Ephesians
Ephesians 1
Ephesians 1:1-2
Q? தாம் நிருபம் எழுதுகிற ஜனங்களைக் குறித்து பவுல் எவ்வாறு விளக்குகிறார் ?
A. கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்கள் என்று அந்த ஜனங்களைக் குறித்துப் பவுல் விளக்குகிறார் [1:1].
Ephesians 1:3-4
Q? பிதாவாகிய தேவன் எதினால் விசுவாசிகளை ஆசீர்வதித்திருக்கிறார் ?
A. உன்னதத்தின் ஆவிக்குரிய சகல அசீர்வாதத்தினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில், பிதா விசுவாசிகளை ஆசீர்வதித்திருப்பதாகப் பவுல் கூறுகிறான் [1:3].
Q? விசுவாசிகள் கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர்களாகும்படிக்கு எப்போது தேவன் அவர்களைத் தெரிந்துகொண்டார் ?
A. உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர் விசுவாசிகளைத் தெரிந்துகொண்டார்[1:4].
Q? தேவனாகிய கர்த்தர் எதினால் விசுவாசிகளைத் தெரிந்துகொண்டார் ?
A. அவருக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கே தேவனாகிய கர்த்தர் விசுவாசிகளைத் தெரிந்துகொண்டார் [1:4].
Ephesians 1:5-6
Q? ஏன் தேவன் விசுவாசிகளை அவருக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்தார் ?
A. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக அவருடைய தயவுள்ள சித்தத்தின்படி இயேசு கிறிஸ்து மூலமாய் விசுவாசிகளை அவருக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்தார்[1:5-6].
Ephesians 1:7-8
Q? தேவனுடைய ஒரேபேறானக் குமாரனாகிய கிறிஸ்துவின் இரத்தத்தினாலே விசுவாசிகள் பெற்றுக்கொண்டது என்ன ?
A. தேவனுடைய ஒரேபேறானக் குமாரனாகிய கிறிஸ்துவின் இரத்தத்தினாலே விசுவாசிகள் பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றார்கள் [1:7].
Ephesians 1:9-10
Q? காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி தேவன் செய்யப்போவது என்ன ?
A. காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி தேவன் பரலோகத்திலிருப்பவைகளையும் பூலோகத்திலிருப்பவைகளையும் சகலமும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படுத்துவார்[1:10].
Ephesians 1:11-12
Ephesians 1:13-14
Q? விசுவாசிகள் சத்திய வசனத்தைக் கேட்டபிறகு அவர்கள் முத்திரையாகப் பெறுவது என்ன ?
A. பரிசுத்த ஆவியினால் அவர்கள் முத்திரையிடப்படுவார்கள்[1:13].
Q? ஆவியினால் உண்டாகும் நிச்சயம் என்ன ?
A. ஆவியானவர் நம்முடையவர் என்பதற்கு அவர் சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார் [1:14].
Ephesians 1:15-16
Ephesians 1:17-18
Q? எபேசியர்கள் எதை அறிந்து புரிந்துகொள்ளவேண்டுமென்று பவுல் ஜெபித்தான் ?
A. அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும், அவருடைய வல்லமையின் மகா மேன்மை இன்னதென்றும் எபேசியர்கள் அறியும்படிக்கு அவர்களுக்காக பவுல் ஜெபம்பண்ணினான் [1:18-19].
Ephesians 1:19-21
Q? எந்த அதே வல்லமை இன்றும் விசுவாசிகளில் கிரியை செய்துவருகிறது ?
A. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்த அதே வல்லமை இன்றும் விசுவாசிகளில் கிரியை செய்துவருகிறது [1:20].
Ephesians 1:22-23
Q? தேவன் எவற்றை கிறிஸ்துவின் பாதங்களுக்குக் கீழ்படுத்தினார் ?
A. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார் [1:22].
Q? சபைகளில் கிறிஸ்துவின் அதிகாரமும் அவருடைய மேன்மையும்என்ன ?
A. கிறிஸ்துவே சபையின் எல்லாவற்றிற்கும் தலையாயிருக்கிறார் [1:22].
Q? எது சபை ?
A. கிறிஸ்துவின் சரீரமே சபையாயிருக்கிறது [1:23].
Ephesians 2
Ephesians 2:1-3
Q? அவிசுவாசிகளின் ஆவிக்குரிய நிலை என்ன ?
