2 Peter
2 Peter 1
2 Peter 1:1-2
சீமான் பேதுரு
"சீமான் பேதுருவிடமிருந்து." உங்கள் மொழியில் ஒரு கடிதத்தை எழுதும் ஆசிரியரை அறிமுகப்படுத்த பிரத்தியேக வழி இருக்கலாம். இதை, "சீமோன் பேதுருவாகிய நான் இந்தக் கடிதத்தை எழுதினேன்."
இயேசு கிறிஸ்துவின் அடிமையும் அப்போஸ்தலனும்
இயேசு கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கிறதினால் தன்னுடைய மனப்பான்மையை பேதுரு பேசுகிறார். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிறதினால் அவருக்கு ஸ்தானமும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது.
அவர்களுக்கு
இந்தக் கடிதத்தைப் படிக்ககக் கூடும் எல்லா விசுவாசிகளுக்கும் பேதுரு இதை சொல்லுவது போல இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "விசுவாசிகளுக்கு."
நான் பெற்றுக்கொண்டிருக்கிறோம்
"அப்போஸ்தலர்களாகிய நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம்."
உங்களுக்குக் கிருபை உண்டாவதாக
"உங்களுக்கு" என்ற வார்த்தை எல்லா விசுவாசிகளையும் பொதுவில் குறிக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு
விசுவாசிகளின் மற்றும் அப்போஸ்தலர்களின் கர்த்தராகிய இயேசு.
உங்களுக்கு கிருபை உண்டாவதாக, தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் சமாதானம் பெருகட்டும்.
மறு மொழிபெயர்ப்பு: "தயவும் உங்கள் சமாதானமும் பெருகுவதாக ஏனென்றால் நீங்கள் உண்மையில் தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்திருக்கிறீர்கள்."
2 Peter 1:3-4
நம்மை அழைத்தவர்
தேவன் முதலாவது நம்மை வந்தடைந்தார். "நம்மை" என்ற வார்த்தை பேதுருவையும் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களையும் குறிக்கிறது.
அவருடைய சொந்த மகிமையினாலும் காருணியத்தினாலும்
"தம்முடைய கனத்தினாலும் நேர்மையின் மகத்துவத்தினாலும்"
இவைகள் மூலமாக, அவர் விலைமதிப்பற்ற மற்றும் பெரிய வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார்
"தேவனுடைய விலைமதிப்பற்ற மற்றும் பெரிய வாக்குத்தத்தங்கள் அவருடைய கனத்தினாலும் மகத்துவத்தினாலும் வந்தது."
தெய்வீகத் தன்மை
"தேவனுடைய திவ்விய தன்மை"
துர் இச்சையினால் உலகத்திலுள்ள கேட்டுக்குத் நீங்கள் தப்புகையில்
இந்த உலகத்தின் சீர்கேடான விருப்பங்களிலிருந்து ஓடுகையில்."
2 Peter 1:5-7
விசுவாசிகளோடு பேதுரு பேசுவதைத் தொடர்ந்தார்
இதே காரணத்தால்
"தேவன் என்ன செய்தாரோ அதனால்"
திவ்விய சுபாவம்
"நேர்மையின் மகத்துவம்"
உங்களுடைய திவ்விய சுபாவத்தினால், அறிவை சம்பாதியுங்கள்
நன்னெறிகளில் இருந்தால், உங்கள் புரிந்துகொள்ளுதல் பெருகும்.
சகோதர சிநேகம் பெறுங்கள்
"ஒருவருக்கொருவர் தயவாய் இருங்கள்"
2 Peter 1:8-9
விசுவாசிகளோடு பேதுரு பேசுவதைத் தொடர்ந்தார்
இந்தக் காரியங்கள்
இது, விசுவாசம், திவ்விய சுபாவம், அறிவு, சுயக்கட்டுப்பாடு, நிலைத்திருத்தல், தெய்வீகத்தன்மை, சகோதர சிநேகம், மற்றும் அன்பு.
நீங்கள் வீணரும் கனியற்றவர்களுமாய் இருக்கமாட்டீர்கள்
"நீங்கள் விளைந்து, கனிகொடுப்பீர்கள்"
இந்தக் காரியங்கள் இல்லாதவர் யாராயினும்
இந்தக் காரியங்கள் இல்லாத எந்த மனிதனாயினும்.
