Titus
Titus 1
Titus 1:1-3
பவுல்
"பவுலிடமிருந்து." ஒரு கடிதத்தின் ஆசிரியரை அறிமுகப்படுத்தும் பிரத்தியேக வழி உங்கள் மொழியில் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும். இதை, "பவுலாகிய நான் இந்த கடிதத்தை எழுதினேன்" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனுடைய ஊழியக்காரனும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனும்
"நான்" என்கிற வார்த்தை இங்கு மறைத்துப் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு புதிய வாக்கியத்தின் மூலம் தெளிவுப்படுத்தலாம்: "தேவனுடைய ஊழியக்காரனும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமாகிய நான்."
விசுவாசத்தை நிறுவி
இது பெரு தனி வாக்கியமாக இருக்கலாம்: "நான் விசுவாசத்தை நிறுவும்படி உழைக்கிறேன்" அல்லது "நான் விசுவாசத்தைக் கட்ட நான் உழைக்கிறேன்"
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
"தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள்" அல்லது "தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள்"
நிறுவும்படி
"ஒரு இடத்தில் உறுதியாக நிலைநிறுத்தப்பட"
தெய்வத்துவத்தோடு ஒத்துப்போகிற
"தேவனுடைய ஆளுமையை ஏற்றுக்கொள்ளுகிற" அல்லது "பரிசுத்தவான்களுக்கு நன்மையான"
பொய்கள் இல்லாத தேவன்
"ஒருபோதும் பொய்யுரையாத தேவன்"
ஆதிகாலங்களுக்கு முன்பு
"காலம் துவங்கினதற்கு முன்பு"
சரியான நேரத்தில்
"தகுதியான நேரத்தில்"
வெளிப்படுத்தும்படி என்னை நம்பினார்
இதை, "நான் அறிவிக்கும்படி நம்பப்பட்டேன்" அல்லது "பிரசங்கம் பண்ணும் (பொறுப்பை) அதிகாரத்தை எனக்கு அவர் தந்தார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
நம்முடைய இரட்சகராகிய தேவன்
"நம்மை ரட்சித்த தேவன்" (UDB)
Titus 1:4-5
உண்மையான மகன்
தீத்து பவுலின் உண்மையான மகன் இல்லாததால், இதை, "நீ எனக்கு மகன் போன்றவன்" என்று மொழிபெயர்க்கலாம்.
நம்முடைய பொதுவான விசுவாசம்
இதை, "கிறிஸ்துவுக்குள் நாம் இருவரும் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம்" அல்லது "நாம் இருவரும் நம்பும் ஒரே போதனைகள்" என்று மொழிபெயர்க்கலாம்.
கிருபை, இரக்கம், சமாதானம்
இது ஒரு பொதுவான வாழ்த்து. இதை, "கிருபையும், இரக்கமும், சமாதானமும் உங்களுடையதாவதாக" அல்லது "நீங்கள் தயவையும், இரக்கத்தையும், உள்ளான சமாதானத்தையும் அனுபவியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசு
"நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவானவர்"
இந்த நோக்கத்திற்காக
இதை, "இந்தக் காரணத்துக்காக" என்று மொழிபெயர்க்கலாம்.
கிரேத்தாவிலே உன்னை விட்டுவிட்டேன்
இதை, "நான் உன்னை கிரேத்தாவிலே தங்கும்படி சொன்னேன்" என்று மொழிபெயர்க்கலாம்.
இன்னும் நிறைவேறாதக் காரியங்களை நீ ஒழுங்குபடுத்தும்படிக்கு
"செய்து முடிக்க வேண்டியக் காரியங்களை நீ ஒழுங்குபடுத்தி செய்துமுடித்துவிட"
மூப்பர்களை ஏற்படுத்து
அதென்னவென்றால், "மூப்பர்களை நியமித்து"அல்லது மூப்பர்களை பதவிப்பிரமாணம் செய்.
Titus 1:6-7
ஒரு மூப்பன் குற்றமற்றவனாய் இருக்க வேண்டும்
(UDB பார்). இதை ஒரு ஆக்கப்பூர்வமான விளக்கத்தைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கலாம்: "நேர்மையோடு" அல்லது "நல்லப் பெயரோடு."
