தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Thessalonians

2 Thessalonians 1

2 Thessalonians 1:1-2

2 Thessalonians 1:3-5

Q? தெசலோனிக்கேயர் சபையில், எந்த இரண்டு காரியங்களுக்காக, பவுல் தேவனுக்கு நன்றி செலுத்தினார் ?

A. அவர்களுடைய விசுவாசம் மிகவும், பெருகுகிறபடியினாலும்,அவர்கள் ஒருவரிலொருவர்,வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும்,பவுல் தேவனுக்கு நன்றி செலுத்தினார் [1:3]

Q?தெசலோனிக்கேயா விசுவாசிகள்,எப்படிப்பட்ட சூழ்நிலைமையில் நிலைத்திருந்தார்கள் ?

A. விசுவாசிகள் உபத்திரவத்திலும்,மற்றும் துன்பத்திலும்,நிலைத்திருந்தார்கள் [1:4]

Q? விசுவாசிகளின் உபத்திரவத்தின் சூழ்நிலையில்,அவர்களுக்கு கிடைத்த நன்மையான விளைவு என்ன ?

A. விசுவாசிகள் தேவனுடைய,ராஜ்ஜியத்திற்கு பாத்திரவான்களாய் எண்ணப்படுகிறார்கள் [1:5]

2 Thessalonians 1:6-8

Q?விசுவாசிகளை உபத்திரவபடுத்துகிறவர்களுக்கு,தேவன் செய்ய போவது என்ன ?

A. விசுவாசிகளை உபத்திரவபடுத்துகிறவர்களுக்கு, உபத்திரவத்தையும், ஜுவாலித்து எரிகிற அக்கினியினாலே, தேவன் அவர்களை தண்டிக்கவும் செய்கிறார் [1:6,8]

Q? எப்பொழுது விசுவாசிகள் தங்கள் உபத்திரவத்திலிருந்து விடுதலையாவார்கள் ?

A. இயேசு கிறிஸ்து வானத்திலுருந்து வெளிப்படும்போது,விசுவாசிகள் விடுதலையாவார்கள் [1:7]

2 Thessalonians 1:9-10

Q? தேவனை அறியாதவர்களுக்கு எவ்வளவு காலங்கள் தண்டனை இருக்கும்? A. தேவனை அறியாதவர்கள் எவர்களோ,அவர்கள் நித்திய தண்டனை அடைவார்கள் [1:9]

Q? கர்த்தரை அறியாதவர்களுக்கு அவர்களின் தண்டனையின் பகுதியாக, எதிலிருந்து நீங்கலாக்கப் படுகிறார்கள் ?

A. கர்த்தரை அறியாதவர்கள் தங்கள் தண்டனையின் ஓர் பகுதியாக, வல்லமை பொருந்திய தேவ மகிமையிலிருந்து,நீங்கலாக்கப் படுகிறார்கள் [1:9]

Q? இயேசு கிறிஸ்து தன்னுடைய நாளில் வருகிறதை,காண்கிற விசுவாசிகள் என்ன செய்வார்கள் ?

A. கிறிஸ்து அவர் நாளில்,வருகை தருகிறதை காண்கிற விசுவாசிகள் ஆச்சரியப்படுவார்கள் [1:10]

2 Thessalonians 1:11-12

Q? தேவ வல்லமையினாலே விசுவாசிகளால் செய்யப்பட்ட ,விசுவாசத்தின் நற்கிரியைகளின் விளைவு என்ன ?

A. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை அடைவதே விசுவாசிகளின் நற்கிரியைகளுக்கான விளைவாகும் [1:11,12]

2 Thessalonians 2

2 Thessalonians 2:1-2

Q? எந்த சம்பவத்தை குறித்து தான் இப்பொழுது எழுத போவதாக, பவுல் கூறுகிறார் ?

A. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்து, தான் இப்பொழுது எழுதப் போவதாக பவுல் கூறுகிறார் [2:1]

Q? எதை அவர்கள் விசுவாசிக்க வேண்டாம் என்று பவுல் கூறுகின்றார் ?

