தமிழ்: translationNotes

Updated ? hours ago # views See on DCS Draft Material

James

James 1

James 1:1-3

யாக்கோபு, ...

இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு. இதை, "யாக்கோபாகிய நான், ..." என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்

"நான்" என்கிற பதம் மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது. இதை, "நான் தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்" என்று மொழிபெயர்க்கலாம்.

சிதறிப்போன பன்னிரண்டு கோத்திரங்களுக்கு

ஸ்தேவானைக் கல்லெறிந்தப் பிறகு எழும்பின உபத்திரவத்திற்குத் தப்பி யூதேயாவிற்கு வெளியே உள்ள ரோம பட்டணங்களுக்கு ஓடிப்போன எல்லா யூத விசுவாசிகளுக்கும் யாக்கோபு எழுதுகிறார்.

பன்னிரண்டு கோத்திரங்கள்

எண்களை எழுதுவதில் ஒன்று போல இருக்கப் பாருங்கள். இதை "12 கோத்திரங்கள்" எனவும் காட்டலாம்.

வாழ்த்துக்கள்

"வணக்கம்" அல்லது "நன்னாள்" என்பது போன்ற அடிப்படையான வாழ்த்து.

வெவ்வேறு பாடுகள் படும்போது, அதை சந்தோஷமாக கருதுங்கள்

"என்னுடைய சக விசுவாசிகளே, உங்களுடைய எல்லா வகையான பாடுகளையும் கொண்டாடுவதற்கு ஒன்றாக நினையுங்கள்"

உங்களது விசுவாசம் சோதிக்கப்படும்போது பொறுமையை உண்டாக்குவதுபோல

"தேவன் இந்த பாடுகளை உங்களுடைய விசுவாசம் பலப்பட பயன்படுத்துவார் என்று நீங்கள் அறிந்திருக்கிறதினால்"

James 1:4-5

பொறுமையானது அதன் வேலையை நிறைவேற்றட்டும்

கடினமான தருணங்களில் கூட நினைத்து நிற்கத் தொடரும்படிக்கு. இதை, "உங்களுடைய பாடுகளின் பொது பலமாய் தரித்திருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் அவ்வாறாகும்படிக்கு

"உங்களுடைய விசுவாசத்தை தேவன் ... செய்யும்படிக்கு"

நீங்கள்

"நீங்கள்" என்னும் வார்த்தை யூத விசுவாசிகளைக் குறிக்கிறது.

முற்றிலும் தேறி

"முற்றிலும் பூரணமாகி"

ஒன்றிலும் குறைவில்லாமல்

இந்த எதிர்மறைக் கூற்று ஆக்கப்பூர்வமாக, "அதிகம் உடையவர்களாக" என்று சொல்லப்படலாம்.

கொடுக்கிறவராகிய தேவனிடத்தில் கேட்கவேண்டும்

"அதற்காக தேவனிடத்தில் கேள். அவர் தான் ஞானத்தைக் கொடுக்கிறவர்."

சம்பூரணமாயும் கடிந்துகொள்ளாமலும்

"கடிந்துகொள்ளாமல்" என்பது எதிர்மறை கூற்றாகும். அதை ஆக்கப்பூர்வமாக, "சம்பூரணமாயும் சந்தோஷமாயும்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவன் அதை உங்களுக்குக் கொடுப்பார்

"தேவன் அதை செய்வார்" அல்லது "தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு பதில் அளிப்பார்"

James 1:6-8

விசுவாசத்தில், சந்தேகமில்லாமல்

"சந்தேகமில்லாமல்" என்பது எதிர்மறையானக் கூற்று; இதை ஆக்கப்பூர்வமாக "தேவன் பதில் அளிப்பார் என்கிற முழுமையான நிச்சயத்தோடு" என்று மொழிபெயர்க்கலாம்.

சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு அலைகிற கடலில் இருக்கும் அலையைப் போன்றவன்

இது சந்தேகப்படும் ஒரு மனிதனை தொடர்ந்து திசையை மாற்றிக்கொண்டு போகும் தண்ணீருக்கு ஒப்பிடுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் நடுவே முன்பும் பின்பும் போய் வந்து கொண்டிருக்கிறது" அல்லது "தான் விசுவாசிப்பதை எப்பொழுதும் மாற்றிக்கொண்டிருக்கிறது."

அவனுடைய வேண்டுகோள்

"அவன் வேண்டுவது எதுவோ"

கர்த்தருடைய

"கர்த்தரிடமிருந்து"

இருமனமுள்ள மனிதன்

"இருமனம்" என்பது தீர்மானம் செய்யமுடியாமல் இருப்பனின் எண்ணங்களைக் குறிக்கிறது. இதை, "இயேசுவைப் பின்பற்றுவதா அல்லது அவரைப் பின்பற்றாமல் இருப்பதா என்று தீர்மானிக்கமுடியாமல் இருப்பது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய எல்லா வழிகளிலேயும் நிலையற்றவனாய் இருத்தல்

"ஒரு காரியத்தைக் குறித்தும் நிச்சயமில்லாமல் இருக்கிறான்."

James 1:9-11

ஏழை சகோதரன்

"அதிகப் பணம் இல்லாத ஒரு விசுவாசி"

தான் உயர்த்தப்பட்டதைக் குறித்து மேன்மைப்பாராட்டவேண்டும்

"தேவன் தனக்கு கனத்தைக் கொடுத்திருக்கிறார் என்று அவன் சந்தோஷப்படவேண்டும்"

அதே நேரம், ஐசுவரியமான சகோதரன்

"அதிகப் பணமுடைய சகோதரன்"

அவனுடைய தாழ்மையில்

"மேன்மைப்பாராட்டவேண்டும்" என்னும் கூற்று விடப்பட்டுள்ளது. இதை, "அவனுக்கு தேவன் தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறார் என்பதால் அவன் சந்தோஷப்படவேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் வெளியின் காட்டுப்பூவைப்போல் கடந்துபோவான்

இந்த உவமானம் மற்றவை எல்லாம் மரிப்பது போல, ஐசுவரியவான்களும் மரித்துப்போவார்கள் என்பதைக் காட்டுகிறது. இது ஏன் ஐசுவரியவான் தாழ்மையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

கடும் வெய்யிலில்

"அதன் சூடு" அல்லது "சுட்டெரிக்கும் சூடான காற்று" (UDB)

ஐசுவரியவான்கள் அவர்களது காரியங்களை செய்துகொண்டிருக்கும் போது நடுவில் மறைந்து போவார்கள்

"அதிகப் பணம் ஈட்டவேண்டி கடினமாக உழைக்கும்போது தானே ஐசுவரியவான் மரித்துப்போவான்"

James 1:12-13

பாக்கியவான் யாரென்றால்

"சந்தோஷமான மனிதன் யாரென்றால்"

சோதனையை சகிக்கிற

"பாடுகள் வரும்போது பலமாக தரித்திருக்கிற"

சோதனையில் தேறி

"அந்தப் பாடுகளின் ஊடே பலமாக இருக்கிற"

அவன் பெற்றுக்கொள்ளுவான்

"தேவன் அவனுக்குக் கொடுப்பார்"

ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்

"ஜீவகிரீடம்" என்பது தேவன் ஒரு மனிதனுக்கு நித்திய ஜீவனை பரிசாக கொடுப்பதைச் சொல்லும் அணியிலக்கண கூற்று. இதை, "நித்திய ஜீவனாகியப் பரிசை பெற்றுக்கொள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனை நேசிப்பவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது

"தேவன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை வாக்குபண்ணியிருக்கிறார்."

அவன் சோதிக்கப்படும்போது

"அவன் தீமையான ஒன்றை செய்யும்படி விருப்பம் கொள்ளும்போது"

சோதனை தேவனிடத்திலிருந்து வருகிறது

"தேவன் என்னை எதாவது தீமையை செய்ய முற்படுகிறார்"

தேவன் தீமையினால் சோதிக்கப்படமாட்டார்

"தேவன் தீமை செய்ய விரும்பமாட்டார்"

தேவன் ... ஒருவரையும் சோதிக்கமாட்டார்

"தேவன் ஒருவரையும் தீமை செய்ய வைக்கும்படி முயற்சிக்கமாட்டார்"

James 1:14-16

ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய சுய தீய விருப்பங்களால் சோதிக்கப்படுகிறான்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தீமை செய்யும் விருப்பங்கள் இருக்கிறது.

அவனைக் கவர்ந்து இழுக்கிறது

"இச்சைகள் அவனைக் கவ்வி நடத்துகிறது"

பாவமான விருப்பங்கள் கருவுற்றப் பிறகு, பாவம் பிறக்கிறது, பாவம் முழுவதும் வளர்ந்தப் பிறகு மரணத்தில் முடிகிறது

"தீய விருப்பங்கள்," "பாவம்," மற்றும் "மரணம்" மனிதனுடையக் காரியங்கள். இங்கு, "தீய விருப்பங்கள்" என்பது ஒரு காதல் கொண்ட பெண் ஒரு மனிதனை உடலுறவு வைத்துக்கொள்ள வழி நடத்துகிறதாக விளக்கப்படுகிறது. "பாவம்" அவர்களது குழந்தை. "மரணம்" என்பது பாவம் ஒரு முழு மனிதனாய் வளர்ந்தப் பிறகு இருப்பது. இது எவ்வாறு தீய விருப்பங்கள் முதலில் இன்பத்தைத் தந்தாலும் பின்னர் அது பாவமாக மாறி அந்த மனிதனை முடிவில் ஆவிக்குரிய மற்றும் மாம்சத்திற்குரிய மரணத்திற்கு நடத்துகிறதாகவும் ஒப்பிடப்படுகிறது.

வஞ்சிக்கப்படாதிருங்கள்

"ஒருவரும் உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்" அல்லது "உங்களை நீங்களே வஞ்சியாதிருங்கள்" (UDB)

James 1:17-18

மேலிருந்து

"வானத்திலிருந்து"

ஜோதிகளின் தகப்பன்

ஆகாயத்தில் இருக்கும் எல்லா சுடர்களையும் தேவன் படைத்தார். (சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்)

அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழலைப்போல மாறுகிறதல்ல

இது ஒரு உவமானம். இது மாறாத தேவனை மாறாத ஒளி என்று கருதி, ஆகாயத்தில் இருக்கும் நகரும் மற்றும் மாறும் ஜோதிகளுக்கு ஒப்பிடுகிறது. (சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்). மாற்று மொழிபெயர்ப்பு: "தோன்றி மறையும் நிழலை போல தேவன் மாறுகிறவரல்ல"

நமக்குக் கொடுக்கும்படிக்கு

"நமக்கு" என்னும் வார்த்தை யாக்கோபையும் அவனுடைய பார்வையாளர்களையும் குறிக்கிறது.