ஒரே மனைவியின் புருஷனாக
இந்தப் பதம், "ஒருப் பெண்ணின் ஆணாக" என்று அர்த்தப்படுகிறது. இது பொதுவாக, "ஒரே ஒரு மனைவியைத் தான் கொண்டிருக்க வேண்டும்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது (UDB). இது முன்னமே விதவையாக்கப்பட்ட மற்றும் விவாக ரத்து பெற்ற ஆண்களை அல்லது திருமணம் செய்யாத ஆண்களைத் தவிர்க்கிறதா என்பதைக் குறித்த விவாதம் நடந்தது.
விசுவாசமுள்ள குழந்தைகள்
இந்த சொற்றொடர்க்கான சாத்தியமான அர்த்தங்கள் 1. "இயேசுவில் விசுவாசம் வைக்கும் குழந்தைகள்" அல்லது 2. "நம்பத்தகுதியானக் குழந்தைகள்"
...என்று வகையறுக்கப்படாத
"...என்று அறியப்படாத" அல்லது "...என்று கருதப்படாத"
ஒழுக்கமில்லாத
"எதிர்த்து நிற்கிற" அல்லது "சட்டங்களைப் பின்பற்றாத"
கண்காணியானவனுக்குத் தேவை
இதை, "ஒரு கண்காணி கண்டிப்பாக" என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனுடைய வீட்டின் மேற்பார்வையாளன்
"தேவனுடைய உக்கிராணக்காரன்" அல்லது "தேவனுடைய வீட்டுக்குப் பொறுப்பாளி."
மதுவிற்கு அடிமையாகாதவன்
"மதுபானம் பண்ணுகிறவன் அல்லாமல்" அல்லது "குடிபோதைக்காரன் அல்லாமல்" அல்லது "அதிக மதுவைக் குடியாமல்"
சண்டைப் பண்ணுகிறவன்
"ஆக்ரோஷமானவன்" அல்லது "சண்டைப் போட விரும்புகிறவன்"
Titus 1:8-9
(சபைகளில் எப்படிப்பட்டவர்களை மூப்பர்களாக தீத்து நியமிக்கவேண்டும் என்று பவுல் விவரிப்பதைத் தொடர்ந்தார்)
அந்நியருக்கு நண்பன்
இதை, "விருந்தோம்பல் பண்புடையவன்" என்று மொழிபெயர்க்கலாம்.
நன்மைக்கு நண்பன்
"நல்லக் காரியங்களை நேசிக்கிறவன்" (UDB)
நன்றாய் பற்றிக்கொண்டு
"பக்தியோடு" அல்லது "நன்றாக அறிந்து கொண்டு" அல்லது "நல்ல புரிந்துகொள்ளுதலைக் கொண்டு"
உபதேசத்தில் நம்பத்தகுந்தவனும்
இதை, "வார்த்தையின் உண்மை" அல்லது "உண்மையாக வார்த்தையைப் போதிக்கிறது" என்று மொழிபெயர்க்கவும்.
தெளிவானது எதுவோ
"பலமுள்ளது எதுவோ" அல்லது "சரியானது எதுவோ"
Titus 1:10-11
விருத்தசேதனம் உள்ளவர்கள்
"விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள்" அல்லது "விருத்தசேதனத்தை வழக்கில் கொண்டுள்ளவர்கள்." இது விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களைக் குறிக்கிறது.
அவர்களுடைய வார்த்தைகள் மதிப்பில்லாதவைகள்
"அவர்களுடைய வார்த்தைகள் ஒருவருக்கும் பிரயோஜனமில்லை"
அவர்களை நிறுத்துவது அவசியமாய் இருக்கிறது
அவர்களுடையப் போதனைகளை அவர்கள் பரப்புவதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட வேண்டும்" அல்லது "அவர்களுடைய வார்த்தைகளால் மற்றவர்கள் மேல் தாக்கம் ஏற்படுத்துவதைத் தடுக்கவேண்டும்."
