தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

3 John

3 John 1

3 John 1:1-4

Q? நூலாசிரியராகிய யோவான் இந்த நிருபத்தில் தன்னை எந்தப் பட்டப்பெயரினால் அறிமுகம் செய்கிறான்?

A. யோவான் தன்னை மூப்பன் என்று அறிமுகம் செய்கிறான் [1:1].

Q? இந்த நிருபத்தைப் பெறுகிறவனாகிய காயுவுடன் யோவானிற்கு என்ன உறவு இருக்கிறது?

A. யோவான் காயுவை சத்தியத்தில் நேசிக்கிறான் [1:1].

Q? காயுவின் தொடர்பில் யோவான் எதற்காக ஜெபிக்கிறான்?

A. காயுவின் ஆத்துமா வாழ்கிறதுபோல, அவன் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி யோவான் ஜெபிக்கிறான் [1:2].

Q? யோவானின் மிகப்பெரிய சந்தோஷமாயிருக்கிறது என்ன?

A. யோவானுடைய பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதே அவனுக்கு மிகப்பெரிய சந்தோஷமாயிருக்கிறது [1:4].

3 John 1:5-8

Q? காயு யாரை வரவேற்று, பின்பு அவர்களது பயணத்தில் வழியனுப்பினான்?

A. அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போன சிலரை காயு வரவேற்று, பின்பு அவர்களது பயணத்தில் வழியனுப்பினான் [1:6-8].

Q? அத்தகைய சகோதரர்களை வரவேற்க வேண்டுமென்று யோவான் விசுவாசிகளுக்கு ஏன் கூறுகிறான்?

A. அவர்கள் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படிக்கு அவர்களை வரவேற்க வேண்டுமென்று யோவான் விசுவாசிகளுக்குக் கூறுகிறான் [1:8].

3 John 1:9-10

Q? தியோத்திரேப்பு எதை விரும்புகிறான்?

A. தியோத்திரேப்பு சபையில் முதன்மையாயிருக்க விரும்புகிறான் [1:9].

Q? தியோத்திரேப்பு யோவானிடம் கொண்டிருந்த சிந்தை எது?

A. தியோத்திரேப்பு யோவானை ஏற்றுக்கொள்வதில்லை [1:9].

Q? யோவான் காயு மற்றும் சபையிடத்திற்கு வந்தால், அவன் என்ன செய்வான்?

A. யோவான் வந்தால், அவன் தியோத்திரேப்புவின் பொல்லாத செயல்களை நினைவுகூருவான் [1:10].

Q? அவருடைய நாமத்திற்காகப் புறப்பட்டுப் போகிற சகோதரர்களிடம் தியோத்திரேப்பு என்ன செய்வான்?

A. தியோத்திரேப்பு சகோதரர்களை ஏற்றுக்கொள்வதில்லை [1:10].

Q? அவருடைய நாமத்திற்காகப் புறப்பட்டுப் போகிற சகோதரர்களை ஏற்றுக்கொள்வோரிடம் தியோத்திரேப்பு என்ன செய்கிறான்?

A. தியோத்திரேப்பு சகோதரர்களை ஏற்றுக்கொள்வோரை தடைசெய்து, அவர்களை சபைக்குப் புறம்பே தள்ளுகிறான் [1:10].

3 John 1:11-12

Q? யோவான் காயுவிடம் எதைப் பின்பற்றச் சொல்லுகிறான்?

A. யோவான் காயுவிடம் நன்மையைப் பின்பற்றச் சொல்லுகிறான் [1:11].

3 John 1:13-15

Q? யோவான் எதிர்காலத்தில் என்ன செய்ய நம்பிக்கொண்டிருக்கிறான்?

A. யோவான் காயுவிடம் வரவும், அவனிடம் முகமுகமாய்ப் பேசவும் நம்பிக்கொண்டிருக்கிறான் [1:14].