A. அவர்கள் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருக்கிரார்கள் [2:1].
Q? கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்வது யார் ?
A. ஆகாயத்து அந்தகாரப் பிரபுவே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்கிறான் [2:2].
Q? சுவாபத்தினாலே எவர்கள் அவிசுவாசிகள் ?
A. எல்லா அவிசுவாசிகளும் கோபாக்கினையின் பிள்ளைகள் [2:3].
Ephesians 2:4-7
Q? அவிசுவாசிகளில் சிலரை ஏன் தேவன்; கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார் ?
A. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த அன்பினாலே அவிசுவாசிகளில் சிலரை தேவன் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார் [2:4-5].
Q? எதினால் விசுவாசிகள் இரட்சிக்கபட்டார்கள் ?
A. தேவனுடைய கிருபையினாலே விசுவாசிகள் இரட்சிக்கபட்டார்கள்[2:5].
Q? விசுவாசிகள் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் ?
A. உன்னதங்களிலே கிறிஸ்துவுடனேகூட உட்கார்ந்திருக்கிறார்கள் [2:6].
Q? தேவன் விசுவாசிகளை எதினால் எழுப்பி, அவர்களை இரட்சித்தார் ?
A. தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக தேவன் விசுவாசிகளை எழுப்பி, அவர்களை இரட்சித்தார்[2:7].
Ephesians 2:8-10
Q? எதினால் விசுவாசிகளில் ஒருவனும் மேன்மைபாராட்டக் கூடாது ? ஏன்?
A. கிருபையினாலே இரட்சிக்கபட்டீர்கள், மற்றும் அது தேவனுடைய ஈவு எனவே விசுவாசிகளில் ஒருவனும் மேன்மைபாராட்டக் கூடாது[2:8-9].
Q? விசுவாசிகள் ஏன் கிறிஸ்து இயேசுவில்; தேவனால் சிருஷ்டிக்கப்பட்டனர் ?
A. நற்கிரியைகள் செய்யும்படிக்கும், அவைகளில் நடக்கும்படிக்கும் விசுவாசிகள் கிறிஸ்து இயேசுவில்; தேவனால் சிருஷ்டிக்கப்பட்டனர் [2:10].
Ephesians 2:11-12
Q? கிறிஸ்துவை சேராதவர்கள் மற்றும் புறம்பானவர்களின் நிலைமை என்ன ?
A. அவர்கள் கிறிஸ்துவை சேராமலும், இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பானவர்களும், வாக்குத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், உலகில் தேவனற்றவர்களுமாயிருக்கிறார்கள் [2:12].
Ephesians 2:13-16
Q? புறம்பான அவிசுவாசிகளை தேவனுக்கு சமீபமாய் கொண்டுவந்தது எது ?
A. கிறிஸ்துவின் இரத்தம் புறம்பான அவிசுவாசிகளை தேவனுக்கு சமீபமாகக் கொண்டுவந்தது [2:13].
Q? யூதர்களுக்கும் அந்நியர்களுக்கும் இடையே இருந்த உறவை எப்படி கிறிஸ்து மாற்றினார் ?
A. அவர் தம்முடைய மாம்சத்தினாலே இருத்திறத்தாரையும் ஒன்றாக்கினார் [2:14].
Q? யூதர்களையும், அன்னியர்களையும்; கிறிஸ்து எப்படி சமாதானமுள்ளவர்களாகும்படி செய்தார் ?
A. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, யூதர்களையும், அன்னியர்களையும் சமாதானமுள்ளவர்களாகும்படி செய்தார் [2:15-16].
Ephesians 2:17-18
Q? எப்படி விசுவாசிகள் அனைவரும் பிதாவினிடம் சேரும் சிலாக்கியம் நமக்குக் கிடைத்தது ?
A. பரிசுத்த ஆவியினாலே விசுவாசிகள் அனைவரும் பிதாவினிடம் சேரும் சிலாக்கியம் நமக்குக் கிடைத்தது[2:18].
Ephesians 2:19-22
Q? எந்த அஸ்திபாரத்தின் மேலே தேவனுடைய மாளிகை கட்டப்பட்டுள்ளது ?
A. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அஸ்திபாரத்தின் மேலே தேவனுடைய குடும்பம் கட்டப்பட்டுள்ளது[2:20].
