1 Corinthians
1 Corinthians 1
1 Corinthians 1:1-3
Q? பவுலை அழைத்தது யார்? அவர் என்னவாகும்படி அழைத்தார்?
A. இயேசு கிறிஸ்துவினாலே அப்போஸ்தலனாகும்படி பவுல் அழைக்கப்பட்டான் [1:1].
Q? பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு என்ன உண்டாகும்படி பவுல் விரும்பினான் ?
A. பவுல்; பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு கிருபையும் சமாதானமும் உண்டாகும்படி விரும்பினான் [1:3].
1 Corinthians 1:4-6
Q? கொரிந்து சபையை தேவன் எப்படி சம்பூர்ணமடையும்படி செய்தார் ?
A. இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்ற எல்லாவற்றிலும் சம்பூர்ணமாகும்படி செய்தார் [1:5].
1 Corinthians 1:7-9
Q? கொரிந்து சபை எந்த வரத்தில் குறைவுள்ளவர்களாயிருந்தார்கள் ?
A. அவர்கள் யாதொரு ஆவியின் வரத்திலும் குறைவுள்ளவர்களாய் இருக்கவில்லை [1:7].
Q? ஏன் கொரிந்து சபையை தேவன் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி செய்வார் ?
A. கர்த்தாராகிய கிறிஸ்துவின் நாளில் அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்துவார் [1:8].
1 Corinthians 1:10-11
Q? பவுல் கொரிந்து சபைக்கு எதை செய்யும்படி அவர்களுக்கு புத்தி சொன்னான் ?
A. அவர்களெல்லாரும் ஒரே காரியத்தை பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்கும்படி அவர்களுக்கு பவுல் புத்தி சொன்னான் [1:10].
Q? குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது என்ன ?
A. கொரிந்து சபையினருக்குள் வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது [1:11].
1 Corinthians 1:12-13
Q? வாக்குவாதத்தைக் குறித்து பவுல் கூறியது என்ன ?
A. பவுல்: உங்களில் சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகுறீர்கள்[1:12].
1 Corinthians 1:14-16
Q? கிறிஸ்புவுக்கு, காயுவுக்குமேயன்றி வேறொருவனுக்கும் பவுல் ஞானஸ்நானம் கொடுக்காததற்கு ஏன் தேவனை ஸ்தோத்தரித்தான் ?
A. பவுலின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லக்கூடாதபடியால் அவன் தேவனை ஸ்தோத்தரித்தான்[1:14-15].
1 Corinthians 1:17
Q? கிறிஸ்து எதை செய்ய பவுலை அனுப்பினார் ?
A. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே கிறிஸ்து, பவுலை அனுப்பினார் [1:17].
1 Corinthians 1:18-19
Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது?
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது [1:18].
Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது ?
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலனாய் இருக்கிறது [1:18].
1 Corinthians 1:20-21
Q? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் என்னவாக மாற்றினார் ?
A. இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக மாற்றினார்[1:20].
Q? ஏன் பைத்தியமாகத் தோன்றும் ஞானத்தினால் விசுவாசிகளை இரட்சிக்க தேவன் பிரியமாய் இருக்கிறார் ?
A. உலகஞானமானது சுயஞானத்திலே தேவனை அறியாததினாலே தேவன் அதை செய்ய பிரியமாய் இருக்கிறார் [1:21].
1 Corinthians 1:22-23
1 Corinthians 1:24-25
1 Corinthians 1:26-27
Q? தேவனுடைய அழைப்பில் எத்தனை ஞானிகள், வல்லவர்கள், பிரபுக்கள் இருக்கிறார்கள் ?
A. அப்படி இருக்கும் அநேகரை தேவன் அழைப்பதில்ல [1:26].
Q? ஏன் தேவன் உலகத்தின் பைத்தியமானவைகளையும், பெலவீனர்களையும் தெரிந்துகொண்டார் ?
A. ஞானிகளையும், பெலமுள்ளவர்களையும் தேவன் வெட்கப்படுத்தும்படி இதை செய்தார் [1:27].
1 Corinthians 1:28-29
Q? எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அவர் செய்தது என்ன ?
A. உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார் [1:28-29].
1 Corinthians 1:30-31
Q? விசுவாசிகள் ஏன் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள் ?
A. தேவனின் செய்கையால் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள்[1:30].
Q? நமக்காக இயேசு கிறிஸ்து என்ன ஆனார் ?
A. அவர் நமக்கு தேவனால் ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் [1:30].
Q? மேன்மைப்பாராட்டுகிறவன் யாரைக் குறித்து மேன்மைப்பராட்டக்கடவன் ?
A. மேன்மைப்பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்பராட்டக்கடவன்[1:31].
1 Corinthians 2
1 Corinthians 2:1-2
Q? பவுல் கொரிந்தியரிடத்திற்கு, தேவனைப்பற்றிய சாட்சியை அறிவிக்க எப்படிப்பட்டவனாக வந்தான் ?
A. பவுல் அவர்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது, ஞானத்தோடாவது, அறிவிக்கிறவனாக வரவில்லை [2:1].
Q? பவுல் கொரிந்தியர்களோடே இருக்கையில் எதை அறிய தீர்மானித்திருந்தான் ?
A. பவுல், இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறியாதிருக்க தீர்மானித்திருந்தான் [2:2].
1 Corinthians 2:3-5
Q? ஏன் பவுலின் பிரசங்கமும், பேச்சும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிபட்டதாயிருந்தது ?
A. அவர்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினாலல்ல, தேவனுடைய பெலத்தினால் நிற்கும்படி அப்படி இருந்தது [2:4-5].
1 Corinthians 2:6-7
Q? எந்த ஞானத்தை பவுலும் அவனோடிருந்தவர்களும் பேசினார்கள் ?
A. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமான இரகசியமான தேவ ஞானத்தையே பேசினார்கள் [2:7].
1 Corinthians 2:8-9
Q? பவுலின் நாட்களின் பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால் என்ன செய்திருக்க மாட்டார்கள் ?
A. பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால், மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்[2:8].
1 Corinthians 2:10-11
Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் தேவனுடைய ஞானத்தை எப்படி அறிந்தார்கள் ?
A. தேவன் தமது ஆவியினால் ஆவிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் [2:10].
Q? யார் தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் ?
A. தேவ ஆவியானவர் ஒருவரே தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் [2:11].
1 Corinthians 2:12-13
Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் எந்த காரணத்தினால் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் ?
A. தேவனால் அவர்களுக்கு அருளப்பட்டவைகளை அவர்கள் அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் [2:12].
1 Corinthians 2:14-16
Q? ஏன் ஜென்மசுவாபமுள்ள மனுஷன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்வும், அறியவுமாட்டான் ?
A. ஜென்மசுவாபமுள்ள மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்: அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும், அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகள் ஆதலால் அவைகளை அவன் அறியவுமாட்டான் [2:14].
Q? இயேசுவை விசுவாசிக்கிற யாருக்கு அவருடைய சிந்தை உண்டாகுமென்று பவுல் சொல்லுகிறான் ?
A. பவுல்: எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது [2:16].
1 Corinthians 3
1 Corinthians 3:1-2
Q? ஏன் கொரிந்து விசுவாசிகளிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்?
A. கொரிந்து விசுவாசிகள் மாம்சத்துக்குள்ளாயிருந்து, பொறாமையும், வாக்குவாதமும், பேதமும் இருக்கிறபடியால் அவர்களிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்[3:1,3].
1 Corinthians 3:3-5
Q? பவுல் யார் ? அப்பொல்லோ யார் ?
A. அவர்கள் ஊழியக்காரர்கள், தேவனுடைய உடன் வேலையாட்கள், மற்றும் கொரிந்தியர்கள் இயேசுவை விசுவாசிக்க ஏதுவாயிருந்தவர்கள் [3:5,9].
1 Corinthians 3:6-7
Q? விளையச்செய்வது யார் ?
A. விளையச்செய்வது தேவனே [3:7].
1 Corinthians 3:8-9
1 Corinthians 3:10-11
Q? அஸ்திபாரம் யார் ?
A. இயேசு கிறிஸ்துவே அஸ்திபாரம் [3:11].
1 Corinthians 3:12-13
Q? ஒருவன் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல் செய்யும் வேலைப்பாடு என்னவாகும் ?
A. அவனுடைய வேலைப்பாடு நாளானது விளங்கப்பண்ணும், அக்கினியானது அதை வெளிப்படுத்தும், [3:12-13].
Q? ஒருவனுடைய வேளையை அக்கினி என்ன செய்யும் ?
A. அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினி பரிசோதிக்கும் [3:13].
1 Corinthians 3:14-15
Q? ஒருவன் கட்டினது அக்கினிக்கு பின்பும் நிலைத்தால் என்ன ஆகும் ?
A. அவன் அதன் கூலியைப் பெறுவான் [3:14].
Q? ஒருவன் கட்டினது அக்கினியில் வெந்துபோனால் என்னவாகும் ?