ஜீவனை நமக்குக் கொடுக்கிற

"ஆவிக்குரிய வாழ்க்கையை நமக்குக் கொடுக்கிற"

சத்தியத்தின் வார்த்தை

"சுவிசேஷம்" அல்லது "இயேசுவின் போதனைகள்"

முதற்கனிகள்

விளைவின் முதிர்கனியைப் போல, வருங்காலத்தில் வரப்போகும் அனேக விசுவாசிகளின் முதல் விசுவாசிகள் அவனுடைய பார்வையாளர்கள் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

அவருடைய படைப்புகள் மத்தியில்

"அவருடைய மக்கள் மத்தியில்"

James 1:19-21

இது உங்களுக்கு தெரியும்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "இதை அறிந்து கொள்" என்பது நான் எழுதப்போவதற்கு கவனம் செலுத்தவேண்டும் என்பதன் கட்டளையாக இருக்கிறது. அல்லது 2. ""நீங்கள் இதை அறிந்து இருக்கிறீர்கள்" என்பது வாக்கியமாக, நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறதை நான் இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்தப்போகிறேன்" எனலாம்.

ஒவ்வொரு மனிதனும் கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுவதற்கு பொறுமையாயுயும் இருக்க வேண்டும்

மக்கள் முதலாவது கூர்ந்து கவனிக்கவேண்டும், அதன் பின்பு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை ஜாக்கிரதையாக கருத்தில் கொள்ளவேண்டும்.

கோபப்பட தாமதிக்க

"சுலபமாக கோபப்படக்கூடாது"

மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது

ஒரு மனிதன் கோபப்படும்போது தேவன் விரும்புகிற பிரகாரம் அவன் செயல்பட மாட்டான்.

எல்லா பாவ அழுக்கையும் எல்லா இடங்களில் இருக்கும் தீமையும் எறிந்துவிடுங்கள்

இந்த இரண்டும் தீமையை வலியுறுத்தப் பயன்படுத்துகிறது. மறு மொழிபெயர்ப்பு: "எல்லா வகையான தீமையான காரியத்தை செய்வதை நிறுத்துங்கள்."

தாழ்மையில்

"பெருமையில்லாமல்" அல்லது "மெத்தனமில்லாமல்"

உள்ளில் வைக்கப்பட்ட வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்

"உள்ளில் வை" என்பது ஒன்றினுள் மற்றொன்றை வைத்தல் ஆகும். ஒரு மனிதனுக்குள் விதைக்கப்பட்ட ஒன்றாக தேவனுடைய வார்த்தையை விவரிக்கும் உருவகம் இதுவாகும். மறு மொழிபெயர்ப்பு: "தேவன் உங்களோடு பேசின செய்திக்குக் கீழ்ப்படியுங்கள்"

உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்

"ஆத்துமாக்கள்" என்னும் வார்த்தை ஒரு முழு மனிதனைக் குறிக்கிறது. இங்கு அது ஒரு சினையாகுபெயர் ஆக உள்ளது. எதில் இருந்து ஒரு மனிதன் காப்பாற்றப்பட்டான் என்பது வெளிப்படையாக சொல்லப்படலாம். மறு மொழிபெயர்ப்பு: "தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்."

James 1:22-25

வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள்

"தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள்" அல்லது "உங்களுக்கான தேவ செய்திக்குக் கீழ்ப்படியுங்கள்"

உங்களை நீங்களே வஞ்சித்துக்கொள்ளாதபடிக்கு

"உங்களை நீங்களே வஞ்சித்து" அல்லது "உங்களை நீங்களே முட்டாளாக்கிக்கொண்டு"

ஏனென்றால், யாராவது வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்யவில்லை என்றால், அவன் தனது இயற்கை முகத்தை கண்ணாடியில் ஆராய்வது போல இருக்கும்

யாக்கோபு, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காத மனிதனை கண்ணாடியில் தன்னைப் பார்த்து பின்பு அவன் எவ்வாறு இருக்கிறான் என்பதை மறந்துபோகும் மனிதனுக்கு ஒப்பிடுகிறார்.

அவனுடைய இயற்கை முகத்தை ஆராய்வது ... பின்பு சீக்கிரம் மறந்துபோவது

தனது முகத்தைப் பார்த்து பின்பு சடிதியில் தான் என்னத்தைப் பார்த்தான் என்பதை மறந்துப் போகிறவன், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு என்னத்தைக் கேட்டான் என்பதை மறந்து போகிறவனைப்போல இருக்கிறான்.

பரிபூரண சட்டம், விடுதலையின் சட்டம்

"விடுதலையைக் கொடுக்கும் பரிபூரண சட்டம்"

மறந்து போகும் கேட்கிறவர்களாக மட்டுமல்ல

"வெறுமனே கவனித்துவிட்டு பின்பு அதை மறந்து போகிறது அல்ல"

இந்த மனிதன் அதை செய்யும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான்

இதை செய்வினைக் கூற்றோடு மொழிபெயர்க்கலாம்: "இந்த மனிதன் சட்டத்திற்குக் கீழ்ப்படியும்போது தேவன் அவனை ஆசீர்வதிப்பார்"

James 1:26-27

அவனையே பக்திவானாய் நினைத்துக்கொள்ளுகிறான்

"அவன் தேவனை சரியாக ஆராதிக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுகிறான்"

அவனுடைய நாவை கட்டுப்படுத்த

"நாவு" என்னும் ஆகுபெயரை "அவன் என்ன சொல்லுகிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் வஞ்சிக்கிறான்

"முட்டாளாக்குகிறான்" அல்லது "தந்திரம் செய்கிறான்" அல்லது "வழிதப்பச்செய்கிறான்"

அவனுடைய இருதயம்

"இருதயம்" என்னும் சினையாகுபெயரானது முழு மனிதனையும் குறிக்கிறது. இதை "தனக்குத்தானே" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய பக்தி வீண்

"அவனுடைய ஆராதனை விலையில்லாதது"

நம்முடைய தேவனுக்கு முன்பாகவும் தகப்பனுக்கு முன்பாகவும் சுத்தமானதும் மாசில்லாததுமான பக்தி இது

"சுத்தமான மற்றும் மாசில்லாததும்"என்னும் இந்த இரண்டும் தேவனுக்கு எது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை வலியுறுத்துகிறது. இதை, தேவன் அங்கீகரிக்கும் ஆராதனை இது தான்" என்று மொழிபெயர்க்கலாம்.

தகப்பனற்றவர்கள்

"தகப்பன் இல்லாதவர்கள்" அல்லது "அனாதைகள்"

விதவைகள் தங்கள் உபத்திரவத்தில்

தங்களது புருஷன்மார் இறந்து போனதினால் பாடுபடும் பெண்கள்

உலகத்தின் கேட்டிலிருந்து ஒருவனைக் காத்துக்கொள்ளும்படி

உலகத்தில் இருக்கும் தீமை உங்களைப் பாவம் செய்ய விடாமல் தடுக்கும்படிக்கு

James 2

James 2:1-4

என்னுடைய சகோதரர்கள்

யாக்கோபு தன்னுடைய பார்வையாளர்களை யூத விசுவாசிகளாக கருதுகிறார். இதை, "என்னுடைய சக விசுவாசிகள்" அல்லது "கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்"

நம்முடையக் கர்த்தரை நீங்கள் நம்புங்கள்

"நம்முடைய" என்னும் வார்த்தை யாக்கோபையும் அவனுடைய சக விசுவாசிகளையும் குறிக்கிறது.

ஒரு சிலருக்கு மாத்திரம் பட்சமாக இருந்து

"விசேஷ கவனிப்பு செய்து" அல்லது "அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டு" அல்லது "அதிகமான கனம் கொடுத்து"

யாராயினும் ...

4ம் வசனம் முடிவு வரை தொடரும் ஒரு அனுமானிக்கப்பட்ட சூழ்நிலையை யாக்கோபு துவக்குகிறார். ஒரு ஐசுவரியவானுக்கு விசுவாசிகள் ஒரு ஏழைக்கு கொடுக்கும் கனத்தை விட அதிகமாக கொடுக்கும் சூழ்நிலையை அவர் விவரிக்கிறார்.

தங்க மோதிரங்கள் மற்றும் மெல்லிய வஸ்திரங்களை அணிந்துகொண்டு

"ஒரு ஐசுவரியவானைப் போல உடுத்திக்கொண்டு"

ஒரு நல்ல இடத்தில் இங்கு அமருங்கள்

"இந்த கனமான இடத்தில் அமருங்கள்"

அங்கு நில்லுங்கள் அல்லது என்னுடைய பாதத்தின் அருகில் அமருங்கள்

"கனமற்ற இடத்திற்கு நகருங்கள்"

உங்களுக்குள்ளாகவே நீங்கள் தீர்ப்பு செய்து தீய எண்ணங்களுடைய நியாதிபதிகளாக ஆகிறதில்லையா

யாக்கோபு இங்கு பதிலை எதிர்பாரா கேள்வியை தன்னுடைய வாசகர்களுக்குப் போதிக்கவும் கூடுமானால் கடிந்துகொள்ளவும் பயன்படுத்துகிறார். இதை, "உங்களுக்கு உள்ளாக நீங்கள் தீர்ப்பு செய்து தீய எண்ணங்களுடைய நியாயாதிபதிகள் ஆகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 2:5-7

கவனியுங்கள் என்னுடைய அன்பிற்குரிய சகோதரர்களே

யாக்கோபு தன்னுடைய வாசகர்களை ஒரு குடும்பம் போல கருதி பேசுகிறார். "கவனம் செலுத்துங்கள், என்னுடைய சக விசுவாசிகளே"

தேவன் தெரிந்துகொள்ளவில்லையா? ...

தனது வாசகர்களைக் கடிந்துகொள்ள பதில் எதிர்பாராத கேள்வியை யாக்கோபு இங்கு பயன்படுத்துகிறார். நீங்கள் இதை, "தேவன் ... தெரிந்திருக்கிறார்" என்று மொழிபெயர்க்கலாம்..