Q? இயேசு கிறிஸ்துவினுடைய வல்லமை அவருடைய மாளிகை முழுவதும் என்ன செய்கிறது ?
A. கிறிஸ்துவின்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது [2:21].
Q? எப்படிப்பட்ட குடும்பம் தேவனுடைய மாளிகையாயிருக்கிறது ?
A. தேவனுடைய குடும்பம் என்பது தேவனுடைய ஆலயமாயிருக்கிறது [2:21].
Q? தேவன் எங்கே ஆவியாய் அசைவாடுகிறார் ?
A. விசுவாசிகளுக்குள்ளே அவர் ஆவியாய் அசைவாடுகிறார்[2:22].
Ephesians 3
Ephesians 3:1-2
Q? யாருடைய பிரயோஜனத்திற்காக பவுலுக்கு தேவன் கிருபைகளைக் கொடுத்தார் ?
A. புறஜாதியாருடைய பிரயோஜனத்திற்காக பவுலுக்கு தேவன் கிருபைகளைக் கொடுத்தார்[3:1-2].
Ephesians 3:3-5
Q? முற்காலத்து மனுபுத்திரருக்கு எது வெளிப்படுத்தப்படவில்லை ?
A. கிறிஸ்துவின் இரகசியத்தைக் குறித்து முற்காலத்து மனுபுத்திரருக்கு வெளிப்படுத்தப்படவில்லை[3:3-5].
Q? முற்காலத்து மனுபுத்திரருக்கு வெளிப்படுத்தப்படாத இரகசியத்தை யாருக்கு வெளிப்படுத்தினார் ?
A. வெளிப்படுத்தப்படாத கிறிஸ்துவின் இரகசியத்தை அவருடைய அப்போஸ்தலருக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் தேவன் வெளிப்படுத்தினார் [3:5].
Ephesians 3:6-7
Q? எந்த மறைக்கப்பட்ட சத்தியம் வெளிப்படுத்தப்பட்டது ?
A. புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்திரரும் ஒரே சரீரதிற்குள்ளனவர்களுமாய், வாக்குத்தத்ததுக்கு உடன் பங்காளிகளுமாயிருக்கிறார்கள் என்ற மறைக்கப்பட்ட சத்தியம் வெளிப்படுத்தப்பட்டது [3:6].
Q? பவுலுக்கு அளிக்கப்பட்ட வரம் எது ?
A. தேவனுடைய கிருபையாகிய வரம் பவுலுக்குக் கொடுக்கப்பட்டது [3:7].
Ephesians 3:8-9
Q? எதைக்குறித்து வெளிப்படுத்தும்பொருட்டு புறஜாதியாரிடம் பவுல் அனுப்பப்பட்டான் ?
A. தேவனுடைய சித்தத்தைக் குறித்து வெளிப்படுத்தும் பொருட்டு புறஜாதியாரிடம் பவுல் அனுப்பப்பட்டான்[3:9].
Ephesians 3:10-11
Q? உன்னதமான தேவனுடைய ஞானம் எதினால் வெளிப்படுத்தப்படும் ?
A. உன்னதமான தேவனுடைய ஞானம் சபையின் மூலமாய் வெளிப்படுத்தப்படும்[3:10].
Ephesians 3:12-13
Q? கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தால் விசுவாசிகளுக்கு என்ன கிடைத்திருப்பதாக பவுல் கூறுகிறான் ?
A. தைரியமும், திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் கிடைத்திருப்பதாக பவுல் கூறுகிறான் [3:12].
Ephesians 3:14-16
Q? பிதாவினால் பெயரிடவும், சிருஷ்டிக்கப்பட்டது எது ?
A. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள பிதாவினால் பெயரிடவும், சிருஷ்டிக்கப்பட்டது[3:14-15].
Q? விசுவாசிகள் வல்லமையால் பலப்படும்படிக்கு பவுல் எப்படி ஜெபம்பண்ணினான் ?
A. தேவனுடைய ஆவியினாலே உள்ளான மனுஷன் வல்லமையால் பலப்பட பவுல் ஜெபம்பண்ணினான் [3:16-17].
Ephesians 3:17-19
Q? விசுவாசிகள் எதை உணரும்படி பவுல் ஜெபம்பண்ணினான் ?
A. கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணரும்படி பவுல் ஜெபம்பண்ணினான் [3:18].
Ephesians 3:20-21
Q? தலைமுறை தலைமுறையாய் பிதாவுக்கு என்ன உண்டாகுமென்று பவுல் ஜெபம்பண்ணினான் ?
A. [3:21].சபையிலே, கிறிஸ்து இயேசுவின் மூலமாய் தலைமுறை தலைமுறைக்கும் சதாக்காலங்களிலும் மகிமையுண்டாவதாக என்று பவுல் ஜெபம்பண்ணினான்
Ephesians 4
Ephesians 4:1-3
Q? விசுவாசிகள் எப்படி இருக்கவேண்டுமென்று பவுல் புத்திசொன்னான் ?
A. மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய் அன்பினால் ஒருவரையொருவர் தாங்கவேண்டுமென்று பவுல் அவர்களுக்கு புத்திச்சொன்னான் [4:1-2].
Ephesians 4:4-6
Q? ஒன்றே ஒன்று என பவுல் கூறும் காரியங்கள் யாது ?
A. பவுல்: ஒரே சரீரம், ஒரே ஆவியும், ஒரே நம்பிக்கையும், ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே தேவனும், ஒரே பிதா என்று கூறுகிறான் [4:4-6].
Ephesians 4:7-8
Q? உன்னதத்திற்கு ஏறிய பின்பு அவர் அவனவனுக்கு கொடுத்தது என்ன ?
A. கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத் தக்கதாக அவர் மனுஷனுக்கு வரங்களை அளித்தார் [4:7-8].
Ephesians 4:9-10
Ephesians 4:11-13
Q? கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு கொடுக்கப்பட்ட ஐந்து வரங்கள் என்னென்ன ?
A. அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், போதகர் மற்றும் மேய்ப்பர் என ஐந்தையும் கிறிஸ்து நமக்கு தந்தார் [4:11].
Q? இந்த ஐந்து வரங்களும் எந்த காரியங்களுக்காக செயல்படவேண்டும் ?
A. விசுவாசிகள் சீர்பொருந்தவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்கும் செயல்படவேண்டும் [4:12].
Ephesians 4:14-16
Q? விசுவாசிகள் எப்படி குழந்தைகளைப்போல இருக்கும்படி பவுல் கூறுகிறான் ?
A. மனுஷனுடைய சூதும், வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், குழந்தைகளைப்போல இருக்கும்படி பவுல் கூறுகிறான்[4:14].
Q? விசுவாசிகளின் சரீரம் எப்படி இணைக்கபட்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான் ?
A. சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே அன்பினாலே பக்திவிருத்தியுண்டாக இணைக்கபட்டிருப்பதாகப் பவுல் கூறுகிறான்[4:16].
Ephesians 4:17-19
Q? புறஜாதியார் எப்படி நடப்பதாக பவுல் கூறுகிறான் ?
A. அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுக்கு அன்னியராயிருக்கிறார்கள் [4:17-19].
Ephesians 4:20-22
Ephesians 4:23-24
Q? விசுவாசிகள் எதைக் களைந்துபோட்டு, எதைத் தரிக்கும்படி பவுல் கூறுகிறான் ?
A. கெட்டுப்போகிற பழைய மனுஷனைக் களைந்துபோட்டு, தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளும்படி பவுல் கூறுகிறான் [4:22-24].
Ephesians 4:25-27
Q? விசுவாசிகளில் ஒருவன் எப்படி பிசாசுக்கு இடங்கொடுக்கிறான் ?
A. சூரியன் அஸ்தமித்தும் அவன் எரிச்சல் தனியாதிருந்தால் அவன் பிசாசுக்கு இடங்கொடுக்கிறான்[4:26-27].
Ephesians 4:28-30
A. குறைச்சலுள்ளவனுக்கு கொடுக்கும்படி தனக்கு உண்டாயிருக்க விசுவாசியானவன் வேலைசெய்து பிரயாசப்படக்கடவன் [4:28].
Q? எப்படிப்பட்ட வார்த்தைகள் விசுவாசியின் வாயிலிருந்து புறப்படவேண்டுமென்று பவுல் கூறுகிறான் ?
A. கெட்ட வார்த்தை ஒன்றும் புறப்படவேண்டாம்; மற்றவர்களுக்கு பிரயோஜனம் உண்டாகும்படி பேசவேண்டுமென்று பவுல் கூறுகிறான் [4:29].