A. கர்த்தருடைய நாள் ஏற்கனவே வந்தாயிற்று என்பதை,அவர்கள் விசுவாசிக்க வேண்டாம் என்று பவுல் கூறுகிறார் [2:2]

2 Thessalonians 2:3-4

Q? கர்த்தருடைய நாளுக்கு முன்பதாய் வரும் என்று பவுல் எதை கூறுகிறார் ? A. கர்த்தருடைய நாளுக்கு முன்பதாக,விசுவாச துரோகமும், கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்படுவான் [2:3]

Q? பாவ மனிதன் என்னத்தை செய்வான் ?

A. பாவ மனிதன் எதிர்த்து நிற்கிறவனாயும்,தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும்,தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து தன்னைத் தான் தேவனென்று, காண்பிக்கிறவனாயும் இருப்பான் [2:4]

2 Thessalonians 2:5-7

Q? எப்பொழுது பாவ மனிதன் வெளிப்படுவான் ?

A. பாவ மனிதனை தடை செய்கிறவர் நடுவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தன்காலத்திலே வெளிப்படுவான் [2:6,7]

2 Thessalonians 2:8-10

Q? இயேசு வெளிப்படும் போது,பாவ மனிதனுக்கு இயேசு என்ன செய்வார்

A. இயேசு வெளிப்படும் போது,பாவ மனிதனை அவர் அழிப்பார் [2:8]

Q? வல்லமையோடும்,அடையாளங்களோடும்,பொய்யான அற்புதங்களோடும், அக்கிரமக்காரனோடு,செயல்பட்டவன் யார் ?

A.வல்லமையோடும்,அடையாளங்களோடும்,பொய்யான அற்புதங்களோடும் அக்கிரமக்காரனோடு,சாத்தான் செயல்பட்டான் [2:9]

Q? ஏன் சில அக்கிரமக்காரனாலே வஞ்சிக்கப்பட்டு,துன்பப் படுகிறார்கள் ?

A. இரட்சிக்க படதக்கதாய்,சத்தியத்தின் மேலுள்ள அன்பை, அவர்கள் அங்கிகரியாமல் போனபடியால்,அவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் [2:10]

2 Thessalonians 2:11-12

Q? வஞ்சிக்கப்பட்டு ஆக்கினைக்குள்ளாக்கப் படுபவார்கள் எதில் பிரியப்படுகிறார்கள் ?

A. வஞ்சிக்கப்பட்டு ஆக்கினைக்குள்ளாக்கப் படுபவார்கள் அநீதியில் பிரியப்படுகிறார்கள் [2:12]

2 Thessalonians 2:13-15

Q? சுவிசேஷத்தின் மூலமாய் தெசலோனிகேயர்கள் அடையும் படிக்கு தேவன் எதைத் தெரிந்து கொண்டார் ?

A. சுவிசேஷத்தினாலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை தெசலோனிகேயர்கள் அடையும் பொருட்டாக,தேவன் தெரிந்து கொண்டார் [2:13,14]

Q?தெசலோனிகேயர்கள் நற்செய்தியை,ஏற்றுக்கொண்டபோது அவர்கள் உடனே எதைச் செய்ய வேண்டும் என்று பவுல் அறைகூவல் விடுக்கிறார் ?

A. தெசலோனிகேயர்கள் நற்செய்தியில் நிலைக்கொண்டு,அவர்களுக்கு உபதேசித்த முறைமைகளை கைகொள்ள வேண்டும் என்று, பவுல் அறைகூவல் விடுக்கிறார் [2:15]

2 Thessalonians 2:16-17

Q? தெசலோனிகேயர்கள் எவ்விதமாக, தங்கள் இருதயத்தில் ஸ்திரப்படவேண்டும் என்று பவுல் ஆவல் கொண்டுள்ளார் ?

A. தெசலோனிகேயர்கள் நல்வசனத்திலும்,நற்கிரியைகளிலும்,ஸ்திரப்படுவதே பவுலின் விருப்பமாகும் [2:17]

2 Thessalonians 3

2 Thessalonians 3:1-3

Q? கர்த்தருடைய வசனத்தை குறித்து தெசலோனிகேயர்கள்,எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி பவுல் விரும்புகின்றார் ?

