தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

Philemon

Philemon 1

Philemon 1:1-3

பிலமோன் என்கிற மனிதனுக்கு பவுல் எழுதிய கடிதம் தான் இந்த புத்தகம்.

கிறிஸ்து இயேசுவின் கைதியாகியப் பவுல், நம்முடைய சகோதரன் தீமோத்தேயு, பிலமோனுக்கு

ஒரு கடிதத்தின் ஆசிரியரை அறிமுகப்படுத்தும் பிரத்தியேக வழி உங்கள் மொழியில் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும். இதை, " கிறிஸ்து இயேசுவின் கைதியாகியப் பவுல், நம்முடைய சகோதரன் தீமோத்தேயு பிலமோனுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்"என்று மொழிபெயர்க்கலாம்.

கிறிஸ்து இயேசுவினிமித்தம் கைதி

"இயேசு கிறிஸ்துவைக் குறித்து போதித்ததால் சிறையில் இருந்தவன்." இயேசுவை விரும்பாத மக்கள் பவுலை சிறையில் இட்டு தண்டித்தனர்.

நம்முடையப் பிரியமான சகோதரன்

"நம்முடைய பிரியமான உடன் விசுவாசி" அல்லது "நாம் நேசிக்கிற நம்முடைய ஆவிக்குரிய சகோதரன்"

சக வேலையாள்

"சுவிசேஷத்தைப் பரப்ப எங்களைப் போலவே உழைத்தவன்"

நம்முடைய சகோதரி ()

இதன் அர்த்தம், "நம்முடைய சக விசுவாசி" அல்லது "(), நம்முடைய ஆவிக்குரிய சகோதரி" அகரிப்பா

இது ஒரு மனிதனின் பெயர்.

நம்முடைய சக வீரன்

"வீரன்" என்கிறது உருவகமாகும். இது, சுவிசேஷத்தை பரப்பக் கஷ்டப்படும் ஒரு மனிதனை விவரிக்கிறது. இதை, "நம்முடைய சக ஆவிக்குரிய வீரன்" அல்லது "நம்முடன் ஆவிக்குரிய யுத்தத்தைச் செய்பவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னுடைய வீட்டில் இருக்கும் சபை

"உன்னுடைய வீட்டில் கூடும் விசுவாசிகளின் கூட்டம்" (UDB)

உன்னுடைய வீடு

"உன்னுடைய" என்கிற வார்த்தை ஒருமையில் உள்ளது. இது பிலமோனைக் குறிக்கிறது.

நம்முடைய தந்தையாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக

"நம்முடைய தகப்பனையாகிய தேவனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவும் கிருபையையும் சமாதானத்தையும் கொடுப்பாராக." இது ஒரு ஆசீர்வாதம். "உங்களுக்கு" என்கிற வார்த்தை பன்மையில் உள்ளது; வசனம் 1இலும் 2இலும் வாழ்த்தின எல்லா மக்களையும் குறிக்கிறது.

Philemon 1:4-7

நான் என்னுடைய தேவனுக்கு எப்பொழுதும் நன்றி சொல்லுகிறேன், என்னுடைய ஜெபங்களில் உங்களை நான் குறிப்பிடுவேன்

"உங்களுக்காக நான் ஜெபிக்கும்போது நான் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி சொல்லுவேன் (UDB)

நான்

பவுல் ஆகிய நான் இந்த கடிதத்தை எழுதினேன். "நான்" மற்றும் "எனக்கு" என்கிற எழுத்துக்கள் இந்தக் கடிதத்தில் பவுலைக் குறிக்கிறது.

உனக்கு

இங்கேயும், கடிதம் அநேகத்திலும், "உனக்கு" என்கிற வார்த்தை பிலமோனைக் குறிக்கிறது.

விசுவாசத்தில் உன்னுடைய பங்களிப்பு அறிவுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்

இதை, "நாங்கள் கிறிஸ்துவை நம்புகிறது போல நீயும் நம்புவதால், அது நீ அறிந்துகொள்ள உதவும்" அல்லது "கிறிஸ்துவை நம்புவதில் நீ எங்களோடு சேர்ந்ததால், உன்னால் அறிந்துகொள்ள முடியும் என்று மொழிபெயர்க்கலாம்.

