தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

1 Thessalonians

1 Thessalonians 1

1 Thessalonians 1:1

1 Thessalonians 1:2-3

Q?பவுல் தெசலோனிக்கேயரைக் குறித்து தேவனுக்கு முன்பாக, எதை எப்பொழுது நினைவு கூர்ந்தார் ?

A. பவுல் தெசலோனிக்கேயரின் விசுவாசத்தின் கிரியையும், அவர்களின் அன்பின் பிரயாசத்தையும், மற்றும் அவர்களின் நம்பிக்கையின், பொறுமையையும் நினைவு கூர்ந்தார் [1:3]

1 Thessalonians 1:4-5

Q?தேசலோனிக்கேயருக்கு சுவிசேஷம் வந்த நான்கு வழிகள் எவை?

A. சுவிசேஷம் தெசலோனிக்கியருக்கு வசனத்தோடும், வல்லமையோடும், பரிசுத்தாவியோடும், மற்றும் முழு நிச்சயத்தோடும் வந்தது [1:5]

1 Thessalonians 1:6-7

Q?தேசலோனிக்கேயருக்கு சுவிசேஷம் வந்த நான்கு வழிகள் எவை? A. சுவிசேஷம் தெசலோனிக்கியருக்கு வசனத்தோடும், வல்லமையோடும், பரிசுத்தாவியோடும், மற்றும் முழு நிச்சயத்தோடும் வந்தது [1:5]

1 Thessalonians 1:8-10

Q? தெசலோனிக்கேயர் கர்த்தருடைய வசனத்தை ஏற்றுகொண்ட பின்,கர்த்தருடைய வசனத்திற்கு சம்பவித்தது என்ன? A. தேவனைப்பற்றின தெசலோனிக்கேயரின் விசுவாசம் பிரசித்தமான இடம் எங்கும் கர்த்தருடைய வசனம் தொனித்தது [1:8]

Q? தெசலோனிகேயர் மெய்யான தேவனின், விசுவாசிகளாவதற்கு முன்பாக எதை வழிபாடு செய்தார்கள்?

A. தேசலோனிக்கேயர்கள் உண்மையான தேவனின் விசுவாசிகளாவதற்கு முன்பாக விக்கிரங்களை வழிபட்டு வந்தார்கள் [1.9]

Q? பவுலும்,தெசலோனிக்கேயரும் எதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்? A. இயேசு பரலோகத்தில்ருந்து வருவதை பவுலும், தெசலோனிகேர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர் [1.10] Q? இயேசு எதிலிருந்து நம்மை இரட்சிக்கிறார்? A. இனிவரும் கோபாக்கினையின்று இயேசு நம்மை நீங்கலக்கி இரட்சிக்கிறார் [1.10]

1 Thessalonians 2

1 Thessalonians 2:1-2

Q? தெசலோனிக்கேயாவிற்க்கு,வருவதற்க்கு முன்பு பவுலும், அவனுடைய நண்பர்களும், எப்படி நடத்தப்பட்டார்கள்?

A. பவுலும், அவனுடைய, நண்பர்களும் பாடுபட்டு நிந்தை அடைந்தார்கள் [2.2]

1 Thessalonians 2:3-4

Q? பவுல் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, யாரை பிரியப்படுத்த விரும்பினான்?

A. பவுல் தேவனுக்Q?பிரியமுண்டாக சுவிசேஷத்தை, பிரசங்கிக்க விரும்பினான் [2:4]

1 Thessalonians 2:5-6

Q? சுவிசேஷ பிரசங்கத்தில், பவுல் செய்ய விரும்பாதவை யாவை?

A. பவுல் தன்னை மகிமைபடுத்தவும் இல்லை, பேராசை கொள்ளவும் இல்லை[2:4-6]

1 Thessalonians 2:7-9

Q? பவுல் தெசலோனிக்கேயரோடு இருக்கையில், அவர்களை எப்படி உபசரித்தான் ?

A. ஒரு தாய், அல்லது தந்தை, தன்னுடைய பிள்ளைகளை, நடத்துவது போல பவுல் தெசலோனிக்கேயர்களை மேன்மையாய் உபசரித்தான் [2:7-8,11]

Q? தெசலோனிக்கேயருக்கு பாரமாய் இருக்க கூடாது என்பதற்காக பவுலும், அவனுடன் இருந்தவர்களும், என்ன செய்தார்கள்?

A. பவுலும், அவனுடன் இருந்தவர்களும், தெசலோனிக்கேயர்களுக்கு பாரமாய் இராதபடிக்கு இரவும்,பகலும், வேலைச் செய்தார்கள்.[2:9]

1 Thessalonians 2:10-12

Q? தெசலோனிக்கேயர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று பவுல் கூருகிறார்?

