தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Peter

1 Peter 1

1 Peter 1:1-2

Q? பேதுரு யாருடைய அப்போஸ்தலனாயிருந்தான்?

A. பேதுரு இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருந்தான் [1:1].

Q? பேதுரு யாருக்கு எழுதினான்?

A. பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியா முழுவதிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருந்த தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களுக்கு பேதுரு எழுதினான் [1:1].

Q? அந்நியர்கள் எப்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆனார்கள்?

A. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியும், பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலும் அந்நியர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆனார்கள் [1:1-2].

1 Peter 1:3-5

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எதைப் பெற வேண்டுமென்று பேதுரு விரும்பினான்?

A. அவர்கள் கிருபை மற்றும் அதிகமான சமாதானத்தைப் பெற வேண்டுமென்று பேதுரு விரும்பினான் [1:3].

Q? யார் ஸ்தோத்தரிக்கப்பட வேண்டுமென்று பேதுரு விரும்பினான்?

A. அவர்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவன் மற்றும் பிதா ஸ்தோத்தரிக்கப்பட வேண்டுமென்று பேதுரு விரும்பினான் [1:3].

Q? தேவன் அவர்களுக்கு ஒரு புதிய பிறப்பை எப்படி வழங்கினார்?

A. தேவன் தமது மகா இரக்கத்தினால் அவர்களுக்கு ஒரு புதிய பிறப்பை வழங்கினார் [1:3].

Q? சுதந்தரம் ஏன் அழியாமலும், கறைபடாமலும், மங்காமலும் இருக்கும்?

A. ஏனெனில் சுதந்தரமானது அவர்களுக்காக பரலோகத்தில் ஆயத்தம்செய்து வைக்கப்பட்டிருக்கிறது [1:4].

Q? அவர்கள் எதன்மூலமாக தேவனுடைய வல்லமையில் காக்கப்பட்டார்கள்?

A. கடைசி காலங்களில் வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்காக அவர்கள் விசுவாசத்தின்மூலம் காக்கப்பட்டார்கள் [1:5].

1 Peter 1:6-7

Q? பல வித்தியாசமான சோதனைகளில் அவர்கள் ஏன் துக்கப்படவேண்டியது அவசியமாயிருந்தது?

A. அவர்களது விசுவாசம் சோதிக்கப்படுவதற்காகவும், இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவர்களது விசுவாசம் புகழ்ச்சி, மகிமை மற்றும் கனத்தில் முடிவுறுவதாகக் காணப்படும்படிக்கும் அது அவசியமாயிருந்தது [1:7].

Q? அழியக்கூடிய பொன்னைவிட எது மிகவும் விலையேறப்பெற்றதாய் இருந்தது?

A. விசுவாசம் பொன்னைவிட மிகவும் விலையேறப்பெற்றதாய் இருந்தது [1:7].

1 Peter 1:8-10

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் இயேசுவைப் பார்க்காதிருந்தபோதும், அவர்கள் என்ன செய்தார்கள்?

A. அவர்கள் அவரை நேசிக்கவும், அவரில் விசுவாசிக்கவும், மகிமையினால் நிறைந்த சொல்லிமுடியாத சந்தோஷத்தினால் களிகூரவும் செய்தார்கள் [1:8].

Q? அவர்களது விசுவாசத்தின் விளைவாக அவரில் விசுவாசித்தவர்கள் என்ன பெற்றார்கள்?

A. அவர்கள் தங்களது ஆத்தும இரட்சிப்பைப் பெற்றார்கள் [1:9].

Q? தீர்க்கதரிசிகள் எதைக் குறித்து கவனமாக ஆராய்ந்து அறிய முயன்றார்கள்?

A. தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களுக்கு உண்டாகும் கிருபையைக் குறித்தும், அவர்கள் பெறவிருக்கும் இரட்சிப்பைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் ஆராய்ந்தார்கள் [1:10].

1 Peter 1:11-12

Q? கிறிஸ்துவின் ஆவியானவர் தீர்க்கதரிசிகளிடம் எதைக் குறித்து முன்பதாகவே சொல்லியிருந்தார்?

A. கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் அவரைப் பின்தொடரும் மகிமைகள் குறித்து அவர் அவர்களிடம் சொல்லியிருந்தார் [1:11].

Q? தீர்க்கதரிசிகள் தங்கள் ஆராய்ச்சிகள் மற்றும் விசாரணைகளினால் யாரை சேவித்தார்கள்?

A. அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களை சேவித்தார்கள் [1:12].

Q?தீர்க்கதரிசிகளின் ஆராய்ச்சிகள் மற்றும் விசாரணைகளின் முடிவுகள் வெளிப்படும்படி யார் ஆசைப்பட்டார்கள்?

A. தேவதூதர்களும் முடிவுகள் வெளிப்படும்படி ஆசைப்பட்டார்கள் [1:12].

1 Peter 1:13-14

Q? கீழ்ப்படிகிற பிள்ளைகளாக தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்கள் என்ன செய்ய வேண்டுமென்று பேதுரு கட்டளையிட்டான்?

A. அவர்கள் தங்கள் மனதின் அரைகளைக் கட்டிக்கொள்ளவும், தங்கள் சிந்தனையில் தெளிவாக இருக்கவும், அவர்களுக்கு வழங்கப்படும் கிருபையில் பூரண நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்கவும், அவர்களது பழைய ஆசைகளுக்கு இணங்காதவர்களாய் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டான் [1:13-14].

1 Peter 1:15-17

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் ஏன் பரிசுத்தமானவர்களாய் இருக்க வேண்டுமென்று பேதுரு சொல்லுகிறான்?

A. ஏனெனில் அவர்களை அழைத்தவர் பரிசுத்தமானவராய் இருக்கிறார் [1:15-16].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நேரத்தை ஏன் பயபக்தியுடன் செலவழிக்க வேண்டும்?

A. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுடைய கிரியையின்படி பட்சபாதமில்லாமல் நியாயம் தீர்க்கிறவரை அவர்கள் 'பிதா' என்று அழைத்தார்கள் [1:17]

1 Peter 1:18-19

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் எதினால் மீட்கப்பட்டார்கள்?

A. அவர்கள் வெள்ளியினாலோ பொன்னினாலோ மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டார்கள் [1:18-19].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் யாரிடமிருந்து மதியீனமான நடத்தையை கற்றுக் கொண்டார்கள்?

A. அவர்கள் தங்கள் பிதாக்களிடமிருந்து மதியீனமான நடத்தையை கற்றுக் கொண்டார்கள் [1:19].

1 Peter 1:20-21

Q? கிறிஸ்து எப்பொழுது தெரிந்துகொள்ளப்பட்டார்? அவர் எப்பொழுது வெளிப்பட்டார்?

A. உலகம் தோன்றுவதற்குமுன்னே அவர் தெரிந்துகொள்ளப்பட்டார்; இந்தக் கடைசிக் காலங்களில் அவர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களுக்கு வெளிப்பட்டார் [1:20].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் எப்படி தேவனில் விசுவாசித்து, தேவனிடத்தில் விசுவாசமும் நம்பிக்கையும் உடையவர்களாய் இருந்தார்கள்?

A. எவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினாரோ மற்றும் எவருக்கு தேவன் மகிமை அளித்தாரோ, அந்த கிறிஸ்துவின்மூலம் அவர்கள் விசுவாசித்தார்கள் [1:20-21].

1 Peter 1:22-23

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் தங்கள் ஆத்துமாக்களை எப்படி சுத்தமாக்கிக் கொண்டார்கள்?

A. சகோதர சிநேகத்திற்காக சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதினால் அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டார்கள் [1:22].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் எப்படி மறுபடியும் பிறந்தார்கள்?

A. அழிவுள்ள விதையினால் அல்ல, உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமாகிய தேவனுடைய வார்த்தையாகிய அழிவில்லாத விதையினால் அவர்கள் மறுபடியும் பிறந்தார்கள் [1:23].

1 Peter 1:24-25

Q? எல்லா மாம்சமும் எதைப்போல இருக்கிறது? அதன் மகிமை எதைப்போல இருக்கிறது?