அவர்கள் போதிக்க வேண்டாதவைகள்
"போதிக்க சரியில்லாதக் காரியங்கள்"
வெட்கக்கேடான லாபத்துக்காக
"மக்கள் அவர்களுக்கு பணம் தருவார்கள் என்பதற்காக. இது மிகவும் வெட்கக்கேடானது!" (UDB). மதிப்பில்லாத காரியங்களை செய்து லாபத்தை மக்கள் எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது.
எல்லாக் குடும்பங்களையும் உடைத்து
"முழு வீட்டையும் கெடுத்து." இதை, "எல்லாக் குடும்பங்களின் விசுவாசத்தையும் அழித்து" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 1:12-13
(பவுல் சபைகளுக்குள் வந்திருக்கின்ற கள்ளப் போதகர்களைக் குறித்து எச்சரிப்பதைத் தொடர்கிறார்)
அவர்களுள் ஒருவன்
"கிரேத்தா மனிதரில் ஒருவன்" அல்லது "கிரேத்தா மக்களில் யாரோ ஒருவன்"
அவர்களுடைய ஒரு ஞானி
இதை, "அவனுடைய மக்கள் தீர்க்கதரிசி என்று நினைத்த ஒருவன்" என்று மொழிபெயர்க்கலாம். (UDB)
கிரேத்தாவின் மக்கள் ஓயாப் பொய்யர்
"கிரேத்தா மக்கள் எப்பொழுதும் பொய் சொல்லுகிறார்கள்" அல்லது "கிரேத்தா மக்கள் பொய் சொல்லுவதை நிறுத்த மாட்டார்கள்." இது மிகைப்படுத்தி சொல்லப்பட்டக் காரியம்.
தீமையான மற்றும் பயங்கரமான மிருகங்கள்
இந்த உருவகம், கிரேத்தா மக்களை அபாயகரமான மிருகங்களுக்கு ஒப்பிடுகிறது.
பெருவயிற்று சோம்பேறிகள்
"சோம்பேறி பெருந்தீனிக்காரர்கள்" அல்லது "ஒன்றும் செய்யாமல் அதிகமான உணவை மட்டும் உண்பவர்கள்." இந்த உருவகம், ஒரு முழு மனிதனைக் குறிக்க வயிற்றைப் பயன்படுத்துகிறது.
அவர்களைக் கண்டிப்பாகக் கடிந்துகொள்
"அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று அவர்களிடம் கண்டிப்பாக சொல்லு"
விசுவாசத்தில் அவர்கள் ஆரோக்கியமாய் இருக்கும்படி
"அவர்கள் பலமுள்ள விசுவாசம் வைத்திருக்கும்படி" அல்லது "அவர்கள் சத்தியத்தை நம்பும்படிக்கு" அல்லது "அவர்களுடைய விசுவாசம் உண்மையாக இருக்கும்படி"
Titus 1:14
(கள்ளப் போதகர்களை அப்படி சமாளிப்பது என்று பவுல் தீத்துவிற்கு சொல்லுகிறார்)
நேரத்தை வீணடிக்காதே
"அதை கவனிக்க உன் நேரத்தை செலவு செய்யாதே"
யூதர்களுடைய கட்டுக்கதைகள்
யூதர்களுடையக் கள்ளப் போதகத்தை இது குறிக்கிறது.
அவைகளை விட்டுத் திரும்பும்படி
"மக்கள் அதை நம்புவதை நிறுத்து"
Titus 1:15-16
(கள்ளப் போதகர்களின் குணாதிசயங்களைப் பவுல் தீத்துவிற்கு சொல்லுகிறதைத் தொடருகிறார்)
சுத்தமுள்ளவனுக்கு எல்லாம் சுத்தமாய் இருக்கும்
இதை, "சுத்தமாய் இருக்கிறவனுக்கு எல்லாம் சுத்தாமாய் இருக்கிறது" அல்லது "உள்ளே சுத்தமாய் இருக்கிறவனாய் யாராவது இருந்தால், அவர்கள் செய்யும் எல்லாம் சுத்தமாக இருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.
சுத்தம்
"சுத்தம்" அல்லது "தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய"
அசுத்தமுள்ளவர்களுக்கும், விசுவாசம் இல்லாதவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாய் இராது
இதை, "ஒருவன் நடத்தையில் ஒழுக்கமில்லாதவனுக்கும், விசுவாசிக்க முடியாதவனுக்கும் சுத்தமாக இருக்க முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.