விசுவாசத்தில் ஐசுவரியவானாய் இருங்கள்

"அதிகமான விசுவாசம் கொண்டிருங்கள்." "ஐசுவரியம்" என்பது ஒருவன் அதிகமான விசுவாசம் கொண்டிருக்கிறான் என்பதை சொல்லுகிறது. விசுவாசம் வைக்கப்படுவது எதின்மேல் என்பது குறிப்பிடப்படவேண்டும். இதை, "கிறிஸ்துவில் அதிக பலமான விசுவாசம் கொண்டிருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்

"பரலோக ராஜியத்திற்குள் பிரவேசிக்கும்படிக்கு"

ஆனால் நீங்கள்

யாக்கோபு தன்னுடைய எல்லா வாசகர்களுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஏழைகளை கனவீனப்படுத்தி இருக்கிறீர்கள்

"ஏழைகளை மதிக்கவில்லை" அல்லது "ஏழைகளை மோசமாக நடத்தி இருக்கிறீர்கள்"

ஐசுவரியவான்கள் அல்லவா?

யாக்கோபு தன்னுடைய வாசகர்களைக் கடிந்துகொள்ள பதில் எதிர்பாரா கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை, "ஐசுவரியவான்களா?" என்று மொழிபெயர்க்கலாம்.

ஐசுவரியவான்கள்

"ஐசுவரியமான மக்கள்" (UDB)

உங்களை ஒடுக்குபவர்கள்

"உங்களை அதிகாரம் செய்கிறவர்கள்" அல்லது "உங்களை மோசமாக நடத்துகிறவர்கள்"

அவர்கள் தானே இவர்கள்

யாக்கோபு தன்னுடைய வாசகர்களைக் கடிந்துகொள்ள பதில் எதிர்பாரா கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை, "அவர்கள் தான் இவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களை நீதிமன்றத்திற்கு இழுத்து

"நீதிபதிகள் முன்பாக உங்களைக் குற்றப்படுத்தும்படிக்கு கட்டாயப்படுத்தி உங்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக்கொண்டு" (UDB)

ஐசுவரியவான்கள் இல்லையா?

யாக்கோபு தன்னுடைய வாசகர்களைக் கடிந்துகொள்ள பதில் எதிர்பாரா கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை நீங்கள், "ஐசுவரியவான்கள்" அல்லது "ஐசுவரியமான மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நல்ல நாமம்

"கிறிஸ்துவினுடைய நாமம்"

James 2:8-9

நீங்கள் நிறைவேற்றுவீர்களானால்

"நீங்கள்" என்னும் வார்த்தை யூத விசுவாசிகளைக் குறிக்கிறது.

மேன்மையான நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்

பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நியாயப்பிரமாணத்தை தேவன் முதன்முதலாக மோசேயிடம் கொடுத்தார். இதை, "தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியுங்கள்" அல்லது "நம்முடைய பெரிய அரசருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உன்னை நேசிப்பது போல நீ உன்னுடைய அயலானையும் நேசிக்கவேண்டும்

(லேவியராகமம் 19: 18 ஐ பார்க்கவும்)

உன்னுடைய அயலான்

"எல்லா மக்களும்" அல்லது "எல்லாரும்"

நீ நன்றாய் செய்

"நீ நன்றாய் செய்கிறாய் " அல்லது "நீ சரியானதைச் செய்கிறாய்"

நீங்கள் பட்சபாதம் கொண்டிருந்தாள்

"விசேஷமான கவனிப்பு செய்தால்" அல்லது "கனத்தைக் கொடுத்தால்"

பாவம் செய்கிறீர்கள்

அதென்னவென்றால், நியாயப்பிரமாணத்தை மீறுகிறீர்கள் என்பதாகும். இதை, "பாவம் செய்தல்" என்று மொழிபெயர்க்கலாம்.

நியாயப்பிரமாண சட்டத்தை மீறினவர்கள் என்று தீர்க்கப்பட்டு

இங்கு நியாயப்பிரமாணமானது ஒரு மனித நீதிபதிக்குரிய குணாதிசயங்கள் கொண்டுள்ளது. இதை, "தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறின குற்றமுடையவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 2:10-11

கீழ்ப்படிகிற யாருக்கும்

"கீழ்ப்படிகிற யாராயினும்"

இருந்தும் தடுமாறி ... அவன் அவ்வாறு ஆனான்

தடுமாற்றம் என்பது ஒருவன் நடக்க முற்படும்போது கீழே விழுகிறது போல நியாயப்பிரமாணத்தில் ஒன்றிற்குக் கீழ்ப்படியாமல் போனால் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறினது போல ஆகும்.

செய்யாதீர்கள் ...

"செய்தல்" என்பது ஒரு கிரியை செய்வதாகும்.

... நீங்கள் ... ஆனால் நீங்கள் ... நீங்கள் ...

யாக்கோபு அனேக யூத விசுவாசிகளுக்கு இதை எழுதியிருந்தாலும், இந்த தருணத்தில், அவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எழுதியது போல இருக்கிறது.இதை, "உங்கள் ஒவ்வொருவருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 2:12-13

அதனால் பேசுங்கள், கீழ்ப்படியுங்கள்

யாக்கோபு, மக்கள் இதை செய்யும்படி கட்டளையிட்டார். "அதனால் நீங்கள் பேசவேண்டும் மற்றும் கீழ்ப்படியவேண்டும்..."

விடுதலையின் பிரமாணத்தினால் யார் நியாயந்தீர்க்கப்படப்போகிறார்கள்

விடுதலையின் பிரமாணம் சீக்கிரம் அவர்களை நியாயந்தீர்க்கப்போகிறது என்பதை அறிந்தவர்கள்"

நியாயப்பிரமாணத்தின்படி

இங்கு, நியாயப்பிரமாணம் ஒரு மனிதனுக்குரிய குணாதிசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையின் பிரமாணம்

"நமக்கு விடுதலையைக் கொடுக்கிற பிரமாணம்"

இரக்கம் வெற்றிபெறுகிறது

"இரக்கம் ...விட நல்லது" அல்லது "இரக்கம் வீழ்த்துகிறது"

James 2:14-17

விசுவாசம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு கிரியை இல்லாமல் இருந்தால் என்ன நன்மை, என்னுடைய சகோதரர்களே?

தன்னுடைய வாசகர்களுக்கு போதிக்கும்படி யாக்கோபு பதில் எதிர்பாராக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை, "யாராவது, தனக்கு விசுவாசம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு கிரியை செய்யாமல் இருந்தார்கள் ஆனால் அது நல்லதல்ல" என்றும் மொழிபெயர்க்கலாம்.

அவன் என்று யாராவது சொன்னால்

யாக்கோபு பேசுகிற யாரையோ எதிர்மறையாக குறிப்பிடுகிறார். "அவன்" என்பது பேசுகிற யாரையோ குறிக்கிறது.

அந்த விசுவாசம் அவனைக் காப்பாற்றுமா?

யாக்கோபின் வாசகர்களுக்குக் கற்றுக்கொடுக்க இந்த பதில் எதிர்பாராக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை, "இந்த வகை விசுவாசம் அவனைக் காப்பாற்றாது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனைக் காப்பாற்று

"அவனை தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கச்செய்யுங்கள்"

ஒரு சகோதரன் ... என்ன நன்மை அது?

யாக்கோபின் வாசகர்களுக்குப் போதிக்க வசனங்கள் 15, 16 என்னும் பதில் எதிர்பாராக் கேள்விகளைப் பயன்படுத்துகிறார். இதை, "ஒரு சகோதரன்...அது நல்லதல்ல" என்று மொழிபெயர்க்கலாம்.

சகோதரன் அல்லது சகோதரி

"கிறிஸ்துவுக்குள் சகோதரன் அல்லது சகோதரி"

உங்களில் ஒருவன் சொல்லுகிறான்

"நீங்கள் சொல்லுகிறீர்கள்"

மரித்துவிட்டது

"மதிப்பில்லை"

James 2:18-20

மேலும் ஒருவன் சொல்லுகிறான்

யாக்கோபு 2:14

17 இல் தன்னுடைய போதனையை எதிர்க்கும்போது உண்டான யாக்கோபு ஒரு அனுமானிக்கப்பட்ட சூழ்நிலையை விவரிக்கிறார். யாக்கோபு இந்த மனிதனை "முட்டாள் மனிதன்" என்று வசனம் 20 இல் குறிப்பிடுகிறார். இந்த அனுமானிக்கப்பட்ட விவாதத்தின் நோக்கம் என்னவென்றால், விசுவாசத்தைப் பற்றியும் கிரியைகளைப் பற்றியும் தனது வாசகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே ஆகும்.

"உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்னிடம் கிரியைகள் இருக்கிறது

தன்னுடைய போதனைகளின் எதிர்ப்பை யாக்கோபு இங்கு விவரிக்கிறார். இதை, "ஒரு மனிதன் விசுவாசம் வைத்துக்கொண்டு மற்றொருவன் நல்லக் கிரியைகள் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய விசுவாசத்தை எனக்குக் காண்பியுங்கள்

"எனக்கு" என்னும் வார்த்தை யாக்கோபைக் குறிக்கிறது.

பிசாசுகளும் ... நடுங்குகிறது

"பயத்தில் நடுங்குங்கள்"

முட்டாள் மனிதனே, கிரியைகள் இல்லாத விசுவாசம் பயனற்றது என்பதை நீங்கள் அறியவிரும்புகிறீர்களா?

யாக்கோபைக் கவனிக்காத மனிதனைக் கடிந்து கொள்ளும்படி இந்த பதில் எதிர்பாராக் கேள்வி பயன்படுத்தப்பட்டுள்ளது. "முட்டாள்களே நீங்கள்! கிரியைகள் இல்லாத விசுவாசம் பயனற்றது என்பதை நான் நிரூபிப்பதைக் கவனிக்க விரும்புவதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

James 2:21-24

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் நீதிமானாக்கப்படவில்லையா?

