தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

James

James 1

James 1:1-3

Q? இந்த நிருபத்தை யாக்கோபு யாருக்கு எழுதினான் ?

A. சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு யாக்கோபு இந்த நிருபத்தை எழுதினான் [1:1].

Q? பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, எப்படிப்பட்ட நிலையில் இந்த நிருபம் வாசிப்பவர்கள் இருக்குமாறு யாக்கோபு கூறுகிறான் ?

A. பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷத்தோடு எண்ணும்படி யாக்கோபு கூறுகிறான் [1:2].

Q? விசுவாசத்தின் பரீட்சை என்ன உண்டாக்கும் ?

A. விசுவாசத்தின் பரீட்சை பொறுமையை உண்டாக்கும் [1:3-4].

James 1:4-5

Q? விசுவாசத்தில் நாம் எதைக் கேட்கவேண்டும் ?

A. நாம் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்கவேண்டும் [1:5-6].

James 1:6-8

Q? சந்தேகத்தோடு கேட்பவன், தான் எதை பெற்றுக்கொள்வதாக நினைக்கவேண்டும் ?

A. சந்தேகப்படுகிற மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருக்கக்கடவன் [1:6-8].

James 1:9-11

Q? ஐசுவரியவானான சகோதரன் ஏன் தாழ்மையாய் இருக்கவேண்டும் ?

A. ஐசுவரியவானான சகோதரன் தாழ்மையாய் இருக்கவேண்டும் ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான் [1:10-11].

James 1:12-13

Q? சோதனையை சகிக்கிற மனுஷன் எதைப் பெற்றுக்கொள்வான் ?

A. சோதனையை சகிக்கிற மனுஷன் ஜீவகிரீடத்தைப் பெறுவான் [1:12].

James 1:14-16

Q? மனிதன் எதினால் இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் ?

A. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்[1:14].

Q? பாவம் பூரணமாகும்போது முடிவு என்ன ?

A. பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் [1:15].

James 1:17-18

Q?ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருவது எது ?

A. நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது [1:17].

Q? தேவன் நம்மை எதினால் ஜநிப்பித்தார் ?

A. சத்திய வசனத்தினாலே அவர் நம்மை ஜநிப்பித்தார்[1:18].

James 1:19-21

Q? கேட்கிறதையும், பேசுகிறதையும், கோபிக்கிறதையும் குறித்து யாக்கோபு கூறுவது என்ன ?

A. யாக்கோபு: கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும் கோபிக்கிறதற்கு பொறுமையாயும் இருக்கும்படி கூறுகிறான் [1:19].

James 1:22-25

Q? எப்படி நாம் நம்மை வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம் என்று யாக்கோபு கூறுகிறான் ?

A. வசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாமலிருந்தால் நாம் நம்மை வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம் என்று யாக்கோபு கூறுகிறான்[1:22].

James 1:26-27

Q? நாம் தேவபக்தியுள்ளவனென்று விளங்கும்படிக்கு எதை அடக்கவேண்டும் ?

A. நாம் தேவபக்தியுள்ளவனென்று விளங்கும்படிக்கு நாவை அடக்கவேண்டும்[1:26].

Q? எது தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது ?

A. திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கரைபடாதபடிக்கு தன்னை காத்துக்கொள்கிறதுமே தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது[1:27].

James 2

James 2:1-4

Q? ஒருவன் ஆலயத்தில் வரும்போது என்ன செய்யலாகாது என்று யாக்கோபு சகோதரர்களுக்கு கூறுகிறான் ?

A. ஆலயத்திற்கு வருகிறவர்களை பார்த்து நிதானிக்க கூடாது என்று யாக்கோபு கூறுகிறான் [2:1-4].

James 2:5-7

Q? தேவன் தரித்திரர்களை தெரிந்துகொண்டதை குறித்து யாக்கோபு கூறுவது என்ன ?

A. யாக்கோபு: தேவன் தரித்திரர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், பரலோகராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும்தெரிந்துகொண்டார் [2:5].