மாசுபடுத்தப்பட்ட
"நடத்தையில் அசுத்தம்" அல்லது "கெட்டுப்போன" அல்லது "சீர்கெட்ட"
அவர்கள் செய்கிற காரியங்கள் அவரை மறுதலிக்கிறது
அவர்களுடைய செயல்கள் அவர்கள் அவரை அறியவில்லை என்பதைக் காட்டுகிறது."
அருவருக்கத்தக்க
"வெறுக்கத்தக்க"
எந்த நல்லக் காரியத்தையும் செய்ய ஆகாதவர்களாக அறியப்பட்டு
"எந்த நல்லக் காரியம் செய்ய தகுதியற்றவர்கள் என்று அவர்களே காண்பிக்கிறார்கள்"
Titus 2
Titus 2:1-2
(பவுல், கள்ளப் போதகர்களிடமிருந்து தீத்துவிற்கும் விசுவாசிகளுக்கும் தனது கவனத்தைத் திருப்புகிறார்)
ஆனால் நீங்கள்
இதை, "ஆனால் தீத்துவே, கள்ளப் போதகர்களுக்கு மாற்றாக" என்று மொழிபெயர்க்கலாம்.
ஆரோக்கியமான உபதேசத்தோடு
"ஆரோக்கியமான உபதேசத்தோடு" அல்லது "சரியான போதனைகளோடு."
வெதுவெதுப்பான
"மயங்கிய மனநிலையில் உள்ள" அல்லது "சுயக் கட்டுப்பாட்டோடு உள்ளவர்கள்." இதை, "அவர்களை ஆளுகை செய்" என்று மொழிபெயர்க்கலாம்.
உணர்வுள்ளவர்கள்
"சுயக் கட்டுப்பாட்டோடு உள்ளவர்கள்" அல்லது அவர்களுடைய விருப்பங்களை அடக்கி ஆளுகிறவர்கள்"
ஆரோக்கியமான
இது அடுத்த மூன்று காரியங்களை விளக்குகிறது. விசுவாசம், அன்பு, விடாமுயற்சி. "ஆரோக்கியமாய் இருக்கிறது என்றால் பலமுள்ளவர்களாக இருக்கிறது.
விசுவாசத்தில் (ஆரோக்கியம்)
"ஆரோக்கியமான விசுவாசத்தோடு" அல்லது "அவர்களுடைய நம்பிக்கைகளில் சரியாக"
அன்பில் (ஆரோக்கியம்)
"ஆரோக்கியமான அன்போடு"
விடாமுயற்சியில் (ஆரோக்கியம்)
"தொடர்ந்து" அல்லது "விடாமல்" அல்லது "சோர்ந்துபோகாமல்"
Titus 2:3-5
அதுபோல
"அதே விதமாக." இதை, வயதான ஆண்களுக்கு அறிவுரை சொல்லுவது போல, வயதானப் பெண்களுக்கும் புத்தி சொல்லு."
அவர்கள் தங்களைக் காண்பிக்கவேண்டும்
"இருக்க வேண்டும்" அல்லது "போல வாழ வேண்டும்"
புறங்கூறுகிறது
இங்கு "புறங்கூறுதல்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், "அவதூறு பண்ணுகிறவர்கள்" அல்லது "பிசாசுகள்" அல்லது "எதிரிகள்" ஆகும். உண்மையோ அல்லது பொய்யோ மற்றவர்களைக் குறித்து தீமையானக் காரியங்களைப் பேசுகிறவர்களை இது குறிக்கிறது.
கூப்பிடு
"போதி" அல்லது "ஒழுக்கப்படுத்து" அல்லது "உற்சாகப்படுத்து"
அவர்களுடைய நினைவுகளில் தெளிவாக இருக்க
"ஞானமாக யோசிக்க"
சுத்தமாக இருக்க
இதை, "நல்ல யோசனைகளை சிந்தித்து நல்லக் காரியங்களை செய்யுங்கள்" அல்லது "சுத்தமான நினைவுகளை நினைத்து நல்லக் காரியங்களை செய்யுங்கள் என்று மொழிபெயர்க்கலாம்.
