Hebrews
Hebrews 1
Hebrews 1:1-3
Q? பூர்வகாலங்களில் தேவன் எவ்வாறு திருவுளம்பற்றினார் ?
A. பூர்வகாலங்களில் தேவன் பங்குபங்காகவும், வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் திருவுளம்பற்றினார்[1:1].
Q? இந்த நாட்களில் தேவன் எப்படி பேசினார் ?
A. தேவன் இந்த நாட்களில் தம்முடைய குமாரன் மூலமாய் பேசினார் [1:2].
Q? யாரைக்கொண்டு உலகம் உண்டானது ?
A. இந்த உலகம் மனுஷகுமாரன் மூலமாய் உண்டாயிற்று [1:2].
Q? சர்வமும் எப்படி நீடிக்கின்றது ?
A. தேவனுடைய குமாரனாகிய வல்லமையான வசனத்தினால் சர்வமும் நிற்கின்றது [1:3].
Q? குமாரன் எவ்விதத்தில் தேவனுடைய மகிமையையும்,அவருடைய சாராம்சத்தையும் வெளிப்படுத்தினார் ?
A. குமாரன் தேவ மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார் [1:3].
Hebrews 1:4-5
Q? தேவனுடைய குமாரன் தேவ தூதர்களில் எப்படிப்பட்டவராயிருக்கிறார் ?
A. தேவனுடைய குமாரன் தேவ தூதர்களிலும் மேன்மையுள்ளவரானார் [1:4].
Hebrews 1:6-7
Q? குமாரன் இந்த உலகத்திற்கு அனுப்பட்டபோது தேவ தூதர்களுக்கு தேவனின் கட்டளை என்ன ?
A. குமாரன் இந்த உலகத்திற்கு அனுப்பட்டபோது தேவ தூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளும்படி தேவன் அவர்களுக்கு கட்டளைக் கொடுத்தார் [1:6].
Hebrews 1:8-9
Q? குமாரனின் சிங்காசனம் எவ்வளவு காலம்வரை இருக்கும் ?
A. குமாரனின் சிங்காசனம் என்றென்றைக்கும் இருக்கும் [1:8].
Q? குமாரன் விரும்புவதும், குமாரன் வெறுப்பதும் எது ?
A. அவர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறார் [1:9].
Hebrews 1:10-12
Q? உலகத்தின் முடிவின் நாளில் வானத்திற்கும், பூமிக்கும் சம்பவிப்பது என்ன ?
A. வானமும் பூமியும் அழிந்து, சால்வையைப் போல் சுருட்டப்படும் [1:10-11].
Hebrews 1:13-14
Q? தேவன் தம்முடைய குமாரனை, எவைகள் சம்பவிக்கும்வரை எங்கே உட்காரும்படி கூறினார் ?
A. தேவன் குமாரனின் சத்துருக்களை அவரின் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும் வரை குமாரனை வலதுபாரிசத்தில் உட்காரும் என்று சொன்னார் [1:13].
Q? தேவ தூதர்களுக்கு மாம்ச சரீரம் உண்டோ ?
A. இல்லை. அவைகள் ஆவியாயிருக்கின்றன [1:7,14].
Q? தேவதூதர்கள் யாருக்கு ஊழியம் செய்வார்கள் ?
A. இரட்சிப்பை சுதந்தரிக்கப்போகிறவர்கள்னிமித்தம் ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்ட பணிவிடைக்காரர்கள் [1:14].
Hebrews 2
Hebrews 2:1
Q? ஏன் விசுவாசிகள் தாங்கள் கேள்விப்பட்டதில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் ?
A. விசுவாசிகள் தாங்கள் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு அவைகளில் மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டும்[2:1].
Hebrews 2:2-4
Q? எல்லா அக்கிரமங்களுக்கும் கீழ்ப்படியாமைக்கும் கிடைக்கப்போவது எது ?
A. எல்லா அக்கிரமங்களுக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனைக் கிடைக்கும் [2:2].
Q? இரட்சிப்பைக் குறித்து கர்த்தரால் அறிவிக்கப்பட்டதும், தேவனால் சாட்சியளிக்கப்பட்டதும் எது ?
A. அடையாளம், அற்புதம், பலவிதமான பலத்த செய்கையும் மற்றும் பரிசுத்த ஆவியும் நமக்கு பரிசாக தேவானால் சாட்சியளிக்கப்பட்டிருக்கிறது [2:4].
Hebrews 2:5-6
Q? இனி வரும் உலகை யார் ஆளுகை செய்வதில்லை ?
A. இனி வரும் உலகை தேவ தூதர்கள் ஆளுகை செய்வதில்லை[2:5].
Hebrews 2:7-8
Q? இனி வரும் உலகை யார் ஆளுகை செய்வார் ?
A. இனி வரும் உலகை மனிதன் ஆளுகை செய்வான் [2:6-8].
Hebrews 2:9-10
Q? யாருக்காக இயேசு மரணத்தை ருசிபார்த்தார் ?
A. மனிதனுக்காக இயேசு மரணத்தை ருசிபார்த்தார் ? [2:9].
Q? யாரை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பது தேவனுடைய சித்தம் ?
A. அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பது தேவனுடைய சித்தம்[2:10].
Hebrews 2:11-12
Q? எந்த இருவரும் ஒருவராலே [தேவனாலே] உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள் ?
A. பரிசுத்தம் செய்கிறவரும், பரிசுத்தம் செய்யப்படுகிறவர்களுமாகிய இருவரும் ஒருவராலே [தேவனாலே] உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள்[2:11].
Hebrews 2:13-15
Q? இயேசுவின் மரணத்தினால் யார் பயனற்று போனது ?
A. இயேசுவின் மரணத்தினால் பிசாசு பயனற்றவனானான் [2:14].
Q? இயேசுவின் மரணத்தினால் மனிதர்கள் எப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் ?
A. இயேசுவின் மரணத்தினால் மனிதர்கள் மரணபயத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்[2:15].
Hebrews 2:16-18
Q? எதினால் இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரரைப் போலாகவேண்டியிருந்தது ?
A. ஜனங்களின் பாவங்களை நிவிர்த்திசெய்வதற்கேதுவாக, தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியருக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரரைப் போலாகவேண்டியிருந்தது[2:17].
Q? சோதிக்கப்படுகிறவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு உதவி செய்ய முடிகிறது ?
