Titus
Titus 1
Titus 1:1-3
Q? தேவனுடைய ஊழியத்தில் பவுலின் நோக்கம் என்ன ?
A. தேவ பக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாக்குவதே ஆகும் [1:1].
Q? தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களுக்கு எப்போது நித்தியஜீவனை வாக்குப்பண்ணினார் ?
A. ஆதிகாலம்முதல் அவர் தாம் தெரிந்துகொண்டவர்களுக்கு நித்தியஜீவனை வாக்குப்பண்ணினார்[1:2].
Q? தேவன் பொய் கூறுவாரோ ?
A. இல்லை [1:2].
Q? சத்தியத்தை பிரசங்கத்தினாலே விளங்கச்செய்யும்படிக்கு யாரை தேவன் பயன்படுத்தினார் ?
A. அப்போஸ்தலனாகிய பவுலை தேவன் பயன்படுத்தினார் [1:3].
Titus 1:4-5
Q? தீத்துவுக்கும், பவுலுக்கும் உண்டாயிருந்த உறவு என்ன ?
A. பவுலுக்கு தீத்து பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாயிருந்தான் [1:4].
Titus 1:6-7
Q? மூப்பரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் ?
A. ஒரே மனைவியுடைய புருஷனும், விசுவாசமுள்ள பிள்ளைகளையுடயவனாயும் குற்றஞ்சாட்டப்படாதவனாயும் இருக்க வேண்டும் [1:6].
Q? மூப்பர்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ள குணாதிசயங்கள் எனென்ன ?
A. தன் இஷ்டபடி செய்யாதவனும், மதுபானபிரியமிலாதவனும், வாக்குவாதம்பண்ணாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், விவேகமுள்ளவனும், பரிசுத்தவானுமாயிருக்கிறதே ஆதாரம் [1:6-8].
Titus 1:8-9
Q? விசுவாசத்தின் போதகமாகிய வசனத்தின் முன் மூப்பரின் செய்கை எப்படி இருக்கவேண்டும் ?
A. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திச்சொல்லுகிறவனும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டிக்கிறவனும், உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்கிறவனுமாயிருக்கவேண்டும் [1:9].
Titus 1:10-11
Q? கள்ளப்போதகர்கள் தங்கள் வார்த்தைகளினால் என்ன செய்கிறார்கள் ?
A. அவர்கள் ஜனங்களின் மனதை மயக்கி, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள் [1:10-11].
Q? கள்ளப்போதகர்களை ஊக்குவிப்பது எது ?
A. இழிவான ஆதாயத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள் [1:11].
Titus 1:12-13
Q? கள்ளப்போதகர்களை மூப்பர் என்ன செய்யவேண்டும் ?
A. அவன் கள்ளப்போதகர்களை கண்டித்து, அவர்களுடைய வாயை அடக்கி கண்டிப்பாய் அவர்களைக் கடிந்துகொள்ளவேண்டும் [1:9,11,13].
Titus 1:14
Q? எதினால் அவர்கள் நேரத்தை வீணடிக்கக்கூடாது என பவுல் கூறுகிறான் ?
A. யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், மனுஷனுடைய கற்பனைகளுக்கும் நேரத்தை வீணடிக்கக்கூடாது என பவுல் கூறுகிறான்[1:14].
Titus 1:15-16
Q? அவிசுவாசியானவனுக்கு எது அசுத்தமாயிருக்கும் ?
A. அவர்களுடைய புத்தியும், மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்[1:15].
Q? ஆயினும், அசுத்தமுள்ள மனிதன் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணி எதினால் அவரை மறுதலிக்கிறார்கள் ?
A. அவர்களுடைய கிரியைகளினால் தேவனை மறுதலிக்கிறார்கள் [1:16].
Titus 2
Titus 2:1-2
Q? சபையில் முதிர்வயதுள்ள புருஷர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தவேண்டும் ?
A. அவர்கள்; ஜாக்கிரதையுள்ளவர்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும் தங்களை வெளிப்படுத்தவேண்டும் [2:2].
Titus 2:3-5
Q? சபையில் முதிர்வயதுள்ள ஸ்திரீகள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தவேண்டும் ?
A. பரிசுத்தமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயும், நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவேண்டும் [2:3].
Q? முதிர்வயதுள்ள ஸ்திரீகள், பாலிய ஸ்திரீகளுக்கு எதைப் போதிக்கவேண்டும் ?
A. பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷருக்கு கீழ்ப்படியவும், தங்கள் பிள்ளைகளிடத்தில் அன்புள்ளவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் கற்புள்ளவர்களும், நல்லவர்களும், வீட்டிலே தரித்திருக்கிரவர்களுமாயிருக்கும்படி போதிக்கவேண்டும் [2:4-5].
