தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Luke

Luke 1

Luke 1:1-4

Q? லூக்கா குறிப்பிடும் நேரில் கண்ட சாட்சிகள் யார் ?

A. இயேசுவினுடைய ஊழியத்தில் ஆரம்பமுதல் அவருடன் இருந்தவர்கள் தான் நேரில் பார்த்த சாட்சிகள்.

Q? நேரில் கண்ட சாட்சிகள் இயேசு செய்தவைகளைக் கண்டு என்ன செய்தனர் ?

A.இயேசு செய்தவைகளை அவர்கள் சரித்திரங்கள் அல்லது கதைகளாகவும் எழுதினார்கள். [1:2].

Q? இயேசு சொன்னவைகளையும், செய்தவைகளையும் ஏன் லூக்கா, தான் சொந்தமாக எழுத முடிவு செய்தான் ?

A. அவன் அறிந்திருந்த உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தைக் குறித்து தெயோபிலு அறியவேண்டுமென்று அவன் விரும்பினான் [1:4].

Luke 1:5-7

Q? ஏன் சகரியாவும், எலிசபெத்தும் நீதிமான்கள் என்று தேவன் சொன்னார் ?

A. தேவன் அவர்களை நீதியுள்ளவர்கள் என்றார் ஏனெனில் அவர்கள் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள் [1:6].

Q? ஏன் சகரியா, எலிசபெத்துக்கு குழந்தை இல்லாதிருந்தது ?

A. எலிசபெத்து மலடியாயிருந்ததினால் அவளுக்கு குழந்தை இல்லாதிருந்தது, சகரியாவும் வயது சென்றவனாயிருந்தான் [1:7].

Luke 1:8-10

Q? எருசலேம் தேவாலயத்தில் சகரியா என்ன வேலை செய்துவந்தான் ?

A. சகரியா ஆசாரியனாக ஊழியம் செய்தான் [1:8].

Q? சகரியா தேவாலயத்தில் என்ன செய்தான் ?

A. அவன் தேவனுக்கு தூபங்காட்டுகிறவனாயிருந்தான் [1:9].

Q? சகரியா தேவாலயத்திற்குள் இருக்கும்போது ஜனங்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் ?

A. ஜனங்கள் ஆலயப்பிரகாரத்தில் கூட்டமாய் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள் [1:10].

Luke 1:11-13

Q? சகரியா தேவாலயத்திற்க்குள் இருக்கையில் யார் அவனுக்கு தரிசனமானார் ?

A. தேவாலயத்திற்குள் தேவதூதன் சகரியாவுக்கு தரிசனமானான் [1:11].

Q? தேவதூதனைக் கண்டு சகரியா செய்தது என்ன ?

A. சகரியா தேவதூதனைக் கண்டுக் கலங்கி பயந்தான் [1:12].

Q? தேவதூதன் சகரியாவிடம் கூறியது என்ன ?

A. தேவதூதன் சகரியாவை நோக்கி: பயப்படாதே, உன் மனைவியாகிய எலிசபெத்து ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக என்றான் [1:13].

Luke 1:14-15

Luke 1:16-17

Q? இஸ்ரவேல் சந்ததியாருக்கு யோவான் என்ன செய்வதாக தேவதூதன் கூறினான் ?

A. தேவதூதன்: யோவான் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை தன் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான் என்றான் [1:16].

Q? யோவானின் எல்லா செய்கைகளும் எத்தகைய ஜனங்களை ஆயத்தப்படுத்தும் ?

A. ஜனங்கள் ஆயத்தமாகி கர்த்தருக்காகத் தயாராகி இருப்பார்கள் [1:17].

Luke 1:18-20

Q? தேவதூதனின் பெயர் என்ன? அவன் எப்போதும் எங்கே இருப்பான் ?

A. அந்த தூதனின் பெயர் காபிரியேல், இவன் எப்போதும் தேவசந்நிதானத்தில் நிற்பவன் [1:19].

Luke 1:21-23

Q? தேவதூதனின் வார்த்தையை சகரியா விசுவாசியாததினால் என்ன சம்பவிக்குமென்று தூதன் கூறினான் ?

A. குழந்தை பிறக்கும்வரை சகரியா பேசாமல் ஊமையாயிருப்பான் [1:21].

Luke 1:24-25

Luke 1:26-29

Q? ஆறு மாதத்திற்குப் பின்பு எலிசபெத்து கருத்தரித்ததைக் காண தேவனால் அனுப்பப்பட்ட காபிரியேல் என்பவன் யார் ?

A. மரியாள் என்னும் கன்னிகை, தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாள் [1:27].

Luke 1:30-33

Q? மரியாளுக்கு என்ன சம்பவிக்குமென்று தேவதூதன் கூறினான் ?

A. தேவதூதன் மரியாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றான் [1:31].

Q? அந்தக் குழந்தைக்கு என்ன பெயரிடவேண்டும், அவர் என்ன செய்வார் ?

A. அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது [1:31,33].

Luke 1:34-35

Q? மரியாள் கன்னிகையாய் இருப்பதினால் இவை எவ்வாறு சம்பவிக்குமென்று தூதன் கூறினான் ?

A. தூதன்: பரிசுத்த ஆவி மரியாளின்மேல் வருவார், உன்னதமானவரின் பலம் அவளை நிழலிடும் என்றான் [1:35].

Q? இந்த பரிசுத்தக் குழந்தை யாருடையதாய் இருக்கும் என்று தூதன் கூறினான் ?

A. தூதன் அந்தக் குழந்தை தேவனுடைய குமாரன் எனப்படும் என்றான் [1:35].

Q? தேவனால் எது கூடாது என்று தூதன் சொன்னான் ?

A. [1:35]. ஒன்றுமில்லை

Luke 1:36-38

Luke 1:39-41

Q? மரியாள் எலிசபெத்தை வாழ்த்தியபோது, எலிசபெத்தின் குழந்தை என்ன செய்தது ?

A. அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று [1:41,44].

Luke 1:42-45

Q? எலிசபெத்து யாரை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொன்னாள் ?

A. எலிசபெத்து: மரியாளும் அவள் குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொன்னாள் [1:42].

Luke 1:46-47

Luke 1:48-49

Luke 1:50-51

Luke 1:52-53

Luke 1:54-55

Q? பின்பு மரியாள், தேவனுடைய இந்த வல்லமையான செய்கைகள் எந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற தேவனால் உண்டாயிற்று என்றாள் ?

A. ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கம், உதவி செய்வார் என்றாள் [1:54].

Luke 1:56-58

Luke 1:59-61

Q? விருத்தசேதனம் பண்ணும் நாளிலே, வழக்கத்தின்படி எலிசபெத்தின் மகனுக்கு என்ன பெயர் சூட்டுவார்கள் ?

A. சகரியா [1:59].

Luke 1:62-63

Q? என்ன பெயர் சூட்ட மனதாயிருக்கிறீர் என்று சகரியாவிடம் கேட்டதற்கு அவன் என்ன எழுதினான், பின்பு சம்பவித்தது என்ன ?

A. சகரியா, அவன் பெயர் யோவான் என்று எழுதினான், உடனே அவன் வாய் திறக்கப்பட்டு பேசினான் [1:63-64].

Luke 1:64-66

Q? நடந்த காரியங்களைக் கண்ட ஜனங்கள் புரிந்துகொண்டது என்ன ?

A. கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடே இருக்கிறதை புரிந்துகொண்டனர் [1:66].

Luke 1:67-68

Q? நடக்கப் போகிற எவைகளுக்காக தேவன் திறந்த வழிகளை எண்ணி சகரியா தேவனைத் துதித்தான் ?

A. தேவன் தம்முடைய ஜனங்களை விடுதலையாக்கும்படிக்கு திறந்த வழிகளுக்காக [1:68].

Luke 1:69-71

Luke 1:72-75

Luke 1:76-77

Q? சகரியா யோவானைக் குறித்து, இவன் எவைகளை ஜனங்களுக்குத் தெரியப்படுத்த உதவுவான் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான் ?

A. யோவான் தமது ஜனத்துக்கு பாவமன்னிப்பின் இரட்சிப்பைப் பெற உதவுவான் என்றான் [1:77].

Luke 1:78-79

Luke 1:80

Q? இஸ்ரவேலுக்கு தன்னை காண்பிக்கும்வரை யோவான் எங்கே தங்கி வளர்ந்தான் ?

A. யோவான் வனாந்திரங்களிலே வளர்ந்து, வாழ்ந்து வந்தான் [1:80].

Luke 2

Luke 2:1-3

Q? மக்கள் தங்கள் குடிமதிப்பு எழுதும்படி எங்கே போனார்கள் ?

A. மக்கள் குடிமதிப்பு எழுதும்படி தங்கள் சொந்த ஊர்களுக்கு போனார்கள் [2:3].

Luke 2:4-5

Q? யோசேப்பு எந்த வம்சத்தானாயிருந்தபடியால் தன் மனைவி மரியாளோடு பெத்லகேமுக்குப் போனான் ?

A. யோசேப்பு தாவீதின் சந்ததியாய் இருந்ததினால் அவன் தன் மனைவி மரியாளோடு பெத்லகேமுக்கு போனான் [2:4].

Luke 2:6-7

Q? மரியாள் குமாரனைப் பெற்று அவனை எங்கே வைத்தாள் ?

A. குழந்தை பிறந்தவுடன் மரியாள் அந்த பிள்ளையை முன்னனையில் கிடத்தினாள் [2:7].

Luke 2:8-9

Q? யாருக்கு தூதன் தரிசனமானான் ?

A. வயல்வெளியில் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தூதன் தரிசனமானான் [2:8-9].

Q? தூதனைக் கண்ட மேய்ப்பர்கள் செய்தது என்ன ?

A. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தார்கள் [2:9].

Luke 2:10-12

Q? மேய்ப்பர்களுக்கு தூதன் கொடுத்த நற்செய்தி என்ன ?

A. தூதன்: கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்றான்

Luke 2:13-14

Luke 2:15-16

Q? தேவ தூதன் அவர்களை விட்டுப் போன பின்பு, மேய்ப்பர்கள் செய்தது என்ன ?

A. பேதலகேமிலே அந்த குழந்தையைக் காணும்படி மேய்ப்பர்கள் போனார்கள் [2:15-16].

Luke 2:17-20

Luke 2:21

Q? இயேசுவுக்கு எப்போது விருத்தசேதனம் நடந்தது ?

A. இயேசு பிறந்து எட்டாம் நாளிலே அவருக்கு விருத்தசேதனம் நடந்தது [2:21].

Luke 2:22-24

Q? யோசேப்பும் மரியாளும் ஏன் இயேசுவை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர் ?

A. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி தேவனுக்கு காணிக்கை செலுத்தும்படி அவர்கள் இயேசுவை தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர் [2:22-24].

Luke 2:25-26

Q? சிமியோனுக்கு பரிசுத்த ஆவி வெளிப்படுத்தியது என்ன ?

A. நீ கிறிஸ்துவைக் காணும்முன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தான்

Luke 2:27-29

Luke 2:30-32

Q? இயேசுவை,சிமியோன் யார் என்று சொன்னான் ?

A. புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாகவும் இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் இருப்பார் என்று சிமியோன் இயேசுவைப் பற்றி சொன்னான் [2:32].

Luke 2:33-35

Q? இயேசுவுக்கு அடையாளமாக மரியாளுக்கு என்ன சம்பவிக்குமென்று சிமியோன் கூறினான் ?

A. அவள் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான் [2:35].

Luke 2:36-38

Q? அன்னாள் என்னும் தீர்க்கதரிசி யோசேப்பு, மரியாள் மற்றும் இயேசுவிடம் வந்து என்ன செய்தாள் ?

A. அன்னாள் கர்த்தரை புகழ்ந்து பாடி, அவரைக் குறித்து யாவருக்கும் அறிவித்தாள் [2:38].

Luke 2:39-40

Q? நாசரேத்துக்கு திரும்பியதும் இயேசுவுக்கு சம்பவித்தது என்ன ?

A. இயேசு வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்து, தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது [2:40].

Luke 2:41-44

Q? இயேசு பண்டிகை நாட்களில் எருசலேமில் இருந்ததை அவர் பெற்றோர் ஏன் அறியாதிருந்தார்கள் ?

A. பிரயாணக்காரரின் கூட்டத்தில் இருப்பார் என்று நினைத்து அவர் பெற்றோர் அறியாதிருந்தார்கள் [2:43-44].

Luke 2:45-47

Q? இயேசுவை அவர் பெற்றோர் எங்கே கண்டுபிடித்தனர்? அவர் என்ன செய்துகொண்டிருந்தார் ? A. அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து பேசுகிறதைக் கேட்கவும், வினாவவும் பெற்றோர்கள் கண்டார்கள் [2:46].

Luke 2:48-50

Q? விசாரத்தோடே நாங்கள் தேடினோம் என்று மரியாள் கூறியதற்கு இயேசுவின் பதில் என்ன ?

A. நான் என் பிதாவின் வீட்டில் இருக்கவேண்டுமென்பதை அறியீர்களா என்றார் [2:49]

Luke 2:51-52

Q? இயேசு தமது பெற்றோருடன் நாசரேத்துக்கு சென்ற பின்பு அவர் செய்தது என்ன ?

A. அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் [2:51].

Q? இயேசு வளர்ந்த பின்பு அவர் எப்படிப்பட்ட வாலிபனாய் இருந்தார் ?

A. ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் விருத்தியடைந்தார் [2:52].

Luke 3

Luke 3:1-2

Luke 3:3

Q? யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் யோவான் என்ன செய்தியை பிரசங்கித்தான் ?

A. பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினான் [3:3].

Luke 3:4

Q? யாருக்காக யோவான் வழியை ஆயத்தம் பண்ணிக்கொண்டு இருப்பதாக கூறினான் ?

A. யோவான், கர்த்தருக்காக வழியை ஆயத்தம் பண்ணினான் [3:4].

Luke 3:5-6

Luke 3:7

Luke 3:8

Q? ஆபிரகாம் ஜனங்களின் தகப்பன் என்று நினையாதிருக்க வேண்டாமென்றும், மற்றும் அவர்கள் எதை செய்ய வேண்டும் என்று யோவான் கூறினான் ?

A. யோவான் மனந்திரும்புதலுகேற்ற கனிகளைக் கொடுக்கவேண்டும் என்றான் [3:8].

Luke 3:9

Q? நல்ல கனி கொடாத மரங்களுக்கு என்ன சம்பவிப்பதாக யோவான் கூறுகிறான் ?

A. யோவான் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று கூறினான் [3:9].

Luke 3:10-11

Luke 3:12-13

Q? ஆயக்காரர்கள் மனந்திரும்பும்படி என்ன செய்ய வேண்டுமென்று யோவான் கூறினான் ?

A. யோவான் கட்டளையிடப்பட்டதற்கு மேல் பணம் வாங்காதிருக்கும்படி கூறினான் [3:13].

Luke 3:14

Luke 3:15-16

Q? நான் உங்களுக்கு ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் ஒருவர் வந்து எதினால் ஞானஸ்நானம் கொடுப்பதாக யோவான் கூறினான் ? அவர் யார் ?

A. யோவான் அவர் வந்து பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான் [3:16].

Luke 3:17

Luke 3:18-20

Q? ஏன் யோவான் ஏரோதை கடிந்து கொண்டான் ? A. அவன் சகோதரனின் மனைவியை திருமணம் செய்ததினிமித்தமும் மற்றப் போல்லாங்கினிமித்தமும் யோவான் ஏரோதை கடிந்துகொண்டான் [3:19]. Q? யோவானை சிறையில் அடைத்தது யார் ? A. ஏரோது, யோவானை சிறையில் அடைத்தான் [3:20].

Luke 3:21-22

Q? யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே சம்பவித்தது என்ன ?

A. இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டு பரிசுத்த ஆவி புறாவை போல் இறங்கினார் [3:21-22].

Q? வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன ?

A. வானத்திலிருந்து உண்டான சத்தம்: இவர் என் நேச குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன் என்றது [3:22].

Luke 3:23-24

Q? இயேசு போதிக்கத் துவங்கும்போது எவ்வளவு வயதுடையவராய் இருந்தார் ?

A. இயேசு போதிக்கத் துவங்கும்போது முப்பது வயதுடையவராய் இருந்தார் [3:23].

Luke 3:25-26

Luke 3:27-29

Luke 3:30-32

Luke 3:33-35

Luke 3:36-38

Luke 4

Luke 4:1-2

Q? இயேசுவை யார் வனாந்திரத்திற்கு கொண்டு சென்றது ?

A. பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் [4:1].

Q? எவ்வளவு நாள் வனாந்திரத்தில் பிசாசு இயேசுவை சோதித்தான் ?

A. பிசாசு நாற்பது நாள் இயேசுவை சோதித்தான் [4:2].

Luke 4:3-4

Q? தரையில் இருந்த கல்லுகளைக் கொண்டு என்ன செய்யும்படி பிசாசு இயேசுவை சோதித்தான் ?

A. அந்த கல்லுகளை அப்பமாக்கும்படி பிசாசு இயேசுவிடம் கூறினான் [4:3].

Q? பிசாசுக்கு இயேசுவின் பதில் என்ன ?

A. மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை என்றார் [4:4].

Luke 4:5-7

Q? மிக உயர்ந்த இடத்திலிருந்து பிசாசு இயேசுவுக்குக் காண்பித்தது என்ன ?

A. உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பிசாசு இயேசுவுக்குக் காண்பித்தான் [4:5].

Q? இயேசு என்ன செய்யவேண்டுமென்று பிசாசு விரும்பினான் ?

A. தாழ விழுந்து தன்னை இயேசு பணிந்துகொள்ளும்படி பிசாசு விரும்பினான் [4:7].

Luke 4:8

Q? பிசாசுக்கு இயேசுவின் பதில் என்ன ?

A. உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்றார் [4:8].

Luke 4:9-11

Q? தேவாலயத்தின் உப்பரிகையின்மேல் இயேசுவை நிறுத்தி பிசாசு கேட்டுக்கொண்டது என்ன ?

A. அவன் இயேசுவைத் தாழ குதிக்கும்படி கூறினான் [4:9].

Luke 4:12-13

Q? பிசாசுக்கு இயேசுவின் பதில் என்ன ?

A. உன் தேவனை பரீட்சை பாராதிருப்பயாக என்றார் [4:12].

Q? தேவாலயத்தின் உப்பரிகையின்மேலிருந்து இயேசு குதிக்க மறுக்க பிசாசு என்ன செய்தான் ?

A. சில காலம் பிசாசு இயேசுவை விட்டு விலகிப்போனான் [4:13].

Luke 4:14-15

Luke 4:16-17

Q? இயேசு ஜெப ஆலயத்தில் எழுந்து நின்று எந்த புத்தகத்தை வாசித்தார் ?

A. இயேசு, ஏசாயாவின் தீர்க்கதரிசன புஸ்தகத்தை வாசித்தார் [4:17].

Luke 4:18-19

Luke 4:20-22

Q? அந்த நாளில் எது நிறைவேறியதாக இயேசு கூறினார் ?

A. இயேசு: ஏசாயாவின் தீர்க்கதரிசன புஸ்தகம் வாசித்தது அன்றையதினம் நிறைவேறியது என்றார் [4:21].

Luke 4:23-24

Q? தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் எவ்வித வரவேற்பைப் பெறுவான் என்று இயேசு கூறினார் ?

A. ஒரு தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் அங்கீகரிக்கப்பட மாட்டான் என்றார் [4:24].

Luke 4:25-27

Q? தேவாலயத்தில் இயேசுவின் முதல் உவமையில் எலியா ஒருவனுக்கு உதவ தேவனால் எங்கு அனுப்பப்பட்டான் ?

A. சீதோன் நாட்டிலுள்ள சரெப்தாவிற்கு எலியா தேவனால் அனுப்பப்பட்டான் [4:26].

Q? தேவாலயத்தில் இயேசுவின் இரண்டாவது உவமையில் எலிசா ஒருவனுக்கு உதவும்படி எந்த தேசத்திலிருந்து தேவனால் அனுப்பப்பட்டான் ?

A. சீரியனாகிய நாகமானிடத்திற்கு உதவும்படி அனுப்பப்பட்டான் [4:27].

Luke 4:28-30

Q? தேவாலயத்தில் இயேசுவின் இந்த உவமைகளைக் கேட்ட ஜனங்கள் என்ன செய்தனர் ?

A. அவர்கள் கோபமூண்டு சிகரத்தின் உச்சியிலிருந்து தள்ளிவிடும்படி வாஞ்சித்தார்கள் [4:28-29].

Q? தேவாலயத்திலிருந்தவர்கள் தம்மைக் கொலை செய்யாதவாறு இயேசு எவ்வாறு தப்பித்தார் ?

A. இயேசு அவர்கள் நடுவிலிருந்து போய்விட்டார் [4:30].

Luke 4:31-32

Luke 4:33-34

Q? தேவாலயத்தில் ஒரு மனிதனிலிருந்த பிசாசு இயேசுவைக் குறித்து என்ன தெரியும் என்று பேசினது ?

A. அந்த பிசாசு இயேசுவை நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று கூறியது [4:34].

Luke 4:35-37

Q? அந்த பிசாசை இயேசு துரத்திய பின்பு அங்கே இருந்தவர்களின் செயல் என்ன ?

A. எல்லோரும் ஆச்சரியப்பட்டு அவரைக் குறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள் [4:36].

Luke 4:38-39

Luke 4:40-41

Q?அவரிடத்தில் கொண்டுவந்த வியாதியஸ்தர்களை இயேசு என்ன செய்தார் ?

A. இயேசு அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களை குணமாக்கினார் [4:40].

Q? அசுத்த ஆவிகள் இயேசுவைக் குறித்து சொன்னது என்ன ? ஏன் அவைகளைப் பேச தடை செய்தார் ?

A. நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சொன்னது, அவைகள் இயேசு யார் என்பதை அறிந்தபடியால் அவைகளை பேசவிடவில்லை [4:41].

Luke 4:42-44

Q? எந்த காரணத்திற்காக அவர்களை அனுப்பியதாக இயேசு கூறினார் ?

A. மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும்படி அனுப்பினார் [4:43].

Luke 5

Luke 5:1-3

Luke 5:4-7

Q? சீமோனுடைய படவில் ஏறி போதகம்பண்ணி முடித்தபின்பு, அவனை அந்த படவை வைத்து என்ன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ?

A. படவை ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போய் மீன் பிடிக்கும்படி வலைகளை போடும்படி கூறினார் [5:4].

Q? பேதுரு இரா முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் கிடைக்காதிருந்தும் அவன் என்ன செய்தான் ?

A. அவன் கீழ்படிந்து வலைகளைப் போட்டான் [5:5].

Q? அவர்கள் வலைகளைப் போட்டதும் சம்பவித்தது என்ன ?

A. வலைகள் கிழிந்துபோகத்தக்க மிகுதியான மீன்களை பிடித்தனர் [5:6].

Luke 5:8-11

Q? பின்பு இயேசு என்ன செய்யும்படி சீமோன் விரும்பினான் ? ஏன் ?

A. சீமோன் தான் பாவியான மனிதன் என்றும் தன்னை விட்டுப் போகவேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொண்டான் [5:8].

Q? சீமோன் எதிர்காலத்தில் எதை செய்வான் என்று இயேசு கூறினார் ?

A. இயேசு இதுமுதல் நீ மனிதனை பிடிக்கிறவனாய் இருப்பாய் என்றார் [5:10].

Luke 5:12-13

Luke 5:14

Luke 5:15-16

Q? அந்த சமயத்தில் எத்தனை ஜனங்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்கும்படியும், வியாதிகளிலிருந்து சுகமாகவும் வந்தார்கள் ?

A. திரளான ஜனங்கள் இயேசுவினிடத்திற்கு வந்தார்கள் [5:15].

Luke 5:17

Luke 5:18-19

Luke 5:20-21

Q? திமிர்வாதக்காரனை அவன் நண்பர்கள் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து கீழே இறக்கியதற்கு இயேசு கூறியது என்ன ?

A. மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் [5:20].

Q? ஏன் வேதபாரகர்களும், பரிசேயர்களும் இயேசு தேவதூஷணம் கூறியதாக யோசித்தனர் ?

A. ஏனெனில் தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்கக்கூடும் என்பதால் [5:21].

Luke 5:22-24

Q? என்ன அதிகாரம் இந்த உலகில் உண்டு என்பதை அவர்கள் அறியும்படி திமிர்வாதகாரனை எவ்வாறு குணமாக்கினார் ?

A. இந்த உலகில் பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்பதை அவர்கள் அறியும்படி திமிர்வாதக்காரனை இயேசு இவ்வாறு குணமாக்கினார் [5:24].

Luke 5:25-26

Luke 5:27-28

Luke 5:29-32

Q? லேவியின் வீட்டில் இயேசு போஜனம் பண்ணுகையில் தாம் எதற்காக வந்திருப்பதாகக் கூறினார் ?

A. பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார் [5:32].

Luke 5:33-35

Q? எப்போது அவருடைய சீஷர்கள் உபவாசிப்பார்கள் என்று இயேசு கூறினார் ?

A. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாளில் சீஷர்கள் உபவாசிப்பார்கள் என்று இயேசு கூறினார் [5:35].

Luke 5:36

Q? இயேசுவின் உவமையில் பழைய வஸ்திரத்தை புதிய வஸ்திரத்தோடே இணைத்தால் என்ன ஏற்படும் ?

A. புதியது பழையதைக் கிழிக்கும், புதிய துண்டு பழையதோடு ஒட்டாது [5:36].

Luke 5:37-39

Q? இயேசுவின் இரண்டாவது உவமையில், புது திராட்சை ரசத்தை பழைய பழரசத்தில் வார்த்தால் என்ன சம்பவிக்கும் ?

A. புது ரசம் துருத்திகளைக் கிழித்துப் போடும், புது ரசமும் கேட்டுப்போம் [5:37].

Q? புது ரசம் கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யவேண்டுமென்று இயேசு கூறினார் ?

A. புது ரசத்தை, நல்ல துருத்தியில் வார்க்கவேண்டும் என்றார் [5:38].

Luke 6

Luke 6:1-2

Q? பரிசேயர்கள் ஓய்வுநாளில் செய்யத்தகாத எதை இயேசுவின் சீஷர்கள் செய்ததாக குற்றம்சாட்டினர் ?

A. அவர்கள் பயிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள் [6:1].

Luke 6:3-5

Q? இயேசு தமக்கு ஓய்வுநாளில் நன்மை செய்ய என்ன அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் ?

A. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்று இயேசு கூறினார் [6:5].

Luke 6:6-8

Luke 6:9-11

Q? இயேசு சூம்பின கையுடைய மனிதனை ஓய்வுநாளில் குணமாக்கியதற்கு வேதபாரகர்களும் பரிசேயர்களும் எவ்வாறு மறு செய்கை காட்டினர் ?