விசுவாசத்தில் உன் பங்களிப்பு

"நாங்கள் கிறிஸ்துவை நம்புகிறது போல நீயும் நம்புகிறதால்" (UDB)

கிறிஸ்துவுக்குள் எங்களுக்குள் இருக்கிறது

அநேகமாக இதன் அர்த்தம் என்னவென்றால், "கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்கு இருக்கிறது" # பரிசுத்தவான்களின் இருதயங்கள் உங்களால் புத்துணர்வு அடைந்திருக்கிறது

"இருதயங்கள்" என்கிற வார்த்தை இங்கு தைரியத்தைக் குறிக்கிறது. "புத்துணர்வு அடைந்திருக்கிறார்கள்" என்பது செய்பாட்டு வினைக் கூற்றாக உள்ளது. இதைச் செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "நீங்கள் விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறீர்கள்."

சகோதரன்

பவுல் பிலமோனை "சகோதரன்" என்று அழைக்கிறான் ஏனென்றால் அவர்கள் இருவரும் விசுவாசிகள். அவன் அநேகமாக தங்களுக்குள் இருந்த நட்பையும் வலியுறுத்தி இருக்கலாம். இதை, "அன்பான சகோதரன்" அல்லது அன்பான நண்பன்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

Philemon 1:8-9

கிறிஸ்துவுக்குள்ளான எல்லா தைரியமும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "கிறிஸ்துவினிமித்தம் அதிகாரம்" அல்லது "கிறிஸ்துவினிமித்தம் தைரியம்." இதை, "நான் கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருப்பதினால் இருக்கிற அதிகாரம்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆயினும் அன்பினிமித்தம் நான் உங்களைக் கேட்கிறேன்

"அன்பினிமித்தம் நான் உங்களை கேட்கிறேன்"

அன்பினிமித்தம்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "நீ தேவனுடைய மக்களை நேசிக்கிறாய் என்று நான் அறிந்திருப்பதால்" அல்லது 2. "நீ என்னை நேசிப்பதால்" (UDB) அல்லது 3. "நான் உன்னை நேசிப்பதால்"

முதிர்வயதுள்ள பவுலாக நான் இருக்கிறதினாலும், இயேசு கிறிஸ்துவினால் சிறைபட்டவனாயும் இருக்கிறதினால்

பவுல் சொன்னவற்றையெல்லாம் தீத்து செய்ய வேண்டும் என்பதற்கு இது தான் காரணங்கள். இதை, "நான் பவுலாக இருப்பதாலும் முதிர்வயதுள்ளவனாய் இருப்பதாலும், இப்பொழுது இயேசு கிறிஸ்துவினிமித்தம் சிறைப்பட்டவனாயும் இருக்கிறதினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philemon 1:10-13

ஒநேசிமு

இது ஒரு மனிதனின் பெயர்.

என்னுடையக் குழந்தை ஒநேசிமு

"என்னுடைய மகன் ஒநேசிமு." ஒரு தந்தையும் மகனுக்குள்ள உறவுக்கு பவுல் தனக்கும் ஒநேசிமுவுக்கும் இருக்கும் உறவை ஒப்பிடுகிறார். ஒநேசிமு பவுலினுடைய சொந்த மகன் அல்ல, ஆனால் பவுல் கிறிஸ்துவைக் குறித்து அவனுக்குப் போதித்ததால். அவன் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பெற்றுக்கொண்டான். பவுல் அவனை நேசித்தான். இதை, "என்னுடைய பிரியமான மகன் ஒநேசிமு" அல்லது "என்னுடைய ஆவிக்குரிய மகன் ஒநேசிமு" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் பெற்ற அவன்

இதை, "எனக்கு மகன் ஆனவன்" அல்லது "எனக்கு மகன் போல ஆனவன்" என்று மொழிபெயர்க்கலாம். பவுலுக்கு ஒநேசிமு எவ்வாறு மகன் ஆனான் என்பதை வெளிப்படையாக்கலாம்: "நான் கிறிஸ்துவைக் குறித்து அவனுக்குப் போதிக்கும்போது அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு என்னுடைய ஆவிக்குரிய மகன் ஆனான்."