Q? ஐசுவரியவான்கள் என்ன செய்வதாக யாக்கோபு கூறுகிறான் ?

A. யாக்கோபு: ஐசுவரியவான்கள்; சகோதரர்களை ஒடுக்கி, அவர்கள் தரித்திருக்கிற தேவனுடைய நாமத்தை தூஷிக்கிறார்கள் [2:6-7].

James 2:8-9

Q? வேதத்தில் ராஜரீக பிரமாணம் எது ?

A. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே வேதத்தில் ராஜரீக பிரமாணம்[2:8].

James 2:10-11

Q? நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் அவன் ஒன்றிலே தவறினால் எதினால் குற்றவாளியாவான் ?

A. நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் அவன் ஒன்றிலே தவறினால் அவன் முழு நியாயப்பிரமாணத்தையும் மீறினவனாவான் [2:10].

James 2:12-13

Q? இரக்கம் செய்யாதவனுக்கு என்ன கிடைக்கும் ?

A. இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் [2:13].

James 2:14-17

Q? ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், வேண்டியவனுக்கு உதவாமல் இருப்பதைக் குறித்து யாக்கோபு கூறுவது என்ன ?

A. யாக்கோபு: ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், கிரியையில்லாதவனானால் அந்த விசுவாசம் அவனை இரட்சிக்காது [2:14-16].

Q? கிரியை இல்லாத விசுவாசம் எப்படிப்பட்டது ?

A. கிரியை இல்லாத விசுவாசம் செத்தது [2:17].

James 2:18-20

Q? நம்முடைய விசுவாசத்தை எப்படி காண்பிக்கவேண்டுமென்று யாக்கோபு கூறுகிறான் ?

A. நம்முடைய விசுவாசத்தை நமது கிரியையினால் காண்பிக்கவேண்டுமென்று யாக்கோபு கூறுகிறான்[2:18].

Q? விசுவாசமுண்டென்று காண்பிக்க விரும்புகிறவன் மற்றும் பிசாசு இருவரும் நம்புவது எது ?

A. விசுவாசமுண்டென்று காண்பிக்க விரும்புகிறவனும் மற்றும் பிசாசும் தேவன் ஒருவரென்று விசுவாசிக்கிறார்கள் [2:19].

James 2:21-24

Q? ஆபிரகாம் எப்படி தன் கிரியைகளினால் அவன் விசுவாசத்தை காண்பித்தான் ?

A. ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை பலிபீடத்தின்மேல் செலுத்தி அவன் கிரியைகளினாலே விசுவாசத்தைக் காண்பித்தான் [2:21-22].

Q? ஆபிரகாமின் விசுவாசத்தினாலும், கிரியையினாலும் எந்த வேதவாக்கியம் நிறைவேறியது ?

A. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது[2:23].

James 2:25-26

Q? ஆவியில்லாத சரீரம் எப்படிப்பட்டது ?

A. ஆவியில்லாத சரீரம் செத்தது [2:26].

James 3

James 3:1-2

Q? எதினால் அநேகர் போதகர்களாகதிருக்கும்படி யாக்கோபு கேட்டுக்கொண்டான் ?

A. அதிக ஆக்கினை அடைவோமென்று அறிந்து அவர்களில் அநேகர் போதகர்களாகதிருக்கும்படி யாக்கோபு கேட்டுக்கொண்டான்[3:1].

Q? யார் இடறுவார்கள்? எந்த விஷயங்களில் ?

A. நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் இடறுகிறோம் [3:2].

Q? எப்படிப்பட்டவன் தன் முழுசரீரத்தையும் அடக்குவான் ?

A. எவன் ஒருவன் தன் சொல்தவறாதிருந்தால் அவனே முழுசரீரத்தையும் அடக்குவான்[3:2].

James 3:3-4

Q? பெரிய காரியங்களையும், சிறிய காரியத்தினால் கட்டுப்படுத்தக்கூடும் என யாக்கோபு விளக்கும் இரண்டு உதாரணங்கள் என்ன ?

