1 Timothy
1 Timothy 1
1 Timothy 1:1-2
Q? பவுல் எப்படி இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக உருவாக்கப்பட்டார் ?
A. தேவனுடைய கட்டளையின் மூலமாக, பவுல் அப்போஸ்தலனாக
Q? பவுலுக்கும், மற்றும் தீமோத்தேயுவிற்கும், இடையே உள்ள உறவு என்ன ?
A. தீமோத்தேயு பவுலுக்கு, விசுவாசத்தில் உத்தம குமாரனாய் இருந்தான் [1:2]
1 Timothy 1:3-4
Q? தீமோத்தேயு எங்கே தங்கியிருக்க வேண்டியதாய் இருந்தது ?
A. தீமோத்தேயு எபேசுவிலே தங்கியிருக்க வேண்டியதாய் இருந்தது [1:3]
Q? மக்கள் செய்யக் கூடாதவை என்று தீமோத்தேயு எதைக் கட்டளையிட்டார் ?
A. வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்க வேண்டாம் என்று, தீமோத்தேயு கட்டளையிட்டார் [1:3]
1 Timothy 1:5-8
Q? பவுல் தன்னுடைய கட்டளை மற்றும், உபதேசத்தின் இலக்காக எதைக் குறிப்பிடுகிறார் ?
A. சுத்தமான இருதயத்திலும்; நல்மனசாட்சியிலும், மாயமற்ற விசுவாசத்திலும், பிறக்கும் அன்பையே தனது குறிக்கோளாக பவுல் கூறுகின்றார் [1:5]
1 Timothy 1:9-11
Q? யாருக்காக நியாயப்பிரமாணம் உருவாக்கப்பட்டது?
A. நியாயப்பிரமாணமானது அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும்,பாவிகளுக்கும்,மற்றும் பக்தி இல்லாதவர்களுக்கும்,உருவாக்கப்பட்டது.[1;9]
Q? அந்த மக்கள் செய்யும் பாவத்தின் நான்கு உதாரணங்கள் யாவை ?
A. கொலைபாதகம்,காமவிகாரம்,கடத்தல்,மற்றும் பொய்சொல்லுதல்,ஆகியவையே அந்த மக்கள் செய்யும்,பாவத்தின் நான்கு உதாரணம் ஆகும் [1:9,10]
1 Timothy 1:12-14
Q? பவுல் முன்னே செய்த பாவம் என்ன ?
A. பவுல் முன்னே தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும்,கொடுமை செய்கிறவனுமாய் இருந்தான். [1:13]
Q? பவுலின் இடத்தில் எது பரிபூரணமாய் பெருகினதின் விளைவாக ,இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக பவுல் மாறினான் ?
A. நம்முடைய கர்த்தரின் கிருபை பரிபூரணமாய் பவுலினிடத்தில் பெருகினதினால் [1:14]
1 Timothy 1:15-17
Q? யாரை இரட்சிக்க இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் ?
A. பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் [1:15]
Q? ஏன் பவுல் தன்னை தேவனின் இரக்கத்திற்கு மாதிரியாக எடுத்துரைக்கிறார் ?
A. பவுல் தன்னை மாதிரியாக சொல்வதற்கு காரணம் என்னவெனில் அவர் பிரதான பாவியாக இருந்த போதிலும் கர்த்தரின் இரக்கத்தை முதலாவது பெற்றுக்கொண்டார் [1:15-16]
1 Timothy 1:18-20
Q? தீமோத்தேயுவைக் குறித்து சொல்லப்பட்ட எந்தக் காரியத்தை,பவுல் ஏற்றுக்கொண்டார் ?
A. விசுவாசமும்,நல்மனசாட்சியையும் கொண்டு தீமோத்தேயு நல்லப்போராட்டம், பண்ணினதைக் குறித்து,உண்டான தீர்க்கதரிசனங்களையே பவுல் ஏற்றுக்கொண்டார். [1:18-19]
Q?விசுவாசத்தையும்,நல்மனசாட்சியையும், தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தின மனிதர்களை பவுல் என்ன செய்தான் ?
A. அவர்களை தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களை சாத்தானிடத்தில் பவுல் ஒப்புகொடுத்தான். [1:20]
1 Timothy 2
1 Timothy 2:1-4
Q? யாருக்காக ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும் என்று சொல்லி பவுல் கேட்டுக்கொண்டார் ?