A. அவர்களோ மூர்க்கவெறிகொண்டு இயேசுவுக்கு என்ன செய்யலாமென்று ஆலோசித்தனர் [6:11].

Luke 6:12-13

Q? மலையில் தெரிந்துகொண்ட பன்னிரு சீஷர்களுக்கு இயேசு கூறிய பெயர் என்ன ?

A. இயேசு அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார் [6:13].”

Luke 6:14-16

Luke 6:17-19

Luke 6:20-21

Q? எப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு கூறினார் ?

A. தரித்திரரானவர்கள், பசியாயிருக்கிறவர்கள், அழுகிறவர்கள், மனுஷகுமாரன் நிமித்தம் பகைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றார் [6:20-22].

Luke 6:22-23

Q? இயேசுவின் பார்வையில் இப்படிப்பட்டவர்கள் ஏன் களிகூர்ந்து மகிழவேண்டும் ?

A. ஏனெனில் பரலோகத்தில் அவர்கள் பலன் மிகுதியாய் இருக்கும் [6:23].

Luke 6:24-25

Luke 6:26

Luke 6:27-28

Q? சீஷர்களை விரோதிக்கிறவர்களையும், தம்மை வெறுக்கிறவர்களையும் என்ன செய்யவேண்டுமென்று இயேசு கூறினார் ?

A. விரோதிக்கிறவர்களை நேசிக்கவும், தம்மை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும் வேண்டுமென்று இயேசு கூறினார் [6:27,35].

Luke 6:29-30

Luke 6:31-34

Luke 6:35-36

Q? நன்றி அறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் பரம பிதா என்ன செய்கிறார் ?

A. அவர் அவர்களுக்கு இரக்கமுள்ளவராய் இருக்கிறார் [6:35-36].

Luke 6:37

Luke 6:38

Luke 6:39-40

Luke 6:41-42

Q? நம் சகோதரனின் கண்ணிலிருக்கும் துரும்பை நீக்கும் முன் நாம் என்ன செய்யவேண்டுமென்று இயேசு கூறுகிறார் ?

A. முதலில் நம் கண்ணிலிருக்கும் துரும்பை நீக்க வேண்டும் என்று கூறுகிறார் [6:42].

Luke 6:43-44

Luke 6:45

Q? நல்ல இருதயமுள்ளவனின் நல்ல பொக்கிஷத்திலிருந்து என்ன வருகிறது ?

A. நல்ல இருதயமுள்ளவனின் நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகள் வருகிறது [6:45].

Q? பொல்லாத இருதயமுள்ளவனின் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து என்ன வருகிறது

A. பொல்லாத இருதயமுள்ளவனின் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகள் வருகிறது [6:45].

Luke 6:46-48

Q? கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டுகிறவன் இயேசுவின் வார்த்தையின்படி என்ன செய்கிறான் ?

A. அவன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறான் [6:47].

Luke 6:49

Q? அஸ்திபாரம் இல்லாமல் தன் வீட்டைக் கட்டுகிறவன் இயேசுவின் வார்த்தையின்படி என்ன செய்கிறான் ?

A. அவன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்யாதவன் [6:49].

Luke 7

Luke 7:1

Luke 7:2-5

Q? யூதர்களின் மூப்பரை இயேசுவிடம் அனுப்பி முதலாவது என்ன செய்யும்படி நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான் ?

A. இயேசு அவன் வீட்டிற்கு வந்து தன் வேலைக்காரனை சொஸ்தமாக்கும்படி கேட்டுக்கொண்டான் [7:3].

Luke 7:6-8

Q? ஏன் நூற்றுக்கு அதிபதி தன் நண்பர்களை இயேசுவிடம் அனுப்பி அவன் வீட்டிற்கு வரவேண்டாம் என்றான் ?

A. நூற்றுக்கு அதிபதி இயேசு என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என்றான் [7:6].

Q? தன் வேலைக்காரனை இயேசு எவ்வாறு சொஸ்தமாக்க வேண்டுமென்று நூற்றுக்கு அதிபதி விரும்பினான் ?

A. நூற்றுக்கு அதிபதி ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் பிழைப்பான் என்றான் [7:7].

Luke 7:9-10

Q? நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

A. இயேசு இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்றார் [7:9].

Luke 7:11-15

Q? விதவையின் ஒரே மகன் மரித்ததற்க்கு இயேசுவின் செயல் என்ன ?

A. அவர் மனதுருகினார் [7:13].

Luke 7:16-17

Q? விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்பியதைக் குறித்து அங்கே இருந்த ஜனங்கள் கூறியது என்ன ?

A. மகா தீர்க்கதரிசி நமக்குள்ளே தோன்றியிருக்கிறார், தேவன் நம்மை சந்தித்தார் என்றும் கூறினார்கள் [7:16].

Luke 7:18-20

Luke 7:21-23

Q? யோவானுடைய சீஷர்களுக்கு வருகிறவர் நான் தான் என்று இயேசு எவ்வாறு காண்பித்தார் ?

A. குருடர்கள் பார்வையடைகிறார்கள், குஷ்டரோகிகள் குணமாகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் மற்றும் மரித்தோர் எழுந்திருப்பதையும் கூறினார் [7:22].

Luke 7:24-26

Q? யோவானைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

A. இயேசு: யோவான் தீர்க்கதரிசிகளிலும் மேன்மையுள்ளவன் என்றார் [7:26].

Luke 7:27-28

Luke 7:29-30

Q? பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் யோவானாலே ஞானஸ்நானம் பெறாமல் எதைத் தள்ளிவிட்டார்கள் ?

A. அவர்கள் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள் [7:30].

Luke 7:31-32

Luke 7:33-35

Q? யோவான் அப்பம் புசியாதவனும், திராட்சைரசம் குடியாதவனுமாயிருந்ததைக் குறித்து அவன்மேல் என்ன குற்றம்சாட்டினர் ?

A. அவர்கள்: அவன் பிசாசு பிடித்தவன் என்றார்கள் [7:33].

Q? இயேசு அப்பம் புசிக்கிறத்தையும், ரசம் குடிக்கிறதையும் குறித்து அவர்மேல் என்ன குற்றம்சாட்டினர் ?

A. அவர்கள்: அவரை போஜனப்பிரியனும், மதுபானப்பிரியனுமாயிருக்கிறான் என்றார்கள் [7:34].

Luke 7:36-38

Q? பரிசேயனுடைய வீட்டில் இயேசு இருக்கையில் அந்த ஊரிலிருந்து வந்த பெண் அவருக்கு செய்தது என்ன ?

A. அவள் இயேசுவினுடைய பாதங்களை கண்ணீரினால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள் [7:38].

Luke 7:39-40

Luke 7:41-43

Luke 7:44-45

Luke 7:46-47

Q? அவளுடைய அனேக பாவங்கள் மன்னிக்கப்பட அவள் என்ன செய்தாள் என்றார் ?

A. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே என்றார் [7:47].

Luke 7:48-50

Q? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று இயேசு அந்த பெண்ணுக்கு கூறியதும், கூட பந்திஇருந்தவர்களின் செயல் என்ன ?

A. பாவங்களை மன்னிக்க இவன் யார் என்றார்கள் [7:49]

Luke 8

Luke 8:1-3

Q? அனேக பெண்கள் இயேசுவுக்கும் அவர் சீஷர்களுக்கும் என்ன செய்து வந்தார்கள் ?

A. அவர்கள் தங்கள் சொந்த சொத்துக்களினாலே அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார்கள் [8:3].

Luke 8:4-6

Luke 8:7-8

Luke 8:9-10

Luke 8:11-13

Q? இயேசுவின் உவமையில் விதைக்கப்படும் விதை எதைக் குறிக்கிறது ?

A. விதை என்பது தேவனுடைய வசனம் ஆகும் [8:11].

Q? வழியருகே விழுகிற விதைகள் யார்? அவர்களுக்கு என்ன சம்பவிக்கும் ?

A. அவர்கள் வசனத்தைக் கேட்கிறார்கள், அவர்கள் இரட்சிக்கப்படாதபடிக்கு பிசாசானவன் வந்து அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுவான் [8:12].

Q? கற்பாறைகளில் விதைக்கப்படுகிற விதைகள் யார்? அவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?

A. இவர்கள் சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள், கொஞ்சம் சோதனை வந்தவுடனே பின்வாங்கிப்போகிறவர்கள் [8:13].

Luke 8:14-15

Q? முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்படுகிரவர்கள் யார்? அவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?

A. இவர்கள் வசனத்தைக் கேட்பவர்கள், உலகதிற்குரிய கவலைகளினாலும், ஐசுவரியத்தினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு பலன்கொடாதே போகிறார்கள் [8:14].

Q? நல்ல நிலத்தில் விழுகிற விதைகள் யார்? அவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?

A. அவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்கள், கேட்டு அதில் நிலைத்திருந்து பொறுமையுடன் பலன் கொடுக்கிறவர்களாய் இருப்பார்கள் [8:15].

Luke 8:16-18

Luke 8:19-21

Q? யாரை இயேசு தனது தாய் மற்றும் சகோதர் என்கிறார் ?

A. வசனத்தைக் கேட்டு அதின்படி செய்கிறவர்களே [8:21].

Luke 8:22-23

Luke 8:24-25

Q? இயேசு காற்றையும், கடலையும் அமைதிபடுத்தியதைக் குறித்து அவர் சீஷர்கள் கூறியது என்ன ?

A. அவர்கள், இவர் யாரோ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள் [8:25]?”

Luke 8:26-27

Luke 8:28-29

Q? கதரேனருடைய பட்டணத்தில் பிசாசு பிடித்திருந்த மனிதன் என்ன செய்துகொண்டிருந்தான் ?

A. அவன் வஸ்திரம் தரியாதவனும், வீட்டில் தங்காமலும், பிரேத கல்லறைகளில் தங்கி, அவர்கள் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டப்பட்டிருந்தும் அவைகளை முறித்து போட்டு பிசாசினால் வனாந்திரங்களுக்கு துரத்தப்பட்டிருந்தான் [8:27,29].

Luke 8:30-31

Luke 8:32-33

Q? அந்த மனிதனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளைக் கொடுத்ததும் ஆவிகள் எங்கே சென்றன ?

A. அந்த பிசாசுகள் பன்றிகள் கூடத்திற்குள் நுழைந்தது, அவைகள் கடலிலே அமிழ்ந்து மாண்டது [8:33].

Luke 8:34-35

Luke 8:36-37

Luke 8:38-39

Q? அந்த மனிதன் என்ன செய்யும்படி இயேசு கூறினார் ?

A. இயேசு: நீ உன் வீடிற்கு திரும்பிபோய், தேவன் உனக்கு செய்தவைகளை அறிவி என்றார் [8:39].

Luke 8:40-42

Luke 8:43-44

Luke 8:45-46

Luke 8:47-48

Q? இயேசுவின் பார்வையில், பெரும்பாடுள்ள பெண்ணை எது குணமாக்கியது ?

A. இயேசுவின்மேல் அவள் வைத்திருந்த விசுவாசமே அவளை குணமாக்கிற்று என்றார் [8:48].

Luke 8:49-50

Luke 8:51-53

Luke 8:54-56

Q? ஜெப ஆலயத் தலைவனாகிய யவீரு வீட்டில் இயேசு செய்தது என்ன ?

A. ஜெப ஆலயத் தலைவனாகிய யவீருவினுடைய மகளை உயிரோடு எழுப்பினார் [8:55].

Luke 9

Luke 9:1-2

Q? இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களை எதற்காக அனுப்பினார் ?

A. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும், வியாதியஸ்தர்களை குணமாக்கவும் அவர்களை இயேசு அனுப்பினார் [9:2].

Luke 9:3-4

Luke 9:5-6

Luke 9:7-9

Q? ஏரோது இயேசுவைக் குறித்து கேள்விப்பட்ட மூன்று விளக்கங்கள் யாவை? அவை என்ன ?

A. சிலர் இயேசுவை யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்து தீர்க்கதரிசி என்றும் கூறினார்கள் [9:7-8].

Luke 9:10-11

Luke 9:12-14

Q? வனாந்திரத்தில் இயேசுவை பின்தொடர்ந்து வந்த ஜனங்களில் எத்தனை ஆண்கள் இருந்தனர் ? A. ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தனர் [9:14].

Luke 9:15-17

Q? அந்த மக்கள் கூட்டம் சாப்பிடும்படி சீஷர்கள் வைத்திருந்த உணவு என்ன ?

A. அவர்களிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் இருந்தன [9:13,16].

Q? ஐந்து அப்பமும், இரண்டு மீன்களையும் வைத்து இயேசு என்ன செய்தார் ?

A. இயேசு அவைகளை எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அசீர்வதித்து, பிட்டு ஜனங்களுக்குக் கொடுக்கும்படி தம் சீஷர்களிடம் கொடுத்தார் [9:16].

Q? எத்தனை கூடைகளில் போஜனம் மீதம் இருந்தன ?

A. பன்னிரண்டு கூடைகள் நிறைய துணிக்கைகள் மீதம் இருந்தன [9:17].

Luke 9:18-19

Luke 9:20-22

Q? இயேசு தம் சீஷர்களிடம் நான் யார் என்று கேட்க, பேதுருவின் பதில் என்ன ?

A.பேதுரு: நீர் தேவனுடைய குமாரன் கிறிஸ்து என்றான் [9:20].”