A. இயேசு; அவர் தாமே சோதிக்கப்பட்டு, பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் [2:18].
Hebrews 3
Hebrews 3:1-4
Q? எபிரேய நிருபத்தை எழுதிய எழுத்தாளர் இயேசுவுக்கு கொடுக்கும் இரண்டு பெயர்கள் என்னென்ன ?
A. எபிரேய நிருபத்தை எழுதிய எழுத்தாளர், இயேசுவை அப்போஸ்தலர் என்றும் பிரதான ஆசாரியன் என்றும் கூறுகிறான் [3:1].
Q? ஏன் இயேசு, மோசேயைப் பார்க்கிலும் அதிக மகிமையுடயவராய் எண்ணப்பட்டார் ?
A. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் ஆயினும், இயேசுவே அந்த வீட்டை உண்டுபண்ணினவர் எனவே இயேசு, மோசேயைப் பார்க்கிலும் அதிக மகிமையுடயவராய் எண்ணப்பட்டார்[3:2-3].
Hebrews 3:5-6
Q? தேவனுடைய வீட்டில் மோசே செய்தது என்ன ?
A. மோசே தேவனுடைய வீட்டில் பணிவிடைக்காரனாயிருந்தான் [3:5].
Q? எதைக் குறித்து மோசே சாட்சிகொடுத்தான் ?
A. சொல்லப்படபோகிற காரியங்களுக்காக மோசே சாட்சிகொடுத்தான்[3:5].
Q? தேவனுடைய வீட்டில் இயேசுவின் செயல் என்ன ?
A. இயேசு தேவனுடைய வீட்டிற்கு மேற்பட்டவராயிருக்கிறார் [3:6].
Q? யார் தேவனுடைய ஆலயம் ?
A. முடிவுபரியந்தம் உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கும் விசுவாசிகளே தேவனுடைய ஆலயம் [3:6].
Hebrews 3:7-8
Q? வனாந்திரத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனம் தேவனுடைய சத்தம் கேட்டு செய்தது என்ன ?
A. இஸ்ரவேலர்கள் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள் [3:7-8].
Hebrews 3:9-11
Q? வழுவிப்போகிற இருதயமுள்ள இஸ்ரவேலருக்கு தேவன் செய்த ஆணை என்ன ?
A. தேவனுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று தேவன் ஆணையிட்டார் [3:10-11].
Hebrews 3:12-13
Q? சகோதரர்கள் எதைக்குறித்து ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கப்பட்டனர் ?
A. அவிசுவாசமுள்ள பொல்லாதவர்களைப் போல் தேவனை விட்டு விலகாதிருக்கும்படி எச்சரிக்கப்பட்டனர் [3:12].
Q? சகோதரர்கள் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு என்ன செய்யவேண்டும் ?
A. சகோதரர்கள்; ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லவேண்டும் [3:13].
Hebrews 3:14-15
Q? கிறிஸ்துவின் பங்குள்ளவர்களானதினால், விசுவாசிகள் என்ன செய்யவேண்டும் ?
A. விசுவாசிகள், ஆரம்பத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையில் இறுதிவரை உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கவேண்டும் [3:14].
Hebrews 3:16-19
Q? நாற்பது வருடம் தேவன் யாரிடத்தில் கோபமாயிருந்தார் ?
A. வனாந்திரத்தில் பாவம் செய்தவர்களிடம் தேவன் கோபமாயிருந்தார்[3:17].
Q? தேவன்மேல்கோபமாயிருந்தவர்களுக்கு சம்பவித்தது என்ன ?
A. அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்று [3:17].
Q? கீழ்ப்படியாத இஸ்ரவேலரால் ஏன் இளைப்பறுதளுக்குள் பிரவேசிக்ககூடாமற்போயிற்று ?
A. அவர்களுடைய அவிசுவாசத்தினாலே அவர்களால் அதில் பிரவேசிக்ககூடாமற்போயிற்று [3:19].
Hebrews 4
Hebrews 4:1-2
Q? இஸ்ரவேலரும், விசுவாசிகளும் கேள்விப்பட்ட நற்செய்தி என்ன ?
A. இஸ்ரவேலரும், விசுவாசிகளும் தேவனுடைய இளைப்பாறுதலைக் குறித்து நற்செய்தியைக் கேட்டனர் [4:2].
Q? ஏன் அந்த நற்செய்தி இஸ்ரவேலருக்கு பிரயோஜனம் இல்லாமற்போயிற்று ?
A. இஸ்ரவேலர்கள் நற்செய்தியை விசுவாசம் இல்லாமல் கேட்டபடியினால் அது அவர்களுக்கு பிரயோஜனம் இல்லாமற்போயிற்று [4:2].
Hebrews 4:3-5
Q? தேவனுடைய இளைப்பாறுதலில் யார் பிரவேசிப்பார்கள்?
A. நற்செதியைக் கேட்டு அதை விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பார்கள் [4:2-3].
Q? தேவன் தமது கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்தது எப்போது ?
A. ஆதியிலே தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் [4:3-4].
Q? இஸ்ரவேலரையும் அவர்களுடைய இளைப்பாறுதலையும் குறித்து தேவன் கூறுவது என்ன ?
A. தேவன்: இஸ்ரவேலர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லயென்று கூறுகிறார் [4:5].
Hebrews 4:6-7
Q? இப்போது தேவன் மனிதனுக்கு தம்முடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க குறித்திருக்கும் நாள் எது ?
A. இன்றே தேவன் அவருடைய இளைப்பாறுதளுக்கென்று குறித்திருக்கிறார் [4:7].
Q? தேவனுடைய இளைப்பாறுதலில் மனிதன் பிரவேசிக்க என்ன செய்யவேண்டும் ?
A. அவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அவனுடைய இருதயத்தை கடினப்படுத்தாதிருக்கவேண்டும் [4:7].
Hebrews 4:8-11
Q? தேவனுடைய பிள்ளைகளுக்கென்று ஆயத்தம்பண்ணப்படுவது எது ?
A. தேவனுடைய பிள்ளைகள் ஓய்ந்திருக்கும்படி அவர்களுக்கென்று இளைப்பாறுதல் ஆயத்தம்பண்ணப்படுகிறது[4:9].
Q? தேவனுடைய இளைபாறுதலில் பிரவேசிப்பவன் எதிலும் ஓய்ந்திருப்பான் ?
A. தேவனுடைய இளைபாறுதலில் பிரவேசிப்பவன் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் [4:10].
Q? எதினால் விசுவாசியானவன் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிதையாயிருக்கவேண்டும் ?
