தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Ephesians

Ephesians 1

Ephesians 1:1-2

எபேசுவிலிருக்கும் சபையின் உறுப்பினர்களுக்கு பவுல் எழுதின கடிதம் இந்த புத்தகம்.

தேவனுடைய சித்தத்தினால்

"தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட" அல்லது "தேவனுடைய சித்தத்தினால்"

தேவனுக்காக பிரித்து எடுக்கப்பட்ட

"நடக்கையில் குற்றமற்ற" அல்லது "பரிசுத்தம்பண்ணப்பட்ட" அல்லது "பரிசுத்தவான்கள்." மறு மொழிபெயர்ப்பு: "பரிசுத்தவான்கள்"

கிருபை உங்களுக்கு உண்டாவதாக

"உங்களுக்கு" என்கிற வார்த்தை எபேசுவிலிருக்கும் எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

கிருபையும் சமாதானமும் உங்களோடிருப்பதாக

இது ஒரு பொதுவான வாழ்த்தும், பவுல் தனது கடிதங்களில் அடிக்கடி குறிப்பிடும் ஆசீர்வாதமும் ஆகும்.

Ephesians 1:3-4

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய தந்தையாகிய தேவன் துதிக்கப்படுவாராக

இது செய்வினை வடிவமாக வார்த்தைப்படுத்தலாம்: "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய தந்தையாகிய தேவனை நாம் துதிப்போம்."

நம்மை ஆசீர்வதித்தவர்

"நம்மை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்."

ஆசீர்வதிக்கிறார்

இது ஒரு சேர்த்துக்கொள்ளும் மாற்றுபெயர்ச்சொல். இது பவுலையும் எபேசுவில் இருக்கும் எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதமும்

"தேவனுடைய ஆவியானவரிடமிருந்து புறப்பட்டு வரும் எல்லா ஆசீர்வாதங்களும்."

நாம் பரிசுத்தமும் குற்றமற்றவர்களுமாய் இருக்க

தேவனுக்குள் நாம் பெறக்கூடிய இரண்டு குணாதிசியங்களை பவுல் இங்கு குறிப்பிடுகின்றார்.

Ephesians 1:5-6

சுவிகார புத்திரராகும்படி தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார்

"நம்மை தத்து எடுக்கும்படி தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார்"

நம்மை முன்குறித்திருக்கிறார்

"தேவன் மிகவும் முன்னமே திட்டம் பண்ணி இருக்கிறார்..." (UDB)

நம்மை முன்குறித்திருக்கிறார்

பவுல் தன்னையும் எபேசு சபையையும், கிறிஸ்துவில் உள்ள எல்லா விசுவாசிகளையும் "நம்மை" என்கிற வார்த்தையில் சேர்த்து சொல்லி இருக்கிறார்.

தத்து எடுக்கும்படி

"தத்து எடுக்க" என்பது தேவனுடைய குடும்பத்தில் வைக்கப்படுகிறதைக் குறிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் மூலமாய்

தேவன் விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் மூலமாய் தன்னுடையக் குடும்பத்தில் சேர்த்தார்.

அவர் இதை செய்தார்...அவர் பிரியப்பட்டார்...அவர் விரும்பினார்...அவருடைய மகிமையானக் கிருபை

"அவர்" மற்றும் "அவருடைய" என்பவைகள் தேவனைக் குறிக்கிறது.

அவருடைய பிரியமானவர்

"தேவனுடையப் பிரியமானவர்" இது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

Ephesians 1:7-8

அவருடைய பிரியமானவருக்குள்

"அவருடைய பிரியமானவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக"

நமக்கு மீட்பு உண்டு

"நமக்கு" என்பது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

கிருபையின் ஐசுவரியம்

"தேவனுடையக் கிருபையின் மகத்துவம்" அல்லது "அளவுகடந்த தேவனுடையக் கிருபை."

எல்லா ஞானத்தோடும் அறிவோடும்

தேவன் விசுவாசிகளுக்கு பெரிய ஞானத்தையும் அறிவையும் கொடுத்திருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "அதிக ஞானத்தையும் அறிவையும்."

Ephesians 1:9-10

திட்டத்தின் மறைக்கப்பட்ட உண்மை

"அவருடைய மறைக்கப்பட்ட திட்டம்"

அவருடைய விருப்பத்தின் படி

"அவர் விரும்புகிறபடி" (UDB)

காலங்கள் நிறைவேறின பொழுது

"எல்லாம் நடக்கும்படியான சமயம் வந்தபொழுது"

அவருடைய திட்டத்தின் முழுமைக்காக

"அவருடையத் திட்டம் நிறைவேறும்படிக்கு"

அவருடையத் திட்டம், அவர்

"தேவனுடையத் திட்டம், தேவன்"

கிறிஸ்துவின் ஆளுகைக்குள்ளாக

"கிறிஸ்துவின் ஆட்சிக்குள்ளாக"

Ephesians 1:11-12

நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்

"தேவனுடைய சுதந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறோம்" அல்லது "தேவனுடைய சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்"

நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்...முதலாவதாக இருக்கும் நாம்

"நாம்" என்கிற வார்த்தை பவுலையும், புறஜாதி விசுவாசிகள் (யூதரல்லாதவர்கள்) கிறிஸ்துவில் இருக்கும் தனது யூத சகோதரர்களையும் குறிக்கிறது.

ஒருவரின் திட்டம்

"தேவனுடையத் திட்டம்"

அவருடைய சித்தத்தின் நோக்கம்

"தேவனுடைய சித்தத்தின் நோக்கம்"

முதலாவதாக இருந்த நாமும்

பவுல் தொடர்ந்து புறஜாதிகளைத் (யூதரல்லாதவர்களைத்) தவிர்ப்பதைத் தொடர்ந்தார் என்பதை "நாம்" என்கிற வார்த்தையின் பயன்பாட்டிலிருந்து அறிந்துகொள்ளலாம்..

Ephesians 1:13-14

சத்திய வார்த்தையை நீங்களும் கிறிஸ்துவிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்

மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்"

கிறிஸ்துவினால் உண்டாகும் உங்களுடைய இரட்சிப்பின் சுவிசேஷம்

"உங்களுடைய இரட்சிப்பின் சுவிசேஷம் கிறிஸ்துவே"

அவரில் நீங்களும் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்

"நீங்களும் கிறிஸ்துவை நம்பியிருக்கிறீர்கள்"

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் முத்தரிக்கப்பட்டு

ஒரு கடிதத்தில் மெழுகு வைக்கப்பட்டு யார் அனுப்பினார்கள் என்று அறிந்துகொள்ள அதன் மீது முத்திரை வைக்கப்படுவது போல, தேவன் நம்முடைய இரட்சிப்பை பரிசுத்த ஆவியானவரால் முத்தரித்ததினால், நம்மேல் உள்ள அவருடைய உரிமையை காட்டுகிறார்.

ஆவியானவர் தான் உத்தரவாதம்

"பரிசுத்த ஆவியானவர் தான் வாக்குத்தத்தம்." சரியான நேரத்தில் நித்திய வாழ்வின் ஈவாக பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

சுதந்தரத்தின் நம்முடைய அச்சாரம்

தேவன் நம்மை அவருடைய சொந்த மக்களாய் இருக்கும்படி நம்மை வாங்கி இருக்கிறார். மறு மொழிபெயர்ப்பு: "அதென்னவென்றால், தேவன் நம்மை மன்னித்து அவருடைய சொந்த ஜனங்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்."

Ephesians 1:15-16

இதனால்

"இந்தக் காரணத்தினால்"

அவருக்காக வேறுபிரிக்கப்பட்டவர்கள் எல்லார் மேலும் உள்ள உங்கள் அன்பு

"கிறிஸ்துவில் இருக்கும் எல்லா விசுவாசிகள் மேல் உங்களுக்கிருக்கும் அன்பு. மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்துவில் இருக்கும் எல்லா பரிசுத்தவான்கள் மேல் உங்களுக்கு உள்ள அன்பு."

நான் தேவனுக்கு நன்றி சொல்வதை நிறுத்தவில்லை

இதை, ஆக்கப்பூர்வமான வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "நான் தேவனுக்கு நன்றி சொல்வதைத் தொடர்கிறேன்."