Luke 9:23-25

Q? ஒருவன் என்னை பின்பற்றிவர விரும்பினால் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கூறினார் ?

A. அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும் என்றார் [9:23].

Luke 9:26-27

Luke 9:28-29

Q? மலையில் இயேசுவின் சாயல் எவ்வாறு இருந்தது ?

A. அவருடைய முகம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகி பிரகாசித்தது [9:29].

Luke 9:30-31

Q? இயேசுவுடன் தோன்றியது யார் ?

A. இயேசுவுடன், மோசேயும், எலியாவும் தோன்றினார்கள் [9:30].

Luke 9:32-33

Luke 9:34-36

Q? அவர்களை நிழலிட்ட மேகத்திலிருந்து வந்த சத்தம் என்ன ?

A. இவர் என் நேச குமாரன், இவருக்கு செவிகொடுங்கள் என்றது [9:35].”

Luke 9:37-40

Q? இயேசு அந்த மனிதனிலிருந்து பிசாசை துரத்தும் முன் அது அவனை என்ன செய்தது ?

A. அது அவனை பிடித்ததும் அவன் அலறினான், அது அவனை நுரை தள்ள செய்து அவனைக் கசக்கியது [9:39].

Luke 9:41-42

Luke 9:43-45

Q? இயேசு சொன்ன எந்த வார்த்தைகளை அவர் சீஷர்கள் அறியாதிருந்தார்கள் ?

A. அவர்: மனுஷகுமாரனும் மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப்போகிறார் என்றார் [9:44].”

Luke 9:46-48

Q? எவன் சீஷர்களில் பெரியவனாயிருப்பான் என்று இயேசு சொன்னார் ?

A. எவன் சிறியவனாய் உங்களில் இருப்பானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார் [9:48].

Luke 9:49-50

Luke 9:51-53

Q? இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாள் சமீபித்தபோது, அவர் என்ன செய்தார் ?

A. அவர் எருசலேமுக்குப் போக தமது முகத்தை திருப்பினார் [9:51].

Luke 9:54-56

Luke 9:57-58

Luke 9:59-60

Luke 9:61-62

Q? தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியாக தன் கைகளை கலப்பையின்மேல் வைத்தவன் என்ன செய்யலாகாது என்று இயேசு கூறுகிறார் ?

A. அவன் பின்னிட்டு பார்க்கக் கூடாது என்றார் [9:62].

Luke 10

Luke 10:1-2

Luke 10:3-4

Q? இயேசு தாம் தெரிந்து கொண்ட எழுபது பேரை எவைகளை அவர்களோடு எடுத்துக் கொண்டு போகவேண்டாமென்று கட்டளை கொடுத்தார் ?

A. வழிக்கு பணத்தையாவது, பையையாவது, பாதரட்சையாவது கொண்டு போக வேண்டாமென்று கூறினார் [10:4].

Luke 10:5-7

Luke 10:8-9

Q? எழுபது பேர் போகிற பட்டணங்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கூறினார் ?

A. பிணியாளிகளை சொஸ்தமாக்கி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு சமீபமாய் இருக்கிறதென்று அறிவியுங்கள் என்றார் [10:9].”

Luke 10:10-12

Q? தேவன் அனுப்பினவர்களை எந்த பட்டனமாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் நியாயதீர்ப்பு என்ன ?

A. சோதோம் கொமோரா பட்டணத்தைப் பார்க்கிலும் அந்த பட்டணங்களுக்கு நேரிடுவது பயங்கரமாயிருக்கும் என்றரர் [10:12].

Luke 10:13-15

Luke 10:16

Luke 10:17-20

Q? அந்த எழுபது பேரும் சந்தோஷத்துடன் வந்து உம்முடைய நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தினோம் என்று கூறியதற்கு இயேசு கூறியது என்ன ?

A. உங்கள் நாமங்கள் பரலோகத்திலிருக்கிற புஸ்தகத்தில் எழுதி இருப்பதற்காக சந்தோஷப்படுங்கள் என்றரர் [10:20].”

Luke 10:21

Q? தேவனுடைய ராஜ்யத்தை எவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை துதிக்கிறேன் என்று இயேசு பிதாவிடம் கூறினார் ?

A. தேவனுடைய ராஜ்யத்தை படிக்காதவர்களுக்கும், பாலகர்களுக்கும் வெளிப்படுத்தினபடியால் உம்மை துதிக்கிறேன் என்று இயேசு பிதாவிடம் கூறினார் [10:21].

Luke 10:22

Luke 10:23-24

Luke 10:25-28

Q? ஒருவன் நித்தியத்தை சுதந்தரிக்க யூதர்களின் நியாயபிரமாணம் என்ன செய்யும்படி கூறுகிறதென்று இயேசு கூறுகிறார் ?

A. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் நீ அன்புகூறவேண்டும் என்றார் [10:27].

Luke 10:29-30

Luke 10:31-32

Q? இயேசுவின் உவமையில் வழியில் குற்றுயிராய் கிடந்த மனிதனுக்கு ஆசாரியன் செய்தது என்ன ?

A. அவன் பக்கமாய் விலகிப் போனான் [10:31].

Q? அந்த மனிதனைக் கண்டு லேவியன் செய்தது என்ன ?

A. அவனும் பக்கமாய் விலகிப் போனான் [10:32].

Luke 10:33-35

Q? அந்த மனிதனைக் கண்டு சமாரியன் செய்தது என்ன ?

A. அவனுடைய காயங்களைக் கட்டி, தன் சுய வாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்கு அவனை கொண்டுபோய் அங்கே பராமரித்தான் [10:34].

Luke 10:36-37

Q? இந்த உவமையை இயேசு சொல்லி முடித்தபின்பு நியாயசாஸ்திரியினிடம் அவன் என்ன செய்யும்படி கூறினார் ?

A. அந்த உவமையில் வந்த சமாரியனைப் போல நீயும் போய் இரக்கம் செய் என்றார் [10:37].

Luke 10:38-39

Q? மரியாள் என்ன செய்தாள் ?

A. மரியாள் இயேசுவின் பாதத்தினருகே உட்கார்ந்து அவர் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள் [10:39].

Luke 10:40-42

Q? மார்த்தாளுடைய வீட்டிற்கு இயேசு வந்தபோது அவள் என்ன செய்தாள் ?

A. மார்த்தாலோ பற்பல வேலைகளை செய்து சமைத்துக்கொண்டிருந்தாள் [10:40].

Q? யார் நல்ல பங்கை தெரிந்துகொண்டதாக இயேசு கூறினார் ?

A. மரியாள் நல்ல பங்கை தெரிந்துகொண்டதாக இயேசு கூறினார் [10:42].

Luke 11

Luke 11:1

Luke 11:2

Luke 11:3-4

Q? எந்த ஜெபத்தை தமது சீஷர்கள் செய்யுமாறு இயேசு அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் ?

A. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக, எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று தாரும், எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும், நாங்களும் எங்களிடத்தில் கடன் பட்டவர்களை மன்னிக்கிறோம், எங்களை சோதனைக்குட்படப்பன்னாமல் தீமையினின்று எங்களை இரட்சியும் [11:2-4].”

Luke 11:5-8

Q? இயேசுவினுடைய உவமையில் ஏன் அந்த மனிதன் தன் நண்பனுக்காக நடு ராத்ரியில் எழுந்து அப்பத்தைக் கொடுத்தான்?

A. அவன் நண்பன் வருந்திக் கேட்கிறதினிமித்தம் கொடுத்தான் [11:8].

Luke 11:9-10

Luke 11:11-13

Q? பரலோகத்தில் இருக்கிற பிதா தம்மிடம் கேட்கிறவனுக்கு எதைக் கொடுப்பார் ?

A. அவர் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் [11:13].

Luke 11:14-15

Q? அவர்கள் இயேசு பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டு என்னவென்று குற்றம் சாட்டினர் ?

A. இவன் பிசாசுகளின் தலைவன் பெயெல்செபூலின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் [11:15].

Luke 11:16-17

Luke 11:18-20

Q? எந்த அதிகாரத்தினாலே இயேசு பிசாசுகளைத் துரத்துவதாக கூறினார் ?

A. தேவனுடைய விரலினாலே அவர் பிசாசுகளைத் துரத்துவதாக கூறினார் [11:20].

Luke 11:21-23

Luke 11:24-26

Q? பொல்லாத ஆவிகள் ஒரு மனிதனை விட்டுபோய் திரும்பி வந்தால், அவனுடைய பின்நிலைமை என்ன ?

A. அவனுடைய முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமை மிகவும் கேடுள்ளதாய் இருக்கும் [11:26].

Luke 11:27-28

Q? ஒரு பெண் சத்தமிட்டு உம்முடைய தாய் பாக்கியமுள்ளவள் என்று கூறியதற்கு இயேசு யார் பாக்கியமுள்ளவர்கள் என்று கூறுகிறார் ?

A. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதின்படி நடக்கிறவர்களே அதிலும் பாக்கியவான்கள் என்றார் [11:28].

Luke 11:29-30

Luke 11:31

Luke 11:32

Q? இயேசு தாம் பழைய ஏற்பாடு எந்த இரண்டு மனிதர்களை விட பெரியவர் என்றார் ?

A. சாலமோன் மற்றும் யோனா [11:31-32].

Luke 11:33-36

Luke 11:37-38

Luke 11:39-41

Luke 11:42

Q? பரிசேயர்கள் எதை விட்டுவிட்டதாக இயேசு கூறுகிறார் ?

A. அவர்கள் நியாயத்தையும் தேவனுடைய அன்பையும் விட்டுவிட்டதாக கூறினார் [11:42].

Luke 11:43-44

Luke 11:45-46

Q? நியாசாஸ்திரிகள் மனிதர்களுக்கு என்ன செய்வதாக இயேசு கூறினார் ?

A. சுமக்க அரிதான சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள், அவர்களோ தங்கள் விரல்களினால் கூட அதை தொடுவதில்லை என்றார் [11:46].

Luke 11:47-48

Luke 11:49-51

Q? இந்த சந்ததியினிடத்தில் எவைகள் கேட்கபடும் என இயேசு கூறினார் ?

A. உலகம் தோன்றியதுமுதல் இந்நாள்வரைக்கும் சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசியின் இரத்தபழியும் இந்த சந்ததியினிடம் கேட்கப்படும் என்றார் [11:50].

Luke 11:52

Luke 11:53-54

Q? இயேசு கூறியவைகளை பரிசேயரும், வேதபாரகரும் கேட்டு என்ன செய்தனர் ?

A. அவரை குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்க வேண்டுமென்று உபாயம் பண்ணி அவரை மிகவும் நெருக்கினார்கள் [11:54].

Luke 12

Luke 12:1

Luke 12:2-3

Q? இயேசுவின் பார்வையில் நீ இருளில் பேசுகிறவைகளுக்கு என்ன ஏற்படும் என்கிறார் ?

A. அவைகள் வெளிச்சத்தில் கேட்கப்படும் என்கிறார் [12:3].

Luke 12:4-5

Q? நீங்கள் யாருக்கு பயப்படவேண்டுமென்று இயேசு கூறுகிறார் ?

A. நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே நீங்கள் பயப்படுங்கள் என்றார் [12:5].

Luke 12:6-7

Luke 12:8-10

Q? மனிதர் முன்பாக இயேசுவை அறிக்கை பண்ணுகிரவனுக்கு இயேசு என்ன செய்வார் ?

A. மனுஷகுமாரனும் அவர்களை தேவதூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார் [12:8].

Luke 12:11-12

Luke 12:13-15

Q? இயேசுவின் பார்வையில் எது மனிதனுக்கு ஜீவன் அல்ல ?

A. திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல [12:15].

Luke 12:16-19

Q? இயேசுவின் உவமையில், ஐசுவரியவான் தன் நிலத்தில் விளைந்த அதிக தானியங்களை வைத்து என்ன செய்வான் என்றார் ?

A. என் ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்து குடித்து பூரிப்பாயிரு என்பான் [12:18-19].

Luke 12:20-21

Q? தேவன் ஐசுவரியவானிடம் கூறியது என்ன ?

A. தேவன்: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும் அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார் [12:20]?”

Luke 12:22-23

Luke 12:24-26

Luke 12:27-28

Luke 12:29-30

Luke 12:31-32

Q? உலகப் பொருள்களை நாம் நாடித் தேடாமல் நாம் என்ன செய்யவேண்டும் என்று இயேசு கூறுகிறார் ?

A. நாம் தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டும் [12:31].

Luke 12:33-34

Q? நம் பொக்கிஷங்களை நாம் எங்கே சேர்த்துவைக்கவேண்டும் என இயேசு கூறுகிறார் ? ஏன் ?

A. பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி கெடுப்பதுமில்லை [12:33].

Luke 12:35-36

Luke 12:37-38

Q? இயேசுவின் பார்வையில் எந்த ஊழியக்காரன் பாக்கியவான் ?

A. இயேசு வரும்பொழுது ஆயத்தமாகிக் காத்திருக்கிரவர்களே பாக்கியவான்கள் [12:37].

Luke 12:39-40

Q? இயேசு எந்த நாளில், எந்த நாழிகையில் வருவார் என்பதை நாம் அறிவோமா ?

A. தெரியாது [12:40].

Luke 12:41-44

Luke 12:45-46

Q? தன் எஜமான் வருகையைக் குறித்து அசட்டைபண்ணி, மற்ற ஊழியக்காரர்களை துன்பப்படுத்துகிரவனுடைய நிலை என்ன ?