அருகில் இருப்பதை மாத்திரம் பார்க்கிறவன்; குருடன்
இந்தப் பதம் அவனுக்கு முன்பு இருக்கும் உலகக் காரியங்களை மாத்திரம் நினைக்கும் மனிதனையும், பார்வையற்றவனுக்கு ஒப்பிடுகிறது.
2 Peter 1:10-11
விசுவாசிகளோடு பேதுரு பேசுவதைத் தொடர்ந்தார்
அதனால்
"அதனால்" என்ற வார்த்தை சரியாக சொல்லப்பட்டதற்குள்ள விசுவாசியின் பதிலளிப்பை இது துவக்குகிறது.
உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக்கொள்ளுங்கள்
"அழைப்பை" என்பது எல்லா மக்களுக்குமான தேவனால் உண்டான இரட்சிப்பின் அழைப்பை இது குறிக்கிறது. "தெரிந்துகொள்ளுதல்" என்ற வார்த்தை தேவன் தெரிந்துகொண்ட பிரத்தியேக மக்களைக் குறிக்கிறது. இந்த இரண்டு வார்த்தையும் ஒரே மாதிரியான அர்த்தம் கொண்டுள்ளது.
நீங்கள் தடுமாறமாட்டீர்கள்
நீங்கள் நன்னெறிகளில் அல்லது ஆவியில் வீழ்ந்து போகமாட்டீர்கள்.
2 Peter 1:12-15
அதனால்
தான் முன்பதாக எழுதினதை அடித்தளமாகக் கொண்டு ஒரு அறிக்கை செய்ய எழுத்தாளர் முனைகிறார்.
இந்தக் காரியங்களைக் குறித்து உங்களுக்கு நினைவுபடுத்த நான் எப்பொழுதும் தயாராய் இருக்கிறேன்
கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றவேண்டும், என்பதை நினைவுபடுத்துவத்தைத் தொடர்வேன் என்று பேதுரு வெளிப்படுத்துகிறார்.
இந்தக் காரியங்களைக் குறித்து
கிறிஸ்துவில் விசுவாசிகள் எவ்வாறு வளரவேண்டும்
உங்களை எழுப்ப
"உங்கள் கவனம் கொள்ளும்படி" என்பதை சொல்லும் ஒரு கூற்று இதுவாகும்.
நான் இந்த கூடாரத்தில்
"நான் உயிரோடிருக்கும் வரை" என்பதை சொல்லும் ஒரு கூற்று.
நான் இந்த கூடாரத்தை அகற்றிவிடுவேன்
"நான் மரித்துவிடுவேன்" என்பதை சொல்லும் ஒரு கூற்று.
இந்தக் காரியங்களை நீங்கள் நினைவில் கொள்ள நான் என்னால் முடிந்த சிறந்ததை செய்வேன்
"நான் இந்தக் காரியங்களைக் கற்றுக்கொடுக்க என்னால் ஆனதை செய்வேன் அப்பொழுது தான் நீங்கள் நினைவில் கொள்ளுவீர்கள்."
நான் சென்ற பின்பு
"நான் மரித்தப் பிறகு" என்பதை சொல்லும் ஒரு கூற்று இதுவாகும்.
2 Peter 1:16-18
நாம் கண்டறியப்பட்ட சாதூரியமான மர்மங்களைப் பின்தொடர்வது இல்லை
அப்போஸ்தலர்களாகிய நாம் சாதூரியமாக உண்டாக்கப்பட்ட கதைகளை நாம் நம்புவதில்லை.
நம்முடைய
அப்போஸ்தலர்கள் எங்களையும் சேர்த்து எல்லா விசுவாசிகளும்
பரலோகத்திலிருந்து வந்த இந்த சத்தத்தை நாங்கள் கேட்டோம்
பேதுரு தேவனுடைய சத்தம் கேட்டதாக, தன்னையும் மற்ற சீடர்களையும் யாக்கோபு மற்றும் யோவானையும் குறிப்பிடுகிறார்.
அவரோடு நாங்கள் அந்த பரிசுத்த மலையில் இருந்தபோது
இயேசு பிரகாசமான ஒளியில் பேதுரு முன்பாகவும், யாக்கோபின் முன்பாகவும், யோவானின் முன்பாகவும் ஜொலித்ததை பேதுரு இங்கு குறிப்பிடுகிறார்.