A. கர்த்தருடைய வார்த்தை துரிதமாய்,எங்கும் பரவி மகிமை படும்படியாக தெசலோனிக்கேயர்கள் ஜெபிக்கவேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் [3:1]

Q? யாரிடத்திலிருந்து, விடுவிக்க படுவது பவுலின் விருப்பமாயிருந்தது ?

A. விசுவாசம் இல்லாத துர்க்குணராகிய பொல்லாத மனுஷர்களிடத்திலிருந்து விடுவிக்க பட வேண்டும் என்று பவுல் விருப்பம் கொள்ளுகிறார் [3:2]

2 Thessalonians 3:4-5

Q? பவுல் எதை தெசலோனிகேயர்கள் இனிமேலும் செய்யவேண்டும் என்று கூறுகிறார் ?

A. பவுல் தெசலோனிகேயர்களுக்கு,கட்டளையிட்ட யாவையும், இனிமேலும் அவர்கள் செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார் [3:4]

2 Thessalonians 3:6-9

Q? ஒழுங்கற்று நடக்கிற எந்த சகோதரனையும் குறித்து விசுவாசிகள்,என்ன செய்ய வேண்டும் ?

A. ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும்,விசுவாசிகள் விட்டு விலகவேண்டும் [3:6]

Q? பவுல் தனது பிரயாசத்தின் மற்றும் ஆதரிப்பின் மூலமாக தெசலோனிகேயர்களுக்கு எதை மாதிரியாக முன் வைத்தார் ?

A. பவுல் ஒருவருக்கும் பாரமாய் இராமல்,இரவும்,பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும்,வேலைசெய்து சாப்பிட்டார் [3:7-9]

2 Thessalonians 3:10-12

Q? வேலை செய்ய மனதில்லாமல் இருக்கிறவர்களைக் குறித்து பவுல் கட்டளையிடுவது என்ன ?

A. ஒருவன் வேலை செய்ய மனதில்லாமல் இருந்தால் அவன் சாப்பிடக்கூடாது என்று பவுல் கட்டளையிடுகிறார் [3:10]

Q? சோம்பேறிகளாய் இருப்பதற்கு பதிலாக அந்த மக்கள் என்ன செய்யவேண்டுமென்று பவுல் கட்டளையிடுகிறார் ?

A. சோம்பேறிகள் அமைதலோடே வேலை செய்து தங்கள் சொந்த சாப்பாட்டை, சாப்பிட வேண்டுமென்று பவுல் கட்டளையிடுகிறார் [3:12]

2 Thessalonians 3:13-15

Q? ஒருவன் பவுல் நிரூபத்தில் சொல்லிய வசனத்திற்கு கீழ்ப்படியாமல் போவானானால் மற்ற சகோதரர்கள் அவனுக்கு எதைச் செய்யவேண்டும்

A. பவுலின் நிரூபத்தில் சொல்லிய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமல்போனால், அவனுடன் எந்தச் சகோதரனும் சேராமல் இருக்கவேண்டும் [3:14]

2 Thessalonians 3:16-18

Q? தேவன் தெசலோனிக்கேயர்களுக்கு,தந்தருள வேண்டும் என்கிற பவுலின் விருப்பம் என்ன ?

A. கர்த்தர்தாமே எப்பொழுதும், சகல விதத்திலும்,தெசலோனிக்கேயர்களுக்கு சமாதானத்தைத் தந்தருள வேண்டும் என்பதே பவுலின் விருப்பமாகும் [3:16]

Q? இந்த நிருபத்தின் எழுத்தாளர் பவுல் என்பதை அவர் எவ்வாறு வெளிகாட்டுகிறார் ?

A. பவுல் இந்த நிருபத்திற்குத் தானே எழுத்தாளர் என்பதற்கு, அடையாளமாக தன் கையெழுத்தாலே வாழ்த்துறை எழுதினார் [3:17]