A. அவன் நஷ்டமடைவான், அவனோ இரட்சிக்கப்படுவான்: அதுவும் அக்கினியிலகப்பட்டு தப்பினதுபோலிருக்கும் [3:15].
1 Corinthians 3:16-17
Q? நாம் யார் ? இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நம்மில் வாசம்பண்ணுவது யார் ?
A. நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் எனவே தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருக்கிறார் [3:16].
Q? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனுக்கு சம்பவிப்பது என்ன ?
A. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனைக் கெடுப்பார் [3:17].
1 Corinthians 3:18-20
Q? உலகத்தில் தான் ஞானியென்று நினைப்பவனுக்கு பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: அவன் ஞானியாகும்படிக்கு பைத்தியக்காரனாயிருக்கக்கடவன் [3:18].
Q? ஞானிகளைக் குறித்து கர்த்தர் அறிந்திருப்பது என்ன ?
A. ஞானிகளுடைய சிந்தனை வீனாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார் [3:20].
1 Corinthians 3:21-23
Q? மனிதரைக் குறித்து மேன்மைப்பாராட்டாதபடிக்கு கொரிந்தியருக்கு பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: ஒருவனும் மனுஷனைக் குறித்து மேன்மைப்பாராட்டாதிருப்பானாக, எல்லாம் உங்களுடையதே, ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவினுடயவர்கள், கிறிஸ்து தேவனுடையவர் [3:21-23].
1 Corinthians 4
1 Corinthians 4:1-2
Q? பவுல் அவனைக் குறித்தும் அவனோடிருந்தவர்களைக் குறித்தும் கொரிந்தியர்கள் என்னவென்று எண்ணிக்கொள்ளும்படி கூறினான் ?
A. அவர்களைக் கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்றும் தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்களென்றும் எண்ணும்படிக் கூறினான் [4:1].
Q? உக்கிராணக்காரனுக்கு அவசியமானது என்ன ?
A. உக்கிராணக்காரன் உண்மையாய் இருப்பது அவசியம் [4:2].
1 Corinthians 4:3-4
Q? யார் பவுலை நியாயந்தீர்ப்பதாக அவன் கூறுகிறான் ?
A. பவுல்: என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே [4:4].
1 Corinthians 4:5
Q? கர்த்தர் வரும்பொழுது அவர் என்ன செய்வார் ?
A. கர்த்தர், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார் [4:5].
1 Corinthians 4:6-7
Q? ஏன் பவுல், அவனையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் ?
A. எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றோருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும் நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் [4:6].
1 Corinthians 4:8-9
Q? ஏன் கொரிந்தியர்கள் ஆளுகிறவர்களாய் இருக்கவேண்டுமென்று பவுல் விரும்பினான் ?
A. பவுல்: நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது நாங்களும் உங்களுடனேகூட ஆளுகிறவர்களாய் இருப்போம் என்றான் [4:8].
1 Corinthians 4:10-11
Q? எந்த மூன்று காரியங்களில் பவுலும் அவனோடிருந்தவர்களும் கொரிந்தியருக்கு வேறுபட்டவர்கள் ?
A. பவுல்: நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பெலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர் [4:10].
Q? பவுல் எவ்வாறு அப்போஸ்தலர்களின் மாம்ச சூழ்நிலையை விவரிக்கிறார் ?
A. பவுல் அவர்களைக் குறித்து நாங்கள் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம் [4:11].
1 Corinthians 4:12-13
Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் துன்பப்படுகையில் அவர்களின் மறுமொழி என்ன ?
A. வேலை செய்து பாடுபடுகிறோம், வையப்பட்டு ஆசீர்வதிக்கிறோம், துன்பப்பட்டு சகிக்கிறோம்,அவமதிக்கப்பட்டு வேண்டிக்கொள்கிறோம் [4:12].
1 Corinthians 4:14-16
Q? ஏன் இவைகளை கொரிந்தியர் விசுவாசிகளுக்கு பவுல் எழுதுகிறார் ?
A. அவர்கள் பவுலுக்கு பிரியமான பிள்ளைகளென்று புத்தி சொல்லும்படி இவைகளை எழுதினான் [4:14].
Q? யாரை பின்பற்றும்படி பவுல் கொரிந்தியருக்கு கூறுகிறான் ?
A. அவர்கள் பவுலை பின்பற்றி வரும்படி கூறினான் [4:16].
1 Corinthians 4:17-18
Q? எதை கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான்?
A. கிறிஸ்துவுக்குள்ளான பவுலின் நடக்கைகளைக் கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான் [4:17].
Q? கொரிந்திய விசுவாசிகளில் சிலர் எவ்வாறு நடந்துகொண்டார்கள் ?
A. பவுல் அவர்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள் [4:18].
1 Corinthians 4:19-21
Q? தேவனுடைய ராஜ்யம் எதிலே உண்டாயிருக்கிறது?
A. தேவனுடைய ராஜ்யம் பெலத்திலே உண்டாயிருக்கிறது [4:20].
1 Corinthians 5
1 Corinthians 5:1-2
Q? கொரிந்து சபையைக் குறித்து பவுல் கேள்விப்பட்ட குற்றம் யாது ?
A. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறான் என்றும் அவர்களுக்குள்ளே விபச்சாரம் உண்டென்றும் பவுல் கேள்விப்பட்டான், [5:1].
Q? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை என்ன செய்யவேண்டுமென்று பவுல் கூறினான் ?
A. தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை அவர்களிலிருந்து கண்டிப்பாக நீக்கிவிடும்படிக் கூறினான் [5:2].
1 Corinthians 5:3-5
Q? எப்படி? ஏன் ? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை நீக்கிவிடவேண்டும்?
A. நீங்களும் என்னுடைய ஆவியும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புசெய்கிறேன் [5:4-5].
1 Corinthians 5:6-8
Q? எதனோடு பவுல் துர்க்குணத்தையும், பொல்லாப்பையும் ஒப்பிடுகிறான் ?
A. புளித்தமாவோடே பவுல் அவர்களை ஒப்பிடுகிறான் [5:8].
Q? துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் எதை உருவகப்படுத்துகிறான்?
A. துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் புளிப்பில்லாத அப்பத்தை உருவகப்படுத்துகிறான் [5:8].
1 Corinthians 5:9-10
Q? யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
A. விபச்சாரக்காரரோடே கலவாதிருக்கும்படி பவுல் அவர்களுக்கு எழுதினான் [5:9].
Q? பவுல் கூறுகையில், எல்லா விபச்சாரக்காரரோடும் கலவாதிருக்கும்படி கூறினானா ?
A. இவ்வுலகத்திலுள்ள விபச்சாரக்காரரைக் குறித்து பவுல் கூறவில்லை. அப்படியானால் அவர்கள் உலகத்தைவிட்டு நீங்கிபோகவேண்டியதாயிருக்கும் [5:10]
Q? பவுல் கூறுகையில், யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
A. பவுல்: கிறிஸ்துவுக்குள் சகோதரன் அல்லது சகோதரி எனப்பட்ட ஒருவன் விபச்சாரக்காரனையாவது, பொருளாசைக்காரனையாவது, விக்கிரகாராதனைக்காரனையாவது, உதாசினனையாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது [5:10-11].
1 Corinthians 5:11-13
Q? விசுவாசிகள் யாரைத் தீர்ப்புச்செய்யலாம் ?
A. விசுவாசிகள், சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைத் தீர்ப்புச்செய்யலாம்[5:12].
Q?சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை யார் தீர்ப்புச்செய்வார் ?
A. சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை தேவனே தீர்ப்புச்செய்வார்[5:13].
1 Corinthians 6
1 Corinthians 6:1-3
Q? பரிசுத்தவான்கள் யாரை நியாயந்தீர்ப்பார்கள்?
A. பரிசுத்தவான்கள் உலகத்தையும், தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்பார்கள் [6:2-3].
Q? கொரிந்து சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: ஜீவனுக்கேற்ற வழக்குகளை சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான்[6:1-3].
1 Corinthians 6:4-6
Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி தங்கள் வாதங்களை கையாளுகிறார்கள் ?
A. ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசிக்கு எதிராக நியாசனத்திற்கு போகிறான், அந்த வழக்கு அவிசுவாசியாய் இருக்கிறவன் முன்பாக வைக்கப்படுகிறது [6:6].
1 Corinthians 6:7-8
Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்களிடம் இருக்கும் வழக்குகள் எந்த உண்மையைக் காட்டுகிறது ?
A. அது அவர்களின் தோல்வியைக் காட்டுகிறது [6:7].
1 Corinthians 6:9-11
Q? எப்படிப்பட்டவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டான் ?
A. அநியாயக்காரர்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டார்கள் [6:9-10].
Q? முன்பு அநியாயக்காரராய் இருந்த கொரிந்து சபையின் விசுவாசிகளுக்கு சம்பவித்தது என்ன ?
A. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டார்கள், பரிசுத்தமாக்கப்படார்கள், நீதிமான்களாக்கப்பட்டார்கள் [6:11].
1 Corinthians 6:12-13
Q? எந்த இரண்டு காரியங்கள் பவுலை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என அவன் கூறுகிறான் ?
A. போஜனமும், வேசித்தனமும் அவனை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என பவுல் கூறுகிறான் [6:12-13].
1 Corinthians 6:14-15
Q? விசுவாசிகளின் சரீரம் யாருக்கு உரியது ?
A. அவர்களின் சரீரம் கிறிஸ்துவுக்கு உரியது [6:15].
Q? விசுவாசிகள் வேசித்தனத்தோடு தங்களை இணைத்துக்கொள்ளலாமா ?
A. இல்லை, ஒருபோதும் கூடாது [6:15].
1 Corinthians 6:16-17
Q? வேசித்தனத்தோடு தன்னை இணைத்துக்கொள்பவனுக்கு சம்பவிப்பது என்ன ?
A. அவன் வேசியின் அவயங்களாகிறான்[6:16].
Q? கிறிஸ்துவோடு இசைந்திருப்பவனுக்கு ஏற்படுவது என்ன ?
A. அவரோடு ஒரே ஆவியாய் இருக்கிறான் [6:17].
1 Corinthians 6:18
Q? வேசித்தனம் செய்கிறவர்கள் யாருக்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் ?
A. அவர்கள் தங்கள் சொந்த சரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் [6:18].
1 Corinthians 6:19-20
Q? ஏன் விசுவாசிகள் தங்கள் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் ?
A. அவர்கள் கிரயத்துக்குக்கொள்ளப்பட்ட தேவனுடைய ஆலயமாய் இருப்பதினால் அவர்கள் தங்கள் சரீரத்தினாலும் தங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் [6:19-20].
1 Corinthians 7
1 Corinthians 7:1-2
Q? ஏன் அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும்?
A. வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும் [7:2].
1 Corinthians 7:3-4
Q? கணவனுக்கும், மனைவிக்கும் தங்கள் சொந்த சரீரத்தின்மீது அதிகாரம் உண்டோ ?
A. இல்லை, கணவனுடைய சரீரத்திற்கு அவன் மனைவியே அதிகாரியானவள், அதுபோல மனைவியின் சரீரத்திற்கும் அவள் புருஷனே அதிகாரியானவன்[7:4].
1 Corinthians 7:5-7
Q? எப்போது கணவனும், மனைவியும் தங்கள் சரீரமாய் பிரிந்திருக்கலாம் ?
A. ஜெபத்திற்குத் தடையாய் இராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்கலாம் [7:5].
1 Corinthians 7:8-9
Q? விவாகம் பன்னாதவர்களையும், விதவைகளையும் என்ன செய்தால் நலமாயிருக்கும் என பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: அவர்கள் விவாகம்பண்ணிக்கொல்லாதிருந்தால் நலமாயிருக்கும் [7:8].
Q? எதினால் விவாகம்பண்ணாதவர்களையும், விதவைகளையும் விவாகம்பண்ணும்படி பவுல் கூறுகிறான் ?
A. அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால்விவாகம்பன்னக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம் [7:9].
1 Corinthians 7:10-11
Q? விவாகம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் கட்டளை என்ன ?
A. மனைவியானவள் தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது கணவனோடே ஒப்புரவாகக்கடவள்; கணவனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது [7:10-11].
1 Corinthians 7:12-14
Q? விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவியை அல்லது கணவனை தள்ளிவிடுவது நியாமா ?
A. விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவி அல்லது கணவனோடே வாசமாயிருக்க சம்மதித்தால் தள்ளிவிடாதிருக்கடவர்கள் [7:12-13].
1 Corinthians 7:15-16
Q? அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் என்ன செய்வது ?
A. அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் போகட்டும் [7:15].
1 Corinthians 7:17-19
Q? பவுல் எல்லா சபைகளுக்கும் அனுப்பின சட்டம் யாது ?
A. சட்டம்: தேவன் அவனவனுக்கு பகிர்ந்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடகக்கடவன்[7:17].
Q? விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், விருத்தசேதனமில்லாதவர்களுக்கும் பவுல் கூறும் ஆலோசனை என்ன ?
A. பவுல்: ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவானயிருக்க வகைதேடாதிருக்ககடவன். விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால் அவன் விருத்தசேதனம் பெறாதிருப்பானாக [7:18].
1 Corinthians 7:20-24
Q? அடிமைகளைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
A. அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே: நீ சுயதீனனாகக் கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள். கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதினனாயிருக்கிறான், மறுபடியும் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள் [7:21-23].
1 Corinthians 7:25-26
Q?ஏன் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான் ?
A. இப்போது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான்[7:26].
1 Corinthians 7:27-28
Q? மனைவியோடே ஒருவன் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்யக்கடவன் ?
A. மனைவியோடே கட்டப்பட்டவன், கட்டவிழ்க்க வகைதேடாதிருப்பானாக [7:27].
Q? மனைவியை அறியாதவனும், திருமணம் செய்யாதவனும் ஏன் மனைவியைத் தேடாதிருக்கும்படி பவுல் கூறுகிறான் ?
A. திருமணம் செய்யாதவர்களும் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள் எனவே மற்றவர்களை தப்புவிக்கும்படி அவ்வாறு பவுல் கூறுகிறான் [7:28].
1 Corinthians 7:29-31
Q? ஏன் உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போல் இருக்கவேண்டும் ?
A. அவ்வாறு இருக்க வேண்டும் ஏனெனில் இந்த உலகத்தில் வேஷம் எல்லாம் முடியப்போகிறது [7:31].
1 Corinthians 7:32-34
Q? ஏன் திருமணம் செய்த கிறிஸ்தவர்களால் கர்த்தருக்குரியவைகளுக்காய் கவலைப்படுவது கடினமாயிருக்கிறது ?
A. ஏனெனில் திருமணம் செய்தவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்துக்குரியவைகளுக்காய் கவலைப்படுகிறாள் [7:33-34].
1 Corinthians 7:35
1 Corinthians 7:36-38
Q? அவளை திருமணம் செய்யாகிறவன், மற்றவன் இதில் எவன் நன்மை செய்வான் ?
A. திருமணம் செய்துகொள்ளாதவன் அவனிலும் அதிக நன்மை செய்வான் [7:38].
1 Corinthians 7:39-40
Q? மனைவியானவள் அவள் கணவனுக்கு எவ்வளவு கட்டப்பட்டிருப்பாள் ?
A. மனைவியானவள் அவள் கணவன் உயிரோடிருக்குங்காலம் வரைக்கும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருப்பாள் [7:39].
Q? விசுவாச மனைவியின் கணவன் மரித்தபின்பு, அவள் யாரை திருமணம் செய்யாலாம் ?
A. அவள் விரும்புகிறபடி கர்த்தருக்குட்பட்டிருக்கிற எவனையாகிலும் திருமணம் செய்துகொள்ள விடுதலையாய் இருக்கிறாள் [7:39].
1 Corinthians 8
1 Corinthians 8:1-3
Q? பவுல் இந்த அதிகாரத்தைத் துவங்கும்போது எதைக் குறிப்பிட்டுகிறார் ?
A. விக்கிரகங்களுக்குப் படைக்கிறவைகளைக் குறிப்பிட்டுத் துவங்குகிறார் [8:1,4].
Q? அறிவும், அன்பும் எதை உண்டாக்கும் ?
A. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் [8:1].
1 Corinthians 8:4-6
Q? விக்கிரகம், தேவனுக்கு சமமானவைகளோ ?
A. இல்லை. உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை, ஒருவரையன்றி வேறொரு தேவன் இல்லை [8:4].
Q? அந்த ஒரே தேவன் யார் ?
A. பிதாவாகிய ஒருவரே தேவன். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].
Q? அந்த ஒரே கர்த்தர் யார் ?
A. இயேசு கிறிஸ்துவாகிய ஒருவரே கர்த்தர். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].
1 Corinthians 8:7
Q? சிலர் இயன்றவரைக்கும் சிலையை ஒருபொருள் என்று எண்ணி, அவைகளுக்கு படைக்கப்பட்டவைகளை சாப்பிடுகிரவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?
A. அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதால் அறுவருபாகிறது [8:7].
1 Corinthians 8:8-10
Q? உணவு நம்மை தேவனிடத்தில் மேன்மையுள்ளவர்கலாகவோ அல்லது குறைவுள்ளவர்கலாகவோ மாற்றுமோ ?
A. உணவு நம்மை தேவனுக்கு உகந்தவர்களாய் மாற்றாது. உண்பதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, உண்ணாதிருப்பதினால் நமக்கு ஒரு குறையும் இல்லை [8:8].
Q? நம்முடைய அதிகாரம் எப்படிப்பட்டதாய் போகாதபடிக்கு நாம் எச்சரிக்கையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் ?