Ephesians 1:17-18

ஞானத்தின் ஆவியும் அவரை அறிகிற அறிவின் வெளிப்பாடும்

"அவருடைய வெளிப்பாடை அறிந்துகொள்ள ஆவிக்குரிய ஞானம்"

உங்களுடைய இருதயத்தின் கண்கள் வெளிச்சம் பெறட்டும்

"உங்கள் இருதயத்தின் கண்கள்" என்கிறது ஒருவனுடையப் புரிந்துகொள்ளுதலின் திறமையைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "உங்களுக்குப் புரிந்துகொள்ளுதலைப் பற்றிக்கொண்டு ஞானம் அடைந்து."

நம்முடைய அழைப்பின் நம்பிக்கை

"நம்முடைய அழைப்பின் நம்பிக்கை"

அவருடைய சுதந்தரத்தின் மகிமையின் ஐசுவரியம்

"அவருடைய மகிமையின் சுதந்தரத்தின் மகத்துவம்" அல்லது "அவருடைய சுதந்தரத்தின் நம்பிக்கையின் பெருக்கம்.

அவருக்காக வேறு பிரிக்கப்பட்டவர்கள்

"பரிசுத்தவான்களில்" இது நடக்கையில் குற்றமில்லாதவர்களையும், பிரித்தெடுக்கப்பட்டவர்களையும், பரிசுத்தமானவர்களையும் சேர்த்து இருக்கிறது.

Ephesians 1:19-21

அவருடைய வல்லமையின் அளவில்லா மகத்துவம் என்ன

"எங்களுக்கு வேலை செய்யும் அவருடைய பெரிய வல்லமை"

அவருடைய வல்லமையின் பெலத்தின் வேலைசெய்தல்

"நமக்காக வேலை செய்யும் அவருடைய பெரிய வல்லமை"

அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்திருக்கச் செய்கிற

"கிறிஸ்துவை தேவனுடைய வலது பக்கத்தில் உட்காரச் செய்கிற." இது தான் கனத்தின் உயர்ந்த இடம்.

இந்த காலத்தில்

"இந்த நேரத்தில்"

வரப்போகும் காலத்தில்

"வருங்காலத்தில்"

எல்லா ஆளுகைக்கு மேலும், அதிகாரத்திற்கு மேலும், வல்லமைக்கு மேலும், துறைத்தனத்திற்கு மேலும்

தெய்வீகம் மற்றும் பிசாசின் கூட்டம் ஆகிய இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவன்களாகிய இவைகள் இரண்டிற்குமான வேறு வேறு வார்த்தைகள். மறு மொழிபெயர்ப்பு: "எல்லா இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் வகைகளுக்கு மேலாக."

Ephesians 1:22-23

தேவன் கீழ்ப்படுத்தி இருக்கிறார்

"தேவன் வைத்தார்" (UDB) அல்லது "தேவன் வைத்தார்"

கிறிஸ்துவின் பாதங்களுக்குக் கீழ் எல்லாக் காரியங்களையும்

இது கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தையும், அதிகாரத்தையும், வல்லமையையும் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவின் வல்லமைக்குக் கீழ்ப்படுத்தி." அவரைத் தலையாகத் தந்தருளி...அது அவரது சரீரமாய் இருக்கிறது; சரீரத்திற்குரிய எல்லாக் காரியத்தையும் தலை ஆளுகை செய்கிறது போல, சரீரமாகிய சபைக்கு கிறிஸ்து தலையாக இருக்கிறார்.

சபையில் எல்லாக் காரியங்களுக்கும் தலையாக இருக்கிறார்

"தலை" தலைவரைக் குறிக்கிறது அல்லது பொறுப்பில் இருப்பவரைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "சபையில் எல்லாக் காரியங்களையும் ஆளுகை செய்து."

அது அவருடைய சபை

சபை பொதுவாக கிறிஸ்துவின் சரீரமாக கருதப்படுகிறது.

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு

கிறிஸ்து முழு சபையையும் அவருடைய வல்லமையாலும் அவருடைய ஜீவனாலும் நிரப்புகிறார். மறு மொழிபெயர்ப்பு: "கிறிஸ்து, எல்லாக் காரியங்களுக்கும் ஜீவனைக் கொடுத்து வாழவைக்கிறது போல, முழு சபையையும் அவருடைய வல்லமையாலும் அவருடைய ஜீவனாலும் நிரப்புகிறார்."

Ephesians 2

Ephesians 2:1-3

நீங்கள் உங்கள் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்திருந்தீர்கள்

ஒரு மரித்த மனிதன் எவ்வாறு பதில் கூற முடியாதோ அதுபோல ஒரு பாவியும் தேவனுக்கு செவிகொடுக்க முடியாது என்பதை இது காட்டுகிறது.

உங்களுடைய அக்கிரமங்களிலும் பாவங்களிலும்

வேண்டுமென்றே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல் எவ்வாறு மக்கள் இருந்தார்கள் என்று இந்தக் கூற்று காட்டுகிறது.

முன்பு நடந்தீர்கள்

"முன்பு வாழ்ந்தீர்கள்" மக்கள் எவ்வாறு வாழ்ந்து நடந்தார்கள் என்பதை இது காட்டுகிறது.

இந்த உலகத்தின் வழக்கத்தின்படி

"உலகம்" என்று அப்போஸ்தலர்கள் பயன்படுத்தி இருப்பது, இந்த உலகத்தில் வாழும் மக்களின் சுயநல நடக்கைகளும், தீமையான நடைமுறைகளையும் குறிக்கவே. மறு மொழிபெயர்ப்பு: "இந்த உலகத்தில் வாழும் மக்களின் நடக்கைகளின்படி" அல்லது "இந்த தற்போதுள்ள உலகத்தின் வழக்கங்களைப் பின்பற்றி."

ஆகாயத்து அதிகாரங்களின் ஆளுநர்

இது பிசாசையோ அல்லது சாத்தானையோ குறிக்கிறது.

அவனுடைய ஆவி

"அவனுடைய ஆவி" என்கிற கூற்றும் பிசாசையோ அல்லது சாத்தானையோ குறிக்கிறது.

நம்முடைய மாம்சத்தின் தீய விருப்பங்களுக்கு ஏற்றபடி கிரியை செய்து, மாம்சத்தினுல் மனதினுடையதுமான விருப்பத்தை செய்து

"மாம்சம்" மற்றும் "மனம்" என்கிற வார்த்தைகள் முழு சரீரத்திற்கும் உருவகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Ephesians 2:4-7

தேவன் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்

"தேவன் இரக்கத்தில் அளவு இல்லாதவர்" அல்லது "தேவன் நம்மிடத்தில் தயவாய் நடந்து கொள்ளுகிறார்"

நம்மை அவர் நேசித்த மிகப்பெரிய அன்பினிமித்தம்

நமக்கான அவருடையப் பெரிய அன்பினிமித்தம்" அல்லது "அவர் நம்மை மிகவும் நேசிக்கிறதினால்"

நம்முடைய அக்கிரமங்களில் நாம் மriத்திருந்த பொழுது, நம்மை அவர் புதிய வாழ்விற்குக் கொண்டு வந்தார்

செத்துப்போன ஒருவன் உயிர்த்து எழுப்பப்படாவிட்டால் எவ்வாறு பிரதி சொல்ல முடியாதோ அதுபோல ஒரு பாவியான மனிதனுக்குப் புதிய ஆவிக்குரிய வாழ்வு கொடுக்கப்படும் வரை அவன் எவ்வாறு தேவனுக்கு கீழ்ப்படிய முடியவில்லை என்பதை இது காட்டுகிறது.

கிறிஸ்துவோடு கூட அவர் நமக்கு புதிய வாழ்வைக் கொண்டுவந்தார்

தேவன் நமக்கு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வைக் கொடுத்திருக்கிறார்.

நீங்கள் இரட்சிக்கப்பட்ட கிருபையின்படி

"தேவன் நம்மேல் வைத்த மகாப் பெரிய தயவினால் நம்மை இரட்சித்தார்."

நம்மை அவரோடுகூட எழுப்பி கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களில் உட்காரவும் செய்தார்

அவர் கிறிஸ்துவை ஏற்கனவே எழுப்பினதுபோல அவர் கிறிஸ்துவோடு நாம் இருக்க அவர் நம்மையும் எழுப்புவார்.

வரப்போகிற காலங்களில்

"வருங்காலத்தில்"

Ephesians 2:8-10

விசுவாசத்தின் மூலம் கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்

இயேசுவை நம்புவதின் மூலம் நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை இரட்சிப்பது சாத்தியமாயிற்று என்றால் அது தேவன் நம்மேல் வைத்த தயவு தான் காரணம்.