A. எல்லா மனுஷருக்காகவும்,இராஜாக்களுக்காகவும் மற்றும் அதிகாரம் உள்ள யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் கேட்டுக்கொண்டார். [2:1-2]
Q? பவுல் எவ்வகையான வாழ்க்கையை கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு ஏதுவானது என்று விருப்பம் கொண்டார் ?
A. கிறிஸ்தவர்கள் எல்லா பக்தியோடும்,நல்லொழுக்கத்தோடும்,கலங்கம் இல்லாமல்,அமைதலுள்ள ஜீவனம் பண்ணுவதைக் குறித்து பவுல் விருப்பம் கொண்டார் [2:2]
Q? எல்லா மனிதரையும் குறித்து தேவனுடைய சித்தம் என்ன?
A.எல்லா மனிதரும்,இரட்சிக்கப்படவும்,சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.[2.4]
1 Timothy 2:5-7
Q? தேவனுக்கும், மனுஷருக்கும் இடையே கிறிஸ்துவின் நிலை என்னவாய் இருந்தது?
A.தேவனுக்கும், மனுஷருக்கும், இடையே கிறிஸ்து மத்தியஸ்தராய் இருந்தார் [2:5]
Q? எல்லாருக்காகவும் கிறிஸ்து என்ன செய்தார் ?
A. இயேசு கிறிஸ்து எல்லோரையும் மீட்கும் பொருளாக தம்மையே ஒப்புக்கொடுத்தார் [2:6]
Q? அப்போஸ்தலனாகிய பவுல் யாருக்கு போதகம் பண்ணினார் ?
A. அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்கு, போதகம் பண்ணினார் [2:7]
1 Timothy 2:8-10
Q? புருஷர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் ?
A. புருஷர்கள் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும்,ஜெபம் பண்ண வேண்டும் என்று பவுல் விரும்பினார் [2:8]
Q? ஸ்திரீகள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்பினார் ?
A. ஸ்திரீகள் ஒழுக்கமாக ஆடை அணிய வேண்டும்,மற்றும் தன்னடக்கத்தோடு, இருப்பதையே பவுல் விரும்புகின்றார் [2:9]
1 Timothy 2:11-12
Q? ஸ்திரீயானவள் செய்வதற்கு பவுல் அனுமதிக்காதவை எவை ?
A. உபதேசம் பண்ணவும்,புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும்,ஸ்திரீயானவளுக்கு பவுல் உத்தரவுக் கொடுக்கவில்லை [2:12]
1 Timothy 2:13-15
Q? பவுல் இதற்கு கொடுக்கிற காரணம் என்ன ?
A. பவுல் சொல்லுகிற காரணம் என்னவென்றால் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான்.மற்றும் ஆதாம் வஞ்சிக்கபடவில்லை என்பதே [2:14]
Q? ஸ்திரீகள் எதில் நிலைக்கொண்டிருக்க, வேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் ?
A. ஸ்திரீகள் விசுவாசத்திலும்,அன்பிலும்,தெளிந்த புத்தியோடு பரிசுத்தத்திலும்,நிலைகொண்டிருக்க வேண்டும் என்று பவுல் விருபுகின்றார் [2:15]
1 Timothy 3
1 Timothy 3:1-3
Q? கண்காணியனுடைய வேலை எவ்வகையான வேலையாய் இருக்கிறது ?
A. கண்காணியினுடைய வேலை நல்ல வேலையாய் இருக்கிறது [3:1]
Q? கண்காணி எப்படிபட்டவனாய் இருக்கவேண்டும்?
A. கண்காணி போதக சமர்த்தனுமாய் இருக்க வேண்டும் [3:2]
Q? கண்காணியானவன் மது பானத்தையும், பணத்தையும்,எவ்வாறு கையாள வேண்டும் ?
A. கண்காணியானவன் மதுபான பிரியனாய் இராமலும்,பணஆசை இல்லாதவனுமாய், இருக்க வேண்டும் [3:3]
1 Timothy 3:4-5
Q? கண்காணியின் பிள்ளைகள் எவ்வாறு கண்காணியை நடத்த வேண்டும் ?
A. கண்காணியின் பிள்ளைகள் கண்காணியை, கணப்படுத்தவும்,கீழ்ப்படியவும், வேண்டும்[3:4]
Q? ஏன் கண்காணியானவன், தன் சொந்த குடும்பத்தை நன்கு நடத்துவது முக்கியம் ?