2 Peter 1:19-21
தீர்க்கமான தீர்க்கதரிசன வார்த்தை நமக்குண்டு
பேதுரு அப்போஸ்தலர்களை குறிப்பிடுகிறார். தேவனிடமிருந்து வந்த சத்தியமான வார்த்தை என்று அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்த செய்தியை வைத்துள்ளனர்.
பங்குபெற நீங்கள் நன்று செய்ததற்கு
பேதுரு எல்லா விசுவாசிகளையும் தீர்க்கதரிசன செய்தியை நம்பும்படி கூறுகிறார்.
காலை வரும்வரை இருளில் ஒளிரும் விளக்குபோல
இந்த தீர்க்கதரிசன வார்த்தை காலை வரும்வரை இருளில் ஒளி தரும் விளக்குக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் இருதயங்களில் காலை நட்சத்திரம் உதிக்கிறது
விசுவாசிகளின் இருதயங்களில் தங்கும்படி காலை நட்சத்திரமான கிறிஸ்து வருகிறார்.
தேவனிடமிருந்து பேசுகிற பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்ட மனிதர்களால்
தேவன் தங்களுக்கு சொன்னதைப் பேசும் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள்.
2 Peter 2
2 Peter 2:1-3
இஸ்ரவேலுக்கு கள்ளத் தீர்க்கதரிசிகள் வந்தார்கள், கள்ளப்போதகர்கள் உங்களிடம் வருவார்கள்
தங்களுடைய வார்த்தைகளால் இஸ்ரவேலை ஏமாற்ற வந்த தீர்க்கதரிசிகளைப் போல கள்ளப்போதகர்கள் கிறிஸ்துவைக் குறித்து பொய்களை வந்து கற்பிப்பார்கள்.
வேதப்புரட்டு
கிறிஸ்துவின் மற்றும் அப்போஸ்தலர்களின் போதகங்களுக்கு எதிராக உள்ளக் கருத்துகள்
அவைகளைக் கொண்டு வந்த எஜமான்
தன்னுடைய மரணத்தாலும், அடக்கம் பண்ணுதலாலும், உயிர்த்தெழுதலாலும் இயேசு எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் பரிகாரம் செய்த எஜமான்.
அவர்களுடைய காமவிகாரம்
"அவர்களுடைய" என்பது கள்ளப்போதகர்களையும் கள்ளத்தீர்க்கதரிசிகளையும் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "அவர்கள் எவ்வாறு உச்சத்தில் தவறான நடக்கையில் செயல்படுகின்றனர்."
அவர்களுக்கு எதிரான தீர்ப்பு தாமதிக்காது; அவர்களுடடைய அழிவு நின்று போகாது
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு மிகவும் தாமதிக்காமல் வந்து சேரும்.
2 Peter 2:4-6
பாவம் செய்த தூதர்களை தேவன் விட்டுவைக்கவில்லை என்றால்...
2:9 இல் முடியும் "என்றால்" என்ற கூற்றுகளை இது துவங்கியது.
கீழே டார்டரசுக்கு
"டார்டரஸ்" என்பது கிரேக்கத்திலிருந்தும் ரோம மதத்திலிருந்தும் எடுக்கப்பட்ட நரகத்துக்கான கிரேக்க வார்த்தை.
நியாயத்தீர்ப்பு வரை சங்கிலிகளால் கட்டப்பட்டு இருளில் வைக்கப்பட்டு
தேவனுடைய நியாயத்தீர்ப்பை எதிர்பார்த்து அரணான சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு.
முந்தய உலகத்தை அவர் விட்டுவைக்கவில்லை என்றால்...ஆனால் பக்தியில்லாத உலகத்தின் மேல் வெள்ளத்தை வரவைத்து
தேவன் தெய்வ பக்தியில்லாதவர்களையும் முந்தய உலகத்தையும் வெள்ளத்தால் அழித்தார்.
ஆனால் நோவாவைப் பாதுகாத்தார்
தேவன் நீதிமானான நோவாவை வெள்ளத்திலிருந்து பாதுகாத்தார்.
சோதோம் கொமோராவை சாம்பலாக்கிப்போட்டார்
தேவன் சோதோம் கொமோரா பட்டணங்களிலிருந்த பக்தியில்லாதவர்களை அழிக்க அக்கினியை பயன்படுத்தினார்.