இந்த அல்ல

"இது" என்கிற வார்த்தை முந்தைய "நீங்கள் இரட்சிக்கப்பட்ட கிருபையின்படி" என்றக் கூற்றை குறிப்பிடுகிறது.

எங்களிடத்தில் இருந்து வருகிற

"எங்களிடத்தில்" என்னும் மாற்று பெயர்ச்சொல் பவுலையும் எபேசுவில் இருக்கும் மற்ற எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

உழைப்பினால் அல்ல

"இரட்சிப்பு எங்களுடைய உழைப்பில் இருந்து வரவில்லை"

நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம்

"கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்ட புதிய மக்களாய் தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார்" நாம் தேவனின் சிருஷ்டிப்பின் பலனாக இருக்கிறோம். மாற்றுப் பெயர்ச்சொல்லான, "நாம்" என்பது பவுலையும் எபேசுவில் இருக்கும் மற்ற எல்லா விசுவாசிகளையும் குறிக்கும்.

அவைகளில் நடக்கும்படி

"அவைகளில் வாழும்படி" அல்லது "பின்பற்ற"

Ephesians 2:11-12

மாம்சத்தின்படி புறஜாதிகள்

"பிறப்பினால் யூதரல்லாத மக்கள்

விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதியார்

குழந்தைகளாய் இருந்தபொழுது விருத்தசேதனம் பண்ணப்படாத யூதரல்லாதவர்கள்; அதினால் அவர்கள் தேவனைப் பின்பற்றாதவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

விருத்தசேதனம்

இது யூத மக்களுக்கான மற்றொரு பெயர் ஏனென்றால் எல்லா ஆண் குழந்தைகளும் எட்டு நாள் வயதாக இருக்கும்போது விருத்தசேதனம் பண்ணப்படுவார்கள்.

கிறிஸ்துவில் இருந்து பிரிக்கப்பட்ட

"அவிவிசுவாசிகள்"

புறம்பாக்கப்பட்டு

"பிரிக்கப்பட்டு" அல்லது "சேர்க்கப்படாமல்"

இஸ்ரவேல் குடியுரிமம்

"இஸ்ரவேல் மக்கள்" அல்லது "இஸ்ரவேல் குழுமம்"

வாக்குத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியர்கள்

"தேவனுடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை நீங்கள் அறியீர்கள்"

Ephesians 2:13-16

ஆனால் இப்பொழுது கிறிஸ்துவுக்குள்

எபேசுவில் இருக்கிறவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்தப் பின்னும் அதற்கு முன்னும் உள்ள பெரிய வித்தியாசத்தை பவுல் இங்கு குறிப்பிடுகிறார்.

தேவனுக்கு முன்னே தூரமாய் இருந்த உங்களை தேவனுக்கு சமீபமாய் கொண்டுவரப்பட்டுள்ளீர்கள்

விசுவாசிகளின் பாவங்களால், தேவனிடத்தில் இருந்து வெகு தூரம் பிரிக்கப்பட்டனர். எப்படியாயினும், இப்பொழுது இயேசு தன்னுடைய இரத்தத்தினால் அவர்களை தேவனுக்கு சமீபமாய் கொண்டுவந்தார்.

அவர் நம்முடைய சமாதானம்

"இயேசு நமக்கு சமாதானம் தருகிறார்"

அவருடைய சரீரத்தால்

"சிலுவையில் தம்முடைய மரணத்தினால்"

பிரிவினையாகிய சுவர்

"வெறுப்பின் சுவர்" அல்லது "கெட்ட நோக்கம்"

நம்மை ஒருவரிலிருந்து ஒருவரைப் பிரித்தது

"நம்மை" என்னும் வார்த்தை யூத விசுவாசிகளை புறஜாதி விசுவாசிகளிடம் இருந்து பிரித்த பவுலையும் எபேசியர்களையும் குறிக்கிறது.

அவர் சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தையும் ஒழித்தார்

இயேசுவின் இரத்தம் மோசேயின் நியாயப்பிரமாணத்தை திருப்தி செய்ததினால் யூதர்களும் புறஜாதியர்களும் அவருக்குள் சமாதானமாய் வாழ முடியும்.

இருதிறத்தாரையும் ஒப்புரவாக்கும்படி

"யூதர்களையும் புறஜாதிகளையும் ஒன்றாகக் கொண்டுவரும்படி"

அவர்களுக்கு நடுவில் இருந்த பகைமையை சாகக்கொடுத்து

யூதர்களும் புரஜாதியரும் ஒருவருக்கொருவர் பகையாய் இருக்கிற காரணத்தை இயேசு ஒழித்தார். அதென்னவென்றால், அவர்கள் இனி மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ வேண்டியதில்லை.

Ephesians 2:17-18

சுவிசேஷத்தை அறிவித்து

"சுவிசேஷத்தை அறிவித்து" அல்லது "சுவிசேஷத்தை பிரகடனப்படுத்தி"

சுவிசேஷமும் அவருடைய சமாதானமும்

"சமாதானத்தின் சுவிசேஷம்"

தூரமாய் இருக்கிறவர்கள்

இது புரஜாதியரை அல்லது யூதரல்லாதவர்களைக் குறிக்கிறது.

சமீபமாய் இருந்தவர்கள்

இது யூதர்களைக் குறிக்கிறது.

இயேசுவின் மூலமாய் நாம் இருவருக்கும் வழி இருக்கிறது

"நாம் இருவருக்கும்" என்பது பவுலையும் விசுவாசிக்கும் யூதர்களையும், விசுவாசிக்கும் யூதரல்லாதவர்களையும் குறிக்கும்.

ஒரே ஆவியில் நமக்கு ஏதுவான வழி இருக்கிறது

தந்தையாகிய தேவனுடைய சமூகத்தில் நுழையும்படியான உரிமையை ஒரே ஆவியினால் அல்லது அதிகாரத்தினால் எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Ephesians 2:19-22

புறஜாதிகளாகிய நீங்கள் இனிமேல் அந்நியர்கள் அல்லது பரதேசிகள் அல்ல, ஆனால் தேவனுடைய குடும்பத்தின் # உறுப்பினர்களாய் இருக்கிற தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர்களோடு சக குடிகளாயும் இருக்கிறீர்கள்.

ஒரு வேறு நாட்டவர் ஒரு நாட்டின் குடியுரிமைப் பெற்று அந்த நாட்டின் குடிமகன் ஆவது போல, விசுவாசிகள் ஆவதற்கு முன்னும் பின்னும் உள்ள நிலையை இது விவரிக்கிறது.

இனிமேல் அந்நியர்கள் அல்ல

"இனிமேல் வேற்றிடத்தார் அல்ல"

பரதேசிகளும்

"குடியுரிமம் இல்லாதவர்களும்"

இவர்கள் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்கள் ...

பவுல் தேவனுடைய குடும்பத்தை ஒரு கட்டிடத்திற்கு ஒப்பிடுகிறார். கிறிஸ்து மூலைக் கல்லாயும், அப்போஸ்தலர்கள் அஸ்திபாரமாயும், விசுவாசிகள் கட்டிடமாயும் இருக்கிறார்கள்.

அவருடையக் குடும்பமாகிய முழு கட்டிடமும் ஒன்றாகப் பொருந்தி கர்த்தருக்கென்று வேறுபிரிக்கப்பட்ட ஒரு ஆலயமாக பெருகுகிறது

கிறிஸ்துவின் குடும்பத்தை ஒரு குடும்பத்திற்கு ஒப்பிடுவதைப் பவுல் தொடருகிறார். ஒரு கட்டுமானப் பணியாளன் கற்களைப் பொருத்தி ஒரு கட்டிடம் எழுப்புவதைப் போல கிறிஸ்து நம்மை ஒன்றாகப் பொருத்துகிறார்.(சேர்க்கிறார்,இணைக்கிறார்)

தேவனுக்கென்று தாங்கும் இடமாக ஆவியினாலே கூட்டிக் கட்டப்படுவீர்கள்

ஒரு வீடு எப்படி பூமியில் இருக்கும் மக்களுக்குத் தாங்கும் இடமாக இருக்கிறதோ அது போல, தேவன் ஆவியில் நிரந்தரமாக தாங்கும் ஒரு இடமாக, விசுவாசிகள் எல்லாரும் எவ்வாறு ஒன்றாகக் கூட்டப்படுகிறார்கள் என்பதை இது விவரிக்கிறது.