தேவனுடைய வார்த்தை தூஷிக்கப்படாதபடிக்கு
"தேவனுடைய செய்தி மறுக்கப்படாதபடிக்கு." இதை, "பெண்கள் செய்கிற காரியத்தினால், தேவனுடைய வார்த்தை விமர்சிக்கப்படாதபடிக்கு அல்லது மறுக்கப்படாதபடிக்கு" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 2:6-8
அதே விதமாக
சபையில் பெண்களுக்குப் பயிற்சி கொடுக்கும் காரியத்தைக் குறிக்கிறது. தீத்து அதே வகையில் ஆண்களையும் தயார் செய்ய வேண்டும்.
அழைத்து
"போதி" அல்லது "சொல்" அல்லது "உற்சாகப்படுத்து"
உங்களை காண்பிக்க
இதை, "நீங்கள் இருக்க வேண்டும்" அல்லது "உங்களை அவ்வாறு காண்பித்து" என்று மொழிபெயர்க்கலாம்.
நல்லக் காரியங்களின் மாதிரி
"சரியானதை செய்கிறதிலும் தகுதியானக் காரியங்கள் செய்கிறதிலும் மாதிரியாக"
குற்றப்படுத்துவதற்கு இடங்கொடுக்காத ஆரோக்கியமான வார்த்தைகள்
"ஒரு தவறும் இல்லாத போதனை"
உன்னை எதிர்த்து வர முயற்சிக்கிறவனுக்கு வெட்கமுண்டாக
தீத்துவை எதிர்க்கிறவனே கடைசியில் வெட்கப்படும் ஒரு இக்கட்டான நிலையை இது காட்டுகிறது. இது நடந்து கொண்டிருக்கிற நிகழ்வைக் காட்டவில்லை. இதை வெளிக்காட்ட உங்கள் மொழியில் ஏதேனும் ஒரு வழி இருக்கலாம்.
Titus 2:9-10
அவர்களுடைய எஜமான்கள்
"அவர்களுடைய சொந்த எஜமான்கள்"
எல்லாவற்றிலும்
"எல்லா சூழ்நிலையிலும்" அல்லது "எப்பொழுதும்"
அவர்களை பிரியப்படுத்த
இதை, "அவர்களுடைய எஜமான்களை சந்தோஷப்படுத்த" அல்லது "அவர்களுடைய எஜமான்களை திருப்திபடுத்த" என்று மொழிபெயர்க்கலாம்.
நல்ல விசுவாசத்தைக் காட்டு
இதை, "அவர்களுடைய எஜமான்களுக்கு விசுவாசமாக" அல்லது "அவர்களுடைய எஜமான்களின் நம்பிக்கைக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று நிருபித்துக்காட்டு" என்று மொழிபெயர்க்கலாம்.
நம்முடைய இரட்சகராகிய தேவன்
"நம்மை இரட்சிக்கிற நம்முடைய தேவன்"
கவரக்கூடிய
விரும்பப்படக்கூடிய அலங்கரிக்கப்பட்ட ஒரு பொருளைக் குறிக்கவே "கவரக்கூடிய" என்கிற வார்த்தை இங்கு இருக்கிறது.
எல்லா வழியிலும்
"அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும்."
Titus 2:11-13
நீ பார்
தீத்துவே, புரிந்துகொள்"
எல்லாருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவக் கிருபை வெளிப்பட்டிருக்கிறது
இதை, "தேவனுடைய ரட்சிக்கும் கிருபை எல்லாருக்காகவும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.
தோன்றி இருக்கிறது
"வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது" அல்லது "பார்க்கக்கூடியதாய் இருக்கிறது."
அவபக்தியை மறுக்க எங்களைப் பயிற்றுவிக்கிறது
"சரியானக் காரியங்களை செய்ய எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது." இதை, "தீயக் காரியங்கள் செய்யத் தூண்டும் சோதனைகளை தடுக்க எங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.
கற்றுக்கொடுக்கிறது
இது, தேவக் கிருபையை மக்கள் பரிசுத்த வாழ்வு வாழும்படி கற்றுக்கொடுக்கிற ஒரு மனிதனைப் போல பாவிக்கும் உருவகம் ஆகும்.