A. கண்காணியானவன் தன் சொந்த குடும்பத்தை நன்கு நடுத்துவது முக்கியம் ஏனென்றால் தன் சொந்த குடும்பத்தை நடத்த அவன் அறியாதிருந்தால்,அதைப்போல தேவனுடைய சபையையும் நடத்த அறியாதிருப்பான் [3:5]
1 Timothy 3:6-7
Q? புதிதாய் இரட்சிக்கப்பட்டவன்,கண்காணியாவதன் மூலம் வரும் அபாயம் என்ன ?
A. அவன் இறுமாப்பு அடைந்து,ஆக்கினையில் விழுவதே அபாயம்.[3:6]
Q? கண்காணியின் புகழ் சபைக்கு வெளியில் இருப்பவர்களிடத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் ?
A. கண்காணியானவன் சபைக்குவெளியில் இருப்பவர்களிடத்தில், நற்புகழோடு இருக்க வேண்டும். [3:7]
1 Timothy 3:8-10
Q? உதவிகாரர்கள் ஊழியம் செய்வதற்கு முன்பாக, என்ன செய்யபட்டிருக்க வேண்டும் ?
A. ஊழியக்காரர்கள் ஊழியம் செய்வதற்கு முன்பதாக, அங்கிகரிக்கப் பட்டிருக்க வேண்டும் [3:10]
1 Timothy 3:11-13
Q? பயபக்தியுள்ள ஸ்திரீகளின் சில குணாதிசயங்கள் யாவை ?
A. பக்தியுள்ள ஸ்திரீகள் நல்லொழுக்கம் உள்ளவர்களும்,அவதூறு பண்ணாதவர்களும்,தெளிந்த புத்தியுள்ளவர்களும்,மற்றும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.[3:11]
1 Timothy 3:14-15
Q? எது தேவனுடைய வீடு ?
A. சபையே தேவனுடைய வீடு [3:15]
1 Timothy 3:16
Q? இயேசு கிறிஸ்து மாம்சத்திலே வெளிப்பட்டு,ஆவியிலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டு மற்றும் தேவதூதர்களால் காணப்பட்டப் பின்பு அவர் என்ன செய்தார் ?
A. இயேசு கிறிஸ்து புறஜாதிகளிடத்தில் பிரசிங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்,மற்றும் மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார் [3:16]
1 Timothy 4
1 Timothy 4:1-2
Q? ஆவியானவரின் பார்வையில் சில மக்கள், கடைசி நாட்களிலே என்ன செய்வார்கள் ?
A. சில மக்கள் விசுவாசத்தை, விட்டு விலகி வஞ்சிக்கிற ஆவிகளுக்குச் செவிகொடுப்பார்கள் [4:1]
1 Timothy 4:3-5
Q? அந்த மக்கள் எவ்வகையான பொய்யை, உபதேசிப்பார்கள் ?
Q? விவாகம்பண்ணவும்,மற்றும் சில போஜன பதார்த்தங்களையும்,விட்டு விலக வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள் [4:4]
Q? எதை நாம் உட்கொண்டாலும்,அதை பரிசுத்தமாக நாம் அதைபயன்படுத்த தக்கதாய், ஏற்றுக்கொள்வது எப்படி ?
A. எதை உட்கொண்டாலும், அவை தேவவசனத்தினாலும்,ஜெபத்தினாலும்,பரிசுத்தமாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளபடுகிறது [4:5]
1 Timothy 4:6-8
Q?திமோத்தேயு தன்னை எவ்விதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
A.தீமோத்தேயு, தன்னை தேவபக்திக்கு ஏதுவாக தயார் செய்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
Q?சரிர முயற்சியைவிட,தேவ பக்திக்கு ஏதுவான முயற்சி ஏன் அதிக பிரயோஜனம் உள்ளதாய் இருக்கிறது?
A.தேவ பக்திக்கு ஏதுவான முயற்சி இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின் வரும் ஜீவனுக்கும்,வாக்குதத்தம் உள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனம் உள்ளது. [4:8] Q?தீமோத்தேயு பெற்றுக் கொண்ட நல்ல உபதேசத்தின் மூலமாக எதைச் செய்ய வேண்டும் என்று பவுல் புத்தி சொல்லுகிறார் ?
A.தீமோத்தேயு பெற்றுக் கொண்ட காரியங்களை பறைசாட்டவும் மற்றவர்களுக்கு இந்த காரியத்தைக் குறித்து போதிக்கவும் பவுல் புத்தி சொல்கிறார்.[4:6:11]
1 Timothy 4:9-10
1 Timothy 4:11-13
Q?திமோத்தேயு பெற்றுக்கொண்ட நல்ல உபதேசத்தில் முலமாக எதைக் செய்ய வேண்டும் என்று பவுல் புத்தி சொல்கிறார்?