என்னுடைய கட்டுகளில்

"என்னுடைய சங்கிலி கட்டுகளில்." இதை, "நான் சிறையில் இருந்தபொழுது" என்று மொழிபெயர்க்கலாம். கைதிகள் அநேகமாக சங்கிலிகளால் கட்டப்பட்டு இருப்பார்கள். அவன் ஒநேசிமுவுக்கு போதித்தபொழுது பவுல் சிறையில் இருந்தான் அவன் இந்தக் கடிதத்தை எழுதும்போதும் சிறையில் தான் இருந்தான்.

முன்னே பிரயோஜனமில்லாதவன்

இதை, "முன்பு அவன் உபயோகமற்றவனாய் இருந்தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால் இப்பொழுது பிரயோஜனமுள்ளவன்

"ஆனால் இப்பொழுது அவன் பிரயோஜனமுள்ளவன்." மொழிபெயர்ப்பாளர்கள், "ஒநேசிமு என்னும் பெயரின் அர்த்தம் 'பிரயோஜனமுள்ளவன்' அல்லது 'உபயோகமுள்ளவன்' என்பதாகும்.

அவனை நான் உம்மிடத்திற்குத் திரும்பவும் அனுப்புகிறேன்

ஒநேசுமுவை அனுப்புவதற்கு முன்புகூட பவுல் இந்த கடிதத்தை எழுதி இருக்கலாம் என்பதால், இதை, "நான் அவனைத் திரும்பவும் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)

என் உள்ளம் போலிருக்கும் அவனை

"இருதயம்" என்கிற வார்த்தை மிகவும் நேசிக்கப்பட்டவரைக் குறிக்கவே பயன்படுத்தப்படும். இதை, "நான் மிகவும் நேசிப்பவன்" என்றும் மொழிபெயர்க்கலாம். பவுல் இதை ஒநேசிமுவைக் குறித்துச் சொல்லுகிறார்.

என்னுடன் வைத்திருக்க வேண்டிய அவனை

இதை ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "நான் அவனை என்னுடனே வைத்திருப்பேன்."

உமக்குப் பதிலாக அவன் எனக்கு உதவி செய்யும் பொருட்டு

"நீர் இங்கு இருக்க முடியாதபடியால், அவன் எனக்கு உதவி செய்திருப்பான்." இதை ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "அவன் உம்முடைய இடத்தில் இருந்துகொண்டு எனக்கு உதவி செய்திருப்பான்."

நான் கட்டப்பட்டிருந்த போது

இதை, "நான் சிறைச்சாலையில் இருந்தபொழுது" அல்லது "நான் சிறைச்சாலையில் இருந்ததினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

சுவிசேஷத்தின் நிமித்தம்

இதை, "நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philemon 1:14-16

உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றையும் செய்ய நான் விரும்பவில்லை

"உம்முடைய சம்மதம் இல்லாமல் அவனை இங்கு வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை" அல்லது "நீர் சம்மதித்தால் மட்டுமே அவனை என்னுடன் வைத்திருப்பேன்."

உம்முடைய...நீர்

14

16 வசனங்களில் உள்ள இந்த மாற்றுப் பெயர்ச்சொல் ஒருமையிலும் பிலமோனைக் குறிக்கிறதாயும் இருக்கிறது.

உம்முடைய நன்மை கட்டாயப்படுத்தப்படக் கூடாது

இதை, "நான் கட்டாயப்படுத்துகிறதினால் அல்ல, நீர் சரியானதை செய்யும்படி" என்று மொழிபெயர்க்கலாம்.