உலக பற்று
"இந்த உலகத்தின் காரியங்கள் மேல் தீராத விருப்பம்" அல்லது "பூமிக்குரிய இச்சைகளின் மேல் தீராத ஆசை"
இந்தக் காலத்தில்
"இந்த உலகத்தில் நாம் வாழும்போது" அல்லது " இந்த சமயத்தில்"
நாம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிற
"நாம் வரவேற்க காத்திருக்கிற"
மகிமையின் வெளிப்படுத்தலை
"வெளிப்படுதல்" மற்றும் "மகிமை" என்கிற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு "மகிமையான வெளிப்படுதல்" என்று சொல்லலாம்.
Titus 2:14
நமக்காக அவரையே தந்தார்
"நமக்காக தன்னையே மரிக்க ஒப்புக்கொடுத்தார்"
எல்லா அக்கிரமங்களிலிருந்து நம்மை விடுவிக்கும்படி
"பாவ நிலையிலிருந்து நம்மை விடுவிக்கும்படி." இது, பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாவதை ஒரு அடிமையை மற்றொருவன் வாங்குகிறரதற்கு ஒப்புமையாக்கிக் காட்டும் உருவகம் ஆகும்.
சுத்தப்படுத்து
"சுத்தப்படுத்து"
பத்திரப்படுத்தப்பட்ட மக்கள்
இதை, "அவர் மேன்மையாகக் கருதும் ஒரு கூட்ட மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
வாஞ்சையோடு
"பலமான விருப்பம் வைத்து"
Titus 2:15
இந்தக் காரியங்களைக்குறித்து பேசி உற்சாகப்படுத்து
இதை, "இந்தக் காரியங்களை போதித்து கேட்கிறவர்கள் அவைகளைச் செய்ய அவர்களை உற்சாகப்படுத்து" என்று மொழிபெயர்க்கலாம்.
கடிந்துகொள்
"இந்தக் காரியங்களை செய்யாதவர்களை சரி செய்"
ஒருவனும்
"ஒருவனையும் அனுமதிக்காதே"
உன்னை அசட்டைப்பண்ண
இதை, "உன்னுடைய வார்த்தைகளைக் கேட்க மறுக்க" அல்லது "உன்னை மதிக்க மறுக்க" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 3
Titus 3:1-2
அவர்களுக்கு நினைவுபடுத்து
"அவர்களுக்கு ஏற்கனேவே தெரிந்தததை சபையிலுள்ள மக்களுக்கு திரும்பவும் சொல்லு" அல்லது "அவர்களுக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டிரு."
ஆளுகிறவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்பட்டிருக்கவும், அவர்களுக்குக் கீழ்ப்படியவும்
இதை "அரசாங்க அதிகாரிகளும் ஆளுகிறவர்களும் சொல்லுகிறபடி செய்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
ஆளுகிறவர்களும் அதிகாரிகளும்
இந்த வார்த்தைகள் ஒரே மாதிரியானவைகள். அரசாங்கத்தில் அதிகாரம் உடைய எல்லாரையும் சேர்த்துக்கொள்ளும்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
எல்லா நல்லக் காரியங்களுக்கும் ஆயத்தமாய் இருக்க
"நல்லக் காரியங்கள் செய்ய எப்பொழுதெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் செய்ய ஆயத்தமாய் இருக்க"
தூஷிக்க
"தீமையாக பேச"
மற்றவர்கள் அவர்களுடைய வழிகளில் நடக்கட்டும்
இதை, "சாந்தமாய் இருக்க" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 3:3
(தாழ்மையோடு ஏன் நாம் போதிக்கவேண்டும் என்பதைப் பவுல் தீத்துவுக்கு விவரிக்கிறார்)
ஏனென்றால்
"அதனால்"
ஒருமுறை
"முன்பு" அல்லது "ஒரு சமயத்தில்" அல்லது "முன்பு"
புத்தி இல்லாமல்
"முட்டாள்தனமாக" அல்லது "ஞானமில்லாமல்"
தப்பி நடத்தப்பட்டு பலவித இச்சைகளாலும் இன்பங்களாலும் அடிமைபடுத்தப்பட்டு
இந்த உருவகம், நம்முடைய பாவ விருப்பங்களின் கட்டுப்படுத்தலை அடிமைத்தனத்திற்கு ஒப்பிடுகிறது. இதை, "நம்முடைய பாவ ஆசைகள் நம்மை நம்முடைய விருப்பங்களுக்கே அடிமைகளாக மாற்றுகிறது" என்று மொழிபெயர்க்கலாம்.