வரப்போகும் காரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு
சோதோம் கொமோரா அக்கினியால் அழிக்கப்பட்டதுபோல, கால முடிவில், தேவன் பக்தியில்லாதவர்களை அக்கினி கடலில் அழிப்பார்.
2 Peter 2:7-9
அவர் நீதிமானான லோத்தை காத்தார்
தேவன் நீதியாக வாழ்ந்த லோத்தை விடுவித்தார்.
நடக்கையால் தொடர்ந்து கஷ்டப்பட்டவர்
சோதோம் கொமோரா பட்டனத்தாரின் சீர்கெட்ட நடக்கையால் லோத்து தொடர்ந்து கஷ்டப்படுத்தப்பட்டு அல்லது சங்கடப்படுத்தப்பட்டார்.
இச்சை நிறைந்த மனிதர்கள்
"தவறான பாலுணர்வு கொண்ட மனிதர்கள்"
அந்த நீதிமான்
இது நீதிமானாய் இருந்த லோத்தைக் குறிக்கிறது.
பக்தியுள்ள மனிதர்கள்
"தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள்"
அவனுடைய நீதியான ஆத்துமாவை வாதித்தது
அவனுடைய உள்ளான மனிதனை வாதித்தது.
காவலிலுள்ள அநீதியான மனிதர்கள்
தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அநீதிக்காரர்கள் தப்பமாட்டார்கள். அவர்கள் மரித்தோர் நியாயத்தீர்ப்பின் நாள் மட்டும் வைக்கப்படுவார்கள்.
2 Peter 2:10-11
இது பிரத்தியேகமான உண்மை
"இது" என்ற வார்த்த்தை 2:9 இல் உள்ளபடி, தேவன் அநீதிக்காரரை காவலில் நியாயத்தீர்ப்பு நாள் வரை வைக்கிறதைக் குறிக்கிறது.
சீர்கேடான மாமிச விருப்பங்களிலும் அதிகாரத்தை வெறுக்கிறதையும் தொடர்கிறவர்கள்
பாவ சுபாவத்தை பின்பற்றி ஆளுகிறவர்களையோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களையோ வெறுக்கிற தெய்வ பக்தி இல்லாதவர்கள்.
மாமிசம்
"மாமிசம்" என்ற வார்த்தை சரீரப்பிரகாரமான அல்லது மனிதர்களுடைய பாவ சுபாவத்தைக்குறிக்கிறது.
அவர்கள் தைரியம் உள்ளவர்களும் சுய சித்தம் உள்ளவர்களுமானவர்கள்
"அவர்கள்" என்ற வார்த்தை தங்களது பாவ சுபாவத்தின் சீர்கேடான விருப்பங்களில் தொடர்கிறவர்களுமாய், தூதர்களின் ஆவிக்குரிய அதிகாரத்தை மதியாதவர்களையும் குறிக்கிறது.
மகிமையானவர்களை தூஷிக்கவும் பயப்படாதவர்கள் அவர்கள்
பக்தியில்லாதவர்கள் தூதர்களை அவமானப்படுத்தவும் அவர்களைக் குறித்து தீமையானக் காரியங்களை சொல்லவும் பயப்படாதவர்கள்.
எல்லா மனுஷரைக் காட்டிலும் தூதர்களுக்கு பெரிய வல்லமையும் திறமையும் உள்ளது
தூதர்கள் மனிதர்களைக் காட்டிலும் சரீரத்தில் பலசாலிகளாகவும் அதிக அதிகாரம் மற்றும் தாக்கம் உடையவர்களையும், இருக்கிறார்கள்.
அவர்கள் மேல் அவமானமான தீர்ப்பை அவர்கள் கர்த்தரிடம் கொண்டுவரமாட்டார்கள்
"ஆனால் தூதர்கள் அவமானமான தீர்ப்பை இந்த மனிதர்களுக்கு எதிராக கர்த்தரிடம் கொண்டுவரமாட்டார்கள்."