A. மாம்சம் புல்லைப்போல இருக்கிறது; அதன் மகிமை புல்லின் பூவைப்போல இருக்கிறது [1:24].

Q? தேவனுடைய வார்த்தைக்கு என்ன நிகழ்கிறது?

A. தேவனுடைய வார்த்தை என்றும் நிலைத்திருக்கிறது [1:25].

1 Peter 2

1 Peter 2:1-3

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் எவற்றை அப்புறப்படுத்தும்படி சொல்லப்பட்டார்கள்?

A. சகலவித பொல்லாத வஞ்சகத்தையும், மாயமாலத்தையும், பொறாமையையும், புறங்கூறுதலையும் அப்புறப்படுத்தும்படி அவர்கள் சொல்லப்பட்டார்கள் [2:1].

Q? அந்நியர்கள் ஏன் சுத்தமான ஆவிக்குரிய பாலிற்காக ஏங்க வேண்டும்?

A. அவர்கள் இரட்சிப்பில் வளரும்படிக்கு சுத்தமான ஆவிக்குரிய பாலிற்காக ஏங்க வேண்டும் [2:2].

1 Peter 2:4-5

Q? மக்களால் தள்ளப்பட்டதும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதுமான உயிருள்ள கல்லாயிருந்தது யார்?

A. இயேசு கிறிஸ்து உயிருள்ள கல்லாயிருந்தார் [2:4-5].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களும் ஏன் உயிருள்ள கற்களைப்போல இருந்தார்கள்?

A. அவமானப்படுவதற்கு அவசியமில்லாத பரிசுத்த ஆசாரியக்கூட்டமாயிருந்து, கனத்துடன், ஒரு ஆவிக்குரிய வீடாகும்படிக்கு அவர்கள் உயிருள்ள கற்களைப்போல இருந்தார்கள் [2:5-7].

1 Peter 2:6

1 Peter 2:7-8

Q? கட்டுபவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் ஏன் இடறினார்கள்?

A. கட்டுபவர்கள் அப்படி செய்வதற்கென்று நியமிக்கப்பட்டிருந்தபடியால், அவர்கள் இடறினார்கள் [2:7-8].

1 Peter 2:9-10

Q? அந்நியர்கள் ஏன் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள், இராஜரீக ஆசாரியக்கூட்டம், பரிசுத்த தேசம் மற்றும் தேவனுக்கு சொந்தமான மக்களாயிருந்தார்கள்?

A. தேவனுடைய அற்புத செயல்களை அறிவிக்கும்படிக்கு அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் [2:9-10].

1 Peter 2:11-12

Q? பாவ இச்சைகளிலிருந்து விலகும்படி பேதுரு பிரியமானவர்களை ஏன் அழைத்தான்?

A. அவர்கள் தீமை செய்திருக்கிறார்கள் என்று பேசக் கூடியவர்கள் அவர்கள் நன்னடத்தையைக் கண்டு தேவனைத் துதிக்கும்படி அவன் அவர்களை அவைகளைவிட்டு விலகும்படி அழைத்தான் [2:11-12].

1 Peter 2:13-17

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் ஏன் ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும்?

A. தேவன் அவர்களது கீழ்ப்படிதலைப் பயன்படுத்தி மதியீனமான மக்களுடைய அறியாத பேச்சை அடக்க விரும்பினபடியால், அவர்கள் ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும் [2:13-15].

Q? பொல்லாங்கு செய்வதற்கு தங்கள் விடுதலையை ஒரு காரணமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் என்ன செய்ய வேண்டும்?

A. அவர்கள் தேவனுடைய ஊழியர்களாய் இருக்கும்படிக்கு தங்கள் விடுதலையைப் பயன்படுத்த வேண்டும் [2:16].

1 Peter 2:18-20

Q? வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களுக்கு, அதாவது முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் ஏன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?

A. நன்மை செய்து பின்பு பாடுபட்டால், அதற்காக தண்டிக்கப்பட்டால் அது தேவனுக்குப் புகழ்ச்சியாக இருப்பதனால், வேலைக்காரர்கள் முரட்டுக்குணமுள்ள எஜமான்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் [2:18-20].

1 Peter 2:21-23

Q? வேலைக்காரர்கள் நன்மை செய்வதற்காக ஏன் பாடனுபவிக்க அழைக்கப்பட்டிருந்தார்கள்?