A. பவுல் தெசலோனிக்கேயர்களை தேவனுடைய இராஜ்ஜியத்திற்கும்,மகிமைக்கும், அவர்களை அழைத்து தேவனுக்கு அவர்கள் பாத்திரராய், நடக்க வேண்டும் என்று கூறுகிறார்.[2.12]

1 Thessalonians 2:13

Q? பவுல் பிரசங்கித்த வசனத்தை, தெசலோனிக்கேயர்கள் எவ்வகையான வசனமாக ஏற்றுக்கொண்டார்கள்?

A. தெசலோனிக்கேயர்கள் வசனத்தை, மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல்,தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டார்கள்.[2.13]

1 Thessalonians 2:14-16

Q? நம்பிக்கையற்ற யூதர்கள், செய்த தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் எவை?

A. நம்பிக்கையற்ற யூதர்கள், யூதேயா தேசத்து சபைகளை துன்பப்படுத்தினார்கள்.இயேசுவையும், திர்க்கதரிசிகளையும், கொலை செய்தார்கள்,பவுலை வெளியேற்றி மற்றும் புறஜாதியார் மத்தியில் பேசுவதற்கு தடைவிதித்தார்கள்[2:14-16]

1 Thessalonians 2:17-20

1 Thessalonians 3

1 Thessalonians 3:1-3

Q? அத்தேனே பட்டனத்தில் தனித்து விடப்பட்ட போதிலும், பவுல் செய்தது என்ன?

A. தெசலோனிக்கேயர் விசுவாசிகளுக்கு புத்தி சொல்லவும்,மற்றும் அவர்களை திடப்படுத்தவும்,தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான் [3:1-2]

Q? பவுல் தான் எதற்காக நியமிக்கபட்டிருக்கிறான் என்று சொல்லுகிறான் ?

A. உபத்திரவங்களை சகிக்க நியமிக்கபட்டிருக்கிறேன் என்று, பவுல் சொல்லுகிறான் [3:3]

1 Thessalonians 3:4-5

Q?தேசலோனிக்கேயரிடத்தில் எதை குறித்து பவுல் அக்கரைக்கொண்டான் ?

A.சோதனைக்காரன், தேசலோனிக்கியரை சோதனைக்கு உட்படுத்தினது உண்டோவென்றும், மற்றும் அவர்களுடைய வேலை வீணாய் போகாததை குறித்து பவுல் அக்கரைக்கொண்டான்.[3:5]

1 Thessalonians 3:6-7

Q? தீமோத்தேயு, தெசலோனிக்கேயாவிலிருந்து திரும்ப வந்த போது, பவுல் எதற்க்காக ஆறுதல் அடைந்தான் ?

A. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தையும், அன்பையும், தன்னைக்காண வாஞ்சையாய் இருக்கிறார்கள் என்பதைக் குறித்தும், கேள்விப்பட்ட நற்செய்தியினாலே பவுல் ஆறுதல் அடைந்தான் [3:6-7].

1 Thessalonians 3:8-10

Q? தேசலோனிக்கேயர்கள் எதைச் செய்தால் நான் பிழைத்திருப்பேன் என்று பவுல் கூறுகிறார் ? A.தெசலோனிக்கேயர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நான் பிழைத்திருப்பேன் என்று பவுல் கூறுகின்றார் [3: 8]

Q? பவுல் இரவும், பகலும் வேண்டிகொள்வதற்க்கான காரணம் என்ன ?

A. பவுல் தேசலோனிக்கேயர்கள் முகத்தை கண்டு அவர்கள் விசுவாசத்தின் குறைகளை, நிறைவாக்கும் பொருட்டு இரவும் பகலும் வேண்டிக்கொண்டான் [3:10]

1 Thessalonians 3:11-13

Q? தெசலோனிக்கேயர்கள் எவ்வூழியத்தில் பெருகவும், மற்றும் நிலைத்தோங்கவும் வேண்டும் என்று பவுல் விருப்பம் கொண்டார் ?

A. தெசலோனிக்கேயர்கள் ஒவ்வொருவரிடத்தில் வைக்கும் அன்பிலும், மற்ற எல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் பெருகவும், நிலைத்தோங்கவும், வேண்டும் என்று பவுல் விருப்பம் கொண்டான் [3:12] Q? தெசலோனிக்கேயர்கள் எந்த நிகழ்வுக்காக பிழையற்ற, பரிசுத்தமான இருதயத்தோடு ஆயத்தமாய் இருக்கும்படி பவுல் விரும்பினான் ?

A. கர்த்தராகிய இயேசு தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும் கூடவருகிறதற்க்கு தெசலோனிக்கேயர்கள் ஆயத்தமாய் இருக்கும்படி பவுல் விரும்பினான் [3:13]

1 Thessalonians 4

1 Thessalonians 4:1-2

Q? எந்த பிரகாரமாய் நடக்கவும் மற்றும் தேவனுக்கு பிரியமாய் இருக்கவும்,கற்றுக்கொடுத்ததின் மூலம் தெசலோனிக்கேயர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்புகின்றார் ?