யாக்கோபின் பதில் எதிர்பாராக் கேள்வியின் மூலம் வந்த அந்த முட்டாள் மனிதனின் வாதங்களுக்கு எதிர்விவாதம் செய்யும்படி இந்த பதில் எதிர்பாரா கேள்வி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விசுவாசத்தை நீ காண்கிறாய்

"நீ" என்னும் வார்த்தை அனுமானிக்கப்பட்ட மனிதனைக் குறிக்கிறது. ஆயினும் இந்த மனிதன் மூலமாக யாக்கோபு தனது மக்கள் எல்லாருக்கும் பேசுகிறார்.

அந்த விசுவாசத்தை நீ காண்கிறாய்

"காண்கிறாய்" என்னும் வார்த்தை ஆகுபெயராகும். இதை, "புரிந்துகொண்டாய்" என்று மொழிபெயர்க்கலாம்.

கிரியைகளினால் அவனுடைய விசுவாசம் அதன் நோக்கத்தை அடைந்தது

"அவனுடையக் கிரியைகள் அவனுடைய விசுவாசத்தை பூர்த்தி செய்தது."

வேத வாக்கியம் நிறைவேறியது

இந்த செயல்பாட்டு வினைக் கூற்றை, "இது வேத வாக்கியத்தை நிறைவேற்றியது" என்று மொழிபெயர்க்கலாம்.

அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது

"தேவன் அவனுடைய விசுவாசத்தை நீதியாக எண்ணினார்"

கிரியைகளினால் யாக்கோபு "நீங்கள்" என்ற பன்மை வடிவ வார்த்தையைப் பயன்படுத்தி தனது வாசகர்களிடம் நேரிடையாகப் பேசுகிறார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள்

கிரியைகளினால் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுகிறான்

"கிரியைகளும் விசுவாசமும் ஒரு மனிதனை நீதிமானாக்கும்"

James 2:25-26

யாக்கோபு, ...

இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு. இதை, "யாக்கோபாகிய நான், ..." என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்

"நான்" என்கிற பதம் மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது. இதை, "நான் தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்" என்று மொழிபெயர்க்கலாம்.

சிதறிப்போன பன்னிரண்டு கோத்திரங்களுக்கு

ஸ்தேவானைக் கல்லெறிந்தப் பிறகு எழும்பின உபத்திரவத்திற்குத் தப்பி யூதேயாவிற்கு வெளியே உள்ள ரோம பட்டணங்களுக்கு ஓடிப்போன எல்லா யூத விசுவாசிகளுக்கும் யாக்கோபு எழுதுகிறார்.

பன்னிரண்டு கோத்திரங்கள்

எண்களை எழுதுவதில் ஒன்று போல இருக்கப் பாருங்கள். இதை "12 கோத்திரங்கள்" எனவும் காட்டலாம்.

வாழ்த்துக்கள்

"வணக்கம்" அல்லது "நன்னாள்" என்பது போன்ற அடிப்படையான வாழ்த்து.

வெவ்வேறு பாடுகள் படும்போது, அதை சந்தோஷமாக கருதுங்கள்

"என்னுடைய சக விசுவாசிகளே, உங்களுடைய எல்லா வகையான பாடுகளையும் கொண்டாடுவதற்கான ஒன்றாக நினையுங்கள்"

உங்களது விசுவாசம் சோதிக்கப்படும்போது பொறுமையை உண்டாக்குவதுபோல

"தேவன் இந்த பாடுகளை உங்களுடைய விசுவாசம் பலப்பட பயன்படுத்துவார் என்று நீங்கள் அறிந்திருக்கிறதினால்"

James 3

James 3:1-2

உங்களில் அநேகர்

"உங்களில்" என்னும் வார்த்தை யாக்கோபின் வாடிக்கையாளர்களைக் குறிக்கிறது.

என்னுடைய சகோதரர்கள்

"என்னுடைய உடன் விசுவாசிகள்"

அதை அறிந்து

"அதனால்"

நாம் மிகப்பெரிய நியாயத்தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளுவோம்

ஒரு வெளிப்படையான தகவலான, "மற்ற மக்களைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தையை அறிந்து இன்னும் நன்றாக புரிந்து நாம் இருப்பதினால் பாவம் செய்யும்போது நமக்கு போக்குச்சொல்ல முடியாதென்பதனால் தேவன் நம்மை கண்டிப்புடன் நியாயந்தீர்ப்பார்."

நாம் பெற்றுக்கொள்ளுவோம்

யாக்கோபு தன்னோடு வேதத்தைப் போதிப்பவர்களை சேர்த்துக்கொண்டார். அனாலும் இந்த கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகள் வேதத்தைப் போதிக்கிறவர்களாக மாறலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் செய்யமாட்டார்கள்.

ஏனென்றால் நாம் எல்லாரும் தடுமாறுகிறோம்

தனது எல்லா வாடிக்கையாளர்களையும் சேர்த்து சொல்லுகிறதை யாக்கோபு தொடர்ந்தார்.

வெவ்வேறான வழிகளில் தடுமாறுகிறோம்

ஒரு மனிதனின் நன்னெறி வாழ்க்கையில் வீழ்ச்சிகளை ஒரு மனிதன் தான் நடக்கும்போது சாலையில் விழுகிற செயலுக்கு இந்த உருவகம் ஒப்பிடுகிறது. இதை, "வீழ்ச்சி" அல்லது "பாவம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவனுடைய வார்த்தைகளில் தடுமாறாமல்

"அவன் பேசுகிற வார்த்தைகளில் பாவம் செய்யாமல்"

அவன் ஒரு பூரண மனிதன்

"அவன் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவன்"

அவனுடைய முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தி

யாக்கோபு அவனுடைய இருதயத்தையும், உணர்ச்சிகளையும், அவனுடைய செயல்களையும் குறிப்பிடுகிறார். இதை, "அவனுடைய நடக்கையைக் கட்டுப்படுத்தினான்" அல்லது "அவனுடையக் கிரியையைக் கட்டுப்படுத்தினான்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 3:3-4

இப்பொழுது, நாம் குதிரைகளின் கடிவாளத்தைப் போட்டோமானால்

யாக்கோபு ஒரு மனிதனுடைய நாவை ஒரு கடிவாளத்திற்கு ஒப்பிடுகிறார். கடிவாளம் என்பது குதிரையின் வாயினுள் வைக்கப்பட்டு அது எங்கு போகவேண்டும் என்று கட்டுப்படுத்தப்பயன்படும் ஒரு உலோகத்தால் ஆன சிறிய துண்டு. எவ்வாறு சிறிய பொருட்கள் பெரிய பொருட்கள் மீது வல்லமைக் கொண்டுள்ளது என்பதைக் இது காட்டுகிறது. மக்கள் சொல்லுகிற காரியங்கள் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுக்குத் தெரிந்த மற்ற எல்லாருடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதை யாக்கோபு காட்டுகிறார்.

அப்படியானால் இப்பொழுது

"அப்படியானால்" அல்லது "அப்பொழுது"

குதிரையின் கடிவாளத்தை அவர்களது வாயினுள் நாம் போட்டால்

"குதிரை" பொருட்களை சுமந்துசெல்லக்கூடிய ஒரு பெரிய மிருகம். இதை, "குதிரைகளின் வாயினுள் கடிவாளங்களை நாம் போட்டால்" என்று மொழிபெயர்க்கலாம்.

கவனியுங்கள், கப்பல்கள் கூட ... ஒரு சிறு சுக்கானாலே இயக்கப்படுகிறது

அடுத்து, யாக்கோபு ஒரு கப்பலின் சுக்கானை ஒரு மனிதனுடைய நாவிற்கு ஒப்பிடுகிறார். "கப்பல்" தண்ணீரில் மிதக்கும் ஒரு சரக்கு வண்டியைப் போல இருக்கிறது. "சுக்கான்" என்பது கப்பல் செல்லும் திசையை கட்டுப்படுத்தும் ஒரு சிறிய மரம் அல்லது உலோகம். "சுக்கான்" என்னும் வார்த்தையை "பயன்பாட்டுக்கருவி" என்றும் மொழிபெயர்க்கலாம். குதிரையின் கடிவாளத்தை வைத்து சொன்ன அதே காரியத்தைத்தான் யாக்கோபு சொல்லுகிறார். ஒரு சிறிய பொருள் பெரிய பொருட்கள் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளது.

அவைகள் மிகவும் பெரியவை

"அவைகள்" என்னும் வார்த்தை கப்பலைக் குறிக்கிறது.

பலத்தக் காற்றினால் இயக்கப்படுபவைகள்

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு மொழிபெயர்க்கலாம்: "பலத்தக் காற்று அவைகளை நகர்த்துகிறது."

ஓட்டுனர் எங்கு திரும்பவேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கெல்லாம் அதைத் திருப்ப ஒரு மிகச்சிறிய சுக்கானால் திருப்பப்படுகிறது

இதை ஒரு செய்வினை வினைச்சொல்லோடு, "கப்பலின் போக்கை அதைக் கட்டுப்படுத்த ஒருவன் பயன்படுத்த ஒரு சிறிய கருவி உண்டு" என்று மொழிபெயர்க்கலாம்.

James 3:5-6

அது போல

"அதே வழியில்." முந்தைய வசனங்களில், நாவை குதிரைகளின் கடிவாளத்திற்கும் கப்பல்களின் சுக்கான்களுக்கும், இது ஒப்பிடுகிறது.

பெரியக் காரியங்களைப் பெருமையாகப் பேசுகிறது

"ஒரு மனிதன் மிகவும் தீமையானக் காரியங்களைப் பேச அதைப் பயன்படுத்தலாம்.

எவ்வளவு பெரியது என்று பாருங்கள்

"எவ்வளவு பெரியது என்பதை நினைத்துப் பாருங்கள்"

ஒரு சிறிய நெருப்பால் எவ்வளவு பெரிய காடு கொளுத்தப்படுகிறது!

இதை ஒரு செய்வினைக் கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "ஒரு சிறிய நெருப்புத்துகள் அனேக மரங்களை எரிக்கக்கூடிய நெருப்பை துவக்கலாம்!"

நாவும் நெருப்புத்தான்

நெருப்பு எப்படி அது எரிக்கின்றவைகளை எல்லாம் பட்சித்து அழிக்கிறதுபோல ஒரு மனிதன் சொல்லுவது என்னவோ அது மக்களைக் காயப்படுத்தலாம். மறு மொழிபெயர்ப்பு: "நாவு நெருப்புப் போன்றது."