A. விசுவாசியானவன், இஸ்ரவேலரைப் போல கீழ்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க எச்சரிக்கையாயிருக்கவேண்டும்[4:11].
Hebrews 4:12-13
Q? தேவனுடைய வார்த்தை எதிலும் கருக்கானதாயுள்ளது ?
A. தேவனுடைய வார்த்தை எந்தப் பட்டயத்திலும் கருக்கனதாயிருக்கிறது [4:12].
Q? தேவனுடைய வார்த்தை எதை பிரிக்க வல்லமையுள்ளது ?
A. தேவனுடைய வார்த்தை ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க வல்லமையுள்ளது[4:12].
Q? தேவனுடைய வார்த்தை எதை வகையருக்கும் ?
A. தேவனுடைய வார்த்தை இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையருக்கும்[4:12].
Q? தேவனுடைய பார்வைக்கு மறைவானது எது ?
A. தேவனுடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை [4:13].
Hebrews 4:14-16
Q? யார் விசுவாசிகளுக்கு மகா பிரதான ஆசாரியனாக உதவி செய்கிறார் ?
A. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து விசுவாசிகளுக்கு மகா பிரதான ஆசாரியனாக உதவி செய்கிறார்[4:14].
Q? ஏன் இயேசு விசுவாசிகளுடைய பலவீனங்களில் பரிதபிக்கிறார் ?
A. நம்மைப்போல எல்லாவிதத்திலும் இயேசுவும் சோதிக்கப்பட்டபடியினால் அவர் விசுவாசிகளின் பலவீனங்களில் பரிதபிக்கிறார் [4:15].
Q? இயேசு எத்தனை முறை பாவம் செய்தார் ?
A. இயேசு, பாவமில்லாதவராயிருக்கிறார் [4:15].
Q? ஏற்றக்காலத்தில் விசுவாசிகள் இரக்கத்தையும், கிருபையையும் பெற என்ன செய்யவேண்டும் ?
A. ஏற்றக்காலத்தில் விசுவாசிகள் தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேர வேண்டும்[4:16].
Hebrews 5
Hebrews 5:1-3
Q? எந்த பிரதான ஆசாரியனும் மக்களுக்காக என்ன செய்வான் ?
A. எந்த பிரதான ஆசாரியனும் மக்களுடைய பாவங்களுக்காக காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்துவான் [5:1]
Q? ஜனங்களுக்காக செய்வதுபோல, பிரதான ஆசாரியன் யாருக்காகவும் பலிசெலுத்தவேண்டும் ?
A. பிரதான ஆசாரியன் தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டும் [5:3].
Hebrews 5:4-5
Q? ஒருவன் தேவனுடைய பிரதான ஆசாரியனான கனத்தை பெறவேண்டுமானால் எப்படியாகும் ?
A. வனுடைய பிரதான ஆசாரியன் எனப்ப்படும்படிக்கு அவன் தேவனால் அழைக்கப்படவேண்டும் [5:4].
Q? கிறிஸ்துவை பிரதான ஆசாரியனாக அறிவித்தது யார் ?
A. தேவன்; கிறிஸ்துவை ரதான ஆசாரியனாக அறிவித்தார் [5:5,10].
Hebrews 5:6
Q? எவ்வளவு காலம் கிறிஸ்து தேவனுடைய பிரதான ஆசாரியனாயிருப்பார் ?
A. என்றென்றைக்கும் கிறிஸ்து தேவனுடைய பிரதான ஆசாரியனாயிருப்பார்[5:6].
Q? எந்த முறைமையின்படி கிறிஸ்து பிரதான ஆசாரியனாயிருக்கிறார் ?
A. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி கிறிஸ்து பிரதான ஆசாரியனாயிருக்கிறார்[5:6,10].
Hebrews 5:7-8
Q? கிறிஸ்து ஜெபித்தபொழுது ஏன் தேவனால் அந்த விண்ணப்பம் கேட்கப்பட்டது ?
A. கிறிஸ்துவினுடைய விண்ணப்பம் தேவன்மேல் இருந்த பயபக்தியினால் கேட்கப்பட்டது [5:7].
Q? கிறிஸ்து எப்படி கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் ?
A. அவர் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்[5:8].
Hebrews 5:9-11
Q? கிறிஸ்து யாருக்காக நித்திய இரட்சிப்பின் காரணரானார் ?
A. தமக்குக் கீழ்ப்படிகிற யாவருக்கும் கிறிஸ்து நித்திய இரட்சிப்பை அடையும்படி காரணரானார்[5:9].
Q? இந்த நிருபத்தை வாசிக்கும் வாசகர்களின் ஆவிக்குரிய நிலை என்ன ?
A. இந்த நிருபத்தை வாசிக்கும் வாசகர்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களும், தேவனுடைய வாக்கியங்களின் மூலஉபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறவர்கள் [5:11-12].
Hebrews 5:12-14
Q? விசுவாசிகள் பாலகத்தன்மையினின்று பூரணவயதுள்ளவர்களாகும்படி வளருவதற்கு இந்த நிருபத்தின் எழுத்தாளர் கூறுவது என்ன ?
A. விசுவாசிகள் நன்மை, தீமை இன்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்கிறவர்களாகவும், ஞானோந்திரியங்களுடயவர்களாகவும் வேண்டுமென்று இந்த நிருபத்தின் எழுத்தாளர் கூறுகிறார் [5:14].
Hebrews 6
Hebrews 6:1-3
Q? எபிரேய நிருபத்தை எழுதின எழுத்தாளர் விசுவாசிகளை எதில் நிலைத்திருக்கும்படி விரும்புகிறார் ?
A. எபிரேய நிருபத்தை எழுதின எழுத்தாளர் விசுவாசிகளை பூரணராகும்படி நிலைத்திருக்க விரும்புகிறார்[6:1].
Q? கிறிஸ்துவின் உபதேசமாகிய அஸ்திபாரம் என்று இந்த நிருபத்தின் ஆசிரியர் கூறும் வரிசை யாது ?
A. செத்த கிரியைகளுக்கு நீங்கலாகி மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஞானஸ்நானத்துக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயர்தெழுதல் மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளே [6:1-2].
Hebrews 6:4-6
Q?பரிசுத்த ஆவியை பெற்று பங்குள்ளவர்கள் விழுந்துபோனால், எது கூடாதகாரியம் ?
A. பரிசுத்த ஆவியை பெற்று பங்குள்ளவர்கள் விழுந்துபோனால், மனந்திரும்பும்படி அவர்களை புதுபிப்பது கூடாதகாரியம்[6:4-6].
Q? அறிவினால் இந்த ஜனங்கள் ருசிபார்த்தது என்ன ?