A. எஜமான் வந்து அந்த பொல்லாத ஊழியக்கரனை கடினமாய் தண்டித்து, உண்மை இல்லாதவர்களோடு அவன் பங்கை நியமிப்பான் [12:46].

Luke 12:47-48

Q? அதிகம் கொடுக்கப்பட்டவர்களுக்கு என்ன சம்பவிக்கும் ?

A. அதிகம் கேட்கப்படும் [12:48].

Luke 12:49-50

Luke 12:51-53

Q? இயேசு கூறுகையில்: எவ்வித பிரிவினையை உலகில் ஏற்படுத்த வந்தார் ?

A. ஒரே வீட்டில், ஒருவருக்கு விரோதமாக மற்றவன் இருப்பான் [12:52-53].

Luke 12:54-56

Luke 12:57-59

Q? இயேசுவின் பார்வையில், எதிராளியானவன் நம்மை நியாதிபதிக்கு முன் கொண்டுபோகும்முன் நாம் என்ன செய்ய வேண்டும் ?

A. அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்பட வேண்டும் [12:58].

Luke 13

Luke 13:1-3

Q? பிலாத்துவினால் கொலை செய்யப்பட கலிலேயர்கள் மற்ற கலிலேயர்களைப் பார்க்கிலும் பாவிகளாயிருந்தார்களா ?

A. இல்லை [13:3].

Luke 13:4-5

Luke 13:6-7

Luke 13:8-9

Q? இயேசுவின் உவமையில்: மூன்று வருடமாய் கனி கொடாத அத்திமரத்துக்கு என்ன செய்யப்படும் ?

A. அதற்கு ஒருவருடம் கூட கொடுக்கப்பட்டு கொத்தி எரு போடப்படும், பின்பு கனி கொடுத்தால் சரி இல்லையென்றால் அதை வேட்டிபோடப்படும் [13:8-9].

Luke 13:10-11

Q? ஜெப ஆலயத்தில், பதினெட்டு வருடமாய் எது அவளை நிமிரக் கூடாத கூனியாக்கிற்று ?

A. ஒரு அசுத்த ஆவி அவளை பிடித்திருந்தது [13:11,16].

Luke 13:12-14

Q? ஏன் ஜெப ஆலயத்தலைவன் இயேசுவின்மேல் கோபமடைந்தான் ?

A. ஓய்வுநாளில் அவளை இயேசு குனமாக்கினபடியால் [13:14].

Luke 13:15-16

Q? ஜெப ஆலயத்தலைவன் மாயக்காரன் என்று இயேசு எவ்வாறு கூறினார் ?

A. இயேசு: தன் எருதையாவது, தன் கழுதையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய் தண்ணீர் காட்டுகிறதில்லையோ அப்படி இருக்க இவளை குணமாக்கியதால் கோபம் அடைந்தான் என்றார் [13:15].

Luke 13:17

Luke 13:18-19

Q? எப்படி கடுகு விதை தேவனுடைய ராஜ்யத்துக்கு ஒப்பாயிருக்கிறது ?

A. கடுகு விதை சிறிய விதையாய் இருக்கிறது, அது பெரிதாய் வளர்ந்து அநேக பறவைகள் வந்து அடையத்தக்க இடமாய் மாறுகிறது [13:19].

Luke 13:20-21

Luke 13:22-24

Q? இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலர் தானோ என்று கேட்டதற்கு இயேசுவின் பதில் என்ன ?

A. இயேசு: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க பிரயாசப்படுங்கள், அநேகர் வகைதேடினாலும் அவர்களால் கூடாமற் போகும் என்றார் [13:24].”

Luke 13:25-27

Luke 13:28-30

Q? தேவனுடைய ராஜ்யத்தில் யாரை போஜனம் பண்ணும்படி சேர்ப்பார் ?

A. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் மற்றும் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் இருந்து தம்முடையவர்களை சேர்ப்பார் [13:28-29].

Luke 13:31-33

Q? தாம் எங்கே கொலை செய்யப்பட போவதாக இயேசு கூறினார் ?

A. அவர் எருசலேமில் தம்மை கொலை செய்யப்பட போவதாக கூறினார் [13:33].

Luke 13:34-35

Q? எருசலேமின் மக்களோடு இயேசுவின் நினைவு என்ன ?

A. கோழி தன் குஞ்சுகளை சேர்ப்பதுபோல தானும் சேர்த்துக்கொள்ள நினைவாய் இருந்தேன் என்கிறார் [13:34].

Q? இயேசுவின் ஆசைக்கு எருசலேமின் மக்களின் செயல் என்ன ?

A. அவர்களுக்கு மனதில்லாமல் போயிற்று [13:34].

Q? அதினால் எருசலேமின் மக்களுக்கு இயேசுவின் தீர்க்கதரிசனம் என்ன ?

A. உங்கள் வீடுகள் பாழாக்கிவிடப்படும், கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரைக்கும் என்னை காணாதிருப்பீர்கள் என்றார் [13:35].”

Luke 14

Luke 14:1-3

Q? நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் இயேசுவுக்கு முன்பாக இருந்தான், அவனை வைத்து நியாசாஸ்திரிகளிடமும், பரிசேயரிடமும் இயேசு கேட்டது என்ன ?

A. ஓய்வுநாளில் அவனை சொஸ்தமாக்குவது நியாமா என்று கேட்டார் ? [14:3]

Luke 14:4-6

Q? நியாசாஸ்திரிகளும், பரிசேயரும் கூறிய பதில் என்ன ?

A. அவர்கள் பேசாமலிருந்தார்கள் [14:4].

Q? அவனை குணமாக்கியபின்பு, நியாசாஸ்திரிகளும், பரிசேயரும் மயக்கரர்கள் என்று இயேசு எவ்வாறு விளக்கினார் ?

A. இயேசு: ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்த தன் மகனையோ, தன் எருதையோ காப்பாற்றுவீர்கள் என்று கூறினார் [14:5].

Luke 14:7-9

Luke 14:10-11

Q? தன்னைத்தானே உயர்த்துகிறவனுக்கு என்னவாகும் என்று இயேசு கூறினார் ?

A. அவன் தாழ்த்தப்படுவான் [14:11].

Q? தன்னைத்தானே தாழ்த்துகிறவனுக்கு என்னவாகும் என்று இயேசு கூறினார் ?

A. அவன் உயர்த்தப்படுவான் [14:11].

Luke 14:12

Luke 14:13-14

Q? இயேசுவினுடைய பார்வையில், தன் வீட்டு விருந்துக்கு ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பவனுக்கு என்ன கிடைக்கும் ?

A. உயர்தெழுதலில் அவனுக்கு பதில் செய்யப்படும் [14:14].

Luke 14:15-17

Luke 14:18-20

Q? இயேசுவினுடைய உவமையில் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் செய்தது என்ன ?

A. அவர்கள் வர இயலாததற்கு போக்கு சொல்லத் தொடங்கினார்கள் [14:18].

Luke 14:21-22

Q? பின்பு எஜமான் யாரை தன் விருந்துக்கு அழைத்தான் ?

A. தன் வீட்டு விருந்துக்கு ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைத்தான் [14:21].

Luke 14:23-24

Luke 14:25-27

Q? இயேசுவை பொறுத்தவரை தன்னுடைய சீஷர்கள் என்ன செய்யவேண்டும் ?

A. தன் குடும்பத்தை வெறுத்து, தன் ஜீவனை வெறுத்து, தனக்குண்டான எல்லாவற்றையும் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றவேண்டும் என்றார் [14:26-27,33].

Luke 14:28-30

Q? இயேசு கூறுகையில், எவன் ஒருவன் கோபுரம் கட்ட மனதாய் இருந்தால், அவன் முதலில் என்ன செய்யவேண்டும் ?

A. அவன் முதலில் தனக்கு நிர்வாகம் உண்டோ என கணக்கு பார்க்கவேண்டும் [14:28].

Luke 14:31-33

Luke 14:34-35

Q? உப்பு சாரம் அற்றுப் போனால், அதற்கு என்ன செய்யப்படும் ?

A. அது வெளியே கொட்டிப்போடப்படும் [14:35].

Luke 15

Luke 15:1-2

Luke 15:3-5

Q? இயேசுவின் உவமையில், நூறு ஆடுகளில் ஒன்று தொலைந்துபோனால் அந்த மேய்ப்பன் என்ன செய்வான் ?

A. தொண்னூற்று ஒன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, தொலைந்துபோன அந்த ஆட்டை கண்டுபிடித்து சந்தோஷத்தோடே திரும்புவான் [15:4-5].

Luke 15:6-7

Luke 15:8-10

Q? ஒரு பாவி மனந்திரும்புகிறதினால் பரலோகத்தில் என்ன சம்பவிக்கும் ?

A. பரலோகத்தில், தேவ சமூகம் முழுவதும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் [15:7,10].

Luke 15:11-12

Q? இயேசுவின் உவமையில், இளையகுமாரன் தன் தகப்பனிடம் கேட்டுக்கொண்டது யாது ?

A. ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தாரும் என்றான் [15:12].

Luke 15:13-14

Luke 15:15-16

Q? தன்னிடம் இருந்த பணத்தை செலவழித்த பின்பு, இளையகுமாரன் தன் பிழைப்புக்கு என்ன செய்தான் ?

A. அவன் பிழைப்புக்காக ஒருவனுடைய பன்றிகளை மேய்க்க ஒப்புக்கொண்டான் [15:15].

Luke 15:17-19

Q? இளையகுமாரனின் புத்தி தெளிந்ததும், என்ன செய்ய முடிவு செய்தான் ?

A. அவன் தவறுகளை தன் தகப்பனிடம் அறிக்கை செய்து, உம்முடைய வேலைகாரர்களில் ஒருவனாக என்னையும் சேர்த்துக்கொள்ளும் என கேட்கும்படி முடிவு செய்தான் [15:18-19].

Luke 15:20-21

Q? தன் இளையகுமாரன் திரும்பி வீட்டுக்கு வருகிறதைக் கண்ட தகப்பன் என்ன செய்தான் ?

A. அவன் ஓடி, தன் மகனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தம் செய்தான் [15:20].

Luke 15:22-24

Q? தன் இளையகுமாரனுக்காக தகப்பன் துரிதமாக செய்தது என்ன ?

A. அவனுக்கு உயர்ந்த வஸ்திரங்களை உடுத்தி, மோதிரத்தை போட்டு, அவன் கால்களுக்கு பாதரட்சையும் கொடுத்து பின்பு விருந்து ஏற்பாடு செய்தான் [15:22-23].

Luke 15:25-27

Luke 15:28-30

Q? இளையகுமாரனின் விருந்தைக் குறித்து கேள்விப்பட்ட மூத்தகுமாரனின் செயல் என்ன ?

A. அவன் கோபமடைந்து உள்ளே போக மனதில்லாதிருந்தான் [15:28].

Q? மூத்தகுமாரன் தன் தகப்பனிடம் கூறிய குற்றசாட்டு என்ன ?

A. இத்தனை வருஷமாய் உமக்கு ஊழியம் செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாய் இருக்கும்படி ஒரு ஆட்டுக்குட்டியையும் நீர் கொடுக்கவில்லை என்றான் [15:29].

Luke 15:31-32

Q? மூத்தகுமாரனுக்கு தன் தகப்பனின் பதில் என்ன ?

A. மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், என்னுடையதெல்லாம் உன்னுடயதாய் இருக்கிறது என்றான் [15:31].”

Q? ஏன் இளையகுமாரனுக்கு விருந்து படைப்பது ஏற்புடையது என்று தகப்பன் கூறினார் ?

A. இளையகுமாரன் காணாமற்போனான் இப்போது காணப்பட்டான் என்றான் [15:32].

Luke 16

Luke 16:1-2

Q? ஐசுவரியவான் தன் உக்கிரானக்காரனைக் குறித்து கேட்ட குற்றம் யாது ?

A. அவனுடைய ஆஸ்தியை உக்கிராணக்காரன் அழிப்பதாக கேள்விப்பட்டான் [16:1].

Luke 16:3-4

Luke 16:5-7

Q?உக்கிராணக்காரன் தன் வேளையில் இருந்து விலகும் முன் செய்தது என்ன ? A. அவன் தன் எஜமானிடம் கடன்பட்ட அவன் ஊழியக்காரனிடம் இருந்த சுமைகளை குறைத்தான் [16:5-7]

Luke 16:8-9

Q? உக்கிரானக்காரனின் செய்கைக்கு ஐசுவரியவானின் பதில் என்ன ?

A. புத்தியாய் செய்தாய் என்று அவனை மெச்சிகொண்டான் [16:8].

Q? இந்த கதை மூலம் மற்றவர்களை இயேசு செய்ய கூறுவது என்ன ?

A. இயேசு: நீங்கள் மாளும்போது மற்றவர்கள் உங்களை ஏற்றுகொள்ளும்படியாய், அநீதியான உலகப் பொருள்களால் நண்பர்களை சம்பாதித்து வையுங்கள் [16:9].”

Luke 16:10-12

Q? கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கிறவன் எதிலும் உண்மையாய் இருப்பதாக இயேசு கூறுகிறார் ?

A. அவன் அநேகத்தின்மேலும் உண்மையாய் இருப்பதாக கூறுகிறார் [16:10].

Luke 16:13

Q? எந்த இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய நாம் தீர்மானிக்கவேண்டுமென்று இயேசு கூறுகிறார் ?