நம்முடைய சரீர உறுப்புகளில் உலகத்தின் பாவங்கள் தரிக்கிறது

மறு மொழிபெயர்ப்பு: "நம்முடைய சரீரத்தின் ஒரு சிறியப் பகுதி ஆனால் எல்லா வகையான வழிகளிலும் பாவம் செய்ய போதுமானது."

முழு சரீரத்தையும் தீட்டுப்படுத்துகிறது

இதை ஒரு புதிய வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "அது நம்மை தேவனுக்கு முற்றிலும் பிரியமற்றவர்களாக மாற்றலாம்" அல்லது "அது நம்மை தேவனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக மாற்றலாம்."

வாழ்க்கையின் பாதையைக் கொளுத்திவிடுகிறது

"வாழ்க்கையின் பாதை" என்னும் பதம் ஒரு முழு மனிதனின் வாழ்க்கையைக் குறிக்கும் உருவகம். இதை, "இது ஒரு மனிதனின் வாழ்க்கையை அது அழிக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

நரகத்தினால் அது கொளுத்திவிடப்படுகிறது

"அது" என்பது நாவைக் குறிக்கிறது. "நரகம்" என்னும் வார்த்தை தீமையின் வல்லமைகளைக் அல்லது பிசாசின் வல்லமையைக் குறிக்கும் பண்பாகுபெயராகும்.

James 3:7-8

ஒவ்வொரு வகையான காட்டு மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், மற்றும் கடல் விலங்குகள் மனித குலத்தால் அடக்கப்படுகிறது, அடக்கப்பட்டும்வருகிறது

"ஒவ்வொரு வகை" என்னும் கூற்று "அனேக வகைகள்" என்று அர்த்தப்படும் உயர்வு நவிற்சி ஆகும். இதை செய்வினை கூற்றாக மொழிபெயர்க்கலாம்: "மக்கள் அனேக வகையான காட்டு மிருகங்களையும், பறவைகளையும், ஊரும் பிராணிகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கற்றுள்ளனர்."

ஊரும் பிராணிகள்

இது நிலத்தில் ஊர்ந்து செல்லும் பிராணிகள்.

கடல் வாழ் உயிரினங்கள்

இது தண்ணீரில் வாழும் உயிரினம்.

மனிதருள் ஒருவனும் நாவை அடக்க முடியாது

இங்கு, "நாவு" என்னும் வார்த்தை ஒரு மனிதன் என்ன சொல்லுகிறான் என்பதைக் குறிக்கும் பண்பாகுபெயராகும். முழு அர்த்தத்தையும் வெளிப்படையாக சொல்லலாம்: "தேவனுடைய உதவி இல்லாமல் ஒரு மனிதனும் நாவை அடக்க முடியாது."

அடங்காத தீமையும், முழுவதும் சாவுக்கேதுவான விஷமும்

மக்கள் எவ்வாறு தங்களது பேசப்பட்ட வார்த்தைகள் மூலம் மற்றவரைக் காயப்படுத்த முடியும் என்பதை விவரிக்கும் உருவகமாய் இருக்கிறது. இதை, "தாக்கத் தயாராக இருக்கிற எப்பொழுதும் தூங்காத தீய ஜந்து போல" என்று மொழிபெயர்க்கலாம்.

James 3:9-10

நாம் நாவின் மூலம்

"நாம் நம்முடைய நாவுகளை வார்த்தைகள் சொல்லப் பயன்படுத்துகிறோம்"

அதன் மூலம் நாம்

"வார்த்தைகளை சொல்ல நாம் இங்கு அதைப் பயன்படுத்துகிறோம்"

நாம் மனிதர்களை சபிக்கிறோம்

மற்றவர்களை காயப்படுத்த தேவனை நாம் கேட்கும்படி (UDB).

தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள்

"தேவன் தம்முடைய சாயலில் படைத்தவர்கள்"

அதே வாயினால் பேசப்படுகிறது

"ஒரே வாய் இரண்டையும் பேசுகிறது"

என்னுடைய சகோதரர்கள்

"சக விசுவாசிகள்"

இந்தக் காரியங்கள் அவ்வாறு இருக்கக்கூடாது

"இது தவறு"

James 3:11-12

நம்முடைய பேச்சு ஆசீர்வதிக்கவும் சபிக்கவும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினப்பிறகு, இரண்டையும் செய்யாத இயற்கையில் இருந்து எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்.

ஒரு ஊற்றுக்கண் நல்ல தண்ணீரையும் கசப்பான தண்ணீரையும் தருகிறதா?

வாசகர்களுக்கு இயற்கையின் விதிகளைக் கற்றுக்கொடுக்கும்படி யாக்கோபு பதில் எதிர்பாரா கேள்வியைப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "ஒரு ஊற்றுக்கண் நல்ல தண்ணீரையும் கசப்பான தண்ணீரையும் கொடுக்காது."

சகோதரர்களே

"சக விசுவாசிகளே"

அத்தி மரம் ஒலிவப்பழங்களையோ அல்லது திராட்சைக் கொடி அத்திப்பழங்களையோ கொடுக்குமோ?

வாசகர்களுக்கு இயற்கையின் விதிகளைக் கற்றுக்கொடுக்கும்படி யாக்கோபு மற்றுமொரு பதில் எதிர்பாரா கேள்வியைப் பயன்படுத்துகிறார். மறு மொழிபெயர்ப்பு: "அத்தி மரம் ஒலிவப்பழங்களைக் கொடுக்காது, அது போல திராட்சைக் கொடி அத்திப்பழங்களைக் கொடுக்காது."

James 3:13-14

உங்களில் ஞானியும் விவேகியுமாய் இருக்கிறவன்? அந்த மனிதன்

யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை வைத்து வாசகர்களுக்கு ஒழுக்கமான நடக்கையைக் கற்றுக்கொடுக்கிறார். கூட, "ஞானியும் விவேகியும்" என்பது ஒரே அர்த்தத்தைச் சொல்லும் இரண்டு வார்த்தைகள். இதை, "தன்னை ஞானி என்று நினைக்கிற மனிதன் கண்டிப்பாக" என்று மொழிபெயர்க்கலாம்.

நல்ல வாழ்க்கையைக் வாழ்ந்து காண்பியுங்கள்

"நல்ல நடக்கையைக் காண்பியுங்கள்" அல்லது "அதைக் காண்பியுங்கள்"

ஞானத்தில் இருந்து வருகிற தாழ்மையில் தன்னுடைய கிரியைகளினால்

"உண்மையான ஞானம் இருக்கிறதினால் உண்டாகும் தன்னுடைய நல்லக் கிரியைகளோடும் தாழ்மையோடும்"

உங்களுடைய இருதயத்தில் கசப்பான பொறாமையையும் சுய நோக்கத்தையும் வைத்து

"இருதயம்" என்பது உணர்வுகளை அல்லது எண்ணங்களைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: "மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் உங்களை நீங்கள் முதலாவது வைத்துக்கொள்ளுவீர்கள்."

பெருமைப் பாராட்டாதீர்கள்; சத்தியத்திற்கு எதிராக பொய் சொல்லாதீர்கள்

"அதைக் குறித்து பொய் சொல்லி ஞானிகளைப் போல நடவாதிருங்கள்"

James 3:15-18

இது அல்ல

முந்தின வசனங்களில் சொல்லப்பட்ட ஞானமில்லாத பொறாமையையும் சுய நோக்கத்தையும் குறிக்கிறது.

மேலிருந்து கீழ வருகிறது

"தேவனிடத்திலிருந்து கீழே வருகிறது" அல்லது "பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிறது"

பூமிக்குரியது

"பூமிக்குரியது" என்னும் வார்த்தை தேவனை மதியாத மக்களின் நடக்கைகளையும் கொள்கைகளையும் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: தேவனைக் கனப்படுத்தாத."

ஆவிக்குரியதல்லாத

"பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வராத" அல்லது "ஆவிக்குரியதல்லாத"

பேய்த்தனம்

"ஆனால் அது பிசாசுகளிடமிருந்து வருகிறது"

பொறாமையும் சுய நோக்கமும் எங்கு இருக்கிறது

"மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்களை மட்டும் பார்த்துகொள்ளுகிற மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ"

அங்கு குழப்பம் இருக்கிறது

"அங்கு ஒழுங்கின்மை இருக்கிறது" அல்லது "அங்கு குழப்பம் இருக்கிறது"

ஒவ்வொரு தீய செயலும்

"ஒவ்வொரு வகையான பாவ நடக்கை" அல்லது "ஒவ்வொரு வகையான தீயச் செயல்"

முதலில் சுத்தமாய் இருக்கிறது

"முதலில் பரிசுத்தமாய் இருக்கிறது"

பின்னர் சமாதானத்தை விரும்புகிறதாயும் இருக்கிறது

"பின்பு சமாதானமாய் இருக்கிறது"

இரக்கமுள்ளதாயும்

"தயவு" அல்லது "நினைவுள்ளதாய்"

நற்கனி

நற்காரியங்களை செய்யும் ஒருவனுக்கு நற்கனியை ஒப்பிடும் ஒப்பீடு இது. மறு மொழிபெயர்ப்பு: "நற்கிரியைகள்"

ஒழுக்கமாக

"நேர்மையாக" அல்லது "உண்மையாக"

நீதியின் கனியானது சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக சமாதானத்தில் விதைக்கப்படுகிறது

இந்த உருவகம் நம்முடைய வாழ்க்கையின் சமாதானத்தையும் நீதியையும் விதைக்கிறதற்கும் கதிர்களை அறுக்கிற அறுவடைக்கும் ஒப்பிடுகிறது. மறு மொழிபெயர்ப்பு: "தேவன் சரி என்று சொல்லுகிறதை செய்து சமாதானத்தில் வாழுகிறவர்கள்."

James 4

James 4:1-3

உங்களுக்குள் உண்டாகும் வாக்குவாதங்களும் சண்டைகளும் எங்கிருந்து வருகிறது?

தனது வாசகர்களைக் கடிந்து கொள்ளும்படிக்கு யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை பயன்படுத்துகிறார். கூட, "வாக்குவாதங்களும் சண்டைகளும்" ஒரே காரியத்தை இரண்டு வேறு வழிகளில் முக்கியத்துவத்திற்காக சொல்லப்பட்டுள்ளது. இதை, "நீங்கள் ஏன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொள்ளுகிறீர்கள் என்று நான் அறிவேன்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்குள்ளாக ... உங்களுடைய ... நீங்கள்

4:1

3 இல் இணைப் பெயர்ச்சொற்கள் பன்மையில் இருக்கிறது. இது யாக்கோபின் வாசகர்களைக் குறிக்கிறது.