ஆனால், மனப்பூர்வமாய்

"ஆகிலும் நீர் விரும்பினால்" அல்லது "ஆகிலும், நீர் நமியை செய்ய சுதந்திரமாக தெரிந்துகொள்ளுவதால்" உம்மிடத்திலிருந்து அவன் பிரிக்கப்பட்டான்

இந்த செய்யப்பாட்டுக் கூற்று செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கப்படலாம்: "அநேகமாக தேவன் ஒநேசிமுவை உம்மிடத்திலிருந்து எடுத்துக்கொண்டார்."

அநேகமாக

"இருக்கலாம்"

கொஞ்ச நேரம்

"இந்த நேரத்தில்"

அடிமைக்கும் மேலாக

"அடிமையைக் காட்டிலும் நன்றாக" அல்லது "அடிமையைக் காட்டிலும் மதிப்புடைய"

பிரியமான சகோதரன்

"அன்பான சகோதரன்" அல்லது "விலையேறப்பெற்ற சகோதரன்"

சகோதரன்

"கிறிஸ்துவுக்குள்ளான சகோதரன்"

ஆயினும் உமக்கு எவ்வளவு அதிகமாய் இருந்திருக்கவேண்டும்

"நிச்சயமாக உமக்கு அதிகமாக"

சரீரத்தில்

இதை, "ஒரு மனிதனாக" அல்லது "உம்முடைய மனித உறவில்."

இந்த மனித உறவு வெளிப்படையாக்கப்படலாம்: "ஏனென்றால் அவன் உம்முடைய அடிமையாய் இருப்பதினால்."

கர்த்தருக்குள்

இதை, "கர்த்தருக்குள்ளான சகோதரனைப் போல" அல்லது "ஏனென்றால் அவன் கர்த்தருக்கு உரியவன் ஆதலால்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philemon 1:17-20

நீர் என்னை உம்முடைய பங்காளி என்று எண்ணினால்

"நீர் என்னை உம்முடன் கூடிய கிறிஸ்துவுக்கான சக வேலையாள் என்று கருதினால்"

அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்

இதை, "என்னிடம் கணக்குக் கேளும்" அல்லது "நான் தான் உமக்குக் கடன் பட்டவன் என்று சொல்லும்" என்று மொழிபெயர்க்கலாம்.

பவுலாகிய நான் என்னுடைய சொந்தக் கரங்களால் எழுதுகிறேன்

இதை, "பவுலாகிய நான் இதை நானாகவே எழுதுகிறேன்" என்று மொழிபெயர்க்கலாம். பிலெமோன் இந்த வார்த்தைகள் உண்மையானவை என்று அறிந்துகொள்ளும்படி பவுல் இதை எழுதுகிறார். பவுல் உண்மையில் அவனுக்கு பணம் செலுத்துவான்.

நான் அதைத் திரும்ப செலுத்துவேன்

"அவன் உம்மிடம் கடன்பட்டதை நான் உமக்கு செலுத்துவேன்"

நான் உமக்கு சொல்லவேண்டியதில்லை

இதை, "நான் உமக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

நீர் எனக்கு உம்முடைய ஜீவனைக்கொண்டு கடன்பட்டிருக்கிறீர்

"நீர் உம்முடைய சொந்த ஜீவனைக்கொண்டு கடன்பட்டிருக்கிறீர்." பிலமோன் பவுலுக்கு தந்து ஜீவனையே கடனாக வைத்திருப்பதை வெளிப்படையாக்கலாம்: "நான் உம்முடைய ஜீவனைக் காத்ததால் நீர் எனக்கு கடன் பட்டிருக்கிறீர்" அல்லது "உம்முடைய ஜீவனைக் கொண்டு எனக்கு நீர் கடன்பட்டிருக்கிறது எதனால் என்றால் நான் உமக்கு சொன்னது உம்முடைய ஜீவனைக் காத்தது." ஒநேசிமுவும் அல்லது பவுலும் பிலமோனுக்கு ஏதேனும் கடன்பட்டிருக்கிறார்கள் என்று பிலமோன் சொல்லக்கூடாது ஏனென்றால் பிலமோன் அதற்குமேலாகப் பவுலுக்கு கடன்பட்டிருப்பதாலேயே.