A. தேவன் அல்லது உலகப்பொருள் என தீர்மானிக்கவேண்டும் [16:13].

Luke 16:14-15

Luke 16:16-17

Q? இயேசுவை பொறுத்தவரை, யோவான் வரை எவைகள் வழங்கப்பட்டு வந்தன ?

A. நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசன வாக்கியங்களும் வழங்கப்பட்டு வந்தன [16:16].

Q? இயேசுவை பொறுத்தவரை, இப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது என்ன ?

A. தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்படுகிறது [16:16].

Luke 16:18

Q? இயேசுவை பொறுத்தவரை, தன் மனைவியை தள்ளிவிட்டு மற்றவளை விவாகம்பண்ணுகிறவன் எப்படிபட்டவன் ?

A. அவன் விபச்சாரம் செய்கிறவன் [16:18].

Luke 16:19-21

Luke 16:22-23

Q? இயேசுவின் கதையில், தரித்திரனாய் இருந்த லாசரு மரித்தபின்பு எங்கு சென்றான் ?

A. ஆபிரகாமின் மடியில் இருந்தான் [16:22,25].

Q? ஐசுவரியவான் மரித்த பின்பு எங்கு சென்றான் ?

A. பாதாளத்தில் இருந்தான் [16:23].

Luke 16:24

Q? ஐசுவரியவான் ஆபிரகாமிடம் வேண்டிய முதல் விண்ணப்பம் என்ன ?

A. அவன்: நீர் எனக்கு இறங்கி, லாசருவின் விரலை தண்ணீரில் தோய்த்து, என் நாவை குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், நான் அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேன் என்றான் [16:24].”

Luke 16:25-26

Q? ஐசுவரியவானுக்கு ஆபிரகாமின் பதில் என்ன ?

A. உனக்கும் எங்களுக்கும் நடுவே பெரும் பிளவு உண்டாயிருக்கிறதே, ஒருவராலும் அது கூடாது என்றான் [16:26].”

Luke 16:27-28

Q? ஐசுவரியவான் ஆபிரகாமிடம் வேண்டிய இரண்டாம் விண்ணப்பம் என்ன ?

A. இந்த இடத்தைக் குறித்து என் சகோதரர்களுக்கு எச்சரிக்கும்படி லாசருவை தயவாய் அனுப்பும்படி வேண்டினான் [16:27-28].”

Luke 16:29-31

Q? ஐசுவரியவானுக்கு ஆபிரகாமின் பதில் என்ன ?

A. அங்கே மோசேயும், மற்ற தீர்க்கதரிசிகளும் உண்டு அவர்களுக்கு செவி கொடுக்கட்டும் என்றான் [16:29].”

Q? ஆபிரகாம் கூறுகையில் அவர்கள் மோசே மற்றும் மற்ற தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடாதவன் வேறு யாருக்கு செவிகொடான் என்றான் ?

A. மரித்தோரிலிருந்து ஒருவன் சென்றாலும் அவர்கள் நம்பமாட்டார்கள் என்றான் [16:31].

Luke 17

Luke 17:1-2

Luke 17:3-4

Q? நம் சகோதரன் நமக்கு விரோதமாய் குற்றம் செய்து, மனஸ்தபப்பட்டால் நாம் என்ன செய்யவேண்டுமென்று இயேசு கூறுகிறார் ? A. நாம் அவனை மன்னிக்கவேண்டும் [17:4]

Luke 17:5-6

Luke 17:7-8

Luke 17:9-10

Q? எஜமான் சொன்ன எல்லாவற்றையும் செய்தபின்பு, ஊழியக்காரனாக நாம் என்ன கூறவேண்டும் ?

A. நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்ல வேண்டும் [17:10].”

Luke 17:11-13

Q? அவர்கள் இயேசுவிடம் கூறியது என்ன ?

A. அவர்கள்: ஐயரே எங்களுக்கு இறங்கும் என்றார்கள் [17:13].”

Luke 17:14-16

Q? இயேசு என்ன செய்யும்படி அவர்களிடம் கூறினார் ?

A. அவர்களை ஆசாரியர்களுக்கு காண்பிக்கும்படி கூறினார் [17:14].

Q? குஷ்டரோகிகள் போகையில் சம்பவித்தது என்ன ?

A. அவர்கள் சுத்தமானார்கள் [17:14].

Q? பத்து குஷ்டரோகிகளில் எத்தனைபேர் இயேசுவுக்கு நன்றி சொல்லும்படி திரும்பி வந்தனர் ?

A. ஒருவன் மாத்திரம் [17:15].

Q? இயேசுவுக்கு நன்றி கூறும்படி அந்த குஷ்டரோகி எங்கிருந்து வந்தான் ?

A. அவன் சமாரியாவிலிருந்து வந்தான் [17:16].

Luke 17:17-19

Luke 17:20-21

Q? எப்பொழுது தேவனுடைய ராஜ்யம் வருமென்று இயேசுவிடம் கேட்கப்பட்டதற்கு, அதைக் குறித்து அவர் கூறியது என்ன ?

A. தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறதே என்றார் [17:21].

Luke 17:22-24

Q? இயேசுவின் வருகையைக் குறித்தும், அவருடைய நாளைக் குறித்தும் அவர் கூறியது என்ன ?

A. மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரன் தம்முடைய நாளில் தோன்றுவார் [17:24].

Luke 17:25-27

Q? முதலாவது என்ன சம்பவிக்கவேண்டி இருப்பதாக இயேசு கூறினார் ?

A. அநேகம் பாடுபட்டு, இந்த சந்ததியினால் ஆகாதவன் என்று புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது என்றார் [17:25].

Q? மனுஷகுமாரனின் நாட்களில் எப்படி நோவாவின் மற்றும் லோத்தின் நாட்களில் சம்பவித்தது போல நடக்கும் ?

A. ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், வந்திருக்கிற அழிவைக் குறித்து அறியாதிருப்பார்கள் [17:27].

Luke 17:28-29

Luke 17:30-31

Q? லோத்துவின் மனைவியைப் போல நாம் எவ்வாறு இருக்கலாகாது ?

A. அந்த நாளில் நாம் இந்த உலகத்தின் ஆஸ்திமீது சாராமல் இருக்கவேண்டும், அவள் செய்தாள் அது அவளை அழித்துப்போட்டது [17:31-32]

Luke 17:32-33

Luke 17:34-37

Q? ஆண்டவர் எங்கே என்று சீஷர்கள் கேட்டதற்கு, இயற்கையிலிருந்து அவர் கூறியது என்ன ?

A. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார் [17:37].

Luke 18

Luke 18:1-2

Luke 18:3-5

Q? நியாமில்லாத நியாயாதிபதியிடம் விதவை கேட்டுக்கொண்டிருந்த காரியம் என்ன ?

A. அவளுக்கு அவள் எதிராளியிடம் நியாயம் கிடைக்கப் பண்ணும்படி கேட்டுக்கொண்டாள் [18:3].

Q? பின்பு நியாமில்லாத நியாயாதிபதி தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்ன ?

A. அவன்: இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி அவளுக்கு நியாயம் செய்யவேண்டும் என்றான் [18:5].”

Luke 18:6-8

Q? இந்த உவமையில் இருந்து ஜெபத்தைக் குறித்து இயேசு தமது சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன ?

A. சோர்ந்துபோகாமல் நாம் எப்போதும் ஜெபம் பண்ணும்போது, தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுபவர்களுக்கு நியாயம் செய்வார் என்றார் [18:1,8].

Luke 18:9-10

Q? இயேசுவின் கதையில் எந்த இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள் ?

A. பரிசேயனும் ஆயக்காரனும் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள் [18:10].

Luke 18:11-12

Q? பரிசேயன் தன்னுடைய பரிசுத்தத்தைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் அவன் யோசனை என்ன ?

A. அவன், மற்றவர்களைவிட தான் சிறந்த நீதிமானாகக் கருதினான் [18:9,11-12].

Luke 18:13-14

Q? தேவனிடத்தில் ஆயக்காரனின் ஜெபம் என்ன ?

A. அவன், தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று ஜெபித்தான் [18:13].”

Q? இவர்கள் வீடு திரும்பும்போது எவன் தேவனுக்கு முன்பாக நீதிமானாகக் கருதப்படுவான் ?

A. ஆயக்காரனே தேவனுக்கு முன்பாக நீதினானாகக் கருதப்படுவான் [18:14].

Luke 18:15-17

Q? தேவனுடைய ராஜ்யம் எவர்களுடையது என இயேசு கூறினார் ?

A. தேவனுடைய ராஜ்யம் சிறுபிள்ளையைப் போல் உள்ளவர்களுக்கு உரியது என்றார் [18:16-17].

Luke 18:18-21

Luke 18:22-23

Q? சிறுவயதுமுதல் கற்பனைகளைக் கைக்கொண்டுவந்த தலைவனிடம் இயேசு செய்யும்படி கூறின அந்த ஒரே காரியம் என்ன ?

A. அவன் ஆஷ்திகளை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி கூறினார் [18:22].

Q? இயேசுவினுடைய வார்த்தைக்கு அந்த தலைவனின் செய்கை என்ன ?

A. ஐசுவரியவானாய் இருந்தபடியால் அவன் மிகுந்த துக்கமடைந்தான் [18:23].

Luke 18:24-25

Luke 18:26-27

Luke 18:28-30

Q? தேவனுடைய ராஜ்யத்துக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்களுக்கு இயேசு கொடுத்த வாக்கு என்ன ?

A. இயேசு: இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லை என்றார் [18:30].

Luke 18:31-33

Q? பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மனுஷகுமாரனைக் குறித்து எழுதி இருப்பது என்ன ?

A. அவர் புறஜாதியினிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துயரப்படுவார். அவரை வாரினால் அடித்துக் கொலை செய்வார்கள் ஆயினும் மூன்றாம் நாளில் உயிரோடே எழுந்திருப்பார் [18:32-33].

Luke 18:34

Luke 18:35-37

Luke 18:38-39

Q? வழியருகே இருந்த குருடன் என்னவென்று இயேசுவிடம் சத்தமிட்டான் ?

A. அவன்: தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் [18:38-39].”

Luke 18:40-41

Luke 18:42-43

Q? அந்த குருடன் குணமடைந்ததைக் கண்ட ஜனங்கள் என்ன செய்தனர் ?

A. அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள் [18:43].

Luke 19

Luke 19:1-2

Q? இயேசுவைக் காணும்படி மரத்தில் ஏறியது யார் ? அவன் அந்த ஊரில் செய்துவந்த வேலை என்ன ?

A. அவன் பெயர் சகேயு, ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்தான் [19:2].

Luke 19:3-4

Luke 19:5-7

Q? சகேயுவினுடைய வீட்டிற்கு இயேசு சென்றதும் ஜனங்கள் எல்லோரும் செய்த குற்றச்சாட்டு என்ன ?

A. இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள் [19:7].”

Luke 19:8-10

Q? என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் என்று சகேயு கூறியதும், அவனைக் குறித்து இயேசு கூறியது என்ன ?

A. இன்றைக்கு இவன் வீடிற்கு இரட்சிப்பு வந்தது என்றார் [19:9].”

Luke 19:11-12

Q? இயேசு எருசலேமை அடைந்ததும் என்ன சம்பவிக்கும்மென்று மக்கள் எதிர்பார்த்தனர் ?

A. தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படும் என்று நினைத்தனர் [19:11].

Q? இயேசுவின் உவமையில் பிரபுவாகிய ஒருவன் எங்கே புறப்பட்டான் ?

A. ஒரு ராஜ்யத்தை பெற்றுக்கொண்டு திரும்பும்படி தூரதேசத்துக்குப் புறப்பட்டான் [19:12].

Luke 19:13-15

Luke 19:16-17

Luke 19:18-19

Q? தனக்கு உண்டான கொஞ்சத்திலே உண்மையாய் இருந்த ஊழியக்காரனுக்கு இயேசு செய்தது என்ன ?

A. பட்டணங்கள்மேல் அதிகாரம் கொடுத்தார் [19:17,19].

Luke 19:20-21

Q? தன் எஜமான் எப்படிப்பட்டவர் என்று அவனுடைய ஊழியக்காரன் நினைத்திருந்தான் ?

A. தன் எஜமான் கடினமுள்ளவர் என்று அறிந்திருந்தான் [19:21].

Luke 19:22-23

Luke 19:24-25

Q? எஜமான் அந்த பொல்லாத ஊழியக்காரனுக்கு செய்தது என்ன ?

A. பொல்லாத ஊழியக்காரனிடம் உள்ளதையும் எடுத்துவிடுவான் [19:24].

Luke 19:26-27

Q? தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாத சத்துருக்களை எஜமான் என்ன செய்வான் ?

A. எஜமான், அவர்களை வெட்டிப்போடுவான் [19:27].

Luke 19:28

Luke 19:29-31

Q? இயேசு எருசலேமுக்கு எப்படிப்பட்ட மிருகத்தின்மேல் சென்றார் ?

A. ஒருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியின்மேல் சென்றார் [19:30].

Luke 19:32-36

Luke 19:37-38

Q? இயேசு ஒலிவமலையின் அடிவாரத்துக்கு சமீபமாய் போகையில் ஜனங்கள் செய்த ஆரவாரம் என்ன ?

A. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்றனர் [19:38]!”

Luke 19:39-40

Q? ஜனங்கள் பேசாமலிருந்தால் என்ன சம்பவிக்குமென்று இயேசு சொன்னார் ?

A. இந்தக் கல்லுகள் பேசும் என்றார் [19:40].

Luke 19:41-42

Q? நகரத்துக்குச் சமீபமாய் வந்தபோது இயேசு என்ன செய்தார் ?