A. ஏனென்றால் கிறிஸ்து அவர்களுக்காக பாடுபட்டு, அவர்களுக்காக ஒரு மாதிரியை வைத்து, தம்மை நியாயமாய் தீர்ப்புசெய்கிறவருக்கு தம்மை ஒப்படைத்தார் [2:21-23].

1 Peter 2:24-25

Q? ஏன் கிறிஸ்து சிலுவையின்மேல் தம் சரீரத்தில் பேதுரு, தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் மற்றும் வேலைக்காரர்களின் பாவங்களை சுமந்தார்?

A. அவர்கள் அவருடைய காயங்களினால் குணமானபடியினால், அவர்களுக்கு இனி பாவத்தில் கொஞ்சமும் பங்கு இராமற்போகவும், அவர்கள் நீதிக்காக வாழும்படிக்கும், அவர் அவர்களின் பாவங்களைச் சுமந்தார் [2:24].

Q? அவர்கள் யாவரும் தொலைந்துபோன ஆடுகளைப்போல அலைந்து திரிந்தபின்பு, அவர்கள் யாரிடம் திரும்பி வந்தார்கள்?

A. அவர்கள் யாவரும் தங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் காவலாளருமாயிருப்பவரிடத்தில் வந்தார்கள் [2:25].

1 Peter 3

1 Peter 3:1-2

Q? மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு ஏன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்?

A. கீழ்ப்படியாதவர்களாகிய அந்த கணவர்களை, போதனையின்றி ஆதாயப்படுத்துவதற்கு மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் [3:1].

1 Peter 3:3-4

Q? மனைவிகள் தங்கள் கணவர்களை எப்படி ஆதாயப்படுத்த வேண்டும்?

A. மனைவிகள் தங்கள் வெளிப்புற அலங்காரத்தினால் அல்ல, இருதயத்தின் உட்புற அழகினால் அவர்களை ஆதாயப்படுத்த வேண்டும் [3:3-4].

1 Peter 3:5-6

Q? தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்த மனைவி என்று எந்த பரிசுத்தப் பெண்ணை பேதுரு ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறான்?

A. பேதுரு சாராளை ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறான் [3:5-6].

1 Peter 3:7

Q? கணவர்கள் தங்கள் மனைவிகளுடன் ஏன் விவேகமாய் வாழ வேண்டும்?

A. கணவர்கள் தங்கள் ஜெபங்கள் தடைபடாமலிருக்க, தங்கள் மனைவிகளுடன் விவேகமாய் வாழ வேண்டும் [3:7].

1 Peter 3:8-9

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் யாவரும் ஒரே மனமுடையவர்களாகவும், தொடர்ந்து ஆசீர்வதிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென்று பேதுரு ஏன் அறிவுறுத்தினான்?

A. ஏனென்றால் அவர்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, அவர்கள் யாவரும் அப்படி செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள் [3:8-9].

1 Peter 3:10-12

Q? வாழ்க்கையை விரும்புகிற ஒருவன் ஏன் தன் நாவை பொல்லாப்பிற்குத் தடுக்கவும், தீமையிலிருந்து விலகவும் மற்றும் நன்மை செய்யவும் வேண்டும்?

A. ஏனென்றால் கர்த்தருடைய கண்கள் நீதிமானைப் பார்க்கிறது [3:10-12].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் பொல்லாங்கு செய்வோர் பயமுறுத்தும்போது பயப்படுவதற்கும், கலங்குவதற்கும் பதிலாக என்ன செய்ய வேண்டும்?

A. அவர்கள் கர்த்தராகிய கிறிஸ்துவை தங்கள் இருதயங்களில் விலையேறப்பெற்றவராக வேறுபிரித்து வைக்க வேண்டும் [3:12-15].

1 Peter 3:13-14

Q? ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார்?

A. நீதியினிமித்தம் பாடுபட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் [3:14].

1 Peter 3:15-17

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் தேவனிலுள்ள தங்கள் நம்பிக்கை குறித்து வினவும் யாவருக்கும் எப்பொழுதும் எப்படி பதிலளிக்க வேண்டும்?