உங்களுடைய இச்சைகளினால் தீயவைகள் எழும்புகிறதில்லையா?

தனது வாசகர்களைக் கடிந்து கொள்ளும்படிக்கு யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை பயன்படுத்துகிறார். இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "உங்களுடைய இச்சைகளில் இருந்து எழும்புகிறது" அல்லது "உங்களுடைய இச்சைகளினால் இவைகள் ஏற்படுகிறது"

போர் செய்யும் இச்சைகள்

இங்கு "இச்சைகளை" யாக்கோபு ஒரு விசுவாசிகளுக்கு எதிராகப் போர் செய்யும் ஒரு போர் வீரனாக பாவிக்கிறார். இதை, "நீங்கள் விரும்பும் காரியங்கள் தீமையாய் இருக்கிறது; மற்ற விசுவாசிகளின் தேவைகளைக் குறித்து நீங்கள் அக்கறைக் கொள்ளுவதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய சக விசுவாசிகளுக்குள்ளாக?

"உங்களுடைய உறுப்பினர்களுக்குள்." சாத்தியமான அர்த்த்தங்கள் 1. அவ்விடத்து விசுவாசிகளிடம் சண்டைகள் இருக்கிறது அல்லது 2. தீமை மற்றும் நன்மை செய்யவேண்டி உங்களுடைய விருப்பங்களுக்கு இடையில் உட்பூசல் இருக்கிறது.

உங்களிடம் இல்லாததை நீங்கள் இச்சிக்கிறீர்கள்

உங்களிடம் இல்லாததையே நீங்கள் எப்பொழுதும் இச்சிக்கிறீர்கள்"

நீங்கள் கொலை செய்கிறீர்கள்; நீங்கள் துரத்துகிறீர்கள்

"நீங்கள் கொலை செய்கிறீர்கள்" என்னும் உயர்வு நவிற்சி தாங்கள் விரும்புவதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை வலியுறுத்துகிறது. இதை, "உங்களிடம் இல்லாததைப் பெற்றுக்கொள்ள நீங்கள் எல்லா வகையான தீயக் காரியங்களையும் செய்கிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் சண்டையிட்டு வாக்குவாதம் செய்கிறீர்கள்

இது ஒரே காரியத்தை வெவ்வேறு வழிகளில் முக்கியத்துவத்திற்காக சொல்லும் முறை. இதை, "நீங்கள் தொடர்ந்து சண்டையிடுகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

நீங்கள் மோசமானக் காரியங்களைக் கேட்கிறீர்கள்

"நீங்கள் மோசமாகக் கேட்கிறீர்கள் (தவறாக)." சாத்தியமான அர்த்தங்கள் 1. "நீங்கள் தவறான நோக்கங்களோடு கேட்கிறீர்கள்; உங்களுடைய மனப்பான்மை மோசமாக இருக்கிறது" அல்லது 2. "நீங்கள் தவறான அல்லது மோசமானக் காரியங்களைக் கேட்கிறீர்கள்."

அவைகளை செலவு செய்யுங்கள்

"அவைகளை வீனடியுங்கள்"

James 4:4-5

விபச்சாரிகளே!

இந்த உருவகம் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களை தனது புருஷனல்லாத ஆணிடம் உடலுறவு வைத்துக்கொள்ளும் மனைவிக்கு ஒப்பிடுகிறது. இதை, "தேவனுக்கு நீங்கள் உண்மையாக இல்லை!" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுக்கு தெரியாதா

யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியை வைத்து தனது வாசகர்களைக் கடிந்து கொள்ளுகிறார். மறு மொழிபெயர்ப்பு: "உங்களுக்கு தெரியும்."

உலகத்தோடு நட்பு

"உலகத்தோடு நட்பு வைத்தல்" என்பது உலகத்தின் காரியங்கலோடும் நடக்கைகலோடும் அடையாலப்படுத்திக்கொள்ளுவதையும் பங்குபெறுவதையும் குறிக்கிறது.

தேவனுக்கு விரோதமான பகை

உலகத்தோடு ஒத்து இருப்பது தேவனுக்கு விரோதமாய் இருப்பது ஆகும். மறு மொழிபெயர்ப்பு: "தேவனை கனப்படுத்தாதவர்களைப் போல நடக்கிறது தேவனை எதிர்த்திருப்பவனுக்கு ஒத்திருப்பதைப் போல ஆகும்."

உலகத்தின் நண்பனாய் இருப்பது

"தேவனைக் கனம் பண்ணாதவர்களைப் போல நடப்பது"

அல்லது நீங்கள் வேதம் பயனற்றது என்று நினைக்கிறீர்களா?

தனது வாசகர்களை உற்சாகப்படுத்த யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "வேதம் சத்தியமாய் இருக்கிறது."

தேவன் நம்மில் வைத்துள்ள ஆவி வாஞ்சையினால் நிரம்பி இருக்கிறார்

அநேகக் காரியங்கள் இந்த வசனத்தில் தெளிவாக இல்லை. "ஆவி" என்பது பரிசுத்த ஆவியானவரா அல்லது மனித ஆவியா? வாஞ்சை இருப்பது, தேவனுக்கா அல்லது ஆவிக்கா? "வாஞ்சை" தீமையா அல்லது நன்மையா? இந்த பதில் எதிர்பாராக் கேள்வி "ஆம்" அல்லது "இல்லை" என்கிற பதிலை எதிர்பார்க்கிறதா? இந்தத் தெளிவற்றத்தன்மை குறைந்தது ஐந்து சாத்தியமான அர்த்தங்களைக் கொடுக்கிறது. 1. "ஆம், தேவன் தாம் நமக்குள் வைத்த மனித ஆவிக்காக ஏங்குகிறார்" அல்லது 2. ஆம், தேவன் தாம் நமக்குள் வைத்த பரிசுத்த ஆவியானவருக்காக ஏங்குகிறார்" அல்லது 3. ஆம், தேவன் நம்மில் வைத்த மனித ஆவிக்கு இச்சைகள் இருக்கிறது" அல்லது 4. "ஆம், தேவன் தாம் நமக்குள் வைத்த பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஏங்குகிறார்" அல்லது 5. "இல்லை, தேவன் நமக்குள் வைத்த பரிசுத்த ஆவியானவருக்கு பொறாமை இல்லை." உங்களுடைய வாசகர்களால் மற்ற மொழிபெயர்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தை நீங்கள் பயன்படுத்துமாறு நாங்கள் ஆலோசனை சொல்லுகிறோம்.

James 4:6-7

ஆனால் தேவன் அதிக கிருபையைக் கொடுக்கிறார்

4:5 இல் உள்ளவற்றிற்கு இந்தப் பதம் எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக்கலாம்: "ஆனால், நம்மிடம் இல்லாததைப் பெற்றுக்கொள்ள நம்முடைய ஆவிகள் விரும்பினாலும், நாம் நம்மைத் தாழ்த்தினால் தேவன் இன்னும் அதிகமான கிருபையைக் கொடுக்கிறார்."

தேவன் தடுக்கிறார்

"தேவன் எதிர்க்கிறார்"

பெருமையுள்ளவர்களை

"பெருமையான மக்களை"

தாழ்மையுள்ளவர்கள்

"தாழ்மையான மக்கள்"

அதனால்

"இதனால்"

தேவனுக்கு உங்களைக் கீழ்ப்படுத்துங்கள்

இதை, "தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களையே ... நீங்கள்

இங்கு இணைப் பெயர்ச்சொல் பன்மையில் இருக்கிறது.யாக்கோபின் வாசகர்களைக் குறிக்கிறது.

பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள்

"பிசாசிற்கு எதிர்ப்புக் காண்பியுங்கள்." இதை, "பிசாசு விரும்புகிறதை நீங்கள் செய்யாதீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் ஓடிப்போவான்

"பிசாசு ஓடிப்போவான்"

James 4:8-10

உங்களுக்கு அருகில் ...

"உங்களுக்கு" என்னும் வார்த்தை யாக்கோபின் வாசகர்களைக் குறிக்கிறது. ஆனால் மிகவும் குறிப்பாக, பெருமையின் ஆவியுள்ளவர்களுக்கு ஒரு மனந்திரும்புதலுக்கான அழைப்பாக இது இருக்கிறது.

பாவிகளே, உங்கள் கைகளை சுத்திகரியுங்கள், இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களை பரிசுத்தமாக்குங்கள்

"உங்கள் கைகளை சுத்திகரியுங்கள்" என்னும் பதம் மற்றொரு வழியில் "உங்களுடைய இருதயங்களை சுத்திகரியுங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது; அது போல "பாவிகளே" என்னும் பதம் "இருமனமுள்ளவர்களே" என்று மீண்டும் வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் கைகளை சுத்திகரியுங்கள்

சாத்தியமான அர்த்தங்கள் 1. "ஒரு மனிதன் தன்னுடைய கிரியைகளை அல்லது நடத்தையையோ சுத்தம் செய்வது" அல்லது 2. "ஒரு மனிதன் மனந்திரும்பி அவனுடைய பாவ நடக்கையையை அல்லது கிரியைகளை அறிக்கை செய்வது." இதை, "தேவனை கனம்பண்ணும் விதத்தில் நடப்பது" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய இருதயங்களை பரிசுத்தமாக்குங்கள்

இங்கு, "இருதயங்கள்" என்னும் பண்பாகுபெயர் ஒரு மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் குறிக்கிறது. இதை, "உங்களுடைய எண்ணங்கள் தேவனை கனம் பண்ணட்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

இருமனமுள்ளவன்

"இருமனமுள்ளவன்" என்னும் பண்பாகுபெயர், தீர்மானம் எடுக்க முடியாத ஒரு மனிதனின் மன நிலையைக் குறிக்கிறது. இதை, "இருமனமுள்ள மக்கள்" அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படிவதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியாதவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

துயரப்பட்டு துக்கித்து

இது ஒரே காரியத்தை வலியுறுத்தும்படி இரண்டு விதங்களில் சொல்லும் முறை. இதை, "அதிக துக்கப்படுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடைய நகைப்பை துக்கமாகவும், உங்களுடைய சந்தோஷத்தை சஞ்சலமாகவும் திருப்புங்கள்

இது ஒரே காரியத்தை வலியுறுத்தும்படி இரண்டு விதங்களில் சொல்லும் முறை. இதை, "உடனே, உங்கள் எல்லா நகைப்பையும் நிறுத்திவிட்டு தேவனிடம் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள்

"தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்"

அவர் உங்களை உயர்த்துவார்

இந்த மரபுப்பெயரை "அவர் உங்களுக்கு கனத்தைக் கொடுப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 4:11-12

விரோதமாகப் பேசி

"மோசமாகப் பேசி" அல்லது "எதிர்த்து"

சகோதரர்களே

"சக விசுவாசிகளே"

நீங்கள் ... உங்களுடைய

4:11

12 இல் உள்ள இந்த இணைப் பெயர்ச்சொற்கள் எல்லாம் பன்மையில் இருக்கிறது; இவைகள் யாக்கோபின் வாசகர்களைக் குறிக்கிறது.