2 Peter 2:12-14
இந்த புத்தியற்ற மிருக ஜீவன்கள்
மிருகங்கள் நிதானிக்க முடியாததுபோல, இந்த மனிதர்கள் நிதானிக்கப்பட முடியாது. மறு மொழிபெயர்ப்பு: "இந்த கள்ளப்போதகர்கள் புத்தியற்ற மிருகங்களைப் போல இருக்கிறார்கள்"
தாங்கள் நிந்திக்கிறது என்னவென்று அவர்களுக்கு தெரியாது
தாங்கள் அறியாததை அல்லது புரியாததைக் குறித்து அவர்கள் தீது பேசுகிறார்கள்.
அவர்கள் அழிக்கப்படுவார்கள்
மறு மொழிபெயர்ப்பு: "தேவன் இந்த ஜனங்களை அழிப்பார்."
தங்களது தவறான நடத்தையினால் அவர்கள் சேதப்படுகிறார்கள்.
"தங்களுக்கு நல்லது என்று நினைக்கிறது அவர்களுக்கு உண்மையில் தீமையானதாகும்."
அவைகள் கரைகளும் இலச்சைகளும்
கள்ளப்போதகர்கள் கனவீனமாயும் அவமானமாயும் மற்றும் கரையைப் போன்றும் இலச்சையைப் போன்றும் எளிதில் கலையமுடியாத தேவையற்ற கறையைப் போலவும் இருக்கிறார்கள்."
உங்களோடு உணவு அருந்தும்போது தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் இருக்கிறார்கள்
எதார்த்தமானவர்களை வஞ்சித்து அவர்களை உற்றுப்பார்க்கும்போதும்கூட குற்ற உணர்வில்லாமல், தங்களது சந்தோஷங்களில் திளைக்கிறார்கள்.
விபச்சாரப் பெண்களால் நிறைந்த கண்கள்; அவைகள் பாவத்தினால் ஒருபோதும் திருப்தியடையவில்லை
"அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் இச்சித்தும் திருப்தியடையாதவர்களும்."
பொருளாசையில் பழகின இருதயங்கள்
"இருதயம்" என்பது ஒரு முழு மனிதனைக் குறிக்கிறது. பேராசையில் நினைவாயிருக்கவும் செயல்படவும் பழக்கப்பட்டதுமாயிருக்கிறது. அவர்கள் தவறாக சொத்தையோ அல்லது சம்பத்தையோ விரும்புகிறார்கள்.
2 Peter 2:15-16
அவர்கள் விட்டார்கள்...தப்பி நடந்து...பின்பற்றி
"கள்ளப் போதகர்கள் கைவிட்டார்கள்...தப்பிப்போனார்கள்...பின்பற்றினார்கள்." கள்ளப்போதகர்கள் சரியானதை தவிர்த்து தேவனுக்குக் கீழ்ப்படிவதை விட்டார்கள்.
அநீதத்தின் கூலியைப் பெற விரும்புகிறவர்கள்
சீர்கேடான நடத்தைக்கும் பாவ செயல்களுக்குமானக் கூலியை ஏற்றுக்கொண்டார்கள்.
அல்லது தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளுதலை பெற்றுக்கொண்டான்
அவனது கீழ்ப்படியாமைக்குத் தக்கதாக சரிகட்டப்பட்டான்.
தீர்க்கதரிசியின் மதிகேட்டைத் தடுத்தது
தேவன் ஒரு கழுதையை உபயோகப்படுத்தி தீர்க்கதரிசியின் முட்டாள்தனமான செயலைத் தடுத்தார். (எண். 22:21
30)
2 Peter 2:17-19
இந்த மனிதர்கள் தண்ணீரில்லாத ஊற்றுகளைப்போல இருக்கிறார்கள்
சரீர வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீர் கொடுக்காத காய்ந்துபோன ஊற்றைப் போல, அவர்களது போதகம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நடத்திசெல்லாது. "அவர்கள் புத்துனர்ச்சிக்கான தவறான இடம். ஒரு காலியான பாலைவனச் சோலை."
சுழற்காற்று அடித்துக்கொண்டுபோகிற மேகங்கள் அவர்கள்
புயல் மேகங்கள் மழை சுமக்கிறது. இந்த மழை புத்துதுணர்ச்சியைக்கொடுக்கும் தண்ணீரையோ அல்லது அழிவுக்கேதுவான வெள்ளங்களையும் கொடுக்கலாம். இந்த மனிதர்கள் அழிவை சுமந்து செல்லும் மேகங்களைப் போல இருக்கிறார்கள்.