என்னுடைய இருதயத்தை இளைப்பாறப்பண்ணும்

இதை, "என்னுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தும்" அல்லது "என்னை சந்தோஷப்படுத்தும்" அல்லது "என்னை ஆறுதல் படுத்தும்" என்று மொழிபெயர்க்கலாம்.

Philemon 1:21-22

உம்முடையக் கீழ்ப்படிதலில் நம்பிக்கை வைத்து

"நான் கேட்பதை நீர் செய்வீர் என்று நான் நிச்சயித்திருப்பதினால்"

உம்முடையக் கீழ்ப்படிதல் ... உமக்கு எழுதுகிறேன், ... நீர் செய்வீர்"

பவுல் இதை பிலெமோனுக்கு எழுதுகிறார்.

அறிந்திருக்கிறது

"நான் அறிந்திருக்கிறேன்"

நான் என்ன சொல்லுகிறேனோ

"நான் கேட்டுக்கொள்ளுவது"

மேலும்

"இன்னும்"

எனக்காக ஒரு விருந்தினர் அறையை ஆயத்தம் செய்யும்

"உம்முடைய வீட்டில் எனக்காக ஒரு அறையை ஆயத்தம் செய்யும்." பவுல் பிலமோனிடம் இதைச் செய்யும்படி சொன்னார்.

உங்களுடைய ஜெபங்களினால் ... உங்களிடத்திற்கு வரும்படி

"உங்களுடைய" மற்றும் "உங்கள்" என்கிற வார்த்தைகள் பிலமோனையும் அவனுடைய வீட்டில் கூடும் விசுவாசிகளையும் குறிக்கிறது.

உங்களுடைய ஜெபங்களினால்

இதை, "உங்களுடைய ஜெபங்களின் பலனாக" அல்லது "நீங்கள் எல்லாரும் எனக்காக ஜெபிக்கிறதினால்" என்று மொழிபெயர்க்கலாம்.

நான் உங்களிடத்தில் வரும்படி அனுமதிக்கப்பட

இதை செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "தேவன் என்னைப் போகும்பாடி அனுமதிப்பார்" அல்லது "நான் உங்களிடத்திற்கு வரும்படி, என்னை சிறையில் வைத்திருப்பவர்கள் என்னை விடுவிக்க தேவன் செய்வார்."

Philemon 1:23-25

எப்பாப்பிரா,...மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா

இதெல்லாம் மனிதர்களுடையப் பெயர்கள்.

கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னுடன் காவலில் இருந்தவன்

"இயேசு கிறிஸ்துவை சேவிப்பதால் என்னுடன் சிறையில் இருக்கிறவன்"

உம்மை வாழ்த்துகிறார்கள்

"உம்மை" என்கிற வார்த்தை பிலெமோனைக் குறிக்கிறது.

அப்படியே என்னுடைய உடன் வேலையாட்களாகிய மாற்கும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும்

இதன் அர்த்தம், "என்னுடைய உடன் வேலையாட்களாகிய மாற்கும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துச் சொல்

"என்னுடைய உடன்

வேலையாட்களாகிய

இது "என்னுடன் வேலை செய்யும் ஆட்கள்" எனவும் மொழிபெயர்க்கப்படலாம் அல்லது என்னுடன் வேலை செய்யும் அனைவரும்."

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடைய ஆவியோடு இருப்பதாக

இதை, "உங்களுடைய ஆவியின் மீது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தயவாய் இருப்பாராக" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய ஆவி

"உங்களுடைய" என்கிற வார்த்தை பிலெமோனையும் அவனுடைய வீட்டில் கூடுகிற அனைவரையும் குறிக்கிறது. "ஆவி" என்கிற வார்த்தை ஒரு முழு மனிதனைக் குறிக்கிறது; இந்தப் பதத்தை, "உங்களை" என்று மொழிபெயர்க்கலாம்.