A. தெசலோனிக்கேயர்கள் தொடர்ந்து தேவனுக்குள்ளாய் நடக்கவும், மற்றும் தேவனுக்கு பிரியமாய் இருக்கவும், மற்றும் அதிகம்,அதிகமாய் தேறும்படிக்கு பவுல் விரும்பினார் [ 4:1-2]

1 Thessalonians 4:3-6

Q? தெசலோனிக்கேயர்களை குறித்து தேவனுடைய சித்தம் என்னவென்று பவுல் கூறுகிறார் ?

A. தெசலோனிக்கேயர்கள் பரிசுத்தம் ஆக வேண்டும் என்பதே, தேவனுடைய சித்தமாய் இருக்கிறது என்று பவுல் கூறுகிறார் [4:3]

Q? புருஷர்கள், தங்கள் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் ?

A. புருஷர்கள், தங்கள் மனைவியை பரிசுத்தமாயும், மற்றும் மரியாதையையும், நடத்த வேண்டும். [4:4]

Q? பாலியல், ஒழுக்ககேடு காரியத்தில் வரம்பு மீறுகிற சகோதரர்களுக்கு என்ன நேரிடும் ?

A. வரம்பு மீறுகிற, சகோதரர்களுக்கு கர்த்தர் நீதியை சரிகட்டுகிறவராய் இருக்கிறார் [4:6]

1 Thessalonians 4:7-8

Q? பரிசுத்தத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கிறதை, அசட்டை பண்ணுகிற, மனுஷன் யாரை அசட்டை பண்ணுகிறான்?

A. பரிசுத்தத்திற்கு அழைக்கப்பட்டதை, அசட்டை பண்ணுகிற மனுஷன், எவனோ அவன் தேவனை அசட்டை பண்ணுகிறான்.[4:8]

1 Thessalonians 4:9-12

Q? தெசலோனிக்கேயர்கள் செய்து வந்த எந்த காரியத்தை, இன்னும் அதிகமாய் பெருக வேண்டும் என்று பவுல் விரும்பினார்?

A. தெசலோனிகேயர்கள் ஒருவரில், ஒருவர் அன்பாய் இருப்பதில் இன்னும் அதிகமாய் பெருக வேண்டும் என்று பவுல் விரும்பினார் [4:9-10]

Q? குறைவு இல்லாத்திருக்கும் படிக்கும், மற்றும் அவிசுவாசிகளுக்கு முன்பதாக சீராய்நடப்பதற்கு, தெசலோனிக்கேயர்கள் என்ன செய்ய வேண்டும் ?

A. தெசலோனிக்கேயர்கள் அமைதல் உள்ளவர்களாய் இருக்கும்படி நடக்கவும், தங்கள் சொந்த அலுவல்களை பார்க்கவும், மற்றும் தங்கள் சொந்த கைகளினாலே வேலைச் செய்ய வேண்டும் [ 4:11-12]

1 Thessalonians 4:13-15

Q? தெசலோனிக்கேயர்கள் தவறாக புரிந்து கொள்ளகூடிய சாத்தியமான தலைப்பு என்ன ?

A. நித்திரை அடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் குறித்து தெசலோனிக்கேயர்கள் தவறாக புரிந்துக்கொள்வதற்க்கு சாத்தியமாகும் [4:13]

Q? இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களுக்கு தேவன் என்ன செய்வார் ?

A. இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களை, தேவன் அவரோடு கொண்டு வருவார் [4:14]

1 Thessalonians 4:16-18

Q? கர்த்தர், வானத்திலிருந்து எப்படி இறங்கி வருவார்?

A. கர்த்தர் ஆரவாரத்தோடும், மற்றும் தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார் [4:16]

Q? யார் முதலாவது எழுந்திருப்பார்கள். மற்றும் அவர்களோடுகூட எழுந்திருப்பவர்களும் யார் ?

A. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் பின்பு உயிரோடு இருக்கிறவர்களும், அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் [ 4:16-17]

Q? எழுந்திருப்பவர்கள் யாரை சந்திப்பார்கள், மற்றும் எவ்வளவு காலம் எங்கு இருப்பார்கள் ?

A. எழுந்திருப்பவர்கள் ஆகாயத்திலே தேவனை சந்திப்பார்கள் மற்றும் எப்பொழுதும் கர்த்தருடன் இருப்பார்கள் [4:17]

Q? மரித்தவர்களை குறித்த பவுலின் வார்த்தையினாலே தேசலோனிக்கேயர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் உரைக்கிறார் ?