A. அறிவினால் இந்த ஜனங்கள் தேவனுடைய ஈவையும், நல்வார்த்தையையும், இனி வரும் உலகத்தின் பெலனையும் ருசிபார்த்தார்கள் [6:4-5].
Q? ஏன் இவர்களால் மனந்திரும்பும்படி புதுபிப்பது கூடாதகாரியம் ?
A. தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்தபடியினால் மனந்திரும்பும்படி அவர்களை புதுபிப்பது கூடாதகாரியம்[6:6].
Hebrews 6:7-8
Q? மழையைப் பெற்றுக்கொள்ளும் நிலம், முள்ளையும் புதரையும் விளைப்பித்தால் என்ன சம்பவிக்கும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் ?
A. மழையைப் பெற்றுக்கொள்ளும் நிலம் முள்ளையும் புதரையும் விளைப்பித்தால் அது கடைசியில் எரிக்கப்பட்டுப் போகும் என்கிறார்[6:7-8].
Hebrews 6:9-10
Q? இந்த நிருபத்தை எழுதும் எழுத்தாளருக்கு விசுவாசிகளைக் குறித்து எதிர்பார்ப்பு என்ன ?
A. இந்த நிருபத்தை எழுதும் எழுத்தாளருக்கு விசுவாசிகளிடம் இரட்சிப்புக்குறிய காரியங்கள் இருக்கவேண்டுமென்பதே எதிர்பார்ப்பு[6:9].
Q? விசுவாசிகளிடம் தேவன் எதை மறந்துபோவதில்லை ?
A. விசுவாசிகளையும், அவர்கள் பரிசுத்தவான்களுக்கு செய்யும் ஊழியத்தையும், தேவனுடைய நாமத்திற்காக அவர்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் தேவன் மறப்பதில்லை [6:10].
Hebrews 6:11-12
Q? தேவன் வாக்குப்பபண்ணினதை விசுவாசிகள் சுதந்தரிக்கும்படிக்கு எதை அவர்கள் மாதிரியாக காண்பிக்கவேண்டும் ?
A. தேவன் வாக்குப்பபண்ணினதை விசுவாசிகள் சுதந்தரிக்கும்படிக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாகும்படி முடிவுபரியந்தம் விசுவாசிகள் மாதிரியைக் காண்பிக்கவேண்டும் [6:12].
Hebrews 6:13-15
Q? தேவன் ஆபிரகாமுக்கு வாக்குபண்ணினதைப் பெற்றுக்கொள்ள அவன் செய்தது என்ன ?
A. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குபண்ணினதைப் பெற்றுக்கொள்ள அவன் பொறுமையுடன் காத்திருந்தான் [6:13-15].
Hebrews 6:16-18
Q? ஏன் தேவன் தாம் வாக்குபண்ணினதை ஆணையினாலே ஸ்திரப்படுத்தினார் ?
A. வாக்குபண்ணப்பட்டதை சுதந்தரிக்கிறவர்களுக்கு தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தை பரிபூரணமாய் காண்பிக்கும்படிக்கு சித்தமுள்ளவராய் அதை ஆணையினாலே ஸ்திரப்படுத்தினார்[6:17].
Q? எது தேவனால் கூடாதகாரியம் ?
A. பொய் சொல்லுவது தேவனால் கூடாதகாரியம்[6:18].
Hebrews 6:19-20
Q? விசுவாசிகளுடைய ஆத்துமாவுக்கு தேவன் செய்வதைக் குறித்த நம்பிக்கை என்ன ?
A. விசுவாசிகளுடைய ஆத்துமாவுக்கு தேவன் அவனுடைய ஆத்துமாவை நிலைநிறுத்தும் நம்பிக்கையான நங்கூரம் [6:19].
Q? விசுவாசிகளுக்கு முன்னோடியானவராக இயேசு எங்கே பிரவேசித்தார் ?
A. விசுவாசிகளுக்கு முன்னோடியானவராக அந்தத் திரைக்குள் பிரவேசித்தார் [6:20].
Hebrews 7
Hebrews 7:1-3
Q? மெல்கிசேதேக்குக்கு உண்டாயிருந்த இரண்டு நாமங்கள் என்ன ?
A. மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான் [7:1].
Q? ஆபிரகாம் மெல்கிசேதேக்குவிடம் கொடுத்தது என்ன ?
A. மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் [7:2].
Q? மெல்கிசேதேக்கு என்பதன் பொருள் என்ன ?
A. மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், சமாதானத்தின் ராஜா என்றும் பொருள் [7:2].
Q? மெல்கிசேதேக்கின் முன்னோர்கள் யார் ? மற்றும் அவன் மரித்தது எப்போது ?
A. மெல்கிசேதேக்கு என்பவன் வம்ச வரலாறு இல்லாதவனும், முடிவு இல்லவனுமாயிருந்தான் [7:3].
Hebrews 7:4-6
Q? ஆசாரியர்கள் எங்கே இருந்து வருகிறவர்கள், நியாயப்பிரமாணத்தின்படி யார் ஆசாரியர்கள், தசமபாகம் வாங்குகிறவர்கள் யார் ?
A. நியாயப்பிரமாணத்தின்படி வந்த ஆசாரியர்கள் லேவியரிலும், ஆபிரகாமின் அரையிலுமிருந்து வந்தவர்கள் [7:5].
Hebrews 7:7-10
Q? மெல்கிசேதேக்கு மற்றும் ஆபிரகாம் இவர்களில் பெரியவன் யார் ?
A. ஆபிரகாமை ஆசீர்வதித்ததினால் மெல்கிசேதேக்கு தான் பெரியவன் [7:7]
Q? எதினால் லேவியர்களும் மெல்கிசேதேக்குவிடம் தங்கள் தசமபாகங்களைச் செலுத்தினார்கள் ?
A. லேவியர்கள் ஆபிரகாமின் அரையிலிருந்து வந்தபடியினால் மெல்கிசேதேக்குவிடம் தங்கள் தசமபாகங்களைச் செலுத்தினார்கள் [7:9-10].
Hebrews 7:11-12
Q? மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஏன் மற்றொரு ஆசாரியன் எழும்பவேண்டியிருந்தது ?
A. லேவியர்களின் முறைமையின்படி ஆசாரியத்துவம் அடைந்தால் அது பூரணமடையாது ஆகவே மெல்கிசேதேக்கின் முறைமையின்படி மற்றொரு ஆசாரியன் எழும்பவேண்டியிருந்தது[7:11].