A. குதிரையின் கடிவாளமும், கப்பலின் சுக்கான் இவை இரண்டுமே யாக்கோபு கூறும் விளக்கங்கள் [3:3-4].

James 3:5-6

Q? அநீதி நிறைந்த நாவு முழு சரீரத்திற்கும் செய்வது என்ன ?

A. அநீதி நிறைந்த நாவு முழு சரீரத்தையும் கறைப்படுத்தும் [3:6].

James 3:7-8

Q? எதை மனுஷனில் ஒருவனாலும் அடக்கக்கூடாது ?

A. நாவை ஒரு மனுஷனாலும் அடக்கக்கூடாது [3:8].

James 3:9-10

Q? ஒரே வாயிலிருந்து புறப்படும் இரண்டு காரியங்கள் எது ?

A. துதித்தலும், சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படும்[3:9-10].

James 3:11-12

James 3:13-14

Q? மனுஷனில் ஞானியும், விவேகியுமாயிருக்கிறவன் எவ்வாறு அதைக் காண்பிக்கவேண்டும் ?

A. மனுஷனில் ஞானியும், விவேகியுமாயிருக்கிறவன் அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்நடத்த்தையோடே காண்பிக்கக்கடவன் [3:13].

Q? உலகத்தால் உண்டான ஞானம், லௌகீகம், பேய்த்தனத்துக்கடுத்தது போன்ற செய்கைகள் எவைகளை வெளிப்படுத்தும் ?

A. உலகத்தால் உண்டான ஞானம், லௌகீகம், பேய்த்தனத்துக்கடுத்தது போன்ற செய்கைகள் கசப்பான வைராக்கியம், விரோதம், பெருமை, சத்தியத்திற்கு விரோதமாய் பொய் சொல்லுகிறது போன்றவைகளை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தும்[3:14-16].

James 3:15-18

Q? பரத்திலிருந்து வருகிற ஞானம் எதை வெளிப்படுத்தும் ?

A. பரத்திலிருந்து வருகிற ஞானமோ சுத்தமுள்ளதாயும், சமாதானமும், சாந்தமும், இணக்கமும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றது போன்றவைகளை வெளிப்படுத்தும் [3:17].

James 4

James 4:1-3

Q? விசுவாசிகளுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் எதினால் உண்டாகிறது என யாக்கோபு தெரிவிக்கிறார் ?

A. பொல்லாத இச்சையினால் விசுவாசிகளுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் உண்டாகிறது என யாக்கோபு தெரிவிக்கிறார்[4:1].

Q? விசுவாசிகள் ஏன் தேவனிடத்தில், அவர்கள் வேண்டுவது பெற்றுக்கொள்வதில்லை ?

A. அவர்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தகாதவிதமாய் விண்ணப்பிக்கிறபடியால் அவர்கள் தேவனிடத்தில் வேண்டுவது பெற்றுக்கொள்வதில்லை[4:3].

James 4:4-5

Q? உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன், தேவனிடத்தில் அவனுடைய உறவு என்ன ?

A. உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன், தேவனுக்கு விரோதியாயிருக்கிறான் [4:4].

James 4:6-7

Q? தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார் ? யாருக்கு கிருபை அளிக்கிறார் ?

A. தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவனுக்குக் கிருபை அளிக்கிறார் [4:6].

Q? விசுவாசியானவன் தேவனுக்கு கீழ்ப்படிந்து, பிசாசுக்கு எதிர்த்து நின்றால். பிசாசு என்ன செய்வான் ?

A. பிசாசு ஓடிப்போவான் [4:7].

James 4:8-10

Q? தன்னிடமாய் சேருகிறவர்களுக்கு தேவன் செய்வது என்ன ?

A. தேவனிடமாய் சேருகிறவர்களிடம், தேவனும் அவர்களிடமாய் சேருவார் [4:8].

James 4:11-12

Q? விசுவாசிகள் என்ன செய்ய வேண்டாமென்று யாக்கோபு கூறுகிறான் ?