A. நம்முடைய அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் [8:9].
Q? அறிவுள்ளவனாகிய உன்னை சிலைக்கோவிலில் பந்தியிருக்கு ஒருவன் கண்டால், பலவீனமாகிய அவன் அல்லது அவளை நாம் என்ன செய்கிறோம் ?
A. நாம் நம் அறிவினிமித்தம் பலவீனமான சகோதரன் அல்லது சகோதரியை கேட்டுப்போகும்படி செய்கிறோம் [8:10-11].
1 Corinthians 8:11-13
Q? கிறிஸ்துவுக்குள் பலவீனமுள்ளவர்களாகிய சகோதரனையோ அல்லது சகோதரியையோ தெரிந்து அவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்துகிறதினாலே யாருக்கு எதிராக பாவம் செய்கிறோம் ?
A. நாம் அந்த சகோதரன் அல்லது சகோதரியை இடறல் உண்டாக்குகிறோம் பின்பு கிறிஸ்துவுக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் [8:11-12].
Q? பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால் அவன் என்ன செய்வதாக கூறுகிறான் ?
A. பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், அவன் இடறலடையாதபடிக்கு, என்றென்றைக்கும் மாம்சம் புசிப்பதில்லை என்கிறான் [8:13].
1 Corinthians 9
1 Corinthians 9:1-2
Q? பவுல் தான் அப்போஸ்தலன் என்பதற்கு என்ன ஆதாரம் தருகிறான் ?
A. கொரிந்திய விசுவாசிகள் கர்த்தருக்குள் பவுலின் கிரியைகளாய் இருக்கிறார்கள் என்றும், பவுலின் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாய் இருப்பதாக கூறுகிறான் [9:1-2].
1 Corinthians 9:3-6
Q? அப்போஸ்தலருடைய, கர்த்தருடைய சகோதரர்கள் மற்றும் கேபா இவர்களின் அதிகாரங்களை என்னவென்று குறிப்பிடுகிறான் ?
A. பவுல்: உண்ணவும் குடிக்கவும் அதிகாரம் உண்டு, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய அதிகாரம் உண்டு என்கிறான் [9:4-5].
1 Corinthians 9:7-8
Q? எவன் சொந்தபணத்தை செலவழித்து, தண்டிலே சேவகம் பண்ணுவான் என்று என்ன உவமையைப் பவுல் கூறுகிறான் ?
A. பவுல், எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி அதின் கனியை புசியாதிருப்பான், எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான் [9:7].
1 Corinthians 9:9-11
Q? வேலை செய்கிறவன் தன் பங்கையோ அல்லது ஒருவனுடையக் கூலியைப் பெறுவதைக் குறித்து பவுல்: மோசேயின் எந்த பிரமாணத்தை குறிப்பிட்டான் ?
A. பவுல் கூறிய பிரமாணம்: போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயக என்று வழக்காடுவதற்கு உதவியாகக் கூறினான் [9:9].
Q? பவுலுக்கும் அவனோடேகூட இருக்கிறவர்களுக்கும் கொரிந்து விசுவாசிகளிடம் என்ன அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என பவுல் கூறுகிறான் ?
A. பவுலும் அவனோடேகூட இருக்கிறவர்களும் கொரிந்தியருக்கு ஆவிக்குரிய நன்மை விதைத்திருக்க, அவர்கள் சரீர நன்மைகளை அறுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டென்பதைக் கூறுகிறான் [9:11-12].
1 Corinthians 9:12-14
Q? நற்செய்தியைப் போதிக்கிறவர்களைக் குறித்து கர்த்தர் என்ன கட்டளைக் கொடுத்திருக்கிறார் ?
A. நற்செய்தியைப் போதிக்கிறவர்கள், நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாக்கவேண்டுமென்று கர்த்தரும் கட்டளைக் கொடுத்திருக்கிறார் [9:14].
1 Corinthians 9:15-16
Q?நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான். ஏன் அவனால் மேன்மைப்பாராட்டக் கூடாமற் போயிற்று ?
A.நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான், ஏனெனில் அது அவன் கடமையாயிருக்கிறது [9:16].
1 Corinthians 9:17-18
1 Corinthians 9:19-20
Q? ஏன் பவுல் எல்லோருக்கும் அடிமையானான் ?
A. தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன் [9:19].
Q? தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யாருக்கு பவுல் என்னவாக மாறினான் ?
A. யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணம் இல்லாதவர்களுக்கு, நியாயப்பிரமாணம் இல்லாதவன் போலவும், பலவீனருக்கு பலவீனனைப் போலவும், எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு பவுல் எல்லோருக்கும் எல்லாமுமானான் [9:20-22].
1 Corinthians 9:21-23
Q? எதினால் பவுல் எல்லாவற்றையும் நற்செய்தியின் பொருட்டு எல்லாவற்றையும் செய்தான் ?
A. நற்செய்தியில் அவன் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே அப்படி செய்தான் [9:23].
1 Corinthians 9:24-27
A. பந்தயத்தை பெற்றுக்கொள்ளும்படி ஓடவேண்டுமென்று பவுல் கூறுகிறான் [9:24].
Q? பவுல் எதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடுகிறான் ?
A. அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படி பவுல் ஓடுகிறான்[9:25].
Q? எதினால் பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் ?
A. மற்றவர்களுக்கு பிரசங்கம்பண்ணுகிற அவன் தானே ஆகாதவானாய் போகாதபடிக்கு, அவன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் [9:27].
1 Corinthians 10
1 Corinthians 10:1-4
Q? மோசேயின் நாட்களில் அவர்கள் பிதாக்களுக்கு பொதுவாக ஏற்பட்ட அனுபவங்கள் என்ன ?
A. எல்லோரும் மேகத்துக்கு கீழாயிருந்தார்கள், சமுத்திரத்தின் வழியாய் நடந்துபோனார்கள், எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள், எல்லோரும் ஒரே ஞானபோஜனத்தை புசித்தார்கள் எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள் [10:1-4].
Q? அவர்கள் பிதாக்களோடே சென்ற ஞானக்கன்மலை யார் ?
A. அந்த ஞானக்கன்மலை கிறிஸ்துவே [10:4].
1 Corinthians 10:5-6
1 Corinthians 10:7-8
Q? ஏன் மோசேயின் நாட்களில் இருந்த பிதாக்களிடம் தேவன் பிரியமாய் இருக்கவில்லை ?
A. அவர்கள் பொல்லாங்கானவைகளை இச்சித்து, வேசித்தனம்பண்ணி, கிறிஸ்துவை பரீட்சை பார்த்தார்கள் எனவே தேவன் அவர்களிடம் பிரியமாய் இருக்கவில்லை [10:6-10].
Q? அவர்கள் பிதாக்களின் செய்கைக்கு தண்டனையாக தேவன் செய்தது என்ன ?
A. சிலர் பாம்புகளினாலே அழிக்கப்பட்டார்கள், சிலர் சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள் மற்றும் அநேகர் வனாந்திரத்திலே விழுந்துபோனார்கள் [10:5 & 8-10].
1 Corinthians 10:9-10
1 Corinthians 10:11-13
Q? ஏன் அவைகள் சம்பவித்தன, எதினால் எழுதப்பட்டும் இருக்கின்றன ?
A. அவைகள் திரிஷ்டாந்தங்களாக சம்பவித்து, நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டுமிருக்கிறது [10:11].
Q? ஏதேனும் தனிப்பட்ட சோதனை நமக்கு சம்பவித்ததுண்டோ ?
A. இல்லை, மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே தவிர வேறே சோதனை நேரிடுவதில்லை [10:13].
Q? நாம் சோதனையைத் தாங்கும்படி தேவன் நமக்கு செய்தது என்ன ?
A. நாம் சோதனையைத் தாங்கத்தக்கதாகவும், அதற்கு தப்பிப்போகும்படியான போக்கையும் உண்டாக்குவார் [10:13].
1 Corinthians 10:14-17
Q? பவுல்; கொரிந்திய விசுவாசிகளை எதற்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறார் ?
A. சிலையாராதனைக்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறான் [10:14].
Q? விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாதத்தின் பாத்திரமும், அவர்கள் பிட்கிற அப்பமும் எது ?
A. விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாததின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தமும், அவர்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரமாய் இருக்கிறது [10:16].
1 Corinthians 10:18-19
1 Corinthians 10:20-22
Q? யூதரல்லாதவர்கள் யாருக்கு பலிசெலுத்துகிறார்கள் ?
A. தேவனுக்கு அல்ல பேய்களுக்கே அவர்கள் பலிசெலுத்துகிறார்கள் [10:20].
Q? கொரிந்து விசுவாசிகள் பேய்களோடே ஐக்கியமாய் இருப்பதை விரும்பாத பவுல், அவர்கள் என்ன செய்யக் கூடாது என்கிறான் ?