வீணான அகந்தையில் அவர்கள் பேசுகிறார்கள்
அவர்கள் பேச்சு அர்த்தமில்லாமல் பெருமைமிக்கதாய் இருக்கிறது.
மாமிச இச்சைகளினால் மக்களைத் தங்கள் வழிக்கு உட்படுத்துகிறார்கள்
மக்களை சீர்கேட்டுக்கும் பாவ செயல்களும் செய்ய வைக்க அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்தில் இருந்து அரிதாய் தப்புகிற மக்களை அவர்கள் சீண்டுகிறார்கள்
விசுவாசத்துக்கு புதிதானவர்களை நோக்கி பதிவிருக்கிறார்கள்.
அவர்களுக்கு சுயாதீனத்தை வாக்குக்கொடுக்கிறார்கள்; ஆனால் அவர்களோ கேட்டுக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள்
அவர்கள் பொய்யான சுயாதீனத்தை வாக்களிக்கிறார்கள்; என்னவென்றால், விசுவாசிகளுக்கு பாவத்துக்கான சுயாதீனம். ஆனால் இது பாவத்தின் அடிமைத்தனம்.
தன்னை மேற்கொள்ளுகிற எதற்கும் அவன் அடிமையாய் இருக்கிறான்
தான் சுயக்கட்டுப்பாடு இழந்த விருப்பங்களை ஒரு மனிதன் தொடருவான்.
2 Peter 2:20-22
நம்முடையக் கர்த்தரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்புகிற யாராயினும்
கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அசுத்தமான மற்றும் பாவமான வாழ்க்கை வாழுகிற எந்த மனிதனும்.
முந்தையானதைவிட இது அவர்களுக்கு கேடாய் அமைந்தது
அவர்களுக்குக் கேடாய் இருந்தது ஏனென்றால் அவர்கள் பரிசுத்த வாழ்க்கையைக் குறித்த அறிவு இருந்தும் பாவ வாழ்க்கைக்குத் திரும்பினதினாலேயே.
நீதியின் வழியை அறிந்து
தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்து.
அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்தக் கட்டளை
தேவனுக்காக எப்படி வாழவேண்டும் என்று அவர்கள் அறிந்துகொள்ள தேவன் அவர்களுக்கு சட்டதிட்டங்களைக் கொடுத்தார்.
இந்த நீதிமொழி...நாய் தான் கக்கினதற்கு திரும்புவதுபோல . கழுவப்பட்டப் பன்றி சேற்றுக்குத் திரும்புவதுபோல
சத்தியத்தை அறிந்தும் பாவமான வழிக்குப் போகிறவர்களைக் குறித்து சொல்லும் ஒரு ஞான மொழி. "நாய் தான் கக்கினதற்கு திரும்புகிறது" 26:11 இல் உள்ள நீதி மொழியைக் குறிக்கிறது. இரண்டு காரியத்திலும், அர்த்தம் என்னவென்றால், "தன்னைத் தீட்டுப்படுத்தாமல் வைத்துக்கொள்ள பழக்குவிக்கமுடியாத ஒரு மிருகம்."
2 Peter 3
2 Peter 3:1-2
இப்பொழுது, நான் உங்களுக்கு எழுதுகிறேன், பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை உங்கள் உண்மையான மனதை தூண்டுவதற்காக எழுதுகிறேன்
பேதுரு தன்னுடைய ஆலோசனையை மாற்றி இப்பொழுது தன்னுடைய வாசகர்களை விசுவாச சிந்தனையையும் கிரியைகளையும் நினைப்பூட்டுகிறார்.
முந்தி சொல்லப்பட்ட வார்த்தைகளை நீங்கள் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளும்படி
காரணம் என்னவென்றால், அப்போஸ்தலர்களாலும், பரிசுத்த தீர்க்கதரிசிகளாலும், இயேசுவின் கட்டளையாலும் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட வார்த்தைகளின் நினைவுகளை புதுபிக்கும்படிக்கு.
2 Peter 3:3-4
இதை முதலாவது அறிந்துகொள்ளுங்கள்
"இது முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டியவை"
"அவருடைய வருகையின் வாக்குத்தத்தம் எங்கே?