வழி தப்பிப்போய்
இதை, "வஞ்சிக்கப்பட்டு" என்று மொழிபெயர்க்கலாம்.
பற்றுகள்
"இச்சைகள்" அல்லது "விருப்பங்கள்"
துர்குணத்திலும் பொறாமையிலும் வாழ்ந்து
இதை, "நாங்கள் எப்பொழுதும் தீமையானதை செய்து மற்றவர்கள் வைத்திருப்பவைகளையே விரும்பினோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
நாங்கள் அருவருக்கத்தக்கவர்கள்
"நாங்கள் வெறுக்கத் தகுதியானவர்கள்." இதை, "நாங்கள் மற்றவர்கள் எங்களை வெறுக்கும்படி செய்தோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 3:4-5
(தாழ்மையோடு ஏன் நாம் போதிக்கவேண்டும் என்பதைப் பவுல் தீத்துவுக்கு விவரிக்கிறார்)
நம்முடைய இரட்சகராகிய தேவனின் தயவும் மனிதகுலத்தின் மீது அவருக்குள் அவரது அன்பும் தோன்றின போது
இதை, "நம்முடைய இரட்சகராகிய தேவன் தமது அன்பையும் மக்கள் மேலுள்ள தயவையும் காண்பித்த பொழுது." என்று மொழி பெயர்க்கலாம்.
மனிதகுலத்திற்கு
"மனிதர்களுக்காக"
...இதன் மூலம் நம்மை ரட்சித்து
"இதன் வாயிலாக நம்மை ரட்சித்து" அல்லது "இதனால் நம்மை ரட்சித்து"
மறு பிறப்பின் முழுக்கினாலும்
இதை, "நம்முடைய ஆவிக்குரிய மறு பிறப்பின் மூலம் நம்மை சேர்த்துக்கொண்டு" என்று மொழிபெயர்க்கலாம்.
புதுப்பித்தல்
"புதிதாக மாற்றி." இதை, "பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக மாற்றினார்" அல்லது "பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிய மக்களாக மாற்றினார்" என்று மொழிபெயர்க்கலாம்.
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம்
"நாம் நல்லக் காரியங்களை செய்கிறதினால்" (UDB).
அதன்படி
"அது அளவின்படி"
Titus 3:6-7
(பவுல் தீத்துவிற்கு நாம் கிருபையைப் பெற்றதினால் தாழ்மையோடு போதிக்கவேண்டும் என்று நினைவுபடுத்துகிறார்)
பரிசுத்த ஆவியை நம் மீது பொழிந்தார்
ஆசாரியர்களின் அபிஷேகத்தை ஒத்துப்போகும் உருவகம் இது. இதை, "நமக்கு அளவில்லாமல் பரிசுத்த ஆவியைத் தந்தார்" என்று மொழிபெயர்க்கலாம்.
நித்திய
"நிரந்தரமான"
அதிகமாக
"நிறைவாக" அல்லது "அளவில்லாமல்"
நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்
"இயேசு நம்மை ரட்சித்த பொழுது"
நாம் நீதிமான்களாக்கப்பட்டு
இதை, "தேவனால் நாம் ஏற்கனவே நீதிமான்களாக்கப்பட்டோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
நாம் வாரிசுகளானோம்
இதை, "சுதந்தரத்தின் உரிமையோடு தேவன் நம்மை மகன்களாக்கினார்" என்று மொழிபெயர்க்கலாம்.
நித்திய வாழ்க்கையின் நம்பிக்கைக்கு
"நிச்சயமாக நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது என்று நமக்குத் தெரியும்."