A. பவுல்: அவர்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும், பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாது. அவர்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும், பங்குள்ளவர்களாய் இருக்கக் கூடாது என்கிறான் [10:20-21].
Q? விசுவாசிகள் தேவனோடும், பேய்களோடே ஐக்கியமாய் இருந்தால் நாம் என்ன செய்கிறோம் ?
A. கர்த்தருக்கு எரிச்சல் மூட்டுகிறோம் [10:22].
1 Corinthians 10:23-24
Q? நாம் சுயபிரயோஜனத்தைத் தேடலாமா ?
A. கூடாது. மாறாக பிறனுடையப் பிரயோஜனத்தைத் தேடக்கடவன் [10:24].
1 Corinthians 10:25-27
Q? அவிசுவாசி ஒருவன் உன்னை விருந்துக்கு அழைத்தால், மனமிருந்தால் போகலாம், அங்கே நீ செய்யவேண்டியது என்ன ?
A. உன் மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் முன் வைக்கப்படுகிற எதையும் உண்ணலாம் [10:27].
1 Corinthians 10:28-30
Q? அது சிலைகளுக்கு படைக்கப்பட்டதென்று ஒருவன் உனக்கு சொன்னால் ஏன் அதை நீ உண்ணக்கூடாது ?
A. உனக்கு அறிவித்தவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படாமலிருக்கும்படிக்கு அதை நீ உண்ணாதிருக்கவேண்டும் [10:28-29].
1 Corinthians 10:31-33
Q? எதை நாம் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் ?
A. நாம் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் [10:31].
Q? ஏன் நாம் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும் ?
A. அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு நாம் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும்[10:32-33].
1 Corinthians 11
1 Corinthians 11:1-4
Q? யாரைப் பின்பற்றும்படி பவுல் கொரிந்து விசுவாசிகளிடம் கூறுகிறான் ?
A. பவுலை பின்பற்றும்படி கொரிந்து விசுவாசிகளிடம் பவுல் கூறுகிறான்[11:1].
Q? பவுல் யாரைப் பின்பற்றுகிறான் ?
A. பவுல், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறான் [11:1].
Q? பவுல் எதற்காக கொரிந்து விசுவாசிகளை புகழ்ந்தான் ?
A. பவுலை நினைத்துக்கொண்டிருப்பதற்காகவும், ஒப்புவித்த கட்டளைகளைக் கைக்கொண்டுவருகிறதினிமித்தமும் கொரிந்து விசுவாசிகளைப் புகழ்ந்தான் [11:2].
Q? கிறிஸ்துவுக்கு தலையாய் இருப்பது யார் ?
A. தேவனே கிறிஸ்துவுக்கு தலையாய் இருக்கிறார் [11:3].
Q? மனிதனுக்கு தலையாய் இருப்பது யார் ?
A. ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய் இருப்பது கிறிஸ்துவே [11:3].
Q? ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது யார் ?
A. ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது கணவனேனே [11:3].
Q? தலையை மூடிக்கொண்டு ஜெபம்பண்ணுகிற கணவன் என்ன செய்கிறான் ?
A. அப்படி அவன் ஜெபிக்கும்பொழுது, அவன் தன்தலையை கனவீனப்படுத்துகிறான் [11:4].
1 Corinthians 11:5-6
Q? தலையை மூடாமல் ஜெபம்பண்ணுகிற பெண் என்ன செய்கிறாள் ?
A. அப்படி அவள் ஜெபிக்கும்பொழுது, அவள் தன்தலையை கனவீனப்படுத்துகிறாள்[11:5].
1 Corinthians 11:7-8
Q? ஏன் ஆண் தன் தலையை மூடவேண்டியதில்லை ?
A. ஆண் தேவனுடைய சாயலும், மகிமையுமாய் இருக்கிறபடியால் அவன் தலையை மூடவேண்டியதில்லை [11:7].
1 Corinthians 11:9-10
Q? பெண் யாருக்காக படைக்கப்பட்டவள் ?
A. பெண்ணானவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டவள்[11:9]
1 Corinthians 11:11-12
Q? எதினால் ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள் ?
A. ஆண் பெண்மூலம் தோன்றுகிறான், பெண்ணும் ஆண்மூலம் தோன்றுகிறாள் [11:11-12].
1 Corinthians 11:13-16
Q? பெண்கள் ஜெபிக்கும்பொழுது பவுலும், அவனோடிருந்தவர்களும் மற்றும் சபைகளும் கொண்டிருந்த வழக்கம் யாது ?
A. பெண்கள் ஜெபிக்கும்பொழுது அவர்கள் தங்கள் தலைகளில் முக்காடிட்டுக்கொள்வது கொண்டிருந்த வழக்கம்[11:10,13,16].
1 Corinthians 11:17-19
Q? கொரிந்து கிறிஸ்தவ சபையிலே எதினால் பிரிவினை உண்டாகவேண்டியிருக்கிறது ?
A. அங்கிகரிக்கப்பட்டவர்கள் அவர்களால் அறியப்ப்படும்படி பிரிவினை உண்டாகவேண்டியிருக்கிறது[11:19].
1 Corinthians 11:20-22
Q? கொரிந்து சபை உணவு சாப்பிட கூடிவருகையில் சம்பவிப்பது என்ன ?
A. அவனவன் தன் தன் சொந்த சாப்பாட்டை முந்தி சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான் [11:21].
1 Corinthians 11:23-24
Q? காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே அப்பத்தை எடுத்து இயேசு சொன்னது என்ன ?
A. அவர்: இது உங்களுக்காக பிட்கப்படுகிற என் சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்றார் [11:23,24].
1 Corinthians 11:25-26
Q?அப்பத்தை சாப்பிட்டபின்பு, அந்த பாத்திரத்தை எடுத்து இயேசு கூறியது என்ன ?
A. அவர்: இது புதிய உடன்படிக்கைக்குரிய என் இரத்தமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்றார் [11:25].
Q? அப்பத்தை சாப்பிட்டு, அந்த பாத்திரத்தில் பாணம்பன்னும்போதெல்லாம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
A. கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள் [11:26].
1 Corinthians 11:27-30
Q? ஏன் தகுதியற்றவனாய் கர்த்தருடைய அப்பத்தை புசித்து, அந்த பாத்திரத்தில் பாணம்பன்னக்கூடாது ?
A. அவன் கர்த்தருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான். அவன் தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனம்பண்ணுகிறான் [11:27,29].
Q? தகுதியற்றவனாய் கர்த்தருடைய அப்பத்தை புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணினவர்களாகிய கொரிந்து சபையினருக்கு சம்பவித்தது என்ன ?
A. அநேகர் பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள் [11:30].
1 Corinthians 11:31-32
1 Corinthians 11:33-34
Q? கொரிந்து விசுவாசிகள் உணவு உண்ண கூடிவருகையில் என்ன செய்யும்படி பவுல் கூறுகிறான் ?
A. ஒருவருக்காக ஒருவர் காத்திருக்கும்படி கூறினான் [11:33].
1 Corinthians 12
1 Corinthians 12:1-3
Q? எதைக்குறித்துக் கொரிந்து கிறிஸ்தவர்கள் அறியும்படி பவுல் விரும்பினான் ?
A. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து அவர்கள் அறியும்படி பவுல் விரும்பினான் [12:1].
Q? தேவனுடைய ஆவியினாலே பேசுகிறவன் என்ன சொல்லக் கூடாது ?
A. இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லக்கூடாது [12:3].
Q? இயேசுவை கர்த்தரென்று எப்படி ஒருவனால் சொல்லக்கூடும் ?
A. பரிசுத்த ஆவியினாலேமாத்திரம் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடும் [12:3].
1 Corinthians 12:4-6
Q? ஒவ்வொரு விசுவாசிகளிலும் தேவன் செய்யும் வித்தியாசம் என்ன ?
A. வரங்களில் வித்தியாசம், ஊழியங்களில் வித்தியாசம் அவர்கள் செயல்களிலும் வித்தியாசம் உண்டுபண்ணுகிறார் [12:4-6].
1 Corinthians 12:7-8
Q? ஆவியினுடைய அநுக்கிரகம் ஏன் வெளிப்படையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது ?
A. அவனவனுடைய பிரயோஜனத்திற்காய் இவைகள் [12:7].
1 Corinthians 12:9-11
Q? தேவனுடைய ஆவியினாலே அருளப்படும் சில அனுக்கிரகங்கள் எவை ?
A. ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனம், ஆவியினாலே அறிவை உணர்த்தும் வசனம், ஆவியினாலே விசுவாம், ஆவியினாலே குணமாக்கும் வரங்கள், அற்புதங்கள் செய்யும் சக்தி, தரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பலபாஷைகள் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் போன்றவைகளே [12:8-10].
Q? வரங்களை அவனவன் பெற்றுக்கொள்ளும்படி பகிர்ந்தளிப்பது யார் ?
A. ஆவியானவர் தமது சித்தத்தின்படியே வரங்களை அவனவனுக்கு பகிர்ந்துகொடுக்கிறார் [12:11].
1 Corinthians 12:12-13
Q? எதினால் எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம் ?