கேலிசெய்கிறவர்கள் மிகவும் தந்திரமாக இதை பதில் எதிராமல் வினவுகிறார்கள். மறு மொழிபெயர்ப்பு: "இயேசு மீண்டும் வருவார் என்ற வாக்குத்தத்தம் உண்மை இல்லை."
சிருஷ்டிப்பு துவக்கி இதுமுதல் எல்லாக் காரியங்களும் இருந்தவன்னமாகவே இருக்கிறது
மனிதனின் விழுதலில் இருந்து வாழ்க்கையின் ஆரம்ப நிலையை இது குறிக்கிறது. ஜனங்கள் பிறக்கிறார்கள், மரிக்கிறார்கள். திருமணம் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்துவைக்கப்படுகிரார்கள். தொடர்ந்து வரும் பாவமும் சண்டையும் இருக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "வாழ்க்கையின் கஷ்டங்கள் ஆரம்பம் முதல் இருந்தவண்ணம் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை சுலபமாக்க மேசியாவின் ஆட்சி இன்னும் வரவில்லை."
2 Peter 3:5-7
அவர்கள் வேண்டும் என்று இதை மறந்தார்கள்
கேலிசெய்கிறவர்கள் , சிருஷ்டிப்பு துவங்கி ஒன்றும் மாறவில்லை மற்றும் அவர்கள் வேண்டும் என்றே மறக்க சித்தம் கொண்டார்கள் என்று சொல்லுகிறார்கள்.
வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து அன்றொருநாள் தேவனுடைய வார்த்தையால் தண்ணீர் மூலமாய் நிறுவப்பட்டது
"தேவன் சொன்னார், வானங்கள் நிறுவப்பட்டது, பூமி தண்ணீரிலிருந்து வெளியே வந்தது மற்றும் தண்ணீரால் பிரிக்கப்பட்டது.
அவருடைய வார்த்தையாலும் தண்ணீரினாலும் அந்த நேரமிருந்த உலகம் வெள்ளக்காடாகி அழிக்கப்பட்டது
"உலகம் உருவாக தேவன் பயன்படுத்தின அதே வார்த்தையை அதை தண்ணீரினால் அழிக்கவும் பயன்படுத்தினார்."
அதே வார்த்தை
"தேவனுடைய வார்த்தை"
அதே வார்த்தையின் அக்கினிக்கு இந்த வானங்களும் பூமியும் வைக்கப்பட்டுள்ளது
"தேவனுடைய வார்த்தை வானங்களையும் பூமியையும் அக்கினிக்கு வைக்கிறது."
நியாயத்தீர்ப்பின் நாளுக்கும் பக்தியில்லாதவர்களை அழிக்கவும் வைக்கப்பட்டுள்ளது
வானங்களும் பூமியும் தேவன் பக்தியில்லாதவர்களை தீர்ப்பு செய்யும் வரை வைக்கப்பட்டுள்ளது.
2 Peter 3:8-9
இது உங்கள் கவனத்திலிருந்து தப்பவிடக்கூடாது, பிரியமானவர்களே
"பிரியமானவர்களே, மறந்துவிடாதீர்கள்"
கர்த்தரோடு இருக்கும் அந்த ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப் போல இருக்கிறது, ஆயிரம் வருஷம் ஒரு நாளைப் போல இருக்கிறது
தேவன் நேர திட்டத்தில் இல்லை.
அவர் தாமதிக்கிறார் அன்று சிலர் எண்ணுகிறதுபோல அல்ல, அவர் உங்கள் மீது பொறுமையாய் இருக்கிறார்
தம்முடைய வாக்குத்தத்தங்களில் தேவன் தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணலாம், ஆனால் அவர் உங்கள் மீது பொறுமையாய் இருக்கிறார்.
எல்லாரும் மனந்திரும்ப அவர் அனுமதிக்க விரும்புகிறார்
தன்னுடைய நியாயத்தீர்ப்பின் நாளுக்கு முன் எல்லாரும் மனந்திரும்புவதர்கான நேரத்தை தேவன் கொடுக்கிறார்.
2 Peter 3:10
எப்படியாயினும்
கர்த்தர் மக்கள் மனந்திரும்ப பொறுமையாய் இருந்தாலும், அவர் மீண்டும் வந்து நியாயத்தீர்ப்பு கொண்டுவருவார்.