Ephesians 3

Ephesians 3:1-2

இதனால்

"உங்களுக்கான தேவக் கிருபையின் நிமித்தம்"

உங்களுக்காக தேவன் எனக்குக் கொடுத்த ஈவின் மேற்பார்வை

"தமது கிருபையை உங்களுக்கு அளிக்க ஊழியம் செய்யும்படி தேவன் எனக்குக் கொடுத்த பொறுப்பு"

Ephesians 3:3-5

எனக்குத் தெரியப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின்படி

"எனக்குத் தெரியப்படுத்தின தேவ வெளிப்பாட்டின்படி" அல்லது "தேவன் எனக்கு வெளிப்படுத்தின வெளிப்பாடு"

மறைக்கப்பட்ட உண்மையைக் குறித்து முன்பு நான் எழுதினது

" முன்னே எழுதப்படாத சத்தியத்தை நான் எழுதினது"

இதைக் குறித்து நீங்கள் வாசிக்கும்போது

"இதை" என்பது எபேசியர்களுக்கு பவுல் வெளிப்படுத்துகிற மறைக்கப்பட்ட சத்தியங்களைக் குறிக்கிறது.

உங்களால் புரிந்துகொள்ள முடியும்

"நீங்கள் அறிந்துகொள்ளக்கூடும்" அல்லது "நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்"

கிறிஸ்துவைக் குறித்த மறைக்கப்பட்ட சத்தியத்திற்குள் என்னுடையப் பார்வை

"முன்னதாக அறியப்படாத உண்மையின் மேல் உள்ள என்னுடையப் புரிந்துகொள்ளுதல்"

மற்ற சந்ததிகளில் மனித குலத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை

"முந்தைய காலத்தில் மக்களுக்கு தெரியப்படுத்தாதவைகள்"

ஆனால் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டவை

"ஆனால் இப்பொழுது காண்பிக்கப்பட்டவைகள்" அல்லது "ஆனால் இப்பொழுது தெரியப்படுத்தப்பட்டவைகள்"

Ephesians 3:6-7

புறஜாதிகள் உடன் உரிமையாளர்களும் சரீரத்தின் உடன் உறுப்பினர்களும் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான வாக்குத்தத்தின் உடன் பங்குதாரர்களுமாய் இருக்கிறார்கள்

இந்த வாக்கியம் மறைக்கப்பட்ட சத்தியம். அவனுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டதை பவுல் இங்கு குறிப்பிடுகிறார்.

சரீரத்தின் உடன் உறுப்பினர்கள்

பவுல் கிறிஸ்துவுக்குள் விசுவாசமுள்ளவர்களை விவரிக்கும்படி இந்த ஒப்புமையைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

இதற்காக நான் வேலையாளாய் ஆனேன்

"சுவிசேஷத்தைப் பரப்ப நான் இப்பொழுது தேவனுக்கு சேவை செய்கிறேன்"

Ephesians 3:8-9

இந்த ஈவு எனக்கு கொடுக்கப்பட்டது, தேவனுக்காகப் பிரிக்கப்பட்டவர்களுள் சிறியரில் சிறியவன் நான்

"தேவனுடைய மக்களில் நான் மிகவும் குறைவானத் தகுதி உடையவனாய் இருந்தாலும், தேவன் இந்தக் கிருபையின் ஈவை எனக்குக் கொடுத்திருக்கிறார்."

தேவனுடைய திட்டம் என்ன என்று எல்லாரையும் அறிவடையச் செய்யும்படி

"தேவனுடைய திட்டத்தை எல்லா மக்களும் அறிந்திருக்கும்படி"

மறைக்கப்பட்ட சத்தியம் எல்லாவற்றையும் படைத்த தேவனால் கடந்து போன காலம் முழுவதும் மறைக்கப்பட்டது

"தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்த காலத்தில் இருந்து, அதாவது, முன்பிருந்து தேவனால் மறைக்க்கப்பட்ட சத்தியம்"

Ephesians 3:10-11

உன்னதங்களில் உள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அனந்த ஞானமானது சபையின் மூலமாய் தெரியப்படுத்தப்படும்

"தேவனுடைய அனந்த ஞானமானது சபையின் மூலமாக உன்னதங்களில் உள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தெரியப்படுத்தப்படும்."

நித்திய திட்டத்தின்படி

"நித்திய திட்டத்தின்படி செய்கிறதில்" அல்லது "நித்திய திட்டத்தில் தொடர்நிலைத் தொடர்பில்" அவர் திட்டம்பண்ணின

"அவர் நிறைவேற்றின" அல்லது "அவர் முழுவதும் செய்து முடித்த"

Ephesians 3:12-13

அவரிடத்தில் நம்பிக்கையோடு சேர

"தேவனுடையப் பிரசன்னத்தில் நம்பிக்கையோடு சேரும்படி" அல்லது "தேவனுடையப் பிரசன்னத்தில் சேரும்படியான விடுதலை"

அவரில் இருக்கும் நம்முடைய விசுவாசத்தினால்

"கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசத்தினால்"

அதனால், நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்க நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்

"அதனால், தைரியத்தை இழந்துபோகாமல் இருங்கள் என்று நான் உங்களிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன், ஏனென்றால்"

Ephesians 3:14-16

இந்தக் காரணங்களுக்காக

"தேவன் உங்களுக்காக இதை எல்லாம் செய்ததினால்"

நான் என்னுடைய முழங்கால்களை தகப்பன் முன் படியிடுகிறேன்

"தந்தையிடம் ஜெபிக்கும்பொருட்டு நான் என்னுடைய முழங்கால்களை மடக்குகிறேன்" அல்லது "நான் தாழ்மையோடு தகப்பனிடத்தில் ஜெபிக்கிறேன்"

அவர் உனக்கு அளிப்பார்

"அவர் உனக்குக் கொடுப்பார்".

Ephesians 3:17-19

விசுவாத்சத்தின் மூலமாய் இருதயங்களில்

"மூலமாய்" என்பது வழியாக அல்லது வாய்க்காலாக, தேவனுடைய ஈவாகிய கொடுக்கப்பட்ட விசுவாசத்தின் பலனாக கிறிஸ்து விசுவாசிகளின் இருதயங்களில் வாழ்கிறார் என்பதைக் காண்பிக்க."

அவருடைய அன்பில் நீங்கள் வேரூன்றி நிலைத்திருக்க

பவுல் விசுவாசத்தை ஆழமாக வேர்பற்றின மரத்திற்கு ஒப்பாகவும் திடமான அஸ்திபாரத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒப்பாகவும் ஒப்பிடுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் உறுதியாக வேர்பற்றின மரத்தைப் போலவும் கல்லின் மீது அஸ்திபாரம் இடப்பட்ட கட்டிடத்தைப் போலவும் இருப்பீர்கள்"

தேவனுக்காக பிரித்தெடுக்கப்பட்ட எல்லாம்

இது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது. இதை, "பரிசுத்தவான்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கிறிஸ்துவின் அறிவுக்கெட்டாத அன்பின் மகத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படி

"அனுபவத்தால் நாம் அறியக்கூடும் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் கிறிஸ்துவின் அன்பை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு."

Ephesians 3:20-21

இப்பொழுது அவருக்கு

"இப்பொழுது தேவனுக்கு"

எல்லாவற்றையும் மிகவும் அதிகமாய்

நாம் கேட்கிறதைவிட அல்லது நினைக்கிறதை விடவும் அதிகமாய் தேவனால் செய்யமுடியும்.

நாம் கேட்டு அல்லது நினைத்து

"நாம்" என்பது பவுலையும் அவருடைய பார்வையாளர்களைக் குறிக்கிறது.

Ephesians 4

Ephesians 4:1-3

கிறிஸ்துவுக்காக சிறைபட்டவனாக

"கர்த்தருக்கு ஊழியம் செய்வதை தெரிந்தெடுத்ததின் நிமித்தம் சிறையில் இருந்தவனாக"

அழைப்பிற்கு பாத்திரவான்களாக வாழும்படி நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்

"அழைப்பிற்கு தகுந்தார் போல சரியான முறையில் வாழ உங்களை நடத்திக்கொள்ளும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்." இந்த வசனங்கள் எல்லாவற்றிலும், "உங்கள்" என்கிற வார்த்தை எபேசுவில் இருக்கும் விசுவாசிகளைக் குறிக்கிறது.

மிகுந்த மனத் தாழ்மையோடும், சாந்தத்தோடும் பொறுமையோடும், அன்பிலே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு

"நீங்கள் தாழ்மையாயிருக்கவும், சாந்தமாயிருக்கவும், பொருமையாயிருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலே ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும்."