A. எல்லோரும் ஒரே ஆவியினாலே, ஒரே சரீரத்திற்குள்ளாய் ஞானஸ்நானம் பெற்று, ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கபபட்டோம் [12:13].
1 Corinthians 12:14-17
1 Corinthians 12:18-20
Q? சரீரத்திலே அவயங்களை உருவாக்கி வைத்தது யார் ?
A. தேவன் தமது சித்தத்தின்படியே உருவாக்கி அவயங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார் [12:18].
1 Corinthians 12:21-24
Q? சரீர அவயங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகள் இல்லாமல் எதாகிலும் நம்மால் செய்யக்கூடுமோ ?
A. கூடாது. பலவீனமுள்ளவைகளாய் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாய் இருக்கிறது [12:22].
Q? பலவீனமுள்ளதாய் காணப்படுகிற சரீர அவயவங்களையும் சேர்த்து தேவன் செய்திருப்பது என்ன ?
A. கனத்தில் குறைவுள்ளதற்கு தேவன் அதிக கனத்தைக் கொடுத்து இப்படி சரீரத்தை அமைத்திருக்கிறார் [12:24].
1 Corinthians 12:25-27
Q? தேவன் சரீரத்தில் ஏன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்திருக்கிறார் ?
A. ஒரு அவயம் பாடுபட்டால் எல்லா அவயங்களும் சேர்ந்து பாடுபடும், ஒரு அவயம் மகிமைப்பட்டால் எல்லா அவயங்களும் சேர்ந்து மகிமைப்படும்படி இப்படி செய்தார் [12:25].
1 Corinthians 12:28-29
Q? சபையில் தேவன் யாரை ஏற்படுத்தியிருக்கிறார் ?
A. தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும் பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவிதபாஷகளையும் ஏற்படுத்தினார் [12:28].
1 Corinthians 12:30-31
Q? கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு எதை நாடும்படி பவுல் கூறினான் ?
A. மேலான வரங்களை நாடும்படி பவுல் அவர்களிடம் கூறினான் [12:31].
Q? பவுல் கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு எதைக் காண்பிப்பதாக கூறுகிறான் ?
A. பவுல்: இன்னும் அதிக மேன்மையான வழிகளையும் உங்களுக்கு காண்பிக்கிறேன் [12:31].
1 Corinthians 13
1 Corinthians 13:1-3
Q? பவுல் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசி அவனுக்குள் அன்பு இராவிட்டால் எப்படி இருப்பான் ?
A. அவன் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பான் [13:1].
Q? பவுல் தீர்க்கதரிசன வரத்தையுடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்து மலைகளை பெயர்க்கதக்கதாக விசுவாசம் உடையவனாயிருந்தும் அவனுக்குள் அன்பு இராவிட்டால் எப்படி இருப்பான் ?
A. அவனுக்கு ஒன்றுமில்லை [13:2].
Q? பவுலுக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் அன்னதானம் பண்ணினாலும், அவன் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும் எப்படி அவனுக்கு லாபம் இல்லாமற்போகும் ?
A. இன்னும் அநேகக் காரியங்கள் செய்தாலும் அவனுக்குள் அன்பு இராவிட்டால் லாபம் ஒன்றுமில்லை [13:3].
1 Corinthians 13:4-7
Q? அன்பின் குணாதிசயங்கள் என்ன ? அவற்றில் சில ?
A. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்கு பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது அயோக்கியமானதை செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்குநினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது [13:4-8].
1 Corinthians 13:8-10
Q? ஒழிந்துபோவதும் ஓய்ந்துபோகிறவைகளும் எது ?
A. தீர்க்கதரிசனங்களானாலும், அறிவானாலும் மற்றும் குறைவானது ஒழிந்துபோம் அந்நியபாஷை ஓய்ந்துபோம் [13:8-10].
Q? அழியாதது எது ?
A. அன்பு ஒருக்காலும் அழியாது [13:8].
1 Corinthians 13:11-13
Q? பவுல் புருஷனானபோது என்ன செய்ததாக கூறுகிறான் ?
A. பவுல்: புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன் [13:11].
Q? நிலைத்திருக்கும் மூன்று காரியங்கள் எது ? அதில் பெரியது எது ?
A. விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு. இவைகளில் அன்பே பெரியது [13:13].
1 Corinthians 14
1 Corinthians 14:1-4
Q? ஆவியின் வரங்களில் விசேஷமாக நாம் எதை விரும்பவேண்டுமென்று பவுல் கூறுகிறான் ?
A. ஆவியின் வரங்களில் விசேஷமாக நாம் தீர்க்கத்தரிசன வரத்தை விரும்பவேண்டுமென்று பவுல் கூறுகிறான்[14:1].
Q? பாஷைகளைப் பேசுகிறவன் யாரோடு பேசுகிறான் ?
A. அவன் மனிதனோடு அல்ல தேவனோடு பேசுகிறான் [14:2].
Q? பாஷைகளை பேசுகிறவனிலும் தீர்க்கத்தரிசனம் சொல்லுகிறவன் எதினால் மேன்மையுள்ளவன் ?
A. அந்நியபாஷைகளைப் பேசுகிறவன் தனக்குத்தானே பக்திவிருத்தியுண்டாகப் பேசுகிறான், தீர்க்கத்தரிசனம் உரைக்கிறவன் சபை பக்திவிருத்தியுண்டாகப் பேசுகிறான் எனவே பாஷைகளை பேசுகிறவனிலும் தீர்க்கத்தரிசனம் சொல்லுகிறவன் மேன்மையுள்ளவன்[14:3-5]
1 Corinthians 14:5-6
1 Corinthians 14:7-9
Q? கருத்தில்லாமல் வார்த்தைகளைப் பேசுகிறதை பவுல் எதினோடே ஒப்பிடுகிறான் ?
A. புல்லாங்குழல், சுரமண்டலம் போன்ற உயிரில்லாத வாத்தியங்கள் மற்றும் விளங்காத சத்தமிடும் எக்காளமும் இவைகளே பவுல் ஒப்பிடும் வாத்தியங்கள் [14:7-9].
1 Corinthians 14:10-11
1 Corinthians 14:12-14
Q? கொரிந்திய விசுவாசிகள் எதை நாடும்படி பவுல் கூறுகிறான் ?
A. சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கத்தக்க வரங்களை நாடும்படி கூறுகிறான் [14:12].
Q? அந்நியபாஷைகளைப் பேசுகிறவன் எதினால் விண்ணப்பிக்கக்கடவன் ?
A. அந்நியபாஷைகளைப் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பிக்கக்கடவ்ன் [14:13].
Q? பவுல் அந்நியபாஷையில் விண்ணப்பம்பன்னுகையில் அவனுடைய ஆவியும், கருத்தும் என்ன செய்ததாக கூறுகிறான் ?
A. பவுல்: அந்நியபாஷையில் விண்ணப்பம்பண்ணினால் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, அவன் கருத்து பயனற்றதாயிருக்கும் என்கிறான் [14:14].
1 Corinthians 14:15-16
Q? பவுல் தான் எப்படி பாடி விண்ணப்பம்பன்னுவதாக கூறுகிறான் ?
A. பவுல்: ஆவியோடும் பாடுவேன், ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் பாடுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன் என்கிறான் [14:15].
1 Corinthians 14:17-19
Q? பதினாயிரம் வார்த்தைகளை அந்நியபாஷைகளாய்ப் பேசுவதைப் பார்க்கிலும் எது சிறந்தது என பவுல் கூறுகிறான் ?
A. பதினாயிரம் வார்த்தைகளை அந்நியபாஷைகளாய்ப் பேசுவதைப் பார்க்கிலும், ஐந்து வார்த்தைகளை கருத்தோடே பேசி மற்றவர்களை உணர்த்துவதே அவன் விரும்புவதாக கூறுகிறான் [14:19].
1 Corinthians 14:20-21
1 Corinthians 14:22-23
Q? அந்நியபாஷையும், தீர்க்கத்தரிசனமும் எவருக்கு அடையாளம் ?
A. அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது, தீர்க்கத்தரிசனம் உரைத்தல் விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது [14:22].
Q? கல்லாதவர்கள் அல்லது அவிசுவாசிகள் சபைக்குள் பிரவேசிக்கையில் சபையார் எல்லாம் ஏகமாய் அந்நியபாஷைகளைப் பேசினால் அவர்கள் கூறுவது என்ன ?
A. விசுவாசிகளைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்கள்[14:23].
1 Corinthians 14:24-25
Q? கல்லாதவர்கள் அல்லது அவிசுவாசிகள் சபைக்குள் பிரவேசிக்கையில் சபையார் எல்லாம் ஏகமாய் தீர்க்கத்தரிசனம் உரைத்து பேசினால் சம்பவிப்பது என்னவென்று பவுல் கூறுகிறான் ?