A. பவுலின் வார்த்தையினாலே தேசலோனிக்கேயர்கள் ஒருவரையொருவர் தேற்ற வேண்டும் என்று பவுல் கூறுகின்றார் [4:18]

1 Thessalonians 5

1 Thessalonians 5:1-3

Q? எவ்விதமாய் கர்த்தருடைய நாள் வரும் என்று பவுல் கூறுகின்றார் ?

A. இரவிலே,திருடன் வருகிற விதமாய் கர்த்தருடைய நாள் வரும் என்று பவுல் கூறுகின்றார் [5:2]

Q? மக்கள் மேல் அழிவு சடுதியாய் வரும் போது என்ன உரைப்பார்கள் ?

A. சில மக்கள் சமாதானமும், சவுக்கியமும் உண்டென்று உரைப்பார்கள் [5:3]

1 Thessalonians 5:4-7

Q? விசுவாசிக்கிறவர்களை கர்த்தருடைய நாள் திருடனைப் போல, பிடித்துகொள்ளாது என்று பவுல் எதற்க்காக சொல்லுகிறார் ?

A. விசுவாசிக்கிறவர்களை கர்த்தருடைய நாள் திருடனைப் போல, பிடித்துக்கொள்ளாது ஏனென்றால் விசுவாசிகள் அந்தகாரத்தில் இருக்கிறவர்கள் அல்ல,மாறாக அவர்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் இருக்கிறார்கள் [ 5:4-5]

Q? விசுவாசிக்கிறவர்கள் கர்த்தருடைய நாளை குறித்த காரியத்தில், என்ன செய்ய வேண்டும் என்று பவுல் சொல்கிறார் ?

A. விசுவாசிக்கிறவர்கள் விழித்துக்கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கவும், மற்றும் விசுவாசம்,அன்பு,நம்பிக்கை,இவைகளை தரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று பவுல் சொல்லுகின்றார் [5:6,8]

1 Thessalonians 5:8-11

Q? விசுவாசிகளை தேவன் எதற்க்காக நியமித்தார்?

A. இயேசுகிறிஸ்து மூலமாய்,இரட்சிப்பு அடைவதற்க்கென்று, விசுவாசிகளை தேவன் நியமித்தார்[ 5:9]

1 Thessalonians 5:12-14

Q? கர்த்தருக்குள் புத்திசொல்லுகிற விசுவாசிகளை குறித்து எப்படிப்பட்டஎண்ணம் கொண்டிருக்கிறார் என்று பவுல் சொன்னார் ?

A. குறிப்பாக அவர்களின் கிரியைகளின் நிமித்தமும், மற்றும் மிகவும் அன்பாய், எண்ணிக்கொள்ளும்படி பவுல் சொன்னார் [5:12-13]

1 Thessalonians 5:15-18

Q? ஒவ்வொருவனும் குறிப்பாக தீமை செய்யாதபடி இருக்க வேண்டும் என்று பவுல் என்ன சொன்னார் ?

A. ஒவ்வொருவனும் தீமைக்கு, தீமை செய்யாதபடி இருங்கள் என்று பவுல் சொன்னார் [5:15]

Q? விசுவாசிகள் குறிப்பாக எல்லாவற்றையும் செய்ய பவுல் சொன்னது என்ன மற்றும் ஏன் ?

A. விசுவாசிகள் குறிப்பாக எல்லாவற்றிலேயும், ஸ்தோத்திரம் செய்யுங்கள். காரணம் அப்படி செய்வதே, தேவனுடைய சித்தமாயிருக்கிறது [ 5:18]

1 Thessalonians 5:19-22

Q? தீர்க்கதரிசனங்களை குறித்து, விசுவாசிகளுக்கு பவுல் கற்பித்தது என்ன ?

A. தீர்க்கதரிசனங்களை அற்பமாக எண்ணாதிருங்கள், எல்லாவற்றையும் சோதித்து பார்த்து, நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என்று, விசுவாசிகளுக்கு பவுல் கற்பித்தார் [5:20-21]

1 Thessalonians 5:23-24

Q? விசுவாசிகளுக்கு தேவன் எதை, செய்ய வேண்டும் என்று பவுல் ஜெபித்தார் ?

A. ஆவி,ஆத்துமா,மற்றும் சரீரம் முழுவதும் தேவன் தாமே முற்றிலும் பரிசுத்தமாக்க, வேண்டும் என்று பவுல் ஜெபித்தார் [5:23]

1 Thessalonians 5:25-28

Q? விசுவாசிகளுக்கு எதற்க்காக ஜெபிக்க பவுல் விருப்பம் கொண்டார் ?

A. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிருஸ்துவின் கிருபை, விசுவாசிகளுக்கு இருக்க வேண்டும் என்று பவுல் ஜெபிக்க விருப்பம் கொண்டார். [5:28]