A.தீமோத்தேயு பெற்றுக் கொண்ட காரியங்களை பறைசாற்டவும், மற்றவர்களுக்கு இந்த காரியத்தை குறித்து போதிக்கவும், பவுல் புத்தி சொல்கிறார்.[4:6:11]
Q?தீமோத்தேயு எந்த வழிகளிலெல்லாம் விசுவாசிகளுக்கு மாதிரியாய் இருக்க வேண்டும்.?
A.வார்த்தையிலும்,நடக்கையிலும்,அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும்,கற்பிலும்,விசுவாசிகளுக்கு தீமோத்தேயு மாதிரியாய் இருந்தான்.
1 Timothy 4:14-16
Q?தீமோத்தேயுக்கு இருந்த ஆவியின் வரத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டான்?
A.மூப்பர்கள் தீமோத்தேயுவின் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனங்களினால் தீமோத்தேயு, வரத்தை பெற்றுக் கொண்டான்.[4:14]
Q?தீமோத்தேயு,உபதேசத்திலும் உண்மையுள்ள தன்னுடைய வாழ்க்கையிலும்,நிலைத்திருப்பதின் மூலம் யார் இரட்சிக்கப் படுவார்கள்?
A.தீமோத்தேயு தன்னையும், தன் உபதேசத்தை கேட்கிறவர்களையும், இரட்சித்துக்கொள்வார்.[4:16]
1 Timothy 5
1 Timothy 5:1-2
Q?சபையில் உள்ள முதிர் வயதுள்ளவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று தீமோத்தேயுவிற்கு பவுல் சொன்னார்?
A.முதிர் வயதுள்ளவர்களை தகப்பனைப் போல் நடத்த வேண்டும் என்று பவுல் சொன்னார்.[5:1]
1 Timothy 5:3-4
Q?விதவைகளுக்கு,பிள்ளைகளும், பேரன்,பேத்திகளும் என்னத்தை செய்ய வேண்டும்?
A.பிள்ளைகளும்,பேரன்,பேத்திகளும்,பெற்றோர், செய்த நன்மைகளுக்கு,பதில் நன்மைகளைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் [5:4]
1 Timothy 5:5-6
1 Timothy 5:7-8
Q? தன் சொந்த வீட்டாரை, விசாரியாமல் போகிறவன் எப்படி இருப்பான் ?
A. அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும்,அவிசுவாசியிலும்,கெட்டவனுமாய் இருப்பான் [5:8]
1 Timothy 5:9-10
Q? விதவைகள், எப்படி அறியப்பட வேண்டும் ?
A. விதவைகள், தங்கள் நற்கிரியைகளை வைத்து அறியப்பட வேண்டும் [5:10]
1 Timothy 5:11-13
Q? இளம் விதவை தன்னுடைய மீதம் உள்ள வாழ்நாட்களில் விதவையாகவே,இருப்பதற்கு தன்னை அர்ப்பணிப்பதினால் வரும் அபாயம் என்ன ?
A. இளம் விதவைகளாய், இருப்பதினால் வரும் அபாயம் என்னவெனில்,பின் நாட்களில் அவர்கள் விவாகம் பண்ண மனதாகி,முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டு விடுவார்கள் [5:11-12]
1 Timothy 5:14-16
Q? இளம் வயதுள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் ?
A. இளம் வயதுள்ள பெண்கள் விவாகம் பண்ணவும்,பிள்ளைகளை பெறவும்,வீட்டை நடத்தவும் வேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் [5:14]
1 Timothy 5:17-18
Q? நன்றாய் விசாரணை செய்கின்ற மூப்பர்களை எப்படி எண்ண வேண்டும் ?
A. நன்றாய் விசாரணை செய்கின்ற மூப்பர்களை இரட்டிப்பான கனத்திற்கு,பாத்திரராக என்னவேண்டும் [5:17]
1 Timothy 5:19-20
Q? மூப்பனானவனுக்கு, விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை பெற்றுக்கொள்வதற்கு முன்பு என்ன இருந்திருக்க வேண்டும் ?
A. மூப்பனானவனுக்கு, விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை பெற்றுக்கொள்வதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருக்க வேண்டும் 5:19]
1 Timothy 5:21-22
Q? எந்த வழிகளில் தீமோத்தேயு சட்டங்களை கடைப்பிடிப்பதில் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும் என்று பவுல் கட்டளையிடுகிறார் ?