A. அவர்கள் எப்பொழுதும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதிலளிக்க வேண்டும் [3:15-16].

1 Peter 3:18-20

Q? கிறிஸ்து பாவங்களுக்காக ஏன் ஒருமுறை பாடுபட்டார்?

A. பேதுருவையும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களையும் தேவனிடத்தில் கொண்டுவர கிறிஸ்து ஒருமுறை பாடுபட்டார் [3:18].

Q? கிறிஸ்து எந்த ஆவிகளுக்கு ஆவியிலே பிரசங்கித்தாரோ, அவை இப்பொழுது ஏன் காவலிலில் இருக்கின்றன?

A. நோவாவின் நாட்களில் தேவனுடைய பொறுமை காத்துக் கொண்டிருந்தபோது, இப்பொழுது காவலில் இருக்கும் ஆவிகள் கீழ்ப்படியாமல் போனது [3:19-20].

Q? தேவன் ஒருசில மக்களை தண்ணீரினால் காத்தது எதை அடையாளப்படுத்துகிறது?

A. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்மூலம் நல்ல மனசாட்சியை வேண்டுகிற தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களைக் காத்த ஞானஸ்நானத்தை அது அடையாளப்படுத்துகிறது [3:20-21].

1 Peter 3:21-22

Q? தேவன் ஒருசில மக்களை தண்ணீரினால் காத்தது எதை அடையாளப்படுத்துகிறது?

A. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்மூலம் நல்ல மனசாட்சியை வேண்டுகிற தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களைக் காத்த ஞானஸ்நானத்தை அது அடையாளப்படுத்துகிறது [3:20-21].

Q? இயேசு பரலோகத்தில் தேவனுடைய வலது பக்கத்திலிருக்க, தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் என்ன செய்ய வேண்டும்?

A. அவர்கள் யாவரும் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் [3:22].

1 Peter 4

1 Peter 4:1-2

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் தங்களுக்கு எதை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளும்படி பேதுரு கட்டளையிட்டான்?

A. கிறிஸ்து மாம்சத்தில் பாடுபட்டபோது கொண்டிருந்த அதே சிந்தையை அவர்கள் தங்களுக்கு ஆயுதமாகத் திரித்துக்கொள்ளும்படி பேதுரு கட்டளையிட்டான் [4:1].

1 Peter 4:3-6

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களைப் பற்றி யூதரல்லாதவர்கள் ஏன் தீமையாய் பேசினார்கள்?

A. தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் யூதரல்லாதவர்களைப்போல காமவிகாரம், துர்இச்சை, குடிவெறி, மது அருந்தும் விருந்துகள், களியாட்டங்கள் மற்றும் அருவருப்பான சிலை வழிபாடுகளில் பங்குபெறாமலிருந்ததால் அவர்களைப் பற்றி தீமையாய் பேசினார்கள் [4:3-4].

Q? தேவன் யாரை நியாயம்தீர்க்க ஆயத்தமாயிருக்கிறார்?

A. தேவன் உயிரோடிருப்பவர்களையும், மரித்துப் போனவர்களையும் நியாயம்தீர்க்க ஆயத்தமாயிருக்கிறார் [4:5].

1 Peter 4:7-9

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் ஏன் தெளிவான மனமுள்ளவர்களாகவும், ஒருவருக்கொருவர் அக்கறையுள்ள அன்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்?

A. எல்லாவற்றிற்கும் உரிய முடிவு வருகிறபடியினாலும், அவர்களுடைய ஜெபங்களினிமித்தமும், அவர்கள் அவைகளை செய்ய வேண்டும் [4:7].

1 Peter 4:10-11

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களில் ஒவ்வொருவரும் ஏன் தாங்கள் பெற்ற வரங்களை ஒருவருக்கொருவர் சேவைசெய்ய பயன்படுத்த வேண்டும்?

A. இயேசு கிறிஸ்துவின்மூலம் தேவன் மகிமைப்படும்படிக்கு அவர்கள் தங்கள் வரங்களைப் பயன்படுத்த வேண்டும் [4:10-11].

1 Peter 4:12-14

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் கிறிஸ்துவின் பாடுகளை அனுபவித்தார்களானால் அல்லது கிறிஸ்துவின் நாமத்திற்காக நிந்திக்கப்பட்டார்களானால், ஏன் களிகூரும்படி சொல்லப்பட்டார்கள்?