A. கல்லாதவர்கள் அல்லது அவிசுவாசிகள் சபைக்குள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான் [14:24].
Q? தீர்க்கத்தரிசனத்தினால் கல்லாதவன் அல்லது அவிசுவாசி ஒருவனின் இருதயத்தின் அந்தரங்கங்கள் வெளியரங்கமாகும்போது அவன் என்ன செய்வான் ?
A. அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாகவே உங்களுக்குள் இருக்கிறார் என்று அறிக்கையிடுவான் [14:25].
1 Corinthians 14:26-28
Q? சபையிலே விசுவாசிகள் கூடிவருகையில் அந்நியபாஷைகளைப் பேசுபவர்களுக்கு பவுல் கூறும் ஆலோசனை என்ன ?
A. பவுல்: இரண்டு பேர் அல்லது மூன்றுபேர் மட்டில் அடங்கவும். அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல் இருக்கவேண்டும் [14:27-28].
1 Corinthians 14:29-30
Q? சபையிலே விசுவாசிகள் கூடிவருகையில் தீர்க்கத்தரிசனம் உரைக்கிறவர்களுக்கு பவுல் கூறும் ஆலோசனை என்ன ?
A. பவுல்: தீர்க்கத்தரிசிகள் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன், பின்பு ஒவ்வொருவனாகத் தீர்க்கத்தரிசனம் சொல்லலாம் [14:29-31].
1 Corinthians 14:31-33
Q? எந்த சபைகளில் பெண்கள் பேசாமலிருக்கும்படி பவுல் கூறுகிறான் ?
A. பரிசுத்தவான்களின் சபைகளில் பெண்கள் பேசாமலிருக்கும்படி பவுல் கூறுகிறான்[14:33-34].
1 Corinthians 14:34-36
Q? பெண்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் என்ன செய்யும்படி பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: வீட்டில் தங்கள் கணவனிடத்தில் விசாரிக்கக்கடவர்கள் [14:35].
Q? பெண்கள் சபையிலே பேசுகிறதை ஜனங்கள் காணும்போது எப்படி இருக்கும் ?
A. அது அயோக்கியமாயிருக்கும் [14:35].
1 Corinthians 14:37-38
Q? எவன் ஒருவன் தன்னை தீர்க்கத்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவன் என்றாவது எண்ணினால் அவன் எவைகளை ஒத்துக்கொள்ளவேண்டுமென்று பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: ஒருவன் தன்னை தீர்க்கத்தரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவன் என்றாவது எண்ணினால் அவன் பவுல் எழுதின கற்பனைகளைக் கர்த்தருடைய கற்பனையாக ஒத்துக்கொள்ளவேண்டும்[14:37].
1 Corinthians 14:39-40
Q? சபையில் நடக்கும் காரியங்களெல்லாம் எவ்வாறு செய்யப்படக்கடவது ?
A. சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்படக்கடவது [14:40].
1 Corinthians 15
1 Corinthians 15:1-2
Q? பவுல் எதைக்குறித்து சகோதர சகோதரிகளுக்கு நினைப்பூட்டினான் ?
A. அவர்களுக்கு பிரசங்கித்த நற்செய்தியைக் குறித்து அவர்களுக்கு நினைப்பூட்டினான் [15:1].
Q? கொரிந்தியருக்கு, பவுல் பிரசங்கித்த நற்செய்தியின்படி அவர்கள் இரட்சிக்கப்படும்படி எதை அவர்கள் கைக்கொள்ளவேண்டும் ?
A. பவுல்: அவர்களுக்கு பிரசங்கித்த நற்செய்தியின்படி அவர்கள் இரட்சிக்கப்படும்படி அதிலே நிலைத்திருக்கவேண்டும்[15:2].
1 Corinthians 15:3-4
Q? நற்செய்தின் பாகங்களில் பிரதானமாக ஒப்புவிக்கப்பட்டது எது ?
A. பிரதானமாக ஒப்புவித்தது என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் [15:3].
1 Corinthians 15:5-7
1 Corinthians 15:8-9
Q? கிறிஸ்து மரணத்திலிருந்து யாருக்கு தரிசனமானார் ?
A. கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்தெழுந்து கேபாவுக்கும், பன்னிரண்டு சீஷர்களுக்கும் பின்பு ஐந்நூறு பேருக்கும் அதிகமான சகோதர சகோதரிகளுக்கு தரிசனமானார், பின்பு யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தலர்ரெல்லாருக்கும் தரிசனமானார் [15:8].
Q? ஏன் பவுல் மற்ற அப்போஸ்தலரில் தான் சிறியவனாயிருக்கிறேன் என்றான் ?
A. அவன் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியதினாலே அப்படி சொன்னான் [15:9].
1 Corinthians 15:10-11
1 Corinthians 15:12-14
Q? எதற்காக பவுல் கொரிந்திய விசுவாசிகளில் சிலருக்கு உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டு சொன்னான் ?
A. உயிர்த்தெழுதல் இல்லையென்று சிலர் கூறுகிறபடியால் அவர்களைக் குறிப்பிட்டு சொன்னான் [15:12].
Q? உயிர்த்தெழுதல் இல்லையென்றால் எதுவும் உணமையென்று பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழாவிட்டால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதாவாயிருக்கும் [15:13-14].
1 Corinthians 15:15-17
1 Corinthians 15:18-19
Q? கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழாதிருந்தால், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்கு என்ன சம்பவித்திருக்கும் ?
A. அவர்கள் கெட்டிருப்பார்கள் [15:18].
Q? இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின்மேல் நாம் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எது உண்மையென்று பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: நாம் அப்படியுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனிதரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம் [15:19].
1 Corinthians 15:20-21
Q? பவுல் கிறிஸ்துவை என்னவென்று கூறுகிறார் ?
A. கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து எழுந்து நித்திரயடைந்தவர்களில் முதற்பலனானார் [15:20].
Q? எந்த மனுஷனால் இந்த உலகில் மரணம் உண்டானது ? எந்த மனுஷனால் இந்த உலகில் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் உண்டாயிற்று ?
A. அதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்பிக்கப்படுவார்கள் [15:21-22].
1 Corinthians 15:22-23
Q? எப்போது கிறிஸ்துவினுடையவர்கள் உயிர்பிக்கப்படுவார்கள் ?
A. கிறிஸ்து வரும்போது கிறிஸ்துவினுடையவர்கள் உயிர்பிக்கப்படுவார்கள்[15:23].
1 Corinthians 15:24-26
Q? முடிவிலே என்ன சம்பவிக்கும் ?
A. கிறிஸ்து சகல துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தைக் கொடுப்பார் [15:24] Q? எவ்வளவு காலம் கிறிஸ்து ஆளுகைசெய்யவேண்டும்?
A. எல்லா சத்துருக்களையும் தமது பாதங்களுக்குக் கீழாக்கிப் போடும்வரைக்கும் கிறிஸ்து ஆளுகைசெய்வார் [15:25].
Q? பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு யார் ?
A. பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம் [15:26].
1 Corinthians 15:27-28
Q? சகலமும் அவர் பாதத்திற்கு கீழ்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடும்போது யாரைக் குறிப்பிடவில்லை ?
A. குமாரனுக்குக் கீழ்ப்படுத்தின காரியங்கலால்லாத யாவும் அவருக்கு கீழ்ப்பட்டது அல்ல [15:27].
Q? தேவனும் பிதாவுமாயிருப்பவர் சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு குமாரன் செய்வது என்ன ?
A. குமாரன் தாம் தமக்கு சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார் [15:28].
1 Corinthians 15:29-30
1 Corinthians 15:31-32
Q? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் என்ன சொல்லலாம் என்று பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: புசிப்போம், குடிப்போம், நாளைக்கு சாவோம் [15:32}.
1 Corinthians 15:33-34
Q? கொரிந்தியர் செய்யும்படி பவுல் கூறும் கட்டளை யாது ?
A. பவுல்: நீங்கள் பாவம் செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருக்கும்படி கட்டளைக் கொடுத்தான் [15:34].
Q? கொரிந்தியர்களுக்கு வெட்கமுண்டாகும்படி பவுல் கூறியது என்ன ?
A. அவர்களில் சிலருக்கு தேவனைப்பற்றிய அறிவு இல்லாததைக் குறித்து அப்படி சொன்னான் [15:34].
1 Corinthians 15:35-36
Q? உயிர்த்தெழுதலை பவுல் எதனோடு ஒப்புடுகிறான் ?
A. விதைக்கப்பட்ட விதையோடு ஒப்பிடுகிறான் [15:35-42].
Q? முளைப்பதற்குமுன் விதை என்னவாக வேண்டும் ?
A. அது சாக வேண்டும் [15:36].
1 Corinthians 15:37-39
Q? விதைக்கிறபோது விதையிலிருந்து உண்டாகும் மேனியை விதைக்கலாமா ?