சமாதானக் கட்டினால் ஆவியின் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்

"ஆவியின் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள சமாதானத்தோடு வாழ வகைத்தேடுங்கள்"

Ephesians 4:4-6

ஒரு சரீரம்

தேவனுடையக் குடும்பத்தில் எல்லா விசுவாசிகளும் ஒரு மனித சரீரத்தின் உறுப்புகளைப் போல வெவ்வேறு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒரு ஆவி

"ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்"

ஒரே ... அழைப்பு

"ஒரே ... விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்டு" அல்லது "ஒரே ... நியமிக்கப்பட்டு"

ஒரே நம்பிக்கையான எதிர்பார்ப்பில்

"ஒரு உண்மையான நம்பிக்கையில்"

எல்லாருக்கும் தகப்பன் ... எல்லாவற்றிலும்

"எல்லாவற்றின் தகப்பன் ... எல்லாவற்றின் மேல் ... எல்லாவற்றின் மூலம் ... எல்லாவற்றினுள்"

Ephesians 4:7-8

நம்மில் ஒவ்வொருவருக்கும்

"நாம்" என்னும் வார்த்தை பவுலையும் எபேசுவில் இருக்கும் எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது

"ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது" அல்லது "தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறார்"

அவர் உன்னதத்திற்கு ஏறின பொழுது

"கிறிஸ்து வானபரியந்தம் சென்றபொழுது"

"அவர்" என்னும் வார்த்தை வசனம் முழுவதும் கிறிஸ்துவைக் குறிக்கிறது.

Ephesians 4:9-10

அவர் ஏறினார்

"அவர் மேலே சென்றார்"

அவர் கீழேயும் இறங்கினார்

"அவர் கீழேயும் சென்றார்" அல்லது "அவர் கீழேயும் வந்தார்"

பூமியின் ஆழங்களுக்குள்

"பூமியின் தாழ்வான இடங்களுக்கு" அல்லது "பூமியின் தாழ்வானப் பகுதிகளுக்கு"

அவர் எல்லாவற்றையும் நிரப்பலாம்

"அவர் எல்லாவற்றையும் முழுவதும் நிரப்பலாம்" அல்லது "அவரால் எல்லாம் நிரப்பப்படலாம்"

Ephesians 4:11-13

இந்த வகை வரங்களைக் கிறிஸ்து கொடுத்தார்

"இந்த வகையான வரங்களை கிறிஸ்து சபைக்குக் கொடுத்தார்"

தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட்டவர்கள்

இது எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

ஊழியத்தின் வேலை

"மற்றவர்களுக்கு ஊழியம்செய்கிறது"

கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டும்பொருட்டு

இந்த உருவகம் ஆவியில் வளர்வதை மனித சரீர பலனை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பிடுகிறது.

விசுவாசத்தில் ஒற்றுமையை அடைய

"அதே போல விசுவாசத்திலும் பெலவானாக மாற"

முழுமையான தேர்ச்சி அடையவும்

"முதிர்ச்சியடைந்த விசுவாசிகளாக மாற"

Ephesians 4:14-16

இது நாம் கட்டாயம்

"பின்பு நாம் கட்டாயமாக"

குழந்தைகளைப் போல இருக்க

இது ஆவிக்குரிய வகையின் இன்னும் வளரத விசுவாசிகளை வாழ்வில் சிறிதளவு அனுபவமுள்ள குழந்தைக்கு ஒப்பிடுவது.

தூக்கியடிக்கப்பட்டு எல்லா போதனை என்கிற காற்றினாலே அடிக்கப்பட்டு

இந்த உருவகம் தவறான போதனைகளை கேட்டு இன்னும் வளராத ஒரு விசுவாசியை தண்ணீரில் காற்றினால் அலைக்களிக்கப்படுகிற ஒரு படகிற்கு ஒப்பிடுகிறது.

மனுதருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமும்

"சாதுரியமான பொய்களினால் விசுவாசிகளை ஏமாற்றும் தந்திரமான மக்களால்"

பதிலாக, நாம் பேசுவோம்

"பதிலாக நாம் பேசுவோம்"

தலையாய் இருக்கிறவருக்குள்ளாக ... சரீர வளர்ச்சியில்

மனித சரீரத்தை பயன்படுத்தி, சரீரத்தின் தலை எவ்வாறு சரீர உறுப்புகளை ஒன்றாக இயங்கச்செய்கிறதோ அது போல கிறிஸ்து எவ்வாறு விசுவாசிகள் ஒற்றுமையாக அந்நியோனியத்தில் வாழச்செய்கிறார் என்பதைக் காட்டும் உருவகம் இது.

அன்பில் ஒவ்வொருவரும் கட்டப்பட

"விசுவாசிகள் ஒருவருக்கொருவர் அன்பில் வளர உதவி செய்யலாம்"

Ephesians 4:17-19

அதனால் இதை நான் சொல்லி உங்களை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்துகிறேன்

"அதனால், கர்த்தருக்குள் நான் உங்களை திடமாக உற்சாகப்படுத்துகிறேன்"

புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தனைகளில் நடக்கிறது போல இனி நடவாமல்

"புறஜாதிகள் தங்களது பிரயோசனமற்ற யோசனைகளைக்கொண்டு வாழ்வதை நிறுத்துங்கள்"

அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, அவர்களுக்குள் இருக்கும் அறியாமையினாலும் அவர்களது இருதயக் கடினத்தினாலும் தேவனுடைய ஜீவனில் இருந்து தள்ளப்பட்டு

"அவர்களது மனது குருடாக்கப்பட்டு அவர்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கிறதினால் தேவனுடைய ஜீவனை அவர்களால் அனுபவிக்க முடியாது."

புத்தியில் அந்தகாரப்பட்டு

"அவர்களால் இனி தெளிவாக நினைக்கவோ அல்லது யோசிக்கவோ முடியாது"

தேவனுடைய ஜீவனில் இருந்து தள்ளப்பட்டு

"பக்தியுள்ள வாழ்வில் இருந்து பிரிக்கப்பட்டு"

அவர்களில் இருந்த அறியாமைனால்

"தேவனின் அறிவு அவர்களிடத்தில் இல்லாததால்".

அவர்களுடைய இருந்தயங்களின் கடினத்தினால்

தேவனுக்கு செவிகொடுக்கவும் அவருடையப் போதனைகளைக் கைக்கொள்ளவும் மறுக்கிறார்கள்.

சகலவித அசுத்தங்களையும் எல்லா வகையான ஆசையோடு செய்யும்படிக்கு தங்களை காமவிகாரத்திற்கு தங்களையே ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்

"தங்களுடைய அவல நடக்கைகள் மூலமும் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் அடையும்படிக்கான ஆவலினாலும் சிற்றின்பத்தின் சந்தோஷத்தை அதிகமாய் நாடும் விருப்பங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கையை கொடுத்துவிட்டார்கள்.

Ephesians 4:20-22

ஆனால் கிறிஸ்துவைக் குறித்து இவ்வாறு நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை

"ஆனால், இதுபோலக் கிறிஸ்துவை பின்பற்ற நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை"

இது தான் கிறிஸ்துவைக் குறித்த சத்தியம் என்று நீங்கள் அவரைக் குறித்து கேள்விப்பட்டும் அவரால் போதிக்கப்பட்டும் இருந்திருப்பீர்களானால்

"நீங்கள் கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்டதினாலும் அவரால் சத்தியம் போதிக்கப்பட்டு இருக்கிறதினாலும்"

நீங்கள் பழைய மனிதனை களைந்து விடவேண்டும்

உங்களுடையப் பழைய நடக்கையோடு ஒத்துப்போகிறதும், மோசம்போக்கும் இச்சைகளினாலே கெட்டுப்போனதும்

"தீய விருப்பங்கள் உங்களை வஞ்சித்தபொழுது மோசமாகிப்போன உங்களுடையப் பழைய வாழ்க்கை முறையின் படி வாழ்வதை நீங்கள் தூக்கி ஏறிய வேண்டும்."

நீங்கள் பழைய மனிதனைத் தட்டி விடவேண்டும்

துணிகளைக் கழற்றி தூர வீசுவதுபோல பாவ சுபாவங்களை நீங்கள் உங்களை விட்டு அகற்ற வேண்டும். மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் உங்கள் சுபாவங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்."