Q? விசுவாசி யாரைத் துக்கப்படுத்தாதிருக்கவேண்டும் ?
A. பரிசுத்த ஆவியானவரை விசுவாசியானவன் துக்கப்படுத்தாதிருக்கவேண்டும்[4:30].
Ephesians 4:31-32
Q? கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னிக்கிறது போல விசுவாசி ஒருவன் என்ன செய்யவேண்டும் ?
A. கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னிக்கிறது போல நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்கவேண்டும் [4:32].
Ephesians 5
Ephesians 5:1-2
Q? விசுவாசி யாரைப் பின்பற்றவேண்டும் ?
A. பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றவேண்டும் [5:1].
Q? தேவனுக்கு சுகந்தவாசனையாக கிறிஸ்து செய்தது என்ன ?
A. கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்தார் [5:2].
Ephesians 5:3-4
Q? எவைகள் விசுவாசிகளுக்குள்ளே சொல்லப்படக்கூடாது ?
A. வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசை முதலியவைகள் விசுவாசிகளுக்குள்ளே சொல்லப்படக்கூடாது[5:3].
Q? மாறாக அவர்கள் என்ன செய்யவேண்டும் ?
A. விசுவாசிகள் ஸ்தோத்திரம் செய்வதே தகும் [5:4].
Ephesians 5:5-7
Q? தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே எவன் சுதந்தரிப்பதில்லை ?
A. தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, பொருளாசைக்காரனாவது, விக்ரககாராதனைக் காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரிப்பதில்லை[5:5].
Q? கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வருவது என்ன ?
A. கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவ கோபாக்கினை வரும் [5:6].
Ephesians 5:8-12
Q? தேவனுக்குப் பிரியமான ஆவியின் கனி எது ?
A. நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் விளங்குவதே கர்த்தருக்குப் பிரியமானது [5:9].
Q? அந்தகாரக் கிரியைகளிடம் விசுவாசிகள் என்ன செய்யவேண்டும் ?
A. அந்தகாரக் கிரியைகளிடம் விசுவாசிகள் உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளவேண்டும் [5:11].
Ephesians 5:13-14
Q? வெளிச்சத்தினால் வெளியரங்கமானது எது ?
A. சகலமும் வெளிச்சத்தினால் வெளியரங்கமாயிற்று[5:13].
Ephesians 5:15-17
Q? நாட்கள் பொல்லாதவைகளானதால் விசுவாசிகள் என்ன செய்யவேண்டும் ?
A. நாட்கள் பொல்லாதவைகளானதால் விசுவாசிகள் காலத்தைப் பிரயோஜனப்படுத்தவேண்டும் [5:16].
Ephesians 5:18-21
Q? அழிவுக்கு கொண்டுசெல்லுகிறது எது ?
A. மதுபானம் அருந்துவது அழிவுக்கு கொண்டுசெல்லுகிறது[5:18].
Q? எதினால் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லவேண்டும் ?
A. சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லவேண்டும்[5:19].
Ephesians 5:22-24
Q? எப்படி மனைவிகள் தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியவேண்டும் ?
A. கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியவேண்டும் [5:22].
Q? புருஷன் யாருக்குத் தலையாயிருக்கிறான் ? கிறிஸ்து யாருக்குத் தலையாயிருக்கிறார் ?
A. புருஷன் தன் மனைவிக்குத் தலையாயிருக்கிறான், கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறார்[5:23].
Ephesians 5:25-27
Q? கிறிஸ்து சபையை எப்படி பரிசுத்தப்படுத்துகிறார் ?
A. திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்துப் பரிசுத்தபடுத்துகிறார் [5:26-27].
Ephesians 5:28-30
Q? புருஷர்கள் தங்கள் மனைவிமார்களில் எப்படி அன்புகூறவேண்டும் ?
A. புருஷர்கள் தங்கள் மனைவிமார்களைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்புகூறவேண்டும் [5:28].
Q? ஒருவன் தன் சொந்த சரீரத்தை எப்படி பாவிப்பான் ?
A. ஒவ்வொருவனும் தன் சொந்த சரீரத்தை போஷித்துக் காப்பாற்றுவான் [5:29].
Ephesians 5:31-33
Q? மனிதன் தன் மனைவியோடே இணையும்போது சம்பவிப்பது என்ன ?