A. தீமோத்தேயு,பட்சபாதம் இல்லாமல் சட்டங்களை கடை பிடிப்பதில், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று பவுல் கட்டளையிடுகிறார் [5:21]
1 Timothy 5:23-25
Q? சில மக்கள் தங்களுடைய, பாவங்களை எது வரைக்கும் அறியப்படாமல் இருக்கிறார்கள் ?
A. சில மக்கள் தங்களுடைய,பாவங்களை நியாயத்தீர்ப்பு வரையிலும், அறியப்படாமல் இருக்கிறார்கள் [5:24]
1 Timothy 6
1 Timothy 6:1-2
Q? அடிமைகள் தங்கள் எஜமானனை எப்படி எண்ணிக்கொள்ள வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார் ?
A. அடிமைகள் தங்கள் எஜமான்களை எல்லா கனத்திற்கும்,பாத்திராக எண்ணிக்கொள்ள வேண்டும் என்று பவுல் சொல்லுகின்றார் [6:1]
1 Timothy 6:3-5
Q? எவ்வகையான மனிதன் ஆரோக்கியமான வசனங்களையும்,தேவ பக்திக்கேற்ற உபதேசங்களையும் நிராகரிக்கிறான் ?
A. இருமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனுமாய் இருக்கிற மனுஷனே,ஆரோக்கியமான வசனங்களையும்,தேவபக்திக்கேற்ற,உபதேசங்களையும், நிராகரிக்கிறான் [6:3-4]
1 Timothy 6:6-8
Q? எது மிகுந்த ஆதாயம் என்று பவுல் சொல்லுகிறார் ?
A. போதும் என்கிற மனதுடன் கூடிய தேவ பக்தியே,மிகுந்த ஆதாயம் என்று பவுல் சொல்லுகிறார் [6:6]
Q? ஏன் நாம் உண்ணவும், உடுக்கவும்,போதும் என்றிருக்க வேண்டும் ?
A. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததில்லை,இதிலிருந்து ஒன்றும் கொண்டு போவதும் இல்லை,ஆகையால் நாம் போதும் என்றிருக்கக் கடவோம் [6:7-8]
1 Timothy 6:9-10
Q? ஐஸ்வரியவான்களாக,வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எதில் விழுகிறார்கள் ?
A. ஐஸ்வரியவான்களாக, வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சோதனையிலும்,கண்ணியிலும்,விழுகிறார்கள் [6:9]
Q? எது எல்லாத் தீமைக்கும், வேராயிருக்கிறது ?
A. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது [6:10]
Q?பணத்தை இச்சிக்கிற சிலருக்கு என்ன நடக்கிறது ?
A. சிலர் பணத்தை இச்சித்து,விசுவாசத்தை விட்டு வழுவித் திரிகிறார்கள் [6:10]
1 Timothy 6:11-12
Q? எப்படிப்பட்ட போராட்டத்தைப் போராட வேண்டும் என்று தீமோத்தேயுவிற்க்கு, பவுல் சொல்லுகிறார் ?
A. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட, வேண்டும் என்று பவுல் தீமோத்தேயுவிற்கு
1 Timothy 6:13-14
1 Timothy 6:15-16
Q?ஆசிர்வதிக்கப்பட்டவரும், வல்லமையும் எங்கே வாசமாய் இருக்கிறது ?
A.ஆசிர்வதிக்கப்பட்டவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறார்[6:16]
1 Timothy 6:17-19
Q? ஐஸ்வரியம் உள்ளவர்கள் நிலையற்ற ஐஸ்வரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல்,ஏன் தேவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் ?
A. ஐஸ்வரியம் உள்ளவர்கள் தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏனென்றால் சகலவித நன்மைகளையும்,நமக்கு சம்பூரணமாய் கொடுக்கிறார் [6:17]
Q? நற்கிரியைகளில் ஐஸ்வரியவான்களாய் இருக்கிறவர்கள், அவர்களுக்கு இன்று எதை செய்ய வேண்டும் ?
A. நற்கிரியைகளில் ஐஸ்வரிவான்களாய் இருக்கிறவர்கள், நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளவும்,தங்களுக்கு ஆதாரத்தை,பொக்கிஷமாக வைக்க வேண்டும் [
1 Timothy 6:20-21
Q? கடைசியாக ,தீமோத்தேயுவிற்கு ஒப்புவிக்கப்பட்டக் காரியத்தின் மூலம் எதை செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகின்றார் ?
A. தீமோத்தேயுவின் இடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை,அவன் காத்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.[6:20]