ஒரு திருடனைப் போல கர்த்தருடைய நாள் வரும்
ஒரு திருடன் ஒரு வீட்டுக்குத் திருட வருவதுபோல இயேசு சொல்லாமல் தோன்றுவார்.
ஒரு பெரிய சத்தத்தோடு வானம் அகன்று போகும். பூதங்கள் அக்கினியால் எரியும்
பெரிய சத்தமும் அக்கினியும் வானத்தின் மற்றும் பூமியின் அழிவை சொல்லும் பிரத்தியட்ச விளக்கமாகும். ஒருவருடைய கவனத்தையும் அது விட்டுவிடாது.
அதனுள் இருக்கும் கிரியைகளும் நியாய்ந்தீர்க்கப்படும்
தேவன் ஜனங்கள் செய்த எல்லா நல்லதையும் அல்லது கெட்டக் காரியங்களையும் நியாயந்தீர்ப்பார்.
2 Peter 3:11-13
இந்தப் பிரகாரமாக இந்த எல்லாக் காரியங்களும் அழிக்கப்படும்
"எல்லாக் காரியங்களும் அக்கினியால் அழிக்கப்படும்"
நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்?
பேதுரு, பூமியும் மனுஷரின் கிரியைகளும் நியாயந்தீர்க்கப்படும் என்று அறிந்து எப்படிப்பட்ட பரிசுத்த மற்றும் தேவபக்தி உள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்று விசுவாசிகளுக்கு சவால் விடுக்கிறார்.
எப்படியாயினும், அவர் வாக்குபண்ணின புதிய வானத்தையும் புதிய பூமியையும் நாம் எதிர்பார்க்கிறோம்
கர்த்தர் வாக்குபண்ணின புதிய வானமும் புதிய பூமியும் கண்டிப்பாக வரும் என்று விசுவாசிகள் நம்புகிறார்கள்.
2 Peter 3:14-16
அவரோடு சமாதானத்தோடு காணப்பட
"தேவனோடு சமாதானத்தோடு இருக்க"
கர்த்தருடைய நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்
இயேசுவில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு கர்த்தர் நித்திய வாழ்வைக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்.
நம்முடைய பிரியமான சகோதரனாகியப் பவுல்
பேதுரு விசுவாசிகளுக்கு எழுதுவதுபோல எழுதும் ஒரு சக அப்போஸ்தலன்.
அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தின்படி
மறு மொழிபெயர்ப்பு: "தேவன் பவுலுக்குக் கொடுத்த அறிவின்படியும் புரிந்துகொள்ளும்படியும்"
தன்னுடைய எல்லாக் கடிதங்களிலும் இந்தக் காரியங்களையும் குறித்து பவுல் பேசுகிறார்
"தன்னுடைய எல்லா கடிதத்திலும் இரட்சிப்புக்கு தேவனுடைய பொறுமையான நடத்துதலைப் பற்றி பேசுகிறார்."
புரிந்துகொள்ள கடினமானக் காரியங்கள் இருக்கின்ற
பவுலின் கடிதத்தில் அர்த்தம் கொள்ளக் கடினமானக் காரியங்கள் இருக்கிறது.
கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் இந்தக் காரியங்களைப் புரட்டுகிறார்கள்
தேவபக்தியில்லாத மனுஷர் கடைசிக் காலத்தின் காரியங்களிக் குறித்து தவறானக் கருத்துக்களைக் கொடுத்து மற்ற வேத வாக்கியங்களையும் புரட்டுகிறார்கள். அதற்காக அவர்கள் நியாந்தீர்க்கப்படுவார்கள்.
2 Peter 3:17-18
அதனால், பிரியமானவர்களே, இந்தக் காரியங்களை நீங்கள் அறிந்திருக்கிறபடியால்
தேவனுடைய பொறுமையையும் கள்ளப்போதகர்களின் போதனைகளையும் குறித்த சத்தியம்.
உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்
"எச்சரிக்கையாயிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்"
உங்கள் உண்மையை நீங்கள் இழந்துபோய்
இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நீங்கள் சந்தேகப்பட ஆரம்பித்து.
ஆனால் வளருங்கள்...
விசுவாசிகள் தங்களது உண்மையில் எப்படி வளரவேண்டும் என்றும் கள்ளப்போதகர்களுக்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்றும் பேதுரு விளக்குகிறார்.