உங்களுடையப் பழைய நடத்தியோடு ஒத்துப்போகிற

"உங்களுடைய பழைய சுபாவத்தோடு ஒத்துப்போகிற நடக்கை" அல்லது "உங்களுடையப் பழைய மனிதனோடு ஒத்துப்போகிற நடக்கை"

வஞ்சனையுள்ள விருப்பங்களால் மோசம்போய் இருக்கிற

"மாம்சத்தின் பொய்யான ஆசைகளால் தொடர்ந்து மோசமாய் வளர்ந்துகொண்டிருக்கிற"

Ephesians 4:23-24

நீங்கள் புதிதாக்கப்படலாம்

"நீங்கள் மாற்றப்படலாம்" அல்லது "நீங்கள் மருரூபமாக்கப்படலாம்"

நீங்கள் புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளும்படி

இது ஒரு மனிதன் புதிய துணி இட்டு வித்தியாசமாகக் காணப்படுவது போல, தேவனுடைய வல்லமையால் எவ்வாறு ஒரு அவிசுவாசி புதிய மனிதன் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது.

Ephesians 4:25-27

பொய்களைக் களைந்து போடுங்கள்

"நீங்கள் பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்"

மாற்றானுடன் சத்தியத்தைப் பேசுங்கள்

"மாற்றானிடம் விசுவாசிகள் நிச்சயம் உண்மையைப் பேசவேண்டும்"

நாம் ஒவ்வொருவரும் ஒரே அங்கங்களாய் இருக்கிறோம்

"தேவனுடையக் குடும்பத்தில் நாமெல்லாரும் அவையவங்கள்"

கோபப்பட்டாலும் பாவம் செய்யாதிருங்கள்

"நீங்கள் கோபம்கொள்ளலாம், ஆனால் பாவம் செய்யாதே"

நீங்கள் கோபமாய் இருக்கும்போது சூரியனை அஸ்தமிக்க விடாதேயுங்கள்

"இரவு வருவதற்கு முன்பதாக உங்கள் கோபத்தைத் தணிக்கவேண்டும்"

Ephesians 4:28-30

உங்கள் வாயில் இருந்து கெட்டப் பேச்சு வரக்கூடாது

"உங்கள் வாயில் இருந்து கெட்ட வார்த்தை வரவிடாதீர்கள்" அல்லது "உங்கள் வாயில் இருந்து மோசமான பேச்சு வரவொட்டாதீர்கள்"

பதிலாக, மற்றவர்களைக் கட்டுகிற வார்த்தைகள்

"கட்டுவதற்கு அல்லது மற்ற விசுவாசிகளுக்கு பலனைக் கொடுக்க ஏதுவான வார்த்தைகளை அதற்கு பதிலாகப் பேசுங்கள்"

செவிகொடுக்கிறவர்களுக்கு கிருபையைக் கொடுக்க

"இந்த வழியில் செவிகொடுக்கிறவர்களுக்கு கிருபையைக்க் கொடுக்கும்படி."

தேவனுடையப் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதீர்கள்

"உங்களுடைய கெட்டப் பேச்சினால் தேவனுடையப் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதீர்கள்."

முத்திரைப் போடப்பட்டவராலே

"ஏனென்றால் அவர் உங்களை முத்தரித்திருக்கிறார்.

Ephesians 4:31-32

எல்லா கசப்புணர்வும்

"தேவன் எல்லா பகைமையின் உணர்வுகளையும் எடுத்துப்போடட்டும்" அல்லது "தேவன் எல்லா வெறுப்புணர்வுகளையும் எடுத்துப்போடட்டும்"

மூர்க்கமும் கோபமும்

"மூர்க்கமும் கோபமும்" சேர்ந்து மிகவும் பயங்கரமான கோபத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. மறு மொழிபெயர்ப்பு: "கட்டுப்படுத்தப்படாதக் கோபம்"

கூக்குரலும் தூஷணமும்

"கூக்குரல்" "தூஷணத்தோடு" சேர்க்கப்படும்போது தூஷணத்தின் கொடுமையை அதிகரிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "கடுமையான வார்த்தை துஷ்பிரயோகம்"

ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள், மென்மையான இருதயத்தார்

"பதிலாக, நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கவேண்டும், சாந்தமாக" அல்லது "பதிலாக, ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கவேண்டும், இரக்கம் நிறைந்து"

Ephesians 5

Ephesians 5:1-2

அதனால் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் ஆகுங்கள்

"அதனால், நீங்கள் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் ஆக வேண்டும்"

அவருடைய பிரியமான குழந்தைகளாக

நான் அவருடையக் குழந்தைகளாய் இருக்கிறதினால், தேவன் நாம் அவரைப் பின்பற்றுவதை விரும்புகிறார்.

அன்பில் வாழுங்கள்

"அன்பின் வாழ்க்கையை வாழுங்கள்"

தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும்

"தேவனுக்கு வாசனையான காணிக்கையும் பலியும்" அல்லது "சுகந்த வாசனையான பலியும் தேவனுக்கான பலியும்"

Ephesians 5:3-4

பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், புணர் சார்ந்த ஆசையும் உங்களுக்கு நடுவே சொல்லப்படலாகாது

"வேசித்தனம், மற்றெந்த அசுத்தம், பொருளாசை இவைகளின் நினைவைக் கூட தேவனுடைய மக்களுக்குள் காணப்பட அனுமதிக்காதீர்கள்"

வேசித்தனம்

"விபச்சாரப் பாவம்" அல்லது "நெறியற்ற பாவக்கிரியைகள்"

மற்றெந்த அசுத்தம்

"மற்றெந்த நெறிமுறை அசுத்தமும்"

புணர் சார்ந்த ஆசை

"மற்றவர்கள் வைத்திருப்பதின் மேல் உள்ள ஆசை"

உங்கள் மத்தியில் சொல்லப்படலாகாது

"உங்கள் மத்தியில் கூறப்படக்கூடாது" அல்லது "உங்கள் மத்தியில் கண்டுபிடிக்கப்படக் கூடாது"

தேவனுக்காக பிரிக்கப்பட்டவர்களுக்கு தகுந்தது

"உங்கள் நடத்தை எப்பொழுதும் தேவனுடையப் பரிசுத்த மக்களுக்குத் தகுந்தபடி இருக்க வேண்டும்"

வம்பும் புத்தியீனமான பேச்சும் அல்லது பரியாசமும் தகாதவைகள், ஆனால் பதிலாக நன்றியறிதல்

"உங்களுடையப் பேச்சு நன்றியறிதலினால் நிறைந்திருக்கட்டும்; மோசமான முட்டாளதனமான அல்லது அசுத்தமான பரியாசங்கள் அல்ல."

Ephesians 5:5-7

உங்களை வீண்வார்த்தைகளினால் வஞ்சிக்கவிடாதீர்கள்

"பொய்யான வாக்குவாதங்களினால், ஒருவரும் உங்களை தந்திரம் பண்ணவொட்டாதிருங்கள்" அல்லது "அர்த்தமற்ற வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை தவறாக நடத்தவொட்டாதீர்கள்"

இதனிமித்தம் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவனுடையக் கோபம் வருகிறது

"இந்தக் காரியங்களை செய்வதின் மூலம் கீழ்ப்படியாத மக்கள் மேல் தேவனுடையக் கோபம் வருகிறது"

அதனால் அவர்களோடு பங்காளிகளாய் இருக்காதீர்கள்

"தீய நடக்கையில் அவர்களோடு பங்குபெறாமல் இருப்பதில் கண்டிப்பாக இருங்கள்"

Ephesians 5:8-12

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்

இருளில் யாரும் பார்க்கமுடியாதது போல, ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இல்லாமல் மக்கள் பாவத்தில் வாழுகிறார்கள்.

கர்த்தருக்குள் ஆனால் மக்கள் இப்பொழுது ஒளியில் இருக்கிறார்கள்

ஒளியில் பார்க்கமுடிகிறது போல, நீதியில் வாழும் மக்கள் ஆவிக்குரிய அறிவை உடையவர்களாய் இருக்கிறார்கள்.

ஏனென்றால் வெளிச்சத்தின் கனி சகல நற்குணமும், நீதியும் உண்மையுமே

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் இருந்து வருகிற பலன்கள் (நற்குணமும், நீதியும் உண்மையும்) ஒரு ஆரோக்கியமான மரத்தினால் கொடுக்கப்படும் நல்லக் கனியைப் போன்றது. அந்தகாரத்தின் கனியற்ற வேலைகளோடு பங்கு வகிக்காத்தீர்கள்

"பாவம் அல்லது அவிவிசுவாசிகளின் பலனல்லாத வேளைகளில் ஈடுபடாதீர்கள்"

அந்தகாரத்தின் பலனற்ற வேலைகள்

ஆவிக்குரிய இருளில் வாழும் ஒருவனின் கிரியைகள், இருளில் அந்தகாரத்தினால் மறைக்கப்பட்ட தீய கிரியைகளை செய்யும் மக்களின் தீயக் கிரியைகளைப் போல இருக்கிறது.