Q? ஆசாரியத்துவம் மாறும்போது எவைகளும் மாற்றப்படவேண்டும் ?
A. ஆசாரியத்துவம் மாறும்போது நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும் [7:12].
Hebrews 7:13-14
Q? எந்த கோத்திரத்திலிருந்து இயேசு தோன்றினார் ? அந்த கோத்திரம் அதற்கு முன்பு ஆசாரியத்துவத்தில் இருந்ததோ ?
A. இயேசு யூதாகோத்திரத்தில் தோன்றினார், அவர்கள் அதற்கு முன்பு ஆசாரியத்துவத்தில் இருந்ததில்லை [7:14].
Hebrews 7:15-17
Q? மெல்கிசேதேக்கின் முறைமையின்படி எவ்விதத்தில் இயேசு ஆசாரியரானார் ?
A. அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானார் [7:16].
Hebrews 7:18-19
Q? பெலவீனமுள்ளதும், பயனற்றதும் என்று எவைகள் மாற்றப்பட்டது ?
A. முந்தையக் கட்டளைகள் பெலவீனமுள்ளதும், பயனற்றதும் என்று மாற்றப்பட்டது[7:18-19].
Hebrews 7:20-21
Q? விசுவாசிகள் தேவனால் உறுதிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவுக்குள் அடைந்திருக்கும் நிச்சயம் எது ?
A. கிறிஸ்துவே என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறார் என்று தேவன் உறுதியாய் ஆணையிட்டதினிமித்தம் விசுவாசிகள் நம்பிக்கையாயிருக்கிறார்கள் [7:19-21].
Hebrews 7:22-24
Q? எதற்கு இயேசு பிணையாளியானார் ?
A. கிறிஸ்து உடன்படிக்கைக்கு பிணையாளியானார்[7:22].
Hebrews 7:25-26
Q? தம் மூலமாய் தேவனிடத்தில் சேருகிரவர்களை இயேசு அவர்களை எப்படி முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் ?
A. தம் மூலமாய் தேவனிடத்தில் சேருகிரவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு இயேசு எப்போதும் உயிரோடிருக்கிறவர் ஆகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் [7:25].
Q? இயேசு; விசுவாசிகளுக்கு ஏற்ற ஆசாரியராயிருப்பதற்கு கொண்டிருக்கும் நான்கு பண்புகள் யாது ?
A. இயேசு; பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவர் என்பதே [7:26].
Hebrews 7:27-28
Q? ஜனங்களுடைய பாவங்களுக்காக இயேசு செலுத்தும் பலி எது ?
A. ஜனங்களுடைய பாவங்களுக்காக இயேசு தன்னையே பலியிட்டார் [7:27].
Q? இயேசு தனது சொந்த பாவங்களுக்காக என்ன பலியை செலுத்தவேண்டும் ?
A. இயேசு பாவமில்லாதவரானபடியினால் தனது சொந்த பாவங்களுக்காக அவர் பலியிடவேண்டுவதில்லை [7:26-27].
Q? நியாயப்பிரமாணத்தினால் உண்டான ஆசாரியர்களில் இயேசு எப்படி வேறுபட்டவர் ?
A. நியாயப்பிரமாணத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரதான ஆசாரியர்கள் பெலவீனமுள்ளவர்கள், இயேசுவோ என்றென்றைக்கும் பூரணராயிருக்கிறார் [7:28].
Hebrews 8
Hebrews 8:1-2
Q? விசுவாசிகளின் பிரதான ஆசாரியர் எங்கே உட்கார்ந்திருக்கிறார் ?
A. பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்தில் விசுவாசிகளின் பிரதான ஆசாரியர் உட்கார்ந்திருக்கிறார்[8:1].
Q? மெய்யான கூடாரம் எங்கே உள்ளது ?
A. மெய்யான கூடாரம் பரலோகத்தில் உள்ளது[8:2].
Hebrews 8:3-5
Q? எல்லா ஆசாரியர்களும் என்ன செய்ய அவசியமாயிருக்கிறது ?
A. எல்லா ஆசாரியர்களும் பலிசெலுத்துவது அவசியமாயிருக்கிறது[8:3].
Q? நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கை செலுத்துகிற ஆசாரியர்கள் எங்கே இருக்கிறார்கள் ?
A. நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கை செலுத்துகிற ஆசாரியர்கள் பூமியிலே இருக்கிறார்கள்[8:4].
Q? ஆசாரியர்கள் பூமியில் என்ன காரியங்களைச் செய்கிறார்கள் ?
A. பூமியில் இருக்கும் ஆசாரியர்கள் பரலோகத்தில் உள்ள சாயலும், நிழலுக்கும் ஒத்தபடியே காரியங்களைச் செய்வார்கள் [8:5].
Q? எந்த மாதிரியின்படி பூமியில் கூடாரம் கட்டப்பட்டிருக்கிறது ?
A. தேவன் மோசேக்கு மலையின்மேல் கொடுத்த மாதிரியின்படி பூமியில் கூடாரம் கட்டப்பட்டிருக்கிறது[8:5].
Hebrews 8:6-7
Q? ஏன் கிறிஸ்து முக்கியமான ஆசாரிய ஊழியத்தைப் பெற்றிருக்கிறார் ?
A. கிறிஸ்து விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ அந்தப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தைப் பெற்றிருக்கிறார்[8:6].
Hebrews 8:8-9
Q? முதலாம் கற்பனையில் மனிதர்களிடம் பிழை கண்டு தேவன் செய்த உடன்படிக்கை என்ன ?
A. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை ஏற்படுத்தினார் [8:8].
Hebrews 8:10
Q? தேவன் தமது புதிய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்துவதாக கூறுவது என்ன ?
A. தேவன்: என்னுடைய பிரமாணங்களை ஜனங்களின் மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் [8:10].
Hebrews 8:11-12
Q? புதிய உடன்படிக்கையில் யார் தேவனை அறிந்துகொள்வார் ?
A. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாரும் தேவனை அறிந்துகொள்வார்கள் [8:11].
Q? புதிய உடன்படிக்கையில் ஜனங்களின் பாவங்களை என்ன செய்வதாக தேவன் கூறுகிறார் ?
A. தேவன்: ஜனங்களின் பாவங்களையும், அக்கிரமங்களையும் நினையாதிருப்பேன் [8:12].
Hebrews 8:13
Q? புதிய உடன்படிக்கை என்று தேவன் கூறுகையில், தேவன் எதை முதன்மைப்படுத்துகிறார் ?