Titus 2:6-8
Q? விசுவாசிகளுக்கு மாதிரியைக் காண்பிக்கும்படிக்கு தீத்து என்ன செய்யவேண்டும் ?
A. நீ புத்திசொல்லி, நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, மற்றவன் உன்னைக்குறித்து பொல்லாங்கு சொல்ல இடமில்லாமல் வெட்கப்படும்படிக்கு, குற்றமில்லாதவனும், ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருக்க வேண்டும் [2:7-8].
Titus 2:9-10
Q? விசுவாசிகளில் வேலைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ?
A. அவர்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்து, எதிர்த்துப்பேசாமல், விசுவாசமாயும், திருடாமலும், நல்லுண்மையைக் காண்பிக்கிறவர்களாயும் இருக்க வேண்டும் [2:9-10].
Q? வேலைகாரர்களுக்கு பவுல் கூறியது போல அவர்கள் நடந்துகொண்டால் மற்றவர்களிடத்தில் ஏற்படுவது என்ன ?
A. நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசம் மற்றவர்களிடம் அலங்கரிக்கப்படும் [2:10].
Titus 2:11-13
Q? தேவனுடைய கிருபை யாரை இரட்சிக்கும் ?
A. தேவனுடைய கிருபை எல்லா மனுஷரையும் இரட்சிக்கும்[2:11].
Q? தேவனுடைய கிருபை எவைகளை நாம் வெறுக்கும்படி செய்திருக்கிறது ?
A. அவபக்தியையும், உலக இச்சைகளையும் வெறுக்கும்படி செய்திருக்கிறது [2:12].
Q? சம்பவிக்கபோகும் எவைகளை விசுவாசிகள் பெற்றுக்கொள்ள எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள் ?
A. மகா தேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் பிரசன்னமாக்குதலுக்கு விசுவாசிகள் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்[2:13].
Titus 2:14
Q? எதினால் இயேசு தம்மை நமக்காக ஒப்புக்கொடுத்தார் ?
A. அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் இயேசு தம்மை நமக்காக ஒப்புக்கொடுத்தார்[2:14].
Titus 2:15
Titus 3
Titus 3:1-2
Q? துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் விசுவாசிகள் எவ்வாறு செய்கைகள் நடபிக்கவேண்டும் ?
A. அவைகளுக்கு விசுவாசிகள் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும் [3:1].
Titus 3:3
Q? அவிசுவாசிகளை வழிதப்பிப் போகவும், அடிமைப்படுத்தவும் செய்வது எது ?
A. பலவித இச்சைகளும், இன்பங்களும் அவர்களை வழிதப்பிப் போகப்பண்ணுகிறது [3:3].
Titus 3:4-5
Q? எதினால் தேவன் நம்மை இரட்சித்தார் ?
A. அவருடைய இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்[3:5].
Q? எதினால் நாம் இரட்சிக்கப்பட்டோம்? நாம் செய்த நற்கிரியைகளினாலா? அல்லது தேவனுடைய இரக்கத்தினாலா ?
A. நாம் இரட்சிக்கப்பட்டது தேவனுடைய கிருபையினால் மட்டுமே [3:5]
Titus 3:6-7
Q? நாம் நீதிமான்களாக்கப்பட்டப்பின்பு, தேவன் நமக்கு செய்தது என்ன ?
A. தேவன் நம்மை அவருடைய சுதந்திரர்களாக்கினார் [3:7].
Titus 3:8
Q? விசுவாசிகள் எதிலே அவர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்கவேண்டும் ?
A. தேவனுடைய விசுவாசிகள், தேவன் நாம் செய்யும்படி கொடுக்கிற நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்கவேண்டும் [3:8].
Titus 3:9-11
Q? விசுவாசியானவன் எவைகளைத் தவிர்க்கவேண்டும் ?
A. பிரயோஜனமற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் [3:9].
Q? இரண்டொருதரம் புத்தி சொல்லியபின்பு யாரை விலக்கவேண்டும் ?
A. எவனாகிலும் விசுவாசிகளில் வேதப்புரட்டனாயிருந்தால், இரண்டொருதரம் புத்தி சொல்லியபின்பு அவனை விலக்கவேண்டும்[3:10].
Titus 3:12-13
Titus 3:14
Q? விசுவாசிகள் கனிகளைக் கொடுக்கும்படிக்கு அவர்கள் தங்களை எதிலே ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் ?
A. குறைவுகளை நீக்குவதற்கு எதுவாக நற்கிரியைகளைச் செய்யும்படி தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்[3:14].