ஆனால் அதற்கு பதிலாக அவைகளை வெளிப்படுத்துங்கள்

"ஆனால் பதிலாக அவைகளைத் தவறாகக் காட்டுங்கள்"

Ephesians 5:13-14

வெளிச்சத்தால் எல்லாம் வெளிப்படுத்தப்படும்

பூமியில் மறைக்கப்பட்டக் காரியங்களை ஒளியானது வெளிப்படுத்துவது போல, கிறிஸ்துவின் ஒளி ஆவிக்குரிய உலகத்தில் அவிசுவாசிகளின் தீயக் கிரியைகளை வெளிப்படுத்தும்.

தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு

பதில் கூற மரித்தவன் மீண்டும் எழுந்து வரவேண்டுவது போல அவிசுவாசிகள் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து எழுந்திருக்க வேண்டும்.

கிறிஸ்து உங்கள் மீது பிரகாசிப்பார்

ஒளியானது அந்தகாரத்தினால் மறைக்கப்பட்டவைகளை காண்பிப்பது போல, ஒரு அவிசுவாசியைக் கிறிஸ்து தன்னுடைய ஈவாகிய பாவமன்னிப்பையும் புதிய ஜீவனையும் புரிந்துகொள்ள செய்வார்.

Ephesians 5:15-17

அதனால் எப்படி நீங்கள் வாழுகிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாய் இருங்கள், அஞ்ஞானிகளைப் போல அல்ல ஆனால் ஞானமுள்ள மக்களைப் போல

"அதனால், அஞ்ஞானிகளைப் போல அல்லாமல், ஞானிகளைப் போல வாழ்வதில் ஜாக்கிரதையாய் இருங்கள்." அஞ்ஞானிகள் பாவத்திற்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், ஞானிகள் பாவத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைவிட்டு ஓடிப் போவார்கள்.

காலத்தைப் பிரயோஜனப்படுத்துங்கள்

"உங்கள் நேரத்தை ஞானமாக செலவு செய்யுங்கள்." நாம் பாவத்தில் வாழ நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது நம்முடைய நேரத்தை அஞ்ஞானமாய் செலவு செய்கிறதைப் போல இருக்கிறது.

காலம் கொடியதாய் இருக்கிறது என்பதால்

"நாட்கள்" என்னும் வார்த்தை நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைக் குறிக்கிறது.

Ephesians 5:18-21

மதுபானத்தால் வெறிகொள்ளாதிருங்கள்

"திராட்ச ரசம் குடிக்கிறதினிமித்தம் நீங்கள் வெறிகொள்ளாதிருக்க வேண்டும்"

பதிலாக, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள்

"பதிலாக, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்"

சங்கீதங்களினாலும் பாட்டுகளினாலும் ஆவிக்குரியப் பாடல்களினாலும்

"தேவனைத் துதிக்கும்படியான எல்லா வகைப் பாடல்களாலும்"

எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள்

"எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள்"

உங்களைக் கீழ்ப்படுத்தி

"தாழ்மையோடு உங்களைக் கீழ்ப்படுத்தி"

Ephesians 5:22-24

அவர் சரீரத்தின் இரட்சகர்

"விசுவாசிகளின் கூட்டத்தின் இரட்சகர் கிறிஸ்து" அல்லது "கிறிஸ்து எல்லா விசுவாசிகளின் இரட்சகர்"

மனைவிகளும் அவர்களுடையப் புருஷர்களும் இருக்க வேண்டும்

"மனைவிகளும் எல்லாக் காரியத்திலும் அவர்களுடையப் புருஷர்களுக்கு கீழ்ப்பட்டிருக்கவேண்டும்"

Ephesians 5:25-27

உங்களுடைய மனைவிகளை நேசியுங்கள்

"அன்பு" என்பது சுயநலமற்ற சேவை செய்கிற அல்லது கொடுக்கிற அன்பைக் குறிக்கிறது.

நம்மை சுத்திகரித்ததினால், அவளைப் பரிசுத்தம்பண்ணும்படி அவளுக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார்

"தம்மையே" மற்றும் "அவர்" என்னும் வார்த்தைகள் கிறிஸ்துவைக் குறிக்கும்போது, "அவள்" மற்றும் "நம்மை" என்னும் வார்த்தைகள் சபையைக் குறிக்கிறது.

அவளுக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார்

"கிறிஸ்து அவளுக்காக எல்லாவற்றையும் தியாகம் பண்ணினார்"

திருவசனத்தைக் கொண்டு தண்ணீரில் கழுவப்படுவதாலும் நம்மை சுத்திகரித்தார்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "தேவனுடைய வார்த்தையினாலும் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானத்தினாலும் சுத்தமாக்கப்பட்டதைப் பவுல் குறிப்பிடுகிறார் அல்லது 2. "நாம்முடைய சரீரங்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்வது போல தேவன் நம்முடையப் பாவங்களில் இருந்து தேவன் வார்த்தையின் மூலமாய் நம்மை ஆவிக்குரிய சுத்தம் செய்கிறார் என்று பவுல் சொல்லுகிறார்.

அவர் தாமே தமக்கு முன்பாக சபையை நிறுத்தும்படிக்கு

"கிறிஸ்து தமக்காக சபையைக் கொடுக்கும்படிக்கு"

கறையில்லாமல் அல்லது பிழையில்லாமல்

கிறிஸ்து சபையை பூரணப்படுத்துவார் என்பதை வலியுறுத்த, ஒரே காரியம் இரண்டு வழிகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

Ephesians 5:28-30

அவர்களுடைய சொந்த சரீரங்களாக

"அவர்களுடைய சொந்த சரீரங்களை நேசிக்கிறது போல"

பதிலாக அவர் போஷிக்கிறார்

"பதிலாக அவர் பராமரிக்கிறார்" அல்லது "பதிலாக அவர் அக்கறைக்கொண்டு"

நாம் அவருடைய சரீரத்தின் உறுப்பினர்கள்

"நாம்" என்கிற வார்த்தை பவுலையும், மற்றும் எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது.

நாம் அவருடைய சரீரத்தின் உறுப்பினர்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1) "அவருடைய விசுவாசிகளின் சரீரத்தின் உறுப்பினர்கள்" அல்லது 2. "மனித சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு மனிதனை வடிவமைப்பது போல விசுவாசிகள் அவருடைய சரீரத்தை வடிவமைக்க ஒன்றாக்கப்படுகிறார்கள்"

Ephesians 5:31-33

இந்தக் காரணத்திற்காக

"இதினிமித்தம்"

தன்னைப் போல தன்னுடைய மனைவியை நேசிக்க வேண்டும்

"தன்னை" மற்றும் "தன்னுடைய" என்னும் வார்த்தைகள் திருமணம் ஆன ஆண் நபரைக் குறிக்கிறது.

மனைவியானவள் தனது கணவனை மதிக்கவேண்டும்

"மனைவி தனது புருஷனை கனம் பண்ணவேண்டும்" அல்லது "மனைவி தனது கணவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும்"

Ephesians 6

Ephesians 6:1-3

குழந்தைகளே, உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள்

பூமிக்குறிய பெற்றார்களுக்கு குழந்தைகள் கீழ்ப்படிவதைப் பவுல் குறிப்பிடுகின்றார்.

உங்களுக்கு நன்மையாக இருக்கவும், பூமியில் நீங்கள் நீடித்து வாழவும்

"உங்களுக்கு" என்னும் மாற்றுப்பெயர்ச்சொல் மோசே பேசிக்கொண்டிருந்த இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "நீங்கள் செழித்திருக்கும்படிக்கும் பூமியில் நெடு நாள் வாழ்ந்திருக்கும்படிக்கும்"

Ephesians 6:4

தந்தைகளே உங்கள் குழந்தைகளை கோபமடையும்படி சீண்டாதிருங்கள்

"உங்கள் குழந்தைகளைக் கோபமடையச் செய்யும் காரியங்களை தகப்பன்மார்களாகிய நீங்கள் செய்யாதிருங்கள்" அல்லது "தகப்பன்மார்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகள் கோபமடையச் செய்யாதிருங்கள்"

கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் உபதேசத்திலும் அவர்களை வளர்த்துங்கள்

"கர்த்தருடைய பயிற்சியிலும் போதனைகளிலும் அவர்களை வளர்த்துங்கள்"

Ephesians 6:5-8

அடிமைகளே, கீழ்ப்படிந்திருங்கள்

"அடிமைகளாகிய நீங்கள் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்"

கிறிஸ்துவுக்கு ... நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும்

"தாழ்மையான பயத்தோடும், கிறிஸ்துவுக்கு நீங்கள் கீழ்ப்படிவதுபோல"

மிகுந்த மரியாதையோடும் நடுக்கத்தோடும்

ஒருவனின் எஜமானனுக்கு கனம் செலுத்துவதைக் காண்பிக்க இரண்டு ஒரே மாதிரியான வழிகள்.