A. புதிய உடன்படிக்கை என்று தேவன் கூறுகையில், தேவன் பழைமையும், உருவழிந்து போக ஆயத்தமாயிருப்பதை முதன்மைப்படுத்துகிறார் [8:13].
Hebrews 9
Hebrews 9:1-2
Q? முதலாம் உடன்படிக்கையின் ஆராதனையின் ஸ்தலம் எது ?
A. முதலாம் உடன்படிக்கையின் ஆராதனையின் ஸ்தலம் என்பது பூமியில் உண்டாக்கப்பட்ட கூடாரமே [9:1-2].
Q? பூமியில் உண்டாக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது என்ன ?
A. பூமியில் உண்டாக்கப்பட்டிருந்த கூடாரத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்துஅப்பங்களும் இருந்தது [9:2].
Hebrews 9:3-5
Q? பூமியில் கூடாரமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது என்ன ?
A. மகா பரிசுத்த ஸ்தலத்தில் தூபகலசமும், உடன்படிக்கைப்பெட்டியும் இருந்தன [9:4].
Hebrews 9:6-7
Q? அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதான ஆசாரியன் எப்போது பிரவேசிப்பான் ?பிரவேசிக்கும்முன் அவன் செய்வது என்ன ?
A. வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடு பிரவேசித்து, அந்த இரத்தத்தை தனக்காகவும், ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான் [9:7].
Hebrews 9:8-10
Q? இப்பொழுது இந்த நிருபத்தை வாசிக்கிறவர்களுக்கு ஒப்பனையாக செய்யப்பட்டது என்ன ?
A. பூமிக்குரிய கூடாரத்தில் செலுத்தப்படும் காணிக்கைகளும், பலிகளும் இக்காலத்திற்கு ஒப்பனையாக இருக்கின்றது [9:9].
Q? பூமிக்குரிய கூடாரத்தில் செலுத்தப்படும் காணிக்கைகள் எதைப் பூரணமாக்ககூடாது ?
A. பூமிக்குரிய கூடாரத்தில் செலுத்தப்படும் காணிக்கைகள் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியை பூரணமாக்ககூடாது [9:9].
Q? பூமிக்குரிய கூடாரத்தில் செலுத்தப்படும் காணிக்கைகள் எவ்வளவு காலம் ?
A. பூமிக்குரிய கூடாரத்தில் செலுத்தப்படும் காணிக்கைகள் புதிய உடன்படிக்கை நியமணம் பெறும்வரை [9:10].
Hebrews 9:11-12
Q? கிறிஸ்துவானவர் பலி செலுத்தும் ஆசரிப்புக் கூடாரத்தின் மகிமை என்ன ?
A. கிறிஸ்துவானவர் பலி செலுத்தும் ஆசரிப்புக் கூடாரம் பூமியைக் காட்டிலும் பூரணமானதும், மனிதனுடைய கைவேலையினால் செய்யப்படாததுமாயிருக்கிறது [9:11].
Q? பூமியைக் காட்டிலும் மேலான மகாபரிசுத்த ஸ்தலத்தில் இயேசுவானவர் பிரவேசிக்கும்போது அவர் செலுத்தும் காணிக்கை என்ன ?
A. பூமியைக் காட்டிலும் மேலான மகாபரிசுத்த ஸ்தலத்தில் இயேசுவானவர் பிரவேசிக்கும்போது அவர் செலுத்தும் காணிக்கை அவருடைய சொந்த இரத்தம் [9:12,14].
Q? கிறிஸ்துவானவருடைய பலி நிறைவேற்றியது என்ன ?
A. கிறிஸ்துவானவருடைய பலி நித்திய இரட்சிப்பை நமக்கு அருளியது [9:12].
Hebrews 9:13-15
Q? கிறிஸ்துவின் இரத்தம் விசுவாசிகளுக்கு செய்வது என்ன ?
A. ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு விசுவாசிகளின் மனச்சாட்சியை செத்த கிரியைகள் இல்லாமல் சுத்திகரிக்கின்றது [9:14].
Q? எதற்கு கிறிஸ்து மத்தியஸ்தராயிருக்கிறார் ?
A. புதிய உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராயிருக்கிறார்[9:15].
Hebrews 9:16-17
Q? புதிய உடன்படிக்கை எப்படி நிறைவேற்றப்படுகிறது ?
A. புதிய உடன்படிக்கை கிறிஸ்துவின் மரணத்தினால் நிறைவேற்றப்படுகிறது[9:17].
Hebrews 9:18-20
Q? பழைய உடன்படிக்கைக்கு எப்படிப்பட்ட மரணம் அவசியம் ?
A. பழைய உடன்படிக்கைக்கு இளங்காளை மற்றும் வெள்ளாட்டுக்கவின் மரணம் அவசியம்[9:18-19].
Hebrews 9:21-22
Q? இரத்தம் சிந்துதல் இல்லாமல் எது சம்பவிப்பதில்லை ?
A. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை [9:22].
Hebrews 9:23-24
Q? கிறிஸ்து நமக்காக இப்பொழுது எங்கே பிரவேசித்திருக்கிறார் ?
A. பரலோகத்தில் கிறிஸ்து நமக்காக தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்[9:24].
Hebrews 9:25-26
Q? பாவங்களை நீக்கும்படி கிறிஸ்து எத்தனை முறை தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் ?
A. பாவங்களை நீக்கும்படி கிறிஸ்து இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார் [9:26].
Hebrews 9:27-28
Q? ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்குபின் சம்பவிப்பது என்ன ?
A. ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்குபின், நியாயத்தீர்ப்பு அடையவேண்டும் [9:27].
Q? எதற்காக கிறிஸ்து இரண்டாவது முறை தோன்றுவார் ?
A. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி கிறிஸ்து இரண்டாவது முறை தோன்றுவார்[9:28].
Hebrews 10
Hebrews 10:1-4
Q? நியாயப்பிரமாணம் கிறிஸ்துவுடன் ஒப்பிடுகையில் என்ன உண்மையை உணர்த்துகிறது ?
A. நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் உண்மையின் நிழலாய் மாத்திரம் இருகின்றது [10:1].
Q? ஆராதனை செய்கிறவர்களுக்கு நியாயப்பிரமாணத்தின்படி பலிகள் எவ்விதத்தில் நினைவுகூருதல் உண்டாகிறது ?