A. புருஷன் தன் மனைவியோடே இணையும்போது அவர்கள் இருவரும் ஒரே சரீரமாய் இருப்பார்கள் [5:31].
Q? மறைக்கப்பட்ட எந்த உண்மை விளங்கும்படிக்கு புருஷன் மனைவியைக் குறிப்பிடப்படுகிறது ?
A. கிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய சபையைப் பற்றியும் குறிப்பிடும்படி புருஷன் மனைவியைக் குறிப்பிடப்படுகிறது[5:32].
Ephesians 6
Ephesians 6:1-3
Q? கிறிஸ்தவ பிள்ளைகள் எப்படி தங்கள் பெற்றோரிடம் நடந்துகொள்ளவேண்டும் ?
A. கிறிஸ்தவ பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அவர்களை கனம் பண்ணவேண்டும் [6:1-2].
Ephesians 6:4
Q? பிதாக்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்வது என்ன ?
A. கர்த்தருக் கேற்ற சிட்சையிலும், போதனையிலும் அவர்களை வளர்த்தவேண்டும் [6:4].
Ephesians 6:5-8
Q? வேலைகாரர்கள் தங்கள் எஜமான்களுக்கு எப்படிப்பட்ட நடத்தையோடு நடந்துகொள்ளவேண்டும் ?
A. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல வேலைக்காரரே நீங்களும் உங்கள் எஜமான்களுக்கு பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்படியவேண்டும் [6:5-7].
Q? விசுவாசியானவன் தான் செய்கிற நன்மையினால் எதை அறியவேண்டும் ?
A. தான் செய்கிற நன்மையின்படி கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறியவேண்டும் [6:8].
Ephesians 6:9
Q? எஜமான் தன் எஜமானைக் குறித்து எதை அறியவேண்டும் ?
A. எஜமான்களே உங்கள் வேலைக்காராருக்குச் செய்யவேண்டியதை செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும் அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறியவேண்டும் [6:9].
Ephesians 6:10-11
Q? ஏன் விசுவாசிகள் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளவேண்டும் ?
A. விசுவாசியானவன் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படிக்கு சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளவேண்டும்[6:11,13,14].
Ephesians 6:12-13
Q? யாருக்கு எதிராக விசுவாசி யுத்தம் பண்ணுகிறான் ?
A. மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலத்தின் பொல்லாத சேனைகளோடும் யுத்தம் பண்ணுகிறான் [6:12].
Ephesians 6:14-16
Q? தேவனுடைய சர்வாயுதவர்கத்தில் பயன்படும் ஆயுதங்கள் என்னென ?
A. சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்கவசத்தைத் தொடுத்தவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய, ஆயத்தம் என்னும் பாதரட்சை கால்களில் தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அவித்துப்போடத்தக்கதாயும், விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நிற்கவேண்டும் [6:14-17].
Ephesians 6:17-18
Q? ஆவியின் பட்டயம் எது ?
A. தேவ வசனமே ஆவியின் பட்டயம் [6:17].
Q? ஜெபத்திலே விசுவாசி ஒருவன் எப்படி இருக்கவேண்டும் ?
A. எந்த சமயத்திலும் விண்ணப்பம் செய்து, மிகுந்த மனஉறுதியோடும், விழித்துக்கொண்டும் இருக்கவேண்டும் [6:18].
Ephesians 6:19-20
Q? எபேசியர்கள் எதற்காக ஜெபிக்கும்படி பவுல் கேட்டுக்கொண்டான் ? A. பவுல் தைரியமாய் சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்க வாக்குக் கொடுக்கப்ப்படும்படிக்கு அவர்கள் ஜெபிக்கும்படி அவன் வேண்டிக்கொண்டான் [6:19- 20].
Q? இந்த நிருபத்தை பவுல் எழுதும்பொழுது எங்கே இருந்தான் ?
A. பவுல் சிறைச்சாலையிலே இருந்து இந்த நிருபத்தை எழுதினான் [6:20].
Ephesians 6:21-22
Ephesians 6:23-24
Q? பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் சகோதரருக்கு எந்த மூன்று காரியங்கள் கொடுக்கப்படவேண்டுமென்று பவுல் வேண்டிக்கொண்டான் ?
A. சகோதரருக்கு சமாதானமும், விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாகவேண்டுமென்று பவுல் விண்ணப்பம் பண்ணினான் [6:23-24].