A. மேனியை விதையாமல், மற்றொரு தானியத்தின் விதையை விதைக்கப்பட வேண்டும் [15:37].
Q? எல்லா மாம்சமும் ஒரேமாதிரியானதோ ?
A. இல்லை. எல்லா மாம்சமும் ஒரேமாதிரியானதல்ல, மனுஷருடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மச்சங்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சமும் வேறு [15:39].
1 Corinthians 15:40-41
Q? மேனிகளில் வித்தியாசம் உண்டோ ?
A. வானத்துக்குரிய மேனிகள், பூமிக்குரிய மேனிகள் என வித்தியாசம் உண்டு [15:40].
Q? சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் இவையனைத்தும் ஒரே மகிமையுடையவைகளோ ?
A. சூரியனுடைய மகிமை வேறே, சந்திரனுடைய மகிமை வேறே, நட்ச்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்ச்சத்திரத்துக்கு நட்ச்சத்திரம் விசேஷித்திருக்கிறது [15:41].
1 Corinthians 15:42-44
Q? அழிவுள்ள சரீரம் எப்படி விதைக்கப்படும் ?
A. அவைகள் அப்படியே இருக்கும். கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும் [15:42-44].
Q? நாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழும் போது நம்முடைய சரீரம் எப்படிபட்டதாயிருக்கும் ?
A. அழிவில்லாத ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; அது மகிமையாயும் பலமுள்ளதாயும் எழுந்திருக்கும் [15:42-44].
1 Corinthians 15:45-46
Q? முந்தின மனிதனாகிய ஆதாம் என்ன ஆனான் ?
A. அவன் உயிலுள்ள ஆத்துமாவானான் [15:45].
Q? பிந்தின மனிதனாகிய ஆதாம் யார் ?
A. பிந்தின ஆதாம் உயிர்பிக்கிற ஆவியானவர் [15:45].
1 Corinthians 15:47-49
Q? முந்தின மனிதனும், பிந்தின மனிதனும் எங்கிருந்து வந்தவர்கள் ?
A. முந்தின மனிதன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்: பிந்தின மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர் [15:47].
Q? எந்த மனிதனுடைய சாயலில் உண்டானோம் ? எந்த மனிதனுடைய சாயலை அணிந்துகொள்வோம் ?
A. பூமியிலிருந்துண்டான மண்ணான மனிதனின் சாயலில் உண்டானோம், வானவருடைய சாயலை அணிந்துகொள்வோம் [15:49].
1 Corinthians 15:50-51
Q? எது தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது ?
A. இரத்தமும், மாம்சமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது[15:50].
Q? நம்மெல்லோருக்கும் சம்பவிப்பது என்ன ?
A. நாமெல்லாரும் மறுரூபமாவோம் [15:51].
1 Corinthians 15:52-53
Q? எப்போது மற்றும் எவ்வளவு வேகமாக நாம் மறுரூபமாவோம் ?
A. கடைசி எக்காளம் தொனிக்கும்போது ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே நாம் மறுரூபமாவோம்[15:52],
1 Corinthians 15:54-55
Q? அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரிக்கும்போது என்ன சம்பவிக்கும் ?
A. மரணம் ஜெயமாக விழுங்கப்படும் [15:54].
1 Corinthians 15:56-57
Q? மரணத்தின் கூரும், பாதாளத்தின் பலமும் எது ?
A. மரணத்தின் கூர் பாவம், பாதாளத்தின் பலம் நியாயப்பிரமாணம் [15:56].
Q?யாரைக்கொண்டு தேவன் நமக்கு ஜெயத்தைக் கொடுக்கிறார் ? A. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு தேவன் ஜெயத்தைத் தருகிறார் [15:57].
1 Corinthians 15:58
Q? எதற்காக கொரிந்திய சகோதர சகோதரிகளை உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையில் எப்போதும் பெருகுகிறவர்களுமாயிருக்கும்படி பவுல் கூறினான் ?
A. பவுல்: அவர்கள் கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாய் போகாதென்று அவர்கள் அறிந்திருப்பதினால் இவைகளைச் செய்யும்படி கூறினான் [15:58].
1 Corinthians 16
1 Corinthians 16:1-2
Q? பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படுகிற தர்மப்பணத்திற்கு எந்த சபையைப் போல கொரிந்து சபைக்கும் பவுல் வழிக்காட்டினான் ?
A. கலாத்தியா நாட்டு சபைகளுக்குப் பண்ணினத்திட்டத்தின்படியே கொரிந்து சபைக்கும் பவுல் வழிக்காட்டினான் [16:1].
Q? எப்படி பணத்தை சேர்க்கும்படி பவுல் கொரிந்து சபைக்குக் கூறினான் ?
A. பவுல்: நான் உங்களிடத்தில் வரும்போது பணம் செர்க்குதல் இராதபடிக்கு வாரத்தின் முதல் நாள்தோறும் அவனவன் தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்துவைக்கவேண்டும் [16:2].
1 Corinthians 16:3-4
Q? அந்த காணிக்கைகள் யாருக்கு அனுப்பப்படும் ?
A. எருசலேமின் பரிசுத்தவான்களுக்கு அனுப்பப்படும் [16:1,3].
1 Corinthians 16:5-6
Q? எப்போது கொரிந்து சபைக்கு பவுல் வருவதாகக் கூறினான் ?
A. மக்கதொனியாவைக் கடக்கும்போது அவர்களிடத்தில் வருவதாகக் கூறினான் [16:5].
Q?பவுல் ஏன் கொரிந்து சபையின் பரிசுத்தவான்களை உடனே காண மனதில்லாதிருந்தான் ?
A. பவுல் அவர்களிடம் சிலகாலம் தங்கும்படி விரும்பினான் ஒருவேளை மழைக் காலம் முடியும்வரை அவர்களோடு இருப்பான் [16:6-7].
1 Corinthians 16:7-9
Q? பெந்தெகோஸ்தே பண்டிகையின் நாட்களில் ஏன் பவுல் எபேசு பட்டணத்தில் தங்கும்படி விரும்பினான் ?
A. ஏனெனில் அங்கே பெரிதும் அனுகூலமான கதவு அவனுக்குத் திறக்கப்பட்டிருந்ததால் மற்றும் விரோதம் செய்யும் அநேகர் இருப்பதாலும் அப்படி செய்தான் [16:8-9].
1 Corinthians 16:10-12
Q? தீமோத்தேயு என்ன செய்கிறவனாயிருந்தான் ?
A. அவனும் பவுலைப் போல கர்த்தருடைய கிரியையை நடபித்தான் [16:10].
Q? பவுல் கொரிந்து சபைக்குத் தீமோத்தேயுவைக் குறித்து கட்டளைக் கொடுத்தது என்ன ?
A. பவுல் அவன் உங்களிடத்தில் பயமில்லாதிருக்கப்பாருங்கள், அவனை அற்பமாய் எண்ணாதபடிக்கும் மற்றும் அவனை சமாதானத்தோடே வழியனுப்பிவிடவும் கேட்டுக்கொண்டான் [16:10-11].
Q? அப்பொல்லோவிடம் பவுல் விரும்பிக் கேட்டுக்கொண்டது என்ன ?
A. கொரிந்து சபையின் பரிசுத்தவான்களைக் காண வரும்படி பவுல் விரும்பிக் கேட்டுக்கொண்டான் [16:12].
1 Corinthians 16:13-14
1 Corinthians 16:15-16
Q? கொரிந்தியர்களில் யார் தங்களைப் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படி ஒப்புவித்தது ?
A. ஸ்தேவானுடைய வீட்டார் தங்களைப் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படி ஒப்புவித்தனர்[16:15].
Q? ஸ்தேவானுடைய வீட்டாரைக் குறித்து கொரிந்திய பரிசுத்தவான்களுக்கு பவுல் கூறியது என்ன ?
A. அவர்களுக்கு கீழ்படிந்திருக்கும்படி புத்தி சொன்னான் [16:16].
1 Corinthians 16:17-18
Q? ஸ்தேவானும், பொர்த்துனாத்தும் அகாயுக்கு என்பவர்கள் பவுலுக்கு செய்தது என்ன ?
A. கொரிந்திய பரிசுத்தவான்கள் பவுலுக்கு செய்யவேண்டியதை அவர்கள் செய்தார்கள். பவுலின் ஆவிக்கு ஆறுதல் செய்தார்கள் [16:17-18].
1 Corinthians 16:19-20
Q? யார் தங்கள் வாழ்த்துதலை கொரிந்து சபைக்கு அனுப்பினார்கள் ?
A. ஆசியா நாட்டிலுள்ள சபையாராகிய ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் மற்றும் சகோதர சகோதரிகளும் தங்கள் வாழ்த்துதலை கொரிந்து சபைக்கு தெரிவித்தனர் [16:19-20].
1 Corinthians 16:21-24
Q? கர்த்தரிடத்தில் அன்பு செலுத்தாதவனைக் குறித்துப் பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: ஒருவன், கர்த்தரிடத்தில் அன்பு செலுத்தாமற்போனால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான் [16:22].