A. அவர்கள் நிந்திக்கப்பட்டர்களானால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் [4:12-14].

1 Peter 4:15-16

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் ஒரு கொலைகாரனாகவோ, ஒரு திருடனாகவோ, ஒரு தீமை செய்கிறவனாகவோ அல்லது பிறர்விஷயத்தில் தலையிடுகிறவனாகவோ இருந்து ஏன் பாடனுபவிக்கக் கூடாது?

A. ஏனென்றால் நியாயத்தீர்ப்பிற்கான காலம் தேவனுடைய வீட்டாரிலிருந்து துவங்குவதாயிருந்தது [4:15-17].

1 Peter 4:17-19

Q? பக்தியற்ற மனிதனும், பாவியும் ஏன் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

A. ஏனென்றால் நீதிமான்கூட கஷ்டங்களின் வழியிலே இரட்சிக்கப்படுகிறான் [4:17-18].

Q? தேவனுடைய சித்தத்தின்படி பாடுபட்டவர்கள் எப்படி செயல்பட வேண்டும்?

A. அவர்கள் நன்மை செய்தபோது, தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் [4:19].

1 Peter 5

1 Peter 5:1-4

Q? பேதுரு யாராக இருந்தான்?

A. பேதுரு ஒரு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்கு சாட்சியும், வெளிப்படவிருக்கும் மகிமைக்குப் பங்காளியுமாய் இருந்தான் [5:1].

Q? பேதுரு தன் உடன்மூப்பர்கள் என்ன செய்ய வேண்டுமென்று புத்தி கூறினான்?

A. தேவனுடைய மந்தையை மேய்த்து, அவர்களைக் காக்கும்படி அவன் அவர்களுக்கு புத்தி கூறினான் [5:1-2].

1 Peter 5:5-7

Q? வாலிபர்கள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

A. அவர்கள் வயதானவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் [5:5].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் ஏன் தாழ்மையைத் தரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சேவை செய்ய வேண்டும்?

A. தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறவராய் இருக்கிறபடியால், ஏற்றகாலத்தில் தேவன் அவர்களை உயர்த்தும்படிக்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும் [5:5-7].

1 Peter 5:8-9

Q? பிசாசு எதைப்போன்று இருக்கிறான்?

A. அவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போன்று எவனை விழுங்கலாமென்று வகைதேடி சுற்றித் திரிகிறவனாய் இருக்கிறான்.

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார்கள்?

A. அவர்கள் தங்கள் கவலையை தேவன்மேல் வைத்துவிடவும், தெளிவாக இருக்கவும், விழித்திருக்கவும், பிசாசுக்கு எதிர்த்து நிற்கவும், தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும் வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார்கள் [5:7-9].

1 Peter 5:10-11

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்கள் தங்களுடைய சகோதரர்கள் அனுபவித்த அதேப் பாடுகளை கொஞ்ச காலத்திற்கு அனுபவித்த பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும்?

A. தேவன் அவர்களை பூரணப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்துவார் [5:9-10].

1 Peter 5:12-14

Q? பேதுரு சில்வானுவை யாரென்று கருதினான்?

A. பேதுரு சில்வானுவை ஒரு உண்மையுள்ள சகோதரனென்று கருதினான் [5:12].

Q? பேதுரு தான் எழுதினது குறித்து என்ன சொன்னான்?

A. பேதுரு தான் எழுதினது தேவனுடைய மெய்யான கிருபையாய் இருந்தது என்று சொன்னான் [5:12].

Q? தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அந்நியர்களை யார் வாழ்த்தினார்கள்? அவர்கள் ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டியவர்களாய் இருந்தார்கள்?

A. பாபிலோனிலிருந்த சபையும், பேதுருவின் மகனாகிய மாற்கும் அவர்களை வாழ்த்தினார்கள்; அவர்கள் ஒருவரையொருவர் அன்பின் முத்தத்துடன் வாழ்த்த வேண்டியவர்களாய் இருந்தார்கள் [5:13-14].