ஆனால் அதன் நியாயாதிபதியாய் இருக்கிறார்கள்

இதை, "நீங்கள் சட்டத்தைக் கொடுப்பவர் போல நடந்துகொள்ளுகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவன் ஒருவரே நியாயப்பிரமாணத்தைக் கொடுகிறவரும் நியாயதிபதியுமாய் இருக்கிறார்

"தேவன் ஒருவரே நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறவரும் மக்களை நியாயந்த்தீர்க்கிறவரும், ஏனென்றால் அவர் மட்டுமே அதை செய்ய முடியும்"

உன்னுடைய அயலானை நியாயந்தீர்க்கிற நீ யார்?

தனது வாசகர்களைக் கடிந்து கொள்ளும்படிக்கு யாக்கோபு இந்த பதில் எதிர்பாராக் கேள்வியைப் பயன்படுத்துகிறார். இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "நீங்கள் மனிதர் தான்; நீங்கள் மற்ற மனிதரை நியாயந்தீர்க்க முடியாது."

James 4:13-14

ஒரு வருடத்தை செலவு செய்யுங்கள்

இந்த மரபுப்பெயரை "ஒரு வருடத்திற்கு அங்கு தங்கி இருங்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

பேசுகிறவர்களே, கவனியுங்கள்

யாராவது சொல்லுவார்கள்"

நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்

தனது வாசகர்களைக் கடிந்துகொள்ள யாக்கோபு பயன்படுத்தும் பதில் எதிர்பாராக் கேள்வி இதுவாகும். இதை ஒரு வாக்கியமாக மொழிபெயர்க்கலாம்: "நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது."

உங்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது

தனது வாசகர்களை சரீரப்பிரகாரமான வாழ்க்கையைக் குறித்து கடிந்துகொள்ள யாக்கோபு பயன்படுத்தும் பதில் எதிர்பாராக் கேள்வி இதுவாகும். இதை ஒரு வாக்கியமாகவும் மொழிபெயர்க்கலாம்: "உங்களுடைய சரீரப் பிராகாரமான வாழ்க்கையைக் குறித்து நினைத்துப் பாருங்கள்"

சிறிது காலம் தோன்றி பின்னர் மறைந்து போகும் புகையைப் போல நீங்கள் இருக்கிறீர்கள்

இது ஒரு உவமானம். சரீரப் பிராகாரமான வாழ்க்கை எவ்வளவு சீக்கிரம் முடிகிறது. இதை தோன்றி சடிதியில் மறையும் புகைக்கு இந்த உவமானம் ஒப்பிடுகிறது. இதை, "நீங்கள் சிறிது காலமே வாழுகிறீர்கள்; நீங்கள் எப்பொழுது சாகப்போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று மொழிபெயர்க்கலாம்.

James 4:15-17

நாம் வாழுவோம்

"நாம்" என்னும் வார்த்தை யாக்கோபையோ அல்லது அவரது பார்வையாளர்களையோ நேரிடையாகக் குறிக்காமல், ஆனால் எவ்வாறு யாக்கோபினுடைய வாசகர்கள் நடக்க வேண்டும் என்பதை ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறது.

இதை அல்லது அதை நாங்கள் செய்வோம்

இதை, "நாங்கள் திட்டம் பண்ணினதை செய்வோம்" என்று மொழிபெயர்க்கலாம்.

அறிந்திருக்கிறவனுக்கு

"அவனுக்கு" என்று சொல்லுவதால் யாக்கோபு யாரையும் இங்கு நேரிடையாக பேசவில்லை, ஆனால் நன்மை செய்யவேண்டியிருந்தும் அதை செய்யாத யாவருக்கும் இதைப் பேசுகிறார்.

James 5

James 5:1-3

ஐசுவரியமாய் இருக்கிறவர்களே

1:10 இல் சொல்லப்பட்ட ஐசுவரிய விசுவாசக் கூட்டத்தார் அல்ல. இங்கு, யாக்கோபு தேவனைக் கனப்படுத்தாத ஐசுவரியமான மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இது வெளிப்படையாக்கப்படலாம்: "தேவனை கனப்படுத்தாத ஐசுவரியவான்களே."

நிர்பந்தங்கள் உங்கள் மேல் வருகிறது

இது ஐசுவரியவான்கள் மேல் எப்பொழுது வரும் என்பதை வெளிப்படையாக்கலாம்: "தேவன் எல்லாரையும் நியாயந்தீர்க்கும்போது பயங்கரமான காரியங்கள் உங்கள் மேல் வருகிறது."

உங்கள் செல்வம் அழுகிப்போனது; உங்களுடைய வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்களுடைய பொன்னும் வெள்ளியும் மதிப்பில்லாமல் போயிற்று

இந்த செல்வங்களும் வஸ்திரங்களும் ஏற்கனவே அழிந்துபோயின என்று சொல்லவரவில்லை. இப்பொழுது ஆவிக்குரிய மதிப்பு அவைகளுக்கு இல்லை என்றும் அவைகள் சிறிது காலமே இருக்கக்கூடியவைகள் என்றும் காண்பிக்கிறார். இதை, "உங்களை முக்கியப்படுத்தின பொருட்களும், மதிப்புள்ளவைகள் என்று நீங்கள் நினைத்த எல்லாப் பொருட்களும் மதிப்பில்லாததும் சிறிது காலமே இருக்கக்கூடியவைகளுமாய் இருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

அவைகள் அறிக்கப்பட்டுப் போகுதல் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்

இங்கு, "உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்" என்பது அழிந்து போன பொக்கிஷங்களை, நீதிபதியின் முன் சென்று சட்டத்தை மீறினவனைக் குற்றப்படுத்தும் ஒரு மனிதனுக்கு ஒப்பாக விவரிக்கிறது. இதை, "தேவன் உங்களை நியாயம் விசாரிக்கும்போது, உங்களுடைய எல்லா அழிந்துபோன பொக்கிஷங்களும் உங்களைக் குற்றப்படுத்தும் மனிதனைப் போல இருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களது மாம்சத்தை அக்கினி பட்சிப்பது போல பட்சித்து

இங்கு, அழிந்துபோன பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் அக்கினிக்கு ஒப்பிடப்படுகிறது. கூட, "அக்கினி" தேவனுடைய தண்டனையைக் குறிக்கும் உருவகம் ஆகும். இதை, "தேவன் உங்களை தண்டிப்பதற்கு அவைகள் தான் காரணமாய் இருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.

உங்களுடையப் பொக்கிஷங்களை குவித்தீர்கள்

"இந்த எல்லா பொக்கிஷங்களையும் மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்காமல், உங்களுக்கென்றே நீங்கள் வைத்துக்கொண்டீர்கள்"

கடைசி நாட்களில்

இந்த பண்பாகுபெயர், தேவன் எல்லா மக்களையும் நியாயந்தீர்க்க வரும் சற்று முன்புள்ள நேரத்தைக் குறிக்கிறது. இதை, "தேவன் உங்களை நியாயந்தீர்க்க இருக்கும் போது" (UDB) என்று மொழிபெயர்க்கலாம்.

James 5:4-6

உண்மையான விசுவாசிகளைப் போல நடந்துகொள்ளாமல் தங்களை விசுவாசிகள் என்று நினைத்துகொண்டிருக்கும் ஐசுவரிய யூதர்களைக் கடிந்து கொள்ளுகிறதை யாக்கோபு தொடருகிறார்.

பாருங்கள்

"பாருங்கள்" என்னும் வார்த்தை பின்வருபவற்றை முக்கியப்படுத்துகிறது. இதை, "கவனமாக கவனியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கூலிக்காரர்களின் கூலி ... கூப்பிடுகிறது

இங்கு, "கூலி" என்பது கூப்பிடுகிற மனிதனைக் குறிக்கிறது. இதை, "கூலிக்காரர்கள் ... கூப்பிடுகிறார்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கூலிக்காரர்களின் கூலி ... கூப்பிடுகிறது!

மறு மொழிபெயர்ப்பு: "உங்களுடைய விளை நிலங்களை அறுவடை செய்தவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை; அதனால், அவர்களுடைய கூலிக்காக அவர்கள் கூப்பிடுகிறார்கள்."

அறுவடையாளர்களின் கதறல் சேனைகளின் கர்த்தருடைய செவிகளில் வந்து எட்டினது

இதை, "சேனைகளின் கர்த்தர் அறுவடை செய்தவர்களின் கதறலைக் கேட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

சேனைகளின் கர்த்தருடைய செவிகள்

"காதுகள்" என்னும் பதத்தை யாக்கோபு கர்த்தரைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இதை, "சர்வ வல்லவமையுள்ள கர்த்தர் அறுவடை செய்தவர்களுடைய கூக்குரலைக் கேட்டார்" என்று மொழிபெயர்க்கலாம்.

பூமியில் நீங்கள் சம்போகமாக வாழ்ந்தீர்கள்; சுகபோகத்தில் உழன்றீர்கள்

"மற்ற எவருக்கும் எப்பொழுதும் தேவைப்படும் தேவைக்கும் அதிகமாக உங்களிடம் பணமும் பொருட்களும் இருந்தது."

கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் போல உங்களுடைய இருதயங்களை கொழுக்கச் செய்தீர்கள்

இது மிகுதியானப் பொருட்களுக்கான ஒரு ஐசுவரியவானின் பேராசையையும் விருப்பத்தையும், உணவிற்காக கொள்ளப்படும் அளவிற்குக் கொழுக்க உண்ணும் ஒரு மாட்டிற்கு ஒப்பிடுகிறது. இதை, "உங்களுடைய பேராசை கடுமையான நித்திய தண்டனைக்குத்தான் உங்களை ஆயத்தம் செய்திருக்கிறது" என்று மொழிபெயர்க்கலாம்.

நீதிமான்

"சரியானதை செய்யும் ஒருவன்"

உங்களை தடுக்கவில்லை

"உங்களை எதிர்க்கவில்லை"

James 5:7-8

அதனால், பொறுமையாய் இருங்கள்

"இதனிமித்தம் காத்திருந்து அமைதலாய் இருங்கள்"

கர்த்தரின் வருகை மட்டும்

இந்தக் கூற்று, பூமியில் தனது ராஜ்யத்தை ஸ்தாபித்து எல்லா மக்களையும் நியாயந்தீர்க்க இயேசு மீண்டும் வருகிறதைக் குறிக்கிறது. இதை, "கிறிஸ்து திரும்பும் வரை" என்று மொழிபெயர்க்கலாம்.

விவசாயியைப் போல

பொறுமையாய் இருத்தலின் காரியத்தை வலியுறுத்த யாக்கோபு, விசுவாசிகளை விவசாயிகளோடு ஒப்பிடுகிறார்.

உங்களுடைய இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்

இந்த மரபுப்பெயர், "வாக்கில் நிலைத்திருங்கள்" அல்லது "உங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கிறது

"கிறிஸ்து சீக்கிரம் மீண்டும் வருவார்"

James 5:9-11

யாக்கோபின் பார்வையாளர்கள் ஐசுவரிய யூதர்களாக இருந்து, இப்பொழுது எல்லா யூத விசுவாசிகளாக மாறியது.

குறை சொல்லாதிருங்கள், சகோதரர்களே ... நீங்கள்

யாக்கோபு எல்லா யூத விசுவாசிகளுக்கும் எழுதுகிறார்.

ஒருவருக்கொருவர் விரோதமாக

"ஒவ்வொருவரைப் பற்றி"

நீங்கள் நியாயந்தீர்க்கப்படமாட்டீர்கள்

இதை செய்வினைக் கூற்றோடு மொழிபெயர்க்கலாம்: "கிறிஸ்து உங்களை நியாயந்தீர்க்கமாட்டார்."

நியாயாதிபதி கதவின் அருகே நிற்கிறார்

யாக்கோபு இயேசுவை நியாயாதிபதியாகிய இயேசுவை கதவு வழியாக நடந்து வர இருக்கிற ஒரு மனிதனுக்கு ஒப்பிட்டு இந்த உலகத்தை நியாயந்தீர்க்க இயேசு எவ்வளவு சீக்கிரம் வரப்போகிறார் என்பதை வலியுறுத்துகிறார். இதை, "சீக்கிரம் வரப்போகிறார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

தீர்க்கதரிசிகளின் பாடுபடுதலும் பொறுமையும்

"தீர்க்கதரிசிகள் உபத்திரவத்தைப் பொறுமையோடு சகித்தனர்"

கர்த்தருடைய நாமத்தில் பேசினர்

"மக்களிடம் கர்த்தருக்காக பேசினர்"

பாருங்கள்

"பாருங்கள்" என்னும் வார்த்தை பின் வருபவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை, "கவனமாக கவனியுங்கள்" அல்லது "நினைவுகூருங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

விடாமுயற்சி எடுக்கிறவர்கள்

"பொறுமைக் காக்கிறவர்கள்" அல்லது "கஷ்டங்களினூடே தொடருகிறவர்கள்"

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமமுள்ளவராய் இருக்கிறார்

"கர்த்தர் எப்பொழுதும் உருக்கத்தையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார்"

James 5:12

எல்லாவற்றிற்கு மேலாக

இந்த மரபுப்பெயரை, "இது முக்கியமானது" அல்லது "விசேஷமாக" என்று மொழிபெயர்க்கலாம்.

என்னுடைய சகோதரர்கள்

"என்னுடைய சக விசுவாசிகள்"

சத்தியம் பண்ணவேண்டாம்

"சத்தியம்" பண்ணுவது என்றால் நீங்கள் சொன்னவற்றை நிறைவேற்றுவீர்கள். அதற்கு உங்கள் மேல் அதிகாரிகளால் கணக்குக் கேட்கப்படுவீர்கள். மறு மொழிபெயர்ப்பு: "சத்தியம் பண்ணாதிருங்கள்" அல்லது "வாக்கு கொடுக்காதிருங்கள்"

வானத்தின் மீதோ அல்லது பூமியின் மீதோ

"வானம்" மற்றும் "பூமி" என்னும் வார்த்தைகள் வானத்திலும் பூமியிலும் இருக்கும் வல்லமைகளைக் குறிக்கும் பண்பாகுபெயர்களாகும் ஆகும். UDB யைப் பார்க்கவும்.

உங்களுடைய "ஆம்" "ஆம்" என்று அர்த்தப்படும்; உங்களுடைய "இல்லை" "இல்லை" என்று அர்த்தப்படும்

இதை, "சத்தியம் பண்ணாமல் நீங்கள் செய்வேன் என்று சொன்னதைச் செய்யுங்கள்"

ஆகவே, நீங்கள் நியாயம் தீர்க்கப்படுவதில்லை

"ஆகவே, தேவன் உங்களைத் தண்டிக்கமாட்டார் "

James 5:13-15

உங்களில் யாராவது பாடுபடுகிறீர்களா? அவன் ஜெபிக்கவேண்டும்

"யாராவது பாடுபட்டால், அவன் ஜெபிக்கவேண்டும்."

யாராவது மகிழ்ச்சியாயிருக்கிறார்களா? அவன் துதி பாடக்கடவன்

"யாராவது சந்தோஷமாக இருந்தால், அவன் துதியின் பாடல்களைப் பாடவேண்டும்."

உங்களில் யாராவது வியாதியாய் இருக்கிறீர்களா? அவன் அழைக்கட்டும்

"யாராவது சுகவீனமாய் இருந்தால், அவன் அழைக்கவேண்டும்."

விசுவாசமுள்ளவனின் ஜெபம் வியாதியஸ்தனை சுகமாக்கும், கர்த்தர் அவனை எழுப்புவார்

விசுவாசிகள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது, அவர்களது ஜெபத்தைக் கேற்கும் கர்த்தர் அந்த மக்களை சுகப்படுத்துவார். இதை, "விசுவாசிகள் விசுவாசத்தோடு ஜெபிப்பதை கர்த்தர் கேட்டு அந்த வியாதியுள்ள மனிதனை அவர் குணப்படுத்துவார்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 5:16-18

ஒருவருக்கொருவர்

"ஒவ்வொருவருக்கும்"

ஒருவருக்கு மற்றவர்

"ஒவ்வொருவருக்காக"

நீங்கள் குணமாக்கப்படும்படியாக

இதை ஒரு செய்வினைக் கூற்றோடு மொழிபெயர்க்கலாம்: "தேவன் உங்களை குணப்படுத்தும்படிக்கு"

நீதிமான்களின் ஜெபம் பெரிய பலன்களைக் கொடுக்கும்

இதை, "தேவனுக்கு கீழ்ப்படிகிற மனிதன் ஜெபிக்கும்போது தேவன் பெரியக் காரியங்களை செய்வார்" என்று மொழிபெயர்க்கலாம்.

ஊக்கமாக

"பெரிய முயற்சியோடு" அல்லது "பெரிய முனைப்போடு" அல்லது "மகா உண்மையோடு"

மூன்று...ஆறு

"3...6"

வானங்கள் மழையைப் பொழிகிறது

இங்கு "வானங்கள்" தேவனைக் குறிக்கிறது. இதை "தேவன் மழையைப் பெய்யப்பண்ணினார்" என்று மொழிபெயர்க்கலாம்.

James 5:19-20

சகோதரர்கள்

"என்னுடைய உடன் விசுவாசிகள்"

யாராவது சத்தியத்தை விட்டு விலகிப்போனால் மற்ற யாராவது அவனை திரும்பிவர வழிநடத்துகிறான்

தேவனுக்குக் கீழ்ப்படியாத விசுவாசிகளை மந்தையில் இருந்து சாலையை விட்டு வேறு திசையில் விலகிச்செல்லும் ஆடுகளுக்கு இந்த உருவகம் ஒப்பிடுகிறது. அவனை மீண்டும் கீழ்ப்படிய உதவி செய்கிற சக விசுவாசிதான் ஆடுகளை சரியான பாதைக்கு மீண்டும் கொண்டு வரும் மேய்ப்பனாக இருக்கிறான். இதை, "தேவனுக்குக் கீழ்ப்படிவதை ஒருவன் நிறுத்தினால், மற்றவன் அவன் மீண்டும் கீழ்ப்படியத் துவங்க உதவி செய்கிறான்" என்று மொழிபெயர்க்கலாம்.

அவன் அறிந்துகொள்ளட்டும்

"அவனை மீண்டும் முன்னிருந்த நிலைக்கு நடத்துகிறவன் அறிந்துகொள்ளட்டும்"

ஒரு பாவியை தன்னுடைய தவறான வழியை விட்டுத் திரும்ப நடத்துகிறது

"தேவனை கனப்படுத்தாத வழியில் பாவி வாழ்வதை நிறுத்த உதவுகிறது"

அவனுடைய ஆத்துமாவை மரணத்தில் இருந்து காப்பாற்றப்படும் மற்றும் அனேக ஆயிரம் பாவங்களை மூடும்

இங்கு, "ஆத்துமா" என்னும் வார்த்தையை யாக்கோபு பயன்படுத்தி இந்த மரணம் சரீர மரணத்தைக் காட்டிலும் அதிகமானது. "ஆத்துமா" என்னும் வார்த்தை பாவம் செய்யும் ஒரு மனிதனைக் குறிக்கிறது. இங்கு, "மரணம்" என்னும் வார்த்தை ஆவிக்குரிய மரணத்தைக் குறிக்கிறது. இதை, "பாவியை ஆவிக்குரிய மரணத்தில் இருந்து காப்பாற்றி, தேவன் பாவியுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பார்" என்று மொழிபெயர்க்கலாம்.