தக் கலாசச்சாரத்தில் நாய்கள் அசுத்தமும் வெறுக்கப்படும் மிருகமுமாய் இருக்கிறது. இது துன்மார்க்கமான மக்களைக் குறிக்கிறது.

Revelation 22:16

உங்களிடம் சாட்சி சொல்ல

"உங்களிடம்" என்பது பன்மையில் உள்ளது.

தாவீதின் வேரும் சந்ததியும்

"வேர்" மற்றும் "சந்ததி" என்ற வார்த்தைகள் அடிப்படையில் ஒரே அர்த்தத்தை சொல்லுகிறது. இவைகள் இயேசு தாவீதின் குடும்பத்தை சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறது.

விடிவெள்ளி நட்சத்திரம்

இது அதிகாலையில் வெளிப்படும் பிரகாசமான நட்சத்திரம் என்பதைக் குறிக்கிறது. இது விடியல் சீக்கிரம் வருகிறது என்பதைக் குறிக்கிறது. இது இயேசுவை மேசியா என்று காட்டுகிறது.

Revelation 22:17

தாகமுள்ளவன் யாராயினும்...ஜீவத்தண்ணீர்

இது என்ன அர்த்தம் என்னவென்றால் நித்திய வாழ்வை வாஞ்சிக்கிற யாராயினும் அவர்களுக்கு தேவன் இலவசமாய்க் கொடுப்பார்.

Revelation 22:18-19

நான் சாட்சியிடுகிறேன்

"நான்" யோவானைக் குறிக்கிறது.

இவைகளில் யாராயினும் சேர்க்கப்பட்டால்...யாராயினும் எடுத்துக்கொண்டால்

இது இந்த தீர்க்கதரிசனத்தைக் குறித்து எதையும் மாற்ற கூடாததுக்கான வலுவான எச்சரிக்கை.

இந்த புத்தகத்தில் அதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது

மறு மொழிபெயர்ப்பு: "இவைகளைக் குறித்து நான் இந்த புத்தகத்தில் எழுதியது"

Revelation 22:20-21

நான் சீக்கிரமாய் வருகிறேன்

இங்கு "நான்" என்பது ஏசுவைக் குறிக்கிறது.

எல்லாரும்

"உங்களில் ஒவ்வொருவனும்"