தமிழ்: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Peter

2 Peter 1

2 Peter 1:1-2

Q? இரண்டாம் பேதுருவை எழுதினது யார்?

A. இயேசு கிறிஸ்துவின் அடிமையும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு [1:1].

Q? பேதுரு யாருக்கு எழுதினான்?

A. அதே விலையேறப்பெற்ற விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு பேதுரு எழுதினான் [1:1].

2 Peter 1:3-4

Q? பேதுருவிற்கும் விசுவாசத்தைப் பெறுகிறவர்களுக்கும் வாழ்விற்கும் தேவபக்திக்குமான தெய்வீக வல்லமையின் காரியங்கள் யாவும் எப்படி கொடுக்கப்பட்டது?

A. தேவனுடைய அறிவின்மூலம் அவைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது [1:3].

Q? பேதுருவிற்கும் விசுவாசத்தைப் பெறுகிறவர்களுக்கும் வாழ்விற்கும் தேவபக்திக்குமான தெய்வீக வல்லமையின் காரியங்கள் யாவற்றுடன் மகா மேன்மையுள்ளதும் விலையேறப்பெற்றதுமான வாக்குத்தத்தங்களை தேவன் ஏன் கொடுத்தார்?

A. அவர்கள் தெய்வீகசுபாவத்தில் பங்குள்ளவர்களாகும்படி அவர் அப்படிச் செய்தார் [1:3-4].

2 Peter 1:5-7

Q? விசுவாசத்தைப் பெறுகிறவர்கள் தங்கள் விசுவாசத்தின்மூலம் இறுதியில் எதனை ஆதாயப்படுத்த வேண்டியவர்களாய் இருந்தார்கள்?

A. அவர்கள் தங்கள் விசுவாசத்தின்மூலம் இறுதியில் அன்பை ஆதாயப்படுத்த வேண்டியவர்களாய் இருந்தார்கள் [1:5-7].

Q? விசுவாசம், குணம், அறிவு, சுயக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, தேவபக்தி,சகோதரசிநேகம் மற்றும் அன்பு போன்றவற்றில் ஒருவன் குறைவுபட்டால் அவன் எதைக் காண்கிறான்?

A. அவன் அருகில் உள்ளதை மட்டுமே காண்கிறான்; அவன் குருடனாய் இருக்கிறான் [1:5-9].

2 Peter 1:8-9

2 Peter 1:10-11

Q? சகோதரர்கள் தங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிசெய்துகொள்ள தங்களால் இயன்ற சிறந்ததை செய்தார்களெனில், என்ன நேரிடும்?

A. அவர்கள் இடறிவிழாமல் இருப்பார்கள் மற்றும் அவர்களுடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை அவர்கள் பெறுவார்கள் [1:10-11].

2 Peter 1:12-15

Q? சகோதரர்களுக்கு இந்த காரியங்களை நினைப்பூட்டுவது அவனுக்கு சரியானது என்று பேதுரு ஏன் நினைத்தான்?

A. ஏனென்றால் அவன் சீக்கிரமாய்த் தன் கூடாரத்தை அகற்றி விடுவான் என்று அவர்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் அவனுக்குக் காண்பித்தார் [1:12-14].

2 Peter 1:16-18

Q? இயேசுவின் மகத்துவத்தைக் கண்ட சாட்சிகளாயிருந்தவர்கள் எதைக் கண்டார்கள்?

A. அவர் பிதாவாகிய தேவனிடமிருந்து கனத்தையும், மகிமையும் பெற்றதை அவர்கள் கண்டார்கள் [1:16-17].

2 Peter 1:19-21

Q? தீர்க்கதரிசன வார்த்தை உறுதியானது என்று எப்படி நாம் நிச்சயிக்கலாம்?

A. ஏனென்றால் எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்தினால் வருவதில்லை, எந்த தீர்க்கதரிசனமும் மனிதனுடைய சித்தத்திலிருந்தும் வருவதில்லை, மாறாக பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட மனிதர்கள் தேவனிடமிருந்து அவற்றைப் பேசினார்கள்.

2 Peter 2

2 Peter 2:1-3

Q? கள்ளப்போதகர்கள் விசுவாசிகளுக்கு இரகசியமாக எதைக் கொண்டு வருவார்கள்?

A. கள்ளப்போதகர்கள் கேட்டிற்கேதுவான தவறான உபதேசங்களைக் கொண்டு வந்து, தங்களைக் கிரயத்திற்குக் கொண்ட எஜமானரை மறுதலிப்பார்கள் [2:1].

Q? கள்ளப்போதகர்கள்மீது என்ன வரும்?

A. கள்ளப்போதகர்கள்மீது துரிதமான அழிவும், ஆக்கினையும் வரும் [2:1].

Q? கள்ளப்போதகர்கள் வஞ்சக வார்த்தைகளால் என்ன செய்வார்கள்?

A. கள்ளப்போதகர்கள் பேராசையுடன் சகோதரர்களிடமிருந்து ஒரு ஆதாயம் பெறுவார்கள் [2:1-3].

2 Peter 2:4-6

Q? தேவன் யாரைத் தப்பவிடவில்லை?

A. தேவன் பாவம் செய்த தூதர்களையும், பழங்கால உலகத்தையும் சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்களையும் தப்பவிடவில்லை [2:4-6].

Q? தேவன் யாரைக் காப்பாற்றினார்?