Titus 3:8
இந்த வார்த்தைகள்
தேவன் நமக்கு இயேசுவின் மூலம் பரிசுத்த ஆவியானவரை தருகிறதை சொல்லி இருக்கும் முந்தய வசனத்தின் வாக்கியத்தை இது குறிக்கிறது.
அவர்களுடைய மனதை வைத்து
"கண்ணோக்கி" அல்லது "அதைக் குறித்து தொடர்ந்து சிந்தித்து"
அவர்களுக்கு முன்பாக போடப்பட்ட
இதை, "தேவன் அவர்களுக்கு செய்யும்படி கொடுத்தது" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 3:9-11
ஆனால்
"ஆனால் நீ, தீத்துவே"
முட்டாள்தனமான விவாதங்கள்
"முக்கியமல்லாதக் காரியங்களைக் குறித்த வாதங்கள்"
சண்டைகள்
"வாக்குவாதம்"
நியாயப்பிரமாணம்
"தேவனுடைய நியாயப்பிரமாணம்"
மறுத்துவிடு
இதை, "சம்பாஷனை வைக்காதே" அல்லது "நேரத்தை செலவு செய்யாதே" அல்லது "தவிர்த்துவிடு" என்று மொழிபெயர்க்கலாம்.
ஒன்று அல்லது இரண்டு எச்சரிப்புகளுக்குப் பிறகு
"அந்த மனிதனை ஒன்று அல்லது இரண்டு முறை எச்சரித்தப் பிறகு"
அவனைப் போல் இருக்கிறவன்
"அந்த மனிதனைப் போன்றவன்"
தன்னைத்தானே தண்டித்துக்கொள்ளுகிறான்
இதை, "நியாயத்தீர்ப்பை அவனே அவன் மீது கொண்டு வருகிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.
Titus 3:12-13
(கிரேத்தாவில் மூப்பர்களை நியமித்த பிறகு தீத்து என்ன செய்யவேண்டும் என்று பவுல் சொல்லி இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறார்.)
நான் அனுப்பும்போது
"நான் அனுப்பினப் பிறகு"
அர்த்தெம்மா, நிக்கொப்போலி, சேனா
மாரிக்காலத்தைக் கழித்து விடு
"மாரிக்காலத்தில் தங்கி இரு"
தீவிரித்து வா
"தீவிரப்பட்டு நீ வா" அல்லது "சீக்கிரமாய் வா"
தீவிரித்து அனுப்பு
"நீ தீவிரி" அல்லது "அனுப்புவதில் தாமதியாதே"
மற்றும் அப்பொல்லோ
"அப்பொல்லோவையும் அனுப்பு"
Titus 3:14
(பவுல், ஏன் சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் கொடுப்பது முக்கியம் என்பதைக் கூறுகிறார்)
அவர்களுக்கு முன்பாக வைத்து
"செய்வதில் தீவிரமாய் இரு"
அவர்கள் கனியற்றவர்களாய் போய்விடாதபடி
இந்த இரட்டு எதிர்மறை சாதகமாகக் கூட சொல்லப்படலாம்: "அவர்கள் கனிகொடுக்கும்படி" அல்லது "தேவனுக்கு அவர்கள் கனிகளைத் தரும்படி" அல்லது "அவர்களுடைய வாழ்க்கை உபயோகமாய் இருக்கும்படி."
Titus 3:15
(பவுல் தீத்துவுக்கான தனது கடிதத்தை நிறைவு செய்கிறார்)
அந்த எல்லா
"எல்லா மக்களும்"
விசுவாசத்தில் நம்மை நேசிப்பவர்கள்
சாத்தியமான அர்த்தங்கள்
- "எங்களை நேசிக்கும் விசுவாசிகள்" அல்லது 2. "ஒரே விசுவாசத்தை நாம் பகிர்ந்துகொள்ளுவதால் நம்மை நேசிக்கும் விசுவாசிகள்."
உங்கள் அனைவரோடும் கிருபை இருப்பதாக
இது ஒரு பொதுவான கிறிஸ்தவ வாழ்த்து ஆகும். இதை, "தேவனுடையக் கிருபை உங்களோடு இருப்பதாக" அல்லது "தேவன் உங்களோடு கிருபையாய் இருக்க நான் கேட்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.