அவர்கள் உங்களைக் கண்காணிக்கும்போது, அவர்களை பிரியப்படுத்த அல்ல

"உங்கள் எஜமானர் உங்களைக் கண்காணிக்காத பொழுதும், கிறிஸ்துவுக்காக வேலை செய்வது போல எப்பொழுதும் வேலை செய்யுங்கள்"

கிறிஸ்துவின் அடிமைகளாக

பூமிக்குரிய எஜமானர்கள் கிறிஸ்து என்பது போல அவர்களுக்கு சேவை செய்யுங்கள்"

மக்களுக்காக அல்ல, நல்மனதோடு கர்த்தருக்கென்று செய்வது போல

"மக்களுக்காக மட்டுமல்ல நீங்கள் தேவனுக்காகவும் வேலை செய்வதால் சந்தோஷத்தோடு செய்யுங்கள்"

ஒவ்வொரு மனிதனும் செய்கிற எந்த நல்லக் காரியத்தையும் நினைத்துக்கொள்ளுங்கள், அவன் கர்த்தரிடமிருந்து பலனைப் பெற்றுக்கொள்ளுவான்

"ஓவ்வொரு மனிதன் செய்யும் எந்த நற்கிரியையும் தேவனிடமிருந்து பலனைப் பெற்றுத் தரும் என்பதை நினைவுகூருங்கள்"

Ephesians 6:9

அவர்களை பயமுறுத்தாமல், உங்களுடைய அடிமைகளுக்கும் அதேக்காரியங்களை செய்யுங்கள்

"கிறிஸ்து அவர்களை நடத்துவது போல உங்களுடைய அடிமைகளை நீங்கள் பயமுறுத்தாமல் நடத்துங்கள்"

அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்று அறிந்து

"கிறிஸ்து அடிமைகளுக்கும் அவர்களுடைய எஜமான்கள் இரண்டு சாராருக்கும் எஜமான் என்று நீங்கள் அறிந்திருக்கிறதினால்"

அவரிடம் பட்சபாதம் இல்லை

"அவருக்கு பிடித்தமானவர்கள் யாருமில்லை"

Ephesians 6:10-11

கர்த்தருக்குள்ளும் அவருடைய சத்துவத்தின் பலத்திலும் பெலப்படுங்கள்

மறு மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு ஆவிக்குரிய பலன் கர்த்தர் கொடுக்கும்படிக்கு அவற்றை முற்றிலும் சார்ந்திருங்கள்"

பிசாசின் தந்திரமான திட்டங்களை எதிர்த்து நிற்கும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்

ஒரு சேனை வீரன் தன்னை எதிரிகளின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஆயுதத்தைத் தரிப்பதைப் போல, தேவன் கொடுக்கும் எல்லா வல்லமையையும் கிறிஸ்தவர்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்கப் பயன்படுத்த வேண்டும்.

Ephesians 6:12-13

அதனால் தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்

ஒரு சேவகன் தனது எதிரிகளோடு சண்டையிடும்போது தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதத்தைத் தரித்துக்கொள்ளுவது போல, தேவன் கொடுக்கும் பாதுகாக்கும் வல்லமைகளைக் கிறிஸ்தவர்கள் பிசாசை எதிர்த்து சண்டையிடும்போது பயன்படுத்தவேண்டும்.

Ephesians 6:14-16

சத்தியம் என்னும் அரைக்கச்சை

ஒரு வீரனின் உடமைகள் எல்லாவற்றையும் ஒரு அரைக்கச்சையைப் பிடித்துக்கொல்லுவது போல, ஒரு விசுவாசிக்கு சத்தியம் எல்லாவற்றையும் பிடித்துக்கொள்ளுகிறது.

நீதி என்னும் மார்க்கவசம்

ஒரு மார்க்கவசம் ஒரு வீரனுடைய நெஞ்சுப்பகுதியைப் பாதுகாப்பது போல, நீதி என்னும் ஈவு ஒரு விசுவாசியின் இருதயத்தைப் பாதுகாக்கிறது.

சமாதானமேன்னும் சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தம் என்னும் பாதரட்சையை அணிந்து கொள்ளுங்கள்

ஒரு வீரன் திடமாக நிற்க காலணிகளை அணிவது போல ஒரு விசுவாசி சமாதானத்தின் சுவிசேஷத்தின் திடமான அறிவை அதை அறிவிக்கும் பொருட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

விசுவாசம் என்னும் கேடகத்தை எப்பொழுதும் சுமக்க வேண்டும்

ஒரு விசுவாசிக்கு தேவன் கொடுக்கும் விசுவாசம் பிசாசு தாக்கும்போது வீரன் எதிரிகள் தாக்கும்போது பாதுகாக்கப் பயன்படுத்தும் ஒரு கேடகம் போல செயல்பட்டுப் பாதுகாக்கும்.

பொல்லாதவன் எய்யும் அக்கினி ஆஸ்திரங்கள்

ஒரு விசுவாசிக்கு எதிரானப் பிசாசின் தாக்குதல் ஒரு வீரனுக்கு எதிராக எதிரியால் எறியப்பட்ட அக்கினி அம்புகளைப் போல இருக்கிறது.

Ephesians 6:17-18

இரட்சிப்பென்னும் தலைக்கவசம்

தேவனால் கொடுக்கப்பட்ட இரட்சிப்பு விசுவாசியின் மனதை ஒரு தலைகவசம் ஒரு வீரனின் தலையைப் பாதுகாப்பது போல பாதுகாக்கிறது.

தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயம்

ஒரு போர்வீரன் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காக்க வாள் கொண்டு சண்டையிடுவதைப் போல, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு எதிராக சண்டையிட்டு பிசாசிடம் இருந்து விசுவாசியைத் தற்காக்கப் பயன்படுத்தவேண்டும்.

எல்லா நேரத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியிலே ஜெபம் பண்ணி

"நீங்கள் ஜெபித்து விசேஷமான வேண்டுதல் செய்வது போல, எப்பொழுதும் ஆவியில் ஜெபம் பண்ணுங்கள்"

விடாமுயற்சியோடும் ஜெபத்தொடும் தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர்களுக்காக

"விடாதத் துடிப்புடனும் ஜெபத்துடனும் எல்லா விசுவாசிகளுக்காவும் ஜெபம் பண்ணுங்கள்."

Ephesians 6:19-20

வார்த்தை எனக்குக் கொடுக்கப்ப்படும்படிக்கு

"தேவன் எனக்கு வார்த்தையைக் கொடுக்கும்படிக்கு" அல்லது "தேவன் எனக்கு செய்தியைக் கொடுக்கும்படிக்கு"

அறியப்படுத்தும்படி தைரியத்தோடு என் வாயைத் திறக்கும்போது

"அறியப்படுத்தும்படி நான் தைரியமாய் பேசும்போது"

அதற்காக சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவன் நான்

"நான் சுவிசேஷத்தின் பிரதிநிதியாய் இருக்கிறதினால் நான் இப்பொழுது சிறையில் கட்டப்பட்டிருக்கிறேன்"

நான் பேசவேன்டியப் பிரகாரமாக என்னுடைய சிறைவாசத்திலும் நான் தைரியமாய்ப் பேசும்படிக்கு

"நான் சிறைச்சாலையில் பேசவேண்டியப் பிரகாரமாக தைரியத்தோடு தேவனுடைய செய்தியைப் பேசும்படிக்கு"

Ephesians 6:21-22

என்னுடையக் காரியங்கள்

"என்னுடைய சூழ்நிலை" அல்லது "என்னுடைய சூழல்"

தீகிக்கு

தீகிக்கு பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்த பல மனிதர்களுள் ஒருவன்.

உங்களுக்கு எல்லாவற்றையும் அறியப்படுத்துவான்

"உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லுவான்" (UDB)

Ephesians 6:23-24