A. தேவன் நோவாவுடன் வேறு ஏழு பேரையும் மற்றும் லோத்தையும் காப்பாற்றினார் [2:5-7].

2 Peter 2:7-9

Q? தேவன் சிலரைத் தப்பவிடாமலிருந்தது மற்றும் வேறு சிலரைக் காப்பாற்றினதுமூலம் எதைக் காண்பிக்கிறார்?

A. தேவபக்தியுள்ளோரை எப்படி இரட்சிப்பது என்றும், நீதிமான்களை எப்படி பாதுகாத்து வைப்பது என்றும் கர்த்தர் அறிந்திருக்கிறார் என்பதை தேவனுடைய செயல்கள் காண்பிக்கிறது [2:9].

2 Peter 2:10-11

Q? தேவபக்தியற்றோர் மகிமையானவர்களாகிய யாரைத் தூஷிக்கப் பயப்படமாட்டார்கள்?

A. கர்த்தரிடத்தில் மனிதருக்கு எதிராய் நிந்திக்கிற நியாயத்தீர்ப்புகளைக் கொண்டு வராதிருந்தவர்கள் மகிமையானவர்களாகிய தேவதூதர்களை தூஷிக்கப் பயப்படமாட்டார்கள்? [2:10-11].

2 Peter 2:12-14

Q? கள்ளப்போதகர்கள் யாரை மயக்கி சிக்கவைக்கிறார்கள்?

A. கள்ளப்போதகர்கள் உறுதியில்லாத ஆத்துமாக்களை மயக்கி சிக்கவைக்கிறார்கள் [2:14].

2 Peter 2:15-16

Q? தீர்க்கதரிசியாகிய பிலேயாமின் மதியீனத்தை தடுத்தது யார்?

A. பேசாத கழுதை மனிதசத்தத்தில் பேசி பிலேயாமைத் தடுத்தது [2:15-16].

2 Peter 2:17-19

Q? ஒரு மனிதன் எதற்கு அடிமைப்பட்டிருக்கிறான்?

A. ஒரு மனிதனை மேற்கொள்வது எதுவோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறான் [2:19].

2 Peter 2:20-22

Q? இயேசு கிறிஸ்துவின் அறிவின்மூலம் உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவற்றிற்கு திரும்பினால், எது நலமாயிருந்திருக்கும்?

A. நீதியின் மார்க்கத்தை அறியாதிருந்தார்களானால் அது அவர்களுக்கு நலமாயிருந்திருக்கும் [2:20-21].

2 Peter 3

2 Peter 3:1-2

Q? பேதுரு ஏன் இந்த இரண்டாம் நிருபத்தை எழுதினான்?

A. பிரியமானவர்கள் முன்பு தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், அவர்களுடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் கட்டளையையும் நினைவுகூரும்படி அவன் எழுதினான் [3:1-2].

2 Peter 3:3-4

Q? கடைசி நாட்களில் பரியாசக்காரர் என்ன கூறுவார்கள்?

A. பரியாசக்காரர் இயேசுவின் வருகையைப் பற்றிய வாக்குத்தத்தத்தைக் குறித்து கேள்வி கேட்டு, படைப்பின் ஆரம்பம்முதல் சகலமும் இருந்தவண்ணமே இருக்கிறதே என்று கூறுவார்கள் [3:3-4].

2 Peter 3:5-7

Q? வானங்களும் பூமியும் எப்படி ஸ்தாபிக்கப்பட்டது? அவைகள் எப்படி அக்கினிக்காகவும், நியாயத்தீர்ப்பின் நாளிற்காகவும் மற்றும் தேவபக்தியற்ற மக்களின் அழிவிற்காகவும் காத்து வைக்கப்பட்டன?

A. அவைகள் தேவனுடைய வார்த்தையினால் ஸ்தாபிக்கப்பட்டு, காத்து வைக்கப்பட்டன [3:5-7].

2 Peter 3:8-9

Q? கர்த்தர் பிரியமானவர்களிடம் ஏன் பொறுமையாயிருந்தார்?

A. ஏனென்றால் அவர்கள் அழிந்துபோகாமல், யாவரும் மனம்திரும்ப சமயமுண்டாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார் [3:9].

2 Peter 3:10

Q? கர்த்தருடைய நாள் எப்படி வரும்?

A. கர்த்தருடைய நாள் திருடனைப்போல வரும் [3:10].

2 Peter 3:11-13

Q? பரிசுத்த வாழ்வு மற்றும் தேவபக்தியோடுள்ள தொடர்பில் பிரியமானவர்கள் எப்படிப்பட்ட மக்களாய் வாழ வேண்டுமென்று பேதுரு ஏன் கேட்டான்?

A. ஏனென்றால் வானங்களும் பூமியும் அழியப்போகிறது; மேலும் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியில் நீதி வாசம்செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் [3:11-13].

2 Peter 3:14-16

Q? பவுலிற்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தையும், மற்ற வேதவாக்கியங்களையும் திரித்து கூறுகிற சீஷராக்கப்படாதவர்களுக்கும், உறுதியில்லாத மனிதருக்கும் என்ன நடக்கும்?

A. அவர்களின் செயல்கள் அவர்களின் சொந்த அழிவில் முடியும் [3:15-16].

2 Peter 3:17-18

Q? வஞ்சகத்தினால் தங்கள் உத்தமத்தை இழந்து வழிவிலகிப் போவதற்கு மாறாக, பிரியமானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று பேதுரு கட்டளையிட்டான்?

A. கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளரும்படி அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான் [3:17-18].