A. பலிகள் நிறுத்தபடாமல் பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருடந்தோறும் நினைவுகூருதல் உண்டாகிறது [10:3].
Q? காளை மற்றும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தம் எவைகளை நீக்ககூடாது ?
A. காளை மற்றும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்ய முடியாது [10:4].
Hebrews 10:5-7
Q? கிறிஸ்து உலகத்தில் வரும்போது தேவன் அவருக்கு உண்டுபண்ணினது என்ன ?
A. கிறிஸ்துவுக்கு சரீரத்தை உண்டுபண்ணினார் [10:5].
Hebrews 10:8-10
Q? வழக்கத்தில் இருந்த எந்தக் காரியத்தை கிறிஸ்து வருகையால் தேவன் மாற்றிபோட்டார் ?
A. நியாயப்பிரமாணத்தின்படி செய்து வந்த பலிகளை கிறிஸ்து வருகையால் தேவன் மாற்றிபோட்டார் [10:8].
Q? எந்த வழக்கத்தை கிறிஸ்துவின் வருகையால் தேவன் ஸ்தாபித்தார் ? A. கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினிமித்தம் முதலாவதை நீக்கிப்போட்டு, இரண்டாவதை ஸ்தாபித்தார் [10:10].
Hebrews 10:11-14
Q? பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார கிறிஸ்து எதினால் காத்துக்கொண்டிருக்கிறார் ?
A. கிறிஸ்து தமது சத்துருக்களைத் தம்முடைய பாதப்படியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார் [10:12-13].
Q? ஒரே பலியினாலே பரிசுத்தமக்கப்படுகிறவர்களுக்கு கிறிஸ்து செய்தது என்ன ?
A. பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே கிறிஸ்து என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார் [10:14].
Hebrews 10:15-16
Hebrews 10:17-18
Q? பாவமன்னிப்பு உண்டானதால், எவைகளை செய்ய வேண்டுவதில்லை ?
A. பாவமன்னிப்பு உண்டானதால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படவேண்டியதில்லை [10:18].
Hebrews 10:19-22
Q? இப்போது விசுவாசிகள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் எதிலே பிரவேசிக்கிறார்கள் ?
A. இப்போது விசுவாசிகள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கிறார்கள்[10:19].
Q? விசுவாசிகளிடம் தெளிக்கப்பட்டதும், கழுவப்பட்டதும் எது ?
A. துர்மனச்சாட்சி நீங்க தெளிக்கப்பட்டவர்களாயும், சுத்தத்தண்ணீரால் கழுவப்பட்டவர்களாயும் விசுவாசிகள் மாற்றப்பட்டனர் [10:22].
Hebrews 10:23-25
Q? விசுவாசிகள் எதிலே உறுதியாயிருக்கவேண்டும் ?
A. விசுவாசிகள் அவர்களுடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் பூரணநிச்சயமாய் உறுதியாயிருக்கவேண்டும் [10:23].
Q? நாளானது சமீபமாய் வருகிறதை விசுவாசிகள் காணும்போது என்ன செய்ய வேண்டும் ?
A. நாளானது சமீபமாய் வருகிறதை விசுவாசிகள் காணும்போது ஒவ்வொருவருக்கும் புத்திச்சொல்லவேண்டும் [10:25].
Hebrews 10:26-27
Q? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்கள் எதை எதிர்பார்க்கவேண்டும் ?
A. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்கள் பாவங்களினிமித்தம் இனி செலுத்த பலி இனியிராமல் நியாயத்தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும் [10:26-27].
Hebrews 10:28-29
Q? தன்னை பரிசுத்தம் செய்த இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எதற்கு பாத்திரவான் ?
A. தன்னை பரிசுத்தம் செய்த இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் இரக்கம் பெறாமல் மோசேயின் பிரமாணத்தைக் காட்டிலும் கொடிதான ஆக்கினைக்குத் பாத்திரவானயிருப்பான் [10:28-29].
Hebrews 10:30-31
Q? பழிவாங்குதல் யாருக்குரியது ?
A. பழிவாங்குதல் தேவனுக்குரியது [10:30].
Hebrews 10:32-34
Q? இந்த நிருபத்தை பெற்ற விசுவாசிகள் தங்களுடைய ஆஸ்திகளை எப்படி கொள்ளையிடும்படி கொடுத்தார்கள் ?
A. பரலோகத்தில் அதிக மேன்மையும், நிலையுள்ளதுமான சுதந்திரம் அவர்களுக்கு உண்டென்று அறிந்து, அவர்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய் கொள்ளையிடும்படி கொடுத்தார்கள் [10:34].
Hebrews 10:35-37
Q? தேவன் தமக்கு வாக்குப்பண்ணினதை பெறும்படி விசுவாசிகளுக்கு என்ன அவசியம் ?
A. தேவன் தமக்கு வாக்குப்பண்ணினதை பெறும்படி விசுவாசிகளுக்கு தைரியமும், பொறுமையும் வேண்டியதாயிருக்கிறது [10:35-36].
Hebrews 10:38-39
Q? நீதிமான் எதினால் பிழைப்பான் ?
A. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்[10:38].
Q? பின்வாங்குகிறவர்களைக் குறித்து தேவனின் யோசனை என்ன ?
A. பின்வாங்கிப்போகிறவர்கள்மேல் தேவனுடைய ஆத்துமா பிரியமாயிராது [10:38].
Q? இந்த நிருபத்தை பெற்றவர்களைக் குறித்து எழுத்தாளரின் எதிர்பார்ப்பு என்ன ?
A. எழுத்தாளரின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த நிருபத்தை பெற்றவர்கள் கெட்டுபோகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கும்படி விரும்புகிறான் [10:39].
Hebrews 11
Hebrews 11:18-40
Q? தேவன் மலையின்மேல் பேசுகையில் இஸ்ரவேலர்கள் என்னவென்று வேண்டிக்கொண்டார்கள் ?
A. பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லாதபடிக்கு இஸ்ரவேலர்கள் வேண்டிக்கொண்டார்கள் [12:19].
Hebrews 12
Hebrews 12:22-24
Q? கிறிஸ்துவில் இருக்கும் விசுவாசிகள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படி இஸ்ரவேலர் சென்ற மலைக்கு செல்லாதபடி எங்கே வரவேண்டும் ?
A. கிறிஸ்துவின் விசுவாசிகள் சியோன் மலையினிடதிற்க்கும் ஜீவனுள்ள தேவனுடைய நகரத்திற்கும் வரவேண்டும் [12:22].
Q? கிறிஸ்துவின் விசுவாசிகள் எப்படிப்பட்ட சங்கத்திற்கு வரவேண்டும் ?
A. பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற முதற்பேரானவரின் சங்கத்திற்கு கிறிஸ்துவின் விசுவாசிகள் வரவேண்டும் [12:23].
Q? கிறிஸ்துவின் விசுவாசிகள் யாரிடதிற்கு வரவேண்டும் ?
A. கிறிஸ்துவின் விசுவாசிகள் நீதிபதியாகிய தேவனிடதிற்க்கும், நீதிமான்களின் ஆவியினிடதிற்க்கும், மத்தியஸ்தராகிய இயேசுவினிடதிற்க்கும் வரவேண்டும் [12:23-24].
Hebrews 12:25-26
Q? பரலோகத்திலிருந்து பேசுகிறவரின் சத்தத்திற்கு செவிகொடாமல் விலகுகிறவனுக்கு சம்பவிப்பது என்ன ?
A. விலகிப்போனால் தேவனிடத்திலிருந்து அவன் தப்பிப்போவதில்லை [12:25].
Q? அசைவதும், மாறிப்போவதும் எது என்று தேவன் வாக்குப்பண்ணினார்?
A. தேவன் உண்டாக்கின எல்லாமே அசைந்து, மாறிப்போம் என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார் [12:26-27].
Hebrews 12:27-29
Q? அசைக்கப்படுவதல்லாமல் விசுவாசிகள் பெற்றுக்கொள்வது எது ?
A. விசுவாசிகள் அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுவார்கள் [12:28].
Q? விசுவாசிகள் எப்படி தேவனுக்கு ஆராதனை செய்யவேண்டும் ?
A. விசுவாசிகள் பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஆராதனை செய்யவேண்டும்[12:28].
Q? எதினால் தேவனை இவ்வாறு தொழுதுகொள்ளவேண்டும் ?
A. தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறபடியினால் தேவனை இவ்வாறு தொழுதுகொள்ளவேண்டும்[12:29].
Hebrews 13
Hebrews 13:1-2
Q? அந்நியரை உபசரிப்பதினால் சிலர் செய்தது என்ன ?
A. சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு [13:2].
Hebrews 13:3-4
Q? கட்டப்பட்டவர்களை விசுவாசிகள் என்னவென்று நினைத்துக்கொள்ளவேண்டும் ?
A. கட்டப்பட்டவர்களோடு நாமும் கட்டப்பட்டவர்களேன்றும் நினைத்துக்கொள்ள வேண்டும், நாமும் சரீரத்தில் இருக்கிறவர்களேன்று அறிந்து தீங்கு அனுபவிப்பவர்களை நினைத்துக்கொள்ளவேண்டும் [13:3].
Q? எது யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்கிறது ?
A. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்கிறது[13:4].
Q? வேசிகள்ளருக்கும், விபச்சாரக்காரருக்கும் தேவன் செய்வது என்ன ?
A. வேசிகள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் [13:4].
Hebrews 13:5-6
Q? விசுவாசிகள் பணஆசையில்லாதவர்களாய் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ?
A. தேவன்: நான் உங்களைவிட்டு விலகுவதுமில்லை உங்களைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறபடியினால் விசுவாசிகள் பணஆசையில்லாதவர்களாய் நடந்துகொள்ளவேண்டும்[13:5].
Hebrews 13:7-8
Q? யாருடைய விசுவாசத்தை விசுவாசிகள் பின்பற்றவேண்டும் ?
A. தேவ வசனத்தை உங்களுக்கு போதித்து உங்களை நடத்தினவர்களை நினைத்து அவர்களுடைய விசுவாசத்தை விசுவாசிகள் பின்பற்றவேண்டும்[13:7].
Hebrews 13:9-11
Q? எப்படிப்பட்ட அந்நிய போதனைகளுக்கு விசுவாசிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி எழுத்தாளர் கூறுகிறார் ?
A. அந்நிய போதனையான உணவு பதார்த்தத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி எழுத்தாளர் கூறுகிறார் [13:9].
Q? பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்ப்படும்படி மிருகங்களின் உடல்கள் எங்கே சுட்டெறிக்கப்படுகின்றன ?
A. மிருகங்களின் உடல்கள் பாளயத்திற்கு புறம்பே சுட்டெறிக்கப்படுகின்றன[13:11].
Hebrews 13:12-14
Q? இயேசு எங்கே பாடுபட்டார் ?
A. வாசலுக்கு புறம்பே இயேசுவும் பாடுபட்டார் [13:12].
Q? விசுவாசிகள் எங்கே செல்லவேண்டும் ? ஏன் ?
A. விசுவாசிகள் இயேசுவின் நிந்தையை சுமந்து பாளயத்திற்கு புறம்பே அவரிடத்திற்கு போகவேண்டும் [13:13].
Q? விசுவாசிகளுக்கு நிலையான நகரம் பூமியில் ஏது ?
A. விசுவாசிகளுக்கு நிலையான நகரம் இங்கே இல்லை [13:14].
Q? விசுவாசிகள் எந்த நகரத்தை நாடவேண்டும் ?
A. விசுவாசிகள் வரப்போகும் நிலையான நகரத்தையே நாடவேண்டும் [13:14].
Hebrews 13:15-17
Q? எப்படிப்பட்ட ஸ்தோத்திர பலியை தேவனுக்கு எப்போதும் விசுவாசிகள் செலுத்தவேண்டும் ?
A. துதியின் ஸ்தோத்திர பலியை தேவனுக்கு எப்போதும் விசுவாசிகள் செலுத்தவேண்டும்[13:15].
Q? விசுவாசிகள் தங்களை நடத்துகிறவர்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
A. விசுவாசிகள் தங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்து, அடங்கி நடந்துகொள்ள வேண்டும்[13:17].
Hebrews 13:18-19
Hebrews 13:20-21
Q? தேவன் விசுவாசிகளில் செய்வது என்ன ?
A. தேவன், கிறிஸ்துவைக் கொண்டு தமக்கு பிரியமானபடி விசுவாசிகளில் கிரியை செய்கிறார் [13:21].
Hebrews 13:22-23
Q? இந்த நிருபத்தின் எழுத்தாளர் யாருடன் வந்து விசுவாசிகளைக் காண்பான் ?
A. இந்த நிருபத்தின் எழுத்தாளர், தீமோத்தேயுவுடன் வந்து விசுவாசிகளைக் காண்பான்[13:23].