A. விசுவாசிகள்; ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருக்கும்படி யாக்கோபு கூறுகிறான் [4:11].

James 4:13-14

Q? நாளைக்கு சம்பவிப்பதை எவ்வாறு கூறும்படி யாக்கோபு விசுவாசிகளிடம் கூறுகிறான் ?

A. ஆண்டவருக்கு சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதை செய்வோம் என்று சொல்லும்படி யாக்கோபு விசுவாசிகளிடம் கூறுகிறான் [4:13-15].

James 4:15-17

Q? தங்கள் வீம்புகளினால் மேன்மைபாராட்டுகிறவர்களைக் குறித்து யாக்கோபு கூறுவது என்ன ?

A. யாக்கோபு: தங்கள் வீம்புகளினால் மேன்மைபாராட்டுகிறது பொல்லாங்காயிருக்கிறது[4:16].

Q? ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமல் போனால் அவனுக்கு என்ன ?

A. ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் [4:17].

James 5

James 5:1-3

Q? ஐசுவரியவானைப் பற்றி யாக்கோபு கூறுகையில், அவன் செய்கைகளைக் குறித்து கடைசி நாளில் எது சாட்சிகூறும் ?

A. ஐசுவரியவான்களின் பதுக்கப்பட்ட பொக்கிஷங்கள் [5:3].

James 5:4-6

Q? ஐசுவரியவான்கள் அவர்களுடைய வேலைக்காரர்களை எவ்வாறு நடத்தினார்கள் ?

A. ஐசுவரியவான்கள் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கு கூலி கொடுக்காமல் பிடித்தனர் [5:4].

Q? நீதிமானுக்கு ஐசுவரியவான்கள் செய்தது என்ன ?

A. நீதிமானை ஆக்கினைக்குள்ளாகத்தீர்த்து அவனை கொலை செய்தார்கள் [5:6].

James 5:7-8

Q? கர்த்தரின் வருகையை நோக்கி இருக்கையில் விசுவாசிகள் எவ்வாறு இருக்கவேண்டுமென்று யாக்கோபு கூறுகிறான் ?

A. கர்த்தரின் வருகைக்காக பொறுமையோடே காத்திருக்கும்படி யாக்கோபு கூறுகிறான்[5:7-8].

James 5:9-11

Q? பழைய ஏற்பாட்டில் எப்படிப்பட்ட குணாதிசயங்களை திருஷ்டாந்தரமாக வைத்துக்கொளும்படி யாக்கோபு கூறுகிறான் ?

A. பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளை துன்பப்படுத்துதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தரமாக வைத்துக்கொளும்படி யாக்கோபு கூறுகிறான்[5:10-11].

James 5:12

Q? விசுவாசிகள் நம்பத்தக்கவர்களாய் இருக்கும்படி ஆம் மற்றும் இல்லை என்பதைக் குறித்து யாக்கோபு கூறுவது என்ன ?

A. விசுவாசிகள்; உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் கூறவேண்டும் [5:12].

James 5:13-15

Q? வியாதிப்பட்டவனுக்கு என்ன செய்ய வேண்டும் ?

A. வியாதிப்பட்டவன் சபையின் மூப்பரை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினால் அவனுக்கு எண்ணெய் பூசி ஜெபம்பண்ணக்கடவர்கள் [5:14].

James 5:16-18

Q? வியாதிப்பட்டவன் சொஸ்தமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் எந்த இரண்டு காரியங்கள் செய்யும்படி யாக்கோபு கூறுகிறான் ?

A. விசுவாசிகள்; தங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணவேண்டும் [5:16].

Q? எலியாவின் ஜெபத்தைக் குறித்து எதை உதாரணமாக யாக்கோபு கூறினான் ?

A. நீதிமான் செய்யும் உக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று எலியாவின் ஜெபத்தைக் குறித்து உதாரணமாக கூறினான் [5:16-18].

James 5:19-20

Q? தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் என்ன செய்கிறான் ?

A. தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்ச்சித்து, திரளான பாவங்களை மூடுவான் [5:20].