A. அவர் அழுதார் [19:41].

Luke 19:43-44

Q? அந்த நகரத்தையும் ஜனங்களையும் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் என்ன ?

A. இயேசு: ஜனங்கள் கொலை செய்யப்பட்டு, ஒருகல்லின்மேல் ஒரு கல் இராதபடி செய்யும் நாட்கள் வருமென்று கூறினார் [19:44].

Luke 19:45-46

Luke 19:47-48

Q? இயேசு ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருக்கையில் யார் அவரை கொலை செய்ய வகைதேடினர் ?

A. பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலை செய்யும்படி வகைதேடினர் [19:47].

Q? அந்த சமயத்தில் ஏன் அவர்களால் அவரை கொலை செய்யகூடாமற்போயிற்று ?

A. ஜனங்கள் அவருக்கு செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால் [19:48].

Luke 20

Luke 20:1-2

Luke 20:3-4

Q? யூத தலைவர்கள் இயேசுவிடம் நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறீர் என்று கேட்க அவர்களிடம் இயேசுவின் கேள்வி என்ன ?

A. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? அல்லது மனிதனால் உண்டாயிற்றோ? [20:4]?”

Luke 20:5-6

Q? நாம் தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால் இயேசு எவ்வாறு கேட்பார் என்று யூதத் தலைவர்கள் யோசித்தனர் ?

A. பின்பு ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார் என்று அவர்கள் அறிந்திருந்தனர் [20:5]?”

Q? மனிதனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால் ஜனங்கள் என்ன செய்வார்கள் என யோசித்தனர் ?

A. ஜனங்கள் நம்மேல் கல்லேறிவார்கள் என அறிந்திருந்தனர் [20:6].

Luke 20:7-8

Luke 20:9-10

Q? இயேசுவின் உவமையில், எஜமான் தன் பாகங்களைக் கொண்டுவரும்படி தன்னுடைய ஊழியக்காரர்களை அனுப்பியதும் திராட்சைத் தோட்டத்துக்காரர் அவனுக்கு செய்தது என்ன ?

A. அவர்கள் அந்த ஊழியக்காரனை பிடித்து அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர் [20:10-12].

Luke 20:11-12

Luke 20:13-14

Q? கடைசியாக எஜமான் திராட்சைதோட்டத்துகாரர்களிடம் யாரை அனுப்பினான் ?

A. தனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினான் [20:13].

Luke 20:15-16

Q? குமாரன் தோட்டத்திற்குள் வந்ததும், திராட்சைத் தோட்டக்காரர்கள் அவனுக்கு செய்தது என்ன ?

A. அவர்கள் அவனை புறம்பே தள்ளி அவனைக் கொலை செய்தனர் [20:15].

Q? அந்தத் தோட்டத்து எஜமான் அந்தத் தோட்டக்காரர்களுக்கு என்ன செய்வான் ?

A. எஜமான் அவர்களை சங்கரித்து அந்தத் தோட்டத்தை வேறே திராட்சைத் தோட்டக்காரரிடம் கொடுப்பான் [20:16].

Luke 20:17-18

Luke 20:19-20

Q? இந்த உவமையை இயேசு யாரைக்குறித்து சொன்னார் ?

A. பிரதான ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும் கூறினார் [20:19].

Luke 20:21-22

Luke 20:23-24

Luke 20:25-26

Q? இராயனுக்கு வரி கொடுப்பது நியாமோ அல்லவோ என்று இயேசுவிடம் கேட்டதற்கு அவர் எவ்வாறு பதில் கூறினார் ?

A. இராயனுடயதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார் [20:25].

Luke 20:27-28

Q? சதுசேயர்கள் எதை விசுவாசியாமலிருந்தார்கள் ?

A. மரணத்திலிருந்து உயர்த்தெழுவதை விசுவாசியாதிருந்தார்கள் [20:27].

Luke 20:29-33

Luke 20:34-36

Q? இம்மையிலும் மறுமையிலும் விவாகத்தைக் குறித்து இயேசு கூறுவது என்ன ?

A. இம்மையில் விவாகம் உண்டு மறுமையில் விவாகம் இல்லை என்று கூறுகிறார் [20:34-35].

Luke 20:37-38

Q? உயிர்தெழுதல் உண்டென்பதை நிரூபிக்க பழைய ஏற்பாட்டில் இருந்து இயேசு கூறியது என்ன ?

A. மரித்தோர் எழுந்திருப்பதையும், மோசே முட்செடியில் கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும், ஈசாக்கின் தேவனென்றும், யாக்கோபின் தேவனென்றும் கூறியிருப்பதை நினைப்பூட்டினார் [20:37].

Luke 20:39-40

Luke 20:41-44

Q? தாவீதின் சங்கீதத்திலிருந்து எந்த வாக்கியத்தை வேதபாரகருக்கு தமது கேள்வியிலிருந்து உரைத்தார் ?

A. நான் உமது சத்துருக்களைப் பாதப்படியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்பதைக் கூறினார் [20:42-43].”

Luke 20:45-47

Q? புறம்பான பரிசுத்தத்தைக் காண்பிக்க அவர்கள் என்ன தீமை செய்கிறார்கள் ?

A. விதவைகளின் வீடுகளை பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிறார்கள் [20:47].

Q? வேதபாரகர் எவ்வாறு நியாயந்தீர்க்கப் படுவதாக இயேசு கூறினார் ?

A. அவர்கள் அதிக ஆக்கினை அடைவார்கள் என்றார் [20:47].

Luke 21

Luke 21:1-4

Q? அந்த ஏழை விதவை மற்றவர்களைவிட அதிகமாய் கொடுத்தாள் என்று இயேசு ஏன் கூறினார் ?

A. மற்றவர்கள் அவர்கள் பரிபூரணத்திலிருந்து கொடுத்தார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்குண்டானதெல்லாம் போட்டுவிட்டாள் [21:4].

Luke 21:5-6

Q? எருசலேம் தேவாலயத்துக்கு என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறினார் ?

A. ஒரு கல்லின்மேல் மற்றொரு கல் இராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்றார் [21:6].

Luke 21:7-9

Q? தேவாலயத்தைக்குறித்து மக்கள் இயேசுவிடம் கேட்ட இரண்டு கேள்விகள் என்ன ?

A. இவைகள் எப்போது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டனர் [21:7]?”

Q? அநேக வஞ்சகர்கள் வருவதாக இயேசு எச்சரிக்கை விடுத்தார். வஞ்சகர்கள் என்னவென்று கூறுவார்கள் ?

A. நான் தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் கூறுவார்கள் [21:8]”

Luke 21:10-11

Q? முடிவுக்கு முன் என்னென்ன கொடுமையான காரியங்கள் சம்பவிக்குமென்று இயேசு கூறினார் ? A. யுத்தங்களும், பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், வானத்திலிருந்து பெரிய தோற்றங்களும், அடையாளங்களும் காணப்படும் என்றார் [21:9,11]

Luke 21:12-13

Q? விசுவாசிகள் படும் பாடுகள் எதற்கு ஏதுவாகும் ?

A. அது சாட்சியாவதற்கு ஏதுவாகும் [21:13].

Luke 21:14-15

Luke 21:16-19

Luke 21:20-22

Q? எருசலேமின் அழிவு சமீபமாய் இருப்பதாய் எவை உணர்த்தும் ?

A. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது அழிவு சமீபமாய் இருப்பதை உணரலாம் [21:20].

Q? எருசலேமின் அழிவைக் காண்பவர்களுக்கு இயேசு என்ன செய்யும்படி கூறுகிறார் ?

A. அவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், நாட்டுப்புறங்களில் இருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமல் இருக்கக்கடவர்கள் என்றார் [21:21].

Q? எருசலேமின் அழிவின் நாட்களை இயேசு என்னவென்று அழைக்கிறார் ?

A. எழுதி இருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியை சரிகட்டும் நாட்கள் என்கிறார் [21:22].

Luke 21:23-24

Q? எவ்வளவு காலம் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும் ?

A. புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியரால் மிதிக்கப்படும் [21:24].

Luke 21:25-26

Q? இயேசு முகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதற்கு முன்பு என்ன அடையாளத்தை அவர் கூறுகிறார் ?

A. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும், பூமியிலுள்ள ஜனங்களுக்கு இடுக்கண் உண்டாகும் [21:25].

Luke 21:27-28

Luke 21:29-31

Q? காலம் வருகிறதை தம்மை கேட்கிறவர்கள் அறிந்திருப்பதை குறித்து இயேசு சொன்ன உவமை என்ன ?

A. அவர் அத்தி மரத்தை குறித்து சொன்னார், அது துளிர்க்கும்போது வசந்தகாலம் சமீபமாகும் என்கிறார் [21:30].

Luke 21:32-33

Q? என்ன ஒழிந்துபோகும் என்று இயேசு கூறுகிறார் ?

A. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் [21:33].

Q? என்ன ஒழிந்துபோகாது என்று இயேசு கூறுகிறார் ?

A. இயேசுவினுடைய வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை [21:33].

Luke 21:34-35

Q? தம்மை கேட்கிறவர்கள் அந்த நாளை அறியாததினால் இயேசு என்ன செய்யாதிருக்கும்படி எச்சரிக்கை செய்தார் ?

A. அவர்கள் இருதயம் பெருந்திண்டியினாலும், வெறியினாலும், உலகக்கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கை செய்தார் [21:34].

Luke 21:36

Q? தம்மை கேட்கிறவர்கள் அந்த நாளை அறியாததினால் இயேசு என்ன செய்யும்படி எச்சரிக்கை செய்தார் ?

A. எப்போதும் விழித்திருந்து ஜெபம்பண்ணும்படி எச்சரித்தார் [21:36].

Luke 21:37-38

Luke 22

Luke 22:1-2

Q? அந்த சமயத்தில் யூதர்களின் எந்த பண்டிகை சமீபமாய் இருந்தது ?

A. பஸ்கா எனப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாய் இருந்தது [22:1].

Luke 22:3-4

Luke 22:5-6

Q? பிரதான ஆசாரியர்களிடம் இயேசுவை காட்டிக் கொடுக்கும்படி யூதாஸ் எந்த சமயத்தை பார்த்துக்கொண்டு இருந்தான் ?

A. ஜனக்கூட்டமில்லாத வேளையில் இயேசுவை காட்டிக்கொடுக்கும்படி சமயம் தேடினான் [22:6].

Luke 22:7-9

Luke 22:10-11

Luke 22:12-13

Q? இயேசுவும் அவருடைய சீஷர்களும் பஸ்காவை எங்கே புசித்தார்கள் ?

A. எருசலேமில் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையில் [22:10-12].

Luke 22:14-16

Q? பஸ்காவை இனி எப்போது புசிப்பதாக இயேசு கூறினார் ?

A. தேவனுடைய ராஜ்யத்தில் இது நிறைவேறினபின்பு பஸ்காவை புசிப்பதாக இயேசு கூறினார் [22:16].

Luke 22:17-18

Luke 22:19-20

Q? அப்பத்தை பிட்டு சீஷர்களிடம் கொடுக்கும்போது இயேசு கூறியது என்ன ?

A. இயேசு: இது என்னுடைய சரீரமாய் இருக்கிறது, என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்றார் [22:19].”

Q? பாத்திரத்தையும் சீஷர்களிடம் கொடுக்கும்போது இயேசு கூறியது என்ன ?

A. இந்த பத்திரம் உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாய் இருக்கிறது என்றார் [22:20].”

Luke 22:21-23

Q? இயேசுவைக் காட்டிக் கொடுப்பவன் யார் என்று சீஷர்கள் அறிந்திருந்தார்களா ?

A. இல்லை [22:23].

Q? இயேசுவைக் காட்டிக்கொடுப்பது தேவனுடைய சித்தமா ?

A. ஆம் [22:22].

Luke 22:24-25

Luke 22:26-27

Q? சீஷர்களில் எவன் பெரியவன் என்று இயேசு சொன்னார் ?

A. பணிவிடை செய்கிறவனே பெரியவனாய் இருப்பான் என்றார் [22:26].

Q? இயேசு சீஷர்கள் மத்தியில் எவ்வாறு வாழ்ந்தார் ?

A. அவர் ஒரு பணிவிடைக்காரனை போல வாழ்ந்தார் [22:27].

Luke 22:28-30

Q? சீஷர்கள் எங்கே உட்காருவார்கள் என இயேசு வாக்கு கொடுத்தார் ?

A. இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாந்தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார் [22:30].

Luke 22:31-32

Luke 22:33-34

Q? பேதுரு என்ன செய்வான் என்று இயேசு கூறினார் ?

A. சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று முறை மறுதலிப்பாய் என்றார் [22:34].

Luke 22:35-36

Luke 22:37-38

Q? இயேசுவைக் குறித்து எழுதி இருக்கிற என்ன நிகழ்வுகள் நிறைவேறவேண்டி இருந்தது ?

A. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதி இருக்கிற வேத வாக்கியம் நிறைவேற வேண்டி இருந்தது [22:37].”

Luke 22:39-40

Q? ஒலிவ மலையில் இயேசு தமது சீஷர்களை எதற்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார் ?

A. அவர்கள் சோதனைக்குட்படாமல் இருக்க அவர்களை அவர் ஜெபம் பண்ணும்படி கூறினார் [22:40].

Luke 22:41-42

Q? ஒலிவ மலையில் இயேசு ஜெபித்தது என்ன ?

A. பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார் [22:42].”

Luke 22:43-44

Luke 22:45-46

Q? இயேசு ஜெபம்பண்ணி முடித்து சீஷர்களிடம் திரும்பும்போது அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் ?

A. அவர்கள் நித்திரையாய் இருந்தனர் [22:45].

Luke 22:47-48

Q? ஜனக்கூட்டத்தின் மத்தியில் யூதாஸ் இயேசுவை எவ்வாறு காட்டிக்கொடுத்தான் ?

A. அவன் இயேசுவை முத்தம் செய்து காட்டிக்கொடுத்தான் [22:47-48].

Luke 22:49-51

Q?யூதாஸ் ஜனக்கூட்டத்திற்கு முன்னபாக இயேசுவை எவ்வாறு கட்டிக்கொடுத்தான் ?

A. அவன் இயேசுவை முத்தம் செய்து காட்டிக்கொடுத்தான் [22:47-48].

Q? காது வெட்டப்பட்டவனுக்கு இயேசு செய்தது என்ன ?

A. இயேசு அவனுடைய காதைத் தொட்டு, அவனை குணமாக்கினார் [22:51].

Luke 22:52-53

Q? இயேசு தினந்தோறும் எங்கே பிரதான ஆசாரியரோடு இருந்ததாகக் கூறினார் ?

A. தேவாலயத்தில் அவர்களோடு இருந்தார் [22:53].

Luke 22:54-55

Q? அவர்கள் இயேசுவை பிடித்தபின்பு அவரை எங்கே கொண்டுசென்றனர் ?

A. அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்கு கொண்டுசென்றனர் [22:54].

Luke 22:56-58

Q? ஒரு வேலைக்காரி பேதுருவை நோக்கி நீயும் இயேசுவோடு இருந்தவன்தான் என்றதற்கு, பேதுரு என்ன கூறினான் ?

A. பேதுரு ஸ்திரீயே, நான் அவனை அறியேன் என்றான் [22:57].

Luke 22:59-60

Q? பேதுரு மூன்றுமுறை இயேசுவை மறுதலித்ததும் நடந்தது என்ன ?

A. சேவல் கூவிற்று [22:60].

Luke 22:61-62

Q? இயேசு பேதுருவை நோக்கிப்பார்த்ததும் அவன் என்ன செய்தான் ?

A. அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான் [22:62].

Luke 22:63-65

Q? காவல் காக்கிறவர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?

A. அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து அவரை தூஷித்தார்கள் [22:63-65].

Luke 22:66-68

Q? ஆலோசனை சங்கத்தில் நீ கிறிஸ்துவா ? அதை எங்களுக்கு சொல் என்று கேட்டபோது, இயேசு நான் சொன்னாலும் அவர்கள் என்ன செய்யமாட்டார்கள் என்றார் ?

A. அவர்கள் நம்பமாட்டார்கள் என்றார் [22:67].

Luke 22:69-71

Q? நான் கிறிஸ்துதான் என்று இயேசு கூறுவதற்கு இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன என்று ஏன் கூறினார்கள் ?

A. இயேசு தன் வாயினாலே சொல்வதைக் கேட்டார்கள் [22:71].

Luke 23

Luke 23:1-2

Q? யூதத் தலைவர்கள் இயேசுவுக்கு எதிராக பிலாத்துவினிடம் சாட்டின குற்றம் என்ன ?

A. அவர்கள்: இவன் தன்னை கிறிஸ்து எனப்பட்ட ராஜா என்றும், ராயனுக்கு வரி கொடுக்கவேண்டியதில்லை என்றும் ஜனங்களை கலகப்படுத்தினான்[23:2].

Luke 23:3-5

Q? பிலாத்து இயேசுவினிடம் பேசி முடித்தபின்பு அவரைக் குறித்து கூறியது என்ன ?

A. இந்த மனுஷனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை என்றான் [23:4].”

Luke 23:6-7

Luke 23:8-10

Q? ஏரோது ஏன் இயேசுவைப் பார்க்கும்படி ஆசைபட்டான் ?

A. இயேசுவால் செய்யப்படும் அற்புதத்தை ஏரோது காணும்படி அவரைப் பார்க்க ஆசைப்பட்டான் [23:8].

Q? எரோதினுடைய கேள்விகளுக்கு இயேசு எப்படி பதில் அளித்தார் ?

A. மறுமொழியாக இயேசு ஒன்றும் கூறவில்லை [23:9].

Luke 23:11-12

Luke 23:13-14

Q? திரும்பி இயேசு பிலாத்துவினிடத்தில் கொண்டுவரப்பட்டதும், பிலாத்து இயேசுவைக் குறித்து ஜனங்களிடம் கூறியது என்ன ?

A. இந்த மனுஷனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை என்றான் [23:14].”

Luke 23:15-17

Luke 23:18-19

Q? பண்டிகையை முன்னிட்டு ஜனங்கள் யாரை விடுதலைசெய்ய வேண்டினர் ?

A. கொலைபாதகனான பரபாசை அவர்கள் விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டனர் [23:18].

Luke 23:20-22

Q? ஜனங்கள் இயேசுவை என்ன செய்யும்படி கூக்குரலிட்டனர் ?

A. அவர்கள்: அவனை சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டனர் [23:21].”

Q? மூன்றாவது முறை, பிலாத்து இயேசுவைக் குறித்து ஜனங்களிடம் கூறியது என்ன ?

A. பிலாத்து: மரணத்துக்கு ஏதுவான ஒரு குற்றமும் நான் இவனிடத்தில் காணவில்லை என்றான் [23:22].”

Luke 23:23-25

Q? இறுதியில் ஏன் பிலாத்து ஜனங்கள் கேட்டுக்கொண்டதுபோல இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான் ?

A. அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டே இருந்தார்கள் [23:24].

Luke 23:26

Q? இயேசுவின் சிலுவையை சுமந்துகொண்டு அவர் பின்னே சென்றவன் யார் ?

A. சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவன் இயேசுவின் சிலுவையை சுமந்தான் [23:26].

Luke 23:27-28

Q? எருசலேமின் குமாரத்திகளிடம் இயேசு, எனக்காக அழாமல், யாருக்கா அழும்படி கூறினார் ? A. உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார் [23:28].

Luke 23:29-31

Luke 23:32

Q? இயேசுவோடுகூட யாரை சிலுவையில் அறைந்தனர் ?

A. இரண்டு கள்ளர்கள் இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்டனர் [23:32].

Luke 23:33-34

Q? இயேசு சிலுவையில் தொங்கியபடியே தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக என்னவென்று ஜெபித்தார் ?

A. பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று ஜெபித்தார் [23:34].”

Luke 23:35

Q? நீ கிறிஸ்துவானால் என்ன செய்யும்படி அங்கிருந்த ஜனங்களும், சேவகர்களும், இயேசுவுடன் அறையப்பட்ட ஒரு கள்ளனும் இயேசுவை பரியாசம்பண்ணினர் ?

A. தன்னைத்தான் இரட்சிக்கட்டும் என்றார்கள் [23:35,37,39].

Luke 23:36-38

Q? இயேசுவுக்கு மேலாக எழுதப்பட்ட வார்த்தை என்ன ?

A. இவன் யூதருடைய ராஜா என்று எழுதப்பட்டிருந்தது [23:38].”

Luke 23:39-41

Luke 23:42-43

Q? இரண்டாவது கள்ளன் இயேசுவிடம் வேண்டினது என்ன ?

A. ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான் [23:42].”

Q? இயேசு இரண்டாவது கள்ளனுக்குக் கொடுத்த வாக்கு என்ன ?

A. இன்றைக்கு நீ என்னோடுகூட பரதீசிலிருப்பாய் என்றார் [23:43].”

Luke 23:44-45

Q? இயேசு மரிப்பதற்கு முன் நடந்த அற்புதமான காரியங்கள் என்ன ?

A. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது [23:44-45].

Luke 23:46-47

Q? நூற்றுக்கு அதிபதி இயேசு மரித்தபின்பு அவரைக் குறித்து கூறியது என்ன ?

A. அவன்: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமான் என்றான் [23:47].”

Luke 23:48-49

Luke 23:50-51

Luke 23:52-53

Q? இயேசு மரித்தபின்பு அரிமத்தியாவிலிருந்து வந்த யோசேப்பு என்ன செய்தான் ?

A. பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதைக் கல்லறையில் வைத்தான் [23:52-53].

Luke 23:54-56

Q? இயேசு அடக்கம்பண்ணப்பட்டதும் என்ன நாள் ஆரம்பமாயிற்று ?

A. ஓய்வுநாள் ஆரம்பமாயிற்று [23:54].

Q? இயேசுவோடுகூட வந்த ஸ்திரிகள் ஓய்வுநாளில் என்ன செய்தார்கள் ?

A. தேவனுடைய கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள் [23:56].

Luke 24

Luke 24:1-3

Q? ஸ்திரிகள் எப்போது இயேசுவின் கல்லறையினிடத்திற்கு வந்தார்கள் ?

A. அவர்கள் வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே வந்தார்கள் [24:1] Q? கல்லறையில் ஸ்திரிகள் கண்டது என்ன ?

A. கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதையும், இயேசுவின் சரீரம் இல்லாததையும் கண்டார்கள் [24:2-3].

Luke 24:4-5

Luke 24:6-7

Q? பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த இரண்டு பேர் [தேவதூதர்கள்] இயேசுவைப் பற்றி கூறியது என்ன ?

A. அவர்கள்: இயேசு உயிர்த்தெழுந்தார் [24:6].

Luke 24:8-10

Luke 24:11-12

Q? ஸ்திரீகள் கல்லறையில் தாங்கள் கண்டவைகளை அப்போஸ்தலருக்கு அறிவித்ததும், அவர்களின் மறுமொழி என்ன ?

A. இவர்களுடைய வார்த்தை அவர்களுக்கு வீண்பேச்சாக தோன்றியதினால் நம்பவில்லை [24:11].

Q? பேதுரு கல்லறைக்குள் பார்க்கையில் எதைக் கண்டான் ?

A. சீலைகள் தனிப்பட வைத்திருக்கக்கண்டான் [24:12].

Luke 24:13-14

Luke 24:15-16

Q? சீஷர்கள் எம்மாவுக்குப் போகையில் இயேசுவும் அவர்களோடு போனதை ஏன் அவர்கள் அறியாதிருந்தார்கள் ?

A. அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது [24:16].

Luke 24:17-18

Luke 24:19-20

Luke 24:21

Q? இயேசு உயிரோடிருக்கையில், அவர் என்ன செய்வார் என சீஷர்கள் நம்பிக்கையாய் இருந்தனர் ?

A. அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நம்பி இருந்தனர் [24:21].

Luke 24:22-24

Luke 24:25-27

Q? இயேசு வேதவாக்கியத்திலிருந்து இரண்டு பேருக்கு விளக்கியது என்ன ?

A. தம்மைக் குறித்து வேதம் கூறுவதை அவர்களுக்கு விளக்கினார் [24:27].

Luke 24:28-29

Luke 24:30-32

Q? அவர்கள் இயேசுவை அறிந்ததும் அவர் செய்தது என்ன ?

A. உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார் [24:31].

Luke 24:33-35

Luke 24:36-37

Q? எருசலேமில் இயேசு தமது சீஷர்களுக்கு வெளிப்படுகையில் அவர் முதலில் கூறியது என்ன ?

A. உங்களுக்கு சமாதானம் என்றார் [24:36].”

Luke 24:38-40

Q? இயேசு தாம் ஆவியாக இல்லை என்பதை அவர்களுக்கு எப்படி நிரூபித்தார் ?

A. கைகளையும், கால்களையும் பாருங்கள், என்னை தொட்டுப் பாருங்கள் என்றார் மற்றும் பொறித்த மீன்களையும் சாப்பிட்டார் [24:39-43].

Luke 24:41-43

Q? இயேசு தாம் ஆவியாக இல்லை என்பதை அவர்களுக்கு எப்படி நிரூபித்தார் ?

A. கைகளையும், கால்களையும் பாருங்கள், என்னை தொட்டுப் பாருங்கள் என்றார் மற்றும் பொறித்த மீன்களையும் அவர்களுக்குமுன்பாக சாப்பிட்டார் [24:39-43].

Luke 24:44

Luke 24:45-47

Q? சீஷர்கள் வேதவாக்கியங்களை எவ்வாறு புரிந்துகொண்டார்கள் ?

A. அவர்கள் புரிந்துகொள்ளும்படி இயேசு அவர்களின் மனதை திறந்தார் [24:45].

Q? எல்லா தேசத்தாருக்கும் எவைகளை பிரசங்கிக்கவேண்டும் என்று இயேசு கூறினார் ?

A. மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் சகலதேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படவேண்டும் என இயேசு கூறினார் [24:47].

Luke 24:48-49

Q? இயேசு தமது சீஷர்களை எதற்காகக் காத்திருக்கும்படி கூறினார் ?

A. உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரை காத்திருக்கும்படி கூறினார் [24:49].

Luke 24:50-51

Q? பெத்தானியாவுக்கு அருகில் சீஷர்களை அவர் ஆசீர்வதிக்கையில் இயேசுவுக்கு சம்பவித்தது என்ன ?

A. அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் [24:51].

Luke 24:52-53

Q? பின்பு சீஷர்கள் அவர்கள் சமயத்தை எங்கே கழித்தார்கள் ? அங்கே என்ன செய்தார்கள் ?

A. அவர்கள் நாடோறும் தேவாலயத்தில் தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள் [24:53].